ஜிந
ஸ்தோத்திரம்
(மூலமும் - தமிழ் உரையும்)
ஸ்ரீ ஜிநாய நம:
மங்களாஷ்டகம்
மிக்க நன்றி...
1. ஸ்ரீமன்னம்ர-ஸுராஸுரேந்த்ர- முகுட ப்ரத்யோத-ரத்னப்ரபா-
பாஸ்வத் பாத-நகேந்தவ: ப்ரவசனாம்போதீந்தவ:
ஸ்தாயின: |
யே ஸர்வே ஜிந-ஸித்த-ஸுர்யனுகதாஸ்தே பாடகா: ஸாதவ:
ஸ்துத்யா யோகிஜனைஸ்ச பஞ்ச
குரவ: குரவந்து மே மங்களம் ||
+++++++++++++++++++
ஸ்ரீமத் : அந்தரங்க அணிமாதி
ரித்திகளும், ஆணையிடல் முதலான பகிரங்க வைபவங்களுமுடைய,
நம்ர : வணங்குகின்ற
ஸுர : சுரர்
அஸுர : அசுரர்
இந்த்ர : இந்திரர்களானவர்களின்
முகுட : முகுடத்தின்
ப்ரத்யோத : ஒளிறுகின்ற
ரத்ன : அருமணிகளின்
ப்ரபா : ஒளியினால்
பாஸ்வத் : விளங்குகின்ற
பாத நக : திருவடிகளின்
நகங்களாகிய
இந்தவ : சந்திரன்களை உடைய
ப்ரவசன : ஆகம
அம்போதி : கடலைப் பொங்கச்
செய்கின்ற
இந்தவ : சந்திரன்களாக
விளங்குகின்ற
ச : மேலும்
ஸ்தாயின : எப்போதும் தன்னுடைய
ஸ்வரூபத்தில் இருக்கின்ற
யோகி ஜைன : யோகியர்களால்
ஸ்துத்யா : துதிக்கப்படுகின்ற
ஜிந : நான்கு வினைகளை
வென்ற ஜிநபகவான்
ஸித்த : எட்டு வினைகளையும்
வென்ற சித்த பகவான்
ஸுரி : ஆசாரியர்களின்
அனுகதா : கட்டளைப்படி
முக்திப் பாதையில் செல்லுகின்ற
பாடகா : ஸாதவ : :- உபாத்தியாயர்களும், சாதுக்களும்
பஞ்ச குரவ : ஐந்து பரமேட்டிகளும் ஆகிய
தே : அவர்கள்
ஸர்வே : எல்லோரும்
மே : எனக்கு
மங்களம் : நன்மையை
குர்வந்து : செய்வார்களாக.
-----------------------------------------------
அரஹந்தர், ஸித்தர்,
ஆசாரியர், உபாத்தியாயர், ஸாதுக்கள் ஆகிய பஞ்ச பரமேட்டிகள் எனக்கு மங்களத்தைச் செய்வார்களாக.
--------------------------------------------------
1. தே - எனப் பாடம் கொள்ளும்
போது உங்களுக்கு எனப் பொருள் கொள்க.
2. அணிமா, மஹிமா, லகிமா,
பிராப்தி, பிரகாம்ய, ஈசித்வம், வசித்வம், காமரூபி - இவை எட்டு ரித்திகள்.
3. சுரர் - கல்பவாசி முதலான
தேவர்கள்
4. அசுரர் - வியந்தர முதலான
தேவர்கள்
****************************************************
2. ஸம்யக் தர்சன-போத-வ்ருத்த
மமலம் ரத்ன த்ரயம் பாவனம்
முக்திஸ்ரீ நகராதிநாத
ஜிநபத்யுக்தோS பவர்க ப்ரத: |
தர்ம: ஸூக்திஸுதா ச சைத்ய மகிலம் சைத்யாலயம் ஸ்ரயாலயம்
ப்ரோக்தம் ச த்ரிவிதம்
சதுர்வித மமி குர்வந்து மே மங்களம் ||
++++++++++++++++++++++++
முக்திஸ்ரீ : முக்தியாகிய
லக்ஷிமியினுடைய
நகராதி நாத: நகருக்குத்
தலைவரான
ஜிநபதி : ஜிந பகவானால்
உக்த : அருளப்பட்ட
அபவர்க ப்ரத : மோக்ஷத்தைக்
கொடுக்கின்ற
அமலம் : களங்கமில்லாத
பாவனம் : பவித்திரமான
ஸம்யக் தர்ஸன போத வ்ருத்தம்
: நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் ஆன
ரத்ன த்ரயம் : மும்மணி
என
த்ரிவிதம்ப்ரோக்தம் :
மூன்று விதமாகச் சொல்லப்பட்டதும்
தர்ம : ஜிந தருமம்
ஸூக்தி ஸுதா : நல்ல நல்ல
வாக்கியங்களையுடைய ஜிந ஆகமும்
சைத்யம் : அருகர் பிரதிமையும்
ச : மேலும்
ஸ்ரயாலயம் : அஷ்ட வித
ப்ராதிஹார்யத்துடன் விளங்கும்
அகிலம் : எல்லா
சைத்யாலயம் : ஜிந சைத்யாலயங்களும்
என
அமி சதுர்விதம் ப்ரோக்தம்
: இப்படி நான்காக சொல்லப்பட்டவையும்
மே : எனக்கு
மங்களம் : நன்மையை
குர்வந்து : செய்வனவாக.
-----------------------------------------------
மோக்ஷ நெறியாக
ஜிந பகவானால் அருளப் பெற்ற மும்மணியும், ஜிந்தர்மம், ஜிந சுருதம், ஜிந சைத்யாலயம் எனும்
நான்கும் எனக்கு மங்களத்தைச் செய்வனவாக.
----------------------------------------------------
5. S- இதற்கு உச்சரிப்பு
இல்லை. அகரம் முன் எழுத்தோடு சேர்ந்துள்ளது என்பதற்கு அடையாளக் குறியீடு.
6. அசோகம், முக்குடை,
சிம்மாசனம், மண்டிலம், துந்துபி, மலர் மாரி, சாமரை, சமவசரணம் அல்லது திவ்யதொனி - இவை
எட்டும் பிராதிஹார்யம் எனப்படும்.
******************************************************
3. நாபேயாதி-ஜிநாதிபாஸ் த்ரிபுவனக்யாதாஸ் சதுர் விம்ஸதி:
ஸ்ரீமந்தோ பரதேஸ்வர ப்ரப்ருதயோ
யே சக்ரிணோ த்வாதஸ|
யே விஷ்ணு-ப்ரதிவிஷ்ணு-லாங்கலதரா: ஸப்தோத்தரா விம்ஸதி:
த்ரைகால்யே ப்ரதி தாஸ்த்ரிஷஷ்டி
புருஷா: குர்வந்து மே மங்களம்||
+++++++++++++++++++++++++++++++++
த்ரிபுவன : மூவுலகிலும்
க்யாதா : புகழ் பெற்ற
நாபேயாதி : விருஷபர் முதலான
ஜிநாதிபா : :- தீர்த்தங்கரர்கள்
சதுர் விம்ஸதி : இருபத்து
நால்வரும்
ஸ்ரீமந்தோ : பலவகையான
வைபவங்களுடன் கூடிய
பரதேஸ்வர
ப்ரப்ருதயோ : பரத சக்கரவர்த்தி
முதலான
த்வாதஸ : பன்னிரண்டு
சக்ரிணோ : சக்கரவர்த்திகளும்
(8)
விஷ்ணு : ஒன்பது வாசு
தேவர்களும்(9)
ப்ரதி விஷ்ணு : ஒன்பது
பிரதி வாசுதேவர்களும்(10)
லாங்கலதரா : ஒன்பது பல
பத்திரர்களும் என (11)
யே ஸப் தோத்தரா : இவ்
இருபத்தெழுவரும்
த்ரைகால்யே : மூன்று காலங்களிலும்
ப்ரதிதா : சிறப்புடைய
அல்லது பூஜிக்கத் தக்க
த்ரிஷஷ்டி புருஷா : அறுபத்து
மூன்று மகான்களும்
மே : எனக்கு
மங்களம் : நன்மையை
குர்வந்து : செய்வார்களாக.
-----------------------------------------------
விருஷபர் முதலான
இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களும் பரதர் முதலான பன்னிரண்டு சக்கரவர்த்திகளும், வாசுதேவர்,
பிரதி வாசுதேவர், பலபத்திரர் இருபத்தேழு பேரும் ஆகிய அறுபத்து மூன்று மகா புருடர்களும்
எனக்கு மங்களத்தைச் செய்வார்களாக.
----------------------------------------------------
விருஷபர், அஜிதர், சம்பவநாதர், அபிநந்தனர், சுமதி நாதர், பத்மபிரபர்,
சுபார்ஸ்வர், சந்திர பிரபர், புஷ்பதந்தர், சீதளர், சிரேயாம்சர், வாசுபூஜ்யர், விமலநாதர்,
அனந்த நாதர், தர்ம நாதர், சாந்தி நாதர், குந்து நாதர், அரநாதர், மல்லி நாதர், முனிசு
விரதரர், நமிநாதர், பார்சுவநாதர், வர்த்தமானர்.
-----------------------------------------------
(8) பரதர், சகரர்,
மகவான், சனத் குமாரர், சாந்தி, குந்து, அர, சுபௌமர், பத்மர், ஹரிசேனர், ஜயசேனர், பிரம
தத்தர். - சக்ரவர்த்திகள்
(9) திரிப்ருஷ்டர்,
துவிபருஷ்டர், ஸ்வயம்பு, புருஷோத்துமர், புருஷஸிம்மர், புருஷவரர், புண்டரீகர், தத்தர்,
கிருஷ்ணர். - வாசுதேவர்கள்
(10) அஸ்வக்ரீவர்,
தாராசுரர், மேரகர், நிசும்பர், மதுகைடபர், புஜபலி, பிரஹரனர், ராவணர், ஜராசந்தர். -
பிரதி வாசுதேவர்கள்
(11) விஜயர், அசலர்,
சுதர்மர், சுப்ரபர், சுதர்சனர், நந்தி சேனர்,
நந்திமித்திரர், ராமர், பத்மர். - பலபத்திரர்கள்
******************************************************************
4. தேவ்யோSஷ்டௌ ச ஜயாதிகா த்விகுணிதா வித்யாதிகா தேவதா :
ஸ்ரீதீர்த்தங்கர மாத்ருகாஸ்க
ஜனகா யக்ஷாஸ் ச யக்ஷயஸ்ததா|
த்வாத்ரிம்ஸத்த்ரிதஸாதிபாஸ்திதி ஸுரா திக்கன்யகாஸ் சாஷ்டதா
திக்பாலா தஸ சேத்யமீ ஸுரகணா:
குர்வந்து மே மங்களம் ||
++++++++++++++++++++
ஜயாதிகா : ஜயா தேவி முதலான
அஷ்டௌ : எட்டு
தேவ்யா: :- தேவிகளும்(12)
வித்யாதிகா : வித்யா தேவி
முதலான
த்விகுணதா : இரண்டு மடங்கான
(பதினாறான)
தேவதா : தேவியர்களும்
(13)
ச : மேலும்
ஸ்ரீதீர்த்தங்கர : ஸ்ரீதீர்த்தங்கரர்
தம்
மாத்ருகா : தாயாரும்
(14)
ஜனகா: :- தந்தையாரும்(15)
ச : மேலும்
யக்ஷா : யக்ஷ தேவர்களும்
(16)
ததா : மற்றும்
யக்ஷய : யக்ஷி தேவியரும் (17)
த்வா த்ரிம்ஸத்- : முப்பத்திரண்டு
த்ரிதஸாதிபா: :- இந்திரர்களும்(18)
திதிஸுரா: :- திதி தேவர்களும் (19)
ச : மேலும்
அஷ்டதா : எட்டு விதமான
திக்கன்யகா: :- திக்கு கன்னியர்களும் (20)
ச : மேலும்
தஸ : பத்து விதமான
திக் பாலா : திக்கு பாலர்களும்
(21)
இதி அமீ : இப்படி எல்லா
ஸுரகணா : தேவர் கூட்டங்களும்
மே : எனக்கு
மங்களம் : நன்மையை
குர்வந்து : செய்வார்களாக.
-----------------------------------------------
எட்டு தேவியரும்
பதினாறு வித்யா தேவியரும் தீர்த்தங்கரர் மாதா பிதாக்களும் யக்ஷ யக்ஷிகளும் இந்திரரும்,
திதி தேவர்களும், திக்கு கன்னியரும் , திக்கு பாலகரும் எனக்கு மங்களத்தைச் செய்வார்களாக.
-----------------------------------------------------
(12) ஜயா, விஜயா,
அஜிதா, அபராஜித, ஜம்பா, மோஹா, ஸ்தம்பா, ஸ்தம்பினி. - எட்டு தேவியர்கள்
(13) ரோஹிணி, பிரஜ்ஞப்தி,
வஜ்ரஸ்ருங்கலா, வஜ்ராங்குசர, ஜாம்பூனதா, புருஷதத்தா, காளி, மகா காளி, கௌரி, காந்தாரி,
ஜ்வாலாமாலினி, மானஸி, வைரோடி, அச்யுதா, மானஸி, மகா மானஸி - இப் பதினாறு தேவியரும் வித்யாதேவி
என்று "பிரதிஷ்டாசாரோத்தாரம்" எனும்
நூல் குறிப்பிடுகிறது.
(14) மருதேவி, விஜயா,
ஸுஷேணா, ஸித்தார்த்தா, மங்களா, சுசீமா, பிருத்வீ, லக்ஷ்மணை, ராமாதேவி, சுனந்தா, விஜயா,
ஸ்யாமா, ஸரவயஸ, லக்ஷ்மிமதி, ஸுவ்ரத, வீராதேவி, க்ஷுமதி, ஸுமித்ரா, பிரபாவதி, பத்மாவதி,
வர்மிலா, சிவதேவி, பிராம்ஹிலா, பிரிய காருணி. – ஜின மாதாக்கள்
(15) நாபிராஜர்,
ஜிதசத்ரு, விஜிதாரி, சம்பரன், மேகப்ரபன், தரணிராஜன், சுபிரதிஷ்டன், மகாஸேணன், சுக்ரீவன்,
திரடரதன், விஷ்ணு, நரேந்திரன், வசுபூஜ்ய நரேந்திரன், கிருதவர்ம நரேந்திரன், ஸிம்மசேனன்,
பாநு ஷேணபூபன், விஸ்வஸேணன், சூரஸேணன், சுதர்சனன், கும்பராஜன், சுமுத்ரக்ஷத்ர புத்ரன்,
விஜயபூபுஜன், சமுத்திர விஜயன், விஸ்வபதி, சித்தார்த்தன். – ஜின பிதாக்கள்
(16) கோமுக, மஹாயக்ஷ,
திரிமுகர், யக்ஷேஸ்வர, தும்புரு, குசும, வரநந்தி, விஜய,அஹித, பிரம்ம, யக்ஷஸ்வர, குமார,
சண்முக, பாதள, கின்னர, கருட, கந்தர்வ, மஹேந்திர, குபேர, வருண, பிருகுடி, ஸர்வாண்ஹ,
தரணேந்திர, மாதங்க என 24 யக்ஷர்கள்.
(17) சக்ரேஸ்வரி,
ரோஹினி, பிரஜ்ஞப்தி, வஜ்ரஸ்ரங்கல, புருஷதந்தா, மனோவேகி, காளி, ஜுவாலாமாலினி, மகா காளி,
மானவி, கௌரி, காந்தாரி, வைரோடி, அனந்தமதி, மானஸி, மகா மானஸி, ஜயா, விஜயா, அபராஜிதா,
பஹுரூபிணி, சாமுண்டி, கூஷ்மாண்டி, பத்மாவதி, ஸித்தாயிணி என 24 யக்ஷிகள்.
(18) சௌதர்மன், ஈசானன், சனத்குமாரர், மாகேந்திரன், பிரம்ம,
லாந்தவ, மகா சுக்ர, ஸகஸ்ரார, ஆனத, பிராணத, ஆரண, அச்யுத - இவர்கள் கல்பவாசி இந்திரர்கள்.
சமர, வைரோசனர், பூதானந்த, தரணானந்த, வேணு, வேணுதாரி,
பூர்ண, வசிஷ்ட, ஜலபிரப, ஜலகாந்த, கோஷ, மகாகோஷ, ஹரிசேண, ஹரிகாந்த, அமிதகதி, அமித வாஹன,
அக்னிசிதை, அக்னிவாஹன, வேலம்ப, பிரபஞ்சன - இவர்கள் பவணவாசி இந்திரர்கள்.
(19) வைஸ்வா, நர,
ராக்ஷஸ, நத்ர, பன்னக, அசுர, சுகுமார, பிதர, விஸ்வமாலினி, சமர, வைரோசன, மஹாவித்ய, மார,
விஸ்வேஸ்வர, பிண்டாசினி - 15 திதி தேவதைகள்.
(20) சுமேதா, மேகமாலினி,
தோயந்தரா, விசித்ரா, மணி மாலனி, புஷ்பமாலை, மேகங்கரி. இத் திக்குமாரிகள் ஜிநமாதாவுக்கு
சேவை செய்கின்றவர்கள்.
(21) குமுத, அஞ்சன,
வாமன, புஷ்பதந்த, நாக, குபேர, ஹரிதபிரப, ரத்னபிரப, சிருஷ்ணபிரப, தேவ. திக்கு பாலகர்கள்.
******************************************************************
5. யே ஸர்வௌஷத ருத்தய: ஸுதபஸோ வ்ருத்திங்கதா: பஞ்ச யே
யே சாஷ்டாங்க மஹா நிமித்த
குஸலா யேSஷ்டாவிதாஸ் சாரணா:|
பஞ்சஜ்ஞான தராஸ்த்ரயோSபி பலினோ யே புத்திருத்தீஸ்வரா:
ஸப்தைதே ஸகலார்சிதா கணப்ருத:
குர்வந்து மே மங்களம் ||.
+++++++++++++++++++++++++
யே : எந்த
ஸுதபஸோ : நல்ல தவத்தினால்
வ்ருத்திங்கதா: :- மேன்மை அடைந்து
பஞ்ச ஸர்வௌஷத : ஐந்து
ஸர்வௌஷதி (22)
ருத்தய : :- ரித்திகளைப் பெற்ற அவர்களும்
ச : மேலும்
யே : எந்த
அஷ்டாங்க : எட்டு வகையான
மஹா நிமித்த : சிறந்த
நிமித்த ஞானத்தில்(23)
குஸலா: :- சிறப்புடையவர்களோ அவர்களும்
ச : மேலும்
அஷ்ட விதா: :- எட்டு வகையான
சாரணா: :- சாரண ரித்திகளைப் பெற்றவரும்(24)
பஞ்ச : ஐந்து
ஜ்ஞானதரா : ஞானங்களைப்
பெற்றவர்களும்
அபி : மற்றும் (25
த்ரய : :- மனம் வசனம் காயம் மூன்றிலும்,
பலிந: : -பலத்தைப் பெற்றவர்களும்
ஸப்த- புத்தி : புத்தி
முதலான ஏழுவகை (26)
ருத்தீஸ்வரா: :- ரித்திகளைப் பெற்றவரும்
ஸகலார்சிதா: :- எல்லோராலும் பூஜிக்கப்பட்ட
கண ப்ருத: :- கணதரர்களும்
மே : எனக்கு
மங்களம் : நன்மையை
குர்வந்து : செய்வார்களாக.
-----------------------------------------------
ஔஷதரித்தி பெற்றவர்களும்,
நிமத்த ஞானிகளும், சாரண ரித்தியுடையவர்களும், பஞ்ச ஞானம் உடையவர்களும், மூன்று பலம்
உடையவர்களும், புத்தி முதலான ரித்தியுடையவர்களும், கணதர தேவர்களும் எனக்கு நன்மை செய்வார்களாக.
----------------------------------------------------
(22) ஆமர்ஷௌதம், க்ஷ்வேளௌஷதி,
ஜல்லௌஷதி, மல்லௌஷதி, விட்டௌஷதி.
(23) அந்தரிஷ, பௌம, அங்க,
ஸ்வர, வியஞ்சன, லக்ஷண, சின்னம், ஸ்வப்பனம்(கனவு).
(24) ஜல, ஜங்கா, தந்து,
ஃபல, புஷ்ப, பீஜ, ஆகாச, ஸ்ரேணி - சாரண ரித்திகள்.
(25) மதி, சுருதி, அவதி,
மனப்பர்யய, கேவல ஞானங்கள்.
(26) புத்தி, விக்ரியா,
தப, பல, ஔஷத, ரஸ, க்ஷேத்ர ரித்திகள்.
************************************************************
6. கைலாஸே வ்ருஷபஸ்ய நிர்வ்ருதிமஹீ வீரஸ்ய பாவாபுரே
சம்பாயாம் வஸுபூஜ்யஸஜ்
ஜிநபதே: ஸம்மேதஸைலேSர்ஹதாம்|
ஸேஷாணாமபி சோர்ஜயந்த ஸிகரே நேமிஸ் வரஸ்யார்ஹதோ
நிர்வாணா வனய: ப்ரஸித்தி
விபவா: குர்வந்து மே மங்களம் ||.
+++++++++++++++++++++++++++++++++
வ்ருஷபஸ்ய :
விருஷபருடைய
நிர்வ்ருதி மஹீ : முக்தி
பெற்ற பூமியுள்ள
கைலாஸே : கைலாயமும்
வீரஸ்ய : மகாவீரருடைய
பாவாபுரி : பாவாபுரியும்
வஸுபூஜ்ய ஸஜ்ஜிநபதே :
வசுபூஜ்ய பகவானுடைய
சம்பாயாம் : சம்பாபுரியும்
அர்ஹதா: :- தீர்த்தங்கரர்
நேமீஸ்வரஸ்ய : நேமி நாதருடைய
ஊர்ஜயந்த ஸிகரே : ஊர்ஜயந்த
சிகரமும்
ச : மேலும்
ஸேஷாணாம் : எஞ்சிய எல்லா
அர்ஹதாம் : தீர்த்தங்கரர்களுடைய
ஸம்மேத ஸைலே : ஸம்மேத
கிரியும்
பிரஸித்தி விபவா: :- சிறப்படைந்த
நிர்வாண அவனய: :- இவ்வெல்லா முக்தி பூமிகளும்
மே : எனக்கு
மங்களம் : நன்மையை
குர்வந்து : செய்வனவாக.
---------------------------------------------------------------------------
கைலாயம், பாவாபுரி,
சம்பாபுரி, ஊர்ஜயந்தகிரி, ஸம்மேத சிகரம் ஆகிய இந்த சிறப்புடைய முக்தி ஸ்தலங்கள் எனக்கு
மங்களத்தைச் செய்வனவாக.
---------------------------------------------------------------------------
7. ஜ்யோதிர் வ்யந்தர - பாவனாமரக்ருஹே மேரௌ குலாத்ரௌ ததா
ஜம்பு - சால்மலி - சைத்ய
சாகிஷு ததா வக்ஷாரா- ரூப்யாத்ரிஷு |
இஷ்வாகாரகிரௌ ச குண்டலநகே த்வீபே ச நந்தீச்வரே
சைலே யே மனுஜோத்தரே
ஜிநக்ருஹா: குர்வந்து மே மங்களம்.||
+++++++++++++++++++++++++++++
ஜ்யோதி : :- ஜ்யோதிஷ்கரும்
வ்யந்தர : வியந்தரரும்
அமர க்ரஹே : தேவர்கள்
வசிக்கும் இடத்திலும்
மேரௌ : மேருமலையிலும்
ததா : மேலும்
குலாத்ரௌ : குலாசல மலையிலும்
ஜம்பு : ஜம்பூ விருட்சத்திலும்
சால்மலி : சால்மலி விருட்சத்திலும்
சைத்ய சாகிஷு : சைத்ய
விருட்சத்திலும்
ததா : மேலும்
வக்ஷார : வக்ஷார கிரியிலும்
ரூப்யா த்ரிஷு : ருசக
கிரியிலும்
இஷ்வாகார கிரௌ : இஷ்வாகார
மலையிலும்
ச : மேலும்
குண்டல நகே : குண்டலகிரியிலும்
நந்தீச்வரே த்வீபே : நந்தீஸ்வர
தீவிலும்
ச : மேலும்
மனுஜோத்தரே ஸைலே : மனுஜோத்தர
மலையிலும்
யே : எந்த
ஜிநக்ருஹா : :- ஜிநாலயங்கள் உள்ளனவோ அவை
மே : எனக்கு
மங்களம் : நன்மையை
குர்வந்து : செய்வனவாக.
-----------------------------------------------
தேவர்கள் வாழிடத்திலும்,
குலாசலத்திலும், ஜம்பு விருட்சம், ஸால்மலி விருட்சம், சைத்ய விருட்சம், வக்ஷாரகிரி,
ருசககிரி, இஷ்வாகாரகிரி, குண்டலகிரி, நந்தீஸ்வர தீவு, மானுஷோத்தர மலை ஆகிய இவற்றில்
உள்ள ஜிநசைத்யாலயங்கள் எனக்கு மங்களத்தைச்
செய்வன ஆகுக.
-----------------------------------------------
8. யோ கர்பாவதரோத்ஸவோ பகவதாம் ஜன்மாபிஷேகோ த்ஸவோ
யோ ஜாத: பரிநிஷ்க்ரமேண விபவோ ய: கேவல ஞான பாக்|
ய: கைவல்யபுர ப்ரவேஸமஹிமா ஸம் பாவித: ஸ்வர்கிபி:
கல்யாணானி ச தானி பஞ்ச
ஸததம் குர்வந்து மே மங்களம்||.
+++++++++++++++++++++++++++++
ஸ்வர்கிபி: :தேவர்களால்
பகவதாம் : தீர்த்தங்கரர்களுக்கு
யோ : எந்த
கர்பாவரோத் ஸவ : கர்ப
கல்யாண உற்சவமும்
ஜன்மாபிஷேக : ஜன்மாபிஷேக
கல்யாண
கோத்ஸவ: :- உத்ஸவமும்
ய : :-எந்த
பரிநிஷ்க்ரமேண : தீஷா
கல்யாண உத்ஸவமும்
ஜாத: :- கொண்டாடப் பட்டனவோ
ய: :- எந்த
கேவல ஞான பாக் : கேவல
ஞான கல்யாண
விபவ: :- வைபவத்துடன்
ய: :- எந்த
கைவல்ய புர
ப்ரவேச மஹிமா : முக்தி நகர பிரவேச மகிமையானது (பரிநிர்வாண உத்ஸவமானது)
ஸம்பாவிதா: :- கொண்டாடப் பட்டனவோ
தானி : அந்த
பஞ்ச கல்யாணனி : ஐந்து
கல்யாணங்களும்
சததம் : எப்போதும்
மே : எனக்கு
மங்களம் : நன்மையை
குர்வந்து : செய்வனவாக.
-----------------------------------------------
தேவர்களால்
தீர்த்தங்கரர்களுக்குச் செய்யப்படும் பஞ்ச கல்யாணங்களும் எனக்கு மங்களத்தைச் செய்வனவாக.
-----------------------------------------------
9. இத்தம் ஸ்ரீஜிநமங்களாஷ்டகமிதம சௌபாக்ய ஸம்பத்ப்ரதம்
கல்யாணேஷு மகோத்ஸவேஷு
ஸுதியஸ் தீர்த்ங்கராணாமுஷு: |
யே ஸ்ருண்வந்தி படந்தி தைஸ்ச ஸுஜனைர் தர்மார்த்தகாமான் விதா
லக்ஷ்மீராஸ்ரயதே வ்யபாயரஹிதா
நிர்வாண லக்ஷ்மீரபி ||
+++++++++++++++++++++++++++++++++++++
இத்தம் : இப்படி
தீர்த்தங்கராணாம் : தீர்த்தங்கரர்களின்
கல்யாணேஷு : கல்யாணங்களையுடைய
மஹோத்ஸவேஷு : பெருவிழாவிலும்
உஷ : விடியற்காலைகளிலும்
இதம் : இந்த
ஸௌபாக்யம் : நல்ல பாக்யத்தையும்
ஸம்பத் ப்ரதம் : செல்வத்தையும்
கொடுக்கக் கூடிய
ஸ்ரீ ஜிந மங்களாஷ்டகம்
: லக்ஷ்மியுடன் விளங்கும் ஜிநபகவானின் எட்டு மங்கலப் பாடல்களையும்
யே ஸுதிய: :- எந்த நல்ல
புத்திசாலிகள்
படந்தி : படிக்கிறார்களோ
ச : மேலும்
ஸ்ருண்வந்தி : கேட்கிறார்களோ
தை:ஸுஜனை: :- அந்த நல்லவர்களால்
தர்மார்த்த காமன்
விதா : அறம்,
பொருள் , இன்ப புருஷார்த்தங்களுடன் கூடிய
லக்ஷ்மீ : :- லக்ஷ்மியும்
அபி : மற்றும்
வ்யபாயரஹித : துன்பங்களிலிருந்து
விடுபட்ட
நிர்வாண லக்ஷ்மீ : முக்தி
லக்ஷ்மியும்
ஆஸ்ரயதே : அடையப்படுகிறார்கள்.
-----------------------------------------------
இந்த மங்கலப் பாடல்களை
பஞ்சகல்யாண காலத்திலும், விடியற்காலையிலும் படிப்பவர்கள், கேட்பவர்கள் புருஷார்த்த
லக்ஷ்மியையும் கடைசியில் மோட்ச லக்ஷ்மியையும் அடைகிறார்கள்.
-----------------------------------------------
யேதந் மங்களமஷ்டகம் படதியோ ய: ஸ்ரூயதே ஸர்வதா
பூர்வாஹ்ணேச மஹோத் ஸவேஷு
ஸுதியா : தீர்த்தங்கரணாம் த்ரிஷீ
இத்தைதே ஜிந பாத பத்மயுகளம்
ப்ரௌடாநு ராகாந்மய:
பூயாத் ஸ்வர்க மலாபிபவ்யநிசயம்
பத்ரம் ஸுபம் மங்களம்.
-----------------------------------------------
**************************************
பகுதி-2
ஸுப்ரபாதம்
1. யத் ஸ்வர்காSவத ரோத்ஸவே யத பவஜ் ஜந்மாபிஷேகோத்ஸவே
யத் தீக்ஷா க்ரஹணோத்ஸவே யதகில ஜ்ஞான ப்ரகாஸோத்ஸவே |
யத் நிர்வாண கமோத்ஸவே ஜிநபதே: பூஜாத்புதம் தத்பவை:
ஸங்கீத ஸ்துதி மங்களை: ப்ரஸரதாம் மே ஸுப்ரபாதோத்ஸவ: ||
+++++++++++++++++++++++++++++++
ஜிநபதே : ஜிந பகவானுடைய
யத் : எந்த
ஸ்வர்க : தேவ உலகிலிருந்து
அவதர : அவதரிக்கும்
உத்ஸவே : விழாவில் (ஸ்வர்க்காவதரண
கல்யாணத்தில்)
யத் : எந்த
ஜந்ம : பிறப்பு
அபிஷேக : நீராட்டு
உத்ஸவே : விழாவில் (ஜன்மாபிஷேகத்தில்)
யத் : எந்த
தீக்ஷா : துறவு
க்ரஹண : ஏற்பு
உத்ஸவே : விழாவில் (தீக்ஷா
கல்யாணத்தில்)
யத் : எந்த
அகில : முழுதுணர்
ஞான : ஞான
ப்ரகாஸ : வெளிப்பாட்டு
உத்ஸவே : விழாவில் (கேவல
ஞான கல்யாணத்தில்)
யத் : எந்த
நிர்வாண : மோக்ஷம்
கம : சென்ற
உத்ஸவே : விழாவில் (மோக்ஷ கல்யாணத்தில்)
ஸங்கீத : இசையுடன் கூடிய
ஸ்துதி : துதியினாலும்
மங்களை : மங்கலப் பொருள்களாலும்
பூஜா : பூஜை
அத்புதம் : அற்புதம் (அதிசயம்)
அபவத் : நிகழ்ந்ததோ
தத்பவை : அந்த எல்லா
உத்ஸவ : விழாக்களும்
(ஆனந்தங்களும்) கூடியதாக
சுப்ரபா : இந்த நல்ல விடியற்காலையானது
மே : எனக்கு
ப்ரஸரதாம் : அமைவதாக
!
-----------------------------------------------
ஜிந பகவானுடைய பஞ்ச
கல்யாண விழாக்களில் நடைபெறும் அற்புத சிறப்புக்களால் உண்டாகும் மங்கல ஆனந்தம் கூடியதாக
எனக்கு விடியற்காலை அமையவேண்டும் என்பது கருத்து.
-----------------------------------------------
2. ஸ்ரீமந் நதாமர கிரீட மணிப்ரபாபி ராலீடபாதயுக துர்தர கர்மதூர
|
ஸ்ரீ நாபிநந்தந ஜிநாஜித சம்பவாக்ய த்வத்- த்யானதோSஸ்து ஸததம் மம
ஸுப்ரபாதம் ||
+++++++++++++++++++++++++++++++
ஸ்ரீமத் : அணிமா ரித்திகளையுடைய
நத : வணங்கப்பட்ட
அமர : தேவர்களுடைய
கிரீடமணி : முகுடங்களுடைய மணிகளின்
ப்ரபாபி : ஒளியினால்
ஆலிட : அலங்கரிக்கப்பட்ட
பாதயுக: :- இரண்டு திருவடிகளை உடையவரே !
துர்தர : கொடிய
கர்ம : வினைகளை
தூர ! : விலக்கிய வல்லரே !
ஸ்ரீ நாபி : ஸ்ரீ நாபி மன்னனுடைய
நந்தந ! : மகனாகிய ஆதிபகவரே !
ஜிநாஜித! :- அஜித ஜிநரே!
சம்பவாக்ய! : சம்பவ என்னும் பெயரால் விளங்குகின்ற சம்பவ நாதரே
!
த்வத் : உங்களுடைய
த்யானத: :- தியானத்தினால் கூடியதாக
மம : எனக்கு
சுப்ரபாதம் : இந்த நல்ல
விடியற்காலையானது
சததம் : எப்பொழுதும்
அஸ்து : அமைவதாக !
-----------------------------------------------
விடியற்காலை நேரம்
ஸ்ரீ விருஷபதேவர், ஸ்ரீ அஜிதர், ஸ்ரீ சம்பவநாதர் ஆகிய தீர்த்தங்கரர்கள் தியானத்தோடு
கூடியதாக எனக்கு அமைய வேண்டும் என்பதாம். இதுமுதல் ஒன்பதாம் சுலோகம் வரை மும் மூன்று
தீர்த்தங்கரராகக் கூறித் துதிக்கின்றார்.
-----------------------------------------------
3. சத்ரத்ரய ப்ரசல சாமர வீஜ்யமாந
தேவாபி நந்தன முன் ஸுமதே
ஜிதேந்த்ர |
பத்மப்ர பாருண மணித்யுதி பாஸுராங்க
த்வத்- த்யானதோS ஸ்து
ஸததம் மம ஸுப்ரபாதம்||
++++++++++++++++++++++++++
சத்ர த்ரய : முக்குடை உடையவரே
ப்ரசல : எப்போதும் வீசுகின்ற
சாமர வீஜ்யமான : விசிறி போன்று அசைகின்ற சாமரையுடையவரே
தேவ: : ஏ தேவரே !
அபிநந்தனமுன்னே! : அபிநந்தன முனீஸ்வரரே !
ஜிதேந்திர! : ஐம்பொறிகளை வென்ற
ஸுமதே! : ஸ்ரீ சுமதி பகவானே!
அருணமணி : சூரியனைப் போன்ற
சிகப்பு நிற மணியை ஒத்த (பத்மராக மணி போல)
த்யுதி : ஒளியுடன்
பாஸுர : விளங்குகிற
அங்க : உடலையுடைய
பத்மப்ரப! : பத்ம பிரபுவே !
த்வத் : உங்களுடைய
த்யானத: : தியானத்தினால் கூடியதாக
மம : எனக்கு
சுப்ரபாதம் : இந்த நல்ல விடியற்காலையானது
அஸ்து : அமைவதாக !
-----------------------------------------------
விடியற்காலை நேரம்
ஸ்ரீ அபிநந்தனர், ஸ்ரீ சுமதி, ஸ்ரீ பத்ம்பிரபு ஆகிய தீர்த்தங்கரர்கள் தியானத்தோடு கூடியதாக
எனக்கு அமைய வேண்டும் என்பதாம்.
-----------------------------------------------
4. அர்ஹன் ஸுபார்ச்வ கதலீதள வர்ண காத்ர
ப்ராலேய தாரகிரி மௌக்திக
வர்ண கௌர |
சந்த்ரப்ரப ஸ்படிக பாண்டுர புஷ்பதந்த
த்வத்- த்யானதோSஸ்து
ஸததம் மம ஸுப்ரபாதம் ||
++++++++++++++++++++++++++++++++++
கதலீதள : வாழை இலையின்
வர்ண : நிறம் போன்ற
காத்ர : (பச்சை நிற) உடலையுடைய
அர்ஹன் : வணங்குதற்குரிய
ஸுபார்ச்வ ! :- சுபார்சுவரே !
ப்ராலேய : பனியென்ன
தார : நட்சத்திர
மென்ன
கிரி : வெள்ளியம் பெருமலை யென்ன
மௌக்திக : முத்தென்ன
வர்ண : நிறம்போலும்
கௌர : வெண்மையான
சந்த்ரப்ரப ! :- சந்திர பிரபுவே !
ஸ்படிக : ஸ்படிகம் போல
பாண்டுர : வெண்மை நிறமுள்ள
புஷ்பதந்த ! :- புஷ்பதந்தரே !
த்வத் : உங்களுடைய
த்யானத: :- தியானத்துடன் கூடியதாக
மம : எனக்கு
சுப்ரபாதம் : இந்த நல்ல விடியற்காலையானது
சததம் : எப்போதும்
அஸ்து : அமைவதாக !
-----------------------------------------------
விடியற்காலை
நேரம் ஸ்ரீ சுபார்சுவர், ஸ்ரீ சந்திர பிரபு, ஸ்ரீ புஷ்பதந்தர் ஆகிய தீர்த்தங்கரர்கள்
தியானத்தோடு கூடியதாக எனக்கு அமைய வேண்டும் என்பதாம்.
-----------------------------------------------
5. ஸந்தப்த காஞ்சன ருசே ஜிந சீதளாக்ய
ச்ரேயந் விநஷ்ட துரிதாஷ்ட
களங்க பங்க |
பந்தூக பந்துர ருசே ஜிந வாஸுபூஜ்ய
த்வத்- த்யானதோSஸ்து ஸததம்
மம ஸுப்ரபாதம் ||
+++++++++++++++++++++++++++
ஸந்தப்த : நன்கு காய்ச்சப்பட்ட (புடம் போடப்பட்ட)
காஞ்சன : பொன்னின்
ருசே : ஒளியுள்ள
சீதளாக்ய : சீதள என்னும் பெயருடைய
ஜிந ! :- ஜிநரே
!
துரித : கொடிய
அஷ்ட : எட்டு விதமான
களங்கபங்க : வினை என்னும் சேற்றை
விநஷ்ட : போக்கிவிட்ட
ச்ரேயன் ! :- சிரேயாம்ஸரே !
பந்தூக : பந்தூக மலர் போல
பந்துர : மனதுக்கினிய
ருசே : ஒளியுள்ள
வாஸு பூஜ்ய : வாசு பூஜ்ய
ஜிந ! :- ஜிநரே !
த்வத் : உங்களுடைய
த்யானத: :- தியானத்தோடு கூடியதாக
சுப்ரபாதம் : இந்த நல்ல
விடியற்காலையானது
அஸ்து : அமைவதாத !
-----------------------------------------------
விடியற்காலை நேரம்
ஸ்ரீ சீதளர், ஸ்ரீ ஸ்ரேயாம்ஸர், ஸ்ரீ வாசுபூஜ்யர் ஆகிய தீர்த்தங்கரர்கள் தியானத்தோடு
கூடியதாக எனக்கு அமைய வேண்டும் என்பதாம்.
-----------------------------------------------
6. உத்தண்ட தர்ப்ப கரிபோ விமலாமலாங்க
ஸ்தேமன் நநந்த ஜித நந்த
ஸுகாம்புராசே |
துஷ்கர்ம கல்மஷ விவர்ஜித தர்ம நாத
த்வத்- த்யானதோS ஸ்து
ஸததம் மம ஸுப்ரபாதம் ||
++++++++++++++++++++++++++++++++
உத்தண்ட தர்ப
கரிபோ : மிகு செருக்குடைய யானையை (மன்மதனை
அடக்கியவரே)
அமலாங்க : நிர்மலமான உடலையுடைய
விமல ! :- விமல பகவானே !
ஸ்தேமன் : தீரராயும்
அநந்த : எல்லையற்ற
ஸுக : சுகமெனும்
அம்புராசே : கடலாகவும் விளங்குகிற
அனந்த ஜித் ! : அனந்த நாதரே !
துஷ்கர்ம : பாப வினைகளாகிய
கல்மஷ : களங்கத்தை
விவர்ஜித : நீக்கிய
தர்மநாத ! : தர்மநாதரே !
த்வத் : உங்களுடைய
த்யானத: :- தியானத்தோடு கூடியதாக
மம : எனக்கு
சுப்ரபாதம் : இந்த நல்ல விடியற்காலையானது
அஸ்து : அமைவதாக !
-----------------------------------------------
விடியற்காலை நேரம்
ஸ்ரீ விமலர், ஸ்ரீ அனந்தர், ஸ்ரீ தர்மநாதர் ஆகிய தீர்த்தங்கரர்கள் தியானத்தோடு கூடியதாக
எனக்கு அமைய வேண்டும் என்பதாம்.
-----------------------------------------------
6. உத்தண்ட தர்ப்ப கரிபோ விமலாமலாங்க
ஸ்தேமன் நநந்த ஜித நந்த
ஸுகாம்புராசே |
துஷ்கர்ம கல்மஷ விவர்ஜித தர்ம நாத
த்வத்- த்யானதோS ஸ்து
ஸததம் மம ஸுப்ரபாதம் ||
++++++++++++++++++++++++++++++++++++++
உத்தண்ட தர்ப
கரிபோ : மிகு செருக்குடைய யானையை (மன்மதனை
அடக்கியவரே)
அமலாங்க : நிர்மலமான உடலையுடைய
விமல ! :- விமல பகவானே !
ஸ்தேமன் : தீரராயும்
அநந்த : எல்லையற்ற
ஸுக : சுகமெனும்
அம்புராசே : கடலாகவும் விளங்குகிற
அனந்த ஜித் ! : அனந்த நாதரே !
துஷ்கர்ம : பாப வினைகளாகிய
கல்மஷ : களங்கத்தை
விவர்ஜித : நீக்கிய
தர்மநாத ! : தர்மநாதரே !
த்வத் : உங்களுடைய
த்யானத: :- தியானத்தோடு கூடியதாக
மம : எனக்கு
சுப்ரபாதம் : இந்த நல்ல விடியற்காலையானது
அஸ்து : அமைவதாக !
-----------------------------------------------
விடியற்காலை நேரம் ஸ்ரீ விமலர், ஸ்ரீ அனந்தர்,
ஸ்ரீ தர்மநாதர் ஆகிய தீர்த்தங்கரர்கள் தியானத்தோடு கூடியதாக எனக்கு அமைய வேண்டும் என்பதாம்.
-----------------------------------------------
7. தேவாமரீ குஸும ஸந்நிப சாந்தி நாத
குந்தோ தயாகுண விபூஷண
பூஷிதாங்க|
தேவாதிதேவ பகவந்நர தீர்த்தநாத
த்வத்- த்யானதோSஸ்து
ஸததம் மம ஸுப்ரபாதம் ||
++++++++++++++++++++++++++++
அமரீ : தேவ மகளிர் விரும்புகின்ற
குஸும : (பாரிஜாத) மலரை
ஸந்நிப : ஒத்த
தேவ * : தேவரே
சாந்திநாத ! : சாந்திநாதரே
!
தயாகுண : தயாகுணங்களாகிற
விபூஷண : அணிகளால்
பூஷிதாங்க : அலங்கரிக்கப்பட்ட
உடலையுடைய
குந்தோ ! : குந்து நாதரே !
தேவாதி தேவ : தேவர்களுக்கெல்லாம் தேவனாயும்
பகவன் : பகவானுமாயிருக்கிற
அர தீர்த்தநாத ! : அர தீர்த்தங்கரரே !
த்வத் : உங்களுடைய
த்யானத: :- தியானத்துடன் கூடியதாக
மம : எனக்கு
ஸுப்ரபாதம் : இந்த நல்ல
விடியற்காலையானது
ஸததம் : எப்பொழுதும்
அஸ்து : அமைவதாக.
-----------------------------------------------
விடியற்காலை நேரம் ஸ்ரீ சாந்திநாதர், ஸ்ரீ
குந்து நாதர், ஸ்ரீ அரநாதர் ஆகிய தீர்த்தங்கரர்கள் தியானத்தோடு கூடியதாக எனக்கு அமைய
வேண்டும் என்பதாம்.
* 'தேவ அமரீ ' என்று கொண்டு
கூட்டுவாரும் உளர்.
-----------------------------------------------
8. யந்மோஹ மல்ல மதபஞ்ஜன மல்லிநாத
க்ஷேமங்கராவிதத சாஸன
ஸுவ்ரதாக்ய |
ஸத்ஸம்பதா ப்ரசமிதோ நமிநாம
தேய
த்வத்- த்யானதோS ஸ்து
ஸததம் மம ஸுப்ரபாதம் ||
++++++++++++++++++++++++++++++++
யத் : எவர்
மோஹமல்ல : மோஹம் என்னும்
மல்லனது
மத : செருக்கை
பஞ்ஜன : சிதைத்தாரோ (அப்படிப்பட்ட)
மல்லிநாத ! : மல்லிநாதரே !
க்ஷேமங்கர : எல்லா உயிர்களுக்கும் நன்மையைச் செய்கிறவராயும்
அவிதத : உண்மையான (யதார்த்தமான)
சாஸன : அறவுரையாளராயும் உள்ள
ஸுவ்ர : ஸுவிரத (எனும்)
ஆக்ய ! : பெயருடையவரே (முனிஸுவ்ரதரே)
ஸத்ஸம்பதா : சிறந்த (மும்மணி) செல்வத்தினால்
ப்ரசமித : சாந்தியடைந்த
நமி : நமி (எனும்)
நாமதேய! : பெயருடையவரே !
த்வத் : உங்களுடைய
த்யானத: :- தியானத்துடன் கூடியதாக
மம : எனக்கு
ஸுப்ரபாதம் : இந்த நல்ல
விடியற்காலையானது
ஸததம் : எப்போதும்
அஸ்து : அமைவதாக !
-----------------------------------------------
விடியற்காலை நேரம் ஸ்ரீ மல்லிநாதர், ஸ்ரீ
முனிஸுவ்ரதர், ஸ்ரீ நமி நாதர் ஆகிய தீர்த்தங்கரர்கள் தியானத்தோடு கூடியதாக எனக்கு அமைய
வேண்டும் என்பதாம்.
9. தாபிச்சகுச்ச ருசிரோஜ்ஜ்வல நேமிநாத
கோரோபஸர்க விஜயிந் ஜிந
பார்ஸ்வ நாத |
ஸ்யாத்வாத ஸூக்தி மணிதர்ப்பண வர்த்தமான
த்வத்-த்யானதோSஸ்து
ஸததம் மம ஸுப்ரபாதம் ||
++++++++++++++++++++++++++++++++++++++++
தாபிச்ச குச்ச : புங்கம் பூவின் கொத்தைப் போல
ருசிர : நீலவண்ணராயும்
உஜ்ஜ்வல : ஒளி மிக்கவராயுள்ள
நேமிநாத ! :நேமிநாதரே!
கோர : கொடிய
உபஸர்க : உபஸர்க்கங்களை (துன்பங்களை)
விஜயிந்- : வென்றவரே
ஜிந பார்ச்வ நாத
! : பார்சுவநாத ஜிநரே !
ஸயாத்வாத ஸூக்தி : ஸ்யாத்வாத
வசனங்களுக்கு
மணிதர்ப்பண : ரத்ன கண்ணாடி போன்றுள்ள
வர்த்தமான ! : வர்த்தமானரே
த்வத் : உங்களுடைய
த்யானத: :- தியானத்துடன் கூடியதாக
மம : எனக்கு
ஸுப்ரபாதம் : இந்த நல்ல விடியற்காலையானது
ஸததம் : எப்போதும்
அஸ்து : அமைவதாக !
-----------------------------------------------
விடியற்காலை நேரம் ஸ்ரீ நேமிநாதர், ஸ்ரீ
பார்சுவ நாதர், ஸ்ரீ வர்த்தமானர் ஆகிய தீர்த்தங்கரர்கள்
தியானத்தோடு கூடியதாக எனக்கு அமைய வேண்டும் என்பதாம்.
-----------------------------------------------
10. ப்ராலேயே நீல ஹரிதாருண பீதபாஸம்
யந்மூர்தி மவ்யய ஸுகாவஸதம்
முநீந்த்ரா: |
த்யாயந்தி ஸப்ததி ஸதம் ஜிந வல்லபாநாம்
த்வத்-த்யானதோSஸ்து ஸததம் மம ஸுப்ரபாதம் ||
+++++++++++++++++++++++
யத் : எவருடைய
மூர்த்திம் : உடலானது
ப்ராலேயே : வெண்மை நிறமாகவும்
நீல : நீல நிறமாகவும்
ஹரித : பச்சை நிறமாகவும்
அருண : செம்மை நிறமாகவும்
பீத : மஞ்சள் நிறமாகவும்
பாஸம் : ஒளியோடு கூடி
உள்ளது; (அப்படிப்பட்ட)
அவ்யய : அழியாத
சுக : ஆனந்தத்திற்கு
அவஸதம் : இருப்பிடமாக
உள்ள
ஸப்ததிஸதம் : நூற்றெழுபது
ஜிநவல்லபாநாம் : ஜிந பகவான்களையும்
முநீந்த்ரா: :- முனிவர்கள்
த்யாயந்தி : தியானிக்கிறார்கள்
த்வத் : (அப்பேர்ப்பட்ட)
உங்களுடைய
த்யானத: :- தியானத்தினால் கூடியதாக
மம : எனக்கு
ஸுப்ரபாதம் : இந்த நல்ல விடியற்காலையானது
ஸததம் : எப்போதும்
அஸ்து : அமைவதாக !
-----------------------------------------------
இரண்டரைத் தீவில் உள்ள 170 தரும கண்டத்திலும்
உள்ள 170 தீர்த்தங்கரர்கள் தியானத்தோடு கூடியதாக எனக்கு விடியற்காலை அமைய வேண்டும்.
*****
1. ' மூர்த்திம்
' என்பதற்குப் பிம்பம் எனப் பொருள் கொள்வாரும் உளர்.
2. பதினறுவர் பொன்வண்ணர்
பச்சை இருவர்
மதிவண்ணர் மற்றோர்
இருவர் - கதியடைந்த
செம்மைநிறத் தோர்
இருவர் சேர்ந்த முகிலிருவர்
எம்மைக்கும் தெய்வம்
எமக்கு
என வரும் திருக்கலம்பக பாடல் இங்கே ஒப்பு நோக்கத்
தக்கது.
3. 170 தர்ம கண்டங்களாவன
: பரதம் 5, ஐராவதம் 5, விதேகம் 160
(32×5). இந்த 170 தர்ம கண்டங்களையும் கர்மபூமி
என்பர். இங்கே தீர்த்தங்கரர்கள் தோன்றுவர்.
இவற்றுள் விதேகம் எப்போதும் கர்ம பூமி ; மற்ற இரண்டும் கர்ம பூமியாகவும், போக பூமியாகவும்
மாறி மாறி வரும்.
-----------------------------------------------
11. ஸுப்ர பாதம் ஸுநக்ஷத்ரம் மாங்கல்யம் பரிகீர்திதம் |
சதுர்விம்சதி தீர்த்தாநாம்# ஸுப்ரபாதம் தினே தினே ||
+++++++++++++++++++++++++++++++++++++
சதுர்விம்சதி : இருபத்து நான்கு
தீர்த்தநாம் : தீர்த்தங்கரர்களை
ஸுப்ரபாதம் : விடியற்காலையில் தியானிப்பதானது
ஸுநக்ஷத்ரம் : சுபயோகம் மற்றும்
மாங்கல்யம் : மங்கலமானது என்று
பரிகீர்த்திதம் : சொல்லப்பட்டது. (அப்படிப்பட்ட)
ஸுப்ரபாதம் : விடியற்காலையானது
தினே தினே : தினம் தினம் எனக்கு ஆவதாக !
-----------------------------------------------
தீர்த்தங்கரர்களைத் தியானிக்கும் விடியற்காலை
நேரமே நல்ல யோகமும் மங்கலமும் உடையதாகும். அப்படிப்பட்ட விடியற்காலை நாள்தோறும் அமையவேண்டும்
என்பது கருத்து.
-----------------------------------------------
12. ஸுப்ரபாதம் ஸுநக்ஷத்ரம் ச்ரேய : ப்ரத்யபிநந்திதம் |
தேவதா: ரிஷய: ஸித்தா: ஸுப்ரபாதம் தினே தினே ||
+++++++++++++++++++++++++++++++++++++++++++
தேவதா : எல்லா ஜிந பகவான்களையும்
ரிஷய : எல்லா முனிவர்களையும்
ஸித்தா : எல்லா ஸித்தர்களையும்
ஸுப்ரபாதம் : விடியற்காலையில்
தியானிப்பதானது
ஸுநக்ஷத்ரம் : சுபயோகம்
(மற்றும்)
ச்ரேய : மிக நன்மையுடையது
என்று
ப்ரதயபிநந்திதம் : மிகவும்
புகழப்படுகிறது
ஸுப்ரபாதம் : (அப்படிப்பட்ட)
விடியற்காலையானது (எனக்கு)
தினே தினே : தினம் தினம்
ஆவதாக !
-----------------------------------------------
ஸித்தர்கள், ஜிந பகவான்கள், முனிவர்கள் ஆகியோர்
தியானத்தோடு கூடிய விடியற்காலை நேரம் நல்ல யோகமும் நன்மையும் கூடியதாகப் புகழப்படுகிறது.
அப்படிப்பட்ட விடியற்காலை நாள் தோறும் அமையவேண்டும் என்பதாம்.
-----------------------------------------------
ஸுப்ரபாதம் ஜிநேந்த்ராணாம் ஜ்ஞானோன் மீலித சக்ஷுஷாம் |
அஜ்ஞான திமிராந்தாநாம் நித்யமஸ்தமிதோ ரவி: ||
+++++++++++++++++++++++++++++++++++
அஜ்ஞான : மித்யா ஞானம்
எனும்
திமிர : இருளால்
அந்தானாம் : குருடானவர்
(பவ்ய மித்யா திருஷ்டி)கள்
ஜ்ஞான : (யாரால்) ஞானத்தினால்
உன் மீலித : திறக்கப்பட்ட
சக்ஷுஷாம் : கண்களை (அறிவு)
உடையவர்களானாரோ (ஞானமுள்ள பவ்வியர்களானார்களோ)
ஜிநேந்த்ராணாம் : அத்தகைய
ஜிநர்களுடைய (தியானத்தையுடைய)
ஸுப்ரபாதம் : நல்ல விடியற்காலமானது
எனக்கு அமைவதாக.
அஜ்ஞான : அறியாமை (மித்யாத்வம்)
எனும்
திமிராந்தானாம் : இருட்டால் பார்வை தெரியாதவர்களுக்கு (அபவ்யர்களுக்கு)
ரவி : ஜிநராகிய சூரியன்
நித்யம் : எப்போதும்
அஸ்தமித : அஸ்தமானவனாக
(காணப்படாதவனாக) இருக்கிறான்.
-----------------------------------------------
ஜிந பகவான்களை விடியற்காலையில் தியானிப்பது
ஞானமுடைய பவ்வியர்களுக்கு அமைவதாக ; ஏனெனில் அஞ்ஞானமுடைய அபவ்வியர்கள் உள்ளத்தில் அவர்
காணப்படுவதில்லை என்பதாம்.
-----------------------------------------------
ஸுப்ரபாதம் ஜிநேந்த்ரஸ்ய வீர : கமலலோசன : |
யேந கர்மாடவீ தக்தா ஸுக்ல த்யானோக்ரவஹ்நினா ||
+++++++++++++++++++++++++++
யேந : எவரால்
ஸுக்லதியான : சுக்ல தியானம்
எனும்
வஹ்நினா : பெரு நெருப்பினால்
கர்ம : வினை எனும்
அடவீ : காடானது
தக்தா : கொளுத்தப்பட்டதோ (அந்த)
கமல லோசன : :- கமலம் போன்ற கண்களை உடையவரான
வீர: :- மகாவீரர் (இருக்கிறார் என்க)
தஸ்ய : அந்த
ஜிநேந்த்ரஸ்ய : ஜிநேந்திரருடைய
(தியானத்துடன் கூடியதாக)
ஸுப்ரபாதம் : நல்ல விடியற்காலையானது
அமைவதாக !
-----------------------------------------------
நம் வினைகளைக் கெடுக்க நிமித்தமான மகாவீரர் பிரபுவின்
தியானத்தோடு கூடியதாக விடியற்காலை அமையவேண்டும் என்பதாம்.
-----------------------------------------------
ஸுப்ரபாதம் ஸு நக்ஷத்ரம் ஸு கல்யாணம் ஸு மங்கலம |
த்ரைலோக்ய ஹித கர்த்ரூணாம் ஜிநாநாமேவ சாஸநம் ||
++++++++++++++++++++++++++++++++++
த்ரைலோக்ய : மூன்று உலகங்களுக்கும்
ஹித : நன்மையை
கர்த்ருணாம் : செய்கிறவரான
ஜிநாநாம் : ஜினருடைய
சாஸனமேவ : உபதேசம்தான்
ஸுப்ரபாதம் : நல்ல விடியற்காலமாகவும்
ஸு நக்ஷத்ரம் : நல்ல நட்சத்திரமாகவும்
ஸு கல்யாணம் : நல்ல நன்மையுடையதாகவும்
ஸு மங்கலம் : நல்ல மங்கலமாகவும்
(இருக்கின்றது).
-----------------------------------------------
உயிர்களுக்கு ஜிநருடைய அறவுரை தான் நல்ல
விடியற்காலமாகவும், நல்ல சமயமாகவும், நன்மை தருவதாகவும், மங்கலமுடையதாகவும் இருக்கிறது.
அப்படிப்பட்ட ஜிநருடைய தியானத்தோடு கூடிய விடியற்காலை அமையவேண்டும் என்பதாம்.
-----------------------------------------------
பகுதி 3
பெரிய
புஷ்பாஞ்சலி
(மூலமும் தமிழ் உரையும்)
பதிவு-1
சதுர் விம்சதி தீர்த்தேஸான் சதுர்கதி நிவ்ருத்தயே|
வ்ருஷபாதி மகாவீர பர்யந்தான் ப்ரணமாம்யஹம்||
+++++++++++++++++++++++++++++
அஹம் : நான்
சதுர்கதி- : நான்கு கதிகளினின்றும்
நிவ்ருத்தயே : நீங்கும்
பொருட்டு
வ்ருஷபாதி : ஸ்ரீ ஆதிநாதபகவான்
முதல்
மகாவீர பர்யந்தான் : ஸ்ரீ
மகாவீரர் வரையான
சதுர்விம்சதி- : இருபத்து நான்கு
தீர்த்தேஸான் : தீர்த்தங்கரர்களையும்
ப்ரணாமி : வணங்குகின்றேன்.
பிறவிச் சுழலினின்றும் விடுபட நான் ஸ்ரீ விருஷபர்
முதல் ஸ்ரீ மகாவீரர் வரையான இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களையும் வணங்குகிறேன்.
இருபத்து நால்வர் பெயர்கள்
:-
ஸ்ரீ விருஷபர், அஜிதர்,
சம்பவநாதர், அபிநந்தனர், சுமதிநாதர், பத்ம்பிரபர், சுபார்ஸ்வர், சந்திர பிரபர், புஷ்பதந்தர்,
சீதளர், சிரேயாம்ஸர், வாசுபூஜ்யர், விமலநாதர், அனந்த நாதர், தர்மநாதர், சாந்தி நாதர்,
குந்து நாதர், அரநாதர், மல்லிநாதர், முனிசுவிரதரர், நமிநாதர், நேமிநாதர், பார்ஸ்வநாதர்,
ஸ்ரீ வர்த்தமான மகாவீரர்.
நான்கு கதி :-
நரக கதி, விலங்கு கதி,
மனித கதி, தேவ கதி. இந் நான்கு கதிகளிலும் மாறி மாறிப் பிறப்பதைத்தான் பிறவிச் சுழற்சி
என்பர்.
-----------------------------------------------------
"பெரிய புஷ்பாஞ்சலி" என்பது ' ஸ்வயம்பு ஸ்தோத்திரம் ' எனும் பெயராலும் வட இந்தியாவில்
வழங்குகிறது. ஆனால், ஆசாரியர் சமந்தபத்திரர் அருளிய 'சுயம்பு ஸ்தோத்திரம்' வேறு, இது
வேறு. இருபத்து நால்வர் துதியாக அமைவதால் "ஸ்வயம்பு ஸ்தோத்திரம்" என்னும்
பெயரைப் பெற்றது போலும்.
-------------------------------------------------------
பெரிய புஷ்பாஞ்சலி
(1) யேந ஸ்வயம் போதமயேந லோகே
ஆச்வாஸித: கேசந வ்ருத்திகார்யே
|
ப்ரபோதிதா: கேசந மோக்ஷமார்கே
தமாதிநாதம் ப்ரணாமி நித்யம்||
++++++++++++++++++++++++++++++
ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராய நமோஸ்து! நமோஸ்து!
யேந : யார்
ஸ்வயம் : தானாக உண்டான
போதமயேந : அறிவினால்
லோகே : இவ்வுலகில்
கேசந : பல பேருக்கு
வ்ருத்தி கார்யே:
:- பயிர்த்தொழில் முதலான காரியங்களைக்
ஆச்வாஸிதா : காட்டினாரோ
கேசந : பல பேருக்கு
மோக்ஷமார்கே : மோக்ஷ நெறியில் (செல்ல)
ப்ரபோதிதா : கற்பித்தாரோ
தம் : அந்த
ஆதிநாதம் : ஆதிபகவானை
நித்யம் : எப்போதும்
ப்ரணமாமி : வணங்குகிறேன்.
-----------------------------------------------
யுக ஆரம்பத்தில் மக்களுக்குத் தொழிலைக் காட்டினவரும்
மோக்ஷ நெறியைக் கற்பித்தவருமான ஸ்ரீ விருஷப ஸ்வாமியாகிய ஆதிபகவனை (முதல் தீர்த்தங்கரரை)
நான் எப்போதும் வணங்குகிறேன்.
தீர்த்தங்கரர் பதவியை அடையப் போகிறவர்கள் பிறக்கும்போது
மதி ஞானம், சுருத ஞானம், அவதி ஞானத்தோடு பிறப்பர். மேலும் குரு ஒருவர் இன்றி தாமே அறிவர்.
இதனையே "ஸ்வயம் போதமயேந" என்று குறிப்பிட்டார்.
போக பூமியாக இருந்த பரத க்ஷேத்திரம் கர்ம
பூமியாக மாறியதால், மக்கள் உழைத்து வாழ வேண்டிய நிலை தோன்றிற்று. அப்போது, ஆதிபகவன்
அவர்களுக்கு படைத்தொழில் (அஸி), கணக்கு எழுதுதல் (மஸி), உழவத் தொழில் (க்ருஷி), கலைத்தொழில்
(வித்யா), வாணிபம் (வாணிஜ்ய), கருவித் தொழில் (ஷில்ப) ஆகியவற்றைக் கற்பித்தார். இவற்றையே
' வ்ருத்தி கார்யம் ' என்றார்.
மோக்ஷ நெறியையும் இவரே அறிவித்தார். ஏனெனில்
கர்ம பூமியில்தான் மோக்ஷம் போவதற்கான முயற்சியை மேற்கொள்ள முடியும். போக பூமியில் யாரும்
மோக்ஷம் போக யாரும் முயற்சி செய்ய முடியாது. அங்கு தீர்த்தங்கரர்கள் தோன்றுவதும் இல்லை.
-----------------------------------------------
(2) இந்த்ராபி: க்ஷீரஸமுத்ர - தோயை:
ஸம்ஸ்நாபிதோ மேருகிரௌ
ஜிநேந்த்ர:|
ய: காமஜேதா ஜநஸௌக்க்யகாரீ
தம் சுத்த பாவாதஜி தம்
நமாமி ||
ஸ்ரீ அஜித தீர்த்தங்கராய நமோஸ்து! நமோஸ்து!
++++++++++++++++++++++++++++++++++++++
ய : எந்த
ஜிநேந்த்ர: : ஜிநதேவர்
மேருகிரௌ : மேரு மலையில்
இந்த்ரா திபி: : இந்திரன் முதலான தேவர்களால்
க்ஷீரஸமுத்ர- : பாற்கடல்
தோயை: :- நீரால் (செய்த)
ஸம்ஸ்நாபித: :- அபிஷேகம் (மங்கள நீராட்டைப்) பெற்றவரோ,
காம : காமனை (மன்மதனை)
ஜேதா : வென்றவரோ
ஜந : மக்களுக்கு
ஸௌக்க்யகாரீ : நன்மை தருபவரோ
தம் : அந்த
அஜிதம் : அஜிதரை
சுத்தபாவாத் : தூய எண்ணத்துடன்
நமாமி : வணங்குகிறேன்.
-----------------------------------------------
தேவர்களால் ஜன்மாபிஷேகம்
செய்யப்பட்டவரும், காமனை வென்றவரும், மக்களுக்கு ஆன்மீய நன்மையைத் தருபவருமான ஸ்ரீ
அஜித தீர்த்தங்கரரை நான் பாவனையுடன் வணங்குகிறேன்.
-----------------------------------------------
3. த்யான-ப்ரபந்த-ப்ரபவேந யேந
நிஹத்ய கர்ம-ப்ரக்ருதி:
ஸமஸ்தா|
முக்தி-ஸ்வரூபாம் பதவீம் ப்ரபேதே
தம் ஸம்பவம் நௌமி மஹானுபாவம்||
ஸ்ரீ சம்பவ தீர்த்தங்கராய நமோஸ்து! நமோஸ்து!
ஸ்ரீ சம்பவ தீர்த்தங்கராய நமோஸ்து! நமோஸ்து!
++++++++++++++++++++++++++++++++
யேந : யார்
த்யான- தியான
ப்ரபந்த : கூட்டத்தின்
ப்ரபவேந : பிரபாவத்தால்
(ஆற்றலால்)
ஸமஸ்தா : எல்லா
கர்ம-ப்ரக்ருதி: :- வினைகளையும்
நிஹத்ய : அழித்து
முக்தி - மோக்ஷ
ஸ்வரூபாம் : ஸ்வரூபமான
பதவீம் : பதவியை
ப்ரபேதே : அடைந்தாரோ
தம் : அந்த
மஹாநுபாவம் : பெரும் புகழையுடைய
ஸம்பவம் : ஸம்பவ நாதரை
நௌமி : வணங்குகிறேன்.
-----------------------------------------------
தர்ம சுக்ல தியானங்களால்
எல்லா வினைகளையும் கெடுத்து மோக்ஷத்தை அடைந்த பெருமை பொருந்திய ஸ்ரீ சம்பவ நாதர் தீர்த்தங்கரரை
நான் வணங்குகிறேன்.
-----------------------------------------------
4. ஸ்வப்நம் யதீயா ஜநநீ க்ஷபாயாம்
கஜாதி வந்ஹ்யந்தமிதம்
ததர்ச |
யத்தாத இத்யாஹ குரு : பரோயம்
நௌமி ப்ரமோதாதபிநந்தனம்
தம் ||
+++++++++++++++++++++++++++++++++++++++++++
ஸ்ரீ அபிநந்தன தீர்த்தங்கராய நமோஸ்து! நமோஸ்து!
யதீயா : யாருடைய
ஜநநீ : தாயார்
க்ஷபாயாம் : இரவில்
கஜாதி : யானை முதல்
வந்ஹ்யந்தம் : அக்னி (நெருப்பு) வரையான
இதம் : இந்தக்
ஸ்வப்னம் : கனவினை
ததர்ச : கண்டாரோ;
யத் : யாருடைய
தாத : தகப்பனார்
அயம் : இவரை
பர : மேலான
குரு: :- குரு ஆவார்
என்று
ஆஹ : கூறினாரோ
தம் : அந்த
அபிநந்தனம் : அபிநந்தரை
ப்ரமோதாத் : மேலான பக்தியுடன்
நௌமி : வணங்குகிறேன்.
-----------------------------------------------
எந்தப் பகவானுடைய
தாயார் யானை முதலான பதினாறு பொருளை கனவு கண்டாரோ, யாருடைய தகப்பனார் இவரைப் பெரிய குரு
என்று கூறினாரோ அந்த ஸ்ரீ அபிநந்தன தீர்த்தங்கரரை நான் வணங்குகிறேன்.
-----------------------------------------------
5. குவாதி- வாதம் ஜயதா மஹாந்தம்
நய-ப்ரமாணைர் வசனைநர்
ஜகத்ஸு |
ஜைநம் மதம் விஸ்தரிதம் ச யேந
தம் தேவ தேவம் ஸுமதிம்
நாமமி ||
ஸ்ரீ ஸுமதி தீர்த்தங்கராய நமோஸ்து ! நமோஸ்து !!
ஸ்ரீ ஸுமதி தீர்த்தங்கராய நமோஸ்து ! நமோஸ்து !!
++++++++++++++++++++++++++++++++++++
யேந : யார்
நய : நயம்
ச: : மற்றும்
ப்ரமாணை: : பிரமாணங்களான
வசனை: : வசனங்களால்
மஹாந்தம் : மிகப் பெரிய
குவாதி : மித்யாவாதி
வாதம் : வாதங்களை
ஜயதா : வென்று
ஜகத்ஸு : உலகில்
ஜைநம் : ஜிந
மதம் : அறத்தை
விஸ்தரிதம் : பரவச் செய்தாரோ
தம் : அந்த
தேவதேவம் : தேவர்களுக்கெல்லாம்
தேவனான
ஸுமதிம் : சுமதி நாதரை
நமாமி : வணங்குகிறேன்.
-----------------------------------------------
மித்யா கருத்துடையாரை
நயம் மற்றும் பிரமாண வசனங்களால் வென்று ஜிந அறத்தைப் பரவச் செய்த ஸ்ரீ சுமதி நாதர்
தீர்த்தங்கரரை நான் வணங்குகிறேன்.
-----------------------------------------------
ஸ்ரீ பத்மப்ரப தீர்த்தங்கராய நமோஸ்து ! நமோஸ்து !!
ஸ்ரீ சுபார்சுவ தீர்த்தங்கராய நமோஸ்து ! நமோஸ்து !!
6. யஸ்யாவதாரே ஸதி பித்ரு திஷ்ண்யே
வவர்ஷ ரத்நாநி ஹரேர்
நிதேசாத் |
தநாதிபஷ்ஷண்ணவமாஸ பூர்வம்
பத்ம்ப்ரபம் தம் ப்ரணமாமி
நித்யம் ||
ஸ்ரீ பத்மப்ரப தீர்த்தங்கராய நமோஸ்து ! நமோஸ்து !!
+++++++++++++++++++++++++++++++++
யஸ்ய : யாருடைய
அவதாரே : அவதாரம் (பிறப்பு)
ஸதி : நிகழ்ந்தபோது
பித்ரு : தகப்பனாருடைய
திஷ்ண்யே : அரண்மனையில்
ஹரே: :- தேவேந்திரனுடைய
நிதேசாத் : ஆணையால்
தநாதிப : குபேரன்
ஷண்- : ஆறு (மற்றும்)
நவமாஸ : ஒன்பது மாதங்கள்
பூர்வம் : முன்பே
ரத்நாநி : ரத்னங்களை
(அருமணிகளை)
வவர்ஷ : பொழிந்தானோ
தம் : அந்த
பத்மப்ரபம் : பத்மபிரபுவை
நித்யம் : எப்போதும்
ப்ரணமாமி : வணங்குகிறேன்.
-----------------------------------------------
எந்தப் பகவான் அவதரித்த போது குபேரன் பதினைந்து
மாதம் முன்னரே இரத்தின மாரி பொழிந்தானோ அந்த ஸ்ரீ பத்மபிரபு தீர்த்தங்கரரை நான் வணங்குகிறேன்.
தீர்த்தங்கரர்கள் பூமியில் வந்து பிறப்பதற்கு
ஆறு மாதங்கள் முன்பு தொடங்கி அவர் பிறக்கும் வரை குபேரன் நாள்தோறும் 3 1/2 கோடி இரத்தினங்களை
அரண்மனையில் பொழிகிறான் என்று, 'ஹரிவம்ச புராணம்' குறிப்பிடுகிறது.
-----------------------------------------------
7. நரேந்த்ர- ஸர் பேஷ்வர- நாக நாதைர்
வாணீ பவந்தி ஜக்ருஹே
ஸ்வசித்தே |
யஸ்யாத்ம போத: ப்ரத்தித ஸபாயா
மஹம் ஸுபார்ச்வம் ஸததம்
நமாமி ||
ஸ்ரீ சுபார்சுவ தீர்த்தங்கராய நமோஸ்து ! நமோஸ்து !!
+++++++++++++++++++++++++++++++++
பவந்தி : எவருடைய
வாணீ : திவ்விய தொனியை
நரேந்த்ர- :- சக்கரவர்த்தியரும்
ஸர்பேஷ்வர- :- தரணேந்திரரும்
நாகநாதை: :- தேவேந்திரர்களும்
ஸ்வசித்தே : தங்களுடைய
மனத்தில்
ஜக்ருஹே : ஏற்றார்களோ
யஸ்ய : எவருடைய
ஸபாயாம் : சமவ சரணத்தில்
ஆத்ம போத: : ஆன்மீய ஞானம் (கேவல ஞானம்)
ப்ரத்தித: :- பெருமையுடன் விளங்கிற்றோ
ஸுபார்ச்வம் : (அந்த)
சுபார்சுவநாதரை
ஸததம் : எப்போதும்
அஹம் : நான்
நமாமி : வணங்குகிறேன்.
-----------------------------------------------
எந்த பகவானுடைய திருமொழியைச் சக்கரவர்த்திகளும்
தரணேந்திரரும், தேவேந்திரரும் கேட்டு மனதில் கொண்டார்களோ எவருடைய ஆன்மீய ஞானம் சமவசரண
மண்டபத்தில் பெருமையுடன் விளங்கிற்றோ அந்த ஸ்ரீ சுபார்சுவ நாதர் தீர்த்தங்கரரை நான்
எப்போதும் வணங்குகிறேன்.
-----------------------------------------------
8. ஸத்ப்ராதிஹார்யாதிசய ப்ரபந்தோ
குண - ப்ரவீணோ ஹத-தோஷ-ஸங்க:|
யோ லோக-மோஹாந்த-தம: ப்ரதீப:
சந்த்ர ப்ரபம் தம் ப்ரணாமி
நித்யம் ||
ஸ்ரீ சந்த்ர பிரப தீர்த்தங்கராய
நமோஸ்து! நமோஸ்து !!
+++++++++++++++++++++++++++++++++++++++++
ய : யார்
ஸத்- : நன்றான
ப்ராதிஹார்ய- : (எட்டு) பிராதி ஹார்யங்களையும்
அதிசய- : (முப்பத்து நான்கு) அதிசயங்களையும்
ப்ரபந்த: : அடைந்தவரோ
குண- : குணங்களால்
ப்ரவீண : நிறைந்தவரோ
ஹத தோஷ ஸங்க : (பதினெட்டு)
குற்றங்களைக் கெடுத்தவரோ
லோக- :உயிர்களுடைய
மோஹாந்த- : மோக இருளை
தம : நீக்கும்
ப்ரதீப: : விளக்குப் போன்றவரோ
தம் : அந்த
சந்த்ரப்ரபம் : சந்திரபிரபுவை
நித்யம் : எப்போதும்
ப்ரணமாமி : வணங்குகிறேன்.
-----------------------------------------------
பிராதிஹார்யங்களையும் அதிசயங்களையும் அடைந்தவரும்,
குற்றங்களில்லாதவரும், குணங்களான் நிறைந்தவரும், உயிர்கள் மோக இருளை ஓட்டும் தீபம்
போன்று விளங்குபவருமான ஸ்ரீ சந்திரபிரபு தீர்த்தங்கரரை நான் எப்போதும் வணங்குகிறேன்.
பிராதிஹார்யங்கள்:- அசோகம், முக்குடை, சிம்மாசனம், மண்டிலம், துந்துபி,
மலர் மாரி, சாமரை, சமவசரணம் அல்லது திவ்யதொனி - இவை எட்டும் பிராதிஹார்யம் எனப்படும்.
அதிசயங்கள்:-
1 வியர்வை இல்லாமை, 2 நிர்மலமான உடல், 3 பால் போன்ற
வெள்ளை குருதி, 4 வஜ்ரவ்ருஷப நாராச சம்ஹனனம், 5 'சமசதுரஸ்ர' உடல் அமைப்பு, 6 ஒப்பற்ற
வடிவம், 7 நறுமணம், 8 லக்ஷணங்கள், 9 அனந்த பலம், 10 இத மித மதுர மொழி - இவை பத்தும்
ஜன்ம (பிறப்பு) அதிசயம் எனப்படும்.
1 சுற்றிலும் ஒரு
யோஜனை அளவு வரை செழிப்பு, 2 ஆகாயத்தில் செல்லுதல், 3 இம்சை இல்லாமை, 4 உணவு உண்ணாமை,
5 உபஸர்கம் இல்லாமை, 6 நான்கு புறமும் தெரியும் முகம், 7 நிழல் இல்லாமை, 8 கண் இமைக்காமல்
பார்த்தல், 9 வித்தைகளையுடைமை, 10 நகம், மயிர் வளராமை - இவை பத்தும் கேவல ஞான அல்லது
கர்ம ஷய அதிசயங்கள் எனப்படும்.
1 திவ்யத்வனி, 2
பருவகாலம் இல்லாமல் எல்லா மரங்களும் பூ பழங்களோடு இருத்தல், 3 தூசு முதலானவற்றை அப்புறப்படுத்த
காற்று வீசுதல், 4 உயிர்கள் பகை இன்றி பழகுதல், 5
பூமி கண்ணாடி போன்று தூய்மையாக விளங்குதல், 6 மேக குமாரன் நறுமண நீர் தெளித்தல்,
7 தேவர் விகுர்வணையினால் பழமரங்களையும், தானியங்களையும் அமைத்தல், 8உயிர்கள் ஆனந்தமாக
இருத்தல், 9 வாயுகுமாரன் விகுர்வணையினால் குளிர் காற்று வீசுதல், 10 நீர் நிலைகளில்
தூய நீர் நிரம்பி இருத்தல், 11 ஆகாயம் தூசு முதலியன இல்லாமல் தூய்மையாக இருத்தல்,
12 உயிர்கள் நோய் இன்றி இருத்தல், 13 யக்ஷர்கள் தலையில் தர்மசக்கரங்கள் இருத்தல்,
14 திசைகளில் பொன் தாமரைமலர் முதலியன இருத்தல் - இவை பதினான்கும் தேவரால் ஆகும் அதிசயம்
எனப்படும்.
குற்றங்கள்:-
1 பசி, 2 தாகம்,
3 அச்சம், 4 கோபம், 5ஆசை, 6 மோகம், 7 சிந்தனை, 8 மூப்பு, 9 பிணி , 10 மரணம், 11 வேர்வை,
12 துக்கம், 13 மதம், 14 ரதி, 15 வியப்பு, 16 உறக்கம், 17 பிறப்பு 18 உத்வேகம்
- இந்த 18 குற்றங்களும் பகவானிடம் இல்லை.
-----------------------------------------------
9. குப்தி திரயம் பஞ்ச மஹாவ்ரதாநி
பஞ்சோபதிஷ்டா ஸமிதிச்ச
யேந |
பபாண யோ த்வாதசதா தபாம்ஸி
தம் புஷ்பதந்தம் ப்ரணமாமி
நித்யம் ||
ஸ்ரீ புஷ்பதந்த தீர்த்தங்கராய
நமோஸ்து ! நமோஸ்து !!
++++++++++++++++++++++++++++++++++++++++
யேந : யார்
பஞ்ச : ஐந்து
மஹாவ்ரதாநி : மகாவிரதங்களையும்
பஞ்ச : ஐந்து
ஸமிதி : சமிதிகளையும்
குப்தித்ரயம் : மூன்று
குப்திகளையும்
த்வாதசதா : பன்னிரண்டான
தபாம்ஸி : தபத்தையும்
உபதிஷ்டா : உபதேசித்தாரோ
ச : மேலும்
ய: :- யார்
பபாண : (அவற்றைத்) தரித்தாரோ
தம் : அந்த
புஷ்பதந்தம் : புஷ்பதந்தரை
நித்யம் : எப்போதும்
ப்ரணமாமி : வணங்குகிறேன்.
-----------------------------------------------
குப்தி, மகாவிரதம், ஸமிதி, தபங்களை உரைத்தருளியவரும்
தரித்தவருமான ஸ்ரீ புஷ்பதந்தர் தீர்த்தங்கரரை நான் வணங்குகிறேன்.
மகாவிரதம் :-
கொல்லாமை, பொய்யாமை, திருடாமை, பற்றின்மை,
பிரமசரியம்
குப்தி :- மனகுப்தி,
வாக்கு குப்தி, காயகுப்தி (குப்தி - அடக்கம்)
ஸமிதி :-
ஈர்யா (நடத்தல்) ஸமிதி, பாஷா (மொழி) ஸமிதி, ஏஷணா (உணவு) ஸமிதி, ஆதானநிக்ஷேபண (கமண்டலம் முதலான உபகரணங்களைக் கையாளும்)
ஸமிதி, பிரதிஷ்டாபன (மலம், நீர் விடுதல்) ஸமிதி,
ஸமிதி என்றால் நன்முறையில் ஒழுகுதல்/ நடத்தல்.
தபம் :- 1. அனசனம் (உண்ணாமை, உபவாசம்) 2. அவமௌதர்யம் (குறைத்து
உண்ணுதல்), 3. விருத்தி பரிஸங்க்யானம் (உணவு
ஏற்க நியமம் வைத்தல்), 4. ரஸ பரித்யாகம் ( பால், தயிர், எண்ணெய், வெல்லம், உப்பு இவற்றில் ஒன்றையோ பலவற்றையோ நீக்கி உண்ணுதல்),
5. விவிக்தசய்யாசனம் (தபத்திற்கு இடையூறு இல்லா தனி இடத்தில் ஒதுங்கி இருத்தல்),
6. காயக்லேஸம் ( வெய்யிலில் நிற்றல் முதலான உடலை வருத்தும் தப ஆசனங்கள் மேற்கொள்ளல்).
இவை ஆறும் புறத்தவங்கள் எனப்படும். 7. பிராயசித்தம் (நிகழ்ந்த பிழைகளை எண்ணி உபவாசம்
முதலியன மேற்கொள்ளுதல்), 8. விநயம் (பணிவு காட்டுதல்), 9. வையா வ்ரத்யம் (உலகியலிலிருந்து
விலகி தன் உயிருக்கு நன்மை செய்தல் உண்மையான சேவை, துன்புற்றோருக்கு உதவுதல் வியவகார
சேவை), 10. ஸ்வாத்யாயம் (உயிருக்கு நன்மை செய்யுமதை அறிதல்), 11. வியுத்ஸர்கம் (செருக்கு
முதலான ஸங்கல்பங்களை விடுதல்) , 12. தியானம்.
இவை ஆறும் அகத்தவம் எனப்படும்.
-----------------------------------------------
10. ப்ரம்ஹ வ்ரதாந்தோ ஜிந நாயகேநோ-
த்தம க்ஷமாதிர் தசதாபி
தர்ம: |
யேந ப்ரயுக்தோ நது பந்துபுத்த்யா
தம் சீதளம் தீர்த்தகரம்
நாமாமி ||
ஸ்ரீ சீதள தீர்த்தங்கராய
நமோஸ்து ! நமோஸ்து !!
+++++++++++++++++++++++++++++++++++
யேந : எந்த
ஜிநநாயகேந : தீர்த்தங்கரர்
உத்தம : மேலான
க்ஷமாதி: :- க்ஷமை (பொறுமை) முதலாக
ப்ரம்ஹ : பிரமசரிய
வ்ரதாந்த: :- விரதம் வரை
தசதா : பத்து வகையான
தர்ம: :- அறத்தைச்
ப்ரயுக்த: :- சொன்னாரோ
தம் : அந்த
சீதளம் : சீதளநாதராகிய
தீர்த்தகரம் : தீர்த்தங்கரரை
நது பந்துபுத்த்யா
: பந்து என்ற புத்தி இல்லாமல் (உண்மையுடன்)
நமாமி : வணங்குகிறேன்.
-----------------------------------------------
உத்தம க்ஷமை முதலான பத்து அறங்களை உரைத்தருளிய
ஸ்ரீ சீதள நாதர் தீர்த்தங்கரரைக் குல தேவனாகக் கருதாமல் உண்மையான பக்தியுடன் வணங்குகிறேன்.
பத்து அறங்கள்:-
உத்தம க்ஷமை, உத்தம மார்தவம், உத்தம ஆர்ஜவம்,
உத்தம ஸத்தியம், உத்தம சௌசம், உத்தம ஸய்யமம், உத்தம தபம், உத்தம தியாகம், உத்தம ஆகிஞ்சன்யம்,
உத்தம பிரமசரியம்.
' நது பந்து புத்த்யா ' என்கிற அடைமொழியைக்
தீர்த்தங்கரருக்கு ஏற்றி " பந்து என்ற
அன்பு இன்றி உரைத்தவர் " என்று பொருள் உரைப்பாரும் உளர்.
-----------------------------------------------
11. குணைர் ஜநாநந்தகரைர் யுதோ ய
வித்வ ஸ்த- கோப : ப்ரசமைக
சித்த: |
யோ த்வாதஸாங்கம் சுருதமாதி தேச
ஸுசிரேயஸம் தம் ப்ரணமாமி
நித்யம் ||
ஸ்ரீ சிரேயாம்ஸ தீர்த்தங்கராய நமோஸ்து ! நமோஸ்து !!
++++++++++++++++++++++++++++
ய : எவர்
ஜந : உயிர்களுக்கு
ஆநந்தகரை: :- ஆனந்தத்தை உண்டு பண்ணுகிற
குணை: :- குணங்களை
யுத: :- உடையவரோ
வித்வஸ்த கோப: : கோபத்தை வென்றவரோ
ப்ரசம- சாந்தியிலே
ஏகசித்த: : ஒன்றிய மனத்தை உடையவரோ
ய: :- எவர்
த்வாதஸாங்கம் : பன்னிரண்டு
அங்கமான
சுருதம் : ஆகமத்தை
ஆதிதேச : உரைத்தாரோ
தம் : அந்த
ஸுசிரேயஸம் : சிரேயாம்சரை
நித்யம் : எப்போதும்
ப்ரணமாமி : வணங்குகிறேன்.
-----------------------------------------------
உயிர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிற சாந்த சுபாவமுடைய
அங்க ஆகமத்தை அருளிய ஸ்ரீ சிரேயாம்ச நாதர் தீர்த்தங்கரரை நான் வணங்குகிறேன்.
பன்னிரண்டு அங்கங்கள்:-
1 ஆசாராங்கம், 2 சூத்ரக்ருதாங்கம், 3 ஸ்தானாங்கம்
4 ஸமவாயாங்கம், 5 வ்யாக்யா பிரஞ்ப்தி, 6 ஞாத்ரு தர்ம கதா, 7 உபாஸகாத்யயனம், 8 அந்தக்ருத்தசாங்கம்,
9 அனுத்தரோபபாதிக தசாங்கம், 10 பிரச்ன வியாகரணம், 11 விபாக சூத்ரம், 12 திருஷ்டிவாதம்.
ஐந்து ஸமிதி மூன்று குப்தி முதலான ஒழுக்கங்களைச்
சொல்லுவது ஆசாராங்கம் ; ஞான விநயம் முதலான வியவகார தர்ம கிரியைகளைச் சொல்லுவது சூத்ரக்ருதாங்கம்
; ஒன்று - ஒன்று, இரண்டு- இரண்டு முதலான எண்ணிக்கை நோக்கில் பொருளைச் சொல்லுவது ஸ்தானாங்கம்
; திரவ்யங்களின் சமதான தன்மையைக் கூறுவது சமவாயாங்கம்
; உயிர் உண்டா இல்லையா என்பது போன்ற 60,000 வினாக்களைக்கு விடையளிப்பது வ்யாக்யா ப்ரஞப்தி;
தீர்த்தங்கரர் முதலான கதையைச் சொல்லுவது ஞாத்ருகதை
; சிராவக தர்மத்தைச் சொல்லுவது உபாஸகாத்யயனம்
; உப சர்கங்களை தீர்த்தங்கரர்கள் காலத்தே
முக்தி பெற்ற அனகாரரைப் பற்றிச் சொல்லுவது அந்தக்ருத்தசாங்கம், உபஸர்கங்களைச் சகித்து
தீர்த்தங்கரர் காலத்தே பஞ்சாணுத்தரத்துள் பிறக்கும் அனகாரரைப் பற்றிச் சொல்லுவது அனுத்தரோபபாதிக
தசாங்கம்; நயம் மற்றும் யுக்திகளினால் பிறருடைய வினாக்களுக்கு விடை சொல்லுவது பிரச்சன
வியாகரணம்; புண்ணிய, பாபங்களின் பயனைச் சொல்லுவது
விபாக சூத்ரம்; 363 மதங்களின் கண்டனத்தைச் சொல்லுவது த்ருஷ்டிவாதம்.
-----------------------------------------------
12. முக்த் யங்கநாயை ரசிதம் விசாலம்
ரத்நத்ரயம் சேகரகாய
யேந |
யத் கண்ட மாஸாத்ய பபூவ ச்ரேஷ்டா
தம் வாஸு பூஜ்யம் ப்ரணமாமி
நித்யம் ||
ஸ்ரீ வாஸுபூஜ்ய தீர்த்தங்கராய நமோஸ்து! நமோஸ்து !!
+++++++++++++++++++++++++++++
யேந : யார்
முக்தி- : மோக்ஷ
அங்கநாயை : கன்னிக்காக
விசாலம் : சிறந்த
ரத்ந த்ரயம் : மும்மணி
என்னும்
சேகரகாய : முகுடத்தைச்
ரசிதம் : செய்தாரோ
யத்- : (அதனால்) அவர்
கண்டம் : கழுத்தைச்
ஆஸாத்ய : தழுவும்
ச்ரேஷ்டா : சிறப்பை
பபூவ : அடைந்தாள் (மோக்ஷ லட்சுமி)
தம் : அந்த
வாஸுபூஜ்யம் : வாசுபூஜ்யரை
நித்யம் : எப்போதும்
ப்ரணமாமி : வணங்குகிறேன்.
-----------------------------------------------
யார் மோக்ஷ கன்னிக்காக மும்மணி முகடத்தைச் செய்து
அவளை அடைந்தாரோ அந்த வாசுபூஜ்யர் தீர்த்தங்கரரை நான் எப்போதும் வணங்குகிறேன்.
-----------------------------------------------
----------------------------------------------------
13 ஜ்ஞானீ விவேகீ பரமஸ்வரூபி
த்யானீ வ்ரத ப்ராணி ஹிதோபதேசி
|
மித்யாத்வ காதீ சிவஸௌக்யபோஜீ
பபூவ யஸ்தம் விமலம்
நமாமி ||
ஸ்ரீ விமல தீர்த்தங்கராய நமோஸ்து ! நமோஸ்து !!
++++++++++++++++++++++++++++++++
ய : யார்
ஜ்ஞானீ : அனந்த ஞானமுடையவராக
விவேகீ : விவேக மயமானவராக
பரமஸ்வரூபி : மேலான தன் இயல்பை அடைந்தவராக
த்யானீ : தியானம் உடையவராக
வ்ரதீ : விரதமுடையவராக
ப்ராணி : உயிர்களுக்கு
ஹித : நன்மை தரும்
உபதேசி : உபதேசம் தருபவராக
மித்யாத்வ : மித்யாத்வத்தை
காதீ : அழிப்பவராக
சிவ : மோக்ஷ
ஸௌக்ய : சுகத்தை
போஜி : துய்ப்பவராக
பபூவ : ஆனாரோ
தம் : அந்த
விமலம் : விமலநாதரை
நமாமி : வணங்குகிறேன்.
ஞானியும், விவேகம் உள்ளவரும், மேலான இயல்புடையவரும்,
தியனமுடையவரும் நன்மையைப் போதிப்பவரும் அறியாமையை அழிப்பவரும், மோக்ஷத்தைத் துய்ப்பவருமான,
ஸ்ரீ விமல நாதர்
தீர்த்தங்கரரை நான் வணங்குகிறேன்.
----------------------------------------------------
14. அப்யந்தரம் பாஹ்யமநேகதா ய :
பரிக்ரஹம் ஸர்வம்பாசகார
|
யச்சாதி தேஸ ஸ்வஹிதம் ஜநாநாம்
பூயாத நந்தம் ப்ரணமாமி
நித்யம் ||
ஸ்ரீ அனந்த தீர்த்தங்கராய
நமோஸ்து ! நமோஸ்து !!
++++++++++++++++++++++++++++
ய: :- யார்
அப்யந்தரம் : அக (மற்றும்)
பாஹ்யம் : புறம் எனப்படும்
அநேகதா : பல வகையான
ஸர்வம் : எல்லாப்
பரிக்ரஹம் : பற்றுக்களையும்
அபாசகார : நீக்கினாரோ
ச : மற்றும்
ய: :- யார்
ஜநாநாம் : உயிர்களுக்கு
/ மனிதர்களுக்கு
ஸ்வஹிதம் : ஆத்ம இதமான
ஆதிதேஸ : நல்நெறியை அருளினாரோ
தம் : அந்த
அனந்தம் : அனந்தரை
நித்யம் : எப்போதும்
ப்ரணமாமி : வணங்குகிறேன்.
-----------------------------------------------
அகப்புறப் பற்றுக்களை நீக்கினவரும், உயிர்களுக்கு
இதமான நெறியை உரைத் தருளியவருமான ஸ்ரீ அனந்த நாதர் தீர்த்தங்கரரை நான் வணங்குகிறேன்.
-----------------------------------------------
15. ஸார்த்தம் பதார்தா நவ ஸப்த தத்வை:
பஞ்சாஸ்தி காயாச்ச ந
கால காயா |
ஷட்த்ரவ்யநிர் ணீதிரலோக யுக்தி
யேர் நோதிதா தம் ப்ரணமாமி
தர்மம் ||
ஸ்ரீ தர்ம தீர்த்தங்கராய
நமோஸ்து ! நமோஸ்து !!
+++++++++++++++++++++++++++++++
யேந : எவர்
ஸார்த்தம் : பொருளுடன்
நவ பதார்த்தா : ஒன்பது
பதார்த்தங்களையும்
ஸப்த தத்வை: :- ஏழு தத்துவங்களையும்
ச : மற்றும்
பஞ்சாஸ்திகாயா : ஐந்து
அத்திகாயங்களையும்
ந கால காயா : காயத்துவ
மில்லாத காலப்பொருளையும்
நிர்ணீதி : :- நிர்ணயிப்பதில்
அலோகயுக்தி: :- அலோகத்தையும் சேர்த்துச்
உதிதா : சொன்னாரோ
தம் : அந்த
தர்ம : தர்மரை
ப்ரணமாமி : வணங்குகிறேன்.
-----------------------------------------------
தத்துவங்களை உரைத்த ஸ்ரீ தரும தீர்த்தங்கரரை
நான் வணங்குகிறேன்.
ஒன்பது பதார்த்தங்கள்
:
உயிர், புற்கலம்,
ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு, பந்தம், மோக்ஷம், புண்ணியம், பாபம்.
ஏழு தத்துவங்கள்:
உயிர், புற்கலம்,
ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு, பந்தம், மோக்ஷம்.
ஆறு திரவியம் :
உயிர், புற்கலம், தன்மம், அதன்மம், ஆகாயம், காலம்.
ஐந்து அத்திகாயம்
:
உயிர், புற்கலம்,
தன்மம், அதன்மம், ஆகாயம்.
"காயம்"
என்றால் மிகு பிரதேசம் உடைத்தாயிருத்தல், காலத்திற்கு மிகு பிரதேசம் இல்லை. ஒவ்வொரு
கால அணுவும் ஒவ்வொரு பிரதேசம் உடையதாக இருப்பதால் அதனைக் காயத்துவம் இல்லாத காலம் என்று
பிரித்துக் குறிப்பிட்டார்.
-----------------------------------------------
16. யச்சக்ரவர்தீ புவி பஞ்சமோs பூச்
ச்ரி நந்தநோ த்வாதசகோ
குணாநாம் |
நிதி: ப்ரபூ: ஷோடசமோ ஜிநேந்த்ர:
தம் சாந்திநாதம் ப்ரணமாமி
நித்யம் ||
ஸ்ரீ சாந்திநாத தீர்த்தங்கராய
நமோஸ்து ! நமோஸ்து !!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
ய: : யார்
புவி : உலகில்
பஞ்சம : ஐந்தாவது
சக்ரவர்தீ : சக்ரவர்த்தியாகவும்
த்வாத்ஸக: : பன்னிரண்டாவது
ச்ரீ நந்தன: : காம தேவனாகவும்
குணாநாம் : குணங்களையுடையவனாகவும்
நிதி-ப்ரபு : எல்லா நிதிகளுக்கும் உரியவனாகவும் (ஆகிய)
ஷோடசம: : பதினாறாவது
ஜிநேந்த்ர : தீர்த்தங்கரனாகவும் (இருந்தாரோ)
தம் : அந்த
சாந்திநாதம் : சாந்தி நாதரை
நித்யம் : எப்போதும்
ப்ரணமாமி : வணங்குகிறேன்.
-----------------------------------------------
சக்ரவர்த்தியாகவும் காம தேவனாகவும் தீர்த்தங்கரருமாக
ஒரே பிறவியில் மூன்று பதவிகளை அடைந்திருந்த ஸ்ரீ சாந்தி நாதர் தீர்த்தங்கரரை நான் வணங்குகிறேன்.
-----------------------------------------------
17. ப்ரசம்ஸிதோ யோ ந பிபர்தி ஹர்ஷம்
விரோதிதோ யோ ந கரோத்ய
ஹர்ஷம் |
சீல வ்ரதாத் ப்ரஹ்மபதம் கதோ ய :
தம் குந்துநாதம் ப்ரணமாமி
நித்யம் ||
ஸ்ரீ குந்து தீர்த்தங்கராய
நமோஸ்து ! நமோஸ்து !!
+++++++++++++++++++++++++++++++++++
ய : யார்
ப்ரசம்ஸித: : புகழ்ந்து காலத்து
ஹர்ஷம் : மன மகிழ்ச்சி
ந பிபர்தி : அடையவில்லையோ
ய: : யார்
விரோதித: : பகை வந்த காலத்து
அஹர்ஷம் : கோபத்தை
ந கரோதி : செய்யவில்லையோ
ய: : யார்
சீல வ்ரதாத் : சீலம் மற்றும் விரதங்களினால்
ப்ரமஹ்ம்பதம் : பரமான்மா நிலையை
கத : அடைந்தாரோ
தம் : அந்த
குந்துநாதம் : குந்துநாதரை
நித்யம் : எப்போதும்
ப்ரணமாமி : வணங்குகிறேன்.
-----------------------------------------------
புகழ்ச்சியில் மகிழாதும் இகழ்ச்சியில் வருந்தாதும்
இருந்து சீல மற்றும் விரதங்களினால் பரமான்மா நிலையை அடைந்த ஸ்ரீ குந்து நாதர் தீர்த்தங்கரரை
நான் வணங்குகிறேன்.
-----------------------------------------------
18. ந ஸம்ஸ்துதோ ந ப்ரணுத: ஸபாயாம்
யஸ்ஸேவிதோs ந்தர்கண பூஜ்யமாந:
|
பதாச்ரிதை : கேவலி பிர்ஜிநஸ்ய
தேவாதிதேவம் ப்ரணமாம்யரம்
தம் ||
ஸ்ரீ அர தீர்த்தங்கராய
நமோஸ்து ! நமோஸ்து !!
+++++++++++++++++++++++++++++++++
ஜிநஸ்ய : ஜிநருடைய
ஸபாயாம் : சபையில் (சமவசரணத்தில்)
பத ஆச்ரிதை: : அரஹந்த பதவியை அடைந்த
கேவலிபி: : இதர கேவலிகளால்
ஸம்ஸ்துத : நல்ல துதியைச்
ந : செய்யப்படாதவரும்
ப்ரணுத : வணக்கத்தைச்
ந : செய்யப்படாதவரும்
ய: : எவர்
அந்தர் கண- : பன்னிரண்டு சபையினரால்
பூஜ்யமா ந: : பூஜிக்கப்பட்டவரும்
சேவித: : சேவிக்கப்பட்டவருமானவரோ
தம் : அந்த
தேவாதி தேவம் : தேவர்களுக்கெல்லாம்
தேவனான
அர : அரநாதரை
ப்ரணமாமி : வணங்குகிறேன்.
-----------------------------------------------
இதர கேவலிகளால் வணங்கப்படாதவரும் பன்னிரண்டு
சபையினரால் வணங்கப்படுபவருமான ஸ்ரீ அரநாதர் தீர்த்தங்கரரை நான் வணங்குகிறேன்.
-----------------------------------------------
19. ரத்ந த்ரயம் பூர்வபவாந்தரே யோ
வ்ரதம் பவித்ரம் க்ருதவாநசேஷம்
|
காயேந வாசா மனஸா விஸுத்தம்
தம் மல்லிநாதம் ப்ரணமாமி
நித்யம் ||
ஸ்ரீ மல்லி தீர்த்தங்கராய
நமோஸ்து ! நமோஸ்து !!
+++++++++++++++++++++++++++++++++++
ய: : யார்
பூர்வ : முன்
பவாந்தரே : பிறவியில்
அசேஷம் : குறையில்லாமல்
பவித்ரம் : புனிதமான
விஸுத்தம் : தூய்மையான
ரத்ந த்ரயம் : மும்மணி
வடிவமான
வ்ரதம் : விரதத்தை
க்ருதவாந் : முடித்தாரோ
தம் : அந்த
மல்லிநாதம் : மல்லிநாதரை
மனஸா : மனத்தாலும்
வசசா : வசனத்தாலும்
காயேந : காயத்தாலும்
நித்யம் : எப்போதும்
ப்ரணமாமி : வணங்குகிறேன்.
-----------------------------------------------
முன் பிறவியிலேயே புனிதமான நற்காட்சி, நல்ஞானம்,
நல்லொழுக்கம் எனும் மும்மணி விரதத்தை முடித்தாரோ அந்த ஸ்ரீ மல்லிநாதர் தீர்த்தங்கரரை
நான் மன வசன காய சுத்தத்துடன் வணங்குகிறேன்.
-----------------------------------------------
20. ப்ருவந்நம : ஸித்த பதாய வாக்ய
மித்ய க்ருஹீத்ய: ஸ்வயமேவ
லோச்சம் |
லௌகாந்திகேப்ய : ஸ்தவநம் நிசம்ய
வந்தே ஜிநேந்த்ரம் முநிஸுவ்ரதம்
தம்||
ஸ்ரீ முநிஸுவ்ரத தீர்த்தங்கராய
நமோஸ்து ! நமோஸ்து !!
+++++++++++++++++++++++++++++++++++
ய: : யார்
லௌகாந்திகேப்ய: : இலௌகாந்திக தேவர்களுடைய
ஸ்தவநம் : துதியைக்
நிசம்ய : கேட்டு
ஸித்த பதாய : ஸித்த பதவியின்
பொருட்டு
நம : தமஸ்கார
(நம: ஸித்தேப்ய)
இதி வாக்ய : (எனும்) மொழியைச்
ப்ருவந் : சொல்லித்
ஸ்வயமேவ : தானே
லோச்சம் : மயிர் பறித்தலைச்
க்ரூஹீத்ய: : செய்தாரோ
தம் : அந்த
முநீஸுவ்ரதம் : முனிசுவிரத
ஜிநேந்த்ரம் : ஜிநரை
வந்தே : வந்திக்கிறேன்.
-----------------------------------------------
எவர் இலௌகாந்திக தேவர்களின் துதியைக் கேட்டு
' நம ஸித்தேப்ய ' என்று மொழிந்து துறவு ஏற்று சித்த பதவியை அடைந்தாரோ அந்த ஸ்ரீ முனிசுவிரதர்
தீர்த்தங்கரரை நான் வணங்குகிறேன்.
-----------------------------------------------
21. வித்யாவதே தீர்த்தகராய தஸ்மை
ஆஹாரதாநம் தததோ விசேஷாத்
|
க்ருஹே ஜநஸ்யா ஜநி ரத்நவ்ருஷ்டி:
நமிம் ஜிநந்தம் சரணம்
வ்ரஜாமி ||
ஸ்ரீ நமி தீர்த்தங்கராய
நமோஸ்து ! நமோஸ்து !!
+++++++++++++++++++++++
தஸ்மை : எந்த
வித்யாவதே : நான்கு ஞானங்களுடைய
தீர்த்தகராய : தீர்த்தங்கரருக்காக
விசேஷாத் : நவதா பக்தியுடன்
ஆஹார தாநம் : ஆஹார தானத்தை
தததோ : தரும்போது
ஜநஸ்யக்ருஹே : அரண்மனையில்
ரத்ந வ்ருஷ்டி: : ரத்ன மாரி
அஜநி : பொழிந்ததோ
தம் : அந்த
நமிம் ஜிநம் : நமிநாத
ஜிநருடைய
சரணம் : திருவடிகளை
வ்ரஜாமி : அடைகிறேன்.
-----------------------------------------------
எந்த தீர்த்தங்கரருக்கு ஆஹாரதானம் கொடுத்ததால்
இரத்ன மழை பொழிந்ததோ அந்த ஸ்ரீ நமிநாதர் தீர்த்தங்கரரை நான் வணங்குகிறேன்.
நான்கு ஞானங்கள்:-
மதி, சுருதி, அவதி,
மனப்பர்யயம். தீட்சை எடுத்த பிறகு எல்லா தீர்த்தங்கரருக்கும்
நான்கு ஞானங்கள் இருக்கும்.
-----------------------------------------------
22. ராஜீமதிம் ய : ப்ரவிஹாய மோக்ஷே
ஸ்திதிம் சகாராபுநராகமாய
|
ஜீவேஷு ஸர்வேஷு தயாம் ததா ந :
தம் நேமிநாதம் ப்ரணமாமி
நித்யம் ||
ஸ்ரீ நேமி தீர்த்தங்கராய நமோஸ்து ! நமோஸ்து ||
+++++++++++++++++++++++++++++++
ய : யார்
ஸர்வேஷு : எல்லா
ஜீவேஷு : உயிர்களிடமும்
தயாம் : அருளைக்
ததா ந: : கொண்டிருக்கும் போது
ராஜீமதீம் : ராஜீமதியை
ப்ரவிஹாய : நீக்கி விட்டு
அபுநராகமாய : மீண்டும்
வராத
மோக்ஷே : மோக்ஷத்தில்
ஸ்திதிம் : நிலைப்பதை
சகார : அடைந்தாரோ
தம் : அந்த
நேமிநாதம் : நேமிநாதரை
நித்யம் : எப்போதும்
ப்ரணமாமி : வணங்குகிறேன்.
-----------------------------------------------
உயிர்களிடத்து அன்பு கொண்டு தான் மணக்க இருந்த
ராஜீமதியைக் கைவிட்டு பிறவியில் என்றும் வராத மோக்ஷ நிலையை அடைந்த ஸ்ரீ நேமிநாதர் தீர்த்தங்கரரை
நான் வணங்குகிறேன்.
மண ஊர்வலத்தில் வந்த நேமிநாதர் வைராக்யம்
அடைந்த கதையை ஆசிரியர் இங்கு நினைவு கூறுகிறார்.
-----------------------------------------------
23. ஸர்பாதிராஜை' : கமடாரிதோ யை
த்யாந ஸ்திதஸ்யைவ பணா
விதாநை : |
யஸ்யோபஸர்கம் நிரவர்தயத் தம்
நமாமி பார்ச்வம் மஹதாSS
தரேண ||
ஸ்ரீ பார்சுவ தீர்த்தங்கராய
நமோஸ்து ! நமோஸ்து !!
+++++++++++++++++++++++++++++++++
யஸ்ய : எவருடைய
த்யாநஸ்தி தஸ்ய : தியான
காலத்து
கமட- : கமடனான
அரித- :விரோதியினால்
உபஸர்கம் : செய்யப்பட்ட
உபஸர்கத்தை
பணா விதாநை: : பணாமுடி விரித்து
யை: : எந்த
ஸர்பா திராஜை : தரணேந்திரனால்
நிரவர்தயத் : விலக்கப்பட்டதோ
தம் : அந்த
பார்ச்வம் : பார்சுவநாதரை
மஹத் : மிகுந்த
ஆதரணே : பணிவுடன்
நமாமி : வணங்குகிறேன்.
-----------------------------------------------
எந்தத் தீர்த்தங்கரருக்கு கமடனால் செய்யப்பட்ட
உபஸர்கம் தரணேந்திரனால் நீக்கப்பட்டதோ அந்த ஸ்ரீ பார்சுவநாதர் தீர்த்தங்கரரை நான் பணிவுடன்
வணங்குகிறேன்.
-----------------------------------------------
24. பவார்ணவே ஜந்து ஸமூஹமேந
மாகர்ஷயாமா ஸஹிதர்ம
போதாத் |
மஜ்ஜம் தமுத்த்ருத்ய ய ஏந ஸோபி
தம் வீர நாதம் ப்ரணமாமி
நித்யம் ||
ஸ்ரீ வீரவர்த்தமான தீர்த்தங்கராய
நமோஸ்து ! நமோஸ்து !!
+++++++++++++++++++++++++++++++
ய: ஏ நஸா : பாபத்தினால்
யார்
பவார்ணவே : பிறவிக் கடலில்
மஜ்ஜம்தம் : மூழ்கும்
ஜந்து சமூஹகம் : உயிர்களை
தர்மம்- : அறம் எனும்
போதாத்- : ஓடத்திலேற்றிக்
உத்த்ருத்ய : காப்பாற்றி
ஏ நம் : அவ் உயிர்களைக்
ஆகர்ஷயாமாஸ் : தப்பிக்க
வைத்தாரோ
தம் : அந்த
வீரநாதம் : மகாவீரரை
நித்யம் : எப்போதும்
ப்ரணமாமி : வணங்குகிறேன்.
-----------------------------------------------
பிறவி உயிர்களை அறத்தோணியில் ஏற்றி மோக்ஷத்தில்
கொண்டு சேர்த்த ஸ்ரீ மகாவீரர் தீர்த்தங்கரரை நான் வணங்குகிறேன்.
-----------------------------------------------
25. யோ தர்மம் தசதா கரோதி புருஷ : ஸ்த்ரீவா ச்ருதோபஸ்க்ருதம்,
ஸர்வஜ்ஞத்வநி ஸம்பவம்
த்ரிகரண வ்யாபார சுத்த்யாSநிசம் |
பவ்யாநாம் ஜய மாலயா விமலயா புஷ்பாஞ்ஜலிம் ஸ்தாபயந்
நித்யம் ஸ : ச்ரிய மாத
நோதி பவதி ஸ்வர்காபவர்க ஸ்திதி: ||
++++++++++++++++++++++++++++++++++
ய : :எந்த
புருஷ: : ஆண்
ஸ்த்ரீ : பெண்
விமலயா : நிர்மலமான
ஜயமாலயா : ஜயமாலையுடன்
புஷ்பாஞ்ஜலிம் : புஷ்பாஞ்ஜலியைச்
ஸ்தாபயந் : சமர்ப்பிக்கின்றாரோ
த்ரிகரண- : மன வசன காய
வ்யாபார : செயல்
சுத்தியா : தூய்மையுடன்
பவ்யாநாம் : பவ்யர்களுக்கு
க்ருதாபஸ் க்ருதம் : உதவும்
ஸர்வஜ்ஞ : முழுதுணர்ந்தோன்
த்வநி : திவ்விய தொனியில்
ஸம்பவம் : உண்டான
தஸதா தர்மம் : பத்து வகையான
தர்மத்தை
அநிஸம் : எப்போதும்
கரோதி : செய்கின்றாரோ
ஸ: : அவர்
நித்யம் : எப்போதும்
ஸ்வர்க : சொர்கம் (மற்றும்)
அபவர்கம் : மோக்ஷம்
ஸ்திதி : அடையும்
ஸகலாம் : எல்லாவகை
ச்ரியம் : வைபவங்களையும்
ஆதநோதி : அடைகிறா்.
-----------------------------------------------
எவர் மன வசன காய சுத்தியுடன் ஜயமாலை புஷ்பாஞ்சலியுடன் தச தர்மத்தைச் செய்கிறாரோ, அவர் ஸ்வர்ம மற்றும்
மோக்ஷ சுகத்தை அடைகிறார்.
பெரிய புஷ்பாஞ்சலி
முடிவுற்றது, நாளை சிறிய புஷ்பாஞ்சலி வெளி வரும்.
-----------------------------------------------
சிறிய புஷ்பாஞ்சலி
[மூலமும் தமிழ் உரையும்]
தர்சநம் தேவதேவஸ்ய தர்சநம் பாபநாசநம் |
தர்சநம் ஸ்வர்க ஸோபாநம் தர்ஸநம் மோக்ஷஸாதநம் ||
+++++++++++++++++++++++++++++++
தேவஸ்ய : ஜிந தேவருடைய
தர்சநம் : தரிசனமானது
தேவ : மிகச் சிறப்புடையதாகும்
; (ஏனெனில், அவருடைய தரிசனம்)
பாப- : பாபங்களைக்
நாசநம் : கெடுப்பது
தர்சநம் : (அவருடைய) தரிசனம்
ஸ்வர்க- : சொர்க்கத்திற்குப்
ஸோபாநம் : படியாக அமைவது
;
தர்சநம் : (அவருடைய) தரிசனம்
மோக்ஷ- : மோக்ஷம் (அடைய)
ஸாதநம் : சாதனமாக அமைவது.
-----------------------------------------------
ஜிந பகவானை எப்போதும் தரிசிப்பது (வணங்குவது)
சிறந்ததாகும். ஏனெனில் செய்த பாபங்கள் அவரைத் தரிசிப்பதால் கெடுகின்றன ; ஸ்வர்கமும்
காலாந்தரத்தில் மோக்ஷமும் கிடைக்கின்றன.
-----------------------------------------------
1. த்ரதசராஜ பூஜிதம் வ்ருஷபநாத மூர்ஜிதம் |
கநக கேதகைர்யஜே
பவ விநாசகம் ஜிநம் ||
ஸ்ரீ விருஷப
தீர்த்தங்கராய புஷ்பாஞ்சலி:
++++++++++++++++++++++++++++++++++++++
த்ரிதச- : சொர்க்கத்தின்
ராஜ- : இந்திரர்களால்
பூஜிதம் : பூஜிக்கப்படுபவரும்
பவ விநாசகம் : பிறவியைக் கெடுத்தவரும்
ஊர்ஜிதம் : பேரொளியோடு கூடியவரும்
வ்ருஷப நாதம் : ஆதிநாதருமான
ஜிநம் : ஜிநரை
கநக- : பொன்
கேதகை: :- மலர்களால்
யஜே : அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
தேவேந்திரர் முதலானவர்களால் வணங்கப்படுகிறவரும், பிறவிகளை ஒழித்தவருமான ஸ்ரீ
விருஷப தீர்த்தங்கரரைப் பொன் மலர்களால் நான் அர்ச்சிக்கின்றேன்.
-----------------------------------------------
2. அஜிதநாம தேயகம் புவந ஸார ஸௌக்யகம் |
விகச சம்பகைர்
யஜே பவ விநாசகம் ஜிநம் ||
ஸ்ரீ அஜித
தீர்த்தங்கராய புஷ்பாஞ்சலி :
++++++++++++++++++++++++++++++++++++
புவந- : மூவுலகத்தின்
ஸார- : மிகவுயர்ந்த (அநந்த)
ஸௌக்யகம் : சுகத்தால் நிறைந்தவரும்
பவ விநாசகம் : பிறவியைக் கெடுத்தவருமான
அஜித- : அஜித எனும்
நாம தேயகம் : பெயருடைய
ஜிநம் : ஜிநரை
விகச- : அழகுள்ள
சம்பகை : :- செண்பக மலர்களால்
யஜே : அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
அனந்த சுகத்தை உடையவரும் பிறவிகளை ஒழித்தவருமான ஸ்ரீ அஜித நாதர் தீர்த்தங்கரரை செண்பக மலர்களால் நான் அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
3. ஸகல போத ஸம்யுதம் தமிஹ ஸம்பவம் யஜே |
ஸுரபி ஸிந்து
வாரகைர் பவ விநாசகம் ஜிநம் ||
ஸ்ரீ ஸம்பவ
தீர்த்தங்கராய புஷ்பாஞ்சலி :
++++++++++++++++++++++++++++++++++
ஸகல போத- : முழுதுணர் ஞானத்தோடு
ஸ்ம்யுதம் : கூடியவரும்
பவ விநாசகம் : பிறவியைக் கெடுத்தவருமான
தம் : அந்த
ஸம்பவம் : ஸம்பவநாத
ஜிநம் : ஜிநரை
இஹ: : இங்கே
ஸுரபி- : நறுமணமுள்ள
ஸிந்துவராகை : ஸிந்துவார மலர்களால்
யஜே : அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
முருதுணர் ஞானத்தைப் பெற்றவரும், பிறவிகளை ஒழித்தவருமான ஸ்ரீ ஸம்பவ நாதர் தீர்த்தங்கரரை
நறுமணமுள்ள ஸிந்துவார (நொச்சி) மலர்களால் நான் அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
3. ஸகல போத ஸம்யுதம் தமிஹ ஸம்பவம் யஜே |
ஸுரபி ஸிந்து
வாரகைர் பவ விநாசகம் ஜிநம் ||
ஸ்ரீ ஸம்பவ
தீர்த்தங்கராய புஷ்பாஞ்சலி :
++++++++++++++++++++++++++++++++++
ஸகல
போத- : முழுதுணர் ஞானத்தோடு
ஸ்ம்யுதம் : கூடியவரும்
பவ
விநாசகம் : பிறவியைக் கெடுத்தவருமான
தம் : அந்த
ஸம்பவம்
: ஸம்பவநாத
ஜிநம் : ஜிநரை
இஹ: : இங்கே
ஸுரபி- : நறுமணமுள்ள
ஸிந்துவராகை
: ஸிந்துவார மலர்களால்
யஜே
: அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
முருதுணர் ஞானத்தைப் பெற்றவரும், பிறவிகளை ஒழித்தவருமான ஸ்ரீ ஸம்பவ நாதர் தீர்த்தங்கரரை
நறுமணமுள்ள ஸிந்துவார (நொச்சி) மலர்களால் நான் அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
4. வரகுணௌக ஸம்யுதம் தமபிநந்தநம் யஜே|
வகுள மாலயா
ஸதா பவ விநாசகம் ஜிநம் ||
ஸ்ரீ அபிநந்தன
தீர்த்தங்கராய புஷ்பாஞ்சலி :
+++++++++++++++++++++++++++++++++++
வர- : உயர்ந்த
குணௌக- குண சமூகங்களால்
ஸம்யுதம் : கூடியவரும்
பவ விநாசகம் : பிறவியைக் கெடுத்தவருமான
தம் : அந்த
அபிநந்தநம் : அபிநந்தன
ஜிநம் : ஜிநரை
ஸதா : எப்போதும்
வகுள மாலயா : மகிழம் பூக்களால்
யஜே : அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
உயர்ந்த குணங்களால் நிறைந்தவரும், பிறவிகளை ஒழித்தவருமான ஸ்ரீ அபிநந்தனர் தீர்த்தங்கரரை
மகிழம் பூக்களால் நான் அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
5. ஸுமதி நாமகம் பரைஸ் ஸுரபி வ்ருக்ஷ புஷ்பகை: |
வரகுணாதிபம் யஜே பவ விநாசகம் ஜிநம் ||
ஸ்ரீ ஸுமதி
தீர்த்தங்கராய புஷ்பாஞ்சலி :
++++++++++++++++++++++++++++++++++
வர- : உயர்ந்த
குண- : குணங்களுக்கு
அதிபம் : சுவாமியானவரும்
பவ விநாசகம் : பிறவியைக் கெடுத்தவருமான
ஸுமதி : சுமதி (எனும்)
நாமகம் : பெயருடைய
ஜிநம் : ஜிநரை (சுமதி நாதரை)
பரை: : உயர்ந்த
ஸுரபி : சுரபி (எனும்)
வ்ருஷ- :மரத்தின்
புஷ்பகை: :- மலர்களால்
யஜே : அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
உயர்ந்த குணங்களுக்கு இருப்பிடமானவரும், பிறவிகளை ஒழித்தவருமான ஸ்ரீ சுமதிநாதர்
தீர்த்தங்கரரை சுரபி மலர்களால் நான் அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
6. புவந நாத வல்லபைர் விநுத மம்புஜ ப்ரபம் |
நவ ஸிதாம்புஜைர்
யஜே பவ விநாசகம் ஜிநம் ||
ஸ்ரீ பத்மப்ரப
தீர்த்தங்கராய புஷ்பாஞ்சலி :
+++++++++++++++++++++++++++++++++++
புவந நாத- : அரசருடைய/ தேவர்களுடைய
வல்லபை : : சுவாமியான சக்ரவர்த்தி
தேவேந்திரர்களால்
விநுதம் : வணங்கப் படுபவரும்
பவ விநாசகம் : பிறவியைக் கெடுத்தவரும்
அம்புஜ- : தாமரை (பத்மம்) ஒத்த
ப்ரபம்- : காந்தியுடையவருமான
ஜிநம் : ஜிநரை (பத்மபிரபரை)
நவ- : புதிய
ஸித- : வெண்மையான
அம்புஜை: : தாமரை மலர்களால்
யஜே : அர்ச்சிக்கிறேன்.
----------------------------------------------- -
சக்கரவர்த்தி முதலானோரால் வணங்கப்படுகிறவரும், பிறவிகளை ஒழித்தவருமான ஸ்ரீ பத்மபிரபர்
தீர்த்தங்கரரை புதிய வெண்தாமரை மலர்களால் அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
7. புவி ஸுபார்ச்வ நாமகம் ரஹித காதி கர்மகம் |
பஹு யஜே ஹி
பாடலைர் பவ விநாசகம் ஜிநம் ||
ஸ்ரீ ஸுபார்ச்வ
தீர்த்தங்கராய புஷ்பாஞ்சலி :
++++++++++++++++++++++++++++++++++++++++++
புவி : உலகில்
ஸுபார்ச்வ : சுபார்சுவ எனும்
நாமகம் : பெயருடையவரும்
ரஹித- காதி- கர்மகம் : காதி வினைகளை கெடுத்தவரும்
பவ விநாசகம் : பிறவிகளைக் கெடுத்தவருமான
ஜிநம் : ஜிநரை
பாடலை: : செம்மையான பாதிரிப்
பூக்களால்
பஹு : மீண்டும் மீண்டும்
யஜே : அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
காதி வினைகளைக் கெடுத்தவரும், பிறவிகளை ஒழித்தவருமான ஸ்ரீ சுபார்சுவர் தீர்த்தங்கரரைப் பாதிரி மலர்களால்
அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
8. விதித முக்ய ஸௌரபை: ஸுரபி நாம சம்பகை :|
வரசசி ப்ரபம்
யஜே பவ விநாசகம் ஜிநம் ||
ஸ்ரீ சந்த்ரப்ரப
தீர்த்தங்கராய புஷ்பாஞ்சலி :
+++++++++++++++++++++++++++++++++++
பவ விநாசகம் : பிறவிகளைக் கெடுத்தவரும்
வர- : உயர்ந்த (பூர்ண)
சசி- : சந்திரனைப் போன்ற
ப்ரபம் : காந்தியையுடையவருமான
ஜிநம் : ஜிநரை (சந்திரபிரபுவை)
விதித முக்ய- : நறுமணத்தினால்
ஸௌரபை: : புகழ்பெற்ற
ஸுரபி- : சுரபி எனும்
நாம- : பெயருடைய
சம்பகை : : செண்பக மலர்களால்
யஜே : அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
சந்திரனைப் போன்ற காந்தியையுடையவரும், பிறவிகளை ஒழித்தவருமான ஸ்ரீ சந்திர பிரபு
தீர்த்தங்கரரைச் செண்பக மலர்களால் அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
10. ப்ரசுர ப்ருங்க ஸாரகைர் விகச நீலகைரவை:|
ஜகதி சீதளம்
யஜே பவ விநாசகம் ஜிநம் ||
ஸ்ரீ
சீதளநாத தீர்த்தங்கராய புஷ்பாஞ்சலி :
+++++++++++++++++++++++++++++++++++++
பவ விநாசகம் : பிறவிகளைக் கெடுத்தவரும்
ஜகதி : உலகிற்கு
சீதளம் : சாந்தி செய்பவருமான
ஜிநம் : ஜிநரை (சீதள நாதரை)
ப்ரசுர- : மிகுதியான
ப்ருங்க- : வண்டுகள்
ஸாரகை : மொய்க்கும்
விகச- : மலர்ந்த
நீல- : நீல நிறமுள்ள
கைரவை: : தாமரை மலர்களால்
யஜே : அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
உயிர்களுக்குச்
சாந்தியைத் தருபவரும், பிறவிகளை ஒழித்தவருமான ஸ்ரீ சீதளநாதர் தீர்த்தங்கரரை நீலோத்பல
மலர்களால் நான் அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
11. விபுத சித்த நந்தநம் க்ஷிதிப விஷ்ணு நந்தநம்
|
குரவகைர்
யஜே ஸதா பவ விநாசகம் ஜிநம் ||
ஸ்ரீ
ஸ்ரேயாம்ஸ தீர்த்தங்கராய புஷ்பாஞ்சலி :
++++++++++++++++++++++++++++++++++
க்ஷிதிப- : அரசனான
விஷ்ணு- : விஷ்ணுவினுடைய
நந்தநம் : மகனானவரும்
விபுத- : தேவர்/ வித்வான்கள்
சித்த- : மனத்தை
நந்தநம் : மகிழ்விப்பவரும்
பவ விநாசகம் : பிறவியைக் கெடுத்தவருமான
ஜிநம் : ஜிநரை (சிரேயாம்ஸரை)
குரவகை : குறிஞ்சி மலர்களால்
யஜே : அர்ச்சிக்கிறேன்.
----------------------------------------------- -
ஞானியரை
மகிழ்விப்பவரும், பிறவிகளை ஒழித்தவருமான ஸ்ரீ சிரேயாம்ஸ நாதர் தீர்த்தங்கரரை நான் குறிஞ்சி
மலர்களால் அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
-----------------------------------------------
12. அருண பத்ம காந்திகம் ஸுகுணவாஸு பூஜ்யகம் |
ப்ரவர குந்தகைர்
யஜே பவ விநாசகம் ஜிநம் ||
ஸ்ரீ வாஸுபூஜ்ய
தீர்த்தங்கராய புஷ்பாஞ்சலி :
+++++++++++++++++++++++++++++++++
அருண- : இளங்காலை சூரியனைப் போல
பத்ம- : செம்மை நிற தாமரையை ஒத்த
காந்திகம் : ஒளியையுடையவரும்
பவ விநாசகம் : பிறவிகளைக் கெடுத்தவரும்
ஸுகுண : நற்குணங்களால் நிறைந்தவரும்
வாஸு பூஜ்யகம் : தேவர்களால் வணங்கப் படுகின்றவருமான
ஜிநம் : ஜிநரை (வாஸு பூஜ்யரை)
ப்ரவர- : சிறந்த
குந்தகை: : முல்லை மலர்களால்
யஜே : அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
நற்குணங்களால் நிறைந்தவரும், பிறவிகளை ஒழித்தவருமான ஸ்ரீ வாசுபூஜ்யர் தீர்த்தங்கரரை
சிறந்த முல்லை மலர்களால் நான் அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
13. விமல ஸௌக்ய ஸம்யுதம் விமல நாமகம் யஜே |
நமி நமேரு
புஷ்பகைர் பவ விநாசகம் ஜிநம் ||
ஸ்ரீ விமல தீர்த்தங்கராய புஷ்பாஞ்சலி :
++++++++++++++++++++++++++++
விமல- : நிர்மலமான
ஸௌக்ய- : சுகத்தோடு
ஸம்யுதம் : கூடியவரும்
பவ விநாசகம் : பிறவிகளைக் கெடுத்தவரும்
விமல- : விமல எனும்
நாமகம் : பெயரையுடையவருமான
ஜிநம் : ஜிநரை (விமலரை)
நமி நமேரு : தேவதாரு ( சுரபுன்னை) மலர்களால்
யஜே : அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
அனந்த சுகத்தையுடையவரும், பிறவிகளைக் கெடுத்தவருமான ஸ்ரீ விமலநாதர் தீர்த்தங்கரரை
தேவதாரு மலர்களால் நான் அர்ச்சிக்கிறேன்.
14. வரசரித்ர பூஷணம் நதமநந்த ஸஞ்ஜ்ஞகம் |
கநக பத்மகைர்
யஜே பவ விநாசகம் ஜிநம் ||
ஸ்ரீ அநந்த தீர்த்தங்கராய புஷ்பாஞ்சலி :
++++++++++++++++++++++++
வர- : சிறந்த
சரித்ர- : சாரித்திர மெனும்
பூஷணம் : அணியை (ஆபரணத்தை) யுடையவரும்
நதம் : விநயமுடையவரும்
பவ விநாசகம் : பிறவிகளைக் கெடுத்தவரும்
அநந்த : ' அநந்த ' எனும்
ஸஞ்ஜ்ஞகம் : பெயரையுடைய வருமான
ஜிநம் : ஜிநரை (அனந்தரை)
கநக- : பொன்னாலான
பத்மகை: : தாமரை மலர்களால்
யஜே : அர்ச்சிக்கிறேன்.
=-----------------------------------------------
அனந்த சாரித்திரத்தையுடையவரும், பிறவிகளை ஒழித்தவருமான ஸ்ரீ அனந்தநாதர் தீர்த்தங்கரரை
நான் பொற்றாமரை மலர்களால் அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
15. நிகிலவஸ்து போதகம் விதித தர்ம நாயகம் |
நவகதம்பகைர்
யஜே பவ விநாசகம் ஜிநம் ||
ஸ்ரீ தர்ம தீர்த்தங்கராய புஷ்பாஞ்சலி :
+++++++++++++++++++++++++
நிகில- : எல்லாப்
வஸ்து- : பொருள்களையும்
போதகம் : அறிபவரும்
பவ விநாசகம் : பிறவிகளைக் கெடுத்தவரும்
விதித- : புகழுடையவரும்
தர்ம- : அறத்துக்கு
நாயகம் : வழிகாட்டுபவருமான
ஜிநம் : ஜிநரை (தர்மரை)
நவ- : புதிய
கதம்பகை: : கதம்ப மலர்களால்
யஜே : அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
அனைத்துப் பொருள்களையும் ஒரு கணத்தில் ஒருசேர அறிபவரும் பிறவிகளை ஒழித்தவருமான
ஸ்ரீ தர்மநாதர் தீர்த்தங்கரரை நான் புதிய கதம்ப மலர்களால் அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
16. புவந வர்தி கீர்திகம் பரம சாந்தி நாமகம் |
விசகிலைர்
யஜே ஸதா பவ விநாசகம் ஜிநம் ||
ஸ்ரீ சாந்தி
தீர்த்தங்கராய புஷ்பாஞ்சலி :
++++++++++++++++++++++++++++++++++++
புவந- : மூவுலகிலும்
வர்தி- : பரவிய
கீர்திகம் : புகழையுடையவரும்
பவ விநாசகம் : பிறவிகளைக் கெடுத்தவரும்
பரம- : உயர்ந்த
சாந்தி- : சாந்தி எனும்
நாமகம் : பெயரையுடையவருமான
ஜிநம் : ஜிநரை ( சாந்தி ஜிநரை)
ஸதா : எப்போதும்
விசகிலை: : மல்லிகை மலர்களால்
யஜே : அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
மூவுலகிலும் பரவிய புகழையுடையவரும், பிறவிகளை ஒழித்தவருமான ஸ்ரீ சாந்திநாதர்
தீர்த்தங்கரரை மல்லிகை மலர்களால் நான் அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
17. திலக புஷ்ப தாமகை: ப்ரசுர புண்ய காரகை : |
ஜகதி குந்துமா
யஜே பவ விநாசகம் ஜிநம் ||
ஸ்ரீ குந்து தீர்த்தங்கராய புஷ்பாஞ்சலி :
++++++++++++++++++++++++++++++
பவ விநாசகம் : பிறவிகளைக் கெடுத்தவரும்
ஜகதி- : உலகில்
குந்துமா- : சிற்றுயிர்களையும்
பேணும்
ஜிநம் : ஜிநரை (குந்து ஜிநரை)
ப்ரசுர- : மிகவும்
புண்ய- : புண்ணியத்திற்கு
காரகை: : காரணமான
திலக புஷ்ப- : திலக மலர்
தாமகை: மாலைகளால்
யஜே : அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
சிற்றுயிர்களுக்கும் அருளுபவரும், பிறவிகளை ஒழித்தவருமான ஸ்ரீ குந்துநாதர் தீர்த்தங்கரரை
நான் திலக மலர்களால் அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
18. அரம நங்க வர்ஜிதம் ஸகல பவ்ய வந்திதம் |
குரவகைர்
யஜே ஸதா பவ விநாசகம் ஜிநம் ||
ஸ்ரீ அர
தீர்த்தங்கராய புஷ்பாஞ்சலி :
++++++++++++++++++++++++++++++++++++
அநங்க- : மன்மதனை
வர்ஜிதம் : வென்றவரும்
ஸகல- : எல்லா
பவ்ய- : பவ்வியர்களாலும்
வந்திதம் : வணங்கப்படுபவரும்
பவ விநாசகம் : பிறவிகளைக் கெடுத்தவருமான
அரம் ஜிநம் : அர ஜிநரை
ஸதா : எப்போதும்
குரவகை: : குறிஞ்சி மலர்களால்
யஜே : அர்ச்சிக்கிறேன்.
----------------------------------------------- -
காமனை வென்றவரும், பிறவிகளை ஒழித்தவருமான ஸ்ரீ அரநாதர் தீர்த்தங்கரரைக் குறிஞ்சி
மலர்களால் நான் அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
19. தமிஹ மல்லி நாமகம் த்ரிஜகதீச நாயகம் |
கூடஜ புஷ்பகைர்
யஜே பவ விநாசகம் ஜிநம் ||
ஸ்ரீ மல்லி தீர்த்தங்கராய புஷ்பாஞ்சலி :
+++++++++++++++++++++++++++
இஹ- : இவ்வுலகில்
த்ரிஜகத்- : மூவுலக
ஈச- : சுவாமி (அருகர்களுள்)
நாயகம் : முதன்மையானவரும்
பவ விநாசகம் : பிறவிகளைக் கெடுத்தவருமான
தம் : அந்த
மல்லி- : மல்லி (எனும்)
நாமகம் : பெயரையுடையவருமான
ஜிநம் : ஜிநரை (மல்லி ஜிநரை)
கூடஜ- : மலை மல்லி
புஷ்பகை: : மலர்களால்
யஜே : அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
அருகர்களுள் முதன்மையானவரும், பிறவிகளை ஒழித்தவருமான ஸ்ரீ மல்லிநாதர் தீர்த்தங்கரரை
நான் மலை மல்லி மலர்களால் அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
20. குணநிதிம் சஸுவ்ரதம் வரவிநேய ஸுவ்ரதம் |
ஸுமுச குந்தகைர் யஜே பவ விநாசகம் ஜிநம் ||
ஸ்ரீ முனிஸுவ்ரத தீர்த்தங்கராய புஷ்பாஞ்சலி :
++++++++++++++++++++++++++
குண நிதிம் : குணங்களால் நிறைந்தவரும்
ச : மற்றும்
வர- : உயர்ந்த
விநேய- : சீடர்கள் (சாதுக்கள்)
ஸுவ்ரதம் : நல்ல விரதங்களைத் தரிக்க காரணமானவரும்
பவ விநாசகம் : பிறவிகளைக் கெடுத்தவருமான
ஸுவ்ரதம் : சுவிரத
ஜிநம் : ஜிநரை
ஸுமுச- : மலர்ந்த
குந்தகை: : முல்லை மலர்களால்
யஜே : அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
குணங்களால்
நிறைந்தவரும், பிறவிகளை ஒழித்தவருமான ஸ்ரீ முனிசுவிரதர் தீர்த்தங்கரரை நான் முல்லை
மலர்களால் அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
-----------------------------------------------
21. புவி நமிம் ஸுநாமகம் பவபயோதி பாரகம் |
விமலகுப்ஜகைர்
யஜே பவ விநாசகம் ஜிநம் ||
ஸ்ரீ நமி
தீர்த்தங்கராய புஷ்பாஞ்சலி :
+++++++++++++++++++++++++++
பவ- : பிறவி (எனும்)
பயோதி- : பெருங் கடலை
பாரகம் : கடந்தவரும்
பவ விநாசகம் : பிறவிகளைக் கெடுத்தவரும்
புவி- : உலகில்
நமிம் : நமி எனும்
ஸுநாமகம் : சிறந்த பெயரையுடையவருமான
ஜிநம் : ஜிநரை (நமி ஜிநரை)
விமல- : நிர்மலமான
குப்ஜகை: : குப்ஜ மலர்களால்
யஜே : அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
பிறவிப் பெருங்கடலைக் கடந்தவரும், பிறவிகளை ஒழித்தவருமான ஸ்ரீ நமிநாதர் தீர்த்தங்கரரை
நான் குப்ஜ மலர்களால் அர்ச்சிக்கிறேன்.
22. சசிகரௌக கீர்திகம் விசத நேமி நாயகம் |
நவகதம்பகைர்
யஜே பவ விநாசகம் ஜிநம் ||
ஸ்ரீ நேமி
தீர்த்தங்கராய புஷ்பாஞ்சலி :
++++++++++++++++++++++++++++++++
சசி- : சந்திரனுடைய
கர- : கிரண
ஔக- : கூட்டங்களைப் போல்
கீர்திகம் : புகழையுடையவரும்
விசத- : நிர்மலமானவரும்
பவ விநாசகம் : பிறவிகளைக் கெடுத்தவரும்
நேமி- : தர்ம சக்கரத்தின்
நாயகம் : தலைவருமான
ஜிநம் : ஜிநரை (நேமி ஜிநரை)
நவ- : புதிய
கதம்பகை: : கதம்ப மலர்களால்
யஜே : அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
சந்திர
கிரணங்களைப் போன்ற புகழையுடையவரும், பிறவிகளை ஒழித்தவருமான ஸ்ரீ நேமிநாதர் தீர்த்தங்கரரை
நான் கதம்ப மலர்களால் அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
23.ப்ரவர பார்ச்வ நாமகம் ஹரித வர்ண தேஹகம் |
அருண பத்மகைர்
யஜே பவ விநாசகம் ஜிநம் ||
ஸ்ரீ பார்சுவ தீர்த்தங்கராய புஷ்பாஞ்சலி :
++++++++++++++++++++++++++++++++
ஹரித- : பச்சை
வர்ண- : நிற
தேஹகம் : திவ்விய உடலை உடையவரும்
பவ விநாசகம் : பிறவியைக் கெடுத்தவரும்
ப்ரவர- : சிறந்த
பார்ச்வ- : பார்சுவ (எனும்)
நாமகம் : பெயரையுடையவருமான
ஜிநம் :ஜிநரை (பார்சுவ நாதரை)
அருண- : சிவந்த
பத்மகை: : தாமரை மலர்களால்
யஜே : அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
பச்சை நிற பரம ஔதாரிக உடலை உடையவரும், பிறவிகளை ஒழித்தவருமான ஸ்ரீ பார்சுவநாதர்
தீர்த்தங்கரரை செந்தாமரை மலர்களால் நான் அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
--------------------------------------------------
24. ஸுபக வர்தமாநகம் விபுத வர்தமாநகம் |
க்ஷுரக புஷ்பகைர்
யஜே பவ விநாசகம் ஜிநம் ||
ஸ்ரீ வர்தமான தீர்த்தங்கராய புஷ்பாஞ்சலி :
++++++++++++++++++++++++++
ஸுபக- : புண்ணியத்தை/ புகழை
வர்தமானகம் : மிகுவிப்பவரும்
விபுத- : வித்வான்களை
வர்தமானகம் : மிகுவிப்பவரும்
பவ விநாசகம் : பிறவிகளைக் கெடுத்தவருமான
ஜிநம் : ஜிநரை (வர்தமான ஜிநரை)
க்ஷுரக : திலக
புஷ்பகை: : மலர்களால்
யஜே : அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
புண்ணியத்தை
மிகுவிப்பவரும், பிறவிகளை ஒழித்தவருமான ஸ்ரீ மகாவீர நாதர் தீர்த்தங்கரரை நான் திலக
மலர்களால் அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
25. இதி விஸ்வ லதாந்த கணேந ஜிநம்
விகதாகில
தோஷ ஸமூஹமஹம் |
வர முக்தி ஸுகாய ஸதா ஸுயஜே
பரிசுத்த
சரீர வசோ மநஸா ||
இதி : இப்படியாக
விகத- |
அகில- | எல்லாக்
தோஷ- | குற்றங்களை
ஸமூஹம் | யும்,கெடுத்த
|
ஜிநம் : ஜிந பகவானை
விஸ்வ- : எல்லா
லதாந்த கணேந- : மலர் வகைகளாலும்
பரிசுத்த : தூய
சரீர- : உடல்
வசோ : மொழி
மனஸா : மனத்தால்
வர- : உயர்ந்த
முக்தி- : மோக்ஷ
ஸுகாய : சுகத்தின் பொருட்டு
ஸதா : இடைவிடாமல்
அஹம் : நான்
ஸுயஜே : சிறப்பாக அர்ச்சிக்கிறேன்.
-----------------------------------------------
*பதினெட்டு குற்றங்களினின்றும் நீங்கியவர்களாகிய ஜிநர்களை , எல்லாவகை மலர்களாலும்
நான் மோக்ஷ சுகத்தை அடையும் பொருட்டு அர்ச்சிக்கிறேன்.
----------------------------------------------- -
பதினெட்டு குற்றங்கள் :
1. பசி : அருகன் உடலோடு கூடி இருந்தாலும் உணவு உண்பது இல்லை ; ஏனெனில்
அவருக்குப் பசி உண்டாவது இல்லை.
2. தாகம் : அவருக்கு நீர் வேட்கையும் இல்லை.
3. அச்சம் : அவருக்கு அச்ச உணர்வு தோன்றுவது இல்லை. அவரை யாரும் அச்சுறுத்த
முடியாது.
4. கோபம் : அருகருக்குக் கோபம் உண்டாவது இல்லை. ஏனெனில் அவரிடம் ஆசை இல்லை.
5. ஆசை : அருகருக்கு எந்தப் பொருள் மீதும் விருப்பு வெறுப்பு உணர்வு தோன்றுவது
இல்லை.
6. மோகம் : அருகருக்கு யாரிடமும், எந்தப் பொருளிடமும் மோகம் - மயக்கம்
இல்லை.
7. சிந்தனை : அருகர் எதனையும் சிந்திப்பது இல்லை.
8. மூப்பு : அருகர் உடல் முதுமை அடைவது இல்லை.
9. பிணி : அருகர் உடலில் பிணி தோன்றுவது இல்லை.
10. மரணம் : மீண்டும் பிறப்பதில்லை என்பதால், அருகருக்கு மரணம் இல்லை.
11. வேர்வை : அருகர் உடலில் வேர்வை தோன்றுவது இல்லை.
12. துக்கம் : எதைக் கண்டும் அருகருக்கு துக்க உணர்வு தோன்றுவது இல்லை.
13. மதம் : அருகருக்கு செருக்கு உணர்வு தோன்றுவது இல்லை.
14. ரதி : அருகருக்கு களிப்பு (மகிழ்ச்சி) உணர்வு தோன்றுவது இல்லை.
15. வியப்பு : உலகில் எந்தப் பொருளையும் கண்டு அவருக்கு வியப்புத் தோன்றுவது
இல்லை.
16. உறக்கம் : உடல் இருந்தாலும் அருகர் உறங்குவது இல்லை.
17. பிறப்பு : அருகர் மீண்டும் பிறப்பதில்லை.
18. உத்வேகம் : எதனாலும் அவருக்குச் சலனம் (அரதி) தோன்றுவதில்லை.
-----------------------------------------------------
ஸரஸ்வதி ஸ்தோத்ரம்
(மூலமும் தமிழ் உரையும்)
1. சந்த்ரார்க கோடி கடிதோஜ்ஜ்வல திவ்ய மூர்தே
ஸ்ரீ சந்த்ரிகா
கலித நிர்மல சுப்ரவாஸே |
காமார்த்ததே ச கலஹம்ஸ ஸமாதிரூடே
வாகீச்வரி
ப்ரதி திநம் மம ரக்ஷ தேவி ||
++++++++++++++++++++++++++++++++++++
சந்த்ரார்க கோடி : கோடி சந்திரர் சூரியர்களிலிருந்து
கடித்- : வரும்
உஜ்ஜவல- : ஒளிக்கு ஒப்பான
திவ்ய மூர்தே : ஒளியுடைய திருமேனி
உடையவளே !
ஸ்ரீ சந்த்ரிகா- : சந்திரனுடைய ஒளி போன்று
கலித- : உண்டான
நிர்மல- : குற்றங்கள் இல்லாத
சுப்ர- : வெண்மையான
வாஸே : ஆடையை உடையவளே !
காமார்த்ததே : விரும்பியவற்றைத் தருபவளே !
ச : மற்றும்
கல ஹம்ச : சிறந்த அன்னப்பறவை மேல்
ஸமா திரூடே : வீற்றிருப்பவளே !
வாகீச்வரி தேவி : ஏ ! ஜிநவாணி தேவி !
மம : என்னை
ப்ரதி திநம் : நாள்தோறும்
ரக்ஷ : காப்பாற்றுவாயாக !
--------------------------------------------------
ஏ சரஸ்வதி
தேவியே ! கோடி சந்திர,சூரியர்கள் தரும் ஒளியைக் காட்டிலும் ஒளியுடையவள் நீ. உனக்கு
வெள்ளை ஆடையாக இருப்பது சந்திரனுடைய ஒளி போல குற்றமில்லாததாகும். நீ விரும்பியவற்றை எல்லாம் தருபவள். என்னை நீ நாள்தோறும் காப்பாற்றுவாயாக
!
ஜிநவாணி என்பது பகவானுடைய திருமொழி (த்வயத்வனி) ஆகும். சரஸ்வதி என்று பெண்ணாகக் குறிப்பிடுவதும் அதனையே.
இங்கே பகவானுடைய திருமொழி ஒரு பெண்ணாக உருவகம் செய்யப்பட்டுள்ளது.(உண்மையில் சரஸ்வதி
என்று யாரும் இல்லை). சூரிய சந்திரர்கள் ஒளி தருவதைப் போல பகவானுடைய திருமொழி, ஞான
ஒளியைத் தருகிறது. கோடி சூரிய சந்திரர்களாலும், அந்த ஒளியைத் தரமுடியாது என்பது கருத்து.
திருமொழியைப் பெண்ணாக உருவகம் செய்ததால் அவளுக்கு வெள்ளாடை கூறப்பட்டுள்ளது. வெள்ளாடை
என்பது திருமொழியின் குற்றமில்லாத தன்மை. திருமொழி தரும் ஞானத்தால் விரும்பிய மோக்ஷ
சுகம் கிடைக்கிறது. அதனால் விரும்பியதைத் தரும் வாணி எனப்பட்டாள். விவேகம் அன்னமாக
உருவகம் செய்யப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம். பிற சுலோக கருத்துக்களையும் இது போல அறிந்து
கொள்க.
-----------------------------------------------------------------
-----------------------------------------------------------------
2. தேவாஸுரேந்த்ர நத மௌலி மணிப்ரரோசி
ஸ்ரீ மஞ்ஜரீ
நிபிட ரஞ்ஜித பாத பத்ம |
நீலாலகே ப்ரமத ஹஸ்தி ஸமாந யாநே
வாகீச்வரி
ப்ரதி திநம் மம ரக்ஷ தேவி ||
+++++++++++++++++++++++++++++
தேவ- : தேவேந்திரர் (மற்றும்)
அஸுரேந்த்ர- : அசுரேந்திரர்களால்
நத- : வணங்கப்பட்ட
மௌலி- : மகுடங்களுடைய
மணி ப்ரரோசி : மணிகளின் ஒளியினால்
ஸ்ரீ மஞ்ஜரி நிபிட : விளக்கமுற்றுத் திகழும்
ரஞ்ஜித பாத : அழகிய அடி
பத்மே : தாமரையையுடையவளே !
நீலாலகே : கருமை செறிந்த கூந்தலை உடையவளே !
ப்ரமத- : மதமுள்ள
ஹஸ்தி ஸமாந : யானையைப் போல
யாநே : அசைபவளே !
வாகீச்வரி தேவி : ஏ ! ஜிநவாணி தேவி !
மம : என்னை
ப்ரதிதிநம் : நாள்தோறும்
ரக்ஷ : காப்பாற்றுவாயாக !
-----------------------------------------------
ஏ
! சரஸ்வதி தேவியே! இந்திரர்களால் வணங்கப்படுபவளே ! கருங்குழலை யுடையவளே ! பெருமித நடையை
உடையவளே ! என்னை நீ நாள்தோறும் காப்பாற்றுவாயாக !
-----------------------------------------------
3. கேயூர ஹார மணி குண்டல முத்ரி காதி
ஸர்வாங்க
பூஷண நரேந்த்ர முநீந்த்ர வந்த்யே !
நாநா ஸுரத்ந நிர்மல மௌலியுக்தே
வாகீச்வரி
ப்ரதி திநம் மம ரக்ஷ தேவி ||
+++++++++++++++++++++++++++++
கேயூர- : கடகமும்
ஹார- : ஆரமும்
மணி- : மணியும்
குண்டல- : குண்டலமும்
முத்ரி காதி- : மோதிரம் முதலான
ஸர்வாங்க பூஷண : எல்லா அங்க அணிகளையும்
அணிதலை உடைய
நரேந்த்ர- : அரசர்களாலும்
முநீந்த்ர- : கணதரர்களாலும்
வந்த்யே : வணங்கப்படுபவளே !
நாநா- : பலவகையான
ஸுரத்த வர : சிறந்த அரு மணிகளான
நிர்மல : குற்றமில்லாத
மௌலியுக்தே : முகுடத்தை உடையவளே !
வாகீச்வரி தேவி : ஏ ! ஜிநவாணி தேவி !
ப்ரதி திநம் : நாள்தோறும்
மம : என்னை
ரக்ஷ : காப்பாற்றுவாயாக !
-----------------------------------------
ஏ ! சரஸ்வதி தேவியே ! சக்கரவர்த்திகளாலும், கணதரர்களாலும் வணங்கப்படுபவளே !
அழகிய முகுடத்தை உடையவளே ! என்னை நீ நாள்தோறும் காப்பாற்றுவாயாக !
--------------------------------------------
4. பூஜ்யே பவித்ர கரணோந்நத காமரூபே
நித்யம்
ப்பணீந்த்ர கருடாதிப கிந்நரேந்த்ரை |
வித்யாதரேந்த்ர ஸுரயக்ஷ ஸமஸ்த வ்ருந்தை :
வாகீச்வரி
ப்ரதி திநம் மம ரக்ஷ தேவி ||
+++++++++++++++++++++++++++++++++++++++
ப்பணீந்த்ர- : நாகேந்திரர்களாலும்
கருடாதிப- : கருட இந்திரர்களாலும்
கிந்நரேந்த்ரை: : கின்னரேந்திரர்களாலும்
வித்யாதரேந்த்ர- : வித்யாதர அரசர்களாலும்
ஸுர- : தேவர்களாலும்
யக்ஷ- : யக்ஷர்களாலும்
ஸமஸ்த வ்ருந்தை: : (ஆகிய) இவர்கள்
அனைவராலும்
பூஜ்ய- : வணங்கப்பட்டவளே !
பவித்ர கரண- : பவித்திரமான குணமுடையவளே
!
உன்னத- : உயர்ந்த
காமரூபே : அழகிய வடிவையுடையவளே !
வாகீச்வரி தேவி : ஏ ! ஜிநவாணி தேவி !
ப்ரதி திநம் : நாள்தோறும்
மம : என்னை
ரக்ஷ : காப்பாற்றுவாயாக !
----------------------------------------------- -
ஏ
! சரஸ்வதி தேவி ! எல்லா இந்திரர்களாலும் வணங்கப்பட்டவளே ! பவித்திரமான குணமுடையவளே
! அழகிய வடிவுடையவளே ! என்னைக் காப்பாற்றுவாயாக !
-----------------------------------------------
5. கங்கேலி பல்லவ விநிந்தித பாணியுக்மே
பத்மாஸநே
திவஸபத்ம ஸமாந வக்த்ரே !
ஜைநேந்த்ர வக்த்ர பவதிவ்ய ஸமஸ்த பாஷே
வாகீச்வரி
ப்ரதி திநம் மம ரக்ஷ தேவி ||
+++++++++++++++++++++++++
கங்கேலி- : அசோக மரத்தின்
பல்லவ- : கோமளத் துளிர்களை
விநிந்தித- : நாணச் செய்யும்
பாணியுக்மே : அழகிய கைகளை உடையவளே
!
பத்மாஸதே : பத்மாசனத்தில் இருப்பவளே
!
திவஸபத்ம- : சூரிய ஒளியை
ஸமாந- : ஒத்த
வக்த்ரே : திரு முகத்தையுடையவளே !
ஜைநேந்த்ர
வக்த்ரே : ஜிநருடைய
திருமுகத்தில் இருந்து,
பவ- : தோன்றிய
திவ்ய- : அதிசயமான
ஸமஸ்த- : எல்லா
பாஷே : மொழிகள் வடிவானவளே !
வாகீச்வரி தேவி : ஏ ! ஜிநவாணி !
ப்ரதி திநம் : நாள்தோறும்
மம : என்னை
ரக்ஷ : காப்பாற்றுவாயாக !
---------------------------------
ஏ ! சரஸ்வதி தேவி ! அழகிய கைகளை உடையவளே ! ஒளி பொருந்திய திருமுகத்தை உடையவளே
! எல்லா மொழிகளின் வடிவானவளே ! என்னை நாள்தோறும் காப்பாற்றுவாயாக !
-----------------------------------------------------
6. மஞ்ஜீர கோத்கந கங்கண கிங்கிணீநாம்
காஞ்ச்யாச்ச
ஸுஜ்ஜங்க்ருதரவேண விராஜமாநே |
ஸத்தர்ம வாரிநிதி ஸந்தத வர்தமாநே
வாகீச்வரி
ப்ரதி திநம் மம ரக்ஷ தேவி||
++++++++++++++++++++++++++++
மஞ்ஜீரக- : கால் சதங்கை
உத்கநக கங்கண- : பொன் வளையல்
கிங்கிணீ நாம்- : நூபுரம் (பாத
கிண்கிணி)
ச : மற்றும்
காஞ்ச்யா: : ஒட்டியாணங்களுயுடைய
ஜ்ஜங்க்ருதரவேண- : கிண்கிணி ஓசைகளோடு
விராஜமாநே : விளங்குபவளே !
ஸத்தர்ம- : உண்மையான தர்மமெனும்
வாரிநிதி- : கடலை
ஸந்தத- : எப்போதும்
வர்தமாநே : பொங்கச் செய்பவளே !
வாகீச்வரி தேவி : ஏ ! ஜிநவாணி !
ப்ரதி திநம் : நாள்தோறும்
மம : என்னை
ரக்ஷ : காப்பாற்றுவாயாக !
-----------------------------------------------
ஏ
! சரஸ்வதி தேவி ! சதங்கை முதலான அணிகளின் கிண்கிணி ஓசைகளோடு விளங்குபவளே ! அறக்கடலை
பொங்கச் செய்பவளே ! என்னை நாள்தோறும் காப்பாற்றுவாயாக !
-----------------------------------------------
7. அர்தேந்து மண்டித ஜடா லலித ஸ்வரூபே
சாஸ்த்ர
ப்ரகாசிநி ஸமஸ்த கலாதி நாதே !
சிந்முத்ரிகா ஜப ஸராபய புஸ்தகாங்கே
வாகீச்வரி
ப்ரதி திநம் மம ரக்ஷ தேவி !!
+++++++++++++++++++++++++++++++++++++
அர்தேந்து- : பிறைச் சந்திரன்
மண்டித- : (ஒத்த) நெற்றியில் புரளும்
ஜடா- : கருங்குழலால்
லலித- : அழகு பொருந்திய
ஸ்வரூபே : வடிவுடையவளே !
சாஸ்த்ர- : ஆகமங்களை
ப்ரகாசிநி- : விளங்கச் செய்பவளே
!
ஸமஸ்த- : எல்லா
கலாதி நாதே : கலைகளுக்கும் தலைவியே
!
சிந் முத்ரிகா- : சின் முத்திரை
ஜபரஸ- : ஜப மாலை
அபய- : அபய முத்திரை (மற்றும்)
புஸ்த காங்கே : நூலுடைய கைகளை உடையவளே !
வாகீச்வரி தேவி : ஏ ! ஜிநவாணி !
ப்ரதி திநம் : நாள்தோறும்
மம : என்னை
ரக்ஷ : காப்பாற்றுவாயாக !
-----------------------------------------------
ஏ ! சரஸ்வதி தேவி ! நெற்றியில் கருங்குழல் புரளும் அழகுடையவளே ! பரம ஆகமங்களை
விளங்கச் செய்பவளே ! எல்லா கலைகளுக்கும் தலைவியே ! சின் முத்திரை, அபய முத்திரை, ஜப
மாலை, நூல் உடையவளே !நாள்தோறும் என்னைக் காப்பாற்றுவாயாக !.
-----------------------------------------------
8. டிண்டீர பிண்ட ஹிம சங்க துஷார ஹாரே
பூர்ணேந்தி
பிம்பருசி சோபித திவ்ய காத்ரே !
சாஞ்சல்யமாந ம்ருக சாப லலாட நேத்ரே
வாகீச்வரி
ப்ரதி திநம் மம ரக்ஷ தேவி !!
++++++++++++++++++++++++++
டிண்டீர பிண்ட- : கடல் நுரை
ஹிம- : பனி
சங்க- : சங்கு
துஷார- : பனித் திவலை
ஹாரே : (முதலானவை போல்) வெண்மையான மணி மாலையை உடையவளே !
பூர்ணேந்து- : முழு நிலவு
பிம்பருசி- : பிம்ப காந்தி போல
சோபித- : விளங்குகின்ற
திவ்ய காத்ரே : அழகிய உடலை உடையவளே !
சாஞ்சல்யமா ந- : மிகவும் மருளுகின்ற
ம்ருக சாப- : மான் குட்டியின் கண்களை ஒத்த
லலாட நேத்ரே : நீண்ட கண்களை உடையவளே !
வாகீச்வரி தேவி : ஏ ! ஜிநவாணி தேவி !
ப்ரதி திநம் : நாள்தோறும்
மம : என்னை
ரக்ஷ : காப்பாற்றுவாயாக !
-----------------------------------------------
ஏ
! சரஸ்வதி தேவி ! வெண்மையான மணி மாலையை அணிந்தவளே ! கண்ணொளி பொருந்திய உடலை உடையவளே
! நீண்ட கண்களை உடையவளே ! என்னை நாள்தோறும் காப்பாற்றுவாயாக !
-----------------------------------------------
மங்களம்
ஜிந ஸ்தோத்ரம் நிறைவு பெற்றது.
-----------------------------------------------
No comments:
Post a Comment