Friday, January 7, 2022

Vilangadupakkam - விளாங்காடுபாக்கம்.



Shri Mahaveerasamy Jain temple 
ஸ்ரீ த்ரைலோக்யநாத ஸ்வாமி ஜிநாலயம்
 திகம்பர ஜினாலயம்.







It lies the coordination  of  Vilangadupakkam - (13.20109, 80.21935)






 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும்,  பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



"விளாங்காடு பாக்கத்தே உறைகின்ற வீதராகனே!

ஐம்பொறிகளும் தளர் வடைந்து ஓய்வு பெற்ற காலத்தும்,

கூட புலனாசைகள் உந்தித்தள்ள ,

பாய்ந்து செலும் வெள்ளத்தின் மேல் செல்கின்ற துரும்பு போல,

துன்பத்தில் உழலலானேன்.

உன்னைக்கண்டு வணங்கி நிற்கும் எனக்கு அந்நிலை வாராதபடி

சூரியன் முன் கரையும் பனிபோல என் வினைகள் தாமும் விலகிச்செல்லும்

நற்காலம் வந்து வாய்க்குமோ?அறிந்தேனில்லையே!"

 

ஓய்கின்ற காலத்தும் ஓயாமல் புலனாசை உந்தித் தள்ள

பாய்கின்ற நீத்தமிசை படர்கின்ற துரும்புபோல் படருழந்தேன்

காய்கின்ற சுடர் முன்னே கரைகின்ற பனிபோலக் கருமந்தானும்

வீழ்கின்ற நிலை வருமோ?விளாங்காடு பாக்கமுறை வீதராகா!   

 

க்ஷேத்ரமாலை - புலவர் பெருமான்.



=================

இன்று விளாங்காடுபாக்கம், சென்னை புழலிலிருந்து ஏழு கிமீ. தொலைவிலிருக்கும் ஒரு  ஜினாலயத்திற்கு சென்று தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது.  அழகிய சிறிய ஆலயம், சரியான அளவில் சமணஆலய அம்சங்கள் அனைத்தும் கொண்டு கட்டப்பட்டுள்ளது.






ஜினாலயம் பழமையானதாக காட்சி அளிக்கிறது.

அந்த ஜினாலயத்தின் மூலவர் சிலை அதே ஸ்தலத்தில் பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கப்பட்டதும்;  அவ்வூரை சார்ந்த திரு சம்பத் ஜயர் என்பவர் அச்சிலையை எடுத்து இவ்வாலயத்தை கட்டத்துவக்கினார். 1936 ம் ஆண்டு கட்டி முடிக்கபட்டு முதல் பிரதிஷ்டை நிறைவேறியுள்ளது. 

 

அறுபது ஆண்டுகள் கழித்து 1996 ல் மீண்டும் ஜினாலயம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் சரவணபெலகொளா தவத்திரு. சாருகீர்த்தி சுவாமிகள் முன்னிலையில் பிரதிஷ்டா மஹோற்சவம் நடந்துள்ளது.

இந்த ஜினாலயம் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜினாலயம் உள்ளே நுழைந்த உடன் கொடிமரமும், பலிபீடமும் அமைந்துள்ளது. 

ஆலயம் மூலவர் கருவறை, இடைநாழி, அர்த்தமண்டபம் போன்ற அடுக்கடுக்காய் திராவிட பாரம்பர்ய முறையில் கட்டப்பட்டு உள்ளது. கருவறையின் மீது அமைந்த விமானம் கலைப்பானியுடன் சிகர கலசத்தைக் கொண்டுள்ளது..

 

விமானத்தில் ஆதிநாத், நேமிநாத், பார்சுவநாத் ஆகியோருடைய சுதைச் சிறப்பங்கள் பக்கத்துக்கு ஒன்றாக உள்ளன. கருவறையில் ஸ்ரீ 1008 மகாவீரர் சாந்த ஸ்வரூபியாய் அர்த்த பத்மாசனத்துடன்;  முக்குடை, அசோக மரநிழலில், இருபக்கச் சாமரதாரிகள், பிரபா மண்ட ஒளிவட்டத்துடன், சிம்மங்கள் தாங்கிய ஆசனத்தில்  அமர்ந்து இருப்பதுபோல சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

 

முகப்பின் வலதுபுற மண்டபத்தில், அதே ஊரில் கிடைத்த ஸ்ரீ பார்சுவநாதர் அருகில் உள்ள மெதவயில், பெருவாயில் , வல்லுர்  போன்ற ஊர்களில் இருந்து கிடைக்கபட்ட 5 தீர்த்தங்கரர் சிற்பங்கள் மூன்றடி மேடையில் நிறுவப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது.


மூலவருக்கு தின தீப ஆரதி வழங்குபவர்,  ஜினாலய நிர்மாண  பரம்பரை சார்ந்த திரு. T. ஸ்ரீதர், (sir) அறங்காவலர் கமிட்டி.
----------- 










Vilankattupakkam Jain Temple is 7 km from Puzhal.


Moolnayak; The ancient granite stone statue has the figure of Sri Mahavir jinar designed with eight features.

 

The Jinalayam getting ancient near future.

 

When the Mulnayak deity of that Jinalayam was found under the earth of the place of itself; Mr. Sampath Jayar, a resident of that village, took the idol and built this bearutiful temple. It was completed in 1936 and the first consecration was completed.

After sixty years, the Jinalayam was renovated again in 1996 and the abbot ofSaravanabelagola mutt was again visited. The consecration ceremony was held in the presence of Charukirthi Swamigal grandly.

It is noteworthy that this Jinalayam is maintained by the people of the same family.

As soon as you enter the Jinalayam, there is a flagpole and an altar.

The temple is built in the Dravidian traditional style with layers such as the sanctum sanctorum, interment hall, and arthamandapam. The Vimana above the sanctum sanctorum has a shikhara kalasam on the top.

 

In the vimana, the relics of Adinath, Neminath, and Parswanath are placed side by side.

 In the sanctum sanctorum, Sri 1008 Mahavira is depicted as a polite looking and with a half-padmasana; in the shade of the Ashoka tree, with the Samaradharis on both sides, with a halo of Prabha Mandal, and sitting on a seat supported by lions.

 

In the right side of the Mandap, sculptures of five Tirthankaras found in the same town as Sri Parswanath, found in Medavail, Peruvail, and Vallur, are installed on a three-foot platform look beautifully. 


-----------------

on March 2, 2025

visit...







********************** 


Videos










Please lay your comments regarding the Jain temple...

I expect Mr. Bharat puzhal, whom he Knows around the north madras Jain shrines.