Atmanushasan 2 - ஆத்மானு ஸாசனம் 2


ஆத்மானுஸாசனம் 
(ஆன்மாவின் இயல்பு)
आत्मानुशसन्
 (101 - 200)





ஹா கஷ்டமிஷ்டவனிதாபிரகாண்ட ஏவ, 

சண்டோ விகண்டயதி பண்டிதமானிநோஅபி | 
பச்யாத்புதம் ததபி தீரதயா ஸஹ்ந்தே, 
தந்தும் தபோஅக்னிபிரமும் ந ஸமுத்ஸஹந்தே || 101 ||

It is a pity, that cupid unexpectedly, worries through lovely women even those who consider themselves to be wise. See the wonder then, that they suffer deeply, but do not make bold to burn it by the fire of austerities.
என்ன ஒரு பரிதாபம், மெய்யறிவார்ந்தவர்களும் எதிர்பாராத விதமாக காமத்தீயில் விழ்ந்ததினால் அழகிய பெண்கள் காரணமாக அறிவிழந்து துக்கத்திற்கு ஆளாகின்றனர். அவர்களது சந்நியாச வாழ்க்கையில் அந்த ஆழமான காமஉணர்வை எரிப்பதற்கு தைரியமின்றி பாதிப்படைவது ஆச்சர்யமான விஷயமாகும்.

துறவு என்பது காமஒறுப்பு நோன்பு, பேசாநோன்பு, கள்ளுண்ணா நோன்பு, உண்ணாநோன்பு போன்றவற்றை நிறைவேறச் செய்யும் செயல்களைக் குறிப்பிடலாம். அவர்களே மெய்யறிவாளர்கள் ஆகும்.

அவர்களே சந்நியாசி என்றழைக்கப்படுகின்றனர். சந்நியாசம் என்பது சுய கட்டுப்பாடு; பற்றற்ற நிலை. உலகியல் பொருட்கள், உலகியற் செயல்கள் இவற்றை மட்டுமின்றி, அகந்தை, ஏக்கம், வாசனைகள், நான்தான் எல்லாவற்றையும் செய்கிறேன் என்ற இறுமாப்பு; ஒன்றிலிருந்து மற்றொன்றை பேதப்படுத்தி, ஒற்றுமைக்கு மாறாக வேற்றுமையைத் தோற்றுவிக்கும் புத்தி ஆகியவற்றையும் துறப்பதுதான் சந்நியாசம் ஆகும்.

புறத்தே மேற்கொள்ளும் துறவு உலகியற் பொருட்கள், சுய நலச் செயல்கள் ஆகியவற்றைத் துறப்பதாகும். இதுவும் தேவைதான். ஆனால் மனத்தளவிலான துறவுதான் மிகவும் முக்கியமானது. இவையே உயிர் நாடி போன்றது. இதையே சமண பெரிதென அறுவுறுத்துகிறது.

அவர்களிடம் மேலோங்கி யிருப்பது பிரம்மச்சரியம் என்று வழக்கமாக அனைவராலும் குறிப்பிடப்படும் ‘காமஒறுப்பு நோன்பு’ ஏற்றவர் என்பது பொதுவான விரதமாகும். ஆனால் சிலர் புறத்தே துறவு வேடத்தில் உலகியற் பொருட்களை, சுயநலச் செயல்களை துறந்தாலும் காமத்தீயில் வீழ்ந்து விடுவது பெருங்குற்றமாகும்.

அதனால் அவர்களுக்கு விரதபங்கம் ஏற்பட்டு அத்தனை நாட்கள் வாழ்ந்த துறவறநெறியில் இழுக்கு ஏற்பட்டு வினைக்கட்டினால் பல துன்பங்களுக்கு ஆளாகின்றார்கள். மன உறுதியில்லாதவர்கள் ஏன் துறவற நெறியை ஏற்க வேண்டும். இல்லறத்தில் வாழ்ந்தபடியே சிராவக நெறியைக் கைக்கொண்டு வாழவும் பகவான் வழிவகை செய்துள்ளாரே. அதுவும் புருஷார்த்தம் தானே என்று அவ்வாறானவர்களைக் கண்டு பரிதாபம் கொள்கிறார் முனிவர் பெருமான்.

-- -- -- -- -- --

ஆசைகளில் மிகவும் மோசமாக கருதப்படுவது ஏறுவரிசையில் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்பவையே. இவை முற்காலத்தில் அதிகாரப்பற்றுள்ள அரசர்களிடம் மேலோங்கிய நிலையில் இருந்ததால் இவ்வாறாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ண எழுச்சி நிலைக்கு ஆளாகாத மனிதப்பிரதேசமே இல்லை என்பதையும் உலகளாவிய வரலாற்றைப் புரட்டினால் அறிந்து கொள்ளலாம்.

போக்குவரத்து இல்லாத காலத்திலும் இந்த பேராசை உணர்வு அக்காலத்திய தலைவர்கள் மற்றும் கீழ் உள்ள மக்களிடமும் மேலோங்கிய உணர்வாக பொதுவாக இருந்துள்ளது என்பதை பிற்காலத்தில் காணும் போது தெரியவந்துள்ளது.

வீரமிக்க ஆண்களே அக்காலத்தில் போற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கே அடிமைகளாக அறிவுமிக்கவர்களும் அஞ்சியே வாழ்ந்துள்ளனர். அவர்களின் கெடுபிடி கூடும் போது அடுத்துள்ள பராக்கிரமசாலிகளே அவர்களை அழித்துள்ளதாகவும் வரலாறு பகர்கின்றது.

அவ்வகையில் வீரம் இம்மூன்று ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்வதால் வரும் தடைகளை விழ்த்திச் செல்வதிலேயே கவனமுடன் செய்யப்பட்டுள்ளதையும் காணலாம். முற்றிலும் அழிவுக்கு வகை செய்யும் மண்ணாசையை பாதுகாக்க பெருமளவில் ஆட்பலமும், பொருளும் தேவைப்படும். அடுத்துள்ள பொன்னாசைக்கு பாதுகாப்புடனான பிரதேசமும், ஆள்பலமும் இருந்தால் மட்டும் போதும் என்றளவில் இருந்துவருவதையும் இன்றளவும் காணலாம்.

அடுத்துள்ள பெண்ணாசைக்கு காரணம் அவர்கள் போர்க்காலங்களில் தமது குடும்பங்களை பொறுப்பாக கவனித்துக் கொண்டதும், அழகுணர்ச்சியின் சின்னமாக, கவர்ச்சி பொம்மைகளாக, காம இச்சையை குறைக்கும் கருவிகளாக பயன்படுத்தப்பட்டு வந்ததுதான் என்பதும் சரித்திரங்கள் நமக்களிக்கும் புள்ளிவிபரங்கள். அதனால் தான் அவர்களை பாவையர் என்று வர்ணித்து வந்துள்ளனர்.

அழகுள்ள பெண்டிர்களுக்கே ஆபத்து அதிகமிருந்ததால் அவர்கள் தங்கள் உடலைக்காக்க வீரமிக்க ஆண்களையே விரும்பும் கட்டாயமும் அக்காலத்திய பெண்ணினத்திற்குள் ஏற்பட்டுள்ளது. அதனால் அரசர்களே அப்பாவையரை மணமுடித்து வந்தனர் என்பதும் காலத்தின் கட்டாயமாக இருந்துள்ளது. (இன்றளவும் அது தொடர்கிறது என்பதும் கீழான நிலையே என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.)

அதனால் பல பேரரசுகளும் விழ்ந்த வரலாற்று கதைகளும் உலகளவில் எழுதப்பட்டுள்ளது. எகிப்திய பேரழகியாக கருதப்படும் கிளியோபாட்ரா விடம் மயங்கிய சீசரின் பெண்ணாசையால் மட்டுமே அந்தோனியால் அழிக்கப்பட்டான் என்பதிலிருந்து: நமது சமண புராணக்கதையான சீவகச்சரிதத்தில் சச்சயந்த மன்னன் விசயமாதேவியின் அழகில் மயங்கி கட்டியங்காரனிடம் நாட்டை இழந்த வரலாற்றையும் நாம் புரட்டினால் பெண்ணாசையும் அரசாட்சிக்கு மட்டுமல்ல ஆன்மீக வீழ்ச்சிக்கான காரணம் என்பதை அறியலாம்.

ஆனால் உத்தமசிராவகனான சிவகனோ அவ்வாறில்லாமல் தன் அரசபரம்பரையை ஏமாங்கத நாட்டின் அரியணையில் மீண்டும் அமரச்செய்ய தான் ஏற்றக்கொண்ட மனஉறுதி எனும் தீயில் எட்டு மனைவியரின் அழகினையும் பொசுக்கி சென்றபடியே தன் இலட்சியத்தில் வெற்றி பெற்றான் என்பதையும் திருத்தக்க தேவர் தனது மேலானஆக்கத்தில் முக்கிய கருத்தாக தெரிவித்துள்ளார்.

(ஏனெனில் காந்தர்வதத்தை, சுரமஞ்சரி, கேமசரி போன்ற யுவதிகளின் அழகை முனிவரின் வர்ணனை வரிகளை படிக்கும் எந்த ஒரு ஆணுக்கும் மனதில் காம உணர்வு மேலோங்கவே செய்யும் என்பதில் ஐயமில்லை.)

அவ்வளவு அழகு பொருந்திய நங்கையர் எண்மரையும், அவ்வப்போது அரசுக் கூட்டணி அமைத்து பெரும்படை திரட்ட எண்ணி, மணம் செய்து, பின்னர் விலக்கிய ஒரு சந்நியாச மனநிலைஉள்ள சீவகனால் மட்டுமே எட்டு கர்மங்களையும் விட்டு விலகும் பெருமுயற்சியில் ஈடுபடமுடியும்; மேலும் ஆன்மஇலட்சியத்தின் சிகரமான விடுதலைப் பேற்றை பெருவதில் எந்த ஒரு தடங்கலும் ஏற்படுவதில்லை என்பதை தெரிவிக்கவே இந்த காப்பியத்தை திருத்தக்கதேவரும் நமக்களித்துள்ளார் என்பதே நிதர்சனம். ஆக இக்காப்பியமும் பெண்ணாசையை விலக்கியவனே நல்ல புருஷார்த்தத்தில் ஈடுபட்டு ஆன்ம விடுதலை பெறமுடியும் என்பதை தெள்ளத்தெளிவாக நமக்குத் தெரிவிக்கிறது.

அதனால் தான் ஆசையில் பொதுவான இம்மூன்றையும் வென்றால் தான் ஒருவன் ஆன்ம முன்னேற்றம் அடைய முடியும் என்பதை அனைத்து தரிசனங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன.

மண்ணாசை, பொன்னாசையை விலக்கிய முனிவர் சிலரும் பெண்ணாசையில் விழ்ந்த கதைகளும் அக்காலத்திலிருந்து உலவி வருவது அனைவரும் அறிந்ததே.

விஸ்வாமித்தர முனிவர் கடுந்தவம் புரிந்தார். அவருடைய தவத்தின் கனல் தேவ லோகத்தில் இருக்கும் இந்திரனுக்கு அச்சத்தினை உண்டாக்கியது. எனவே தேவ கன்னிகையான மேனகையை விஸ்வாமித்தரர் முன் நடனமாடச் செய்து, முனிவரின் தவத்தினை கலைக்க கட்டளையிட்டான். அவ்வாறே மேனகை அவர் முன் நடனமாடினாள்.

அவளுடைய நடனத்தினால் முனிவரின் தவம் கலைந்தது. அத்துடன் மேனகையை மனைவியாக ஆக்கிக்கொண்டதில் இருவருக்கும் சகுந்தலை என்ற மகள் பிறந்தாள் என்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அதேசமயம் நீலாஞ்சனை நடனத்தை பார்த்து மகிழ்ந்திருந்த வேளைதான் பகவான் ஆதிநாதர் துறவறம் ஏற்கத்தூண்டியதான குறிப்புகளே சமண புராணங்களில் கதைகளாக காணப்படுகிறது. அவளது வாழ்நாளின் முடிவு, நிலையாமை உணர்வைத்தூண்டியதே யன்றி, அவளது அழகில் மயங்கி அவளது உருவம்போன்ற வேறொரு பெண்ணைத் தேடத்தூண்டவில்லை என்பதே இந்நிகழ்வு தெரிவிக்கும் அறிவுரையாகும்.

-- -- -- -- --

இக்காலத்தில் துறவிகளாகக் கூறிக்கொள்ளும் போலிச்சாமியார் பலரும் மக்கள் மத்தியில் வலம் வருவதை நாம் ஊடகங்களில் தினம் தினம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவ்வாறான சூழல் அவர் காலத்திலும் உள்ளதை இந்நூற்பா தெரிவிக்கவே செய்கிறது.

மனவலிமை, நியமத்தில் உறுதி போன்றவை முனி வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாகும். அவ்வாறான நிலையில் அவர்கள் முனிநிலை விலக்கி இல்லறத்திற்குள் நுழைவது மனவடக்கமின்மையையே காட்டுகிறது. அவ்வாறான விதிமீறியவர்களை காண்பது ஆச்சரியமாய் உள்ளதாக மனவருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

முழுமுதலாக தேடலுக்கு கல்விக்கு தன்னை அர்ப்பணித்தவனே பிரம்மச்சாரி ஆகிறான். முழுமுதலான பிரம்மத்தை சரியையாக (உடலாகக்) கொண்டவன், ஆகவே பிரம்மச்சரியன் என்றும் சிலரால் அழைக்கப்படுகின்றனர். சத்யத்தை விரும்பி நாடிச் செல்பவன் ஆகவே ‘சத்யகாமன்’என்றழைக்கப்படுகின்றனர். அவ்வாறானவர்கள் இச்சையில் வீழ்வது ஆச்சரியம் தானே. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கை அடைய ஏற்கும் புருஷார்த்தமே அவர்களது வழியாகும். இது இந்நூற்பாவின் தெளிவு.








அர்திப்யஸ்துணவத்விசிந்த்ய விஷயாந் கச்சிச்சிரயம் தத்தவான், 

பாபாம் தாமவிதர்ப்பிணீம் விமணயன்னாதாத் பரஸ்த்யக்தவான் | 
ப்ரோகேவா குஸலாம் விம்ருஸ்ய ஸுபகோ அப்யந்தோ ந ப்ரய க்ர்ஹீத், 
ஏதே தே விதிதோத்தரோத்தரவரா: ஸர்வோத்தமாஸ் த்யாகின: || 102 ||

மாஸ் த்யாகின: || 102 || Considering the objects of desire like straw, one gave his wealth to those who needed it; another, thinking it to be sinful and cause of discontent abandoned it at the outset; and another good person did no accept it from the very first, thinking it to be evil. Know that each one of these (three) high renouncers is better than the preceding one.
ஆசைப் பொருள்களை வைக்கோல்துரும்பெனக் கருதி, ஒருவர் தனது செல்வத்தை தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்து மகிழ்ந்தார்; மற்றொருவர், அது பாவம், துன்பத்திற்கு காரணம் என்று நினைத்து அவைகளை அப்படியே கைகழுவி விட்டார்; வேறொருவர் மிக நல்ல மனிதர்; செல்வத்தை ஈட்டுவது தீமை என நினைத்து தேடத்துணியவில்லை. இந்த மூவகைத் தியாகிகளுள் முன்னவரை விட அடுத்தவர் உயர்ந்தவராக கருதப்படுகிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

தியாகம் என்ற சொல் உயிரை தியாகம் செய்யபவர்களை மட்டும் குறிக்காது. பொருளை தியாகம் செய்பவர்களும் தியாகிதான்.

தியாகம் செய்வது உயர்ந்த குணம். அதிலும் ‘தியாகம் செய்தேன்’ என்ற எண்ணத்தையும் தியாகம் செய்வது சிறந்தது.

தியாகம் என்றால், மற்றவர்களின் நலனுக்காக அல்லது கடமையினிமித்தம் சொந்த ஆர்வங்களை, சந்தோஷங்களை, விருப்பங்களை விட்டுக்கொடுப்பது மேன்மையானது.

என்று மூன்றுவகை உணர்வுநிலையை இப்பாடலில் ஆச்சார்யர் குறிப்பிட்டுள்ளார். இதில் முதல்வகையைக் காட்டிலும் இரண்டாவது சிறந்தது. அதைக்காட்டிலும் மூன்றாவது மேலும் சிறந்தது என்று தெரிவித்து தியாகத்தின் மேன்மையை அளவிட்டு கூறியுள்ளார்.

-- -- -- --

பல அற்பதங்களை செய்யும் ஆற்றல் நிறைந்த ஏசுவும் அவற்றை தியாகம் செய்து மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் என்பதே அவர் வரலாறு. அதனால் தான் அவரை தெய்வமகன், பிதாமகன் என்று அங்குள்ளோர்கள் போற்றினார்கள்.

“ஓர் செய்கையைச் செய்வதில் வருவதல்ல தியாகம்; அதன் மேன்மையை உணரும் தருணத்தில் விளைவது என்று நினைக்கிறேன். ஏனெனில் தியாகிகள் என நாம் கொண்டாடும் அனைவரும் தாங்கள் செய்த/ செய்யும் செயல்களை தியாகம் என்ற தோரணையில் செய்ததில்லை, செய்வதுமில்லை. பெரும்பாலும் அச்செயல்களைத் தான் செய்ய வேண்டியது தன் கடமை என்றே செய்கின்றனர் அந்த மேன்மக்கள்!” என்று ஏசுபிரான் கூறுகிறார்.

ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக செய்யப்படுகின்ற செயல்களைத் துறப்பதுவே தியாகம், அவர்களே சந்நியாசியாவார்கள். மேலும் கர்மங்களினால் வரும் பலன்களைத்துறப்பது, ஏதேனும் குறைபாடுகள் இருப்பதால் எல்லாக் கருமங்களையும் துறப்பது. நன்மை பயக்காத செயலில் வெறுப்புமில்லையோ, நிச்சயிக்கப்பட்ட செயல்களில் அதாவது பலன் கொடுக்கக்கூடிய செயல்களில் விருப்பமில்லையோ, இனி செய்துமுடிக்கவேண்டியவை ஏதுவும் மிஞ்சியிருக்கவில்லையோ அதுவே உத்தம தியாகம் என்கிறது பகவத் கீதையும். அதுவே பரிபூரண தியாகம் அதுவே விடுதலைக்கு வித்திடும் என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

புலனின்ப நுகர்வை வைத்துக் கொண்டு, அவற்றில் சிக்கிக் கொண்டு ஒருவர் தியாக மனப்பான்மையை காட்ட தயாராகிவிட்டால், இது சுலபமாக இருக்காது என்பதை நினைவில் வைக்கவேண்டும். கடவுள் நிலையை அடைய வேண்டும் என்ற உண்மையான ஆர்வம் இருந்தாலும் நாம் அபூரணத்தோடு (பூரணமற்றதுடன்) ஓயாமல் போராடுகிறோம். இந்த போராட்டத்தில் நம்மால் நிச்சயம் வெற்றி பெறமுடியும், அதற்கான வழிகளை பகவான் அளிக்கிறார் என்று முனிவர் தெரிவிக்கிறார்.

-------------------------------------

பொருள் தேவையிலிருந்து மனம் எழுச்சியும், அழுத்தமும் பெறும்போது ஆசையாக மாறுகிறது. அந்த ஆசை தோன்றியது அதை அடைதலுக்கான செயல்பாட்டிலேயே தன் வாழ்நாளைக் கழிக்கிறது. அதற்காகத் திட்டமிடுதல், செயலாற்றுதல், சிந்தனை செய்தல் என்றளவில் செயல்பாட்டை வகுத்து அதை அடைந்து விடுகிறது. அதுவே புண்ணிய பலன்கூடும் போது உடன் கிட்டி விடுகிறது. அந்த பொருள் கிடைத்தவுடன் இன்பமென கருதி மகிழ்கிறது மனித மனம்.

பொருளில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை. அதை அடைவதில் தான் இன்பம் என்ற உணர்வே மேலோங்கியுள்ளது. அதை நான் அடைந்து விட்டேன் என்ற வெற்றி உணர்ச்சியே மகிழ்ச்சியை யளித்து நான் எனும் செருக்கிற்கு உரமிட்டு வைக்கிறது இந்த மனம்.

பின்னர் அந்தப் பொருளை தனதாக்கிக் கொள்ள விழையும் போது ஆசை பேராசையாக வீங்கத்தொடங்குகிறது. அதனை பாதுகாத்து தன்னிடமே இருக்க அனைத்து ஏற்பாட்டுகளை செய்கிறது. அது “எனது” என்ற மமதையை வளர்க்கிறது. நான், எனது ; தான், தனது எனும் தன்முனைப்பே தேவையை ஆசையின் பக்கம் எழுச்சியும், அழுத்தமும் கொடுக்கச் செய்து பேராசையின் பக்கம் திருப்பி தன்வயப்படுத்துவதிலேயே தீவிரம் காட்டச் செய்கிறது.

நம்மிடம் வந்துள்ள பொருட்களும், தன்வயப்படுத்தியதால் வந்த மகிழ்ச்சி யுணர்வுகளுமே இன்பமாக கருதுகிற மனம்; ஒரு நிலையில் தொடர்ச்சியான உழைப்பு, உணர்வில் வீக்கம் போன்றவை வேதனையை அளிப்பதால் அதன் மீது வெறுப்பைக் காட்டவும் துவங்குகிறது. அதுவே விரக்தியாக மாறவும் செய்கிறது. இது ஒவ்வொரு மனிதடனிடமும் தோன்றும் வாடிக்கையான உணர்வுநிலைகளே. இந்த செயல்பாட்டில் சிக்காத மனித இனமே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு மனித ஜாதியிடம் இந்த செருக்கு ஆட்கொண்டு பின்னர் ஒரு நிலையில் விலகுகிறது.

அவ்வாறு ஆட்கொண்ட பொருட்களை அடைவதால் இன்பம் நிரந்தரமில்லை என்ற மனப்பக்குவம் தோன்றவே அதனை தியாகம் செய்யவும் அதே மனம் துணிகிறது. இந்த இடைப்பட்ட காலஅளவைத்தான் இந்த நூற்பாவில் முனிவ பெருமான் அளவிட்டு கூறுகிறார்.

அந்த ஆசை, பேராசை உணர்வு எவ்வளவு காலம் ஒருவன் மனதில் குடியிருக்கிறதோ அது வினைத்துகள்களை ஆன்மப்பிரதேசத்தில் பெருக்கவே செய்து விடும். அது எந்த அளவுக்கு குறைவாக ஒருவனிடம் வந்தடைகிறதோ அல்லது அவ்வாறான வினைக்கட்டு தோன்றாமல் வாழ்கிறானோ அதுவே தியாகத்தின் மேன்மைக்கான அளவீடாக ஆச்சார்யஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.

இதில் கடைசி உணர்வுநிலையை தேர்வு செய்து வாழ்பவனே முழுத்தியாகியாவான். அந்த உத்தமதியாக மனப்பாண்மையைத்தான் பகவான் மஹாவிரர் மிகுபொருள் விரும்பாமை என்னும் விரதமாக அளித்துள்ளார். அதனை விளக்கவே இந்நூற்பாவில் முனிவர் பெருமான் விழைந்துள்ளார் எனக் கொள்ள வேண்டும்.

மற்றவர்களுக்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கும் உயர்ந்த உள்ளங்கள் இந்த பூமியில் இப்போது இருக்கிறபோதிலும், அநேகர் தன்னல மனப்பான்மையுடனேயே செயல்படுகின்றனர். இவ்வுலகத்தில் ‘நான்’, ’எனது’ என்ற எண்ணம் எங்கும் பரவியுள்ளது. இந்த உலகத்தில் பரவலாக நிலவும் இந்த மனப்பான்மையைக் குறித்து நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்மிடமும் அந்த மனப்பான்மை ஒட்டிக்கொண்டால், அது நம் ஆள்தன்மையையும், மனப்பான்மையையும் முற்றிலுமாக அரித்து தின்றுவிடும். அப்படி செய்துவிட்டால், நமக்கும் நம் சொந்த ஆசைகள் மட்டுமே முக்கியமாக தோன்றும். பிறகு நம்முடைய நேரம், சக்தி, உழைப்பு போன்ற எல்லாம் தன்னல நாட்டங்களுக்கே போகும். அதனால் நாம் இந்த குணத்தை எதிர்த்து கடுமையாக போராட வேண்டும் என்பதை உணர்த்துவதே இப்பாடல்.







விரஜ்ய ஸம்பத: ஸந்தஸ்த்யஜன்தி கிமிஹாத் துதம் | மாவமீத் ஆச்சர்யம் ஜகுப்ஸாவான் ஸுபுக்தமபி போஜனம் || 103 ||
What wonder is there that men leave their fortune, after being disgusted with it? Does not one vomit even well-taken food on feeling disgusted with it?
மனிதர்கள் தங்கள் செல்வத்தை வெறுப்பு ஏற்பட்ட பிறகு விட்டுவிடுவதில் என்ன ஆச்சரியமிருக்கிறது? சுவையாய் எடுத்துக் கொள்ளப்பட்ட உணவைக் கூட ஒருவர் வெறுப்புணர்வினால் வாயின் வழியே வெளியேற்றுவதில்லையா(வாந்தி)?

அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம் ஒன்று உண்டாக வைக்கற்பாற் றன்று.

என்பது நாலடியாரின் கூற்று. அறுசுவையுள்ள உணவை மனையாள் அருகில் அமர்ந்து விரும்பி உண்பிக்க, போதும் போதும் என்று கூறி மறுத்தபடி உண்டு வாழ்ந்த செல்வர்களும்; சில காலத்திற்குப்பின் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய் வெறுங்கையிற் கூழ் இரப்பர், ஆதலின், செல்வமென்பதொன்று, நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று. - செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக் கருதற்குரியதன்று. -

இச்சமண முனிவர்கள் அனைவரும் செல்வம் நிலையாமைக்கு ஒரு அதிகாரம் கொடுக்கவே வற்புறுத்தியுள்ளார்கள் என்பதை , அவை நீரில் எதிர்த்து நீந்தி வந்ததிலிருந்தே புரிந்து கொண்டு, பதுமனார் இவ்வாறு வகைப்படுத்தியுள்ளார். (நாலடியாருக்கு அதிகாரம் வகுத்தவர்கள் பதுமனார் ஆவார். அதிகாரங்களை முப்பாலாய் வகுத்து உரை செய்தவர் தருமர் ஆவார்.)

தமது நிழல் தம் வெயில் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளுதற்கு உதவாமையைக் கண்ட பிறகும், அறிவிலார், தமது செல்வம் தம் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுதற்கு உதவும் என்று இறுமாந்திருக்கின்றனர். உணரப்படுகின்ற உயிர் கண்களால் காணப்படும் உடம்புடன் ஒன்றாய்ப் பிறந்தது. ஆயினும், அதுவே உடம்பில் என்றும் நின்று அதனைக்காக்காது இடையே விட்டொழிகின்றது. அங்ஙனமாக வேறாய் இடையே வந்த செல்வமோ நம்மோடு நிலைத்து நின்று நலம் செய்யும்!(செய்யாது) என்று ஆச்சர்யத்துடன் ஒரு ஞானி செல்வம் நிலையாமையை வலியுறுத்துகிறார்.

அறிவுடையீர், செல்வத்தைத் துணைக்கொண்டு கூற்றுவனை வெல்லுதல் கூடுமோ! கூடாது என்பதனை நன்கு தெளியுங்கள். கலக்கம் அடையாதீர்கள். உங்களிடத்தில் உள்ள செல்வம் உங்கள் உள்ளத்தையும் உடலையும், ஆற்றுவெள்ளம் தன்னுள் அகப்பட்டவரது உள்ளத்தைக் கலக்கி, உடலைப் புரட்டி ஈர்த்தல்போலச் செய்யாதவாறு அதனைத் தடுத்து நிறுத்தி நீக்குங்கள்.

ஆற்று வெள்ளத்தை அளவுக்கும் மீறி குடித்தால் மூழ்கவே செய்வான் என்பது போன்று செல்வத்தை ஒருவனே துய்க்கவேண்டும் என்று எண்ணிவிடாதே என்று அச்சுறுத்துகிறார். உனது வாழ்வும் நிலைக்கப்போவதில்லை, செல்வமும் உன் கையில் நிலைக்கப்போவதில்லை. எனவே உன் வாழ்நாளிலேயே செல்வத்தை தியாகம் செய்ய முடிவெடுத்து விடு என்றே அதே ஞானியும் அறிவுறுத்துகிறார்.

செல்வம் செல்வம் செல்வோம் என்று சென்று விடும் என்றும் எச்சரிக்கும் ஞானியரும் நல்வழியே காட்டியுள்ளனர்.

இது போன்று இக்கால ஞானியர் கூற்றுக்களுக்கு அஸ்திவாரம் போன்று அன்றே குணபத்ர ஆச்சார்யஸ்ரீ அவர்களும் செல்வம் நிலையில்லாதது; அதனை சேமித்து சேமித்து பின்னர் அதனால் வரும் பெரும் துன்பத்தை அனுபவிப்பதை விட, ஈட்டிய வேளையில் அவ்வப்போது அதனை ஈந்து வாழக் கற்றுக் கொள். அதுவே என்றேன்று இன்பத்தை அச்செல்வம் அளித்துக் கொண்டிருக்கும். இல்லையேல் அது இன்பம் தருமென நினைத்து சேமித்த பொருளணைத்தும் ஒழிந்த பின் பெருந்துன்பமே நிலைத்து நிற்கும். செல்வம் சென்று கொண்டுதான் இருக்கும். நிலையாமையே அப்பொருளின் இலக்கணம் என்று அறிவுறுத்துகிறார்.

இவரது கூற்றை கடல்கடந்து சென்றடையும் தூரத்தில் வாழ்ந்த நபிகள் நாயகம் அவர்களும் அதனையே அவர் கூற்றை செவிமடுத்தவர்களுக்கும் அழுத்தமாகவே தெரிவித்துள்ளார் என்ற ஒற்றுமையை நோக்குதல் நலம்.

சுவை என அதிகமாக உண்ட சோற்றை உடல் ஏற்காது வாந்தி எடுப்பதைப் போன்று செல்வத்தின் பற்றும் அளவிற்கு மிஞ்சும் போது வந்த வழியே சென்று விடும் என்ற உவமேயத்துடன் தெரிவிக்கிறார் முனிவர் பெருமான்.









ஸ்ரியம் த்யஜன் ஜட: சோகம் விஸ்மயம் ஸாத்த்விக: ஸ தாம் | 
கரோதி தத்வவிச்சித்ரம் ந சோகம் ந ச விஸ்மயம் || 104 ||
A fool feels sorry and a brave man proud in discarding fortune. It is a marvel that one, who knows the real nature of (worldly objects) feeld neither sorry nor proud (in doing so)
श्रियं त्यजन् जडः शोकं विस्मयं सात्त्विकः स ताम् । करोति तत्त्वविच्चित्रां न सोकं न च विस्मयम् ।।104।। செல்வத்தை நிராகரிப்பதில் ஒரு முட்டாள் வருந்துகிறான், ஒரு (அறிவுள்ள) மனிதன் தைரியமாக (ஏற்பதோடு) பெருமிதம் கொள்கிறான். (உலகப் பொருள்களின் உண்மையான தன்மையை அறிந்த ஒருவர் வருத்தமோ பெருமையோ கொள்வதில்லை என்பது ஒரு பெருமைக்குரியதாகும். (அவ்வாறு செய்யும்போது)

இந்நூற்பாவில் முரண்பாடான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது போன்று தோன்றும். ஆனால் ஆச்சார்யஸ்ரீ மிகுந்த அறிவாற்றல் மிக்கவர் என்பதை இருமுறை படித்தபின்பு தான் உணரமுடிந்தது.(என்னால்)

இங்கு அவர் செல்வம் என பொருளை மட்டும் குறிப்பிடவில்லை. அறிவை வைத்து தான் அதிர்ஷ்டத்தையும் அளவிட்டுள்ளார் என்று புரிந்தது. அதிர்ஷ்டம் இருந்தால் அதாவது பூர்வ ஜென்ம புண்ணிய பலன் உதயமாகும் போது ஒரு முட்டாளிடமும் செல்வம், பொருள் சேர்கிறது என்பதை உணர்த்தியுள்ளார். அதனை அறியாத அவனோ செல்வம் சென்றுவிட்டதே, அதிர்ஷ்ட தேவதை அகன்று விட்டாளே என்று வருந்தவே செய்கிறான்.

மாறாக பொருள்ஈட்டுவதில் வேட்கை கொண்டு அதற்கான புண்ணியம் இல்லாவிடினும் தனது சொந்த உழைப்பில், அறிவாற்றலின் வழியே ஈட்டியவன் அச்செல்வத்தை இழந்தாலும் பின்னாளில் மீண்டும் ஈட்டிக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கையுடன் இருப்பான் என்பதையே நம் இல்லறத்தாருக்காக சூசகமாக அறிவித்துள்ளார்.

பொருட் வேட்கையிலும் அறிவுடனான, புத்திசாலித்தனதுடனான அணுகுமுறையே ஏற்றத்தாழ்விலும் நம்மை விரக்தி கொள்ளச் செய்யாது என்பதை வலியுறுத்தவே செய்கிறார்.

இதற்கு உதாரணம் ஜப்பானியர்கள் என்று கூடச் சொல்லலாம். அவர்களின் இரு பெருநகரங்கள் இரண்டு அமெரிக்க குண்டு வீச்சினால் முற்றிலுமாக, தாவரங்கள் கூட முழுவதுமாக அழிக்கப்பட்டிருந்தாலும் அவர்களது தன்னம்பிக்கையும், பெருமுயற்சியுமே துரதிஷ்டமான, சமூககூட்டுபாவத்தின் உதயத்தினால் அழிந்திருந்தாலும் ஒரிரு தலைமுறையிலேயே தலைநிமிர்ந்து நிற்பதை இன்றளவும் நாம் காண்கிறோம்.

ஹோண்டா, யமஹா, சுசுகி போன்றோரின் சரிதத்தை படித்துப் பாருங்கள். அவர்கள் செல்வத்தை பலமுறை இழந்து, மீண்டும் பூஜ்ஜியப் பொருளாதாரத்திலிருந்து உயர்ந்து உலகளவில் உயர்ந்து நிற்கின்றார்கள் என்பது புரியும்.

-- -- -- -- --

கடல் கடந்து வியாபாரம் செய்யும் ஒரு வணிகனுக்கு பாவவினை உதயம் துவங்கிவிடுகிறது. காலையில் எழுந்து செய்தித்தாளை வாசிக்கும் போது அவனது உதவியாளன் ஓடோடி வந்து, “ பாஸ்” என்று தயக்கதுடனும், கலவரமடைந்த முகத்துடன் நின்றவனிடம் “ என்ன” என்று அவரும் வினவ; “நாம் சரக்கேற்றி அனுப்பிவைத்த கப்பல்கள் இரண்டு நீரில் மூழ்விவிட்டது பாஸ் அதை எப்படி சொல்வது என்று… “ மென்று முழுங்கியபடி சோகமாக நின்றிருந்தான்.

அவரோ பிரித்த பேப்பரை மூடிக்கொண்டே “என்ன!!!....” பத்து நிமிடம் யோசித்தார். பின்னர் பெருமூச்செறிந்தபடியே “சரி, அதனாலென்ன” என்று அதற்கான தீர்வை உதவியாளனிடம் காப்பிடு எவ்வளவு உள்ளது. எப்படி வாங்கலாம், எப்போது கிடைக்கும் என்று உரையாடத் தொடங்கி விட்டார் விவேகஅறிவுடன்.

சற்று நேரத்தில் இன்னொரு மேலாளர் ஓடிவந்து “பாஸ்….” என்று கையை பிசைந்தபடியே நிற்க… அவரும் “என்னப்பா… என்னாச்சு” என்றார். “நம்ம ரெடிமேடு பாக்டரியில் தாயாரித்து வைத்திருந்த சேமிப்புக்கிடங்கில் இரண்டு எரிந்து கொண்டிருக்கிறது.” என்றான். உடன் அவரின் முகத்தில் சிறியதாக சோக ரேகைகள் தென்பட்டன.

முதல் உரையாடலை நிறுத்திவிட்டு. சிறிது நேரம் யோசித்து, “அதனாலென்ன... அதற்கான நடவடிக்கை என்ன எடுத்துள்ளீர்கள். தீயணைப்புச் சாதனங்களை இயக்கினார்களா… தீயணைப்பு துறையினர் வந்துள்ளார்களா.. என்றபடி அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கத் துவங்கினார்.

அன்று மதியம் அவரது பொருளாதார மேலாளர் ஓடிவந்து “ சார்….” என்றதும். “என்னப்பா உன் பங்கிகிற்கு என்ன சொல்லப்போற…” என்றார். அவரும் தயக்கத்துடன். “இந்த பாதிப்புகள் உடன் பங்குச் சந்தைவரை தெரிய வரவே… நம்ம கம்பெனி ஷேர்கள் அடிமாட்டு விலைக்கு சரிந்து விட்டன. தலையெடுக்கவே சில வருஷங்கள் ஆகலாம்” என்றார். அதைக் கேட்டபின் “அப்படியா, அதனாலென்ன” என்று பதிலளிக்கும் போதே அவர் முகத்தில் கவலைக்கான குறியீடுகள் ஏதும் தென்படவில்லை என்பதே ஆச்சர்யம். We must proud of his behaviour during distress time.

முதலில் வந்த உதவியாளரிடம் கேட்ட “ என்ன…” – “அதனாலென்ன” என்றதுக்குமான காலஇடைவெளியும்; அடுத்த பாக்டரி மேலாளரிடம் கூறிய “ என்ன…” – “அதனாலென்ன” என்பதற்குமான நேரஇடைவெளியும்; மேலும் கடைசியில் வெளிப்படுத்திய “ என்ன…” – “அதனாலென்ன” என்ற மெளனஇடைவெளியே அவருடைய மனப்பக்குவமாகும். அதுவே அவரது தன்னம்பிக்கையையும், மேலான விவேக அறிவுமே அவரை அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க வைத்தது.

இந்த “ என்ன…” – “அதனாலென்ன” இரண்டுக்குமிடையான மெளனநேரத்தை குறைப்பதுவே ஒருவனின் பொருட்பற்றை அளவிட சரியான அளவுகோலாகிறது.

-- -- -- -- -- -- --

அம்மாதிரியான அறிவாளிகள் தன் பொருளை பொருட்டாக மதிப்பதில்லை. சமூக உயர்வில் தனது அறிவின் வளர்ச்சியையே மூலதனமாக கொண்டு மீண்டும் படுகுழியிலிருந்து கோபுரத்தை தொட்டவர்கள் என்பது புரியும். இந்த விஷயம் எப்படியோ எதிர்காலத்தை கணித்துரைக்கும் தீர்க்கதரிசியாக ஆச்சாரிய பெருமான் தெரிவித்துயிருப்பது விந்தையிலும் விந்தையே.

அதே சமயம் இவ்விருவரை விட சமூகநலனில் அக்கறை கொள்வதிலும் அளவுடன் இருங்கள். பெரும் பொருள் ஈட்ட வேண்டும் என்ற உணர்வை குறைத்துக் கொள்ளுங்கள் இல்லறத்தார்கள; ஏனெனில் உனது சொந்த நலன் பாதிக்கப்படும். அறிவாற்றலையும் அளவுடன் செலவிட்டு மிகுபொருள் விரும்புதலை தவிர்த்து விவேகத்துடன் பொருளீட்டி சுகமுடன் வாழுங்கள் என்றே ஆச்சார்யஸ்ரீ அறிவின் எல்லைக்கே சென்று பாடம் புகட்டுகிறார். ஏனெனில் செல்வம், இளமை, யாக்கை, வாழ்க்கை யாவும் நிலையாமையே என்பதை புரிந்து கொள் என்றே அறிவுறுத்துகிறார். எப்போது வேண்டுமானாலும் நம்மை விட்டு அகலலாம் என்பதே சமண தத்துவம். இந்த நான்கின் நிலையாமையை அறிவதே சமண அறம் என்பதை தெரிவித்துள்ளார்.

இதைத்தான் நாலடியார் பாடலில்…

துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க; அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும். 2

குற்றமற்ற அறவழியில் ஈட்டிய பெருஞ்செல்வம் உண்டான காலம் தொடங்கி, எருமைக் கடாக்களைப் பூட்டி உழவு செய்து பெற்ற அப்பொருளைப் பலருடன் சேர்ந்து உண்ணுக! ஏனெனில், செல்வம் யாரிடத்தும் நிலையாக நிற்காமல் வண்டிச் சக்கரம்போல் (மேல்கீழாகவும், கீழ் மேலாகவும்) மாறிவரும்.

யானை எருத்தம் பொலியக் குடை நிழற் கீழ்ச் சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை வினை உலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட மனையாளை மாற்றார் கொள. 3

யானையின் பிடா¢யிலே அமர்ந்து எல்லாரும் காணுமாறு குடைநிழலில் படைகளுக்கெல்லாம் தலைவராகச் சென்ற அரசர்களும், தீவினை கெடுப்பதனால், முன்னிருந்த நிலையினின்றும் வேறுபட்டு, தம் மனைவியையும் பகைவர் கவர்ந்துகொண்டு போக, வறுமையில் வீழ்வர். (நல்வினை போய், தீவினை வருமானால் அரசரும் தாழ்வடைவர். எனவே, செல்வம் உள்ளபோதே அறம் செய்க என்பதாம்.)

செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில் கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி மருங்கறக் கெட்டு விடும்.

நாம் செல்வம் உடையயோம்!' என்ற கர்வம் கொண்டு மறுமையைப் பற்றி எண்ணாத சிற்றறிவினரின் பெரும் செல்வம், இரவில் கருமையான மேகம் வாய் திறப்பதால் உண்டான மின்னலைப் போலத் தோன்றி, இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்!

நாலடியாரின் முதல் அதிகாரமே செல்வம் நிலையாமை என்றால் அதற்கான சமணத்தின் முக்கியத்வத்தை நாம் புரிந்து செயலாற்றுதல் வேண்டும்.

அதனால் அபரிகிரஹா எனும் கருத்தை வலியுறுத்தி அறவழியில் பயணிப்பதையே முனிவர் பெருமான் இப்பாடலின் கருத்தாக தெரிவித்துள்ளார்.





विमृ}योच्चैर्गर्भात् प्रभृति मृतिपर्यन्तमखिलं मुधप्येतत्क्लेशासुचिभयनिकाराद्यबहुलम् । 
बुधैस्त्याज्यं त्यागाद्यदि भवति मुक्ति}च जडध्धी: स कस्त्यक्तुं नालं खलजनसमायोगसदृशम् ।।105।। 


விம்ருஸ்யோச்சைர்கர்பாத்ப்ரப்ருதி ம்ருதிபர்யந்தமகிலம், 

முதாப்யேதத் க்லேஸாஸுசிபய நிகாராத்யபஹுலம் | 
பூதைஸ்த்யாஜ்யம் தியாகாத்யதி பவதி முக்திஸ்ச ஜபதீ: 
ஸ கஸ்த்யக்தும் நாளம் கலஜனஸமாயோகஸத்ருசம் || 105 ||
The inclination of the man toward his body, from its conception to death, is futile; it is full of anxiety, impurity, fear, and disdain. Knowing this, the wise men should abandon it. If such abandonment results in liberation, which fool will not be able to give it up, like the company of a wicked man? In other words, the man with discernment certainly abandons the body.
மனிதன் தன் உடலை நோக்கிய பார்வை, கருத்தரித்தல் முதல் மரணம் வரை பயனற்றது; இது கவலை, தூய்மையற்ற தன்மை, பயம் மற்றும் வெறுப்பு ஆகியவற்றால் நிறைந்துள்ளது. இதை அறிந்த ஞானிகள் அதை கைவிட வேண்டும். இத்தகைய கைவிடுதல்(துறத்தல்) விடுதலையை விளைவித்தால், எந்த அறிவீலியும் கூட ஒரு துன்மார்க்கனின் சிநேகிதத்தைப் போல அதை விட்டுவிட முடியாது? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், விவேகமுள்ள மனிதன் நிச்சயமாக உடலைக் கைவிடுகிறான்.

காட்சி யில்லையேல் இலட்சியமில்லை; இலட்சியமில்லையேல் நோக்கமில்லை. நோக்கமில்லையேல் திட்டமிடல் இல்லை…. இப்படியாக வெற்றிக்கான வழிகாட்டுதல் இன்றைய சுயமுன்னேற்ற வகுப்புகளில் கூட செயலாற்றுதலுக்கான தூண்டுதல், மாறாத இலட்சியம், காலத்திற்கேற்ற நோக்கத்தில் மாறுதல் என்று தான் வழிகாட்டுதல் அமைக்கப்பட்டுள்ளது. இது தொன்று தொட்டு வரையறுக்கப்பட்டுள்ளதை பகவான் புருஷாத்தத்தில் வெற்றிக்கான வழிகளாக காட்சி, அறிவு, ஒழுக்கம் என மோட்சப்பயணத்திற்கும் குறிப்பிடுகிறார். காட்சிதான் எண்ணத்தில் அழுத்தத்தை கொடுப்பது. அது முடியும் வரைக்கான இலட்சிப்பயணமும், நோக்கமும் முடிவு செய்யப்படுகிறது. அறிவு தான் திட்டமிடல், செயலாற்றுவதற்கான நேரத்தை வரையறை செய்கிறது. மேலும் செயபடுதல், கடமையை நிறைவேற்றுதல் போன்றவை ஒழுக்கத்தால் நிர்ணயம் செய்யப்படுகிறது.

எந்த ஒரு இலட்சியமும் வெற்றியடைய காட்சி எனும் கனவு தூண்டலாகும்; அவற்றை நிறைவேற்றுவதற்கான அறிவே ஞானமாகும். வழிமுறைகளே செயல்முறைகளாகும் ஒழுக்கமாகும். இந்த சூத்திரமே அனைத்து வெற்றிக்கும் பொருத்தமானது. இவ்வாறாக பிறப்பறுத்து விடுதலை பெறுவதை இலட்சியமாக கொண்ட மானுடர்(புருஷர்)களே, அர்த்தமானவர்களாக கருதப்படுகின்றனர். அவ்வாறான புருஷார்த்த வெற்றிக்கு வழிவகுப்பது தத்வார்த்த சூத்திரத்தை அளித்த உமாஸ்வாமி குறிப்பிட்டது போன்று நல்லகாட்சி, நல்லறிவு, நல்லொழுக்கமே என்பதை நாம் புரிந்து கொண்டு அந்த இலட்சியப்பயணத்தில் வெற்றிபெறுவதற்கு இந்த (சம்யக்வ) சூத்திரத்தை ஏற்று நடத்தலே எந்த ஒரு முட்டாளாக, அறிவில்லாத பாமரனாக இருந்தாலும் பொருத்தமானதாக இருக்கும் என்பதையே முனிவர் பெருமான் இந்நூற்பாவில் தெரிவிக்கிறார். அப்படியானால் அறிவு ஜீவிகளுக்கும் பொருந்தக்கூடியதே என்பதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். இல்லையேல் செருக்கில் வீழ்ந்து மடிதல் நிச்சயம் என்ற விவேகமும் அவசியம் வேண்டற்பாலது.





कुबोध्रागादिविचेष्टितैः पफलं त्वयापि भूयो जननादिलक्षणम् । 
प्रतीहि भव्य प्रतिलोमवृत्तिभिः धुवं फलं प्राप्स्यसि तद्विलक्षणम् ।।106।।

குபோதராகாதி விசேஷ்டிதை: 

பலம் த்வயாபி பூயோ ஜனனாதிலக்ஷணம் | 
ப்ரதீஹி பவ்ய ப்ரதிலோபவ்ருத்திபி: 
துவம் பலம் ப்ராப்ஸ்யஸி தத்விலக்ஷணம் || 106 ||

O worthy soul! As fruits of your actions, based on wrongknowledge, attachment and aversion, etc., you have acquired, over and over again, births and deaths in this world. Rest assured that by opposite actions, based on right-knowledge and ndifference to worldly pursuits, you will certainly obtain the opposite fruit, i.e., the state of everlasting bliss.
தகுதியான ஆத்மாவே! உன் செயல்களின் பலன்களாக, தவறான அறிவு, சேர்க்கை மற்றும் வெறுப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, இந்த உலகில் பிறப்புகள் மற்றும் இறப்புகளை மீண்டும் மீண்டும் பெற்றுள்ளீர். சரியான அறிவு மற்றும் உலக நோக்கங்களுக்கான மாறுபாட்டின் அடிப்படையில், எதிர் செயல்களின் மூலம், நீ நிச்சயமாக விடுதலையை பெறுவீர்கள், அதாவது நித்திய ஆனந்தத்தின் நிலையை.

ஆன்மீகத்திற்கான தகுதியை இந்நூற்பாவில் வரையறை செய்துள்ளார் முனிவ பெருமான். எந்த ஒரு காரணத்தால் செயல் நிகழ்கிறதோ அதற்கான பயனும் அமையும் என்பது உலக இயல்பு. அந்த செயலின் விளைவு துன்பத்தை அளித்தால் காரணத்தியும், செயலையும் மாறுவது தானே சரியான அறிவு. அதனால் துன்பம் களைதல் என்றாலும் பிறப்பறுத்தல் என்றாலும் இப்போதைய ஒழுக்கத்தை விலக்கி நல்லொழுக்கத்தையும் அதற்குரிய நல்ஞானத்தையும் வளர்ப்பது தானே விவேகம் என்கிறார் ஆச்சார்யஸ்ரீ.

அவ்வாறான நல்லறிவும், நல்லொழுக்கமும் இல்லாத இந்நிலைப்பாட்டை விலக்காமல் செயல்பட்டால் பிறவி தொடரத்தான் செய்யும், பிறவா பேரின்ப நிலையும் கிட்டாது என்றே அறிவுறுத்துகிறார். தற்போதைய புலனடக்கமின்மை, வேட்கையுணர்வில் சிறிது அழிந்தாலும் அதற்குரிய இன்பம் ஏற்படுகிறது. அதிக அளவில் அழிக்கும் போது…. இதை உணர்த்துவதே ஆன்மீகம் ஆகும்.

அப்போது ஆன்மீகத்திற்கான தகுதி என்பது என்ன வென்று காணும் போது….

ஆன்மீகத்திற்கான தகுதி , அதன் இறுதி நிலை, அதன் வழிமுறைகள் , பாதைகள் எவை.

தகுதி- உயிருடன் உடல்தாங்கி இருத்தல் இறுதிநிலை – பிறப்பிறப்பற்ற நிலை வழிமுறை – நிலையாமை உணர்ந்து பிறப்பிறப்பைத் தரும் ஆசை களைவதே! பாதைகள்-நாத்திகம், ஆத்திகம் (ஆம்); பக்தி, சேவை, ஞானம், யோகம்,… இப்படிப் பல .

ஆன்மீகத்தில் உடல் சார்ந்த அனைத்தையும் புறந்தள்ளி மனம் புத்தி சித்தம் அஹங்காரம் என்ற தன்னுணர்வு ஆன்மா அவற்றைப் பற்றியே பேசிப் பழக ஆராய வேண்டும்!

“சாதி மத இன பால் திணை உருவமா அருவமா என்று கீழான எண்ணங்களை மறந்தும் பேச நினைக்கக் கூடாது. அது அறியாமைச் சுழலில் நம்மை பலப்பல பிறவிகளில் அதே நிலையில் நிறுத்தி வைத்து ஆன்மத் தேடலைத் தடைப்படுத்தும். சுருக்கமாக அதை மாயை எனச் சொல்லி தவிர்ப்போம்!”

இவற்றை அறிந்தபின் நடைமுறைப்படுத்துவது எவ்வாறு என பார்த்து வளர்வோம்…

மனதார வாழ்த்தல், பிறர் துன்பம் களைதல், நிலையாமையை நினைவு கூறல், ஈகை, கருணை பழகல் போன்றவையே வழிமுறைகளாகும்.

இதனால் அடையும் பயன் மனத்தூய்மை.

மனத்தூய்மையால் அடையும் நன்மை என்ன? மனத்தூய்மையால் அடைவது சித்தத் தூய்மை! சித்தத் தூய்மையால் அடைவது இறையனுபவம்!

சரி மனத்திற்கும் சித்தத்திற்கும் என்ன வேறுபாடு?

கடற்கரையில் அலைகள் எழுந்து வந்தபடி கரையில் மோதியபடி இருக்கும். அதில் சூரிய பிம்பம் இரண்டு அலைகளுக்கு இடைப்பட்ட நேரத்திலேயே தெரியும். அதுவும் அலைக்கழியும் நிலையற்ற பிம்பமாகவே தெரியும்!

நடுக்கடலில் சாந்தமாக அலையின்றி சூரியன் தங்கத்தட்டு போல ஒளிரும்.

கடற்கரை நீர் – மனம். ஆசை , வெறுப்பு என்ற காற்று வீச அவற்றை அடையும் முயற்சியில் அலைக்கழியும். கடற்கரையில் சூரிய பிம்பம் – நம் மனதில் அவ்வப்போது வந்து போகும் இறையனுபவம் என்ற ஆனந்தம் , அமைதியாகும்.

எடுத்துக்காட்டாக தூக்கத்தில் அனுபவிக்கும் சுகமான அமைதி மனமடங்குவதால் நாம் அனுபவிக்கும் குறுகிய கால (சத் சித்) ஆனந்தமான அனுபவமே!

சித்தம் – அலையற்ற ஆழ்கடல். அதில் சூரியன் ஒளிர்வதைப் போல இடையற்ற இறையனுபவத்தை அடையலாம்.

இன்னுமொரு குறிப்பு: மனம் சித்தம் புத்தி அஹங்காரம் எல்லாமே உண்மையில் ஒன்றுதான் என்ற நுட்பங்களை இப்போதைக்குத் தவிர்ப்போம். கடல்நீர், கடற்கரை நீர், நடுக்கடல் நீர், அலைகள் இவையனைத்தும் ஒன்றானாலும் நாம் பாகுபடுத்திப் பார்ப்பது போலவே இது!

நடைமுறை ஆன்மீகம் மன அலைகளைக் குறைத்து முடிவில் ஓரெண்ணம் கூட எழாத நிலையில் மனம் சித்தம் இவற்றிற்கும் உள்ள வேறுபாடழிந்து கடற்கரை நீரும் நடுக்கடல் நீரும் அலையற்றிருப்பது போன்ற நிலையடையும் நோக்கத்தோடனுனான பயிற்சிமுறையே புருஷார்த்தம் என்கிறார் முனிவ பெருமான்.






दयादमत्यागसमाध्सिन्ततेः पथि प्रयाहि प्रगुणं प्रयत्नवान् । 
नयत्यवश्य़् वचसामगेचर विकल्पदूर परम किमप्यसै ।।107।।

தயாதமத்யாகஸமாதிஸந்ததே: பதி ப்ரயாஹி பிரகுணம் ப்ரயத்ன வான் | நயத்யவச்யம் வசஸாமகோசரம் விகல்பதூரம் பரம் கிமப்யஸெள || 107 ||
O worthy soul! With a clear mind, make efforts to tread the path that is marked by compassion (dayā or ahimsā), self-restraint (indriyadamana or samyama), renunciation (dāna or parigrahatyāga), and meditation samādhi or dhyāna). This path certainly leads to that excellent state of liberation (moksa) which is beyond words and rid of all inquisitiveness (vikalpa).
தகுதியான ஆத்மா! தெளிவான மனதுடன், இரக்கம் (தயை அல்லது அஹிம்ஸா), சுய கட்டுப்பாடு (இந்திரியதமனா அல்லது சம்யமா), துறத்தல் (தான அல்லது பரிகிரஹத்யாகா) மற்றும் தியானம் (சமாதி அல்லது தியானா) ஆகியவற்றால் வகுக்கப்பட்ட பாதையில் இடைவிடாமல் முயற்சிக்கவும். இந்த பாதை நிச்சயமாக அந்த சிறந்த விடுதலை நிலைக்கு (மோட்சம்) வழிவகுக்கிறது, இது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது மற்றும் அனைத்து விசாரணை (விகல்பா) ஆகியவற்றிலிருந்தும் விடுபடுகிறது.  

---------------------------------------------- 

 வாழ்க்கைப் பயணத்தில் வழி தவறி போனவர்கள் வரிசை நீண்டு கொண்டேயிருக்கிறது இவ்வுலகில். வழி தவறியதால் வாழ்க்கையை இழந்து வருத்தப் பட்டு கொண்டிருக்கிறார்கள். பாதை மாறும் பயணங்கள் எட்ட முடியாது இலக்கை. 

 பாதை மாறிய மனங்கள் திரும்புவது என்பதும் விதிவிலக்கு. பாதை மாறும் வாகனம் விபத்து ஏற்படுவது போல; வழி தவறிய மனிதர்களும் தோல்வி அடைவது சத்தியம். ஒருவேளை பாதைகள் மாறினாலும் திசை மாறக் கூடாது.
 -- -- -- -- -- 
 ஒருவர் தாம் சென்றடைய வேண்டிய இடத்திற்கான சரியான பாதையை அறிந்து அதை சென்றடைய அவ்வழியில் நேராகச் சென்றால் அவ்விடத்தை அடையலாம். மாசிலா மனதுடன், இரக்கம், கருணையை அஹிம்சை உணர்வால் பெற்று, சுயக்கட்டுப்பாடு அதாவது இந்திரியங்களை புலனடக்கத்துடன் தன்வயப்படுத்தினால், தானம் போன்ற பொருட்தியாகம் போன்றவற்றால் அமைக்கப்பட்ட வாழ்வு முறையை இடைவிடாது கைக்கொண்டால் விடுதலைப்பேற்றை அளிக்கும் என்பது நிச்சயம். 

மேற்கூறிய அறிவுரை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. அதன் அர்த்தம் பயன்பாட்டில் தான் வெளிப்படும் என்று முனிவர் பெருமான் மும்மணி மார்க்கத்தில் செல்ல வலியுறுத்துகிறார்.






विज्ञाननिहतमोहं कुटीप्रवेशो विशुद्दकायमिव
त्यागः परिग्रहाणामवश्यमजरामरं कुरुते ।।108।।

விஞ்ஞான நிஹதமோஹம் குடீ பிரவேசோ விசுத்த காயமிவ | 

த்யாக: பரிக்ரஹணாமவச்ய மஜராமரம் குருதே || 108 ||
The renunciation of mundane objects undoubtedly liberates one who has shaken off delusion by means of right-knowledge, from decrepitude and death; just as Kuti pravesha (a kind of austerity) makes the body pure.
இவ்வுலகப் பொருள்களைத் துறப்பது, சந்தேகத்திற்கு இடமின்றி சரியான அறிவின் மூலம் மாயையை விலக்கிய ஒருவரை, பிறப்பு மற்றும் மரணத்திலிருந்து விடுவிக்கிறது; 

குடீபிரவேஷா (ஒரு வகையான ஆயுர்வேத முறை) உடலை தூய்மையாக்குகிறது (அதுபோல) குடீபிரவேஷா என்பது ஆயுர்வேதமுறையில் ஒரு ரசாயன தயாரிப்பாகும். 

இந்த ரசாயனம் ஒருவரது உடலிலுள்ள உயிரணுக்களை சீக்கிரம் அழியாமல் பாதுகாக்கும். அதனால் எப்போதும் இளமையுடன் காணப்படுவார்கள். அதாவது புத்துயிராக்கம் பெற்று முதுமையை தழுவாது ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ்வைக்க உதவும். காயகல்பம் போன்றதாக கொள்ளலாம். 
 -------------------------------- 

 அறம் மற்றும் தெய்வ பக்தியை முன்னிறுத்தி உபதேசிப்போர், நாம் மரணத்திற்குப் பிறகு கடவுளரின் உலகத்தில் போய் சேர்ந்து நிரந்தரமாக இருப்பது, அவர்களோடு ஒன்றாகிவிடுவது என்று பல்வேறு விதங்களில் (அவரவர் மத உட்பிரிவுகளுக்கு ஏற்ப, அந்தந்த ஆச்சாரியர்களின் உபதேசங்களுக்கு ஏற்ப) நமக்கு அளிப்பார்கள். 

 ஆத்ம ஞானத்தை முன்னிறுத்தி உபதேசிப்போர், நாம் நம் யதார்த்த சொரூபமான ஆத்மாவோடு ஒன்றிணைவதே இந்த வாழ்வின் குறிக்கோள் என்பார்கள். ஜீவாத்மாவாகிய உயிரும், பரமாத்மாவாகிய இறைவனும் வேறு வேறு அல்ல, நீயே அந்த ஆத்மா / பரமாத்மா என்று உணர்வதே பூரண ஞான வழி என்பார்கள். 

 வாழ்வின் நோக்கம் திரும்பத் திரும்ப நமக்குள் தோன்றும் கேள்வி, ‘வாழ்க்கையின் அர்த்தம் என்ன? அல்லது வாழ்வின் நோக்கம் என்ன? அல்லது நாம் ஏன் பிறக்கிறோம்?’. பெரும்பான்மையினர் வாழ்வின் நோக்கத்தை தாங்களே வரையரைத்துக் கொள்கின்றனர். 

ஆனால் ஆன்மீக கண்ணோட்டத்தில் நாம் பிறந்ததற்கு இரு காரணங்கள் உண்டு. அவை : பிறரிடம் நமக்குள்ள கொடுக்கல்–வாங்கல் கணக்கு என்பதை சரி செய்து கொள்வது ஆன்மனிடம்/இறைவனிடம் ஐக்கியமாகும் நோக்கத்துடன் ஆன்மீக முன்னேற்ற பாதையில் சென்று அதன் மூலம் பிறப்பு-இறப்பு என்ற வாழ்க்கை சக்கரத்திலிருந்து விடுபடுவது. பல பிறவிகளில் செய்த கர்மாக்களின் நேரடி விளைவாக நாம் கொடுக்கல்-வாங்கல் கணக்கை சேர்க்கிறோம். 

அவை நேர்மறை அல்லது எதிர்மறை கணக்காக நாம் செய்யும் நல்லது அல்லது கெட்ட செயல்களை பொறுத்து அமையும். விதிமுறைப்படி தற்காலத்தில் நம் வாழ்வின் நிகழ்வுகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. மீதமுள்ளவை நம் கையில் உள்ளது. நம் வாழ்க்கையின் பெரும்பான்மையான சில நிகழ்வுகள் ஏற்கெனவே விதிக்கப்பட்டவை. 

 நம் பிறப்பு, நம் குடும்பம், மணம் செய்வது/தவிர்ப்பது, நம் குழந்தைகள், தீவிரமான நோய்கள், இறப்பு போன்ற முக்கிய நிகழ்வுகள் இதில் அடக்கம். நாம் நம் உடன்பிறப்புகளுக்கும் நெருக்கமானவர்களுக்கும் தரும் சுக துக்கங்கள், முன் ஜன்மத்தின் கொடுக்கல்-வாங்கல் கணக்கை அடிப்படையாக கொண்டவையே. எனினும் நம்முடைய இந்த பிறவியின் விதி கூட மற்ற பிறப்புகளில் நாம் சேர்த்து வைத்துள்ள கர்மாக்களின் ஒரு சிறிய பகுதியே ஆகும். இப்பிறவியில் நமக்கு விதிக்கப்பட்ட கொடுக்கல்-வாங்கல் கணக்கை, விதியை நாம் முடித்தாலும் நாம் செய்யும் சில செயல்களால் புதிய கொடுக்கல்-வாங்கல் கணக்குகளை உருவாக்குகிறோம். 

இவை நம் ஒட்டு மொத்த கொடுக்கல்-வாங்கல் கணக்கான கர்மாவுடன் சேர்கிறது. இதன் பலனாக இந்த கொடுக்கல்-வாங்கல் கணக்கை முடிப்பதற்கு இன்னும் பல பிறவிகள் எடுக்க வேண்டியுள்ளது. இதனால் பிறப்பு-இறப்பு என்ற சக்கர சுழற்சியில் மாட்டிக் கொள்கிறோம். எந்த ஒரு ஆன்மீக மார்க்கத்திலும் இறைநிலை அடைவதே இறுதி லட்சியமாகும். 

தெய்வத்துடன் ஒன்றிணைவது என்பது தெய்வத்தை நம்முள்ளும் நம்மை சுற்றி வெளியிலும் உணர்வதே அன்றி நம் ஐம்புலன்கள், புத்தி மற்றும் மனதால் நம்மை அடையாளம் கண்டு கொள்வதல்ல. இது 100% ஆன்மீக நிலையில் கைகூடுகிறது. இந்த உலகத்தில் பெரும்பான்மையோர் 20-25% ஆன்மீக நிலையில் உள்ளவர்கள்தான்.

 இவர்கள் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள முயற்சிப்பதில்லை. தங்களின் ஐம்புலன்கள், மனம், புத்தியுடன் தங்களை அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். நம் தோற்றத்தின் மீது அதிக கவனம் செலுத்தும்போது, நம் புத்தியால் அல்லது நமக்கு கிடைக்கும் வெற்றியால் கர்வம் கொள்ளும்போது இது நம் வாழ்விலும் வெளிப்படுகிறது. 

 நாம் ஆன்மீக ஸாதனை செய்து பிறப்பு-இறப்பு என்ற சக்கர சுழற்சியிலிருந்து விடுபடுகிறோம். 
 -------------------------------- 

 பிறப்பு இறப்பு சக்கர சுழற்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கு எவ்வாறு காயகல்ப பயிற்சிகள் நம் உடல் மாசுக்களை அகற்றி, பூரண ஆரோக்கியத்தை அளிக்கிறதோ, அது போல விருப்பு, வெறுப்பற்ற வீதராக பாவனையில், நான் ஆன்மா பிறபொருட்களிலிருந்து தனித்தன்மை வாய்ந்தவன் என்ற பேத உணர்வுடன் வாழ்ந்தால் ஆன்ம மாசுக்களை அகற்றி பிறப்பு, இறப்பிலிருந்து விடுதலை கிடைப்பது உறுதி என்பதையே முனிவர் இந்நூற்பாவில் தெரிவிக்கிறார்.





अभुक्त्वापि परित्यागात् स्वोच्छिष्टं वि}वमासितम् । येन चित्रां नमस्तस्मै कौमारब्रह्मचारिणे ।।109।।

அபுக்த்வாபி பரித்யாகாத் ஸ்வோச்சிஷ்டம் விஸ்வமாசிதம் | யேன சித்ரம் நமஸ்தஸ்மை கெளமாரபிரம்ஹசாரினே || 109 ||
It is a wonder that the young celibate throws up for the world all objects of enjoyment that were available to him, without first enjoying these himself. Our salutation to him!
இளம் பிரம்மச்சாரி தனக்கு கிடைத்த அனைத்து இன்பம் துய்க்கும் பொருள்களையும் நுகராமல் விலக்கி வைப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவருக்கு நம் வணக்கம் உரித்தாகுக.

போக உபபோக பொருட்கள் துய்த்தலை விட்டுத் துறந்துபோய் யோகப் பயிற்சியால் மனவசன காயச் செயலை அடக்கி நோற்கும் இளம்விரதிகளைப் பாராட்டுகிறார் முனிவர்.

அதாவது ஒருமுறை மட்டும் உபயோகப்படும் உணவு, வாசனாதிப் பொருட்கள்(ஸென்ட்கள்), தாம்பூலம் (மற்றும் லாகிரிது வஸ்துக்களும் இக்காலத்தில்) முதலியன போகப் பொருள் எனப்படும்.

பலமுறை உபயோகிக்கப் பயன்படும் ஆபரணங்கள், வாகனங்கள், கட்டில், விதமான வரணங்களினால் ஆன ஆடைகள் முதலானவை உபயோகப் பொருள்கள் ஆகும்.

இந்த இரு வகையான பொருட்களையும் குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே நுகர வேண்டும். (பயன்படுத்த வேண்டும்) என வரையறை செய்து கொள்வது போக உபபோக பரிணாம விரதத்தின் நோக்கமாகும். இது இல்லறத்தாருக்கானது.

வாழ்நாளில் இளைமையில் தான் போகங்களையும், உபபோகங்களையும் அனுபவித்து விடவேண்டும் என்ற வெறித்தனம் அதிகமிருக்கும். அந்த எண்ணத்தூண்டலுக்கு இன்றைய ஊடகமும் பெரும்துணை புரிந்து வருவதையும் நாம் கண்கூடாக கண்டு வருகிறோம். அவற்றின் கவர்ச்சியை மீறி அதன் வலையில் சிக்காதோர் உண்டோ இவ்வுலகில். இது அந்தந்த காலகட்டத்தில் வாழ்ந்து வந்த மக்களின் வாடிக்கையான செயலாகும். அக்கவர்ச்சி விலங்கில் வியாபாரிகளும், விளம்பரத்துறையினரும் நம்மைக் கைது அவர்களின் கடைக்குள் சிறைவைக்கவே முயன்று வருகின்றனர்.

போக உபபோகப் பொருட்களில் காமத்தைத் தூண்டும் பெண்பாலினத்தவரையும் இந்த ஆண் வர்க்கம் சேர்த்துத்தானே வைத்துள்ளது. அந்த நிலையிலிருந்து இன்னும் முழுவதுமாக இவ்வுலகம் மீண்ட பாடில்லை. அதில் பெரு விருப்பம் கொண்டு இச்சமூகமும் தங்கள் உழைப்பில் பெரும்பகுதியை வீணடித்து வருகிறது. நாளுக்கு நாள் அந்த அடிப்படைத்தேவைகளுக்காக பொருளீட்டும் நோக்கத்திலிருந்து ஆடம்பரத்தேவைகளின் கவர்ச்சியில் வீழ்ந்து ஆசைப்படும் உடைகள், ஆபரணங்கள், வாகனங்கள் போன்றவற்றில் பெரிதும் நாட்டம் கொண்டு, பழமென எண்ணி விளக்கில் வீழ்ந்த பூச்சிபோல் மடிகின்றனர்.

ஆனால் இப்பொருட்களை நுகராமலே முற்றிலும் தியாகம் செய்து முனிநிலையை ஏற்ற இளம் துறவிகளைக் கண்டு ஆச்சர்யம் அடைவதாக முனிவர் பெருமான் இப்பாடலில் குறிப்பிடுகின்றார். அதாவது அவர்கள் முற்பிறவிகளில் இவற்றால் இன்பம் துய்த்து சலிப்பும், வெறுப்புமடைந்ததை நினைவில் நிறுத்தி அவ்வாறு தியாகம் செய்தனர் என்றுரைக்கிறார்.

ஒரு பொருளைக் காணமல் இருப்பது வேறு, கண்டபின்னும் துய்க்க மன எழுச்சி பெறாமல் இக்காலத்திய ஊடகவியலாரின் வலையிலிருந்து தப்புவது மிகக்கடினம். ருசியான உணவை எதிரில் வைத்து உண்ணாமலே எச்சில் பட்டதாக எண்ணி வெறுத்தொதுக்கும் தியாகிகளான இளம் துறவிகள் போற்றுதற்குரியர்களே!

மேலும் “இளைய நண்பர்களே! இன்பங்களைப் பெருக்கிக் கொள்வதிலிருந்து விடுதலை பெறுவீர்! நல்வாழ்க்கைக்கான இலக்குகளை நிர்ணயிப்பீர்களாக குறிக்கோள் இதுவெனக் கூறிக்கொள்வீராக! நமது குறிக்கோள் எதிர்காலமாக அமையட்டும்!

அதேசமயம் நமது குறிக்கோள் சொர்க்கம் அடைவதாகவோ, முக்தி அடைவதாகவோ அமைந்தால் நல்லது. அது மிகவும் ஆச்சர்யமான விஷயம் தான்.

அதை விடுத்து எதிர்மறையாக போகங்களைத் துய்ப்பதில் பொழுதைக் கழிக்காமல். ஆக்கப் பூர்வச் செயல்களில் ஈடுபட்டு வீட்டையும், நாட்டையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் நோக்கத்திற்காக முயலுங்கள். அறிவறிந்த ஆள்வினையை மேற்கொண்டு நாட்டை மேலும் மேலும் தற்சார்புடையதாக்குக! என்றும் அறிவுறுத்துவதாக கொள்ளலாம்.








ஆகிஞ்சனோ அஹமித்யாஸ்ஸ்வ த்ரைகோக்யாதி பதிர்பவே : | 

யோகிகம்யம் தவ ப்ரோக்தம் ரஹஸ்யம் பரமாத்மன: || 110 ||
Live in a way as though (you felt), “Nothing is mine” and thou will be lord over the three worlds. The essence of divinity, as realised by the saints, is told thee (herein)
"எதுவுமே என்னுடையது அல்ல", (என நீங்கள் உணர்ந்து) ஒரு தனித்துவமான வழியில் வாழ், நீங்களே மூன்று உலகங்களுக்கும் அதிபதியாக இருப்பீர்கள். முனிவர்களால் (புனிதர்களால்) உணரப்பட்டபடி தெய்வீகத்தின் சாராம்சம் உங்களுக்கு அவ்வாறு சொல்லப்படுகிறது (இங்கே)

முழுமுதலான தத்துவத்தை, மொத்த ஜைன தத்துவத்தின் சாராம்சத்தை இந்நூற்பாவில் விடுதலைப் பேற்றிற்கு அழைத்துச் செல்லும் உணர்வுநிலையை சுருக்கமாக, எளிமையாக கூறியுள்ளார் ஆச்சார்யஸ்ரீ குணபத்ரர். அவரது ஆன்மீக அனுபவத்தின் கடைக்கோடியில் கிடைத்த பெரும்புதையலை நமக்களிக்கிறார் என்றுதான் கூறவேண்டும். கேட்பது கூட சுலபமாக தோன்றலாம். கடைபிடித்தல் மிகவும் கடினமான ஒன்றாகத்தான் தோன்றுகிறது.

இந்த உடல் நானில்லை என்றாலும், இந்த உடல் உழைப்பில் பெற்றவை அனைத்தும் எனது என்று வாழ்வதே நியாயம் தர்மம் என்றுதான் ஆன்மீகம் நமக்கறிவுருத்தும் செய்தியாக கருதி வருகிறோம்.

அதுவே உழைப்பே உயர்வு, உழைக்காமல் எந்த ஒரு பொருளையும் சேர்ப்பித்தல் கூடாது. நாலு காசா இருந்தாலும் நம்முடையதாக இருக்க வேண்டும். மேலும் பிறர் பொருள் மீது வேட்கை கொள்ளாது வாழ்வதே மேலான வாழ்க்கை என்பதும் தூய வழியே.

நான் யார் சொத்துக்கும் ஆசைப்படவில்லை. அதே சமயம் எனக்கென கொஞ்சம் என் உழைப்பினால் ஈட்டி வைத்துள்ளேன் என்று கூறிக்கொள்வதையே பெருமையாக, மிகக் கெளரவமாக கருதுவதே தெய்வத்தன்மைக்குள் நுழைந்து விட்டதாக கருதுகிறோம்.

நாம் உழைத்த பணத்தை பிறருக்கு அளித்தால் தானம். அவ்வாறு அளிப்பதே அன்பின் வெளிப்பாடு, கருணை உள்ளம், இரக்க சிந்தனை எனக் கூறிக்கொண்டு நம் பொருளையோ அல்லது உழைப்பையோ பிறருக்கு அளித்து மகிழ்கிறோம். ஏதோ தெய்வம் செய்யும் பணியை நாமே ஆற்றி விட்டதாக கூறிக்கொள்கிறோம். பிற ஜீவராசிகளிடம் காட்டும் எனது அன்பே அஹிம்சையறமாக நாம் கருதவேண்டும் என்றளவில் நாம் ஆன்மீகப்பயணத்தில் சென்று கொண்டிருக்கிறோம்.

இதுபோன்று பல நல்லொழுக்கங்களை, நல்ஞானத்தின் வழியே நாம் கடைபிடித்து வருகிறோம். அது ஆன்மீக முன்னேற்றத்தை அளிக்கக்கூடியதுதான். அவ்வழியில் வாழ்ந்தால் ஆன்மீகப்பாதையில் வளர்ச்சியில் சில விழுக்காடுகளை பெற்றுள்ளோம் என்றுதான் கூறவேண்டும்.

அதுவே ஆன்மீகத்தின் உன்னத நிலையன்று. மனதளவில் உன்னத நிலையைத்தான் நாம் எட்டியுள்ளோம் என்றே முனிவர் அவர்கள் தெரிவிக்கிறார்.

அவ்வாறான மனோபாவங்களே நமக்கு ஒழுக்கத்தில் நேர்மையும், உணர்வில் தெய்வத்தன்மையையும் மிளிரச் செய்யும் என்பது உறுதி. அவ்வாறு வாழும் போதுதான் திடீரென சம்யக்வம் என்ற நற்காட்சியை ஒரு க்ஷணத்தில் எட்டி பிடித்து விடுவோம். அதுவரை எனது என்ற மமகாரம் குறைந்த வாழ்வினை தான் வாழ்ந்து வந்துள்ளோம். ஏனெனில் எனது உடலால், எனது உழைப்பால் ஈட்டியவற்றை பிறருக்கு அளித்து வருகிறேன் என்ற உள்ளார்ந்த உணர்வில் சிறைப்பட்டுத்தான் இத்தனை நற்செயலையையும் செய்து வந்துள்ளோம். அதுவும் நமக்கு ஒரு தளையே.

ஆனால் மனதில் தெய்வத்தன்மை முழுவதுமாக நிரம்பியநிலையை எட்டும் போது, மனம் கடந்த நிலையை நாம் எட்டி விடுவோம். அப்போது ஆன்ம விழுப்பு நிலைக்கு தள்ளப்பட்டிருப்போம். அதுவே நற்காட்சியாகும். அதன் பின் ஆற்றும் எந்த ஒரு செயலிலும் எனது உடல், எனது உழைப்பு, எனது உடைமை என்ற எண்ணமே கிஞ்சித்தும் இருப்பதில்லை. அவை இயல்பாகவே ஒரு நற்காட்சியாளனிடம் இருந்து வெளியேறி எதுவும் எனதில்லை என்ற உணர்வுநிலை தோன்றிவிடும்.

ஏனென்றால் நான் ஆன்மா என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதும். இவ்வுலகிலிருந்து என்னிடம் ஒட்டிக்கொண்டிருப்பவை எதுவும் எனதில்லை என்ற உணர்வே தோன்றச் செய்யும். அப்போது அவை அனைத்தும் ஒரு சுமையாக ஆகிவிடும். உடல், மனம் மட்டுமல்ல, நம்மையறியாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் வினைத்துகள்கள் முற்றிலுமே புத்கலத்திரவியம், அது நமதல்ல என்ற தெளிவு பிறந்து விடும்.

அப்போது ஆன்மா புத்கலத்தால் ஆன உடல், மனம் இவற்றைக்கொண்டு எந்த ஒன்றை பிறருக்கு அளித்திருக்கும் இன்னொரு ஆன்மனை பிறவற்றுக்கு அளிக்க முடியுமா என்ன, இங்கிறைந்து கிடக்கும் வெறொரு புத்கலப் பொருட்களைத்தானே அளித்திருக்க முடியும் என்ற தெளிவையே இந்த நூற்பாவின் வழியாக மாமுனிவர் நமக்களிக்கிறார்.

அதனால் ஆன்மீக வாழ்வுப்பாதையில் நல்லொழுக்கத்துடன், நல்ஞானத்தின் வழிகாட்டுதலுடன் வாழ்ந்து வந்தால் ஒருநாள் நாம் மனத்தூய்மை எய்தி, தெய்வத்தன்மை முழுவதுமாய் வெளிப்பட்டபின், ஆன்ம விழிப்பின் கட்டுப்பாட்டில் வாழத்துவங்குவோம். அதுவே நற்காட்சி உதயமான தருணம்.

அதுவே நான் தனித்தன்மையானவன், எனக்கென எதுவும் இல்லை, இந்த உடல், மனம் பிறபொருட்கள் அனைத்தும் இவ்வுலக புத்கலத்திரவியமே என்ற முழுதுணர்ஞானம் வெளிப்படும். அதுவே இறைநிலையாகும். அதுவே ஆன்மத்திரவியத்தை தவிர பிறவற்றை மாசாகக்கருதும் உணர்வை தந்து விடும்.

பின்னர் தனதாக எண்ணிய அனைத்தையும் தளையாக, சுமையாக எண்ணி விலக்கி விடுதலை யடைந்து விடும் என்பதே ஜைனம் நமக்களிக்கும் தத்துவ ஞானமாகும். அதைத்தான் முனிவர் தனது வழிகாட்டுதலாக இந்நூற்பாவின் வழியே தெரிவித்துள்ளார்.

சாட்சிபாவமாய் இருந்தால் மட்டும் போதாது விழிப்புணர்வாய் மாறுவதே விடுதலையை அளிக்கும் என்பதே சுருக்கமாக இப்பாடல் நமக்கு அளிக்கும் தெளிவு.








துர்லபமசுத்தமபஸுகமவிதிதம்ருதிஸமயமல்பபரமாயு: | 

மானுஷ் யமிஹைவ தபோ முக்திஸ்தபஸைவ தத்தப: கார்யம் || 111 ||
This human mode-of-existence – manusha paryāya – is difficult to attain, impure, and void of happiness. In this mode, the time of death cannot be known. Even the longest possible age of a human being is short when compared to the age of a celestial being. Still, austerity (tapa) can be observed only in the human mode-of existence and liberation can only be attained through observance of austerity.
இந்த மனிதப்பிறவி - மனுஷ பர்யய்யா –அரியது; தூய்மையற்றது மற்றும் சுகமற்றது ஆனாலும் அடைவது கடினம். எந்த முறையிலும் மரண நேரத்தை அறிய முடியாது. வானத்திலுள்ள ஒரு கோளின் வயதுடன் ஒப்பிடும்போது மனிதனின் மிக நீண்ட ஆயுள் கூட குறுகியதாகும். மேலும் தவ வாழ்க்கையை மனித பிறவியில் மட்டுமே கடைபிடிக்க முடியும். அத்துறவறத்தை கடைபிடிப்பதன் மூலம் மட்டுமே விடுதலையை அடைய முடியும்.

இன்பம் துன்பம் என்ற இருவகை உணர்வுகளை பகுத்துணரும் ஆற்றல் பல ஜீவராசிகளுக்கிருந்தாலும் இன்பத்தை கூட்டியும், துன்பத்தை குறைத்தும் வாழும் விவேகஅறிவு மனிதனுக்கு மட்டுமே உள்ளது. மேலும் வாழ்வின் இலட்சியம் என ஒன்றை நிர்ணயம் செய்து அதில் வெற்றி காணும் வழிகளை வகுத்து அதில் வழுவாது பயணித்தும்; அப்போது எதிர்வரும் இடர்களுடன் போராடி இலக்கினை அடையும் மனோதைரியமும், உறுதியும் கொண்ட மனநிலைக்கு தன்னை உயர்த்திக்கொள்ளும் ஆற்றலும் மனித இனத்திற்கு உண்டு. இதனை மாமனிதர்கள் தங்கள் வாழ்வில் கண்டறிந்து பிறருக்கு உணர்த்தியுள்ளார்கள். அவ்வாறான உதாரண புருஷர்கள் தேவ, நாரகிய பிறவிகளில் கிடையாது. அவர்களும் தங்கள் இலக்கினை அடையும் மார்க்கத்தை இம்மாமனிதர்களிடம் வந்து வணங்கி, வழிமுறைகளை கேட்டறிந்து செல்கிறார்கள் எனின் இம்மனிதப்பிறவிக்கான ஆற்றலை, சிறப்பினை நாம் அறிந்து கொள்ளலாம்.

தேவப்பிறவியர் சுகத்தில் எப்போதும் திளைத்திருப்பார்கள். அதிலிருந்து விலகி தபவாழ்க்கை என்ற ஒன்றை அவர்கள் நினைத்துக் கூட பார்ப்பதில்லை. நாரகியர் எப்போதும் துன்பத்தில் விழ்ந்திருப்பார்கள். தபத்திற்கான நேரம் அவர்களுக்கு அளிக்கபடவில்லை. விலங்குப்பிறவியோ நன்மை தீமை யறியா உயிரினமாகும்.

அதே சமயம் மனிதப்பிறவியிலும் போகபூமி முடியும் வரையில் தேவலோகப் பிறவிகள் போன்று விடுதலைப்பேற்றைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் வாழ்ந்து மடிவார்கள். ஆனால் ஐந்தாம் காலத்தில் மட்டுமே இன்பம் குறைந்தும், துன்பங்கள் கூடியும் வாழும் சூழல் ஏற்படும். இந்த போராட்ட காலக்கட்டமே மனிதனுக்கு வாழ்வில் விடுதலை அடையத்தூண்டும். அதுவே தற்போதையை காலச்சக்கரப் பகுதியாகும்.

அதுவே துன்பத்திலிருந்து விடுதலையடைய வழிதேட முற்படும். நிரந்தர சுகத்திற்கான பெருமுயற்சியில் ஈடுபடும் விழைவை ஆழமாக ஏற்படுத்தும். அதனால் தவமியற்றி துறவறநெறியின் உச்சநிலையை அடையும் வேட்கை தோன்றும். எனவே இக்காலத்திய மனிதப்பிறவியே விடுதலைப் பேற்றை அடைய பெருமுயற்சி எடுத்துக் கொள்ளும் வைராக்கியம் தோன்றும் காலமாகும்.

இந்த ஐந்தாம் காலத்தின் துவக்கத்தில் தான் ஜினர்கள் தோன்றி முக்தியடைகிறார்கள். அவர்களே பிற மனிதர்களுக்கும் உதாரண புருஷர்களாக வாழ்ந்து, வழிகாட்டியாக திகழ்கிறார்கள். அதனால் இக்காலத்தில் மும்மணியில் பிறழாது தபம், தியானம் என தூயநெறியில் வாழ்ந்து ஆன்மநலம் பெற முடியும் என்பதை உணரவேண்டும் என இந்நூற்பாவின் வழியே அறிவுறுத்துகிறார் முனிவர் பெருமான்.








இந்தி பாடல்

த்ரவிணபவனப்ராத்மாதானாம் ஸுகம் கிமிஹேக்ஷ்யதே. 

கிமபி கிமயம் காமவ்யாத: கலிகுருதே கல: |
 ஸரணமபி கிம் ஸ்ப்ரஷ்டும் சத்தா: பராபவ பாம்ஸவோ, 
வதத தபஸோஅப்யன்மான்யம் ஸமீஹிதஸாதனம் || 113 ||
What happiness can the men, swayed by the strong wind of (craving for) wealth, attain? This implies that the happiness attained through austerity (tapa) can never be attained by those craving for wealth. Can the evil hunter in form of carnal lust harm the man fortified by austerity? Further, can the dust of disgrace ever touch even the feet of the man fortified by austerity? O worthy souls! Tell me if there is a better means than austerity for attaining the desired goal of liberation.
செல்வம் முதலானவற்றின் மிது ஏற்படும் ஆசை எனும் இதமான காற்றினால் தாக்கப்பட்டவர்கள் என்ன மகிழ்ச்சியைக் காண்பார்கள். வேடனைப் போல கொடிய விருப்பம் நல்லவரின் நற்குணத்தை ஒழித்துவிடாதா? ஆனால் அந்த தீய விருப்பம் என்ற அத்தூசி ஒருபோதும் மாமுனிகளை தீண்டுவதில்லை. தவத்தை தவிர வேறு முக்தி அடைவதற்கான வலுவான வழி உள்ளதா என்று கூறு…. இவ்வுலக மாந்தர்கள் அனைவரும் புகழ், பெருமைக்காகவே செயலாற்றுகின்றனர். தனது பெருமுயற்சியினால் பெரியவனாக, தனவந்தனாக ஆக விரும்புகின்றனர். புகழுச்சிக்கு செல்ல மேலும், மேலும் செல்வத்தை ஈட்டவே விரும்புகின்றனர். சஞ்சலமனதுடனே வாழ்ந்து விருப்பத்தினால் எப்போதும் துன்பத்திலேயே வாழ்கின்றனர். ஆனால் தவத்தின் பெருமையோ மிகச் சிறந்தது. அதனால் சித்தி, ரித்தி போன்றவை விரும்பாமலேயே உற்பத்தியாகின்றன. அதனால் தவவாழ்வை விட செல்வம், புகழ், பெருமை போன்றவை என்றைக்குமே சிறந்தவை அல்ல. அதுவே மேலானது ஆகும்.






இஹைவ ஸஹஜான் ரிபூன் விஜயதே ப்ரகோபாதிகான், குணா: 
பரிணமன்தி யானஸு ப்ரப்யம் வாஞ்சதி | 
புரச்ச புருஷார்த்தஸித்திரசிராத்ஸ்வயம் யாயினி, 
நரோ ந ரமதே கதம் தபஸி தாபஸம்ஹாரிணி || 114 ||
In this world, the ascetic vanquishes his natural enemies, like the passions of anger, etc., through the power of austerity (tapa). He acquires merits which are dearer to him than own-life. Further, in the after-life he automatically and speedily attains liberation as the culmination of his human effort. This being the case, why should the man not engage in austerity that destroys all angu
ish? இந்த உலகில், சந்நியாசி தனது இயற்கையான எதிரிகளை, கோபத்தின் உணர்வுகள் போன்றவற்றை தவ வலிமையின் மூலம் வென்றுவிடுகிறார். சொந்த வாழ்க்கையை விட தனக்கு மிகவும் மேலான தகுதிகளை அவர் பெறுகிறார். மேலும், பிந்தைய மனித வாழ்க்கையில் அவர் தன்னுடைய மனித முயற்சியின் உச்சமாக தானாகவும் விரைவாகவும் விடுதலையை அடைகிறார். இதுபோன்ற நிலையில், எல்லா வேதனையையும் அழிக்கும் தியாக எனும் முனிவரின் நல்லொழுக்கத்தில் மனிதன் ஏன் ஈடுபடக்கூடாது?

எந்த ஒரு செயலால் உடன் நன்மையும் வருங்காலத்தில் தீமையும் ஏற்படுமோ அத்தகைய செயல்களை உலகிலுள்ளவர்கள் செய்கின்றனர். ஆனால் தவ வாழ்வு இம்மைக்கும் மறுமைக்கும் நன்மையே பயக்க வல்லது. ஆகையால் அறிவுடையோர் அத்தவத்தின் மீது ஆர்வம் கொள்ளாமல் இருப்பார்களா? அதனால் அனாதிகாலமாக பல பிறவிகளில் உடன் வந்த துன்பக்காரணிகளான சினம், கர்வம் போன்ற தீய உணர்வுகள் அகன்று விடுகின்றன. இது உடன் கிடைத்தாலும், அவ்வழி நடக்கும் போது ரித்தி, சிறப்பு போன்ற மேலானவை தாமாகவே வந்தடைகின்றன. அதன் பயனாக விரைவில் முத்திபதமும் கிடைக்கிறது. இவ்வாறு இம்மை நலனும் மறுமைப் பயனும் தவத்தை அறிவுடையோர் மேற்கொள்ள வேண்டும் என்று முனிவர் கூறுகிறார்.








தபோவல்லயாம் தேஹ: ஸமுபசிதபுண்யோர்ஜித பல: 

சலாட்வக்ரே யஸ்ய ப்ரஸவ இவ காலேன கலித: | 
வ்யகஷ்யச்சாயுஷ்யம் ஸலில்மிவ ஸம்ரக்ஷிதபய : 
ஸ தன்ய: ஸந்யாஸாஹுதபுஜி ஸமாதானசரமம் || 115 ||
The body of the ascetic vanishes when, in time, it has produced the excellent fruit of merit (puõya) on the creeper of austerity (tapa); it is like the flower that vanishes, in time and on its own, from the top of the unripe fruit. His age (āyuÍ) dries up safeguarding his asceticism including the virtuous (dharmya) and the pure (śukla) meditation; it is like the water that dries up safeguarding the milk from the fire. Blessed is such an ascetic.
சரியான தருணத்தில், துறவற வாழ்வில் (தபம்) தவழும் போது, தபத்தில் சிறந்த ஆன்ம முன்னேற்றக் கனியை (பூசியா) உற்பத்தி செய்யும் போது, சல்லேகனாவில் சந்நியாசியின் உடலது ஆயுள் முடிந்து மறைந்துவிடும்; அதாவது பழுக்காத பழத்தின் மேலிருந்து, காலத்தில் தானாகவே விழ்ந்துபோகும் பூ போன்றது. அவரது ஆயுள் நல்லொழுக்கமுள்ள (தர்ம) மற்றும் தூய (சுக்ல) தியானம் உள்ளிட்ட அவரது சந்நியாசத்தை பாதுகாக்க உதவுகிறது; அது நெருப்பிலிருந்து பாலைப் பாதுகாக்க நீர் உலர்ந்து விடுவது போன்றது. அத்தகைய சந்நியாசி ஆசீர்வதிக்கப்பட்டவராவார்.

சந்நியாச வாழ்க்கையில் சல்லேகனா…. எனக் குறிப்பிடுகிறார் ஆச்சார்யஸ்ரீ அவர்கள். சாதாரண மனிதனுக்கும் மரணம் சம்பவிக்கத்தான் செய்கிறது. அதே ஒரு சந்நியாசிக்கும் மரணம் சம்பவித்தல் ஒரு உன்னத நிலையாக கருதப்படுவது யாதெனில்…

விருப்பு வெறுப்பிற்கு ஆட்பட்டு பலபிறவிகளாக இவ்வுலகில் வாழ்ந்து வருகிறோம். விருப்பு வெறுப்பை நீக்க முயற்சி செய்யும் இல்லறத்தாருக்கும், துறவறத்தாருக்கும் நிறைய வித்தியாசம் அமைந்து விடுகிறது. இல்லறத்தில் வாழ்பவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றுவதாக பிறரது விருப்பத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவே எந்நேரமும் முயற்சி செய்கிறார்கள் என்பதும் உண்மையே.

அவ்வாற்றான கடமையில் அவர்களால் இவ்வுலக பொருள்சார்ந்த தொடர்பில் முழுவதுமாக வெளியேறுவது கடினமாகி விடுகிறது. தனக்கென வாழாமல் போனாலும் கடமை நிறைவேறாமல் இவ்வுலகத்தை விட்டு செல்வது முறையல்ல என்று பெரும்பாலானாவர்கள் சல்லோகனா எனும் உடல்விலக்கும் விரதத்தை மயமுவந்து ஏற்க முற்படுவதில்லை.

உடல் நிலை மோசமாக இருந்தாலும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தோமா என்ற நினைவில் தான் உயிர் பிரிகிறது என்பதே நிதர்சனம். “இன்னும் அதை முடித்திருக்கலாம், இதை முடித்திருக்கலாம் இருந்தாலும் ஜினேஸ்வரன் இந்த அளவுக்காவது நம் ஆயுளை விட்டு வைத்தாரே” என்று படுக்கையில் வந்து காண்பவரிடம் சொல்லிக் கொண்டிருக்கும் பொறுப்பான பெரியோர்களையும் கண்டுதான் வருகிறோம்.

ஆனால் முனிவர்களோ உலகியல், பொருளியல் சார்ந்த எந்த ஒரு பொறுப்பையும் ஏற்பதில்லை, கையிற் கமண்டலும், மயிற்பிச்சும் தான் அவ்வப்போது அவர்களுக்கு துணையாய் இருப்பது. அதனை விட்டுப் பிரிவதில் அவர்களுக்கு எந்த ஒரு மனச்சுமையும் இருப்பதில்லை. அதனால் இந்த உடல் ஆன்ம முன்னேற்றம் எனும் பெருவிருப்பத்திற்கு துணை செய்து கொண்டிருந்தாலும் முழு வீச்சில் பயனற்று போகும் போது சல்லேகனா, சமாதி மரணத்தை ஏற்கிறார்கள்.

மனதில் கஷாயங்களை விலக்கியும், சாந்த உணர்வுடன் எப்போதும் வாழம் முறையை ஏற்றவர்கள். அவர்களால் தன்ஆன்மனுடன் பிற பொருள்களை தனித்து நோக்கும் பார்வையும் வந்துற்றதினால் அவர்களிடம் எந்த ஒரு விருப்பு வெறுப்புச் சுமைகளும் தொற்றிக் கொள்ளாமல் வாழ்கின்றனர். அதனால் எந்த வேளையிலும், தனது ஆன்ம மலர் பூத்திருந்தாலும், காயாகி பழத்தை எதிர்நோக்கும் போது ஆயுள் எனும் அம்மலர் பிரிய நேரிட்டால் அவர்கள் அதனைக் கண்டு கொள்வதே யில்லை என்று முனிவர் பெருமான் இந்நூற்பாவில் கூறுகிறார். அதுவே வாழ்வின் சிறந்த பரிணாமம் என்று தெரிவிக்கிறார். அந்த சமாதி நிலைக்கு இல்லறத்தாரும் முயன்று வாழ்வில் முன்னேற்றம் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தவே செய்கிறார்.








அமீ ப்ரரூட வைராக்யாஸ்தனுமப்யனுபால்ய யத் | 

தபஸ்யந்தி சிரம் தத்வி ஞாதம் ஞானஸ்ய வைபவம் || 116 ||
Certainly, it is the magnificence of knowledge (jñāna) which develops, in the hearts of the ascetics, indifference to worldly existence – vairāgya – and they go on to perform austerities (tapa), while protecting their bodies, for a very long time.
நிச்சயமாக, இது அறிவின் மகத்துவம் தான் (ஜீனா); அதாவது சந்நியாசிகளின் இதயங்களில், உலக விருப்புக்கான அலட்சியம் உள்ளது - வைராக்யம் – ஆனால் அவர்கள் தவ ஒழுக்கங்களை (தபம்) செய்யச் வற்புறுத்துகிறார்கள், அதே நேரத்தில் அவ் உடலைப் பாதுக்காவும் செய்கிறார்கள், அதுவும் மிக நீண்ட காலம்.

நாம் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது என்றால் அதனை நல்ல முறையில் பராமரிப்பதாக பல வசதிகளை செய்து வருகிறோம். ஆனால் அதுவோ எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு மேலும் கூடுதல் வசதியைத்தான் எதிர் நோக்கி காத்திருக்கிறது. அதனால் ஆன்ம முன்னேற்றம் என்பது வாழ்வில் இல்லாமலே போய் விடுகிறது. ஆயுள் முடியும் வரை உடல் பேணுதலிலேயே கழிந்து விடுகிறது.

நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் என்ற மும்மணி வழி நடப்பதாக நினைத்தாலும் ஏனோ முன்னேற்றம் காண முயலாமல் போய்விடுகிறது. அதற்கு காரணம் புலன்வழி இன்பங்கள் நம்மை தம் வசம் வைத்துக்கொள்வது தான் காரணமாகிறது.

நம் உடல்: நடந்து சென்று கொண்டிருக்கும் நாம் சைக்கிள் வாங்கி விட்டால் அதுவே வசதியாக கருதும், வேறு வாகனங்கள் பைக், மகிழுந்து என்று வாங்க வாங்க வசதியை மேலும் கேட்டுக் கொண்டிருப்பதோடு, மீண்டும் தன் பழைய வாழ்க்கைக்கு செல்வதற்கு மிகவும் தயக்கமும், சற்று குறைவான தரமுமாகவே நம்மை எண்ணத்தூண்டிவிட்டுக்கொண்டிருக்கும்.

வீட்டில் ஃபேன் வாங்கினால் மிகவும் சந்தோஷப்படும், ஆனால் கொஞ்சநாளில் வீட்டின் சுவற்றைப்போல அதை காணத்துவங்கும். அதற்கு அடுத்த கட்ட வசதியை எப்போது செய்து தரப்போகிறாய் என்றுதான் கேள்விக் கேட்கும். வெளியில் எங்கு சென்றாலும், ஆலயக் கருவறையானாலும், வீட்டிலுள்ள குளிரூட்டிகள் இல்லாவிடல் உடன் வெளியேறினால் நலமாக இருக்கும் என்று நம் காதுபடவே கூறிக்கொண்டிருக்கும்.

அதற்கான வசதியுள்ள இடத்தில் தனியறை இருந்தால் நல்லது. அல்லது நம்வீட்டில் உள்ள குளுமை இங்கில்லை; என்றவாறெல்லாம் ஒப்பிட்டுப்பார்த்து சோர்வடைவதிலேயே தன் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும். அதுதான் சாதாரன மனிதனது உடலின் இயல்பாகும். தூய தண்ணீர் வடிகட்டிச் சாப்பிட்டாலும், உப்பு கலந்துள்ளது, ஆர்வோ வாட்டர் இல்லை என்று அடம் பிடிக்கத்தோன்றும். அதனால் சில நண்பர்கள் வீட்டிற்கு செல்லும் போது குழந்தையின் பேரைச்சொல்லி தானும் அந்த புட்டி நீரையே சுவைக்க தூண்டிக்கொண்டிருக்கும்.

அதுதான் நம் போன்றோரின் உடலின் வசதிகள். அதனால் இந்த வசதிகளுக்கு ஏதேனும் குறைவோ, குந்தகமோ ஏற்பட்டால் உடன் தலைவலி, தொண்டைவலி, கால்வலி, கைவலி என்று அடிக்கடி ஒத்துழையாமையை தலைதூக்கச் செய்து கொண்டிருக்கும். ஆனால் இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன் வெயில், மழை, கிணற்றுக் குளியல், நகராட்சித்தண்ணீர், வீட்டுத்திண்ணை என்று தன் வாழ்நாளைக் கழித்த அதே உடல்; இப்போது வசதி வேண்டும், வசதி வேண்டும் வாய்ப்புக் கிடைத்து விட்டதே வசதி வேண்டும் என்று கூறிக்கொண்டே ராஜஉபராச்சரத்துடன் வாழவே எத்தனித்துக் கொண்டிருக்கும்.

ஆனால் முனிநிலையை எய்தியவர்கள் அவ்வாறு இவ்வுடலுக்கு வேண்டிய வசதிகள் செய்து தருவதில்லை. வெயில், மழை, குளிர் என எந்த ஒரு பருவ நாட்களிலும் நாம் குழந்தையாய் விளையாடிய காலங்களில்; எந்த ஒரு வெப்பம், குளிரையும் கண்டு கொள்ளாமல் நின்றும், நடந்தும், ஓடி விளையாடிக்கொண்டிருந்த அதே பக்குவத்தில் தான் எதையும் பெரிதென பொருட்படுத்தாது வாழ்ந்து கொண்டிருப்பர்.

ஏதோ கொஞ்சம் உணவு, சில நிழற்பகுதி என தன் வாழ்நாளைக் கடத்துவர். கண்டதையும், கேட்டதையும் கேட்கும் மனத்துணிவு அவரது உடலுக்கு என்றுமே வந்ததில்லை. அவர் அடித்து அடித்து என்ன வேலை தருகிறாரோ அதனை கேட்டபடியே அவரது தவநெறி வாழ்வுக்கு அடிமை போல் பணியாற்றிக் கொண்டிருக்கும். அதற்கு மேல் ஒரு பிடி அளவு உணவோ, துடி அளவு வசதியோ அந்த உடலுக்கு எப்போதும் கிடைப்பதில்லை.

தபம், தியானம் என்ற பயிற்சிக்கான இயந்திரம் போன்று தான் அவரிடம் அடக்க, ஒடுக்கமாய் வாழ்ந்து வரும் அதே உடல் தான் நம்மிடம் அவ்வளவு ஏமாற்று வேலைகளைச் செய்து நம்மை அடிமைப்படுத்தி வைத்திருப்பதைக் காணும் போது அவரது வாழ்க்கை ஆச்சர்யத்தை அளிக்காமல் என்ன செய்யும்.

அவர்களது அளவான உணவு மற்றும் வசதி யென்ற வாழ்க்கையே மெய்ஞ்ஞானத்தின் உச்சநிலையை அளிக்க வல்லது. இப்பிரபஞ்சம் பற்றிய நுணுக்கமான அறிவுடன் வாழும் திறமையை பெற்று விடுவர். முக்காலமும் முழுவதும் உணரவேண்டும் என்ற வேட்கையுடன் வாழும் விவேகத்துடனான தவ வாழ்வில் தியானித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களே ஞானியராவர். அந்த வாழ்க்கை முறையே பெருமைக்குரியதாக மதிக்கப்படும் என்கிறார் முனிவர் பெருமான்.





क्षणाधर्ध्रमपि देहेन साहचर्यं सहेत कः । 
यदि प्रकोष्ठमादाय न स्याद् बोधे निरोध्कः ।।117।।

க்ஷணார்த்தமபி தேஹேன ஸாஹசர்யம் ஸஹேத க: | 

யதி ப்ரகோஷ்டமாதாய ந ஸ்யாத்வோதோ நிரோதக: || 117 ||
Which discriminating man (jīva) would have wanted to live, even for half a moment, with this body if knowledge (Jnāna), holding his wrist, had not prevented him (from getting rid of it)?
அறிவு (ஞானம்) மட்டும், முனிவரது கையைப் பிடித்துக் கொண்டு, அவரை (அதிலிருந்து விடுபடுவதைத்) தடுக்காவிட்டால், எந்த ஒரு விவேகமான மனிதனும் (ஜீவன்) இந்த உடலுடன் அரை கணம் வாழ விரும்பியிருப்பான்? (இல்லை)

முனிவரின் நல்லறிவு மட்டும் அவரது கைகளை பிடித்து தடுத்திராமல் இருந்திருந்தால் ஒரு முனிவரும் அரை நொடி நேரம் கூட இந்த உடலுடன் தானிருப்பதை பொறுத்துக் கொள்ளமாட்டார் என்று ஆச்சார்யஸ்ரீ முனிவரது மன நிலையை விளக்குகிறார்.

ஒருவர் பிறரிடம் நட்புடன் இருக்கும் போது, அவரது நட்பு மிகவும் மோசமானது, அதே சமயத்தில் அவரிடம் பகைமை கொள்வதால் எதிர்காலத்தில் தீங்கும் ஏற்படும் என்று எச்சரிக்கை செய்தால் அவருடன் யாரும் நட்பை விலக்கிக் கொள்ளவே செய்வார்கள். மேலும் சிலநாட்கள் அவருடன் பழகி பலவீனமாக்கி, அழித்தல் நலம் என்றும் வழி கூறலாம்.

அதுபோல் இந்த உயிருக்கு உடலுடன் நட்பு இருந்தது. ஆனால் இப்போது இந்த துன்பத்திற்கு காரணம் அறிந்த போது நல்ல ஒழுக்கங்களை கைக்கொண்டு இந்த உடலை விட்டு விலகவும் விரும்புவர். அதேசமயம் துவாதசங்கம் அளித்த சுருதஞானத்தால் சிந்தித்து இந்த உடலை அழிப்பதினால் தேவப்பிறவியே கிட்டும். அங்கும் கடைசியில் துன்பமே பெருமளவு தழுவிக்கொள்ளும். அதனால் சிலகாலம் இவ்வுடலுடன் இருந்து கொண்டு அதன் பலமிழக்கச் செய்து ‘இனி உடலே பெறாத வழியைத் தேடவேண்டும். அவ்வழியில் பயணித்தல் வேண்டும்.

-- --------------------------------------

இந்த நூற்பாவில் ஞான யோகத்தைப் பற்றி கூறுகிறார் என்றுதான் கொள்ள வேண்டியுள்ளது.

ஞான யோகம் என்பதற்கு ஞானமும் யோகமும் ஒன்று சேருவதே ஆகும். ஞானம் எனும் சொல்லுக்கு தன்னைப் பற்றிய அறிவை அடையும் சாதனையாகும். யோகம் எனும் சொல்லுக்கு, சாதனம் அல்லது கருவி என்று பொருள். எனவே ஞானம் எனும் சாதனை அடைய யோகம் எனும் சாதனம் (கருவி) அவசியம்.

இந்த ஞான சாதனம் எந்த இலக்கை அடைய முயற்சி செய்வது எனில் தன்னைப் பற்றிய ஞானம் அடைவதே. தன்னைப் பற்றிய ஞானம் அடைவது எனில் தன்னில் நிலைபெற்ற ஆத்மாவை பற்றிய ஞானத்தை அடைதலே ஆத்ம ஞானம் ஆகும். இந்த ஜீவாத்மா ஆத்ம ஞானத்தை அடைய ஞானயோகம் சிறந்த வழியாகும்.

இந்த ஆத்ம ஞானத்தை அடையும் வழிமுறைகளில் இரண்டு வழிகள் கூறப்பட்டுள்ளன. ஒன்று ஞான சாதனை. இரண்டாவது யோக சாதனை. ஞானத்திற்கான சாதனை அடைய இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று சாத்திரங்களை கேட்டல், கேட்டவைகளை அறிவினால் விசாரித்து ஆராய்ந்து சிந்தித்து தெளிவடைவதே ஞானம்.

ஆத்ம ஞானம் என்பது “நான்” என்ற சொல்லினை விசாரித்து அறிந்து கொள்வதே ’ஞானம்’ என்பர்.

ஞானத்தை அடைய பல படிநிலைகள் உள்ளன. ஒரு பொருளைப் பற்றி அறிந்து கொள்ளும் அறிவே விவேக புத்தி என்கிறார்கள். எது தர்மம், அதர்மம், எது நல்லது, கெட்டது, எது உண்மை, எது பொய் என்றறிவது. மனத்தூய்மை, கபடமற்ற குணம் மற்றவர்களை ஏமாற்றாத மனம் உடையவர்களை விசுத்த புத்தி உடையர்கள் என்பார்கள். பரந்த மனதை உடையவர்கள், பிறர் பொருளில் ஆசை கொள்ளாதிருத்தல்; அதே நேரத்தில் நமது பொருளை பிறருடன் பகிர்ந்து கொள்வது விசால புத்தி (பரந்த மனப்பான்மை) என்பர். ஒன்றிலேயே நமது மனதை பொருத்திப் பழகும் தன்மையை உறுதியான புத்தி அல்லது நிச்சல புத்தி என்பர். மேலும் திடபுத்தி, ஜாக்கிர புத்தி போன்றவற்றை பெறுதல் ஞானமாக கருதப்படுகிறது.

யோகம்: யோகத்தை மனதின் அமைதி என்றும், மனதை சாத்வீக குணத்திற்கு மாற்றி அமைத்தல்` என்றும், நமது எண்ணங்களின் அமைதியே யோகம் என்றும், அலைபாயும் மனதை நமது மனதின் கட்டுப்பாட்டில் நிலை நிறுத்தும் செயல்களுக்கு யோகம் என்பர்.

சுகம்-துக்கம் போன்ற இருமைகளை சந்திக்கும் போது அதனை தாங்கிக் கொள்ளும் திறன் நமக்குத் தேவை. நமது மனம் சாத்வீக குணத்தில் நிலையில் நிலை நிறுத்த வேண்டும். மனம் நமது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இப்படிப்பட்ட நற்குணங்களில் நமது மனதை நிலை நிறுத்த செய்தலே யோகம் ஆகும். ஞானத்தை அடையும் வழிகள், யோகத்தை அடையும் வழிகள் என தனித்தனியான பயிற்சிகள் முனிவர்களுக்கு அளிக்கப்படும். இதனால் அவர்கள் ஞான யோக சாரத்தில் சிறந்து விளங்குவார்கள் (விளங்க வேண்டும்…)

இந்த பயிற்சியில் பல படி நிலைகள் உள்ளன. அதைத்தான் அவர் முனிவர்களின் நிலை பற்றி கூறுகிறார்.

--------------------------------------

இந்த விவேகஞானம் இல்லையெனில் எந்த ஒரு முனிவர் தன் உடலுடன் இருக்க விரும்புவார்? இந்த உடல் துன்பம் நிறைந்தது, தீங்கிழைக்கக் கூடியது என்று தெரிந்து அளவோடு தேவையை பூர்த்தி செய்து கொள்ள மட்டுமே இத்துடனான உறவு வேண்டும், என்பதே அவர்களது தெளிவாகும்.





समस्तं साम्राज्यं तृणमिव परित्यज्य भगवान तपस्यन् निर्माणः क्षुध्ति इव दीनः परगृहान् ।
किलाटभ्दिक्षार्थी स्वयमलभमानोअपि सुचिरं न सोढव्यं ¯क वा परमिह परैः कार्यवसतः ।।118।।

ஸமஸ்தம் ஸாம்ராஜ்யம் த்ருணமிவ பரித்யஜ்ய பகவான், 

தபஸ்யன்னிர்மாண: க்ஷுதித இவ தீன: பரக்ரஹான் | 
கிலாடப்திக்ஷார்தீ ஸ்வயமலப மானோஅபி சுசிரம், 
ந ஸோடவ்யம் கிம் வா பரமிஹ பரை: கார்யவசத: || 118 ||
Even Lord Rishabha Deva, after renouncing, like worthless blades of grass, the splendour of his kingdom and accepting austerities (tapa), had to visit without selfesteem, others’ houses for food, like a famished, poor man. He did not get it (in the proper manner) and had to roam like this for a long time (six months)*. Then, should the other men – ordinary as well as illustrious – not endure afflictions for the sake of attaining their goals?
ரிஷப தேவரும் கூட பயனற்ற துரும்பைப் போல, தனது ராஜ்ய அதிகாரம் மற்றும் செல்வங்களை துறந்து தவவாழ்வை ஏற்றுக்கொண்டபின், ஆணவமின்றி, மற்றவர்களின் வீடுகளில், பசியுள்ளபோது, ஏழை மனிதனைப் போல அலைய வேண்டியிருந்தது. அவர் அதை சரியான முறையில் பெறஇயலாமல் நீண்ட நாட்கள் ஆகியும் (ஆறு மாதங்கள்) இப்படி சுற்ற வேண்டியிருந்தது . அவ்வாறான போது மற்ற புருஷர்கள் – சாதாரணமானவர்களோ, புகழ்பெற்றவர்களோ - தங்கள் குறிக்கோள்களை (வீடுபேற்றை) அடைவதற்காக துன்பங்களை சகித்துக்கொள்ள கூடாதா?

தனது இலக்கை அடைய எந்த ஒரு மானுடனும் பெரும் துன்பங்களைச் சகித்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த நூற்பாவின் வழியே அறிவுருத்துகிறார்.

நீதி நெறி விளக்கத்தில் 53ஆவது பாடலில்

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார் கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணாயினார்

இதன் பொருள்: ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று முனைப்புடன் இறங்கியவர்கள் தனது உடலில் உண்டாகும் நோவைப் பொருட்படுத்தமாட்டார் பசியைப் பார்க்க மாட்டார், தூங்க மாட்டார், யார் தீங்கு செய்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார், காலத்தின் அருமையைப் பற்றியும் கவலைப்படமாட்டார். அடுத்தவர் கூறும் அவமதிப்பான சொற்களைக் கேட்கமாட்டார் தங்கள் காரியத்திலேயே கண்ணாயிருந்து அதில் வெற்றி பெறுவதிலேயே கவனமாக இருப்பார்.

எடுத்த காரியத்திற்குத் தடைகள் செய்வோர் ஏராளம். அதை விட்டு விடுமாறு கூறுவதோடு அவமதிப்பைச் செய்வோரும் ஏராளம். ஆனால் அதையெல்லாம் மீறி தனது உறுதியை விடாமல் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுபவனே உண்மையில் தீரன் ஆவான்.

புராணங்களில் புகழுடன் திகழும் துருவன், நசிகேதன், பகீரதன் என ஏராளமானோர் அதே உத்வேகத்தை அளிப்பவர்களே. நல்ல காரியத்தை லட்சியமாகக் கொள்வோம்; அதை முடித்து வெற்றியும் பெறுவோம்! என்பதே நமது செயல்பாடாய் அமைதல் வேண்டும்.

உழைப்பையும் உணவையும் உறக்கத்தையும் ஊறு களையும் பொருட்படுத்தாது கருமத்தை முடிக்க முயலல்வேண்டும்.

இன்பம் விழையான் வினை விழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்துன்றும் தூண். – குறள் 615.

இன்பத்தை விரும்பாது காரியமாற்றுதலை விரும்பி எவன் ஒருவன் உழைக்கின்றானோ அவன் தன்னுடைய சுற்றத்தினருடைய துன்பங்களைத் துடைத்து நீக்கித் தாங்கி நிற்கும் தூணாவான் என்கிறார் தேவர் பெருமான்.

கோளாற்றக் கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ்போல் கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப; வாளாடு கூத்தியர் கண்போல் தடுமாறும் தாளாளர்க்கு உண்டோ தவறு? நாலடியார் - 191

நீரை மிகுதியாகக் கொள்ளாத ஏரியின் கீழ் உள்ள பயிரைப் போல (ஒரு முயற்சியுமின்றி) சிலர், தம் உறவினர் தருவதை உண்டு (அவ்வுறவினர்) வறுமையுற்றபோது வேறு வழியின்றிச் சாவர். ஆனால் வாளின் மேல் கூத்தாடும் மகளிருடைய கண்ணைப் போல் இயங்கி, ஓடி ஆடிச் சுறுசுறுப்பாக உழைக்கும் முயற்சியுடையார்க்கு இத்தகைய பிழைபட்ட வாழ்வு உண்டாகுமோ?

முயற்சியே வாழ்வில் இலக்கினை அடையச் செய்யும் என்பதனை முற்கால தமிழ் இலக்கியங்கள் பலவழியிலும் கூறியுள்ளன.

அவ்வழியே ஆச்சார்ய பெருமான் அவர்களும் வீடுபேற்றை இலக்காக கொண்டு துறவறம் ஏற்ற, முதற்கடவுளாக விளங்கும் ஆதிபகவனும் தனது பெரும் நாட்டை அதிகாரத்தை, அரச சுகத்தை விலக்கி கானகம் சென்று தவ வாழ்வில் ஒழுகியகாலை; ஆகார சரியை நிமித்தம் நாட்டிற்கு வந்த போது அவருக்கு எவ்வாறு ஆகாரம் அளிப்பது என்று புரியாத அக்கால மக்களிடம் மனமிருந்தும் எதையும் உணவாக அளிக்க இயலவில்லை. அவரும் தன் பசிப்பிணி பொறுத்து மீண்டும் கானகமே சென்று தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.

பின் ஆறுமாதம் கழித்து வந்த போது, அதாவது ஓராண்டிற்குப் பின்னரே ஸ்ரேயங்குமாரனால் , அக்ஷய திரிதியை அன்று அளித்த ஆகாரமான கரும்புச் சாற்றை ஏற்றார் என்பது வரலாறு. அதாவது அவர் தளராது தவவாழ்வை தொடர்ந்தார் எனின் மெய்வருத்தம் என்ற உணர்வை ஒருபோதும் ஏற்க வில்லை என்றுதான் கொள்ளல் வேண்டும்.

அவ்வாறான பெருமுயற்சிதான் வீடுபேறு அடைய ஒரு மனிதனுக்கு தேவை என்பதை பரிசஹஜெயம் என்னும் 22 வகையான துன்பங்களை சமணம் கூறுகிறது. அத்துன்பங்கள் அனைத்தும் எவரொருவரால் பொருத்துக் கொள்ள இயலுமோ அவர்களே வாழ்க்கையில் எந்த ஒரு இலட்சியத்தையும் அடைந்து வெற்றி கொள்ள முடியும் என்பதை இந்நூற்பா வழியே நமக்கு தெரிவிக்கிறார். ஏனெனில் அதுவே மானுடத்தின் மேலான இலட்சியமான முக்திப்பேற்றையே அளிக்க வல்லது அதனால் துன்பம் பொருத்தல் காரிய வெற்றிக்கு அவசியம் என்பதை நமக்கு அறிவுரையாக வழங்குகிறார் முனிவர்.





पुरा गर्भादिन्द्रो मुकुलितकरः ¯ककर इव स्वयं ड्डष्टा सृष्टेः पतिरथ निथीनां निजसुतः ।
क्षुध्त्विा षण्मासान् स किल पुरुरप्याट जगती- महो केनाप्यस्मिन् विलसितमलघ्घ्यं हतविथे ।।119।।

புரா கர்பாதின்த்ரோ முகுளிதகர: கிங்கர இவ, 

ஸ்வயம் ஸ்ரேஷ்டா ஸ்ருஷ்டே பதிரத நிதீனாம் ஜிஜஸுத: | 
க்ஷுதித்வா ஷண்மாஸான் ஸ கில புருரப்யாஹ ஜகதி, 
மஹோ கேனாப்யஸ்மின் விலஸிதமலந்த்யம் ஹதவிதெ || 119 ||
In whose service Indra had presented himself, six months before conception, as a servant with folded hands; who himself was the creator of the world-order having taught the distressed subjects the ways of earning livelihood at the onset of the era of labour; whose son Bharata was the master of divine treasures (cakravartī, king-of-kings); even such a great personage – Ādinātha Tīrthańkara – had to wander on earth without getting food for six months. This is amazing. It is right that no one in this world is able to transgress the ways of the evil own-fate (daiva).
கருத்தரித்த ஆறு மாதங்களுக்கு முன்பு, மடிந்த கைகளால் ஒரு ஊழியனாக இந்திரன் தன்னுடைய சேவையில் தன்னை முன்வைத்தான்; கர்மபூமி சகாப்தத்தின் தொடக்கத்தில் துன்பகரமான மக்களுக்கு வாழ்வாதாரத்தை சம்பாதிப்பதற்கான வழிகளைக் கற்பித்து உலக ஒழுங்கை உருவாக்கியவர் யார்; அவருடைய மகன் பரதன் தேவ பொக்கிஷங்களின்(நவநிதியின்) எஜமானராக இருந்தார் (சக்ரவர்த்தி, ராஜாக்களின் ராஜா); அத்தகைய ஒரு மாமனிதர் கூட - ஆதிநாதரே - ஆறு மாதங்களுக்கு உணவு கிடைக்காமல் பூமியில் அலைய வேண்டியிருந்தது. இது ஆச்சரியமாக இருக்கிறது. தீய விதியின் விளையாட்டை இந்த உலகில் யாரும் மீற முடியாது என்பது உண்மைதான்.

விதியின் வலிமையை இந்த பாடலின் வழியே விளக்குகிறார். நவ நிதிகளுடன் ஆறுகண்டங்களை ஆண்ட பரத சக்கரவர்த்தியின் தந்தையான மாமன்னர் ரிஷபதேவர், இவ்வுலகில் கர்மபூமி துவங்கி விட்டது அனைவரும் உழைத்து தன் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என ஆறு தொழில்களை - வாள், வரைவு, வாணிபம், உழவு, கல்வி மற்றும் சிற்பம் – போன்றவற்றை மக்களுக்கு கற்றுத்தந்தார். இந்திரனே அவருக்கு ஊழியம் செய்ய அவர் முன் கைகட்டி நின்றான். அவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்த ஆதிநாதருக்கே ஆறுமாத காலம் முடிந்தும் உணவு கிடைக்காமல் திரும்பச் செல்ல நேர்ந்தது. அடுத்த ஆறுமாதத்திற்கு பின்னரே ஆகாரம் கிடைத்தது என்றால் அவரது ஊழ்வினையின் வலிமையை என்ன வென்று சொல்வது என்று விதியின் வலிமையை இந்த பாடல் வழியே நமக்கு ஆச்சார்யர் தெரிவிக்கிறார்.

அதற்கு காரணம் அவர் மாடுகளை கட்டி உழுவு செய்ய கற்றுத்தரும் போது, அவை புற்களை மேய்ந்து விடாமல் இருக்க அதன் வாய்க்கு பூட்டு அணிவித்த காரணத்தால், அக்காளை மாடுகள் ஆறுநாழிகை உணவருந்தாமல் வருத்தியமையால், அவரது தவவாழ்வில் அதற்கான தீவினையின் உதயத்தால் உணவு கிட்டாமல் போயிற்று என்று ஆதிபுராணம் தெரிவிக்கிறது.

அந்த அந்தராய கர்மம் எவரொருவரையும் விட்டு வைப்பதில்லை. வினை பலனைத் தரும்போது சிறிதும் பெரிதுமான துன்பங்கள் ஏற்படும். சுகம் தரும் பொருள்களைச் சேர்த்து துன்பத்தை விலக்கி இன்பமாக வாழ்வேன் என்று சிலர் நினைக்கலாம். ஆனால் பிறவிச்சுழற்சியில் வீழ்ந்தவர் கர்ம உதயம் வரும் போது அதனை விலக்கும் சக்தி எவரிடத்தும் இல்லை.

ஆகையால் வினையின் வழிவந்த விதிக்கு அஞ்சி தனக்கு நலன் தரும் வீடுபேறு அடைய வழிகளை தேடி பயணித்தல் வேண்டும் என்று முனிவர் பெருமான் எச்சரிக்கை செய்கிறார்.

-----------------------------

வாழ்வு

நமது மதிக்குட்பட்டதா! விதிக்குட்பட்டதா! என ஒருவன் ஞானியிடம் கேட்டான்.

அச்செல்வந்தனைப் பார்த்து அந்த ஞானி ஒரு காலை தூக்க சொன்னார்!

செல்வந்தரும் தூக்கினார்!

பிறகு மற்றொரு காலையும் தூக்க சொன்னார்.

செல்வந்தர் கோபத்தில் இது முட்டாள்தனமானது என கத்தினார்!

அப்போது கூறினார்…

“உனது கேள்விக்குரிய பதிலை நான் கூறிவிட்டேன்.

உனது ஒரு காலை தூக்க சொன்னேன்; நீ வலது காலை தூக்கினாய்,

நான் எந்த கால் என்று சொல்லவில்லை.

வலது காலை தூக்கியது! உனது சுதந்திரம்.

வலது காலை தூக்கியதால்; இடது காலை தூக்க முடியாமல் போவது விதி!

இதுவே மதியும் விதியும்! என்றார் ஞானி.





प्राक् प्रकासप्रधनः स्यात् प्रदीप इव संयमी । 
प}चात्तापप्रकासाभ्यां भास्वानिव हि भासताम् ।।120।।

ப்ராக் ப்ரகாஸப்ரதான: ஸ்யாத் ப்ரதீப இவ ஸம்யமி | 

பச்சாத்தாப ப்ரகாசாப்யாம் பாஸ்வானிவ ஹி பாஸதாம் || 120
|| The ascetic, in the beginning, is endowed primarily with luminousness*, like the earthen-lamp (dīpaka). Later on, he is endowed with both, heat** and luminousness, like the sun.
புலனடக்கமுள்ள சந்நியாசி, ஆரம்பத்தில், அகல்-விளக்கு (தீபம்) போன்ற முதன்மையாக ஒளிரும் தன்மையைக் கொண்டுள்ளது. பிற்காலத்தில், அவர் சூரியனைப் போலவே வெப்பம் மற்றும் ஒளிர்வு ஆகிய இரண்டையும் அளிக்கிறார்.

சாதாரண விளக்கில் ஒளியாற்றல் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் சூரியனில் ஒளியாற்றலும், வெப்ப ஆற்றலும் கிடைக்கிறது என்ற வித்தியாசத்தை அறிந்த விஞ்ஞானியைப் போன்று முனிவர் இந்த நூற்பாவின் வழியே அறிவியலை வெளிப்படுத்துகிறார். ஒருகாலத்தில் முனி சங்கங்கள் ஒரு பல்கலைக்கழகம் போன்றே இயங்கியுள்ளது என்பதை அறிய முடிகிறது. இந்த பூவுலகைப்பற்றி மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்தைப்பற்றிய அறிவியல் நோக்கு மிகுந்து காணப்படுகிறது. அறிவைப் பொருத்தமட்டில் குணபத்ர ஆச்சார்யர் அவர்கள் ஒரு அருளாளர் என்றுதான் கொள்ள வேண்டும். அவரது அருட்பார்வையே நம் ஆன்ம மூன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

----------------------

சந்தேகமிருந்தால் தற்காலத்தில் நம்மிடையே வாழ்ந்து வரும் அருளாளர் ஆச்சார்யர் ஸ்ரீவித்யா சாகர் அவர்களது பார்வையில் எத்தனை அருட்கொடை நிரம்பியுள்ளது என்பதை அவர் தரிசனம் கிட்டும் போதுதான் நாம் உணரமுடியும். மற்ற ஸ்வேதாம்பரர், தேராபந்த் ஆச்சார்யார்களை நான் காணும் போது அவ்வாறு உணரவில்லை. நல்ல ஆன்மீகப்பிரசங்கம் அந்த இருபிரிவைச் சார்ந்தவர்கள் செய்தாலும், மிகக்குறைவான பேச்சாற்றல் மட்டுமே கொண்டிருக்கும் ஸ்ரீவித்யாசாகர் மகராஜின் அருட்கொடைக்கு அவர்களது பேச்சு ஒருபோதும் நெருங்குவதில்லை. அவ்வளவு எளிமை, இனிமை, தெய்வீகம் இந்த மனிததெய்வப்பார்வையில் அடங்கியுள்ளதை ஒரு முறை சென்று தரிசித்து விட்டு வந்தவருக்குத்தான் புரியும். (ஆனால் சுற்றிலும் உள்ள எவரும் அவரது தெய்வீகத்தின் நிழலில் நிற்பதற்கு கூட தகுதியற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.) நிஜத்தவம் புரிந்தவருக்கு மட்டுமே அந்த தெய்வத்தன்மையின் அடர்த்தி அவரது உடலைச்சுற்றி வட்டமாக அமைந்து விடுகிறது. மற்றவர்கள் போலித்துறவிகளாகத்தான் தோன்றுகிறார்கள்.

சிறுவயதில் எங்கள் ஊரில் உள்ள பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி அன்று சுவர்க்க வாசல் திறப்பதற்கு முன் சென்று நிற்பேன். கதவு திறக்கப்பட்டது பக்தர்கள் அனைவரும் நாராயணா, நாராயணா என்று கோஷம் இடுவார்கள். உடலில் ஒரு பரவசம் தோன்றும் அதுவே அருள் என்று நினைத்திருந்தேன். ஆனால் பள்ளியில் படிக்க படிக்க சுவர்க்க வாசல் திறப்பு வெறும் கண்துடைப்பு என்பது தெரியவந்தது. அந்த effect நமது உலகஞானம் கூடக்கூட கழிந்து கொண்டே வந்தது. செல்வதை நிறுத்தி விட்டேன்.

சிறுவயதில் கிடைத்த சுவர்க்க வாசல் அனுபவத்தை மீண்டும் எத்தனையோ தன்முனைப்பு பலஆண்டுகளாய் மண்டைக்குள் நுழைந்த பின்னர், ஆச்சார்யஸ்ரீ வித்யாசாகர் அவர்கள் தரிசனம்; அவரது எளிமையான தோற்றம், செருக்கற்ற தன்மை, தெய்வீகப்பார்வை, தாய்மையுணர்வுடதான, வாஞ்சைநிரம்பிய பேச்சு, மயிற் பிச்சத்தால் வருடிய பாவனை போன்றவை எனக்குள் ஒரு பரவசத்தை அளித்ததை மீண்டும் உணர முடிந்தது. துவக்கத்தில் பல யோகிகளை சந்திப்பதைப் போன்றுதான் சற்று அலட்சியமாக, மமதையுடன் பார்க்கச் சென்றிருந்தேன். கண்டவுடன் பரவசம் அடைந்தேன் எனின் அந்த அனுபவத்தை அருள் என்றுதான் கூறமுடியும். அதனை சென்று கண்டவர்கள், பெற்றவர்களால் தான் உணர முடியும். (சுற்றியுள்ள கூட்டத்தை கண்டுவிடாதீர்கள்? அவர்கள் உங்கள் கவனத்தை சிதறடித்து விடுவார்கள்.)… நிற்க.

------------------

விளக்கொளியில் ஒளியாற்றல் வெளிபடுகிறது. அதனால் அவ்வொளி இருளை மட்டுமே போக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது. சுற்றிலும் பொருட்கள் நம் கண்களுக்கு மட்டும் தெரிகிறது. அதனால் பாதை தெரிகிறது. பயணம் தொடர்கிறது.

அதே சமயம் சூரிய உதயம் ஏற்பட்டால் ஒளிமட்டுமா கிடைக்கிறது. சகல ஜிவராசிகளுக்கும் வெப்பம் கிரமமான அளவில் வைத்திருக்க மிகவும் துணையாக உள்ளது. சூரிய வெப்பமில்லையெனில் இவ்வுலகம் இல்லை என்பதை நாம் அன்றாட வாழ்வு அறிவியல் வழியே கூறிவிடலாம்.

சூரியனிடம் கூடுதலாக ஒளியுடன் வெப்பமும் சேர்ந்தே பொருளின் மீது பட்டு இருவகை ஆற்றலால் நன்மை அளிக்கிறது.

பகலவன் ஒளியை மட்டுமே வழங்கவில்லை. அது தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் வழியே உணவு தயாரிக்கப் பயன்படுகிறது. அதே சமயம் வெப்ப ஆற்றல் மழையாக, ஓரிடத்திலிருந்து காற்றின் வழியே வெப்பம் குளிர்ந்த பகுதிக்கு சென்று சமன் செய்து விடும் ஆற்றலும் அதனிடமிருந்து தான் இப்பூவுலகு பெறுகிறது. வெப்பம் வாயுவாக இடமாற்றம் பெறச் செய்து ஜீவராசிகளுக்கு பலவகையிலும் ஆதாரமாக விளங்குகிறது. சூரிய ஆற்றல் ஜீவராசிகளின் உடலாற்றலை சிராக்கி முன்னேற்ற மடையச் செய்கிறது என்பதே சுருக்கமான செயல்பாடாகும்.

இந்த நுட்பமான அறிவை அறிந்த பின்னரே உலகத்தில் பல இயந்திரங்கள் இயங்குகின்றன. உதாரணமாக… சூரிய ஆற்றலில் இருந்து மின்சாரம் இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகிறது. சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் (Photovoltaic). சூரிய வெப்பத்தில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் (Solar Thermal). இந்த நுணுக்கமான வேறுபாட்டினை முனிவர் தனது பாடலின் வழியே எளிமையாக வழங்கியுள்ளார்.

அதே போன்று துவக்கத்தில் துறவறம் ஏற்ற முனிவர்கள் ஆகம அறிவை படித்தறிந்து பிறருக்கு கற்பிக்கின்றனர். அது அனைவருக்கும் பயன் பட்டாலும், பின்னர் தனது தவவாழ்வை நீண்ட நாட்கள் கடைபிடித்து, தியானத்தில் பலநாட்கள் ஆழ்ந்து ஞான தீபமாக மாறி விடுகின்றனர். அவர்களது அறிவு ஒளி, Auro, நம்மீது பட்டாலே சலனமடைந்த மனதில் தெளிவு பிறக்கிறது. ஆன்ம விழிப்பு ஏற்படுகிறது. புத்தகத்தின் வழியே சாட்சிபாவத்தைத் தான் நாம் ஆன்ம முன்னேற்றமாக பெற முடியும். ஆனால் அருட்கொடையாளர்களான ஸ்ரீவித்யாசாகர் போன்றோரின் தெய்வீகப்பார்வை நம்மீது பட்டாலே ஆன்மீயஅருள் மழையாய் பொழிந்து, நமக்கு சில நாட்களிலேயே ஆன்ம விழிப்புணர்வை பெறுவது நிச்சயம்.

இதை வரிகளில் தெரிவிக்க இயலாது. பயன்பாட்டில் தான் உணர முடியும். வார்த்தைகளின் வழியே ஆன்மீக அறிவை வெளிப்படுத்த தேவையில்லாத ஆற்றலை அவர்கள் பெற்று விடுகின்றனர்.

அந்த தெய்வீக ஆற்றல் சூரிய ஆற்றல் போன்று ஒளியாக, வெப்பமாக ஊடுருவி நம்முள் மன மாற்றம் பெறச் செய்கிறது. அதுவே மனம் கடந்த நிலைக்கு நம்மை இட்டுச் செல்கிறது. அவ்வறக்கொடைமழையே அவர்களது அருளாக கருதப்படுகிறது. குருவின் அருளே ஒருவனது ஆன்மீயச் சந்தேகங்களை விலக்கச் செய்யும் ஆற்றலைப் பெற்றது. இங்கு தர்க்கம் தேவைப்படுவதில்லை.

தர்க்கமில்லா நிலைப்பாடே தெய்வத்தன்மையில் முன்னேற்றம் அடையச் செய்யும் என்பதை இந்நூற்பாவின் வழியே தெரிவிக்கிறார் முனிவர் பெருமான். அவ்வழியில் 2546 ஆண்டுகளுக்கு முன்னர் பகலவன் போல் உதித்து பலருக்கும் அருட்கொடையை திவ்யத்தொனி வழியே வழங்கிச் சென்ற அருட்தந்தை, மகான், பகவான் மஹாவிரர் என்றால் மிகையாகாது. அவர்மீது உள்ளார்ந்த பக்தி கொண்டால் அவரது சிலைகளும் நமக்கு ஆன்மீக விழிப்பை வழங்கவே செய்யும் என்பதே தெய்வீகம் தரும் உண்மை. அதுவே பரவச நிலை. ஆனந்த நிலை, பேரானந்தத்திற்கு, நித்தியானந்த ஸ்வருபியாக மாற்றம் பெறுவதற்கு வழிவகுக்கும்.





भूत्वा दीपोपमो धीमान् ज्ञानचारित्राभास्वरः ।
स्वमन्यं भासयत्येष प्रोद्वमत्कर्मन् कर्मद्ध कज्जलम् ।।121।।

பூத்வா தீபோபமோ தீமான் ஞானசாரித்த பாஸ்வர: | 

ஸ்வமன்யம் பாஸயத்யேஷ ப்ரோத்வமன் கர்மகர்ஜவம் || 121 ||
The wise ascetic who is like the earthen-lamp (dīpaka) is endowed with luminosity of knowledge (gnāna) and conduct (chāritra). During this period, while ejecting the collyrium (kājala)* of karm as, he illumines self as well as others.
மண் விளக்கு (தபகா) போன்ற புத்திசாலித்தனமான குரு அறிவின் வெளிச்சம் (ஞானம்) மற்றும் நடத்தை (சாரித்திரம்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சமயத்தில், கர்மப்புகையை வெளியேற்றும் போது, அவர் தன்னையும் மற்றவர்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

அகல் விளக்கு போன்றவர் குரு. அறிவு வெளிச்சத்தை இயல்பாக கொண்டவர். அது எப்போதும் எரிந்து கொண்டேதான் இருக்கும். அந்த வெளிச்சத்தில் எவர் வேண்டுமானாலும் தங்கள் பாதையை வகுக்கலாம் அல்லது தங்களது அறிவு வெளிச்சத்தை ஏற்றிக் கொள்ளவும் செய்யலாம். இவை இரண்டிலும் பாதையை நாமே வகுத்தால் சென்றடைய பல பிறவிகள் தேவைப்படும். ஆனால் அவரது அறிவுச்சுடரில் நம் அறிவொளிக்கான தீபத்தை எற்றி விடுவதே நம் பயணத்திற்கான துரிதகதியாகும் என்பதையே இந்தப்பாடலில் ஆச்சார்யஸ்ரீ விளக்குகிறார்.

---------------------

ரு என்றால் இருள்; குரு என்றால் இருளைப்போக்குதல் என்று அர்த்தம். க்ரு என்பவர் இருளைப்போக்குபவர் என்றுதான் பொருள். அவர் நமது அறியாமை எனும் இருளைப் போக்குபவர். இருளில் திசைமாறிய நமது வாழ்க்கையை சரியான பாதைக்கு திசைமாற்றும் சாலைவிளக்கு போன்றவர். அவர் அங்கே தான் இருப்பார். அவர் தன்னையும் காண்பிப்பார், நமது நிலைப்பாட்டையும் நமக்கு தெரிவிப்பார். நாம் தான் நமது இருள்பகுதியை அவரது அறிவொளியிலிருந்து விரட்ட முயற்சி செய்ய வேண்டும். அவர் வெளிக்கொளியாக வெளிச்சம் மட்டுமே தருவார். அவர் நம் இருட்டை அடித்து விரட்டும் பணியை செய்வதில்லை. நாம் தான் நம் இடர் எனும் இருள்பகுதியை அவர் கவனத்தில் கொண்டுவந்தால் அவர் வெளிச்சமெனும் அறிவு தீர்வைத்தந்து நமது இறுக்கத்தை தளர்த்தி வைப்பார். அவரே நம் வாழ்வில் தீபத்தை ஏற்ற சுடரைத்தந்தவர் என்பதை புரிந்து அவர் வழியில் நடக்க வேண்டும்.

குரு என்பவர் நம்மை உற்சாகப்படுத்த வரவில்லை. நமக்கு ஆறுதல் சொல்வதும், தைரியப்படுத்துவதும், ஊக்குவிப்பதும் அல்ல அவர் பணி. நாம் அமைத்து வைத்திருக்கும் சில எல்லைகளைத் தகர்த்து எறிவதுதான் அவர் நோக்கம். சிக்கியிருக்கும் பலவற்றில் இருந்தும் நம்மை விடுவித்து சுதந்திரம் தருவதே அவர் விழைவு. கட்டுண்டு பாதுகாப்பாக இருப்பதைவிட சுதந்திரமாக ஆபத்துகளை எதிர்கொள்வதே உயர்ந்தது என்ற சிந்தனையை தருபவர்.

ஓர் எறும்பு போகும் பாதையில் விரலை வைத்து மறித்துப் பாருங்கள். அது நின்றுவிடாது. விரல் மீது ஏறிப்போகலாமா என்று முயற்சி செய்யும். எல்லைகளுக்குள் கட்டுப்பட்டு இருப்பது எறும்புக்குக்கூட பிடிப்பதில்லை. எந்த உயிராக இருந்தாலும், விடுதலைப் பெறுவதுதான் அதன் அடிப்படை தாகம்.

எதனுடனும் பிணைத்துக் கொண்டு திருப்தியுற ஆன்மாவால் முடிவதில்லை என்பதால்தான், எது கிடைத்தாலும் அது வேறு ஒன்றைத் தேடிக் கொண்டே இருக்கிறது. இதுவே முக்திக்கு விழையும் தன்மை. இதை விழிப்பு உணர்வோடு அணுகச் செய்வதே குருவின் வேலை.

மஹாவீரர் வேறு, மத போதகர் வேறு, மேடை பிரசங்கி என்பவர் வேறு… கீதையில் இருந்தோ, பைபிளில் இருந்தோ, குரானில் இருந்தோ இரண்டு பக்கங்களைப் படபடவென்று உணர்ச்சி வசப்படச் சொல்லிவிட்டாலே, அவரைக் குருவாக நினைத்துவிடுகிறார்கள் இக்காலத்தில். படிப்பறிவு இல்லாதோர் நிரம்பி இருந்த சமூகத்தில், புனிதப் புத்தகங்களாகக் கருதப்பட்டதை யாரோ படித்து, அவர் கண்ணோட்டத்தில் அதற்கு விளக்கம் சொன்னால், வேறு வழியின்றி அதை ஏற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. அந்த நிலை வெகுவாக மஹாவிரர் மாற்றிய பிறகும், அவர்களுடைய தயவை நாடிக் காத்திருப்பது அர்த்தமற்ற செயல்.

குரு என்பவர் அறிஞர் அல்ல; தத்துவவாதி அல்ல; ஆசிரியரும் அல்ல. குரு என்பவர் குறிப்பிட்ட இலக்குக்குப் போக பாதை காட்டும் உயிருள்ள ஒரு வரைபடம். வரைபடம் இல்லாமல் இலக்கை அடைய முடியாதா? முடியும். சாகசங்களுக்குத் தயாரானவராக இருந்தால், நீங்களாக முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால், பல சமயங்களில் வழி தவறலாம். சில இடங்களில் தட்டுத் தடுமாறலாம். உலகையே வட்டம் அடித்த பின்னும் இலக்கைச் சென்று அடையாமல் போகலாம். குரு உங்களுக்கு அந்த வேலையைச் சற்று சுலபமாக்கித் தருவார்.

வேதனைகளில் இருந்து விடுபட வேண்டும். ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடலும், மனமும் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அந்தச் சூழலை உருவாக்கித் தருபவரே குரு.

ஒரு குருவின் செயல்... பொதுவாக, உறவு என்பது உடல், மனம் தொடர்பானதாக இருக்கலாம் அல்லது உணர்வு தொடர்பானதாக இருக்கலாம். குருவுக்கும், சிஷ்யனுக்கும் இடையில் இதையெல்லாம் தாண்டிய அக நிலையில் ஓர் உறவு பூக்கிறது. மற்றவர் தொடாத ஒரு பரிமாணத்தைத் தொடக்கூடியவர் குரு ஒருவரே.

அவர் நம் அகங்காரத்துக்குத் துணை போக மாட்டார். அதைக் கூறு போட்டு அறுப்பார். அதையே நமக்கு இனிக்கும்விதமாகச் செய்வார். அதேசமயம் நம்மை உறங்க விட மாட்டார். தட்டி எழுப்பிவிடுவார்.

யாருடன் இருந்தால் மிக வசதியாக உணர்கிறோமோ அவர் சரியான குரு அல்ல. யாருடைய அருகாமையில் மிக அசௌகரியமாக உணர்ந்தாலும், அவரை விட்டு விலக முடியாமல் விரும்பி ஏற்கிறோமோ, அவர்தான் உண்மையான குரு.

----------------------

ஞான ஆராதனை தீபத்திற்கு ஒப்பானது. தீபம் எரியும் போது கரும்புகையை வெளியேற்றுகிறது. அதுபோல் ஞானி எனும் குருவானவர் தனது வினைகள் எனும் கரும்புகையினை சாரித்திரத்தின் வழியே வெளியேற்றி ஞானம் என்னும் ஒளியை பிரகாசிக்கச் செய்கிறார். ஆன்மா- உடல் இவற்றின் இயல்பை அறிகிறார். அவரது ஞானச் சுடரில் நாம் நம் வினைகள் எனும் கரும்புகையை அவர் வழிகாட்டும் நடத்தையில் பயணித்து வெளியேற்றி நாமும் ஞானச்சுடராய் மாற முயற்சிப்பதே மேலான புருஷார்த்தம் என்று ஆச்சார்யஸ்ரீ நமக்கு அறிவுறுத்துகிறார் இப்பாடலின் வழியே…..




अशुभाच्छुभमायातः शुध्थ: स्यादयमागमात् । 
रवेरप्राप्तसन्ध्यस्य तमसो न समुद्गमः ।।122।।

அசுபாச்சுபமாயாத: சுத்த: ஸ்யாதயமாகமாத் | 

ரவேரப்ராப்தஸம்த்யஸ்ய தமஸோ ந ஸமுத்கம: || 122 ||
Such accomplished, worthy soul, due to the effect of the scriptural knowledge, moves from the stage of disposition that is inauspicious (aśubha, marked by asaeyama) to auspicious (śubha, marked by saÉyama) and finally, void of all karmic dirt, to pure (śuddha). It is right; as there is no trace of darkness in the sun till dusk, the ascetic who has reached the pure (śuddha) stage, has no trace of inauspicious or even auspicious dispositions.
சாதனை படைக்கும், தகுதியான ஆத்மா, ஆகமபூர்வ அறிவின் தாக்கத்தின் காரணமாக, தீங்கு விளைவிக்கும் நிலையிலிருந்து புனிதமான (சுப உணர்வை) பெற்று, இறுதியாக அனைத்து கர்ம அழுக்குகளையும் தவிர்த்து, தூய (சுத்த). உணர்வை அடைவது: மாலை வரை சூரியனில் இருளின் எந்த தடயமும் இல்லாதது போல, தூய்மையான நிலையை அடைந்த முனியானவர், தீங்கு விளைவிக்கும் அல்லது புனிதமான மனநிலைகள் இரண்டையும் கொண்டிருப்பதில்லை.

இவ்வுலகம் இன்பமும் துன்பமும் இணைந்தது. தனது இன்பத்திற்காக பிறர் துன்பத்தை காணாதவர், துன்பத்தை அளிப்பவர் தீய உணர்வுள்ளவர்களாவர். அதாவது அசுப உணர்வுள்ளவர்கள். அவர்களுக்கு சாதகமான பலனை பெற முயல்பவர்கள். அவர்களைப் பொருத்தமட்டில் அது நற்பயனாலும் அசுபமான உணர்வாகத்தான் அறம் கூறுகின்றது. அவர்களுக்கு பிறவியைப்பற்றிய அச்சம் இல்லாதவர்கள் என்றுதான் கொள்ளவேண்டும்.

அவர்கள் ஆன்ம முன்னெற்றத்திற்காக விருப்புகளை விலக்கி வாழமுற்படும் போது இந்த அசுப உணர்வுகளைக் களைய முற்படுவர். முனிவர்கள் ஒழுக்கம் அவ்வாறே வரையறை செய்யப்பட்டுள்ளது. அவ்வழியில் எவர் பயணித்தாலும் அறவாழ்வு, தவவாழ்வு அசுப உணர்வை களையவே முற்படும். அப்போது சுப உணர்வு தோன்றத்துவங்கும். பிறர் துன்பம் போக்கத்துணியும், நற்செயல் புரிய மனஎழுச்சி பெறும். அது சுப உணர்வு என அழைக்கப்படுகிறது. அவர்கள் இம்மையில் இன்பமாய் வாழ்வதோடு, மறுமையிலும் மாறா மகிழ்ச்சியில் திளைப்பர். அவ்வாறான வாழ்வு நிலைக்கு வித்திடுவது சுப உணர்வு நிலைப்பாடாகும்.

ஆனால் இரண்டுமே ஆன்மனில் களங்கத்தை உண்டுபண்ணக்கூடியதே என்பதை மேலும் தவவாழ்வில் உயரும் போது புரிந்து கொள்வர். அவர்கள் அச்சுப உணர்விலிருந்து விடுபடவே முயல்வர். அதுவே அவர்களுக்கு பிறவிச் சுழற்சியிலிருந்து விடுதலையளிக்கும் என்பதை அவர்களது குருவரர் கூறி அசுப மற்றும் சுப உணர்வையும் வெளியேற்றும் வழியை கற்பிப்பர். அதுவே தூய உணர்வுநிலைக்கு வழிவகுக்கும்.

அத்தூய மனஉணர்வே முக்திக்கான வழியாகும் என்பதை இந்நூற்பாவில் ஆச்சார்யர் கூறுகிறார்.

கறுமை அசுபம், ஆனால் மஞ்சள் சுபம் என்றிருந்தாலும் வெண்மையே சிறந்தது என்பதை வலியுறுத்தச் செய்கிறார். அதாவது மனோபாவத்தின் நிறங்களை ஆறுவகை லேஸ்யையாக நமது ஆகமங்கள் குறியிடுகளின் வழியே தெரிவிக்கிறது.

கிருஷ்ண லேச்யை, நீல லேச்யை, காபோத ( grey ) லேச்யை, பீத ( மஞ்சள் ) லேச்யை, பத்ம லேச்யை ( colour of lotus), சுக்ல ( வெண்மை ) லேச்யை என ஆறு வகையாகும்.

உதயத்தில் இருந்த கஷாயங்கள் பலனைத் தந்து கொண்டிருந்த போது எந்த யோகம் ஆன்ம பிரதேசத்தில் செயல் பட்டுக்கொண்டிருந்ததோ அதன் நிறங்களை (லேச்யை) உவமானமாகக் காட்டி விளக்கப்படுகிறது. இதனை தத்வார்த்த சூத்திரம் போன்றவற்றைப் படிக்கும் போது தெரிந்து கொண்டிருப்பீர்கள்(கொள்ளலாம்).

லேச்யைகள், கஷாயம் மற்றும் யோகம் ஆகியவை ஆன்மபிரதேசத்தில் தோன்றுவதால் ஏற்படுவதாகும்.

இந்த ஆறுவகை மனோநிலைகளை அதாவது அசுப, சுப களங்கமான உள்ளத்தையும், தூய உள்ளத்தையும் மனிதரிடையே குறிப்பிடும் வகையில் பழங்களைப் பெற அடிமரத்தை வெட்டுபவன் போன்று ஒருவனும், கிளையை வெட்டுபவன், உலுக்கி பறிப்பவன், மேலேறி பறிப்பவன் கனியை மட்டும் பறிக்க எத்தனிப்பவன், கீழே பழுத்து விழுந்தத்தை மட்டும் எடுத்துண்ண செல்பவன் என்றவாறு ஆறு வகையான மனிதர்களை, ஆறு உணர்வான நிறத்தவர்களை குறிக்கும் ஓவியங்களை சில ஆலயங்களில், இல்லங்களில் கண்டிருக்கலாம். (படத்திலுள்ளவாறு)

அந்த மனோநிலையை குறிப்பிட்டே இந்நூற்பாவில் முனிவர் அவர்கள் நமக்கு தூய மனநிலையை எய்தும் வழியை காணவேண்டும் என்றே வழிகாட்டுகிறார்.





विधूततमसो रागस्तपःश्रुतनिबन्ध्नः । सन्ध्याराग
 इवार्कस्य जन्तोरभ्युदयाय सः ।।123।।

விதூததமஸோ ராகஸ்தப: ஸ்ருதநிபந்தன: | 

ஸந்த்யாராக இவார்கஸ்ய ஜந்தோரப்யுதாய ஸ: || 123 ||
The attachment (rāga) in respect of austerities (tapa) and the Scripture that the ascetic who has destroyed the darkness of ignorance retains is like the red light emanating from the sun at the break of dawn; soon it becomes bright as the sun rises.
சந்நியாச நடவடிக்கைகள் (தபம்) மற்றும் அறியாமையின் இருளை அழித்த துறவி தக்கவைத்துக் கொள்ளும் ஆகமப் பற்று (ராகம்) விடியற்காலையில் சூரியனில் இருந்து வெளிப்படும் சிவப்பு ஒளியைப் போன்றது; சூரியன் உதயமாகும்போது அவ்வாறு பிரகாசமாகிறது.

இந்த நூற்பாவில் இயற்கையில் சூரிய ஒளியிலிருந்து நிறமிகள் எவ்வாறு தோன்றுகின்றன என்ற அறிவியல் உண்மையை நமக்கு இப்பாடலின் வழியே தெரிவிக்க முற்பட்டுள்ளார் என்றே கொள்ள வேண்டும். அதனுடன் ஆன்மீகத்தை இணைத்து நமக்கு தெளிவு படுத்த முனைந்துள்ளார் ஆச்சார்யஸ்ரீ.

சூரிய ஒளி காற்று மண்டலத்திலுள்ள வாயுக்கள் மற்றும் துகள்களின் வழியே செல்வதால் அனைத்து இடங்களிலும் பரவுகிறது. சூரிய ஒளியில் பல வண்ணங்கள் இருப்பது நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம், இந்த வண்ணங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான அலைநீளம் கொண்டவை. அதனால் சூரிய ஒளி பரவும் போது குறைந்த அலைநீளம் கொண்ட நீல நிறம் விரைவாக பரவுகிறது. இதனால் தான் பகல் நேரத்தில் வானம் நீலநிறத்தில் தோன்றுகிறது.

இதனை Sir C.V. ராமன் என்ற இந்திய விஞ்ஞானி கண்டறிந்தார். அதற்கு ராமன் எஃப்க்ட் (Raman effect) என்று பெயர்.

ஆனால் காலை மற்றும் மாலையில் மட்டும் ஏன் வானம் வேறு நிறத்தில் தோன்றுகிறது? அதற்கும் இந்த விளைவு தான் காரணம். காலை மற்றும் மாலை நேரங்களில் சூரிய ஒளி பரவ அல்லது மறைய ஆரம்பிக்கும் நேரத்தில் அதிக அலைநீளம் கொண்ட பிற நிறங்கள் (சிவப்பு, ஆரஞ்சு அல்லது மஞ்சள்) அதிகளவில் ஒளிச்சிதறல் அடைந்து நம் கண்களுக்குத் தெரிகின்றன.

அதாவது இருளிலிருந்து பகல் வெளிச்சத்திற்கு காரணம் சூரிய ஒளியின் உதயமே. சூரிய ஒளியின் அதிக அலைநீளங்கள் அடர்த்தியாக இருப்பதால் சற்று இருளாகவும் போகப்போக இருள் முழுவதுமாக மாறி வெளிச்சமாகவும் பிரகாசிக்கிறது. அதனால் சிகப்பு வர்ணம், ஆரஞ்சும், மஞ்சள் என அலைநீலத்தில் குறைந்து கடைசியாக நீலத்திற்கு வந்ததும் சூரிய வெளிச்சம் உலகில் முழுவதுமாக இருளைப் போக்கி விடுகிறது. அதே போன்று மாலையில் நீலம் குறையக்குறைய மஞ்சள், சிகப்பு என இருளை நோக்கி சென்று விடுகிறது.

அதே போல் சந்நியாசம் பெற்ற ஒருவரது மனதிலுள்ள விருப்பு வெறுப்புகள் விலக, விலக இருள் மறைந்து வெண்மையாகிறது. அதற்கு காரணம் அவர்கள் ஏற்றுக் கொண்ட தபவாழ்வாகும் என்று கூறுகிறார் முனிவர் பெருமான். அதாவது சூரிய உதய சிவந்த மஞ்சளிலிருந்து எவ்வாறு வானம் நீல நிறத்திற்கு மாறி விடுகிறதோ அதுபோன்று மனதிலுள்ள மாசுக்கள் அகன்று தூய்மை அடைகிறது என்பதை சூரியஒளிகற்றைகள், வளிமண்டலஒளியியல் வழியே தெரிவிக்கிறார்.

இது சந்நியாசிக்கு மட்டும் பொருந்தக் கூடியதன்று எவரொருவர் விருப்பு, வெறுப்பு எனும் ஆசை, பற்றுக்களிலிருந்து விடுபட தவ வாழ்வை எற்கிறார்களோ அந்த அளவிற்கு அவரது ஆன்ம விழிப்பு சூரிய உதயம் போன்று இருளிலிருந்து வெளிச்சத்திற்கு மாறுகிறது என்பதை தெரிவிக்கிறார்.

மாறாக சாதாரண பற்றுள்ளம் கொண்ட ஒரு மனிதனின் வாழ்க்கை மாலை அஸ்தமனச்சூரியன் போன்று நீலவர்ணத்திலிருந்து சிவந்த வானத்திற்கு மாற்றம் பெற்று பின்னர் இருளால் சூழப்பட்டு விடும் என்ற உண்மையையும் நான் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே தவவாழ்க்கை சூரிய உதயத்திற்கு சமமாக கருதப்படுகிறது.





विहाय व्याप्तमालोकं पुरस्कृत्य पुनस्तमः । 
रविवद्रागमागच्छन् पातालतलमृच्छति ।।124।।

விஹாய வ்யாப்தமாலோகம் புரஸ்க்ருத்ய புனஸ்தம: | 

ரவிவத்ராகமாகச்சன் பாதாலதவம்குச்சதி || 124 ||

The sun, when it leaves the expanse of bright light and embraces the red tinge of darkness, falls into the underworld, i.e., it vanishes. In the same way, the man who leaves the light of knowledge that illumines the nature of substances and embraces ignorance, falls into the underworld, i.e., the infernal state of existence.
சூரியன், பிரகாசமான ஒளியின் விரிவாக்கத்தை விட்டுவிட்டு, இருளின் சிவப்பு நிறத்தைத் தழுவும்போது, பாதாள உலகில் விழுகிறது, அதாவது, அது மறைந்துவிடும். அதேபோல், பொருட்களின் தன்மையை வெளிச்சம் போட்டு, அறியாமையைத் தழுவும் அறிவின் ஒளியை விட்டு வெளியேறும் மனிதன், பாதாள உலகில் விழுகிறான், அதாவது, அவ்வாறு இருப்பின் நரக நிலையையடைகிறான்.

சென்ற பாடலில் சூரிய உதயம் போன்றது முனிவர் வாழ்க்கை என்று கூறியதோடு சுப, அசுப பாவங்களை(bhava) விடுவிக்க தங்களது தவவாழ்வில் கற்று அதனையும் விட்டு விலகுகிறார்கள். அதனால் அவர்கள் மோட்ச உலகிற்கான இலக்கினை அடைய சரியான பாதையில் செல்கிறார்கள் என்று கூறினார்.

அதற்கு மாறாக இப்பாடலில் எவன் ஒருவன் மாலை அஸ்தமனச்சசூரியன் போன்று வெளிச்சத்திலிருந்து மஞ்சள், சிகப்பு என அடர் நிறத்தையும், பின்னர் இருளையும் தழுவுவது போன்று விருப்பு, வெறுப்பிற்கு காரணமான வேட்கை எனும் ராகத்தை விடாமல் பற்றுவதால் கீழான பிறவியைத்தான் அடைகிறான் என்று கூறுகிறார்.

அதில் சுப உணர்வுடன் வாழும் போது அது விடத்தகுந்ததாக இருப்பினும் மேலான கதிக்கு, அதாவது இப்பூவுலகில் உயர்குடி பிறப்போ அல்லது தேவகதியில் சுகம் அனுபவிக்கவோ அவ்வுயிர் வினைகளை ஈட்டி விடுகிறது. ஆனால் எவ்வளவு ஆகமக்கருத்துக்களை படித்தும், பல சான்றோர்கள், முனிவர்கள் கூறியும் வாழ்நாளில் வெளிச்சத்திற்கு வராமல் அசுப உணர்வுகளை வளர்த்துக் கொண்டே போகும் கஷாய பாவனைகளுக்கு அடிமையானவர்கள் தீய கதிகளான விலங்கு மற்றும் நரககதியில் பிறந்து துன்பத்தையே அடைகிறார்கள். அதாவது அஸ்தமனச்சூரியன் எவ்வாறு இருளைத் தழுவுகிறதோ அது போன்று அவர்கள் கதி அதோகதி தான் என்பதாக இப்பாடலில் வர்ணிக்கிறார்.

அதனால் வாழ்க்கையில் சுப உணர்வு விடத்தகுந்தாயினும், அவற்றில் சிலவற்றுடன் வாழ்ந்தாலும் பரவாயில்லை, முற்றிலும் விடத்தக்க அசுப உணர்வுகளை அதாவது தீய உணர்வுடனான செயலைச் செய்து பெரும் பாவத்தை ஈட்டி பல பிறவிகளில் துன்பத்தை அடைதல் மூடத்தனம் என்று அறிவுறுத்துகிறார்.

---------

ஆகம அறிவுஜீவித்தனம் இருந்தாலும் அசுப உணர்வை உள்ளே கொண்டிருப்பவனும், தந்திரசாலித்தனத்துடன் அசுப உணர்வை சுப உணர்வு கொண்டவன் போன்று காட்சி யளிப்பவனும் தீய கதிகளில் உழன்று துன்பத்தையே அடைவான் என்று கூறுவதோடு… ஆகம அறிவை புத்திசாலித்தனத்துடன் பயன்படுத்த, நல்ல புருஷார்த்தத்துடன் வாழும் நற்சிந்தனையுடனான செயல்களில் ஈடுபடும் மானிடனே நற்கதியை அடைவதோடு சீக்கிரமே விடுதலைப்பேற்றையும் எய்துவான் என்பதை குறிப்பிடுகிறார்.

இம்மூன்றிற்கும் உள்ள வேறுபாட்டை மிக நுணுக்கமாக ஆராய்ந்து அறிவோம்.

இன்றைய உலகில் அறிவுஜீவியாகவும், தந்திரசாலியாக வாழ்பவனை பலரும் புத்திசாலித்தனத்தில் விஞ்சியனாக கருதுகின்றனர். அவ்வழியே செல்வத்தையும், புகழ், பெருமைகளையும் ஈட்டுபவனே மேலானவன் என்று மதிக்கப்படுகிறான். அவ்வாறான செயல் லெளகீகத்திற்கே பொருத்தமானது. அது பொருள்சார்ந்த வாழ்வில் அறிவாளியாக கருதப்பட்டு பெரும் அங்கீகாரத்தை பெற்றுவிடும்.

ஆனால் அருள் சார்ந்த வாழ்வில் தெய்வத்தன்மையை ஈட்ட அது ஒருபோதும் துணைவராது, மாறாக புத்தியில் சுபபாவத்துடன், நற்சிந்தனையுடன், தெய்வபண்புடன் வாழும் ஒருவனே புத்திசாலியாக கருதப்படுகிறான். அவனது ராகதுவேஷமற்ற சுப உணர்வே மேலான கதியை அளிக்கும் என்பதையே பல பாடல்களிலும் நம் முனிவர்கள் பலரும் அறிவுருத்தவே செய்கிறார்கள்.

இதனைப் படித்து புரியாத பலரும் செல்வத்தை ஈட்டியும், அவ்வழியே புகழ், பெருமைக்கான தந்திரயுக்திகளை பெருக்கிக் கொண்டு செல்வதே புத்திசாலித்தனமாக கருதும் அறியாமையே இந்த ஐந்தாம் காலத்தில் மோட்ச மார்க்கமாக கருதப்படுகிறது. அதிலிருந்து விடுபட்டு ஆன்மீய ஞானத்தை சரியாக புரிந்து வாழ்பவர்கள், தினமும் சுப உணர்வுடன் வாழும் தவவாழ்க்கையில் ஒழுகுதல், ஆகமக்கருத்துக்களை பிறருக்கு வழங்குவதற்காக மட்டும் படிக்காமல் உள்வாங்கிப் படித்தறிந்து தன் ஆன்ம வளர்ச்சிக்கான செயல்பாடுகளான இயம, நியம விதிகளை சரியாக கடைபிடித்து, தர்மதியானத்தில் வாழ்தலே சுப உணர்வை அளிக்கும். அதுவே புத்திசாலித்தனமாக நம் தரிசனக் கருத்துகள் தெரிவிக்கின்றன என்பதை புரிந்து வாழ்தலே அறிவார்ந்த முறையாகும்..





ज्ञानं यत्रा पुरःसरं सहचरी लज्जा तपः सम्बलं 
चारित्रां शिविका निवेशनभुवः स्वर्गा गुणा रक्षकाः । 
पन्धाशच प्रगुणः शमाम्बुबहुलशछाया दयाभावना 
यानं तं मुनिमापयेदभिमतं स्थानं विना विप्लवैः ।।125।। 


ஞானம் யத்ர புர: ஸரம் ஸஹசரி லஜ்ஜா தப: ஸம்பலம், 

சாரித்ரம் சிவிகா நிவேசனபுவ: ஸ்வர்கா குணா ரக்ஷகா: | 
பந்தாச்ச ப்ரகுண:ச மாம்புபஹுலச்சாயா தயாபாவனா, 
யானம் தம் முனிமாபயேதபிமதம் ஸ்தானம் வினா விப்லவை: || 125 ||
Where knowledge is the guide, modesty is the companion, austerity or control of desires is the provision, conduct is the palanquin, heavens are the resting places, virtues like freedom from attachment are the guards, the path (of the Three Jewels, ratnatraya) is straight (free from deceitfulness) with abundance of water of tranquility, and compassion is the shade; such a journey, removing all obstructions and hindrances on the way, reaches the ascetic to his desired destination (of liberation).
அறிவு வழிகாட்டியாக இருக்கும் இடத்தில், அடக்கம் தோழமையாகவும், தபம் அல்லது ஆசைகளின் கட்டுப்பாடு என்பது ஆயத்த ஏற்பாடாகவும், நன்நடத்தை என்பது பல்லக்காகவும், சுவர்க்கங்கள் என்பது ஓய்வு இடங்களாக, பற்றினை தணிக்கும் விரதம் போன்ற நற்பண்புகள் வழிக்காவலர்களாக, மும்மணிகள் ஏராளமான நீர்நிலைகளுடனான ஆரவாரமற்றப்பாதையாக, இரக்கம் என்பது நிழலாகவும் அமைந்த பயணம், வழியில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்கி, அவரவர் விரும்பிய இடத்திற்கு (முக்திக்கு) பயணிகளை, (முற்றும் துறந்தவர்களை) சேர்ப்பித்து விடுகிறது.

உலகம் எப்போது தோன்றியது, இதை யார் உருவாக்கியது அவரே கண்டிப்பாக சித்த உலகத்தில் நமக்கு வழிகாட்டுவார். அவர் பாதங்களை வணங்கிக் கொண்டிருந்தால் ஒருநாள் நம்முன் பிரசண்ணமாகி நம்மை அப்படியே தனது புஷ்பக விமானத்தில் அழைத்துச் செல்வார் என்ற ஏமாற்று வசனங்களில் மயங்கி, சோம்பேறியாய் பக்தி என்ற பெயரில் போற்றி போற்றி என்று காலத்தை கடத்தாது, சக்யக்த்வ மார்க்கத்தில் முக்திப்பிரதேசத்தை கண்ணுக்கெதிரே கண்டறிந்த ஞானகுருக்கள், அப்பயணத்தில் வெற்றிகண்ட ஜினர்கள், அவர்களது சொல்லில், கருத்தில் நம்பிக்கை வைத்து பயணிக்கும் வழிகாட்டிகள், ஆச்சார்யர்கள், முனிவர்கள், தவசீலர்கள் காட்டும் பாதையில் இயம, நிமங்களை துவக்குவதே சிறந்த முக்திமார்க்கம் என்பதை தெளிவாக்குகிறார் இப்பாடலின் வழியே.

இந்நூற்பாவில் ஆச்சார்யஸ்ரீ பற்றற்ற தவவாழ்வுப்பயணமே முக்திக்கான அமைதிப்பயணம் என்பதாக, ஒருவனின் பிரயாணத்திற்கு சாதகமான அம்சங்களை உவமையாக தந்துள்ளார்கள்.

வரைபடம் திசையறிந்து நாம் செல்லுமிடத்துக்கு அழைத்துச் சென்று விடும். அதன் துணையில்லை எனில் நாம் சென்றடைய பல காலங்கள் தாமதமாகவும் வாய்ப்புக்கள் உண்டு.

அதாவது உருண்டையான பூமியில் வடக்கே 100 கிலோமீட்டரில் உள்ள ஒரு ஸ்தலத்திற்கு செல்ல வடக்கில் பயணித்தால் இரண்டு மூன்று மணிநேரத்தில் ஒரு வாகனத்தில் சென்றடையலாம். அதே ஸ்தலத்திற்கு திசை தெரியவில்லை என்றால் எதிர்திசையான தெற்கில் சென்றாலும் சில மாதங்களில் அதே வாகனத்தில் சென்றடைந்து விடலாம். அவ்வாறான செயல் அறியாமையின் வெளிப்பாடாகத்தான் இருக்கும் என்று முனிவர் முக்திக்கான வரைபடம் ஞானமே என்று இப்பாடலில் வலியுறுத்துகிறார். சரியான திசையில் பயணித்து பல பிறவிகளை குறைப்பது ஆன்மஞானமே என்று கூறுகிறார்.

முக்திப்பிரதேசத்தில் நம்பிக்கை வைத்துவிட்டால் அவ்விடத்தை சென்றடைய ஞானம் அவசியமாகிறது. அதுவே வரைபடம், திசை, சென்றடைவதற்கான வழிமுறைகளை அளித்து விடும். கடவுள் என்பவரின் துணையிருந்தாலும், இல்லாவிட்டாலும் முக்திக்கான வழிகாட்டுதலின்படி பயணத்தை மேற்கொள்வதே சரியான புருஷார்த்தமாகும்.

இதில் எந்தக்கடவுள் செல்வத்தை கொடுப்பார், முக்தியை அளிப்பார் என்ற சிந்தனையை வளர்த்து அதற்கான வழியில் நம் உழைப்பேதுமில்லாமல் சென்றடைய முடியுமே என்ற விபரங்களைத் தேடி அலைவதை விட அதன் புருஷார்த்தங்களை, முக்திகான வழிமுறைகளை இன்றே துவக்குவதே ஞானம் என்று நமக்கு அறிவுறுத்துகிறார்.

தவவாழ்வை தேர்வு செய்வதே ஞானமாகும் என்று நமக்கு வழிகாட்டுகிறார் குணபத்ராச்சார்யர் அவர்கள். அதை விடுத்து வேறு எந்த மார்க்கமும் வடக்கில் செல்வதற்கு பதிலாக தெற்கில் பயணம் செய்து ஸ்தலத்தை அடைவது அறியாமையின் வெளிப்பாடாக கூறுகிறார்.

அதாவது தத்வார்த்த சூத்திரத்தில் கூறியது போல் சவிபாக நிர்ஜரை கண்டிப்பாக ஒருநாள் நமக்கு விடுதலைப்பேற்றை அளிக்கத்தான் போகிறது. ஆனால் அதற்கு அவ்வினை உதயங்கள் பின்னர் நிர்ஜரைக்கான காலம் வரை பல பிறவிகளை சந்திக்கவே நேரிடும். அதனால் அவ்வினைகள் உதயத்திற்கு வருமுன்னரே உதிர்ப்பிற்கான /நிர்ஜரைக்கான புருஷார்த்த இயம, நியமங்களை துவக்குவதே அவிபாக நிர்ஜரை என்னும் ஞானத்தையே மோட்சப்பயணத்திற்கான சரியான வரைபடமாக அறிவுறுத்துகிறார்.

பயணத்தில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அமைதியாக கடந்து செல்லும் பொறுமையும், சகிப்புத்தன்மையுடன் நம்முடன் அடக்கமுடன் சகபயணியாக, ஒரு பெண்மை போன்றவர் வந்தால் எவ்வளவு உறுதுணையாக இருக்குமோ அதுபோன்று இம்மோட்சப்பயணத்திற்கும் அடக்கமும், சுயகட்டுப்பாடும் அவசியம் என்கிறார்.

பயணத்திற்கான நல்லாயத்தங்களே சீக்கிரம் சென்றடைய உதவிடும். அதாவது வழிச்செலவிற்கான பணமும்(debit cards/eclectronic payment system), பிரயணத்திற்கான துணிகள், பெட்டிகள்(travel kits) போன்றவையே நமக்கு தடையோ, தாமதமோ அளிக்காது பயணம் செய்ய உதவிடும் என்பதைப் போன்று ஜினவறத்தை தழுவிய தவவாழ்வை தேர்வு செய்ய பரிந்துரை செய்கிறார். (பயணத்திற்கான சாதனங்கள் எதுவுமே தேவையில்லை.)

எவ்வாறு களைப்பில்லாமல் பயணம் செய்ய பல்லக்கைப்போன்ற அதிர்வுகுறைந்த வாகனங்கள் பயன்படுகிறதோ அதுபோன்று தீயமனோநிலைகளற்ற, கஷாயங்கள் இல்லா, ஒழுக்க உணர்வு; சிந்தனை(சாரித்ர பாவம்)யே விடுதலைக்கு செயலாற்றும் போது துன்பங்களை உணரா உணர்வை அளிக்கும் என்கிறார்.

நெடும் பயணத்தில் இரவில், உடல் அசதியில் நிழல்தருமரங்கள், தங்குமிடங்கள் வசதி செய்து பின்னர் புத்துணர்ச்சியுடன் பயணம் செய்ய வகை செய்கிறதோ அது போன்று நாம் தவவாழ்வில் தேர்வு செய்யும் போது ஈட்டிய புண்ணிய வினைகள் சுவர்க்க சுகக் கதியை அளித்து நமக்கு களைப்பைப்போக்கி நல்லோய்வை அளித்திடும் என்கிறார்.

எவ்வாறு வழித்துணையாக வரும் காவலர்கள், சுமப்பவர்கள் நமது உடமைகளை காப்பாற்றி பயணம் முடியும் வரை பாதுகாக்கிறார்களோ அதுபோன்று பொறுமையும், சகிப்புத்தன்மையும் (பரிஷகஜெயங்கள்) நமது நற்சிந்தனையை கோபம், மானம் போன்றவை கொள்ளையிடாது பாதுகாக்கும் என்றுரைக்கிறார்.

எவ்வாறு நாம் சென்றடையும் ஸ்தலத்திற்கு பல்வேறு வழிப்பாதைகள் இருப்பினும் நேர்வழியே துரதமாக சென்றடைய உதவுவது போன்று கபடமில்லா சரள சுபாவம் நம் முக்திப்பதைக்கான நேர்வழியாகும் என்று கூறுகிறார்.

நீர்வசதி நிறைந்த பாதையில் வரட்சி ஏற்பட்டாலும் தாகசாந்தி அடைகிறோமோ அதுபோன்று வீதராக உணர்வு என்னும் குளிர்ந்த நீரினால் ஆசை என்ற தாகம் எப்போதும் ஏற்படுவதில்லை.

நிழல் தரும் மரங்கள் நிறைந்த பாதை எவ்வாறு வெப்பம் வறுத்தாமல் செல்ல வகை செய்கிறதோ அதுபோன்று அஹிம்சை, இரக்கம், கருணை நிறைந்து செயலாற்றுதலே அவ்வாறமைகிறது என்று அறிவுறுத்துகிறார்.

இவ்வாறு நிறைஅம்சங்களுடன் தொடர்ந்து பயணம் சென்றால் நாம் சென்றடைய வேண்டிய இடம் தொலைவில் இருந்தாலும் சிரமங்கள் இன்றி இனிமையான பயணமாக அமைகிறது. அதே போன்று…..

ஜினர் காட்டிய வழியில், தவ வாழ்வில் இயம, நியமங்களை ஏற்று நல்ல புருஷார்த்தத்துடன் மோட்சப் பயணத்தை இப்போதே துவக்கினாலும் அது நம் ஆயுள் முடிந்த பின்னரும்; மறுபிறவியிலும் நம்மை விழிப்படையச் செய்து நமது இலக்கான சித்தப்பிரதேசத்தை அடையவே செய்யும் என்பதை ஆன்மீகபயணத்திற்கான உவமானங்களுடன் இந்நூற்பாவின் வழியே தெரிவிக்கிறார் ஆச்சார்யர் குணபத்ரர்.

இந்த நூற்பாவில் ஜினவறத்தின் அனைத்து அம்சங்களை வழங்கும் வகையில் பாடலின் கருத்துக்கள் இருந்தாலும் ஓரளவுமட்டுமே நேரம்கருதி கூற வேண்டியுள்ளது. மோட்சம் என்பது நெடும்பயணமாக இருந்தாலும் சவிபாக நிர்ஜரை பயணத்தை விலக்கி அவிபாவ நிர்ஜரைப் பயணமாக ஒவ்வொரு மானுடனும் சக்யத்வத்தை ஏற்று மும்மணி வழியில் பயணிக்கவே இப்பாடலை நமக்களித்திருக்கிறார் முனிவர் பெருமான்.





मिथ्या दृष्टिविषान् वदन्ति पफणिनो दृष्टं तदा सुस्पफुटं 
यासामधर्विलोकनैरपि जगद्दंदह्यते सर्वतः । 
तास्त्वÕयेव विलोमव£तनि भ्रुशम भ्राम्यन्ति ब(क्रुध्ः 
सत्रीत्रूपेण विषं हि केवलमतस्तद्गोचरं मा स्म गाः ।।126।। 


மித்யா திருஷ்டி விஷாந்வ தந்தி பணினோ திருஷ்டம் ததா ஸுஸ்புடம், யாஸாமர்த்த விலோகனைரபி ஜகத்தந்தஹயதே ஸர்வதா: | 

தாஸ்த்வயயேவ விலோமவர்த்தினி ப்ருசம் ப்ராம்யந்தி பந்தக்ருதா: ஸ்திரீ ரூபேண விஷம் ஹிகேவலபதஸ்தத் கோசரம் மாஸ்மகா: || 126 ||
People call certain kinds of cobras that eject venom into the eyes of the onlooker, ‘drstivisa’; this is not appropriate. Such ‘drstivisa’ is clearly seen in women whose seductive half-glances burn down the victim (the worldly man) from all sides. O ascetic! As you have turned away from them, you have made them extremely angry and they are roaming near you. They are just venom in form of women; do not fall prey to them.
பார்ப்பவரை தன் பார்வையின் வழியே விஷத்தை ஏற்றும் சில வகையான நாகப்பாம்புகளை ‘திருஷ்டிவிச’ என்று மக்கள் சொல்கிறார்கள்; இது உண்மையானதல்ல. இதுபோன்ற ‘திருஷ்டிவிஷப் பாம்புகள்’ பெண்களில் தெளிவாகக் காணப்படுகிறனர்; அவர்களின் கவர்ச்சியான கடைக்கண் பார்வைகளால் பாதிக்கப்பட்டவனை எல்லா பக்கங்களிலிருந்தும் எரிக்கின்றனர். ஓ சந்நியாசி! நீங்கள் அவர்களிடமிருந்து விலகிச் சென்றதால் அவர்களை மிகவும் கோபப்படுத்தியிருக்கிறீர்கள், அவர்கள் உங்களுக்கு அருகில் சுற்றி வருகிறார்கள். அவை பெண்களின் வடிவத்தில் உள்ள விஷப்பாம்புகள்; அவர்களுக்கு இரையாக வேண்டாம்.

வாத்சல்யத்துடனான சாத்விக்களும், தாய்மார்களும், நேசத்துடன், சகோதர உணர்வுடன் பழகும் பல பெண்கள் உலகில் இருந்தாலும், கவர்ச்சியும் விரகதாபத்தை விரசப்பார்வையால் வீசும் கீழான பெண்களை இந்நூற்பாவின் வழியே சாடுகிறார் ஆச்சார்யஸ்ரீ அவர்கள்.

முற்றுந்துறந்த முனிவர்களுக்கு அவ்வாறே உபதேசம் செய்யப்பட்டுள்ளது. பல துறவிகளும், ரிஷிகளும், பேரரசர்களும் பெண்களின் அழகில் மயங்கி தங்களது அரசபோகத்தை, வாழ்வை இழந்த வரலாறுகளை புராண, இதிகாசங்கள் வெளிப்படுத்துகிறது. அதனால் பெண்டிர்கள் ஆபத்தானவர்கள் என்றே கருதப்பட்டனர். வாழ்வின் லட்சியத்தை மாற்றி தன் வசப்படுத்தும் கவர்ச்சிப்பார்வையை கொண்டவர்கள். வசியப்படுத்துவதில் வல்லவர்கள். அதாவது ஆண்கள் அவர்களின் காம உணர்ச்சிக்கு அடிமையானவர்களே என்பது முற்கால வரலாறுகள். அதனால் பெண்களின் காமப்பார்வையிலிருந்து தப்பி வாழ்வதே ஆண்களுக்கு நல்லது. அவர்களால் மோட்சப்பயணத்திற்கு கேடுகள் விளையுமே ஒழிய நன்மை என்றும் இல்லை என்பதே அறிவுரையாகும்.

கண்ணுற்ற மனிதர்களை அருகில் சென்று கடிக்காமல் பார்வையின் வழியே விஷத்தை செலுத்தும் பாம்புகளைப்பற்றி மனிதர்கள் பலவாறாக பேசுகிறார்கள். அது போன்ற திருஷ்டிவிஷப்பாம்புகள் உலகில் இல்லை. ஆனால் அதற்குச் சமமாக விரகதாபத்துடனான பெண்களின் பார்வை அந்த பாம்பின் நஞ்சுக்கிணையானது என்பதை புரிந்து, தவவாழ்வை விட்டு விலகிவிடாமல் எச்சரிக்கை உணர்வுடன் வாழ வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

அக்காலத்தில் பெண்களும் பிற பொருட்கள் போன்றே போகப்பொருள்களாகவே கருதப்பட்டனர். அதனால் பொருள்சார்ந்த விருப்பம் பெண்டிர்மீதும் ஆண்களுக்கு இருக்கவே செய்தது. அதனால் பலஸ்திரீக்களும் கீழான நிலையில் தங்கள் வாழ்க்கைக் கிடத்தி வந்தனர். அதுபோன்ற பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக ஆண்களை தங்கள் வசம் இழுக்க , கவர்ச்சியைக் காட்டி காமப்பார்வையை வீசி வந்தனர் என்று பல நூல்களிலும் குறிப்புகள் உள்ளன. அவ்வாறான கீழ்நிலைப்பெண்டிர்களின் ஆசைக்கிணங்கி தங்களது ஒழுக்கத்திலிருந்து விலகாமல் தவவாழ்வில் பயணிக்க அறிவுறுத்துகிறார் முனிவர் பெருமான்.





क्रुध्ढा: प्राणहरा भवन्ति भुजगा दष्ट्वैव काले क्वचित् 
तेषामौषधयशच सन्ति बहवः सद्यो विषव्युच्छिदः । 
हन्युः स्त्रीभुजगाः पुरेह च मुहुः क्रुध्ढा: प्रसन्नास्तथा 
योगेन्द्रानपि तान्निरौष्धाविषा दष्टाशच दष्टरापिच ।।127।। 



க்ருத்தா: ப்ராணஹரா பவந்தி புஜகா த்ருஷ்டவைவ காலே க்வசித, தேஷாமெளஷதயஸ்ச ஸந்தி பஹவ: ஸ்த்யோ விஷவ்யுச்சித: | 

ஹன்யு: ஸ்திரீபுஜகா: புரேஹ சமுஹு: க்ருத்தா: பிரசன்னாஸ்ததா, யோகீந்த்ரானபி தான்னிரெளஷதவிஷா த்ருஷ்ட்ச்ச திருஷ்ட்ராபிச || 127 ||

Cobras are deprives of life, only occasionally when they bite in rage, there are many remedies which quickly remove their poison. Women-cobras whether in rage or in smiles, kill even master-ascetics, here and hereafter, again and again, whether they bite, or are looked at; by looking or being looked at, and there is no remedy for their poison.
நாகங்கள் உயிரை இழக்கச் செய்பவைதான், எப்போதாவது அவை ஆத்திரத்தில் கடிக்கும்போது மட்டுமே (நடைபெறும்). அப்போதும் பல சிகிச்சைகள் அவற்றின் விஷத்தை விரைவாக அகற்றிவிடுவதுண்டு. பெண்கள் எனும் நாகப்பாம்புகள் சினத்தாலும் அல்லது புன்னகை செய்தாலும் நஞ்சினைக் கக்கவே செய்வர். மாமுனிகளையும்-சந்நியாசிகளைக் கூட கொன்றுவிடுகின்றன அவை; இங்கே எப்போதும் மீண்டும் மீண்டும், அவை கடித்தாலும், பார்த்தாலும் சரி விஷத்தையே கக்கிச் செல்லும். அப்பெண்வடிவ நாகத்தின் விஷத்திற்கு சிகிச்சை எதுவும், எப்போதுமில்லை.

முதல் நூற்பாவின் தொடர்ச்சியாக இப்பாடலை வழங்குகிறார். பாம்பு தீண்டினால் கண்டிப்பாக உயிர் போகும் என்று சொல்ல முடியாது. பலவகை மருந்துகளும், சிகிச்சைகளும் அவர்களை காப்பாற்றி விடும். ஆனால் அந்த கீழ்ஜாதிப் பெண்களின் கடைக்கண் பார்வை பட்டாலோ, நாம் அவர்களைப் பார்த்தாலோ நம் வாழ்வில் கெடுதலே நிகழும். இவர்களது காமநோய்க்கு மருந்தே இல்லை. இம்மையிலும் ஏன் மறுமையிலும் கூட அதன் விஷம் நம் உடம்பில் ஏறியபடியே இருக்கும். அதாவது அக்காமநோயினால் பலபிறவிகளில் தொடரக்கூடிய வினைக்கட்டே வந்து சேரும் என்று எச்சரிக்கிறார் முனிவர் பெருமான்.

ஒவ்வொரு ஆணிடமும் அவனறியாமல் பெண் இச்சை ஆழத்தில் உறக்கத்திலிருந்து கொண்டுதான் இருக்கும். அவ்வுறக்கம் பெண்களின் கடைக்கண் பார்வையை கண்டதும் காந்தம் போல் இழுக்கப்பட்டு எழுச்சி பெற்று விடும் என்றுதான் பலஞானியரும் கூறுகின்றனர். எனவே காமாந்தனாக ஒருவனை மாற்ற பெண்ணின் கவர்ச்சிப்பார்வையே போதும் என்று வள்ளலார் பெருமானும் அச்சுறுத்தவே செய்கிறார்.

காமம் கூட இயற்கைத்தூண்டலினால் விளைவது, அப்போது தோன்றும் இச்சையே நம்மை பற்றிக் கொண்டு பலபிறவிகளுக்கு வித்திட்டு விடும் என்றே எச்சரிக்கை செய்கின்றனர் பல ஞானியரும். விலங்கிற்கு காமம் மட்டுமே, ஆனால் இச்சை ஒருபோது ஏற்பட்டதில்லை. ஆனால் மனிதனுக்கோ இச்சையே மேலோங்கி பற்றிக் கொள்கிறது. அது அவனது துரதிருஷ்டமே என்று சான்றோர்கள் பலரும் எச்சரிக்கின்றனர்.

”காமம்” என்பது இனிக்கின்ற விஷம் சுடுகின்ற தென்றல் குளிர்கின்ற வெப்பம் கலைகின்ற நிஜம்

என்றான் ஒரு கவிஞன். அதனால் கவனமுடன் அதில் செயல்படுதல் அவசியம். காம இச்சையால் அடியோடு சாய்ந்த குடும்பங்கள் சிலவற்றை இக்காலத்திலும் காணலாம்.





तां त्वं संस्कुरु वर्जयान्यवनितावार्तामपि प्रस्पुफटं 
एतामुत्तमनायिकामभिजनावज्र्यां जगत्प्रेयसीं 
मुक्तिश्रीललनां गुणप्रणयिनीं गन्तुं तवेच्छा यदि । 
तस्यामेव रतिं तनुष्व नितरां प्रायेण सेष्र्याः स्त्रिायः ।।128।।

ஏதா முத்தமனாயி காமபிஜனா வர்ஜ்யாம் ஜகத்ப்ரேயஸிம், 

முக்தி ஸ்ரீலவனாம் குணப்ரண யினீம் கந்தும் தவேச்சா யதி | 
தாம் த்வம் ஸம்ஸ்குரு வர்ஜயான்யவனிதாவார்த்தாமபி பிரஸ்புடம், தஸ்யாமேவ ரதிம் தனுஷ்வ நிதராம் ப்ராயேண ஸேர்ஷ்யா: ஸ்திரியம்: || 128 ||
O worthy soul! That beautiful and high-born woman, called ‘mukti’ or ‘liberation’, can only be had by noble men. She is the love of the whole world and a lover of virtues. Adorn her with the ornament of the Three Jewels (ratnatraya), if you desire to have her. Do not even talk of any other (worldly) woman. Have excessive love solely for her, since women, in general, are jealous.
இணையற்ற ஆத்மா! அந்த அழகான மற்றும் உயர்ந்த பெண், ‘முக்தி’ அல்லது ‘விடுதலை’ என்று அழைக்கப்படுபவர், உன்னதமான ஆண்களால் மட்டுமே பெற முடியும். அவள் முழு உலகத்தின் அன்பும், நல்லொழுக்கங்களை விரும்புவள். நீங்கள் அவளைப் பெற விரும்பினால், மூன்று நகைகளின் (மும்மணி) ஆபரணத்தால் அவளை அலங்கரிக்கவும். வேறு எந்த (உலக) பெண்ணிடமும் கூட பேச வேண்டாம். பெண்கள், பொதுவாக, பொறாமைப்படுவர்களாதலால், அவள் ஒருவளிடம் மட்டுமே அதிக அன்பு செலுத்துங்கள்.

விடுதலைப்பேற்றை ஒரு பெண் போல உருவகப்படுத்துகிறார் முனிவர்.

பெண்களை விரும்பித்தான் ஆக வேண்டும் என்ற உணர்விருந்தால் முக்திப் பெண்ணை மட்டுமே விரும்பு, அன்பு செலுத்து. உலகிலுள்ள நற்குணங்கள் அனைத்தும் உள்ளவள் அவள். பிற பெண்களிடம் பேசுவதை தவிர்த்து விடு. அவள் பிறரைப்போல் பொறாமை கொண்டவள் அல்ல. அவளை மும்மணியான நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் எனும் அணிகலன்கள் கொண்டு அலங்கரி. அதாவது மும்மணியைப் பின்பற்று. அதன் படி ஒழுகினால் மட்டுமே முக்தி கிட்டும் என்று அறிவுரை கூறுகிறார் முனிவர் பெருமான்.

-------------------------

அழகான புத்தமத கதை ஒன்று இருக்கிறது. பொருத்தமாக இருப்பின் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்….

ஓர் ஊருக்கு அழகான பெண்ணொருத்தி, எங்கிருந்தோ சட்டென வந்து தோன்றினாள். அவள் எங்கிருந்து வந்தாள், அவள் யார் என்ற விபரங்கள் யாருக்குமே தெரியவில்லை. ஆனால், அவள் பேரழகி.

ஊரே ஒன்று கூடி அவளைப் பார்த்துத் திகைத்தது - ஊரில் இருந்த அத்தனை இளைஞர்களும் - சுமார் 300 பேர் -அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள்.

அவள் அவர்களை அழைத்தாள் .'நானோ ஒருத்தி. நீங்களோ 300 பேர். நான் ஒருவரைத்தானே மணக்க முடியும்? அதனால் ஒன்று செய்யுங்கள் நான் நாளைக்கு வருகிறேன். உங்களுக்கு 24 மணி நேர கால அவகாசம் தருகிறேன். உங்களில் யார் புத்தரின் தாமரைச் சூத்திரத்தை மனப்பாடமாக ஒப்புவிக்கிறார்களோ, அவரை நான் மணந்து கொள்கிறேன் என்றாள்.

இளைஞர்கள் அனைவரும் தம் வீடுகளுக்கு ஓடினார்கள். உண்ணவில்லை; உறங்கவில்லை. இரவும் பகலுமாய் அதை மனப்பாடம் செய்வதில் முனைந்தார்கள்.

அடுத்த நாள் காலையில் அவள் வந்தாள். பத்து இளைஞர்கள் அதை ஒப்புவித்து விட்டார்கள்!

"சரி. நானோ ஒருத்தி. எப்படி 10 பேரை மணப்பது? இன்னொரு 24 மணி நேரம் தருகிறேன். யார் அதன் பொருளைச் சரியாக விளக்குகிறார்களோ, அவரை நான் மணக்கிறேன். நான் சொல்வதை புரிந்துகொள்ளுங்கள்- ஒப்புவித்தல் எளிய காரியம். புரிந்து கொள்ளாமலே கூட ஒப்புவித்து விட முடியுமே," என்றாள்.

நேரமே இல்லை. ஒரு பகலும், ஓர் இரவுமே இருக்கிறது. தாமரை சூத்திரமோ நீளமானது. போதை வந்துவிட்டால் வேறு வழி ஏது? எதையும் செய்யத் துணிந்து விடுவார்கள். திரும்பி ஓடினார்கள். கடுமையாக அதை புரிந்துகொள்ள முயன்றார்கள் .மறுநாள் மூன்று பேர் மட்டுமே வந்து நின்றார்கள். அவர்களுக்கு பொருள் விளங்கிவிட்டது.

அழகி சொன்னாள், " மறுபடியும் சிக்கல் ஏற்பட்டு விட்டதே! எண்ணிக்கை என்னவோ குறையத்தான் செய்கிறது. ஆனால், சிக்கல் அப்படியே தான் இருக்கிறது.

300லிருந்து 3 என்பது பெரிய வளர்ச்சிதான். ஆனால், மூவரை நான் எவ்வாறு மணப்பது? ஒருவரைத் தானே மணக்க முடியும். ஆகவே, இன்னொரு 24 மணி நேரம் தருகிறேன்....

சூத்திரத்தைப் புரிந்து கொண்டதோடு நில்லாமல், அதன் சுவையை யார் உணர்ந்திருக்கிறார்களோ அவரை நான் மணக்கிறேன். நீங்கள் நன்றாகவே விளக்கினீர்கள். விளக்கம் அறிவுபூர்வமானது. நேற்றைவிடச் சிறப்புதான்.

ஆனால், விளக்கம் அறிவுபூர்வமானதாயிற்றே!தியானச் சுவை, சுவையின் மணம் இருக்க வேண்டாமா ?

அந்த தாமரை உங்களுக்குள் பிரவேசித்திருக்க வேண்டும். நீங்கள் தாமரையாக மாறியிருக்க வேண்டும். அதன் நறுமணத்தை நான் அனுபவிக்க வேண்டும். ஆகவே, நாளைக்கு பார்க்கலாம்: என்றாள்.

மறுநாள் ஒருவன் மட்டுமே வந்தான் ! அவன் சாதித்து விட்டான். அவள் ,அவனை ஊருக்கு வெளியில் இருந்த தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் .

அந்த வீட்டை அவன் அதற்கு முன் பார்த்ததில்லை . மிக அழகான வீடு அது . கனவு மாளிகை . அவளுடைய பெற்றோர் அவனை , வாசலில் வரவேற்றார்கள் . நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் . என்றும் சொன்னார்கள் .

அந்தப் பெண் உள்ளே போய்விட்டாள் . இளைஞன் அவளுடைய பெற்றோரிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தான் . பிறகு அவர்கள் , "அவள் உனக்காக உள்ளே காத்துக் கொண்டிருப்பாள் . இது தான் அவள் அறை," என்று ஒன்றைச் சுட்டிக் காட்டினார்கள் . அவன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான் . அங்கே யாருமே இல்லை !

அவன் அங்குமிங்கும் பார்த்தான் . ஆனால் , ஒரு கதவு, தோட்டத்திற்குச் செல்வது திறந்து கிடந்தது . ஒருவேளை அவள் தோட்டத்திற்குச் சென்றிருக்கலாம் என்று அதன் வழியாகப் பின்பக்கம் சென்றான் . அங்கே , பாதையில் அவளது காலடிச் சுவடுகள் தென்பட்டன . அவற்றைப் பின்பற்றி நெடுந்தூரம் போனான் . ஒரு மைல் நடந்த பிறகும் அவளைக் காணவில்லை .

தோட்டத்தின் எல்லையில் ஓர் ஆறு காணப்பட்டது . அவளது காலடிச் சுவடிகளும் மறைந்து விட்டன . இரண்டு தங்க மிதியடிகள் மட்டுமே காணப் பட்டன . அவை அவளுடைய காலணிகள் .

அவன் திகப்படைந்தான் . என்ன நேர்ந்தது ? அவன் திரும்பிப் பார்த்தான் .- தோட்டமும் இல்லை ; வீடும் இல்லை ; பெற்றார்களும் இல்லை . ஒன்றுமே இல்லை !

மறுபடியும் ஆற்றுப் பக்கம் திரும்பினான் . ஆற்றையும் காணோம் ! அந்த மிதியடிகளும் காணோம் ! அவன் வெட்ட வெளி வெறுமையில் நின்று கொண்டிருந்தான் !

அப்போது ஒரு சிரிப்புக் குரல் கேட்டது . அதைக் கேட்டதும் அவனும் சிரித்தான் . அவனுக்குத் திருமணம் நடந்து விட்டது !

அழகான பௌத்தக் கதை இது . அவன் வெறுமையை மணந்து கொண்டு விட்டான்! அதாவது , சூனியத்தை! இந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள எல்லா ஞானிகளும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் .

-----------------------

மேற்கூறிய கதை ஏதோ பைத்தியக்காரத்தனமாக தோன்றினால் ஆன்மீகத்தை புரிந்து கொள்ள நீண்ட காலம் ஆகலாம். மனம் கடந்த நிலையில் சூன்யமே மிஞ்சும், அதுவே மெளன நிலை. (மனம் வரைதான் மொழி), அதுவே முக்தி நிலை. அதுவே தூய நிலை. அந்த சூன்யப்பிரதேசத்தையே சித்தப்பிரதேசமாக சொல்லப்படுகிறது. அதனால் அந்த முக்திப் பெண்ணை மணந்து கொள்ள விரும்பு என்பதையே இந்தக் கதையும் தெரிவிக்கிறது.





वचनसलिलैर्हासस्वच्छैस्तरघõसुखोदरैः
वदनकमलैर्बाह्ये रम्याः स्त्रिायः सरसीसमाः । 
 इह हि बहवः प्रास्तप्रज्ञास्तटे{पि पिपासवो 
विषयविषमग्राहग्रस्ताः पुनर्न समुद्गताः ।।129।।

வசனஸலிலைர்ஹாஸ – ஸ்வச்சை ஸ்தரங்க ஸுகோதரை, 

வதனகமலைர் வாஹ்யோ ரம்யா: ஸ்திரிய: ஸரஸீமா: | 
இஹ ஹி பஹவ: ப்ராஸ்த ப்ரஞாஸ்தடே அபி பிபாஸவோ,
 விஷயவிஷமக்ராஹக்ரஸ்தா: புநர்ன ஸமுக்கதா: || 129 ||
 Women, like lakes, are only outwardly pretty to look at. As lakes look pretty with waves of clear water and lotuses, women, too, have lovely talk and laughter (like the waves of clear water), and charming faces (like the lotuses). As many foolish men, inflicted by thirst, enter the lakes from their banks and get swallowed by cruel water-animals, similarly, many ignorant men, inflicted by sensual-desire, go near the women and get killed by excessive lust. They are pushed into deplorable states of existence, like the infernal state of existence. It is extremely difficult to yet again get birth as a human being.
பெண்கள், ஏரிகளைப் போலவே, வெளிப்புறமாக மட்டுமே பார்க்க அழகாக இருக்கிறார்கள். தெளிவான நீர் மற்றும் தாமரைகளின் அலைகளால் ஏரிகள் அழகாக இருப்பதால், பெண்களுக்கும் அழகான பேச்சு மற்றும் சிரிப்பு (தெளிவான நீரின் அலைகளைப் போல), மற்றும் அழகான முகங்கள் (தாமரைகள் போன்றவை) உள்ளன. பல முட்டாள்தனமான ஆண்கள், தாகத்தால் தூண்டப்பட்டதால், தங்கள் கரைகளில் இருந்து ஏரிகளுக்குள் நுழைந்து கொடூரமான நீர்-விலங்குகளால் விழுங்கப்படுகிறார்கள், இதேபோல், பல அறிவற்ற ஆண்கள், சிற்றின்ப ஆசைகளால் தூண்டப்படுகிறார்கள், பெண்களின் அருகில் சென்று அதிகப்படியான காமத்தில் வீழ்கிறார்கள். அவ்வாறு இருப்பின் மோசமான நரக நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். மனிதனாக மீண்டும் பிறப்பது மிகவும் கடினம்.

------------------

மதம் சார்ந்த ஆன்மீகத்தில் எப்போதும் பெண்ணுக்கு இரண்டாம் இடம்தான். பல நேரங்களில் அந்த இரண்டாம் இடம் கூட தரப்படுவதில்லை. பெண் நற்காரியங்களைப் புரிந்தால், அடுத்த பிறவியில் ஆணாகப் பிறந்து மோட்சத்தை அடையலாம் என்கிறது சமணம். எதையும் தேர்ந்தெடுக்கக் கூடாது என்று ‘மத்திமம்’ பேசும் புத்தர் மனிதர்களில் ஏன் ஆண்களைத் தேர்ந்தெடுத்தார் என்று கேள்வி கேட்ட பிறகுதான் புத்தரின் சிறிய தாயார் கௌதமிக்கு ‘சங்கத்தில்’ இடம் கிடைத்தது.

சைவத்தில் காரைக்காலம்மையார் தனக்கான இடத்தைப் பெற ‘உடல் அழிப்பை’ நிகழ்த்த வேண்டியிருந்தது. இஸ்லாமிய மதத்தின் புனிதப் பிரதிகளும், விளக்கம் கொடுப்பவர்களின் ஆணாதிக்க மனநிலைக்கேற்பவே பொருள் கொள்ளப்படுகின்றன. எனவே மரபான ஆன்மீகத்தில், பெண் ‘உடல் அழிப்பு’ செய்த பிறகே உள்ளே நுழைய முடிகிறது.

சாதி, தீட்டு, வர்ணம் , புறச்சடங்குகள், அரச அதிகாரம், சமத்துவக் கல்வி என்று பல விஷயங்களில் முற்போக்காக இயங்குகிற சித்தர் மரபும் ‘பெண் உடல்’ என்கிற விஷயத்தில் மட்டுமே பிற்போக்கான பார்வையைக் கொண்டிருக்கிறது. ‘நட்ட குழி, ஊத்தைக்குழி, பொய்ப்பார்வை மாறாத புண்ணே நடுச்சங்கம், நாற்றப் பிண்டம்’ என்று எல்லா சித்தர்களும் பெண் உடலை தூற்றியிருக்கிறார்கள்.

மோட்சம் X காமம் என்கிற இரண்டு இலட்சியங்களுக்கு இடையிலான இடைவெளியில் சிக்கித் தவிக்கும் ஞானியர்களின் ஆண்மனம் ‘பெண் உடலை’ தன் ஆன்மீக முன்னேற்றத்திற்கான தடையாகக் கருதுகிறது.

ஆன்மீயர்களுக்கு காமம் அல்லது பெண் உடல் என்று சொன்னதுமே பரத்தையர்களின் நினைவு வந்து விடுவது விசித்திரமான ஆச்சர்யம். அவர்களின் மோட்சப் பாதைகளெங்கும் பரத்தையர்களே நந்திகளாகிப் படுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அதேசமயம் இதன் மறு அம்சமாக அவர்கள் தாய்மையைக் கொண்டாடுவார்கள். என்று இன்றைய பெண் உரிமைக்கு போராடுபவர்கள் வசைபாடுவதையும் கேட்கலாம்.

கும்பிடும் பெண் X கூப்பிடும் பெண் என்று இரண்டு சட்டகங்களை உருவாக்கி வைத்துள்ளார்கள் நம் ஞானியர்கள். பெண் உடல் – புகழ்மொழியும் வசைமொழியும் பெறுவதாகவே இவ்விலக்கியங்கள், மதங்கள் கருதிவந்துள்ளன. ஏன் அவ்வாறு…

------------

இதனை ஆராயுங்கால்….

பெண்பிறவிகள் இல்லா உலகத்தில் ஆண்கள் ஏது. பின்னர் கடவுள் நிலைக்கு யார் செல்வது. விடுதலையை யார் பெறுவது என்கிற கேள்வியும் பிறக்கவே செய்யும். அப்படியானால் பெண்ணை ஏன் இத்தனை கீழான பிறவிகளாக முனிவர்களும், ஞானியரும், சந்நியாசிகளும் கருதி ஒதுக்குகின்றனர் என்றால்…

யோகமுறையில் பிறவிச் சுழற்சிக்கு காரணம் ஆசையும், பெருவிருப்பமும் என்பதே அடிப்படை. எந்த ஒரு பொருளின் மீது உள்ளத்தில் ஏற்படும் அழுத்தமும், எழுச்சியுமே மனிதனை பெருவிருப்பதிற்கு ஆளாக்கி சலன புத்தியுடன் அலைய விடுகிறது. மண், பொன், பொருள் என பல விடயங்கள் அவ்வெழுச்சி எண்ணத்திற்கு காரணமானவை. அவையே பேராசையை தூண்டி மனிதனை பல வகையிலும் அலைந்து திரிந்து மடியச் செய்து வருவதை வரலாறுகள் பகர்கின்றன. அதில் ஆணும் பெண்ணும் ஒன்றுதான். ஆனால் ஆணுக்கும், பெண்ணுக்கும் இயற்கை உந்துதலில் தோன்றும் காமம், புணர்ச்சிக்காக எழுச்சி பெற்று விடுகிறது. அது பெரும்பாலான ஆணிடம் இச்சையாய் ஒட்டிக்கொள்கிறது. அதேசமயம் பெரும்பாலான பெண்ணிற்கு கருவுற்றபின், பிள்ளை பிறந்த பின் அடங்கிவிடவே செய்கிறது. ஆண் பிறவிகள் மட்டும் அந்த இச்சை எனும் போதையில் வீழ்ந்து விடுகிறது. பலமுறை மதுவை நாடுவது போல், மாதுவை தேடுகிறான். அதுவே அவனுக்கு சாந்தியை அளிப்பதான மாயையில் வீழ்ந்து விடுகிறான்.

யோகிகளும், ஞானிகளும், முனிவர்களும் அக்காமத்தை தியானத்தின் வழியே மன எழுச்சியிலிருந்து விலக்கி, உயிர் எழுச்சிபெறச் செய்து விடும் கலையில் இறங்குகிறார்கள். அக்கலையில் உயிர்சக்தியை உச்சந்தலைவரை ஏற்றி பேரானந்தத்தை பெற்றுத் திளைக்கும் யோகக்கலையை கற்றுக் கொள்கிறார்கள். பின்னர் தவவாழ்வில் தொடரும் போது அதுவே ஆன்மசக்தியாக, தவஆற்றலாக மாற்றும் வல்லமையை பெறுகின்றனர். அந்த தவ ஆற்றலே இருப்பில் நிரம்பி வழியும் போது விடுதலைக்கு வித்திடும் என்கிறது யோகக்கலை.

இப்பயிற்சி ஒரு பெண்/ ஆண் உடலை காமத்துடன் தீண்டாதவரை முழுப்பலனை அளிக்கவே செய்யும். அதுவே தவறி பெண்/ஆண் உடலை தீண்டிவிட்டால் காம இச்சை தூண்டப்பட்டு உயிர்ச்சக்தி சாந்தியடைந்து மூலாதாரத்திற்குள் அடங்கி விடும். பின் தவஆற்றலை பெற பல ஆண்டுகள் போராட வேண்டி வரும். யோகக்கலையில் புணர்ச்சிக்குப் பின்னும் ஆண்களே தொடரும் வாய்ப்பை இச்சமுதாயம் வழங்கி விட்டது. பெண் கருவுறுதல், பிள்ளையைப் பேணுதல் என்பதை கட்டாயமாக்கி விட்டது. ஆண் விருப்பினால் அவற்றுக்கு துணைபுரிவான் இல்லையே இல்லறத்தை எப்போது வேண்டுமானாலும் துறந்து துறவறம் எய்து விடுவான். இது கலாச்சாரத்தின் கட்டாயம்.

அதனால் பெண் சாதகர்களுக்கு தவஆற்றலை இழந்து தவிக்கும் தருணம் கிட்டுவதில்லை. ஆணுக்கு மட்டுமே இந்த யோகப்பயிற்சியில் தடையாய் இந்த மனபலவீனம் மடைமாற்றி விடுகிறது. ஆணால் இந்த காமத்தின் அனிச்சை செயலை கட்டுக்குள் கொண்டுவருவது பெரும் பிரயத்தனமாய் இருப்பதால் ஆன்மீயச் சாதகர்கள் பெண்ணுடலை வெறுக்கத் தொடங்கினார்கள். தீண்டத்தகாதனவாக கருதி ஒதுக்குவதை இயமமாக வரையறுத்து விட்டார்கள். அதே சமயம் பெண்துறவியர்களுக்கு தாய்மை உணர்ச்சி மேலோங்கச் செய்யும் ஆற்றல் இருப்பதனால் வாத்சல்ய பாவனையை ஆணிடம் வெளிப்படுத்தினர்.

அதனால் ஆணாய் பிறந்து யோகக்கலையை பயின்று விடுதலைப்பெற்றை விரைவில் பெறும் வாய்ப்பிருப்பதால் அச்சாதகர்கள் இதுபோன்ற வெறுப்பை தனது உணர்வில், செயலில் காட்டவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதனால் இந்த யோகக்கலையில் தனது பயிற்சி தோல்வியடையாமல் இருக்கவே யோகியர் பெண் உடலை வெறுக்கின்றனர். துவக்கத்தில் தான் இந்த எச்சரிக்கை உணர்வு. நான் உடலல்ல ஆன்மா என்ற நிலையை எய்தும் வரை இந்த இயற்கை அளிக்கும் காம உந்துதல் இடையூறாய் இருக்கவே செய்யும்.

சக்யத்வம் எய்திய சாதகர்களுக்கு; ஆண் என்ன, பெண் என்ன எல்லாம் ஓரினம் தான் என்ற நிலைப்பாட்டை அடைந்து விடுவர். பின்னர் முழுதுணர்ஞானம் பெற எந்தத் தடையும் இல்லை. விடுதலை பேறும் உடன் தழுவவே செய்யும். அதனால் யோக சாதனை முன்னேற்றத்திற்கு அச்சுறுத்தலாய் அமைந்த அந்த பெண் உடலை யோகியர் சம்யக்த்வம் பெறும் வரை வெறுக்கவே செய்வர்.





पापिष्ठैर्जगतीविधीतमभितः प्रज्वाल्य रागानलं 
क्रुध्दैरिन्द्रियलुब्ध्कैर्भयपदैः सन्त्रासिताः सर्वतः । 
हन्तैते शरणैषिणो जनमृगाः स्त्रिसछप्रना नि£मतं 
घातस्थानमुपाश्रयन्ति मदनव्याधध्पिस्याकुलाः ।।130।। 


பாபிஷ்டைர்ஜகதீ விதீதமபித: ப்ரஜ்வால்ய ராகாநளம், 

க்ருத்தைரிந்திரியலுப்த கைர்பயபதை: ஸம்த்ராஸிதா: ஸர்வதா: | 
ஹந்தைதே சரணைஷிணோ ஜனம்ருகா: ஸ்திரீஸத்மனா நிர்மிதம், காதஸ்தாநமுபாஸ்ரயந்தி மதனவ்யாதாதிபஸ்யாகுலா: || 130 ||
It is a pity that the hunters in form of excessively evil, cruel and frightening sense-pleasures have inflamed the fire of desire around men in this world. To escape excessive heat of this fire, men enter the slaughter-house – lust for women – built deceitfully by Cupid, the masterhunter, and are killed.
பெருந்தீமை, கொடூரமான மற்றும் அச்சுறுத்தும் வடிவங்கொண்ட வேடர்கள், வேட்டை ஸ்தலத்தை சுற்றி தீமூட்டி மிருகங்களை வெளியேற்றுவது போன்று இவ்வுலகில் புலன்கள் எனும் வேட்டைக்காரர்கள் ஆண்களைச் சுற்றி ஆசைஎனும் தீய உணர்வு நெருப்பை மூட்டுகின்றன. இந்த நெருப்பின் அதிகப்படியான வெப்பத்திலிருந்து தப்பிக்க ஓடும் விலங்குகள் போன்று, ஆண்கள் மன்மத பாணத்திற்கு இரையாவது போன்று கொலைக்களமான பெண்களிடம் தஞ்சம் அடைகிறார்கள். இது பெரும் துன்பத்தை அளிப்பது.

வேடுவன் மிருகங்களை வேட்டையாட சுற்றிலும் தீயை மூட்டுவார்கள். அத்தீயிலிருந்து தப்பிக்க வெறித்தபடி தலைதெறிக்க அவை ஓடும். அப்போது வேண்டிய விலங்கை அம்பினால் தாக்கி கொன்று விடுவான்.

அதுபோல… காம உணர்வு புலனின்ப வேட்டைக்காரனைக் கொண்டு ஆசையெனும் தீயை மூட்டிவிடும். அத்தீயின் வெப்பத்தை தணிக்க எண்ணி உலகியல் பொருள்கள் மற்றும் பெண்ணிடம் சுகம் கிடைக்கும் என்று அவ்வலையில் மாட்டி மடிகிறான். அதுவே பல பிறவிகளுக்கு வித்திடும் என்பதை முனிவர் இந்த பாடலில் உவமை நயத்துடன் தெரிவிக்கிறார். அதனால் கூப்பிடும் பெண்ணின் கவர்ச்சியில் ஆசை வைக்காதே என்று எச்சரிக்கிறார். காணும் பெண்ணினத்தை கும்பிடும் பெண்ணாக மதிக்கக் கற்றுக் கொள் என்பதை மறைபொருளாய் தெரிவிக்கிறார். எப்போதும் மன்மதபானத்துடன் அலையாதே என்று எச்சரிக்கையும் செய்கிறார். ஏனெனில் அது அதோலோகத்து நரககதியைத்தான்(அதோகதி) அளிக்கும் என்று அறிவுறுத்துகிறார்.

தனலிருந்து தப்பிக்க ஓடி நெருப்பில் விழ்ந்து விடாதே என்ற பழமொழியை பெண்ணாசைக்கு ஒப்பிடுகிறார். அதாவது மற்ற ஆசைகளை விட பெண்ணாசை மிகவும் மோசமானது. பிற ஆசைகளில் செல்வமோ, நிலமோ, பொருளோ சேரவாவது செய்யும். ஆனால் இந்த ஆசையில் அரச செல்வம், போகம், மற்ற சுகங்கள் அனைத்தும் ஒருவனை விட்டு அகன்று விடும் என்பதையும் மறைமுகமாக தெரிந்து கொள்ளலாம். ஜீவேந்திரன் கதையில் வரும் அவன் தந்தை கதாப்பாத்திரத்தின் வழியே அதைத் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் சில நூற்பாக்களில் பெண்களினால் தவஒழுக்கம் வீழ்ச்சியடையும் என்பதை வேறு கோணத்தில் தெரிவிக்கிறார்.





प्रियामनुभवत्स्वयं भवति कातरं केवलं 
परेष्वनुभवत्सु तां विषयिषु स्पफुटं ह्लादते 
मनो ननु नपुंसकं त्विति न शब्दत}चार्थतः 
सुधी: कथमनेन सन्नुभयथा पुमान् जीयते ।।137।।


ப்ரியாமனுபவத் ஸ்வயம் பவதி காதரம் கேவலம், 

ப்ரேஷ்வனு பவத்ஸு தாம் விஷ்யிஷு ஸ்புடம் ஹலாடதே | 
மனோ நனு நபும்ஸகம் த்விதி ந சப்ததச்சார்தத:, 
ஸுதீ: கதமனேன ஸந்நுபயதா புமான ஜீயதே || 137 ||
The mind can only get impatient for its beloved; it cannot enjoy her. Further, it takes delight in seeing others – the senses (indriya) – enjoying her. The mind is certainly neuter, in grammar and in meaning. How does the mind win over the intelligent man who is masculine, in grammar and in meaning?
மனம் தனது காதலியை விரும்பமுடியுமே ஒழிய உடலோடு கூடி மகிழ்ச்சியடைய முடியாது. மேலும், மற்ற – புலனுணர்வில் ரசிப்புடன் மகிழ்ச்சியடைகிறது. மனம் இலக்கணத்தாலும், அர்த்தத்தாலும் (இரண்டும்கெட்டான், ஆணும், பெண்ணுமற்ற) அலியாகும்.. (ஓழுக்கத்தில்) மன உறுதியும், அறிவும் மிக்க மனிதர்களின் அலியான மனம் எவ்வாறு (உறுதியான) மனிதனை வெற்றி கொள்ள முடியும்.

காம இச்சை என்பது மனம் சம்பந்தப்பட்டது. அதுவே மனதில் ஒரு எழுச்சியை உண்டு பண்ணுகிறது. அந்த இச்சையை எவ்வாறு வெல்வது எனும் ஒரு உபாயத்தை இந்நூற்பாவின் வழியே அளிக்க முயன்றுள்ளார் முனிவர்.

மனிதஇனம் பருவமடைந்ததும் ஆணும் பெண்ணும் இயற்கை உந்துதலால் இணைந்து இனத்தை பெருக்கம் செய்கின்றன. ஆனால் மனமோ அப்போது வெளிப்படும் உணர்ச்சியை இன்பமென சித்தத்தில் பதியச் செய்து, அவ்வப்போது இச்சையை தூண்டச் செய்து விடுகிறது. அதுவே(addiction) அவனை போதைக்கு அடிமையானவனைப் போல் மீண்டும், மீண்டும் இணைந்து இன்பம்துய்க்க வற்புறுத்துகிறது. பருவத்தில் காமத்தின் வழியே ஆட்கொண்டதால் காம இச்சை என்றே அழைக்கப்படுகிறது.

அதுவே பலரது தவவாழ்வை ஏற்க தடையாய் உள்ளது. தவவாழ்வில் ஒழுகுபவரையும் தவறச்செய்து கீழான நிலைக்கு தள்ளி விடுகிறது. காம உணர்வை ஒழுக்கத்துடனான கட்டுப்பாடுன் நடந்துகொள்ள விழைந்தாலும் மனதின் இச்சை, அன்றைய இன்பப்பதிவை விழித்தெழச்செய்து, அதை மீறவே செய்கிறது. அந்த இச்சையை இயல்பாக விலக்க ஞானியர் பல வழிகளிலும் அறிவுருத்துகின்றனர். சிலர் எச்சரிக்கையும் செய்கின்றனர்.

இங்கு ஆச்சார்யர் மனம் ஆணுக்கும் பெண்ணுக்குமான உறுப்புபேதங்களை முழுவதுமாக பெற்றிருக்க வில்லை, இருபாலருக்கும் பொதுவான உடலுடனான, இரண்டும்கெட்டான், அலி என்று கூறுகிறார். அதனால் புலன் இன்பத்தை ரசிக்க முடியுமே தவிர, அனுபவிக்க இயலாது. அவ்வாறு அனுபவிக்க இயலா அலியினால், உடலால் இணையும் இன்ப அனுபவத்தை எப்படி ஏற்க முடியும். அது ஒரு பிரேமையில், இல்லாத இன்பத்தை இருப்பதாக எண்ணி, மாயஉணர்ச்சியில் மகிழ்ச்சியடைகிறது. அதாவது பொய்யான இன்ப அனுபவத்தை பெறுவது போன்று தன்னையே ஏமாற்றிக் கொள்கிறது. பாசாங்கு செய்கிறது.

அவ்வாறான மனதின் ஏமாற்ற அனுபவ உணர்ச்சியை விலக்கும் அறிவை பெற்ற மனிதர்கள், முனிகள் அந்த போதையில் விழ்ந்து மடியமாட்டார்கள். அது ஒரு போலியான இன்பம், மகிழ்ச்சி என்று வெறுத்து ஒதுக்கிவிடுவர்; என்றவாறு காம இச்சையிலிருந்து விடுபட வழிகாட்டுகிறார் முனிவர் பெருமான். அதனால் மனதை அலிக்கு இணையாக உவமையில் ஒப்பிட்டு காமஇச்சையிலிருந்து மனித இனத்தை விலக அறிவுறுத்துகிறார்.





राज्यं सौजन्ययुक्तं श्रुतवदुरुतपः पूज्यमत्रापि यस्मात् 
त्यक्त्वा राज्यं तपस्यन् न लघुरतिलघुः स्यात्तपः प्रोह्य राज्यम् । 
राज्यात्तस्मात्प्रपूज्यं तप इति मनसालोच्य धीमानुदग्रं 
कुर्यादार्यः समग्रं प्रभवभयहरं सत्तपः पापभीरुः ।।138।।


ராஜ்யம் ஸெளஜன்யயுக்தம் ஸ்ருதவதுருதப: பூஜ்யமத்ராபி யஸ்மாத், த்யக்த்வா ராஜ்யம் தபஸ்யன்ன லகுரதிலகு: ஸ்யாத்தப: ப்ரோஹ்யா ராஜ்யம் | ராஜ்யாத்தஸ்மாத் ப்ரபூஜ்யம் தப இதி மனஸாSலோச்ய தீமானுதக்ரம், குர்யாதார்ய: ஸமரம் ப்ரபவபயஹரம் ஸத்தப: பாபபீரு: || 138 ||
In this world, sovereignty with just rule and austerity (tapa) with scriptural knowledge, both are venerated. Between these two, if one leaves sovereignty and accepts austerity, he becomes great. On the contrary, if one leaves austerity and accepts sovereignty, he becomes very low. This establishes that austerity is much more adorable than sovereignty. Thinking like this, the sin-fearing man must adopt wholesome and absolute austerity that removes the fear of worldly existence.
இந்த உலகில், ஆட்சிபுரிவது மற்றும் ஆன்ம ஆகம அறிவுடனான தவவாழ்வை கொண்ட இருவரும் மக்களால் வணங்கப்படுகிறார்கள். இந்த இருநிலை வாழ்வில் ஒருவர் அரசவாழ்வைத்துறந்து தப நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டால், அவர் மேலானவராக மாறுகிறார். மாறாக, ஆகம நடவடிக்கைகளை விலக்கிவிட்டு, மன்னராட்சியை ஏற்றுக்கொண்டால் அவர் மிகவும் தாழ்வடைகிறார். ஆட்சிபுரிவதை விட தபத்தில் ஒழுகுவது மிகவும் சிறந்தது என்பதை இது தெரிவிக்கிறது. அறிவுடையோனாய் இதை சிந்தித்து, பாபத்திற்கு அச்சமுள்ள மனிதன் பிறவி குறித்த அச்சத்தை நீக்கும் சிறப்பான மற்றும் முழுமையான தப ஒழுக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

உலகில் மக்களால் போற்றப்படுபவர்கள் நீதிநெறி தவறாத அரசரும், தவத்தில் ஒழுகும் முனிவரும் ஆவர். இவ்விரு வாழ்வுநிலையில் தவவாழ்வை மேற்கொள்வதே சிறந்தது என்று கூறுகிறார் ஆச்சார்யர்.

பலருக்கும் நன்மை செய்ய நீதிவழியில் ஆட்சி செய்த பல மன்னர்களும் பிற்காலத்தில் தவவாழ்வைத்தான் தேர்வு செய்கின்றனர் என்ற பல வரலாற்று நிகழ்வுகளை புராணங்களில் காணலாம். ஆட்சிபுரிவதை விட ஆன்மீகத்தில் முழு கவனத்தையும் செலுத்துவதே விவேகமான செயலாக கருதியவர்களே முழுதுணர்ஞானத்தை அடைந்துள்ளனர். அவர்களே பகவானாக வணங்கப்படுகின்றனர்.

ஆட்சியாளர்கள் போற்றப்படுபவர்களே. பலருக்கும் நன்மை செய்து புண்ணியத்தை பெற்றுத்திகழ்பவர்களே. ஆனால் அந்த புண்ணிய பலன் தேவனாக பிறந்து இன்பத்தை சிலகாலம் அளிக்கும். பின்னர் மீண்டும் பிறவிச் சுழற்சிக்குள் பலகதிகளில் சிக்கத்தவிக்க விட்டுவிடும்.

எவனொருவன் அணுவிரதத்தையும், குணவிரதத்தையும், சிக்ஷா விரதத்தையும் உறுதியுடன் கடைபிடிக்கிறானோ அவனே இல்லறத்தானாக கருதப்படுகிறான். அவனே பின்பிறவிகளில் நற்காட்சியாளனாக திகழ முடியும். அந்த நற்காட்சி யுணர்வே பிறவிகளை, கதிச்சுற்றிலிருந்து விலக வைக்கும். இருப்பினும் அணுவிரதத்தில் பொருள் விருப்பமின்மை போன்றவை தனிமனிதாக இல்லை என்பதால் குடும்ப நலன் கருதி பொருளீட்ட வேண்டியுள்ளது. அதுவும் மிகுபொருள் வேட்கையை மிஞ்சி விடாமல் இருக்கும்படி நெறிப்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறான கடின வாழ்வுமுறையில் குடும்பத்தலைவனுக்கு பலவகையிலும் அமைதியின்மையே ஏற்படுகிறது. அறவாழ்வு வாழ முயன்றாலும் பழியுடன் வாழநேர்ந்துவிடுகிறது. பலரையும் திருப்தி முடியாத நிலைக்கே தள்ளப்படுகின்றனர். எவ்வளவு ஆகம அறிவிருந்தும் அமைதியில்லா வாழ்வையே இல்லறத்தான் பெறுகிறான்.

இல்லத்தலைவனுக்கே இந்நிலை எனின், நாட்டை ஆள்பவனால் எவ்வாறு இந்த ஆணுவிரதத்தை முழுவதுமாக, துல்லியமாக கடைபிடிக்க இயலும். நாட்டுப்பாதுகாப்பு கருதி, மக்களை எதிரிகளிடமிருந்து காத்திட போரிட ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயம். அவ்வாறான வேளையில் அஹிம்சை விரதத்திற்கு பங்கமே விளைகிறது. கொடிய விலங்கிடமிருந்து குடிபடைகளைக் காக்க வேட்டையாடி, விலங்குகளை விரட்டி அடிக்க வேண்டியிருக்கிறது. மேலும் மக்களிடமிருந்து திறை வசூலிப்பதையோ, அச்செல்வத்தை சமூக நலனுக்காக செலவிட்டாலும் அதனை ஈட்டுவதை ஒரு எல்லையுடன் நிறுத்த முடிவதில்லை. பலநாடுகளை வென்று பராக்கிரமத்தையும், செல்வத்தையும் பெருக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.

மேலும் அரச போகத்தில் திளைப்பது போன்று தோன்றினாலும் பல வழக்குகளையும், சிக்கல்களையும் சிந்திப்பதிலேயே இனிமையான நேரம் கழிந்து விடுகிறது. நல்லொழுக்கத்தை, தவவாழ்வை பேணுவதற்கான நேரம் தொடர்ச்சியாக வாய்ப்பதுமில்லை. அவ்வாறான அரச வாழ்வில் இன்பத்தை முழுமையாய் நுகரும் தருணமோ மிக அரிதாகவும் உள்ளது.

அவ்வாறான அமைதியற்ற, பல பாவங்களை நிர்பந்தித்தில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் வாழும் அரசர்களும் அதனை வெறுக்கவே செய்கின்றனர். நல்லாட்சி புரிபவதாக பலராலும் போற்றப்பட்டாலும் அந்த புகழ் எவ்வகையிலும் தன் ஆன்மமுன்னேற்றத்திற்கு பயன்படப்போவதில்லை என்பதை உணர்ந்து, ஒரு நிலையில் துறக்கவே செய்கின்றனர். தீக்ஷை ஏற்று முனிவராகி தவவாழ்வில் ஒழுகுவதையே மேன்மையாய் கருதுகின்றனர்.

இருநிலைகளும் பல சிறப்புகளைக் கொண்டிருந்தாலும், பலரால் மதிக்கப்பட்டாலும் அரசர்களும் முனிவரின் கால்களில் விழவே செய்கின்றனர். அவரிடம் நல்லுபதேசங்களை பெறவே பணிகின்றனர். அதுவே அவர்களது மன அமைதிக்கும் உறுதுணையாய் அமைகிறது. நிரந்த அமைதி வேண்டி ஒரு நாள் அத்துறவிகளாக மாறவும் துணிகின்றனர். அவர்களே பல பிறவிகளையும் விலக்கி விடுதலைப் பேற்றினை பெறுகின்றனர்.

அதனால் அரச வாழ்வை அமைதியில் மிஞ்சிய தவ வாழ்வே மேன்மையானது என்று மாமுனிவர் அறிவுரை கூறி அனைத்து மக்களையும் நல்லொழுக்கப் பயணத்திற்கு அழைக்கிறார்.





पुरा शिरसि धर्यन्ते पुष्पाणि विबुधैरपि । 
पशचात्पादोअपि नास्प्राक्षीत् किम न कुर्याद् गुणक्षतिः ।।139।।

புரா சிரஸி தார்யந்தே புஷ்பாணி விபுதைரபி | 

பச்சாத்பாதோஅபி நாஸ்ப்ராக்ஷீத் கிம் ந குர்யாத் குணக்ஷதி: || 139 ||
The flowers which were earlier placed on the heads of the celestial beings, later on (when these lose their freshness), even the foot refuses to touch. It is right; what is not lost with the loss of merit?
முதலில் வானோர் தலையில் வைக்கப்பட்டிருந்த பூக்கள், பின்னர் (இவை வாடிவிடும் போது), யாருடைய கால் கூட தொட மறுக்கிறது. அது சரி; தகுதியை இழப்பதன் மூலம் என்ன இழக்கப்படவில்லை(இவ்வுலகில்)?

நற்குணங்கள் நிறைந்தவர்கள் போற்றப்படுகிறார்கள். தேவர்கள் சூடிக்கொள்ளும் மலர்களாக உள்ளார்கள். தீயோர்கள் மணமிழந்த மலாராக தெருவிலே வீசப்படுகிறார்கள் என்று இந்நூற்பாவின் வழியே தெரிவிக்கிறார்.

அதாவது நற்குணங்களை விலக்கி தீக்குணத்துடன் பரிணமிப்பவன் கிழான கதிக்கு செல்கிறான். இதை இல்லறத்தாருக்கும், தவவாழ்வுடையோருக்கும் பொருந்துவதாகவே கூறியுள்ளார்.

உலகில் ஒருவனது நற்குணமே வாழும்போது அவனுக்கு பெருமையும், மரணித்தால் நற்கதியை தீர்மானிக்கிறது.

குணம் என்றால் என்ன, அவற்றில் நற்குணங்கள் எவை. விலக்க வேண்டிய தீய குணங்கள் எவை என்பதை அன்றாடம் பல கட்டுரைகள் நமக்கு வழங்கவே செய்கிறது. அதில் இக்காலத்தில் பொருந்துவதை மட்டும் தேர்வு செய்யாமல், மறுமைக்கும் பலனளிக்கும் குணங்களை சமணம் பகுப்பாய்வு செய்ய பலவழியிலும் துணை செய்கிறது.

அது அறம் என்ற ஒன்றை தெரிவித்து அதன் வழியில் நடந்தால் இம்மையில் துன்பம் குறைந்தும், மறுமையில் இன்பம் நிறைந்த கதியும், ஒருகதியில் நிரந்த ஆனந்ததிற்கும் வகைசெய்யும் என்பதே நம் தத்துவங்களும், கொள்கைகளும், வாழ்வுநெறிகளும் வழங்கவே செய்கின்றன.

குணம் தான் ஒருவனுக்கு நற்கதியை வழங்கச் செய்யும் என்றால் சுபாவத்தில், மனப்பாண்மையில், அறிவில் என்னென்ன உள்ளன என்பதை தற்சோதனை செய்து அதில் நற்குணங்களை ஏற்கும் படி செய்தால் ஒரு பண்பாளனாக வாழ்வதோடு, நற்குணக்கோட்டையாய் மாறி பகவான் நினையை எய்த முடியும் என்பதே சமணம் அளிக்கும் ஆன்மீய வழிகாட்டல். சுபாவத்தில் சாத்வ, ரஜோ, தாமசம் இவற்றில் எது மேலோங்கியுள்ளது. என்பதை தற்சோதனை செய்து சாத்வ குணத்தை மட்டுமே இருப்பில் வைத்து மற்றவற்றை விலக்கும் பயிற்சிக்கு செல்வதையும்,

எண்ணத்தில் அவ்வப்போது வந்தமரும் சூழ்நிலைக்குணம் என்ன என்பதை ஆராய்ந்து மணப்பான்மையை மாற்றி அதில் அறவழியில் சிந்திக்கும் பயிற்சியை கற்றுத்தேர்வு செய்வதற்கு, ஆன்மீக அறிவில் நல்ல தரிசனம் காட்டும் ஆகம நூல்களையும், அதில் தெரிவிக்கும் வழிகாட்டுதல்களையும் அறிவாய் பதிவு செய்வதே நம் எண்ணம், சொல், செயல் மூன்றிலும் நற்குணமே ஆதிக்கம் செய்ய பயிற்சியளிப்பது தவவாழ்வு நெறியாகும்.

அதன் பாதையில் பயணிக்கும் சாதகர்களே முனிவர்கள், யதிகள், இருடியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களே தங்களை மேநிலைக்கு உயர்த்தி, தன்னிடம் வருபவர்களுக்கும் அறஉபதேசம் செய்து நற்கதிக்கு செல்ல உதவிடுபவர்கள். அவ்வாறான வழிகாட்டுதலை ஆத்மானுசாசனம் என்னும் இந்த அறத்தை கற்பிக்கும் நூல் வழியே ஆச்சார்யர் குணபத்ரர் அவர்கள் காட்டும் வழியில் பயணிக்க முனைவோமாக.

-----------------------

குணம், பண்பு: சுபாவம், மனப்பாண்மை, அறிவு போன்ற வற்றின் சரியான விளக்கத்தை புரிந்து கொள்ள பழகிக்கொண்டால் தான் அறம் எனும் இயல்பான குணத்தை நாம் அறிந்து கொள்ள இயலும்.

இந்த விஷயங்களில் அக்கால ஆன்மீகவாதிகளும், இக்கால உளவியாளுரும் பெரும்பங்கு வகிக்கின்றனர்.

ஆன்மீகவியலாளர் அடிப்படை சுபாவத்தில் உள்ள குணத்தை மாற்றத் துணைபுரியும் பயிற்சியை அளிப்பதில் வல்லவர்களாய் திகழ்கின்றனர். அதுவே நிரந்தமாக நம் இயல்பில் மாற்றத்தை அளிக்க வல்லது.

அதே சமயம் இன்றைய motivators அடிப்படை கட்டமைப்பை மாற்றும் பயிற்சியை அளிப்பதில் அழுத்தமில்லாது, தோற்றத்தில், நடத்தையில் வெளிப்படுத்தும் பண்பை அளித்து உலகில் வாழும் கலைக்கான பயிற்சியைத்தான் கற்பிக்கிறார்கள்.

சிக்மன் பிராய்ட் என்னும் அறிவியல் உளவியலாளர் தெரிவிக்கும் ஈத், ஈகோ, சூப்பர் ஈகோ என்ற உளக்கட்டமைப்பில்;

சூப்பர் ஈகோ பகுதியில் நற்குணவானாக மாயத்தோற்றத்தை வெளிப்படுத்தும் கலைக்கான பயிற்சியில் நிபுணர்களாக இக்கால motivators பெரும்பங்கு வகிக்கிறார்கள். அது ஒருநாள் படுகுழியில் வீழவே செய்யும். சுபாவ குணத்தை எள்ளளவும் மாறச்செய்யாமல், பண்புள்ளவனான தோற்றத்தை காட்டும் கலையை மட்டுமே கற்பிக்கிறார்கள்.

ஆனால் அடிப்படை ஈத், ஈகோ மற்றும் சூப்பர் ஈகோவையும் முழுமையான மாற்றி முழுமனிதனாக, நற்குணத்துடன் பரிணமிக்கும் பண்பாளனாக மாற்ற வகைசெய்யும் வாழுவுநெறியே சமணம் போன்ற தரிசனங்களின் முதற்நோக்கமாகும்.

அது மனித சமுதாயத்தில் பரஸ்பர உதவியுடனும், பிற உயிருடன் இணக்கத்துடன் வாழும் குணத்தையும் மறுபிறவி என ஒன்றிருந்தால் அதில் மேலான கதியை அளிக்கும் வல்லமையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

அதில் அறவழியே மேலானதான தெரிவிக்கிறது. அதனை குறளாசியர்

“அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் இந்நான்கும்’ என்ற நான்கு தீயகுணங்களை விலக்கினாலே இயல்பில் மாற்றத்தை தந்த தீமைகள் விலகி நற்குணங்கள் ஒளிவிடச்செய்யும் என்கிறார்.

ஆனால் இன்றைய உளப்பயிற்சியாளர்கள் அவை அப்படியே உள்ளேயே ஒருபுறம் இருக்கட்டும், தோற்றத்தை மட்டும் மாற்றும் கலையை கற்பிக்கிறேன் என்று கட்டணத்தையும் பெற்று, சமூகத்தில் தந்திரத்துடன் நடிக்கும் கலையை மற்றுமே கற்றுதரும் பயிற்சியாளர்களாக திகழ்கிறார்கள்.

அதனால் யாதொரும் பயனும் இல்லை. ஒருநாள் நீலச்சாயம் வெளுத்துவிடும் என்பதை புரிந்து ஆன்மீயர்கள் கூறும் அறவழியில் பயணிப்பதே தன்னளவிலும், சமுதாய அளவிலும், பிரபஞ்ச உயிர்களிடமும் அமைதியை நிலைநாட்டவே செய்யும் என்பதை உறுதியுடன் நம்பிக்கை வைப்பதே விவேகமானது.

---------------------

ஒட்டிக் கொண்டுள்ள கெட்டதை முழுவதும் விலக்க…..

உன் குணம், சுபாவம், நடத்தை ஆகியவற்றைப் பரிசீலனை செய்து, உன் நிலையை அறிந்து கொள்.

அவற்றுள் உன் நிலையை உயர்த்த முயற்சி செய்.

அதிகபட்ச முயற்சியைப் பூரணமாகச் செய்.

கடைசிக் கட்டத்தில் மனித குணத்தைத் தாண்டும் வாயிலாக பகவானின் குணங்களை ஏற்றுக்கொள்.

மனிதனுடைய உயர்ந்த குணங்கள் போற்றப்பட வேண்டியவை. தாழ்ந்த குணமுள்ளவர் உயர்ந்த குணங்களை நாடுதல் நல்லது. அதனால் அருளும் பெருகும். என்றாலும் உயர்ந்த குணங்களைப் பெற்றபொழுது, அவற்றைக் கடந்து சென்று கடவுள் குணங்களான பகவான் முறைகளை ஏற்றுக்கொண்டால், அருள் பூரணமாக, இடைவிடாது, எல்லா அளவிலும் செயல்படும்.





हे चन्द्रमः किमिति लाञछनवानभूस्त्वं 
तद्वान् भवेः किमिति तन्मय एव नाभूः । 
कं ज्योत्स्नयामलमलं तव घोषयन्त्या 
स्वर्भानुवन्ननु तथा सति नासि लक्ष्यः ।।140।। 


ஹே சந்த்ரம்: கிமிதி லாஞ்சனவானபூஸ்த்வம் 

தத்வான் பவே: கிமிதி தன்மய ஏவம் நாபூ: | 
கிம் ஜ்யோத்ஸ்நயா மலமலம் தவ கோஷயந்த்யா, 
ஸ்வர்பானுவந்நனு ததா ஸதி நாஸி லக்ஷய: || 140 ||
O moon! Why are you with the imperfection of dark spots? If you had to be with dark spots, why not all over? What use is your brightness which, in fact, amplifies the dark spots? Had you been with dark spots all over, you would have at least escaped the people’s gaze, like Rāhu.
ஓ சந்திரனே! இருண்டபகுதிகளுடன் அபூரணத்துமாய் ஏன் இருக்கிறாய்? நீ இருண்டபகுதிகளுடன் இருக்க வேண்டியிருந்தால், ஏன் எல்லாமும் இருளாக காட்டக்கூடாது? உண்மையில், ஒளியில் களங்கத்துடனான உனது பிரகாசத்தால் என்ன பயன்? நீ ராகுவைப்போல் முற்றிலும் இருளாய் காட்சியளித்திருந்தால் மக்களின் பார்வையில் இருந்து தப்பித்திருக்கலாம்.

இந்நூற்பா சந்திரன் தேய்பிறை, வளர்பிறை என மாறி மாறி தோற்றத்தை தருவதால் தான் பிரகாசத்தில் களங்கத்துடன் இருப்பதாய் காணப்படுகிறது. அபூரணமாயின்றி பூரண நிலவாய் பரிமளிக்கவில்லை என்றால் அமாவாசையாய் இருந்து விடலாமே என்று மக்களிடையேயுள்ள நல்லொழுக்கத்தை கடைபிடிப்பதிலான உறுதியின்மையை சுட்டி நகைத்து இந்த உருவக அணிக்கான நூற்பாவைத் தந்துள்ளார்.

ஒன்றுமறியா பாமரனாய் பல தவறுகளை செய்து வருபவர்கள்தான் பெரும்பாலார். அவர்கள் தவறிழைத்தனால் ஏற்பட்டது துன்பம் என்று தன்னை பார்த்துக் கொள்வதுமில்லை, அதற்காக கழிவிரக்கமும் கொள்வதில்லை. அவர்கள் ஒழுக்கத்தில் எது நல்லொழுக்கம், தீயஒழுக்கம் என்று வகைப்படுத்தி அதில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்து நடப்பதுமில்லை. அவர்கள் எந்த ஒரு லட்சியத்துடனும் வாழ்வதில்லை.

ஆனால் வாழ்க்கையில் ஆன்மீய நலனை வேண்டி புருஷார்த்தமான மானுடஇலட்சியத்துடனான வாழ்வை ஏற்க முடிவு செய்தவர்கள் தன்னிடம் காணும் யோகத்தில் (மன, வசன, காய செயல்பாட்டில்) தீயதை விலக்கி நல்லதை மட்டுமே கைக்கொள்ள உறுதியேற்பர். ஆனால் நடைமுறையில் ஒவ்வொரு செயலாற்றலிலும் சீர்தூக்கி நல்லதையே கைக்கொள்வதாக அமைந்தாலொழிய ஆன்ம முன்னேற்றத்தை இப்பிறவிக்குள் அடையமுடியாது என்ற வழிகாட்டுதலை இந்நூற்பாவில் அளிக்க முன் வந்துள்ளார் ஆச்சார்ய குணபத்ரர்.

அவ்வாறில்லாமல் ஒரு விஷயத்தில் நல்லொழுக்கத்துடனும், வேறொன்றில் எச்சரிக்கையுணர்வின்றி தான்தோன்றியாயும், மிருகத்தைப்போன்று செயலாற்றி விட்டு பின்னர் வருந்துவதால் எந்த ஒரு லாபமும் இல்லை. அதாவது முழுமனதுடனும் உறுதிப்பாட்டுடனும் தவவாழ்வை ஏற்கவில்லை என்றும். பரிச்சார்த்த முறையில் ஏற்பதல்ல ஆன்மீக ஒழுக்கம் என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார் முனிவர் பெருமான்.

அதனால் தவவாழ்வை ஏற்கத்துணிந்தவர்கள் அவ்வொழுக்கத்தில் களங்கம் ஏதும் வராமல் ஆராய்ந்து அறிந்து, எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவேண்டும் என்பதை சற்று நகைச்சுவையாய் சந்திரன் தேய்ந்து - வளர்வதை உருவகப்படுத்தியுள்ளார்.

முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு என்பது போன்று தவசி என்றபின் ஒழுக்கத்தில் களங்கம் ஏற்படுவது வீண், வேடதாரியாய் தோற்றமளிப்பதில் என்ன பயன் என்றே இடித்துரைக்கிறார். இது இக்காலத்திலும் தன்னை ஆன்மீகவாதிகளாக கூறிக்கொள்ளும் பெரும்பாலோருக்கு பொருந்தவே செய்யும். ஆத்மானுசாசனம் படித்தால், எழுதினால் போதாது அதில் கூறியபடி பாவனையில் மாற்றத்தை கொண்டுவருவதே நலம் பயக்கும் என்கிறார்.

அதனால் ஆன்ம முன்னேற்றம் என்பது தொடர்ச்சியாய் வாழ்நாளில் ஒவ்வொரு அற வாழ்வுநெறியைக் கடைபிடிப்பதில் தான் அடங்கி உள்ளது. மாறாக காலையில் முழுமையாய் ஒழுகுவதும், பின்னர் அதில் தேய்ந்து ஒழுங்கீனமாய் மாறுவதும், மாலையில் மீண்டும் முழுமைக்கான பயிற்சியைத் தொடர்வது பாசாங்காகத்தான் இருக்குமென்று இடித்துரைத்துள்ளார்.

முற்றும் துறந்தவனும், முழு அயோக்கியனும் சீக்கிரமே முக்தியடைவர் என்பதை புரிந்து கொள்ளலாம். அவர்களிடத்தில் அவரவர் இலட்சியத்தின் யோகத்தில் தீவிரம் இருக்கும். அயோக்கியன் செல்லும் பாதையை சற்று நல்லொழுக்க மார்கத்தில் திருப்பிவிட்டால் அதில் தீவிரம் காட்டி முற்றும் துறந்தவனாய்த்தான் சீக்கிரமே மாறிவிடுவான் என்பதே நிதர்சனம்.

அதனால் இரண்டும்கெட்டான் நிலையில் தேய்ந்து, வளர்வதாய் இல்லாமல் முழுஅளவு பிரகாசத்துடன் ஆன்மஞானஒளியுடன் வாழ்வதே முக்திக்கு வழிவகுக்கும் என்பதை சந்திரனைப்போல தேய்ந்துவளராமல், சூரியனைப்போல் என்றைக்கும் தோற்றத்தில் முழுப்பிரகாசத்துடன் தவவாழ்வின் யோகமுறையில் முழுமையாய் ஒழுகுவதே ஆன்மமுன்னேற்றத்தை சீக்கிரம் அளிக்கும் என்ற தெளிவினை பெற வேண்டும்.





दोषान् कांशचन तान् प्रवर्तकतया प्रच्छाद्य गच्छत्ययं
सार्ध तैः सहसा म्रियेद्यदि गुरुः पशचात्करोत्येष किम् ।
तस्मान्मे न गुरुर्गुरुर्गुरुतरान् कृत्वा लघूंशच स्पुफटं
ब्रूते यः सततं समीक्ष्य निपुणं सोअयं खलः सद्गुरुः ।।141।।



தோஸான் காஞ்ச்சன தான்ப்ரவர்தகதயா ப்ரச்சாத்ய கச்சத்யயம்,
ஸார்த தை: ஸஹஸா ம்ரியேத்யதி குரு: பச்சாத் கரோத்யேஷ கிம் |
தஸ்மான்மே நகுருர்குருர்குருதரான் க்ருத்வா லகூஞ்ச்ச ஸ்புடம்,
ப்ருதே ய: ஸததம் ஸ்மீக்ஷ்ய நிபுணம் ஸோஅயம் கல: ஸத்குரு: || 141 ||
If the preceptor (guru), in order not to disturb the strength of his order or due to ignorance, covers up certain faults of the disciple, and if the disciple dies with those faults, what then can he (the preceptor) do? He fails to do good to his disciple. The disciple, therefore, reckons that the preceptor who covers up his faults is not the true preceptor. He feels that the wicked preceptor, who keeps a constant and sharp eye even on his minor faults and proclaims these with exaggeration, is his true preceptor (guru).
குரு, சீடனின் தவறுகளை, தனது மேலாளும் வலிமையை கூறி சீடனுக்கு ஆணையிடுதல் கூடாது என்பதற்காக, தவறை கவனாமாய் கண்டு சுட்டாமல் இருந்தால் பின்னர் அவரால் எவ்வாறு சரிசெய்ய முடியும்? அக்குருவானவர் தனது சீடருக்கு நல்லது செய்யத் தவறிவிட்டார். ஆகையால், சீடனது தவறுகளை மூடிமறைக்கும் குரு உண்மையான குரு அல்ல என்று கருதப்படுகிறார். சீடனது சிறிய தவறுகளைக்கூட கூர்மையாய் கவனித்து, கண்டித்து சரி செய்பவரே உண்மையான குரு.

ஆன்மீகக் குரு என்பவர் சீடனை உற்சாகப்படுத்த வரவில்லை. அவனுக்கு ஆறுதல் சொல்வதும், தைரியப்படுத்துவதும், ஊக்குவிப்பதும் அல்ல அவர் பணி. சீடன் அமைத்து வைத்திருக்கும் சில எல்லைகளைத் தகர்த்து எறிவதுதான் அவர் நோக்கம். சிக்கியிருக்கும் பலவற்றில் இருந்தும் அவனை விடுவித்து சுதந்திரம் தருவதே அவர் விழைவு. கட்டுண்டு பாதுகாப்பாக இருப்பதைவிட சுதந்திரமாக ஆபத்துகளை எதிர்கொள்வதே உயர்ந்தது என்ற சிந்தனையை தருபவர் சிறந்த குருவானவர்.

அதனால் அவர் எந்த நேரமும் அவனை தன் கண்காணிப்பிலேயே வைத்திருப்பார்கள். எப்படி என்றால்…

நீச்சல் கற்றுக்கொள்வது போலத்தான்...

நீச்சல் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் என்ன செய்கிறார்...

நீரில் அவனைத் தள்ளிவிடுகிறார். அவனோ ஆரம்பத்தில் முறையற்ற வகையில் கையைக்காலைத்தட்டி நீந்துவான். மூழ்கி மூச்சு முட்டவும் செய்யும். அதற்காக அவர் வருந்தாமல் சில வழிமுறைகளை கற்றுக்கொடுத்து, அதை முறைப்படுத்துவார்.

ஒரு முறை நீச்சலை கற்றுக் கொண்டுவிட்டால், பயிற்சியே செய்யாமல் இருந்தாலும், யாரும் 50 வருடங்கள் கடந்தாலும், நீச்சலை யாரும் மறந்து விடுவதில்லை...

கற்றுக்கொண்டவனை திடீரென நீரில் தள்ளிவிட்டால், இயல்பாக நீந்தத் தொடங்கிவிடுவான். மறந்துபோய்விட்டேன் என்று சொல்வதில்லை. அவனுக்கான குரு சீடனுக்கு ஆபத்து என தெரிந்தே, அதிலிருந்து மீள்வதை பழக்கி விட்டார் என்பதே உண்மை.

ஒரு ஆன்மீக குருவின் பணியும் இது போலத்தான். தவவாழ்வில் தள்ளி விடுவது. அவன் சரியாக பயிற்சியை கவனிக்கிறானா, ஒழுங்காக கடைபிடிக்கிறானா என்றளவில் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டியது அவசியமாகிறது. இல்லாவிடில் அச்சீடன் பிறவிக்கடலில் நிந்தத்தெரியாமல் முழ்கி விடுவான்.

தியானத்தில் அமர்த்திவிடுவது. ஆரம்பத்தில் அவன் தடுமாறும்போது சில யுக்திகளைத் தருவது, பயிற்சியில் உடனுக்குடன் தவறுகளைத் திருத்துவது... குருவின் பணியாகும்.

எப்போது முழுவதுமாய் கற்றுக் கொண்டான் என்பதை உணர்கிறாரோ அவனுக்கு தான் தேவையில்லை என்பதை கூறி விடுவார். பின்னர் இருவரும் ஒரே பயிற்சியை எவருடைய துணையுமின்றி செய்திடுவர். சீடனும் குருவாகி சம அந்தஸ்த்தை பெற்று விடுகிறான்.

அதுவரை குருவின் குருவின் கண்காணிப்பு முழுஅளவில் தேவை.

இதனையே இந்நூற்பாவில் குரு தவறுகளை கண்டிக்காமல் விட்டு விட்டால் சீடன் மரணத்திற்கு பிறகு துர்கதிக்கு போகும் வாய்ப்புண்டு என்கிறார். அதனால் உண்மையான குரு சீடன் வருத்தம் அடைந்தாலும் அவனை தடிகொண்டு கண்டிப்பவராய் திருத்தம் செய்து ஆன்ம பயிற்சியில் மேனிலைக்கு வளர உதவிட வேண்டும் என்று கூறுகிறார்.





विकाशयन्ति भव्यस्य मनोमुकुलमंसवः ।
रवेरिवारविन्दस्य कठोराशच गुरूक्तयः ।।142।।



விகாசயந்தி பவ்யஸ்ய மனோமுகுளமம்சவ: |
ரவேரிவார விந்தஸ்ய கடோராச்ச குரூக்தய: || 142 ||

Even harsh words of the preceptor blossom the heart of the worthy disciple just as even the intense rays of the sun blossom the lotus-bud.
சூரியனின் ஆழ்ந்த கதிர்கள் கூட தாமரை-மொட்டை மலரவைப்பது போலவே, குருவின் கடுமையான வார்த்தைகள் கூட தகுதியான சீடரின் இதயத்தை மலர்செய்யும்.

அடியாத பிள்ளை படியாது’ ‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்’ என்கின்ற பழமொழிகள் குழந்தைகளை கண்டித்து வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. ஓர் குழந்தை நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் எதிர்பார்க்கின்ற வகையில் நடந்து கொள்ளாத போதும் குழந்தையின் நடத்தை நமக்கு மகிழ்ச்சியை தராத போதும் அந்நடத்தைகளை வெளிக்காண்பிக்கக்கூடாது என குழந்தைகளை கண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அக்காலத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை ஏசுவதும், பேசுவதும் உருட்டி மிரட்டி வளர்ப்பதும், அடித்து துன்புறுத்துவதும் பொதுவாக காணப்படும் விஷயங்கள்.

பிறர் பொருளை திருடி வைத்துக் கொள்வது, பிற குழந்தைகளை அடிப்பது, கெட்ட வார்த்தைகள் பேசுவது, பொய் பேசுவது, புறங்கூறுவது போன்றவைகள் கெட்ட நடத்தைகளின் வகையில் அடங்கும். இக்கெட்ட நடத்தைகளை குழந்தை எங்கேயிருந்து பழகிக் கொண்டது? இவைகளை கண்டித்து திருத்த வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உண்டு. அதுவே பின்னாளில் அது அமைதியுடன் வாழ வழிவகுக்கும். அனைவருடனும் சகஜமாக வாழ வழிவகை செய்யும். இல்லையே அத்தீயோர் பலருடன் இருந்தாலும் தனித்து விடப்படுவார்கள்.

அதனால் சிறுவயதில் அவர்களின் எதிர்மறை உணர்வுகளை மாற்றும் முயற்சியில் பெற்றோர்கள் கண்டிப்பு மற்றும் தண்டனை யளித்தலில் இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுகிறது. அவ்வாறு இல்லாவில் சமூகத்தினரால், காவல் துறையினரால் தண்டனையும், சிறையும் தரவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவர்களது தனிமனித சுதந்திரம் பெருமளவில் பாதிப்பை அடைகிறது.

அதுபோன்ற அக்கறையில் தான் குருவும் தனது சீடர்களை கண்டிப்புடன், தண்டனை யளித்து அவர்களது எதிர்மறை உணர்வுகளை நீக்கி, நல்லொழுக்கத்தை சீக்கிரமே தருவிக்கின்றன. அதனை உணர்ந்த சீடர்களும் அவரிடம் மரியாதையாய் நடந்து தங்களின் அணுகுமுறையை மாற்றி கொள்கின்றனர்.

இந்த நூற்பாவில் குறிப்பிட்ட குருவின் கண்டிப்பை போன்றே ஒரு பெளத்த மடத்தின் குருவினது பயிற்சிமுறையைக் காண்போம்..

-------------------

மூன்று வருடங்கள் ஆகிவிட்டது, இன்னமும் தியானம் கற்று தரவில்லையே என்று கேட்டான் சீடன். ஜென்குரு, இன்றில் இருந்து உனக்கு நான் தியானத்தை சொல்லித் தருகிறேன். என்றார்.

அவர் மிகவும் வேறுபட்ட வித்தியாசமான வழியில் கற்றுத் தர ஆரம்பித்தார். அந்த இளைஞன் புத்தமத சாரங்களை படித்துக் கொணடிருக்கும்போது பின்புறமாக வந்து மரக்கத்தியினால் மிக பலமாக அவனை தாக்கினார். அவர் மிகவும் அமைதியான மனிதர். அவருடைய காலடி ஒசையை கூட அனால் கேட்க முடியாது. திடீரென, எங்கிருந்தோ அந்த மரக்கத்தி அவன் மீது இறங்கும். நீங்கள் ஏன் என்னை தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனக் கேட்டான்.

குரு இதுதான் நான் கற்றுக்கொடுக்கும் முறை. கவனமாயிரு, தன்ணுணர்வோடு இரு, அப்போது நான் உன்னை அடிப்பதற்கு முன் நீ நகர்ந்துகொள்ளலாம். அதுதான் ஒரே வழி என்றார்.

தப்பிக்க வேறு வழியில்லை. அந்த இளைஞன் கவனமாக இருக்க ஆரம்பித்தான். அவன் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாலும் சுதாரிப்பாக கவனமாக இருந்தான். மெதுமெதுவாக இரண்டு மூன்று வாரங்களுக்குள்ளாகவே அவன் குருவின் காலடி ஒசையை கேட்க ஆரம்பித்தான்.

மூன்று மாதங்களுக்குள் குருவால் அவனை ஒருமுறை கூட அடிக்க முடியாமல் போய்விட்டது. அவன் தூக்கத்தில் கூட கவனமடைந்தான். இருபத்தி நான்கு மணி நேரத்தில் அவர் எப்போது முயற்சி செய்தாலும் அவன் என்ன செய்துகொண்டு இருந்தாலும் குதித்து தப்பித்து விடுவான்.

பின் குரு, நீ தியானிப்பவனாக மாறி விட்டாய். நாளை காலை நீ புறப்படலாம். என்றார்.

நாளை காலை அவன் புறப்படப் போகிறான். அன்று குரு மரத்தடியில் அமர்ந்து புத்தமத சூத்திரத்தை படித்துக் கொண்டிருந்தார். அவன் மனதில், நான் போவதற்கு முன் ஒருமுறை இந்த குருவை அடிக்க வேண்டும், என்று தோன்றியது. இந்த எண்ணம் பலமுறை அவன் மனதில் ஓடியது. இதுதான் கடைசி சந்தர்ப்பம் என எண்ணினான்.

அதனால் அவன் போய் மரக்கத்தியை எடுத்துவந்து ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டான். அப்போது குரு, நிறுத்து எனக் கூறினார். அவர் அவனை பார்க்கக் கூட இல்லை. இங்கே வா. நான் வயதானவன், என்னை அடிக்க வேண்டுமென்ற எண்ணம் நல்லதல்ல அதிலும் நான் உன் குரு.. என்றார்.\

இளைஞனுக்கு மிகவும் ஆச்சரியமாகி விட்டது. ஆனால் நான் எதையும் சொல்லவில்லையே எனக் கேட்டான்.

குரு, ஒருநாள் உண்மையிலேயே நீ மிகவும் விழிப்புணர்வு அடையும்போது சொல்லாததும் கேட்கும். முன்பெல்லாம் என்னுடைய காலடி ஓசையை உன்னால் கேட்க முடியாது. பின் கவனமாக இருந்து அவற்றை கேட்க ஆரம்பித்தாய். அதைப்போல ஒருநாள் உனக்கு தெரியும். உனது மனது அமைதியாக மெளனத்தில் இருக்கும்போது உச்சரிக்காத வார்த்தைகளையும் உன்னால் கேட்க முடியும். அப்போது நீ ஒரு கண்ணாடி போல மாறிவிடுவாய். அதனால் பிரதிபலிப்பாய். அவ்வளவே. என்றார்.

சமணமும் அதுதான் மனதின் இயல்பாய் அமைய வேண்டும் என்கிறது. ஏனென்றால் ஆன்மாவுக்கு எதிர்மறையாய் புரிந்து கொள்ள தெரியாது. எதையும் கண்ணாடிபோல் உள்ளது உள்ளபடி காணும் பண்பைக் கொண்டது. அதுபோல மனமும் தனது திரிபுணர்விலிருந்து விடுதலை பெற்றுவிட்டாலே ஆன்மநோக்கு எனும் நிச்சயநோக்கு வந்துவிடும். அதுவே விடுதலைப்பேற்றை அளித்துவிடும்.

குரு சீடரின் தன்மை அறிந்தே அவரை கடைத்தேறும் வழிமுறைகளைத்தருவர். அவரே பூஜிக்கத்தக்கவர் என்கிறார் முனிவர் பெருமான்.





लोकद्वयहितं वक्तुं श्रोतुं च सुलभाः पुरा ।
दुर्लभाः कर्तुमद्यत्वे वक्तुं श्रोतुं च दुर्लभाः ।।143।।



லோகத்வய ஹிதம் வக்தும் ஸ்ரோதும் ச ஸுலபா புரா |
துர்லபா: கர்த்துமத்யத்வே வக்தும் ஸ்ரோதும் ச துர்லபா: ||143||

In earlier days, the expounders of the ways of the dharma – beneficial for this life as well as for the future – and the listeners were easily found; those who adopted the prescribed conduct were available but scant. But today, neither the expounders nor the listeners are easily found; to find those who adopt the prescribed conduct is a far cry.
முற்காலத்தில், இம்மைக்கும் மறுமைக்கு பயன் தரும் அறத்தின் வழிகளை விவரிப்பவர்கள் மற்றும் கேட்போர் எளிதில் காணப்பட்டனர்; பரிந்துரைக்கப்பட்ட நடத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கிடைத்தாலும் குறைவாகவே இருந்தனர். ஆனால் இன்று, விளக்கமளிப்பவர்களோ அல்லது கேட்பவர்களோ எளிதில் காணப்படவில்லை; பரிந்துரைக்கப்பட்ட நல்லொழுக்கங்களை கடைப்பிடிப்பவர்களைக் கண்டுபிடிப்பது மிக அரிதாகி விட்டது.

அறச்சிந்தனையில் தடம்புரண்ட நடத்தையினர் அவர் காலத்திலும் உள்ளனர் என்பதை இப்பாடலின் வழியே நாம் உணர முடிகிறது. ஏன், அறம் முழுவதுமாக அழியும் ஆபத்தை அறிந்ததனால் தான் மஹாவிரரும் கானகம் சென்று தவம் செய்து பலதெளிவுகளை பெற்று அறத்தை மீண்டும் இப்பூவுலகில் நிறுவிடும் வழிகளை போதிக்கத் துவங்கினார். அவர் காலத்தினது மறுமலர்ச்சி குணபத்ரர் காலத்தில் சற்று சரிவினை பெற்ற வரலாற்றை இந்நூற்பா நமக்கு தெரிவித்துள்ளது.

அதனால் அறத்தை மீண்டும் வலுவாக நிலைநாட்ட வேண்டிய கட்டாயச்சூழல் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகிறது. தீக்காலம் என்று சொல்லி பலரும் அறத்தை விலக்கினால் விருப்பங்கள் நிறைவேறும் என்ற தவறான புரிதலில் பயணிக்கத்தொடங்கி விட்டனர் பலரும். அது மிகவும் தவறான நம்பிக்கை. அறம் எக்காலத்திற்கும் பொருத்தமானதே என்ற தெளிவினால் தான் ஆச்சார்ய பெருமகனார் போன்றவர்கள் ஆத்மானுசாசனம் போன்ற அறநூல்களை நமக்கு அளித்த வண்ணம் வாழ்நாள் முழுவதுமாக பயணித்து வாழ்ந்து மடிந்துள்ளனர்.

நம்மை அறவழிக்கு மடைமாற்றம் செய்து பெரும் துன்பத்தில் மாட்டி விடுவதால் அவர்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது. அவர்கள் மூன்று பெரும் ஆசைகளையும் விட்டு விலகி வாழும் தவவாழ்வில் ஒழுகுபவர்கள். அவர்கள் மட்டும் அமைதியாய் அவ்வாறு வாழ்ந்து பேரின்பத்தை அடைந்து முக்தியுலகில் உறைந்து விடலாமே. ஏன் சக மனிதர்களும் கடைசேர நல்வழி கூறவேண்டும். அவர்களின் ஜீவாபிமானத்தில் மனிதாபிமானம் மேலோங்கி யிருந்துள்ளது என்பதே காரணமாய் இருந்திருக்க வேண்டும்.

மனிதனுக்கு உபதேசம் செய்தால் மட்டுமே புரிந்து, அறிந்து அதில் ஆழ்ந்து கடைத்தேற முடியும் என்பதை நன்குணர்ந்தவர்கள் முனிவர்கள். அவர்களால் திவ்யத்தொனி போன்ற உலகப்பொது மொழியை உருவாக்கும் ஆற்றல் இல்லை. அதனால் மனித வாழ்வு கடைத்தேற அன்றைய வழக்கில் மேலான இலக்கணத்துடனும், படித்தால் எளிதில் புரிந்து கொள்ளும் வகைப்பாட்டிலுள்ள மொழியில் அறச்செய்திகளை கூறியும், எழுதியும் அளித்து வந்துள்ளார்கள். அவர்களின் இந்த பெருமுயற்சிக்கு காரணமே நம் அனைவரின் வாழ்வு உய்ய வேண்டும், இம்மையில் துன்பம் நீங்கி, மறுமையில் மேலான கதியில், மேம்பட்ட இன்பத்தை பெறும் ஜீவனாய் பிறப்பெடுக்க வேண்டும் என்ற அவாவே விஞ்சியுள்ளது. நற்சிந்தனைகளை தூண்டும் நற்கருத்துக்களையும், அதன் வழியே நாமே ஒழுக்கத்தை தேர்வு செய்து திணறாமல், அவர்களே அச்சிந்தனைக்கான நல்லொழுக்கத்தையும் வழங்கியுள்ளனர் என்ற பேருண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் இது போன்ற அறிவியல் ஊடகங்களை நல்ல முறையில் பயன் படுத்த வேண்டுமாயின் நல்லறக் கருத்துக்களை, நல்லொழுக்க வாழ்வுநெறிகளை வழங்குவதான பிரசாரங்களையும், அவற்றை படித்து பயன் பெரும் பவ்யர்களாக மாறுவதே நாம் அனைவரும் கடைத்தேறும் வழியாகும். அதனை நீக்கி இக்காலத்தில் தவறான பாதையில் பயணித்து அறமற்ற கருத்துக்களை சேகரிப்பதில் வல்லவராயும், அவ்வழியில் திறமையுடன் செயலாற்றும் தந்திரசாலிகளாக மாறும் பயிற்சிகளில் ஈடுபடாமல் இருப்பதே அறவழிச் செல்லத்தூண்டுபவன.

அறம் என்றைக்கும் தானே அழிய விரும்புவதில்லை. அதுவே ஆறு திரவியங்களின் இயல்பு. அதனை அழிக்கும் அமானுஷ்யம் இதுவரை இல்லை, இனியும் பிறக்கப்போவதுமில்லை என்ற வலுவான பேருண்மையை அளிப்பதே சமண தத்துவமும், கொள்கைகளும் ஆகும். அந்த பேருண்மையில் நம்பிக்கை வைப்பதே சக்யக்த்வம் எனும் நற்காட்சியை நமக்களிக்கும். அக்காட்சியின் வழிக்கான நல்ஞானத்தை வளர்ச்சியடையச் செய்து நல்லொழுக்கத்தில் ஈடுபடுவதே நற்தீக்காலமோ, தீநற்காலமோ, தீக்காலமோ, தீத்தீக்காலமோ என்ற வேறுபாடுகளை களைந்து என்றைக்குமே நல்லகாலமாக, நல்லநல்லகாலமாக மாற்றும் வலிமை உள்ளது. இது இந்த பாரதபூமியில் வாழும் பவ்யர்களின் கையில் தான் உள்ளது. இந்த ஆறுகாலப் பகுப்பு காலமே தன்னைப் பகுத்து தவறான சிந்தனைகளை மனிதர்களிடத்தில் தூண்டுவதில்லை. அவ்வாறுதான் தவறாக அனைவரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

காலத்திரவியம் ஏற்ற இறக்கமற்றது. என்றும் தன் இயல்பில் ஒரு ஒழுங்கில் பயணிப்பது. அது என்றைக்கும், எக்காலத்திலும் இம்மியளவு கூட அறவழி இயல்பில் மாறாது செயல்படுவது.

அதனால் மனிதனின் மனோபாவமே, தீயபாவனையே வினைப்புற்கலங்களை சேகரிக்கும் விழைவுக்கு காரணமாகி இந்த ஏறுகால, இறங்குகால கலாச்சாரத்தின் பண்பாட்டை வகுக்க வேண்டிய கட்டாயத்தை பகவானுக்கு அளித்து விட்டது. அதனை மாற்றும் முயற்சி நம்மிடையே தான் முழுவதுமாக அளிக்கப்பட்டுள்ளது என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

எந்த ஒரு காலக்கால கட்டத்திளும், அது நல்லகாலமோ, தீக்காலமோ; கிருதயுகமோ, கலியுகமோ அறம் அழிவதே யில்லை. அதன் வழியில் பயணிப்பவர்களுக்கு மேநிலையே எக்கதியிலும் கிட்டும் என்பதை தனியொரு மனிதன் தன்சிந்தினையில் நம்பிக்கையுடன் இருத்தி, உறுதியுடன் வாழ்வதே மேலான கலாச்சார மரபை இந்த பாரத தேசத்திற்கு அளிக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்நூற்பாவின் வழியே முனிவர் பெருமான் ரத்னசுருக்கமாக வழங்கியுள்ளார்.





गुणागुणविवेकिभि£वहितमप्यलं दूषणं
भवेत् सदुपदेशवन्मतिमतामतिप्रीतये ।
कृतं किमपि धष्टड्र्ढतः स्तवनमप्यतीर्थोषितैः
न तोषयति तन्मनांसि खलु कष्टमज्ञानता ।।144।।

குணாகுணவிவேகிப்ர்விஹிதமப்யலம் தூஷணம்,
பவேத் ஸதுபதேசவந்மதி மதாமதிப்ரீதயே |
க்ருதம் கிமபி தார்ஷ்டதத: ஸ்தவனமப்யதீர்த்தோஷிதை:,
நதோஷயதி தந்மனான்ஸி கலு கஷ்டமஞானதா || 144 ||
If noble men, apt in discrimination between virtues and evils, at times, proclaim a certain fault, wise men take it as a favourable discourse and feel extremely contented. However, impudent praise by undiscriminating men, void of the knowledge of the Scripture, fails to satisfy those wise men. Certainly, ignorance is pitiful.
உன்னத மனிதர்கள், அவரது ஒரு குறிப்பிட்ட தவறை நன்மை, தீமைகளை பகுத்துணரும் ஞானியர் சுட்டும்போது மகிழ்ச்சியே அடைவார்கள். அப்போது அந்த ஞானிகள் ஒரு சாதகமான வழிமுறையைத்தந்த மனநிறைவை அடைவார்கள். இருப்பினும், கண்மூடித்தனமான மனிதர்களால் அதேமனிதரை புகழ்ந்து வாழ்த்தும்போது மகிழ்ச்சியடையாமல் இருப்பர். அவ்வாறின்றி அப்புகழ்ச்சியில் மகிழ்பவர்களின் அறியாமை பரிதாபமானது.

அதாவது அறிவுடையோர் புகழுரைக்கு மயங்குவதில்லை என்ற கருத்தை இந்நூற்பாவில் தெரிவிக்கிறார் முனிவர் பெருமான்.

“புகழ் புரிந்தார் மாட்டு”

என்று சொல்வதன் மூலம் புகழ் என்ற சொல்லை புகழுக்குரிய செயலைக் குறிப்பதாக குந்தகுந்தர் கையாண்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது அல்லவா?

திருக்குறளில் புகழ் என்ற சொல் ஒரு கலைச்சொல்லாக சிறப்பாக வரையறைக்கப்பட்டுள்ள ஒரு சொல். ஒருவருடைய, சமூகத்துக்குப் பெரிதும் பயன்படும், உள் நோக்கமில்லாத செயலின் அருமை கருதி அவர் பால் அவருடைய பயனாளிகளிடத்தும் அவரை அறிந்தவர்களிடத்தும் தோன்றும் மதிப்புதான் புகழ்.

பிரபலம்(stardom, celebrity, popularity) அல்லது பெரும்புள்ளி என்பது போன்ற பொருளில் புகழ் என்ற சொல் திருக்குறளில் பயன்படுத்தப் படவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். புகழ் வேறு பிரபல்யம் வேறு என்ற வித்தியாசத்தை குறள் வழியே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய உலகம் பிரபலம் அடையும் வழிகளைத்தேடி, நாடுவதுமே வழக்கமாகக் கொண்டுள்ளது.

அதற்காக செல்வத்தை இறைக்கவும், கைக்கூலிகளுக்கு தீனிபோடவும் தயங்குவதில்லை. பலரும் அவர் போடும் பிச்சைக்கு கையேந்தி அவர்களை புகழ்வதையே பெரும்பணியாய் அவர்களுடன் சுற்றி வருகின்றனர்.

இன்றைய ஊடகத்தில் பரஸ்பரம் போற்றிப் பாடி இருவருக்குமே பிரபல்யத்தை தேடும் யுக்தியை கையாண்டு வருவதையும் கண்டுதான் வருகிறோம். இவ்வழியில் ஈட்டும் புகழ் செல்வம் குறைந்தால், சரக்கு குறைந்தால் வந்த வழியே வெறொருவருக்கு சென்றுவிடும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

பல ambassador களை நியமித்து பெரிய நெட்வொர்க்கையே உருவாக்கி பிரபல்யத்தை தேடிவரும் சிலருக்கு வேறு வேலையே கிடையாது. அவர்களும் பொருள் கரைந்ததும் அல்லக்கைகள் விலகுவதைக் காணத்தான் போகின்றார்கள். அவர்களின் சிலவரிகளை கண்டு, புகழ் என்ற மயக்கத்தில் தான் வீழ்ந்து மடிகிறார்கள். இன்றைய பிரபல்யங்கள் இறந்தால் அன்றே அவருக்கான மாயப்புகழுரைகளையும் சேர்த்தே புதைத்து விடுகின்றனர்.

புகழில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. மதுபோதையை விட புகழ் போதை பயங்கரமானது. புகழில் மயங்கும் மனிதன் அடுக்கடுக்காக பாவங்களை செய்கிறான். பணம், பட்டம், பதவி, பொருள் முதலியவற்றால் ஒரு மனிதன் புகழ் அடையும் போது அவனை அறியாமலே அதில் மூழ்கி விடுகிறான். எல்லா புகழுக்குரியவனாக இறைவனையே கூறுகிறது அனைத்து மதங்களும். அனைத்தும் அவருக்கு அடிமைப்பட்டவை என்றே இயம்புகிறது.

புகழை ஏற்படுத்தும் மோகங்களில் இருந்து மனிதன் விடுபட்டு விட்டானென்றால் அவனிடம் அடக்கம், பணிவு இறையிடத்தில் கீழ்ப்படிவு எல்லாமே அமைந்து விடும். புகழ் என்னும் பேராசைகளிலிருந்து அவன் விடுபடாமல் இருப்பதே துன்பங்களுக்கெல்லாம் காரணமாக அமைகிறது.

மக்கள் சுட்டிக்காட்டிப் பேசும் அளவுக்கு ஒருவன் வழிகாட்டும் விஷயத்திலும் உலக விஷயங்களிலும் பிரபலமடைந்து விட்டால் அது ஒன்றே அவனுக்கு போதிய தீங்கு விளைவித்து விடும். இதிலிருந்து தப்பியவர்கள் மிகச் சிலர்.

ஒருவன் பேரும் புகழும் அடையும் போது அவனிடத்தில் பெருமை, கர்வம், ஆடம்பரம் போன்ற அறம் வெறுக்கக் கூடிய செயல்கள் வந்து விடும் என்பதே ஞானியர்களின் கருத்தாகும்.

உன்னத மனிதர்கள் தம்மை அக்கறையுள்ள குருவோ, உற்ற நண்பர்களோ சுட்டும் குறைகளை ஏற்று வாழ்வில் மேன்மையடைவார்கள். அதே சமயம் தவறென தெரிந்தும் கண்டுகொள்ளாமல் போற்றுவோரின் போலிப்புகழுரையில் வாழ்பவர்கள் கீழான நிலையைத்தான் அடைவார்கள் என்ற பேருண்மையை இந்நூற்பாவின் வழியே தெரிவிக்கிறார் முனிவர் பெருமான்.





त्यक्तहेत्वन्तरापेक्षौ गुणदोषनिबन्ध्नौ । 
यस्यादानपरित्यागौ स एव विदुषां वरः ।।145।।

த்யக்த ஹேத்வந்தராபேக்ஷெள குணதோஷ நிபந்தனெள |

 யஸ்யாதாந பரித்யாகெள ஸஏவ விதூஷாம் வர: ||145||
The one whose acceptance of something depends solely on its merits, not on any other consideration, and rejection only on its demerits, is considered great among the wise
. ஏற்றுக்கொள்வது என்பது அதன் குணங்களை மட்டுமே சார்ந்துள்ளது, வேறு எந்த கருத்தையும் சார்ந்து இல்லை, மற்றும் அதன் குறைபாடுகளை மட்டுமே நிராகரிப்பவர், அனைவரிலும் சிறந்த அறிவுடையவராக கருதப்படுகிறார்.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்

- என்பது குறள். ஆசிரியர் ஏலாச்சாரியார் எனும் குந்தகுந்தர்.

ஒருவரது குணங்களையும் குற்றங்களையும் தேடி அறிந்து அவற்றுள் மிகை ஆராய்ந்து தெளிய வேண்டும் என்பது பாடலின் பொருள்.

உலகில் குணமே நிறைந்து குற்றம் சிறுதும் இல்லாதவர்களையும் காண முடியாது. குணமேயில்லாமல் குற்றம் மட்டும் உடையவர்களும் உலகத்தில் இல்லை. குணமும் குற்றமும் எல்லோரிடமும் விரவியே இருக்கும். ஆகையால் இரண்டையும் நன்கு அறிந்து நிறை மிகுந்திருந்தால் அவரைச் செயல் மேற்கொள்வாராக ஏற்கலாம்; குற்றம் மிகையாக இருந்தால் விலக்கலாம்.

என்றளவில் அக்குறளை நமக்கு தந்துள்ளார் தெய்வப்புலவர்.

குற்றம் பார்க்கிற் சுற்ற மில்லை (கொன்றை வேந்தன் 18 பொருள்: குற்றமே யில்லாதவர் ஒருவருமில்லை யாகையால் சுற்றத்தார் அகப்படார்). என்ற ஔவையார் மொழியையும் இக்குறட் கருத்தோடு இணைத்து நோக்கலாம்.

ஒரு தலைவனுக்கோ, ஆட்சியாளருக்கோ - 'காரியம் பல ஆதலின் அது செய்வாரும் பலர் வேண்டும்; ஆதலால், அவரெல்லாரையும் நற்குணத்தாராகத் தேடுதல் அரிது என்பது இதனால் கூறப்பட்டது'

குணவான், குணவதி - நற்குணம், தீயகுணம், நிர்க்குணம், துர்க்குணம், மருத்துவ குணம் இவற்றிலிருந்து நோக்குங்கால்

குணம் என்பது - ஒன்றின் தன்மை, இயல்பு. (basic quality) பண்பு என்பது வெளிப்படும் செயல்பாட்டில் தெரிவது. (character) (பெரும்பாலும் ஒருவரது character அவரது quality ஐ வெளிப்படுத்தி விடும். அவ்வாறு இல்லாதவர்களை பெருங்குற்றமுள்ளவன் என்று சொல்லலாம். அவனே ஏமாற்றுப் பேர்வழி. உடன் கண்டு கொள்வதும் சிரமம். மிகவும் கவனமாக கையாள வேண்டியவர்கள். இந்த காலத்தில் இவ்வகைப்பாட்டில் பல சகமனித-நடிகர்கள் உலவித்தான் வருகிறார்கள்.)

(தமிழர் என்றோர் இனமுண்டு. தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்பது இதுதானோ? என்று கூட நினைக்கத்தோன்றும்.)

--------------------------

உள்ளார்ந்த சித்தம், புத்தி என்ற உளவியல் நோக்கில் காணும் போது (முன்னரே இம்மூன்று குணங்களைக் கண்டோம்)

சாத்வ குணம் - தூய்மை மற்றும் ஞானம்

சாத்வீக மனிதன் – புகழ், வெகுமானம் அல்லது வேறு நோக்கம் என்று எந்த எதிர்பார்ப்புமின்றி சமூக நலனுக்காக வாழ்பவர்

ரஜோ குணம் - ரஜ செயல்பாடு மற்றும் ஆசை

ராஜஸீக மனிதன் – சுய லாபத்திற்காகவும் லட்சியத்திற்காகவும் வாழ்பவன்

தமோ குணம் - தம அறியாமை மற்றும் சோம்பல்

தாமசீக மனிதன் – மற்றவர்களை மிதித்து மேலே செல்ல தயங்காதவன், சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பவன்.

------------------------------

சாதாரணமாக நோக்கும் போது…

குற்றம் என்பது விதிகளையோ அல்லது சட்டத்தையோ மீறி செய்யப்படும் செயலாகும்.

இத்தகைய செயல் அதிகாரத்தில் உள்ளவர்களால் தண்டனைக்கு (சட்ட மன்றம் போன்ற அமைப்புகளால்) உட்படுத்தப்படலாம். அல்லது எச்சரிக்கை விடுக்கப்படலாம். குற்றத்திற்கான வரையறை வெவ்வேறு (மாநில, தேசிய, சர்வதேச) இடம், வெவ்வேறு காலகட்டத்தைப்பொறுத்து ஒவ்வொறு தனிமனித சமுதாயத்துக்கும் மாறுபடலாம்..

குற்றங்களின் பின்வரும் வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன அல்லது பயன்படுத்தப்பட்டு வருகின்றன:

தனி நபருக்கு எதிரான குற்றம் வன்முறை தொடர்பான குற்றம் பாலியல் வன்முறை தொடர்பான குற்றம் சொத்து தொடர்பான குற்றம் மோசடி மற்றும் ஆள்மாராட்டம் துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் மூலமாக தாக்குதல் மத்திய அல்லது மாநில அரசுக்கு எதிரான குற்றம் / அரசியல் குற்றங்கள் போதைப் பொருட்களை கடத்துதல் மதம் மற்றும் பொது வழிபாட்டு எதிரான குற்றம் போர்க்குற்றம்

இப்படி இத்யாதிகள் என நீண்டு கொண்டே போவதை இன்றைய ஊடக செய்திப் பகுதியை கண்டாலே புதிதான வகைப்பாடுகள் பலவற்றைத் தெரிந்து கொள்ளலாம். ஏன் இத்தனை வகைப்பாடுகள் என்று கேட்கின்றீர்களா?! ஒன்றின் வகையில் செய்தவரை, தண்டனை குறைந்த வகைக்கு வாதாடி நீதி வழங்க வற்புறுத்தும் நோக்கத்தில் தான்….

--------------------

ஆன்மீக நோக்கில் முற்காலத்தில் ஐந்து வகைப்பாடுகளே இருந்துள்ளது.

குடி பொய் களவு காமம் கொலை என்பன அறநூலுக்கு மாறானவை.

இவை பஞ்சமா பாதங்கள் அதாவது ஐம்பெருங் குற்றம் எனப்படும்.

பிறரிடம் வாங்கினதை மறுத்தலும், தன்னிடத்துள்ள பிறர் பொருளை ஒளித்தலும், கள்ளக் கையெழுத்தும், ஆள்மாறாட்டமும் பொய்யுள் அடங்கும்.

இறையிறுக்காமை, உறுபொருள் கவர்தல், பகையொற்று, அறைபோதல், அரசனது பொருள் கவர்தல், அரசனது இன்பப் பொருள் நுகர்தல், ஊருக்கு அல்லது நாட்டிற்கு இரண்டகஞ் செய்தல், அரசற்கு இரண்டகஞ் செய்தல், அரசாணை மீறல், கொள்ளை யடித்தல், கலகஞ்செய்தல் என்பன அரசியற்கு மாறான குற்றங்களாம். புதையலும் பிறங்கடையில்லாச் சொத்தும் உறுபொருளாகும்.

ஒப்பிப் பணிசெய்யாமை, கோயிற் பொருட்கவர்தல் என்பன தெய்வத்திற்கு மாறான குற்றங்கள். கோயிற் கலங்களையும் அணிகலங்களையும் களவாடலும், வழிபாட்டு விழாச் செலவைக் குறைத்தலும் அடியோடு நிறுத்தலும் கோயிற் பொருட் கவர்வாகும்.

இந்த மூவகைக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

---------------------

குணம் என்றால் என்ன? குற்றம் என்றால் என்ன? என்ற அடிப்படையை கண்டோம். இதில் எதை விடுத்து எதைப் பெறுதல் விடுதலைப் பெற்றிற்கு வழிவகை செய்யும் என்பதனை நாமே நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

மேலும் அத்தீர்மானத்திற்கு வலுசேர்க்கும் வகையில் ஒரு புலவர் பாடியுள்ளாரே

“குற்றங்களில்லான் குணத்தால் நிறைந்தான்”

என்ற பாடலை அருகரை வழைபடும்போது நம் பெரியோர்கள் பாடுவதை அடிக்கடி கேட்கலாம். அவ்வழியே நோக்குங்கால்….

பதினெட்டு குற்றங்களினின்றும் நீங்கியவர்களாகிய ஜிநர்களை , எல்லாவகை மலர்களாலும் நான் மோக்ஷ சுகத்தை அடையும் பொருட்டு அர்ச்சிக்கிறேன் அதாவது…

----------------------------------------------- -

பதினெட்டு குற்றங்கள் :

1. பசி : அருகன் உடலோடு கூடி இருந்தாலும் உணவு உண்பது இல்லை ; ஏனெனில் அவருக்குப் பசி உண்டாவது இல்லை.

2. தாகம் : அவருக்கு நீர் வேட்கையும் இல்லை.

3. அச்சம் : அவருக்கு அச்ச உணர்வு தோன்றுவது இல்லை. அவரை யாரும் அச்சுறுத்த முடியாது.

4. கோபம் : அருகருக்குக் கோபம் உண்டாவது இல்லை. ஏனெனில் அவரிடம் ஆசை இல்லை.

5. ஆசை : அருகருக்கு எந்தப் பொருள் மீதும் விருப்பு வெறுப்பு உணர்வு தோன்றுவது இல்லை.

6. மோகம் : அருகருக்கு யாரிடமும், எந்தப் பொருளிடமும் மோகம் - மயக்கம் இல்லை.

7. சிந்தனை : அருகர் எதனையும் சிந்திப்பது இல்லை.

8. மூப்பு : அருகர் உடல் முதுமை அடைவது இல்லை.

9. பிணி : அருகர் உடலில் பிணி தோன்றுவது இல்லை.

10. மரணம் : மீண்டும் பிறப்பதில்லை என்பதால், அருகருக்கு மரணம் இல்லை.

11. வேர்வை : அருகர் உடலில் வேர்வை தோன்றுவது இல்லை.

12. துக்கம் : எதைக் கண்டும் அருகருக்கு துக்க உணர்வு தோன்றுவது இல்லை.

13. மதம் : அருகருக்கு செருக்கு உணர்வு தோன்றுவது இல்லை.

14. ரதி : அருகருக்கு களிப்பு (மகிழ்ச்சி) உணர்வு தோன்றுவது இல்லை.

15. வியப்பு : உலகில் எந்தப் பொருளையும் கண்டு அவருக்கு வியப்புத் தோன்றுவது இல்லை.

16. உறக்கம் : உடல் இருந்தாலும் அருகர் உறங்குவது இல்லை.

17. பிறப்பு : அருகர் மீண்டும் பிறப்பதில்லை.

18. உத்வேகம் : எதனாலும் அவருக்குச் சலனம் (அரதி) தோன்றுவதில்லை.

------------------------

இந்த பதினெட்டிலேயே அனைத்து தீய குணங்களும் அடங்கி விடும். அதனை விலக்கியவனே பிறவியை வென்றவனாகிறான். இது விலகினாலே உள்ளார்ந்த இயல்பிலுள்ள ஆன்ம நற்குணங்கள் வெளிச்சத்திற்கு வரும் என்பதையே இந்நூலாசிரியர் ஆச்சார்யர் குணபத்ரன் தெரிவிக்கிறார். அவரே அருகதையுடைவன் அருகப்பெருமான், அருகக்கடவுள் என்கிறார்.

---------------------

திரு. மண்டல புருடர் எனும் புலவர் பெருமகனாரால் இயற்றப்பெற்ற சூடாமணி நிகண்டில் அருகன், புத்தன், சிவன் போன்ற கடவுள்களுக்கான குணங்களை திரட்டி வரையறை செய்து குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் அருகப்பெருமானுக்கான குணநலப்பண்புகளாக குறிப்பிடப்பட்டுள்ளவையே மேலோங்கியுள்ளது. அவையாவன…..

அநகன், எண்குணன், நிச்சிந்தன், அறவாழிவேந்தன், வாமன், சினன், வரன், உறுவன், சாந்தன், சினேந்திரன், முனைவன், மாசேனன், தேவன், மூவுலகுணர்ந்தமூர்த்தி, புனிதன், வென்றோன், விராகன், பூமிசை நடந்தோன், போதன்

பண்ணவன், கமலவூர்தி, பரமேட்டி, காதிவென்றோன், புண்ணியன், புலவன், புத்தன், பூரணன், பொன்னெயிற்கோன், விண்ணவன், விமலன், வீரன், விநாயகன், வீதசோகன், அண்ணல், மதனைவென்றோன், அருட்கொடிவேந்தன், ஆசான்

முத்தன், மாமுனி, கருத்தன், முக்குடைச்செல்வன், முன்னோன், சித்தன், எண்சிறப்பு, முள்ளோன், திகம்பரன், கொல்லாவேதன், நித்தன், நின்மலன், நின்னாமன், நிராயுதன், நேமிநாதன், அத்தன், ஆனந்தன், சோதி, அரியணைச்செல்வன், ஆதி

ஆத்தன், குற்றங்களில்லான், அசோகமர்கடவுள், ஆதன், சாத்தன், வேதாந்தன், நாதன், சமி, அநாமயன், சுயம்பு, நீத்தவன், பிதா, விதாதா, நிரமபரன், அனந்தஞானி, தீர்த்தன், மால், பகவன், சாமி, சீபதி, சீமான், செய்யோன்

நிருமலன், வரதன், சாது, நிரஞ்சனன், விறலோன், யோகி, தருமராசன், யுகாதி, சதுர்முகன், சாதரூபி, தருமறுமார்பன், சிவகதிக்கிறை.

------------------------

உன்னத நற்குணக்கோட்டையாய் விளங்கும் அருகப்பெருமானை போற்றி வணங்கினாலே குற்றங்கள் நீங்கி விடும் என்கிறது நமது பக்திமார்க்கமும்.

நம்மிடையே உள்ள குற்றங்கள விலக்க வேண்டுமாயின், பிறரிடமிருந்து நம்மிடைம் வந்து சேர்ந்த குற்ற மாசுக்களை இனி வராது பார்த்துக் கொள்வதும், படிந்தவற்றை நீக்கினாலே நற்குணம் தோன்றிவிடும் என்பதே தெளிவாகும்.








ஹிதம் ஹித்வாஅஹிதே ஸ்தித்வா துர்தீர்து: காயஸே ப்ருசம் | 

விபர்யயே தயோரேதி த்வம் ஸுகாயிஷ்யஸே ஸுதீ: || 146 ||
O worthy soul! Your folly makes you abandon right faith (samyagdarśana), etc., which are beneficial, and accept wrong faith (mithyādarśana), etc., which are harmful; you are, thus, making yourself miserable. Be discerning and do the opposite; abandon the harmful wrong faith, etc., and accept the beneficial right faith, etc. You will make yourself happy.
முட்டாள் நன்மை தருவனவற்றை விட்டு விட்டு, தீமை பயப்பனவற்றை கைக்கொண்டு மிகுதியும் வருந்துகிறான். இதற்கு மாறான நெறியைக் கடைபிடித்தால் நீ மகிழ்ச்சியுடன் இருப்பாய்








இமே தோஷஸ்தேஷாம் ப்ரபவன மமீப்யோ நியமத:, 

தேஷாமபி பவனமே தேப்ய இதி ய: | 
த்யஜம்ஸ்த்யாஜ்யான் ஹேதூன் ஐடிதி ஹிதஹேதுன் ப்ரதிபஜன், 
ஸ வித்வான் ஸத்விருத்த: ஸ ஹி ஸ ஹி: நிதி: ஸைளக்யயஸோ: || 147||
These [wrong faith (mithyādarśana), etc.] are demerits and, as a rule, these [rise of perception-deluding (darśanamohanīya), etc.] are its causes. These [right faith (samyagdarśana), etc.] are merits and, again, these [subsidence, destruction and subsidence-cum-destruction of perception-deluding (darśanamohanīya), etc.] are its causes. Having thus ascertained the causes, the man who abandons those that are harmful and accepts those that are beneficial is wise. He only is equipped with right conduct (samyakcāritra); he only is the storehouse of happiness and renown.
ஏ உயிரே நீ சம்யக்தரிஸனம் முதலான நலன் தரும் செயல்களைத் துறந்து, மித்யாதரிஸனம் முதலான தீயனவற்றை ஏற்றுக் கொண்டுள்ளாய். இதனால் நீ அனாதி காலமாகவே பிறவியில் ஆழ்ந்து துன்பத்திலேயே ஆழ்ந்துள்ளாய். நீ உனது நிலையை நன்கு உணர்ந்து பார். எனவே நீ இந்நிலைக்கு மாறாகக் செயல்படு. அதாவது குணங்களை ஏற்று, குற்றங்களை ஒதுக்கிவிடு. இதனால் அவசியம் நீ சுகத்தை அடைவாய்.






साधरणौ सकलजन्तुषु वृध्तिनाशौ, 
जन्मान्तरा£जतशुभाशुभकर्मयोगात् ।
धीमान् स यः सुगतिसाध्नवृध्तिनाश:, 
तद्वड्ढत्ययाद्विगतधीरपरोभ्यधयि ।।148।। 


சாதாராணெள ஸகல ஜந்துஷு விருத்தி நாசெள – 

ஜன்மாந்தரார்ஜிதஸு பாசுபகர்ம யோகாத் | 
தீமான் ஸ ய: ஸுகதிஸாதனவிருத்தி நாச: தத்வத்வயயாத்விகததீரபரோப்யதாயி || 148 ||
The rise and fall (of life, body, wealth, etc.) due to karmas that have earned merit (punya) and demerit (pāpa) in the past life are common to all living beings. However, the one who attends to the rise and fall responsible for attainment of the excellent state of existence is called wise. On the contrary, the one who attends to the rise and fall responsible for attainment of the wretched state of existence is called a fool.
கடந்த பிறவி வாழ்க்கையில் புண்ணியம் மற்றும் பாபம் ஆகியவற்றைப் பெற்ற கர்மாக்களின் காரணமாக உயர்வு மற்றும் வீழ்ச்சி (வாழ்வுநிலை, உடல், செல்வம் போன்றவை)யானது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. இருப்பினும், சிறந்த பேரின்பத்தை அடையும் காரணிகளின் வழியே, விதிவழியே வந்த உயர்வு மற்றும் வீழ்ச்சிகளை அணுகுவதே(ஏற்று செயலாற்றுதலே) அறிவுடையோர் என்று அழைக்கப்படுகிறார். மாறாக, மோசமான நிலையை(கீழான கதி) அடைவதற்கு பொறுப்பான அணுமுறையாளர், அறிவீலி என்று அழைக்கப்படுகிறார்.

அறிவாளி தன் அறிவை வைத்து ஆய்வு செய்வான். புத்திசாலி தன் வாழ்க்கையை நன்றாக கட்டமைப்பான்.

ஒரு புத்திசாலியினால் அவனை சுத்தியிருக்கும் குடும்பத்திற்கு நல்லது. ஒரு அறிவாளியினால் சமுதாயத்துக்கு மட்டும் அல்ல, மனித குலத்திற்கே நல்லது.

-------

அறிவாளி பலவற்றை கற்று ஞானம் பெறுபவன். இவன் ஒரு கம்ப்யூட்டர் போன்றவன் அல்லது ஒரு நூலகம் போன்றவன். ஆனால் புத்திசாலி தான் பெற்ற அறிவை, அனுபவத்தை எங்கு எவ்வாறு பயண்படுத்துவது என தெரிந்து பயன்படுத்துபவன்.

சுருங்க கூறின் அறிவாளி பலவற்றையும் அறிந்தவன். புத்திசாலி அனுபவ ஞானி, செயலாக்கம் உள்ளவன்.

---------

இவ்வாறாக அறிவாளி, புத்திசாலி என்று பலவகையில் மக்களை வகைப்படுத்தி பேசும் அறிவுஜீவிகள் நிறைய உள்ளார்கள்.

அறிவு, புத்தி என்பவை எல்லாம் ஐம்புலன் உணர்ச்சியினால் நமது மனதில் பதியப்பட்ட தகவல்களே. அவற்றை சரியான வகையில் தேவைப்படும் தருணத்தில், பொருத்தமானவற்றை மட்டும் ஸ்பரிசித்து பெறும் ஆற்றலே ஆறிவாற்றல், புத்திசாலித்தனம் என்பது.

ஒரு மனிதன் தான் செயல்படும் போது பதிந்த தகவல்களை கொண்டுதான் அணுகுமுறையை வெளிப்படுத்துவான். அதில் பெறும் அனுபவங்களை நன்மை தீமை என்ற தெளிவாக மீண்டும் பதிந்து கொள்வான். அதே போன்ற தருணம், செயலாற்றும் காலக்கட்டம் வரும்போது எளிதாக கையாள்வான். அதுவே அறிவு வளர்ச்சியடைதலாகும். அதனால் செயலாற்றுதலே அறிவு வளர்ச்சியடைதலுக்கான காரணி. செயலாற்றாமல் பேசுபவை அனைத்தும் வெறும் தற்குறித்தனத்தையே வளர்க்கும்.

அறிவுவளர்ச்சியை பலருக்கும் பயன்படும் மொழியாற்றல் பெற்றவனை அறிவாளி என்றும், தன் மட்டில் செயலாற்றிக் கொண்டோ, செயலாற்றும் போது துணைபுரிவனையோ புத்திசாலி என்றும் அழைப்பது வழக்கமாக கொண்டுள்ளோம்.

அந்த அறிவுகளை நாம் விரும்பும் பயனை அடைய பயன்படுத்துவதில் தான் வெற்றி அடங்கியுள்ளது. வெற்றி/ தோல்வி என்பது நமது லட்சியத்தை அடையும் போது ஏற்படும்/தோன்றும் சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சி, அதன் வழியே பெறும் மனநிறைவு போன்றவைகளாக நமக்குள்ளும்/பிறருக்கும் தெரிவிப்பது ஆகும்.

அதற்காக நாம் லட்சியத்திற்கு சம்பந்தமில்லாத பல அறிவுகளை நம் புத்தி, சித்தத்தில் சேகரிப்பது அறிவுசார்ந்த தகவலாயிருப்பினும் புத்திசாலித்தனமாக ஞானியர்கள் அறிவுறுத்துவதில்லை. அது தேவையற்ற தகவல்களே. அவற்றை நாம் அவ்வப்போது அசைபோடாதது இருத்தலே விவேகஞானத்தை வளர்க்கும்.

பெரும்பாலும் நாம் நமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், தாக்குதல்கள், நஷ்டங்கள், கெளரவக் குறைச்சல்கள், இழிவுகள், தரக்குறைவான பேச்சுக்கள் அதற்கான பதிவுகளை மட்டுமின்றி உடலுக்கு ஏற்பட்ட துன்பங்கள், வியாதிகள், வலிகள், வேதனைகள், கவலைகள், அனுபவத்திற்காக காத்திருக்கும் எதிர்பார்ப்புகள் இவற்றை மட்டுமே அசைபோட்டபடி நம் வாழ்நாளை கடத்துவதில் எந்த பயனும், வளர்ச்சியும் ஏற்படப்போவதில்லை.

அவற்றிலிருந்து விடுபட்டு கடந்த கால அனுபவத்திலிருந்து பெற்ற அனுபவ அறிவையும், வருங்கால நோக்கத்தை அடைவதற்கான அறிவைப் பெருக்குதலும், விளைவுகளுக்கான எச்சரிக்கையுணர்வுடன் செயலாற்றுதலுமே ஒருவரது இலட்சியத்தை அடைய துணைபுரியும். இதனை புரிந்து செயலாற்றுதலே புத்திசாலித்தனமாகும்.

ஒவ்வொரு மானுடனுக்கும் ஒரு தனி இலட்சியம் வாழ்க்கையில் இருந்தாலும் இப்பிறவித்துன்பத்திலிருந்து வெளியேறும் வழிக்கான இலட்சியமே பிரதானமானது என்கிறார் பகவான் மஹாவீரர். அதற்கான அர்த்தமுள்ள செயல்களில் ஒழுகுவதே விவேகமாகும் என்கிறார் அவரது வழிகாட்டுதல் வரிகளின் வழியே.

இதற்கான அறிவை நூலின் வழியிலோ, அறிவுரை மற்றும் வழிகாட்டுதல்கள் வழியிலோ ஏற்று அதில் நம்பிக்கை வைத்து பயிற்சியை உடன் துவங்குவதே புருஷார்த்தம் என்கிறார். அதுவே அனைத்து மானுடரின் இலட்சியமாகும் என்று பல வகையிலும் தெரியப்படுத்துகிறார் பகவான்.

அவர் கூறிய வழியில் பயணிப்பதே அறிவுடைய நோக்கமாகும் என்று இந்நூற்பாவில் ஆச்சார்ய பெருமகனாரும் தெரிவிக்கிறார். அதுவே பல பிறவிகளுக்கு வித்திடும் பாவங்களை விலக்கச் செய்து புண்ணியத்தையோ, அல்லது எந்த வினைக்கட்டும் இல்லாத நிலைப்பாட்டிலோ நம்மை செயலாற்ற வைக்கும் என்று வழிகாட்டுகிறார். இதுவே அறிவுடையோரின் அருமுயற்சியாகும். மற்ற செயல்கள் அனைத்தும் வீணான முயற்சி என்று கூறி நம்மை நல்வழிப்படுத்த முனைந்துள்ளார் முனிவர் பெருமான்.





कलौ दण्डो नीतिः स च नृपतिभिस्ते नृपतयो 
नयन्त्यर्थार्थं तं न च ध्नमदो{स्त्याश्रमवताम् । 
नतानामाचार्या न हि नतिरताः साधुचरिताः 
तपस्थेषु श्रीमन्मणय इव जाताः प्रविरलाः || 149 ||


கலெள, தண்டோ நீதி: ஸ ச ந்ருபதிபிஸ்தே ந்ருபதயோ,

 நயந்த்யர்தார்தம் த ம் ந ச தனமதோஅஸ்த்யாஸ்ரமவதாம் |
 நதாநாமாசார்யா ந ஹி நதிரதா: ஸாது சரிதா: 
தபஸ்தேஷு ஸ்ரீமந்மணய இவ ஜாதா: ப்ரவிரலா || 149 ||
In this kali age (the fifth period, called dushamā), justice is by punishment, and punishment is awarded by the kings. The kings use it to extract money but the woods-living ascetics have no money. (Therefore, the kings have no interest in controlling the conduct of the ascetics.) Now, the preceptors (ācārya), due to their fondness for obeisance, fail to put their follower-ascetics on the right path. In such a situation, among ascetics, those who observe right conduct, as prescribed, are extremely rare, like glittering gems.
இந்த கலியுகத்தில் (ஐந்தாவது காலம், துஷமா என்று அழைக்கப்படுகிறது), நீதி என்பது தண்டனை வழியில் மன்னர்களால் வழங்கப்படுகிறது. மன்னர்கள் (குற்றமிழைத்தவர்களிடம்) அபராதம் என்ற முறையில் வரியைப்பெற்றே அவ்வாறிருக்க முடிகிறது. ஆனால் காடுகளில் வாழும் சந்நியாசிகளிடத்தில் பணம் இல்லை. அதனால் ஒழுக்கத்திலிருந்து விலகிய சந்நியாசிகளை மன்னர்களும் தண்டிப்பதில்லை. அத்தகைய சூழ்நிலையில், ஆச்சார்யர்களும் தவறான முனிகளை தண்டிப்பதில்லை. அதனால் இந்த ஐந்தாம் காலத்தில் துறவற ஒழுக்கத்தில் கூறியபடி சரியான நடத்தையை கடைபிடிப்பவர்கள் பளபளக்கும் ரத்தினங்களைப் போல மிகவும் அரிதாகவே காணப்படுகின்றனர்.

இந்த காலக்கட்டத்தில் ஒழுக்கமில்லா போலித்துறவிகள் பலரை காணவே செய்கிறோம். சில corporate துறவிகள் ஆன்மீகத்தை சமஸ்கிரத மொழியில் படித்து விட்டு, அம்மொழி வழக்கொழிந்த தருணத்தை, தந்திரமாக பயன்படுத்தி வார்த்தை ஜாலத்துடன் பெரும்பாலான அறியா பாமரர்களிடம் அதில் கூறப்பட்டுள்ளதாக தவறான வழிகாட்டுதலை இச்சூழலுக்கு பொருந்தும் வகையில் கூறி பணம் ஈட்டி வருகிறார்கள். அதுவே இன்றைய கலியுகம் கூறும் ஐந்தாம் தீக்காலத்தில் நடைமுறையாக உள்ளதை நாமும் கண்கூடாகவேக் காண்கிறோம். அவர்கள் பயின்ற ஆஸ்சிரம குருக்களும் அஹிம்சைநெறியை கடைபிடிப்பதால் அவர்களை கண்டிப்பதோ, தண்டிப்பதோ இல்லை. மேலும் அரசாங்கமோ அல்லது தனி மனிதர்கள் எவரும் தண்டிக்க முன்வருவவும் தயங்குகின்றனர்.

அப்படியே சில குழுவினர் தவறை சுட்டினாலும் பணத்தைப் பெற்ற நீதித்துறையும் அவர்களை தண்டிக்காமல், வேடதாரிகளாய் சுதந்திரமாய் உலவிட அனுமதிக்கிறார்கள். அதுவே இக்கால சந்நியாச வாழ்க்கைமுறையாகி விட்டது. அவர்கள் வழியில் பல சீடர்களும் தனி ஆன்மீகவியாபாரத்தை அங்காங்கே துவக்கி பொருளிட்டு வருகிறார்கள்; என்பதை தீர்க்கத்தரிசனமாய் ஸ்ரீ ஆச்சார்ய குணபத்ரரும் அன்றே கூறிச் சென்றுள்ளார். அவர்களுடைய காலத்தில் தோன்றிய தீயநெறியே இன்றைய இச்சந்நியாசமுறைக்கு காரணமாகியது என்பது புரிகிறது.

லெளகீக வாழ்க்கையில் தவறிழைப்பவர்களை அரசரோ, அப்போதைய அரசாங்கமோ கண்டித்து விடுகிறது. அதற்கான சட்டம் இயற்றப்படும் மன்றம், சட்டம் ஒழுங்கை கவனிக்கும் அரசாங்கம், மீறுபவர்களை தண்டிக்கும் நீதித்துறை போன்ற மூன்றையும் முற்காலத்தில் தலைமைவகித்த அரசரும், அமைச்சர்களும் ஒன்று சேர்ந்து தீர்மானித்து தண்டனையை வழங்கி விட்டார்கள். அதற்குரிய பொருளை, பணத்தை வரியாகவும், தண்டனை பெறுபவர்களிடம் அபராதத்தொகையாகவும் வசூலித்து நிர்வாகம் செய்து வந்தார்கள்.

ஆனால் முனிவர் ஆசிரமத்தில், துறவறநெறியாளர்கள் சங்கத்தில் ஓழுக்கத்திலிருந்து விலகி தவறான பாதையில் குற்றமிழைப்பவர்களை ஆச்சார்யரும் அரசாங்கத்தைப் போல தண்டனை அளிக்க இயலவில்லை. பயிற்சி பெற்ற அந்த முனிவர்களோ, சந்நியாசிகளோ தீயோர்களாகவே வெளியேறி விடுகின்றனர். அவ்வாறு தவறான வழிகாட்டுதலை மக்களுக்கு அளித்து வருபவர்களே பெருகி வருகிறார்கள். உண்மை துறவற நெறியில் தவறாது கடைபிடித்து ஒழுகுபவர்கள் அரிதாகவே காணப்படுகிறார்கள் என்று வருத்தத்துடன் முனிவர் பெருமான் தெரிவித்துள்ளார்.

அதாவது தண்டனைக்கஞ்சியே அறநெறி காப்பாற்றப்படும் நிலையில் வாழ்கிறது இன்றைய உலகநீதி. அது தவறு; அறவழி ஒழுக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து அதில் தவறாது, பிறழாது ஒழுபவர்களே இந்த உலகத்தாரை/ ஜீவராசிகளை துன்பமின்றி வாழ வைக்க முடியும். இதனை புரிந்து ஒவ்வொரு இல்லறத்தானும் மற்றும் துறவறத்தானும் அறவழியை கடைபிடித்து அறிந்து அதன்படி ஒழுகுவதே மேன்மையான வாழ்வியல் முறையாகும் என்பதை மக்களுக்கு தெரிவிப்பதே இப்பாடலின் நோக்கம்.








ஏதே தே முனிமானின: கவலிதா: காந்தாகடக்ஷே க்ஷஸணி, அங்கலாக்னசராவஸன்னஹரிணபிரக்யா ப்ரமந்த்யாகுலா: ஸந்தர்தும் விஷயாட வீஸ்தலதலே ஸ்வாங்க்வாப்யஹோ ந க்ஷமா:, மா வ்ரா ஜீன்மருதாஹதா ப்ரசபலை: ஸம்ஸர்கமேபிர் பவான் || 150 ||

Those who consider themselves ascetics, when bitten by the half-glances of women, roam around in distress; like deer with their bodies pierced by arrows. It is a pity that, in midst of the forest of desires, they are not able to rest themselves anywhere. O worthy soul! Do not get into the company of such unpredictable ascetics who are fickle like the clouds beaten by winds.
தங்களை சந்நியாசிகளாக கருதுபவர்கள், பெண்களின் ஓரக்கண் பார்வையால் கவரப்பட்டு, அம்புகளால் துளைக்கப்பட்ட மானைப் போல; துன்பத்தில் சுற்றித் திரிகிறார்களோ. ஆசைகளின் காட்டுக்கு நடுவே, அவர்கள் எங்கும் ஓய்வெடுக்க முடியாமல் ஓடிக்கொண்டு இருப்பது ஒரு பரிதாபம் தான். ஏ ஆத்மா! காற்றினால் தாக்கப்பட்ட மேகங்களைப் போல முட்டாள்தனமாக அலைந்திருக்கும் இத்தகைய சந்நியாசிகளின் சங்கத்துடன் தொடர்பில் இருக்க வேண்டாம்.

மீண்டும் தவக்கோல வேடதாரிகளிடத்தில் அறவழிப் பயணத்தில் நாட்டமுள்ளவர்கள் கவனமுடன் இருக்க எச்சரிக்கை செய்துள்ளார் முனிவர் பெருமான்.

போலித்துறவியர் சங்கங்களின் சந்நியாசிகள் கீழான விருப்பத்துடன் அலைந்து திரிபவர்கள்; எவ்வாறு அம்பினால் துளைக்கப்பட்ட மான் காட்டில் வெறித்து அங்கும் இங்கும் ஓடியபடி அலைந்து திரியுமோ அதுபோல காம வேட்கையில் பெண்களின் கடைக்கண் பார்வையால் கவர்ந்திழுக்கப்பட்டு மன சஞ்சலத்தில் உறக்கமின்றி இருப்பார்கள். எவ்வாறு மேகம் காற்றினால் அலைக்கழிக்கப்படுகிறதோ அதுபோலவே விகார எண்ணங்களின் தூண்டுதலினால் அலைக்கழிந்த மனதுடன் காணப்படுவர்.

இவ்வாறு தாழ்வான தீயமனிதர்களை துறவியர் என எண்ணி அவர்களை வணங்கச் செல்வதில் கூட கவனமுடன் இருங்கள். பெண்களின் துறவியர் பக்தியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து ரசிக்கும் காமாந்தகர்கள் அந்த வேடதாரிகள் என்கிறார். அவர்களிடன் தர்ம உபதேசம் கேட்பது எந்த வகையிலும் நமக்கு வாழ்வு உய்ய பயன்படப்போவதில்லை.

அவ்வாறான போலித்துறவியரிடத்தில் தொடர்பு கொண்டவர் எவராயினும் கீழான கதிக்கே சென்றடைவர் என்று நம்மை எச்சரிக்கை செய்துள்ளார் ஆச்சார்யஸ்ரீ அவர்கள்.

இது போன்ற துறவியரையும், அசிரமங்களின் லீலைகளின் செய்திகளாக தினம் தினம் வருவதைக்காணும் போது; அக்காலத்திலிருந்த வேடதாரிகளின் வாரிசுகளாக இருப்பவர்கள் என்பதை புரிந்து கொள்ளுதலே விவேகம். இந்த மித்யாத்வ சந்நியாசிகளிடத்தில் கவனமுடன் தூர இருப்பதே அறவழிப்பயணத்தில் பங்கம் ஏற்படாமல் நம்மைக் காக்கச் செய்யும் என்பதே இப்பாடலின் தெளிவு.






गेहं गुहाः परिदधसि दिसो विहायः
संव्यानमिष्टमशनं तपसो{भिवृ(िः
प्राप्तागमार्थ तव सन्ति गुणाः कलत्रा-
मप्राथ्र्यवृत्तिरसि यासि वृथैव या×चाम् ।।151।।


கேஹம் குஹா: பரிததாஸி திஸோ விஹாய: 

ஸம்யானமிஷ்டமசனம் தபஸோஅபிவிருத்தி: | 
பிராப்தாகமார்த தவ ஸந்தி குணா: களத்ர – 
மப்ரார்த்யவிருத்திரஸி யாஸி வ்ரதைவ யாச்சாம் || 151 ||
O knower of the essence of the Scripture! Caves are your residences; the directions and the sky clothe you; advancement in austerity is your pleasing food; and qualities like right faith (samyagdarśana), rather than women, are your charms. Thus, you have nothing to plead for. Do not unnecessarily become miserable by pleading for favours.
ஜினவாகமத்தின் சாரத்தை அறிந்தவரே! குகைகள் உங்கள் குடியிருப்புகள்; திசைகளும் வானமும் உங்கள் உடைகள்; தவத்தில் முன்னேற்றம் என்பது உங்கள் மகிழ்ச்சியான உணவு; மற்றும் சரியான நம்பிக்கையே (நற்காட்சி) உங்கள் மனைவி; இந்த முக்கிய அம்சங்களே உங்கள் வசீகரம். எனவே, நீங்கள் யாசிக்க எதுவும் இல்லை. பிறரின் உதவிக்காக மன்றாடுவதன் மூலம் தேவையின்றி பரிதாபப்பட வேண்டாம்.

லெளகிக வாழ்க்கையில் எந்தெந்த முக்கிய ஆசைக்காக, விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக பிறரின் உதவியை நாடவேண்டியுள்ளது என்பதை தபவாழ்வை ஏற்ற முனிவரைப் புகழ்ந்துரைக்கும் வரிகளின் வழியே தெரிவித்துள்ளார் ஆச்சார்யஸ்ரீ. அவரது கற்பித்தல் முறையே ஜினவறத்தை எக்காலத்திலும் வாழும் மானிடரையும் ஏற்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது என்பதில் ஐயமேற்பட வழியில்லை.

Vision, Mission, Values என்று இந்தக்காலத்தில் corporate கள் வரையறை செய்து அதனை தங்களது பணியாளர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்து அவர்களை அந்த வழியில் உழைக்கச் செய்து நிறுவனத்தின் இலட்சியத்தை குறிப்பிட்ட காலத்தில் சென்றடையும் Management strategy ஐ;

மிகச்சாதாரணமாக எந்த ஒரு கட்டுப்பாட்டையும் சீடர்கள், வழிநடப்பவர்களுக்கு விதிக்காமல், திணிக்காமல் தானும் அதே இலட்சியப்பணத்தில் வளர்ச்சியடைவதோடு, அனைவரது ஆன்மீக வளர்ச்சி நிலையிலும் கவனத்தை வைத்து உடன் அழைத்துச் செல்லும் இந்த தவசியின் மேலாண்மையை இப்பாடல்களின் வழியே அவர் காட்டும் யுக்தியை காணும் போது மெய்சிலிர்க்கவே வைக்கிறது.

அவர் ஒரு நிறுவனத்தை துவங்கியிருந்தால் உலகளவில் ஒரு பெரிய ஸ்தாபனமாக, பெரும் பணக்காரர்களில் ஒருவராக பரிணமித்திருப்பார் என்பது திண்ணம். லெளகிகத்தில் முன்னேற்றத்தை அடைய வெறித்தன்மையுடன் வாழ்ந்த (என்) போன்றவர்களுக்கு அது போன்ற கீழான ஒப்பீடு வருவதில் எந்த ஒரு ஆச்சர்யமுமில்லை.

ஏனென்றால் லெளகீகம் என்ற இப்பிறவியில் பொருள்சார்ந்த முன்னேற்றமும், அதன்வழியில் ஈட்டும் இன்ப உணர்ச்சிகளுக்கு மட்டுமே காரணமாய் அமைவது. ஆனால் மறுபிறவிக் கொள்கையை ஏற்ற சமணம், பெளத்தம், ஏன் இந்துமதமும் கூட லெளகீக வாழ்வுநெறி மேன்மைக்கான அறிவு வளர்ச்சிப்பாதையை அடிப்படையில் திணிக்க விரும்பவில்லை. சில சுயநல ஆன்மீக வியாபாரிகளால் முக்தி மார்க்கத்திலிருந்து விலகி திசை மாறிச் சென்று விட்டதே யதார்த்தம்.

எனவே இருவழி வாழ்வியலை அளித்து, அதாவது இல்லறம், துறவறம் என்ற இருநெறிகளை கடைபிடிக்கும் போது கண்டிப்பாக இம்மையிலும், மறுமையிலும் துன்பங்கள் வெகுவாகக் குறைந்து ஒரு காலக்கட்டத்தில் பேரின்பத்தில் திளைக்க வழிவகுக்கவே அறவழி வழிகாட்டுதலையே வழங்கியுள்ளார்கள் ஆன்மீகச் சான்றோர்கள், ஞானியர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உலகில் செல்வம், பிறபொருளை பெருக்கிக்கொள்ள அதன் மீது கொண்ட விருப்பத்தினால் ஏதோ ஒரு வகையில் பிறரிடம் உதவிக்காக நேரிடையாகவோ, தந்திரமாக மறைமுகமாகவோ யாசிக்க வேண்டியுள்ளது. அதாவது எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று பிச்சை யெடுக்க வேண்டிய நிலைஏற்பட்டு விடுகிறது.. அதற்கு காரணம் ஆசை யெனும் மன எழுச்சி உணர்வே. அதுவே இவ்வுலத்தின் மாயையை மறைக்கச் செய்து தோற்றத்தில் மயங்கி அதனைப் பெறுவதற்கான திவிர சிந்தனையை, பாவனை வடிவில் அளித்து நம்மை பல பிறவிகளிலும் பெரும் துன்பத்தில் வீழ வைத்து வேடிக்கைப் பார்க்கிறது.

உண்மையில் இவ்வுலகப் பொருள் அனைத்தும் நிரந்தரமாக இருப்பதான தோற்றத்தை அளிக்கக்கூடியவையே. இருப்பதைப் போன்ற பிரமையை தோன்றச் செய்யும் மாயவலையே. நிலையற்ற அப்பொருளின் மீதான வேட்கை உணர்வே நம் ஆணவத்தை தூண்டச் செய்து அனைத்தையும் சேகரிக்கும் விழைவை ஏற்படுத்துகிறது. அதற்கான உழைப்பிலேயே நம் ஆயுள் காலமும் விரயம் ஆகிறது. இது போன்ற முன்தலைமுறைக் கூட்டமே நம்மை அந்த உணர்விற்கு அழைத்துச் சென்று படுகுழியில் தள்ளிவிடுகிறது. நாம் செக்கு மாடுபோன்று நிலையற்ற இவ்வுலக இன்பத்தை பெற நிலையற்ற பல பொருட்களை, புகழ், பெருமை, பிரபல்யத்தில் வீழ்ந்து சுற்றி சுற்றி வட்டமடித்தபடியே பல பிறவிகளாக வாழ்ந்து வருகிறோம்.

ஆனால் விவேக ஞானியரோ தவவாழ்வை ஏற்று நிரந்த சத்தியத்தை நோக்கிய பாதையை வரையறை செய்து அதில் பயணிக்கின்றனர். அவ்வாறன மேலான அறவாழ்வை ஏற்றவர்கள் துறவற/இல்லற தவசி யாராயினும் தங்குமிடத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. இயற்கை நிழல்களையே வெயில், மழை, குளிர்களுக்கான உறைவிடமாக கொள்கின்றனர். எல்லா பருவ காலத்தின் வெப்பதட்பங்களுக்கு ஏற்ற உடலை பயிற்சி செய்து பழக்கியதால் திசைகளையே ஆடையாக அணிகின்றனர்.

அதாவது பூமியின் சுற்றுத்திசை வழிப்பயணமே நமக்கு பருவகாலங்களை மாற்றி மாற்றி அளித்து வருகிறது. அந்த பூமியின் திசைப்பயணத்தையே வென்றவர்கள் என்பதால் உடை ஒரு பொருட்டாக அவர்களது உடலுக்கு தேவைப்படுவதில்லை. ஆன்மாவே- தான்- என்ற நிலைப்பாட்டில் உடலே தனக்கான ஆடையாக தோன்றிவிடும். அவ்வுணர்வு நிலையில் வாழ்வதால் உடையின் மேல் உடை ஒன்று தேவைப்படுவதில்லை. அதே போல் கற்ற சிலபயிற்சிகளால் பெற்ற சித்தி/ரித்திகள் பிரபஞ்ச சக்தியை உறிஞ்சியும், மூச்சுக்காற்றை நிலை நிறுத்தும் ஆற்றலைப் தருவதால் அன்றாட உணவுக்கான தேவை இவ்வுடலுக்கு இல்லாமல் போகிறது என்பதே உண்மை.

இவ்வாறு இவ்வுலகத்தின் சார்புநிலை மிகக்குறைந்து ஒருநிலையில் அந்த பற்றிலிருந்து முற்றிலும் அவர்கள் விடுபட்டு விடுவதால் உணவு, உடை, உறைவிடத்தேவையும் இல்லாத நிலையை அடைந்து விடுகின்றனர். அதுவே இவ்வுலக நிரந்தமின்மையை உணர்ந்த நிலை. அக்கொள்கையே நிரந்தமானது. உலகத்தில் பொருளின் மாற்றம் என்றும் மாறாதது என்பதை முற்றிலும் உணர்ந்த மாறாதஉணர்வு நிலையில் வாழும் முறையே தவவாழ்வு.

அத்தவவாழ்வை மேற்கொள்ளும் ஒருவரால் தான் இவ்வுலகத் துன்பத்திலிருந்து, பல பிறவித்துன்பத்திலிருந்து விடுதலை பெற்று நிரந்த பேரானந்தத்தை அளிக்கும் சித்த உலகில் வாழும்பேற்றை பெற்று அங்கு திளைக்க முடியும் என்பதை தெரிவிப்பதே ஆச்சார்யஸ்ரீ யின் நோக்கமாக இந்நூற்பா தெரிவிக்கிறது.





परमाणोः परं नाल्पं नभसो न महत्परम् । 
इति ब्रुवन् किमद्राक्षीन्नेमौ दीनाभिमानिनौ ।।152।।

பரமாணோ: பரம் நால்பம் நபஸோ ந பரம் மஹத் | 

இதி ப்ருவன் கிமத்ராக்ஷீன்னேமெள தீனாபிமானினெள || 152 ||

‘Nothing is smaller than the atom (paramānu) and bigger than the sky (nabha).’ The one who says this has not seen the men who plead (for favours) and the men who are self-respecting.
அணுவை (பரமாணு) விட சிறியது எதுவுமில்லை, வானத்தை (ஆகாயம்) விட பெரியது எதுவுமில்லை.’ இதைச் சொல்பவர் கெஞ்சும் (உதவிக்காக) ஆண்களையும் சுயமரியாதை கொண்ட ஆண்களையும் பார்த்ததில்லை.

இருநெறிகளிலும் கஷாயமின்றி வாழ்பவரே உயர்ந்தவர் என்பதை இந்த நூற்பாவில் தெரிவித்துள்ளார் ஆச்சார்யஸ்ரீ அவர்கள். இதில் பரமாணு என்ற ஒரு திரவியத்தைப்பற்றிய செய்தியும், ஆகாயம் என்ற திரவியத்தைப்பற்றிய செய்தியும் கூறி அதனைப்பற்றி நாம் தெரிந்து கொள்ள விழைய வேண்டும் என்ற கற்பித்தலில் இறங்கியுள்ளார். அதுதான் சிறந்த கல்வியாளருக்கான பண்பாகும்.

லோகம் என்பது பூமி மட்டுமல்ல இந்த மொத்தப் பிரபஞ்சத்தையுமே சமணம் அவ்வாறு குறிப்பிடுகிறது. அதன் செய்திகளை கரணானுயோகம் என்ற பிரிவில் வழங்கியுள்ளது.

ஆறு திரவியங்கள் - உயிர், உயிரற்றது, தன்மம், அதன்மம், ஆகாயம், காலம் - முழுவதுமாக நிரம்பியப் பகுதிகளை லோகாகாயம் எனப்படுகிறது. (கயிறு, யோசனை என்ற பெளதீக அளவீட்டில் காணலாம்) மற்றவை அலோகாகாயம் ஆகிறது. இதில் முதல் ஐந்து திரவியங்களும் லோகாகாயத்தில் தனக்கான பிரதேசத்தை(cubic-volume) ஆக்கிரமித்துள்ளன. காலம் மட்டுமே பிரதேசமற்றது. ஆகாயத்திரவியம் ஒன்றேஒன்றுதான் லோகாகாயத்தில் உள்ளது. அதனால் லோகாகாயத்தின் முழுக்கொள்ளளவுமே ஆகாயத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதுவே லோகஸ்வரூபமாய் காட்சியளிக்கிறது. அதனுள் அதன்மம், தன்மம் தலா ஒவ்வொன்றாக உள்ளது. அவை மூன்றுமே ஒரே ஒரு திரவியம் என்ற எண்ணிக்கையில் தான் இந்த பிரபஞ்சத்தின் லோகாகாய பகுதியில் உள்ளன. அந்த மூன்றும் ஒன்றுக்கொன்று இணக்கமாக பிணக்கின்றி ஒற்றுமையாய் ஒன்றுக்குள் ஒன்றாய்(ஆகாய வீட்டில் வாழும் குடித்தனம் போல) அமைந்துள்ளன.

இவை மூன்றின் பிரதேசத்திற்குள் உயிர் எனும் soul திரவியம் நிறைய உள்ளன. அதை விட பரமாணு என்ற உயிரற்ற புத்கலத்திரவியம் பலமடங்காக வியாபித்துள்ளன. இவை இரண்டும் தனித்தனியான பிரதேசத்துடன் மற்ற மூன்றிற்குள் வாழ்கின்றன. இந்த புத்கலத்தின் மிகச்சிறிய ஒரு அணுவே பரமாணு என்று கூறப்படுகிறது. அது ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கூட்டான தோற்றத்தை பெறும் போது ஸ்கந்தம், ஸ்தூலம் என்று அதன் கூட்டுப்பொருளான தோற்றத்தில் பிரதேசஅடர்த்தியுடன் காணப்படுகிறது.

ஆன்மா என்ற திரவியம் இந்த புத்கலத்துடன் சேரும், பின்னர் பிரியும், மறுபடியும் சேரும் என்ற அடிப்படையில் ஒன்றாக, பிரிந்து, மீண்டும் ஒன்றாக என்றளவில் வாழும் பகுதியும்; புத்கலங்கள் முற்றிலும் சேராத பகுதியுமாக இரண்டு லோகாகாயப்பகுதியில் உள்ளது. இவை இரண்டும் சேர்ந்த பகுதியில் மூன்று உலகங்களும், இவை இரண்டும் சேராநிலையில் வாழவழிவகுக்கும் பகுதிக்கு சித்தலோகம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த மூன்றும் சேர்ந்தே ஆகவேண்டும் என்ற ஊர்த்வ, மத்திம, அதோ லோகப்பகுதி அதாவது சுவர்க்க, மத்திம, நரக லோகப்பகுதியே உயிரினப்பகுதியாக அதாவது ஆன்மா+புத்கலம் சேர்ந்த பகுதியாகவும், இவை இரண்டும் இணக்கமின்றி வாழவகைசெய்யும் முக்திப்பிரதேசத்தை அதாவது ஆன்மாக்கள் மட்டுமே ஒன்றுடன் ஒன்று இணக்கமுடன் வாழும் பகுதியை முக்திப்பிரதேசமாகவும் பகவான் மஹாவிரர் தனது கேவலஞானம் என்னும் அறிவியல் நோக்கில், நிச்சய நோக்கில் முற்றிலும் ஆராய்ந்து அளித்துள்ளார்.

ஆக பிரபஞ்ச அறிவியல் நோக்கில் பரமாணு என்பவை இந்த லோகத்தில் மிகச்சிறிய பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ளவை. ஆகாயத்திரவியமே பிரபஞ்சத்தின் லோகாகாயம் முழுவதுமே அக்கிரமித்துள்ள ஒன்று என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

- சமணத்தில் கரணானுயோகமே மிகவும் முக்கியமாக கற்க வேண்டிய பகுதி. அந்த பாடத்திட்டத்தில் தான் மொத்த பிரபஞ்ச அறிவியல் சார்ந்த கருத்துக்கள் நிரம்பி உள்ளன. பெரும்பாலும் நுண்பொருள் கோட்பாடுதான் கூறப்பட்டுள்ளது. அதாவது meta-physics மேலும் Astronomy, Astrophysics, Microbiology, Botony, zoology, chemistry இவ்வாறாக படிக்கப்படிக்க அனைத்து விஞ்ஞானத்துறைகளுமே இதில் அடங்கி விடும். -

மொத்த அறிவியல் முழுவதையும் மஹாவிரர் சுயம்புவாக தனது சூன்யத்தியானத்தின் வழியே அறிந்து, உணர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு பிரபஞ்ச அறிவியல் முற்றிலும், முழுவதும் உணரும் ஆற்றல் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நிரம்பி உள்ளதை அவர் பல இடங்களில் தெரிவிக்கிறார். அதனால் தனக்கு சமமாகவே அத்தனை ஜீவராசிகளையும் அவர் காண்கிறார். அதுவே சமதாபாவ உணர்வாகும். அவ்வாறான நிலையை எட்டிய பகவான் (எவரும், எதுவும்) முழுதுணர்விஞ்ஞானி – முழுதுணர்ஞானி எனப்படுகிறார்.

அப்பேருண்மைகளை, சத்தியங்களை அத்துனை ஜீவராசிகளுக்கும் தெரிவிக்கும் மொழிஆற்றல் மிக்கவர்களே, திவ்யத்தொனி வழியே கற்பிக்கின்றனர். அந்த ஆற்றல் உள்ளவரையே அருகதை உடையவரையே அருகதர், அருகர், அரஹந்தர் என்று வணங்கி மரியாதை செய்கிறோம்.

பகவான் ஒரு கடவுளா இல்லை பிரபஞ்சத்தை முழுவதுமாக ஆய்ந்து, அறிந்த அறிவியல் விஞ்ஞானியா என்பதை அவரவர் முடிவு செய்து கொள்ளுங்கள். சமணம் முழுவதுமே அறிவியல் கருத்துகள் தான் நிரம்பியுள்ளது. இது ஒரு தத்துவத்தின் வழியே வளர்ச்சியடைந்த கருத்துக்களை கொண்டதல்ல; இப்படியானல் அப்படித்தானிருக்கும் என்று கணிக்கப்பட்டதல்ல. ஒவ்வொரு சித்தாந்தமும் அனுபவத்தில், உணர்வு பூர்வமாக உணர்ந்த வழிகாட்டுதலை கொண்டது.

சமணம் - தெய்வீக ஆன்மீகம் - என்பதை விட - அறிவியல் ஆன்மீகம் - என்று கூறுவதுதான் பொருத்தமாக அமையும். (sorry எங்கோ பாதை மாறி பயணிக்க ஆரம்பித்து விட்டேன். மீண்டும் நூற்பாவிற்குள்…)

முற்காலத்தில் மனிதன் வனத்தில் விலங்குகளுடன் தான் வாழ்ந்து வந்துள்ளான். அதனுடன் இணக்கமாகவே இருந்துள்ளான். அவனுக்கு தாவரங்கள் அளிக்கும் காய், கனிகளே உணவாக கிடைத்துள்ளது. அதனை உண்டு மிகவும் ஆரோக்கியமாகவே வாழ்ந்துள்ளான் என்ற வரலாறுகள் எல்லோரும் ஏற்றுக் கொண்டவையே. அவன் துன்பம் என்றால் என்ன என்று தெரியாமலே வாழ்ந்து வந்தான். அதுவரை அவனது தன்மானம் அகாய பிரதேசம் வரையில் வியாபித்திருந்தது.

பின்னர் ஐம்புலன் உணர்ச்சியில் வீழ்ந்து விட்டதில் ஆசை, விருப்பம், விழைவு போன்றவை தோன்றி விட்டது. தேவையானதை திரட்டவும், தேவையற்றதை விலக்கவும் ஆன வேட்கை உணர்வு தோன்றியது. அதுவே அவனை இயற்கையிடம் யாசிக்க தூண்டியது. அவனது விருப்பதை இயற்கை அளிக்க வேண்டும் என அன்றாடம் இரங்கினான். பின்னர் இரங்குதலை நிறுத்தியும் வேண்டயதை இயற்கையிடம், பிரபஞ்சத்தில் பெறும் தவறான அறிவு வளர்ச்சி பெற்றதும்; தானே எதையும் உருவாக்க முடியும் என்ற செருக்கில் வீழ்ந்து விட்டான். உருவாக்க இயற்கை துணைபுரிவதை மறந்து விட்டான். இயற்கை வளங்களுக்கு ஊறு விளைவிக்கும் அளவிற்கு அவனது விருப்பம் மேலோங்கியே வளர்ந்து கொண்டிருக்கிறது.

அவ்வாறான நான், எனது; தான், தனது என்ற இருளுக்குள் நுழைந்து விட்டதுமே ஆகாயதிரவிய பிரதேச அளவு அறத்தில் வாழ்ந்தவன், இன்று புத்கலப்பரமாணு பிரதேச அளவிலான அறவுணர்விற்கு தாழ்ச்சி பெற்று விட்டான் என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் ஆச்சார்ய பெருமகானார் அவர்கள்.

எனவே அறவுணர்வில் வளர்ச்சி பெற்றாலொழிய மனிதன் மேன்மையடைவது இல்லை. அதுவரை அவன் துன்பத்தில் உழன்று பல பிறவிகளில் சுழல வேண்டியே வரும். முழு அளவில் வளர்ச்சி பெறுவது அவரவர் தனித்தன்மையே. அவ்வாறு வளர்ச்சியடைவேன் என்ற உறுதியேற்றால் அருகர் வழங்கியுள்ள வழிகளில் கவனம் செலுத்தி, தவவாழ்வை ஏற்றால் மட்டுமே இந்த துன்பக்கடலிலிருந்து பேரானந்த பிரதேசத்தின் கரைக்கு செல்லும் படகில் பயணிக்க முடியும் என்பதே அவர் இந்தப்பாடலில் அளிக்கும் தெளிவு.





याचितुगौरवं दतुर्मन्ये संक्रान्तमन्यथा | 
तदवस्थौ क्थं स्यातामेतौ गुरुलघू तदा || 153 ||

யாசிதுர்கெளரவம் தாதுர்மன்யே சங்க்ராந்த மன்யதா | 

ததவஸ்தெள கதம் ஸ்யாதரமேதெள கருலகூ ததா || 153 ||

I believe that the pride of the man who pleads (for favours) gets transferred to the giver. Had it not been true, why, at the time of transaction, the man who gives appears imposing and the man who receives pitiable?
இரக்கும் மனிதனின் பெருமை (உதவிக்காக) கொடுப்பவருக்கு மாற்றப்படும் என்று நான் நம்புகிறேன். அது உண்மையாக இல்லாதிருந்தால், ஏன், பரிவர்த்தனை நேரத்தில், கொடுக்கும் மனிதன் பெருமையாகவும், பெறுபவன் பரிதாபத்தைப் பெறுபவனாகவும் தோன்றுகிறான்?

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல். - குறள்: 1066

‘இப்பசுவுக்குத் தண்ணீர் தாருங்கள்’ என்று பிறரை இரத்தலும் ஆகாது; அவ்விரத்தல் போல ஒருவனுடைய நாவிற்கு இழிவு தருவது வேறு இல்லை. என்று குறளாசிரியரும் இரத்தலை குறைவான செயலாகவே கருதுகிறார்.

கரவாத திண்ணன்பிற் கண்ணன்னார் கண்ணும் இரவாது வாழ்வதாம் வாழ்க்கை - இரவினை உள்ளுங்கால் உள்ளம் உருகுமாம்; என்கொலோ, கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு? - நாலடியார்: 305

இரந்து வருபவர்களுக்குப் பொருளை ஒளிக்காது உள்ளத்தைக் கொடுக்கின்ற உறுதியான அன்பினையுடைய கண்போன்ற மேலோர்களிடத்திலுங்கூடச் சென்று யாசியாமல் வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும். யாசித்தலாகிய அந்தச் செயலை நினைக்குங் காலத்திலேயே உள்ளம் உருகிப் போகின்றது. அப்படியிருக்கவும் பிறரிடம் இரந்து ஒன்றைப் பெற்றுக்கொள்ளுங் காலத்திலே அப்படிக் கொள்பவரின் நோக்கந்தான் என்னவோ?

மிகப்பரிதாப நிலையில் இரந்து வாழ்பவர்களாயிருந்தாலும் தங்களது பெருமை, தன்மானத்தை இழக்கின்றார்கள். அவர்களது கெளரவம் எந்த அளவிற்கு இழிவின் அளவால் கழிக்கப்படுகிறதோ, அதே அளவு கெளரவம் அவருக்கு அளிப்பவரிடம் சென்று சமன் செய்து கொள்கிறது என்று கணிதமுறையில் தன்மான உணர்வு சமன்பாட்டை அளித்துள்ளார் முனிவர் பெருமான் என்றே தோன்றுகிறது.

விருப்புள்ள மனிதன் விருப்பத்தை தானே நிறைவேற்றிக் கொள்ளுதலே மேலானது. அதுவே லெளகீத்திலும் தன்மானமாகவே கருதப்படுகிறது. விருப்பம் என்பது என்றும் மிகுபொருள் வேட்கையே என்று மறைபொருளாய் இந்நூற்பாவில் வழங்குகிறார் ஆச்சார்யர் அவர்கள். அதுவும் உழைக்காமல் அதை பெற நினைப்பது மிகவும் கீழான செயல். அது மேலும் வினைக்கட்டை கூட்டவே செய்யும் என்றும் அறிவுருத்துகிறார். ஆசைப்பொருள்கள் சேகரித்தலில் தன் செல்வத்தை தீர்த்தவர்கள் யாசிக்க துணிவது மிகவும் கீழான செயலாகும். அதனால் அவர்களுக்கு தன் உழைப்பால், புண்ணியத்தால் பெற்றதை அளிப்பவனுக்கோ மேலும் கெளரவம் வந்தடைந்தாலும் புண்ணிய வினைக்கட்டு சேரவே செய்யும்.

அதனால் தேவையை மிஞ்சிய ஆசையை பூர்த்தி செய்யும் எந்த ஒரு வேட்கையை வேண்டிப்பெறுவதும், ஈடுசெய்ய தருவதும் வினைக்கட்டிற்கே வித்திடும் என்பதையே தெளிவாக கூறியுள்ளார் முனிவர் பெருமான்.

அதே சமயம் விருப்பத்தை, வேட்கையை விலக்கும் பயிற்சியில் ஈடுபடும் தவவாழ்வில் ஒழுகும் தவசிகள் பிச்சை ஏற்பது இழிவான செயலல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஆசையை வேறுவழியில் பூர்த்தி செய்து விட்டு இரந்து பெறும் இழிவானவர் அல்ல என்பதே உண்மை. அதை அளிக்கும் இல்லறத்தாருக்கும் நல்வினைக்கட்டு ஏற்படுவது இயற்கையானாலும் அவ்வாறு அறவாழ்வில் வாழ்பவரை ஆதரிக்கும் நவதா பக்தியுடனான பாவனை அவனை அறவாழ்வில் நழுவாது வாழச்செய்து மேலான நிலைக்கு உயர்த்திவிடும் என்பதையும் அறிதல் நலம்.





अधो जिघ्रुक्ष्वो यान्तयूघ्ररुवमजिघुक्ष्व: | 
इति स्पष्टं वद्न्तौ वा नामोन्नामौ त्लान्त्ये: || 154||

அதோ ஜிக்ருக்ஷவோ யாந்தி யாத்ன்யூ த்ர்வமஜிக்ருக்ஷவ: | 

இதி ஸ்பஷ்டம் வதந்தோ வா நாமோன்னாமெள துலாந்தயோ: || 154 ||

The two pans of the scale, one going up and the other down, clearly indicate that the man who desires to take is on the pan that goes down – he becomes downcast – and the man who does not desire to take is on the pan that goes up – he becomes exalted.
தராசில் இரண்டு தட்டுகள், ஒன்று மேலே சென்று மற்றொன்று கீழே இருப்பது போல, ஆசையினால் யாசிக்க விரும்பும் மனிதன் கீழே செல்லும் தட்டு என தெளிவாகக் குறிக்கிறது - அவரோ மனச்சோர்வடைகிறார் - மற்றும் யாசிக்காத மனிதன் அந்த மேலே செல்லும் தட்டில் இருக்கிறார் - அவரே உயர்ந்தவர்.

ஜைன வினைக்கொள்கையின் படி யாசிப்பரிடம் உலோபகஷாயம் மேலோங்கி தீவிரத்துடனும் காணப்படும். பிற கஷாயங்கள் குறைந்திருந்தாலும் அவரை செயல் அறமற்ற செயலே. அதனால அவர் கீழான நரக உலகம் புகுவார் என்கிறது. அதே சமயம் ஆசையற்று பொருளை யாசிக்காதவன் உயர்ந்த கதியை அடைகிறான். எனவே யாசிப்பது இழிவு என்கிறார் முனிவர் பெருமான்.

கஷாயம் – என்பது துவர்ப்பசை எனலாம். அதாவது கடும் உணர்வு (passion). ஆத்மாவில் கறைபடியக் காரணமானவை, அதாவது வினைக்கட்டிற்கான காரணிகள். குரோத, மான, லோப, மாயா என நான்கு பிரதானவகையாக கூறப்படுகிறது. ஒவ்வொன்றிலும் நான்கு உட்பிரிவுகள் உள்ளன. அவையே 148 வகையான திரவிய வினை பந்திக்க காரணமாகிறது. இவை பாவனை வடியில், தீவிர சிந்தனையாக, எழுச்சி பெற்ற எண்ண அலைகளாக உணர்வை பாதித்து ஆன்மாவில் கறைபடியச் செய்கின்றன.

எவ்வாறு மது கஷாயத்தின் மீது ஏற்பட்ட கடும்உணர்வு(passion) மனிதனின் உடலை நடுங்கச் செய்து நிறைவேறியதும் சமநிலைக்கு வருகிறதோ. கஷாய உணர்வு தோன்றினால் எண்ண எழுச்சி பெற்று வினை என்னும் புத்கலதிரவியம் ஆன்மாவில் கறைபடியச் செய்தபின் தான் அடக்கம் பெறும்.





सस्वमाशासते सर्वे न स्वं तत्सर्वत£प यत् ।
अ£थवैमुख्यसम्पादिसस्वत्वान्नि:स्वता वरम् ।।155।।

ஸஸ்வமசாஸதே ஸர்வே ந ஸ்வம் தத் ஸர்வதர்பி யத் |
அர்திவைமுக்யஸம்பாதிஸஸ்வத்வான்னி: ஸ்வதா வரம் || 155 ||


All men look forward to receiving charity from the man of wealth; however, no amount of wealth can satisfy all supplicants. It is, therefore, better to be poor than a man of wealth who causes dissatisfaction among the supplicants.
தங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்து கொள்வதே செல்வந்தரின் இயல்பு. அதனால் அனைவரது விருப்பத்தையும் திருப்தி செய்ய இயலாது. யாசிப்பவரையும் திருப்தி செய்ய இயலாது ஏமாற்றத்தையே தரும். அதை விட செல்வமுடையதை விட இல்லாத நிலையே சிறந்தது.

செல்வமில்லாதவர்கள் செல்வமுடையவரை நாடியே தங்களது விருப்பத்தை பூர்த்திச் செய்து கொள்ள விழைவர். எவரும் தங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வதையே பிரதானமாக கொள்வர். அதற்காகவே செல்வத்தையும் ஈட்டுவர். அதனால் பிறரது விருப்பத்தையும், யாசிப்பவரின் அளவையும் பூர்த்தி செய்ய இயலாதும் போவதுண்டு. அப்போது அவர்கள் தங்களது விழைவு நிறைவேறாத காரணத்தால் அதிருப்தியடைவதோடு, பகைவர்களாகவும் மாறவும் வாய்ப்புள்ளது. அதனால் செல்வத்தை ஈட்டும் விழைவை நீக்கி பொருள் ஈட்டும் விருப்பமின்றி வாழ்வதே மேல் என்ற தெளிவையே அது அளித்து விடும்.

செல்வந்தனை; ஆளும் அரசும், வீட்டின் மனைவி, மக்கள், நண்பன் மற்றும் யாசகம் செய்பவரும் கூட எதிர்பார்த்தே வாழ்வர். அவரை திருப்தி செய்வதிலேயே வாழ்வில் பணம் ஈட்டுவது நிகழ்ந்து கொண்டே இருக்குமே ஒழிய தனது விருப்பத்தை பூர்த்தி செய்வதை எக்காலத்திலும் அச்செல்வ வேட்கை விடுவதில்லை. அதை மீறிச் செல்வம் ஈட்டினால் உலோபம், மானம் போன்ற தீய உணர்வுகளே தீவிரமடையும் என்ற தெளிவே மேநிலையை அளிக்கவல்லது.

நல்வினை உதயத்தால் செல்வம் வந்து சேர்ந்தால் அவற்றை தானமளிப்பதால் உலோப உணர்வு குறைய வாய்ப்புண்டு. இருப்பினும் செல்வம் வாழ்க்கையில் நிம்மதியையும், மன அமைதியையும் குறைக்கவே செய்து விடும் என்பதால், செல்வம் ஈட்டுதலில் விருப்பமின்றியும், கூடுதலாய் இருப்பின் சரியான ஈகையில் அவ்விருப்பத்தை குறைத்தலினால் வாழ்வில் உயர்ந்த மகிழ்ச்சியை யளிக்கும் என்று அறிவுறுத்துகிறார் முனிவர் பெருமான்.





आसाखनिरतीवाभूदगाध निध्भिशच या । 
सापि येन समीभूता तत्ते मानध्नं ध्नम् ।।156।।

ஆஷாசுநிரதீ வாபூதகாதா நிதிபிச்ச யா | 

ஸாபி யேன ஸமீபூதா தத்தே மனதனம் தனம்: || 156 ||

The extremely deep pit of desires cannot be levelled off by the divine treasures (of the king-of-kings, cakravartī), but can be levelled off by the wealth of self-respect (desirelessness). Know that self-respect is your true wealth.
ஆசைகளின் மிக ஆழமான குழியை தெய்வீகபுருஷர்களின்(சக்கரவர்த்தி) பொக்கிஷங்களால் கூட சமன் செய்ய முடியாது, ஆனால் சுய மரியாதை (ஆசையற்ற தன்மை) செல்வத்தால் மட்டுமே சமன் செய்ய முடியும். எனவே சுயமரியாதை உங்கள் உண்மையான செல்வம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

நான்கு கஷாயங்களில் மனித இனத்திற்கு உலோபகஷாயமே மேலோங்கி இருக்கும் என்பது பொதுவான விதி. அவ்வாறான பற்றுதலே ஆசையைப் பெருக்கும் காரணியாகும். அக்காஷாய மிகுதியே யாசகத்திற்கும் வழிவகுக்கும் என்பதையே இப்பாடலின் வழியே ஆச்சார்ய பெருமான் தெரிவிக்கிறார்.

இவ்வுலகப் பொருட்வேட்கையில் தோன்றும் எழுச்சி உணர்வே இவ்வுலகில் பெருங்குழியாகும். அக்குழியை எந்த ஒரு சக்கரவர்த்தியின் செல்வத்தினாலும் நிரப்பிட இயலாது. கொட்டக் கொட்ட ஓட்டைப்பார்த்திரம் போல் நிரம்பாமலே இருக்கும். ஒரு பேராசைக்காரனின் மண்டை ஓட்டில் செய்த திருவோட்டை எவ்வளவு அமுது இட்டாலும் நிரப்பிட முடியாது. அது போடப்போட அமிழ்ந்து கொண்டே இருக்கும். புதிய வெற்றிடம் தோன்றியவண்ணம் இருந்து கொண்டே தான் இருக்கும் என்பது ஞானியரின் வாக்கு.

அப்பெரும்பள்ளத்தை நிரப்ப ஒரே வழி தன்மானம் என்னும் உபாயமேயாகும். அவ்வுணர்வு ஏற்படின் யாசிக்கும் நினைவே தோன்றுவதில்லை. அது நுழைந்தால் ஆசை வளர்வதில்லை.

அதனால் எவ்வித உழைப்பும் இல்லாமல் ஆசையைப் பூர்த்தி செய்ய யாசிப்பது பெருங்குற்றம் என்ற வழிகாட்டுதலை நமக்களிக்கிறார் முனிவர் பெருமகனார்.





आशाखनिरगाधेयमध्ःकृतजगत्रया । 
उत्सप्र्योत्सप्र्य तत्रस्थानहो सद्भिः समीकृता ।।157।।

ஆசாகனிரகாதேயமத: க்ருத ஜகத் த்ரயா | 

ஊத்ஸர்ப்யோத் ஸர்ப்ய தத்ரஸ்தானஹோ ஸப்தி: ஸமீக்ருதா || 157||

In the bottomless pit of desires, the three worlds have gone down. It is a wonder that by successively renouncing objects, like wealth that the pit is filled with, noble men have levelled it off.
ஆசைகளின் அடிமட்ட குழியில், மூன்று உலகங்களும் கீழே போய்விட்டன. குழி நிரப்பப்பட்டளவு செல்வத்தைப் பெற (எண்ணாமல்), இவ்வுலகப் பொருள்களை அடுத்தடுத்து கைவிடுவதன் மூலம், உன்னத முனிவர்கள் அதை சமன் செய்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

தேவைக்கு மேல் ஆசைப்படத்தொடங்குபவர்களுக்கு எவ்வளவு பொருட்கள் கிடைத்தாலும் அது நிறைவேறுவதே இல்லை. ஏனெனில் இன்றைய இலக்கு நாளைய துவக்கமாகி மீண்டும் தேடத்தொடங்கி விடுவதே ஆசை என்னும் உணர்வு நிலை. ஆசை பேராசைக்கு வித்திடுமே தவிர நிறைவேறியதாக இதுவரை எவருக்கும் நிகழ்ந்ததில்லை என்று எச்சரிக்கை செய்வதே முனிவரின் இப்பாடலின் நோக்கம்.

ஒன்றை பெற்றபின் அடைந்த பொருள் அடுத்ததை தேடத்துவங்கும். பின்னர் அந்த பொருள் வேறொரு பொருளை உள்ளுக்குள் அழைத்துக் கொண்டிருக்கும். இப்படி சங்கிலித்தொடர் போன்றதே பற்றென்னும் பரிக்கிரஹம். இது லோபத்தீவிர உணர்வின் ஸ்பரிசத்தால் தோன்றுபவை.

அதனால் முற்றும் துறந்த முனிவர்களே தேவைகளைத் தியாகம் செய்யும் பயிற்சியுடன் வாழ்வதால், ஆசையென்னும் படுகுழிக்குள் இறங்குவதே இல்லை. விருப்பு வேறுப்புகளின் வேட்கையை விலக்கி சமதா பாவத்துடன் பழகுவதால் ஆசை யெனும் குழியை தோண்டாமலே தம் வாழ்நாளைக் கழிக்கின்றனர். இது வியப்பான ஒரு அணுகுமுறையாகும் என்பதை தெரிவிப்பதே இப்பாடலின் தெளிவு.





विहितविध्निा देहस्थित्यै तपांस्युपबंृहय- नशनमपरैर्भक्त्या दत्तं क्वचित्कियदिच्छति । 
तदपि नितरां लज्जाहेतुः किलास्य महात्मनः कथमयमहो ग्रुहर्त्यन्यान् परिग्रहदुग्र्रहान् ।।158।।

விஹிதவிதினா தேஹஸ்தித்யை தபாம்ஸ்யு பம்ருஹயன் 

நசனபரைந்பக்த்யா தத்தம் க்வசித் கியதிச்சதி | 
ததபி நிதராம் லஜ்ஜாஹேது: கிலாஸ்ய மஹாத்மன:, 
கதமயமஹோ க்ருஹணாத்யந்யான் பரிக்ரஹதுர்க்ரஹான் ||158||

In order to keep his body stable, the ascetic, rich in austerities (tapa), thinks of accepting a little food, offered with devotion by others, at a particular time and as per the method prescribed in the Scripture. This too causes great embarrassment to this great-soul (mahātmā). It is then a wonder if such a great-soul accepts other demonlike possessions.
முனிவர் தனது உடலை சீராக வைத்திருக்க, தவ நடவடிக்கைகளில் முன்னேறுவதற்காக மற்றவர்களால் பக்தியுடன் வழங்கப்படுகிற, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மற்றும் ஆகமத்தில் பரிந்துரைக்கப்பட்ட முறையின்படி ஒரு சிறிய அளவு உணவை ஏற்றுக்கொள்ள நினைக்கிறார்கள். இதுவும் இந்த ஆத்மாவுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அத்தகைய ஒரு மஹாத்மா மற்றவரின் உடைமைகளை ஏற்றுக்கொள்ள வெட்கப்படுகிறது. இதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

முனிவர்கள் பிறரிடம் ஆகாரம் ஏற்றுக் கொள்வதால் பற்றுள்ளவர்கள் என்று நினைப்பது தவறு என்பதை விளக்கும் பாடல்.

ஆசைகளைத் துறந்தவர்கள் எவரும் உணவை எற்பது என்பது மட்டும் எவ்வாறு இயலும். அவர்கள் தியான மற்றும் தவவாழ்வில் மேன்மேலும் உயரவே எந்நேரமும் இவ்வுடலை கருவிபோல் பயன்படுத்துகின்றனர். அதற்காக மட்டுமே அவர்களுக்கு உணவு தேவைப்படுகிறது. அதை இல்லறத்தாரில் எவர் நவபுண்ய கிரமங்களுடன் பக்தி பூர்வமாக அளிக்கிறாரோ அவரிடமே ஏற்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்போதும் தங்களுக்கு கூறப்பட்ட விதிமுறைகளை முழுவதும் கடைபிடித்தே ஆகாரத்தை ஏற்கின்றனர். ஆர்வமில்லாமல் எவர் தரும் உணவையும் அவர்கள் ஏற்பதில்லை. தானே சமைத்தும் உண்பதில்லை அதேசமயம் பிறர் கொடுக்காததை நிர்பந்தித்து கேட்டும் உண்பதில்லை.

எப்போதும் வயறு நிரம்பவும் ஏற்பதில்லை. பசிக்கு சிறிதளவே விருப்பமின்றியும் ஏற்கின்றனர். அவர்களுக்கு இந்நிலை ஏற்படுவதற்காக வெட்கப்படுவர். அவ்வாறான ஒழுக்கத்தில் வாழ்பவர்களுக்கு செல்வம், ஆடை முதலான பிறபொருட்களின் மீது பற்று ஏற்படுவதேயில்லை.





दातारो गृहचारिणः किल ध्नं देयं तदत्राशनं 
र्गृीन्तः स्वशरीरतोशपि विरताः सर्वोपकारेच्छया । 
लज्जैषैव मनस्विनां ननु पुनः कृत्वा कथं तत्पफलं 
रागद्वेषवशीभवन्ति तदिदं चक्रेशवरत्वं कलेः ।।159।।

தாதாரோ க்ருஹசாரிண: கில தனம் தேயம் ததத்ராசனம், 

க்ருஹன்ந்த: ஸ்வசரீர தோஅபி விரதா: சர்வோபகரேச்சயா |
 லஜ்ஜை ஷைவ மனஸ்விநாம் நனு புன: க்ருத்வா கதம் தத்பலம் ராகத்வேஷவஸீ பவந்தி ததிதம் சக்ரேஸ்வரத்வம் கலே: || 159 ||

The giver of the gift is the householder and the wealth that he offers with devotion to the worthy recipient is the food. The ascetic, who has the well-being of all in mind and who is unconcerned about own body, accepts this wealth of food. Even this desire for food causes embarrassment to the self-respecting ascetics. How, then, the givers (the householders) and the recipients (the ascetics) fall prey to attachment and aversion in respect of giving and taking of food? Surely, this is the ill-effect of the kali age (the fifth period, called dusamā).
தானம் வழங்குபவர் இல்லறத்தார் மற்றும் தகுதியான முனிவருக்கு பக்தியுடன் அவர் வழங்கும் செல்வம் உணவாகும். அனைவரின் நல்வாழ்வையும் மனதில் வைத்திருப்பவரும், சொந்த உடலைப் பற்றி அக்கறையற்றவருமான முனிவர், இந்த உணவை ஏற்றுக்கொள்கிறார். உணவுக்கான இந்த ஆசை கூட சுய மரியாதையுடைய சந்நியாசிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அப்படியிருக்க கொடுப்பவர்கள் (இல்லறத்தார்கள்) மற்றும் பெறுபவர்கள் (முனிகள்) உணவு கொடுப்பதற்கும், எடுத்துக்கொள்வதற்கும் எவ்வாறு விருப்பு வெறுப்புக்கு இரையாகிறார்கள்? நிச்சயமாக, இது கலியுகத்தின் மோசமான விளைவு (ஐந்தாவது காலமான தீக்காலத்தினால் என்று சொல்லப்படுகிறது).

அதாவது முனிகள் தங்கள் தவவாழ்வில் மேன்மையுறவே உடலை காக்கின்றனர். அதனால் எளிய உணவை அவ்வப்போது எடுத்துக் கொள்கின்றனர். உணவே பிரதானம் என்ற நோக்கில் அவர்கள் வாழ்வதில்லை. அதனால் அவர்கள் விருப்பு வெறுப்பின்றி கஷாய உணர்வுகள் ஏற்படுத்தி கேடு நேர்வதற்கு காரணமாக இருப்பதில்லை. அதனால் புஷ்டியில்லாத, மிகுந்த சத்தில்லாத உணவையே ஏற்கின்றனர். அதுவே முனிதர்மம் அவர்களுக்கு இட்ட அறிவுரையாகும். அச்சாதகர்கள் எக்காலத்திலும் சாரமற்ற உணவையே ஏற்பதை பெரிதாக கருதுகின்றனர்.

அவ்வாறில்லாமல் நல்ல உணவை ஏற்று, சோம்பேறியாக வாழவே சிலர் முனிவர் வேடத்தில் வாழ்வதையும் நாம் காண்கிறோம். அவர்கள் கலிகாலத்தில் சக்கரவர்த்தி போல் வாழ்வை நடத்துகின்றனர். தேவர்கள் பலரும் சக்கரவர்த்திக்கு கட்டளை இடாமலே சூழ்நிலையை யறிந்து உதவி செய்து பெருமையடைவர். அதுபோலவே தங்களுக்கும் நடக்கிறது எனத் தற்பெருமை யடைகின்றனர் இக்கால போலித்துறவியரும். இது முனிதர்மத்திற்கு முரணாகும்.

அவ்வாறான தீக்காலத்துறவியர்களை அடையாளம் கண்டு ஒதுக்கி வாழ்தலே இல்லறத்தாருக்கும் தீவினை அண்டாமல் இருக்கும் என்று வேடதாரி சந்நியாசிகளிடத்தில் கவனம் வைக்க எச்சரிக்கிறார் ஆச்சார்யஸ்ரீ குணபத்ரரும்.





आमुष्टं सहजं तव त्रिजगतीबोधध्पित्यं तथा 
 सौख्यं चात्मसमु७वं विनिहतं निर्मूलतः कर्मणा । 
दैन्यात्तद्विहितैस्त्वमिन्द्रियसुखैः सन्तृप्यसे निस्त्रापः 
स स त्वं यशिचरयातनाकदशनैर्ब(स्थितस्तुष्यसि ।।160।।

ஆம்ருஷ்டம் ஸஹஜம் தவ த்ரஜ்கதிபோதாதி பத்யம்ததா, 

ஸெளக்யம் சாத்மஸமுத்ரவம் வினிஹதம் நிர்மூலத: கர்மணா| தைன்யாத்தத்விஹிதைஸ்த்வமிந்திரியககை: ஸந்த்ருப்யஸே நிஸ்த்ரப:, 
ஸ் த்வம் யச்சிரயாதநாகதஸனைர்பத்தஸ்திதஸ்தஸ்துஷ்யஸி: || 160 ||

O soul! Your natural attribute of knowledge that encompasses objects of the three worlds has been destroyed by karma, and your natural bliss that is independent of all external objects has also been destroyed completely by karma. For long you have observed self-imposed inflictions like fasting and partaking of only the unsavoury food. Now, without shame, you are feeling satisfied with the lowly sensepleasures provided by karma.
ஆத்மா! மூன்று உலகங்களின் பொருள்களை உள்ளடக்கிய உங்கள் இயற்கையான வாலறிவின் பண்பு கர்மாவால் அழிக்கப்பட்டுவிட்டது. மேலும் அனைத்து வெளிப்புற பொருட்களிலிருந்தும் சுயாதீனமாக இருக்கும் உங்கள் இயற்கையான பேரின்பமும் கர்மாவால் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. உண்ணாவிரதம் மற்றும் விரும்பத்தகாத உணவை மட்டுமே பங்கேற்பது போன்ற சுயமாக விதிக்கப்பட்ட விதிகளை நீண்ட காலமாக நீங்கள் கடைபிடித்திருக்கிறீர்கள். இப்போது நாணமின்றி, கர்மா வழங்கிய இந்திரிய உணர்வுகளில் நீங்கள் திருப்தி அடைகிறீர்கள்.

-------------------

தனக்குத் தானே கூறிக்கொள்ளும் அறிவுரை போல பலபாடல்களை அமைத்தது போன்றே இதனையும் படைத்துள்ளார் முனிவ பெருமான். (சில கோமாளிகளும் திரையில் அதுபோன்று கூறிக் கொள்வதைக் கண்டிருக்கலாம்) ஷேக்ஸ்பியரும் தனது நாடகங்களில் ஒரு பாத்திரம் தனக்குத்தானே கூறிக்கொள்வதுபோல (soliloquy, மனஒலி) சில காட்சிகளை அமைத்திருப்பார். அதுபோன்று வெளிப்படுத்தும் யுக்தியை பலநூற்றாண்டுக்கும் முன்னரே முனிவர் பெருமானும் அறிமுகம் செய்துள்ளார். புராண காலத்திய பல விஷயங்களும், யுக்திகளும் இன்றும் வழக்கத்தில் மாற்றுத் தோற்றத்தில் உலவி வருவதை அதனை படிக்கும் போது காணலாம்.

------------------

முழுதுணர்ஞானத்தை இயல்பாய் பெற்றிருந்தும் தேவையின்றி இவ்வுடல் வழிபெற்ற மனம் கூறும் அறிவுரைக் கேட்டு துன்பமுறுகிறாய் ஆன்மனே! என்று சுயஅறிவுரையை தனிமொழியாய் தருகிறார் முனிவர். இது எல்லா ஆன்மனுக்கும் (மனிதர்களுக்கும்) பொருந்தக்கூடியதே என்பதை நாம் உணர்தல் வேண்டும். அனைத்து ஜீவராசிகளின் ஆன்மனிடத்தும் வாலறியும் பண்பு நிறைந்திருந்தும், இப்பூவுலகில் பிறந்து வினைத்துகள்களின் பண்பை தன் தன்மையாக, குணமாக தவறாக நம்பிக்கை வைத்து துன்பமுற்று இப்பிறவிசுழற்சியில் சுழன்று வருகிறது என்பதை சுயவிரக்கமாய் கூறப்பட்டுள்ளது.

எவ்வளவோ செல்வம் படைத்திருந்தும் ஒருவன் பிச்சைக்காரன் போல் வாழ்வது போன்றது இச்செயல். உலகையே முழுதும் உணர்ந்த ஆற்றல் இருந்தும் அதன்மீதுள்ள படிந்துள்ள கர்மத்திரையை விலக்க முயற்சி செய்தலே சிறந்த செயல் என்பதை அறிவுறுத்துகிறார். மேலும் இக்கருமங்களை விலக்க பலவித உபாயங்களை கட்டுப்பாடுகளாய், விரதமாய் ஏற்று சொற்ப உணவை உண்டு அதில் கிடைக்கும் மகிழ்ச்சியை பெரிதென நினைத்து உழன்று கொண்டிருக்கிறாய். உள்ளுக்குள் உறைந்துள்ள ஆனந்தக்கடலை காணாது இந்த சிறிய குளத்தில் நீந்தி மகிழ்கிறாய் என்று இடித்துரைக்கிறார். இச்செயலுக்கான வருத்தமில்லாமல், வெட்கமின்றி இந்திரிய சுகங்களை மேலாக கருதி மகிழ்ச்சியடைவது விவேகமற்ற செயல் என்கிறார்.

பெரும் செல்வத்தை எதிரி நாட்டவனிடம் இழந்து அவனிடம் சிறைப்பட்டு அவன் அளிக்கும் களிச்சோற்றை உண்டு மகிழ்வதற்கு ஒப்பாகும் இச்செயல். அவ்வரசனது நிலை எவ்வளவு கீழானதோ அதே போன்றது இச்செயலாகும்.

அனந்த ஞானம், தரிசனம், வீரியம், ஆற்றல் இந்நான்கையும் இயல்பாக பெற்று பேரானந்தத்திற்கு அதிபதியாய் இருந்தும், கர்மம் என்ற பகைவன் அந்த அனந்தநான்மையை பறித்துக்கொண்டு ஏழ்மையில் உன்னைத் தள்ளிவிட்டான். இந்த கர்மத்தில் வந்த புண்ணியவசத்தால் சில புலனின்ப சுகத்தை பெற்று மகிழ்ந்து வருகிறாய். அதற்காக பெரும் உழைப்பையும் வீணடித்துக் கொண்டிருக்கிறாய். அதனை விடுத்து அறவழியில் பயணித்து இக்கருமங்கள் அனைத்தையும் அழித்து விடுதலைப் பேற்றுக்கு வழியளிக்கும் புருஷார்த்தங்களை ஏற்று வாழ்நாளை கடத்துவாயாக என அறிவுருத்துகிறார் ஆச்சார்ய குணபத்ரரும்.

ஆகையால் பொருட்சார்ந்த செயலை விலக்கி, விஷய சுகங்களில் பற்றின்றி வாழவேண்டும். நம்மை நாமே நிந்தினை செய்யத்தூண்டும் இந்நிலைக்கு வெட்கமுற்று கர்மங்களை அழிப்பதற்கான உபாயங்களை இன்றே தொடங்குதல் நலம் என்பதே தெளிவு.





तृष्णा भोगेषु चेद्रिभिक्षो सहस्वाल्पं स्वरेव ते । 
प्रतीक्ष्य पाकं ¯क पीत्वा पेयं भु¯क्त विनाशयेः ।।161।।

த்ருஷ்ணா போகேஷு சேத்ரிபிக்ஷோ ஸஹஸ்வால்பம் ஸ்வரேவ தே | ப்ரதீக்ஷய பாகம் கிம் பீத்வா பேயம்புக்திம் வினாசயே: || 161 ||


O ascetic! If you are seeking sensual-enjoyment, endure, for a while, little pain due to observance of vows, etc. These enjoyments will be yours in heaven. While the food being cooked, why do you mar your appetite by drinking water, etc.?
ஓ முனியே! நீங்கள் சிற்றின்பத்தை தேடுகிறீர்களானால், சிறிது காலம் விரதங்களைக் கடைப்பிடிப்பதால் ஏற்படும் சிறிய வலி போன்றவற்றை பொறுத்துக்கொள்ளுங்கள்; பின்னர் இந்த இன்பங்கள் பரலோகத்தில் உங்களுடையதாக இருக்கும். உணவு சமைக்கப்படும்போது குடிநீர் போன்றவற்றால் உங்கள் பசியை ஏன் குறைக்க முயல்கிறீர்கள்?

இந்தப்பாடல் முனிதர்மத்தில் பயணிப்பவர்களுக்கு புலனின்ப வேட்கை கூடாது என்பதை தெரிவிக்கவே அளித்துள்ளார். அவர் வாழ்ந்த காலத்தில் பிற தரிசன சந்நியாசிகளின் மடங்கள், சங்கங்கள் பல இருந்துள்ளன. அவற்றில் பெளத்தமடங்கள் உட்பட அங்குள்ள பிக்குகள் எப்போதாவது விரும்பினால் புலனின்பத்தை தணித்துக் கொள்ளலாம் என்ற விதிகளும் இருந்தன. அவ்வாறு செய்வது தவறு என்பதை குறிப்பிடவே இப்பாடலை அளித்திருக்கக்கூடும்.

இன்று புத்தர் வழியில் பயணிக்கும் துறவிகள் மாமிசம் உண்கின்றனர். எப்போதாவது, கட்டுக்கடங்காத வேளையில், புலனின்பத்தில் ஈடுபடலாம் என்று குறிப்புள்ளதாக கூறிக்கொள்கிறார்கள். அதனால் கரும பந்தமும் ஏற்படுவதில்லை என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். அதனால் பெரும்பாலான யோக மரபில் பயணிக்கும் இன்றைய சாமியார்கள், கடவுள் மறுப்புக் கொள்கையை ஆதரித்தாலும் இந்த இரண்டையும் துய்ப்பதற்காக புத்தமதக்கூறுகளையே வழிகாட்டுதலாக கொண்டு தங்கள் (ரசிகர்கள்) கூட்டம் வளர்ச்சியடைய இப்பாதையில் பயணிக்கின்றனர்.

ஜைன மதத்தில் இவ்விரண்டும் அறமற்ற, ஒழுக்கமற்ற செயலாக கூறப்படுவதால் மிகவும் கடுமையான விரதங்களைக் கொண்டது ஜைனத்துறவறம் என்று பரப்பவும் செய்கின்றனர். இன்றைக்கு கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்றும், பலியிடுதலை எதிர்ப்பதாக சொல்லும் ஆன்மீகவாதிகளும், தங்களை யோக மரபினர் என்று சொல்லிக் கொள்பவர்களும், மேலும் ஜைன மதத்தில் பிறந்த ஓஷோ போன்றோரும் ஞானம் பெற்றதாக கூறிக்கொண்டாலும் புத்தரின் அடிச்சுவட்டில் பயணிப்பதோடு, அதுவே மேன்மையான துறவற நெறி எனக் கூறிக்கொள்வதும் இந்த இரு காரணங்களுக்காகத்தான் என்பதை நாம் உணரவேண்டும்.

சமண மதத்தில்; துறவறம் ஏற்பவர்கள் இல்லற தர்மத்தில் சிலவற்றை மட்டும் ஏற்று ஒழுகுவது இல்லறத்தாரை விட கீழானவர்களாக கருதப்படவர் என்பதையும் அறிந்து கொள்ளுதல் நலம்.

அதனை அக்காலத்திலேயே விமர்சித்த ஆச்சார்யர் குணபத்ரரும் நம் தூய்மையான தவவாழ்வின் மேன்மையைக் குறிப்பிடவே இப்பாடல்களை வழங்கியுள்ளார் என்றே தெரிகிறது.

அதனால் அறவழியில் பயணிக்கும் தவசியர் புலனின்ப வேட்கை தோன்றும் போது அவற்றை கட்டுப்படுத்தி முழுபிரம்மச்சரியத்தில் அதாவது தொடுபுலனின்பம் மற்றும் சுவையின்பத்தை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்பதாக குறிப்பிடுகிறார். மேலும் அவ்வாறு பொறுமையுடன், சகிப்புத்தன்மை மேலாக துறவறத்தில் பயணிப்பவர்களுக்கு மறுபிறவியில் அதைவிட கூடுதலான இன்பத்தை சுவைக்க மேற்கதி நீண்ட ஆயுளுடன் காத்து நிற்கிறது என தீர்க்கத்தரிசியைப் போல் அறிவுறுத்துகிறார். அவ்வாறில்லா துறவியற்கு; உணவு தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் சற்று பொறுமையுடன் நில்லாமல் நீரை அருந்தி பசியை மந்திக்கச் செய்வதால் எந்த பயனுமில்லை என்று உவமையுடன் எடுத்துரைக்கிறார் ஆச்சார்ய பெருமானார்.

அதனால் துறவறநெறியினர் முனிதர்மத்தில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதிலிருந்து வழுவாமல் தவத்தில் வாழ்ந்துவந்தால் மேன்மையான கதியே அவர்களுக்காக காத்துக்கிடக்கிறது என்பதை இப்பாடல் மூலம் புரிந்து கொள்ளல் நலம்.





निरधनत्वं ध्नं येषां मृत्युरेव हि जीवितम् । 
किं करोति विध्स्तिेषां सतां ज्ञानैकचक्षुषाम् ।।162।।

நிர்தனத்வம் தனம் யேஷாம் ம்ருத்யுரேவ ஹி ஜீவிதம் | 

கிம் கரோதி விதிஸ்தேஷாம் ஸதாம்ஞானைகசக்ஷுஷாம்: || 162 ||

What harm can karma do to the ascetics endowed with the knowledge-eye, whose wealth is their nonpossessiveness and whose life is their death?
ஞானக்கண் கொண்ட சந்நியாசிகளுக்கு கர்மா என்ன தீங்கு செய்ய முடியும், அவர்களது சொத்து பற்றின்மை என்றும் மற்றும் அவர்களின் மரணம் வாழ்வு என்றிருக்கும் போது…

கர்மா எவரை வந்து பற்றிக்கொள்ளும் என்பதை; முனிவரின் வாழ்விற்கு எதிரிடையான வாழ்வை வாழ்பவர்களையே வந்தடையும் என்று தெரிவிப்பதே இப்பாடலின் நோக்கம்.

புலன்களின் இயக்கத்தை ஒடுக்கி தியானத்தில் அமர்வதே நிஷ்டை. எனவே தான் முனிவர்கள் நிஷ்டை எனும் அரிய வழியைக் கையாண்டார்கள். அவ்வாறு நிஷ்டையில் அமர்பவருக்கு உறுதுணையாய் இருப்பது செல்வம் சேர்க்காமை, மரணத்தைப் பற்றிய அச்சமின்மை மற்றும் ஞானக் கண்ணால் ஆராய்ந்து எச்செயலையும் செய்வது போன்ற ஒழுக்க வாழ்வு முறையே கைகொடுக்கும். அந்த வாழ்க்கையை பிரம்மச்சாரிகளால் மட்டுமே வாழ்தல் இயலும். அவர்களால் மட்டுமே மனச்சஞ்சலம் இல்லாமல் தியானத்தில் சிறக்க முடியும்.

அவ்வாறான வாழ்வு முறையில் வாழும் முனிவர்களை எவ்வாறு வினைகள் வந்து சேரும் என்று சொல்வதால்; பிறருக்கு அந்த செல்வத்தின் மீதுள்ள பற்றையும், எப்போது மரணம் வந்து நம்மைக் கவ்விக் கொள்ளுமோ என்ற அச்சத்தையும், எதையும் ஆராயாமல் வினைக்கட்டிற்கு வழிவகை செய்யும் காரியங்களையும் விட்டொழிக்குமாறு அறிவுறுத்துகிறார் ஆச்சார்யஸ்ரீ குணபத்ரரும்.

அதற்கு எதிரிடையாய் வாழும் மாந்தர்களுக்கு புலனடக்கமின்மையால் நிஷ்டையில் அமர இயலாது. அதாவது தியானத்தில் சிறிது நேரம் கூட அமர முடியாது என்றுரைக்கிறார்.





जीविताशा ध्नाशा च येषां तेषां विधर्विधि: । 
किं करोति विध्स्तिेषां येषामाशा निराशता ।।163।।

ஜீவிதாஸா தனாஸா ச யேஷாம் தேஷாம் விதர்விதி: | 

கிம் கரோதி விதிஸ்தேஷாம் யேஷாமாசா நிராசதா: || 163 ||

Karma can do harm only to those who desire life and wealth; it can harm them by destroying their cherished life and wealth. What harm can karma cause to those whose desire for life and wealth has vanished completely? In fact, if it takes away their life or wealth, it furthers their cause.
உயிர் வாழ ஆசையும் செல்வத்தையும் விரும்புவோருக்கு மட்டுமே கர்மா தீங்கு செய்ய முடியும்; அது அவர்களின் நேசத்துக்குரிய வாழ்க்கையையும் செல்வத்தையும் அழிப்பதன் மூலம் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். உயிர் மற்றும் செல்வத்திற்கான ஆசை முற்றிலும் மறைந்துவிட்டவர்களுக்கு கர்மா என்ன தீங்கு விளைவிக்கும்? உண்மையில், அது அவர்களின் வாழ்க்கையையோ செல்வத்தையோ பறித்தால், அதற்கான பாதிப்பை மேலும் அதிகரிக்கிறது.

ஆசை அறுமின்! ஆசை அறுமின்! ஈசனோடாவது ஆசை அறுமின்கள்!' என்கிறார் திருமூலர்.

அதாவது எவரொருவர் நீண்டநாள் வாழவேண்டும், நிறைய பொருள் ஈட்ட வேண்டும் என்று நினைகின்றார்களோ அவர்கள் நிலையிலாதவற்றின் மீது பற்ரு வைக்கிறார் என்றுதான் சொல்கிறார்கள் ஞானியர். அதே கருத்து பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் முனிவர் அவர்களும் தெரிவித்துள்ளார். இவ்வுலகில் நிலையானவற்றின் மிது ஆசை வைப்பதே வெற்றியைத் தரும். பொன்னும், பொருளும், ஆயுளும் நிலையில்லாதவை அவற்றின் மீது ஆசை வைத்தால் நிறைவேறாது, நிறைவேறினாலும் கையில் நீண்ட நாள் நில்லாது என்பதை புரிய வைப்பதே இப்பாடலின் நோக்கம்.

-----

ஒரு ஞானி காட்டில் தவம் செய்துகொண்டிருந்தார். அவ்வழியில் ஒரு மன்னர் தனது படையுடன் குதிரையில் வந்தார். ஞானியைக் கண்டதும் குதிரையிலிருந்து இறங்கி, அவரைப் பணிந்தார்.

"சுவாமி! நான் இந்நாட்டு மன்னன். அண்டை நாட்டுடன் போர் செய்து அந்நாட்டின் வளங்களையெல்லாம் கொண்டுவரச் செல்கிறேன். ஆதலால் என்னை ஆசீர்வதியுங்கள்''" என்றார். "அப்படியா!'' என்று சொல்லி தனது கையிலிருந்த ஒரு நாணயத்தை மன்னரிடம் தந்தார் ஞானி. மன்னர், ""சுவாமி! என்னிடம் பொன்னும், பொருளும் நிறைய உள்ளன. இந்த நாணயம் எதற்கு?'' என்றார்.

"மன்னா! இந்த நாணயம் நான் வரும் வழியில் கிழே கிடந்தது. அது எனக்கு பயன்படாது. பணம் தேவைப்படுபவருக்கு இது பயன்படும். எனவே, இந்த நாணயத்தை யாருக்காவது கொடுத்துவிடவேண்டும் என்று முடிவு செய்தேன். வழிநெடுகிலும் நான் பார்த்த மக்களெல்லாம் தங்களுக்குக் கிடைத்ததை வைத்து மகிழ்ச்சியாகவே இருந்தனர். நீங்கள்தான் பொன்னும் பொருளும் தேவைக்கு மேல் இருந்தும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறீர். அண்டை நாட்டு செல்வத்தின் மீதும் ஆசைகொண்டு படையெடுத்துச் செல்கிறாய். ஆதலால் தான், உனக்கு இந்த நாணயத்தைத் தருகிறேன்'" என்றார்.

மன்னர் தனது பேராசையின் தவறை உணர்ந்து அண்டை நாட்டின் மீது போரிடும் தனது பேராசையையும் தவிர்த்தார். இதுபோன்ற ஒரு வழிகாட்டுதலையே முனிவர் பெருமானும் நமக்களிக்கிறார்.





परां को¯ट समारूढौ द्वावेव स्तुतिनिन्दयोः । 
यस्त्यजेत्तपसे चक्रं यस्तपो विषयाशया ।।164।।

பராம் கோடிம் ஸமாரூடெள த்வாவேவ ஸ்துதிநிந்தயோ: | யஸ்த்யஜேத்தபஸே சக்ரம் யஸ்தபோ விஷ்யாசயா: || 164 ||


The man who leaves the grandeur of king-of-kings (cakravartī) for the sake of austerities (tapa) and, on the other hand, the man who leaves austerities for the sake of sense-pleasures, in turn, reach the highest levels of adoration and of derision.
ஒருபுறம் தவ நடவடிக்கைகளுக்காக ராஜாதிராஜாக்களும் (சக்ரவர்த்தி) ஆடம்பரத்தை விட்டு வெளியேறும் மனிதனும், மறுபுறம் புலன் இன்பங்களுக்காக தவவாழ்வை விட்டுவிடும் மனிதனும் உள்ளனர். இதில் முன்னவர் மிக உயர்ந்த நிலைகளை அடைகிறான் வணக்கத்தினை பெறுகிறான் மற்றவனோ ஏளனத்திற்கு ஆளாகிறான்.

சம்யக்த்வத்தை கடைபிடிக்க நல்வழியை தேர்வு செய்பவருக்கும், மித்யாத்வ சிந்தனையில் வீழ்ந்தவனுக்கான வித்தியாசத்தை இப்பாடலில் எடுத்துரைக்கிறார் முனிவர் பெருமான்.

உலகில் செயற்கரிய செயலைச் செய்பவர் போற்றுதலுக்கும், தீய பழக்கத்தில் விழ்ந்தவரை தூற்றவும் செய்வது இச்சமுகத்தில் வழக்கத்திலுள்ள செயலாகும். அவ்வாறு நம் ஆகமக்கதைகளில் தனது அரச பதவியை, சக்கிரவர்த்திபோன்ற மிக உயர்ந்த பதவியையும், செல்வத்தையும் துறந்து தவவாழ்வை ஏற்றுக் கொண்டவர்களை இவ்வுலகமே போற்றத்தான் செய்யும். அவரே புகழுக்குரியவராக கருதப்படுகிறது.

மாறாக தவ வாழ்வை ஏற்றபின் அதிலுள்ள் கடுமையான இயம, நியமங்களுக்கஞ்சுவதோடு, புலனின்ப வேட்கையை பெரிதாக கருது தவவாழ்க்கையை உதறி விடுபவர்களை எக்காலத்திலும் இச்சமுகம் தூற்றவே செய்யும் என்று முனிவர் கூறுகிறார்.

தனது நலனைப் எவர் பூர்த்தி செய்தாலும் போற்றுவதும்; பொறாமை, பகை, வெறுப்பில் எவரையும் இகழ்வதும் முறையான செயலல்ல. தவறான நடவடிக்கையாக பாவச்செயலாகவே ஆகமக் கதைகளில் வருகிறது.

அவ்வாறின்றி நல்லொழுக்கத்தில் தீவிரம் காட்டுபவரை புகழ்வது மட்டுமல்ல; ஒழுக்கத்திலிருந்து விலகி கீழான நிலைக்கு செல்பவனை இகழ்வதும் எந்த ஒரு கருமமும் அவ்வாறு விமர்சிப்பவரை அணுகுவதில்லை என்றும் கூறப்படுகிறது.





त्यजतु तपसे चक्रं चक्री यतस्तपसः पफलं 
सुखमनुपमं स्वोत्थं नित्यं ततो न तदद्भुतम् । 
इदमिह महच्चित्रां यत्तद्विषं विषयात्मकं
 पुनरपि सुधीस्त्यक्तं भोक्तुं जहाति महत्तपः ।।165।।

த்யஜது தபஸே சக்ரம் சக்ரீ யதஸ்தபஸ: 
பலம் 
ஸுகமனுபமம் ஸ்வோபதம் நித்யம் ததோ ந ததத்பூதம் | 
இதமிஹ மஹச்சித்ரம் யதத்விஷம் விஷயாத்மகம் 
புனரபி ஸுதீஸ்யக்தம் போக்தும் ஜஹாதி மஹத்தப: || 165 |

| The happiness obtained as fruit of austerities (tapa) is unparalleled (beyond worldly souls), self-dependent (generated by the soul itself, with no role of karma), and eternal. There is no wonder if the king-of-kings (cakravartī) leaves his kingdom for the sake of austerities (tapa). The great wonder, however, is when the wise man who had earlier renounced, like deadly poison, the sense pleasures, later on, leaves great austerities to indulge again in those sense-pleasures.
தவ நடவடிக்கைகளின் பலனாக பெறப்பட்ட ஆனந்தம் இணையற்றது (உலக ஆத்மாக்களுக்கு அப்பாற்பட்டது), சுய சார்புடையது அதாவது ஆன்மாவால் உருவாக்கப்படுவது, கர்மாவின் பங்கு இதில் எதுவுமில்லை. அதனால் மன்னாதி மன்னர்கள் தவ வாழ்விற்காக தனது ராஜ்யத்தை விட்டு வெளியேறினால் ஆச்சரிய பட எதுவுமில்லை. எவ்வாறாயினும், மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், எவ்வளவு அறிவிருந்தும் புலன் இன்பங்களில் மீண்டும் ஈடுபடுவதற்கு பெரும் தவ வாழ்வை விட்டு விடுவதுதான்.

இந்த உலகிலுள்ள அற்ப இன்பத்திற்காக ஆசைப்படாமல், நித்திய ஆனந்தத்தை நாடுவதில் எந்த ஒரு வியப்புமில்லை. பெரும் சக்கரவர்த்திகள் கூட தங்களுடைய ஆடம்பர வாழ்க்கையை தியாகம் செய்து அறவழியில் பயணிக்க கானகத்தை நாடுவது அது போன்றதாகும்.

அவ்வாறான விவேகம் அச்சக்கரவர்த்திக்கு ஆரம்பத்தில் இருப்பதில்லை. பல நாடுகளை வென்று மேலும் இன்பம் தருமென செல்வத்தை சேமித்து பின்னர் ஏற்பட்ட பல துன்ப அனுபங்களுக்குப் பின் உண்மையான சுகம் தவ வாழ்வில் என முடிவு செய்து மீதியுள்ள வாழ்நாளைக்கழிக்க தீட்சை ஏற்கின்றனர். ஆனந்தத்தை பெற இதுவே வழி என்ற அவ்வளவு உறுதியான நம்பிக்கையே அவர்களை அவ்வாறு செய்யத்தூண்டுகிறது. இதில் ஒன்றும் வியப்பதற்கில்லை, அற்பசுகத்தை நித்தியசுகத்திற்காக விலக்குவதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது.

அதே சமயம் தவவாழ்வின் சிறப்பை பல முனிவர்களின் வாயிலாக கேட்டு இளம் பிராயத்திலேயே பிரம்மசர்யத்தை ஏற்று, தவத்தில் ஒழுகி தியானப்பயிற்சியில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு துறவி, அந்த பேரரசர்கள் பலரது வரலாற்றை கேட்ட பின்னரும் விஷயஞானத்தில் மயங்கி கீழான அற்ப சுகத்திற்காக, தனது தவஒழுக்கத்தை தியாகம் செய்வது எவ்வளவு அறியாமையாகும். இது போன்ற அறிவிலாச் செயலே ஆச்சர்யத்தை தரவல்லது என்று துறவிகள் மீண்டும் இல்லறம் புகுவதை கீழான செயலாக கூறுகிறார் ஆச்சார்யஸ்ரீ குணபத்ரர்.

அதாவது நல்லமுதம் பருக முயற்சி செய்பவன் திடீரென கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷத்தைப் பருக துணிவது போன்றதாகும்.

அதனால் நல்ல தொரு புருஷார்த்தத்தை ஏற்கும் போது முக்திபதவியிலும், நித்திய சுகத்திலும், சம்யக்த்வத்திலும் முழு நம்பிக்கை வைத்தபின்னரே இல்லறமோ/ துறவறமோ அந்தநெறியை ஏற்றலே மேலான செயலாகும். அவ்வாறில்லாமல் ஏதோ அவசரபுத்தியுடன், இல்லறத்தில் ஏற்பட்ட கோபத்தினால், கழிவிறக்கத்தினால், பெரும் நஷ்டத்தினால் தவவாழ்வை விரக்தியுடன் ஏற்பதும்; பின்னர் ஏதோ அற்ப சுகமே பெரிதென மீண்டும் அவசரக்கோலத்தில் அதை விட்டு விலகுவதும் மோசமான விளைவையே அவர்களுக்கு ஒருவருக்கு விடும். அதாவது மீண்டும் இல்லறத்தில் விட்டது கிடைக்கும் போது மீண்டும் பாதைமாறிச் செல்லத்தூண்டிவிடும். அதுவே நரககதியையே அளித்து விடும் என்பதை துறவறம் மற்றும் இல்லறம் ஏற்கத் துணிபவர்கள் முன்எச்சரிக்கையாக தீவிரமாக சிந்தித்து, உறுதியான நம்பிக்கையை விதைத்த பின்னரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறான நெறிபிறழ்தல் சிந்தனை தீவிரவினைக்கட்டிற்கே வழிவகுக்கும் என்பதை உணர்த்துவதே இப்பாடலுக்கான தெளிவு..





श्ययातलादपि तुकोअपि भयं प्रपातात् 
तुङघात्ततः खलु विलोक्य किलात्मपीडाम् । 
चित्रां त्रिलोकशिखरादपि दूरतुङ्घाद् 
धीमान् स्वयं न तपसः पतनाद्विभेति ।।166।। 

சய்யாதலாதபி துகோஅபி பயம்பிரபாதாத் 

துங்காத்தத: சுலுவிலோக்யகிலாத்ம பீடாம் | 
சித்ரம் த்ரிலோகசிகராதபி தூரதுங்காத், 
தீமான் ஸ்வயம் ந தபஸ பதனாத்விபேதி || 166 ||

Even a child, apprehending injury, is fearful of falling down from his elevated bedstead. It is, however, highly surprising that the ‘wise’ ascetic is not fearful of falling down, on his own doing, from the high of austerities (tapa), higher than the summit of the three worlds.
ஒரு குழந்தை கூட உயரமான படுக்கையிலிருந்து இருந்து கீழே இறங்க பயப்படுகிறது. எவ்வாறாயினும், ‘புத்திசாலித்தனமான’ துறவியோ, மூன்று உலகங்களிலும் சிறந்த முனிதர்மத்திலிருந்து கீழே விழுவதற்கு அஞ்சுவதில்லை என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

முன்பாடலில் கூறிய கருத்துக்கு மேலும் வலுவூட்டும் படியாக விளக்கத்தை அளித்துள்ளார் முனிவர் பெருமான் அவர்கள்.

சிறு குழந்தையும் உயரமான இடத்திலிருந்து விழுந்தால் அடிபட்டு வலியெடுக்கும் என்று விபத்தாக சிந்தித்து எச்சரிக்கையுடன் செயல்படுகிறது. அது போன்ற அச்சம் அறிவிற் சிறந்த வாழ்வுநெறியை ஏற்று நடந்தால் நிரந்தர சுகம் கிடைக்கும் என்ற விவேக ஞானத்துடன் தவ நெறியை ஒருவர் ஏற்றபின் அதனை விலக்க அஞ்சவில்லை எனின் அவரது அறியாமையை என்ன வென்று சொல்வது.

விருப்பத்தின் காரணமாக உயர்ந்த நெறியிலிருந்து பிறழ்வதால் நிகோதநரகம் வரை சென்று துன்பத்தை பல காலம் அனுபவிக்க வேண்டி வரும் என்பதை அறிந்த பின்னும் அவ்வாறு நடப்பது நகைப்பிற்கும் உரிய செயலாகும்.





विशुध्द्यति दुराचारः सर्वो{पि तपसा ध्रुवम् । 
करोति मलिनं तच्च किल सर्वाध्रः परः ।।167।।

விசுத்தயதி துராசார: ஸர்வோஅபி தபஸா த்ருவம் | 

ஸுரோதி மலினம் தச்ச கில சர்வாதரோஅபர: ||167||

The austerities (tapa), as a rule, purify evil-conduct. The other wretched man (the ascetic) defiles even these austerities (tapa).
தவ நடவடிக்கைகள் ஒரு விதியாக, தீய வினைகளை தூய்மைப்படுத்துகின்றன. மற்ற சில மோசமான மனிதர் (துறவி) இந்த நல்ஒழுக்கங்களைக் கூட தீட்டுப்படுத்துகிறார்.

மீண்டும் துறவியரின் ஒழுக்கத்தில் உறுதியின்மையை கண்டிக்கிறார் ஆச்சார்யஸ்ரீ அவர்கள்.

எவனொருவன் தவ வாழ்வை ஏற்கிறானோ தபத்தின்மூலம் அவனது பாவங்கள் கழுவப்படுகின்றன. அவ்வளவு தூய ஒழுக்கமே துறவறநெறியாகும். அதனை ஏற்கும் போது இருந்த உறுதிப்பாட்டிலிருந்து எக்காலத்திலும் விலகுதல் நல்லதன்று. அவ்வாறான ஒழுக்க மீறல் பெரும் திவினையை சாதாரண மனிதனின் ஒழுக்க மீறலைக் காட்டிலும் கூடுதலாக சேர்த்து விடும்.

உதாரணமாக கழிவுகளை நல்ல நீர் தூய்மை செய்து விடுகிறது. ஆனால் அதே நன்னீர் முழுவதிலும் கழிவு கலந்து விட்டால் முழுவதுமே கழிவு நீராகிப்போய் தூய்மையற்று காணப்படுவது போல, தூய ஒழுக்கத்தை கடைபிடிக்கும் போது, அது மனமலங்களை தூய்மை செய்து வருகிறது. அவ்வாறான ஒழுக்கநெறியினால் வரையறை செய்யப்பட்டதே துறவறநெறியாகும்.

ஆனால் அந்நெறியை தேர்வு செய்த ஒருவன் அதை விட்டு விலகினால் மனம் முழுவதும் மலமாகவே மாறி விடும். அதுவே பல பிறவிகளுக்கும், நரககத்திக்கும் வழி வகுத்து விடும். அறநெறி சங்கத்தில் சேர்ந்தபின் பாபம் செய்ய ஒருவன் துணிந்தால் அவனிடம் வஜ்ரம் போல தீவினை ஒட்டிக்கொள்ளவே செய்யும் என்று எச்சரிக்கை செய்கிறார்.

இக்காலத்தில் அதுபோன்ற பொய்துறவிகளும், துறவியர் சங்கங்களும் புற்றீசல் போல தோன்றி பலரையும் மயக்கி பாபத்தில் விழச்செய்வதை அக்காலத்திலேயே முனிவர் சுட்டிக் காட்டியுள்ளார். அவர்களது பாவச் செயல்கள் எங்கு சென்றாலும் விலகப்போவதே இல்லை. எனவே துறவறநெறியை ஏற்றவர்கள் எக்காலத்திலும் நெறிபிறழாது காத்தல் வேண்டும்.





सन्त्येव कौतुकशतानि जगत्सु ¯क तु 
विस्मापकं तदलमेतदिह द्वयं नः । 
पीत्वामृतं यदि वमन्ति विसृष्टपुण्य संप्राप्य 
संयमनि¯ध् यदि च त्यजन्ति ।।168।।

ஸந்த்யேவ கெளதுகஸதானி ஜகத்ஸு கிம் து, 

விஸ்மாபகம் ததலமேததிஹ த்வயம் ந: | 
பீத்வாஅம்ருதம் யதி வமந்தி விஸ்ஷ்ட புண்யா:, 
ஸம்ப்ராப்ய ஸம்யமநிதிம் யதி ச த்யஜந்தி || 168 ||

In this world, there are hundreds of surprises. However, among these, two are the most striking: first, those unfortunate men who first drink nectar but vomit it subsequently; second, those who first acquire the treasure of austerities (tapa) but leave it subsequently. The idea is that those who first acquire the treasure of austerities but leave it subsequently due to attraction for sense-pleasures are lowly men who first drink nectar but vomit it subsequently.
இந்த உலகில், நூற்றுக்கணக்கான ஆச்சரியங்கள் உள்ளன. இருப்பினும், இவற்றில், இரண்டு மிகவும் குறிப்பிடத்தக்கவை: முதலாவதாக, அமிர்தம் குடித்தாலும், பின்னர் வாந்தியெடுக்கும் துரதிர்ஷ்டவசமானவர்கள்; இரண்டாவதாக, தவவாழ்வு எனும் புதையலை முதலில் பெறுபவர்கள், ஆனால் பின்னர் அதை விட்டு வெளியேறுபவர்கள். அப்புதையலை முதலில் பெற்றுக்கொண்டாலும், பின்னர் சிற்றின்ப ஈர்ப்பின் காரணமாக அதை விட்டு வெளியேறுபவர்கள் இந்த தாழ்வானவர்கள்

முன்னிரண்டு பாடல்களின் கருத்துக்களுக்கு மேலும் வலிமை சேர்ப்பது இப்பாடல் எனலாம். உலகில் பல வியப்பான, விந்தையான விஷயங்கள் நிகழ்கின்றன. அவற்றில் ஒன்று பல புண்ணிய பலனால் அமுதத்தைப் பெற்ற ஒருவன் அதைப் பருகுகிறான். அமுதம் உண்டால் அவனுக்கு நோயில்லா ஆரோக்கியம் கிட்டும் என்று அறிந்த பின்னும் ஏதோ ஒரு காரணத்தினால் அதை வாந்தி எடுத்து விடுகிறான்.

அதே போல பிறப்பினை அறுக்கும் ஒழுக்கநெறியான முனிதர்மத்தை ஏற்று பல்லாண்டுகள் ஒழுகி புலனக்கத்துடன் வாழந்த ஒருவன் கீழான புலனின்ப வேட்கையினால் அதனை விட்டு விலகுவதும் விபரீத புத்தியாகும் என்றுரைக்கிறார் ஆச்சார்யர்.

அதனால் எந்த மானுட லட்சியம் ஆன்ம விடுதலையை அளிக்குமோ அதனை நீண்ட நாள் சிந்தித்து ஏற்று அந்நெறியில் அடக்கத்துடன் வாழ்ந்த பின்னர் அதனை விட்டு விலகுவது மிகவும் கீழான செயலாகும்.

---------------------

இந்த தருணத்தில் ஒன்றை நாம் புரிந்து கொள்ளவேண்டும். குறளாசிரியர் கூறுவது போன்று எண்ணித்துணிக கருமம் என்றளவில் ஒன்றை தேர்வு செய்தபின்னர் அதில் வெற்றியடையும் முன்னரே வெளியேறுவது மிகவும் மனவலிமையற்ற செயலாகும். ஏற்றுக் கொண்ட பாதையில் பயணிக்கும் போது மனவலிமை குறையக்குறைய அதனை கூட்டிக்கொள்ளும் வழிகளை ஆராய்ந்து அதற்கான கூடுதல் பயிற்சியில் ஈடுபடாது மனத்தளர்ச்சி யுற்று வெளியேறுவதினால் இத்தனை நாள் உழைப்பும் வீணாகிப்போகும் என்பதே தெளிவாகும்.

செயல்படுத்தும் காலத்தில் பல சிக்கல்கள் வரத்தான் செய்யும். பல இடையூறுகள் நம்மை வெளியேற தூண்டவே செய்யும். அவ்வேளையில் அதற்கான சரியான தீர்வை, மாற்று வழிகளை வழிநடத்தும் குருவிடம் கேட்டு அப்பாதையில் தொடர்ந்து பயணிக்காமல், மனம் தளர்வது வாழ்நாள் முழுவதும் வீணாகிப்போகுமே தவிர, வேறு எந்த ஒரு பேறும், புகழும் கிட்டப்போவதில்லை என்பதையே அவரது முனிசங்கத்தினருக்கான வழிகாட்டல் வரிகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

-----------

மேலும் பிறவிப் பிணியறுக்க பலவழிகளை ஒவ்வொரு ஞானியரும் முற்காலத்தில் வகுத்துள்ளனர். அந்தந்த காலகட்டத்தில், ஒவ்வொரு பிரதேசத்திலும் அவரவரும் அங்குள்ள ஞானியரின் வழித்தடத்தைப் பின்பற்றி முக்தியடைந்துள்ளனர்.

எல்லா முக்திப்பாதையிலும் மெய்யுணர்வு, தன்னுணர்வு, ஆத்ம ஞானம் பெறுவது என்ற நிலைவரை முன்னோடியாய் திகழும் ஞானியரின் செயல்முறையில் செயல்படுதல் முக்கியமானது, உறுதியானதும் கூட.

ஆதியில் யோகமார்க்கம், தந்த்ரா போன்ற இருவழி யிருந்துள்ளது. இவை இரண்டும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை ஒன்றுக்கு ஒன்று எதிரானவை. அதன்பின், மன எல்லை கடந்த அனுபவத்திற்குப்பின், ஒருவருக்கு எல்லாம் ஒன்றுதான்.

பின்னர் புதியமார்க்கமாக அன்புணர்வில் இடையறாது திளைத்தல் அதாவது சரணாகதி வந்தது. இதுவே சற்று மாறி ‘ அனுமதித்து விடுதல்’(let go) என்ற செயல்வடிவாக சீனாவில் பரிமளித்தது. பின்னர் புத்தர் கூறிய சாட்சிபாவம் என்ற ஞானமடைதலுக்கான வழிகாட்டல் போன்ற பல மார்க்கங்கள் இங்கும், அங்கும் வரத்துவங்கின.

எல்லாமே மெய்யறிவு பெறும் வரையில் அம்மார்க்கத்தில் பிறழாது பயணிக்க வேண்டும். பெற்ற பின்னர் தாங்களே தங்களுக்கான விடுதலை மார்க்கத்தை வரையறுத்துக் கொள்வார்கள் சுயம்புவாக. இவையே பிறப்பறுக்கும் வழிகளுக்கான பொதுவான முறைகளாகும்.

அவ்வழியில் பயணிக்கும் போது பல ரித்திகளை ஒவ்வொரு நிலையிலும் அவர்களிடம் வந்து சேரும். (சமணம் 64 ரித்திகளாக கூறுகிறது) அவற்றில் சிலவற்றை நெருங்கியதும் ஞானம் பெற்றதாக கூறி வெளியேறியவர்கள் பலருண்டு.

ஆனால் பின்னாளில் அதுபோன்று அவதிஞானம் போன்ற மட்டில் பெற்ற ரித்தியாளர்கள் தங்களை ஞானியர் என்று கூறிக்கொண்டு இதுபோன்ற பலவழிகளையும் ஒன்றிணைத்து வழங்குவதாகவும் இருந்துள்ளது. (தற்போதும் அவ்வாறானவர்களும் உள்ளனர்.) அதில் இன்பத்துய்ப்புகளை உணர்வு வகைப்பாட்டில் இவை இவை என வகுத்தபோது ஒன்றில் சரியானது, மற்றொன்றில் தவறாக கொள்ளப்பட்டது.

அதனால் முனி சங்கங்களுக்குள் பலவிதமாக முரண்பாடுகள் ஏற்படத்தொடங்கின. அதுவே பின்னர் அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளாகி, போராட்டமாகவும் வெடிக்கத்துவங்கின என்றால் மிகையாகாது.

அதுபோன்ற காலகட்டத்தில் ஒருசிலர் ஒன்றின் துறவறநெறியை ஏற்றபின், அவரது மனவலிமைக்கு கடுமையாய் இருந்தால் மற்றொன்றிற்கு மாறுவது என்ற நிலைப்பாடும் ஏற்படத்தொடங்கின.

அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மூத்த குருநாதர்கள், ஆச்சார்யர்கள் அவ்வாறு வழுக்கிவயர்களுக்கான, நழுவிச் சென்றவர்களுக்கான எச்சரிக்கைகளை தரவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. அதுபோல் இவர் காலத்திலும் நிகழ்ந்திருக்கலாம்….

-----------------------

இவையனைத்திற்கும் காரணமே யாதெனின்…

தங்களது நான் எனும் ஆணவத்திற்கு கூடுதலாக எதையாவது சேர்த்துக் கொள்ளூதல் தான் ஆன்மீகத் தேடுதல் என்று மக்கள் வழக்கமாக நினைக்கின்றனர்.

ஒரு சிலரைத்தவிர மற்றவர்களது ஆன்மீகப்பயணங்கள் எல்லாம் கண்ணுக்கு தெரியாத தனது ஆணவத்தின் பயணம் என்பதைத்தவிர வேறல்ல.

மக்கள் தங்கள் ஆணவத்திற்கு அதிக திருப்தியை விரும்புகின்றனர். தங்கள் “நான்” என்னும் தன்முனைப்பிற்கு அதிக பலத்தை அதிக சக்தியை விரும்புகின்றனர்.

அவர்கள் தங்களது ஆணவத்தை சுற்றிலும் “புனித ஒளிவட்டம்” வரவேண்டும் என்று விரும்புகின்றனர்.

ஆனால் அவ்வாறல்ல…

ஆணவம் போனபிறகு தான் புனித ஒளிவட்டம் எழுகிறது.

அவை இரண்டும் ஒருசேர இருக்க முடியாது.

இவையே விடுதலையின் விளிம்பில் நின்று கூறிய பகவான்களின் முக்கிய அறிவுரைகளில் ஒன்று…





इह विनिहतबह्नारम्भबाह्योरुशत्रो- 
रुपचितनिजशक्तेर्नापरः कोअप्यपायः । 
अशनशयनयानस्थानदत्तावधनः कुरु 
तव परिरक्षामान्तरान् हन्तुकामः ।।169।।

இஹ விநிஹ தபஹ்யாரம்ப பாஹ்யோ 

ருசத்ரோ: உபசிதநிஜசக்தேர்நாபர: கோஅப்யபாய: | 
ஆசனசயனயானஸ்தானதத்தாவதான: குரு, 
தவ பரிரக்ஷாமாந்தரான் ஹந்து காம: || 169 ||

O worthy soul! For you, who has destroyed the external enemy in the form of excessive sinful activity and increased the internal soul-strength, there can be no remaining cause of misery. Desirous of extirpating your internal enemies (of attachment and aversion), continue safeguarding your austerities by being vigilant in activities of eating, sleeping, roaming and sitting.
ஆத்மாவே! வெளிப்புற எதிரியை அழிக்க அதிகமாக பாவச் செயல்பாட்டில் ஈடுபட்டதால் உள் ஆன்ம எதிரிகளின் வலிமையை அதிகரித்ததினால், உங்களைப் பொறுத்தவரை, துன்பத்திற்கு மீதமுள்ள காரணங்கள் இருக்க முடியாது. உங்கள் உள் எதிரிகளை (விருப்பு மற்றும் வெறுப்பு) அழிக்க விரும்புவதால், உணவு, தூக்கம், அலைதல் மற்றும் உட்கார்ந்திருத்தல் போன்ற செயல்களில் விழிப்புடன் இருப்பதன் மூலம் உனது அறஒழுக்கங்களை தொடர்ந்து பாதுகாக்கவும்…

அரசனிலிருந்து, தொழில் செய்பவர் வரை தங்களது விருப்பதினால் அவ்வப்போது விளைந்த இலக்கினை எட்டிட புறப்பகைவர்களை அழிப்பதிலேயே முனைப்புடன் செயல்பட்டு வெற்றியும் கண்டிருப்பர். ஆனால் அவ்வாறான சந்தர்ப்பத்தில் பல பாபச்செயல்களையே செய்து பலபிறவிக்கான துன்பக்காரணிகளையே சேமித்திருப்பர் என்பதே உண்மை.

அவர்கள் தங்களது தவறான செயலை பின்னாளில் உணர்ந்து தவவாழ்வை ஏற்று நடக்கும் போது, பயிர்களுடன் முளைத்த களைகளைப் போல, அகத்திலுள்ள கஷாயங்களினால் தோன்றும் விருப்பு மற்றும் வெறுப்புணர்வுகளை வெல்வதற்கான செயல்பாடுகளோடு சமிதி மற்றும் குப்தி போன்ற ஒழுக்கத்தில் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று அறிவுருத்துகிறார் முனிவர் பெருமான்.

எக்காலத்திலும் தங்கள் வாழ்நாளில் கடமைகளை நிறைவேற்றத் துடிக்கும் இல்லறத்தார்கள், ஆர்வத்தின் காரணமாக பல யுக்திகளையும், தந்திரங்களையும், போரிட்டும் நிறைவேற்றுவதிலேயே கவனமுடன் செயல்படுவது வழக்கம். அவ்வாறான மனிதர்களே பிறரால் மதிக்கத்தக்கவர்களாக, போற்றப்படுவர்களாக இருக்கின்றனர். ஆனால் அவ்வாறு இலக்கினை எட்டிய சிலர் விரக்தியடைவதுண்டு. தங்கள் சாதனைகளை துச்சமாக நினைப்பதுண்டு. வெற்றியைப் பெற நாம் எவ்வளவு தர்ம, நியாயங்களிலிருந்து விலகி இதனை எட்டிப்பிடித்திருப்போம். இது எத்தனை மனிதர்களுக்கு, குடும்பங்களுக்கு, சமூகத்திற்கு துன்பத்தை அளித்திருக்கும் என்று குற்றவுணர்வு விழித்தெழும் போது அதிலிருந்து வெளியேற துடிப்பர்.

அவ்வாறான நிலையில் துறவற நெறியே அவர்களை மடைமாறச் செய்து மனதிற்கு நிம்மதியை அளிப்பதோடு, இனியும் அவ்வாறாக பாபச் செயல்களில் விழாமல் இருக்க வழிவகை செய்யும். அவ்வாறான வேளையில் அங்குள்ள ஆச்சார்யர்களே அந்த புதியவருக்கான அறஒழுக்கத்தை கற்பிப்பர். அதாவது உண்பது, உறங்குவது, உட்காருவது போன்ற அனைத்து செயல்களிலும் கவனமுடன் முறையாக செயல்படுவதே, மேலும் வினைக்கட்டிற்கு வழிவகுக்காது காப்பாற்றும் என எச்சரிக்கை செய்வர். அதுபோன்ற வழிகாட்டுதலே இப்பாடலின் விளக்கமாகும்.





अनेकान्तात्मार्थप्रसवपफलभारातिविनत 
वचःपर्णाकीर्णे विपुलनयशाखाशतयुते । 
समुत्तुङ्गे सम्यक्प्रततमतिमूले प्रतिदिनं 
श्रुतस्कन्धे श्रीमान् रमयतु मनोमर्कटममुम् ।।170।।

அனேகாந்தாத்மார்த ப்ரஸவபல பாராதவிநதே, 

வச: பர்ணாகீர்ணே விபுவநயசாகாஸதயுதே | 
சமுத்துங்கே ஸம்யக் ப்ரததமதிமூலே பரதிதினம், 
ஸ்ருதஸ்கந்தே தீமான் ரமயது மனோ மர்கடமமும் || 170 ||

The wise ascetic should everyday beguile his mindmonkey on the Scripture-tree (śrutaskandha) that is drooping down with load of flowers and fruits in form of substances (padārtha) having varied attributes, covered with foliage in form of spoken-words (vacana), having hundreds of branches in form of points-of-view (naya), lofty, and steady with deep roots of right and comprehensive sensory-knowledge (matijñāna).
புத்திசாலித்தனமான துறவிகள் தினந்தோறும் தனது மனக்குரங்கை ஆகம மரத்தில் ஏற்றிவிட வேண்டும், அது பூக்கள் மற்றும் பழங்களை ஏராளமான பொருள் பொதிந்த வார்த்தை வடிவத்தில் மாறுபட்ட பண்புகளைக் கொண்டிருக்கிறது, பேசும் சொற்களின் வடிவத்தில் பசுமையாக மூடப்பட்டிருக்கும், மொழிவடிவ இலைகள் மற்றும் நய வடிவ நூற்றுக்கணக்கான கிளைகளைக் கொண்டிருப்பது. உயர்ந்த, நிலையான மற்றும் சரியான சுருதஞான ஆகமமரம் மதிஞானம் எனும் ஆழமான வேர்களைக் கொண்டது.

என்னதான் நம்முடைய மனதை மகிழ்ச்சியாக வைத்துகொள்ள நினைத்தாலும் மனம் என்பது ஒரு மாறும் குணமுடைய அங்கமாகும். அது எண்ணங்களின் களம். அதிலுள்ள பல பதிவுகளை ஆராய்ந்து கொண்டேதான் இருக்கும். கண்களை மூடி அமர்ந்தால் எண்ணங்களின் ஓட்டம் கடுமையாக இருப்பதை நாம் காணலாம். ஒன்று தோன்றி முழுவதுமாக சிந்திப்பதற்குள் அடுத்த ஒன்று தோன்றி இதை விரட்டி விடும். சரி அதில் சிலமணிகள் அமைதியாய் அமரலாம் என்றால் அதனை விரட்டி அடிக்க அடுத்த எண்ணம் உணர்வுக்குள் வந்தமர்ந்து விடும். இப்படியாக அங்கும் இங்கும் அலைந்து திரியும் எண்ணப் போக்குவரத்து நெரிசலுள்ள ஒரு பகுதியே மனம், சித்தக்களம் போன்றவை. ஒரு கட்டுக்குள் அடங்குவதே இல்லை இதன் இயல்பு.

அதனால்தான் மனம் ஒரு குரங்கு என்று பெரியோர்கள் கூறினார்கள். கீழ் கிளையில் ஏறி அமரும். சில நிமிடத்திற்குள் அதற்கு மேலுள்ள கொம்பினைப்பற்றியபடி அந்நிலைக்கு ஓடும். பின்னர் உச்சிவரை செல்லும் அதன் நுனிக்குச்சியில் வளைந்து ஆடும். பின்னர் கிளைக்கொம்புகளை மாறி மாறி பிடித்து தொங்கியபடியே கீழிறங்கும். பூமி மட்டத்தில் ஒன்றைத்தேடும்; அடுத்த மரத்தை கண்டதும் அதில் ஒரு புதுமையைக் கண்டுவிடும். பின் அதனை நோக்கி ஓடத்துவங்கும். அங்கும் உச்சிவரை செல்வதோடு நில்லாது. மொத்தக் கிளைக்கொம்புகளுக்கும் ஏறுவதும், இறங்குவதுமாக அலைந்து கொண்டிருக்கும்.

ஒரு புண் வந்தால் அதையே நோண்டி நோண்டி வலியை கூட்டும்; கூடக் கூட மீண்டும் மரக்கிளையில் அலைக்கழிக்கத்துவங்கிவிடும். ரத்தக்கிளறியாக்கி வேதனையைக் கூட்டிக் கொண்டே போகும். அதுதான் குரங்கின் நிலை. விழித்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் பைத்தியம் போல் ஏறி, இறங்கி, ஆடி, ஓடி அலைந்து கொண்டிருப்பதே அதன் இயல்பு.

அது போன்று வாழ்வில் அவ்வப்போது ஒரு இலட்சியம், நோக்கம், இலக்கென மாற்றி மாற்றி அமைத்துக் கொண்டு அங்காங்கு தொங்கி திரிந்து கொண்டு, ஓடி, ஓடி களைத்தாலும் ஓய்வில் நாட்டம் கொள்ளாது அலைந்து கொண்டிருப்பது மனித வாழ்க்கையே. அதற்கு பின்னூட்டமாய் இருப்பது மனம் என்னும் குரங்கே. அதனால் தான் ஒரு இன்பமோ, துன்பமோ வந்தால் அக்கொம்பிலேயே சுற்றிக் கொண்டு, ஏறி இறங்கி வட்டமடித்தபடி நேரத்தை கடத்திக் கொண்டிருக்கும். இலக்கினை அடைந்தாலும், அடுத்தவரின் உச்சியைக் கண்டால் அவரளவு செல்வத்தையும், புகழையும், பெருமையையும் தேடி உச்சாணிக் கொம்புவரை செல்லத்துவங்கும். தனக்கென ஒரு அளவீட்டில் உறுதியுடன் நிற்பதே இல்லை. எல்லையை விரிவடையச் செய்து கொண்டே அலைவது மனிதமனமே.

அதனால் வரும் வலியை நோண்டி, நோண்டி பெரிதாக்கி வேதனையில், கவலையில் ஆழ்ந்து விடும். இப்படியாக வாழ்க்கையில் தேவையின்றி பேராசை என்னும் மரத்தின் ஆசைக்கிளைக் கொம்புகளை பிடித்து தாவித் தாவி உச்சி வரை சென்று மீண்டும் கீழ்பூமி வரை இறங்கி முப்பதாண்டு காலம் வாழ்ந்தவனும் இல்லை முப்பதாண்டு தாழ்ந்தவனும் இல்லை என்ற நிலைப்பாட்டில் தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்நாள் கழிந்து கொண்டிருக்கிறது.

தன்னைத் தானே வருத்திக் கொண்டு வாழும் குரங்கினைப்போல் மனித வாழ்க்கைக்குக் காரணம் அவனது மனமே. அதனால் மனதை குரங்கிற்கு உருவகப்படுத்தி ஞானியர் கூறினர்.

ஒரு கருத்தையோ, தகவலையோ எப்படி இருக்கிறதோ அப்படியே பார்க்கும் தன்மை இல்லாதது தான் கலியுகத்து மனிதர்களின் அவல நிலை ஆகும். அதிலுள்ள அலங்கார வார்த்தைகளிலும், ஜோடனைகளிலும் மயங்கி நிற்பதே வாடிக்கையாக கொண்டுவிட்டான்.

நமது மனதில் உள்ள ஆசா பாசங்களே முடிவுகளை எடுப்பதற்கு தூண்டுகிறது ஆசைகள் அதிகரிக்க அதிகரிக்க நமது மனதும் வேறு வேறு திட்டங்களுடன், செயல்பாடுகளை மாற்றியபடியே அலைபாயந்து கொண்டிருக்கிறது.

மனம் எனும் ஒரு குரங்கைத்தாவ விட்டால், தப்பி ஓட விட்டால் நம்மைப் பாபத்திலும், பாசத்திலும் தள்ளி விடும் என்பதால் ஆச்சார்யர் அலைபாயும் இயல்பினை மாற்றி ஓரிடத்தில் அமரச் செய்ய, அமைதியைக் காணும் வழிகளை அறவுரைகளாக, தத்துவங்களாக, சித்தாந்தங்களாக அந்தந்த காலக்கட்டத்திலும் வழிகாட்டி வந்தார்கள்.

அவர்களது மதிஞானமே அலைபாயும் மனதிற்கு கடிவாளமாய் மாறி சரியான திசையில் பயணிக்கச் செய்தது என்றால் மிகையாகாது. அதுவே குதிரைக்கு கண்மறைக்கும் தோல் வார் போன்று மானுட இலட்சியமான பிறவிப் பிணியறுக்கும் உபாயங்களைக் கூறி நேர்வழிச் செல்ல வழிவகுக்கிறது. பிற லட்சியங்களான செல்வத்தை சேர்ப்பதும், பிரபல்யம், பெருமை, கெளரவம் போன்ற அனைத்தும் பொறாமை, பகை போன்ற எதிரிகளைத்தான் வாழ்வில் கூட்டி பெரும் துன்பத்தையே அழைத்து வரும் என்பதை எடுத்துரைத்து பேரின்பம் பெறும் வழிகாட்டுதலை கூறிவந்தனர்.

அவர்களது பேச்சு ஒலிகளை, சுருதிகளை வரிவடிவம் தந்து மொழியாக; துணிகளில், ஓலைச் சுவடிகளில், காகிதங்களில் பதிவுசெய்து வைத்தனர். அவையே மெய்ஞ்ஞானியரின் மதிஞான வெளிப்பாடாய்; சுருதஞானமாக பரிணமித்து விருக்ஷமாய் உலகில் வளர்ந்து நிற்கிறது.

அவ்வாறான ஞானி, தீர்க்கதரிசி, ஆப்தர், பகவானின் போதனைகளே சுருதங்களாக மாறியுள்ளது. அந்த ஸ்ருதவிருக்ஷங்களே கற்பவரின், கேட்பவரின் மதிஞானத்தை உயர்த்தவல்லது. அவை பன்னிரு அங்கங்கள், பதினான்கு பூர்வங்களே கிளைகளாக அந்த ஸ்ருத விருக்ஷம் காட்சிதருகிறது. அந்த மரத்தில் ஏறியவனே நல்ல புருஷார்த்தில் பயணித்து பிறவிப் பிணியறுக்க வல்லான் என்ற அடிப்படையில் தான் துறவியருக்கு மட்டுமின்றி மானிடர் அனைவருக்கும் இப்பாடல் வழியே வழிகாட்டுகிறார் ஆச்சார்யர் குணபத்ர ஸ்வாமியவர்கள்.

மனக்குரங்குகளை ஞானநூல்களால் ஆன மரத்தில் ஏற்றி விட்டு பழக்கப்படுத்துங்கள். அங்கு அவை அமைதியாக அமர்ந்து விடும் என்று அறிவுரை தருகிறார்.

அதனால் மனம் வளம் பெறவேண்டியது அவசியமாகிறது. சுயபச்சாதாபம், கழிவிரக்கம், எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது போன்ற உளவியல் காரணிகள் நீங்க வேண்டுமாயின்; நிலையில்லா இவ்வுலக வாழ்வை நிலையானதாய் கொள்ளாதிருக்க, அவ்வப்போது வந்து செல்லும் இன்பங்களை சுவைக்க மறந்து, ஏதோ ஒரு மயக்கத்திலில்லாமல் சுயத்தில் அமரச் செய்ய ஜினஆகமங்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறார்.

ஜினஆகமங்களான பன்னிரு அங்கங்களையும், பதினான்கு பூர்வங்களையும் அடையாளப்படுத்தும் உருவகமான சுருதஸ்கந்த வடிவத்தை மரமாக சித்தரித்துள்ளார்கள் சமணர்கள். அவற்றிற்கு தனி சன்னதியும் சில ஜினாலயங்களிலுள்ளது. அதனை வணங்கும் போது அசசுருதங்களை நுகரும் எண்ணம் தோன்றிடவே இந்த ஏற்பாட்டினை நம் மூதாதையர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.

மனிதனின் எண்ணங்களை ஆர்த்த, ரெளத்ர தியானத்தில் வட்டமடித்துக் கொண்டிராமல், அதனை விட்டு வெளியேறும் வாயிலைத்திறக்கும் உபாயங்களை வழங்கும் ஆகமக்கருத்துகளை உள்வாங்கிக் கொண்டே இருக்க அந்த ஆகம மரத்தின்கிளைகளில் மனமெனும் குரங்கை ஏறி அமரச் செய்தால் அமைதியாய் அமர்ந்திருக்கும், அதாவது தர்ம தியானத்தில் ஆழ்ந்திருக்கும் என்பதே இப்பாடல் நமக்களிக்கும் தெளிவாகும்.





तदेव तदतद्रूपं प्राप्नुवनन विरंस्यति । 
इति विशवमनाद्यन्तं चिन्तयेद्विशववित् सदा ।।171।।

ததேவ தததத்ரூபம் ப்ராப்னுவன்ன விரம்ஸ்யதி | 

இதி விஸ்வமனாத்யந்தம் சிந்தயேத்விச் வவித்ஸதா || 171 ||

A substance, at any time, exhibits contradictory attributes of affirmation (tat, vidhi – existence) as well as of negation (atat, niÈedha – non-existence), depending on the point-of-view. All substances, thus, are eternal. This way, the man, well-versed in the Scripture, should reflect on the world that is without a beginning and an end.
ஒரு மெய்ப்பொருள், எல்லா காலத்திலும், முரண்பட்ட குணங்களைக் கொண்டிருந்தாலும் எப்போதும் அழியாமல் இருக்கின்றன. அதே சமயம் தன்னில் மாறுதல்களைக்(பர்யாயம்) கொண்டுள்ளது. ஒரு வகையில் எல்லா பொருட்களும் நித்தியமானவை மற்றொரு பார்வையில் மாறிக்கொண்டிருப்பவை. இந்த ஜீவன் முதலான பொருட்களைக் கொண்ட இந்த உலகம் தோற்றமும், அழிவும் இல்லாதவை. இது போன்ற தெளிவை ஆகமத்தின் வழியே பெறவேண்டும்.

ஆகமப்பயிற்சி செய்பவர்கள் ஆகமக்கருத்துகளை நுட்பமாக அறிந்து, புரிந்து கொள்வதில் கவனமுடன் இருந்தால் ஞானம் பெற இயலும். ஆகமம் பயிலும் மாணவர்கள் அதிலுள்ள சொல்நடை மற்றும் அணிநலன் போன்றவற்றில் மனதை செலுத்தாது விளக்கப்பட்டுள்ள பொருள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுதல் அவசியமாகிறது.

குணங்களின் தொகுதியே மெய்ப்பொருள், திரவியம் ஆகும். மெய்ப்பொருட்கள் ஆறு. அவை உயிர், புத்கலம், தர்மம், அதர்மம், ஆகாயம், காலம் என ஆறு சமூகமாக, அதாவது தனியாக இல்லாமல், உலகில் அநாதிகாலமாக உள்ளன. அவை எக்காலத்திலும் அழிவதில்லை.

இதனை தோற்றுவித்தவர் எவரும் இல்லை. தானாகவே அநாதி, அந்தமற்று இயல்பில் உள்ளது.

இதில் புத்கலம் மட்டுமே கண்களுக்கு தெரியக்கூடியவை. ஊறு, சுவை, நாற்றம், நிறம் ஆகியவை புத்கலத்தில் மட்டுமே உள்ளது. ஏனென்றால் பொறிகள் உருவம், சுவை, நாற்றம், சுவை போன்றவற்றை அறிபவை. மற்ற பொருட்கள் அரூபமானவை. பொறிகளால் அவற்றை அறியும் ஆற்றல் இல்லை.

குணங்களின் சமூகமான பொருட்களுக்கு பொது குணங்களும், விசேஷ குணங்களும் உள்ளன. குணம் என்பது திரவியத்தின் எல்லா பாகங்களிலும், எல்லா நிலைகளிலும் உள்ளது.

பொதுவாக அஸ்தித்துவம் - இருத்தல் எல்லா திரவியங்களிலும் உள்ளது. அது பொது குணமாகும். ஞான குணம் ஜீவனில் மட்டுமே உள்ளது. அது உயிரின் தனித்துவ குணம்.

அதுபோல் ஒவ்வொரு பொருளும் தம்தமக்கு பயனுடையது. அதனை வஸ்துத்வ குணம் என்பர். திரவியத்வ குணம் என்பது இடைவிடாது மாறும் தன்மை படைத்தது. இவை எல்லா பொருட்களிலும் உள்ள பொதுவான பண்பு.

அதுபோல் உயிரிடம் மட்டுமே காட்சி, ஞானம், ஒழுக்கம், சுகம் போன்ற விசேஷ குணங்கள் உள்ளன. இவற்றை ஆழ்ந்து படிக்கும் போது தெரிந்து கொள்ளலாம். மேலும்….

இந்த நோக்கில் உலகை அறிந்தவர் எவரோ அவரே பகவான் எனப்படுகிறார். அவர் உலகை உருவாக்குபவரல்ல. மூவுலகத்திலுள்ள முக்காலப் பொருட்கள் அனைத்தையும் ஒருசேர அறியும் ஆற்றல் உள்ளரே பகவான்.

இவ்வாறான பல அரிய உலக விஷயங்களை அள்ளித்தரும் பொக்கிஷமே ஆகமங்கள். அதனை ஆராய்ச்சியுடன் படித்துப் புரிந்து கொள்வதே ஒவ்வொரு மானிடருக்குமான லட்சியமாக இருத்தல் நலம். அதுவே ஞானக்கண்ணை திறக்கும் திறவுகோலாகும். இவ்வுலக மாயை விலகி ஞானத்தை பெறுவதே ஆன்மீகம் ஆகும்.

ஆம் ஞானம் நம்முடைய குணம். அது ஒருபோதும் அழிவதில்லை. அதன்மீது மாசு, மலம் படிந்துள்ளது. ஆசை, வெகுளி, மயக்கம் போன்ற சுபாவத்திற்கு மாறான விபாவ குணங்கள் மாசுக்களாக நம் ஆன்மாவை உடல், மனம் எனும் புத்கத்தின் வழியே அடைக்கலமாக அடைந்து மறைத்துக் கொண்டிருக்கின்றன. இவையே பல பிறவிகளுக்கு காரணமாகின்றன. அதுவே பேரின்ப சுகம் அடைவதை தடுக்கின்றன. அதிலிருந்த விடுபட நாம் இந்த உடல், மனமல்ல என்ற நற்காட்சியை அடைந்தாலொழிய வேறுவழியில்லை. அந்த சம்யக்த்வம் பெற இந்த ஆகமத்தின் வழியே கிடைக்கும் சுருதஞானமே வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.





एकमेकक्षणे सिदधं रौव्योत्पत्तिव्ययात्मकम् । 
अबाध्तिान्यतत्प्रत्ययान्यथानुपपत्तितः ।।172।।

ஏகமேகக்ஷணே ஸித்தம் த்ரெளவ்யோத்பத்திபாத வ்யயாத்மகம்: | அபாதிதான்ய தத்ப்ரத்யயாந்யதானுபபத்தித: || 172 ||


It is well-established that a substance, at any particular time, exhibits the characteristics of origination (utpāda), destruction (vyaya), and permanence (dhrauvya). Without this understanding of the nature of substance, unobstructed knowledge in terms of distinction (bheda; it is different than before) and non-distinction (abheda; it is same as before) cannot subsist.
ஒரு பொருள், எந்த குறிப்பிட்ட நேரத்திலும், தோற்றம், மறைதல் மற்றும் மற்றும் நிரந்தரத்தன்மை (த்ரவ்யா) ஆகியவற்றின் சிறப்பியல்புகளை வெளிப்படுத்துகிறது என்பது நன்கு நிறுவப்பட்டதாகும். பொருளின் தன்மையைப் பற்றிய இந்த புரிதல் இல்லாமல், வேறுபாட்டின் அடிப்படையில் இது முன்பை விட வித்தியாசமானது மற்றும் இது முன்பு போலவே உள்ளது என்று கூற முடியாது.

----------------------

பிரமாணம்:-

சமணத் தத்துவத்தில் பிரமாணங்கள் என்பது "சான்று", "அறிவுக்கான வழிமுறை" ஆகிய நேரடிப் பொருளுடையது. பண்டைக் காலத்திலிருந்தே பெரிய அளவில் விவாதிக்கப்பட்ட ஆய்வுத் துறையாக இது உள்ளது. இது ஒரு அறிவுக் கோட்பாடு என்பதுடன், மனிதர்கள் துல்லியமானதும் உண்மையானதுமான அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு நம்பத் தகுந்ததும் ஏற்புடையதுமான வழிமுறைகளை இது உள்ளடக்குகின்றது. சரியான அறிவைப் பெற்றுக்கொள்வது எப்படி, எவ்வாறு ஒருவர் அறிகிறார் அல்லது அறியாமல் இருக்கிறார், எந்த அளவுக்கு ஒருவர் அல்லது ஒரு பொருள் தொடர்பான அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும் போன்றவற்றுக்கான விடை காண்பதே பிரமாணத்தின் குறிக்கோள் ஆகும்.

----------------------

பொருளை சுட்டும் போது அதே/ஒரே நோக்கில் அப்படி இருக்கிறது மற்றும் அப்படி இல்லை என்று கூடினால் அது தவறாகும். அதாவது ஒரு மனிதரை இன்னொரு மனிதர் நோக்கில் தந்தையாகவும் இருக்கிறார். மகனாகவும் இருக்கிறார் என்று கூறினால் அது தவறாகும்.

ஆனால் வேறு நோக்கில் கூறினால் அது தவறாகாது. அந்த மனிதர் ஒருவர் நோக்கில் தந்தையாக இருக்கிறார். வேறு ஒருவர் நோக்கில் மகனாகவும் இருக்கிறார் என்றால் அது தவறாகாது.

ஒரே பொருள் நித்யமாகவும், அநித்யமாகவும் இருக்கிறது. ஒரு மனிதன் ஏழையாக இருக்கிறான் அவனே அரசனாகவும் நிலைமாற்றம் பெறலாம். அப்போது வாழ்வுநிலையில் அநித்யம் உள்ளது. ஆனால் மனிதன் என்ற நிலையில் அதே மனிதன் இவன் என்று நித்யமாக இருக்கிறான். இப்போது ஒரே பொருள் தோன்றுதல்-மறைதல்-நிலைத்திருத்தல் ஆகிய மூன்று வடிவில் இருக்கிறது.

எப்போது ஏழையிலிருந்து அரசன் ஆகினாரோ அப்போது அரசன் என்ற தோற்றமும், ஏழைக்கான அழிவும் அதே சமயம் மனிதனாகவே நிலைத்தும் ஆக மூன்று நிலையிலும் ஒரு சேர காண முடிகிறது. அதேபோல் ஒரு ஜீவன் மனிதனிலிருந்து தேவனாகும் போது பிறவிநோக்கில் தேவ உற்பத்தியும், மனித அழிவும் ஜீவனாக இருப்புத்தன்மையில் நிரந்தரமும் காணப்படுகிறது.

இது போன்றே ஆறு பொருட்களும் ஸ்தூல, சூட்சும பரியாயங்களை, உற்பத்தி, மறைவு, நித்யம் ஆகியவை தன்னிடத்தில் தோற்றுவித்துக் கொண்டே இருக்கின்றன. அதாவது ஒரே பொருளில் நித்யமும், அநித்யமும் ஏற்பட்டவாறு உள்ளது.

ஒரே/அதே மனிதன் திரவிய வடிவில் இருக்கிறார் மற்றும் இல்லை; என்பதைப்போல அவரே அந்த க்ஷேத்திரத்தில் இருக்கிறார், வேறு க்ஷேத்திரத்தில் இல்லை; இந்த காலத்தில் இருக்கிறார் அந்த காலத்தில் இல்லை; இந்த பாவனையில் இருக்கிறார் அந்த பாவ வடிவில் இல்லை என்பதும் ஏற்புடையாகிறது. ஆகையால் ஒரே பொருளில் உண்டு மற்றும் இல்லை என்ற தன்மை உள்ளது.

மேலும் பொருள் முழு நோக்கில் ஒரு வடிவமாகவும் மற்றும் அம்சங்கள் நோக்கில் பலவடிவமாகவும் இருக்கிறது. உதாரணமாக உடல் வடிவில் ஒன்றாகவும் உறுப்புகள் நோக்கில் கை, கால், தலை என பலவாகவும் இருக்கிறான். ஆகையால ஒரு பொருள் ஒன்றும் பலவாகவும் இருக்கிறது.

இந்த நோக்கில் (பலமுறை) படித்தறிய வேண்டும் என்று அறிவுருத்துகிறார் முனிவர் பெருமான்.

குறிப்பு: இந்த அறிவியல்? நோக்கில் பாடங்களை சமணம் அளிக்கிறது. அவ்வாறு முயற்சியுடன் அறிந்தால் மட்டுமே வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியும். இல்லையெனில் விதி விட்டவழியில், அறிந்ததை போன்று காட்டும் சிலரது வழிகாட்டலில் பயணித்து - உயர்வு தாழ்வில், மேட்டில் ஏறுவதும் பள்ளத்தில் விழுவதும் போன்ற இன்ப துன்ப உணர்வில் வீழ்ந்து விரக்தியுடன் வாழ வேண்டி வரும்.

இன்பமும், துன்பமும் சமமான உணர்வுகளே என்ற நிலைக்கு நம்மை கொண்டுவருவதில் பிரதானமாக திகழ்வது சமண ஆகமக்கருத்துகள் என்பதே நிதர்சனம். இவற்றை கற்று தெளிந்த பின், சமுக சேவையுடன் பக்திமார்க்கத்தில் இறங்கினால் மட்டுமே அதில் திளைத்திட முடியும். இது ஒவ்வொரு தனிமனித முன்னேற்றத்திற்கானது. சமூக முன்னேற்றமும் இதன் வழியே கிடைக்கும் போது மட்டுமே அனைவரது வாழ்வு நிலையும் சரியாய், சமமாய் அமையும்.

அவ்வாறில்லாமல் சமுதாய முன்னேற்றம் என்ற நோக்கில் சென்றால் சமூக முன்னேற்றம் மாயத்தோற்றத்தில் மட்டுமே காண இயலும், ஆனால் தனி மனித ஒழுக்கம் தலைமுறையிலேயே மேலும் சீர்கெட்டுத்தான் போகுமே ஒழிய உண்மையான உயர்வை எட்டுவது சாத்தியமில்லை. அதுதான் இன்றைய சூழ்நிலை….

இக்கருத்துக்கள் சமண மதத்திற்கு மட்டுமல்ல அனைத்து தரிசனத்திற்கும் பொதுவானதே. ஒருகட்சியின் கொள்கை கோட்பாடு என்ன என்று தெரிந்து கொள்ளாமலே அந்தக் கட்சியில் தொண்டனாகவோ, தலைவனாகவோ இருப்பது போன்றதே… பிரபல்யங்களின் அடிச்சுவட்டில் நடந்து கொண்டிருக்கும் சூழலே மிஞ்சும்… அறிந்தவர்கள் போன்று அவர்களும் நம்மை அலைக்கழித்துக் கொண்டே தான் இருப்பார்கள். அவர்கள் சரியாய் நடக்கிறாரா இல்லை தவறாக வழிகாட்டுகிறாரா என்று புரியாத நிலையில் பின்னால் சென்று கொண்டிருப்போம்….

அதற்குத்தான் ஆகமக் கருத்துக்கள் அவசியம் என்கிறார் முனிவர் பெருமான்.





न स्थास्नु न क्षणविनाशि न बोध्मात्रां 
नाभावमप्रतिहतप्रतिभासरोधत् । 
तत्त्वं प्रतिक्षणभवत्तदतत्स्वरूप- 
माद्यन्तहीनमखिलं च तथा यथैकम् ।।173।।

ந ஸ்தாஸ்னு ந க்ஷணவிநாஸி ந போதமாத்ரம், 

நாபாவமப்ரதி ஹபிரதி பாஸரோதாத்: | 
தத்வம் பிரதிக்ஷணபவத்ததத்ஸ்வரூப – 
மாத்யந்த ஹீன மகிலம் ச ததா யதைகம் || 173 ||

Any substance – soul or non-soul – exhibits neither absolute permanence (nityatva) nor absolute transience (anityatva). Also, the substance exhibits neither absolute cognition (jhāna, bodha) nor absolute non-existence (abhāva); no substance is actually seen as such. The substance is actually seen with its ever-changing attributes of affirmation (tat, vidhi – existence) as well as of negation (atat, niÈedha – non-existence) or of permanence (nityatva) as well as of transience (anityatva). It is without a beginning and an end. Just as a single substance is permanent (nitya) as well as transient (anitya), one (eka) as well as many (aneka), and distinctive (bheda) as well as non-distinctive (abheda), all substances exhibit these attributes.
எந்தவொரு பொருளும் - ஆன்மா அல்லது ஆன்மா அல்லாதவை - முழுமையான நிரந்தரத்தையோ (நித்யத்வா) அல்லது முழுமையான நிலையாமையோ (அனித்யத்வா) வெளிப்படுத்துவதில்லை. மேலும், பொருள் முழுமையான அறிவாற்றல் அல்லது முழுமையான இல்லாததுபோல வெளிப்படுத்துவதில்லை. எந்தவொரு பொருளும் உண்மையில் அப்படி காணப்படவில்லை. இந்த பொருள் உண்மையில் மாறிக்கொண்டிருக்கும் இருப்பில் (தத்) அத்துடன் இல்லாமலும் (அதத்) அல்லது நிரந்தரத்தன்மை (நித்யத்வா) அத்துடன் அழியாநிலை (அனித்யத்வா) ஆகியவற்றின் பண்புகளுடன் காணப்படுகிறது. இது ஒரு தொடக்கமும் முடிவும் இல்லாமல் உள்ளது. எப்படி ஒரு பொருள் அநேகாந்தமாக இருக்கிறதோ அப்படியே எல்லா பொருள்களும் இருப்பதாக அறிய வேண்டும்.

ஒரு பொருளை ஒரே நோக்கில் -ஏகாந்த வடிவில்- அறிய முற்படின் தவறுகள்(குற்றங்கள்) ஏற்படுகின்றன. இவ்வாறான ஏகாந்த நோக்கில் சாங்கிய, நையாயிகம், பெளத்தம் போன்ற தரிசனங்கள் நம்புகின்றனர். ஆனால் பொருளின் இயல்பு அவ்வாறு இல்லை. பன்னோக்கில் - அநேகாந்த வடிவில் -ஆராய்ந்தால் தான் குற்றமின்றி அறிய முடியும்.

ஒரு பொருளில் நிலைமாறுபாடு இல்லாமல் அர்த்தகிரியா(செயல்பாடு) ஏற்படுவது இல்லை. ஆகையால் அது எல்லாவிதத்திலும் நிலையானதாக எப்படி ஆகும். மற்றும் பலவிதமான நிலை மாறுபாடு ஏற்பட்ட பின்பும் ஏதோ ஒரு நிலையில் இருப்பது தெரிகிறது. அதனால் எல்லாவிதத்திலும் நிலையற்றது என்று நம்புவதும் முடியாது.

பொருள் அந்த வடிவத்தில் இருக்கிறது மற்றும் அந்த வடிவத்தில் இல்லாமலும் இருக்கிறது. பொருள் திரவிய வடிவில் நித்யம், பர்யாய வடிவில் அநித்யம். திரவ்யாணுயோகத்தை கற்க துவங்கினால் அனைத்து பொருட்களைப் பற்றியும் அறிந்து புரிந்து கொள்ளலாம் என்பதை இப்படலில் விளக்குகிறார்.

ஒரு உயிர் தன் ஞானம், தரிசனம் நோக்கில் நித்யமாகிறது. மற்றும் நரகர், மனிதர் முதலான பரியாய நோக்கில் அநித்யமாகிறது. அறிவில் அறியப்படும் உருவத்தின் நோக்கில் அது அறிவாகவும் உள்ளது மற்றும் அஸ்தித்துவ குணத்தினால் அது சுதந்திர பொருளாகவும் உள்ளது. புத்கலம் போன்ற வேறு பொருள்களின் திரவிய, க்ஷேத்ர, கால, பாவ நோக்கில் உயிர் இல்லாததும் (நாஸ்தி) ஆகும். தன் திரவிய, க்ஷேத்ர, கால, பாவ நோக்கில் உயிர் உள்ளதும்(அஸ்தி) ஆகும்.

இப்படியாக உயிர் எப்படி அனேகாந்த வடிவமாக இருக்கிறதோ அதுபோன்றே மற்ற பொருட்களும் பல நோக்குகளில் அந்த வடிவிலும் இருக்கின்றன மற்றும் இல்லாமலும் இருக்கின்றன. எப்படி பொருட்களின் இயல்பு இருக்கிறதோ அப்படியே நம்பும் போதுதான் சம்யக்ஞானம் ஏற்படுகிறது.

மேலும் சில கருத்துக்களை த.சூ. போன்ற நூல்களை ஆழ்ந்து படிக்கும் போது இவை நன்கு புரிந்து விடும்.





ज्ञानमेव पफलं ज्ञाने ननु }लाघ्यमन}वरम् । अहो मोहस्य माहत्म्यमन्यदप्यत्रा मृग्यते ।।174।।

ஞானஸ்வபாவ: ஸ்யாதாத்மா ஸ்வபாவாவாப்திரஸ்யுதி: | தஸ்மாதஸ்யுதி மகாம்க்ஷன் பாவயேஜ்ஞான பாவனாம் || 174 ||
The fruit of meditating on the knowledge-nature of the soul is the knowledge itself – laudable and imperishable. It is surprising, however, that ignorant men look for other fruits, such as accomplishment (Ãddhi), of such meditation. This is due to strong delusion (moha).
ஆன்மாவின் ஞானத்தன்மையைப் பற்றி தியானிப்பதன் பலன் அறிவே - உன்னதமானது மற்றும் அழியாதது. எவ்வாறாயினும், அறியாத மனிதர்கள் அத்தகைய தியானத்தின் சாதனை வழியே பிற சக்திகளைத் தேடுவது ஆச்சரியமாக இருக்கிறது. இது வலுவான மாயை காரணமாகும்.

பொருட்களுக்கு நித்யம் – அநித்யம் என்பதை பொதுவான குணம் என்பதாக கண்டோம். அதே போல் அவற்றுக்கு விசேஷ குணங்களும் இருப்பது அவற்றின் தனித்துவத்தை காண்பிக்கும். அதுபோல உயிரது விசேஷ குணம் அறிவாகும். அதனால் ஞானம் மற்ற எந்த ஒரு பொருளுக்கும் இருக்க வாய்ப்பில்லை. மேலும் அஸ்தித்வம் இருக்கும் போது ஞான குணம் எக்காலத்திலும் அழிவதில்லை என்பது உறுதியானது.

ஒருவர் தனக்குரிய செல்வத்தை கையாள்வது சுதந்திரமாகவும் ஒரேமாதிரியானதாகவும் இருக்கும். அவரே ஒரு முகவராக, மற்றவரது செல்வத்தைக் கொண்டு செயல்படும்போது அவ்வாறு காணப்படுவதில்லை. செயலாற்றுதல் வேறுபடுவது போல ஆத்மா தன் ஞானத்திற்கு தலைவனாக, (ஸ்வாமியாகி) செயல்பட வேண்டும். அதே சமயம் மற்ற பொருள்கள் எப்படி பரிணமிக்கிறதோ அதற்கேற்ற செயல்பாடுடன், நான் இவற்றை அறிபவன் மட்டுமே ஸ்வாமியல்ல என்ற நிலைப்பாட்டில் செயலாற்றுபவன் சித்த பதவியை அடைகிறான்.

எந்த உயிர் பிறபொருள்களின் இயல்புகளுக்கு தன்னை ஸ்வாமியாக நினைத்து செயல்படுகிறதோ, அதாவது தன்னுடன் பரிணமிக்கும் உடல், பொருட்கள், மனைவி, மக்கள், செல்வம் போன்றவற்றை தனதாக அறிகிறதோ அது விடுதலைப்பேறான சித்த நிலையை அடைவதில்லை. மேலும் உடலில் மாற்றம் ஏற்படும் போது தன்னில் மாற்றம் ஏற்படுவதாக நம்புகிறது. அந்த மாயையிலிருந்து விலகி எந்த உயிர் ஞான பாவனாவில் பாவிக்கிறதோ அதுவே மோட்சத்தை பெறும்.

(கொஞ்சம் ஆழமாக செல்வது போல தோன்றினாலும் படித்து புரிந்து கொள்ள முயலவேண்டும். அதுவே பின்னாளில் மிகவும் பயனுள்ளதாக அமையும்… தற்காலத்திய நம் வழக்கத்தில் பிரதமானுயோகம் மற்றும் பெரும்பாலான சரணானுயோகம் மட்டுமே அறிந்து கொள்ள முடிகிறது. அதனால் மற்ற பிரிவான கரணானுயோகம், திரவ்யானுயோகம் கற்பது முக்கியமாகிறது. அப்போதுதான் நமது தரிசன பழக்கவழக்கத்தில் நம்பிக்கையுடன் செயல்பட முடியும். இல்லையாயின் சுற்றியுள்ள கலப்பட கலாச்சாரமே ஊடுருவி நம்பவைத்து அவ்வழிக்கு இழுத்துச் செல்கிறது. அதனால் எந்த ஒன்றிலும் முழுமையின்றி வசதிக்கேற்றார்போல் அதிலொன்றும் இதிலொன்றுமாய் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. எந்த ஒரு சமூகத்திற்கும் கூட்டுக்கலாச்சாரம் ஆபத்தான முன்னேற்றத்தையே அளிக்கும் என்பது வரலாறு. ஆனால் இன்றைய ஊடகங்களும், சஞ்சிகைகளும் கலப்பட சடங்குகள், சம்பிரதாயங்களையே அளிக்கின்றன. அவற்றை நுட்பமாக அறியும் தெளிவைப் பெற இயலும். )





ज्ञानमेव पफलं ज्ञाने ननु शलाघ्यमन}वरम् । 
अहो मोहस्य माहत्म्यमन्यदप्यत्रा मृग्यते ।।175।।

ஞானமேவ் பலம் ஞானே நனு ஸ்லாக்யமனஸ்வரம்: | 

அஹோ மஹஸ்ய மஹாதம்யமத்ய தப்யத்ர ம்ருக்யதே || 175 ||

The fruit of meditating on the knowledge-nature of the soul is the knowledge itself – laudable and imperishable. It is surprising, however, that ignorant men look for other fruits, such as accomplishment (Ãddhi), of such meditation. This is due to strong delusion (moha).
ஆன்மாவின் ஞானத்தன்மையைப் பற்றி தியானிப்பதன் பலன் ஞானமே; அதுவே பாராட்டத்தக்கது மற்றும் அழியாதது. எவ்வாறாயினும், அறியாத ஆண்கள் அத்தகைய தியானத்தின் சாதனை என பிற பொருள்களை தேடுவது ஆச்சரியமாக இருக்கிறது. இது ஒட்டுமொத்த மாயை காரணமாகும்.

 ஆகமங்களை படித்து புரிந்து கொள்வதால் பொருள்களின் இயல்பை அறிந்து கொள்வதே அந்த ஞானத்தின் முதற் பலனாகும். அவ்வாறான பழக்கத்தில், முழுவதுமாக வளர்ச்சியடையும் நோக்கத்தில் தொடர்வதின் பலன் கேவலக் ஞானம் ஆகும். பொருட்களின் இயல்பை அறிந்த ஞானத்தால் அது பற்றிய சரியான அறிவு கிடைப்பதால், அப்பொருளைப்பற்றி உள்ளது உள்ளபடி எவ்வித பேதமின்றி அறிய முடிவதால், கலக்கமற்ற தன்மை ஏற்படுகிறது. 

இதுவே சுகத்தின் இயல்பு. இந்த சுகத்தில் பிறர் அல்லது பிறபொருள் தொடர்பு ஏதுமில்லை. ஆனால் சிலர் இதன்வழி புலன் இன்பங்களால் பயன் அடைய விரும்புகின்றனர். அவ்வாறான எதிர்பார்ப்பு மோகத்தின் மகிமையால் உண்டாவது. 

 சொறிசிரங்கு உள்ளவன் சொறிவதில் சுகம் பெறுவதுபோன்று; மோகத்தின் காரணமாக ஆன்மாவில் காமம், குரோதம் முதலான உணர்வுகள் தோன்றியதால் அந்த ஜீவனுக்கு மனைவி, மக்கள், செல்வம் போன்றவையும் விருப்பத்திற்கு உரியனவாகின்றன. இவ்வாறு மனிதன் பிற பொருள்மீது தோன்றும் விருப்பத்தைக் கண்ட ஞானியர் வியப்படையவே செய்வர். 

எவ்வாறு பேய் பிடித்தவனின் செயல்களை(ஆரவார சேஷ்டைகளை) பார்த்து மக்கள் வியப்படைகிறார்களோ அதுபோல மோக வயப்பட்டு விருப்பமெனும் போதையில் வீழ்ந்தவனின் செயல்களைப் பார்த்து ஞானமடைந்தவர்கள் வியக்கவே செய்வார்கள்.





सास्त्राग्नौ मणिव७व्यो विशुधदो भाति निर्वृतः । 
अङ्गारवत् खलो दीप्तो मली वा भस्म वा भवेत् ।।176।।

சாஸ்த்ராக்நெள மணிவப்தவ்யோ விசுத்தோ பாதி நிர்வ்ருத: | 

அங்காரவத் கலோ தீப்தோ மலீ வ பஸ்ம வா பாவேத் || 176 ||

As the jewel gets purified and resplendent on entering the fire, the potential (bhavya) soul, on entering the fire of the Scripture, gets purified and attains resplendent liberation. The wicked [non-potential (abhavya)] soul, however, on entering the fire of the Scripture, gets scorched, turns dark like coal, and is reduced to ashes.
நகைகள் நெருப்பிற்குள் நுழையும் போது சுத்திகரிக்கப்படுவதோடு பிரகாசிக்கிறது. (பவ்ய) ஆன்மா, ஆகம நெருப்பில் நுழையும் போது, அழுக்கில்லாமல் பிரகாசித்து விடுதலை அடைகிறது. எவ்வாறாயினும், துன்மார்க்க (அபவ்ய) ஆத்மா, ஆகமத்தின் நெருப்பில் நுழைந்தவுடன், எரிந்து நிலக்கரியைப் போல கருமையாகி சாம்பலாகி விடுகிறது. 


 தங்கத்தை நெருப்பில் இட்டால் (புடம் போடுதல்) ஜொலிக்கும் என்பார்கள். மாணிக்கமணியும் அதுபோல நெருப்பிலிட்டால் அதிலுள்ள மாசுக்கள் அகன்று தனித்து ஒளிவீசும். அதே சமயம் ஒரு மரக்கட்டையை நெருப்பில் இட்டால் ஒளிதந்தாலும் அது எரிந்து கரியாகி பின் சாம்பலாகிப்போகும். அதுபோல உத்தமஜீவன்கள் ஆகமத்தை பயிற்சி செய்வதால் விருப்பு, வெறுப்பு பாவனை அழிந்து அறியாமையிலிருந்து ஞானத்தைப் பெறுவதால் ஒழுக்கத்தில் சிறந்து ஒரு மனித கதியில் சித்த பதவியை அடைந்து விடும். 

அதனால் ஆகமம் மனத்திலுள்ள மலங்களை விலக்கி தூய்மைப்படுத்துவதால் ஆன்மா ஒளிவீசித் திகழும். ஆனால் அபவ்யஜீவன்கள் ஆகமப்பயிற்சியில் பொருள்களின் இயல்புகளை அறிந்து கொண்டாலும் தன் விருப்பு வெறுப்பு உணர்வுகளால் என்றும் தூய்மையற்றதாகவே இருக்கும் என்கிறார். (அவரும் எப்படியாவது மனிதர்களும் ஆகமங்களைப் படித்து பயிற்சி எடுத்திட பலவகை உதாரணங்களுடனும் ஊக்கமளித்து வருகிறார். அவரது அறிவுரையை செவிசாய்ப்பதில் தான் நம் மனத்தூய்மை அடங்கியுள்ளது.)





मुहुः प्रसार्य संज्ञानं पशयन् भावान् यथास्थितान् । 
प्रीत्यप्रीती निराकृत्य ध्यायेदध्यात्मविन्मुनिः ।।177।।

முஹு: ப்ரஸார்ய ஸஜ்ஞானம்பஷ்யன் பாவான் யதாஸ்திதான் |

 ப்ரீத்யப்ரீதீ நிராக்ருத்ய த்யயேதத்யாத்மவிந்முனி || 177 ||

The ascetic who knows the nature of the soul-substance should meditate by spreading out, over and over again, his right knowledge (samyagjñāna), ascertaining the nature of the substances as these actually are, and vanquishing attachment (rāga) and aversion (dvesa).
ஆன்மா-பொருளின் தன்மையை அறிந்த முனி, மீண்டும் மீண்டும், அவரது சரியான அறிவு, சம்யக்ஞானம் பரப்புவதன் மூலமும், பொருள்களின் தன்மையை உள்ளவாறு அறிவதனாலும், மற்றும் விருப்பு வெறுப்புகளை அகற்றுவதாலும் ஆனமனைத் தியானிக்க வகை செய்கின்றனர். 

 இந்த பாடலில் ஆறுதிரவியங்களில் ஆத்ம திரவியத்தை தியானிக்கும் வழியை தருகிறார் ஆச்சார்ய பெருமான். முனிவர்கள் ஆகமத்தின் வழியே நல்ஞானத்தைப் பெற்று ஆறு மெய்ப்பொருட்களின் இயல்பை அனுமானம் போன்ற பயிற்சியினால் முழுவதுமாய் அறிந்து கொள்கின்றனர். அதனால் மட்டுமே விருப்பு வெறுப்புகளை களைந்து விடுகின்றனர். பின்னரே ஆத்மத்தியானத்தில் ஒருநிலைப்படுத்த முடிகிறது. அனைத்து சித்திகளும் தாமாகவே ஏற்படுகிறது.

 தியானச் சாதகருக்கு விருப்பு வெறுப்பு இருப்பின் தியானம் செய்ய இயலாது. அதற்கு இடையூறுகளான ராக த்வேஷங்களை களைய முற்படுதல் அவசியமாகிறது. அது தானாக ஏற்படுவதில்லை. அதனால் உலகிலுள்ள மெய்ப்பொருட்கள் பற்றிய அறிவு அவசியமாகிறது. அதனை கேவலஞானியரின் மொழிகளில் பெற்ற ஆகமத்தின் துணை அவசியமாகிறது.

 அதிலுள்ள கருத்துக்களை உள்வாங்கி நல்ஞானத்தின் வழியே அனுமானம் செய்து பயிற்சியில் ஈடுபடும்போது மட்டுமே விருப்பு வெறுப்புகள் தாமாகவே அகன்று விடுகின்றன. அதன் பின்னரே ஆறில் ஒன்றான தத்துவத்தில், அதாவது ஆன்ம தத்துவத்தில் ஒருநிலைப் படுத்தி தியானிக்க முடிகிறது. அவ்வழியே பல சித்திகளை பெறவும் அது வகை செய்து விடுகிறது.

 இப்பாடலில் தியானத்திற்கு ஆகமக் கருத்துக்கள் பெரிதும் துணை புரிவதை வலியுறுத்துகிறார். பகவான் கேவலக்ஞானம் பெற்ற பின்னர் தனது சீடர்களுக்கு உலகிலுள்ள ஆறு பொருட்களின் தன்மைகளை போதிக்கத்துவங்கிய பின், தான் உடலா, மனமா, ஆன்மாவா என்ற ஐயத்திலிருந்து முழுவதுமாக விடுபட முடிந்தது. உடலும், மனமும் பிற உயிரற்ற பொருளின் கலவையினால் ஏற்பட்டவை. அதனால் அவை மரணித்து விடுகின்றன. என்றும் நிலைத்து நிற்பது ஆன்மன் மட்டுமே என்ற பேருண்மையை பகவானது கூற்றின் வழியே அறிந்த பின்னர் தான் அவர் வழிநின்றவர்களால் உலகியல் சார்ந்த விருப்பு வெறுப்புகளிலிருந்து தானாகவே விடுபட நேர்ந்தது. அதன் பின்னரே தன் உபயோகம் பிற பொருள்கள் அல்ல, ஆன்மா மட்டுமே என்பதில் நம்பிக்கை கொள்ளச் செய்தது. பிறகு முழுநேரமும் ஆத்மத்தியானத்தில் ஒருநிலைப்படுத்தி விடுதலைக்கு வகை செய்ய முடிந்தது. 

 அந்த பகவான் மஹாவீரர் உரைத்த அறிவுரைகளும், போதனைகளும், தத்துவங்களுமே ஆகமங்களாக பின்னாளில் தொகுக்கப்பட்டவை. அவையே சுருதஞானமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது. அந்த சுருதத்தின் வழியில் எவர் ஒருவர் வாழ்நாளில் பயணிக்கிறாரோ அவரே உலகிலுள்ள உயிர், உயிரற்ற பொருட்களின் தன்மைகளை அனுமானம் செய்து இயல்புகளை உணர முடியும். அவ்வாறான நல்ஞானம் பெற்ற பின்னரே பிறபொருட்களின் மீதுள்ள விருப்பு வேறுப்புகளால் எந்த ஒரு உபயோகமும் இல்லை என்பதை உணர்ந்து, அவற்றை களைந்தெறிய முடியும். 

அதன் பின்னர், தான் ஒரு ஆன்மாமட்டுமே உடலும், மனமுமல்ல என்பதில் முழுநம்பிக்கை ஏற்பட்டு அதில் தோயமுடியும். அதுவே தியானத்தில் ஒருநிலைப்படுதலுக்கு அவசியமாகிறது. அவ்வாறான ஒருநிலைப்படுதல் தொடரும்போது சித்திகளை பெறுதல் சுலபமாகிறது. அவ்வாறான ஆத்மத்தியானத்திற்கு, ஒருநிலைப்படும் தியானத்திற்கு உறுதுணையாய் உள்ளவை ஆகமக் கருத்துக்களே என்பதை இப்பாடலின் மூலம் நாம் புரிந்து கொள்ளுதல் நலம் பயக்கும்.





वेष्टनोद्वेष्टने यावत्तावद् भ्रान्तिर्भवार्णवे । आवृत्तिपरिवृत्तिभ्यां जन्तोर्मन्थानुकारिणः ।।178।।

வேஷ்டனோத்வேஷ்டனே யாவத் தாவத் ப்ராந்திர் பவார்ணவே: | அவ்ருத்தி பரிவிருத்தாப்யாம் ஜந்தோர் மந்தானு காரிண: || 178 ||
Like the churning equipment (to produce butter), the soul undergoes binding (bandha) and shedding (nirjarā) of karmas, similar to the rope getting wound and unwound, and its journey in the world-ocean continues (as the soul keeps on pulling either end of the rope, one end symbolizing attachment and the other aversion).
கசக்கும் கருவியான மத்தைப் போலவே (வெண்ணெய் தயாரிக்க), ஆன்மா கர்மாக்களின் பிணைப்பு மற்றும் உதிர்தல் (நிர்ஜாரா) ஆகியவற்றிற்கு உட்படுகிறது, இது கயிறு திசை மாற்றி ஒருமுனை சுற்றுவதும் மறுமுனை பிரிவதுமாய் ஊசலாடுவது போன்றது. 

மேலும் பிறவிக் கடலில் அதன் பயணம் தொடர்கிறது அதாவது ஆன்மாவின் பிறப்பு (இறப்புக்கு) காரணம் கயிற்றின் ஒரு முனை விருப்பாகவும் மறுமுனை வெறுப்பாகவும் இடம் வலது மாறி மாறி இழுத்துக்கொண்டே இருப்பதால் ஏற்படுகிறது. பிறவிக்கான காரணத்தை இந்தப்பாடலில் விளக்குகிறார் ஆச்சார்யஸ்ரீ அவர்கள். பழைய வினைகள் உதயத்திற்கு வருவதால் ஆன்மா பிறக்கிறது பின்னர் மடிகிறது. ஆனால் வாழும் நாளில் தோன்றும் விருப்பு வேறுப்புக்களினால் தோன்றும் வினைகள் மீண்டும் பந்திக்கின்றன. அவை மறுபிறவிக்கு காரணமாய் அமைந்து விடுகிறது. அதனால் சொர்க்கம், நரகம், மனிதம், விலங்கென நான்கு பிறவிகளிலும் சுழல ஆரம்பிக்கிறது. அது மாறி மாறி பிறப்பதால் பிறவிக்கடலும் முன் செல்வதும் பின்னே தள்ளப்படுவதுமாய் விடுதலைக்கான அக்கரையை அடைய முடியாமல் தடுமாற்றத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. 

 அதாவது தயிரை மோராக்கும் மத்து எவ்வாறு முன்னும் பின்னும் இடம் வலது மாறி மாறி சுற்றி வெண்ணையை தன்னுடன் ஒட்டிக்கொள்ள அனுமதிக்கிறதோ அதுபோல ஆன்மா விருப்பு வெறுப்பு உணர்வினால் எதிரும் புதிருமாய் மாறி மாறி ஒழுகி வினைகளை பந்திக்க காரணமாகிறது. அதுவே பிறவி சுழற்சிக்கு வித்திடுகிறது என்பதை நயம் பட உரைக்கிறார் முனிவர். 


 எனவே பிறவிக்கு காரணம் நாம் முன்செய்த வினைகளின் உதயத்தால் தோன்றும் உணர்வினால் ஏற்படும் வேட்கைகளே என்பதை உணர வேண்டும். ஒன்றை அடைய வேண்டிய (விருப்பு) வேட்கையாயினாலும் மற்றும் இது நம்மை விட்டு அகன்றால் நல்லது என்ற (வெறுப்பு) வேட்கையுணர்வுமே மீண்டும் வினைகளை நம் ஆன்மனில் கட்டச் செய்கிறது. அவ்வேட்கையுணர்வே மறுபடியும் அதே போன்று பிறப்பு, இறப்புக்கு காரணமாக அமைகிறது என்பதை புரிந்து அவ்வாறான உணர்வுகள் தோன்றா வண்ணம் ஒழுக்கங்களை, புருஷார்த்தங்களை கைக்கொண்டு வாழ்வதே பிறப்பறுக்கும் என்பதை அறிதல் வேண்டும்.





मुच्यमानेन पाशेन भ्रान्तिर्बन्ध्}च मन्थवत् । 
जन्तोस्तथासौ मोक्तव्यो येनाभ्रान्तिरबन्ध्नम् ।।179।।

முச்யனானேன பாசேன ப்ராந்திர்பந்தச்சய மந்தவத் | ஜந்தோஸ்ததாஸெளமோக்தவ்யோ யேனாப்ராந்தி ரபந்தனம் || 179 ||


The stick of the churner is perennially bound with the rope as winding and unwinding of its two ends take place. Similarly, the soul continues to get bound with new karmas and, as a consequence, its whirling around in the world continues. The rope should be loosened at both ends to stop bondage of new karmas, and soul’s whirling around in the world.
கடைசல் கருவி அதன் இரண்டு முனைகளையும் பிரிக்க முடியாமல் நடுக்கொம்பு கயிற்றால் பிணைக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஆன்மா தொடர்ந்து புதிய கர்மாக்களுடன் பிணைக்கப்பட்டு வருகிறது, இதன் விளைவாக, உலகில் அதன் ஆன்மாவின் பிறப்புச்சுழற்சி தொடர்கிறது. புதிய கர்மாக்களின் பிணைப்பை நிறுத்த கயிறு இறுக்கப்படாமல் இரு முனைகளிலும் தளர்த்தப்பட வேண்டும். இந்த பாவில் சம்வரைத் தத்துவத்தை விளக்குகிறார் முனிவர் பெருமான்.

 அதாவது வினைக்கட்டு நிகழாமல் கவனமுடன் வாழவேண்டும் என்று வலியுறுத்துகிறார். கடைசல் கருவியோ, கடிகாரமோ அதன் வில்லைச் இருகச் சுற்றுவதினால் இறுக்கத்தை விலக்க அது தளர முயலும்போது எதிர் திசையில் சுழற்சியைத்தருகிறது. அவ்வாறில்லாமல் அதனை ஒருபுறம் இருக்கச் செய்யாமல் அப்படியே விட்டு விட்டால் எதிர்ச்சுழற்சி நிகழ்வதில்லை. அதுபோல… வாழ்நாளில் ஒவ்வொரு உயிரும் பழைய வினைகள் உதயமாகி உதிரும் போது கவனமின்றி நடக்கும் போது; அதாவது விருப்பு வெறுப்பு வேட்கையில் தொடரும் போது வினைக்கட்டு ஆன்மாவில் வந்து சேருகின்றன. அதுவே மீண்டும் பிறப்புக்கான காரணமாகிறது என்பதை முன் பாடலில் பார்த்தோம். 

 அவ்வாறில்லாமல் வினைஉதயத்தின் போது அது நிர்ஜரைக்காண உணர்வுகளை அவை நமக்களிக்கும்; அதனைப் புரிந்து கொண்டு அச்சமயத்தில் கவனமுடன் அவற்றிற்கு ஒத்துழைக்காமல்; உணர்ச்சி வசப்படும் செயல்பாடுகளில் ஈடுபடாமல் வாழ்வோமானால் வினை யுதிர்ப்பு மட்டுமே நடைபெறும்; வினைக்கட்டு ஏற்பட வாய்ப்பில்லை என்பதை நயம் பட உரைக்கிறார் ஆச்சார்யர். 

 எனவே வினையுதிர்ப்பின் போது ஏற்படும் உணர்வுகளை புரிந்து வாழ நமக்கு அறவழி செயல்பாடுகள் நன்கு அறிந்திருக்க வேண்டும். அதன் வழியில் ஒழுக இயம, நியமங்களை கட்டுப்பாடுடன் பயிற்சி செய்திருக்க வேண்டும். அப்போது தான் அந்த வினையுதிர்ப்பின் வசத்தில் உணர்வு சிறைப்பட்டிருக்கும் போதும் நல்லொழுக்கங்களில் மட்டுமே மனம் கட்டுப்பாடுடன் செயல்பட துணியும் என்ற வழிகாட்டுதலை இப்பாடலில் கருத்தாய் ஏற்று நாம் செயல்படுதல் நலம்.





रागद्वेषकृताभ्यां जन्तोर्बन्ध्ः प्रवृत्त्यवृत्तिभ्याम् । 
तत्त्वज्ञानकृताभ्यां ताभ्यामेवेक्ष्यते मोक्षः ।।180।।

ராகத்வேஷக்ருதாப்யாம் ஜந்தோர்பந்த: ப்ரவ்ருத்யவ்ருதிப்யாம் | தத்வஞானக்ருதாப்யாம் தாப்யாமேவேக்ஷ்யதே மோக்ஷ: || 180 ||


Association (pravrtti) and dissociation (nivrtti) out of attachment (rāga) and aversion (dvesa) result in soul’s bondage (with karmas); association (pravrtti) and dissociation (nivrtti) out of knowledge of the reality result in liberation (moksa).
இணைப்பு (ராகம்) மற்றும் வெறுப்பு (த்வேசம்) ஆகியவற்றுடன் செயலாற்றல் (பிரவிருர்தி) மற்றும் விலகல் (நிவ்விருத்தி) ஆன்மாவின் பந்தம் (கர்மாக்களுடன்) விளைகின்றன; செயல்படுதல் மற்றும் விலகல் யதார்த்தத்தைப் பற்றிய அறிவினால் மட்டுமே விடுதலை விளைகிறது.

விருப்பு வெறுப்புகளினால் செயல்படுதல் மற்றும் செயல்படாமல் இருத்தல் (ப்ரவிருத்தி மற்றும் அப்ரவிருத்தி) ஆன்மாவில் வினைக்கட்டிற்கு காரணமாகிறது. அதுவே தத்துவ ஞானத்தை அறிந்த பின் ஏற்படும் போது முக்திப்பதையில் செல்ல காரணமாகிறது என்பதை தெரிவிக்கிறார் முனிவர் பெருமான்.

எந்த ஒரு செயலுக்கும் காரணம் எண்ணத்தூண்டல் என்பதை முன்னர் கண்டுள்ளோம். அந்த எண்ணம் தோன்றுவதற்கு காரணம் உணர்வு நிலையில் தோன்றும் ஃபாவம் என்பதையும் அறிந்துள்ளோம். அதன் படி எந்த உணர்வுநிலை அதாவது ஃபாவத்தில் உள்ளோமோ அதற்கேற்ற எண்ணம் மற்றும் செயல்பாடுகள் 108 வழிகளில் தோன்றி நம் ஆன்மாவில் வினைகளை பந்திக்கச் செய்கின்றன. (இதுதான் நாம் ஜபம் செய்வதற்கான விளக்கம் என்பதை முன்னர் படித்தோம்)

மோக வினை உதயத்தால் உணர்வு நிலையில் இருக்கும் போது விருப்பமே கூடுதலாய் எண்ணத் தூண்டுதலில் ஏற்பட்டு அதற்கான செயல்பாடுகளே ஏற்பட்டுக்கொண்டிருக்கும். மேலும் அதே மோக உணர்வு சில செயல்பாடுகளை செய்ய விடாமலும் தடுக்கும் எண்ணங்களைத் தோற்றுவிக்கும் என்பதையும் அறிதல் நலம்.

மோகத்தினால் செல்வவேட்கை எற்பட்டால் பல அசுப செயல்களில் ஈடுபட்டு பொருள் சேர்ப்பதிலேயே கவனம் கொள்ளச் செய்துவிடும். அதாவது அதற்கான ப்ரவிருத்தியே நடைபெறும். அதே சமயம் பொருள் சேர்ந்தாலும் குறைந்து விடாமல் இருக்க செலவுக்கான எச்செயல்பாடுகளிலும் மனம் கவனம் செலுத்த விடுவதில்லை. அதாவது சேர்த்த பொருள் குறையாமல் இருக்க வேண்டி தானம், தருமம் போன்ற சுபச் செலவுகளில் ஈடுபடாது மனம் தடுத்துக் கொண்டிருக்கும். அந்த அப்ரவிருத்திக்கும் காரணம் அந்த மோக வினை உதயமே யாகும்.

அதே சமயம் ஒருவருக்கு வினைகளைப் பற்றிய அறிவு அகமங்களின் வழியே அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் போது அந்த அசுப ப்ரவிருத்திக்கும், சுப அப்ரவிருத்திக்கும் தடையில்லாமல் ஞானம் உபயோகத்தில் இருக்கும், அதாவது புத்தியில் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இதன் காரணமாக வினை பந்திப்பதில்லை, கட்டு நிகழ்வதில்லை என்பதை சுருக்கமாக இப்பாடலின் வழியே ஆச்சார்யர் தெரிவிக்கிறார்.

ஆகம அறிவை வளர்த்துக் கொள்ளுதலே வினைகட்டிலிருந்து விலக்கும் ஞான விருத்திக்கு காரணமாகும். அதுவே முன் பாடலில் குறிப்பிட்ட நிர்ஜரை எனும் வினை உதிர்தலுக்கு வகை செய்யும் என்பதை இப்பாடலில் தொடர்கிறார்.

அதாவது வினைகள் கனிந்து உதயகாலம் வந்ததும் பயன் தந்து செல்வது சவிபாக நிர்ஜரை, தானாக உதிர்தல். அதுதான் பிறவி உயிர்களிடம் வழக்கமாய் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால அச்சமயத்தில் தாறுமாறாக நடந்து மேலும் வினைகளைக் கூட்டிக் கொள்வதும் வழக்கமான செயலாகவும் உள்ளது.

மாறாக ஆகம அறிவினை வளர்த்து சுருத வழி ஞானத்தை பெறும் போது பழைய வினைகள் தவம், தியானம் போன்ற நல்லொழுக்கத்தினால் உதய காலத்திற்கு முன்னரே பயன் தரச் செய்யாமல் விலக்கும் முயற்சியில் ஈடுபடுவது அவிபாக நிர்ஜரை என்று சொல்லப்படுகிறது. இவ்வாறான அவிபாக நிர்ஜரையில் ஈடுபடும் போது புதிய வினைகள் சேராமல் இருக்க இந்த ப்ரவிருத்தி மற்றும் அப்ரவிருத்தியும் பயனுள்ளதாக அமையும் என்பதை நாம் புரிந்து கொள்ளுதல் நலம்.

அதனால் ப்ரவிருத்தி மற்றும் அப்ரவிருத்தியை ஞானத்துடன் செயல்பட்டு அவிபாக நிர்ஜரையில் ஈடுபடுதலே பல பிறவிகளை விலக்கி முக்திக்கு வழிவகுக்கும் என்ற தெளிவைப் பெறவே இப்பாடலை நமக்களித்துள்ளார் வணக்கத்திற்குரிய ஆச்சார்ய குணபத்ர முனிவ பெருமகனார் அவர்கள்.

---------

அதாவது இன்றைய காலகட்டத்தில் மனதை வசியம் செய்ய வார்த்தைகளை இலக்கியம், பாடல், நாடகம், வசனம் சினிமா போன்ற ஊடகங்களில் வழியே உபயோக்கித்து தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்து தாங்கள் இடும் கட்டளைக்கு பணியச் செய்யும் கலையில் பலரும் வீழ்ந்து பலபிறவிகளுக்கு காரணமான சவிபாக நிர்ஜரையில் தான் வாழ்ந்து வருகின்றனர். மோகவினையில் அனைத்து உட்பிரிவுகளும் தீர்ந்து இக்காலத்தில் புதியதாக சில உட்பிரிவுகளை சேர்க்கும் வல்லமை பெற்ற தீயோர்களின் வசியத்தில் வீழ்ந்து கிடப்பதை இது போன்ற ஆகமங்களைப் படிக்கும் போது நன்கு உணர்ந்து கொள்ளலாம்.

அவர்களது தர்பாரில் அமர்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை பெருமையாக கூறிக்கொள்வதில் பலரும் ஈடுபடுவதைக் காண்கிறோம். கையில் ஆயுதங்களை ஏந்தி எந்த ஒருவரையும் சீவித்தள்ளும் தண்டனையே சிறந்தது என்ற அசுப ப்ரவிருத்திகளைகளைத்தான் கற்பிக்கிறார்கள். அந்த வசியத்தில் வீழ்ந்தவர்கள் எப்போது அவிபாக நிர்ஜரைக்கு வருவது என்ற விடையை தேடும் போது இந்த ஆத்மானுசாசனம் போன்ற நூல்களே அவர்களுக்கான வழிகாட்டியாக அமையும் என்பது திண்ணமே.

இந்த ஆச்சார்யரும் தமது நூலின் துவக்கத்தில் ஆத்மாவுக்கு பரிந்துரைகளை அளித்தும் பின்னர் சில கருத்துக்களை ஏற்கச்செய்து, படிப்படியாக நம்பிக்கையை வளர்த்து தனது வசியத்தில் கவர்ந்திருத்த பின்னர் கட்டளையிடவும் துவங்கியுள்ளார் என்பதே நிதர்சனம்.

இக்கால வசிய நிபுணத்துவம் அக்காலத்திலும் இருந்துள்ளது. ஆனால் சமூகத்தில் நல்லதை விதைத்து அனைவரும் நலமுடன் வாழவும், மறுபிறவியில் நற்கதியை பெறவும், அறவுணர்வில் திளைத்து சில பிறவிகளிலேயே விடுதலை பெறவும் அந்த நிபுணத்துவம் வகை செய்துள்ளதை நாம அறிதல் நலம்.

இடையில் எக்காலத்திலும் ஏதோ ஒரு திரை மறைத்துக் கொண்டுதான் இருக்கும்.

கலைகள் அனைத்தும் கருத்துக்களை வளர்க்கவே ஏற்பட்டன. ஆனால் நல்ல கருத்துக்களை விலக்கி தீய கருத்துக்களை மண்டைக்குள் தீணித்து தங்கள் ஆளுமைக்குள் கொண்டுவருவதினால் இவ்வுலகம் வீழ்ச்சிக்குத்தான் செல்லும் என்பதை புரியவைப்பதிலேயே முன்னிலை வகிப்பது இந்த சமண ஆகமங்கள் என்பதை நாம் புரிதல் நலம்.

ஆனால் சிலர் நல்ல கருத்துக்களை வெளியிட்டாலும் கருத்தை விட்டு விட்டு கலையை மட்டுமே ரசிப்பவர்களாகவும் மாறிவிடுகின்றனர். அவர்களும் சீக்கிரமே கருத்து வட்டத்திலிருந்து விலகாமல் இருத்தலும் மேலும் நலம் பயக்கும் என்பதையும் இவ்வேளையில் குறிப்பிட வேண்டியுள்ளது.





द्वेषानुरागबुध्दिर्गुणदोषकृता करोति खलु पापम् । 
तद्विपरीता पुण्यं तदुभयरहिता तयोर्मोक्षम् ।।181।।

துவேஷானு ராகபுத்திர்குணதோஷக்ருதா கரோதி கலு பாபம் | 

தத்விபரீதா புண்யம் ததுபயரஹிதா தயோர்மோக்ஷம் || 181 ||

Aversion to virtues and attachment to evils cause demerit (pāpa). On the other hand, attachment to virtues and aversion to evils cause merit (punya). Rid of both, attachment and aversion, the soul is freed from merit as well as demerit; this is the cause of stoppage (samvara) and shedding (nirjarā) of karmas.
நல்லொழுக்கங்களுக்கான வெறுப்பு மற்றும் தீமைகளுக்கான விருப்பு ஆகியவை பாபவினைக்கட்டை ஏற்படுத்துகின்றன (பாபா). மறுபுறம், நல்லொழுக்கங்களுடனான விருப்பு மற்றும் தீமைகளுக்கு வெறுப்பு ஆகியவை புண்ணிய வினைப்பந்தந்தை ஏற்படுத்துகின்றன. விருப்பு மற்றும் வெறுப்பு இரண்டையும் அகற்றுவது ஆன்ம குணம் மற்றும் குற்றதிலிருந்து விடுவிக்கிறது; இது கர்மங்களின் தடுப்பு மற்றும் உதிர்தலுக்கு காரணமாகும்.

இந்த பாடலில் ஆச்சார்யஸ்ரீ சிக்மன் ஃபிராய்ட் போன்ற உளவியல் பூர்வமாக மேலும் கணிதரீதியான வாழ்வுமுறையை நமக்கு வினைக்கட்டு மற்றும் வினைவிலக்கலுக்கான வழிகளை தருகிறார்.

-----

பெரும்பாலும் சமணம் மோட்சமார்க்கத்தை அறிவியல் ரீதியான உண்மைகளை, தத்துவங்களை, விதிகளை அளிப்பதில் வல்லமை பெற்றது. என் போன்றோர் பலரும் புரியவில்லை என்பதால் அவற்றை ஏதோ ஆன்மீகம் அது புரியாத ஒரு பாடம் அதை படிப்பதும் புரிந்து கொள்வதும் கடினம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆச்சார்யர் குணபத்ரர், குந்தகுந்தர் போன்ற ஆன்மீக அறிவியல் நிபுணர்களின் நூல்களை படித்து திரு. ஆதிசாகர், திரு. கவி. அஜிததாஸ் போன்றோரிடமும் கேட்டும் அவர்களது நூல்களை படித்தும் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பல அறிஞர் பெருமக்களின் நூல்களை படித்தும், ஐயங்களை (நேரிலோ, தொலைபேசியின் வாயிலாகவோ) கேட்டுத்தெளியும் போது நன்கு புரிந்து விடும். இவற்றை எந்த ஒரு சினிமாத்துறையினரும் கையில் எடுக்கப்போவதில்லை. அந்த காலம் வரும்வரை நாம் வாழப்போவதுமில்லை.

சமணம் நல்ல தொரு வாழ்வியலையும், வாழும் முறையுமே தந்துதவியுள்ளது. அதன் மீது நம்பிக்கை வைத்து துவங்குதல் சீக்கிரமே நல்ல யோகமுறைகளை அறிய, புரியச் செய்துவிடும் என்பதே நிதர்சனம்.

----------------

குணம் – ஆன்மனுக்கு நன்மை செய்யக்கூடிய எண்ணம், சொல், செயல் களுக்கான – யோகத்திற்கான- மூல உணர்வுகளை குணம் என்று குறிப்பர்.

குற்றம் – எதிரிடையான யோகம். அதாவது ஆன்மாவிற்கு தீமை தரும் யோகங்கள். ஆன்மாவிற்கான தோஷங்கள் ஆகும்.

நாம் தான் ஆன்மா என்பதில் உறுதி ஏற்பட்டால் நமக்கான குணங்கள், தோஷங்கள் எவை என்பதை அறிந்து செயல்படலாம்.

அறம் சார்ந்த உணர்வுகள் அனைத்துமே ஆன்மனுக்கு நன்மை உண்டாக்க வல்லவை. அதனால் அறத்தை வளர்க்கும் உணர்வே குணமாகும். மற்ற யோகங்கள் – எண்ணம், சொல், செயல்- அறமற்றவை அதாவது தீய உணர்கள் அனைத்தும் குற்றமாகிறது.

எந்த உணர்வை உபயோகிக்கிறோமோ அதுவே புத்தி யாகும். அதாவது நல்ல புத்தி, தீயபுத்தியே ஒருவருக்கு வினைக்கட்டை நிர்ணயம் செய்கிறது.

இந்த புத்தியில் அமர்ந்து வேலை செய்பவையே 143 வினைகளும், நான்கு கஷாயங்களும் ஆகும். (சுருக்கமாக தெரிவித்துக் கொள்கிறேன்)

புத்தியில் அதாவது உபயோகத்தில் மூன்றுவகையுள்ளது. அவை அசுபோபயோகம், சுபோப யோகம், சுத்தோப யோகம் என்பன. அதாவது நல்லபுத்தி, தீயபுத்தி, தூயபுத்தி எனலாம். (இவை நாம் புரிந்து கொள்வதற்கானவை.)

உதாரணமாக ஒருவருக்கு மோகத்தினால் குணங்களின் மீது வெறுப்பும், குற்றங்களின் மீது விருப்பும் உள்ளதோ.. அல்லது குணமுள்ளவை, குணத்திற்கு காரணமானவை, அவற்றின் மீது வெறுப்பும் உள்ளதோ,

அல்லது குற்றமுள்ளவை, குற்றங்களுக்கு காரணமானவை இவற்றின் மீது விருப்பமுள்ளதோ அவர் அசுபோபயோக முடையவர். (தீயபுத்தியுள்ளவர்) அவருக்கு தீவினையே பந்தம் ஆகும்.

எவருக்கு மந்த மோகத்தினால் குணங்களின் மீது விருப்பமும், குற்றங்களின்மீது வெறுப்பும் ஏற்படுகிறதோ, குணத்திற்குரிய காரணங்களின் மீது விருப்பமும், குற்றத்திற்குரிய காரணங்களின் மீது வெறுப்பும் ஏற்படுகிறதோ அவர் சுபஉபயோகத்தில் உள்ளவர். அதாவது நல்லபுத்தியுடையவர். அவருக்கு நல்வினையே பந்திக்கும்.

சிலவேளையில் வெறுப்பினாலும் நல்வினை பந்தம் ஆவதுண்டு.

உதாரணமாக: குகையில் ஒரு முனிவர் தவமியற்றி வருகிறார். அவரை அங்கு வந்த சிங்கம் தனது இரையாக்க துணிகிறது. அதைக்கண்ட ஒரு பன்றி அம்முனிவரைக் காப்பாற்றும் நல்ல எண்ணத்துடன் சிங்கத்துடன் சண்டையிடுகிறது. அந்த பன்றி இறந்து ஐந்தாம் சுவர்க்கத்திலும், சிங்கம் இறந்து ஐந்தாம் நரகலோகத்திலும் பிறக்கிறது என்பதாக புராணத்தில் வருகிறது.

அதே போன்று பாபங்களும், பாபிகளும் வெறுத்து நிந்திக்கப்பட்டுள்ளதாக குறிப்புகள் ஆகமங்களில் காணலாம். ஆகையால் ஒரு நோக்கில் வெறுப்பிலும் நல்வினை பந்தத்திற்கான நிகழ்வுகள் நடந்துள்ளன.

ஆனால் இந்த நல்ல புத்தியும், தீய புத்தியுமான சுபஉபயோகம் மற்றும் அசுபஉபயோகம் இரண்டிலுமே விருப்பு, வேறுப்பு கலந்துள்ளது. அதனால் இவ்விரண்டுமே ஒருவகையில் சுத்த உபயோகமில்லை (தூயபுத்தியில்லை) என்கிறார் முனிவர் பெருமான்.

அதாவது மோகஉணர்வு இல்லாத விருப்பு, வெறுப்பற்ற யோகமே பந்திக்காத நிர்ஜரைக்கான யோகமாகும். அது அறவழியில் நடக்கும் போது ஆய்ந்தறிந்து நல்ல புருஷார்த்தம் அடங்கிய தவவாழ்வில், தியானத்தின் வழியில் பயணித்தால் தூயபுத்தியுடனான யோகமுறையில் வாழ்ந்து வினைத்தடுப்பிற்கும், உதயமான வினை உதிர்வதற்கும் வழி வகுக்கும். அவ்வாறான வாழ்வுமுறையில், ஒரு காலக்கட்டத்தில் ஆன்மாவிலுள்ள வினைகள் முழுவதுமாக விலகி விடுதலை பேற்றை அடையலாம் என்ற கணித முறை அறிவுரையை இப்பாடலின் வழியே நமக்களிக்கிறார் ஆச்சார்யஸ்ரீ அவர்கள்.





मोहबीजाद्रतिद्वेषौ बीजान्मूलाघ्कुराविव । 
तस्माज्ज्ञानाग्निना दाह्यं तदेतौ नि£दध्क्षिुणा ।।182।।

மோஹபீஜா த்ரதித்வேஷெள பீஜான்மூலாங்குராவிவ | தஸ்மாஜ்ஞானாக்னினா தாஹ்யம் ததேதெள நிர்திதிக்ஷுணா || 182 ||


Just as the seed produces root and shoot, in the same way, the seed of delusion (moha) produces attachment (rāga) and aversion (dvesa). If you wish to burn down these two, attachment (rāga) and aversion (dvesa), burn down the seed of delusion (moha) by the fire of knowledge (gnana).
விதை வேர் மற்றும் தண்டு பகுதியை உருவாக்குவது போலவே, அதே வழியில், மாயையின் விதை (மோஹம்) வெறுப்பு (ராகம்) மற்றும் வெறுப்பு (த்வேஷம்) ஆகியவற்றை உருவாக்குகிறது. விருப்பு மற்றும் வெறுப்பு ஆகிய இரண்டையும் நீங்கள் எரிக்க விரும்பினால், ஞானம் என்ற நெருப்பால் மாயையின் விதையை எரிக்கவும்.

வினைக்கட்டிற்கு காரணமான விருப்பு வெறுப்பு எவ்வாறு தோன்றுகிறது என்பதை இப்பாடலில் ஆச்சார்யர் தெரிவிக்கிறார். ஞானமற்றவருக்குத்தான் ஆசை தோன்றும் அதுவே மோகம் என்பது.

தன்னை யறிதலே தத்துவம் என்பது, மற்றவை தத்துவமற்றது என்பது ஆன்மீகம்.

தத்துவமற்றதின் மீது கொள்ளும் அக்கரை வடிவ மாய உணர்விற்கு மோகம், ஆசை என்று பெயர். புத்கலப் பொருட்களின் மீது எழும் வேட்கையே விருப்பம். அதன் மீது எழும் விருப்பமின்மையே வெறுப்பு ஆகும். ராகம், த்வேஷம் என்று தத்துவநூல்கள் தெரிவிக்கின்றன.

மரத்தின் வேருக்கும், தண்டிற்கும் காரணம் அதன் விதையே. அதுபோல விருப்பு வெறுப்பிற்கு காரணமானது மோக உணர்வே என்று இப்பாடலில் தெரிவிக்கிறார். அந்த விதையை ஞானம் என்ற நெருப்பில் இட்டு எரித்தால் விருப்பு வெறுப்பு அகன்று விடும் என்ற வழிகாட்டுதலைத் தருகிறார்.

பல ஞானியரும் இந்த மோகத்தை அழித்தால் தான் முக்தி என்பதாக கூறுகின்றனர். அவர்கள் வாக்கின் படி…

ஞானத்திற்கும் மோகத்திற்கும் உள்ள வித்தியாசம்.

"நான் யார்?" என்பதை அறியாதிருக்கும் போது ஏற்படுகிறதே ஒரு ஆசை அதுவே மோகம் எனப்படுவது. "நான் யார்..?" என்பதை அறியும் போது அன்பு ஏற்படுகிறது. அந்த அறிதல் தான் ஞானம் எனப்படுவது. எல்லாவற்றிற்கும் பின்னாலுள்ள ஒரே வித்தியாசம் அதுதான். அந்த மூல வித்தியாசமே எல்லாவற்றிலும் வெளிப்படுகிறது

மோகம் - செடியில் பூவைப்பார்த்தால் அதை பறிக்கச்சொல்வது. அன்பு -செடியில் பூவைப்பார்த்தால் நீரை ஊற்ற சொல்வது. இந்த அன்புச்செயல்பாடு ஞானத்தால் விளைந்தது. அன்பு ஞானமாகும், மோகம் அஞ்ஞானமாகும்

அன்பு சுதந்திரமானது எல்லாவற்றிகும் எதிராக அது "அன்னிய"த்தின் மீது சார்ந்திருக்கவில்லை. அது சுயமாக உள்ளது. அது "மற்றவைகளால்" ஏற்படுவதில்லை. மஹாவீரர் அந்த அன்பை அஹிம்சை என்கிறார். புத்தர் கருணை என்கிறார். இவை இரண்டுமே அன்பின் வெளிப்பாடுகள். குற்றமற்றவை. தோஷம் நீங்கியவை. ஆத்மகுணத்துடன் வாழ்பவை.

குற்றம் மனம் சம்பந்தப்பட்டது. அதுவே பிறரது செயலுக்காக தண்டனையை அளிப்பது. மனப்பக்குவம் இருந்தால் மன்னிப்பை அளிப்பது. ஆனால் மனம் விலகிய உணர்வு நிலையில் தண்டனையும் இல்லை, அங்கு மன்னிப்பும் இல்லை. அங்கிருப்பது அஹிம்சை, கருணையே. அதுவே சுத்த உபயோகமானது. தூயஉணர்வு நிலை.

ஞானம் அதைத்தான் வழங்குகிறது. அதனைப் பெற்றவர்களே ஞானியர்.

ஒரு சமூகம் குற்றங்களை களைய குற்றம் இழைத்தவனை தனிமையில் சிறைப்படுத்தும், மரண தண்டனை யளிக்கும், அரிதாக மன்னிப்பதும் உணடு. அந்த சமூகத்திலுள்ள பலரின் மனதால் உருவாக்கப்பட்டதே சட்டம். அது குற்றங்களுக்கு தண்டனையையோ, மன்னிப்பையோ தான் வழங்கும். மனம் இளகினால் மன்னிப்பைத் தரும். அது அசுப, சுப உபயோகத்திற்கு கட்டுப்பட்டது.

ஆனால் ஆன்ம விழிப்பான ஞானியரின் அன்பு, அஹிம்சை, கருணை அவர்களை ஆற்றுப்படுத்தும். எவ்வளவு கொடியவனையும் ஞானியர் தண்டிப்பதுமில்லை, மன்னிக்கவும் செய்வதில்லை. அந்த இருமை நிலையை கடந்தவர்கள். அவர்கள் எப்போதும் சுத்த உபயோகத்தில், தூயபுத்தியுடன் வாழ்பவர்கள். குற்றம் இழைத்தவர்களை மனம் மாறச் செய்து நல்வழிப்படுத்தி சமூகத்திற்கு அளித்து விடுவர். அச்செயலே அச்சமூகத்தை மேன்மை படுத்தும். தண்டனையோ, மன்னிப்போ அவ்வாறு செய்வதில்லை. குற்றத்தை குறைக்கவே செய்யும். மன்னிப்பு மனதை மாற்றுவதற்கு உத்திரவாதம் தருவதில்லை. ஆற்றுப்படுத்துதல் ஆழத்தில் மாற்றத்தை அளித்து விடும்.

ஞானம் அன்பொளி நிரம்பியது அதில் அஹிம்சையையும், கருணையையும் நிரப்பி இருக்கும். எனவே ஞான வடிவமே சிறந்த மனிதநிலை. தூயஉணர்வுநிலையில் வாழ்வது. அது அன்பு, கருணை, இரக்கம் நிறைந்தது.

ஞானம் காரணமற்றது ஆகவே அது நித்தியமானது. மோகம் நிலையற்றது அது காரணத்தினால் ஏற்படுகிறது. அன்னியத்தை சார்ந்துள்ளது. மற்றதை சார்ந்ததாகும். ஒன்றிற்காக வாழ்வது. ஆகவே அது துயரத்தின் மூலமாகிறது. மோகம் சென்ற பிறகே அன்பு வருகிறது. மோகத்தின் அழிவு எனப்படுவது அன்பைக் கொண்டு ஏற்படுகிறது. அன்பைப் பெறுவதென்பது, எல்லாவற்றையும் அடைந்து விடுவதாகும். அன்பே முக்தி ஆகும். மோக உணர்வு கஷாயங்களின் மூலமாகும்.

விபரீத நம்பிக்கையின் காரணமாக தோற்றுவித்துக் கொள்ளப்படும் ஃபாவ கர்மத்தை குறிப்பது மோகம் என்ற சொல். அது திரவிய கர்ம பந்தத்திற்கு முக்கிய காரணமாகிறது.

ஓர் எடுத்துக்காட்டின் மூலம் நம்மிடம் கருணை எவ்வாறு இல்லாமல் போகிறது என்று பார்க்கலாம்.

ஒரு பிச்சைக்காரன் கிராமத்திலிருந்து நகரத்திற்கு புதிதாக வந்தான். நகரத்திற்குப் புதியவன் என்பதால் எந்தக் கடையில், எந்த வீட்டில் பிச்சை கிடைக்கும், எங்கு கிடைக்காது என்று அவனுக்குத் தெரியாது. ஆனால் அங்கு வாழ்ந்து வரும் பழைய பிச்சைக்காரர்களுக்கு நன்கு தெரிந்த விஷயம்.

புதிதாக வந்த அந்த பிச்சைக்காரன் ஒரு கடையில் பிச்சைக் கேட்டான். அந்தக் கடைக்காரனோ இதுவரை எவருக்கும் பிச்சை தராதவன், கருமி, புதியவன் அங்கு பிச்சையெடுப்பதை பழைய பிச்சைக்காரர்கள் தூரத்திலிருந்து வேடிக்கைப் பார்த்து தங்களுக்குள் சிரித்துக் கொண்டிருந்தனர். அந்தக் கடைக்காரன் பொருளாசை மிக்கவன். பண ஆசையால் சரியாக சாப்பிடுவது கூட இல்லை. அவனிடம் மற்றவர்களுக்குக் கொடுப்பது என்னும் பேச்சிற்கே இடமில்லை. பிச்சைக்காரர்களைத் திட்டி அனுப்பி விடுவான். எனவே யாரும் அவன் கடைக்குப் பிச்சை யெடுக்கச் செல்வதில்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பிச்சைக்காரன் வந்து நிற்கவே; “என்ன வேண்டும்? என்று கேட்டான்”. பிச்சைக் காரனோ; “ஏதாவது கொடுங்கள் ஐயா! இன்று தான் இந்நகரத்திற்கு வந்துள்ளேன்” என்று பிச்சைக்காரன் கூறினான். கடைக் காரனுக்கு அவனை கிண்டல் செய்ய வேண்டும் என்று தோன்றியது.

பிச்சைக்காரனைப் பார்த்து; “எனது இரண்டு கண்களைப் பார், இரண்டில் எது அசல், எது பொருத்தப் பட்ட கண் என்று கூறு பார்க்கலாம்” என்றான். அதைக் கேட்ட பிச்சைக்காரன்; அவருடைய கண்களைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்து விட்டு; பிச்சைக்காரன் பலரது கண்களைப் பார்த்த அனுபவம்; “ஐயா! உங்களது இடது கண் அசல், வலது கண் பொருத்தப்பட்டது” என்றான்.

இதைக் கேட்ட கடைக்காரன் அசந்து போனான். இவன் கண்டுபிடிக்க மாட்டான், அதையே சாக்காக வைத்து விரட்டி விடலாம் என்று நினைத்திருந்தான். அவன் சரியாக சொல்லி விட்டதால் ஏதாவது கொடுத்தே தீர வேண்டும், கொடுப்பதாக ஏற்கெனவே வாக்குக் கொடுத்திருந்தான். ஆகையால் கடைக்காரன் சிரித்துக் கொண்டே கூறினான்; “நீ இன்று ஜெயித்துவிட்டாய். என் மனம் உனக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது” என்றார். தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பழைய பிச்சைக்காரர்கள்; ஏதோ தர இருக்கிறார் என்பதை உணர்ந்து வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்தக் கடைக்காரர் பிச்சைக் காரனிடம், “நீ எப்படி அசல் மற்றும் பொருத்திய கண் என்று கண்டு பிடித்தாய்? எனக்கு வியப்பாக இருக்கிறது. இதற்கு மட்டும் பதில் கூறு” என்றார். அதற்குப் பிச்சைக்காரன், “ஐயா, உங்கள் பொருத்திய கண்ணில் சிறிது கருணை தெரிகிறது, ஆனால் அசல் கண்ணில் கருணை இல்லாததோடு, அதில் போகமும், ஆசை உணர்வும் பிரதிபலிக்கிறது. ஆகையால் அதை அசல் என்று கூறினேன்” என்றான். இந்த எடுத்துக்காட்டின் மூலம் நமது மோகம் நமது கருணை உணர்வை அழித்து விடுகிறது என்பதை அறியலாம். நமது இயல் குணங்களிலிருந்து இந்த மோகம் நம்மை வேறுபடுத்திவிடுகிறது.

----

தன்னை யறிந்த நற்காட்சியாளரிடம் விருப்பு, வெறுப்பு இருந்தாலும் அது நிலத்திலிருந்து பிடுங்கப்பட்ட செடியைப் போன்று சீக்கிரத்தில் கருகிவிடும். அதே சமயம் மோகத்தின் இயல்போடு பொய்காட்சியாளரிடம் தோன்றும் மோக உணர்வு சிறியதாக விதை போல தோன்றினாலும் பின்னர் வேர்விட்டு, தண்டு, கிளையுடன் மரமாகி நிற்கும் என்பதை புரிந்து கொள்ளவதே இப்பாடலின் தெளிவாக தருகிறார் முனிவர் பெருமான்.

அந்த மோகத்தை அழிக்க இவ்வுலக மாயைப்பற்றிய அறிவு தேவைப்படுகிறது. அதனை ஆகம அறிவுடனான செயல்பாடுகள் அவசியமாகிறது. அதுவே விருப்பு வெறுப்புகளை எரித்து விடும் நெருப்பாக உள்ளது என்பதை அறிதல் நலம். எனவே தத்துவ ஞானம் பெறுதல் அவசியமாகிறது.





पुराणो ग्रहदोषोत्थो गम्भीरः सगतिः सरुक् । 
त्यागजात्यादिना मोहव्रणः शुध्वद्यति रोहति ।।183।।

புராணோ க்ரஹதோஷோத்தோ கம்பீர: ஸகதி: ஸரூக் | 

த்யாக ஜாத்யாதினா மோஹாவ்ரண: சுத்வத்யதி ரோஹதி || 183 ||

Delusion (moha) is like a wound, similarly painful. Just as the old, demon-inflicted, deep, fluid-oozing, and painful wound is cleaned and healed by the ointment of clarified butter (ghee), etc., in the same way, the wound of delusion, which too is old (associated with the soul since beginningless time), inflicted by the demon of attachment-to-possessions, deep (serious), cause of adverse states of existence, and a source of anguish, is cleaned and healed by the ointment of renunciation. Upon its healing, the soul moves to the summit of the universe.
மாயை (மோஹா) ஒரு காயம் போன்றது, இதேபோல் வேதனையானது. அந்த பழைய, ஆழமாய் பாதிக்கப்பட்ட, சீழுடன்-கசிவு மற்றும் வலியுடைய காயம் சுத்தீகரிக்கப்பட்ட நெய் போன்றவற்றினால் ஆன களிம்பு மூலம் சுத்தம் செய்யப்பட்டு குணமடைவது போல, அதே வழியில், மாயையின் காயமும் தொடக்கத்திலிருந்தே ஆத்மாவுடன் தொடர்புடையது. அந்த தீவிரமான, பாதகமான நிலைகளுக்கு காரணம் உடைமைகளால் இணைந்தது, வேதனையின் ஆதாரம் ஆகியவற்றால் தூண்டப்பட்டது. அவை துறவறத்தின் களிம்பால் சுத்தம் செய்யப்பட்டால் தான் குணமாகும். அவ்வாறு குணமடைந்தவுடன் ஆன்மா பிரபஞ்சத்தின் உச்சிக்கு நகர்கிறது.

'மோகம்’ என்றால் சித்தம் கலங்குவது. 'யாரை, எதைப் பார்த்து?’ என்பதெல்லாம் அதற்கு அவசியம் இல்லை! காமம் அடக்கதுடன் இருப்பதை மோகம் வெளிப்பாட்டில் கொண்டு வந்துவிடும். ஒரு பொருளின் ஈர்ப்பில் அதிக கவனமே மோகம் என்கிறார்கள். அது உணர்வில் அமர்ந்தால் அழிவின் விளிம்பு வரை தள்ளி விடும்.

விழி எறும்புகள் ஊரும்போது விரியும் மலர் தேகம்...! உதடு படாமல் உள்ளுக்குள் இனிக்கிறது... இதுவோ மோகம் என்றான் ஒரு கவிஞன். ஆம் இது போன்ற கவனஈர்ப்பே மோகத்தின் வேர்கள்.

மோகம் என்றால் ஆசை ; காமமயக்கம் ; விருப்பம் ; வேட்கை ; மூர்ச்சை ; மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி அனைத்திற்குமான ஒரே வேர் உணர்வு.

நள்ளிரவு. ஒரு பாலத்தின் அடியில் இருட்புதரில் இரண்டு பாம்புகள். ஆணும் பெண்ணுமாகிய அப்பாம்புகள் முழுநிலவு ஒளிரும் கடற்கரையின் மணல்மீது ஊர்ந்து வருகின்றன. ஆண் பாம்பு பெண் பாம்பிடம் கூறுகிறது, “உன்னுடன் கூடிவாழ்வதில் எனக்கின்பமில்லை. உன்னால் எனது வாழ்நாள் விஷமயமாகிறது. உன்னாலேதான் என் மனம் எப்போதும் அனலில் இட்ட புழுவைப் போலே துடித்துக்கொண்டிருக்கிறது.” உடனே பெண்பாம்பும், “உன்னுடன் கூடிவாழ்வதில் எனக்கின்பமில்லை. உன்னால் எனது வாழ்நாள் நரகமாகிறது என்கிறது.” தொடர்ந்தும் இரண்டும் பேசிக்கொள்கின்றன.

ஆண் பாம்பு: நான் உன்னைப் பகைக்கிறேன், பெண் பாம்பு: நான் உன்னை விரோதிக்கிறேன். ஆண்: நான் உன்னைக் கொல்லப்போகிறேன் பெண்: நான் உன்னைக் கொல்லப்போகிறேன். கடைசியில் ஒன்றையொன்று கடித்து இரண்டு பாம்புகளும் மடிகின்றன.

இது பாரதியார் எழுதிய ஜகத்சித்திரம் வசன கவிதை நாடகத்தின் ஒரு காட்சி. இவை உண்மையில் பாம்புகள் அல்ல; மனித மனங்களில் மோகத்தினால் வந்த விகார உருவகங்கள். திருக்கோயில்களில் சிற்பங்களாகவும் ஓவியங்களாகவும் காணக்கிடைக்கும் இருநாகங்கள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த நிலையில் இருக்கும் காட்சி இந்த மோகவலையைத்தான் தெரிவிக்கின்றன.

காமம் பூ. கரைகடந்த மோகம், பூநாகம். மோகத்தைக் கொன்றுவிடு, அல்லால் என்றன் மூச்சை நிறுத்திவிடு! என்கிற மகாகவி பாரதியின் கூற்றுதான் எத்துணை பொருள் பொதிந்தது.

நம் உடலில் தீவினைக்காரணத்தினால் கட்டிகள் தோன்றுகின்றன. அவை ஆழமாக, நீண்டநாட்களாக பழையனவாய் அப்படியே சீழுடன் தங்கி விடுகிறது. அதனை ஆற்ற சுத்தநெய்யினால் செய்யப்பட்ட மூலிகைக்களிம்பைப் பூசி வந்தால்தான் அது ஒருநாள் முற்றிலும் ஆறிவிடும்.

அதேபோல் இந்த ஆசையின் பிரதிபிம்பமான மோகம் பலபிறவிகளாக நம்மைத்தொடர்ந்து வருகின்றன. அதுவும் ஆழமான, புரையோடிய கட்டிபோல் நம் உணர்வில் தங்கிவிட்டன. அந்த மோகத்தினால் விளைந்த பழவினைகளை, சில உணர்வுகளை, பொருட்களை தியாகம் செய்வதினால் மட்டுமே அழிக்க முடியும் என்கிறார் ஆச்சார்ய பெருமான்.





सुहृदः सुखयन्तः स्युर्दुःखयन्तो यदि द्विषः । 
सुहृदोअपि कथंशोच्या द्विषो दुःखयितुं मृताः ।।184।।

ஸுஹ்ருத: ஸுகயந்த ஸ்யுர்து: சுயந்தோ யதி த்விஷ: | 

ஸுஹ்ருதோஅபி கதம் சாச்யா த்விஷோ து:கயிதும் ம்ருதா: || 184 ||

If those who cause happiness are considered friends and those who cause misery enemies and since such friends (father, son, brother) cause misery of parting when they die, they too are enemies. Why should one mourn them?
மகிழ்ச்சிக்கு காரணமானவர்களை நண்பர்களாகவும், துன்பத்தை காரணமானவர்களை எதிரிகளாகவும் கருதப்படுகிறது. அத்தகைய நண்பர்கள் (தந்தை, மகன், சகோதரர்) இறக்கும் போது பிரிந்து செல்வதில் துயரத்தை ஏற்படுத்துவதால், அவர்களும்(நண்பர்களும்) எதிரிகளாகின்றனர். ஒருவர் ஏன் பிறரது பிரிவுக்காக துக்கப்பட வேண்டும்?

உலகில் நமக்கு எவரொருவர் இன்பம் தருகிறாரோ அவரை நண்பராகவும், துன்பந்தருபவரை பகைவராகவும் கருதுவது மனிதர்களது வழக்கம். ஏனென்றால் இன்பம் தருபவர் நமது மோகத்தை, ஆசையை பூர்த்தி செய்பவராகத்தான் இருப்பார்கள். அவ்வாறு மோகத்தினால் அடைய எண்ணும் பொருளுக்கு இடையூறாய் இருப்பவர்கள் நமக்கு பகைவர்களாகத்தான் தோன்றுவார்கள்.

அதே சமயம் நண்பர்களாயிருந்து பின்னர் துன்பந்தரத்தொடங்கினால் அதாவது நம் மோகவுணர்வுக்கு எதிரியாய் மாறுபவர்களையும் பகைவர்களாகத்தான் கருதுவோம்.

எந்த ஒரு பொருள் மீது மோகம் கொள்கிறோமோ அது கிடைத்ததும் ஒருவர் ஆசையை பூர்த்தி செய்யும் காரணத்தால் நண்பர்களாக நம் உணர்வு கருதுகிறது. அவ்வாறு பூர்த்தி செய்பவர்கள் இறந்து விட்டால் தொடர்ந்து நம் ஆசைகள் நிறைவேற வழியில்லாத காரணத்தினால் துன்பத்தையே அடைவோம். அம்மட்டில் நோக்கும் போது இவர்களும் நமக்கு பகைவர்களே ஆவார்கள் என்று முனிவர் கூறுகிறார்.

அதனால் மோகம், காதல், பாசம் போன்ற உணர்வுநிலையில் ஒருவருடன் பழகும் போது அவர்கள் அதற்கான நிபந்தனையை பூர்த்தி செய்யும் வரை அவர்களை நண்பர்களாகவே கருதுவோம். அதே சமயம் அந்த நிபந்தனையை அவர்கள் மீறினாலும், அல்லது அவர்கள் பிரிந்து விட்டாலும் துன்ப உணர்வே நம்மை கவ்விக் கொள்ளும். அதனால் மனைவி, மக்கள் முதலானர்வர்கள் இழப்பிற்காக வருந்த கூடாது. அவ்வாறு வருந்தினால் அவர்களும் பகைவர்களாகி விடுவார்கள் என்பதே அவர்தரும் அறிவுரை.

(கொஞ்சம் ஏற்றுக் கொள்வது சிரமமாக தோன்றும், ஆனால் அதுவே நிதர்சனம். ஆழ்ந்து சிந்தித்தாலோ, அந்த நிலையை நாம் எய்தினாலோதான் ஏற்றுக் கொள்ள முடியும்)





अपरमरणे मत्वात्मीयानलघ्घ्यतमे रुदन् 
विलपतितरां स्वस्मिन् मृत्यौ तथाSस्य जडात्मनः । 
विभयमरणे भूयः साध्यं यशा: परजन्म वा 
कथमिति सुधी: शोकं कुर्यान्मृतेSपि न केनचित् ।।185।।

அபரமரணே மத்வாத்மீயாநலங்கயுதமே ருதன், 

விலபதிதராம் ஸ்வஸ்மின் மிருத்யெள ததாஸ்ய ஜடாத்மன: | 
விபயமரணே பூய: ஸாத்யம் யச: பரஜ்ன்ம வா | 
கதமிதி சுதீ: சோகம் குர்யான்ம்ருதேS பி ந கேநசித் || 185 ||

The dim-witted man laments, with loud cries, the inevitable death of others – the wife, the son, the friend, etc. – thinking them as his own. Same is the case at the approach of his own death. How can such dim-witted man attain renown and good after-life, the outcome of a fearless death? The wise man should not mourn the approach of death.
மந்த புத்தியுள்ள மனிதன், மற்றவர்களின் தவிர்க்க முடியாத மரணம் - மனைவி, மகன், நண்பன் போன்றவர்களை - தன் சொந்தமாக நினைத்து உரத்த அழுகையுடன் புலம்புகிறான். அவனது சொந்த மரணத்தின் அணுகுமுறையிலும் இதே நிலைதான். அத்தகைய குறைந்தபுத்தியுள்ள மனிதன் ஒரு அச்சமற்ற சமாதி மரணத்தின் விளைவாக இங்கு புகழும் மற்றும் மறுமையில் நற்கதியும் எவ்வாறு அடைய முடியும்? அறிவுடையோன் துக்கப்படக்கூடாது. மரணத்திற்காக வருந்தக்கூடாது.

இந்தப் பாடலில் நிலையாமைத் தத்துவத்தை வலியுறுத்திச் சொல்கிறார். இந்த உலகில் என்னுடைய குடும்பம், சொத்து என்று இப்படிப் பல “என்னுடையவைகளை” வைத்துக் கொண்டிருக்கிறான். ஒவ்வொரு மனிதனும். மரணம் வரும்போது தன்னுடையது என்று நினைத்துக் கொண்டிருக்கும் அத்தனைப் பொருட்களிடமிருந்தும், உயிர்களிடமிருந்தும் பிரிக்கப்படுகிறான். இப்படி இறப்பின் போது நம் கூடவராதவை அனைத்தும் மாயை என்ற இலக்கணத்தை ஆன்மீகம் வழங்குகிறது. கூட வருவது ஒன்றே ஒன்று அது உயிர்; அதிலுள்ள தூய ஆன்மாவே தன்னுடையது என்று கூறுவதே அத்தனை ஆன்மீகங்களின் நோக்கம். இக்கருத்தை ஆச்சார்யஸ்ரீயும் வலியுறுத்தி கூறுகிறார்.

உலகமே உண்மையில்லாத பொருட்களின் கட்டமைப்பு. ஆனால் உண்மையைப்போல தோற்றமளிப்பவை- ஒரு மாயை - என்றுதான் சமணம் கூறுகிறது. ஞானியர் பலரும் இதையே கூறுகின்றனர். எந்த ஒரு பொருளும் நிலையாக இருப்பதில்லை. மரணித்துக் கொண்டுதான் உள்ளது. ஒன்றிலிருந்து வேறொன்றாக ரூபத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது என்று நிலையாமைத் தத்துவத்தை வலியுறுத்திச் சொல்கின்றனர்.

தாவரம், விலங்குகள், பறவைகள், மனிதன் இன்னும் நாம் உலகில் தொடர்பு கொள்ளும் அத்தனை பொருட்களும் தொடர்ந்து தோன்றுவதும், மறைவதும், ஆனால் சுயத்தில் அழியாமல் இருப்பதுமான இயக்கத்தில் இருப்பவை. அந்த தொடர்ந்த நிகழ்வுகளின் இயக்கமே தோற்றத்தை தருகிறது. அவை தனித்தனியாக மூலத்திற்கு விலகும் போது தோற்றம் மறைந்து விடுகிறது. இவ்வாறுதான் உயிர்களின் உடல்கள் தோன்றி மறைகின்றன. அதில் ஆன்மா வாழும்வரை உடலாக அடையாளத்துடன் காண்கிறது. அது விலகும் போது மரணமாக கருதப்படுகிறது.

அறிவியல் நோக்கில்…

மனித உடல் உயிரணுக்களின் கூட்டாகும். அதனால் கட்டமைப்பு ஏற்பட்டு உடலாக தோன்றுகிறது. ஒவ்வொரு உயிரணுவும் தனித்தனியாக குறைந்த பட்சம் 2 நாளிலிருந்து 8 ஆண்டுகள் வரை வாழ்பவை. பின்னர் மரணித்து புதிய செல்கள் உருவாக்கப்படுகின்றன. ரத்ததிலுள்ள சிவப்பணுக்கள் நான்கு மாதமும், வெள்ளையணுக்கள் 4 லிருந்து 6 மணிநேரமுமே வாழ்கின்றன.

சில செல்களைத் தவிர்த்து, மற்ற அனைத்துமே ஆயுட்காலத்தில் புதிதாய் மாற்றப்பட்டு விடுகின்றன. நம் மூளையைத் தவிர, கண்களின் செல்களைத்தவிர இறக்கும் போது நாம் பிறக்கும்போது இருந்தவரில்லை. அவையும் பிரியும் போதுதான் மரணம் என்பது மற்றவருக்குத் தெரிகிறது. அதனால் நித்தம் நித்தம் செத்துப் பிழைப்பவன் தான் மனிதன் என்கிறது அறிவியலும். அறிவியலும் நிலையாமைத் தத்துவத்தையே வலியுறுத்துகிறது. ஆன்மீக உண்மைகளுக்கு சோதனைச் சாலைகளின் மூலம் ஆதாரம் அளித்து வருவதே அறிவியலாகும்.

இதே இலக்கணம் தான் உலகில் நம் கண்களுக்கு மற்றும் புலன்களுக்குத் தெரியும் அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும். எவையும் நிரந்தமில்லை. அனைத்தும் வெறும் தொடர் நிகழ்ச்சிகளே. இதை விளக்கத்தான் உலகம் ஒரு நாடகமேடை என்று சொல்லி வைத்தார்கள்.

உயிருள்ளவை, உயிரற்றவை என்று எதை வேண்டுமானாலும் எடுத்து பிரித்துக் கொண்டே போனால் கடைசியில் இனி பிரிக்கமுடியாத ஒரு அணு கிடைக்கும். அந்த பரமாணு மனிதனிடத்தும், விலங்குகளிடத்தும் எல்லா பொருட்களிடத்தும் காண்பது ஒன்றேதான். இத்தனை உருவங்களில் காணும் மாற்றங்கள் எல்லாம் அந்த அணுக்களின் எண்ணிக்கையிலும், இயக்க வேகத்திலும் உள்ள மாற்றங்களால் வருவது. இதன் அடிப்படையில் நான், நீ என்ற எந்த ஒரு வேறுபாடும் இல்லை. எல்லாமே சமம் தான், சமூகம் தான். எவரும், எவையும் நிரந்த தோற்றத்தில் இருப்பதில்லை. மறைந்தும், மரணித்துக் கொண்டே இருக்கின்றன என்ற பேருண்மையை ஆன்மீகம் வலியுறுத்தி சொல்கிறது.

அதனால் தான் இந்த முட்டாள் மனிதன் மரணத்திற்காக வருந்துகிறான். இறந்தவைகள் தன்னுடையவைகளாக கருதுகிறான். தனக்கும் ஒருநாள் இது சம்பவிக்கும் என்றெண்ணி மிகுந்த வருத்தத்துடன் துன்பத்தில் மூழ்குகிறான். அப்படிவாழும் அறிவீலிகள் இயம, நியமத்தில் ஆழ்ந்து தவவாழ்வின் இறுதியில் சமாதி மரணத்தை எவ்வாறு ஏற்பான். அதனால் கிடைக்கும் இம்மைப் புகழையும் மறுமை நற்கதியையும் எவ்வாறு நம்புவான் என்று இப்பாடலில் ஆதங்கப்படுகிறார்.

எனவே அறிவுடையவர் எவரும் மரணத்திற்காக வருந்த வேண்டாம் என்ற தெளிவை அளிக்கிறார் முனிவர் பெருமான்.





हानेः शोकस्ततो दुःखं लाभाद्रागस्ततः सुखम् । 
तेन हानावशोकः सन् सुखी स्यात् सर्वदा सुधो: ।।186।।

ஹானே: சோகஸ்ததோ துக்கம் லாபாத்ராகஸ்தத: ஸுகம் | 

தேன ஹனாவசோக: ஸன் சுகீ ஸ்யாத் ஸர்வதாஸுதீ: || 186 ||

The loss of something desirable causes anguish and, thereafter, misery. Its gain causes contentment and, thereafter, happiness. The wise man, therefore, not getting anguished by the loss of something desirable, should remain ever happy.
விரும்பத்தக்க ஒன்றை இழப்பது வேதனையையும், அதன் பின்னர் வியாகூலத்தையும் ஏற்படுத்துகிறது. அதையே அடையும்போது மனநிறைவை ஏற்படுத்துகிறது, அதன் பிறகு மகிழ்ச்சி கிடைக்கிறது. ஆனால் அறிவுடையோர் விரும்பத்தக்க ஒன்றை இழந்ததாலும் வியாகூலமடையாமல் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பர்.

எந்த இழப்புக்கும் சோர்ந்து போய் உட்கார்ந்து விடாதே. மரமே ஒருநாள் சாயத்தான் போகிறது. இலைகள் உதிர்வதற்காக வருந்தலாமா. அடைவதற்கு ஆசைப்படுகிறவன் இழப்பதற்கு தயாராய் இருக்க வேண்டும்; போன்ற வாழ்க்கைத்தத்துவத்தை இப்பாடலில் வழங்கியுள்ளார் ஆச்சார்ய பெருமான்.

எதுவும் வாழ்வில் நிலைத்து நிற்பதில்லை. எதிர்காலம் என்பது நம் கையில் இல்லை. நிகழ்காலம் ஒன்றுதான் நிஜம் என்று கூறுகிறார். இன்பம் - துன்பம்; பகல்- இரவு; பிறப்பு – இறப்பு இந்த இருமையில்லாமல் இவ்வுலக வாழ்க்கையில்லை. சோப்பு உற்பத்திக்கு எண்ணெய் தேவை. எண்ணெயைப் போக்குவதற்கு சோப்பு தேவை. வாழ்க்கையின் இரட்டை நிலைப்பாடு இதுதான்! பகலை விலக்க இரவு வருவதுமில்லை. இருளை போக்க பகலும் விலகுவதில்லை. இரணடுமே ஒன்றிற்கு ஒன்று வழிவிடுவதில் தான் அவர்களது வாழ்க்கையுள்ளது என்பதை புரிந்து வாழ்கின்றன. இவைதான் இருமையின் தத்துவம் என்பதை புரிந்து மனமுள்ள வரை இன்பத்தையும், துன்பத்தையும் நாம் தான் புரிந்து வாழவேண்டும் என்பதையே நமக்கு வலியுறுத்தி கூறியுள்ளார்.

நம்மைப்போன்றே உலகில் எந்த ஒரு பொருளும், உயிரும் மாறிக் கொண்டே இருப்பவை. மாற்றம் ஒன்றுதான் இவ்வுலகத்தில் மாறாதது. மற்றவை எல்லாம் மாற்றத்திற்கு உட்பட்டவை என்பது நியதி. எல்லா உயிருக்கும் பிறப்பு, இறப்பு உண்டு; பொருளுக்கும் தோன்றுதல் அழிதல் உண்டு. எப்போது எவை எவரிடத்தில் இருக்க வேண்டும் என்ற நியதிக்கு ஆட்பட்டவை. இதை கூறுவதே ஆன்மீகத்தத்துவங்கள்.

அதனால் விரும்பியவை கிடப்பது அரிது, அப்படியே கிடைத்தாலும் நீ விரும்புவரை உன்னிடத்தில் இருப்பதும் அரிது என்பதை புரிந்து வாழ்பவனே அறிவுடையவர் என்கிறார் முனிவர் பெருமான்.

உலகில் அனைத்துமே இன்ப துன்பத்தில் மாறிக்கொண்டே இருப்பவை. இதைப் புரிந்து நடந்து கொள்வதில் தான் மகிழ்ச்சிக்கான நேரம் நீட்டிக்கப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்னர் பயத்தின் காரணமாக முயற்சி செய்யாமல் ஒதுங்கிப் போனதொரு விடயம் ஏற்படுத்திய இழப்புகளின் வடு இன்றும் கூட நம்மை விட்டபாடில்லை. உண்மையில் அதன் வலியும் தாக்கமும் நாம் மரணிக்கும் வரை என்னுடன் பயணிக்கும். அதற்கு காரணம் நம் முயலாமையே. அப்படி முயற்சி செய்து அதனை அடைந்தாலும் அந்தக்கணம் மட்டுமே நமக்கு சொந்தமான இன்பத்தைத் தரும். அதன் பின்னர் என்று வேண்டுமானாலும் அது நம்மை விட்டு அகலலாம் என்பதை புரிந்த வாழ்வில் தான் அர்த்தமுள்ளது.

இவை போன்ற இவ்வுலக நிலையாமைத் தத்துவத்தை ஏற்று வாழ்பவரே அறிவுடையவர் என்கிறார்.

நடந்து கொண்டே இரு, பாதை தானாக உருவாகும் என்பதே ஆச்சார்ய பெருமான் நமக்களிக்கும் தெளிவு.





सुखी सुखमिहान्यत्रा दुःखी दुःखं सम}नुते । 
सुखं सकलसंन्यासो दुःखं तस्य विपर्ययः ।।187।।

சுகீ ஸுகமிஹான்யத்ர து:கீ து: கம் ஸமஸ்நுதே | 

ஸுகம் ஸகலஸந்யாஸீ து:கம் தஸ்ய விபர்ய்யய: || 187 ||

The man who is happy in this world attains happiness in the after-life too. The man who is unhappy in this world attains unhappiness in the after-life too. The reason is that getting detached from all worldly possessions – renouncing the sense-pleasures – is happiness and getting attached to the worldly possessions – indulging in the sense-pleasures – is unhappiness.
இந்த உலகில் மகிழ்ச்சியாக இருக்கும் மனிதன் மறுமை வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை அடைகிறான். இந்த உலகில் மகிழ்ச்சியற்ற மனிதன் மறுமையிலும் மகிழ்ச்சியற்ற நிலையை அடைகிறான். காரணம், எல்லா உலக உடைமைகளிலிருந்தும் விலகிச் செல்வது, இன்பங்களை கைவிடுவது மகிழ்ச்சி. அதே சமயம் உலக உடைமைகளுடன் இணைவது இன்பங்களில் ஈடுபடுவது மகிழ்ச்சியற்றது.

மோக உணர்வு ஆன்மனில் கலக்கம் ஏற்படுத்துவதில்லை, மனதில் மட்டுமே கலக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை தெரிவிக்கவே இந்த பாடலை வழங்கியுள்ளார்.

பிறபொருள் சேர்க்கையில் இன்பம் என்று நினைக்கிறான் மனிதன். அதற்குக் காரணம் மோக உணர்வு. புலன்களே மேலும் பொருள் சேர்க்கையைத் தூண்டும் உணர்வுகளையே மனதில் தோற்று விக்கும். அதில் மனம் கலக்கம் அடைந்து விடுகிறது. அந்த மனச்சலனம் உணர்வைத்தூண்டி துன்ப இன்ப அனுபவங்களை ஏற்கச் செய்து விடுகிறது. இவை இரண்டும் மயக்க உணர்வுகளே. இவை உண்மையான இன்பத்தை தருவதில்லை.

உயிரின் இயல்பு பிற பொருட்களை சேர்த்துக் கொள்வதாயில்லை. அதை விட்டு விலகவே விரும்புகிறது. ஆனால் ஆன்மாவில் சேர்ந்த பிற பொருட்களே சலனத்தை தோற்றுவிக்கிறது. அதுவே பிறபொருள் நுகர்வு உணர்வை தூண்டுகிறது. அவ்வாறு நுகரும் போது இன்பமாகவும், துன்பமாகவும் தோன்றுகின்றன. அவை இரண்டும் ஒரு மயக்கமே என்று தான் ஆன்மீகங்கள் கூறுகின்றன.

அதனால் சுகம் என்பது ஆன்மாவில் கலக்கமின்றி இருப்பதேயாகும். அதுவே நிரந்தர சுகத்தை விரும்புவது. ஆகையால் பொருள் பற்றினால் ஆன்மா கலக்கமுற்று புலனின்பம் நுகர்வதின் பலன் துன்பமே. இதையே ஆகமங்களும் புலன் நுகர் இன்பங்களின் பலன் துன்பமே என்று கூறுகிறது.

போகபூமியில் வாழ்பவர்கள் இந்திரியங்களின் புலன்நுகர் இன்பம் அதிகமாக இருந்தாலும் அவர்களிடம் லோபம் அதாவது பற்று மிகமிகக் குறைவு. ஆகையால் அவர்கள் மறுமையில் தீய கதிகளுக்கு செல்வதில்லை. அதே சமயம் கர்ம பூமியில் ஒருவர் பரம ஏழையாக இருந்தால் புலன் நுகர் இன்பம் கிடைப்பதில்லை. ஆனால் கடும் பற்றினால் மனதில் சஞ்சலமடைந்து துன்பத்தையே பெறுகின்றனர். அவர்கள் மறுமையில் நரகத்தையே அடைகின்றனர்.

அதனால் எவரொருவர் பொருட்பற்றும், புலனுணர்வு இன்ப நுகர்ச்சி குறைவாக வாழ்பவர்களுக்கே ஆத்மாவிலும் கலக்கம் ஏற்படுவதில்லை. அதனால் சுகமான வாழ்வையே வாழ்கின்றனர். அவ்வாறு இம்மையில் சுகமான வாழ்வை வாழும் இவர்கள் வினைக்கட்டிற்கு ஆளாகாமல் மறுமையில் சுக கதியையே ஏற்கின்றனர்.

எவரொருவர் கடும் பற்றற்ற நிலை, ஒழுக்கம், தபம் முதலியவற்றை மேற்கொள்பவர். புறத்தே காணும் போது படாடோபமும், பகட்டும் தென்படாமல் போவதினால் துன்பப்படுபவர் போல் தோன்றினாலும் அகத்தே சிறிதும் கலக்கம் தோன்றுவதில்லை. அதனால் அவர்களது செயலின் பயன் சுகமேயாகும். ஒருவேளை தவமியற்றும் போது ஆர்த்த தியானம் ஏற்பட்டால் அதன் பயன் துன்பமாகும்.

எனவே கடும்பற்று இன்மை, பொருட் தியாக உணர்வுடன் வாழும் முறையில் மட்டுமே நிகழ்காலத்திலும் மகிழ்ச்சியுடனும், மறுமையிலும் சுககதியைப் பெறமுடியும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அதனால் இம்மையில் மோக உணர்வின்றி வாழ்தலே இன்பம் மற்றும் மறுமையிலும் சுகமே விஞ்சி நிற்கும்.

அதனால் இல்லறத்தில் மிகுபொருள் விரும்பாமையுடன் வாழ்பவர்களுக்கும், தவவாழ்வில் ஆர்த்த தியானமின்றி வாழ்பவர்களுக்குமே துன்மில்லா வாழ்வும், மறுமையில் சுக கதியும் கிடைக்கும் என்ற தெளிவை முனிவர் பெருமான் அளிக்கிறார்.





मृत्योर्मृत्यन्तरप्राप्तिरुत्पत्तिरिह देहिनाम् । 
तत्रा प्रमुदितान् मन्ये पाशचात्ये पक्षपातिनः ।।188।।

ம்ருட்யோர்ம்ருத்வந்தரப்ராப்திரூத்பதிரிஹ தேஹிநாம் | 

தத்ர பரமுதிதான்மன்யே பாச்சாத்யே பக்ஷபாதிந || 188 ||

In this world, the birth is the interval between the previous death and the next death. I, therefore, reckon that those who rejoice the birth are endorsing the upcoming death.
இந்த உலகில், பிறப்பு என்பது முந்தைய மரணத்திற்கும் அடுத்த மரணத்திற்கும் இடையிலான இடைவெளி. ஆகையால், பிறப்பை கண்டு சந்தோஷப்படுபவர்கள் வரவிருக்கும் மரணத்திற்கு ஒப்புதல் அளிக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.

ஒரு உயிர் உலகில் ஜீவனாக தோன்றியது பிறப்பாகும், அதாவது பிற ஜீவன்களின் பஞ்சேந்திரியங்களின் பரீச்சயத்தில் தோற்றத்தை பெறுவதாகும். கடைசியாக விடுதலை பேற்றை அடைவது இறப்பாகும் என்கிறார் ஆச்சார்ய பெருமான். இடையில் தோன்றும் ஜனன, மரணம் இரண்டும் ஒன்றே என்கிறது இந்த பாடல். இவையே ஆன்ம நோக்கில் சொல்லப்படுவது.

ஆனால் வியவகார நோக்கில் ஒரு மரணத்திலிருந்து அடுத்த மரணம் கிடைப்பதையே பிறப்பு என்கிறது ஆன்மீகம். ஒரு உயிர் மரணம் சம்பவித்து ஏழு சமயம் குறுகிய காலஇடைவெளிக்குள் அடுத்த உடலை அடைந்து விடுகிறது என்கிறது சமணம். அந்த இடைவெளி அடுத்த உடலை தேர்வு செய்யும் இடைவேளையே. (ஆவியாக உலவுதல், பயமுறுத்துதல் போன்றவற்றை இதுவரை படிக்கவில்லை. பிசாசு ஒரு தேவ இனமாக கூறப்பட்டுள்ளது. பயமுறுத்தும் உருவத்தை பெறும் விக்ரியா சக்தியிருக்கலாம் ஆனால் இயல்பாக அழகான தோற்றம் கொண்டவை)

நமது நடைமுறை வாழ்க்கையில்..

ஓர் இடத்தைவிட்டுப் பிரிகிற போதும், நல்ல நட்பைவிட்டு நகருகிற போதும், நெருங்கியவர்கள் தளர்கிற போதும் ஏற்படும் இழப்பு என்னும் வெற்றிடம் இறப்பு எனும் வகையைச் சார்ந்ததுதான்.

ஒவ்வொரு பருவம் முடிகிற போதும் நாம் மரணம் அடைகிறோம் என்பதை தமிழ் இலக்கியமான குண்டலகேசி அழகாக இயம்புகிறது

பாளையாம் பருவம் செத்தும் பாலனாம் தன்மை செத்தும் காளையாம் பருவம் செத்தும் காமுறும் இளமை செத்தும் மீளுமிவ் வயதும் இன்னே மேல்வரு மூப்புமாகி நாளும் நாம் சாகின்றோமால் நமக்கு நாம் அழாததென்னே

நிலைமை இப்படியிருக்க வாழ்க்கையின் எதார்த்தத்தை உணராது அளவுக்கு அதிகமாக செல்வம் சேர்ப்பதிலேயே வாழ்க்கையின் பாதி காலத்தைத் தொலைத்து விடுகிறோம். மீதி பாதியை, சேர்த்த செல்வத்தை எப்படி பாதுகாப்பது என்பதிலேயே போய்விடுகிறது.

தனது பிஞ்சு குழந்தைகளின் மழலைப் பேச்சு கேட்காமல், தனது மனைவியிடம் அன்பு பகிராமல், சேர்த்த செல்வத்தை வறுமையில் வாடும் சமுதாயத்திற்கு பகிராமல், போட்டி, பொறாமையோடு வாழ்க்கையை வியாபாரமாய் ஆக்கி விட்டு கடைசியில் எந்த சுகமும் அனுபவிக்காமல் இறந்து போவதில் என்ன பயன்! அதற்கு பிறந்த உடனையே இறந்திருக்கலாமே!

எனவே ஒவ்வொரு நாளும் இறக்கும் நாம், பேராசையை தவிர்த்து இருப்பதை வைத்து நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ கற்றுக் கொண்டு ஒவ்வொரு நிமிடமும் ரசித்து நம்மோடே இருக்கும், வாழ்க்கையில் இலக்கு நோக்கி பயணித்தாலும் பாதையெல்லாம் பரவி கிடக்கும் மகிழ்ச்சியை உணர்ந்து நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் பயனுள்ள வகையில் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவோம் என்பதே நம் பிறப்பிற்கான இலக்கணம். அவ்வாறில்லாத போது பிறந்த நாளிலேயே இறந்து போனர்வகள் தான் என்பதே ஆன்மீகத் தத்துவங்கள் தெரிவிப்பது.

உண்மையில் நாம் கூறும் மரணம் என்பது முழுமையற்றது. விடுதலை என்பதே முழு மரணம் என்பதாக உறுதி செய்கிறது சமணம்.

இறப்பு என்பது ஓர் உருவத்திலிருந்து மற்றோர் உருவத்திற்கு மாறுவது. இந்த உருவம் ஏற்பதிலிருந்து வெளியேறுவது தான் நம் குறிக்கோள். ஏனெனில் ஒவ்வொரு உருவமும் ஒருவிதச்சிறையே! மற்றவற்றை அடைவதே குறிக்கோள் என்றெண்ணி, வெவ்வேறு சிறைக்கு மாறிக் கொண்டு வட்டமடித்தபடியே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் மாறும் வரை நம்மால் துக்கம், பொறாமை, கோபம், வெறுப்பு, பேராசை, பயம் ஆகிய எதிலிருந்தும் விடுபட முடியாது. ஏனெனில் இவை நம்முடைய உருவத்தோடு தொடர்புடையவை. உருவத்தோடு தொடர்புடையதை விலக்கும் வரை முழு மரணமும் இல்லை, சுழற்சி சிறையிலிருந்து விடுதலையும் இல்லை.

-----------

பிரம்மம் எனும் உச்சநிலை; ஆதியும் அந்தமும் இல்லாதது. பிறக்காமலிருப்பது எதுவோ அதுதான் இறக்காமலிருக்க முடியும். பிறக்காதது நித்தியமானது. நித்தியத்திற்குப் பிறப்பில்லை.

பிறந்தது நமக்குத் தெரியுமா? தெரியாது.

மற்றவர்கள் குறித்து வைத்துச் சொன்னால் மட்டுமே, இந்த ஆண்டின், இந்த மாதத்தில், இன்ன தேதியில், இங்கே பிறந்தோம் என்பது தெரிகிறது. மற்றவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அது. இந்தத் தகவல் இல்லையென்றால் நம் பிறப்பைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியப் போவதில்லை. நம்மிடருந்தே, நமது உள்ளார்ந்த அமைப்பில் இருந்தே அதைத் தெரிந்து கொள்ள எந்த வழியும் இல்லை. பிறப்பை உறுதிப்படுத்திக் கொள்ள எந்த ஆதாரமும் இல்லை.

"உள் இருப்பு" நிரந்தரமானதாக இருந்தால், பிறப்பு பற்றிய பிரச்சினையே எழாது. உண்மையில் நாம் பிறக்கவே இல்லை. நாமும் ஆதியும் அந்தமும் அற்ற பரம்பொருள் போல நிரந்தரமானவர்.

ஒரு நாள் இறந்து போவேன் என்று சொல்கிறோம். அது எப்படி நமக்குத் தெரியும்?

எவருக்கும் மரணம் என்றால் என்னவென்று தெரிவதில்லை. முன் அனுபவமும் இல்லை. மற்றவர் மரணமடைவதைப் பார்த்து, நாமும் செத்து விடுவோம் என்று சொல்கிறோம். ஒருவன் மரணத்தைப் பார்க்காமலேயே வளர்த்து விட்டால், அவன் தனக்கு மரணம் வரும் என்று சொல்வானா? சொல்லமாட்டான்.

புற நிகழ்ச்சிகளைக் கொண்டு, ஊகித்துக் கொள்ளுகின்ற ஒன்று. அகச்சான்று எதுவும் கிடையாது. ஆனால், இதில் அதிசயம் என்னவென்றால், எங்கும் மரணம் நிகழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டும் நாம் சாவோம் என்பதை எவரும் நம்புவதில்லை. சாவு மற்றவர்களுக்கு, நமக்கல்ல என்றே நினைக்கிறோம்.

நம் உள்ளகம் பிறப்பையும் அறியாது; மரணத்தையும் அறியாது. அது நிரந்தரமானது. நித்தியமானது. நமக்கு நம் இருப்பு மட்டுமே தெரியும்.

அதனால் தான் ஞானியர் கேட்கிறார்கள் “உண்மையில் உனக்கு பிறப்பு உண்டா, இறப்பு உண்டா என்று உனக்குள்ளே நீயே தேடிப்பார்; கண்டுபிடி." என்கிறார்கள்.

நமக்குள் ஜனன மரண ஆதாரங்கள் எதுவும் இல்லாதபோது, இருக்கும் ஆதாரம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் "நான் இருக்கிறேன்" என்பது. அதற்கான ஆதாரம் இருக்கிறது. இதற்குள் ஆழமாகச் சென்று பார்த்தால் "நானில்லை" என்பது தெரியும். அப்போதுதான், நமக்குள், "இருத்தல்" என்பது மட்டுமே இருப்பதாகத் தெரியும். இப்போதைய “நான்” காணாமல் போய்விடும். பிறகு மரணமும் காணாமல் போவது உறுதி.

-----------------------

எனவே பிறப்பும், இறப்பும் நமது இருப்பின் முழுவாழ்நாளில் ஒரு நிகழ்வு என்ற தெளிவை அளிக்கிறார் முனிவர் பெருமான். அவை நமக்கானதல்ல உடல், மனம் சம்பந்தப்பட்டவையே என்கிறார்.





अधीत्य सकलं श्रुतं चिरमुपास्य घोरं तपो 
यदीच्छसि पफलं तयोरिह हि लाभपूजादिकं । 
छिनत्सि सुतपस्तरोः प्रसवमेव शून्याशयः 
कथं समुपलप्स्यसे सुरसमस्य पक्वं पफलम् ।।189।।

அதீத்ய ஸகலம் சுருதம் சிரமுபாஸ்ய கோரம் தபோ, 

யதீச்சஸி பலம் தயோரிஹ ஹி லாபபூஜாதிகம்: | 
ஸினத்ஸி ஸுதபஸ்த்ரோ: ப்ரஸவமேவ சூந்யாசய: 
கதம் ஸமுபலப்ஸ்யஸே ஸீரஸமஸ்ய பக்வம் பலம் || 189 ||

If you expect the fruit of your study of the entire Scripture and observance of severe austerities in terms of wealth and renown in this world then it should be understood that you are injudiciously destroying the very flowers of the tree of excellent austerities. How will you then obtain the lovely, delicious, ripe and juicy fruits?
முழு ஆகமத்தை பற்றிய உங்கள் ஆய்வின் பலனையும், இந்த உலகில் செல்வத்தையும் புகழையும் கருத்தில் கொண்டு கடுமையான தப நடவடிக்கைகளை கடைபிடிப்பதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், நீங்கள் சிறந்த தவ ஒழுக்கங்களின் மரத்தின் பூக்களுக்கு தீங்கு விளைவிக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அழகான சுவையான, பழுத்த மற்றும் சாருள்ள பழங்களை நீங்கள் எவ்வாறு பெறுவீர்கள்?

ஆழந்த ஆகம அறிவும், நீண்ட கால தவஒழுக்க நெறியும் செல்வத்தையும், புகழையும் தரவல்லவை. அந்த லாபத்தை கருதி அவற்றை இவ்வுலக மகிழ்ச்சிக்காக, சொகுசான வாழ்விற்காக உபயோகித்தால் மேலான தேவகதியும், முக்தியும் கிடைப்பது அரிது. மேலும் கீழான் நரககதிக்கான வினைக்கட்டிற்கே வித்திடும் ஆபத்தும் நிறைந்துள்ளது என ஆகமம் பயில்பவருக்கு தோன்றும் தவறான சிந்தனைகளுக்கு எச்சரிக்கை செய்து, அதனை சட்டை செய்யாமல் மேலும் மேலும் தவநெறியில் மேன்மைக்கான பயிற்சியில் ஈடுபட அறிவுறுத்துகிறார்.

தொட்டால் பொன்னாகும் மைதாஸ் கதையைப் போன்றது, ஆகம அறிவினால் தோன்றும் ரித்திகள் என்று கூறுகிறார் முனிவர் பெருமான். எதனைத் தொட்டலும் பொன்னாகும் என்ற ரித்தியை மைதாஸ் என்பவன் பெற்றிருந்தான். அதனால் அவனது வாழ்க்கையில் செல்வ வளம் பெருகத்தொடங்கியது. ஆனால் அவனது ஆசை பேராசையாகத் மாறியது. பலவற்றையும் பொன்னாக்கி மகிழ்ந்த வந்த போழ்தில், ஒருநாள் ஆசைமகளையும் தொட்டான் அவளும் பொன்னாகி மாறிவிட்டாள். அந்த ஸ்வர்ணபொம்மையை மீண்டும் மகளாக மாற்றும், உயிர் கொடுக்கும், ரித்தியை அவன் பெற்றவனில்லையே! அதனால் மிகுந்த துன்பத்திற்கு ஆளானான். அன்றிலிருந்து அவன் இத்தனை நாள் பெற்ற அத்தனை சொத்துக்களும் மீளாத்துயரத்தையே அளிக்கத் தொடங்கின என்பதாக நல்ல தொரு படிப்பினையை வழங்கும் கதையை இப்பாடலுக்கு உருவகமாக கொள்ளலாம்.

ஆகம அறிவு அறிவியலிலும், இதுவரை எவரும் எட்டாத ஆழந்த ஞானத்தை தரவல்லது. மிகுந்த சக்திகளை திரட்டி தன் வசமாக்கும் கலையை தரவல்லது என்பதை தெரிந்து கொள்ளலாம். அவ்வாறான சிறப்பம்சங்களினால் இவ்வுலகில் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. அறுபத்து நான்கு வகை ரித்திகளை அளிக்க வல்லவை தவ ஒழுக்க நெறி என்பதாக கூறப்படுகிறது. அதாவது ஒளஷத ரித்தி, சாரண ரித்தி, புத்தி ரித்தி என்ற வகைப்பாட்டில் அபூர்வ சக்திகளை அளிக்கவல்லவை. அதனால் நீரிலும், நெருப்பிலும் நடக்கலாம், வானவீதியிலும் பறக்கலாம் என்பதான அரிய சக்திகளை பெறுதல் நிச்சயம். அவ்வாறான நிலைக்குச் சென்றதும் இவ்வுலக வாழ்க்கைச் சுகத்திற்காக செல்வம், ஆட்சி, அதிகாரம் என்பதற்கான பிரபல்யம் என்னும் புகழுக்கு மயங்கி இன்றைய corporate சாமியார்களாக மாறுவதால் மறுமையில் கீழான நிலையே கிட்டும் என்று எச்சரிக்கை செய்கிறார் முனிவர் பெருமான். அறிந்து கொண்டதும் அதனை தவறாக பிரயோகிக்க கூடாது என்ற உறுதியும் கொள்ளுதல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

எவ்வாறு ஒருவன் மரத்தை வளர்த்து அதில் பூக்கள் தோன்றும் போது அதன் கவர்ச்சியில் மயங்கி அவற்றைப் பறிப்பவன் காய், பழங்களை புசிப்பதை இழக்கிறானோ, அதே போன்று ஆகமங்களை நன்கு கற்றறிந்து தவவாழ்வில் பயணிக்கும் போது பல சித்திகளையும், ரித்திகளையும் பெறுவான். அதனை கீழான புத்தியுடன் செல்வத்தை, விலையுயர்ந்த பொருட்களை, பெருமைக்கான பிரபல்யத்தினால் வரும் புகழை ஈட்டத்தொடங்கினால் அதன் இறுதிப் பலனான முக்தியை இழப்பது நிச்சயம். அத்தோடு நில்லாமல் நரக லோகத்தில் பல கடற்காலம் உழன்று துன்பக்கடலில் மூழ்குவான் என்ற ஆபத்தான விளைவையும் எடுத்துக் கூறி எச்சரிக்கை செய்கிறார் முனிவர் பெருமான்.





तथा श्रुतमध्ीष्व शश्वदिह लोकपंक्ति विना 
शरीरमपि शोषय प्रथितकायसंक्लेशनैः । 
कषायविषयद्विषो विजयसे यथा दुर्जयान् 
शमं हि पफलमामनन्ति मुनयस्तपः शास्त्रायोः ।।190।।

ததா சுருதமதீஷ்வ சாஸ்வதிஹ லோகபந்திக்திம் பினா, 

சரீரமபி சோஷ்ய ப்ரதித காய ஸங்க்லேசனை: | 
கஷாயவிஷயத்விஷோ விஜயஸே யதா துர்ஜயான், 
சமம் ஹி பலமாமனந்தி முனயஸ்தப: சாஸ்த்ரயோ: || 190 ||

O worthy soul! In this world, you study the Scripture incessantly, without desire for renown and without pretense. Also, dry up your body through well-known austerities (tapa) like endurance of bodily discomfiture so as to vanquish intractable enemies of passions (kashāya) and sense-pleasures (visaya). It is so because learned ascetics consider the suppression of attachment and aversion the only fruit of austerities and the study of the Scripture.
ஏ ஆத்மா! இந்த உலகில், புகழ்பெறும் ஆசை இல்லாமல், பாசாங்கு இல்லாமல், நீங்கள் ஆகமத்தை இடைவிடாமல் படிக்கிறீர்கள். மேலும், உடல் ரீதியான அசெளகரியத்தினை சகிப்புத்தன்மை போன்ற கடும் தவநடவடிக்கைகளின் மூலம் உங்கள் உடலை ஒடுக்கி வைக்கிறீர்கள். இதனால் தீய உணர்ச்சிகள்- கஷாயம்- மற்றும் புலன் இன்பங்கள் ஆகிய எதிரிகளை வெல்கிறீர்கள். ஏனென்றால், ஆகமம் கற்றறிந்த துறவிகளின் கஷாய தணிப்பு (உபசமம்) தவத்தின் பலனாகவும் மற்றும் ஆகமத்தைப் படிப்பதாலும் என கூறுகின்றனர்

ஆகமப் பயிற்சி ஒரு ஆன்ம சாதகனுக்கு பலவகையிலும் உதவிடுகிறது. அவ்வாறு கற்றதும், தவம்புரிவது மட்டுமே துணைபுரிவதில்லை. சினம் போன்ற தீய உணர்வினில் தணிவு நிலையும் அவசியமாகிறது. இல்லையேல் தவஆற்றல் பெரிதும் வீணடிக்கப்பட்டுவிடும் என்கிறார் ஆச்சார்யர். எனவே தீய உணர்வுகளான க்ரோத, மான, லோப, மாயா வை விலக்குதலே துரித மோட்ச நிலைக்கு காரணமாக அமைகிறது என்று மேலும் வலியுறுத்துகிறார்.

பெரும்பாலான மித்யாத்வ முனிவர்களின் கதைகளை காணும் போது அவர்கள் ஆகமக் கல்வியில் சிறந்தும், தவவலிமையில் மேலான நிலையை அடைந்த பின்னும் சினம் போன்ற தீயஉணர்வுகளை தணியவிடாது, களையாது இருப்பதால் தவஆற்றலை இழந்து மிகவும் மோசமான விளைவை அடைந்ததைக் கேட்டுள்ளோம். அவர்கள் தனது தவஆற்றலை ஹிம்சிக்க பயன்படுத்துவதற்குக் காரணம் அவர்களின் தீயஉணர்வுத் தூண்டலினால்தான் என்பதை நன்கு அறியலாம். அவ்வாறான துறவிகளே சபித்தல் என்ற சக்திப் பிரயோகத்தை அதர்மவாதிகளுக்கு அளிப்பதையும் காணலாம். அதேபோன்று ஆகமஞானம் பெரிதும் பெற்றிருந்தாலும் அதர்ம வாதிகளை வதம் செய்தல் கொலையாகாது என்று வறட்டு வேதாந்தம் பேசி, பின்னர் அதோகதியில் வீழ்ந்த கதைகளையும் நாம் மித்யாத்வ புராணங்களில் காணலாம்.

அவ்வாறான உணர்ச்சித்தூண்டலை சமண சமயத்தில் ஓரிரு இடங்களில் தான் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணமாக தீபாயாண முனிவர் துவாரகையை எரித்த வரலாறாகும். மேலும் மேருமந்திர புராணத்தில் தவத்தில் ஒழுகிய சில முனிவர்கள் வேட்கை மிகுதியால் பிறருக்கு எவ்வித தீங்கை விளைவிக்க இல்லையாயினும் விலங்கு, நரக பிறவியில் பிறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

அதனால் உபசம ஃபாவத்துடன் ஆழ்ந்த ஆகமப்பயிற்சியோடு, கடுமையான தவநெறியில் வழுவாது பயணிப்பதில் காட்டும் உறுதிப்பாடுமே விடுதலைப்பேறுக்கு காரணமாகும் என்றுரைக்கிறார். அதனால் கோப, மான, லோப, மாயாச்சாரத்தை விலக்கும் வரை ஆழந்த ஆகம அறிவும், தவநெறி ஒழுகுதலும் முழுவதுமாக பயன்படப்போவதில்லை என்ற தெளிவை அறநெறியில் பயணிப்பவர்களுக்கு அளிக்கிறார்.

அறிவியல் ரீதியாக காணும் போதும்…

நாம் சினம் கொள்வதால் நமது உடல்கூற்றில் பலவித இழப்புகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது. ஒருவர் பத்து வினாடி கோபமுற்றால் அதனால் ஏற்படும் இழப்பிலிருந்து மீண்டு சகஜ நிலைக்கு வர எட்டுமணிநேரமாகும் என்று அறிவியலார் கணக்கிட்டிருக்கிறார்கள். அப்போது கார்ட்டிசால் என்ற ஹார்மூன் அதிகமாக சுரக்கிறது. அது ஒருவகை மனஅழுத்தத்தை தூண்டக் கூடியது. அதனால் உள்ளுருப்புகளுக்கு செல்லும் இரத்தஓட்டம் மிகவும் குறைகிறது. அதோடுமட்டுமல்லாது பல அமிலங்களும் கூடுதலாக சுரக்கிறது. அட்ரினல் சுரப்பி வெகுவாக வேலை செய்கிறது. அதனால் கோபப்பட்டு முடிந்தவுடன் நமது செயல்திறன் எழுபது சதவிதம் வரை குறைந்து விடுகிறது.

அப்படியானால் ஒருநாளைக்கு எத்தனை முறை சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபம் கொள்கிறோம் என்பதை கவனியுங்கள். கண்டிப்பாக நமது வாழ்நாள் குறையவே செய்யும், செயல்திறன் குறைவதால் பல இழப்புகளை வாழ்வில் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஒருவரது ஆயுள் கர்மாவின் மூன்றில் இரண்டு பங்கு கழிந்த பின் மரணம் ஏற்படலாம் என்று சமண ஆகமங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு ஆன்மீக அறிவியல் ரீதியாக காணும் போது பெரும்பாலானோர்கள் முழு ஆயுள் முடியும் வரை வாழ்வதில்லை என்பதே நிதர்சனம். இந்த ஐந்தாம் காலமான கலியுகத்தில் மனித ஆயுள் சராசரியாக 120 ஆண்டுகள் என்றுதான் குறிப்புகள் உள்ளது. எத்தனை பேர் இந்த ஆயுளை நெருங்கியிருக்கிறார்கள். ஆனால் திபெத், ரஷ்யாவிலுள்ளவர்கள் இப்போதும் அவ்வளவு காலம் நலமோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இவற்றைக் காணும் போது ஆகம அறிவு துவங்கும் முன்னரே இந்த தீய உணர்வுகளை விலக்கும் வழிகளை பிரதமாணுயோக கதைகளைக் கேட்டறிவதன் மூலம் தணியவும், முற்றிலும் விலக்கவும் வழி செய்தல் விவேகமானது. அதன் பின்னரே தவநெறி வாழ்வு பயனடைய செய்யும் என்பதான தெளிவை முனிவர் அளிக்கிறார்.





दृष्ट्वा जनं व्रजसि ¯क विषयाभिलाषं 
स्वल्पोsप्यसौ तव महज्जनयत्यनर्थम् । 
 स्नेहाद्युपक्रमजुषो हि यथातुरस्य 
दोषो निषि(चरणं न तथेतरस्य ।।191।।

த்ருஷ்ட்வா ஜனம் வ்ரஜஸி கிம் விஷயாபிலாஷம், 

ஸ்வல்போஅப்யஸெள தவ மஹஜ்ஜனயத்யனர்தம்: | 
ஸ்னேஹாத்யுபக்ரமஜுஷோ ஹி யதாதுரஸ்ய, 
தோஷோ நிஷித்தசரணைம் ந ததேதரஸ்ய || 191 ||

O worthy soul! Why do you long for sense-pleasures as you see the sensuous men? Even a little longing for sense-pleasures is extremely harmful for you. It is right; consumption of oily things, like ghee, being harmful, is proscribed for the man under treatment, but it is not so for the others.
ஏ ஆத்மா! புத்திசாலித்தனமான மனிதர்களைப் பார்க்கும்போது நீங்கள் ஏன் புலன்இன்பங்களுக்காக ஏங்குகிறீர்கள்? புலன்இன்பங்களுக்காக ஒரு சிறிய ஆவல் கூட உனக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். நெய் போன்ற எண்ணெய் பொருட்களின் நுகர்வு, தீங்கு விளைவிப்பதாக சிகிச்சையில் இருக்கும் மனிதனுக்கு தடைசெய்யப்படுகிறது, ஆனால் அவ்வாறு மற்றவர்களுக்கு இல்லை.

பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம் நான்கிலே புகுந்தழுத்தி மனித மனம் புண்ணாய் வருந்துவோர் இருள்நீங்கி இன்பமுற என் விளக்கம் கூறுவேன் இறைநிலையே எங்கெதிலும் இருப்பாய் அமர்ந்தாற்றிடும் அருள் நடனக் காட்சியை அகத்துணர்வாய்க் கொள்ளுவீர் அப்போதும் எப்போதும் அறிவு விரிவாகியே மருள்நிலையில் ஏற்ற ஆசை மற்றும் பழிச் செயலெல்லாம் மாறிவிடும் மெய்ஞ்ஞானம் மலரும் உள்ளொளி

என ஒரு ஞானி கூறுகிறார்.

புலன் இன்பம் புண் போன்று குத்தல் வலியை, குடைச்சல் வலியை தரவல்லது. அத்துன்பத்திலிருந்து விடுபட ஒரே வழி ஆத்மானுபூதி யொன்றே என்கிறார். அதாவது புலனடிமையிலிருந்து விடுதலை பெறுவதொன்றே ஒரே உபாயம் என்கிறார்.

----------

கண், காது, மூக்கு, வாய், புறத்தோல் ஆகியவை பொறிகள். பொறிகள் ஐந்தும் புறக்கருவிகள்.

பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல் ஆகியவை புலன்கள்.

இப்புலன்கள் இன்பம் தரும் பொருட்களை அடையுங்கால் இன்பமும், துன்பம் தரும் பொருட்களை அடையுங்கால் துன்பமும் விளைகின்றன என்பதே அடிப்படை.

பொறிகள் புலன்களாக எப்படி மாறுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளுதல் வேண்டும். அதாவது பொறிகள் ஐந்தும் இயங்கும் போது மனம், அறிவு, சிந்தை, முனைப்பு(அகந்தை) இந்த நான்கும் உதவி செய்வதால் புலன்கள் தோன்றுகின்றன. இந்த நான்கும் அகக்கருவிகள் ஆகும்.

அதாவது புறக்கருவிகள் ஐந்தும் இயங்கும் போது அகக்கருவிகள் நான்கும் உதவி செய்வதால் புலன்கள் என்பது உருவாகிறது.

மனமானது ஒரு பொருளைப் பற்றுகிறது. அறிவு அந்தப் பொருளை இதுதான் என்று முடிவு செய்கிறது. சிந்தை அந்தப் பொருளைக் குறித்து ஆராய்கிறது. அகங்காரம் (முனைப்பு) அப்பொருளை அறிவேன் என்று முனைந்து எழுகிறது.

இப்படி அறிவால்(புத்தியால்) அறிந்து, சிந்தையால் ஆராய்ந்து, அகந்தையால் தெளிந்த பின்பும்கூட தவறு செய்துவிடுவது எதனால் என்று ஆராய்ந்தால் தவறோ, சரியோ அவற்றிற்கு அடிப்படையாக அமைவது முக்குணங்களான ரஜோ எனும் கிளர்ச்சி , தாமச எனும் மடிமை , சத்வ எனும் தூய்மை குணங்கள் என்பவையே.

இச்செயல்முறையில் கிடைக்கும் அனுபவத்தை இன்பமாக, துன்பமாக வகைப்படுகின்றன. ஆக அகப்புறக் கருவிகளால் அனுபவங்கள் வகைப்படுகின்றன. அவையே புலன்களாக தோற்றமெடுக்கின்றன.

அவைதான் வேண்டும், வேண்டாம் என்ற வேட்கைப் பதிவுகளை அளிக்கின்றன. அவையே விருப்பு வெறுப்பாக தோற்றமெடுத்து பல பேதங்களை வாழ்வில் உருவாக்குகின்றன.

உதாரணமாக ஒருவன் ஒரு கனியை உண்ண விரும்புகிறான் என்று வைத்துக் கொள்வோம். முதலில் மனம் கனியைப் பற்ற வேண்டும், முனைப்பு என்கிற உட்கருவி கனியை உண்பேன் என்று எழுதல் வேண்டும்.

இது கனிதானா என்று சிந்தை ஆராய வேண்டும். இது உண்ணுவதற்கு ஏற்ற கனிதான் என்று புத்தி உறுதி செய்ய வேண்டும். அதற்குப் பிறகுதான் நாவாகிய புறக் கருவி கொண்டு சுவையானது என்ற புலன் இன்பத்தை அவன் அடைய முடியும். நால்வகை அகக் கருவிகளும் க்ஷணப் பொழுதில் செயல்பட்டு கனியைச் சுவைக்க உதவுகின்றன.

இவையனைத்திற்கும் மேலாக கனியைச் சுவைத்து இன்புறுவதற்கு முக்குணங்களில் தாமத குணம் கூடாது. தூய்மை எனப்படும் சத்துவ குணம் வேண்டும். அதாவது கனியை உண்பதற்கு கண், சிந்தை, தூய்மை எனும் மூன்று கருவிகள் இயங்கினால் இன்பமாக அமையும். தாமசம் இயங்கக் கூடாது.

இது போலவே இசை எனும் இன்பத்தைப் பெறுவதற்கு காது, சிந்தை, கிளர்ச்சி ஆகிய மூன்று கருவிகள் வேண்டும். காட்சி இன்பத்தைப் பெறுவதற்கு கண், சிந்தை, கிளர்ச்சியும் - ஊற்றின்பம் பெற உடல், சிந்தை, கிளர்ச்சியும் - மணத்தின் இன்பத்தை நுகர மூக்கு, சிந்தை, கிளர்ச்சியும் வேண்டும்.

ஆறாவது கருவியாகிய அறிவினால் பெறும் நல்லின்பங்களுக்குச் சிந்தை, கிளர்ச்சியோடு தூய்மை குணமும் வேண்டும். ஆகவே இன்பமும் பயனும் விரும்பும் ஒருவன் ஒரே நேரத்தில் ஒரு பொருளில் மனதைச் செலுத்தும் பொழுது, அந்தப் பொருளுக்குரிய ஒரு புறக்கருவி ஓர் உட்கருவி, ஒரு சரியான குணத்தையே கொண்டிருத்தல் வேண்டும்.

கனியை உண்ணத் தலைப்படுபவன் நா, சுவை, தூய்மை இவற்றிலேயே தன் அறிவை நிறுத்துதல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் கனியைச் சுவைக்கும் பொழுது வேறு பொறியாகிய காதால் இசையைக் கேட்டுக்கொண்டு, தாமச உணர்வை மேற்கொண்டிருந்தால் அந்தக் கனியின் சரியான சுவையின்பத்தை அவனால் பெற முடியாது.

-----------

இவ்வாறு ஒரே நேரத்தில் இரண்டு மூன்று புறக்கருவிகளை ஆன்மா உபயோகிக்கும் போது தெளிவான பயிற்சியிருத்தல் வேண்டும். அவ்வாறான பயிற்சி இல்லாமலே சிறுவயது முதல் கேளிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டே சுவைப்பது, படிப்பது போன்ற முக்கிய செயல்களில் ஈடுபடும் போது கிளர்ச்சி எனும் ரஜோ குணமே மேலோங்கி செயல்பட்டு துன்பத்தை இன்ப உணர்வாக பதிவு செய்து விடுகிறது. அதைப் புரிந்து கொள்ளாமல் வாழ்நாள் முழுவதும் இன்பமாக பல துன்ப உணர்வுகளை பழக்கி வைத்துள்ளனர்.

கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட விரும்பும் ஒருவன் தன் கண்களால் இறைவனின் திருவுருவைக் காணும்பொழுது, அதில் ஈடுபடாது, வேறு காட்சிகளைக் காண்பதோடு, சிந்தையில் இறைவன் அருளைப் பற்றிச் சிந்திக்காமல் தாமச குணத்தால் சோர்ந்திருப்பானாயின் அவனுக்குப் பக்தி உணர்வு தோன்றாது.

அதே சமயம் ஒரு ஞானி தியானத்தில் திளைத்திருக்கும் ஐம்பொறிகள் செயல்படுவதில்லை. அகக்கருவிகள் நான்கினில் மனம், புத்தி, அகங்காரம் ஆகிய மூன்றும் செயல்படுவதில்லை. சிந்தை மட்டுமே பரம்பொருள் இன்பத்தில் திளைத்து நிற்கின்றது.

முக்குணங்களில் தாமசமும், கிளர்ச்சியும் அடங்கி நிற்கின்றன. தூய்மை மட்டுமே அவர்தம் பண்பில் அமைந்திருக்கின்றது. அந்நிலையில் பரம்பொருள் என்கிற ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி மூழ்கித் திளைத்து இடையீடில்லாத தொடர்ந்த பேரின்பத்தை அவர் அடைந்திடுகிறார்.

(இத்துடன் இதனை நிறுத்திக் கொண்டு,) அவரவர் தங்கள் செயல்பாட்டில் இன்பம் ஏற்படாமல் இருந்தால் எந்த குணத்தை ஈடுபடுத்தினால் சரியாக அமையும் என்று அறிந்து தெளிந்து பயிற்சியில் ஈடுபடுதல் நலம் தரும்.

அதை விடுத்து ஐம்பொறிகள் உபயோகத்தில் புலனறவை முற்றிலுமாக நீக்கினாலே, விலங்கினத்தைப்போன்று இயற்கை நமக்களித்துள்ள தெளிவுகள் முன்னின்று செயல்பட்டாலே நல்வாழ்வை அளித்து நிற்கும்; என்பதை தான் ஞானியர் புலனின்பத்தை மறந்து விடு, ஆராய்ச்சி செய்வதை நிறுத்தி விடு என்று அறிவுறுத்துகின்றனர்.

இல்லாவிடில் நல்ல பயிற்சிக்கு பின்னர் அவ்வாறு வாழமுற்படலாம். ஆனால் அது துவக்கத்திலிருந்தே முனிகளின் வாழ்வுமுறையில் தான் அவ்வாறு அளிக்கப்பட்டு வருகிறது. இல்லறத்தில் அதுபோலான வாழ்வுமுறையை துவக்கினால் புலனின்பத்தில் தெளிவொடு வாழ்ந்து இவ்வுலகத்திலும் துன்பம் குறைந்த வாழ்வை தேர்வு செய்து வாழ்ந்து மகிழலாம். அதுபோன்ற வாழ்க்கை முறைக்கு புறவுலகம் நம்மை விடப்போவதில்லை என்பதே நிதர்சனம்.

அதனால் புலன் இன்பத்தில் நாட்டம் கொள்ளாமல் வாழு என்பதையே ஆச்சார்ய பெருமானும் தெளிவாக நமக்கறிவுருத்துகின்றனர்.





अहितविहितप्रीतिः प्रीतं कलत्रामपि स्वयं 
सकृदपकृतं श्रुत्वा सद्यो जहाति जनोsप्ययम् । 
स्वहितनिरतः साक्षाद्दोषं समीक्ष्य भवे भवे 
विषयविषवद्ग्रासाभ्यासं कथं कुरुते बुध्ः ।।192।।

அஹிதவிஹிதப்ரீதி: ப்ரீதம் களத்ரமபி ஸ்வயம், 
ஸக்ருதபக்ருதம் 
ஸருத்வா ஸத்யோ ஜஹாதி ஜனோஅப்யயம் ஸ்வஹிதநிரத: 
ஸாக்ஷாத்யோஷம் ஸமீக்ஷ்ய பவே பவே, 
விஷயவிஷவத்க்ராஸரப்யாஸம் கதம் குருதே புத: || 192 ||

Even an ignorant man, himself fond of harmful sensepleasures, leaves, without delay, her beloved wife upon hearing her misconduct. O worthy soul! The man who is wise and engrossed in soul-advancement has seen directly the harmful effects of sense-pleasures, in various births. Then, how does he swallow, over and over again, the poisoned food of sense-pleasures?
ஒரு அறிவற்ற மனிதர் கூட, தீங்கு விளைவிக்கும் புலனின்பத்தை விரும்பினாலும், தவறான நடத்தை கேட்டவுடன் தான்நேசித்த மனைவியை தாமதமின்றி வெளியேற்றுகிறார். ஏ ஆத்மா! ஞானமுள்ள மற்றும் ஆத்ம முன்னேற்றத்தில் மூழ்கியிருக்கும் மனிதன், பிறவிதோறும் தீங்கு விளைவிக்கும் புலன்இன்பங்களை நேரடியாகக் கண்ட பின்னர், அவர் எப்படி மீண்டும் மீண்டும், அவ்விஷ உணவை விழுங்குவார்?

இன்பம் துன்பம் என அனுபவங்களை இரண்டாக பிரிக்கிறது நமது அறிவு என்பதைக் கண்டோம். ஆனால் விருப்பம் எனும் உணர்வு மேலோங்கி யிருப்பதால் அது இன்பம் அனுபவிப்பதையே முதன்மையான செயலாக்க முயலுகிறது. ஏனென்றால் ஆத்மாவின் இயல்பு சுகத்தில் ஆழ்வதே. அதனை பொறிபுலன் வழியே பெற முயலும் போது இன்ப துன்பமாக மனம் என்ற அகக்கருவி பிரித்தாள்கிறது. அதனை நம்பி இந்த ஆன்மாவும் அதற்கான காரியங்களில் செயலாற்றும் போது இந்த பொறிகளின் வழியே பெரும் துன்பத்தையும், சொற்ப இன்பத்தை மட்டுமே பெறுகிறது. அதுவும் நீடித்து நிற்பதில்லை.

அந்த சொற்ப இன்பத்திற்காக தனது ஆன்ம விரயம் கூடுதலாகிக்கொண்டே செல்கிறது. அதற்கேற்ப சுகம் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்து விடும் போது அதனை விட்டு விலகி நிற்கிறது. ஆனால் அந்த தெளிவை உடலில் தளர்வும், அழியும் நிலை வரும்போது மட்டுமே பொதுவாக பெரும்பாலும் அடைகிறது.

அவ்வாறான தெளிவைப் முன்பே பெற்ற ஞானியர் துளிர்விடும் மானுடப் பிறவிகளுக்கு அறிவுரையாக தெரிவித்து எச்சரிக்கை செய்கின்றனர். அவ்வகையில் ஆச்சார்யஸ்ரீ நமக்கு எவ்வாறு சிற்றின்பத்தை விரும்பிய ஒருவனும் தனது மனைவி தவறாக பிறரிடம் அதனை பெற எத்தனிப்பதை அனுமதிப்பதில்லை. அவளை விட்டு தான் வெளியேறவோ, அவளை வெளியேற்றவோ விரும்புகிறான். ஏனென்றால் அப்போது அதே இன்பம் நஞ்சாக தெரிகிறது.

சுவையான விஷமாக இருந்தாலும் உண்ண எவரும் விரும்புவதில்லை. அதே போன்று பல பிறவிகளாக சொற்ப இன்பத்தை வழங்கும் புலன்வழி சுகத்தை விலக்கவே விவேகமுள்ள எவரும் விரும்புவர் என அறிவுரை வழங்குகிறார் முனிவர் பெருமான்.

-----------------------

ஒரு மனிதன் அசுத்தமும் துர் நாற்றமும் வீசுகின்ற கழிவுகளை உரமாக்க எண்ணி தனது வீட்டிற்கு முன்னால் தெருவில் குவித்து வைத்திருந்தால் அவ்வழியே போவோர் வருவோருக்கு மிகுந்த இடைஞ்சலாகிவிடும். ஆனால் அதே உரத்தை தனது தோட்டத்தில் போட்டால் அங்கு போடப்பட்டிருக்கும் விதைகள் முளைப்பதற்கு உறுதுணையாக இருக்கும்.

அந்த விதைகள் வளர்ந்து செடிகளாகி அழகிய நறுமணம் மிக்க மலர்களைக் கொடுக்கும். அந்த மலர்களின் நறுமணம் எல்லோரையும் கவர்ந்து இழுக்கும். அந்த வழியாக செல்லும் பயணிகள் மிக்க மகிழ்ச்சிக்கு உள்ளாவார்கள். இந்த மலர்களின் நறுமணமானது அந்த உரத்தின் துர்நாற்றம் தான் என்பதை அப்போது நாம் மறந்தே போயிருப்போம். அந்த உரமே விதைகளில் இருந்து செடியின் மூலமாக மேலெழுந்து செல்லும்போது அது மலரின் நறுமணம் ஆகிறது.

ஒரு துர்நாற்றத்தை இனிய நறுமணமாக நம்மால் ஆக்க முடியும் தானே. அதுபோல காம, போகத்தின் பரிமாணமாக உள்ள புலனின்பம் என்ற துர்நாற்றத்தை எப்படி கடவுள் தன்மை என்ற நறுமண மலராக மலர வைக்க முடியும் என்பதும் நமது கையில் தான் உள்ளது. அதற்கான முயற்சிகளை ஆன்மாவின் இயல்பான கடவுள் தன்மைக்காக செயல்களில் ஈடுபடுத்துதல் வேண்டும் என்பதே ஆன்மீகம் நமக்களிக்கும் வழிகாட்டல்.

உடலின் தேவை காமம், போகம்; ஆன்மாவின் தேவை கடவுள்நிலை.





आत्मनानत्मविलोपनात्मचरितैरासीर्दुरात्मा चिरं 
 स्वात्मा स्याः सकलात्मनीनचरितैरात्मीकृतैरात्मनः । 
आत्मेत्यां परमात्मतां प्रतिपतन् प्रत्यात्मविद्यात्मकः
स्वात्मोत्थात्मसुखो निषीदसि लसन्न्ध्यात्ममध्यात्मना ।।193।।

ஆத்மன் யாத்மவிளோபனாத்மசரிதைராஸீர்து துராத்மா சிரம், 

ஸ்வாத்மா ஸ்யா: ஸகலத்மனினசரிதைராத்மீக்ருதைராத்மனா: | ஆத்மேத்யாம் பரமாத்மதாம் ப்ரதிபதன் ப்ரத்யாத்மவித்யாத் மக:, ஸ்வாத்மோத்தாத்ம ஸுகோநிஷீதஸி லஸந்நத்யாத்மமத்யாத்மனா || 193 ||

O soul! For very long, by adopting conduct that destroys the soul-nature, you have lived as a vicious-soul (an extroverted-soul – bahirātmā). Now, by adopting such conduct that benefits the soul you become a righteoussoul (an introverted-soul – antarātmā). You can then reach the stage of the pure-soul (paramātmā), which can only be attained through self-effort. In this stage, the soul becomes of the nature of infinite-knowledge (omniscience), and enjoyer of the soul-bliss that is independent of all external sense-objects. Such is the resplendent own-nature of the soul, realized by the soul itself.
ஏ ஆத்மா! மிக நீண்ட காலமாக, ஆன்மா-இயல்பை அழிக்கும் நடத்தையை பின்பற்றுவதன் மூலம், நீ ஒரு தீய ஆத்மாவாக (ஒரு பஹிராத்மா) வாழ்ந்தீர்கள். இப்போது, ஆத்மாவுக்கு நன்மை பயக்கும் இத்தகைய நடத்தை பின்பற்றுவதன் மூலம் நீ ஒரு இயல்பாக (ஒரு அந்தராத்மா) ஆகிறீர்கள். நீ தூய்மையான ஆத்மாவின் (பரமாத்ம) நிலையை அடையலாம், இது சுய முயற்சியால் மட்டுமே அவ்வாறு முடியும். இந்த கட்டத்தில், ஆன்மா எல்லையற்ற-அறிவினாகி (சர்வக்ஞன்) அனைத்து புற பொருள்களிலிருந்து சுயாதீனமாக இருக்கும் பேரின்பத்தை அனுபவிப்பதாக இருப்பதாகும். ஆத்மாவால் உணரப்பட்ட சொந்த இயல்பு இதுதான்.

இந்தப் பாடலில் ஆன்ம இயல்பை ஒத்த செயல்களையே செய்தல் வேண்டும்; அப்போது தான் ஆன்மனில் தோய்ந்து முழுதுணர்ஞானத்தை அடைந்து விடுதலையை பெறமுடியும் எனக் கூறுகிறார் முனிவர் பெருமான்.

உடல், மனம் என்ற இரு அடுக்கில் ஐந்து பொறிகளுக்கும், நான்கு அகக்கருவிகளுக்கும் உயிர்ப்பை அளித்து மனித ஜீவராசியாக ஆன்மாதான் வாழ்கிறது. அது இவ்வுலகை அறிந்து கொள்ளவே ஒவ்வொரு நொடியிலும் முயல்கிறது. அதனை அகக்கருவிகள் நான்குமே தவறான புரிதலை அளிப்பதால் துன்பத்தில் விழ்ந்துவிடுகிறது. ஆனால் அந்த துன்பங்கள் எதுவும் ஆன்மாவை நெருங்குவதில்லை. இருப்பினும் தனது உணர்வாக பிரேமையில் வாழ்கிறது ஆன்மா. அந்த மாயையிலிருந்து விடுபட்டு ஆன்மஞானத்தை பெறும் வழிகளை அளிப்பதே சமண சித்தாந்தத்தின் முக்கியநோக்கமாகும்.

அதாவது ஆன்மா மூன்று நிலைகளில் சுகத்தை பெற முயல்வதாக தெரிவிக்கிறது. அதாவது பகிரான்ம நிலை, அந்தராத்ம நிலை, பரமான்ம நிலை என்பதாக வகைப்படுத்தி கடைசி நிலையில் விடுதலைக்கான வழிகளை அளிக்கிறது.

புறக்கருவிகள் ஐந்தின் செயல்பாடுகளை அகக்கருவிகள் நான்கின் வழியே அறிந்து, ஆய்ந்து தெளியும் வழிமுறையில் வாழ்ந்து வருவது பகிரான்ம நிலை எனப்படும். அது துன்பக்காரணிகள் மிகுந்து காணப்படினும் புலன் இன்பத்தை பெறுவதை நோக்கமாக கொண்ட செயல்பாட்டில் வாழ்வதாகும். அது கடைசியில் விரக்தியையே தோற்றுவிக்கும்.

அவ்வாறில்லாமல் புறக்கருவிகள் ஐந்தின் செயல்பாடுகளை ஆன்ம இயல்புக்கு ஒத்த அறிவுக்கு ஒப்பான செயல்பாட்டுடன் அகக்கருவிகளை உபயோகித்து வாழ்வது அந்தராத்ம நிலையில் வாழ்வதாகும். அவ்வாறு வாழும் காலத்தில் ஓர்நாள் விழிப்புணர்வை பெற அதாவது முழுதுணர் ஞானத்தை எய்த வழிவகுக்கும்.

அவ்வாறு விழிப்புணர்வு பெற்ற ஆன்மா, புறக்கருவிகளின் வழியாக அகக்கருவிகளை உபயோகம் செய்து வாழும் நிலையைக் கடந்து புறக்கருவிகளின்வழியாக பெறும் புலனறிவை முற்றிலுமாக விலக்கி வாழும் உச்சநிலையை அடையும் போது ஒருநாள் பரமான்ம நிலையை எய்துவிடும் என்பது உறுதி என்கிறார் முனிவர் பெருமான். அதாவது சம்யத்வம் பெற்ற ஆன்மா; தான் உடல், மனமல்ல என்ற நிலையில் வாழும் ஆன்மா சீக்கிரமே விடுதலையை எய்திவிடும் என்பதாகும்.





अनेन सुचिरं पुरा त्वमिह दासवद्वाहित- 
स्ततोSनशनसामिभक्तरसवर्जनादिक्रमैः । 
क्रमेण विलयावधि स्थिरतपोविशेषैरिदं 
कदर्थय शरीरकं रिपुमिवाद्य हस्तागतम् ।।194।।

அனேன சுசிரம் புரா த்வமிஹ தாஸவத்வாஹிதஸ் – 

ததோஅனசனசாமி பக்தரஸவர்ஜனாதிக்ரமை: | 
க்ரமேண விலயாவதி ஸ்திரதபோவிசேஷைரிதம், 
கதர்தய சரீரகம் ரிபுமிவாத்ய ஹஸ்தாகதம் || 194 ||

Till now, for a very long time, your body has driven you like a slave in this world. Therefore, now you emaciate this despicable body, like an enemy that has fallen into your hands, gradually, till it persists, through special austerities (tapa) like fasting, reduced diet, and giving up stimulating and delicious food.
இப்போது வரை, மிக நீண்ட காலமாக, உங்கள் உடல் உங்களை இந்த உலகில் ஒரு அடிமையைப் போல ஓட்டிச் செல்கிறது. ஆகையால், இப்போது நீங்கள் இந்த வெறுக்கத்தக்க உடலை, ஒரு எதிரியைப் போல, படிப்படியாக உண்ணாவிரதம், குறைவான உணவு மற்றும் சுவையான உணவை விட்டுக்கொடுப்பது போன்ற தவ நடவடிக்கைகளின் மூலம் வசப்படுத்திக்கொள்.

ஆன்மனின் நித்திய சுகத்தை குறைப்பது அதாவது துன்பத்தை அளிப்பது பல பிறவிகளாக அதனுடன் ஒட்டி வரும் உடலே. அதனால் வரும் தீவினையைத் தடுக்க ஆகம விதிகளின் படி தன் முயற்சியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்துகிறார்.

நான் என்பது உடல் என்ற நிலை மாறி ஆன்மா என்ற நிலையை எய்திய அதாவது சம்யக்த்வம் பெற்ற பகவான் கூறுவதாவது; ஆன்மனை அடிமையாக்கி பல பிறவிகளுக்கு காரணமாக இருப்பது வினையுடலே அதனை விலக்குவதே இந்த மனிதப்பிறப்பின் நோக்கமாக இருக்க வேண்டும் என்கிறார். அதற்காக பல வழிகாட்டுதலை நமக்கு வழங்கிச் சென்றுள்ளார்.

முக்கியமாக செயலுக்கு காரணமாய் விளங்கும் புறஉடலை அதன் இஷ்டப்படி இயங்கச் செய்வதால் மட்டுமே வினைகள் கூடி ஒரு ஆன்மன் விடுதலை பெறும் காலத்தை நீட்டிக்கிறது. அதனால் அந்த ஸ்தூல உடலை நம் கட்டுப்பாட்டில் இயங்க வைப்பதே, மனதை கடந்து வினையுடலை விலக்க வழிவகுக்கும் என்பதை இப்பாடலில் தெரிவிக்கிறார்.

உடலை இவ்வுலக சுகத்திற்காக அடிமைப்படுத்தி பல துன்பங்களை கடந்தபின் சிறிய இன்பத்தை பெறும், சகஜ வாழ்க்கையிலிருந்து விலகி, விடுதலை மார்க்கத்திற்கான தவவாழ்வை ஏற்கும் போது இவ்வுடலை வருத்தி நம் வயப்படுத்த வேண்டியிருக்கும். அதனால் உடலை நமது பகைவனைப் போன்று பாவிக்க வேண்டி வரும் என்பதாக கூறுகிறார்.

ஏனென்றால் உடல் ஆரோக்கியம் பற்றிய உணர்வு நமக்கு மிகக்குறைவே. அதனை ஆரோக்கியம் பெற பல யோகமுறை பயிற்சிகளை அளிக்கும் போது அது இணக்கமுடன் ஒத்துழைக்காது அடம் பிடிக்கும். அவ்வேளையில் நண்பனைப்போல எண்ணினால் அப்பயிற்சிகளை விட்டு விடும் அபாயமும் வழக்கத்தில் உள்ளது. நம்முடலே பகைவனாக உருமாறி நிற்பதால் அதனை தன் வயப்படுத்தும் போது சில துன்ப உணர்வுகளை கூடுதலாக பெற நேரிடும்.

அதாவது உண்ணாநோன்பு (உபவாசம்), குறைந்த உணவை ஏற்பது (ஆவமோதர்யம்), சுவையை கூட்டும் எண்ணை, பால், தயிர், உப்பு, சர்க்கரை போன்றவற்றை(ரசபரித்யாகம்) விட வேண்டியிருக்கும். அவ்வாறு உணவு பழக்கத்தை கிரமப்படுத்தினால் மட்டுமே மனம் நல்லறிவின் கட்டுக்குள் அடங்கும் அதன் பின்னரே தியானம் போன்றவற்றில் தீவிரமாக ஈடுபடுதல் முடியும். அத்தியானத்தில் தீவிரமே முழுதுணர்ஞானத்தை அளிக்கும். அத் தவப்பயிற்சியை மேற்கொள்வதால் மட்டுமே பிறவிகளை குறைத்து விடுதலைக்கு வழிவகுக்கும். அது உச்சபட்சமாக தீவரப்படுத்தும் போது அப்பிறவியிலேயே வினைகளை முற்றிலுமாக விலக்கும் வழிமுறைகளை கடைபிடிக்க முடியும். அதுவே விடுதலைக்கு வழிவகுத்து நிற்கும் என்பதையே…

இந்த உடலை சுருக்கி, மரணம் வரை உடலைத் தம் வயப்படுத்தி ஆன்ம நலனுக்கு பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும் என்று சுருக்கமாக கூறியுள்ளார்.

----------------------

பொதுவாக, உடல் நன்கு இயங்க ஒரு விதமான சமநிலை உஷ்ணம் உடலுக்கு தேவைப்படுகிறது.. அந்த சமநிலை உஷ்ணத்தின் மூலம் உடலிலுல்ல இரத்தம், தசைகள், தசைநார்கள், நரம்புகள், எலும்புகள், தோல்கள் நன்கு வலிமைப் பெற்று அதனதன் வேலையை எந்த வித பாதிப்புகளின்றி செவ்வனே செய்கின்றது. ஆனால், உடலில் ஏற்படும் தட்ப வெப்ப மாறுபாடுகளால் மேற்கூறிய இயக்கங்களில் முதலில் சிறிது தடை ஏற்படுகிறது. இந்த மாறுபாடுகள் தொடருமானால் சிறிய அளவில் ஏற்பட்ட தடை பெரியதாகி உடலில் உள்ள உள்ளுறுப்புகள் பாதிப்படைகின்றது.

ஆகையால், உடலியக்கம் நன்கு வலிமை அடையவேண்டுமென்றால் உடலில் உள்ள தட்பவெப்பச்சமநிலை என்ற விகிதத்திற்கு முக்கியத்துவம் பெறுகின்றது. உடலில் சமநிலை உஷ்ணம் பாதிக்கப்பட்டு குளிர்ச்சி அதிகமானால் உடலியகத்தில் மாறுதல் ஏற்பட்டு தசைகள், தசைநார்கள், நரம்புகள் பாதிப்படைந்து வேகத்தடை ஏற்படுகின்றது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் எந்த காரியத்தையும் விரைவாக செய்ய இயலாது (Hypo-Active). வயது குறைந்தவர்களாய் இருந்தாலும் மெதுவாகத்தான் இயங்குவார்கள். இவர்கள் முன்புபோல் வேகமாக இயங்க உடலின் குளிரிச்சியை குறைத்து உஷ்ணத்தை சமநிலை செய்தாலேயே சரியாகிவிடும்.

இதற்கு நேரெதிராக உடல் உஷ்ணம் அதிகமானால் உடல் (Hyper-Active) ஆக செயல்படும். இரத்தம், நரம்புகள், தசைகள், தசைநார்கள் மிக வீரியத்துடன் செயல்படும். ஆனால், இதுவும் உடலுக்கு தீங்கானது ஆகும். இதைச் சரிசெய்ய உடலில் உள்ள உஷணத்தை குறைத்து குளிர்ச்சியை சமநிலை செய்தாலே உடல் இயக்கம் சீராகும். ஆகையால் ஒருவர் Active or In-Active ஆக இருக்கிறார் என்பதை உடலில் உள்ள உஷ்ணநிலை தான் தீர்மானிக்கின்றது.

இதை வைத்து தான் ஒருவருவரது தவ வாழ்வு முறை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி உடல் உஷ்ணம் முதலில் கிரமப்படுத்தப்படுகிறது. அதன் பின்னர் தான் நீண்ட நேரம் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து வினைகளை உதிர்க்க முடியும் என்பதால் யோக முறையில் உடலைக்கடுக்குள் வைக்க சில ஆகாரங்களை தியாகம் செய்தும், அடிக்கடி ஏற்காமலும் இருப்பதால் எந்த நேரமும் மூளைச் செல்லும் ரத்தத்தின் அளவை சீரமைத்து சுறுசுறுப்பாக இயங்க வைக்க முடிகிறது.

அவ்வாறு ஆகார விகிதங்களை சமன் செய்யாது போகும் போதுதான் சாதாரண உடற்பயிற்சி செய்வதும் அல்லது கடுமையான உடற்பயிற்சி செய்வதும் அல்லது எதுவுமே செய்யாதிருப்பதும் மருத்துவர்களால் தீர்மானிக்கபடுகின்றது.

அதனால் அகாரங்களை ஏற்பதில் சில விதிகளை யதிகள் கடைபிடிக்கின்றனர். எங்கு சென்றாலும் நடைப்பயணமாகவே செல்கின்றனர். அடிக்கடி உபவாசம் போடுவதும், சில உணவுகளை விலக்குவதுமான நியமங்களை ஏற்கின்றனர். அதனால் உடல் உஷ்ணம் சீராக்கப்பட்டு அமர்ந்தோ, நின்ற நிலையிலோ தீவிர தியானத்தில் ஈடுபட முடிகிறது. ஆக ஆகாரங்களை கிரமப்படுத்துவதே முக்திமார்க்கத்தின் முதல்நிலைப் பயிற்சியாகும்.

அதன் பின்னரே பலபடிநிலைகளை தீவிரத் தவப்பயிற்சியை மேற்கொள்வதால் கடந்து சம்யக்த்வம் பெற்றபின் விடுதலையை பெறுகிறது ஒரு ஆன்மா.





आदौ तनोर्जननमत्रा हतेन्द्रियाणि 
काघ्क्षन्ति तानि विषयान् विषयाश्च मान । 
हानिप्रयासभयपापकुयोनिदाः स्यु- 
र्मूलं ततस्तनुरनर्थपरम्पराणाम् ।।195।।

ஆதெள தனோர்ஜனனமத்ர ஹதேந்திரியாணி, 

காங்க்ஷந்தி தானி விஷயான் விஷயாச்ய மானம் | 
ஹானிப்ரயாபையபாபகுயோநிதா: ஸ்யு:, 
மூலம் ததஸ்தநுரனர்தபரம்பராணாம் || 195 ||

First the body is formed. It has evil senses which seek their respective pleasures; these sense-pleasures cause you disrepute, toil, fear, and wicked after-life. This way, conventionally, the cause of all misfortune is the body only.
முதலில் உடல் உருவாகிறது. அது இன்பங்களைத் தேடும் தீய புலன்களைக் கொண்டுள்ளது; இந்த புலனுணர்வு-இன்பங்கள் உங்களை இழிவுபடுத்தவும், உழைக்கவும், அச்சப்படவும், வாழ்க்கைக்குப் பின் கீழான பிறவிகளில் பிறக்கவும் செய்கின்றன. இந்த வழியில், தொடர்ந்து அனைத்து துரதிர்ஷ்டங்களுக்கும் காரணம் உடல் மட்டுமே.

ஒவ்வொரு பிறவியிலும் முதலில் உருவாவது இந்த உடலே. அதுவே அப்பிறவியில் ஏற்படும் அத்தனை துன்பங்களுக்கும் காரணமாக அமைகிறது என்று கூறுகிறார் ஆச்சார்யர்.

(அறிவியல் ரீதியாகவும்) முதலில் உருவாவது உடல், பின்னர் அதற்குள்ள பொறிகளும் தோன்றுகின்றன. அவற்றிற்குரிய புலன் விருப்பங்களும் மனதால் தோன்றுகின்றன. புலன் விருப்பங்களை நிறைவேற்றும் போது தடையாய் இருப்பவைகள் மீதும், நிறைவேறிய பின் தொடர்ச்சியாய் இன்பத்தை பெற தடையாய் இருக்கும் காரணிகள் மீதும் வெறுப்புமாக தோன்றி விடுகின்றன.

அவ்வாறு விருப்பங்களை அடைவதிலும், தக்கவைத்துக் கொள்ளும் போதும் உழைப்பு மிகுதியாகவும், வெறுப்புக்காரணிகளை எதிர்த்து பாதுகாக்கும் போது இன்ப நாட்டத்தினால் மிகுந்த உழைப்பும், அகலாமல் இருக்க அச்சமும், பிறரால் அவமானமும், அவ்வப்போது இழப்பும் வாழ்க்கையில் ஏற்பட்டு துன்பத்தையே பரிசாக அளிக்கின்றன. மேலும் அவற்றால் தீய பிறவிக்கான வினைத்துகள்களே பந்திக்கின்றன. இவை தொடர்ந்து ஒவ்வொரு பிறவிகளிலும் நம்மை பாதிப்பதற்கு காரணம் உடலே என்று எச்சரிக்கை செய்கிறார் முனிவர் பெருமான்.

----------------

பசி இரண்டு வகைப்படும். ஒன்று உடல் பசி. இன்னொன்று உள்ளப்பசி. அதைப்போல, பற்றும், உடல் பசியின் மீதும், உள்ளப் பசியின் மீதும் ஏற்படும். விலங்கினங்களுக்கு உடல் பசியின் மீதுதான் பற்று உண்டு. அந்தப் பற்று உணவுப் பொருள் மீதுள்ள பற்றாக அமைகிறது. ஆனால், மனிதனுக்கு உடல், உள்ளம் ஆகிய இரண்டு பசியின் மீதும் பற்று உண்டு.

உடலைப் பாதுகாப்பதற்குத் தேவையான உணவை நாடுவதும் இத்தகையதே. ஒரு குறிப்பிட்ட உணவின் மீதுள்ள பற்றினால், விருப்பத்தினால், அதை அதிக அளவிலே உண்டால், உடலுக்கு நோய்வரும். உடல் துன்பம் அடையும். இதனையே வள்ளுவரும், எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அந்தப் பொருள் மீது, எந்த அளவுக்குப் பற்று இல்லாமல் இருக்கிறோமோ, அந்த அளவுக்கு அவற்றினால் வரும் துன்பங்கள் குறையும் அல்லது துன்பங்களே வராது என்று குறிப்பிடுகிறார்.

-----------------

அதனால் உடலைப் பெற்றதும் புலனுணர்வினால் உருவாகும் விருப்பு, வெறுப்பு வேட்கையில் விழிப்புடன் கவனம் செலுத்தினாலொழிய இந்த உடலால் நம் ஆன்மாவில் படியும் வினைத்துகள்களை தடுத்து நிறுத்த முடியாமல் போய்விடும் என்ற அச்சத்தை நமக்களிக்கிறார் இப்பாடலின் வழியே.





शरीरमपि पुष्णन्ति सेवन्ते विषयानपि । 
नास्त्यहो दुष्करं नृणां विषाद्वाञ्छन्ति जीवितुम् ।।196।।

சரீரமபி புஷ்ணந்தி ஸேவந்தே விஷ்யானபி: | 

நாஸ்த்யஹோ துஷ்கரம் ந்ருணாம் விஷாத்வாஞ்சந்தி ஜீவிதும் || 196 ||

The ignorant men nourish their body and indulge in sense-pleasures. Nothing is impossible for such men; they indulge in all wrong-doings. While doing so, they wish to live on poison.
அறிவற்ற மனிதர்கள் தங்கள் உடலை வளர்த்து, புலனுணர்வு-இன்பங்களில் ஈடுபடுகிறார்கள். அத்தகையவர்களுக்கு எதுவும் சாத்தியமில்லை; அவர்கள் எல்லா தவறான செயல்களிலும் ஈடுபடுவார்கள். அவ்வாறு செய்யும்போது, அவர்கள் விஷத்தை உண்டு வாழ விரும்புபவர்கள்.

உடல் வலிமை என்பதில் கவனம் செலுத்துவதை நிறுத்தி ஆரோக்கியம் என்பதில் அக்கறை காட்டவேண்டும் என்ற வழிகாட்டுதலை அளிக்கவே இப்பாடலில் தருகிறார் முனிவர் பெருமான்.

உடல் வலிமையைக் கூட்ட எண்ணுபவன் பிற உயிர்களை அடிமைப்படுத்தி, தான் ஆள்பவனாக இருக்கவே விரும்புவான். அவனிடத்தில் ஆணவமே மேலோங்கி இருக்கும்; ஆட்சிப்பற்றும், அதிகாரப்பற்றும் நிரம்பி யிருக்கும் என்பதாகவே உளவியலாளர்களும் கருதுகின்றனர்.

வலிமை கூடக்கூட துணிவும் கூடிக்கொண்டே செல்லும். சரியான குருவின் வழிகாட்டுதலில்லாதவர்களே சர்வாதிகாரக் குணத்துடன் குடும்பத்திலும், சமூகத்திலும் மற்றவரை, ஜீவராசிகளை அடிமைப்படுத்தி வாழ்ந்திட எத்தனிப்பர் என்பதை பல கதைகளிலும், அன்றாட வாழ்க்கையிலும் நாம் கண்டுதான் வருகிறோம்.

ஆனால் அவ்வாறான உடல் வலிமைக்கு மட்டுமே முக்கியத்வம் தருபவர்கள் இளமையில் நல்ல ஆகிருதியுடன் பலமாக செயலாற்றும் திறமையுடன் இருந்தாலும், பின்னாளில் வலுவைச்சேர்க்கும் உணவுகளை உடல் ஏற்காத முதுமைப்பருவத்தில் மிகவும் வருந்தவே செய்வர். அவர்கள் படும் துன்பத்திற்கு அளவே இல்லை. முற்காலத்தில் அவரால் துன்பப்பட்டவர்கள் இவரது பலகீனத்தை பார்த்ததும் உடன் பழிதீர்க்கவும், தண்டனையை திருப்பியளிக்கவும் முற்படும் போது மிகுந்த துன்பத்தையும், துயரத்தையும் அடைவார்கள்.

அதனால் உடல் வலுவைச் சேர்க்கும் உணவுப் பழக்கத்திலிருந்து ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தியவர்களது ஆயுள்காலத்தின் கடையில் உடல பலகீனம் என்பது சில நாட்களே தென்படும். அதனையும் அவரது அறிவைக் கொண்டு சமன் செய்து வாழ்வர் என்ற வழிகாட்டுதலுக்காகவே இப்பாடலை தந்துள்ளார் முனிவர் பெருமான்.

உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை, இறைச்சி, மாமிசங்கள் தான். ஆனால் அதனால் பெறும் வலிமை கூடுதலாக இருந்தாலும் பின்னாளில் பெருமளவு ஆரோக்கியத்தை குறைத்து விடும். தாவர உணவுகளை மட்டும் உண்ணும் மக்கள் போதிய உடல் வலிமை பெறுவதோடு கடைசிவரை ஆரோக்கியத்துடனும் வாழ முடியும். வலுவுடன் வாழ முயல்பவர்களே மாமிசத்தை உண்ண விருப்பம் கொள்வார்கள். அதனாலும் பல உடல் ஆரோக்கிய கோளாற்றை சந்திப்பதோடு, ஹிம்சைக்கான பாவத்தையும் ஏற்று கீழான கதிகளுக்கே செல்வார்கள்.

வலிமையைக் கூட்டி போரிடும் காலத்தில் தான் பெருமளவு மனித இனம் அழிந்து, வெற்றி பெற்றவர்களைத் தவிர மற்றவர்கள் பெரும் துன்பத்தை அடைந்துள்ளனர். ஏனென்றால் அசைவ உணவும், போதைதரும் பானங்களும் வலிமையை கூட்டினாலும் புத்தியில் எப்போதும் கிளர்ச்சி(ரஜோ)யுடனும், திமிரான நடவடிக்கையிலுமே வாழ்வர் என்பதை தொன்மைக்கால வரலாறுகளே தெரிவிக்கின்றன. பிறரை ஹிம்சித்து வாழும் காட்டுமிராண்டித்தனமே அவர்கள் மனதில் தோன்றும் அரக்க குணமாக இருக்கும். எதையும் வன்முறையில் வெற்றி கொள்ளும் கலாச்சாரத்துடன் வாழ்வார்கள். என்ற வரலாறுகளையே நமக்கு முன்னோர்கள் எடுத்துரைத்து நல்ல ஆரோக்கியத்துடன், அறிவுடன் வாழும் வழிகாட்டுதலை தந்துள்ளார்கள்.

---------------------

வலிமை கூட்டுவது ரஜோ குணம். ஆரோக்கியத்தை கூட்டுவது சாத்வ குணம் என்பதே புத்திக்கான வழிகாட்டுதல். கிளர்ந்த மனதால் வீடுபேற்றை அடையமுடியாது. சாத்வ குணமே முக்திக்கு இட்டுச்செல்லும் என்ற தெளிவை இப்பாடலின் வழியில் நமக்களிக்கிறார் முனிவர் பெருமான்.





इतस्ततश्च त्रास्यन्तो विभावर्यां यथा मृगाः । 
वनाद्विशन्त्युपग्रामं कलौ कष्टं तपस्विनः ।।197।।

இதஸ்ததச்ச த்ரஸ்யந்தோ விபாவர்ய்யா யதா ம்ருகா: | வனாத்விசந்த்யுபக்ராமம் கலெள கஷ்டம் தபஸ்வின: || 197 ||


The anguished forest-dwelling deer, out of fear of the lion and other animals, shift at night, for their safety, near a village. It is a pity that in this kali age (the fifth period, called dusamā), the anguished forest-dwelling ascetics, out of fear, shift at night, for their safety, near a village.
அச்சம்நிறைந்த காடுகளில் வசிக்கும் மான் போன்றவை சிங்கம் மற்றும் பிற விலங்குகளுக்கு பயந்து, இரவில் ஒரு கிராமத்திற்கு அருகில் அவைகளின் பாதுகாப்பிற்காக ஒதுங்குகிறது. அதேபோல் இந்த கலி யுகத்தில் (ஐந்தாம் காலம், துஷமா என்று அழைக்கப்படுகிறது) மலைகள், காடுகளில் வசிக்கும் துறவிகள் பயத்தால் இரவில் நகர்புறத்தே பாதுகாப்பு கருதி ஒரு கிராமத்திற்கு அருகில் இருப்பது ஒரு வருத்தமான விஷயமாகும்.

தவவாழ்வை மேற்கொள்பவர்கள் எல்லா பொழுதிலும் தவநெறியில் முழுவதுமாக ஈடுபட எண்ணி காடு, மலை, குகை மற்றும் நதிக்கரை போன்ற இடங்களில் வசிப்பார்கள். ஆனால் அவர்களில் சிலர்; கொடிய விலங்குகளுக்கு பயந்து சாதுவான மிருகங்கள் இரவில் நகர்புறம் ஒதுங்குவது போன்று, துறவிகளும் இல்லறத்தார்கள் வாழும் இடங்களில் புகலிடமாய் இருப்பது வருந்தக்கூடிய செயலாகும் என்கிறார் முனிவர் பெருமான்.

குருகுல வாசம் என்பது முற்காலத்தில் காடுகளிலும், குகைகளிலும் வசித்து தங்கள் ஆசான்களிடம் ஆன்மீகப் பயிற்சியை மேற்கொண்டு வந்தனர். அதில் முன்னேற்றம் அடைய காடுகளிலேயே தங்கி தியானம், தவம் போன்றவற்றை நேர்த்தியாக கடைபிடித்து வந்தனர். அதனால் பல படிநிலையில் முன்னேற்றமும் அடைந்தனர். அவர்களது தூய மனநிலைக்கு எந்த ஒரு விலங்கினமும் எத்தீங்கும் செய்வதில்லை. அவர்களது அஹிம்சை உணர்வும், விருப்பு வெறுப்பு அற்ற மனநிலையில் வாழ்ந்ததே அவற்றிற்கு காரணமாக இருந்தது.

அவர்கள் தங்கள் ஆன்ம முன்னேற்றத்தை எந்த ஒரு சமயத்திலும் பரீட்சித்து பார்த்ததில்லை. அவர்களது சக்திகளை பிரயோகிக்கும் சிந்தனை ஒருபோதும் தோன்றியதில்லை. அவ்வாறான தூய துறவறநெறியில் வாழ்ந்து வந்தனர். அதாவது அவர்களது பூர்வாசிரம நினைவுகள் முற்றிலுமாக அவர்களின் மனதை விட்டு அகன்றிருந்தன என்பதே அடிப்படையான காரணமாகும்.

ஆனால் இந்த ஐந்தாம் காலத்தில் அவ்வாறில்லை. கலியுகத்தில் சில சித்தி, ரித்திகளைப் பெற்று தனது உள்ளார்ந்த விருப்பங்களை நிறைவேற்றவே தவநெறி வாழ்வில் ஈடுபடுகின்றனர். அவர்களால் முழுவதுமாக துறவற ஒழுக்கத்தில் வாழ முடியவில்லை. அதனால் பள்ளிக்குச் சென்று மீண்டும் மனைக்கு திரும்புவது போன்று பகலில் தவநெறியை காடு, மலைகளில் சாதகம் செய்து, இரவில் நகர்புறங்களில் தங்கி வாழ்வது வருத்தத்திற்குரிய செயலாகும். அதனால் தவப்பயன் முழுமையும் இப்பிறவிக்குள் எவரும் அடையப்போவதில்லை என்று அவர்வாழ்ந்த காலத்தில் இருந்த சில துறவிகளை விமர்சனம் செய்துள்ளார்.

------------

ஆனால் இன்றைய நிலையே வேறு. முழுவதுமாக சர்வகலா சாலையில் தத்துவம் பயின்று, யோகாசனங்களைக் கற்று, வேதங்கள், ஆகமங்களில் தேர்ச்சி பெற்றதும் அதனை போதிப்பதாக நகரின் ஒதுக்குப்புறமாக ஒரு பெரிய ஆசிரம் போன்ற சகலவசதியுடனான சில கட்டிடங்களை நிறுவி அதில் சில தெய்வங்களை பிரதிஷ்டை செய்து, வந்து செல்லும் பக்தர்களுக்கு ஆன்மீகம், யோகப்பயிற்சியை கற்றுத்தருவதாக அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான மந்திர, தந்திரங்கள், யந்திரங்களை வழங்கி வருகிறார்கள்.

அவ்வாறான தகுதிகளை, ஆஸ்திகளைப் பெற்ற ஒருவரையே இக்காலத்து மக்களும் வரவேற்று, மரியாதை செலுத்தி அவரை பின்பற்றும் ரசிகர்கள் கூட்டமாக வளர்ந்து வருகின்றனர். அவர்களது பூர்வாசிரம் என்ன, எங்கே இவற்றைக் கற்றார்கள், வரும் வருமானத்தை எந்த வழியில் செலவழிக்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காவிடினும், தங்களது மன நிறைவுக்காக, மன்னிப்புக்கான விலையாக, சன்மானங்களை தக்ஷணையாக வழங்கியும் வருகிறார்கள்.

அவ்வாறான பல corporate சாமியார்களின் ஆசிரமங்களை ஆச்சார்யர் குணபத்ரர தனது தீர்க்க தரிசனத்தில் உணர்ந்துதான் இந்தப்பாடலை வழங்கியுள்ளார் என்றே தெரிகிறது. இன்றைய அரசியல் தலைவர்களும், திரைப்படத்துறையினரும் எந்த ஆசிரமங்களுக்குச் செல்கிறார்களோ அங்குதான் மகிமை அதிகமாக இருப்பதாக நம்பி விளக்கொளியை பழமென நினைத்து விழும் விட்டில் பூச்சிகளைப் போல் அந்த மையங்களை நோக்கி நகரத்தொடங்கி விட்டனர் இன்றைய பேராசை பிடித்த மனிதர்களும்.

பல ஆயிரங்களையும், பல லட்சங்களையும் நன்கொடையாக, பயிற்சிக் கட்டணமாக அறிவித்து தங்களது ஆன்மீக வியாபாரத்திற்காக பெற்றதோடு பலரது வாழ்வை சிரழித்துக் கொண்டுமிருப்பதை ஊடகங்களில் வெளிச்சமிட்டுக் காட்டினாலும்; நம்மவர்களும் அந்த போலித்துறவிகளின் பேச்சில் மயங்கி, மித்யாத்வ ஒழுக்கத்தில், பக்தியில், வழிபாட்டு சடங்கு முறையில் வீழ்ந்து வருவதை என்னவென்று சொல்வது.

எவையெல்லாம் திருஷ்டி, தீட்டு, யோகமுறைக்கு எதிரானது என முற்காலத்தில் கூறப்பட்டதோ அவற்றை முழுவதுமாக மாற்றி நல்லொழுக்கமாக வழங்குவதால் எந்த ஒரு சிறிய நியமங்களையும் விரதமாக ஏற்காமல் சாமான்ய மனிதர்களும் பெருவிருப்பத்தை நிறைவேற்றத் துடிப்பவர்களும், பெண்களை கவரும் தீயோர்களும், அரசை கவிழ்க்க யாகமும், பலியும் கொடுக்க துணிந்தவர்களும் அவ்வாசிரமத்தை சுற்றிய வண்ணமே இருக்கின்றனர். (இந்த நாகரீக போலி ஆன்மீகம் நம்மவர் பலரையும் தன் வசம் இழுத்துச் செல்வதே பெரிதும் வேதனை அளிக்கிறது.)

புத்தர் கூறியதாக தியானப்பயிற்சி முறைகள்; சக்கரங்களில் உயிர்ச்சக்தியை எந்த ஒரு யமமும், நியமுமின்றி கொண்டு சென்று சாந்தி செய்தல், உயிருடன் சமாதி நிலைக்கான பயிற்சி, விடுதலை(சிவ)யாத்திரை, நாற்பது நிமிடங்களில் எதிர்கால வினைகளை நிர்ஜரை செய்தல்(fastforward) போன்ற பொய்யான வாக்குறுதிகளை ஆன்மீக வேடத்தில் அளித்து பலரையும் கவர்ந்திழுத்து ஆட்சியாளர்களையும் கூட தம் வசம் வசியம் செய்யும் போலிச்சாமியார்களின் கூடாரங்களே சான்றுகளாகும்… (இன்னும் பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம்…. எல்லோருமே பொய்க்காட்சியாளர்கள் என்பதை கோடிட்டு காட்ட பல வரிகள் தேவைப்படலாம். ஆனால் “இவ்வளவு கூட்டம் பின் செல்கிறது” என்ற சந்தேகம் எழச்செய்யும் அளவிற்கு பலர் மனதில் ஆழப்பதிந்து விட்டார்களே…)

எதை வேண்டுமானாலும் எந்த விரதமும், கட்டுப்பாடுமுள்ள ஒழுக்கமுறையை கைக்கொள்ளாமல் யோக சாஸ்திரத்தில், தந்திரா வின் வழியில் பெற்றுவிடலாம் என்ற பொய்யான வழிகாட்டுதலை யளித்து தன்னை பிரபல்யப்படுத்திக் கொள்வதில் வல்லவர்களாக திகழ்பவர்கள் ஆங்காங்கே பல கிளைகளையும் திறந்து இல்லறத்தாருடனே சகல வசதிகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் காட்டிற்கு சென்றதாகவே தெரியவில்லை.

பக்தர்கள் என்ற பெயரில் ரசிகர்களை திரட்டி வரும் பலரும் இது போன்ற பொய்த்துறவிகளை வரவழைத்து தங்களைப் பிரபல்யப்படுத்தி வருவதையும் காணும் போது ஐந்தாம் காலம் முடிந்து, தீத்தீக்காலம் துவங்கினால் மனித சமுதாயம் என்னவாகப்போகிறது என்பதை என்னும் போது ஜினவறம் எந்த நிலையில் வீழந்திருக்கப்போகிறதோ! தெரியவில்லை.

---------

அதனால் நம் குலத்தில் பிறந்து இல்லற ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்கள்; ஜினவறத்தின் மீது உறுதியான நம்பிக்கை வைத்து சுருதஞானத்தை சரியான முறையில் பயின்று அதன் வழியில் சரியான வாழ்க்கை நெறியில் கடைபிடித்தால் ஓரளவு வினைக்கட்டிலிருந்தும், வினையுதிர்ப்பு வழிவகுத்தும் மேலான கதியை சென்றடைய இந்த ஐந்தாம் காலத்தில் வழிவகுக்க முடியும் என்ற வழிகாட்டுதலே இப்பாடலுக்கான தெளிவாகும்.





वरं गार्हस्थ्यमेवाद्य तपसो भाविजन्मनः । 
शवः स्त्रीकटाक्षलुण्टाकलोप्यवैराग्यसम्पदः ।।198।।

வரம் கார்ஹஸ்தவமேவாத்ய தபஸோ பாவிஜன்மன: | 

ஸ்வ ஸ்த்ரீகடாக்ஷலுண்டாகலோப்யவைராக்யஸம்பத: || 198 ||

If today’s austerities are to be robbed tomorrow by seductive half-glances of women, the wealth of asceticism is lost. The life of the householder is better than such asceticism that surely is the cause of future births.
இக்காலத்திய தவநெறி வாழ்க்கைகளை பெண்களின் கவர்ச்சியான கடைக்கண் பார்வையால் கொள்ளையடிக்க படுமானால், துறவறத்தின் வைராக்யம் இழக்கப்படுகிறது. மறு பிறப்புகளுக்கு நிச்சயமாக காரணமாக இருக்கும் என்பதை உணராத துறவிகளை விட, ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் இல்லறத்தாரின் வாழ்க்கையே சிறந்தது.

இந்த பாடலில் பிரம்மசர்யம் என்ற காமவிலக்கு விரதத்தை உறுதியுடன் ஏற்றுக் கொண்டதாக பிரதிக்ஞை ஏற்ற பின்னர்தான் துறவறநெறிக்கு தீட்சை வழங்கப்படுகிறது. ஆனால் ஏதோ சில இளம்துறவிகள் உணர்ச்சி தூண்டுதலால் பிரம்மசர்யத்தை மறந்து அக்காமப்பசிக்கு பலியாகி விடுகின்றனர். அவர்களைக் காட்டிலும் ஏகத்துணை எனும் விரதத்துடன் வாழும் ஒரு இல்லறத்தாரே சிறந்தவர் என்று இப்பாடலில் குறிப்பிடுகிறார் ஆச்சார்யர். அத்துறவியை விட மேலான கதிக்குச் செல்வார்கள் என்றும் கூறுகிறார்.

மீண்டும் போலித்துறவிகள் பற்றித்தான் குறிப்பிட வேண்டிய கட்டாயத்தை அளிக்கிறார் முனிவர் பெருமான்.

-----------------

எவரிடம் விருப்பும் வெறுப்பும்இல்லையோ... அவரே உண்மையான துறவி. ஆசையும் தேவையும் அற்ற நிலையில் ஒரு மனிதனுள் நிகழும் மாற்றமே சந்நியாசம். பந்தங்களிலிருந்து விடுபடுவதும், பற்றுகளிலிருந்து விலகி நிற்பதும் துறவறத்தின் அடிப்படை தர்மங்கள்.

பிரம்மசர்ய இயம விரதத்தை ஏற்ற பின்னரே துறவறநெறியாளராக அடையாளப்படுத்தப் படுகின்றனர். அதன் பின்னர் சொந்தமாக ஒரு கமண்டலமும், மயிற்பிச்சியும் இருக்கலாம்; அதற்கு மேல் எந்த உடைமையும் இருக்கலாகாது. இரு உடையோ, ஓருடையோ என துவக்கத்தில் அணியலாம். வேறெவற்றையும் அணியக்கூடாது என்பது உடைக்கான நியதி.

இயற்கை தந்திருக்கும் மரத்தின் நிழலிலோ, மலைக்குகையின் அடியிலோ தங்கலாம்; செயற்கையாக அமைக்கப்பட்ட உறைவிடம் தங்கியிருக்கத்தகாது. துறவி தனிமையை நாட வேண்டும். உலகத்தின் உயிர்கள் அனைத்தையும் பேதமின்றி அன்பு செலுத்தும் அஹிம்சாவிரதத்தை கைக்கொள்ள வேண்டும். இவை பெரும்பாலும் இந்திய தரிசனங்களில் துறவறநெறிக்கான பொதுவான இலக்கண விதிமுறைகள்.

ஆனால் இப்பாதையில் பயணிக்கும் ஒருசிலரைத்தவிர பெரும்பாலான சந்நியாசியை இந்த மண்ணில் இன்று நாம் பார்க்கவியலாது. மனம் சமநிலை அடைந்தவருக்குத் தான் சந்நியாசம் சாத்தியம். ஜினவறம் மட்டுமல்ல பகவத்கீதையும், 'கர்மத்தைப் பற்றின்றிச் செய்பவன், மனம் தெளிந்தவன், ஐம்பொறிகளை அடக்கியவன், தன் ஆத்மாவில் பிறவுயிர்களின் ஆத்மாவை தரிசிப்பவன் சந்நியாசி' என்றுதான் கூறுகிறது. நீரில் பிறந்த தாமரை... அந்த நீரில் நனையாமல் இருப்பது போன்று, செயல்களைச் செய்யும் மனிதன் அவற்றின் விளைவுகளில் பற்றின்றி விளங்க வேண்டும் என்பதுதான் கீதையின் வழிகாட்டலும் கூட.

எல்லாவற்றையும் துறப்பது எல்லோருக்கும் எளிதன்று. இளமையிலேயே உணர்வுகளை வென்று துறவுக்கோலம் பூண்டதாக பாவனை காட்டுபவர்களை அடையாளம் காண வேண்டும் என்கிறார் முனிவர் பெருமான். நாம் மிகுந்த விழிப்பு உணர்வுடன் அவர்களை நெருங்க வேண்டும்.

'தவம்' என்றால் எரிப்பது என்று பொருள். உலகியல் ஆசைகளை, புலன்களின் வேகத்தை, எதிர்மறைப் பண்புகளை, காமத்தை அடியோடு எரிப்பதுதான் தவம். துறவியர் போன்று வேடம் புனைந்து, ஆன்மிக உரை நிகழ்த்துபவரெல்லாம் புலனடக்கம் பூண்ட மனிதப் புனிதராக மாறிவிடக்கூடுமா? என்ற வினாவை எழுப்புகிறார் முனிவர்.

எந்த ஞானத்தின் சுவடும் படியாதவனின் பாதங்களில் கோடிக்கணக்கில் கொட்டிக் குவித்த பேதைகளாகப் பாழ்பட்டுப் போகிறார்கள் புரியாத அஞ்ஞானிகள். மொத்தத்தில், சந்நியாசம் பற்றிய சரியான புரிதல் நம்மிடத்தில் இல்லை.

சந்நியாசம் என்பது சுயநலம் துறப்பது; தன் நலனிலும், தன்னைச் சார்ந்தவர் நலனிலும் மட்டும் நாட்டம் கொள்ளும் சாதாரண மனித வாழ்வைத் துறப்பது; உலகம் முழுவதையும் தன் உறவாக ஏற்று, எல்லா உயிர்களின் நலனுக்காகவும் செயற்படும் பெருவாழ்வின் பேரருளில் கரைந்து போவது!

நமக்கு பல ஆனந்தர்கள் ஞானிகளாகவும், யோகிகளாகவும் முதலில் காட்சி தருகின்றனர். பின்னாளில் அவர்களுடைய காம லீலைகள் வெளிப்படும் போது அவர்கள் மீது காறி உமிழ வேண்டும் போல் நெஞ்சம் கசந்துவிடுகிறது. அவர்களைப் பற்றி நமக்குள் நாமாகவே உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் உடையும் போது, நாம் நிலைகுலைந்துவிடுகிறோம்.

இந்த அற்ப மனிதர்களிடம் நம்மைச் சரணடையத் தூண்டுவது எது? அவர்களுடைய மூலம் குறித்து ஏன் நாம் ஆய்வு செய்வதில்லை? 'உடைமையற்றவனாக இருக்கவேண்டிய துறவிகளுக்கு ஏன் கோடிக்கணக்கில் சொத்து?' என்ற கேள்வி எழவேண்டாமா! துணியை அணிவதையே பற்றாக நினைக்க வேண்டியவன், பருவத்திற்கேற்ற பல வண்ண உடைகளையும், கழுத்து முதல் கால்வரை தங்கம் கூட அலங்கரிக்கிறதே, அவை அவர்களுடைய போலித்தனத்தை வெளிப்படுத்தவில்லையா? தனிமையில் இருக்க வேண்டிய துறவிக்குப் பன்னாட்டு நிறுவன முதலாளிக்கு இருப்பதுபோல் பரிவாரம் எதற்கு? ஜீன்ஸ் கால்சட்டையும், கறுப்புக் கண்ணாடியும், விமானங்களில் முதல் வகுப்பில் பயணமும், ஐந்து நட்சத்திர விடுதி வசதிகளுமாக நம்மிடையே உலவும் நவீன சந்நியாசிகளின் உபதேசத்தால், எந்த ஏழையின் வாழ்க்கைச் சிக்கல் தீர்ந்தது? பணக்காரர்களின் கூட்டமே ஏதோ புஷ்ப விமானத்தில் அமர்ந்து சுவர்க்கத்திற்கு சென்ற உணர்வில் பின் செல்கிறது.

தங்களை பகவான்களாகவும், கடவுளாகவும் அறிவித்துக் கொண்டதற்கு நம் அறியாமையும், மந்தை மனோபாவமும்தானே (herd mentality) முதற்காரணம்!

அவர்கள் அளவில் ஆன்மிகம் என்பதெல்லாம் வெறும் சாஸ்திர அறிவு, வெறும் வாய் ஜம்பம். ஒருவனுக்கு நன்றாகப் பேசத் தெரிந்தால் போதும்... அவனை ஆன்மிகவாதி என்போம். இது ஆன்மிகம் அல்ல, வார்த்தைகளை அற்புதமாக ஒன்று சேர்க்கும் திறமை, பேச்சாற்றல். இவை மக்களுக்கு மகிழ்ச்சி தர மட்டுமே பயன்படும். ஆனால், இவை ஆன்மிகம் ஆகாது. ஆன்மிகத்தை உணர வேண்டும். வெறும் பேச்சால் அல்ல.

மஹாவீரர் , புத்தர் போன்றோர் மனித வாழ்வின் துயரங்களைத் தீர்ப்பதற்காகத் தான் துறவு பூண்டனர். அரச போகங்களை அனுபவிப்பதற்காகவே சில போலித் துறவிகள் பொய் வேடம் புனைகின்றனர் இக்காலத்தில்.

பொருள் தேட்டமும், இன்ப நாட்டமும் இன்றைய நுகர்பொருள் கலாசாரத்தின் முற்றுகையில் நம் மக்கள் மனங்களில் வெறியாக வளர்ந்துவிட்டன. தேவைகளும் ஆசைகளும் பல்கிப் பெருகிவிட்ட வாழ்வில்... சிக்கல்களும் பெருகுவதைத் தவிர்க்க முடியாது. ஆசைகளும் தேவைகளும் அளவு மீறாத வரை, நாம் போலி சாமியார்களையும், உபன்யாசகர்களையும் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. பிறர் மீது அன்பு செலுத்தும் அஹிம்சையை வாழ்க்கை நெறியாக வகுத்துக் கொண்டால், அதில் கிடைக்கும் பேரானந்தம் எந்த நிலையில்லா மகிழ்ச்சியை விடவும் சிறந்தது.

-------

அளவான உணவு, மிதமான காமம், போதுமான உறக்கம், தேவைக்கேற்ற உழைப்பு உள்ளவர்கள் எவரும் எந்த யோகமையத்திலும் பயிலத் தேவையில்லை. நம்மை அறிந்துகொள்ள ஒவ்வொருவருக்கும் 'உள்முகத் தேடல்' முக்கியம். நம் மனதுக்குள் செல்லும் மார்க்கமே தியானம். கும்பலிலிருந்து கொஞ்ச நேரம் விடுபட்டு, தன்னந்தனியே கண்மூடி நம் நிறைகுறைகளை அகத்தாய்வு செய்தால் போதும். நிறைகளைப் பெருக்கவும், குறைகளைத் தவிர்க்கவும் அது வழிகாட்டும். இவையே இப்பாடல் நமக்களிக்கும் தெளிவாகும்.





स्वार्थभ्रंशं त्वमविगणयंस्त्यक्तलज्जाभिमानः 
सम्प्राप्तोSस्मिन् परिभवशतैर्दुःखमेतत्कलत्राम् । 
नान्वेति त्वां पदमपि पदाद्विप्रलब्धे{सि भूयः 
सख्यं साधे यदि हि मतिमान् मा ग्रही£वग्रहेण ।।199।।

ஸ்வார்தப்ரம்சம் த்வமவிகணயம்ஸ்த்யக்தலஜ்ஜாபிமான:, ஸம்ப்ராப்தோஅஸ்மின் பரிபவசதைர்து: கமேதத் தளத்ரம்: | 

நான்தேதி த்வாம் பதமபி பதாத்விப்ரலபதோஅஸி பூய:, 
ஸக்யம் ஸாதோ யதி ஹி மதிமான் மாக்ரஹீர்விக்ரஹேண || 199

|| O worthy soul! Having been associated with this body, you have accepted this distressful woman. While doing so, having left grace and self-respect, you do not count the hundreds of humiliations due to her. Further, not being able to acquire austerities and self-restraint meant for soul-development, you have lost the happiness of liberation; you do not count this too. These, the body and the woman, are certainly not going to walk with you even one step; you will again be deceived. Therefore, O ascetic, if you are wise, leave friendship with this body; leave infatuation for this body.
தகுதியான ஆத்மா! உடலுடன் தொடர்புடையதால், இந்த துன்பகரமான பெண்ணை தொடர்பு கொண்டிருக்கிறீர்கள். அவ்வாறு நடப்பதால் அன்பையையும் சுய மரியாதையையும் விட்டுவிட்டு, அவள் காரணமாக நூற்றுக்கணக்கான அவமானங்களை அடைகிறீர்கள். மேலும், ஆத்ம வளர்ச்சிக்கான தவவாழ்க்கையில் சுய கட்டுப்பாட்டை பெற முடியாமல், விடுதலையின் ஆனந்தத்தை இழந்துவிட்டீர்கள். இந்த உடலும் நிச்சயமாக இறக்கும் போது ஒரு படி கூட நடக்கப் போவதில்லை; நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள். ஆகையால் துறவுடன் ஞானமுள்ளவராக இருந்தால், இந்த உடலுடனான நட்பை விட்டு விடுங்கள்; இந்த உடல்மீதுள்ள மோகத்தை விடுங்கள்.

உடலின் உபயோகத்தை சரியாக புரிந்து அதனை பயன்படுத்திக் கொள்வதே விவேகமான செயல். அதுவே நல்ல புருஷார்த்தங்களை கைக்கொள்வதால் மட்டுமே விடுதலைப்பேறுக்கு வழிவகுக்கும் என்று அறிவுறுத்துகிறார். மேலும் அவ்வாறான மானுட இலட்சியத்தை கைவிட்டு பெண்ணாசை, பொன்னாசை மற்றும் புலனுணர்வு இன்பத்தில் வாழ்நாளைக் கழிப்பதால் துன்பமும், அவமானமும், சுயமரியாதை இழப்புமே ஏற்படும் என்கிறார் முனிவர்.

அதாவது குணத்துடனான உபயோகத்தை ஏற்று இயம, நியத்தில் ஈடுபடுதல் வேண்டும். அதுவே தவ வாழ்விற்கான இலக்கணம். அவ்வாறில்லாது குற்றமுடனான பயன்பாட்டை கொள்ளும் போது இவ்வுலக துன்பத்தையும், மறுமையில் கீழான கதியுமே கிடைக்கும் என்று எச்சரிக்கை செய்கிறார்.

-------------------

உங்கள் உடல் , மனம் , ஆன்மா இந்த மூன்றும் சக்தியே ஆகும் ..

உடல் பருப் பொருள் அதை அவரும் பார்க்கலாம் மற்றவர்களும் பார்க்கலாம். மனம் மிகவும் துல்லியமானது கண்களை மூடினால் சிந்தனைகளை மட்டுமே பார்க்க முடியும்.

ஆனால் சிந்தனைகளைப் பார்க்கும் அற்புதக் கலையை தெரிந்து வைத்துள்ளவர்களால் மட்டும் அதையும் பார்க்க முடியும். ஆனால் சாதாரணமாக அவை பிறருக்கு தெரிவதில்லை.

மூன்றாவதாக ஆன்மா இது மெய்யிருப்புணர்வாக நமக்குள் இருக்கிறது. இதையும் எவரும் உணர முடிவதில்லை. இது தன் நிலையிலேயே உள்ளே உள்ளது ..

உடல் மனம் மெய்யிருப்புணர்வு இந்த மூன்றையும்; ஒரே தாள லயத்துடன் ஒன்றிணைந்து இயங்க வைப்பதுதான் ஆன்மீக முயற்சி. இந்த மூன்று சக்திகளும் ஒத்திசைவுடன் இயங்கும் போது, உடல் நலம் மிகுந்ததாய் முழுமையுடன் இருக்கிறது.

உடல் ஒரு திசையை நோக்கிச் செல்ல ஆசைப்படும், உடல் சொல்வதை மனம் கேட்காது வேறு திசையில் செல்ல நினைக்கும். உடலும் மனமும், உயிரும் ஒத்திசைவோடு இயங்க வேண்டும். இவை மூன்றும் கூடி செயல்படுவதில் ஒரு முடிவிலா ஆனந்தம் கிடைக்க உள்ளது. அதுவே கடவுள்நிலை எனப்படுகிறது.





न कोSप्यन्योSन्येन व्रजति समवायं
 गुणवता गुणी केनापि त्वं समुपगतवान् रूपिभिरमा । 
 न ते रूपं ते यानुपव्रजसि तेषां गतमतिः 
ततशछेद्यो भेद्यो भवसि बहुदुःखो भववने ।।200।।

ந கோ அப்யந்தோ அந்யேந வ்ரஜதி ஸமவாயம் குணவதா, 

குணீ கேனாபி த்வம் ஸமுபகதவான் ரூபிபிராமா | 
நா தே ரூபம் தே யானு பவ்ர ஜஸி தேஷாம் கதமதி: 
ததச் சேத்யோ பேத்யோ பவஸி பஹுது: கே பவவனே || 200 ||

The possessor-of-attribute (gunī, dravya) does not become one with another possessor-of-attribute. But (incorporeal) you, due to karma, are getting one with this corporeal body. Certainly, the body, etc., that you consider one with you, are not your nature. Due to this infatuation for the body you are facing excessive miseries, being cut and pierced, in this forest of worldly existence.
எந்த ஒரு மூலப்பொருளும் (குண, திரவ்யா) மற்றொரு மற்றொன்றுடன் (திரவியம்) ஒன்று சேர்வதில்லை. ஆனால் கர்மா காரணமாக அதற்குரிய உடலைப் பெறுகிறாய். நிச்சயமாக, உங்களுடையதாக நீங்கள் கருதும் உடல் போன்றவை உங்கள் இயல்பு அல்ல. உடலுக்கான இந்த மோகத்தின் காரணமாக உலகெனும் இந்த காட்டில் மிகுந்த துயரங்களை எதிர்கொள்கிறீர்கள்.

நான் என்பது உடலா, மனமா என்ற நிலைப்பாட்டிலிருந்து விலகி ஆன்மா என்ற நற்காட்சிக்கு செல்லுமாறு வற்புறுத்துவதே இந்த பாடலின் நோக்கமாக ஆச்சார்யர் தெளிவுருத்துகிறார்.

உலகில் ஒருபொருள் அழிகின்றதன்மையில் உள்ளது என்றால் அவை வெவ்வேறு குணங்களையுடையதின் கூட்டுப்பொருள் என்பதை நாம் அறிவியல் மூலமாக அறிந்து கொண்டுள்ளோம். அழிந்த பின்னர் மூலத்தை அடைந்து விடும். மேலும் அவ்வாறான மாற்றத்திற்கு உட்பட்டுக் கொண்டிருப்பதுதான் இவ்வுலகம் என்றுதான் அறிவியல் கூறுகிறது. அதையே தான் ஆன்மீகமும் மெய்பொருள்கள் ஆறும் என்றும் குணத்தில் மாறுபடாமல் இருப்பவை; தோற்றம், மறைதல் மற்றும் நிலையாய் இருத்தல் என்பதாக மெய்ஞ்ஞானி பகவான் மஹாவீரர் ஆய்ந்தறிந்து வழங்கியுள்ளதாக தெரிவிக்கிறது. அவை மட்டுமே எத்தனை முறை அழிக்க முயன்றாலும் நிலைத்த பொருட்களாக தன் குணங்களை இழக்காமல் இருக்கக்கூடியவை.

எந்த ஒரு கூட்டுப்பொருளும் ஒருநாள் வடிவத்தை மாற்றுவதும், அதாவது இப்போதைய ரூபம்அழிந்து, புதிய ரூபமாக தோன்றுவதுமாகவே உள்ளன. ஒருநாள் முற்றிலுமாக பிரியும்வேளையில் அழிந்து மூலவடிவான தன்னிலையை அடைந்து விடுகின்றன. அதனால் எந்த ஒரு தோற்றமும், படைப்பும் இவ்வுலகில் நிலைத்து நிற்பதில்லை. அவை அனைத்தும் பல புத்கலப்பொருட்களின் சேர்க்கையினால் உருவாக்கப்பட்ட தோற்றமே. அவை மாறிக் கொண்டிருக்கும் என்பதே வரைமுறையாகும்.

அவ்வழியில் உடலும் தன் தோற்றத்தை மாற்றியபடியே அவ்வப்போது அழிவதும், புதிய தோற்றத்தை பெறுவதுமாகவே உள்ளது. அதனால் அது பல புத்கலப்பொருட்களின் கூட்டுப்பொருளே என்பதை நாம் உணரவேண்டும். அதனை பேணிக்காப்பதும் அதன் ஆசையைப்பூர்த்தி செய்தலும், அதற்கு உதவுபவர்களை தனது சொந்தமாக நினைத்து மகிழ்வது, பிரிந்தால் துன்பத்தில் வீழ்வதும் வீணான செயல். அனைத்தும் மாயையே; அப்பொருளும், அவ்வுறவுகளும் இதேபோல் ஒருநாள் மறையத்தான் போகிறது. அதே போல் நம்உடலும் ஒருநாள் நம்மைவிட்டு விலகத்தான் போகிறது என்பதையே முனிவர் தெளிவாக நமக்கு இந்தப்பாடலில் வழங்குகிறார்.

உயிர்தான் நிலையானது. அதனால் இயக்கப்படும் உடல், மனம் மற்றும் அதனால் சேர்ந்த அத்தனை பொருட்களும், சொந்தங்களும் நம்மை விட்டு விலகிவிடுபவையே என்ற தெளிவை அடைந்து ஆசை, மோகம், துவேஷம், வெறுப்பு, விருப்பு போன்ற பாவனைகளை வளர்க்காது எச்சூழலையும் சமநிலையோடு காண்பதே மேலான ஒழுக்கமாகும். அதுவே பேரானந்த நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் என்பதை உணர்தல் வாழ்வில் மேன்மையளிக்கும்.










No comments:

Post a Comment