Shri Bhagawan Bahubali Jinalaya - ஸ்ரீ பகவான் பாகுபலி ஜினாலயம்
12.15
மணியளவில் தர்மஸ்தலா வந்தடைந்தோம்.
தெய்வ
நம்பிக்கைகள் சங்கமிக்கும் தர்ம உறைவிடம் தர்மஸ்தலமாகும். பல்லாண்டுகளாக பக்தி மரபினை
வளர்த்து வரும் பூமியாகும்.
பல
பக்தர்கள் பேருந்து, கார், வேன் என பல வாகனங்களில் வந்து சென்றவண்ணம் இருந்தனர்.
சிறிய
குன்றின் மீதிருந்த பாகுபலி நாதரை தரிசிக்க வான் மேலேறியது. மேற் சென்றதும், சில ஆண்டுகளுக்கு
பிறகு தற்போது வந்ததால் சிறிய வளைவு, நுழைவாயில் கூடம் நடைபாதை ஒழுங்கு போன்றவை புதியதாக
காட்சியளித்தன. அவற்றை நின்று காணம் போதே நெடிய 39 அடி உச்சிவரை தெரியும் ஒரே கல்லினால்
ஆன பாகுபலி பகவானின் தோற்றத்தின் அருகே அழைத்துச் சென்று கொண்டிருந்தது.
பெரிய
பீடத்தின் மீது ஏறிச் செல்ல இரு யானைச் சிலைகள் படிக்கட்டுகளுடன் அழைத்தது. மேற்சென்றால்
13 அடிமேடையில் பாகுபலிநாதர் வேனுர் சிலையின் அதேவகைக் கல்லால் ஆனது போன்ற வண்ணத்தில்,
ரேகையில் சற்று உருவ அமைப்பில் மாற்றத்துடன்
காணப்பட்டது.
சரவண
பெளிகுளம், கார்காளா, வேனூர், தர்மஸ்தலா (கோமட்டகிரி செல்லவில்லை) பாகுபலி பகவானின்
உருவச்சிலைகள் இருந்தாலும் ஒன்றிலிருந்து மற்றொன்று தனித்துவமாக அமைக்கப்பட்டிருப்பதை
மனம் வேறுபடுத்திக் காட்டத்தான் செய்கிறது.
என்ன இருந்தாலும் கோமட்டன் உருவாக்கிய சிலை, முன்னனி வசிப்பதற்கான கூறுகளை வித்தியாசப்படுத்தி
மனம் காட்டினாலும்; நான்கு சிலைகளிடத்திலுமுள்ள பேரழகு, பிரம்மாண்டம் இவற்றை வியந்து
அண்ணாந்து பார்க்கும்போது நம் அனைவரின் படிப்பு, பலம், பெருமை, புகழ், உயர்வு, அழகு,
அதிகாரம், ஆர்ப்பாட்டம் அனைத்தையும் சற்று நேரத்தில் மறக்கடித்து கைகூப்பி வணங்க வைத்து
விடுவதென்னவோ உண்மைதான். அவ்விடத்திலேயே நின்று கொண்டேயிருந்தால் அவை முழுவதும் அற்றுப்
போய்விடும் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
சற்று
நேர தரிசனத்திற்கு பின் அடுத்த ஸ்தலம் நினைவுக்கு வர அவரைவிட்டு பிரியும் வேளை வந்தது. இக்குன்றிலிருந்து மாற்றுப்பாதையில் இறங்கியதும்
ஸ்ரீ மஞ்சுநாதர் ஆலய வழிக்கு இணையான சாலையில்
பயணிக்கும் போது ஸ்ரீ சந்திரநாத ஸ்வாமி பஸ்தி என்ற அடையாள குறியீட்டு பலகையைக் கண்டு,
அத்திசையில் 1 கி.மீ. பயணித்ததும் அவ்வாலயத்தை சென்றடைந்தோம்.
The
growing fame of Dharmasthala Shri Manjunatha Swamy temple has often obscured
the fact that for centuries that Dharmasthala is also a revered Jain Basadi.
With the novel thought of protecting the Jain legacy, a pious and methodical
renovation of the temple in May 2001 by Shri Veerendra Heggade has made Shri
Chandranatha Swamy Basadi, one of the most beautiful edifices in Dharmasthala
and the south of India. Standing against the azure blue sky and the lush
foliage around it, this temple clad in white marble is a sight to behold and to
cherish, imbibe and nurture the teachings about our mortal life by Shri
Chandranatha Swamy, Jain Theerthankara Mahaveer and his disciples.
-----------------------------------------------
In
1973 a statue of Lord Bahubali, carved out of a single rock, was installed at
Dharmasthala on a low hill near the Manjunatha temple. It is about 39 feet high
with a pedestal of 13 feet and weighs about 175 tonnes. This is one of the five
stone statues of Bahubali in Karnataka.
Shri
Bhagwan Bahubali Digambar Jain Statue is installed in many places across
India(there are 5 monolithic Gommateshwara statue in Karnataka measuring more
than 6 m (20 feet) in height), Dharmasthala, being one of them. Dharmasthala is
an Indian temple town, known for its religious tolerance and justice. Among the
piety and frolic of this beautiful temple town, the statue stands on a low
hill, at a kilometer from the Lord Shiva temple, also known as the Manjunath
temple. This 39 feet(12 m) statue was sculpted in 1973, by the famed sculptor
Renjala Gopalkrishna Shenoy under the aegis of Shri Ratnavarma Heggade. After
Shri Ratnavarma Heggade died, the statue was then positioned atop the Ratnagiri
Hill in February 1982 by Dr.D.Veerendra Heggade. The Gomateshwara Bahubali
Statue is a monolith structure, and is one of the five stone statues of
Bahubali located in Karnataka.
********************************
Shri Chandranathaswamy Jinalaya - ஸ்ரீ சந்திரநாத ஸ்வாமி ஜினாலயம்
ஜினாயவளாகம் என்பதை அங்குள்ள அமைதி, ஆரவாரமற்ற தன்மை, ஜன நெருக்கடியற்ற பாதை, படிகள் அனைத்தும் ஒருங்கே சுட்டிக் காட்டி விடுகின்றன. ஏனெனில் மூலவரின் முகம் அமைதியும், சாந்தமும், புன்னகையும் நிறைந்த வடிவமாயிற்றே; அதனை அச்சூழலும் நிரூபித்துக் கொண்டிருப்பதை எத்தலத்திலும் உணரலாம்.
அப்புனிதபூமியில் நூற்றாண்டினைக் கடந்து நிற்கும் ஸ்ரீ சந்திரநாத பஸ்தி அசையாமல் தங்கியுள்ளது. நீலவண்ண வானமும், தழைத்து நிற்கும் பசுமைகளுக்கிடையே ஜைன திகம்பர மரபினை வளர்த்து வருவதற்காக இஜ்ஜினாலயத்தினை கவனமுடன் பாதுகாத்து வருகின்றனர்.
புகழ்பெருகி வளர்ந்து வரும் ஸ்ரீமஞ்சுநாதஸ்வாமி ஆலயத்திற்கிடையே பல நூற்றாண்டுகளாக இந்த ஜைன பஸ்தியும் வளர்ச்சியடைந்து தான் வந்திருக்கிறது. மே மாதம் 2001 ம் ஆண்டு தர்மாதிகாரி ஸ்ரீ வீரேந்திர ஹெக்டே அவர்களால் ஜைன மரபும், பக்திமார்க்கமும் பெருகும் வகையில் ஸ்ரீ சந்திரநாதஸ்வாமி ஜினாலயத்தை அழகான கட்டமைப்பாக மாற்றம் செய்து புனருத்தாரணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவிலுள்ள பல அழகிய ஜினாலய கட்டமைப்புகளில் ஒன்றான தோற்றத்தினைக் கொண்டுள்ளது. அனைத்தும் சரியான அளவில், பொலிவான தோற்றத்தில் இருந்தாலும், இவ்வாலத்தினை புகைப்படம் எடுக்க அனுமதி யில்லை.
வெள்ளைச் சலவைக்கல்லால் உருவாக்கப்பட்ட இக்கட்டமைப்பு வரும் பக்தர்களின் மனதிற்குள் ஸ்ரீ சந்திரப்ரபு ஜினரின் போதனைகளை நுழைத்து, வளரச் செய்து நல்வாழ்வுக்கான வழிகாட்டுதல்களை வழங்குவதே இவ்வாலத்தின் நோக்கமாக இருக்கும் என்றால் மிகையாகாது.
மஹாவீரரின் தென்னக விஜயத்திற்கு பின்னர் ஜைனம் வளர்ந்து மேனிலை அடைவதை இத்தலத்தின் ஜினாலயம் நிரூபித்து நிற்கிறது.
மூலவராக ஸ்ரீ சந்திரப்ரபு ஜினரின் சலவைக்கல் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சுகநாசியில் பல உலோகச்சிலைகள் அமர்த்தப்பட்டிருப்பதை, நவரங்க மண்டபத்திலிருந்து கண்டு தரிசனம் செய்ய வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. முக மண்டபம் சற்று நீண்ட ஆளோடியுடன் இணைக்கப்பட்டு அதன் தூண்களில் பல சமவசரண தேவதேவியரின் சிற்பங்களைச் செதுக்கி வைத்திருப்பது கலைப்பொக்கிஷமாக காட்சி யளிக்கிறது. சற்று நேரம் அமர்ந்து செல்ல எண்ணும் படியான சூழலை ஏற்படுத்தியிருப்பது இவ்வாலய வரைபட, கட்டுமானத்தின் சிறப்பாகும்.
-----------------------------------------------
அங்கு ஜைன போஜன் சாலைக்கான வழிமாற்றம் புரியவில்லை. மதிய சாப்பாட்டு நேரம் கடந்து பசிபெருகி காதை அடைக்க துவங்கியதால், அன்னபுரணி போஜன் சாலையில் தாவர உணவுதான் என கூறியதால், அங்கு நின்ற வரிசையில் சென்று தரைமேடையில் அமர்ந்தோம்.
சில நொடியில் தையிலை, நீர், இனிப்பு, சாதம், ரசம், சாப்பிட்டு முடிப்பதற்குள் சாம்பார் (மாறித்தான் வந்தது), நீர், சாதம், மோர் என உடனுக்குடன் வந்து திணற வைத்தனர். ஏழு நிமிடத்தில் முடிக்க வைத்தது விந்தையாக இருந்தது. (இலையில் பெற்றுக் கொள்ள தாமதமானால் வாயில் திணித்து விடுவார்கள் போலிருந்தது.) வேறு வழியில்லை பல்லாயிரக்கணக்கான ஜனக்கூட்டம் தரிசன வரிசைவேலிக்குள்ளும், உணவருந்தும் கூடத்திலும் வந்தவண்ணம் இருந்தனர். தனிக்கவனிப்புக்கு நொடிப்பொழுதுகூட ஒதுக்க வழியில்லை.
வயிறு நிரம்பியதில் மகிழ்ச்சியே..
திடீரென அங்கிருந்து மைசூர் சென்று கனககிரி தரிசனம் காணலாம் என மேலும் ஒரு ஸ்தலத்தை பயணத்திட்டத்தில் நுழைத்தோம்.
சுப்ரமண்யா சென்று, மைசூர் சாலையில் பயணத்தபோது, நிலச்சரிவினால் அச்சாலை அடைபட்டது என்றனர். மாற்று வழி ஷக்லேஷ்வர், ஹாசன், மைசூர் என பயண நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டபோது தெரிந்தது. இந்த 16 கி.மீ. பயணம் வீண், வேறு வழியில்லாமல் மைசூர் பயணம் சுற்றுப்பாதையில் தொடர்ந்தது.
ஹாசனுக்கு முன்பே வலதுபுறம் திரும்பிச் புறவழிச்சாலையில் சென்றதால் எங்கும் சிற்றுண்டிச்சாலையே தென்படவில்லை. அப்படியே இருந்தாலும் மாமிசஉணவுச்சாலை பெயர்ப்பலகைகள். மைசூர் புறநகருக்கருகே வந்தடைந்து விட்டோம். இரவு 10.15 மணி, வெஜ் ஹோட்டல் என்ற ஆங்கில பெயர்ப்பலகை தென்பட்டது. அந்த அகால நேரத்திலும், விரும்பிக்கேட்ட டிபன் உணவு கிடைத்தது. மனமார்ந்த நன்றியை ஊழியருக்கு தெரிவித்து விட்டு, மைசூர் எல்லையில் ஒரு தங்கும் விடுதியில் இரு அறைகள் எடுத்து உறங்க துவங்கும் போது நடுஇரவு 11.45 மணி….
The
confluence of faiths makes Dharmasthala, the abode of dharma, a unique legacy
entrenched over the years. The centuries old Shri Chandranatha Swamy Basadi at
Dharmasthala has been maintained in the pristine condition and is amongst the
one of the most revered and celebrated Digambara shrines in South India.
The
growing fame of Dharmasthala Shri Manjunatha Swamy temple has often obscured
the fact that for centuries that Dharmasthala is also a revered Jain Basadi.
With the novel thought of protecting the Jain legacy, a pious and methodical
renovation of the temple in May 2001 by Shri Veerendra Heggade has made Shri
Chandranatha Swamy Basadi, one of the most beautiful edifices in Dharmasthala
and the south of India. Standing against the azure blue sky and the lush
foliage around it, this temple clad in white marble is a sight to behold and to
cherish, imbibe and nurture the teachings about our mortal life by Shri
Chandranatha Swamy, Jain Theerthankara Mahaveer and his disciples.
No comments:
Post a Comment