Thursday, January 2, 2020

Srirangapatnam - ஸ்ரீரங்கப்பட்டணம்



Shri 1008 Adhinathar Jain temple  - ஸ்ரீ 1008 ஆதிநாதர் ஜைன் பஸ்தி.






Location: Gps Coordinates is (12.421511, 76.682528)



ஸ்ரீரங்கப்பட்டணம்-  கர்நாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள நகராகும். மைசூர் நகருக்கு அருகில் அமைந்த இந்நகரம் சமய , பண்பாட்டு & வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும். மைசூரிலிருந்து 13 கிமீ தொலைவில் இந்நகரம் உள்ளது.


ஸ்ரீரங்கபட்டிணம், காவிரி உருவாக்கி வைத்த அற்புதத் தீவு. மைசூரின் புலி என அழைக்கப்பட்ட திப்பு சுல்தான் தன் அரசாங்கத்தை இந்த ஊரை தலைமையிடமாகக் கொண்டு அமைத்திருந்தார். நூற்றாண்டுகளை கடந்த பழமையும், நவீனமும் ஒரே புள்ளியில் சந்திக்கிற தீவு. ஊரின்  வடமேற்கில் காவிரி இரண்டாகப் பிரிந்து மீண்டும் இணைகிறாள். நகரம் முழுக்க இடிந்து போன கோட்டைச் சுவர்களால் நிரம்பி இருக்கிறது. ஊரின் எந்த திசையில் சென்றாலும் கோட்டை சுவர்களின் மிச்சம் தென்படுகிறது.


மிகப் பழமையான ஊர் என்ற போதிலும் கிராமத்து மணமே அதிகம் வீசுகிறது. ஊருக்குள் எங்கு பார்த்தாலும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கிறது. கிளிகளின் சத்தம் மனதை எளிதாக்குகிறது. பல வெளிநாட்டு பறவைகள் அருகிலுள்ள சரணாலயத்திலிருந்து வந்து காவிரியின் பரப்பை மேலும் அழகாக்குகின்றன.


விஜயநகர பேரரசின் கீழ் ஸ்ரீரங்கப்பட்டணம் சிறப்பு இடத்தை பெற்றிருந்தது. இங்கிருந்து அவர்கள் மைசூர் மற்றும் தலக்காடு போன்ற அரசுகளை நிர்வகித்தனர். பின்னர் மைசூர் மஹாராஜா உடையார் வசம் 1610ல் வந்துள்ளது. அதன் பின்னர் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானின் காலத்தில் ஸ்ரீரங்கப்பட்டணம் அவர்களின் தலைநகராக விளங்கியது. திப்பு சுல்தானின் அரண்மனை மற்றும் ஜும்மா மசூதி ஆகியவை இந்திய இசுலாமிய கட்டடக்கலைக்கு சான்றாக உள்ளன. இங்கு நான்காம் ஆங்கில மைசூர் போரின் கடைசி சமராகவும் அமைந்தது. திப்புவின் மரணத்தோடு இப்போர் முடிவுக்கு வந்தது. இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றில் திப்புவும் முக்கிய இடம் வகிக்கிறார்.









இவ்வளவு சரித்திரச் சிறப்புகள் வாய்ந்த இந்த நகரத்தில் மைசூர்ராஜா உடையார் அவர்களால் 1660ல் இந்த ஆதிநாதருக்கான ஜினாலயம் கட்டப்பட்டு இன்றுவரை, முஸ்லீம் சாம்ராஜ்யத்திற்கும் பின்னரும், அழியாமல் தன் வரலாற்றை கூறி வருவது இதன் சிறப்பாகும்.


அழகிய வளைவுடனான மதிற்சுவர்க் கதவுகளை கடந்ததும், சற்றொப்ப ஐம்பதடி உயர மானஸ்தம்பம் வெண்மையான கருங்கல்லில் சதுர வடிவில் மேற்புறம் நான்கு ஜினர் உருவங்களுடன் நிறுவப்பட்டு நம்மை வரவேற்கும். அதனைச் சுற்றிலும் பூச்செடிகளும், சீராக வளர்க்கப்பட்ட புற்செடிகளும் நிறைந்த நந்தவனம் அந்த ஆலயத்திற்கு மிக அழகான தோற்றத்தை அளித்துக் கொண்டிருந்தன. ஆலய  நுழைவாயின் கோபுரம் மூலவர் விமானம் போன்று கூம்புவடிவில் பல அடுக்குகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.அனைத்துமே வெண்மை நிறத்தில் பளிச்சென்ற தோற்றத்துடன் காணப்படுவது ரம்மியமாக உள்ளது.


மேலும் திருச்சுற்றில் நாகதேவதை உருவச் சிலைகள் அங்காங்கே நிறுவப்பட்டிருந்தன. மிக அழகாக சீராக புணருதாரணம் செய்திருப்பதை கண்டு வியந்தோம்.
முகமண்டத்தைக் கடந்ததும் பிரார்த்தனைக்கூடத்தில் அன்றைய விதானத்திற்கான யந்திரமும், சுற்றிலும் நவக்கிரத்திற்கான கலச ஏற்பாடும், அதற்கான பூஜைப்பொருள்களுடன் மேடையும், பூத்தட்டுகளும் மேலும் தெய்வீக மணத்தை வழங்கிகி கொண்டிருந்தன.


அதனைக் கடந்து சென்றதும் உள்ளே… மூலவர் ஆதிநாதர் கருமைநிறக்கல்லால் உருவாக்கப்பட்டு ஐந்தடியுயர பத்மாசன தியானக்கோலத்தில் காட்சியளிக்கிறார். அவர் இருபுறமும் கோமுக யக்ஷனும், சக்ரேஸ்வரி யக்ஷியும், பின்புறம் பிரபாவளி மற்றும் சாமரை தேவர்களுடன் ஒரே கல்லில் கோர்வையாக ஒன்றாக வடித்துள்ளது இவ்வாலய மூலவருக்கான சிறப்பாகும். அழகிய இவரது சிலைவடிவம் அனைவரையும் கவரவே செய்கிறது.


மேலும் கருவறை முன் கட்டின் மையத்தில் ஸ்ரீபார்ஸ்வநாதரின் சற்று சிவந்தகருமைநிறக்கல்லில் 3 அடி உயரத்தில் வடிக்கப்பட்ட சிலையும் பிரபாவளியுடன் தரணேந்திர பத்மாவதியுடன் காணப்படுகிறது.


அதன் இருபுறச் சுவற்றிலுள்ள மேடையில் 24 தீர்த்தங்கரரின் பிரபாவளியுடனான கட்காசன நிலை சிலைகள் காட்சி தருகின்றன. அடுத்து சில தீர்த்தங்கரர் திருவுருவங்களும், பஞ்சகுல தேவியரான சக்ரேஸ்வரி, பத்மாவதி, ஜ்வாலாமாலினி, கூஷ்மாண்டினி, சித்தாயினி போன்ற யக்ஷியரின் உலோகச் சிலைவடிவங்கள் மேடையில் அமர்த்தப்பட்டுள்ளன.


அடுத்த முன் கட்டில் இடது புறம் 4 அடியுயரத்தில் ஐந்துதலை நாகபடத்துடன் ஸ்ரீ தரணேந்திரரும், வலதுபுறத்தில் 4 அடியுயர மூன்றுதலை பனாமுடியுடனான ஸ்ரீபத்மாவதி அம்மன் சிலையும் அழகாக வடிக்கப்பட்டு அலங்காரத்துடன் காட்சியளிக்கின்றன. இங்கு பத்மாவதி அம்மன்  வழிபாடு மிகப்பிரசித்தி பெற்றது என்பதை அன்று நடைபெற உள்ள பூசைக்கான ஏற்பாடுகளே தெரிவித்தன.


மொத்தத்தில் அழகான ஸ்ரீரங்கப்பட்டின ஸ்ரீ1008 ஆதிநாதர் திகம்பர ஜினாலயம் தோற்றத்தில் மற்றும் சிறந்த பராமரிப்பில் மிக்க பொலிவுடன் காணப்பட்டது மனதுக்கு ரம்மியமான இருந்தது. அனைவரும் ஒரு முறை சென்று வணங்குவது சாலச்சிறந்தது.


அங்கு காலை 8 மணியிலிருந்து 2 மணி வரையும், மாலை 4 லிருந்து 7.30 வரை மட்டுமே திறந்திருக்கும். அதில் மிகவும் கட்டுப்பாடுடன் உள்ளார் பண்டிட்ஜி அவர்கள். (இரு தினங்கள் முன்னர் அவ்வழியே தலைக்காவிரிக்கு செல்லும் வழியில் தரிசனத்திற்கால் மூன்று மணியளவில் சென்று வினவியபோது திறக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.)






















Srirangapatna holds a unique place in the history of Karnataka and the history of Indian Independence. It was a administered in the name of Vijayanagara sovereigns by a viceroy known as Sri Rangaraya, when the imperial capital was at Chandragiri. In 1610 when Raja Wodeyar of Mysore took pocession of Srirangapatna, it was the capital of the Rajas of Mysore and continued to be the seat of the Government under Haider Ali and Tippu Sultan until its capture by the British in 1799. In the intervening period, the capital had been besieged several times. Srirangapatna was a flourishing city during Chickkadevaraja’s time. The Sriranganatha temple, Tippus Dariyadaulat, Gumbaz and the Nimishambha temple are the worth visiting places at Srirangapatna.


The temple of Bhagawan Adinatha at Srirangapatna is said to have been built in the year A.D. 1660. Along with this we can find very attractive idols of Goddess Padmavathi and Daranendra Yaksha. Along with this we can find the idols of the 24 Tirthankaras installed in the temple. Every year special pooja mahotsav’s are conducted here on the occassion of mula nakshtra (birth day of Godess padmavathi) and akshyatritiya. The idol of Godess Padmavathi is very famous and devotees from all over Karnataka visit this place. Special pooja to goddess Padmavathi is also being arranged here on every friday during the month of Sravana.


Srirangapatna is situated at a distance of 15 kilometers from Mysore and Mandya. Good boarding and lodging facilities are also avaialble at Srirangapatna. Srirangapatna has good transport facilities from Bangalore, Mysore and Mandya.











Sri Adinatha Digambar Jain temple had Main Deity – About five feet high black coloured idol of Bhagawan Adinatha in the padmasana posture with yaksha Komugha and yakshi Chakreshwari on eitherside and a beautiful Prabha structure added more grand look.


All 24 thirthankar standing posture stone statues are arranged on two platform either side of aisle. At center Shri Parshwa jinar statue also installed in reddish black stone made.

Apart from Panchkula Devis of Chakreswari, Jwalamalini, Padmavathi, Kooshmandini and Siddhayani five metal idols are seated on the side tiers stairs with Jinar idols.

Beautiful black stone Dharanender yaksha and Padmavathy yakshi statues are installed on either side of arthmandapam made more divinity at the hall.


Sincere thanaks to Mr. Nitin, Jain heritage centre, for giving history of the temple.