ஸ்ரீ 1008 பார்ஸ்வநாதர் ஜினாலயம்
புழல்.
Bhagavan Chintamani Parswanathar Digambara Jinalayam, Lakshmi Ammal Temple Street, Puzhal, Chennai (Tamil Nadu)
Village/City: Puzhal, District: Chennai, State: Tamil Nadu, Country: India, Pincode: 600066
View through Google map : (13°09'50.9", 80°12'21.5)
தமிழகத்தில் இடம்:
பகவான் சிந்தாமணி பார்ஸ்வநாதர் திகம்பர ஜினாலயம், லட்சுமி அம்மாள்
கோயில் தெரு, புழல், சென்னை (தமிழ்நாடு)
கிராமம்/நகரம்: புழல், மாவட்டம்: சென்னை, மாநிலம்: தமிழ்நாடு, நாடு:
இந்தியா, பின்கோடு: 600066.
View through Google map : (13°09'50.9", 80°12'21.5)
Features:
Famous for its prison.
Located on the banks of Puzhal Lake.
Rail: Chennai Central Railway Station
Bus Station: Koyambedu, Central Bus Stand.
Flight: Chennai International Airport. Meenam Pakkam.
சிறப்புகள்:
சிறைச்சாலைக்கு பெயர் பெற்றது.
புழல் ஏரியின் கரையில் அமைந்துள்ளது.
ரயில்: சென்னை மத்திய ரயில் நிலையம்
பஸ் நிலையம்: கோயம்பேடு , மத்தியப் பேருந்து நிலையம்.
விமானம்: சென்னை சர்வதேச விமான நிலையம். மீனம் பாக்கம்.
இந்த ஜினாலயம் ஒரு சமவசரண வகை கருவறையைக் கொண்டுள்ளது, அதில் நான்கு பக்கங்களிலும் ஸ்ரீ பார்ஸ்வ தீர்த்தங்கரர் கல் உருவங்கள் கந்தக்குடியில் பிண்டி மரநிழலில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் கோயிலில் பஞ்ச பரமேஷ்டி, ஸ்ரீ பார்ஸ்வநாதர், ஸ்ரீ மகாவீரர் தனி கருங்கல் உருவச்சிலைகள் உள்ளன;
ஸ்ரீ பிரம்மதேவர் மற்றும் ஸ்ரீ பத்மாவதி யக்ஷி ஆகியோரின் கருங்கல் உருவச்சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.
This Jinalayam has a Samavasaran type sanctum sanctorum, in
which stone images of Sri Parswa Tirthankara are placed on all four sides in
the shade of a Pindi(Ashoka) tree in Kandhakkudi.
The temple also has separate granite images of Pancha
Parameshti, Sri Parshvanatha, Sri Mahavira;
Granite images of Sri Brahmadev and Sri Padmavathi Yakshi are
also placed.
புழல் பகுதியின் வரலாறு
தொண்டை மண்டலம் சங்ககாலத் தமிழகத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
தொண்டைமான் இளந்திரையன் இந்நாட்டின் சங்ககால அரசன். பின்னர் சோழர்கள் கைப்பற்றினர்.
பின்னர் நான்காம் நூற்றாண்டிலிருந்து, ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஆண்ட, காஞ்சிபுரத்துப் பல்லவர்களின் நாடாகத் திகழ்ந்தது என்பது வரலாற்று ஆசிரியர்கள் கூற்று.
பல்லவப் பெருவேந்தர்கள் காலத்தில் பௌத்தம், சமணம், சைவம், வைணவம் ஆகிய சமயங்கள் திகழ்ந்தன. மகேந்திர பல்லவன் தொடக்கத்தில் சமண சமயச் சார்புடையவனாகத் திகழ்ந்து, பின்பு சைவ சமயத்திற்குப் பேராதரவு அளித்தான்என்பதை இலக்கியங்கள், கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது.
தொண்டைமண்டலத்தை குறும்பர்கள் ஆண்டபோது, புழல் கோட்டம், புலியூர் கோட்டம், வேலூர் கோட்டம், படுவூர் கோட்டம் என 24 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. புழல் மற்றும் புலியூர் கோட்டத்தின் கீழ் இன்று மெட்ராஸ் என்ற பகுதி வந்தது. திருவொற்றியூர், புழல், அயனாபுரம் ஆகியவை முன்பும், மயிலார்பில், எழுமூர், பூந்தமல்லி, பல்லாவரம், தாம்பரம் ஆகியவை பின்னாலும் இருந்தன.
தேவதானம், பிரம்மதேயம் என்பன போலப் 'பள்ளிச்சந்தம்' என்பது சமணப் பள்ளிகளுக்கென (சமணர் வழிபடும் கோயில்கள்) விடப்பட்ட வரியில்லாத நிலங்களாகும். அரசர்கள் சார்ந்துள்ள சமயம் எதுவாய் இருந்தாலும் பிறசமயக் கோயில்களுக்கும் ஆக்கம் கொடுத்தனர்.
Thondai Mandalam was a part of Tamil Nadu during the Sangam(spanned
from 300 BCE to 300 CE.) period.
Thondaiman Ilandhiraya was the Sangam king of south India.
Later, the Cholas conquered it.
Later, historians say that Kanchipuram was under Pallavas,
who ruled from the fourth century to the ninth century.
During the time of the Pallava kings, Buddhism, Jainism,
Saivism, and Vaishnava were the religions. It can be known from literature and
inscriptions that Mahendra Pallava was initially a follower of Jainism and
later gave great support to Saivism.
During the rule of the Kurumbars, Thondai Mandalam was
divided into 24 parts, namely Puzhal Kottam, Puliyur Kottam, Vellore Kottam,
and Paduvur Kottam. The area called Madras today came under Puzhal and Puliyur
Kottam. Thiruvottriyur, Puzhal, and Ayanapuram were in the front, and
Mayilarupil, Egmore, Poontamally, Pallavaram, and Tambaram were in the back.
Like Devadanam and Brahmatheyam, 'Palli Chandam' were
tax-free lands left for Jain temples (temple worshipped by sadhus). The kings,
regardless of their religion, also gave construction to temples of other
religions.
videos
காணொலி 1
No comments:
Post a Comment