Atmanushasan 3 - ஆத்மானு ஸாசனம் 3






ஆத்மானுஸாசனம் 
(ஆன்மாவின் இயல்பு)
आत्मानुशसन्
 (201 - )



माता जातिः पिता मृत्युराध्व्यिाधी सहोद्गतौ । 
प्रान्ते जन्तोर्जरा मित्रां तथाप्याशा शरीरके ।।201।।

மாதா ஜாதி: பிதா ம்ருத்யு ராதிவ்யாதீ ஸஹோத்த தெள |

 ப்ராந்தே ஜந்தோர்ஜரா மித்ரம் ததாப்யாசா சரீரகே || 201 ||

The origination of the body is the mother, its death is the father, the mental agony and the disease are the brothers, and the old-age, which arrives at the last stage, is the friend. Still, the ignorant man adores this body.
உடலின் தோற்றம் தாய், அதன் மரணம் தந்தை, மன வேதனை மற்றும் நோய் சகோதரர்கள், மற்றும் கடைசி கட்டத்திற்கு வரும் முதுமை, நண்பர். இன்னும், அறிவற்ற மனிதன் இந்த உடலை வணங்குகிறான்.

தாய், தந்தை, சகோதரன்/ரி, நண்பன் போன்றவை ஒரு மனிதனின் சுற்றங்களாய் அமைவது போன்று பிறப்பு, இறப்பு, நோய், மூதுமை போன்றவை உடலுக்கு மாறாத இயல்பாய் அமைந்துள்ளது என்று கூறுகிறார் முனிவர். இது பல காலமாக ஒவ்வொரு உறவுக்கும் மாறாமலே நிறைவேறி வருகிறது. மனிதர்கள் எவ்வளவு முயன்றாலும் உடலின் தோற்றம், மறைவிலிருந்தும், நோய், முதுமையிலிருந்து விடுதலை பெற முடியாது. அது நிச்சயம் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும். அச்சுழற்சியிலிருந்து ஒரு மனிதன் மீள வேண்டுமாயின் உடலின் தொடர்பை அறுத்தாலன்றி வேறுவழியில்லை.

அவற்றிலிருந்து வெளியேற ஒரே வழி மீண்டும் இந்த உடலை ஏற்காத நிலைக்கு செல்லும் வழியை ஆராய்வதே ஆகும். அதுவே பிறப்பு, இறப்பு, பிணி, மூப்பிலிருந்து விடுபட இந்த உடலை உருவாக்காத நிலையை ஆன்மன் எய்தினாலொழிய ஏற்படப்படப்போவதில்லை. அதனால் இந்த உடலும், ஆன்மனுக்குமான தொடர்பை துண்டித்தாலொழிய அந்த உடலியல்பிலிருந்து விடுதலை பெற வழியில்லை.

------------------------

ஆச்சார்யர் மட்டுமின்றி உலகில் தோன்றிய ஞானியர் பலரும் உடலல்ல நாம் உயிர் என்ற உணர்வுடன் வாழும்நிலையைத் தேர்வு செய்ய அறிவுறுத்துகின்றனர். (உடல் என்றால் மனமும் சேர்ந்து கொள்ளும்)

உலகியல் வாழ்வில் வலி, வேதனை, துயரம், இடர், ஆற்றாமை, கழிவிரக்கம், கொடுமை, வன்முறையின் தாக்கம், பொறுமையின்மை, வெறுப்பு போன்ற விரும்பாத துன்பக் காரணிகளை பெற காரணமாயிருப்பது உடலே என்பதை உணர்ந்ததால் மனிதர்களிடம் வேட்கையை உருவாக்கும் இயந்திரமான உடல், மனதை விட்டு விலகினால் துன்பத்தின் வெப்பத்திலிருந்து தப்பிக்க முடியும் என்பதே நிதர்சனம்.

துன்பம் நீங்கிய வேளையே இன்ப அனுபவமாக இவ்வுடல் உணர்கிறது. பொறுமையும், சகிப்புத்தன்மையும் கூட்டி வாழும் கலையை நாம் பயிற்சி செய்யும் போது இயல்பாக தோன்றும் உபாயம் உடல் பற்றிலிருந்து வெளியேறும் வழிமுறையே. நான் உடலல்ல என்ற பயிற்சி முறையே.

நம்மால் நமக்கு வரும் துன்பத்தினை நமது மனதை ஆராய்ச்சி செய்தால், பற்றறுத்து கடந்து சென்றால் உடன் குறைந்து விடும். பிறரால் வரும் துன்பத்தை சமூகத்தை துறந்து இடம் பெயர்ந்து காடுகள், மலைகளில் வாழும் முறையை கைக்கொள்ளும் போது அதிலிருந்தும் தப்பிக்கலாம்.. இயற்கையால் வரும் துன்பங்களை பெறும்வேளையில் பொறுமையும், சகிப்புத்தன்மையும் பெருமளவில் நமக்கு உதவிடும்.

இம்முன்றுவகை பிரதானதுன்ப வழிகளிலிருந்து வரும் துன்பத்தை பெற்றால் வருந்துவது மனமே. அதனை உணர்வது உடலின் புலனுணர்வுகளே. அந்த புலனுணர்வை விட்டு விலக ஒரே வழி நான் உடலல்ல என்ற நிலைப்பாட்டிற்கு நம் உணர்வுநிலையை கூட்டிச் செல்லும் உபாயமே சிறந்த ஒன்றாகும். அதுவே சரியான காட்சியாக , நற்காட்சியாக நமக்கு பகவான் வழங்குகிறார். சம்யக்வம் அடைந்து விட்டால் வினைகளை எரித்து நிற்கும் தவவாழ்வில் முக்கிய எதிரிகளான ஆர்த்த, ரெளத்ர எனும் இரண்டு உடல், மனத்துன்பங்களை மட்டுமே சிந்தித்து, அதிலேயே வட்டமடிக்கும் தியானத்திலிருந்து வெளியேற வழிவகுத்து விடும். தருமத்தியானமும் தாமாகவே நம்மை வரவேற்று நிற்கும். பின்னர் சுக்ல எனும் தூய மனதுடனான நமது சிந்தனைகளே வினைகளை முற்றிலும் விலக்கி நமக்கு இவ்வுலகத்துன்பத்திலிருந்து நிரந்தரமாக விடுதலையை அளிக்கும் முக்திப்பேற்றை அடைய வாய்ப்பு அளிக்கும்.

அதனால் நான் உடலல்ல, ஆத்மா என்ற உயர்தத்துவத்தையே ஆச்சார்யரும் நமக்கு ஆத்மானுசாசனத்தில் பிரதானமான உபாயமாகவே ஆங்காங்கு வழங்கி வருகிறார்.

நற்காட்சி (சம்யக்த்வம்) எனும் விழிப்புணர்வு பெற்ற மனிதனுக்கு வலி ஏற்படுத்த எவராலும் முடியாது.

அவருடைய அவையங்களை வெட்டலாம், அவரை நெருப்பில் போடலாம் கொலையும் செய்யலாம். ஆனால் அவரை துன்புறுத்தி விடமுடியாது. ஏனென்றால் ஒவ்வொரு கணமும் அவர் தனக்கு ஏற்படும் நிகழ்வுகளில் இருந்து விலகி இருக்கிறார்.

எனவே விழிப்பு நிலையை எய்தும் காரியத்தில் இப்போதே இறங்குங்கள் என்கிறார் முனிவர் பெருமான். அதாவது… “வேகமாக நடந்து செல்லும்போது நீங்கள் நடக்கவில்லை. உங்கள் உடல்தான் நடந்து செல்கிறது என்பதை ஞாபகத்தில் வையுங்கள். நீங்கள் ஒருபோதும் நடப்பதே இல்லை. எப்படி நடக்க இயலும்? உயிருக்கு நடப்பதற்குக் கால்கள் கிடையாது. பசியை உணர வயிறு கிடையாது. உயிருக்கு ஆசைகள் கிடையாது. ஆசைகள் எல்லாம் உடல் சம்பந்தப்பட்டவை. உயிர் விருப்பு வெறுப்பற்றது. எனவே அதனால் நடந்து செல்ல இயலாது. உடல் மட்டுமே நடக்கும் திறமை பெற்றிருக்கிறது. இந்த விழிப்புணர்வை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் கவனத்தில் வைத்திருங்கள். மெதுவாக உங்களுக்கு ஒரு விந்தையான சிலிர்ப்பூட்டும் ஒரு அனுவம் ஏற்படும். சாலையில் நடந்து செல்லும் சமயத்தில் நீங்கள் நடக்கவில்லை, உங்கள் உடல் தான் நடந்து செல்கிறது என்று ஒருநாள் திடீரென்று உணரத் தொடங்குவீர்கள்.

நீங்கள் இரண்டு கூறுகளாகப் பிரிந்து போவீர்கள். ஒன்று நடந்து போகிறது. மற்றொன்று அந்த செயலுடன் சம்பந்தப்படாமல் இருக்கிறது என்பதை உணர்விர்கள். உடலின் ஒரு பகுதி உணவு உண்கிறது. மற்றொரு பகுதி உண்பதில்லை.”

என்ற வரிகளை பாடல்களாக நமக்கு தந்துள்ளார் ஆச்சார்யர் பெருமான். நமக்காக வழிகாட்டும் அவருக்காக நாம் என்ன செய்யப்போகிறோம். அவரது வரிகளை பின்பற்றுதலே நாம் அவருக்கு அளிக்கும் நன்றிணர்வாகும்.





शुधदोSप्यशेषविषयावगमोSप्यमूर्तो 
Sप्यात्मन् त्वमप्यतितरामशुचीकृतो{सि । 
 मूर्तं सदाSशुचि विचेतनमन्यदत्रा 
 किं वा न दूषयति ध्ग्ध्गिदं शरीरम् ।।202।।

சுத்தோ அப்யசேஷ விஷயாவகமோ அப்யமூந்த்தோ, 

அப்யாத்மன் த்வமப்ய திதராமகசீ க்ருதோ அஸி | 
மூர்தம் ஸதாஅகசி விசேதமன்யத்ர, 
கிம் வாந தூஷ யதி திக்தி கிதம் சரீரம் || 202 ||

O soul! You are by nature, pure, all-knowing, and without colour and taste, etc.; you have been greatly polluted by the body. It is right; which pure object that comes in contact with this corporal, always dirty, and inanimate body, does not get polluted? Fie on such body.
ஆத்மா! நீங்கள் இயல்பாகவே, தூய்மையானவன், அனைத்தையும் அறிந்தவன், நிறம் மற்றும் சுவை இல்லாமல் இருக்கிறீர்; நீர் உடலால் தான் பெரிதும் மாசுபட்டுள்ளீர். இந்த உடல் எப்போதும் அழுக்கு மற்றும் மாசுடையது. உடலுடன் தொடர்பு கொள்ளும் எந்த தூய பொருளும் மாசுபடுமாதலால் அதனை அலட்சியம் செய்.

உடல் என்றும் தூய்மையற்றதாய் இருக்கிறது. அதனால் நீ தூய்மையற்றவன் என்றாவதில்லை. நீ ஆன்மாவாகிய தூயவன், அறிவு மயமானவன் என்றுரைக்கிறார் முனிவர் பெருமான்.


உயிருடன் இருக்கும் போதும் ஒரு மலரையோ, நறுமணம் கமழும் பொருளையோ பூசினாலும் சிறிது நேரத்தில் அதன் நறுமணம் அழிந்து உடலில் துர்நாற்றமே எழுகிறது. அதுவும் ஒருவர் இறந்து விட்டால் அந்த உடலில் நறுமணப்பொருட்களை எங்கும் தடவிவைத்தாலும் மணமிழந்து துர்நாற்றத்தை சிறுது நேரத்தில் பரப்புகிறது. இறந்த பின்னும் பிறருக்கு கஷ்டத்தையே தருகிறது. அதனால் அந்த பிணத்தை எரிக்கவோ, புதைக்கவோ ஆக வேண்டியதை நெருங்கிய உறவினராலும், நண்பரானாலும் கண்ணீரை விட்டபடியே உடனே துவங்கிவிடுவர்.


இவ்வளவு கீழான உடம்பினால் கிடைப்பது எதுவும் கிடையாது. அதற்கு உதவியாக எதை எந்த தெய்வத்திடம் வேண்டினாலும் எதுவும் கிடைப்பதுமில்லை. ஆனால் அதுவோ எவரையும் எந்த ஒன்றையும் உதவிகேளாமல் வாழ்ந்ததே இல்லை. அத்தனை உதவி கிடைத்தாலும் பற்றாக்குறையுடனே வாழும் மாசுபட்ட மனதைத்தான் கொண்டு வாழ்கிறது. சத்தியத்துடன் இருப்பதால் என்ன நன்மை கிடைக்கும் என்றில்லாமல், உண்மையாய் இருப்பதில் ஆர்வமாய் வாழ்வதே பலபிறவிகளுக்கு வேண்டியது கிடைக்கும். ஆனால் பொய்யான உடலுடன் பொய்யான வாழ்க்கை வாழ்வதால் இப்பிறவியில் எதுவும் கிடைக்கப் போவதில்லை. மறுமையிலும் இன்பம் நெருங்கி வரப்போவதில்லை. 

அவ்வாறான இந்த உடலுடன் தொடர்புடைய ஆன்மனும் மாசுபட்டே பிரிகிறது. அத்தூய்மையற்ற உடலின் தொடர்பால் ஆத்மனும் நான்கு கதிகளிலும் சுழன்று துன்பத்திற்கே ஆளாகிறது. அதனால் இந்த ஜடப்பொருளான உடல் மீதுள்ள பற்றினை விடவேண்டும் என்று கூறுகிறார் முனிவர் பெருமான்.

-------------

புத்தமதக் கதை ஒன்று….

ஒரு அரசர் அவர் பேரும், புகழும், படையும், பலமும் கொண்டு விளங்கினார். ஆனாலும் ஏதோ ஒன்று அவரை நிறை மனமாக இருக்கு முடியாமல் செய்தது. அதற்கு அவருடைய அமைச்சர் புத்தரை கண்டால் நிறைவு கிடைக்கலாம் என்று ஒரு யோசனை சொன்னார். அரசரும் அதை ஏற்றுகொண்டார்.

ஒரு முறை பக்கத்துக்கு கிராமத்தில் புத்தர் இருப்பதாக செய்தி கிட்டியது. உடனே அரசர் தான் மட்டும் செல்லவதாக கூறி கிராமத்துக்கு சென்றார். போகும் வழியில் ஒரு ஆற்றை கடக்க நேரிட்டது. அது மிகவும் அகலமாகவும், ஆர்பரிப்போடு கூடிய அலைகளோடு காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

அதை கண்டு அஞ்சிய அரசர், படகோடியிடம் தன்னை அக்கரையில் கொண்டு விடுமாறு கேட்டார். அதற்கு படகோட்டி யாரைப் பார்க்க போவதாக கேட்டார். அரசர் புத்தரை பார்க்க வேண்டும் என்றார். இதை கேட்ட படகோட்டி, நான் மட்டும் இல்லை. யாருமே உதவிக்கு வரமாட்டார்கள் என்று கூறினார்.

ஏன் என்று அரசர் கேட்டதற்கு, படகோட்டி, இதுவரை அக்கரைக்கு புத்தரை பார்க்க போனவர்கள் யாருமே திரும்பி வரவில்லை என்று கூறினார். உடனே அரசர் மிகுந்த ஆர்வம் கொண்டு, நீந்தி கரையை கடக்க முயற்சித்தார்.

பாதி ஆற்றை கடக்கும் தருவாயில், நீந்த முடியாமால் மிகவும் தத்தளித்துக் கொண்டிருந்தார். அவர் அங்கேயே புத்தரை நினைத்தார். தூரத்தில் ஆற்று வெள்ளத்தில் ஒரு பிணம் தன்னை நோக்கி வருவதை கண்டார். அருகில் வந்த உடன் தான் தெரிந்தது. வந்த பிணத்துக்கும் தன் முகம் இருப்பதை கண்டு மிகவும் பயந்து போனார்.

அப்போது அந்த பிணத்துடன் அரசரின் பேரும், புகழும், செல்வமும், படையும், பலமும், அதிகாரமும், அரசாட்சி திறமும், வல்லமையும், சேர்ந்து போவதை பார்த்தார். அவைகள் யாவும் அழுகிய நிலையில் தன் மேல் மோதி மிகவும் நாற்றத்துடன் சென்றது.

அதை கண்ட அரசர் அங்கிருந்து கரைக்கு வந்தார். வந்துடன் தன் ஆணவம், மற்றும் அகம்பாவம், தான் ஒரு அரசன் என்ற நிலை மாறி தானும் ஒரு ஞானியாக திகழ்ந்தார். புத்தரை காண சென்ற அரசர், புத்தரை காணும் முன்பே ஞானம் பெற்றார்.

எதுவெல்லாம் என்னுடையது என்று எண்ணி இத்தனை நாள் அரசர் ராஜ போக வாழ்க்கை வாழ்ந்தாரோ; அதுவெல்லாம் என்றோ ஒரு நாள் அழுகி நாற்றமெடுத்து நம்மை விட்டு போகும் என்ற ஞானம் பிறந்தது. அதுவாக போகும் முன் நாமே களைய வேண்டும் என்ற ஞானம் பெற்று தன்முனைப்பு நீங்கி ஞானியாக மனநிறைவுடன் வாழ்ந்தார்.

நமக்கு அதே நிலை தான். ஆக ஒருவன் ஞானம் அடைய வேண்டும் என்றால் ஞானியைக் கண்டு தான் ஞானம் பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தன்னையும், தன் உடமைகளையும் மாயை என்று புரிந்து கொண்டு இழக்க தயாராகும் போதே அவன் ஞான நிலைக்கு தயாராகிவிட்டான் என்பதே உண்மை.

மாயையும், பற்றும், ஞானமும் அனைத்தும் நம்மிடத்தே தான் இருக்கிறது. "விட வேண்டியதை விட்டு விட்டால் பெற வேண்டியது அங்கேயே இருப்பது தெரிய வரும்"





हा हतोSसि तरां जन्तो येनास्मिन् तव साम्प्रतम् । 
ज्ञानं कायाशुचिज्ञानं तत्त्यागः किल साहसम् ।।203।।

ஹா ஹதோ அஸி தராம் ஜந்தோ யேனாஸிம் மஸ்தவ ஸாம்ப்ரதம் | 

ஞானம் காயா சுசி ஞானம் தத்யாக: கில ஸாஹஸம் || 203 ||

O man! You have suffered a lot due to your association with the body. It is right that now you have realized how impure the body is. To renounce this body will be your real valour.
மனிதனே! உடலுடனான உங்கள் தொடர்பு காரணமாக நீங்கள் நிறைய கஷ்டப்பட்டீர்கள். உடல் எவ்வளவு தூய்மையற்றது என்பதை இப்போது நீங்கள் உணர்ந்திருப்பது சரிதான். இந்த உடலை கைவிடுவது உங்கள் உண்மையான துணிவு.

இந்த மனமே நான், இந்த உடலே என்னுடையது என்ற உணர்வினால் உலகில் உடலுக்கு உதவுவதாய் நினைத்து அடைந்த பொருளின்மீதும் எனது என்ற உணர்வு ஏற்படுகிறது. அந்த நான், எனது என்ற தன் முனைப்பிலிருந்து வெளியேற உடலை தனதாக எண்ணும் நினைவை அழிப்பதே மேலான செயல். அதுவே பிறவிகளுக்கு காரணமாய் அமையும் வினைகளை சேர்க்காமலும், சேர்ந்தவற்றை விலக்குவதற்குமாய் அமைந்து விடும் என்று அறிவுறுத்துகிறார் முனிவர் பெருமான்.

-----------------------

உனக்குள் பிரகாசம் இருக்க வேண்டும் என்றால் இதுதான் ஆரம்பம். உடல் மீது அதீத பற்று வைக்க வேண்டாம் என்கிறார் புத்தர் .

உடலோடு உன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதே என்கிறார். எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. உடலில் வாழ். உடலைப் பயன்படுத்திக் கொள். ஆனால் சுதாரித்திரு. அது நீயல்ல.

உடலைத்தான் பாரேன். சாயமடித்த பொம்மை. விளையாட்டு பொம்மை. ஒட்டி வைத்திருப்பது. பிணியின் பீடிப்பு. நிறைய பொய்யான கற்பனைகள். அப்படியே நகர்ந்து இல்லாமல் போகும் நிழல்.

எத்தனை பேர் இந்த உலகில் வாழ்ந்து போய் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் மறைந்து போய்விட்டார்கள். அவர்கள் இருந்தார்கள் என்பதற்கு எந்த அடையாளமும் இல்லாமல் போய்விட்டார்கள். அதுவே தான் உனக்கும் நடக்கப்போகிறது. எல்லோருக்கும் அதுதான். இன்று இங்கே இருக்கிறாய். நாளை இல்லாமல் போய்விட போகிறாய். பிறகு சில நாட்களுக்கு சிலருடைய நினைவில் இருப்பாய்.

அவர்களுக்கு உன்னை பற்றிய நினைவு இருக்கும். நீ ஒரு நினைவாக இருப்பாய். அவர்களுடைய மனதில் ஒரு படமாக இருப்பாய். பிறகு அவர்களும் இறந்து போவார்கள். உன்னை பற்றிய நினைவும் இல்லாமல் போய்விடும்.

சில ஆண்டுகளுக்குப் பின் நீ இறந்து போனதை யாராவது நினைவில் வைத்திருப்பார்கள் என்கிறாயா? நீ இருந்திருக்கிறாய் என்பதை யார் நினைவில் வைத்திருக்க போகிறார்கள்? ஒரு நிழல். கண நேரத்து நிழல். அந்த கணம் 70 ஆண்டுகளாக இருந்தாலும் சரியே. அது ஒரு பொருட்டாவதில்லை.

உடலளவில் வளர்வது ஆன்ம வளர்ச்சி ஆகாது. உடல் வளர்ந்து கொண்டே போகும்.ஆனால் அதுவல்ல உண்மையான வளர்ச்சி. ஆன்ம வளர்ச்சி இல்லையேல் அருமையான சந்தர்ப்பத்தை வீணடித்து கொண்டிருக்கிறாய்.

அற்புதங்களுக்காகவே பிறந்திருக்கிறாய். ஆனால் வளர்வது உன் கையில் தான் இருக்கிறது விழித்திருப்பது உன் கையில் தான் இருக்கிறது.



अपि रोगादिभिर्वृध्दैर्न यतिः खेदमृच्छति । 
उडुपस्थस्य कः क्षोभः प्रवृध्देSपि नदीजले ।।204।।

அபி நோகாதி பிரவ்ருத்தைந்த முனி: கேதம் ருச்சதி | 

ஊடுபஸ்தஸ்ய க: க்ஷோப: ப்ரவ்ருத்தேஅபி நதீஜலே || 204 ||

The ascetic is not distressed even by increased bodily afflictions, like disease. Indeed; what fear is there for the man on board a boat on rise of the water-level of the river?
நோய் போன்ற அதிகரித்த உடல் துன்பங்களால் கூட துறவி துன்பப்படுவதில்லை. உண்மையில்; ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்தாலும் படகில் ஏறிய மனிதனுக்கு என்ன பயம்?

படகோட்டி ; சாதாரணமாக ஒரு நதியின் இரண்டு கரைகளுக்கு இடையே தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருப்பதுதான் அவனுடைய வேலை. குறுக்காக கடப்பது, ஒரு நதியைக் கடப்பதற்கான சுலபமான வழி.

நதியைக் கடக்க இன்னொரு வழி இருக்கிறது, அதை நாம் மறந்து விடுகிறோம். நதி உருவான ஊற்றை நோக்கிப் போவது என்பது முனிவர் சொல்லும் இரண்டாவது வழி. இந்த நூல் அந்த இன்னொரு சாத்தியத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டதால் எழுதப்பட்டது. இதில் குறிப்பிடப்படும் படகோட்டுபவன் திரும்பி வந்து புறப்பட்ட கரையேறுவதே கிடையாது. அவன் நதியிலேதான் இருக்கிறான். நதி துவங்கிய தொடக்கஊற்றுக்குச் செல்வதையே வாழ்வின் லட்சியமாய் வாழ்பவன். அதனால் நதியின் பிரவாகத்தைப் பற்றி அவன் கவலை கொள்வதே இல்லை. ஏனென்றால் நதியில் மூழ்கி நீச்சலடிப்பவன் தான் அச்சம் கொள்ள வேண்டும். உடல் என்னும் படகில் ஏறி புருஷார்த்தம் எனும் துடுப்பை உபயோகிப்பவன். ஒருநாள் துவக்கத்தை அடைந்தே தீருவான் என்கிறார். அதாவது இருப்பை நெருங்கியே தனது இலட்சியப்பயணத்தை முடிப்பான் என்று கூறுகிறார் மாமுனிவர்.

அதனால் வழியில் ஏற்படும் தடைகளுக்கு அவன் கலக்கப்படுவதில்லை. அதுபோல் உடல் எனும் படகிற்கு வரும் துயரங்களை அவன் பொருட்படுத்துவதில்லை என்று கூறுகிறார் ஆச்சார்யர் பெருமான்.





जातामयः प्रतिविधय तनौ वसेद्वा नो चेत्तनुं त्यजतु वा द्वितयी गतिः स्यात् । 
लग्नाग्निमावसति वहिव्हि मपोह्या गेहं निर्याय वा व्रजति तत्रा सुधी: किमास्ते ।।205।।

ஜாதமய: ப்ரதிவிதாய தனெள வஸேத்வா, 

நோ சேதனும் த்யஜது வா த்விதயீ கதி: ஸ்யாத் | 
லக்னாக்னிமாவஸதி வஹி வஹிரு மபோஹ்யா கேஹம், 
நிர்யாய வா வ்ரஜதி தத்ர ஸுதி: கிமாஸ்தே || 205 ||

When a disease supervenes, it should be combated with medicine, etc., to preserve the body. But if the disease is incurable and cannot be combated, then the body should be abandoned, as the second stage. For example, if the house is on fire, the man tries, as far as possible, to extinguish the fire and continues living in the house. But if the fire cannot be extinguished, he must abandon the house. Does any wise man continue living in such a burning house?
ஒரு நோய் மேலெழும்பும்போது, உடலைப் பாதுகாக்க மருந்து போன்றவற்றுடன் அதை எதிர்த்துப் போராட வேண்டும். ஆனால் நோய் குணப்படுத்த முடியாதது மற்றும் அதை எதிர்த்துப் போராட முடியாவிட்டால், உடலை இரண்டாம் கட்டமாக கைவிட வேண்டும். உதாரணமாக, வீடு தீப்பிடித்தால், மனிதன் முடிந்தவரை தீயை அணைக்க முயற்சிக்கிறான், தொடர்ந்து வீட்டில் வசிக்கிறான். ஆனால் தீயை அணைக்க முடியாவிட்டால், அவர் வீட்டைக் கைவிட வேண்டும். எந்தவொரு ஞானியும் அத்தகைய எரியும் வீட்டில் தொடர்ந்து வாழ்கிறாரா?

சமாதி மரணத்தைப் பற்றிய முக்கியத்வத்தை இந்தப்பாடலில் கூறுகிறார் ஆச்சார்யர்.

உடல் ஆரோக்கியமாக இருக்கும் வரை ஜினதர்மத்தின் வழியே நல்ல வாழ்க்கைநெறிகளில் தவறாது வாழ்ந்து வினைகளை உதிர்ப்பு செய்ய முயலவேண்டும். அவ்வாறான புருஷார்த்தத்திற்கு இவ்வுடல் பயன்படவில்லை எனின் வினைகள் மேலும் பந்திக்கவே செய்யும், அதனால் இவ்வுடலை மரணிக்க ஏதுவான சல்லேகனா விதியை உறுதியுடன் ஏற்பதே சிறந்தது. அந்த சமாதி மரணமே நற்கதியை அந்த ஆன்மனுக்கு பெற்றுத் தரும் என்பதை வலியுறுத்திச் சொல்கிறார் முனிவர். இது இல்லறத்தாரும் துறவறத்தாரும் முறையே அந்த இக்கட்டான சூழ்நிலையில் கடைபிடிக்கவேண்டிய வழிமுறையாகும்.

---------------------

பலருக்கு வாழ்க்கையில் பலவேறு காலங்களில் வெவ்வேறு வியாதிகள் ஏற்படுகின்றன. சில நோய்கள் சிகிச்சைக்கு கட்டுப்பட்டவை என்றும், சில வியாதிகள் தீராத வியாதிகள் என்றும் கூறப்படுகின்றன.

அதுபோன்ற தீராத வியாதியையோ அல்லது அதனால் வரும் பாதிப்புகளையோ சமாளிப்பது ஏன் கடினமாக இருக்கிறது? அந்த நோயினாலும் சிகிச்சையினாலும் மட்டுமே அல்ல, ஆனால் ரொம்ப காலத்துக்கு சகித்துக்கொள்ள வேண்டியதாலுமே அது கஷ்டமாக மாறுகிறது.

தீராத வியாதி வந்துவிட்டால் அதனால் பாதிப்பு நோயாளிக்கு மட்டுமில்லை. பெரும்பாலும் அவர்களோடு இருக்கும் குடும்ப அங்கத்தினர்களுக்கும் தான். ஆகவே அதிர்ச்சியும் கவலையும் நோயாளிக்கு மட்டுமல்ல அவர்களுக்கு நெருக்கமான எல்லாருக்கும்தான். தீராதநோயினால் கஷ்டப்படும் ஒருவரால் குடும்பத்தில் உள்ள எல்லாரையுமே;—அவர்களுக்குத் தெரிந்திருக்கிறதோ இல்லையோ/ வெளியில் காட்டிக்கொள்கிறார்களோ இல்லையோ, அது பாதிக்கிறது.

உண்மைதான் எல்லாருக்கும் பாதிப்பு ஒரே மாதிரியாக இருக்காது. ஆனால் தீராத வியாதி பொதுவாக எவ்வாறு பாதிக்கிறது என்பதை குடும்ப அங்கத்தினர்கள் புரிந்துகொண்டுவிட்டால், அந்தச் சூழ்நிலையில் அவர்கள் எதிர்ப்படும் சவால்களை நல்ல விதத்தில் கையாள முடியும். அதோடு குடும்ப வட்டாரத்துக்கு வெளியே இருக்கும் சக வேலையாட்கள், அயலகத்தார், நண்பர்கள் ஆகியோர் தீராத வியாதியால் எத்தனை கஷ்டங்கள் என்பதை புரிந்துகொண்டால் அவர்களும் அனுதாபம் காண்பித்து அர்த்தமுள்ள வகையில் உதவலாம். அச்சூழல் பெரும்பாலும் விதிவிலக்காகத்தான் அமைகிறது.

தீராத நோய் திடீரென அதிகமாகும், திடீரென குறையும். ஆகவே என்னாகுமோ ஏதாகுமோ என்ற தவிப்பு ஏற்படும். குடும்ப அங்கத்தினர்கள் அப்போதுதான் புதிய ஒரு சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றி அமைத்திருப்பார்கள், அதற்குள் மாறுபட்ட அல்லது இன்னும் அதிக கடினமான ஒரு சூழ்நிலையை எதிர்ப்பட வேண்டிய நிலை ஏற்படலாம்.

நோய் அறிகுறிகள் மாறிமாறி வரலாம். திடீரென்று உடல்நிலை மோசமாகிவிடலாம். மருந்து மாத்திரையினால் எதிர்பார்த்த அளவு உடல் தேறாமல் இருக்கலாம். சிகிச்சையை அவ்வப்போது மாற்ற வேண்டியிருக்கலாம் அல்லது இதனால் எதிர்பாராத சிக்கல்கள் வந்துவிடலாம். மிகவும் குழம்பிப் போயிருக்கும் குடும்பத்தினர் தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய படாதபாடு பட்டுக்கொண்டிருக்கலாம்; நோயாளியும் அவர்களையே அதிகமாக நம்பியிருக்க வேண்டிய நிலை; அதனால் முன்பு கட்டுப்பாட்டுக்குள் இருந்த உணர்ச்சிகள் வெடித்து வெளிவரலாம்.

நோயின் தன்மையையும் சிகிச்சையின் பலனையும் பற்றி திட்டவட்டமாக எதையும் சொல்ல முடியாத நிலையில் இது போன்ற கேள்விகள் எழும்பும்: இது எவ்வளவு காலம் தொடரப்போகிறது? இன்னும் நோய் எவ்வளவு மோசமாகும்? எந்தளவுக்கு நம்மால் சகித்துக்கொள்ள முடியும்? நோய்க்கு சிகிச்சையில்லை, மரணம்தான் முடிவு என்ற நிலை இருந்தால், “சாவுக்கு முன்னால் இன்னும் எத்தனை நாள்?” என்ற கேள்வி எழும்பும்.

நோய், சிகிச்சை பத்தியம், களைப்பு எல்லாம் சேர்ந்து எதிர்பாராத மற்றொரு பாதிப்பை உண்டுபண்ணுகிறது. சமூக வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகிறது. இதுபோன்ற குடும்பத்தினர் தொடர்புடைய சமூகத்தின் பிரச்சினையை மனதில் இருத்தியே சமணம் சல்லேகனா என்ற விரதத்தை மாமருந்தாக அளித்திருக்கிறது. அதுவே வியாதியஸ்தரையும், அவர்களுடன் வாழும் மற்றவர்களுக்கும் விடுதலையளிக்கலாம் என்ற உள்ளார்ந்த அர்த்தமும் அந்த சமாதி மரணத்திற்குள் அடங்கியுள்ளது. அதனை ஆன்மீகத்தின் ஆழத்தில் வாழ்பவர்கள், தீராத வியாதியஸ்தர்களாகும் சூழலில் மனமுவந்து தங்களது மரணத்தை வரவேற்பதே சல்லேகனா என்ற கனத்தகுடும்பசூழலுக்கான விமோச்சன உபாயம்.

இந்த இக்காட்டான சூழலைப் புரிந்து கசப்பாயினும் அம்மருந்தை ஏற்க துணிந்தவருக்கு கண்டிப்பாக நற்கதி கிட்டும் என்பதில் ஐயமில்லை.





शिरःस्थं भारमुत्तार्य स्कन्धे कृत्वा सुयत्नतः । 
शरीरस्थेन भारेण अज्ञानी मन्यते सुखम् ।।206।।

சிர: ஸதம் பாரமுத்தார்ய ஸ்கந்தே க்ருத்வா கயனத்த: | 

ஸரீரஸ்தேன பாரேண அஞ்ஞானீ மன்யதே ஸுகம் || 206 ||

The ignorant man imagines a sense of relief from the load he is carrying on his head by removing it from the head and, with great difficulty, shifting it on to his shoulder. (He is still carrying the load!)
அறிவற்ற மனிதன் தலையில் இருந்து சுமந்து செல்லும் சுமையிலிருந்து ஒரு விடுபட்ட உணர்வை கற்பனை செய்கிறான், அதை தலையிலிருந்து அகற்றி, மிகுந்த சிரமத்துடன், அதை அவன் தோளுக்கு மாற்றிக் கொள்கிறான். அவர் இன்னும் சுமையைச் சுமந்து கொண்டுதானிருக்கிறார்!

நோய்களிலிருந்து விடுபடுதலே துன்பத்திலிருந்து விடுபடுவதாக கருதாது, நோய்க்கு உறைவிடம் தரும் உடலிலிருந்து முற்றிலுமாக விடுபடுவதே துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்று அறிவுறுத்துகிறார் ஆச்சார்ய பெருமான்.

ஒருவன் தலையில் சுமந்துவந்த பாரத்தை தோளுக்கு மாற்றியதால் சுமையிலிருந்து விடுபட்டதாக கருதுவது போன்று உடல் நோயிலிருந்து விடுபட்டதும் நோயின் தாக்கம் இனி வரப்போவதில்லை என்று தற்காலிக இன்பத்தை நுகர்கிறான் என்று உவமையோடு வர்ணிக்கிறான். உண்மையில் அந்த சுமையில் அழுத்தம் இன்னும் அவனை விட்டு நீங்கவே இல்லை. தலையிலிருந்த வலி தோளுக்கு இறங்கும் போது சிறிய விடுதலை கிடைக்கிறதே அதில் மகிழ்ந்து வாழ்வது போன்ற அறியாமை இவ்வுலகில் வேறெதுவும் இல்லை.

-------------------

முக்தி மார்க்கத்தை தேர்வு செய்து வாழ்வதென்பது ஆன்மா உடலை தேடும் அறியாமையிலிருந்து விடுபடுவதாகும். அந்த லட்சியப்பயணத்தில் ஒருநிலையில் நின்றுவிடுவதால் எந்த பலனுமில்லை. அவ்வாறு அவ்வழியில் முழுமையாக ஒரு ஆன்மா பயணிக்காது மீண்டும் மீண்டும் பிறவிச் சுழற்சிக்கே காரணமாய் வாழ்கிறது. சிறு சிறு சந்தோஷமும், மகிழ்ச்சியும் கிடைக்கும் போது அதுவே துன்பத்திலிருந்து முற்றிலுமாக விடுதலை பெற்றதாக கருதுவது வெறும் பாசாங்குத்தனமாகும் என்கிறார்.

உடல் துன்பத்திலிருந்து விடுபடவே பலரும் யோகப்பயிற்சி, தியானம் போன்ற தவநெறி ஒழுக்கத்தில் சேர்ந்து பயனடைகிறார்கள். அவ்வாறான அரைகுறை தவநெறி ஆரம்ப நிலை விடுதலையுணர்வையே தரும். அந்த நிலையில் யோகத்தில், அதாவது யோகாசனம், தியானப்பயிற்சி போன்ற ஆரம்பக்கட்ட பயிற்சிநிலையில் தங்கிவிடுகின்ற ஆபத்தைப்போன்று வேறேதுவும் இல்லை. அவை தற்காலிக விடுதலைக்கே வழிவகுக்கும்.

யோகம் பயலும் போது, புருஷார்த்தத்தில் நெறியில் பயணிக்கும் போது, உடல் உபாதைகள் முதலில் விலகி ஆரோக்கியம் கிடைப்பது உறுதி. ஆனால் அதுவே அதன் முழுபயன்பாடாக கருதி அந்த நிலை பயிற்சியிலேயே தங்கி விடுகின்றார்கள் பலரும். அவ்வாறான உடல் உபாதைகளை விலக்கும் யோககலைக்கான பாடத்திட்டத்தையே முழுமையானதாக தற்காலத்தில் பல ஆசான்களும் அளித்து வருகிறார்கள்.

அது வேறும் ஆரம்ப கட்டத்தில் கிடைக்கும் ஆனந்த உணர்வு, அத்தோடு நில்லாது பேரானந்த, நித்யானந்த பயிற்சியில் அடுத்த கட்ட நிலைக்கு வளர்ச்சியடைவதே தவநெறியில் முழுமை பெறுவதாகும்.

அவ்வாறு ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் விடுபடும் தனித்தனி பயிற்சிகளை தவநெறியில் கற்பதோடு நின்றுவிடுவதால் முழுவதுமாக துன்பத்திலிருந்து விடுதலை கிடைப்பதில்லை. அத்துன்பம் மீண்டும் மீண்டும் நம்மை வந்து தொற்றும் போது அப்பயிற்சி சரிசெய்து கொண்டிருக்கும் அவ்வளவுதான். அதுபோன்ற தற்கால பலனுடன் அப்பயிற்சிகளை நிறுத்துகின்ற பெரும்பாலரைப்போன்று அந்தப்பாடத்திட்டதுடன் பயிற்சியை நில்லாது தொடர்ந்து விடுதலைக்கான தவநெறி வாழ்வை, நல்ல புருஷார்த்தத்துடன் உறுதியாக, தொய்வின்றி தொடர வேண்டும் என்பதையே இப்பாடலின் தெளிவாக ஏற்க வேண்டும்.





यावदस्ति प्रतीकारस्तावत्कुर्यात्प्रतिक्रियाम् । 
तथाप्यनुपशन्तानामनुद्वेगः प्रतिक्रिया ।।207।।

யாவதஸ்தி ப்ரதீகாரஸ்தாவத் குர்யாத்ப்ரதிக்ரியாம் | 

ததாப்யனுபஸாந்தர னாமனுத்வேக: ப்ரதிக்ரியா || 207 ||

So long as the diseases can be cured, efforts should be made. Still, if these remain incurable, there is no point grieving. This, truly, is the way to combat such diseases.
நோய்களைக் குணப்படுத்தும் வரை, முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இன்னும், அவை குணப்படுத்த முடியாததாக இருந்தால், துக்கப்படுவதில் அர்த்தமில்லை. இது உண்மையிலேயே இத்தகைய நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான வழியாகும்.

நோய்களை குணப்படுத்த இவ்வுலகில் என்னென்ன வழிகள் உள்ளனோ அதனை நம் சக்திக்கு முடிந்த வரை சரி செய்ய முயற்சி செய்தல் வேண்டும். நம் சக்திக்கு மீறிய நிலைவறின் மனம் வருந்தாது அச்சூழலை எதிர்கொள்ளும் மனஉறுதியுடன் வாளா இருப்பதே நல்லது. அதுவே நம் வாழ்நாள் முடிவு என்பதை புரிந்து கலங்காது வாழ வகுக்கும்.

எதுவரை இந்த தூலஉடல் இருக்கவேண்டுமோ அதுவரை அந்த ஆன்மனுடன் ஒன்றிணைந்த வினையுடல் மற்றும் தைஜஸ உடலுடன் ஒட்டி வாழும். அதன் வாழ்நாள் முடிந்தால் ஒருபோதும் சேர்ந்திருக்காது. ஆகையால் மனதில் எந்த ஒரு துன்பஉணர்ச்சியிலும் சிக்காது, சோகப்படாமல் இருப்பதே நல்லது என்றுரைக்கிறார் முனிவர்.





यदादाय भवेज्जन्मी त्यक्त्वा मुक्तो भविष्यति । शरीरमेव तत्त्याज्यं किं शेषैः क्षुद्रकल्पनैः ।।208।।

யதாதாய பவேஜ்ஜன் மீ த்யக்த்வா முக்தோ பவிஷ்யதி | ஸரீரமேவ தத் யாஜ்யம் கிம் சேஷை: க்ஷுத்ரகல்பனை || 208 ||
The acquisition of the body makes the soul wander in the world. When there is no acquisition of the body, the soul is liberated. Therefore, it makes sense to leave the body. No point entertaining other mean thoughts.
உடலைப் பெறுவது ஆன்மாவை உலகில் அலைய வைக்கிறது. உடலைப் பெறுவது இல்லாதபோது, ஆன்மா விடுவிக்கப்படுகிறது. எனவே, உடலை விட்டு வெளியேறுவது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. பிற சராசரி எண்ணங்களை மகிழ்விப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஆன்மா அநாதிகாலமாக புத்கலப்பொருளுடன் சேர்ந்த காரணத்தால் பல பிறப்புகளை, இறப்புகளை சந்தித்து இவ்வுலகில் அலைந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து விடுபட்டால் முக்தி கிடைக்கும் என்பதை வலியுறுத்துகிறார் முனிவர்.

சம்சார ஜீவன்கள் எனும் பிறவி உயிர்கள் நுட்பமான கார்மணம், தைஜசம் என்னும் கண்ணுக்குத் தெரியாத மூலசரீரங்களின் சேர்க்கையினால் ஐம்புலனுக்கு தென்படும் ஒளதாரிகசரீரம் என்னும் மனித, விலங்குப்பிறவிக்கான உடலைப் பெற்றும், அவ்வாறின்றி வைக்ரீயக ஸரீரம் என்னும் தேவ, நாரக உடலைப் பெற்றும் இவ்வுலகிலுள்ள மத்திம, ஊர்துவ, அதோ லோகத்தில் தோன்றி ஆயுள்காலம் வரை அந்த புறவுடலுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு மரணத்தை தழுவுகிறது. பின்னர் அடுத்த லோகத்தில் பிறப்பு எடுத்தபடி மீண்டும் மீண்டும் அதே பிறப்பு இறப்பு சுழற்சியில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. அதாவது ஸ்வஸ்தீகம் எனும் துன்பசக்கரத்தின் பரிதியில் வீழ்ந்து சுழன்று கொண்டிருக்கிறது. ஒருநாள் தன்னுடைய மூலசரீரங்களை களையும் போது முத்தியுலகிற்கு செல்லும்.

அச்சுழற்சிக்குக் காரணம் அந்தந்த உலக ஆசாபாசங்களில் சிக்கி தவிப்பதால், விருப்பு, வெறுப்பு வேட்கை உணர்வினால் ஒளதாரிக, வைக்ரியக புறச் சரீரங்களில் சிக்கி உழல்கிறது. அவ்வாறின்றி பகவான் கூறிய நல்ல புருஷார்த்த நடவடிக்கைகளில், தவநெறிகளில் தன்னை கட்டாயமாக ஈடுபடுத்தி மூல உடலாக பந்தித்த புத்கலங்களை விலக்க முயன்றால் ஓரிரு பிறவியிலேயே தன்னை முழுவதுமாக புத்கலத்தொடர்பிலிருந்து விடுவித்து அசரீரி யான தூய ஆன்மநிலையில் முக்தியுலகில் உறைந்து பேரானந்தத்தில் திளைக்கும். ஆதலால் இவ்வுலக ஒளதாரிக சரீரத்தை பெற்றுள்ள போது தான், தனது என்ற ஆட்சிப்பற்று, அதிகாரப்பற்றுக்களை விடுதல் வேண்டும் என்று வழிகாட்டுகிறார்.

--------------------

பாரத கலாச்சாரத்தில் நமக்குள் எந்த ஒரு வளர்ச்சி வந்தாலும் முக்தி நோக்கமே அடங்கியுள்ளது. முக்தி என்பது மனிதனுக்கு பலவிதமான நிலையிலே நடக்கலாம். எல்லாவற்றையும் தாண்டி இறுதி முக்தி என்கிற ஒன்று உள்ளது.

ஒரு கஷ்டமோ, கட்டுப்பாடோ இருந்தால் ஒரு முக்தி என்பது கண்டிப்பாய் இருக்கும். புகை பிடிக்கிறவனுக்கு ஆரோக்கியம் கெட்டு தவறென உணரும் போது அதிலிருந்து விடுதலை வந்தால் முக்தி. மது அருந்துபவனுக்கு விடுதலை அதிலிருந்து விடுபடுவது அதுவும் முக்திதான். தீய பழக்கத்தை கட்டாயமாக வைத்திருப்பவன் அச்செயலிலிருந்து விடுபடும் போது அது முக்தியாகிறது. கோபத்திலிருப்பவன் அந்த உணர்விலிருந்து வெளியேறினால் அதுவும் முக்திதான். ஏழையாய் இருப்பவனிடம் கொஞ்சம் பணம் சேர்ந்தால் அவனுக்கு அதுவும் ஒருவகையில் முக்திதான். ஏனென்றால் அவனவனும் அந்தந்த கட்டாயப் பழக்கத்தினால் வரும் துன்பத்திலிருந்து விடுதலையாகிறான் அதனால் முக்தியாகிறது.

ஆமாம்: நாம் வெளியேறமுடியாமல் எந்த ஒரு பிரச்சினையிலிருந்தாலும், சிக்கலிலிருந்தாலும் முயற்சியில் வெளியேறினால் முக்திதான் நமக்கு. எப்போது நமது உணர்விலே, புரிந்து கொள்ளும் தன்மையிலே; பிறப்பதும், இறப்பதும் கூட ஒரு கட்டுப்பாடு என்று உணர ஆரம்பிக்கிறோமோ, அப்போது அதிலிருந்தும் விடுபட வேண்டும், முக்தியடையவேண்டும் என்று ஆர்வம் நமக்குள் வரும். அந்த ஆர்வம் தூண்டப்பட, அறிவு வளர்ச்சியடைய நமது சமணக் கலாச்சாரத்தில் எல்லா நிலையிலும் புகுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை. ஏனென்றால் சின்ன சின்ன துன்பத்திலிருந்து விடுபட்டுக் கொண்டே வாழ்ந்து வந்தால் பல பிறவிகளிலும் தொடர்ந்து அது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும். அதனால் ஒரே தாவலில் தாவி முக்திப்பாதையில் பயணிக்க வழிகாட்டுவதே ஆன்மீகத் தவநெறியாகும். இந்த துரிதகதிக்கு வழிவக்கும் அறமே ஜினவறமாகும் என்பதை நாம் உணர்தலே நல்ல விழிப்புணர்வு நிலையாகும். இந்த தெளிவை நமக்களிப்பதே இப்பாடலின் கருத்தாகும்.





नयेत् सर्वाशुचिप्रायः शरीरमपि पूज्यताम् । 
सोअप्यात्मा येन न स्पृ}यो दुशचरित्रां ध्गिस्तु तत् ।।209।।

நயேத்ஸர்வாசுசிப்பராய: சரிரமபி பூஜ்யதாம் | 

ஸோஅப்யாத்மா யேன ன ஸ்புருச்யோ துச்சரிதரம் திதஸ்து தத் || 209 ||

The soul makes even the all-impure body an object of adoration; fie on the body that makes even such a soul untouchable.
ஆத்மா அனைத்து தூய்மையற்ற உடலைக் கூட வணக்கத்தின் பொருளாக ஆக்குகிறது; அத்தகைய ஆன்மாவை கூட தீண்டத்தகாதவர்களாக மாற்றும் உடலின் போக்கால்.

இந்த பாடலில் உடலின் தீய ஒழுக்கம் வெறுக்கத்தக்கது என்றுரைக்கிறார் முனிவர்.

உடலினது தூய நடவடிக்கையால் உயர்ந்த மனிதர்களாக மாற்றவும் முடியும், மிகவும் கீழான சண்டாளனாய் கூட ஏளனத்திற்கு ஆளாக்க வும் முடியும் தனது தவறான நடவடிக்கையினால். அதனால் ஒழுக்கத்தில் கவனம் வைப்பதே வாழ்க்கையின் மேலான நோக்கமாய் இருக்க வேண்டும். மேலும் தீய பாவச் செயல்களை செய்வித்து நரகம், விலங்கு, நிகோதம் போன்ற தீய யோனிகளிலும் பிறக்கச் செய்துவிடும் அபாயமும் உள்ளது.

இதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை; யார் நல்லவரோ அவர் நல்லதையே செய்வார், யார் தீயவரோ அவர் தீமையே செய்வார்.





தமிழ் பாடல்रसादिराद्यो भागः स्याज्ज्ञानावृत्त्यादिरन्वतः । 
ज्ञानादयस्तृतीयस्तु संसार्येवं त्रायात्मकः ।।210।।

भागत्रायमयं नित्यमात्मानं बन्ध्व£तनम् । 

भागद्वयात्पृथक् कर्तुं यो जानाति स तत्त्ववित् ।।211।।

ரஸாதிராத்யோ பாக: ஸ்யாஜ்ஞான விருத்யா திரன்வத: | ஞானதயஸ்த்ருதீயஸ்து ஸம் ஸாரயாவம் க்ரயாத்மக: || 210 ||

பாகத்ரயமயம் நித்யமாத்மானம் பந்தவர்தினம் | 

உடல்பாகத்வயாத் ப்ருதக் கர்தும் யோ ஜானாதி ஸ தத்த்வவித் || 211 ||

The worldly souls have three components: the first component is the seven-elementary-constituents (alimentary juice, blood, flesh, fat, bone, marrow and semen), the second component is karmas like the knowledge-obscuring (jñānāvaraõīya)*, and the third component is the soul’s own-nature of knowledge, etc.

The one who knows these three components of the eternal soul that presently is bound with karmas, and also the method of separating the first two from the eternal soul, is to be known as the knower of the reality.
210 211 உலக ஆத்மாக்களுக்கு மூன்று கூறுகள் உள்ளன: முதல் கூறு ஏழு-அடிப்படை-கூறுகள் (ஊட்டச்சாறு, இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை மற்றும் விந்து), இரண்டாவது கூறு ஞானாவரணம் போன்ற கர்மங்கள் மற்றும் மூன்றாவது கூறு என்பது ஆன்மாவின் சொந்த இயல்பான ஞானம் முதலியன.

நித்திய ஆத்மாவின் இந்த மூன்று கூறுகளையும் தற்போது கர்மங்களுடன் பிணைத்துள்ளவர், முதல் இரண்டையும் நித்திய ஆத்மாவிலிருந்து பிரிக்கும் முறை ஆகியவற்றை அறிந்தவர், யதார்த்தத்தை அறிந்தவர் என்று அறியப்பட வேண்டும்.

சம்சார ஜீவன்கள் மூன்று வகையான கூறுகளை உள்ளடிக்கியவை. புற உடல் அதாவது ஏழு தாதுக்களால் ஆனது. இவை அனைத்தும் இப்பூமிலிருந்து எடுக்கப்பட்டு உருவானவை. அடுத்து சூட்சுமமாய் நுழைந்து உருவான புத்கலப் பொருள். அதாவது கார்மண சரீரம். பிரதானமாக எட்டு வகையான கர்மங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஞான, தரிசன, சாரித்ர, சுகம் போன்ற குணக்கூறுக்களாலான ஆத்மா. தூய ஆன்மா.

இந்த மூவகை கூறுகளை எவர் ஒருவர் அறிந்து, ஆன்மாவை பிறவற்றிலிருந்து பிரிக்கும் முறையை அறிந்தவரோ அவரே ஞானியாவார். மூலக்குணங்களில் மட்டும் ஒன்றி பிறவற்றை நீக்கும் ஆற்றல் பெற்றவர் எவரோ அவரே தத்துவஞானியாவர். மற்றவர்கள் இந்த உலகப்பொருட்களுடன் ஒன்றியிருப்பதால் அஞ்ஞானி என்றே அழைக்கப்படுவார்கள்.





करोतु न चिरं घोरं तपः क्लेशासहो भवान् । 
चित्तसाध्यान् कषायारीन् न जयेद्यत्तदज्ञता ।।212।।

கரோது ந சிரம் கோரம் தப: க்லேசாஸஹோ பவான் | 

சித்த ஸாத்யான் கஷாயாரீன் ந ஜயேத்யத்ததஞதா || 212 ||

If you do not observe severe austerities (tapa) because of your inability to endure hardships, let it be. However, if you do not subjugate passions (kaÈāya), etc., which are conquered through the control of the mind, then it is your ignorance.
நீங்கள் கஷ்டங்களைத் தாங்க முடியாமல் போனதால் கடுமையான தப நடவடிக்கைகளை ஏற்கவில்லை, அப்படியே இருக்கட்டும். இருப்பினும், மனதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வெல்லப்படும் தீய உணர்வுகள் (கஷாயம்) போன்றவற்றை நீங்கள் வெல்லாவிட்டால், அது உங்கள் அறியாமை. பத்தற தர்மத்தை நினைவு கூறவே இப்பாடலை வடித்துள்ளார் ஆச்சார்ய பெருமான். 

 மோட்ச மார்க்கம் உடல் வழி, மனோபாவ வழி என இருவழி விரதங்களை, கட்டுப்பாடுகளை வழிகாட்டுதலாக சமணம் வழங்குகிறது. அவற்றை அகத்தவம் ஆறு, புறத்தவம் ஆறாக வழிகாட்டப்பட்டுள்ளது. அவை இரண்டையும் ஒரே சமயத்தில் கடைபிடித்தால் பல பிறவிகளைக் குறைத்து வீடுபேறுக்கு வழிவகுக்க முடியும் என்ற நம்பிக்கையில் உறுதியுடன் தொடங்க வேண்டும். அவ்வாறாக தூண்டப்பட்ட ஒருவர் துறவறச் சங்கத்தில் இணைந்தால் இரண்டையும் சமகாலத்தில் கடைபிடிக்க சுலபமாய் இருக்கும்.


 அந்த இருவழி கட்டுப்பாட்டுச் சூழலை அமைத்துக் கொள்ள இயலாது இல்லறத்தின் கடமைகளை நிறைவேற்றுவதிலேயே அழுத்தப்பட்டவர்கள். அஷ்டாங்க யோகத்தில் முழுவதுமாக ஈடுபட நேரமின்மையால் அகத்தவமான கஷாய உணர்வுகளை விலக்குவதில் முழு கவனத்தை செலுத்துவது அன்றாட குடும்ப, தொழிலாற்றும் சூழலில் துன்பத்தை குறைத்து விடும். அத்தோடு பிற்காலத்தில் உடல்வழி மார்க்கத்தில் முழுமையாய் தப நடவடிக்கையில் ஈடுபடும் போது உறுதுணையாய் அமைந்திடும் என வழிகாட்டுகிறார்.


 ஆதலால் சிறு வயது முதலே கோபம், கடும்பற்று, செருக்கு, மாயாச்சாரம் போன்ற தீய உணர்வுகளால் தூண்டப்படும் போது அத் தூண்டல்களுக்கேற்ற துலங்குதலில் ஈடுபடாமல் வாழும் கலையை பெற்றோர்கள் கற்றுத்தருவது வளர்ந்த பின்னர் அவர்கள் இரண்டில் எந்த ஒரு வாழ்வுநெறியை தேர்வு செய்தாலும் நல்ல பலனை அளித்து விடுதலையை பெற வாய்ப்பளிக்கும் என்ற தெளிவை இப்பாடல் நமக்களிக்கிறது. 

 இதற்கு உதாரண புருஷனாய் வாழ்வதற்கு பத்தற தர்மத்தில் கவனம் செலுத்துவதே மேன்மையளிக்கும். அதனால் தசலட்சண பருவ நோன்பை அவசியம் இல்லறத்தார்கள் கடைபிடித்தல் அவசியமாகிறது.





हृदयसरसि यावन्निलेsप्यत्यगाधे वसति 
खलु कषायग्राहचक्रं समन्तात् । 
श्रयति गुणगुणोsयं तन्न तावद्विद्विशङक्ं 
सयमशमविशेषैस्तान् विजेतुं यतस्व ।।213।।

ஹ்ருதய ஸரஸி யவந்நிர்மலே அப்யத்காதே, 

வஸதி கலு கஷாய க்ராஹசக்ரம் ஸமந்தாத் | 
ஸ்ரேயதி குணகுணோ அயம் தந்ந தாவத்விசங்கம், 
ஸயமச மவிஸேஷை ஸ்தான் விஜேதும் யதஸ்வ || 213 ||
As long as cruel water-animals, in form of cluster of passions (kasāya), exist in your pristine and unfathomable lake of the heart (the mind), certainly, fearless existence of cluster of virtues, in form of forbearance, etc., is not possible. Therefore, O worthy soul! With observance of vows (yama) and tranquility (śama), strive to subjugate those passions.
தீய உணர்ச்சிகளின் சேர்க்கை கொடூரமான நீர்-விலங்குகளாக் உங்கள் அழகிய மற்றும் புரிந்துகொள்ள முடியாத இதயம் எனும் ஏரியில் இருக்கும் வரை, நிச்சயமாக பொறுமை போன்ற நல்லொழுக்கங்களின் சேர்க்கை அந்நீரில் வாழ சாத்தியமில்லை . ஆகையால் நல்ல ஆத்மா! க்ஷம, தம, யம இவற்றால் அந்த தீய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவும்.

கஷாயங்கள் என்னும் தீய உணர்வுத்தூண்டல்களை களைய மாற்றாக அதற்கெதிரான நற்குணங்களைக் கடைபித்தால் அவை வெளியேறும் என்ற உபாயத்தை வழங்குகிறார் முனிவர். இந்தப் பாடலும் பத்தற நோன்பின் சிறப்பினை வலியுறுத்த உருவாக்கப்பட்டது.

ஒருவரது மனமெனும் நீர்நிலையில் விஷ ஜந்துக்கள் வாழும் வரை அந்த நீர் பயன்படுவதில்லை, மேலும் அதுவே முடிவிற்கும் காரணமாய் அமைந்து விடும். அதுபோல ஒருவரது இருதயத்தில் க்ரோதம், மான, லோபம், மாயா போன்ற உணர்ச்சித்தூண்டுதல்கள் இருக்கும் வரை எந்த ஒரு தவநெறிக்கான துலங்கலும் தோன்றப்போவதில்லை. அதனால் அந்த தீய உணர்வுகளுக்கு மாறான பொறுமை எனும் சமதாபவம், புலனுணர்வுக்கு தடை செய்யும் தம உணர்வுடனும், அஹிம்சை எனும் கொல்லாமை உணர்வை வளர்த்தலுமே அவ்விஷங்கள் இருதயத்தை விட்டு வெளியேற வழிவகுக்கும் என்று வழிகாட்டுகிறார்.





हित्वा हेतुपफले किलात्रा सुध्यिस्तां सिध्दिमामुत्रिकीं 
वाञछन्तः स्वयमेव साध्नतया शंसन्ति शान्तं मनः । 
तेषामाखुबिडालिकेति तदिदं धिक्धिक्कले प्राभवं 
येनैतेअपि पफलद्वयप्रलयनाद् दूरं विपर्यासिताः ।।214।।

ஹ்த்வா ஹேதுபலே கிலாத்ர ஸுதியஸ்தாம் ஸித்தி மாமுத்ரிகிம், 

வாஞ்சந்த் ஸ்வயமேவ ஸாதனதயா ஸம்சந்தி காந்தம் மன: | தேஷாமாகுபிடாலிகேதி தகிதம் திக்திக்க்கலே: ப்ராபவம், 
யேனைதேஅபி பலத்வய ப்ரவய ப்ரவயநாத் தூரம் விபர்யாஸிதா: || 214 ||
The (so called) ‘wise’ men desire perfection hereafter, but without appreciating that renouncing attachment-to possessions (parigraha) is the cause (hetu) and tranquility of the mind, the effect (hetuphala), they harp just on tranquility of their mind. Their conduct has inherent contradiction, like that apparent in the cat and the mouse. This is the effect of the kali age (the fifth period, called dusamā). Fie on such ‘wise’ men; they greatly deceive themselves as they get deprived of enjoyment in this world as well as the next.
புத்திசாலிகள் 'என்று அழைக்கப்படுபவர்கள் முழுஅமைதியை விரும்புகிறார்கள், ஆனால் உடைமைகளை கைவிடும் மனதின் காரணங்களையும் பின்விளைவைப் பாராமல் விட்டுவிடுவதால் தங்களின் அடுத்த பிறவிக்கான நன்மையை(தீமை என்பது புரியாமல்) தேடுகிறார்கள். அவர்களின் இந்த நடத்தை பூனை மற்றும் எலி பகை போன்ற உள்ளார்ந்த முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. இது கலியுகத்தின் விளைவு (ஐந்தாவது காலம், துசாமா). அத்தகைய ‘ஞானிகள்’(நகைச்சுவையாக) அவர்கள் இந்த உலகத்திலும் அடுத்த பிறவிலும் இன்பத்தை இழக்கும்போது தங்களை பெரிதும் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

தன்னை பெருமைப்படுத்திக் கொள்ளுபவர்கள், கஷாயங்களை விடாமலேயே மனஅமைதியுடைவர்களாக கூறிக்கொள்வது, பூனையும் எலியும் போன்று பகையானது. அவ்வாறான ஞானியர் என தன்னைக் கூறிக்கொள்பவர்கள் ஆன்ம முன்னேற்ற தவ நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை. அவர்கள் தங்களை இம்மை மற்றும் மறுமைக்கான நலன்களைக் கெடுத்துக் கொண்டு பெரிதும் வஞ்சிக்கப்படுகிறார்கள்.





उद्युक्तस्त्वं तपस्यस्यध्किमभिभवं त्वामगच्छन् कषायाः 
प्राभूध्पोधोSप्यगाधे जलमिव जलधै कंतु दुर्लक्ष्यमन्यैः । 
निव्र्यूढेSपि प्रवाहे सलिलमिव मनाग्निम्नदेशीष्ववशयं 
मात्सर्यं ते स्वतुल्ये भवति परवसाध्त्रद दुर्जयं तज्जहीहि ।।215।।

உத்யுக்தஸ்த்வம் தபஸ்யஸ்யதிகமபிபவம் த்வாமகச்சன் கஷாயா: ப்ராபூத் போதோ அப்யகாதோ ஜலமிவ ஜலனிதன கிம்து துர்லக்ஷ்ய மந்யை:| நிர்வ்யூடே அபி ப்ரவாஹே ஸலிலமிவ மனாக் நிம்னதே சேஷ்வச்யம், மாதஸ்ர்ய தே ஸ்வதுல்யே பவதி பரவ்ஸாத்ர துர்ஜயம் தஜ்ஜஹீஹி || 215 ||
O worthy soul! You have embarked on austerities (tapa), greatly subdued the passions (kasāya), and deep knowledge, like waters of the ocean, has manifested in you. Still, subdued by karmas, you carry invincible jealousy, invisible to others, for your fellow-ascetics; it is like the invisible flow of water deep in the seemingly placid ocean. Get rid of this jealousy.
தகுதியான ஆத்மா! நீ தவ நடவடிக்கைகளில் இறங்கியுள்ளீர்கள், தீயஉணர்ச்சிகளை பெரிதும் அடக்கியுள்ளீர்கள், மேலும் கடல் நீரைப் போன்ற ஆழமான அறிவு உங்களில் வெளிப்பட்டுள்ளது. ஆனாலும், கர்மாக்களால் அடிபணிந்து, உங்கள் சக சந்நியாசிகளுக்காக, வெல்லமுடியாத பொறாமையை, மற்றவர்களுக்கு கண்ணுக்கு தெரியாமல் நீங்கள் சுமக்கிறீர்கள்; இது ஓடை நீரில் கண்ணுக்குத் தெரியாத பூமிக்குள் இறங்கும் நீர்ஒழுக்கு போன்றது. இந்த பொறாமையிலிருந்து விடுபடுங்கள்.

தவசியானாலும், இல்லறத்தானாலும் தான் ஆத்மா என்ற தெளிவை பெற உதவும் தவம், தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடும் போது தோற்றத்தில் வெளிப்படும் தீய உணர்வுகளை மட்டும், அதாவது சொல், செயல் வழியே வெளிப்படும் யோகமுறையை கட்டுப்படுத்துவதினால் மட்டும் முழுப்பயனும் கிட்டுவதில்லை. உள்ளுணர்வில் தோன்றி தீய உணர்ச்சிகளை தோற்றுவிக்கும் கண்ணுக்குத் தெரியாத கஷாய தூண்டல்களையும், அகங்காரத்தையும், அலட்சியம் செய்வதே முழு தவநெறியையும் கடைபிடிப்பதாகும் என்கிறார் முனிவர் பெருமான்.

அதாவது ஆற்றுப் பெருக்கில் ஓடும் நீரை மட்டுமே அணை போட்டு தடுக்க இயலும். ஏனென்றால் அது கண்ணுக்கு தெரியும் விரயம் ஆகும். ஆனால் ஆற்றின் போக்கை தடுத்தாலும் பூமிக்குள் செல்லும் ஒழுக்கினையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்கிறார்.

அது நீர் மேலாண்மைக்கு மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். அதனையும் கருத்தில் கொண்டுதான் நீர்ப்பாசனங்களுக்கு வழிவகுக்கிறது அரசின் நீர்பாசனத் துறை. அதனால் தான் அளவுக்கு மீறி ஆழப்படுத்துகிறேன் என்று சொல்லி செய்யப்படும் மணல் கொள்ளையை தடுக்க பரிந்துரை செய்கிறது.

அதே போன்று தோற்றத்தில் வெளிப்படும் கஷாய உணர்வுகளைக் களையும் தவநெறிப் பயிற்சிகளில் ஈடுபடுவது மட்டும் போதாது , உள்ளுணர்வில் நம்மையறியாமல் அகங்காரமாய் குடியிருக்கும் உணர்வுகளையும் அடியோடு களைந்தால் தான் முழு தவநெறியாகும் என்று ஆன்ம முன்னேற்ற பயிற்சியில் ஈடுபடும், அதிலும் முக்கியமாக தவசிகளுக்கு அறிவுரை வழங்குகிறார் ஆச்சார்ய பெருமான்.





चित्तस्थमप्यनवबुध्द्य हरेण जाडड्ढात् 
क्रुद्ध्वा बहिः किमपि दग्ध्मनङगबुध्द्या । 
घोरामवाप स हि तेन कृतामवस्थां 
क्रोधेदया७वति कस्य न कार्यहानिः ।।216।।

சிகஸ்தமப்ப நவபுத்வத ஹரேண ஜாட்யாத் 

குதத்வா பஹி: கிமபி தக்தமனங்க புத்யா | 
கோரா மவாப ஸ ஹி தென க்ருதாமவஸ்தாம், 
குரோதோ தயாத் த்ரவதி கஸ்ய த கார்யஹானி: || 216 ||
(As per the Hindu mythology–)The super-deva (Mahādeva, the destroyer), subjugated by anger and not appreciating that Cupid lived in his own heart, had burnt down certain external thing mistaking it for the ‘god of love’. Cupid, later on, made him suffer greatly. It is right; whose effort does not become worthless by anger?
காமம் மனதில் தான் தோன்றுகிறது வெளியில் இல்லை. இதை அறியாமல் சினங்கொண்டு எதிரில் உள்ளவரே காரணம் என அவனை சுட்டுச் சாம்பலாக்கினார். மேலும் காம வேட்கை அழியாமல் பின்னர் மிகுந்த துன்பத்திற்கு ஆளானார். சினம் உதயத்தால் காமம் யாருக்குத்தான் தீங்கு விளைவிக்காது.

காளிதாசர் எழுதிய குமாரசம்பவத்தில் - சிவ பெருமான் தவம் புரியும்போது பார்வதி தேவியை காமன் அவர்முன் தோன்றச் செய்து நாட்டியமாடச் செய்கிறான். இதனால் சினங்கொண்ட சிவன் தன் நெற்றிக் கண்ணை திறந்து காமனை எரித்து விடுகிறார். ஆனால் அவர் எரித்தது காம தேவனையே அன்றி தன் மனதில் இருந்த காம உணர்வை அல்ல. பின்னர் பார்வதியை மணந்து பெருந்துன்பங்களை அனுபவித்தார் என்ற கதை உள்ளது.

கோபத்திற்கு காரணமான பொருளை அழிப்பதால் எந்தப் பயனும் இல்லை. உள்ளுணர்வில் தோன்றும் குரோத கஷாயமே யாகும். அதற்கு அடிப்படையாய் உள்ளது காமம். அதனை அழித்தலே சிறந்தது என்று தெரிவிக்கிறார் முனிவர் பெருமான்.

----------------------

கோபத்தின் மனோதத்துவம் என்னவென்றால்…

எதையாவது விரும்புகிறோம், அதை பெறுவதற்கு யாரோ தடையாக இருக்கிறார்கள். அதை பெறுவதை தடுக்கிறார்கள். ஒரு தடங்கலாக இருக்கிறார்கள்.

நம் சக்தி முழுமையும் ஒன்றை பெற விரும்புகிறது. யாரோ அந்த செயலை தடுக்கிறார்கள். விரும்பியதை பெற முடியவில்லை. அந்த விரக்தியடைந்த சக்தி கோபமாக மாறுகிறது.

நம்முடைய ஆசை பூர்த்தியடையக் கூடிய சாத்தியக்கூறை அழித்த மனிதர் மேல் கோபம் வருகிறது. நம்மால் கோபத்தை தடுக்க முடியாது. ஏனெனில் கோபம் ஒரு தொடர் விளைவு, பின் விளைவு.

ஆனால் அந்த பின் விளைவு நிகழாமல் இருக்க ஏதாவது செய்யலாம்.

வாழ்வில் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுதல் வேண்டும். வாழ்வா சாவா என்ற கேள்வி வரும் அளவு எதையும் ஆழ்ந்து விருப்பப் படாமல் இருப்பது. சிறிது விளையாட்டுத் தனமாகவும் இருக்க வேண்டும். விருப்பப் படாதே என்று சொல்வது கடினம்.

ஏனெனில் அந்த ஆவல் நம்முள் அழுத்தப்பட்டுவிடும், விருப்பம் கொள்ள வேண்டும். ஆனால் அதைப்பற்றி சிறிது விளையாட்டுத்தனத்தோடு இருக்கவே சில ஞானியர் கூறுகிறார்கள்.

கிடைத்தால் நல்லது, கிடைக்காவிட்டால் பரவாயில்லை, அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம். விளையாடுபவர் போல இருந்து பழக வேண்டும்.

நாம் நமது ஆசைகளுடன் ஒன்று பட்டு விடுகிறோம். அது தடைபடும்போது அல்லது தடுக்கப்படும்போது நமது சக்தியே தீயாகி விடுகிறது. அது நம்மையே எரிக்கிறது. அந்த நிலையில் கிட்டதட்ட மனம் தடுமாறிய நிலையில் என்ன வேண்டுமானாலும் செய்யத் தூண்டலாம் – பழி வாங்குவதற்காக!

நம்முடைய வாழ்வு முழுவதும் தொடரக்கூடிய சங்கிலி தொடர் நிகழ்ச்சிகளை அது உருவாக்கும்.

கோபத்தை நிறுத்த முயற்சி செய்யக்கூடாது. எந்த வகையிலாவது கோபம் கரைந்து போக வேண்டும். இல்லாவிடில் அது நம்மை எரித்துவிடும்; அழித்துவிடும்.

அதன் வேர்களுக்கு செல்ல வேண்டும். ஏதோ ஆசை தடைப்பட்டு, நிறைவேறாமல் உள்ளது. அந்த விரக்தி தான் கோபத்தை உண்டாக்குகிறது. இதுதான் அதன் ஆணி வேராக இருக்கும்.

கோபத்தை ஒருமுறை உன் ஆத்மனில் உரைத்து, கரைத்து விட்டால், பின் எல்லாமும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும். கோபம் மறைந்து விடும். அப்படி அது மறைவது உனக்கு ஒரு புது ஆச்சரியமாக இருக்கும். ஏனெனில் கோபம் மறையும் போது அது கருணையும், அன்பும், நட்பும், ஆனந்தமும் நிறைந்த அளவற்ற ஆற்றலை விட்டு செல்லும்.

விருப்பப்பட்டது கிடைக்காதபோது கூட மகிழ்ச்சியாக, ஆனந்தமாக இருப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

அதுவே…. ஆசை - கோபம் – ஆத்ம தியானம் - ஆனந்தம்





चक्रं विहाय निजदक्षिणबाहुसंस्थं यत्प्राव्रजन्ननु तदैव स तेन मु ञचेत् । 
क्लेशं तमाप किल बाहुबली चिराय मानो मनागपि हतिं महतीं करोति ।।217।।

சக்ரம் விஹாய நிஜதக்ஷிணபாஹுஸம்ஸ்தம் யத் ப்ராவாஜன்னனு ததைவ ஸ தேன முஞ்சேத் | 

க்லேசம் தமாப கில பாஹுபலி சிராய மானோ மனாகபி ஹதிம் மஹதீம் தரோதி || 217 ||
Soon after Bāhubalī took to asceticism, after abandoning the divine spinning-wheel (cakra) that had descended on his right arm, he should have attained liberation due to his austerities (tapa). But he remained troubled for a long time. It is right; even slightest pride results in great harm.
சக்ராயுதத்தை ஏவியதைக் கண்டு விரக்தியுற்று, தீக்ஷை ஏற்று முக்தியடைய கடுந்தவம் மேற்கொள்கிறார். கடுகளவு மானகஷாயம் மறைந்திருந்ததால் கடும் தப முயற்சியும் பயன்தர காலதாமதமாகிறது. முக்திக்காலம் நீள்கிறது. சிறிதளவு மானமும் பெருங்கேடு.

ஆதிபகவனின் இளயகுமாரர் பாகுபலி, மூத்தவர் பரதன் சக்கரவர்த்தி பதவி மோகத்தில் பரதன் பாகுபலியை தனக்கு அடிபணிய அழைக்கிறார். நேரடிப்போரில் தோற்கும் நிலை பரதனுக்கு ஏற்படவே, தன் தம்பி என்றும் பாராது அவர்மீது சக்கராயுதத்தை விடுகிறார். அதுவோ பாஹுபலியை வலம் வந்து திரும்புகிறது.

இந்நிகழ்ச்சிக்கு வருந்திய பாஹுபலி துறவேற்று கடுந்தவம் புரிகிறார். ஆனால் கடைசியில் அவருக்கு முழுதுணர்ஞானம் தோன்றுவதில் தாமதம். காரணம் தனக்குச் சொந்தமான பூமியில் நில்லாது, அண்ணன் நிலத்தில் தானே நிற்கிறோம் என்ற உணர்வு அவரை தடுத்து நிற்கிறது. அவ்வாறு தடுத்தது சிறிதளவு மான கஷாயம் என்பதை பாகுபலியின் வரலாற்றில் அனைவரும் கண்டதே.

அதனால் தவநெறியில் வாழ்வோர் செருக்கை அறவே விலக்குதல் வேண்டும் என்று கூறுகிறார் முனிவர் பெருமான்.

--------------------------

எண்ணங்களின் / நினைவுகளின் / எதிர்கால கற்பனைகளின் - சேகரிப்பு தான் மனம்

மனம் என்றால் நினைவு. சுயம் உள்ளே இருக்கிறது. நாம் உள்ளே இருக்கிறோம்.

நான் என்பது இல்லாமல் இருக்கிறோம். உள்ளே நான் என்பது கிடையாது.

பிறகு...... எப்படி நான், ஆணவம், என்பது உருவானது..

வெளி வட்டத்தில் ஒவ்வொரு கணமும் தகவலறிவு, அனுபவம், நினைவுகள், ஆகியவை சேகரிக்கப்படுகிறது. இது தான் மனம். மேலும் நாம் எப்போது உலகத்தை பார்த்தாலும், மனதின் மூலமாகப் பார்க்கிறோம்.

எப்போது புது அனுபவம் கிடைத்தாலும், அதை நீ நினைவுகள் வழியாக பார்க்கிறோம். அப்போது பார்ப்பது நினைவுகள் மூலம் மாறுபாடு செய்யப்படுகிறது. எல்லாவற்றையும் கடந்த காலத்தின் வழியே பார்க்கிறோம். அந்த கடந்த காலம் ஒரு இடைத்தரகன் ஆகிவிடுகிறது. தொடர்ந்து கடந்த காலத்தின் வழியே பார்ப்பதால் அதனுடன் அடையாளப்பட்டு விடுகிறோம்.

அந்த அடையாளம் தான் ஆணவம்.

------------

மறைந்து மறைந்து புழக்கடை வழியாக மறுபடியும், மறுபடியும் நுழைவதில் கைதேர்ந்தது ஆணவம்.

முன் வாசல் வழியாக அதைத் தூக்கி வீசலாம். அது மறுபடியும் பின் வாசல் வழியாக உள்ளே புகுந்து விடும். அதன் காலடி ஓசையை கேட்க முடியாத அளவுக்கு ஒவ்வொரு தடவையும் தந்திரமாக வரும்.

பணிவில் தன்னை மறைத்துக் கொண்டு அது வரலாம். மாசுமருவற்ற தன்மை என்ற முகமூடி போட்டுக் கொண்டு அது வரலாம். காதல் வேடம் பூண்டு தன் சுயரூபத்தை மறைத்துக் கொண்டு அது வரலாம்.

சாதாரணமாக, சந்தேகம் வராத இடங்களில் வாழ்க்கை நடத்தக்கூடிய சாமர்த்தியம் கொண்டது அகங்காரம். அதனை ஒழுத்து விடு என்றுதான் ஆத்மானுசாசனம் கூறுகிறது.





सत्यं वाचि मतौ श्रुतं हृदि दया 
शौर्यं भुजे विक्रमे लक्ष्मीर्दानमनूनमरथनिचये मार्गो गतौ निर्वृतेः । 
येषां प्रागजनीह तेSपि निरहंकाराः श्रुतेर्गोचराः 
चित्रां सम्प्रति लेशतोSपि न गुणास्तेषां तथाप्युध्दताः ।।218।।

ஸத்யம் வாசி மதென ஸ்ருதம் ஹ்ருதி தயா, செளர்யம் புஜே விக்ரமே, லக்ஷ்மீர்தானமனுநமர்தி நிசயே மார்கோ கதிர்நிர்வ்ருதே | யேஷாம் ப்ராகஜனீஹ தேஅபி நிரஹங்கார: ஸ்ருதேர் தோசரா: சித்ரம் ஸம்ப்ரதி லேசிதோ அபி ந குணாஸ்தேஷாம் ததாப் யுத்வதா: || 218 ||


The Jaina literature – prathamānuyoga – is replete with stories of great men of the past who had truthfulness in speech, the Scripture in intellect, compassion in heart, heroism in arms, strength of Lakshmī, wholesome charity for the suppliant, and treading the path to liberation. Even such great men were free from pride. It is a pity that in the present time men without a trace of such virtues are seen to be overtly overbearing.
ஜைன இலக்கியம் - பிரதமானுயோகம் - பேச்சில் சத்தியம், புத்தியில் ஆகமஞானம், இதயத்தில் இரக்கம், ஆயுதங்களில் வீரம், தோள் வலிமை, வலியவருக்கு தொண்டு போன்ற பற்றினை வெறுக்கும் கடந்த கால உத்தமமனிதர்களின் கதைகள் நிறைந்தவை. விடுதலை. அத்தகைய சலாகா புருஷர்கள் கூட கர்வத்திலிருந்து, மான கஷாயத்திலிருந்து, விடுபட்டார்கள். தற்போதைய காலங்களில் இதுபோன்ற நல்லொழுங்கள் சிறிதும் இல்லாத ஆண்களிடத்தில் கர்வத்தைக் காண முடிகிறது.

முற்காலத்தில் சத்தியம், வீரம், ஆற்றல், அருள், கொடை குணம், பெருஞ்செல்வம் பற்றின்றி வாழும் மனவளம் இவைகளை எல்லாம் பெற்றிருந்தும் சிறிதும் செருக்கு, ஆணவம் எனும் மான கஷாயமின்றி வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகிறது. ஆனால் இந்த மேலான அம்சங்கள் சிறிதும் இல்லாதவர்களிடத்தில் ஏராளமாக காணப்படுவது விந்தையே என்கிறார் ஆச்சார்யர்.

மான கஷாயத்தினால் அழிந்த அரசர்களின் கதையில் தான் மான கஷாயம் சிறிதுமில்லாதவன் மேலான நிலையை அடைந்ததை காண முடியும்.

-------

பழங்காலக்கதை யொன்று… (தற்கால ஊடகத்திலும் வலம் வருவதை கண்டிருக்கலாம்..)

தன்னை மிகவும் ஆழ்ந்த பக்திமானாகக் கருதிக்கொண்டு பட்டை, கொட்டை, மஞ்சள் கலர் கருப்பு பார்டரில் ௐ போன்ற எழுத்துக்கோர்வையுடனான வேஷ்டி, துண்டுடன் தினமும் பக்திப்பழமாக சென்று கொண்டிருப்பவரிடம், ஒரு கூலித்தொழிலாளி தனது கூலியில் ஒருபகுதியை கொடுத்து “ஐயா இந்த காசுகளை கோவில் உண்டயலில் செலுத்தி விடுங்கள். தினமும் நான் சென்று செலுத்தும் வழக்கத்தை கொண்டவன். இன்று செல்ல முடியவில்லை. தாங்கள் கண்டிப்பாக இதைச் செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்பில் இதனை அளிக்கிறேன். மிக்க நன்றி ஐயா” என்ற படி வேண்டினான்.

அவர் -ஆமா இவன் கொடுக்கிற காசுலதான் அந்த ஊண்டியல் நிரம்பப்போகிறது - என்ற ஏளனமாய் பார்த்த படி, வாங்கவில்லை என்றால் பலரும் தன் பக்தியை சந்தேகிப்பர் என்றெண்ணி வேண்டா வெறுப்பாய் பெற்றுக் கொண்டு, மந்திரத்தை உச்சரித்தபடியே கோவிலின் உண்டியலுக்கு அருகில் சென்றார். அந்த உண்டியலின் ஓட்டையில் அவன் அளித்த காசை போட முயன்றபோது ஸ்வாமியே கையை நீட்டி வாங்கிக் கொண்டாராம்.

அதிர்ச்சி!! அக்காட்சியைக் கண்டு திகைத்து நின்ற அவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்து நின்றது. ஸ்வாமி மற்றோரு கையிலிருந்த வைர, வைடூரியங்கள் பதித்த தங்க வளையை அவனிடம் தந்து “இந்த வளையை அந்த தொழிலாளியிடம் சேர்ப்பித்து விடு” என்று கூறி சென்று விட்டார்.

வாயடைத்துப் போன அந்த பக்தர் சிலைபோல நடந்து வெளியேறினார். ஆனால் அவரது சிறுமதி அவரை தனது மனைவியிடம் அழைத்துச் சென்றுவிட்டது. அவளிடம் இது போல் தனக்கு ஒரு வளை பரிசாக கிடைத்தது, “உனக்காக கொண்டுவந்தேன். உன் கைகளுக்கு அழகாய் இருக்கும்” என்ற கூறி அவளை மகிழ்விக்க எண்ணினார்.

வாங்கி வாயைப்பிளந்த அவளும் அகமகிழ்ந்து சிறுது நேரத்தில் “கண்டிப்பாக இதன் ஜோடி வளை இருக்கும் அதையும் வாங்கி வந்து விடுங்கள் என்று ஆணை பிறப்பித்துச் சென்று விட்டாள்.” இவரும் செய்வதறியாது யாரிடம் செல்வது ஸ்வாமியிடமா, அந்த தொழிலாளியிடமா என்று சிந்தித்துக் கொண்டே தொழிலாளியிடம் சென்று விட்டார். “ஐயனே இதுபோல் நீ அளித்த காசைப்போடும் போது எனக்கு வளையை பரிசளித்தார் ஸ்வாமி. மீண்டும் அதேபோல் நீ தந்தால் எனக்கு இன்னொரு வளை கிடைக்கும் என்றார்.

அதைக்கேட்ட அத்தொழிலாளியும் தனது பைக்குள் கையை விட்டான். எடுத்தபோது காசுக்குப் பதில் ஜோடியின் இன்னொரு வளை வந்தது. அதனை அவரிடமே கொடுத்து விட்டான்.

அதனைக் கண்டு பேயறைந்தது போலானார் அந்த பக்திமான். சிலநொடிகள் ஒன்றுமே புரியவில்லை. இதெப்படி சாத்தியம். நானும் இத்தனை வருடமாய் ஸ்வாமியை வணங்கி வருகிறேன். எனக்கு கிடைக்கவில்லை. உனக்கு எப்படி இப்படி கிடைக்கிறது. என்று கேட்டே விட்டார்.

அதற்கு அந்த தொழிலாளி “ஐயா நீங்கள் ஸ்வாமியை கோவிலில் வைத்து வணங்குகிறீர்கள். நான் எனது உள்ளத்தில் வைத்துள்ளேன்” என்றானாம்.

இந்த கதையளிக்கும் நீதி யென்ன?

பக்தனானாலும் உள்ளுக்குள் ஆணவம், செருக்கு என்னும் மான உணர்வு தூண்டும்வரை எதுவும் சாத்தியமே இல்லை. ஆனால் அவ்வாறில்லாத சாமான்யருக்கு எதுவும் சாத்தியமே.

ஆணவம் என்ற திரை விலகினால் தான் இறையருள் கிட்டும்.

பக்தியேயானாலும் மான கஷாயத்தினால் படிந்த தூசுக்களை துடைத்தால் தான் தெய்வீகம் பளிச்சிடும் என்பதே தெளிவு. எளிமையே தெய்வீகத்தை வெளிப்படுத்தும்.

------------------

அறக் கதைகளை எத்தனை முறைதான் படிப்பது…

சலிக்க சலிக்கத்தான் தவிடும் உமியும் நீங்கி முத்து முத்தான அரிசிகள் பளிச்சிடும்.





वसति भुवि समस्तं सापि सन्धरितान्यैः 
उदरमुपनिविष्टा सा च ते वा परस्य । 
तदपि किल परेषां ज्ञानकोणे निलीनं वहति 
कथमिहान्यो गर्वमात्माध्किेषु ।।219।।

வஸதி புவி சமஸ்தம் ஸாபி ஸந்தாரி தான்யை: 

ஊதரமுயநிவிஷ்டா ஸா ச தே வா பரஸ்ய | 
ததபி கில பரேஷாம் ஞானகோணே நிலீனம் வஹதி 
கதமிஹான்யோ கர்வமாத்மாதிகேஷு || 219 ||

The earth (universe) that supports all objects is supported by others (the three sheaths)*. These, the earth and the sheaths, are stationed in the middle of the space (ākāśa). The space, too, is obscure in one corner of the knowledge of the Omniscient. In such a situation, when someone else with greater qualities exists, how can one entertain the sense of pride?
எல்லா பொருட்களையும் ஆதரிக்கும் பூமி (பிரபஞ்சம்) மற்றவைகளால் ஆதரிக்கப்படுகிறது (மூன்று வாதவளையங்கள்). இவை, அதாவது பூமி மற்றும் வாதவளையங்கள் ஆகாசத்தின் நடுவில் நிறுத்தப்பட்டுள்ளன. இவையனைத்தும் சர்வஞ்ஞரின் அறிவின் ஒரு மூலையில் உள்ள இடமாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பெரிதான, மதிப்பான குணங்களைக் கொண்ட வேறொருவர் இருக்கும்போது, அகந்தை உணர்வு ஒருவரை எவ்வாறு மகிழ்விக்க முடியும்?

இந்தப் பாடலில் மனிதனின் அகந்தை, பெருமை, கர்வம் இவை இவ்வுலகை ஒப்பிடும் போது மிகமிக அற்பமானது என்றுரைக்கிறார் முனிவர் பெருமான்.

கேவலிபகவான் உரைக்கும் இந்த சமண அண்டவியிலைக் காணும் போது எவையும் ஒன்றை விட ஒன்று பெரிதாகவே, உயர்வாகவே காணப்படுகிறது. எல்லாப்பொருட்களும் அந்தந்த பூமியின் மேல் உள்ளன என்பது அனைவரும் அறிவர். இவை அனைத்திற்கும் ஆதாரமாக கனோததி, கனவாதம், தனுவாதம் என்ற மூன்று அடர்வாயு வளையங்கள் தாங்கிக்கொண்டிருக்கின்றன. பூமியும், இந்த மூன்று வாயு வளையங்களும் ஆகாயத்தின் ஆதாரத்தில் உள்ளன. (இதன் விபரங்களை லோக ஸ்வரூபம் எனும் கரணானுயோக அத்தியாயத்தில் விபரமாக காணலாம்.)

இவ்வுலகில் ஒன்றைவிட மற்றொன்று பெரிதாகவே உள்ளது. கணக்கிடமுடியாத இந்த ஆகாசமும் கேவலி பகவானின் ஞானத்துடன் ஒப்பிட்டால் ஒருசிறு அம்சமே. இவ்வாறு நம்மை விட அனைத்தும் இப்புவியில் பெரிதாக இருக்கும் போது தன்னை மட்டும் வியந்து கர்வம் கொள்வது அறிவுடைய செயல் ஆகாது.

இந்த பாடலில் அண்டவியலைப் பற்றி நாம் படித்தறிய அறிவுறுத்துகிறார். அதுவே நம்மை எவ்வளவு அற்பமானவன் என எண்ண வைக்கும் வலிமை கொண்டது.

------------------------

கிருஸ்துவக் கதை ஒன்று….

சிரிப்பதாக இருந்தாலும் சிந்திக்கவே சித்தரிக்கப்பட்டது.

பூமியில் மிகப் பிரபலமாக இருந்த போப் ஒருவர் இறந்ததும் மேலே செல்கிறார். தன்னைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றும் சொர்கத்தின் நுழைவாயிலில் தடபுடலாக மாலை மரியாதைகளுடன் வந்து தேவர்கள் தன்னை வரவேற்பார்கள் என்றும் நினைத்துக் கொண்டு சொர்க்கத்தின் கதவருகே செல்கிறார்.

அந்தக் கதவு நீள அகல உயரம் காணமுடியாமல் பிரம்மாண்டமாக இருக்கிறது. அவர் அதைத் தட்டிப் பார்த்து 'நான் தான் பூமியில் இருந்து போப் வந்திருக்கிறேன் (மாலை யானை எல்லாம் ரெடியா?) என்று அப்பாவியாகக் கேட்கிறார் . அவர் குரல் அந்த பிரம்மாண்டத்தில் அவருக்கே கேட்பதில்லை. கதவின் ஒரு சிறு துளை வழியே உள்ளே எட்டிப்பார்க்கிறார். கோடி சூரியன்களைப் பார்த்தது போல அவர் கண் கூசுகிறது.

கதவு எதேச்சையாகத் திறந்து அப்போது ஒரு காவலாளி வெளியே வருகிறான். போப் உள்ளே போக முயற்சிக்கிறார். அவரை அவன் தடுத்து நிறுத்தி 'உள்ளே போக அனுமதி இல்லை' என்கிறான்.

அவர் கோபமாக “நான் யார் தெரியுமா? நான் தான் போப்” என்கிறார் .

அவன் குழப்பமாக “போப்பா! இந்தப் பேரை இதுவரை கேட்டதே இல்லையே? யார் அது?” என்கிறான்.

போப் வலுக்கட்டாயமாக உள்ளே போக முயற்சிக்கிறார்.

இதைப் பார்த்து விட்டு உள்ளே இருந்த சொர்கத்தின் அக்கவுண்டன்ட் வருகிறான். “நீங்கள் யார்?” என்று கேட்கிறான். நான் பூமியில் இருந்து வருவதாக அவர் சொல்கிறார்.

“எந்த பூமி” என்று கேட்டதற்கு சூரிய மண்டலம் என்று சொல்கிறார் அவர். “சூரிய மண்டலாமா? அதன் நம்பர் சொல்லுங்கள்” என்கிறான் . போப்புக்கு நம்பர் எல்லாம் தெரியவில்லை.

“அய்யா நீங்கள் தயவு செய்து எந்த நம்பர் காலக்ஸி, எந்த நம்பர் சப்-காலக்ஸி எந்த நம்பர் சூரியன் எந்த நம்பர் கிரகம் என்று தெளிவாக சொல்லுங்கள். இல்லை என்றால் வெளியே போங்கள்” என்கிறான்.

அவருக்கு அழுகை வருவது போல ஆகி விடுகிறது.

“எனக்கு ஜீசசைத் தெரியும்” என்கிறார். 'ஜீசஸா' என்று அவன் கேட்டதும் கொஞ்சம் மகிழ்ச்சி அடைகிறார்.

“அவரது சீரியல் நம்பர் என்ன? இப்போது தான் லட்சத்து நாற்பதாயிரத்து ஐநூறாவது ஜீசஸ் முக்தி அடைந்து இங்கே வந்திருக்கிறார். அவரா?” என்று கேட்கிறான்.

போப் மயங்கி விழுகிறார்!

--------------------

உலக மக்கள் தொகையில் 26% கொண்ட அதாவது இருநூற்று ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை (2005ல்) கொண்டிருக்கும் ஒரு மதத்தின் அரசரான போப் ஆண்டவர், வாடிகன் என்னும் ஒரு நாட்டையே தனது வீடாகக் கொண்டிருக்கும் ஒரு பேரரசரின் நிலை மேலுலகத்தில் ஒண்டக்கூட இடமில்லாமல், அண்டக்கூட மனிதர் கிடைக்காமல் ஒரு பிச்சைக்காரனை விட கேவலமாய், சொர்க்கத்தில் முதல் நாளே நரகவேதனை அனுபவிக்கிறான் என்றால்…. சமான்ய சூசையின் நிலை என்ன? சிந்திக்க வேண்டும், என்ற நோக்கத்தில் உருவான கதை.

உலக மக்களில் 0.04% வெறும் 42 லட்சம் மக்களைக் கொண்ட சமணத்தில் மதத்தலைவரின் நிலை என்ன? சாமான்ய சமணனின் நிலை என்ன என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். கண்டிப்பாக நமக்கு சொர்க்கத்திலும் ஏழாம் நரகவேதனையை தான் அனுபவிப்போம் என்றால், மறுபிறவியில் நரகத்தில் வீழ்ந்தால் என்னாகும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதை எடுத்துரைப்பதே இந்தக் கதையின் நோக்கம்.

இந்தப் பேரண்டத்தில் ஒரு மூலையில் ஏற்பட்ட big bang எனும் பெருவெடிப்பில் சிதறிய ஒரு தொகுப்பான பால்வெளி அண்டத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான நட்சத்திரத்திற்கிடையே; ஒன்றிலும் இடிபடாமல் லாவகமாக சுழன்று வரும் சூரியன் எனும் நட்சத்திரக்குடும்பத்தில்;

ஒரு அங்கமாக தன்னைத்தானே சுற்றியபடி கதிரவனையும் வலம் வந்து வணங்கி வரும் பூமி எனும் நிலப்பரப்பு உருண்டையின் ஒரு மூலையில் வாழும் சில சாமான்யர்களாகிய நமக்குள் என்ன ஒப்பீடு தேவையா என்ன?.

நீ பெரியவன், நான் பெரியவன் என்ற பேதச்சண்டை என்ன! பேரண்டத்தையே அறிந்த ஒரு சர்வக்ஞ்ஞன், ஆப்தர், முழுதுணர்ஞானி, பகவான் மஹாவீரரின் அறிவுப் பார்வையில் ஒரு தூசியை விட பல்லாயிரம் மடங்கு சிறியோனாகிய நமக்குள் என்ன பேதம் வேண்டிக்கிடக்கிறது. தலைவன், தொண்டன், அடிமை என்ற ஆண்டான் அடிமைக்கான சிந்தனை எங்கிருந்து தோன்ற வழியுள்ளது. அதற்கான தகுதி எங்கிருந்து வந்தது என்பது தான் புதிராகவே உள்ளது என்கிறார் முனிவர் பெருமான்.

கணக்கிட முடியாத பூதாகாரமான ஆகாசம் என்னும் மெய்பொருளில் வெறும் 343 ரஜ்ஜு/ கயிறு (25 பவுண்டு இரும்பு குண்டு விழும்போது ஆறுமாத காலம் கடக்கும் தூரம் எவ்வளவோ அது ஒரு கயிறு ஆகும்) கன பரிமாணம் உள்ள தன்ம, அதன்ம திரவிய எனும் மெய்பொருளுக்குள்…

பல்லாயிரம் கோடிக்கணக்கிலான புத்கலம் எனும் தோற்றத்திற்கு ஆட்பட்ட திரவியங்களிக்கிடையே, பல்லாயிரம் லட்சக்கணக்கில் வாழும் ஆத்மாக்களும் 84 லட்சம் யோனிகள் எனும் கருப்பையில் ஒன்றாக இணைந்து பல ஜீவராசிகள் உருவாகியுள்ளன.

அதில் ஒன்று மனிதஜீவராசி. அதில் ஒன்றாக ஆத்மாவும், நிலமும், நீரும், காற்றும், நெருப்புமாய் உள்ள புத்கலக் கூட்டுப்பொருளால் ஆன தோற்றத்தைபெற்ற உடலுடன் வாழும் உயிரினமாக விளங்கும் நாம் எங்கே யிருக்கிறோம் என்பதை உணர வேண்டும். இதில் ஒருநாள் ஆன்மனும், இந்த உடலும் விலகத்தான் போகிறது என்பதை நம்மிடையே பலரும் மரணிக்கும் போது நாம் கண்டுதான் வருகிறோம்.

இவற்றுக்கிடையே ஆன்மனுமில்லாமல், உடலைப்போன்ற தோற்றமுமில்லாத மாயத்தோற்றத்தில் வாழும் மனதிம் ஒரு மூலையிலுள்ள “நான்” என்னும் ஆணவ அகங்கார அலைகள் எப்படி உலகையே ஆளத்துடிக்கிறது! இது ஒரு விந்தையே!! என்று ஆச்சார்யர், இப்பாடலில் மான கஷாயத்தின் பூதாகாரமான கற்பனைத் திறனை கண்டு வியந்து இவற்றை மறைபொருளாக தெரிவிக்கிறார்.

ஆடி அடங்கும் வாழ்க்கையில் ஆட்டமென்ன, அதிகாரமென்ன, நான் தான் எல்லாவற்றுக்கு மேலானவன் என்ற சிந்தனை என்ன…

இங்கு ஆறடி நிலம் கூட இவ்வுடலுக்காக வழங்கப்பட வில்லை. அக்குழியில் எத்தனை உடல்கள் எரிக்கப்பட்டனவோ, புதையுண்டனவோ அப்படியாக தோன்றி மறையும் மின்னலைப்போன்ற வாழ்க்கையில் மான கஷாய உணர்வு அலைகளுக்கு இடங்கொடுக்காதே என்பதை நாசுக்காக இடித்துரைத்து இப்பாடலை வழங்குகிறார்;

பகவான் மஹாவிரர் வழங்கிய அண்டவியலை ஆழமாக அறிந்து, தெரிந்து, விழிப்புணர்வை பெற்ற ஆச்சார்ய குணபத்ரர் என்னும் வணக்கத்திற்குரிய துறவியான பவ்ய ஜீவன்.

இப்பாடலின் தெளிவை இனி வாழ்நாளில் கடைபிடித்தால் மற்ற குரோத, லோப, மாயா என்னும் மூன்று தீய உணர்வுகளும் தோன்றவே வாய்ப்பில்லை. தோன்றிய பொழுதே கரைத்து விடும் ஆற்றலைத் தரவல்லது இப்பாடல் என்ற தெளிவை வழங்குகிறார்.





यशो मारीचीयं कनकमृगमायामलिनितं 
हतोSशवत्थमोक्त्या प्रणयिलघुरासीद्यमसुतः । 
सकृष्णः कृष्णोSभूत्कपटबटुवेषेण नितरा- 
मपि च्छप्राल्पं तद्विषमिव हि दुग्ध्स्य महतः ।।220।। 

யசோ மாரீசீயம் கனகம்ருகயாமலினிதம் 

ஹதோSச்வத்தாமோக்த்யா ப்ரணயிலகுராஸீத்யம ஸீத | 
ஸக்ருஷ்ண: க்ருஷ்ணோSபூத் கபடபடுவேஷேண திதர- 
 மபி சத்தால்பம் தத்விஷமிவ ஹி துக்கஸ்ய மஹத: ||220||

The fame of Mārīca got tarnished by his deceitfulness of taking on the garb of a golden deer. Yudhishtira’s* esteem was lowered among his dear ones due to his deceitful utterance, “Aśvatthāmā is killed.” And, Krsna’s reputation was blackened (he was born with dark complexion!) due to his deceitful role in the dwarfish vāmana incarnation. It is right; even a little deceitfulness is devastating, as a little poison added to a large quantity of milk.
ஒரு தங்க மானின் உருவை எடுத்துக்கொள்வதில் அவன் செய்த வஞ்சகத்தால் மாரீசனின் புகழ் களங்கப்படுத்தப்பட்டது. யுதிஷ்டிரரின் மரியாதை "அஸ்வத்தாமன் கொல்லப்பட்டார்" என்ற மோசடி வார்த்தையால் அவரது அன்பர்களிடையே குறைக்கப்பட்டது. மேலும், குள்ள வாமணன் அவதாரத்தில் அவரது வஞ்சகப் பாத்திரத்தின் காரணமாக கிருஷ்ணாவின் நற்பெயர் கறுத்துப்போனது (அவர் கருமை நிறத்துடன் பிறந்தார்!). அது சரி; ஒரு துளி விஷம் ஒரு பெரிய அளவிலான பாலில் சேர்க்கப்படுவது போல், ஒரு சிறிய வஞ்சகம் கூட பேரழிவு தரும்.

இந்த பாடலில் மாயாச்சாரத்திற்கான விளக்கங்களை அளிக்கிறார். அதனால் ஏற்பட்ட தீமைகளை சுட்டுகிறார் முனிவர்.

பெருமளவு பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் அதன் நலம் கெட்டு எவ்வாறு உடலுக்கு தீங்கு விளைவிக்கிறதோ அதுபோல கபடம் என்ற சிறுமைகுணம் பெருந்தண்மையைக் கெடுத்து விடுகிறது.

ராவணனுக்கு மாமன் முறை கொண்டவன், மாரீசன். இவன் தாடகை என்ற அரக்கியின் மகன் ஆவான். ஆயிரம் யானைகளின் பலம் கொண்ட அசுரன். மாரீசனும் அவனது சகோதரன் சுப்பாவும் வனத்தில் இருந்த முனிவர்களிடம் இருந்து போர்க் கலையையும், மாய மந்திரங்களையும் கற்றறிந்தனர். பராக்கிரமன் என்ற புகழுடன் விளங்கியவன்.

மாரீசனை, சீதையை கடத்துவதற்காக ராவணன் பயன்படுத்தினான். அதன்படி பொன் மான் உருவம் கொண்டு, சீதையின் முன் சென்றான்.

அந்த மாய மானின் அழகில் மயங்கிய சீதை, அதைப் பிடித்து தரும்படி ராமனிடம் கேட்டாள். அவளது விருப்பத்தை நிறைவேற்ற சீதைக்கு காவலாக லட்சுமணனை நிறுத்தி விட்டு சென்றார் ராமன். தப்பி ஓடிய மானை நோக்கி ராமன் அம்பு வீசினார். அதில் மான் அடிப்பட்டு விழுந்ததாக ராமாயணம் செல்கிறது.

இந்த தந்திரத்தை கையாண்டதால் அவனது புகழ் குன்றியதோடு, லட்சுமணனது பாணத்திற்கு இரையானதாக வரலாறு கூறுகிறது.

------------

மஹாபாரத யுத்தத்தின் பதினைந்தாம் நாள். அதற்கு முந்தைய தினம் அபிமன்யு சக்ர வியூகத்தில் சென்று அற்புதமாகச் செயல்பட்டான் ஆனால் முடிவில் வஞ்சனையாகக் கொல்லப்பட்டான்.

இப்போது பார்த்தசாரதியின் அடுத்தத் திட்டம். பீமன் காதோடு ஒரு விஷயம் சொல்ல அவன் விரைந்து சென்று, கௌரவர் சேனையில் இருந்த அஸ்வத்தாமன் என்னும் யானையைக் கொன்று விட்டு பிறகு வெற்றி கோஷத்துடன் துரோணர் இருக்கும் இடத்துக்கு வந்து அவர் காது கேட்க "கொன்றேன் அசுவத்தாமனை" என கொக்கரிக்கின்றான். அஸ்வத்தாமா துரோணரின் ஒரே மகனின் பெயரும் கூட. அவனும் சிறந்த போர்வீரன். இருப்பினும் சொன்னது பீமன் ஆயிற்றே, அவன் பலமும் உலகம் அறிந்ததே என துரோணர் மனம் மயங்குகிறார். அவருக்கு இச்செய்தியை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம்.

பொய்யே பேசாத யுதிஷ்டிரனைப் பார்த்து கேட்கிறார் அவர், "எனது மகன் அஸ்வத்தாமா மாண்டானா, கூறு யுதிஷ்டிரா" என்று. யுதிஷ்டிரனோ இறுதலைக் கொள்ளி எறும்பாகிறான். திணறிக் கொண்டே "கூறுகிறான் "அஸ்வத்தாமா ஹதஹ,...குஞ்சரஹ" (இறந்தது அஸ்வத்தாமன் ... என்னும் யானை). இறந்தது அஸ்வத்தாமன் என்பதை உரக்கக் கூறிவிட்டு, தயங்கியவாறு இரண்டாவது பாகத்தைக் கூறும்போது பார்த்தசாரதி தனது பாஞ்சஜன்ய சங்கை எடுத்து ஊத, துரோணருக்கு 'அஸ்வத்தாமன் ஒரு யானை' என்பதே காதில் விழவில்லை. அவர் உடனே யுத்தத்தை நிறுத்தி தரையில் அமர்ந்து தியானத்தைத் துவங்குகிறார். அப்போது புயல்போல கிளம்பிய துரோணரைக் கொல்லவே பிறவி எடுத்த திருஷ்டத்யும்னன் தன் கத்தியை எடுத்து ஆச்சாரியரின் தலையைச் சீவி அவரைக் கொல்கிறான்.

யுதிஷ்டிரனின் வாயில் இருந்து அந்த வார்த்தைகள் வந்த வினாடியிலேயே அவன் தேர்ச் சக்கரங்கள் பூமியைத் தொட்டனவாம். அதுவரை அவை தரையிலிருந்து நான்கு அங்குலம் உயரத்திலேயே இருந்தனவாம். அவனும் பொய் சொன்ன பிறகு பொய்மை நிறைந்த பூமியின் பகுதியாக அவனும் ஆகிவிட்டான் என வியாசர் கூறுகிறார்.

அது மட்டுமா, பிற்காலத்தில் சொர்க்கம் செல்ல நேர்ந்த போது ஒரு முகூர்த்த காலம் நரகத்துக்கும் போய் விட்டு வருகிறான். இவ்வளவு பொய் புனைசுருட்டு எல்லாம் செய்து பாரத யுத்தத்துக்கே காரணமாக இருந்த துரியனுக்கு கூட அவ்வளவு வசை சேரவில்லை. ஆனால் யுதிஷ்டிரன் பெற்ற கெட்ட பெயர் மிகப்பெரியது. இதற்கு முக்கியக் காரணமே அவன் பொய் சொல்ல மாட்டான் என்ற மக்களது அசைக்கமுடியாத நம்பிக்கை அசைந்ததே ஆகும்.

------------------

மகாபலி என்ற அசுரகுல சக்ரவர்த்தி, மூன்று உலகையும் சிறப்பாக ஆட்சி புரிந்ததாக கூறப்படுகிறது. மகாபலி மன்னனின் ஆட்சி, தங்கமான ஆட்சி என புகழப்பட்டது. மக்கள் எந்த துன்பமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். அசுரகுலத்தின் வேகமான வளர்ச்சியை கண்ட தேவர்கள், மகாபலி மன்னனுடன் போரிட்டனர். இந்த போரில் அசுர குலம் வெற்றி பெற்றது. பயந்து போன தேவர்குலத்தினர், திருமாலிடம் முறையிட்டனர். திருமாலை மகனாக அடைவதற்காக, காசிப முனிவரின் மனைவி திதி வரம் கேட்டாள். அதன்படியே அவர்களுடைய மகனாக வாமன அவதாரம் எடுத்தார் திருமால். அசுரனாக இருந்தாலும், தான தர்மங்களிலும், யாகங்கள் நடத்துவதிலும் மகாபலி மன்னன் சிறந்தவனாக விளங்கினான்.

அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த வாமனன், மகாபலியின் அரண்மனைக்கு சென்று, தான் தவம் செய்வதற்காக, மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது திருமால்தான் என்பதை அறிந்த அசுர குருவான சுக்கிராச்சாரியார், தானம் வழங்க ஒப்புக் கொள்ள வேண்டாம் என, மகாபலியை தடுத்தார். ஆனால் திருமாலே தம்மிடம் கையேந்தி நிற்பதை அறிந்த மகாபலி மன்னன், குரு கூறியதையும் கேட்காமல், மூன்றடி மண் தானம் தர ஒப்புக் கொண்டார். உடனே திரிவிக்கிரம அவதாரம் எடுத்த திருமால், ஓரடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் தேவலோகத்தையும் அளந்து வழங்கினார். மூன்றாவது அடிக்கு இடமில்லாததால், தன் தலை மீதே மூன்றாவது அடியை அளக்குமாறு கூறி, தன் தலையை தாழ்த்தி காண்பித்தார். அதன்படி மன்னனின் தலையின் மீது கால் வைத்து அழுத்த, மகாபலி மன்னன் பாதாள லோகத்துக்குள் சென்றான்.

அவ்வாறான தந்திரத்தை செய்த திருமால் அடுத்த அவதாரத்தில் கருமை நிறக்கண்ணனாக மட்டும் பிறக்க வில்லை, கடைசியில் இரண்டாம் நரகத்தில் உழல்வதாகவும் ஜைன புராணங்கள் கூறுகின்றன.

---------

இது போன்ற பல புராணக் கதைகள், வரலாறுகள் மாய கஷாயத்தினால் கீழான நிலையை எய்திய பல பாத்திரங்களை கூறினாலும் இந்தப் பாடலில் இந்த மூன்று புராண நாயகர்களை சான்றாக சுட்டியுள்ளார்.

இன்று பலரும் இந்த கபட நாடக சூத்திரதாரியைத்தானே தனது முன்னுதாரண புருஷனாக ஏற்று முன்னேறி வருகின்றனர் என்பதை அன்றே முனிவர் எடுத்துரைத்துள்ளார். பலருக்கு நன்மையளிக்கும் செயலானாலும் அதர்மம் எனும் கபட உணர்வில் வெற்றிகொள்ள எண்ணுவதும் பிறவிகளை வளர்த்துக் கொண்டே செல்லும் என்பதை புரிந்து கொள்ளல் நலம் பயக்கும்.





भेयं मायामहागर्तान्मिथ्याघनतमोमयात् । 
यस्मिंल्लीना न लक्ष्यन्ते क्रोधदिविषमाहयः ।।221।।

பேயம் மாயாமஹாகர்தாந்மித்யாகனதமோ மயாத் | 

யஸ்மின் லீனா ந லக்ஷ்யந்தே க்ரோதாதி விஷமாஹய: ||221||
The large pit of deceitfulness is pitch-dark with delusion, and dreadful cobras of passions (kasāya), like anger (krodha), live hidden in its depth. One should be scared of this pit of deceitfulness.
வஞ்சகத்தின் பெரிய குழி மாயை எனும் இருளால் இருண்டது, மற்றும் கோபம் (க்ரோதா) போன்ற உணர்ச்சிகளின் பயங்கரமான நாகங்கள் (கஷாயம்) அதன் ஆழத்தில் மறைந்திருக்கின்றன. வஞ்சகத்தின் இந்த குழிக்குள் விழ ஒருவர் பயப்பட வேண்டும்

ஒருவரை நம்பச் செய்து, தீங்கு விளைவித்துப் பயன் அடைய முற்படும் தந்திரம், அதாவது வஞ்சகம் இந்த மாயை எனும் கஷாயத்திலிருந்து வெளிப்பட்டது என்கிறார் முனிவர்.

இந்த மாயாச்சாரம் வெளியேற்றும் உணர்வுகள் தந்திரம், வஞ்சம், சூது, சூழ்ச்சி, கபடம், ஏமாற்று, அடுத்துக் கெடுத்தல், நம்பிக்கைத் துரோகம் போன்றவை.

மயாச்சாரம் பேராசை, ஆசை எனும் கடும்பற்றிலிருந்து தோன்றுபவை என்றும் கூறலாம். மண்ணாசையே மான உணர்வுக்கும், அதனை தக்கவைக்க கோப உணர்வையும் தூண்டச் செய்பவை. அந்த ஆசை நிறைவேறியதும் தக்கவைத்துக் கொள்ள நிகழ்கால பயன்பாட்டில் இருப்பது இந்த மாயா என்னும் தீய உணர்வே.

ராமாயண, மஹாபாரத இதிகாசங்கள் மண்ணாசை, பெண்ணாசையை வலியுறுத்தி எழுதப்பட்டிருந்தாலும் மான, குரோதத்துடன் உணர்வுகளை அங்காங்கு வழங்கியிருந்தாலும் எல்லாக் காட்சிகளிலும் மாய உணர்வாகிய வஞ்சகம், சூது, சூழ்ச்சி, தந்திரம், கபடம், ஏமாற்று, நம்பிக்கைத் துரோகம், அடுத்து கெடுப்பது மற்றும் அவற்றிலிருந்து வெளியேறுவது, முறியடிப்பது எப்படி போன்ற யுக்திகளைத் தான் பெருமளவில் வழங்கியுள்ளது என்றால் மிகையாகாது.

ராமாயணத்தில் இந்த மாய தீயஎண்ணங்கள் குறைவாகத் தோன்றினாலும் மஹாபாரதமே மாயாச்சாரத்தின் மொத்த கிடங்கு என்று கூறுமளவிற்கு எல்லாக் நிகழ்வுகளிலும், உபகதைகளிலும் கொட்டிக்கிடக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

ஒவ்வொரு சின்ன சின்ன வெற்றிக்குள்ளும் மறைந்து கிடப்பது இந்த தந்திரம், கபடம், வஞ்சகங்கள் நிறைந்த யுக்திகளே என்றுதான் கூறவேண்டியுள்ளது. மஹாபாரதத்தில் அதர்மத்திற்கும், தர்மத்திற்கும் துணைபோனது இந்த சூது, சூழ்ச்சி, தந்திரங்களே யாகும். அதர்ம சூது சூழ்ச்சியின் சூத்திரதாரியாய், தலைவனாய் சகுனியும்; தர்மத்தின் கபட நாடக சூத்திரதாரியாய் மாயா உணர்வின் தலைவனாய் கிருஷ்ணனும் வழிநடத்திய ஒரு காப்பியம் தான் மஹாபாரதம் என்பதும் நிதர்சனமே.

----------

அதனால் எந்த ஒரு காப்பிய நாயகனும் உத்தபுருஷர்களாக, சலாகா புருஷர்களாக நம் சமணம் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் அனைவரும் நரகத்திலும், சிலர் தேவருலகத்திலுமே பிறந்ததாக தெரிவிக்கிறது ஜைன ரமாயண, மஹாபாரத காப்பியங்கள்.

------------

துரியோதனனின் பால்யத்தில் தோன்றிய மான உணர்வுக்கு, குரோத உணர்வு துணைபோனது. இருப்பினும் அவனது அபிலாஷையை வெற்றி பெறச்செய்தது அவனது தாய்மாமனான சூழ்ச்சித்தலைவன் சகுனியே யாகும். அவனது சூதாட்டமே அவனுக்கு முதல் வெற்றியாக ஹஸ்தினாபுர நாட்டு ராஜ்ய பரிபாலனத்தை முழுவதுமாக அள்ளித்தந்தது. அதுவே பாண்டவர்களின் 14 ஆண்டுகால வனவாசமும், ஓராண்டு அஞ்ஞாத வாசமும் இருந்த 15 ஆண்டு காலத்தில் அப்பூமியை மாமன்னனாக ஆளச் செய்தது. அதன் பின்னர் அவனது மான, குரோத உணர்வுகளால் அதனை தக்கவைத்துக் கொள்ள இயலவில்லை. மாமன் சகுனியிம் மாயத்தீய உணர்வும், குருக்ஷேத்திர 18 நாட்கள் ரணபூமியில் கிருஷ்ணன் வீசிய மாயவலைக்குள் சிக்கி அழிந்து விட்டது என்பதை தெரிவிப்பதே அக்காப்பியத்தின் நோக்கம்.

அவனிடமிருந்து மீட்க பாண்டவர்களுக்கு பேருதவியாய் இருந்தது கபடச்சக்கரவர்த்தியான கிருஷ்ணனின் மாய உணர்வே என்பதையும் அதே மஹாபாரமே சுட்டிக் காட்டுகிறது. எப்படியெனில் குருக்ஷேத்திரம் என்பது ரணபூமியாய சித்தரிக்கப்பட்டிருந்தாலும் முழுக்க முழுக்க பெரும் வீரர்களை கண்ணனின் சூழ்ச்சி என்னும் அஸ்திரமே வெற்றி கொள்ள செய்தது என்றாலும் மிகையில்லை.

ஆக இந்த இரண்டு காப்பியங்களுக்கும் மாய கஷாயம் எனும் தீய உணர்வே அடிப்படைக் கருத்தாய் அமைந்துள்ளது என்பதை நாம் புரிதல் நலம். ராமாயண காலமான முனுசூவிரத தீர்த்தங்கரர் காலத்தை விட, மாஹாபாரதக் காலமான நேமி ஜினரின் நிகழ் காலத்தில் ஆட்சி முழுவதிலும் மாய உணர்வே புரையோடி விட்டிருந்தது என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அது மஹாவீரர் காலத்தில் மென்மேலும் மேலோங்கி யிருந்திருக்க வேண்டும் என்பதை இன்றைய நிர்வாக இயல் முழுவதிலும் யுக்தி பெயரில் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதையும் நாம் கண்டுதான் வருகிறோம். எப்போது அந்த வஞ்சகம், சூது, சூழ்ச்சி போன்ற தீய உணர்வுகள் சமூகத்தில் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கத்தூண்டியதோ பகவான் மஹாவீரர் காலத்திற்கு பின் தீர்த்தங்கர நாம கரும ஜீவன்கள் தோன்றவும் மில்லை, சமவசரணம் அமைக்க தேவர்கள் பூமிக்கு இறங்கவுமில்லை.

ஏனென்றால் மாயை எனும் தீய உணர்வு விலங்குகளிடத்தில் மட்டுமே முன்பு இருந்தது அதன்பிறகு மனிதனையும் முழுவதுமாக ஆட்கொண்டபின் மாக்கள் இனமே பெரும்பாலாக மாற்றப்பட்டதன் விளைவே யாகும். அதனால் கேவலஞானிகளும் கூட தோன்றவாய்ப்பில்லாமல் போய்விட்டது இந்த கர்மபூமியில்.

Administration என்றால் strategy என்ற மறைபொருள் இல்லாத நிர்வாகமே இல்லை என்ற இன்றைய சூழலில், ஆட்சிப்பொறுப்புள்ளவர்களுக்கு மதியூகிகள் என்றழைக்கப்படும் சூதர்களும், சிப்பாய்களாக ரவுடிகளுமே பெருமளவில் தேவைப்படுகிறார்கள்.

தலைமை என்ற பதவிக்கு அடித்தளத்தில் ஆணிவேராய் இருப்பது கபடம், வஞ்சகம், சூது, சூழ்ச்சி போன்ற உணர்வுகளின் வெளிப்பாடுகளே என்றாகி விட்டது இன்றையச் சூழல். அவர்களே ஆட்சியாளர்களுக்கு அல்லக்கைகளாக உள்ளார்கள்.

இக்காலச்சூழலில் எந்த ஒரு நிர்வாகத் தலைமையையும் அது விட்டு வைக்கவில்லை என்பதே நிதர்சனம். நாட்டை ஆள்பவரிலிருந்து , அறவழியில் செல்வதாக கூறிக்கொள்ளும் அறங்காவலர்கள், பாதுகாவலர்கள் வரை இந்த யுக்திப் பரிமாற்றமே மேலோங்கியுள்ளது. நீதிமான்கள் மதிப்பிற்குரியவர்கள் என்ற சிறைக்குள் அடைக்கப்பட்டு பாராட்டை மட்டுமே பெறுபவர்கள். ஆனால் சூழ்ச்சிக்காரர்களே ஆட்சிக்கு பயன்பாட்டிலுள்ளவர்கள் என்பது நியதியாக மாற்றப்பட்ட சூழலுக்குள் தள்ளப்பட்டதற்கு காரணம் இந்த மாயகஷாய உணர்வு மலிவு விலையில் விற்பனையாவதுதான்.

பகவான் மஹாவீரரை வெளித்தோற்றத்தில் வணங்கினாலும் கிருஷ்ணனையே பகவானாக மனதால் ஏற்றுக் கொண்ட கலாச்சாரமே வளர்ந்து வரும் இச்சூழலில்; இந்த இரு இதிகாசக்கதைகளை இன்றைய சூழலிலிருந்து வெளியேற்றுவது முடியாத காரியம். அதனால்…

இந்த மான, க்ரோத மற்றும் மாயா வின் சிறையிலிருந்து வெளியேறியவர்களே பவ்யர்களாக , நல்ல புருஷார்த்தங்களை ஏற்று மறுபிறவியில் நல்ல மனிதர்களாக விதேக க்ஷேத்திரத்திலோ, அல்லது தேவர்களாக ஊர்துவ லோகத்திலோ பிறக்க வழிவகுக்கும்; இல்லையேல் மாயாச்சாரம் நிரம்பிய விலங்கு கதியிலோ அல்லது நரக கதியிலோ தான் பிறக்க நேரிடும் என்பதை தெரிவிக்கவே இப்பாடலை நமக்கு வழங்கியுள்ளார் ஆச்சார்ய குணபத்ரர் எனும் வணக்கத்திற்குரிய முனிவர்.





प्रचछ्न्नकर्म मम कोSपि न वेत्ति धीमान् ध्वंसं गुणस्य महतोSपि हि मेति मंस्थाः । 
कामं गिलन् ध्वलदीधितिधौतदाहं गूढोSप्यबोधि न विधुं स विधुन्तुदः कैः ।।222।।

பிரசன்னகர்ம மம கோ அபி ந வேதி தீமான் த்வம்ஸம் குணஸ்ய மஹதோ அபி ஹி மேதி மம்ஸ்தா:| 

காமம் கிலன்தவள தீதிதிகெளதிதாஹம், கூடோஅப்யபோதி ந விந்து ஸ விதுந்துத: கை: ||222||
O worthy soul! Do not think that no wise man comes to know about your clandestine evil-deeds, and obliteration of your high qualities. Who does not know the invisible Rāhu who swallows wholly the moon that soothes the living beings by its dazzling white rays?
பவ்யனே! உனது இரகசிய தீய செயல்களைப் பற்றியும், உயர்ந்த குணங்களை அழிப்பதைப் பற்றியும் எந்த அறிவாளியும் தெரிந்து கொள்வதில்லை என்று நினைக்க வேண்டாம். தனது வியப்பூட்டும் வெள்ளை கதிர்களால் உயிரினங்களை ஆற்றும் சந்திரனை முழுவதுமாக விழுங்கும், கண்ணுக்கு தெரியாத ராகுவை யார் அறிய மாட்டார்கள்?

எவர் ஒருவர் தனது தந்திரச் செயல் யாருக்கும் தெரியப்போவதில்லை என்று நினைத்தால் கண்டிப்பாக ஒருநாள் வெளிப்பட்டே தீரும் என்று எச்சரிக்கை செய்கிறார் முனிவர் பெருமான். எனவே மாயாச்சாரம் கூடாது.

தந்திரம், கபடம், சூது, சூழ்ச்சி என்ற மாயா கஷாயத்தை கையாளும் பல மிருகங்களை கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்ட பலகதைகள் அக்காலத்திலிருந்து இக்காலம் வரை கார்ட்டூன்களாகவும் வந்து கொண்டிருக்கின்றன. அறிவாளிகள் அதனை சரியாகத்தான் குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது எவரொருவர் மாயாச்சாரம் நிரம்பிய உணர்வுகளுடன் வாழ்வைக் கடத்துகிறார்களோ அவர்கள் அடுத்த பல பிறவிகளில் விலங்கினமாகத்தான் பிறப்பார்கள்.

சில மிருகங்களுக்கு அவ்வாறான வாழ்க்கை முறைதான் அவற்றின் பிழைப்புக்கு சாதகமாய் இருப்பதை இன்றைய தானியங்கிக் காமிராக்களும் நமக்கு காட்டி வருகின்றன. கொடிய விலங்குகளும் சாதாரண விலங்குகளை நுட்பமான தந்திரங்களைக் கையாண்டு தாக்கி உணவாகக் கொள்ளும் காட்சிகளை நாம் காணொலிகளாக தினம் தினம் கண்டு வருகிறோம்.

அதனால் வனத்தில் அக்குணமுள்ளவர்களால் மட்டுமே அக்கொடிய மிருகங்களாக வாழ்க்கை நடத்த முடியும் என்ற காரணத்தைக் கருதியும்; அதன் எண்ணிக்கைகள் குறையும் போதோ, சாதுவான மிருகங்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கும் போதோ அவற்றை சமன் செய்ய இப்பிரபஞ்சமே இவ்வகைப்பாட்டிலுள்ள சில மனிதஜீவன்களை அவ்வினத்தில் பிறக்க வைத்து விடுகிறது.

ஆரம்பகால மனித கலாச்சாரத்தில் இந்த தந்திரங்களும், வஞ்சகமும், சூதும், சூழ்ச்சியும் இல்லாமல் தான் இருந்திருக்கும். ஆசை பேராசையாக மாற மாற பெருவிருப்ப வேட்கைகள் கூடக்கூட இந்த தீய உணர்வு மனிதஇனத்தை ஆட்கொண்டுவிட்டது. அப்படி வாழ்ந்தால் தான் தனது வேட்கையுணர்வினால் தோன்றிய வெற்றிடத்தை நிரப்ப இயலும் என்று எண்ணி அந்த மாயா கஷாயத்திற்கு பலியாகியுள்ளான் மனிதன் என்பதே நிதர்சனம்.

அதனால் பலவகை வேடமிட்டு தன்னை நல்லவன் போன்ற தோற்றத்தில் தீய உணர்வுகளை காட்டும் திறமையை வளர்த்துக் கொள்கிறான். கோபம், மானம் போன்றவற்றை மறைத்து வாழும் கலையை இந்த துரோகக்கலையை பெருமளவில் வழங்கும் மாய உணர்வு அவனுக்கு கைகூடுகிறது. இவ்வகை உணர்வில் பலரும் வளரத்தொடங்கியதும் அதுவே இக்காலச்சூழலில் பிழைக்கும் வழியாக கருதப்பட்டு அவர்களே புத்திசாலிகளாக வரையறுக்கப்பட்டு விட்டனர். அதற்கான வரைமுறைகள் (definitions) பலவகையிலும் வகுக்கப்பட்டுள்ளன. அக்கலையை கற்காத நல்லவர்கள் ஏமாளிகளாக கருதப்படுகின்றனர். அதனை புரிந்தும் புருஷார்த்தத்துடன் வாழ்பவர்களையும் பிழைக்கத்தெரியாத ஏமாளிகளாகவே பலரும் கைகொட்டிச் சிரித்தும் பரிகசிக்கும் நிலையையும் காணலாம்.

அந்த வரைமுறை, வரையறைகளை ஐந்து பெரும் பிரிவுகளாக வகுத்து பஞ்ச தந்திரங்கள் என்று அழைக்கும் மரபுவழியும் நம்மிடையே வழக்கத்தில் உள்ளது. அதற்கான பல நூல்களும் வெளிவந்து கற்பித்தும் வரப்படுகிறது. இன்றைக்கு corporate education, political strategies அனைத்தும் இந்த ஐந்துசாதுர்களிலிருந்து வெளிப்பட்ட கிளைசாமர்த்தியங்களே யாகும்.

இதனை சரிவரக் கற்றுத்தேர்ந்தவர்கள், சரியான சமயத்தில் பிரயோகித்து வாழ்பவர்களே பெரும் செல்வத்தையும், புகழையும், அதிகாரத்தையும் பெற்று திகழ்கின்றனர். மரியாதை பிச்சை கேட்கும் தந்திரவான்கள் என்று தெரிந்தும் இன்றைய சூழல் அவர்களை வாழும்கலை நிபுணர்களாகவே வகைப்படுத்தி வாழ்த்தவும் செய்திருப்பது ஆன்மீகம் மங்கி லெளகீகம் சிறக்கும் பஞ்மா காலம் என்றுதான் கூறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அரசன் எப்படி இருக்க வேண்டும்? அமைச்சர் எப்படி நடக்க வேண்டும்? மக்கள் இப்படித்தான் வாழ்க்கையை வாழவேண்டும் என்பதற்கு நமது முன்னோர்கள் அந்த காலத்தில் பல நெறிமுறைகளை வகுத்து வைத்திருக்கின்றனர். ஆனால் தற்போது நிலவும் சூழ்நிலையில் அந்த நெறிமுறையான வாழ்க்கையை ஒருவன் கடைசிவரை கடைபிடித்து வாழ முடியுமா? என்பது சந்தேகம்தான். அதனால் என்ன? முடிந்தால் பார் இல்லையென்றால் இந்த ஐந்து அம்சங்களை வைத்து எப்படியாவது பிழைத்துக்கொள் என ஐந்து தந்திரங்களையும் நமக்காக மாயா உணர்வு நிபுணர்கள் நமக்கு வாழும்கலைகளாக அளித்து வருகின்றனர்.

அவைகளே பஞ்ச தந்திரங்கள் என அழைக்கப்பட்டன. அதாவது எப்படியோ வாழ்ந்தாக வேண்டும் என்பதற்கான ஐந்து தந்திரங்கள். அவைகள்….

1. நட்பை கெடுப்பது (நண்பனை இழந்து பகைவனை பெறுவது). 2. நட்பை பெறுவது (பகை ஏற்படாமல் இருக்க தம்மோடு இணக்கமானவர்களோடு மட்டும் கூடி வாழ்வது). 3. அடுத்துக் கெடுப்பது (பகை உண்டானால் பகைவனோடு உறவாடி அவனை கெடுப்பது). 4. அடைத்தல் அழிப்பது (கையில் கிடைத்ததை எல்லாம் அழிப்பது). 5. ஆராயமல் செய்வது (எந்தவொரு காரியத்தையும் ஆராயாமல் வந்தால் மலை போனால் முடி எனத் தொடங்குவது).

இவற்றில் பலகிளைக் கல்விகளும் அவ்வப்போது முளையிட்டு வழக்கத்திற்குள் நுழைகின்றன.

(மொத்தத்தில் சமதாபாவம் முழுவதுமாக மைனஸ்...)

இந்த ஐந்தும் நீங்கிய ஒரு பகல்பொழுதை இன்றைய உலகில் காணமுடியாது. இரவில் மட்டுமே அவை உறக்கம் கொள்கிறது. மற்றபடி இது மிகவும் கீழான தீய உணர்வு என்பதை யசோதரகாவியத்தில் பெருமளவில் காணலாம். அதனால் அப்பாத்திரங்கள் பலமுறை விலங்குகளாக பிறந்து துன்பப்படுவதையும் சிலநாட்களுக்கு முன் முட்டத்தூர் திரு. பத்மராஜ் sir, அழகாக வெளியிட்ட காப்பிய கவிதை வரிகளில் படித்து வந்தோம் என்பதை நினைவுகூறி…

இந்த மாயாச்சாரமே உலகிற்கு மிகவும் கீழான கலாச்சார சீர்கேட்டை அளித்து அழிவுப்பாதையில் அழைத்துச் செல்கிறது என்பதை ஆச்சார்ய பெருமான் இப்பாடலின் வழியே அறிவுறுத்துகிறார்.





वनचरभयाधदावन् दैवाल्लताकुलबालधि: किल जडतया लोलो बालव्रजेSविचलं स्थितः । बत स चमरस्तेन प्राणैरपि प्रवियोजितः परिणततृषां प्रायेणैवंविध हि विपत्तयः ।।223।।

வனச்சரயயாத் தாவன் தைவால் லதாகுல பாலதி: கில ஜடதயா லோலோ பாலவ்ரஜே அவிசலம் ஸ்தித: | வத ஸ சமரஸ்தேன ப்ராணைரபி ப்ரவியோஜித: பரிணதத்ருஷாம் ப்ராயேணைவம் விதா ஹி விபதய: ||223||
The ‘camara’* deer, running away, in fear of her life, from the chasing lion or the hunter, stops, out of infatuation, as her beautiful tuft of hair on the tail gets entangled in the creepers. And, she gets killed. Alas! Due to her infatuation for the tuft of hair, she is deprived of her life. It is right; excessive infatuation, invariably, brings about calamities.
கவரிமான் துரத்துகிற சிங்கம் அல்லது வேட்டைக்காரனிடமிருந்து தன் உயிருக்கு பயந்து ஓடிவருகிறது, அதன் அழகிய கூந்தல் வால் கொடிமீது மாட்டிக்கொண்டது. ஆனால் அதன் அழகிய மயிரின் மீதுள்ள மயக்கத்திலிருந்து வெளியேற மறந்து மேலும் ஓடாமல் நிற்க அது கொல்லப்படுகிறது. ஐயோ! தலைமுடியைக் கட்டிக்காத்த அதனது மோகம் காரணமாக, அது தன் வாழ்க்கையை இழந்தது. அது போல் அதீத மோகம் மாறாமல் இருப்பின் பேரழிவுகளைத் தருகிறது.

அதீத மோகம் ஆளை சிதைத்துவிடும், அதாவது லோபத் தீவிரஉணர்வு மனிதனின் பிறவிகளுக்கு வழிவகுக்கும் என்பதாக இப்பாடலில் கூறுகிறார்.

கவரிமான் தன் ஒருரோமம் விழுந்தாலும் மானம் தாங்காமல் உடன் இறந்து விடும் என்று மனிதர்களின் கவுரவத்திற்கு பங்கம் ஏற்பட்டால் துவண்டு போவான் என்பதற்கு உவமையாக கூறுவதுண்டு. அதாவது கவரிமான் ஜாதி என அழைப்பார்கள். ஆனால் அது தவறான முதுமொழி என்பதை இப்பாடலின் உவமையால் புரிந்து கொள்ளலாம். காட்டில் அலைந்து திரியும் மான்வகை எப்படியும் தனது மயிர்க்கூந்தலின் இழைகளை அவ்வப்போது இழக்கவே செய்யும் என்ற நிலையில் அம்முதுமொழி எவ்வாறு தோன்றியது என்று சிந்தித்த பலரும் உண்டு. அதற்கான சரியான விளக்கத்தை இப்பாடலின் வழியே முனிவர் வழங்கியுள்ளார்.

தன்னை வேடுவனோ அல்லது சிங்கமோ துரத்தி வரும் வேளை அடர்ந்த மயிர்களை கொண்ட கவரிமான் கானகத்தில் அங்கும் இங்கும் வெறித்தபடி ஓடவே செய்யும். அக்கணத்தில் தன் அடர்கூந்தல் ஒரு முட்கொடியில் மாட்டி இழுபடும் வேளை, அது தன் அழகிய வெண்மயிர்வீழ்ச்சி அழகை இழக்க விரும்பாமல் ஓடாது நின்றபோது இரையாகி விட நேரிடுகிறது என்று முனிவர் பெருமான் கூறுகிறார். அதாவது ஒருவரது தீரா மோகம் கடும்பற்றாய் மாறி எப்பொருளையும் இழக்க துணிவதில்லை. அதனால் அவன் பல துன்பங்களுக்கு ஆளாகவே நேரிரும் என்பதால் தீவிர பற்றை விட்டுவிடுதலே விவேகம் என இந்தப் பாடலின் வரிகளில் தெரிவிக்கிறார்.

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. - என்பது குறள்

விளக்கம்: குறைவில்லாத விளைபொருளை விளைவிப்போரும், அறவழியில் ஒழுகுவோரும், சுயநலம் இல்லாத செல்வமுடையோரும் சேர்ந்து வாழும் இடமே நாடு ஆகும்.

லோபம் என்பது சுயநலம், பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும், இறக்கம் என்பதே இல்லாமலும், சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்பதும், கஞ்சத்தனமும், எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும், தீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய நோக்கமும், வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றுடன் பாதுகாப்பதும் இவைகள் எல்லாம் சுயநலமே. இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய மனம் துணியாது. பழிச்சொல்லுக்கும் அஞ்சாது. அதனால் தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே என்கிறார் ஆச்சார்யர் பெருமான்.

எனவே லோப கஷாயத்தை விடுத்தலே நல்ல புருஷார்த்ததிற்கு வழிவகுக்கும் என்பதே இப்பாடலின் தெளிவாக கொள்ள வேண்டும்.





विषयविरतिः सघõत्यागः कषायविनिग्रहः शमयमदमास्तत्त्वाभ्यासस्तपश्चरणोद्यमः । नियमितमनोवृत्तिर्भक्त्तिरजिनेषु दयालुता भवति कृतिनः संसाराब्धेस्तटे निकटे सति ।।224।।

விஷயவிரதி: ஸங்கத்யாக: கஷாயவினிக்ரஹ: ஸமயமதமாஸதத்வாப்யாஸஸ்தபச்சரணோத்யம: | நியமிதமனோவ்ருத்திரர்பக்திர்ஜினேஷு தயாலுதா, பவதி க்ருதின: ஸம்ராராப்தேஸ்தடே நிகடஸதி ||224||
The following qualities are found in the worthy man who has reached near the shore of the ocean of worldly existence: aversion to sense-pleasures, renouncement of possessions, subjugation of passions, tranquility, selfcontrol and vows, oppression of the senses, contemplation on the Reality, engagement in austerities, control of mental transgressions, devotion to the Omniscient Lord, and compassion towards all.
உலகில் பிறப்பு இறப்பு பெருங்கடலின் கரையோரத்தை அடைந்த தகுதியான மனிதனில் பின்வரும் குணங்கள் காணப்படுகின்றன: புலனுணர்வு-இன்பங்களிடத்தில் வெறுப்பு, உடைமைகளை கைவிடுதல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல், மன அமைதி, சுய கட்டுப்பாடு மற்றும் விரத, புலன்களின் மீது ஆதிக்கம், யதார்த்த சிந்தனை , அற ஒழுங்கங்களில் ஈடுபடுதல், மன மீறல்களைக் கட்டுப்படுத்துதல், முழுதுணர்ந்த ஞானியான இறைவனிடம் பக்தி, அனைத்துயிரிடத்தும் இரக்கம் காட்டுதல் போன்றவை.

முக்திக்கு அருகாமையில் வாழும் இறைநிலைக்கு தகுதியான மனிதனிடத்தில் காணப்படும் நற்பண்புகளை இப்பாடலில் முனிவர் தெரிவித்துள்ளார்.

புலன் இன்ப நுகர்வில் விரக்தியும், பொருள் பற்றின்மையும், கஷாய உணர்வுகள் இல்லாமலும், விருப்பு வெறுப்பு வேட்கைகள் அற்ற சாந்தபாவமும், எண்ணங்களைக் கடந்து இந்திரியங்களின் அடக்கமும், ஆயுள் பர்யந்தமும் அஹிம்சை விரத்தை கடைபிடிக்கும் தன்மையும், தத்துவ விசாரங்களோடு தவநெறியில் நின்று ஒழுகி மன அடக்கம் காக்கும் திறனும், ஜினபக்தியும், அனைத்துயிர் மாட்டும் அருளுடைமையும் ஆகிய இத்தகைய அருங்குணங்கள் எல்லாம் அண்மையில் விடுதலைபேறு பெறும் ஜீவன்களுக்கே வாய்க்கப்பெறும். இவர்களே முக்திஜீவனாகத் தகுதியானவர்கள்.






यमनियमनितान्तः शान्तबाह्यान्तरात्मा 
परिणमितसमाधि: सर्वसत्त्वानुकम्पी । 
विहितहितमिताशि क्लेशजालं समूलं 
दहति निहतनिद्रो निशिचताध्यात्मसारः ।।225।।

யமநியமநிதார்த: சாந்தபாஹ்யாந்தராத்மா, 

பரிணமிதஸமாதி: சர்வஸத்வானு கம்பீ | 
விஹித ஹிதமிதாசீ க்லேசஜாலம் ஸமூலம், 
தஹதி நிஹதனித்ரோ நிச்சிதாத்யாத்ம சார்: ||225||
The one who is engaged in observance of vows (‘yama’ and ‘niyama’)*, whose introverted-soul is rid of sensepleasures, who remains steady in meditation, who is compassionate in respect of all living beings, who accepts only helpful and limited food as per the procedure laiddown in the Scripture, is without sleep, and has acquired knowledge of the secrets of spiritual-advancement; such a man extirpates all anxieties.
கடைப்பிடிப்பதில் உறுதியாக ஈடுபடுபவர் ('யமா' மற்றும் 'நியாமா') *, அதன் உள்முக ஆத்மா உணர்விலிருந்து விடுபட்டு, தியானத்தில் சீராக இருப்பவர், எல்லா உயிரினங்களிடமும் கருணையுடன் இருப்பவர், உதவிகரமான மற்றும் ஏற்றுக்கொள்ளும் ஆகமத்தில் உள்ள நடைமுறையின் படி வரையறுக்கப்பட்ட உணவு, தூக்கம் இல்லாமல் இருப்பவர், மேலும் ஆன்மீக முன்னேற்றத்தின் ரகசியங்களைப் பற்றிய அறிவைப் பெற்றுள்ளவர்; அத்தகைய மனிதர் எல்லா துன்பங்களையும் அழிக்கிறார்.

இயமம் என்பது ஒரு சாதகன் (மோட்சம் அடைவதற்கான முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவன்) செய்ய வேண்டிய கடமைகள். அதாவது தகாத தகுதி அற்ற செயல்களை ஆயுட்காலம் முழுவதும் செய்யாமல் இருப்பது. அஹிம்சை, சத்தியம், கள்ளாமை, பிரம்மச்சரியம், இரக்கம், ஜபம், பொறுமை, திடம், மிதமான உணவு, பரிசுத்தம் போன்றவை இயமம் என்பதில் அடங்கும். அதாவது தீது அகற்றல்.

நியமம் என்பது இயமம் போன்றே யானாலும் குறிப்பிட்ட காலம், நேரம், மணி, நாள், மாதம், ஆண்டுவரை கடைபிடிப்பது ஆகும். அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்கள். உடல் சுத்தம், தியான நேரம், அளவான உறக்கம், அளவான சாப்பாடு, தவறு செய் வதற்கு அஞ்சுதல், ஜபம், விரதம் போன்றவை இதில் அடங்கும். அதாவது ஒழுக்க நெறியில் நிற்றல்.

இவ்விரு வகையில் எவர் ஒருவர் ஏற்றுக் கொண்ட விரதங்களை கடைபிடிக்கிறாரோ, எவருடைய அந்தராத்மா புறஇந்திரிய விஷயங்களில் இருந்து விடுபட்டு விட்டதோ, எவருடைய மனம் தியானத்தால் சாந்த பாவமும், அருளுணர்வும் நிறைந்துள்ளதோ, எவர் ஆகம விதிப்படி குற்றமற்ற உணவை ஏற்கிறாரோ, எவர் தூக்கத்தினை வென்றவரோ, மேலும் ஆன்மாவின் இயல் குணங்களை உறுதிப்படுத்திக் கொண்டவரோ, அவரே துன்பங்கள் பலவற்றையும் வேரோடு அழித்தவராவார்.





समध्गितसमस्ताः सर्वसावद्यदूराः 
स्वहितनिहितचित्ताः सान्तसर्वप्रचाराः । 
स्वपरसपफलजल्पाः सर्वसंकल्पमुक्ताः
 कथमिह न विमुक्तेर्भाजनं ते विमुक्ताः ।।226।।

ஸமாதிகதஸமஸதா: ஸர்வஸாவத்யதூரா: 

ஸ்வஸிதநிஹிதசிதா: சாந்தஸ்ர்வ ப்ரசராரா:| 
ஸ்வ பர்ஸபலஜல்பா: ஸர்வ ஸங்கல்பமுக்தா:, 
கதமிஹ ந விமுக்தேர்பாஜனம் தே விமுக்தா: ||226||
Why would the ascetics who know all substances worth accepting and rejecting, are completely rid of sinful activity, are absorbed in self-contemplation after calming down the fidgetiness of the senses, who speak only what is beneficial to the self and the others, and are rid of all volitions (samkalpa) and inquisitiveness (vikalpa), not merit liberation?
ஏற்றுக்கொள்வதற்கும் நிராகரிப்பதற்கும் மதிப்புள்ள அனைத்து பொருட்களையும் அறிந்த சந்நியாசிகள், பாவச் செயல்களில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு, புலன்களின் வேட்கையை அமைதிப்படுத்திய பின்னர் சுய சிந்தனையில் தோயப்படுவார்கள், சுயத்திற்கும் மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும் விஷயங்களை மட்டுமே பேசுகிறார்கள், எல்லா எதிர்பார்ப்புகள் (சம்கல்பா) மற்றும் ஏமாற்றங்கள் (விகல்பா) ஆகியவற்றிலிருந்து விடுபடுபவர்கள் விடுதலைக்கு தகுதியுள்ளவராகிறார்.

முக்திக்கு தகுதியானவர்; அனைத்துப் பொருள்களையும் தியாகம் செய்யும் தகுதியுள்ளவர்கள், ஏனென்றால் மூவுலகிலும் இல்லாதது எதுவோ அதுவே முக்தி. அதாவது இவ்வுலக விடுதலையே முக்தியாகும். ஏற்பதற்கு தகுதியுள்ள பொருட்களின் தன்மைகளை அறிந்துள்ளார்களோ, பாபச் செயல்களிலிருந்து விலகியுள்ளாரோ, மேலும் ஆன்ம கல்யாணத்திற்கு காரணமன நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கத்தை ஏற்கிறாரோ; அனைத்து புலன்வழி இன்பங்களிலிருந்து விலகியுள்ளாரோ, லெளகீகத்தில் வெறுப்புற்று இருக்கிறாரோ அவரே பிறவிக் கடலின் கரையில் இருப்பவர்.





दासत्वं विषयप्रभोर्गतवतामात्मापि येषां परस्- 
तेषां भो गुणदोषशून्यमनसां ¯क तत्पुनर्नशयति । 
भेतव्यं भवतैव यस्य भुवनप्रद्योति रत्नत्रायं 
भ्राम्यन्तीन्द्रियतस्कराशच परितस्त्वां तन्मुहुर्जागृहि ।।227।।

தாஸத்வம் விஷயப்ரபோர்கதவதாமாத்மாபி யேஷாம் பரஸ் 

தேஷாம் போ குணதோஷசூன்ய மனஸாம் மிம் தத்புனர்னச்யதி | 
பேதவ்யம் பவதைவ யஸ்ய புவன ப்ரத்யோதி ரத்னத்ரயம், 
ப்ராம்யந்தீந்திரிய தஸ்கராச்ச பரிதஸ்த்வாம் தன் முஹுர்ஜாக்ருஹி: || 227||
What more is there to lose for those (ascetics) who have become slaves to the lord of sense-pleasures, whose soul is dependent (on others), and whose minds cannot discern between the virtue and the evil? They have nothing to lose. But, O ascetic! Since you possess the three jewels (samyagdarśana, samyagjñāna and samyakcāritra) that illumine the world, you need to be fearful. Robbers in form of the senses are roaming all around you. Remain awake, always.
உணர்வு-இன்ப அரசருக்கு அடிமைகளாக மாறியவர்களுக்கும் மற்றவர்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கும், நல்லொழுக்கத்திற்கும் தீமைக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை மனதினால் புரிந்துகொள்ள முடியாதவர்களுக்கும் உலகில் இழக்க இன்னும் என்ன இருக்கிறது? அவர்கள் இழக்க எதுவும் இல்லை. ஆனால், முனிவர்கள்! உலகை ஒளிரச் செய்யும் மும்மணிகளை வைத்திருப்பதால், நீங்கள் தான் பயப்பட வேண்டும். புலன்களின் வடிவத்தில் கொள்ளையர்கள் உங்களைச் சுற்றி வருகிறார்கள். எப்போதும் விழித்திருங்கள்.

இவ்வுலகில் பொன், மாணிக்கம், முத்து முதலிய விலை மதிப்புள்ள செல்வங்களை வைத்திருப்பவர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனென்றால் எந்த நேரமும் கள்வர்கள் கவர்ந்து சென்று விடலாம். அதே சமயம் செல்வமற்றவர்களிடம் எந்தக் கள்வரும் செல்வதில்லை. அதனால் அவர்களுக்கு பயமேதும் இருக்க வேண்டிய அவசியமில்லை.

அதுபோல் உலகில் விலைமதிப்பில்லா மும்மணிகளை; நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கத்தை பாதுகாத்து வைத்திருப்பவர்கள் எப்போதும் விழிப்புடனே இருக்க வேண்டும். இல்லையெனில் பஞ்சேந்திரியங்கள் என்னும் ஐந்து கள்வர்களால் களவாடப்படலாம். அதாவது முக்திப்பாதையில் பயணிக்கும் நற்காட்சியாளன் புலனின்ப சுகம் என்னும் உணர்ச்சித் தூண்டலுக்கு அச்சம் கொண்டு கட்டுப்பாட்டுடன் ஒழுக்கத்தை கடைபிடித்தல் அவசியம் என்று முனிவர் பெருமான் எச்சரிக்கை செய்கிறார்.

விவேக அறிவுடன் தவநெறி ஒழுக்கத்தை கடைபிடித்து நல்லறமாகிய மும்மணியை கவனமுடன் கடைபிடித்து பாதுகாத்தல் அவசியம். சில சமயத்தில் சலனபுத்தியினால் புலனின்பச் சுவைக்கு அடிமையாகி சிற்றின்பத்தை சுவைக்க துவங்கினால் பேரின்பம் என்ற முக்திச் சுகம் ஒருநாள் கிடைக்கப்போவதில்லை என்று விழிப்புடன் ஒவ்வொரு தருணமும் செயலாற்ற அறிவுறுத்துகிறார்.





रम्येषु वस्तुवनितादिषु वीतमोहो 
मुह्येद् वृथा किमिति संयमसाध्नेषु । 
धीमान् किमामयभयात्परिहृत्य भु¯क्त 
पीत्वौषधिं व्रजति जातुचिदप्यजीर्णम् ।।228।।

ரம்யேஷு வஸ்து வநிதாதிஷு வீதமோஹோ, 

முஹ்யேத்வ்ருதா கிமிதி ஸம்யம சாதனே ஷு | 
தீமான் கிமாம்யபயாத் பரிஹ்யத்ய புக்திம் 
பீத்வெளஷதிம் வ்ரஜதி ஜாதுசிததப்ய ஜீர்ணம்: ||228||
O worthy soul! When you have become delusion-free in respect of attractive external objects – inanimate and animate (the wife, the son, etc.) – why do you then unnecessarily delude yourself in respect of your instruments of restraint, the feather-whisk (picchī) and the water-pot (kamaõdalu)? Does any wise man, who takes no food for fear of disease, ever provoke indigestion by intake of (too much) medicine?
முக்திக்கு தகுதியான ஆத்மா! கவர்ச்சிகரமான புற பொருள்களைப் பொறுத்தவரை - உயிரற்ற மற்றும் உயிருள்ள (மனைவி, மகன், முதலியன) - நீ மாயையிலிருந்து விலகி உன் கைக்கருவிகளான பிச்சி மற்றும் கமண்டலம் குறித்து நீங்கள் ஏன் தேவையில்லாமல் மோகம் கொள்கிறீர்? எந்தவொரு அச்சமுள்ள மனிதனும், நோய்க்கு பயந்து உணவை எடுத்துக் கொள்ளாது அதிகமாக மருந்து உட்கொள்வதன் மூலம் அஜீரணத்தைத் தூண்ட வேண்டுமா என்ன?

அறிவுடையோர் எவரும் உணவு ஜீரணமாகவில்லை என்பதால் மருந்தையே உணவு அளவிற்கு எடுத்துக்கொள்ளமாட்டார். அதுபோன்று அனைத்து புறப்பொருள்களையும் தியாகம் செய்து துறவறம் ஏற்ற தவசீலர்கள் பிச்சி, கமண்டலம் போன்ற உபகரணங்களின் மீது தனதென்னும் பற்று கொள்வதில்லை. அவ்வாறான சிறிய பரிஹிரஹ உணர்விருந்தாலும் வீதராக பாவம் ஏற்படுவதில்லை.





तपः श्रुतमिति द्वयं बहिरुदीर्य रूढं यदा 
कृषीपफलमिवालये समुपलीयते स्वात्मनि । 
कृषीवल इवोज्झितः करणचैरबाधदिभिः 
तदा हि मनुते यतिः स्वकृतकृत्यतां धीरधी ।।229।।

தப: ஸ்ருதமிதி த்வயம் பஹிரூதீர்ய ரூடம்யதா, 

க்ருஷீபலமிவாலயே ஸமுபலீயதே ஸ்வாத்மனி | 
க்ருஷீபல இலோஜ்ஜித: கரணசெளர பாதாதீப:
 ததா ஹி மனுதே யதி: ஸ்வக்ருதக்ருத்யதாம் தீரதீ: ||229||
As the farmer feels satisfied only when finally he has brought home his harvest which grows in the open and needs to be safeguarded against thieves, etc., the ascetic too feels satisfied only when finally he has brought to his soul the austerities and the scriptural knowledge which grow externally and need to be safeguarded against the thieves in form of the senses.
விவசாயி திறந்த வெளியில் பயிரை வளர்த்து கடைசியாக அறுவடை செய்த தானியத்தை திருடர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டு திருப்தி அடைவது போல, துறவியரும் தங்களது தவஆற்றலை புலன்களின் வடிவத்தில் வரும் திருடர்களுக்கு எதிராக பாதுகாக்கப்பட வேண்டி இருக்கிறது.

விவசாயி யானவன் தனது நிலத்தை உழுது பண்படுத்தி விதைவிதைத்து நீரும் உரமும் இட்டு வளர்த்து விலங்கு மற்றும் கள்வர்களிடமிருந்து காப்பாறி விளைச்சலை வீடு கொண்டு வந்து பயன் அடைகிறார். அதே போன்று முனிவர் தபம் மற்றும் ஆகம ஞானத்தை வளர்த்து, புலனின்ப விழைவு மற்றும் பற்று முதலான கள்வரிடமிருந்து காப்பாற்றி அனுபூதியில் ஆழ்ந்து விடுகிறார். இந்த அரிய பலனால் திருப்தி அடைகிறார்.

------------------

இந்தப் பாடலைக் காணும் போது இந்துமத துறவிகளுக்கும், நம் துறவிகளுக்குமான தவநெறி ஆற்றலில் வித்தியாசம் இல்லை என்றாலும் அவர்கள் சிலவேளையில் தமது தவஆற்றலை சாபம் கொடுத்தல் போன்றவற்றில் விரயம் செய்வதால் கூடுதலாக சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அவர்களது தவறினால் பல விபரீதங்கள் நிகழ்ந்தவைகளுமே இதிகாசங்களில் காணலாம். அவர்கள் குடும்ப உறவை முற்றிலுமாக துண்டித்தவர்கள் இல்லை. குடும்பப்பற்றுடன் தான் தவமிழைத்துள்ளார்கள். அதுபோன்ற நிலை நம் தவசிகளிடத்தில் இல்லை அவர்கள் அனைவருமே முற்றும் துறந்தவர்கள் என்பதையும் இப்பாடலின் மூலம் கூறியுள்ளார்.

திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோர் வியாசர் மூலம் எவ்வாறு உருவானார்கள். எந்த முறையில் அந்தப் பெண்கள் கருவுற்றனர்? அது வியாசரின் ஒருவகை புலனின்பம் தானே அதனால் தான் மஹாபாரதமே உருவானது எனலாம்.

துறவறம் மேற்கொண்டிருந்தாலும் வியாசன் தனது அன்னை சத்யவதியின் கட்டளையை ஏற்று லெளகீக வாழ்வை சில கணம் வாழ்ந்துள்ளான். அதுவும் தாம்பத்திய சுகம் கண்டற்கான ஆதாரமே மூன்று குழந்தைகள் பிறந்தது.

தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் குழந்தை ஓரிரவில் பிறப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒன்பது மாதகால அவகாசம் தேவையில்லை என்பதை அவர்களது தவவலிமை காட்டியுள்ளது.

வியாசருக்கும் – அம்பிகாவுக்கும் த்ருதராஷ்டிரன் முதல் நாள் இரவு பிறந்தான். இரண்டாம் நாள் இரவு வியாசருக்கும் – அம்பாலிகாவுக்கும் பாண்டு பிறந்தான். மூன்றாம் நாள் இரவு வியாசருக்கும் அம்பிகாவின் பணிப்பெண்ணுக்கும் விதுரன் பிறந்தான். அதன் பின்னர் தேவர்களுக்கும் கர்ணனும் பாண்டவர்களும் அப்படி ஒரே இரவில் பிறந்தவர்களே.

(தேவர்களாலும், ரிஷிகளாலும் உண்டாகும் கர்ப்பங்களுக்கு தாலிகட்டிய கணவனே தந்தையாக கருதப்படுவான் என்ற அபத்தம் வேறு.)

மேலும் வியாசர் குழந்தைகளை உருவாக்கவும், போரின் போது அங்கு நடக்கும் காட்சிகளைக் காண ஞானத் திருஷ்டியை திருதராஷ்டிரனுக்கு வழங்கியதும் அவரது தவஆற்றலின் விரயமே யாகும். ஆனால் அவர் திருதராஷ்டிரனுக்கு பார்வை வழங்கவில்லை என்று கூறுவது ஒருவகை சமாளிப்பாகத்தான் கொள்ள வேண்டும்.

அசுரர்களும் மிகச் சிறப்பான தவங்களைச் செய்தவர்களே. அவர்கள் தங்கள் தவப்பயனை விதியை மாற்றுவதில் செலவிட்டதாலேயே அவர்களின் தவப்பயன்கள் எல்லாம் வீணாகின என்றும் அதனால் தேவர்களும், ரிஷிகளும் அவ்வாறில்லை என்பதாக கூறப்பட்டுள்ளது.

விசுவாமித்திரர் விதியை மீறி திரிசங்குவை சொர்க்கத்துக்கு ஸ்தூல உடலோடு அனுப்ப முயன்று, திரிசங்கு சொர்க்கம் படைத்து தன் தவப்பலனை இழந்தார். அதுவும் விதியை மாற்றும் முயற்சியில் ஏற்பட்ட தோல்வி. பலன் கருதா தவம் செய்ததால் ரிஷிகள் உயர்ந்தனர். பலன் கருதி தவம் செய்தவர் அதை மட்டுமே பெற்றனர் என்ற குறிப்புகளும் உள்ளன. எவ்வாறு என்பது இன்று வரை புரியவில்லை. வெறும் நம்பிக்கையில் தான் ஏற்க வேண்டியுள்ளது.

அதனால் அந்த புராணங்களில் வரும் ரிஷிகள் ஆற்றலை வெளிப்படுத்தியதால் உயர்சக்தி கொண்டவர்களாக பலரும் ஏற்கின்றனர். அம்மாதிரியான நிகழ்வுகள் சமண புராணங்களில் அவ்வளவாக தென்படுவதில்லை. அதனால் தவஆற்றலை சமணத்துறவிகள் புலனின்ப வேட்கைக்காகவும், லெளகீக மேன்மைக்காகவும் திருட்டு கொடுப்பதில்லை. மிகவும் கவனமாகவே தவநெறியை போற்றி பாதுகாத்துள்ளனர் என்பதையும் காணலாம்.





दृष्टार्थस्य न मे किमप्ययमिति ज्ञानावलेपादमुं नोपेक्षस्व जगत्त्रायैकडमरं नि:शेषयाशाद्विषम् । पशयाम्भोनिध्मिप्यगाध्सलिलं बाबाध्यते वाडवः क्रोडीभूतविपक्षकस्य जगति प्रायेण शान्तिः कुतः ।।230।।

திருஷ்டார் தஸ்ய நமே கிமப்பயமிதி ஞானரவலே பாதமும், நோபேக்ஷஸ்வ ஜகத் த்ரயை கடமரம் நிப் சேஷயா அசாத்விஷம் பச்யாம்போனிதி மப்யகாத ஸலிலம் பாபாத்யதே வாடவ: கரோடீபூதவிபக்ஷதஸ்ய ஜகதி ப்ராயேண சாந்தி: குத: ||230||
‘I know the nature of substances and the enemy in form of desires can do no harm to me.’ Don’t be so overbearing. Without undermining the enemy, in form of desires, that engenders excessive fear in the three worlds, destroy it down to the roots. See, the oceanic-fire causes excessive damage to
the ocean, itself with unfathomable water. It is right; where can one attain peace when the enemy is sitting in one’s lap? பொருட்களின் தன்மையை நான் அறிவேன், ஆசைகளின் வடிவத்தில் எனக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது.’ என்று பயமின்றி அலட்சியமாக இருக்க வேண்டாம். மூன்று உலகங்களிலும் அதிகப்படியான பயத்தைத் தோற்றுவிக்கும், ஆசைகளின் வடிவத்திலுள்ள எதிரியைக் குறைத்து மதிப்பிடாமல், அதன் வேர்களை அழிக்கவும். இதோபார், கடலுக்கு அடியிலிருக்கும் நெருப்பு அதிக சேதத்தை ஏற்படுத்தும்; அது பார்வைக்கு தெரியாமல் நீரை சிறிதாக வற்றசெய்து விடும். அது போல அசையெனும் எதிரி ஒருவரின் மடியில் அமர்ந்திருக்கும்போது எங்கே அவர் அமைதியை அடைய முடியும்?

ஆசை சிறிதாக தோன்றினாலும் ஒருவரது நற்குணங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து கொண்டிருக்கும். கடல் நீர் நிரம்பி ஆழமாக இருந்தாலும் அதன் அடியிலுள்ள வெப்பமானது அவ்வப்போது சிறிது சிறிதாக உறிஞ்சி நீரை வற்றச் செய்து கொண்டே இருக்கும். அதுபோல எவ்வளவுதான் ஆகமத்தை படித்து பொருளின் இயல்புபற்றி அறிந்திருந்தாலும், புலனடக்கம் போன்ற நற்பண்புகள் இருந்தாலும் ஆசையால் ஏதும் செய்ய இயலாது என்று அலட்சியமாக எண்ணி இருந்து விடாதே. அது சிறிது சிறிதாக பெருகி உனது நற்குணங்களை அழித்து விடும். அதனால் அதனை வேருடன் அழித்து விடும்.

எதிரி எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் கலக்கமின்றி எவ்வாறு இருக்க முடியும். அதுபோல துளிர்விடும் சிறிதளவான ஆசை என்றாலும் அந்த பகைவனை அடியோடு அழித்து விடு என்று வலியுறுத்துகிறார் முனிவர் பெருமான்.





स्नेहानुबद्लहृदयो ज्ञानचारित्रान्वितोSपि न }लाघ्यः । 
दीप इवापादयिता कज्जलमलिनस्य कार्यस्य ।।231।।

ஸ்நேஹானு பத்வஹ்ருதயோ ஞானசாரித்ரான்விதோ அபி ந ஸ்லாக்ய: | 

தீப இவாபாதயிதா கஜ்ஜலமலினால் கார்யஸ்ய: ||231||
Just as the earthen-lamp (dīpaka), due to its association with oil, produces black-soot (kājala), the man whose heart (the mind) is associated with attachment (rāga), though possessed of knowledge (jñāna) and conduct (cāritra), produces karmas. He is not worthy of praise.
மண்-விளக்கு எண்ணெயுடனான தொடர்பு காரணமாக, கரும்மையை உருவாக்குகிறது, அறிவு மற்றும் நன்நடத்தை ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும், மனம் பற்றுடன் தொடர்புடையதாய் இருந்தால் கர்மங்களை உருவாக்குகிறது. அவர் புகழுக்கு தகுதியானவர் அல்ல.

மனதில் மோகம் இருக்கும் போது ஒருவர் எவ்வளவுதான் ஆகம ஞானம், நல்லொழுக்கம் உடையராயினும் அவர் போற்றுதலுக்குரியவர் ஆகார். எவ்வாறு எண்ணை ஊற்றி ஏற்றப்பட்ட விளக்கு ஒளியைப் பரப்பினாலும் கரியை வெளிவிடுவது போல; விருப்பத்துடன் கூடிய ஜீவன் தீவினை வடிவ அழுக்கினைத் தோற்றுவிக்கும்.

எண்ணை விடாமல் அனல் பிரகாசத்தை மட்டும் வெளியிடுவது போல, நீ பற்றற்ற நிலையில் நல்லொழுக்கம் முதலான தவநெறியை மேற்கொள்ளவேண்டும்.

----------------------

ஆசை என்பது உலகிலுள்ள ஏதோ ஒன்றினால் மனதுள்ளே திடீரென தோன்றும் வெற்றிடத்தை நிரப்ப தூண்டப்படும் விழைவு ஆகும். அது நிரம்பும் வரை எரிந்து கொண்டேதான் இருக்கும்.

அவ்வாறு நிரம்பிய பின் அதன்மீது பற்றுவைத்து அதனை தக்க வைக்க முயற்சிப்பது மோகமாகும்.

அதாவது சித்தம் கலங்கிய நிலையாகும். அதுவே மயக்கு வினைக்கு காரணமாக உள்ளவை. அவை இரண்டிலிருந்து முழுவதுமாக விடுபடுதலே விடுதலைக்கு வழிவகுக்கும்.

-----------------------

காதலித்து திருமணம் செய்தாலும், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டிருந்தாலும் திருமணத்தை பெரியோர்கள் விளையாட்டாக கூறுவது.

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.

எதிர்பாலினத்தை அடையும் வரை அது வேற்றிடமாக தோன்றுவது. அடைந்த பின் அதன்மீதுள்ள பற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைவதைத்தான் இவ்வாறு கூறுகிறார்கள்.

காதல் வயப்பட்டிருந்தபோது, அந்த உணர்வு மட்டுமே மேலோங்கியிருந்தது. இதயம் மட்டுமே வேலை செய்தது. இருவர் வாழ்க்கையும் பிணைந்தபின், அங்கே எதிர்பார்ப்புகள் கூடிவிட்டன. 'நான் இதைத் கொண்டு வருகிறேன்; நீ அதைக் கொண்டு வா' என்ற வணிகம் நுழைந்துவிட்டது.

திருமணம் என்பது, இரண்டு உயிர்கள் ஒன்றை ஒன்று புரிந்து கொண்டு, வாழ்க்கையை ஆனந்தமாக்கிக் கொள்ள ஏற்பட்ட அமைப்பு. அதை மறந்து, அடுத்தவரிடம் என்ன ஆதாயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கணவன் மனைவி உறவு அமைந்தால், வாழ்க்கை கொந்தளிப்புகள் நிறைந்ததாகிவிடும். கோர்ட் வரை போகாவிட்டாலும், குடும்ப அளவிலேயே திருமணம் தோற்றுவிடும்.

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இருவருக்கும் இடையில் அன்பு மட்டும் தீவிரமாக மலர்ந்திருந்தால், வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் விழுந்தாலும் காயப்படாமல் அறுபது நாளென்ன, அறுபது வருடங்களானாலும் சுகமாக மிதந்து பயணம் செய்ய முடியும். இது திருமண உறவுக்கு மட்டுமல்ல அனைத்துறவுகளுக்கும் பொருந்தும்.





तावद् दुःखाग्नितप्तात्मायः पिण्डः सुखसीकरैः । 
निर्वासि निर्वृताम्भोधै यावत्त्वं न निमज्जसि ।।233।।

தாவத் து: காக்னிதப்தாத்மா அய: பிண்ட: ஸுகஸீகரை: | 

நிர்வாஸி நிர்விருதாம் போதெள யாவத்வம்ந நிமஜ்ஜஸி || 233 ||
As long as you do not get immersed in the ocean that is the happiness of liberation, you, like the red-hot iron-ball of misery, cannot get happiness just by momentary sprinkling of the pleasures of the senses.
பேரானந்தம் என்று நீ முக்தியே கடலில் மூழ்காமல் இருக்கும் வரை, துயரத்தின் தண்ணிரை தெளிப்பதால் ஆறாத சிவப்பு-சூடான இரும்பு பந்தைப் போல, புலன்களின் இன்பங்களை தற்காலிகமாக தெளிப்பதன் மூலம் நீ துன்பம் நீங்கி பேரானந்தத்தைப் பெற முடியாது.

சூடான இரும்பு குண்டு தண்ணீரில் மூழ்க வித்தாலன்றி வெப்பம் தணியாது. நீரை அதன் மிது தெளிப்பதால் வெப்பத்தை அகற்ற இயலாது. அதுபோல துன்பமெனும் நெருப்பால் சூடாகியுள்ள உயிர்கள், முக்தியெனும் கடலில் மூழ்காதவரை, அற்பமான புலன் நுகர் இன்பங்களால் தணிவதில்லை.

அதாவது தேவகதி, அரசபோகம் முதலியவற்றை விருபுவது வீணே. ஏனென்றால் ஒரு நாள் அத்தனை சுகமும் கொள்ளையடிக்கப்பட்டு மீண்டும் மீளாத் துயரத்தில் தான் வீழ நேரிடும். புலன் நுகர் இன்பம் அற்பமானது துன்பத்திற்கே காரணமானது என்று அறிவுறுத்துகிறார் முனிவர் பெருமான்.

-----------------

ஸ்ரீல பிரபுபாதரின் உரையில் இவ்வாறு கூறுகிறார்…

ஒருவனது மனமும் புத்தியும் புலன்களுக்கு இன்பமளிக்கும் பொருட்களினால் கவரப்படும்பொழுது, அவனது மனம் கிளர்ச்சியடைகின்றது. இவ்வாறு புலனின்பப் பொருட்களையே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால், நீர் நிறைந்த ஏரியின் கரையில் நிற்கும் நாணல் காடு, நீர் முழுவதையும் படிப்படியாக உறிஞ்சி காலி செய்துவிடுவதைப் போல, அவனும் தன்னுடைய உண்மையான உணர்வினை இழந்து விடுகின்றான்.

இதனால், தான் உடல் என்னும் எண்ணம் மேலோங்குகிறது. இது பொய்மைக்கு அஸ்திவாரம் அமைக்கிறது. இந்த நிலையை அறிஞர்கள் ’ஆத்மாவை இழந்தவன் என்று அழைக்கின்றனர். இந்திரிய சுகங்களில் திளைத்திருப்பது தன்னை உணர்தலுக்கு பெருந்தடையாக இருக்கிறது. பணம் சம்பாதித்தல், அதைக் கொண்டு புலன்களை திருப்தி செய்தல் முதலிய செயல்களிலேயே ஒருவன் எப்போதும் ஈடுபட்டிருக்கும்போது, அவன் பக்தியுணர்வு இல்லாதவனாகி மரம், கல் என்ற அசையா உயிரினங்களில் பிறக்கிறான்.

அறியாமையிலிருந்து விடுபட விரும்புவோர் அத்தகைய குணங்களோடு எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது. அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைத் தவிர்த்து வீடுபேறு (முக்தி) ஒன்றையே மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ஜடவுலகம் நிரந்தரமானதல்ல. இதிலுள்ள உயர்ந்த தாழ்ந்த நிலைகள், பரம புருஷ பகவானின் கால சக்தியால் அழிக்கப்பட்டுவிடும். ஆதலால் இவற்றை முக்கியமாகக் கருதாமல். உயர்ந்த குறிக்கோளை அடைவதில் ஆசை கொள்ள வேண்டும், அதன்படி வாழ முழுமையாக முயற்சிக்க வேண்டும்.”

------------------------

இக்காலத்திய ஞானியர் பலரும் ஆச்சார்ய குணபத்ரர் அவர்கள் கூறிய கருத்தையே வலியுறுத்தி கூறியுள்ளார்கள்.





रतेररतिमायातः पुनारतिमुपागतः । 
तृतीयं पदमप्राप्य बालिशो बत सीदसि ।।232।।

ரதோராதிமயாத: புனா ரதிமுபாகத: | 

த்ருதீயம் பதமப்ராப்ய பாலிசோ வத ஸீதஸி ||232||
O worthy soul! You have first renounced attachment (rāga) and adopted aversion (dvesa). Then, you have renounced aversion and adopted, yet again, attachment. Alas! This way, by not adopting the third stage – of equanimity, rid of attachment and aversion – you are getting distressed.
ஏ ஆத்மா! நீ முதலில் விருப்பை கைவிட்டு, வெறுப்பை ஏற்றுக்கொண்டீர். பின்னர், நீ வெறுப்பைத் துறந்து, மீண்டும், விருப்பை ஏற்றுக்கொண்டீர். ஆனால் இந்த வழியில், மூன்றாவதை அதாவது மனதில் சமநிலையை பின்பற்றாததன் மூலம் விருப்பு மற்றும் வெறுப்பு ஆகியவற்றிலிருந்து விடுபடாமல் நீ மன உளைச்சலுக்கு ஆளாகிறீர்.

--------------------------

“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல” – குறள் – 4

வேண்டுதல் வேண்டாமை - விருப்பு வெறுப்பு - இல்லாத இறைவன் காட்டிய மார்க்கத்தில் அல்லது அறவழியில் நடந்தால் நாமும் அவர் சென்றடைந்துக் காட்டிய வீடுபேற்றை அடையலாம் என்பதுதான் அக்குறளின் உட்பொருள்.

------------------

நம் உடலையும் மனதையும் நிலை பெறச் செய்வதே முதன்மையாக இருக்க வேண்டும். அவை நிலையாக இருக்குமானால் கடவுள் வந்தாலும் சும்மா பார்த்துக் கொண்டிருக்கலாம். சாத்தான் வந்தாலும், தேவதை வந்தாலும் சும்மா பார்க்கலாம். கடவுள்களை, சாத்தான்களை, தேவதைகளை, பிசாசுகளை புறக்கணிக்கும் அளவு மனம் நிலையாக இருந்தால் பார்ப்பது சரிதான்.

மனமும் உடலும் நிலையாக இல்லை. அதனால் தான் விருப்பத்தை நிறைவேற்ற, வெறுக்கும் பொருளை அடியோடு விலக்க கடவுளையும், தேவதைகளை வரவழைக்க நினைக்கிறோம். மன்றாடுகிறோம். இல்லையா சாத்தான்களை பூஜிக்கிறோம், பிசாசுகளை திருப்தி செய்து காரியத்தை முடிக்க எண்ணுகிறோம். ஏனென்றால் இரண்டும் சமநிலையில் இல்லை. உடலை வருத்துவது மனதின் கலக்கம். அது சமன் ஆனால் அனைத்தும் சரியாகும்.

அப்படி இல்லையென்றால் நம் இரு கண்களால் எதையெல்லாம் பார்க்க முடியுமோ அதை மட்டும் பார்ப்பது உத்தமம். கண்களை மூடினால், உலகமே காணாமல் போகும் அளவு நம் உடலையும், மனதையும் நிலை கொள்ள செய்ய வேண்டும். கண் இமை இருப்பதன் நோக்கம், அவற்றை மூடினால் உலகம் இல்லாமல் போக வேண்டும். காதுகளை மூடிக் கொண்டால் பிறகு எதையும் கேட்க முடியாத வண்ணம் இருக்க வேண்டும்.

கண்களை மூடிய பிறகும், எதையோ பார்ப்பது, காதுகளை மூடிய பிறகும் எதையோ கேட்பது, வாயை மூடிய பிறகும் எதையோ பேசுவது இவற்றால் ஆன்மிகத்தில் நாம் முன்னேறிக் கொண்டிருப்பதாக நினைக்க வேண்டாம். அப்படி ஒருவருக்கு நிகழ்கிறது என்றால் மனம் எனும் ஒரு அற்புதத்தின் மீது கட்டுப்பாடு இழந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். கட்டுப்பாடு மீறும் பொழுது ஆபத்தில் முடியும். அது எதையாவது அசைபோட்டுக் கொண்டே இது வேண்டும், அது வேண்டாம் என்று சேர்ப்பதும், விலக்குவதுமாக திட்டம் போட ஆரம்பித்து விடும்.

நம் அனைத்து உள்நிலை அனுபவங்கள், காட்சிகள் அனைத்தையும் இறையிடம் விட்டு விடுங்கள். அதனிடம் விட்டு விடுவது என்றால் அதைப்பற்றி ஆராய்வது, பகிர்வது, முடிவுக்கு வருவது, ஏன் குழம்புவது இப்படி எதுவும் இருக்கக் கூடாது.

வெறுமனே விட்டு விடவேண்டும். அப்போதுதான் மனதளவில் பரிணமித்து, மலர வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும்.

வெறுமனே அறிதலோடு இல்லாமல் ஆழ்ந்து உணர வேண்டும் என்றால், மனதுடன் நெருக்கமாக வேலை செய்ய வேண்டும். நம் விருப்பு வெறுப்புகளை புறந்தள்ளி, அனைத்துக்கும் மேலாக சமநிலை, உறுதித்தன்மை ஆகியவை குறித்து வேலை செய்தால் மட்டுமே அது ஒரு வெற்றிகரமான சாத்தியமாக இருக்கும். அதாவது அப்போதுதான் தியானத்தில் ஆழ்ந்து வினைகளை விலக்க வழிவகுக்கும்.

அப்படியில்லாமல் விருப்பு, வெறுப்புகள் என்றைக்கும் சமநிலையை குலைத்து வினைகளை ஈட்டிக்கொண்டே சென்று கொண்டிருக்கும். அது பலபிறவிகளை தோற்றுவித்துக் கொண்டே தான் வளர்ந்து கொண்டிருக்கும். அதனால் மனதில் சமநிலை அதாவது உணர்வில் சமதாபாவம் ஏற்படும் வண்ணம் பஞ்சேந்திரியங்கள் அடங்கினால் மனதும் ஆழ்ந்து உறங்கிடும் சமநிலைக்கு தள்ளப்படவேண்டும் என்று ஆச்சார்யர் வலியுறுத்துகிறார்.





मघ्क्षु मोक्षं सुसम्यक्त्वसत्यंकारस्वसात्कृतम् । 
ज्ञानचारित्रासाकल्यमूल्येन स्वकरे कुरु ।।234।।

மம்க்ஷு மோக்ஷம் ஸுஸம்யக்த்வஸத்யம் காரஸ்வ ஸாத்க்ருதம் | ஞானசஸித்ரஸாகல்ய மூல்யேன ஸ்வகரே குரு: ||234||
O worthy soul! By paying the earnest money in form of right faith (samyagdarśana), you have booked liberation. Now, by promptly paying the balance amount in form of right knowledge (samyagjñāna) and right conduct (samyakcāritra), take its possession.
ஏ ஆத்மா! சரியான நம்பிக்கை (நற்காட்சி) என்னும் முன்பணத்தை செலுத்துவதன் மூலம் நீ விடுதலையை பதிவு செய்துள்ளீர். இப்போது, மீதமுள்ள தொகையை சரியான அறிவு (நல்ஞானம்) மற்றும் சரியான நடத்தை (நல்லொழுக்கம்) என்ற மீதி தொகையை உடனடியாக செலுத்துவதன் மூலம் அதை வசமாக்கிக் கொள்ளலாம்.

நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் என்ற மும்மணியை கடைபிடித்துத்தான் முக்தியை தன் வசமாக்கிக் கொள்ளலாம் என்பதாக முனிவர் தெரிவிக்கிறார்.

அதாவது ஆச்சார்யஸ்ரீ குணபத்ரர் இப்பாடலில் மனிதனும் தெய்வமாகலாம் என்பதற்கான பிரம்ம சூத்திரத்தை மூன்றுநிலைகளாக கூறியுள்ளார். இதனையே உமாஸ்வாமியும் தனது தத்துவார்த்த சூத்திரத்திலும் கூறிச் சென்றுள்ளார்.

இந்த பூமியில் ஒருவர் விரும்பும் பொருளைப் பெற வேண்டுமென்றால் தன் அறிவு முயற்சி உழைப்பு மூன்றையும் மூலதனமாக வைத்துத்தான் எதையும் பெற இயலும் அதிலும் விலைமதிப்புள்ள பொருளை, பதவியை அடைய அப்பொருள்கிடைத்தால் நன்மையே அடைவோம் என்பதில் முழுநம்பிக்கையும், அதற்குரிய செயல்முறைத்திட்டம் தீட்டுவதற்கான முழுஅறிவும், சரியான நேரத்தில் பிரயோகம் செய்து தொய்வில்லாது செயலாற்றும் திறமையும் அவசியம் என்பதை நம்முன்னோர்கள் பலவழியிலும் தெரிவித்துள்ளனர்.

அதற்கு முன்னோடியாக உள்ள இந்த த்ரிரத்னாஸ் என்ற மும்மணி வழிமுறையும் முக்திக்கானது என்பதை இப்பாடல் வழியாக தெரிவிக்கிறார்.

----------------------------

இன்றைய காலகட்டத்தில் அறிவியலில் உளவியல் சம்பந்தமான பயிற்சிகள் அனைத்தும் ஒருவன் எதுவாக இருந்தாலும் அவன் லட்சியத்தை அடைவதற்கான வழிமுறைகளை வகுத்து வழங்கி வருகிறார்கள். அந்த சுயமுன்னேற்றம், லட்சியத்தை அடைதல், வெற்றிப்பாதை போன்ற வகுப்புகளை நடத்தி பெருமளவில் சம்பாத்தியமும் பெற்று வருகிறார்கள்.

மேடையில் இந்த செல்ப் மோட்டிவேஷன் பேச்சாளர்கள் தான் முன்வரிசையில் இருக்கின்றார்கள். கிரிக்கெட், சினிமா வீரர்களுக்கு அடுத்த வரிசையிலுள்ள அவர்கள் எதைப் பேசினாலும் கைதட்டல் வாங்குவதோடு தங்களது பணப்பையையும் வெளிநாடுகள் வரை சென்று நிரப்பி வருகிறார்கள் என்பதை கண்கூடாகக் காண்கிறோம். (இந்த கரோனா வைரஸ் சென்றதும் அந்த வைரஸ்கள் மீண்டும் ஆட்கொண்டுவிடும்)

இதில் முக்கியமாக தன்னம்பிக்கை, விடாமுயற்சி, எச்சரிக்கை உணர்வு, அனுபவஅறிவு இந்நான்கின் கலவையை எடுத்துக்கொண்ட இலட்சியத்திற்கு தகுந்தாற்போல் வகுத்து செயலாற்றினால் வெற்றியடைவது நிச்சயமே. இந்த பெர்முடேஷன் காம்பினேஷன்ஸ் விகிதங்களை மாற்றி மாற்றி பேசுவதில் வல்லவர்கள்தான் அந்த முன்னனி மேடைவீரர்கள்.

லெளகிகத்தில் வெற்றி என்பதனை நன்கு உபதேசிப்பதில் வல்லமை பொருந்தியவர்களுக்கு அடிப்படையே நம் புருஷார்த்த வழி முறைகள் என்பதை இப்பாடலின் வழியே நன்கு தெரிந்துகொள்ளலாம்.

வாழ்க்கையில் லட்சியம் ஒன்றை முடிவு செய்து கொள்ளவேண்டும்(objective) அதற்கான திட்டமிடல் அவசியம் (planning) அதனை சரியான நேரத்தில் பிரயோகிக்கும் செயல்முறைகள் (time of execution) இவை சரியாக அமைந்தால் எந்த ஒரு நோக்கமும் வெற்றியையே தழுவும் என்பதை நம் முக்தி மார்க்கமே ஓர் எடுத்துக் காட்டு. முதலில் தேவை நம்பிக்கை, அடுத்து அறிவு, அதற்கடுத்து ஒழுகுதல் இவையே. இந்த முக்தி என்ற மானுடலட்சியத்தை ஏற்றுக் கொள்ள மனமில்லாதவர்கள், உள்ளதா என்ற சந்தேகிப்பவர்கள் அதேசமயத்தில் மனவலிமை மிக்கவர்கள் இந்த வழிகளை தங்களது லெளகீக லட்சியத்திற்கு பயன்படுத்தியே வெற்றியை தழுவுகிறார்கள் என்பதே நிதர்சனம்.

ஆனால் நமது பாரதம் போன்ற கிழக்கத்திய நாடுகளில் உள்ள தரிசனங்கள் முக்தி எனும் விடுதலை அடைவதையே புருஷ லட்சணமாக வகுத்துள்ளனர். அதற்கான வரைமுறைகள், செயல்முறைகளை அந்தந்த ஞானியரும் வகுத்து சென்றுள்ளனர். அவர்களது வழிமுறைகள் புரியும்வரை தெய்வமாக தொழுபவர்களும், புரிந்தபின் குருவாக ஏற்பவர்களுமே அந்தந்த தரிசன மதவாதிகளாக மாறியுள்ளனர்.

அவ்வகையில் நம் சமண தரிசனம் அந்த பேரானந்த உறைநிலையான முக்திக்கு மும்மணீகளாக நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கத்தையே விலையுயர்ந்த ரத்தினங்களாக அறிவித்துள்ளது. அவ்வழியை நம் கடைசி பரமகுருவான பகவான் மஹாவீரர் நமக்கு அளித்துச் சென்றுள்ளார். அவர் வகுத்த வழியில் பயணித்தால் வெற்றிபெறுவது நிச்சயமே என்பதை உறுதி செய்வதே இப்பாடல் வரிகளாகும்.





अशेषमद्वैतमभोग्यभोग्यं निवृत्तिवृत्त्योः परमार्थकोटड्ढाम् । 
अभोग्यभोग्यात्मविकल्पबुध्दड्ढा निवृत्तिमभ्यस्यतु मोक्षकांक्षी ||235||

அசேஷமத்வைதமபோக்ய போக்யம், 

நிவ்ருதி விருத்யோ: பரமார்த்த கோடதாம் | 
அபோக்யபோக்யாத்மவிகல்பபுத்த்யா, 
நிவ்ருதிமப்யஸ்யது மோக்ஷகாம் க்ஷீ: ||235||
The whole world is essentially one; segregation of its objects in terms of agreeable and disagreeable is just in the mind. Mental association (pravrtti) for an object makes it agreeable, and dissociation (nivrtti) disagreeable. The worthy soul who desires liberation should practice withdrawal from mental segregation of objects in terms of agreeable and disagreeable.
முழு உலகமும் அடிப்படையில் ஒன்று; ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் உடன்படாத வகையில் அதன் பொருள்களைப் பிரிப்பது மனதில் உள்ளது. ஒரு பொருளின் இயல்பிற்கான மனத் தொடர்பு (ப்ரவர்தி) அதை அனுபவிக்கக்கொள்ளக்கூடியதாக ஆக்குகிறது, மற்றும் விலகினால் உடன்படுவதில்லை. விடுதலையை விரும்பும் ஆத்மா, ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் உடன்படாத வகையில் பொருள்களின் மனப் பிரிவினையிலிருந்து விலகுவதைப் பயிற்சி செய்ய வேண்டும்.

புலன்நுகர்ச்சி தான் உலகை பொருள்தன்மையாக்குகிறது. அதிலிருந்து விலகினால் முழுவதுமே ஒரேதன்மையாக தோன்றும். அதுவே முக்திக்கான வழியாகும் என்கிறார் முனிவர்.

--------------------------------

உலகம் என்பதை நாம் தோற்றத்தில் காண்பதை ஏற்று ஒரு முடிவுக்கு வருகிறோம். வந்துள்ளோம் என்பதும் நம் மனதில் உள்ள பதிவுகளே பறை சாற்றுகின்றன. அதன் அடிப்படையில் தான் பிரதிகனமும் புதிய அனுபவப்பதிவுகளையும் நாம் நினைவுகளாகக் கொண்டிருக்கிறோம்.

அந்த அனுவபவங்களுக்கு மூலகாரணமாக இருப்பது கண், காது, மூக்கு, வாய், தோல் என்ற ஐம்புலனுகர்ச்சிகளாகும். கண்ணால் காணமுடியாததும், காதால் கேளாத ஒலிகளும், மூக்கினால் நுகர முடியாதவைகளும் இவ்வுலகத்திலுள்ளன. எப்படியெனில் இக்கால விஞ்ஞானக் கருவிகளே அதனை நிரூபிக்கின்றன. மேலும் மேலும் பலவற்றை காண கருவிகள் கண்டுபிடித்துக் கொண்டேதான் அறிவியல் வளர்ச்சியடைகின்றன.

அதனால் இவ்வுலகத்தின் தன்மையை முற்றிலும் அறியாத ஞானத்தைத்தான் விஞ்ஞானிகளுமே கொண்டுள்ளனர். அவ்வாறிருக்க மனிதன் உலகத்தன்மையை முற்றும் உணர்ந்தான் என்று எவ்வாறு கூற இயலும்.

அதே சமயம் மெய்ஞ்ஞானிகள், முற்றும் உணர்ந்த கேவலஞானியர் உலகத்தின் தன்மையை ஆறு திரவியங்களுக்குள் அடக்கம் என்பதாக தெரிவிக்கின்றனர். அவர்களது ஞானக்கண்ணே உலக இயல்பை அறியவல்லது. அவர்களது கூற்றே உலகை அளந்த அறிவாக நிலத்திருக்கும். சூட்சுமம் அவ்வாறிருக்க உலகத்தன்மையை முற்றிலும் அறியாமல் புலனுகர்ச்சி வழங்கும் அனுபவத்தை மனம் இன்ப, துன்பமாக நிர்ணயம் செய்து விருப்பு, வெறுப்பு உணர்வில் வாழ்வது அஞ்ஞானமாகும் என்றுதான் முனிவர் கூறுகிறார்.

எனவே மனம் பிரித்துணரும் தன்மை உலகின் உண்மை இயல்பை வெளிப்படுத்துவதாக ஆகாது என்று வலியுறுத்துகிறார் ஆச்சார்யர்.

------------------------

அவ்வாறு இவ்வுலகின் இயல்பை அறியாதவர்கள் புலன் இன்பங்களில் மயங்குவர். அவ்வின்பங்களைப் பெருக்கிக் கொள்பவர்களே கஷாயங்கள் எனும் தீய உணர்வுகளுக்கு அடிமையாகி அனுபவித்து வருகின்றனர். அதேசமயம் அறிவுடையோர் ஞானத்தெளிவினால் தியாகம் செய்வதில் அதாவது தவநெறி ஒழுக்கத்தில் முழுவதுமாக ஈடுபடுத்தி வருகின்றனர். அதனால் முக்தியை விரும்புவோர்கள் புலன் நுகர்ச்சி இன்பங்களிலிருந்து விடுபட்டால் உலக இயல்பை அறிவர். அவர்களே விடுதலையைப் பெறுவர். அதுவே நிர்வாண நிலை என்பதாகும்.





निवृतिं भावयेद्यावन्निवृत्त्यं तदभावतः । 
न वृत्तिर्न निवृत्तिशच तदेव पदमव्ययम् ।।236।।

நிவ்ருதிம் பாவயேத் யாவந்தி வருத்யம் தத பாவத: | 

ந வ்ருத்திர்ன நிவ்ருதிச்ச ததேவ பதமவ்யயம்: || 236 ||
As long as there is association with external objects worth dissociating, one should contemplate dissociation (nivrtti). When no objects that need dissociation remain, one contemplates neither association (pravrtti) nor dissociation (nivrtti).
பற்றறுத்தல் என்பது வெளிப்புற பொருள்களுடன் இம்மியளவு தொடர்பு இருந்தாலும் ஒருவர் விலகலை சிந்திக்க வேண்டும். விலக்கத் தேவைப்படும் எந்தவொரு பொருளும் இல்லாதபோது, ஒருவர் விருப்பு மற்றும் வெறுப்பு ஆகியவற்றைப் பற்றி சிந்திக்க தேவையில்லை.

மன, வசன, காய எனும் மூன்று யோகத்திலும் கடைசிபிடிப்புள்ளவரை புறப்பொருள் தொடர்புகளை முற்றிலுமாக விலக்கும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புறப்பொருள் வேட்கை முற்றிலுமாக நீங்கிய பின் தான் ஆன்மதரிசனம் கிட்டும். அதாவது புறப்பொருள் தொடர்பின்மையே விடுதலைக்கு வழிவகுக்கும்.

நோயுள்ளவரை மருந்தை உட்கொண்டுதான் ஆகவேண்டும். ஆரோக்கியம் ஓரளவு கிடைத்ததும் மருந்தை நிறுத்துவது மீண்டும் நோயின் தீவிரத்திற்கு அழைத்துச் செல்லலாம். அதுபோல பேச்சில், செய்கையில் பற்றின்மை தோன்றினால் மட்டும் போதாது எண்ணத்திலும் அறவே நீக்கப்படவேண்டும். அதன் வேர் மனதின் ஆழத்தில் புதைந்திருக்கலாம். அதனையும் கண்டுபிடித்து அடியோடு நீக்கும் பயிற்சியை மேற்கொள்வதே தவநெறி ஒழுக்கமாகும். அதனை சிரமேற்கொண்டு ஒழுகினால் மட்டுமே எண்ணம், சொல், செயல் மூன்றிலுமாக பற்றறுக்கும் நிலையை எய்திட இயலும் என்பதாக முனிவர் வழிகாட்டுகிறார்.

-------------------

ஒன்றின்மேற் பற்றிருந்தால் அவை ஒழித்து அங்கங்குச் செல்வது கூடாமையால் பாசத்தளை யென்றும், ஒன்றின்மேல் ஆசை மேலே மேலே ஓடிக்கொண்டிருத்தலால் அவாத்தேர் என்றுங் கூறினார்.

“அவா என்ப எல்லா வுயிர்க்கும் எஞ்ஞான்றும், தவாஅப் பிறப்பீனும் வித்து” என்றார் குறளாசிரியர்.

அகப்பற்று புறப்பற்று என்றிருவகை; நான் என்னும் உணர்ச்சி யுடனிருப்பது அகப்பற்று. எனது என்னும் உணர்ச்சியுடனிருப்பது புறப்பற்று. இவ்விரு பற்றிலும் கிஞ்சித்தும் இல்லாது போயின் வீடுபேற்று வழி திறக்கும். அதுவரை அதற்கான வழி தென்படாது, தவறான வழியில் தான் வாழ்க்கைப் பயணம் செல்லும்.

பற்றையும், அவாவையும், பொய்யையும் நீக்கினால் வீட்டையலாம் என்பதே முனிவர்வாக்கு.





रागद्वेषौ प्रवृत्तिः स्यनिन्व्व्वृत्तिस्तन्निषेध्नम् । 
]तौ च बाह्यार्थसम्बध्दौ तस्मात्तान् सुपरित्यजेत् ।।237।।

ராகத்வேஷோ ப்ரவ்ருத்தி: ஸ்யான்னிவ்ருத்திஸ்தான்நிஷேதனம் | 

தெள ச பாத்யார்த ஸம்பத்தெள தஸ்மாத்தாம்ச்ச பரித்யஜேத்: ||237||
Presence of attachment (rāga) and aversion (dvesa) constitutes association (pravrtti), and absence of attachment and aversion constitutes dissociation (nivrtti). These, attachment and aversion, pertain to external objects. Hence, external objects should be renounced.
விருப்பு மற்றும் வெறுப்பு இருப்பது பற்றுதல் ஆகும், மேலும் விருப்பு மற்றும் வெறுப்பு இல்லாதது பற்றின்மையை உருவாக்குகிறது. இந்த விருப்பு மற்றும் வெறுப்பு புறப் பொருள்களுடன் தொடர்புடையவை. எனவே, புறப் பொருள்களை கைவிட வேண்டும்.

வேட்கைக்கு மூல காரணம் புறப்பொருள்களின் தொடர்பே என்கிறார் முனிவர் பெருமான். பொருள் விழைவே விருப்பு மற்றும் வெறுப்புக்கு காரணமாகிறது. அந்த புறப்பொருள் வேட்கையை, தொடர்பை விலக்கினாலே ராகத்வேஷம் நின்று விடும்.

--------

பொருள்களின் மீதுள்ள விழைவே அகப்பற்று, புறப்பற்றுக்கு காரணமாகிறது. யான் என்பது அகப்பற்று, எனது என்பது புறப்பற்று ஆகும். பற்றின்மைக்கு மூலகாரணமான உடல் முதலான புறப்பொருள்களின் பால் தோன்றும் தான், தனது என்ற வேட்கையுணர்வாகும்.

ஜீவன் தொடக்கமற்ற கால முதலே உடல் முதலான புத்கலத்தினை தனதாக கருதி வந்ததினால் பிற புத்கலத்தின் மீது பற்று வைக்கிறது, வளர்க்கிறது. அதனால் பிரபஞ்சம் பொருள்சார்ந்த உலகமாய் தோன்றுகிறது. அதனால் ஜீவன் தனது உண்மையான இயல்பினை அறிந்து, பிறப்பொருட்களின் மீதுள்ள பற்றினை விடவேண்டும். அதுவே ராகத்வேஷம் நீங்க காரணமாய் அமையும் என்கிறார் அச்சார்யஸ்ரீ.





भावयामि भवावर्ते भावनाः प्रागभाविताः । 
भावये भाविता नेति भवाभावाय भावनाः ।।238।।

பாவயாமி பவாவர்தே பாவனா: ப்ராக பாவிதா: | 

பாவயே பாவிதா நேதி பவாபாவாய பாவனா: || 238 ||
‘In the whirl of transmigration, earlier, I have never contemplated on observances, like right faith (samyagdarśana). Now I contemplate on such observances. I have contemplated, over and over again, on observances, like wrong faith (mithyādarśana). Now I stop contemplation on such observances. Leaving observances that contemplated on earlier, I now contemplate on new observances that cause the destruction of mundane existence.’
பிறவிச்சுழலில் சிக்கியதால் முன்னதாக நற்காட்சி போன்ற நெறிகளைப் பற்றி நான் ஒருபோதும் சிந்திக்கவில்லை. இப்போது நான் அத்தகைய அனுசரிப்புகளைப் பற்றி சிந்திக்கிறேன். தவறானநம்பிக்கை, பொய்க்காட்சி போன்ற அனுசரிப்புகளைப் பற்றி நான் மீண்டும் மீண்டும் முன்னர் சிந்தித்துள்ளேன். இப்போது நான் அத்தகைய கீழான நடவடிக்கைகளைப் பற்றி சிந்திப்பதை நிறுத்துகிறேன். முன்பிறவிச் சிந்தனைகளை விட்டுவிட்டு, இவ்வுலகப்பற்றின் அழிவுக்கு காரணமான புதிய நெறிகளைப் பற்றி இப்போது சிந்திக்கிறேன்.

பற்றினை விடுவதற்கான தினத்தியானத்தை இப்பாடலில் முனிவர் வழங்குகிறார்.

ஓர் உயிர் பிறவியில் சுழன்று கொண்டிருப்பதற்கு காரணம் மித்யாத்வம் முதலான தீய உணர்வுகளே. இந்த உலகம் பொருள்சார்ந்தது. அதுவே நித்யமானது. இப்பொருளை எப்படி சேர்ப்பது, தக்கவைத்துக் கொள்வது என்கின்ற சிந்தனையே பல பிறவிகளாக இருந்துள்ளது. அதுவே வாழ்வின் இலட்சியமாக இருந்துள்ளது. உடல் சார்ந்த இன்பங்களுக்கான முயற்சிகள், நடவடிக்கையிலேயே ஆயுள் முழுவதுமாக செலவிடப்பட்டுள்ளது. இது பல பிறவிகளாக ஆழத்தில் பதிந்துள்ள சிந்தனையாகும். அதிலிருந்து மீளும் பயிற்சியினை நாம் மேற்கொள்ளுதல் வேண்டும்.

என் உடல் அழியக்கூடியது. புத்கலபரமாணுக்களால் ஆனது. அழிந்து மீண்டும் தோன்றக்கூடியது. நித்தியமில்லாதது. ஆனால் நானோ ஆத்மன். அழிவில்லாதவன். அதன் மீது புத்கலப் பொருட்கள் சேர்ந்து மனமாகவும், உடலாகவும் தோற்றம் கொண்டுள்ளது. இதனை நீக்கினால் ஒழிய இவ்வுல புத்கலப் பொருட்களால் கிடைக்கும் அற்ப சுகங்களிலிருந்து எனக்கு விடுதலை கிடைக்கும் என்ற சிந்தனையை மீண்டும் மீண்டும் ஆழ்மனதில் இருத்தி தியானம் செய்ய வேண்டும்.

புத்கலத்தின் பற்றினால் தோன்றிய ஆர்த்த, ரெளத்ர தியானத்திலிருந்து விலகி ஆத்மானுபூதியில் திளைக்கும் தர்ம தியானத்தின் வயப்படுதலே நற்காட்சிக்கு வழிவகுக்கும் என்று இப்பாடலில் மூலம் நற்சிந்தனையில் வட்டமடிக்க அறிவுறுத்துகிறார் முனிவர் பெருமான்.

நாம் எதுவாக இருந்தாலும் அதனை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, அப்போதைய இலட்சியத்திற்கான சிந்தனைகளில் ஆழந்திருப்பதே வெற்றியளிக்கும் என்ற உளவியல் பயிற்சிக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் அக்காலத்து உளவியலாளர் ஆச்சார்ய குணபத்ரர்.





शुभाशुभे पुण्यपापे सुखदुःखे च षट् त्रायम् । 
हितमाद्यमनुष्ठेयं शेषत्रायमथाहितम् ।।239।।

சுபாசுபே புண்யபாபே ஸுகதுக்கே சஷட் த்ரயம் | 

ஹிதமாத்யமனுஷ்டேயம் சேஷத்ரயமதாஹதம்: ||239||
Auspicious (śubha) and inauspicious (aśubha), merit (puõya) and demerit (pāpa), and happiness (sukha) and misery (duÍkha) – these are six. The first of each of these three pairs – auspicious (śubha), merit (punya), and happiness (sukha) – are beneficial for the soul and worth accepting. The remaining three – inauspicious (aśubha), demerit (pāpa), and misery (duhkha) – are harmful for the soul and worth rejecting.
சுப மற்றும் அசுபம், புண்யம் மற்றும் பாபம், மகிழ்ச்சி மற்றும் துன்பம் இந்த ஆறில் ஒவ்வொன்றிலும் முதன்மையான சுபம், புண்யம் மற்றும் சுகம் ஆன்மாவுக்கு நன்மை பயக்கும் மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை. மீதமுள்ள மூன்றும் அசுபம் , பாபம் மற்றும் துன்பம் ஆன்மாவுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் நிராகரிக்கத்தக்கவை.

உணர்வில் எதை உபயோகிக்கிறோமோ அதனை புத்தி என்று முன்னர் பார்த்தோம். அதில் ஆன்மனுக்கு நன்மை பயக்கக்கூடிய நல்லபுத்தி, தீமை விளைவிக்கக் கூடியவை தீயபுத்தி எனலாம்.

அதாவது சுபோபயோகம் - அருள்வடிவான எண்ணம், உத்தமமான சொல், புலனடக்கத்தோடான செயல் ஆகியவை நல்லபுத்தியாகிறது.

அசுபோபயோகம் என்பது அதற்கு நேர்மாறான இரக்கமற்ற எண்ணம், கடுஞ்சொற்கள், புலனடக்கமின்னை விரதங்களில் நாட்டமில்லா செயல்கள் ஆகியவை தீய புத்தியாகும்.

இதில் முதல் யோகம் ஆன்மனுக்கு நன்மை பயக்கக்கூடியது. இரண்டாமது தீமைக்கு காரணமானது. அது புண்ணியத்தையும், மற்றது பாபத்தை அளிக்கவல்லது.

இவை இரண்டுமே முக்திக்கு காரணமானது இல்லை என்றாலும் வியவகார நோக்கில் சுபோபயோகம் புண்யத்தை தரவல்லது. அதனால் மேலானகதிக்கு வழிவகுக்கும். மாறாக மற்றது பாவத்தை அளித்து நரகம், நிகோகத்திற்கு தள்ளிவிடும் என்று எச்சரிக்கை செய்கிறார் முனிவர் பெருமான்.





तत्राप्याद्यं परित्याज्यं शेषौ न स्तः स्वतः स्वयम् ।
 शुभं च शुध्दे त्यक्त्वान्ते प्राप्नोति परमं पदम् ।।240।।

தத்ராப்யாத்யம் பரித்யாஜ்யம் சேஷெள ந ஸ்த: ஸ்வத: ஸ்வயம் | 

சுபம் ச சுத்தே த்யக்த்வாந்தே ப்ராப்னோதி பரமம் பதம்: ||240||
Out of the three – auspicious (śubha), merit (puõya), and happiness (sukha) – mentioned above as beneficial for the soul, discard the first one. By doing this, the remaining two will automatically cease to exist. Thus leaving the auspicious (śubha), the soul gets established in its pure (śuddha) nature, and reaches ultimately the supreme state of liberation.
ஆத்மாவுக்கு நன்மை பயக்கும் என்று மேலே குறிப்பிட்டுள்ள சுப புண்ய மற்றும் மகிழ்ச்சி ஆகிய மூன்றில், முதல் ஒன்றை நிராகரிக்கவும். இதைச் செய்வதன் மூலம், மீதமுள்ள இரண்டு தானாகவே இருக்காது. இவ்வாறு சுபமானதையும் விட்டு ஆன்மா அதன் தூய்மையான இயல்பில் நிலைபெற்று, இறுதியில் விடுதலையின் உச்ச நிலையை அடைகிறது.

இந்த பாடல் முன்பொரு பாடலில் கூறப்பட்டுள்ள சுப, அசுப மற்றும் சுத்த உபயோகத்தை ஏற்பது விடுவதான வரிசைப்படுத்தும் புருஷார்த்தத்தை வழங்குகிறது.

(பாடல் 181 ன் விளக்கத்தை மீண்டும் காணவேண்டுகிறேன்)

எந்த உணர்வை உபயோகிக்கிறோமோ அதுவே புத்தி யாகும். அதாவது நல்ல புத்தி, தீயபுத்தியே ஒருவருக்கு வினைக்கட்டை நிர்ணயம் செய்கிறது.

இந்த புத்தியில் அமர்ந்து வேலை செய்பவையே 143 வினைகளும், நான்கு கஷாயங்களும் ஆகும். (சுருக்கமாக தெரிவித்துக் கொள்கிறேன்)

புத்தியில் அதாவது உபயோகத்தில் மூன்றுவகையுள்ளது. அவை அசுபோபயோகம், சுபோபயோகம், சுத்தோபயோகம் என்பன. அதாவது நல்லபுத்தி, தீயபுத்தி, தூயபுத்தி எனலாம். (இவை நாம் புரிந்து கொள்வதற்கானவை.)

இதில் ஆன்மாவின் அசுப உபயோகத்தை முதலில் விடவேண்டும். அதனால் பாப காரியங்கள் விலக்கப்பட்டுவிடும். அதனால் தீவினைக்கட்டு ஏற்படாத யோகத்தை கடைபிடிப்போம். அப்போது சுப உபயோகம் மட்டுமே மேலோங்கி நிற்பதால் புண்யவினைக்கட்டு பந்தமாகிறது. அது சுவர்க்க சுகத்திற்கானது. அதனால் சுகதி மட்டுமே கிடைக்கிறது. ஆனால் விடுதலை கிடைப்பதில்லை.

அதனால் சுப மற்றும் அசுப உபயோகம் இரண்டுமே ஆன்மாவைப் பொருத்தமட்டில் அசுத்த உபயோகமாகிறது. அதனால் அவ்விரண்டையும் நீக்கி விட்டு சுத்த உபயோகத்தை ஏற்பதே நல்ல புருஷார்த்தம் என்று அறிவுறுத்துகிறார் முனிவர் பெருமான்.

அதாவது தீவினைக்கான எண்ணம், சொல், செயலை விலக்குவதால் நல்வினைக் கட்டும் தாமாகவே நம்மிடம் எஞ்சி நிற்கும். அதுவும் பொன் விலங்கு போன்றதே. அதிலிருந்தும் விடுபட்டு தீவினை, நல்வினைக்கான பாபச் செயல் மற்றும் தான தர்மம் போன்ற புண்யச்செயலையும் விலக்கிவைத்து அறவழி யோகநிலையை தேர்வு செய்வதே, தவநெறி வாழ்வுமுறையே முக்திமார்க்கமாகும் என்கிறார் ஆச்சார்ய பெருமான். அதாவது பலன் கருதா பணிகளை செய்யும் யோகநிலைக்கு தம்மை ஆட்படுத்த வேண்டும் என்கிறார்.





अस्त्यात्मास्तमितादिबन्ध्नगतस्त६न्ध्नान्याड्डवैः 
ते क्रोधदिकृताः प्रमादजनिताः क्रोधदयस्तेSव्रतात् । 
मिथ्यात्वोपचितात् स एव समलः कालादिलब्धै क्वचित 
सम्यक्त्वव्रतदक्षताकलुषतायोगैः क्रमान् मुच्यते ।। 241।। 

அஸ்த்யாத்மா அஸ்தமிதாதி பந்த நகதஸ்தத் பந்தனாந்யாஸ்ரவை:, 

தே க்ரோதாதிக்ருதா: ப்ரமாத ஜனிதா: க்ருதோதயஸ்தே அவ்ரதாத் | மித்யாத்வோ பசிதாத் ஸரவஸ்மல: காலாதிலப்தெள க்வசித் 
ஸம்யத்வ வ்ரதக்ஷதா அகலுஷதா யோகை: க்ரமாந் முச்யதே ||241||
The soul does exist and, since beginningless time, it is in (karmic) bondage. Bondage is caused by influx (āsrava) of the karmic matter, auspicious and inauspicious, due to the activities of the mind, the speech, and the body. Influx (āsrava) is caused by passions (kasāya), like anger (krodha). Passions, like anger, are caused by negligence (pramāda). Negligence is caused by vowlessness (avirati) which results from wrong-belief. The same soul in (karmic) bondage, in a particular mode (paryāya) and on attainment of a favourable-time (kālalabdhi), observes these – right faith (samyagdarśana), vows (vrata), nonnegligence (apramāda), destruction of passions (kasāya), and curbing of activity (yoga) – sequentially, and finally gets liberated.
241 ஆத்மா இருக்கிறது, ஆரம்ப காலத்திலிருந்து, அது அடிமைத்தனத்தில் உள்ளது. மனம், பேச்சு மற்றும் உடலின் செயல்பாடுகள் காரணமாக, கர்ம விஷயத்தின் வருகை சுப மற்றும் அசுப உபயோகத்தால் பிணைப்பு ஏற்படுகிறது. கோபம் போன்ற தீயஉணர்வுகள் ஊற்று காரணமாக ஏற்படுகிறது. கோபம் போன்ற உணர்வுகள் அலட்சியம் (பிரமாதம்) காரணமாக ஏற்படுகின்றன. அந்த கவனக்குறைவு விரதமின்மையால் (அவிரதம்) ஏற்படுகிறது, இதுவே தவறான பொய்நம்பிக்கை, மித்யாத்வத்தை விளைவிப்பனவாகும். அதே ஆத்மா கர்ம அடிமைத்தனத்திலிருக்கும் போது ஒரு குறிப்பிட்ட பிறவியில் மற்றும் ஒரு சாதகமான நேரத்தை (காலலப்தி) அடையும்போது இவற்றைக் கவனிக்கிறது. சரியான நம்பிக்கை என்னும் நற்காட்சி, விரதம் , கவனக்குறைவின்மை, தீயஉணர்வுகளை அழித்தல் (கஷாயம்), மற்றும் மூவகைச் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துதல் (யோகம்) இவை தொடர்ச்சியாக நிகழ்ந்து இறுதியாக விடுதலை பெறுகிறது.

இந்தப்பாடலில் ஆன்மாவின் இருப்பு, அது எவற்றினால், எவ்வாறு பந்திக்கப்பட்டு பொய்காட்சியினால் பிறவியில் உழன்று, சரியான காலம் வாய்க்கும் போது அவற்றில் கவனம் ஏற்பட்டு நற்காட்சி தோன்றி விரதம் முதலிய உறுதியுடன் ஏற்று தீயஉணர்வுகளிலிருந்து விலகி, தன்மீது படிந்துள்ள மாசுக்களை நீக்கி விடுதலைப்பேற்றை அடைகிறது என்ற சமண சித்தாந்தத்தை சுருக்கமாக அளிக்கிறார் ஆச்சார்ய பெருமான்.

-----------------

ஏன் இப்பாடலில் ரத்தினச் சுருக்கமாக விடுதலை மார்க்கத்தில் அளிக்கிறார் என்றால் அவர் வாழ்ந்த காலத்தில் பலதரிசனங்கள் இருந்தன. அவை மக்களை தவறான திசைகளில் அழைத்துச் சென்று துன்பங்களுக்கு ஆளாக்கி வந்தன. தீக்காட்சிகள் அதாவது மித்யாத்வம் ஏறக்குறைய 363 வகை உள்ளதாக சமணம் கூறுகிறது. அவற்றில் பிரதானமாக சில முற்றிலும் வேறுபட்ட கருத்துக்களை மக்கள் மனதில் புகுத்தி துன்பக்கடலில் அழ்த்தி, சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியிருந்தன. முதலில் அவற்றிலிருந்து விடுவித்து சமூகத்தில் சமநிலை ஏற்பட அனைத்து ஜிவராசிகளை காத்து இயற்கையில் சமநிலை உருவாக்கிட சமணம் வெகுபாடு பட்டுள்ளது.

அனைத்து ஜீவராசிகளும் சமம் என்ற உணர்வை பரிணாம வளர்ச்சியில் மேலாக விளங்கும் மனித இனத்தில் வளரும் போது உலகில் துன்பமும், இன்பமும் சமநிலைக்கு வரப்பெறும். அதனால் எது இன்பம் எது துன்பம் என்ற உணர்வு வித்தியாசம் எவருக்கும் ஏற்பட வாய்ப்பில்லை. இதுவே இந்த உலகத்தின் துன்பத்திற்கான விடுதலை. அதுவே வளர்ச்சி யடையும் போது மறுபிறவியை ஏற்றுக் கொண்டவர்களுக்கு பிறவிச்சுழற்சியிலிருந்தும் விடுதலை என்ற கருத்தை முதன்மையாக வைத்து உருவானது தான் பகவான் மஹாவீரர் என்னும் மாமனிதரின் லட்சியம்.

அந்த மேலான நோக்கத்தை மக்களும் தங்களது சொந்த லட்சியங்கள் எவை யிருந்தாலும் அவற்றிற்கு மேலாக மானுடத்தின் லட்சியமாக ஏற்று, அவர் காட்சிய வழியில் நடந்திட வலியுறுத்தப்பட்டது. அதற்கான பேரியக்கமே இந்த சமண சமயம் என்று பின்னாளில் அடையாளமிடப்பட்டது.

அக்காலத்தில் ஆன்மா என்று ஒன்றில்லை என்றும் இருக்கிறது அதற்கு கர்மா என்பதில்லை. ஏதோ இயற்கையில் ஒரு ஜீவன் உருவாகிறது அனுபவிக்கிறது மடிகிறது போன்ற கருத்தின் அடிப்படையில் பல கொள்கைகள் எங்கும் பரவியிருந்தன.

அதில் சார்வாக க்கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள். ஆன்மாவே இல்லை என்றனர். பொருள் என்று ஒன்று இருந்தால் அதைப் பார்க்க வேண்டும் இல்லையா? கருவில் தோன்றிய நாள்வரை இன்றுவரை ஒருவரும் காணவில்லை என்றனர்.

அதற்கு விடையாக: ஆன்மா இல்லையெனில் முற்பிறவி பற்றி வியந்திரதேவர்கள் (பூதம் போன்றவை) பலரும் எவ்வாறு பேசுமுடியும். முற்பிறவி மற்றும் கடந்தகாலம் பற்றி பேசுகிறோம், நினைவுகளைக் கூறுகிறோம். அவையனைத்தும் ஏதோ ஓரிடத்தில் பதிவாகியிருந்தால் தானே அதனை உணர்ந்து, படித்து கூற இயலும். சிலரது வாழ்க்கையில் நல்வினைப் பயனால் சுகம் கூடுதலாகவும், சிலருக்கு தீவினையினால் துன்பம் மேலோங்கியும் தோன்றுவதால் இவற்றை அனுபவிப்பது யார் உடலா, மனமா, ஆத்மாவா என்பதை ஆராய்ச்சி ஏற்படுகிறது. நான், எனது என்ற ஆகங்காரம், மமகார குணம் யாருக்கு வரும் என்று ஆராயும் போது ஆன்மா என்ற ஒரு இருப்பு (சத்தாவாக) உள்ளே இருக்கிறது என்பது புலப்படும்.

சாங்கிய பிரிவினர்: ஆன்மா எப்போதுமே விடுதலை நிலையில் தான் உள்ளது. அதாவது தூய்மையான நிலையில் தான் உள்ளது என்றனர்.

அதற்கு விடையாக வழங்கியது யாதெனின்: ஆன்மா தூய்மையானது எனின் பிறவிச் சுழற்சி எவ்வாறு ஏற்படுகிறது. மனிதர்களில் உயர்ந்தவர், தாழ்ந்தவர், துன்பத்தில் உழல்பவர், சுகத்தில் திளைப்பவர் போன்ற வேறுபாடுகளுக்கு காரணம் என்ன? அதனை விலக்கும் தபம், ஒழுக்கம் போன்றவை ஏன் வந்துள்ளன? அதனால் ஆன்மா பிறவி நிலையில் மாசுபட்டே உள்ளது. அதனை தூய்மை செய்ய நற்காட்சி போன்ற உபாயங்கள் தேவைப்படுகிறது. அவைவே அசுத்தத்தன்மையை அகற்றி தூய்மை அடையச் செய்கிறது போன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

--------

இதுபோன்று பல வினாக்களுக்கும் விடைகளை நம் சமண தரிசனம் அந்தந்த காலக்கட்டத்தில் தெரிவித்து வந்ததினால் தான் இன்றுவரை வாழும்கலையாக நிலைத்து நிற்கிறது. இல்லையெனின் கடந்தகாலத்தில் தோன்றிய அறிவில் தெளிவற்றவர்களின் தர்க்கவாதில் உருவாக்கப்படும் கொள்கைப் புயலில் என்றோ அடித்துச் சென்றிருக்கும். இன்றுவரை பகவான் மஹாவீரர் அளித்த விடுதலைப்பேறடைதல் என்னும் மானுட லட்சியம் நிலைத்து நிற்பதற்கு அடையாளம் நம் சமண கருத்துக்கள் அடங்கிய சித்தாந்தம், தத்துவம் மற்றும் தர்க்க நூல்களாகும்.

மேலும் பல வாதங்களுக்கு பதிலளித்த வரலாற்றை நீலகேசி என்ற நூலில் விரிவாக காணலாம். அந்த நூல் தோன்றியபோது எந்தெந்த தரிசனம் மேலான நிலையில் இருந்தது, அவற்றின் கருத்துகளுக்கு முனிவர் பெருமான் எவ்வாறு சரியான பதிலாக விடையளித்துள்ளார் என்பதைக் கண்டு உணரலாம்.

அதன் பின்னர் தோன்றிய மதங்கள் நம் கொள்கையை ஏற்றுக் கொள்ள மறுத்ததோடு மட்டுமல்லாமல் இந்த சமணத்தை வளரவிட்டால் நாம் உருவாக்கிய மதம் அழிந்து விடும் என்றளவில் அரசினரை தன்வயப்படுத்தி நம் இனத்தவரை அழித்துள்ளனர் என்பதையும் இன்றைய வரலாற்று ஆய்வில் படித்துணரலாம்.

அக்காலத்திய முடியாட்சியாளர்களின் சர்வாதிகாரத்தினால் தான் நம் மதம் அருகி விட்டது என்பதே நிதர்சனம். ஆனால் இதுபோன்ற ஜனநாயக நாட்டில் மேலும் சுருங்கிவிடாமல் பாதுகாப்பது நம் தலைமுறையினரின் கடமை. அதற்கான வழிகளில் பலரும் ஈடுபட முன்வருவதென்பது நம்மவர்களிடம் நீடிக்கும் ஒற்றுமையின்னை குலைந்தால் தான் சாத்தியப்படும். இதனை வருத்தத்துடன் இன்றைய சூழலை ஆராயும் போது தெரிவிக்க வேண்டியுள்ளது. இந்நிலை மாறாவிடில் நம்முள் இருக்கும் பாகுபாட்டை நீக்கி சரிசெய்வதிலேயே இத்தலைமுறையினரின் விலைமதிப்புள்ள நேரம் வீணக்கப்பட்டு விடும். பல அறிஞர் பெருமக்களும் அமைதியாய் தன் ஆன்ம முன்னேற்றத்திற்காகவே நமது பழைய பொக்கிஷங்களை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களால் வளர்ச்சிப்பணிகளில் ஈடுபடுவதில் விரக்தியே தோன்றியுள்ளது என்பதையும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

சமணத்தின் முழு வளர்ச்சிக்கான நேரம் எப்போது கிடைக்கும் என்பதே இப்போதைய மோசமான சூழல். (விளக்கத்தை விட்டு வேறு எங்கோ சென்று விட்டேன். மன்னிக்கவும்… இல்லாவிடில் இந்த வரிகளை அளித்த நான் எந்தக் கட்சியைச் சேர்ந்தவன் என்ற ஆராய்ச்சி பலரின் மண்டைக்குள் ஓடத்துவங்கிவிடும்.)





ममेदमहमस्येति प्रीतिरीतिरिवोत्थिता ।
क्षेत्रो क्षेत्रीयते यावत्तावत्काSशा तपःपफले ।।242।।

மமேத மஹமஸ்யேதி ப்ரீதி ரீதி ரிவோத்திதா | 

க்ஷேத்ரே க்ஷேத்ரீயதே யாவதாலத் காசா தப:பலே ||242||

Infatuation for the body – ‘the body is mine and I am its’ – is like the calamity (īti) that inflicts the harvest. So long as such infatuation for the body persists in the soul, what hope is there for its liberation (moksa), the fruit of austerities (tapa)?
உடலுக்கான மோகம் -'உடல் என்னுடையது, நான் அதனது' – என்பது அறுவடையை நாசம் செய்யும் பேரழிவு போன்றது. உடல்மீதுள்ள இத்தகைய மோகம் ஆத்மாவில் நீடிக்கும் வரை, தவத்தின் பலனால் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை எவ்வாறு கிடைக்கும்?

உடல் என்னிடம் உள்ளது. நானே இதன் தலைவன். எனவே இது எனது என்ற பற்றுவடிவ தடை எதுவரை உள்ளதோ அதுவரை முக்திக்கான விருப்பம் இராது. மழைபெய்யாதிருத்தல், அதிகமழை, எலி, கிளி, வெட்டுக்கிளி, உள்நாட்டு சேனையின் பாடிவீடு, வெளிநாட்டு சேனையின் பாடிவீடு போன்றவை இருக்கும் வரை விவசாயிக்கு உணவு தான்யத்தை உற்பத்தி செய்வதில் ஆர்வம் இருப்பதில்லை. அதேபோல ஜீவனுக்கு உடல்மீதுள்ள பற்று இருக்கும் வரை முக்தியின் மீது விருப்பம் தோன்றாது.





मामन्यमन्यं मां मत्वा भ्रान्तो भ्रान्तौ भवार्णवे । 
नान्योSहमहमेवाहमन्यो{न्योSहमस्ति न ।।243।।

மாமன்யமன்யம் மாம் மத்வா ப்ரார்தோ ப்ராந்தி பவார்ணவே |

 நான்யோ அஹமஹமேவா ஹமன்யோ அன்யோ அஹம அஸ்மி ந: ||243||
Mistaking the self (the soul) for the body (the others) and the body (the others) for the self (the soul), this soul has been wandering in the world. ‘Certainly, I am not others, I am not the body, etc.; I am only I. And, the others (the body) are others only; others are not I.’ When this true discernment dawns on the soul, it gets rid of wandering in the world.
உடலுக்காக ஆன்மா மற்றும் சுயத்திற்காக (ஆன்மா) உடல் எனத்தவறாகப் புரிந்துகொண்டு, இந்த ஆன்மா உலகில் அலைந்து கொண்டிருக்கிறது. ‘நிச்சயமாக, நான் பிறபொருள் அல்ல, நான் உடல் அல்ல, போன்றவை ஆன்மா மட்டும் நான். பிறபொருட்கள் (உடல்) மற்றவை மட்டுமே; மற்றவை நான் இல்லை. 'இந்த உண்மையான விவேகம் ஆத்மாவுக்கு வரும்போது, அது உலகில் அலைந்து சுழன்று வருவதிலிருந்து தன்னை விடுவிக்கிறது.

அந்த காலத்தில் வைதீகம் என்ற ஆறுதரிசனங்கள் - 1.சாங்கியம் 2.யோகம் 3.நியாயம் 4.வைசேடிகம் 5.மீமாம்சம் 6.வேதாந்தம் - மக்களை அவரவர் கொள்கைகளுக்கேற்ப குழப்பி வந்தன. ஆன்மா, வினையுடல், மனம், உடல் இவ்வாறாக பிரித்துணராமல் கலவையாக மறுபிறப்பை ஏற்றுக்கொண்டும்/ஏற்றுக் கொள்ளாமலும் தங்களது தத்துவங்களை வழங்கி வந்தன. பிற்காலத்தில் இவற்றுள்ளும் உட்பிரிவுகளும் பெருமளவில் தோன்றலாயின.

அதனால் அந்தந்த காலத்தில் வாழ்ந்த நம் ஆச்சார்யர்கள் முனிவர்கள் இவைபோன்ற மித்யாத்வ தரிசனங்களுக்கு பதிலுரைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களிடம் பாடம் கற்கவந்த சீடர்கள் கேட்கும் தர்க்க வினாவிற்கு சரியான பதிலளிக்க வேண்டியிருந்தது.

அதுபோன்ற சுழலிருந்ததால் இந்நூலிலும் சில பாடல்கள் ஒன்று போல தோன்றும் ஆனாலும் சிறிய நுட்பமான வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். அவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டுமாயின் அத்தரிசனங்களின் சித்தாங்களை படித்துணர்வது அவசியாமகிறது. ஆனால் அவற்றில் சில தற்போது வழக்கில் இல்லை. அந்த விஷயமும் ஆறு தரிசனங்கள், கிளைகளுக்கு மாறாக கொள்கைகளை நிலைநிறுத்திய அவைதீக தரிசனங்களான சமணம், பெளத்தம், ஆசீவகம் போன்ற வற்றின் தர்க்க நூல்களின், வினாவிடை பாடல்கள் வாயிலாகத்தான் தற்போது தெரிய வருகிறது.

அதனால் இந்த நூலிலும் சில பாடல்கள் வாயிலாக ஒரு சில மித்யாத்வ சிந்தனைக்கு பதிலுரைத்துள்ளார். அதாவது ஆன்மாவும் புத்கலமும் ஒன்றே என்ற அடிப்படையில் ஆன்மா+வினையுடல், ஆன்மா+மனம்+உடல் என்ற வகைப்பாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டும், விலக்கப்பட்டதுமான கொள்கைகளுக்கு பதிலளித்துள்ளார் முனிவர் பெருமான்.

அதாவது ஆன்மா தன்னை உடலாக நினைத்து உபயோகத்தில் ஈடுபட்டது என்பதும், உடலுக்காக ஆத்மா என்றும், அக்கொள்கையை மறுத்து அவ்வாறில்லை ஆன்மா என்ற திரவியம் மெய்ப்பொருள் வேறு, புத்கலத்தினால் உருவான வினை, தைஜசம், மனம், ஸ்தூலம் போன்ற புத்கலச்சேர்க்கையில் உருவான உடல்கள் அனைத்தும் வேறு என்று தெளிவாக்குகிறார்.

அவ்வாறு ஆன்மா எந்நிலையிலும் தனித்துவமானது என்று சர்வக்ஞன் தெரிவித்த பேருண்மையில் நம்பிக்கை வைப்பதே நற்காட்சி யாகும். அந்த நற்காட்சியின் வழியில் ஞானமும், செயல்பாடும் அமைந்தாலே முக்தி கிட்டும் என்று உரைக்கிறார்.





बन्धे जन्मनि येन येन निबिडं निष्पादितो वस्तुना 
बाह्यार्थैकरतेः पुरा परिणतप्रज्ञात्मनः साम्प्रतम् । 
तत्तत्तन्निध्नाय साध्नमभूद्वैराग्यकाष्ठास्पृशो 
दुर्बोध्ं हि तदन्यदेव विदुषामप्राकृतं कौशलम् ।।244।।

பந்தோ ஜன்மனி யேன யேன நிபடம் நிஷ்டாதிதோ வஸ்துனா, 

பாஹ்யார்தை சுரதே புரா பரிணத ப்ரஞாத்மனக் ஸாம்ப்ரதம் | 
ததத் தன்னிதனாய ஸாதனமபூத் வைராக்ய காஷ்டாஸ் ப்ருசோ, 
துர்பாதம் ஹி ததந்யதேவ விதுஷா மப்ராக்ருதம் கோசலம்: ||244||
The objects of the world for which the man had earlier entertained deep infatuation and caused severe bondage, later on, when he acquires true knowledge and thereby gets absolutely detached to these, the same objects cause destruction of the above-mentioned bondage. This divine deftness of wise men is unparalleled and extremely difficult to fathom.
மனிதன் முன்னர் ஆழ்ந்த மயக்கத்தை அனுபவித்த மற்றும் கடுமையான அடிமைத்தனத்தை ஏற்படுத்திய உலகின் பொருள்கள், பின்னர், அவர் உண்மையான அறிவைப் பெற்று, அதன் மூலம் முற்றிலும் பிரிக்கப்பட்டிருக்கும் போது, அதே பொருள்கள் மேலே குறிப்பிட்ட அடிமைத்தனத்தை அழிக்க காரணமாகின்றன. ஞானிகளின் இந்த வைராக்கியம் கடினமானது மற்றும் புரிந்துகொள்வது மிகவும் கடினம்.

இந்த பிறவி உலகில் புறப்பொருட்களைக் கையாள்வது அவசியமாகிறது. அதன் உபயோகம் மோகத்தின் அடிப்படையில் நிகழும்போது வினைக்கட்டிற்கு காரணமாகிறது. அதே சமயம் எந்த அளவு வைராக்யம் ஏற்படுகிறதோ அது கர்ம பந்தத்திற்கு அழிவு ஏற்படுகிறது என்பதாக தெரிவிக்கிறார் ஆச்சார்ய பெருமான்.

இவ்வுலகில் வாழும் போது பொருட்பற்று நிகழ்வது எதனால் எனின் மோகஉணர்வுக்கு ஆட்படுவதால் தான். எப்போது அவ்வுணர்விற்கு அடிமையாகிறானோ அதே பொருட்களின் மூலம் கர்ம பந்தத்திற்கு ஆட்படுகிறான். அப்பொருளை தக்க வைத்துக்கொள்வதிலேயே கவனம் செலுத்துகிறான். தனதென்று அதனை தன்வயப்படுத்துவதில் காலம் கழிக்கிறான். அதனால் மேலும் மேலும் கர்மபந்தம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் பல பிறவிச் சுழற்சிக்கு ஆளாகிறான்.

மாறாக அதே பொருட்களை விருப்பு, வெறுப்பின்றி கையாளும் போது மோக உணர்வின்றி உபயோகப்படுத்துகிறான். அதனால் தனது என்ற எண்ணம் தோன்றுவதில்லை. எப்போது அந்த வீதராக, வைராக்கிய பாவம் கொண்டு அணுகத்துவங்குகிறானோ அப்போது அதே பொருளை உபயோகித்தாலும் கர்மகட்டு நிகழ்வதில்லை. அதன் சேகரிப்பில் தன்னை ஆட்படுத்துவதில்லை. அந்த விருப்பு வெறுப்பற்ற உணர்வே பல பிறவிகளுக்கு காரணமாகமின்றி அமைகிறது. அதாவது முக்திக்கு காரணமாகிறது.

அதனால் பொருட்களின் உபயோகம் அவசியமே. அதே பொருளை கையாளும் போது பற்றுவைக்கக்க காரணமான மோக உணர்வை விலக்கி அணுகும் போது வினைக்கட்டு நிகழ்வதில்லை என்பதாக இப்பாடலில் தெரிவிக்கிறார். அதனால் உபயோகத்தில் விருப்பு வெறுப்பில்லா உணர்வை கடைபிடிக்க முயலவேண்டும். அப்போதுதான் பரிக்கிரஹம் இன்றி மகிழ்ச்சியுடன் வாழமுடியும்.





अध्किः क्वचिदाशलेषः क्वचिध्दिनः क्वचित्समः । 
क्वचिद्विशलेष एवायं बन्ध्मोक्षक्रमो मतः ।।245।।

அதிக: க்வசிதாஸ்லேஷ: க்வசித்தின: க்வாசித்ஸம்: | 

க்வாசித் விச்லேஷ ஏவாயம் பந்த மோக்ஷக்ரமோ மத: ||245||
Combination (of Karmas is varying in quantity), sometimes increasing, sometimes decreasing, sometimes becoming equal, and sometimes there is separation only. Thus should be known the succession of bondage and liberation.
வினைச்சேர்க்கை (கர்மங்களின் அளவு மாறுபடுகிறது), சில நேரங்களில் அதிகரிக்கும், சில நேரங்களில் குறைகிறது, சில நேரங்களில் சமமாகிறது, சில சமயங்களில் நிர்ஜரை மட்டுமே இருக்கும். இவ்வாறு பந்தம் மற்றும் விலக்கலின் தொடர்ச்சியாக அறியப்பட வேண்டும்.

வினைக்கட்டு மற்றும் வினையுதிர்ப்பு என்ன நியதியில் ஏற்படுகிறது என்பதற்கான நிகழ்வுமுறையை தெரிவிக்கிறார் முனிவர்.

ஒரு ஜீவனது வாழ்நாளில் சிலவேளையில் கர்ம பந்தம் கூடுதலாகவும், கர்ம உதிர்ப்பு குறையாகவும் நடைபெறுகிறது. அதற்குக்காரணம் மித்யாத்வம் போன்ற சிந்தனை, தீயஉணர்வுகளாகும். சிலகாலம் உதிர்ப்பு கூடுதலாகவும், பந்தம் என்னும் கட்டு குறைவாகவும் ஏற்பட்டுகிறது. அதற்குக் காரணம் சம்யக்த்வ சிந்தனை அதனால் நடைபெறும் யோக முறைகளாகும். சில சமயங்களில் இரண்டும் சமமாகவும் ஏற்படுவதுண்டு. அதுபோல நாம் ஏற்றுக் கொள்ளும் அறநெறிமுறை, சீலாச்சாரம், வாழ்வுமுறை போன்றவையே அவ்வாறான நியதியை வகுக்கிறது.

-----------------

மித்யாத்வம்: மித்யாத்வ தர்ஸன மோஹனீய வினை உதயத்தால் ஆன்மாவில் மந்த நிலை.

ஸாஸாதனம்: நான்காவது குணஸ்தானத்தில் உள்ள ஒரு ஜீவன் தீவிர கஷாயங்களில் ஒன்று உதயத்திற்கு வருவதால் ஆன்மா பழைய நிலையான மித்யாத்வ நிலைக்கு வந்து விடும். அந்த கீழிறக்கம் தான் ஸாஸாதனமாகும்.

மிஸ்ரம்: ஆன்மாவுக்கு ஏற்பட்ட ஸம்யக்த்வம் மாசுபடுவதால் உதயத்திற்கு வருகிறது. ஸம்யக் மித்யத்வம் அதாவது சம்யக்வதும், மித்யாத்வமும் கலந்த கலவை மிஸ்ரம் ஆகும்.

அவிரத ஸம்யக்தவம் - இந்நிலையில் மோக்ஷமார்க்கத்தின் மீது நம்பிக்கை இருக்கும், ஆனால் நல்லொழுக்க விரதங்களை கடைபிடிக்காது.

இவை போன்ற காரணங்களால் பந்தமும், வினையுதிர்ப்பும் ஏறியும், இறங்கியும் ஒவ்வொரு ஜீவனுக்குள் நிகழ்கிறது.

------

முதல் மூன்று குணஸ்தானங்களில் மித்யாத்வம் போன்ற (த.சூ.) காரணங்களால் கர்மங்கள் பந்தமாகின்றன.

நான்காம் குணஸ்தானத்தில் பந்தம் மற்றும் உதிர்ப்பு சமமாக இருக்கும்.

5, 6 குணஸ்தானத்தில் மித்யா தர்சனம், அவிரதம் இன்றி மீதியுள்ளவைகளால் பந்தம் குறைந்தும் வினையுதிர்ப்பு அதிகமாகவும் இருக்கும்.

7,8,9,10 இவற்றில் மித்யா தரிசனம், அவிரதம், பிரமாதம் நீங்கலாக மீதியுள்ளவைகளால் பந்தம் ஏற்பட்டாலும் உதிர்ப்பு என்னும் நிர்ஜரை கூடுதலாக இருக்கும்.

11,12,13 குணஸ்தானங்களில் யோகம் மட்டுமே பந்தத்திற்கான காரணமாகிறது. அதனால் பந்தம் மிகவும் குறைந்தும், நிர்ஜரை மட்டுமே இருக்கும்.

பதினான்காவது குணஸ்தானத்தில் மேற்கூறிய எவையுமே காரணங்களாக இருக்காது.

-------------------

இந்த கர்ம பந்தம் மற்றும் வினை உதிர்ப்பிற்கான நியதிகளை தத்வார்த்த சூத்திரம் மற்றும் கோமடசாரம் போன்ற நூல்களில் சற்று விரிவாகக் காணலாம்.





यस्य पुण्यं च पापं च निष्पफलं गलति स्वयम् । 
स योगी तस्य निर्वाणं न तस्य पुनराड्डवः ।।246।।

யஸ்ய புண்யம் ச பாபம் ச நிஷ்பலம் கலதிஸ்வயம் | 

ஸ யோகி தஸ்ய நிர்வாணம் ந தஸ்ய புணராஸ்ரவ: ||246||
The one whose merit (punya) and demerit (pāpa), both, get dissociated without bearing fruit is called a ‘yogī’, the supreme ascetic. He is liberated from karmas and for him there is no future influx (of karmas).
எவரொருவர் புண்யம் மற்றும் பாபம் இரண்டுமே பலனைதருவதற்குள் விலகிக் கொண்டிருப்பாரோ அவர் ‘யோகி’ என்று அழைக்கப்படுகிறார். அவர் கர்மங்களிலிருந்து விடுவிக்கப்பட்டார், அவருக்கு எதிர்காலத்தில் (கர்மங்களின்) ஊற்று இல்லை.

எவரொருவர் புண்யஊற்றும், பாவ ஊற்றும் தோன்றாத வாழ்க்கையை கடத்துகிறாரோ அவரே யோகி என்கிறார் முனிவர் பெருமான்.

அதாவது ஒரு ஜீவன் விருப்பு வெறுப்பு அற்று பழைய கருமங்களைத் தவம் முதலான முயற்சியினால் உரியகாலத்திற்கு முன்பே கழிக்கிறாரோ, அவிபாக நிர்ஜரையை அடைகிறாரோ அந்த ஜீவனை யோகி என்று கூறுவர். இரண்டுமே இல்லாதபோது நிர்வாணமே.

யோகிகள் குப்தி என்னும் விரதத்தைக் கைக்கொண்டவர்கள். நல்வழியில் மனவடக்கம், மொழி அடக்கம், செயலடக்கம் செய்வது குப்தியாகும்.

அதாவது மனம் வழி தோன்றும் எண்ணங்கள் , வாய்வழி பேசும் மொழிகள், உடல் வழி செய்யப்படும் செயல்கள் ஆகிய வற்றினை அடக்கி விழிப்புடன் செயல்படும் போது தீய எண்ணங்கள், பேச்சுக்கள், செயல்கள் நன்கு தடை படுகின்றன.

எவை எவை தடுக்கப்படுகின்றனவோ அவற்றால் வினை ஊற்று ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. முழுவதுமாய் தடுக்கப்பட்டால் வினைஊற்றுக்கே வழியின்றி போகின்றது. அதுவே யோகியரின்நிலை.

------------------

யோகிகள் வித்தியாசமானவர்கள். அவர்கள் யோகத் தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர்கள். அதற்காக யோகப் பயிற்சிகள் செய்பவரெல்லாம் 'யோகி'கள் கிடையாது. 'இந்த பிரபஞ்சம் முழுவதுமே ஒன்று' என்று தன் அனுபவத்தில் உணர்ந்து தெளிந்தவர் தான் 'யோகி'. இந்த உயிரின் தன்மையை முழுமையாய் அறிந்து, அதைக் கையாளவும் அறிந்தவர் அவர்.

யோகா என்பது உடற்பயிற்சி அல்ல. யோகப் பயிற்சிகள் யோகாவின் ஒரு அம்சம் மட்டும்தான். இந்தப் பயிற்சிகள் யோகநிலையை எட்டுவதற்கு நமக்கு உதவும் ஒரு கருவி. அவ்வளவு தான்.

ஒரு யோகி என்பவர் ஆராய்ச்சி முடிவுகளையோ அல்லது நம்பிக்கைகளையோ ஏற்பதில்லை. அவர் அறிந்துகொள்ள விரும்புபவர். எல்லாவற்றையும் அவரது அனுபவத்தின் மூலமாக அறிந்துகொள்ள விரும்புபவர். அப்படி அவர் அறிந்துகொண்டு விட்டால், அவரை 'யோகி' என்கிறோம்.

இப்போது ஒருவர் அனுபவத்தில் அவரைச் சுற்றியுள்ள மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் ஜடப்பொருட்கள் எல்லாவற்றையும் அவருக்குள் ஒருபாகமாக உணர்ந்தால் அவர்தான் யோகி. அந்நிலையில் இருந்தால் நீதிபோதனைகள் கூடத் தேவைப்படாது. இந்த மனிதரிடம் அன்பாக இருங்கள், அவரைத் துன்புறுத்தாதீர்கள், அவரைக் கொல்லாதீர்கள், அவரிடம் திருடாதீர்கள் என்றெல்லாம் அவருக்கு சொல்லித்தர வேண்டிய அவசியம் இருக்காது. இவை உணர்ந்து, தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

யோகநிலைக்குச் சென்றுவிட்டால் மனசு அதற்கப்புறம் ஓடவிடக் கூடாது. அப்படி ஓடாமல் ஆகிவிட்டதால்தான், அதற்கப்புறம் இப்போது இந்த மனசினால் நமக்கு உண்டாகியிருக்கிற இத்தனை தொந்தரவுகளும் தொலைந்து போகும். அந்த நிலையைப் பெறுவதற்கு ; மனசு எதிலிருந்து உற்பத்தியாயிற்றோ அதனிடம் மீண்டும் சேரவேண்டும். மனசு அதன் மூலத்தில் சேர்ந்துவிட்டால், அங்கே அப்படியே கரைந்து போய்விடும். அப்புறம் ஓடாது. அதுவே சகல தொந்தரவுகளிலிருந்தும் விடுபட்ட நிலை. அதன் மூலம் ஆன்மா தான்.

நதி இருக்கிறது. அதன் மூலம் என்ன? சமுத்திரம். சமுத்திர நீர் தான் ஆவியாகப் போய் வேறொரு இடத்திலிருந்து நதியாக வடிவம் எடுக்கிறது. அந்த ஆறு ஓடாத ஓட்டமில்லை. இப்படி ஓடி ஓடிக் கடைசியில் தன் மூலமான சமுத்திரத்தில் வந்து விழுகிறது. அப்புறம் அதற்குத் தனி வடிவம் உண்டா? ஓட்டம் உண்டா? ஒன்றும் இல்லை. இப்படி நதிகளுக்கெல்லாம் மூலமாக இருந்து, முடிவில் இவற்றைத் தன்னிலேயே சேர்த்துக் கொள்கிற சமுத்திரம் மாதிரி, நம் மனசுகளை எல்லாம் முடிவான சேர்க்கையில், யோகத்தில் தன்னோடு கரைத்துக் கொள்கிற ஒன்று இருக்கிறதா என்றால் இருக்கிறது. அதுவே ஆன்மா ஆகும்.

அதனால்தான் அவர் வெளிப் பிரக்ஞையோடு இருக்கிற மாதிரி நமக்குக் தோன்றுகிற போதுகூட, அதை அடைய வேண்டும், இது அடைய வேண்டும் என்கிற ஆசை எதுவுமே யோகிக்கு இல்லை. ஏதாவது ஒன்று தனக்கு வேண்டுமென்று கொஞ்சம் கொஞ்சம் ஒருத்தருக்குத் தோன்றிவிட்டாலும்கூட அவன் யோகி இல்லை, அவன் ஆத்மாவைச் சேரவில்லை என்றுதான் அர்த்தம்.

-------------------

இவை போன்ற பல இலக்கணங்களை யோகிக்கு கூறலாம். மொத்தத்தில் வினைக்கட்டிலிருந்து ஊற்றுக்கு வராமலே கவனமாக நிர்ஜரை செய்வதில் வல்லவராக திகழ்பவர் யோகி. இது யதேச்சையாக அவரிடம் நிகழும். ஏனென்றால் கஷாயத்தை அவர் கவனிப்பதே இல்லை. அவையே எண்ணம், சொல், செயலில் குளருபடி செய்பவை. அதன் சிறையிலிருந்து மீண்டவரே யோகநிலைக்கு செல்லமுடியும் என்பதாக முனிவர் இப்பாடலின் வழியே நமக்குரைக்கிறார். --------------------------





महातपस्तडागस्य सम्भृतस्य गुणाम्भसा । 
मर्यादापालिबनधेSल्पामप्युपेक्षिष्ट मा क्षतिम् ।।247।।

மஹா தபஸ் தடாகஸ்ய ஸம்ப்ருதஸ்ய குணாம் பஸா | 

மர்யாதா பாலிபந்தே அல்பாமப்யு பேக்ஷிஷ்ட மா க்ஷதிம்: ||247||
O ascetic! Your great austerities (vows of asceticism) are like a reservoir filled with the water of your qualities (like right faith). Do not overlook even the slightest of breach in its embankment, i.e., your vows, etc.
ஓ சந்நியாசி! உனது சீரிய தப நடவடிக்கைகள் நற்குணங்களின் நீரால் நிரப்பப்பட்ட ஒரு நீர்த்தேக்கம் போன்றது (நற்காட்சி போன்றவை). அதன் கரைஓரத்திலுள்ள சிறிதளவு பழுது கூட பெரிய உடைப்பாகும். அதாவது நல்லொழுக்கத்தை கவனமாக கடைபிடியுங்கள்.

நல்லொழுக்கத்தில் சிறிது குற்றம் இருந்தாலும் தவநெறியில் பங்கம் ஏற்பட்டுவிடும் என்று இந்த பாடலில் ஆச்சார்யர் எச்சரிக்கை செய்கிறார்.

-------

சமணத்தில்..

குணம் – ஆன்மனுக்கு நன்மை செய்யக்கூடிய எண்ணம், சொல், செயல் களுக்கான – யோகத்திற்கான- மூல உணர்வுகளை குணம் என்று குறிப்பர்.

குற்றம் – எதிரிடையான யோகம். அதாவது ஆன்மாவிற்கு தீமை தரும் யோகங்கள். ஆன்மாவிற்கான தோஷங்கள் ஆகும்.

நாம் ஆன்மா என்பதில் உறுதி ஏற்பட்டால் தான், நமக்கான குணங்கள், தோஷங்கள் எவை என்பதை அறிந்து செயல்படலாம்.

அறம் சார்ந்த உணர்வுகள் அனைத்துமே ஆன்மனுக்கு நன்மை உண்டாக்க வல்லவை. அதனால் அறத்தை வளர்க்கும் உணர்வே குணமாகும். மற்ற யோகங்கள் – எண்ணம், சொல், செயல்- அறமற்றவை அதாவது தீய உணர்வுகள் அனைத்தும் குற்றமாகிறது.

---------

இந்த குணம் என்ற குளத்தில் நல்லொழுக்கம் என்ற நாற்புற சுவர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். அதன் தடுப்புச் சுவரில் குற்றம் என்ற பழுது ஏற்படின் நீர்ச்சேதம் ஏற்பட்டு விடும், அதாவது அங்கு குணம் தங்கியிருக்க பாதுகாப்பில்லை என்ற உவமைஅணியுடன் தெரிவிக்கிறார் முனிவர்.

அதாவது நல்லொழுக்கம் சம்வரைக்கு உதவுகிறது என குறிப்பிடுகிறார்.





दृढगुप्तिकपाटसंवृतिर्ध्रुतिभित्तिर्मतिपादसम्भृतिः । 
यतिरल्पमपि प्रपद्य रन्ध्रं कुटिलै£वक्रियते गृहाकृतिः ।।248।।

த்யட குப்தி கபாட ஸம்வ்ருத்திர் த்ருதி பிதிர் மதிபாத ஸம்ப்ருதி | யதிரல்பமபி ப்ரபத்ய ரந்கரம் குடிலைர் விக்ரியதே க்ருஹாக்ருதி ||248||
The asceticism is like a house. This house is protected by strong doors in form of ‘gupti’ – curbing of activities of the mind, the speech and the body. Its walls are ‘dhairya’ – firmness. Its foundation is ‘buddhi’ – the knowledge or the intellect. This house of asceticism is damaged by the snakes of attachment (rāga) and aversion (dveÈa) if even a small hole (of wrong-conduct) is left in it.
துறவறம் என்பது ஒரு வீடு போன்றது. இந்த வீடு 'குப்தி' வடிவத்தில் வலுவான கதவுகளால் பாதுகாக்கப்படுகிறது - மனம், பேச்சு மற்றும் உடலின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துதல். அதன் சுவர்கள் அஞ்சாமையால் உறுதியானது. அதன் அஸ்திவாரம் அறிவால் உருவானது. ஒரு சிறிய தெரிப்பு என்ற தவறான நடத்தை அதில் தெரிந்தால் விருப்பு மற்றும் வெறுப்பு எனும் நச்சுப்பாம்பு உள்ளே நுழைந்து தீங்கிழைத்து விடும்.

துறவிகள் தபஒழுக்கத்தில் சிறிதளவு குறையும் நேராமல் பாதுகாக்க வேண்டும் என்று இப்பாடலின் வழியே தெரிவிக்கிறார் முனிவர்.

ஒரு வீடு என்றால் கடைக்கால், சுவர்கள், கதவுகள் போன்ற கட்டமைப்புகள் இன்றியமையாதன. பின்னாளில் அதில் ஒரு சிறு தெரிப்பு ஏற்பட்டாலும் விரிசல் பெரிதாகி பின்னாளில் இடிந்து விடும் அபாயம் உள்ளது, போல;

துறவறநெறியில் அறிவு என்னும் அஸ்திவாரம், தைரியம் என்னும் சுவர்கள் மற்றும் அடக்கம் என்ற கதவுகள் போன்றவை அவசியமாகிறது. அவ்வாறிருந்தாலும் நியமங்களில் ஏதேனும் ஒரு அதிசாரம் என்னும் விரிசல் விழுந்தாலும் விருப்பு வெறுப்பு என்ற நச்சுப்பாம்பு மனதின் உள்ளே நுழைந்து தீங்கிழைத்து பல பிறவிகளுக்கு காரணமாக அமைந்து விடும்.

எனவே தவநெறியைக் கைக்கொள்வதில் உறுதியுடன் சிறிதளவு குறைபாடும் நேராமல் கவனமுடன் கடைபிடிக்க வேண்டும்.





स्वान् दोषान् हन्तुमुद्युक्तस्तपोभिरतिदुधरै: । 
तानेव पोषयत्यज्ञः परदोषकथाशनैः ।।249।।

ஸ்வான் தோஷான் ஹந்து முத்யுக்தஸ்தபோ பிரதிதுர்தரை: | 

தானேவ போஷயத்யஞ: பரதோஷ கதாசனை: ||249||
The ascetic is ever engaged, through severe austerities, in destroying own faults; if, out of ignorance, he engages in scandalizing others, it is like providing nourishment to those very faults.
சாது எப்போதுமே கடுமையான தபநடவடிக்கைகளின் மூலம், தனது குற்றங்களை அழிப்பதில் ஈடுபட்டுள்ளார்; அறியாமையால், அவர் மற்றவர்களை அவதூறு செய்வதில் ஈடுபட்டால், அது தனது விருப்பு வெறுப்பு குற்றங்களுக்கு ஊட்டம் அளிப்பதைப் போன்றது.

அறிவாளர்கள் பிறரை குறைகூறமாட்டார்கள். ஒருவேளை கூறுவார்களேயானால் அது சத்தான உணவினால் உடலை வளர்ப்பது போல தனது விருப்பு வெறுப்புகளான குற்றங்களை உரமிட்டு ஊட்டி வளர்ப்பது போலாகும். இது சாது நிலைக்கு குறை ஏற்படுத்தி விடும்.

-----------------------

ஒரு சந்நியாசியானவர் தப ஒழுக்கத்தை ஏற்பட்ட பின்னர் தமது அறவழி ஒழுக்கத்தில் கவனம் செலுத்துவதோடு, பிறருக்கும் அதனை கற்பித்தலில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும். அதுவே தன் காலத்தில் தானும் உயர்ந்து தான் ஏற்றுக் கொண்டு ஒழுகும் தர்மத்தையும் பிறர் மனதில் ஏற்றி உயர்த்த வேண்டும். அப்போது தான் இந்த மோட்ச மார்க்கம் பல்லுயிரது வாழ்வும் உய்ய வழிவகுக்கும். இந்த சுழற்சி மாறாமல் இருக்கும் எந்த ஒரு தரிசனமும் எக்காலத்திலும் அழிவதில்லை.

இல்லற வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு துறவற ஒழுக்கத்தை ஏற்ற பின்னர் இல்லறத்தை குறைகூறுவதில் அக்கறை கொள்வது சரியான சந்நியாச வாழ்க்கையாவதில்லை. திசைகாட்சிகளாக சரியான பாதையைக் காண்பிக்க வேண்டும். ஏனெனில் அவை தவறான திசையில் பயணிப்பதை சுட்டிக்காட்டுவதில்லை.

இக்காலத்தில் நல்லொழுக்கத்தை கற்பிக்கும் சந்நியாசிகள் மக்களிடம் உள்ள குற்றங்களை நையாண்டி செய்த பின்னர் தான் தர்மோபதேசம் செய்கிறார்கள். தங்களது ஆன்மீக அறிவை வளர்த்திருப்பது தெய்வத்தன்மையை மேலும் கூட்டுவதற்காகவே என்பதை மறந்து தனிமனித மற்றும் அரசின் தவறைச் சுட்டிக்காட்டும் பணிகளையே தங்களது கடமையாகக் கொண்டுள்ளனர். அவர்களே சத்குருவாக மதிக்கப்படுகின்றனர்.

ஏனெனில் மித்யாத்வ தரிசனத்தில் தெய்வங்களாக மதிக்கப்படும் தேவர்கள் கூட தர்மத்தை நிலைநாட்ட அதர்மங்களை அழிப்பதில் தான் தங்களது அவதாரங்களை உலகுக்கு அளித்திருப்பதாக பல புராணக்கதைகளும் தெரிவிக்கின்றன. அதே சமயம் கீதை, பாகவதம் போன்ற தர்மோபதேசத்தை அளித்திருந்தாலும் அவற்றிற்கு முக்யத்வம் அளிக்காமல்; தீயவைகளை அழிக்காமல் தீயோர்களை வதம் (கொலை) செய்யவே அவர்கள் பிறந்ததாக கூறும் பல சந்நியாசிகள் தான் இன்றைய தவசிகளாக காட்சி தருகின்றனர்.

நல்லவை, தீயவை என்பன குணங்களே என்பதை முற்றிலும் உணராத சந்நியாசம் என்ற இலக்கணம் அதிகாரப்பற்றிலிருந்து விலகாத துறவிக்கோலமாகவே தோன்றுகிறது. அவர்களைப் பொருத்த மட்டில் மனிதர்களை நல்லகுணவானாக மாற்ற முயற்சிப்பதை விட தீயகுணமுள்ளவர்களை விஷப்பூச்சிகளைப் போல பாவித்து அழித்தால் எஞ்சியிருக்கும் நல்லோர்களுக்கு தர்மோபதேசம் செய்வது எளிமையான செயலாக கருதும் துறவிகளே பலர் தோன்றியுள்ளனர். அது போன்ற மித்யாத்வ புராணங்களில் இவையே முக்கிய கருத்துகளாக அளித்ததின் பலனே இதுபோன்ற துறவறநெறிக்கு காரணமாக அமைந்து விட்டது.

நல்லோர்களுக்கு மோட்சம் அளித்தும், தீயோர்களை வதம் செய்தும் தலைகீழான செயல்களை ஒன்றாக அதாவது தடுத்தாட்கொண்டதாகவே சமமாக கருதும் தெய்வீகக் கலாச்சாரத்தை பரப்பி விட்டனர். அதனால் நல்லவை, அல்லவை நீங்கி நல்லவர், கெட்டவர் என்ற மனோபாவத்தில் வாழும் சந்நியாச நிலையே இன்றைய துறவறக் கலாச்சாரமாக வலம் வருகிறது. மன்னித்து ஏற்று அவர்களை மாற்ற முயற்சிக்கும் சந்நியாச முறை பெரும்பாலும் வழக்கொழிந்து வருகிறது.

அதேபோன்று, நல்லவை தீயவைகளான கண்ணோட்ட பவனையில் வாழும் சம்யக்த்வ குணஸ்தானத்தில் இல்லாமல் சம்யத்வவாதி, மித்யாத்வவாதி என்ற மனோபாவத்தில் தர்மத்தை வளர்க்கும் நிலை சமணத்திற்கு உகந்ததல்ல என்ற உண்மையை இப்பாடலில் வழியே ஆச்சார்யஸ்ரீ துறவிகளுக்கும், தர்மோபதேசம் செய்பவர்களுக்கும் உணர்த்துகிறார்.





தமிழ் பாடல்दोषः सर्वगुणाकरस्य महतो दैवानुरोधत्क्वचि- 
ज्जातो यद्यपि चन्द्रलाञछनसमस्तं द्रष्टुमन्धेSप्यलम् । 
द्रष्टाप्नोति न तावतास्य पदवीमिन्दोः कलघड्ढं जगद 
विशवं पशयति तत्प्रभाप्रकटितं ¯क कोSप्यगात्तत्पदम् ।।250।।

தோஷ: ஸர்வ குணாகரஸ்ய மஹதோ தைவானு ரோகாத் க்வசி- 

ஜ்ஜாதோ யத்யபி சந்த்ர லாஞ்சன ஸமஸ்தம் த்ருஷ்டு மந்தேர அப்யலம் | த்ருஷ்டாப்னோதி ந தாவதாஸ்ய பதவிமிந்தோ: கலங்கம் ஜகத், 
விச்வம் பச்யதி தத் பரபாப்ர கடிதம் கிம் கோ அப்ய காதத் பதம்: ||250||

Even the blind (the indiscriminate man) is able to see any shortcoming that, like the black spot in the moon, may have unfortunately appeared in the great ascetic. However, this capability of the blind does not get him to the position of the great ascetic. Only because the moon has its own brilliance, the whole world is able to see its black spot. Does the onlooker get to the position of the moon?
ஞானப்பார்வையற்றவர் (துறவறத்தை பற்றி அறியாதவன்) கூட துரதிர்ஷ்டவசமாக தீவிர சந்நியாசத்தில் இருப்பவரிடம் தோன்றியிருக்கக்கூடிய எந்தவொரு குறைபாட்டையும், சந்திரனில் உள்ள கரும்புள்ளியைப் போலவே, காண முடிகிறது. அதேசமயம் அந்தக் ஞானக்குருடர்களின் இந்த திறன் அவரை உயர்ந்த சந்நியாசியினது நிலைக்கு கொண்டு வருவதில்லை. சந்திரனிடமுள்ள அதன் ஓளிவீசும் தன்மையே தன்னிடமுள்ள கரும்புள்ளியை களங்கமாக காண வகை செய்கிறது. ஆனால் அதனைப் பார்ப்பவர் சந்திரனின் நிலைக்கு வருகிறாரா? அவ்வாறான தகுதியில்லை.

மிகவும் அருமையான பாடலை வழங்கியுள்ளார். எவ்வளவு வெண்மையான துணியானாலும் அதிலுள்ள ஒரு கரும்புள்ளி மொத்த தூய்மையையும் மறைத்து காட்டிவிடும். அவ்வாறான துறவற நெறியில் ஏற்படும் களங்கள் எவ்வளவு உயர்ந்த தவநெறியைக் கடைபிடிப்பவர்களையும் நீசனாகவே இவ்வுலகம் கருதிவிடும் எனறு எச்சரிக்கை செய்கிறார் ஆச்சார்யஸ்ரீ.

இது எந்த ஒரு துறையானாலும் மிக உயர்ந்த பதவியை அடைந்தவர்களுக்கும் பொருந்தக் கூடியதே. பெரிய துறவிகளிடம் பிரம்மச்சர்யத்திற்கு பங்கம் வருவது போல களங்கம் ஏற்படும் போது அவர்களிடம் துறவறத்தன்மை மிக உயரிய நிலையில் இருந்தாலும், அதுபோன்றவரை பெரும் குற்றமிழைத்தவனை விட கீழானவராக கருதுவர் இது உலக வழக்கு. அதனால் இல்லறத்தை ஏற்றாலும், துறவற நெறியில் பயணித்தாலும் ஏற்ற கடமையில், விரதத்தில் பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியமானது. அந்தந்த நிலையில் அவரவர் அறத்தில் வழுவது ஒழுகவேண்டும் என்பது அவசியமாகிறது. அது உலகியலில் மட்டும் குற்றமாக கருதப்படுவதில்லை, அக உலகிலும் பெரும்குற்ற உணர்விற்கு ஆளாக்கி பெரும் துன்பத்தில் தள்ளிவிடும்.

எங்கே அநேக குணங்கள் உள்ளனவோ அங்கே குற்ற மறைப்பு ஏற்படுவதில்லை. சந்திரனின் பிரகாசமான ஒளியில் தான் அதன் களங்கம் வெளிப்பட்டு கண்கூடாக தெரிகிறது. அவ்வாறே இல்லறம், துறவறம் இரு ஒழுக்கத்திலும் குற்றம் சிறியதாயினும் பலராலும் பார்க்கப்படுகிறது. மக்கள் அதுபோன்ற சிறு குற்றத்தையே பார்ப்பதோடு நில்லாமல் பேசவும் செய்கின்றனர். நிறை குணமுடையவர்களிடம் இச்சிறு குற்றம் எவ்வாறு உண்டானது? என்பதே பிரபல்யமாகிறது.

அது போன்ற ஊர்ப்பழிச்சொல்லுக்கு ஆளான பல புராணப்பாத்திரங்களை மையமாக வைத்து வரலாற்று கதைகள் எழுதப்பட்டுள்ளன. இழைத்த சிறு குற்றத்திற்காக கோப்பெருஞ்சோழன் தன்னையே தண்டித்துக் கொண்டான், மனுநீதி சோழன் தன் பிள்ளையை தேர்க்காலடியில் இட்டான், மகரிஷி கௌதமரின் தர்மபத்தினி இந்திரனால் கபடமாக வஞ்சிக்கப்பட்ட அகலிகை கல்லாது; பொய்யான களங்கத்திற்காக சீதையும் மீண்டும் காட்டிற்கு அனுப்பிவைத்தான் ஸ்ரீராமன் போன்ற பல வரலாற்று கதைகள் உள்ளன.

உயர்ந்த பதவியில் கிழ்த்தரமான சிறு செயல் சிறப்பு தருவதில்லை. இழைக்காத தவறுக்காக தனது பதவியையே ராஜினாமா செய்த தலைவர்கள் பலரும் உள்ளனர். கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியாத களங்கத்திற்காக பல கொடுமைகளை ஏற்றவர்களும் காப்பியங்களில் உண்டு.

உதாரணக்கதைகள் பல இருப்பினும் ஒன்றை மட்டும் இங்கு காண்போம்…

ஒருமுறை ஆலய உண்டியலிலிருந்து மேலே துருத்திக்கொண்டிருந்த ஒரு ரூபாய் பணத்தை மிகவும் பசியுடன் வந்த ஒருவன் திருடிவிடுகிறான். கடையில் சென்று எழுபத்தைந்து நயாபைசாவிற்கு உணவருந்தி விட்டு மீதமுள்ள இருபத்தைந்து காசை மீண்டும் அதே உண்டியலில் போட முயற்சிக்கும் வேளையில், முன்பே அவனது செய்கையை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த காவல்காரன் கையோடு பிடித்து விடுகிறான்.

அவனை தடியால் அடித்து “ஏன் இவ்வாறு செய்தாய், ஆலய உண்டியலில் திருடுவது பெரும் குற்றமாயிற்றே” என்று கண்டித்த போது; “பெருங்குற்றம் தான் அந்த கொடுமையான பசியுணர்வே என்னை அவ்வாறு செய்யத் தூண்டியது. பசியாறிய பின்னரே செய்த தவற்றை உணர்ந்தேன். பிறிதொரு சமயத்தில் சம்பாதிக்கும் போது இதற்கு ஈடாக பன்மடங்கு இந்த உண்டியலில் திருப்பி காணிக்கையை செலுத்தி விடவேண்டும் என்ற உறுதியை மனதார ஏற்றுக் கொண்டதோடு, தற்போது இந்த மிதித்தொகையை வைத்துக் கொள்வது பெருங்குற்றம் என்றெண்ணி உள்செலுத்த வந்தேன். அப்போதுதான் என்னை பிடித்து விட்டீர்கள்” என்று கண்கலங்க நின்றான்.

இருப்பினும் செய்தது குற்றமே அதனால் நீ ஆயிரம் முறை இந்த ஆலயத்தை வலம் வரவேண்டும் என்று ஆணை யிட்டார் அந்த காவலர். ஆம் அதுவே சரியென ஏற்று ஆலயத்தை வலம் வரத்தொடங்கினான். சில பக்தர்களும் கூடவே சுற்றிக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் சகபக்தர்கள் சுற்றை முடித்து வணங்கிச் சென்று விட்டனர். அப்போது ஒருவர் மட்டும் சுற்று ஐநூறைத்தாண்டிய பின்னரும் அவனுடன் வலம் வந்து கொண்டிப்பதை காவலனும், குற்றவாளியும் கண்டனர். நிறுத்தியபாடில்லை. அவர்களுக்கு ஏன் இந்த ஆள் சேர்ந்து வலம் செய்து வருகிறானே என்ற ஐயப்பாட்டுடன் சுற்று முடிந்தவுடன் அவனும் நின்றதைக் கண்டு கேட்டே விட்டனர்.

அந்த பக்தர் “ஆம் நானும் குற்றவாளிதான். இவனது திருட்டில் பங்கேற்றவன் அதனால் இந்த ஆலயத்தை அவ்வாறு வலம் வந்தேன்” என்றான். இருவருக்குமே மேலும் ஆச்சர்யம் மேலோங்கியது. எப்படி என்றவாறு புருவங்கள் சுளிப்பதைக் கண்டு “ஆம் மீதமிருந்த இருபத்தைந்து காசுகளை மீண்டும் எனக்கே அளித்து எனக்கும் அந்த திருட்டில் பங்களித்து விட்டானே என்று கூறிக்கொண்டே, அங்கு உறைந்திருந்த தெய்வமும், மறைந்ததாக கதை முடிகிறது.

அதாவது ஒரு பக்தனின் பழிச்சொல்லிற்கு தெய்வத்திற்குமே சேர்த்து தண்டனையளிக்கப்படுகிற கலாச்சாரம் நமது கலாச்சாரம் என்பதை தெரிவிக்கவே இக்கதை எழுந்ததுள்ளது. அதனால் அறங்காவலராய் இருந்தாலும் அதனை காப்பதில் குற்றமில்லாமல், களங்கம் ஏற்படாமல் பதவி வகிக்க வேண்டும் என்பதே இந்திய நாட்டினது தரிசனங்களின் அறக்கொள்கையாகும்.

--------------

அதனால் உபவாசம் இருப்பவர்கள் கூட ஒரு கவளம் சோறு எடுத்துக் கொண்டாலும் உபவாசம் கெட்டு விடும். இரவு உண்ணாமை விரதம் ஏற்றவர்கள் பசி பொருக்காமல் மறைவாக ஒருநாள் மட்டும் இருளில் உண்டாலும் களங்கமே என்பதாக; அது போன்ற பல நியமங்களை ஏற்பவர்கள் பழி, பாவத்திற்கு ஆளாகி விடாதீர்கள். அதை விட விரதமேற்காமல் வாழ்வதே மேலானது. அவ்விரதத்தினால் உங்களது கெளரவம், புகழை உயர்த்திக் கொள்ள வேண்டாம் என்பதையும் மறைபொருளாகவே முனிவர் பெருமான் கூறியுள்ளார். அவ்வாறான செயல் விரதம் ஏற்காதவர்களை விட மிகவும் கீழான பிறவி நிலைக்கு தள்ளிவிடும் என்று எச்சரிக்கை செய்துள்ளார் இப்பாடலின் வழியே.





यद्यदाचरितं पूर्वं तत्तदज्ञानचेष्टितम् । 
उत्तरोत्तरविज्ञानाद्योगिनः प्रतिभासते ।।251।।

யத்யதாசரிதம் பூர்வம் தத்தத ஞான சேஷ்டிதம் | 

ஊத்தரோத்தர விஞானாத் யோகினா: ப்ரதிபாஸதே ||251||
As the supreme ascetic – yogī – attains knowledge-based discernment, he reckons that his earlier conduct of censuring others and praising self was an act of ignorance.
உயரிய துறவறநெறி அறிவை அடிப்படையாகக் கொண்ட யோகி விவேகத்தை அடைவதால், முன்னர் அவர் மற்றவர்களை குறை கூறியும், தன்னைப் புகழ்ந்து பேசியும் வந்தது அஞ்ஞான செயல் என்று அவர் கருதுகிறார்.

அறிவிலீகள் தான் பொறாமை காரணமாக பிறரது குற்றங்களை மிகைப்படுத்தியும், தன்னிடம் இல்லாத தகுதிகளை உயர்த்திப் பேசியும் மகிழ்வர். வீண் பெருமைக்காக உரிய காலமற்ற நாட்களில் உபவாசம் இருப்பர்.

பின்னர் நிறைவான அறிவு வளர்ச்சி அடைந்து யோகமரபைத் தழுவியதும் அச்செயல் அறிவீலித்தனமானது என்பதை உணர்வார்கள்.

அதாவது இதுபோன்ற கீழான செயல் அஞ்ஞானிகளிடமே காணப்படும் என்பதாக இப்பாடலில் தெரிவிக்கிறார் முனிவர்.





अपि सुतपसामाशवल्ली शिखा तरुणायते 
भवति हि मनोमूले यावन्ममत्वजलाद्र्रता । 
इति कृतध्यिः कृच्छ्रारम्भैशचरन्ति निरन्तर 
चिरपरिचिते देहेSप्यस्मिन्नतीव गतस्पृहाः ।।252।।

அபி ஸுத பஸாமாசாவப்தீசிகா தருணாயதே, 

பவதி ஹி மனோமூலே யாவந் மமத்வ ஜலார்த்ரதா | 
இதி க்ருதிய: க்ருச்சாரம் பைச்சாந்தி நிரந்தரம் 
சிரபரிசிதே தேஹே அப்யஸ்மிந் நதீவ கதஸ்ப்ருஹா: ||252||
So long as the root of the mind remains moist by the water of infatuation, the creeper of desires of even great ascetics remains green (youthful). The discriminating ascetic, therefore, getting detached from even the body that he is acquainted with for so long, and maintaining equanimity in happiness and misery and in life and death, remains incessantly engaged in meditation, etc., while enduring self-imposed inflictions on the body, viz., inhabiting places hostile to different seasons – a rock atop a mountain, a tree-base, or a river-bank.
மனமென்னும் மயக்க நீரால் வேர் ஈரப்பதமாக இருக்கும் வரை, உயர்ந்த துறவிகளின் ஆசை எனும் கொடி பசுமையாக இருக்கும். இதை நன்கு அறிந்து அனாதி காலமாக உடன் இருக்கும் உடல்மீதுள்ள பற்றை விடுத்து, தியானம் செய்யும் போது, ஈரமற்று கொடி காய்ந்து விடுவதுபோல ஆசையும் அகன்று மறைந்து போகும்.

பற்றறுத்தல் என்பது உடல்மீதுள்ள பற்றை விடுதலே பிரதானம் என்கிறார் முனிவர் பெருமான்.

உடல் மீதுள்ள பற்று யான், எனது என்ற மமத்துவ பாவத்தை வளர்த்துக் கொண்டுதான் இருக்கும். அதனால் ஆசை எனும் கொடி ஈரப்பதத்துடன் துளிர் விட்டுக்கொண்டுதான் இருக்கும். எனவே சந்நியாசிகள் இவ்வளவு காலமாக அவர் அறிந்த உடலிலிருந்தும் பிரிக்கப்பட்டு, மகிழ்ச்சி மற்றும் துன்பம் மற்றும் வாழ்க்கை மற்றும் இறப்பு ஆகியவற்றில் சமநிலையை உள்ளடக்கி தியானம் போன்றவற்றில் இடைவிடாமல் ஈடுபடவேண்டும்.

அவர்கள் கடினமான யோகம் போன்றவற்றால் உறுதியுடன், உடலாசையையும் அடக்கி விடுகின்றனர். ஆண்டின் பருவகாலங்களில் குளிர், கோடை, மழைக்காலம் ஆகிய மூன்றில் குளக்கரை, மலையுச்சி, மரத்தடி என எப்போதும் தவமியற்றுவர்.

அவ்வாறான கடும் தவநெறி ஒழுக்கத்தால் புறப்பொருட்கள் மீதுள்ள பற்று ஒழியும் அப்போது ஈரம்பதம் அற்ற வேரினால் கொடியும் உலர்ந்து போவது போல ஆசைகளும் உலர்ந்து விடும். அதுவே மோட்சத்திற்கு வழிவகுக்கும்.

--------------------

பொதுவாக பெரும்பாலான மதங்கள் …

சந்நியாசம் அல்லது துறவறம் என்பது மனித வாழ்வில் ஒரு அங்கமாக இருந்துள்ளது. பந்த பாசங்களினின்று விடுபட்டு துறவு மேற்கொள்ளுதல். அதன் பின்னர் இடம் விட்டு இடம் சென்று, உடல் சுகத்தைத் துறந்து கடவுளை தியானிப்பதும், தான் அறிந்த உண்மைகளையும் நீதிகளையும் மக்களுக்கு கூறுதலும் ஆகும். சமய வாழ்வில் மக்களை ஈடுபடச் செய்தல். ‘முற்றும் துறந்த நிலையே’ சந்நியாசமாகும். - என்கிறது.

மேலும்… கர்மங்களினால் கிடைக்கும் நல்லுலகங்கள் கூடத் துயரத்தைத் தரும் என்ற பேருண்மையை உணர்ந்தவர்கள், செயல்களைத் துறந்து துறவற தர்மத்தை ஏற்க வேண்டும். துறவி கோவணம் அணிந்து கொண்டு, கையில் கமண்டலம், தண்டு வைத்து கொள்ளலாம். சத்தியமான சொற்களை பேச வேண்டும்.

--------------------------

கேள்வி பதில்…

சன்னியாசி ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஒன்றும் செய்ய வேண்டாம். ஆசைகளைத் துறந்தால் போதும்! மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்று ஆசைகளையும் உதறித் தள்ளினால் போதும்! முடிகிற காரியமா அது? கஷ்டம்தான்!!

அமெரிக்காவில் வீடு வாங்கியவன். அந்தக் கடன் முடியுமுன்பாகவே, சென்னை அடையாறிலும் ஒரு வீட்டை, வங்கி உதவியுடன் வாங்குகிறான். கேட்டால் அமெரிக்க வீடு பிளைகளுக்காம். அடையாறு வீடு வயதான காலத்தில் அவன் வந்து தங்குவதற்காம்.

அத்துடன் கோவை சேலம் நெடுஞ்சாலை வழித்தடத்தில், அவனாசி அருகே பத்து ஏக்கர் நிலத்தையும் வாங்கிப் போடுகிறான். கேட்டால் அது சேமிப்புக் கணக்காம். எதிர்காலத்தில் இட விலை எல்லாம் எகிறும்போது ஒன்றுக்குப் பத்து மடங்காகப் பணம் வருமாம். எப்படி இருக்கிறது? இந்த மாதிரி ஆசாமி எல்லாம் சன்னியாசி ஆகவே முடியாது. யாருக்காகச் சம்பாதிக்கிறான், எதற்காகச் சேர்க்கிறான் என்பது அவனுக்கே தெரியாது.

வயதான காலத்தில் விதி எப்படிப் புரட்டிப் போடும், எந்த மருத்துவமனையில் படுத்திருக்க நேரிடும், ஒருவாய்ச் சோறாவது உண்ண முடியுமா? என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது.

இதுதான் இன்றையப் பணத் தேடலின் நிலைமை. ஆயிரங்களைத் தேடி அலைபவனும் இருக்கிறான். லட்சங்களைத் தேடி அலைபவனும் இருக்கிறான். கோடிகளைத் தேடி அலைபவனும் இருக்கிறான். ஆனால் அலைபவன் எவனும் நிம்மதியாக இல்லை. அது மட்டும் உண்மை!

பாலியல் பலாக்காரம் பற்றிய செய்திகள் தினமும் வருகின்றன. பெண்ணாசையையும் மனிதர்கள் துறப்பதில்லை.

சரி சன்னியாசம் என்றால் என்ன? அதை முதலில் பார்ப்போம்!

renounce என்ற ஆங்கில வார்த்தைக்கு (to give up) கை விடு என்று தமிழில் பொருள் வரும். renouncer என்றால் மேலே சொன்ன எல்லாவற்றையும் விட்டவன் - துறந்தவன் என்ற பொருள்வரும். துறவி என்று வைத்துக்கொள்ளுங்கள். துறவி என்றால், நமக்கு மஹாவீரரும், புத்தரும், ரமண மகரிஷியும் மனதில் வந்து நிற்பார்கள்.

அப்படியே வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டி விடாமல், அவர்கள் வரிசையில் வந்து நிற்போம் என்பவனும் சந்நியாசத்தை ஒருநாள் ஏற்பான். அது இந்தப் பிறவியிலா இல்லை அடுத்தடுத்த பிறவியிலா என்பது… ஆசையை துறக்க முடிவெடுப்பதில் உள்ளது.





क्षीरनीरवदभेदरूपतस्तिष्ठतोरपि च देहदेहिनोः । 
भेद एव यदि भेदवत्स्वलं बाह्यवस्तुषु वदात्रा का कथा ।।253।।

க்ஷீரனீரவ தபேதரூபதஸ்திஷ்டதோரபி ச தேஹ தேஹுனோ: | 

பேத ஏவ யதி பேஸவத்ஸ்வலம் பாஹ்யவஸ்து ஷு வதாத்ர கா கதா: ||253||
When there is absolute distinction between the body and the possessor of the body (the soul) that live together inseparably like the milk and the water, what can be said about the obviously distinct objects, like the wife, the son, the friend, the wealth, etc.?
பால் மற்றும் தண்ணீரை பிரிக்கமுடியாதது போல ஒன்றாக வாழும் உடலுக்கும் உடலின் உரிமையாளருக்கும் (ஆத்மா) முழுமையான வேறுபாடு இருக்கும்போது, மனைவி, மகன், நண்பர், நண்பன், செல்வம் போன்ற வெளிப்படையான தனித்துவமான பொருள்களைப் பற்றி என்ன சொல்ல முடியும்?

உயிருக்கு உடலே சொந்தமில்லை என்றபோது, மனைவி, மக்கள், செல்வம் போன்றவை எவ்வாறு தம்முடன் சேர்ந்ததாக இருக்க முடியும் என்பதாக இப்பாடலில் முனிவர் தெளிவு படுத்துகிறார்.

பால் மற்றும் தண்ணீர் இரண்டும் வேறுவேறானவை. நீர் கலக்கப்படாத கறந்த பாலாய் இருந்தாலும் அதில் நீர் இருக்கவே செய்கிறது. அதனை நாம் பாலாடைக்கட்டியாக பிரிக்கும் போதுதான் தெரிந்து கொள்கிறோம். அதாவது இரண்டும் வெவ்வேறானவை என்பது நெருப்பில் இட்டு காய்ச்சிக்கொண்டே சென்றால் தான் கடைசியில் நீர் ஆவியாகி பிரிவதை பார்த்தபின் அறிய முடிகிறது.

அதுபோல உயிர், உடல் இரண்டும் வெவ்வேறானவை. எப்படி பாலும் நீரும் கறக்கும் போது தோற்றத்தின் இயல்பில் ஒன்றாக தெரிவது போன்றே இரண்டும் ஒன்று போல தோற்றமளிக்கிறது. இதனை பிரிக்கும் வழிமுறைகளை தவநெறி வாழ்க்கையை மேற்கொள்ளும் போது தான் செயல்முறையில் தெரிந்து கொள்ளலாம். அந்த அறவழி வாழ்க்கையே இரண்டும் வேவ்வேறானவை என்பதை உணரவைக்கும். அதற்கான வாழ்க்கைநெறியில் செல்லும் போது பிரிக்கவும் வைக்கும் என்பதில் நம்பிக்கை கொள்வதே நற்காட்சியாகும் என்ற கருத்தை இப்பாடலில் தெளிய வைக்கிறார் முனிவர் பெருமான்.

அப்போது நாம் வேறு, உடல் வேறானது என்ற போது, பிற உடலைத்தாங்கியுள்ள மனைவி, மக்கள், மற்ற ஜீவராசிகளும் வெவ்வேறானவை. உயிரற்ற பொருள்களும் வேறானவையே என்ற பற்றற்ற பாவனை நம் மனதில் தோன்றினால் தான் நற்காட்சி நிலைத்து நிற்கும். அதுவே நிதர்சனம், உண்மை நிலை அதனை அறிந்தால் மோட்சம் கிடைப்பது உறுதி என்பதை இப்பாடலின் வழியே தெரிவிக்கிறார்.

-----------------------

இந்தக் கருத்தை தானே ஆத்மானுசாசனம் முதல் பாடலிலிருந்து தெரிவித்து வருகிறீர்கள். உவமை, உருவகம் வெவ்வாறானவையாக உள்ளது அவ்வளவுதானே முனிவரே என்று கேட்கவேண்டும் போல் தோன்றுகிறது. ஒருமுறை சொன்னால் வழக்கத்திற்கு முரண்பாடாய் தோன்றும் கருத்துகள், பண்புகள் ஏற்புடைமை ஆவதில்லை என்ற உளவியலை நன்கு தெரிந்தவர் இந்த ஆச்சார்யர் குணபத்ரர் என்றுதான் கூறவேண்டும்.

சிறுவயதில் படித்து பட்டமியற்றினால் தான் நல்ல பணியில் அமரலாம் என்று நம் பெற்றோர்கள் கூறிவிட்டு வாளா இருந்திருந்தால் நாம் இந்த நிலைக்கு வந்திருப்போமா! இல்லை நம்பிள்ளைகளுக்கும் அதுபோல் கூறிவிட்டிருந்தால் மட்டும் வளர்ந்து வாழ்க்கையில் முன்னேறி இருப்பார்களா என்பதை சிந்தித்தல் நலம்.

அனுதினமும் படி, படி என்று தடி கொண்டு அடித்தால் தான் இந்தக் காயும் கனிந்து தனக்கும், பிறருக்கும் பலன் கொடுக்கிறது. அன்றைக்கு அவர்கள் கூறியதை நம்பிக்கையோடு ஏற்றுக் கொண்டோமா இல்லை. இன்று உயர்ந்த பின்னர் தான் அன்றைய பெற்றோரின் கருத்திற்கு நம்பிக்கை வந்தடைந்தது.

அதே உளவியல் செயல்முறையில் தான் இந்தப் பாடல்கள் முழுவதும் இயற்றப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல திரவ்யானுயோகம், கரணானுயோக நூற்கள் அனைத்தும் இதே வழிமுறையில் தான் உருவாக்கப்பட்டவை. ஆனால் பரமானுயோக கதைவழியில் கருத்தில் அழுத்தமிருக்காது. ஒரு கருத்திற்கு பல பாடல்களில் நிகழ்வுகளும், வர்ணனைகளும் வீடியோவைப் போல் வடிக்கப்பட்டிருக்கும். அதனால் சினிமா, கதைப்புத்தகம் போன்று நமக்கு படிக்கவும் ஆர்வமாக இருக்கும். ஆனால் கருத்தை பலநாட்கள் வரை தேடிக்கொண்டிருப்போம் என்பது வேறு விஷயம்.

அடுத்து சரணானு யோகத்தில் மிகச்சிறிய தொகுதியான தெய்வத்தின் பக்திமார்க்கம் பகுதி மட்டுமே மிகவும் உகந்ததாக காணப்படும். அதிலும் காசைத்தூக்கியெறிந்து பக்தி செய்து விட்டு பலனை எப்படி பெறுவது என்ற தந்திராவில் மட்டுமே முழுவதுமான நம்பிக்கை வந்துள்ளது இக்காலத்தில்.

அதிலுள்ள குப்தி, சமிதி, அனுப்பிரேட்சை, தசதர்மம், பரிசக ஜெயம் கூட படிப்பதோடு சரி அவை முனிவர்கள் என்ற மனிதர்களுக்கானது என்று allot செய்து தப்பிப்பதில் நாம் கில்லாடிகளே…

வெறும் யந்திர, தந்திர, மந்திர வழியில் மட்டுமே அனைத்தும் கிடைத்து விடும் என்று எந்த ஒரு இந்திய தரிசனமும் நம்பிக்கை யளிக்கவே இல்லை. மாறாக நடைமுறையில் அவ்வாறான பொய்நம்பிக்கை, தீக்காட்சி கலாச்சாரம் புரையோடி விட்டது.

ராணுவ உடை தரித்து விட்டால் ராணுவவீரன் ஆகிவிடமுடியாது. தெய்வங்களை வணங்கிக் கொண்டிருந்தால் மட்டுமே சிறந்த பக்திமான் ஆகிவிட முடியாது.

அத்துடன் இந்த கருத்துப் பெட்டகமான நூல்களையும், தத்துவங்களையும் படித்தபின் அதன்வழியில் கதைகளைப்படித்தால், சரணானு யோக வழிமுறைகளைக் கைக்கொண்டால் மட்டுமே வாழ்வில் நிம்மதி, அமைதி கிட்டும்; பல பிறவிகளில் இந்த நான்கு யோகங்களின் ஒருங்கிணைந்த மார்க்கமே முக்தியை அளிக்கும் என்பதே உண்மை நிலை.

ஏற்றுக் கொள்வதும், ஏற்காமல் கதையிலும், மந்திர உச்சாடத்தில் மட்டுமே சிலமணித்துளிகளை செலவழித்து விட்டு பிற பொருள்சார்ந்த வழியில் இன்பத்தை எப்படித் துய்க்கலாம் என்ற இன்றைய பொய்யர்களின் பிடியில் மாட்டிச் சிக்கி, பிறவிச் சுழற்சியில் சுழன்று கொண்டு இருக்க வேண்டியதுதான் என மறைமுகமாக இந்த ஆச்சார்யர் மட்டுமல்ல சமயசாரம், நியமசாரம், கோமட்ட சாரம் போன்ற நூல்களையாத்த மோட்சமார்க்க உளவியலை நன்கறிந்த ஆன்மீக முனைவர்களான முனிவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு அவ்வழியில் ஞானமார்க்கம்+யோக மார்க்கம் என்ன என்பதை புரிந்த பின்னர் பக்திமார்க்கத்தில் நுழைவதே சிறந்தது என்று தந்திரத்தின் ஆசானான நம் கண்ணபிரானும் மந்திரமாக கீதையில் தெரிவித்துள்ளான் என்பதையும் நோக்குதல் நலம்.





तप्तोSहं देहसंयोगाज्जलं वानलसघसङगमात् । 
इति देहं परित्यज्य शीतीभूताः शिवैषिणः ।।254।।

தப்தோ அஹம் தேஹஸம்யோகாஜ் ஜலம் வா அனலசங்கமாத்| 

இதி தேஹ பரித்யஜ்ய சீதீபூதா: சிவைக்ஷிண: ||254||
Just as water gets heated due to its association with the fire, I have been made miserable due to my association with the body. Thinking in this manner, those who long for liberation attain happiness only after dissociating themselves from the body.
நெருப்புடன் இணைந்திருப்பதால் நீர் வெப்பமடைவது போல, உடலுடனான தொடர்பு காரணமாக ஆன்மா பரிதாபமாகி விட்டது. இந்த முறையில் சிந்தித்துப் பார்த்தால், விடுதலைக்காக ஏங்குகிறவர்கள் உடலின் மீதிருந்த பற்றை விட்ட பின்னரே மகிழ்ச்சியை அடைகிறார்கள். உடல் மீதுள்ள தொடர்பே ஆன்மாவினது ஆனந்த நிலைக்கு தடையாகிறது என்கிறார் முனிவர் பெருமான். அதாவது நீரினது இயல்பு குளிர்ந்த தன்மை. ஆனால் அது நெருப்புடன் தொடர்பு கொள்ளும் போதுதான் சூடாகி வெப்பத்தை ஏற்கவேண்டியுள்ளது. அது போல உயிர் உடலினது தொடர்பிருப்பதனாலே துன்பத்தை அடைகிறது. அது உடல் தொடர்பை அறுத்து சுகத்தை அடையவே விரும்பும் என்பதை அறிய வேண்டும். அதாவது திரவிய இயல்பில் காணும் போது ஆன்மாவின் விசேஷ குணம் காட்சி, ஞானம், ஒழுக்கம், சுகம் ஆகும். அதே போல் புத்கலத்தின் தனித்துவமான இயல்பு நிறம், சுவை, வடிவம், துன்பம் ஆகும். அதனால் புத்கலத்தால் ஆன உடல் எப்போதும் தாறுமாறாக நடந்து துன்பதிற்கே வித்திடுகிறது. இவை இரண்டிற்கும் அனாதிகாலமாக தொடர்பிருப்பதால் ஆன்மா தன்னை புத்தலப்பொருளாக கருதி துன்பத்தையே அனுபவிக்கிறது. அது தன்னை உணர்ந்தால் உடலினது தொடர்பை விடுத்து பேரானந்தத்தில் திளைக்க சித்தக்ஷேத்திரம் சென்றுறையும். அத் தொடர்பு அறுபட நற்காட்சி ஒன்றே துணைபுரியும். தான் உடலல்ல ஆன்மா என்ற தன்னுணர்விற்குள் செல்ல வேண்டும்.





अनादिचयसंवृवो महामोहो हृदि स्थितः । 
सम्यग्योगेन यैर्वान्तस्तेषामूध्र्वं विशुध्ट्व्यति ।।255।।

அனாதிசய ஸம்வ்ருத்வோ மஹாமோஹோ ஹ்ருதி ஸ்தித: |

 ஸம்யக்யோகேன யைர்வாந்தஸ்தேஷா மூர்த்வம் விசுத்தவ்யதி ||255||
The future birth of those great men who, through right meditation, eject from their hearts severe delusion (moha), accumulated and grown since beginningless time, becomes sublime.
சுக்லத் தியானத்தின் மூலம், தங்கள் இதயங்களிலிருந்து அனாதி காலத்திலிருந்தே குவிந்து வளர்ந்த அந்த கடுமையான மோகத்தை வெளியேற்றிய புத்திமான்களின் எதிர்கால பிறப்பு மட்டுமே இல்லாமல் போகிறது.

வினைகளில் மயக்கு வினை என்ற மோகனீய கர்மம் தான் விலக்க கடினமானது. அது ஒழிந்தால் மற்ற வினைகளை அறுப்பது சுலபம் என்றுதான் பல ஞானியரும் தெரிவிக்கின்றனர். மோகம் மென்னும் கடலில் மூழ்கியவன் மீண்டதாக சரிதமில்லை என்று பல கவிஞர்களும் கூறுகிறார்கள்.

மோகத்தை விலக்கி விடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்தி விடு என்று பாரதியாரும் தனது கவிதையில் விரக்தியுடன் தெரிவிக்கிறார்.

அத்தனை ஆசைகளுக்கும் வித்தான அந்த மோகவினை உதிர்ப்பே ஒரு மனிதனுக்கு உடல்மீதுள்ள பற்றினை விலக்க வழிவகுக்கும் என்று முனிவர் பெருமான் கூறுகிறார்.

வயிற்றில் உள்ள அஜீரணக் கோளாரினால் நோய் வளர்ந்து துன்பம் மிகும். மருந்து சேர்ந்தால் நோய் அகன்று விடும். அதுபோல் பொருளின் இயல்பு அல்லாத குணங்களினால் கூடிய வினைகளும் நல்ஞான ஒழுக்கத்தால் அழிந்து விடும் என்றுதான் கூறப்படுகிறது. அதனால் அறம் அறியா நிலையே மோகவலை என்பதை தெரிந்து கொள்ளலாம்.





एकैश्वर्यमिहैकतामभिमतावा¯प्त शरीरच्युतिं 
दुःखं दुःकृतिनिष्कृतिं सुखमलं संसारसौख्योज्झनम् । 
सर्वत्यागमहोत्सवव्यतिकरं प्राणव्ययं पशयतां 
किं तद्यÂ सुखाय तेन सुखिनः सत्यं सदा साध्वः ।।256।।

ஏகைஸ்வர்யமிஹை கதாமபிமதா வாப்திம் சரீரஸ்யுதிம், 

து:கம் துஷ்க்ருதி நிஷ்க்ருதிம் ஸுகமலம் ஸம்ஸார ஸெனக்யோஜ்ஞனம்| ஸர்வத்யாக மஹோத்ஸவ வ்யதிகரம் ப்ராணவ்யயம் பச்யதாம், 
கிம் தத்யந்த ஸுகாய தென ஸுகின: ஸ்த்யம் ஸதா ஸாதவ: ||256||
The ascetics for whom seclusion is as blissful as living in their kingdom; destruction of the body is the attainment of the desired object; sense-pleasures obtained as a result of dissociation of karmas are misery and, therefore, absence of sense-pleasures is extreme happiness; and death is a happy celebration of renunciation – what is there that will not bring them happiness? Rid of attachment (rāga) and aversion (dveÈa), every object, favourable and unfavourable, appears bright to them.
தனிமையில் தங்கியிருக்கும் துறவிகள் தங்கள் ராஜ்யத்தில் மன்னர்களைப் போலவே ஆனந்தமானவர்கள்; உடலின் அழிவு என்பது விரும்பிய பொருளை அடைவது போன்றது. புலன் இன்பங்கள் துன்பம். எனவே புலன் இன்பங்கள் இல்லாதது உண்மைசுகம். மரணம் என்பது துறவறத்தின் மகிழ்ச்சியான கொண்டாட்டமாகும். அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தராதது என்ன? ஒவ்வொரு பொருளின் மீதான விருப்பு மற்றும் வெறுப்பு அற்ற நிலை, சாதகமான மற்றும் சாதகமற்ற சுழ்நிலையின்றி பிரகாசமாகத் தோன்றும்.

மோக உணர்வு இல்லாத நிலையால் முனிவர்களுக்கு உலகப்பொருள்கள் யாவுமே அவரது சுகத்திற்கு துணைக்காரணமாக அமைகின்றன.

உடலின் அழிவை விரும்பிய பொருளை அடைந்து விட்டது போன்று மகிழ்கிறார்கள் முனிவர்கள். தீவினை உதிர்ப்பு மற்ரும் சுபகர்மங்களின் உதயத்தால் கிடைக்கும் அற்ப சுகபோகங்களைத் துன்பமாக கருதுகிறாரோ, பிறாவியினால்ல் கிடைக்கும் சுகத்தை விட்டு விடுவதே உண்மை சுகத்திற்குக் காரணம் என்று எண்ணுகிறாரோ, சமாதி மரணத்தை பெரும்பாக்கியமாக கருதுகிறாரோ, அந்த சாதுவிற்கே எல்லா சுகங்களும் கிடைக்கும்.

அதாவது உலகில் துன்பத்திற்கு காரணமான பரீஷகம் முதலானவற்றை இன்ப காரணமாக அமைத்துக் கொள்கிறாரோ அவருக்கு பிற துன்பத்திற்கான காரணங்கள் என்ன செய்து விடமுடியும்? அதாவது பரீஷக ஜெயம் என்றால் பசி, தாகம் போன்ற இடர்களைப் பொறுத்துக் கொள்கிறாரோ அவர்கள் ஜிநர் அருளிய முக்திப்பாதையில் வழுவாமல் இடர்களைப் பொறுத்துக் கொண்டு வினை வரும் வழியினை தடுத்தும், வினை உதிர்ப்புக்கான வழிகளை நழுவாமல் கடைபிடிக்கின்றர். பின் விடுதலை பெறுகின்றனர்.

----------------------------------

உடலால் வரும் துன்பத்தை பொறுத்துக் கொள்ளுதல்…

பசி; தாகம்; குளிர்; வெப்பம்; பூச்சிக் கடி; ஆடையின்மை; வெறுப்பு; பெண்/ஆண் னிடம் மயக்கம்; நடையில் ஏற்படும் துன்பம் உடல் அசைவற்ற தியானம்; படுக்கையின்மை; சினத்திற்கான சூழல்; வதைக்கு உட்படுதல்; யாசிக்காமை; லாபமின்றி; நோய்; புல், முள் குத்துதல்; அழுக்கு; மரியாதை, அவமரியாதை; அறிவு; அறிவின்மை; நம்பிக்கையின்மை ஆகிய இரபத்திரண்டு பரீஷஹ ஜெயம் ஆகும்.

---------------------------------

ஆகையால் எவர் உலக விஷயங்கள் எல்லாவற்றையும் விட்டு இருக்கின்றாரோ அவரே எப்பொழுதும் இன்பமாக இருக்கிறார்.





आकृष्योग्रतपोबलैरुदयगोपुच्छं यदानीयते 
तत्कर्म स्वयमागतं यदि विदः को नाम खेदस्ततः । 
यातव्यो विजिगीषुणा यदि भवेदारम्भकोSरिः स्वयं वृध्दि: 
प्रत्युत नैतुरप्रतिहता तद्विग्रहे कः क्षयः ।।257।।

ஆக்ருஷ்யோக்ர தபோ பலைருதய கோபுஞ்சய கோபுஞ்சம் யதாநீயதே, தத்கர்ம ஸ்வயமாகதம் யதிவித: கோ நாம கேதஸ்தத: | 

யாதவ்யோ விஜிகீஷுணா யதி பவேதாரம் பகோ அரி ஸ்வயம், 
விருத்தி: ப்ரத்யுத நேதுரப்ரதிஹதா தத்விக்ரஹே க: க்ஷய: ||257||
The ascetic, through severe austerities, brings to premature fruition karmas that have already become subtle, like the tail of the cow that gets thin at the end. What grief is there for the ascetic if karmas get to fruition on their own? What is the loss for the great warrior who is proceeding to wage a war against his foe if the foe himself comes in front of him to fight the war?
சந்நியாசி, கடுமையான தப நடவடிக்கைகளின் மூலம், முன்கூட்டியே பலனை தர தயாரான கர்மங்களை உதிர்த்து விடுகின்றனர். இறுதியில் பெரிய பசு பரிமாணத்தில் இருந்தவை, வால் பகுதி அளவாகி விடுகிறது. அப்படியே அவை தாக்கினாலும் சந்நியாசிக்கு என்ன துன்பம் இருக்கிறது? எதிரியுடன் போரிட்டு அழிக்கும் அளவிற்கு தனது வலிமையை கூட்டிக் கொண்ட ஒரு வீரனுக்கு, அதே எதிரி போரிட அழைத்தால் அந்த போர்வீரனுக்கு என்ன இழப்பு இருக்கப் போகிறது.

முனிவர்கள் தமது தப வலிமையால் வினைகளை உதயத்திற்கு வரும் முன்பாகவே உதிர்ப்பு செய்து விடுகின்றனர். அதனால் அவ்வினை உதயத்திற்கு வருவது தடுக்கப்படுகிறது. அதாவது அந்த பிறவிக்குரிய விதியின் வழியே உதயமாகும் வினையை உதிர்த்து விட்டால் அவ்விதிக்குள்ளான தாக்கம் தடுக்கப்படும் என்று சுருக்கமாக கூறப்படுகிறது.

அப்படியே நிர்ஜரை முழுமையடையாமல் தாமதமாகி யிருந்தாலும் மீதியுள்ள விதிப்பலன் மட்டுமே கனியாகி ஆட்டுவிக்கப் போகிறது. அதாவது அதன் பலனில் அதற்குரிய அளவு துன்பம் இருக்க வாய்ப்பில்லை என்பதாக இப்பாடலின் வழியே தெளிவுபடுத்துகிறார் முனிவர் பெருமான். வினை, விதி பற்றிய முழு விபரத்தையும் படிக்கும் போது விவரமாக புரிந்து கொள்ளலாம்.

யாதார்த்தமான, உலகியல் நோக்கில் தவநெறியில் வாழும் நம் முனிவர்களின் வாழ்க்கையை காணும் போது அவர்களைத் தாக்கும் விதியின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளவும், தாக்கத்தின் அளவு மிககுறைவாகவும் இருப்பதாகவே வரையறை செய்யப்பட்டுள்ளது.

எடுத்துக் காட்டாக மழைக்காலத்திலும் இல்லறத்தார்கள் அலைந்து திரிந்து கொண்டுதான் இருக்கிறோம். பணி நிமித்தமாக மட்டுமில்லை, திருமணம், விழாக்கள், பொழுதுபோக்கு, வீண் அலைச்சல் என்றளவில்; அதனால் தடிமன், இருமல், இசுநோய், ஆஸ்த்மா, காய்ச்சல் போன்ற கார்கால நோய்த் தாக்குதலில் பலியாவது நிச்சயம். ஆனால் அவர்கள் தற்போதைய வைரஸ்கால தனித்திருத்தல் போன்று சாதுர்மாத தங்கலில் ஓரிடத்திலேயே தங்கி விடுகிறார்கள்.

மேலும் இரவுநேரத்தில் எந்தப் பருவத்திலும் வெளியே செல்வதில்லை. சூரிய உதயம் இல்லையென்றால் தனித்திருத்தலை கடைபிடிக்கிறார்கள். மற்றபடி ஒருவேளை உணவு, சரியான அளவு சரிவிகித உணவு ஏற்றல், கேடு செய்யும் உணவு பதார்த்தங்களில் தள்ளுபடி என ஆரோக்கிய குறைவினால் வரும் துன்பங்களிலிருந்து தங்களை பெருமளவில் முன்னதாகவே காத்து கொள்வதை கண்கூடாக காண்கிறோம்.

அதே போல் மனதளவில் விருப்புணர்வில் நம்மில் பத்தில் ஒருபங்கு அளவில்கூட ஆசை இன்றி முக்தி மார்க்கம் ஒன்றே குறிக்கோள் என வாழ்கிறார்கள். அதனால் மனதிலுள்ள கோப, மான, லோப, மாயா உணர்வுகளுக்கான நினைவகங்கள் மற்றும் சிந்தனைகள் விழிப்பின்றி எப்போதும் உறங்குகின்றன.

அதனால் அவர்களது வாழ்வில் பத்தில் ஒருபங்கிற்கும் கீழான அளவு துன்பக்காரணிகளே வெளிப்பட வாய்ப்புண்டு. வெளிப்படும் தருணத்திலும் சினிமாத்தியேட்டரில் ரசிகத்தக்க காட்சிகளைப் பார்க்கும் போது, கடித்துக்கொண்டிருக்கும் கொசுவை நாம் எப்படி அலட்சியம் செய்தபடி லயித்திருக்கிறோமோ அதுபோல் தியானத்தில் துன்பத்தின்ன் வெப்பத்தை உணர்வதே இல்லை.

(சரி இனியாவது அந்த வாழ்க்கைக்கு செல்வோமா?!... எதுக்கும் பேரன் கல்யாணம் முடியட்டும் யோசிக்கலாம் என்கிறது அகங்காரம்+மமகாரம்.)





एकाकित्वप्रतिज्ञाः सकलमपि समुत्सृज्य सर्वंसहत्वाद् 
भ्रान्त्याचिन्त्याः सहायं तनुमिव सहसालोच्य किञचत्सलज्जाः । 
सज्जीभूताः स्वकार्ये तदपगमवि¯ध् ब(पल्यघड्ढबन्धः 
ध्यायन्ति ध्वस्तमोहा गिरिगहनगुहागुह्यगेहे नृ¯सहाः ।।258।।

ஏகாகித்வ் ப்ரதிஞா: ஸகலமபி ஸ்முத்ஸ்ருஜ்ய ஸர்வம் ஸஹத் வாத, ப்ராந்த்யா அசிந்த்யா ஸஹாயம் தனுமிவ ஸஹஸா லோச்ய கிஞ்சித்ஸலஜ்ஜா: | 

ஸஜ்ஜீபூதா: ஸ்வகார்ய தத பகமவிதிம் பத் வபல்யங்கபந்தா:, 
த்யாயந்தி த்வஸ்த மோஹா கிரிகஹன குஹா குஹ்ருகேஹே ந்ருளிம்ஹா: ||258||
The supreme ascetics, able to endure various afflictions, who have vowed to become independent by renouncing all external and internal possessions; who are rid of misgivings; who feel embarrassed having earlier erroneously considered their unhelpful body as helpful; who are engaged in attainment of their goal (of liberation) – such valiant supreme ascetics, like lion among men, rid of delusion, sitting in seclusion in a posture called ‘palyańkāsana’ on a mountain, in a dreadful forest, or in a cave, meditate on the way to get rid of the body, on the nature of the pure-soul, or on the Three Jewels (ratnatraya).
வெளி மற்றும் உள் பற்றுகளை கைவிட்டு விடுதலையை பெறுவதாக சபதம் செய்த, பல்வேறு துன்பங்களை, பரிஷகங்களை தாங்கக்கூடிய தீவிரத்துறவிகள்; தங்களது உடலை தான் என முன்னர் தவறாக கருதியதற்கு வெட்கப்படுகிறார்கள்; தங்கள் இலக்கை (விடுதலையை) அடைவதில் ஈடுபட்டுள்ளவர்கள், முனிவர்கள்; மாயையிலிருந்து விடுபட்டு மனிதர்களிடையே சிங்கம் போன்று அச்சமின்றி மலைகளில், பயங்கரமான காட்டில் அலைந்து திரிந்து பின்னர் ஒரு குகையில் பல்யங்காசனத்தில் தனிமையில் அமர்ந்து ஆன்ம சொரூபத்தைத் தியானம் செய்கின்றார்கள்.

எல்லா பிறவி உயிர்களும் உடலின் மீது மமத்துவம், எனது, என்ற உணர்வு கொண்டுள்ளன. அதனால் பல பிறவிகளில் உடல்களை மாறி மாறி ஏற்கின்றன. எவர் உடல்மீது பற்றின்றி, அதை மதியாது தியாகம் செய்கிறாரோ அவர் மீண்டும் உடலைத் தரிப்பதில்லை. அதாவது மறுபிறவி இல்லாமல் போகிறது. மும்மணியை கடைபிடிப்பதால் வீடுபேற்றை அடைகின்றனர்.

அதனால் தனதென நினைத்த இவ்வுடல் ஆசைக்கு உதவிட அழைக்கும், அதுவே தனதில்லை என்று எண்ணினால் முக்திக்கு அழைத்துச் செல்ல பயன்படும் என்று நயம்பட உரைக்கிறார் முனிவர் பெருமான்.





येषां भूषणमघõसघõतरजः स्थानं शिलायास्तलं 
श्यया शर्करिला मही सुविहिता गेहं गुहा द्वीपिनाम् । 
आत्मात्मीयविकल्पवीतमतयस्त्रुय्त्तमोग्रन्थयः 
ते नो ज्ञानध्ना मनांसि पुनतां मुक्तिस्पृहा निस्पृहाः ।।259।।

யேஷாம் பூஷணமங்க சங்கதரஜ: ஸ்தானம் சிலாயாஸ்தலம், 

சய்யா சர்கரிலா மஹீ ஸுவிஹிதம் கேஹம்ருஹா த்வீபினாம் | 
ஆத்மாத்மீய விகல்ப வீத மதயஸ்த்ருட் யத்த மோக்ரந்தய:, 
தே நோ ஞானதனா மனாம்ஸி புனதாம் முக்தி ஸ்ப்ருஹா நிஸ்ப்ருஹா: ||259||
The dirt sticking to their bodies is their ornament; the surface of the rock is their resting place; the graveled earth is their bedstead; the natural, insulated abode of the panthers is their dwelling; they are rid of volition concerning ‘me’ and ‘mine’; their knot of darkness of ignorance has opened; and they long for nothing but liberation. May such possessors of the riches of knowledge purify our hearts!
அவர்களின் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தூசுதான்அவர்களின் ஆபரணம்; பாறையின் மேற்பரப்பு ஓய்வு இடம்; கல்லறை பூமி அவர்களின் படுக்கை அறை; சிங்கத்தின் குகையே குடியிருப்பு; அவ்வாறான அம்சங்கள் ‘என்’ மற்றும் ‘என்னுடையவை’ பற்றிய விருப்பத்திலிருந்து விடுபடச் செய்கின்றன; அறியாமையின் இருளின் கதவு திறந்துள்ளது; அவர்கள் விடுதலையைத் தவிர வேறொன்றும் எதிர்பார்க்கவில்லை. ஞானச் செல்வத்தை உடைய அத்தகையவர்கள் நம் மனதை தூய்மைப்படுத்தட்டும்!

எவரொருவர் புலனின்ப விருப்பமுள்ள வராகவும், உடல்மீது பற்றுடையவராகவும் இருக்கிறாரோ, அவர் தான் விரும்பிய பொருள் மற்றும் உணர்விலேயே மூழ்கி இருக்கும் போது மற்றவர்களை எவ்வாறு கரையேற்றுவார். ஆனால் பற்றற்று விருப்பு வெறுப்பின்றி இருப்பவரே; தான் முக்தி பெறவும், மற்றவரையும் முக்திபெறச் செய்யும் திறனுடையவர்கள். அவர் நமது மன அழுக்குகள் அகன்று தூய்மைபெற அருள்புரிவாராக!





दूरारूढतपोSनुभावजनितज्योतिःसमुत्सर्पणैर्- 
अन्तस्तत्त्वमदः कथं कथमपि प्राप्य प्रसादं गताः । 
विश्रब्ध्ं हरिणीविलोलनयनैरापीयमाना वने 
ध्न्यास्ते गमयन्त्यचिन्त्यचरितैर्धिराशिच्र्रं वासरान् ।।260।।

துராரூட தபோ அனுபாவ ஜனித ஜ்யோதி: ஸமுத்ஸர்பணை:, அந்தஸ்த்த்வமத: கதம் கதமபி ப்ராப்ய ப்ரஸாதம் கதா: | 

விஸ்ரப்தம் ஹரிணீ விலோல நயனை ராபீய மானா வனே, 
தன்யாஸ்தே கமயந்த்ய சிந்த்ய சரிதைர் தீராச்சிரம் வாஸரான்: ||260||
They have attained, with great effort, the happiness appertaining to their soul-nature by the spread of the light of knowledge that has appeared due to their constantly advancing austerities; they are seen with selfassurance by the flighty eyes of the she-deer, i.e., their figure does not engender fear in the mind of the naturally-fearful she-deer; glory to such revered sages. With their unparalleled ways of conduct, they spend, resolutely, their days and long years.
யார் தப நடவடிக்கைகளில் தொடர்ந்து முன்னேறும் காரணத்தால் தோன்றிய அறிவொளியின் பரவலால் அவர்களின் ஆத்மஇயல்புக்கு கிடைத்த ஆனந்தத்தை மிகுந்த முயற்சியுடன் அடைந்துள்ளாரோ அவரைக் கண்டவுடன் மானின் சஞ்சலமான கண்களும் அச்சமற்று அமைதியாக காணப்படுகின்றன. அதாவது, இயற்கையாகவே பயந்த விலங்குகள் கவலையற்று அருகில் இளைப்பாறுகிறது. அத்தகைய மரியாதைக்குரிய முனிவர்கள் மகிமை பொருந்தியவர். அவர்களின் இணையற்ற தபத்தினால் தங்கள் நீண்ட ஆண்டுகளையும் வனத்தில் செலவிடுகின்றனர். அவரே போற்றுதலுக்குரியவராகிறார்.

அதாவது எந்த ஒரு துறவி ஆன்ம சொரூபத்தில் மூழ்கி, சாந்த நிலையை அடைந்துள்ளாரோ அவரே மிகவும் போற்றுதற்குரியவராகிறார். வன விலங்குகளும் அவருடன் நேசத்துடன் பழகி அச்சமின்றி இணக்கத்துடன் வாழ்கின்றன.

----------------

மனிதன் அஹிம்சை உணர்வை தோற்றத்தில் வெளிப்படுத்துவது மட்டுமல்ல உணர்வில் உறைந்துள்ளதையும் விலங்குகள் நன்கு புரிந்து கொள்ளும் பண்புடையது. அதுவே தவநெறியாளருக்கான முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது.

** அவர் ஒரு துறவி தன்னையும் உலகையும் முற்றிலுமாக உணர்ந்த மகான் அவர் தினந்தோறும் காலை வேளையில் கடற்கரையில் உட்கார்ந்து தியானம் செய்வது வழக்கம். அந்த வேளைகளில் ”சீகல்ஸ” என்று சொல்லப்படும் (ஆஸ்திரேலிய) கடல்பறவைகள் அந்த மகானின் பக்கத்தில் வந்து சந்தோஷமாக விளையாடும். சில பறவைகள் அந்த மகானின் தோளில்கூட உட்காரும். ஒருநாள் வழக்கம்போல கடற்கரைக்குத் தியானம் செய்யப் புறப்பட்ட அந்த மகானிடம் சிறுவன் ஒருவன். ”உங்களைச் சுற்றிக் கடல்பறவைகள் வந்து விளையாடுகிறதே, எனக்கு ஒரு பறவையைப் பிடித்துத் தாருங்கள்?” என்று கெஞ்சினான்.

அந்தத் துறவியும். ”சரி ஒரே ஒரு பறவைதானே.. . பிடித்து வந்து தருகிறேன். ” என்று சொல்லியபடி கடற்கரைக்குத் தியானம் செய்யப் போனார்.

அன்று எல்லாப் பறவைகளும் அவரின் தலைக்கு மேலே பறந்து சென்றதே தவிர. எந்தப் பறவையும் அவரை நெருங்கவில்லை. காரணம், அந்தத் துறவியின் உடம்பிலிருந்து வெளிப்பட்ட அஹிம்சை அடர்த்திகுறைந்த அலைகளைக் கொண்டே துறவியின் மனநிலையை பறவைகள் உணர்ந்து கொண்டன.

அதுபோன்ற அஹிம்சை உணர்வு பிசிறிய நிலை ஒருகணமும் ஏற்படாமல் உறுதியுடன் தவ ஒழுக்கத்தில் வாழும் துறவியே போற்றுதற்குரியவராக கருதப்படுகிறார்.





येषां बुध्दिरलक्ष्यमाणभिदयोराशात्मनोरन्तरं 
गत्वोच्चैरविधय भेदमनयोरारान्न विश्राम्यति । 
यैरन्तरविनिवेसिशिताः शमध्नैर्बाढं बहिव्र्याप्तयः 
तेषां नोSत्रा पवित्रायन्तु परमाः पादोत्थिताः पांसवः ।।261।। 

யேஷாம் புத்திரலக்ஷ்யமாண பிதயோராஸாத்மனோ ரந்தரம், 

கத்வோச்சை ரவிதாய பேதமனயோராரான்ன விஷ்ராம்யதி | 
யைரந்தர் விநிவேசிதா: சமதனைர் பாடம் பஹிர்வ்யாப்தய:, 
தேஷாம் நோஅத்ர பவித்ரயந்து பரமா: பாதோஸ்திதா: பாம்ஸவ: ||261||
The ignorant men are not able to discriminate between the desire (mental inclination) and the soul. However, the supreme ascetics whose intellect does not rest till it is able to discern between these two, and, possessed of the wealth of tranquility, vanquish all external volitions by being established in their soul-nature. May the sacred dust raised by their feet purify us!
அறியா மனிதர்களால் ஆசைக்கும் (மனவேட்கை) ஆத்ம வுணர்வுக்கும் இடையில் பாகுபாடு காண முடியாது. எவ்வாறாயினும், இந்த இரண்டிற்கும் இடையில் பேதங்களைப் புரிந்துகொண்டு மற்றும் அமைதியின் செல்வத்தைக் கொண்டு வரும் வரை ஓய்வெடுக்காத தவநெறியாளர்கள் ஆன்மா-இயல்பில் நிலைநிறுத்தப்படுவதன் மூலம் அனைத்து வெளிப்புற பொருட்களின் தன்மைகளை அறிந்து வெல்வார்கள். அவர்களின் கால்களால் எழும்பிய புனித தூசுகள் படிந்தால் பிறமனிதர்களைத் தூய்மைப்படுத்தி விடும்.

உலகியல் பொருட்களின் இயல்புகளை அறிந்தவர்கள் புனிதர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் உயிர் வேறு, உடல் வேறு என்று பேதப்படுத்தி பார்க்கும் அறிவை பெற்றுள்ளவர்கள். அந்த பேதவிஞ்ஞானிகள் ஆத்மா பார்த்தல் அறிதல் எனும் உணர்வுடையது, சேதனப்பொருள்; ஆனால் உடல் மற்றும் பிற பொருட்கள் உணர்வற்றது, ஜடப்பொருட்கள்; இவை இரண்டும் வேறுவேறான பொருட்கள், அதனால் அவை எவ்வாறு ஒன்றாக இணையமுடியும் என பிரித்தறிகின்றனர். அவ்வாறு உயிராகிய ஒருவன் உடலை, பிற புத்கலப்பொருட்களை என்னுடையது என்று எவ்வாறு கூறமுடியும் என அறிவுறுத்துகின்றனர்.

அதனால் அவர்கள் உலக ஆசைகளிலிருந்து விடுபடுகின்றார்கள். அத்தகைய மகான்களின் கால்தூசுகள் கூட பிற உயிர்களில் படிந்தால் தூய்மையாக்கிவிடும் என்று முனிவர் பேதவிஞ்ஞானத்தின் மகிமையை எடுத்துரைக்கிறார்.

--------

பேத விஞ்ஞானம் – பகுத்தறியும் மனப்பான்மை

கருத்துக்களின் உண்மைத் தன்மையை நுணுகி ஆயும் புத்திக் கூர்மையை வளர்க்கும் கலை. ஆராய்ச்சி, மனப்பான்மை தூண்டப்படும். விவாதத் திறமை வடிகாலாக்கப்படும். ஓதுவதைக் கூறுதல், வேறுபாடுகள், ஒப்பிட்டறிதல், வேறுபடுத்தி அறிதல் எனும் பேத விஞ்ஞானம் சமணர்களால் கண்டுபிடிக்கப்பட்டு போற்றப்பட்டது.

ஒரு கருத்தை, அதன் பல பரிமானங்களில் உற்றுநோக்கி ஆய்ந்த பின்னரே அதன் ஏற்புடைமை கைக் கொள்ளப்படும். இது அனேகாந்தவாதம் எனப்படும். பேத விஞ்ஞானமே இதன் அடிப்படை.





यत्प्राग्जन्मनि सञिचतं तनुभृता कर्माशुभं वा सुभं 
तद्दैवं तदुदीरणादनुभवन् दुःखं सुखं वागतम् । 
कुर्याद्यः शुभमेव सोSप्यभिमतो यस्तूभयोच्छित्तये
 सर्वारम्भपरिग्रहग्रहपरित्यागी स वन्द्यः सताम् ।।262।।

யத் ப்ராக் ஜன்மனி ஸஞ்சிதம் தனுப்ருதா கர்மாசுபம் வா சுபம் 

தத்யைவம் ததுதீரணதனுபவன் து: கம் சுகம் வாகதம் | 
குர்யாத்ய: சுபமேவ ஸோ அப்யபிமதோ யஸ் தூபயோச்கிதயே, 
ஸர்வாரம்ப பரிக்ரஹ க்ருஹ பரித்யாகீ ஸ பந்தயம் ஸதாம்: ||262||
Karmas of merit (punya) and demerit (pāpa) accumulated over the past life are termed own-fate’. While experiencing happiness and misery due to own-fate, the wise man who engages only in auspicious activities, leaving all inauspicious activities, is admirable. But the discriminating soul which, with the idea of destroying both merit (puõya) and demerit (pāpa) and leaving behind the demon of worldly occupations and possessions, gets established in purecognition (śuddhopayoga) is worthy of adoration by noble men.
கடந்தகால வாழ்க்கையில் திரட்டப்பட்ட புண்ணியம் மற்றும் பாபம் ஆகியவற்றின் கர்மங்கள் சொந்த விதி என்று அழைக்கப்படுகின்றன. சொந்த விதி அல்லது காரணமாக மகிழ்ச்சியையும் துயரத்தையும் அனுபவிக்கும் அதே வேளையில் எல்லா தீங்கற்ற செயல்களையும் விட்டுவிட்டு, புனிதமான செயல்களில் மட்டுமே ஈடுபடும் புத்திசாலிகள் நல்வினைக்கு காரணமாகின்றனர். ஆனால் புண்ணியம் மற்றும் பாபம் இரண்டையும் விடுத்து உலக உடைமைகளின் மிதுள்ள பற்றை விட்டுச் செல்லும் எண்ணத்துடன் தூய்மையான அறிவாற்றலில் சுத்தஉபயோகம் நிலைநிறுத்தப்படும் உன்னத மனிதர்களே வணங்கப்படுவதற்கு தகுதியானவர் ஆவார்.

பழைய வினைகளின் உதிர்ப்பும், புதிய வினைகளின் தடுப்புமே பல பிறவிகளை குறைத்து விடுதலையை அளிக்கும் என்பதையே இப்பாடலில் வலியுறுத்துகிறார்.

உலகில் பலரும் பாபத்தை சேகரிக்கும் செயல்களை செய்வதில் ஈடுபடுகிறார்கள். அதே சமயம் நற்காரியங்களைச் செய்பவர்களும் நல்லவராக கருத்தப்படுகிறார்கள். பாப காரியங்கள் செய்யும் போது பாப வினைத்துகள்களும், புண்ணிய காரியங்கள் செய்யும் போது புண்ணிய வினைகளும் (வேதனீய வினைகள்) கட்டு ஏற்படுகின்றன. அதனால் மறுபிறவியில் நரகமோ மாறாக சுவர்க்கமோ கிடைக்கிறது. ஆனாலும் விடுதலைப்பேறு கிடைக்க பல பிறவிகள் எடுக்க நேரிடும். அதனால் விவேகமுள்ள முனிவர்கள் இரண்டு வழி உபயோகத்தையும் விடுத்து தூய உபயோகமான புண்ணிய பாவமற்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் வேட்கைகள் இன்றி தியாகியான வாழ்வதால் விடுதலைப் பெற்றிற்கான பயணத்தூரத்தை சீக்கிரமே கடந்து விடுகின்றனர்.

--------------------------

சுப மற்றும் அசுப உபயோகமின்றி சுத்த உபயோகமே சிறந்த வாழ்வு நெறியாகும்.





सुखं दुःखं वा स्यादिह विहितकर्मोदयवशात् कुतः 
प्रीतिस्तापः कुत इति विकल्पाद्यदि भवेत् । 
उदासीनस्तस्य प्रगलति पुराणं न हि नवं 
समास्कन्दत्येष स्पुफरति सुविदग्धे मणिरिव ।।263।। 

சுகம் து:கம் வா ஸ்யாதிஹ விஹித கர்மோதய வசாத், குத: 

ப்ரீதிஸ்தாப: குத இதி விகல்பாத்யதி பவேத் | 
ஊதாசீனஸ்தஸ்ய ப்ரகலதி புராணம் ந ஹி நவம், 
ஸமாஸ் கந்தத் யேஷ ஸ்புரதி ஸுவிதத்தோ மணிரிவ: ||263||
When the man becomes indifferent to the fruits, in form of happiness and misery, of the past karmas, he neither relishes nor detests these fruits. As he becomes rid of attachment (rāga) and aversion (dvesa), his past karmas fall off and fresh karmas do not bind him. Equipped thus with stoppage (samvara) and dissociation (nirjarā) of karmas, he shines forth like a pristine jewel; he is adorned with perfect-knowledge – omniscience (kevalajñāna) – that illumines the self and the others.
மஹாபுருஷர் கடந்த கால கர்மங்களின் மகிழ்ச்சி மற்றும் துயரத்தின் வடிவத்திலான பலன்களைப் பற்றி அலட்சியமாக இருக்கும்போது, அவர் இந்த பலன்களை விரும்புவதோ வெறுப்பதோ இல்லை. அவர் பற்று மற்றும் வெறுப்பு ஆகியவற்றிலிருந்து விடுபடும்போது, அவரது கடந்தகால கர்மங்கள் உதிர்ந்து, புதிய கர்மங்கள் அவரை பிணைப்பதில்லை. இவ்வாறு கர்மங்களின் நிறுத்தம் மற்றும் விலகல் ஆகியவற்றைக் கொண்டு, அவர் ஒரு ஒளிபோல பிரகாசிக்கிறார்; அவர் முழுதுணர்அறிவால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார். அது சுயத்தையும் மற்றவர்களையும் வெளிச்சமாக்குகிறது.

எவர் ஒருவர் வினை ஊற்றில் ஈடுபாடு கொள்ளதில்லையோ புதிய வினைக் கட்டு ஏற்படுவதில்லை.

அதாவது வினை உதயத்தின் மகிழ்ச்சியையோ, துயரத்தையோ அனுபவிப்பதில்லை. மாறான செயல்பாட்டில் தான் வினை பந்தம் ஏற்படுகிறது. அதாவது இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் சமமாக பாவிக்கும் மனோநிலையை கைக்கொள்வது. இந்த நிலையும் கடந்துதான் செல்லும் என்ற உணர்வுநிலையில் வாழ்வைக் கிடத்தினால் புதிய வினைகள் பந்திப்பதில்லை. பழம் வினைகள் உதயம் ஆவதும் பலன் கொடுத்து விலகுவதுமாகவே செயல்பாடு அமைந்து விடும். அவ்வாறான புருஷார்த்தத்தில் ஈடுபடுவதால் விடுதலைப்பேறு நெருங்கி விடும்.

அவ்வாறான வாழ்வுமுறையை கைக்கொள்ள வினை உதயத்தின்போது நம்மிடமுள்ள பொய்யான நம்பிக்கை மற்றும் நான்கு கஷாய உணர்வுகளே விருப்பு வெறுப்புகளை தோற்று வித்து வினைகளை பந்திக்கச் செய்து விடுகிறது. அதனால் இவற்றைக் களைய நாம் இன்பம், துன்பம் எதுவாக விதி எதிர்ப்படினும் நாம் அசட்டையாக எதிர்கொள்ள துவங்கினால், அவை நீர்த்துப்போய்விடும். அதுவே விடுதலை மார்க்கத்திற்கான துறவற நெறியாகும்.

--------------------------

ஒரு கிராமத்தில் வயோதிகர் ஒருவர் வாழ்ந்துவந்தார். அவர் மிகவும் ஏழை. ஆனால் அவரிடம் அழகிய வெள்ளைக் குதிரை ஒன்று இருந்தது. அந்த வெள்ளைக் குதிரையால் அரசர்கள்கூட அந்த வயோதிகர் மீது பொறாமைப்படும் நிலை இருந்தது. அத்தனை எழில் கொண்ட குதிரை அது. பெரும் பணக்காரர்கள் அந்தக் குதிரைக்காக பொன், பொருள்களைக் கொட்டிக் கொடுக்கத் தயாராக இருந்தனர்.

“இது என்னைப் பொறுத்தவரை ஒரு பிராணி அல்ல. அவன் என் நண்பன். உடைமை அல்ல. ஒரு நண்பனை நான் எப்படி விற்கமுடியும்” என்று மறுத்துவிடுவார். அந்த வயோதிகரோ மிகவும் ஏழை. அவர் தன் குதிரையை விற்பதற்கு எல்லாக் காரணங்களும் இருந்தன. ஆனால் அவர் விற்கவேயில்லை.

ஒரு நாள் அந்தக் குதிரை லாயத்தில் இருந்து காணாமல் போனது. ஒட்டுமொத்த கிராமத்தினரும் முதியவரிடம் வந்தனர். “ நீ ஒரு முட்டாள் கிழவன். இந்தக் குதிரை என்றாவது ஒருநாள் காணாமல் போகும் என்று எங்களுக்குத் தெரியும்.

இவ்வளவு அரிய குதிரையை உன்னால் எப்படிப் பாதுகாக்கமுடியும்? அதை நல்ல விலைக்கு விற்றிருக்கலாம்.” என்றனர். குதிரை தொலைந்து போனது கிழவருக்கு வரும் துரதிர்ஷ்டத்தின் அறிகுறி என்றும் அவர்கள் கூறினார்கள்.

“குதிரை தொலைந்துவிட்டது மட்டுமே உண்மை. மற்றதெல்லாம் உங்களது முடிவுகளே. நீங்கள் உடனடியாக எந்தத் தீர்ப்பையும் சொல்ல வேண்டியதில்லை” என்று கிழவர் மறுத்தார்.

கிராமத்து மக்களோ, “ எங்களை முட்டாளாக்க வேண்டாம். உங்களிடம் இருந்த அரிய உடைமை ஒன்று தொலைந்து போய்விட்டது. அது துரதிர்ஷ்டம் தானே” என்று நியாயம் கற்பித்தனர்.

கிழவர் உறுதியாக இருந்தார். “லாயத்திலிருந்து குதிரை தொலைந்துபோய்விட்டது. லாயம் தற்போது காலியாக உள்ளது. மற்றது எதைப் பற்றியும் எனக்குத் தெரியாது. அது அதிர்ஷ்டமாக இருக்கலாம். துரதிர்ஷ்டமாக இருக்கலாம். அதை வைத்து முழுமையான முடிவுக்கு வந்துவிட முடியாது” என்றார்.

கிராமத்தினர் சிரித்தனர். கிழவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாக எண்ணினார்கள்.

பதினைந்து நாட்களுக்குப் பிறகு வெள்ளைக் குதிரை திரும்ப வந்தது. அது திருடப்படவில்லை. அது காட்டுக்கு ஓடிப்போய் விட்டது. வரும்போது ஒரு டஜன் குதிரைகளை அழைத்துக் கொண்டு வந்தது.

மறுபடியும் கிராமத்தினர் கிழவர் வீட்டின் முன்னால் கூடினார்கள். “ கிழவரே, நீர் சொன்னது சரியாகிவிட்டது. குதிரை காணாமல் போனது நல்லதற்குதான். உங்களுக்கு ஆசீர்வாதம்தான். நாங்கள் சொன்னதுதான் தவறு” என்று மன்னிப்பு கோரினார்கள்.

கிழவர் மீண்டும் அவர்களை மறுத்தார். “ மறுபடியும் நீங்கள் அவசரமாகப் பேசுகிறீர்கள். குதிரை திரும்ப வந்துவிட்டது. 12 குதிரைகளோடு திரும்பவும் வந்துவிட்டது. இதுமட்டுமே தற்போதைக்கு மெய்.” என்றார்.

அந்தச் சமயத்தில் கிராமத்தினருக்குப் பதில் அளிக்க எதுவும் இல்லை. அவர்கள் அமைதியாக இருந்தனர். வெள்ளைக் குதிரை தன்னுடன் அழைத்துவந்த குதிரைகள் மதிப்புவாய்ந்தவை. சிறிய அளவு பயிற்சி அளித்தால் போதும், நல்ல விலைக்கு விற்கலாம் என்று அவர்கள் அறிந்திருந்தனர்.

முதியவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் அந்தக் காட்டுக் குதிரைகளுக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கினான். ஒரு குதிரையின் மீது ஏறி சவாரிக்கு முயலும்போது, அவனது கால்கள் முறிந்துவிட்டன. மறுபடியும் கிராமத்தினர் கூடினார்கள். திரும்பவும் அவர்கள் அவசரப்பட்டனர். “நீங்கள் சொன்னது சரியே. 12 குதிரைகள் வந்தது நல்லதல்ல. உங்கள் பையனுக்கு அவற்றால் கால்கள் முறிந்துவிட்டது.” என்றனர்.

மறுபடியும் கிழவர் கூறினார். “எனது மகனுக்குக் கால்கள் முறிந்துள்ளன. அது நல்லதல்ல என்று யார் முடிவுசெய்வது.” என்றார்.

இது நடந்து சில நாட்களில் இரு ராஜ்ஜியங்களுக்கு இடையே போர் தொடங்கியது. கிராமத்திலிருந்த இளைஞர்கள் எல்லாரும் வலுக்கட்டாயமாகப் போருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் முதியவரின் மகனுக்கோ கால்கள் முறிந்திருந்ததால் சண்டைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை.

கிராமத்தினர் அழுது புலம்பியபடி மீண்டும் கிழவரிடம் வந்தனர். “ சண்டைக்குப் போன எங்கள் புதல்வர்கள் திரும்பி வரும் வாய்ப்பே இல்லை. உங்கள் மகனுக்குக் கால்கள் முறிந்ததால் தப்பித்துவிட்டான். நீங்கள் சொன்னது சரியே. இந்த முறையும் உங்களுக்கு அதிர்ஷ்டமே நிகழ்ந்துள்ளது” என்றனர்.

“உங்கள் மகன்கள் வலுக்கட்டாயமாகப் போருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனது மகன் போருக்குப் போகவில்லை. அது மட்டுமே உண்மை. அது நல்லதற்கா, கெட்டதற்கா என்று கடவுள் மட்டுமே சொல்லமுடியும்” என்றார்.

இதுபோன்று வாழ்க்கையின் விதிவழியே எதிர்ப்படும் எந்த சூழலையும் அவரவர் வணங்கும் தெய்வத்திற்கு அர்ப்பணித்து விட்டால் இன்பமும் இல்லை துன்பமும் அவருக்கு ஏற்படவில்லை. இதுவும் கடந்து போகும் என்று வாழ்வதே சமதாபாவத்திற்கான திறவுகோல்.

அதுவே சம்வரை நிர்ஜரைக்காண அனுகூலத்தை அளிக்கமுடியும்.





सकलविमलबोधे देहगेहे विनिर्यन् ज्वलन इव स काष्ठं निष्ठुरं भस्मयित्वा । 
पुनरपि तदभावे प्रज्वलत्युज्ज्वलः सन भवति हि यतिवृत्तं सर्वथाशचर्यभूमिः ।।264।।

ஸகலவிமல போதோ தேஹகேஹே விநர்யன், 

ஜீவலன இவ ஸ காஷ்டம் நிஷ்டுரம் பஸ்மயித்வா | 
புனரபி ததபாவே ப்ரஜ்வலத் யுஜ்ஜ்வல: ஸன், 
பவதி ஹி யதிவிருதம் ஸர்வதாச்சர்ய பூமி: ||264||
The perfect and pristine knowledge – omniscience (kevalajñāna) – enters its dwelling, the body of the ascetic. Like the fire burns up the wood completely but still keeps on burning without smoke (the charcoal fire), the fire of omniscience mercilessly burns up completely the body of the ascetic but still keeps on emitting sparkling light. It is right; the conduct of the ascetics is a land of wonders, all-around. ஆங்கில விளக்கம்
பரிபூரணமான மற்றும் ஆச்சரியமான அறிவு - சர்வஞானம் அதன் வசிப்பிடமான முனிவரின் உடலில் ஒளிர்கிறது. மரத்தை முழுவதுமாக எரிந்தும் நெருப்பு ஜ்வாலை தெரிந்து கொண்டே இருப்பதைப் போல, சர்வ விஞ்ஞானத்தின் நெருப்பு இரக்கமின்றி துறவியின் உடலை முழுவதுமாக எரிக்கிறது, ஆனால் இன்னும் பிரகாசமான ஒளியை வெளியிடுகிறது. அது சரி; சந்நியாசிகளின் ஒழுக்கம் அதிசயங்களின் விளைநிலம்.

கேவலஞானம் ஆன்மனது சரீரவடிவத்தில் உருவானதே. முனி ஒழுக்கமே இதற்கு வகை செய்யும். அவர்களது ஒழுக்கம் எல்லாவகையிலும் வியப்பானதே.

அவர்கள் எல்லா பற்றினையும் விட்டொழித்து, தியாகம் செய்யும் வாழ்வுநெறியில் பயணிப்பதால் தூய ஞான ஒளி பிரகாசிக்கும் நிலை உருவாகிறது. அவ்வாறான அற்புதம் முனிவர்களுக்கே கிடைக்கிறது. இல்லறத்தார்கள் விருப்பு, வெறுப்பை விட்டொழிக்காது பற்றுடன் வாழ்வதினால் அந்த அற்புதம் நிகழ்வதில்லை.

---------------------------

மனோபாவத்தின் நிறங்களை ஆறுவகை லேஸ்யையாக நமது ஆகமங்கள் குறியிடுகளின் வழியே தெரிவிக்கிறது.

கிருஷ்ண லேச்யை, நீல லேச்யை, காபோத ( grey ) லேச்யை, பீத ( மஞ்சள் ) லேச்யை, பத்ம லேச்யை ( colour of lotus), சுக்ல ( வெண்மை ) லேச்யை என ஆறு வகையாகும்.

உதயத்தில் இருந்த கஷாயங்கள் பலனைத் தந்து கொண்டிருந்த போது எந்த யோகம் ஆன்ம பிரதேசத்தில் செயல் பட்டுக்கொண்டிருந்ததோ அதன் நிறங்களை (லேச்யை) உவமானமாகக் காட்டி விளக்கப்படுகிறது. லேச்யைகள், கஷாயம் மற்றும் யோகம் ஆகியவை ஆன்மபிரதேசத்தில் தோன்றுவதால் ஏற்படுவதாகும்.

இந்த ஆறுவகை மனோநிலைகளை அதாவது அசுப, சுப களங்கமான உள்ளத்தையும், தூய உள்ளத்தையும் மனிதரிடையே குறிப்பிடும் வகையில் பழங்களைப் பெற அடிமரத்தை வெட்டுபவன் போன்று ஒருவனும், கிளையை வெட்டுபவன், உலுக்கி பறிப்பவன், மேலேறி பறிப்பவன் கனியை மட்டும் பறிக்க எத்தனிப்பவன், கீழே பழுத்து விழுந்தத்தை மட்டும் எடுத்துண்ண செல்பவன் என்றவாறு ஆறு வகையான மனிதர்களை, ஆறு உணர்வான நிறத்தவர்களை குறிக்கும் ஓவியங்களை சில ஆலயங்களில், இல்லங்களில் கண்டிருக்கலாம்.

அந்த மனோநிலையை குறிப்பிட்டே இந்நூற்பாவில் முனிவர் அவர்கள் நமக்கு தூய மனநிலையை எய்தும் வழியை காணவேண்டும் என்றே வழிகாட்டுகிறார்.

அத்தூய மனோபாவத்தை கொண்டிருப்பவர்களின் தலையைச்சுற்றி அடர் வெண்நிறத்தில் ஒளிர்வதாக தெயீவீக புருஷர்களை குறிக்கும் வழக்கமும் அனைத்து தரிசனச் சித்திரங்களிலும் காணலாம்.





गुणी गुणमयस्तस्य नाशास्त्रश इष्यते । 
अत एव हि निर्वाणं शून्यमन्यै£वकल्पितम् ।।265।।

குணீ குணமயஸ்தஸ்ய நாசஸ்தன்னாச இஷ்யதே | 

அத ரவ ஹி நிர்வாணம் சூந்யமந்தயைர் விதல்பிதம்: ||265||
The soul – the possessor-of-quality (guõavān) – is inseparable from the quality (guna). Hence, destruction of the quality would mean destruction of the possessor-of-quality. While the doctrines of the others have imagined liberation (of the soul) as absolute non-existence (śūnya), the Jaina Doctrine has expounded liberation as absolute absence of auspicious (śubha) and inauspicious (aśubha) dispositions due to attachment (rāga) and aversion (dvesa) in the soul.
ஆன்மாவை குணத்திலிருந்து பிரிக்க முடியாதது. எனவே குணத்தை அழிப்பது என்பது குணத்தை கொண்டிருப்பவரின் அழிவைக் குறிக்கும். மற்ற தரிசனங்களின் கோட்பாடுகள் நிர்வாணம் எனும் விடுதலையை (ஆன்மாவின்) சூன்மானது (śūnya) என்று கற்பனை செய்திருந்தாலும், சமணக் கோட்பாடு நிர்வாண விடுதலையை விருப்பு மற்றும் வெறுப்பு ஆன்மாவிலிருந்து விலகியதே.

ஆத்மா பார்த்தல், அறிதல் என்னும் சேதனப்பொருள் என்று சமணம் கூறுகிறது. அது பிற பொருளான புத்கலத்துடன் சேரும் போது அதன் சுபாவ குணம் நீங்கி விபாப குணமாக தோற்றமளிக்கிறது. அதே சமயம் புத்கலம் அழிந்து முக்திநிலையில் விருப்பு வெறுப்பு உணர்வு என்னும் விபாவம் விலகுகிறதே ஒழிய சுபாப ஞானம் அழிவதில்லை. ஆனால் பிற தரிசனங்கள் விபாவம் விலகினாலே ஞானம் முழுவதும் அழிந்து சூன்யமாகிறது அதுவே நிர்வாணம் என்கின்றன.

அவ்வாறில்லை என்று சமணம் எடுத்துரைக்கிறது.

----------------

ஆன்மாவும் உடலும் அனாதி காலமாக ஒன்றிணைந்து பல ஜீவராசிகளாக நிகோத ஜிவனிலிருந்து ஒன்றிலிருந்து ஐந்தறிவு மற்றும் மனம் என்ற அநிந்திரியம் வரை பரிணாம வளர்ச்சி யடைந்து இன்று மனிதனாக உருவாகியுள்ளது. இதை சமணமும், பிற இந்திய தரிசனங்களும் ஏன் அறிவியல் ஆராய்ச்சியும் புழு பூச்சி என்றாக பரிணாம வளர்ச்சியில் மனிதனாக உருவாக்கம் பெற்றுள்ளது என்றுதான் தெரிவிக்கிறது. ஞானம் ஆத்ம இயல்பு என்ற கூற்றில் மட்டுமே வேறுபடுகிறது.




अजातो{न}वरो{मूर्तः कर्ता भोक्ता सुखी बुध्ः ।
 देहमात्रो मलैर्मुक्तो गत्वोध्र्वमचलः प्रभुः ।।266।।

அஜாதோ அனஸ்வரோ அமூர்த: கர்தா போக்தா ஸுகீ புதா: | 

தேஸமாத்ரோ மலைர்முக்தோ கத்வோத்ர்வ மசல: ப்ரபு: ||266||
The soul is never born, never destroyed, (and is) immaterial. It is the doer, the enjoyer, the happy, the all-knowing and, of the size of the body, and being freed from the impurities (of Karmas), goes upwards (till the top of the universe), (and there it) remains steady and supreme.
ஆன்மா ஒருபோதும் பிறக்கவில்லை, அழிக்கப்படவில்லை, (மற்றும்) முதிர்ச்சியற்றது. இது செய்பவர், அனுபவிப்பவர், இன்பம் துய்ப்பவர், அனைத்தையும் அறிந்தவர் மற்றும் உடலின் அளவு, மற்றும் மலங்களிலிருந்து (கர்மங்களிலிருந்து) விடுபட்டு, மேல்நோக்கிச் செல்கிறது. பிரபஞ்சத்தின் உச்சி வரை சென்று நிலையானதாய் மற்றும் உயர்வானதாய் தங்கிவிடுகிறது.

இந்தப் பாடலில் நிச்சய நோக்கு, வியவகார நோக்கில் ஆன்மா மற்றும் உடல் பற்றிய விளக்கங்களை சுருக்கமாக தெரிவிக்கிறார். விபரமாக தெரிந்து கொள்ள சமயசாரம் என்ற குந்த குந்தரின் மேலான நூலைப் படித்தால், நன்கு அறிந்தவர் கூறக் கேட்டால் முழுமையான தெளிவுக்கு வருவது உறுதி.

ஆன்மா உண்மை என்ற நிச்சய நிலையில் - பேரானந்த உணர்வில் ஞான வடிவாக உள்ளது. பார்த்தல் அறிதல் என்ற விசேஷ குணத்தைப் பெற்ற திரவியம். அனாதிகாலமாக உடல் என்னும் புத்கலத்துடன் இணைந்து தோற்றத்தில் ஒரு வடிவத்தைப் பெற்று உலகியல் இன்ப துன்பங்களை அனுபவிப்பனாக வாழ்கிறது. ஞானேந்திரியங்கள் எனப்படும் ஐந்து புத்கலங்களின் வழியே நுகரும் அனுபத்தை தனதென உணர்ந்ததால் அறியாமையில் உலவுகிறது. மேலுலகம், கீழுலகம், நடுவுலகம் என்ற மூன்று வகை பிரதேசத்தில் உயிரினமாக பிறப்பதும் இறப்பதுமாக மாறி மாறி துன்ப சுழற்சியில் சிக்கி வெளியேறும் நாளை தேடியபடி அலைகிறது.

உண்மையில் சைதன்ய புருஷனாக அதாவது உலகியல் பொருட்களின் உண்மைத்தன்மையை முழுவதுமாக உணரும் ஆற்றலைப் பெற்றிருந்தாலும், விவகாரத்தை வழங்கி வரும் உடலால் விபாவ உணர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது. விருப்பு வெறுப்புகளே விபாப உணர்வுகளாகும். அதனை தூண்டி விடும் தீய உணர்வுகளான (சினம், செருக்கு, மாயை, உலோபம் எனும்) கஷாய பாவனையினால் அவ்உணர்விற்கு அடிமையாய் துன்பத்தில் சிக்கி உழல்கிறது.

உடலே தான் மற்றும் கஷாய பாவனைகளே தனது இயல்பான உணர்வு வடிவம் அதாவது சைதன்யம் என்ற தவறான நம்பிக்கையில் வாழ்கிறது. அந்த மித்யாத்வ சிந்தனையும், தீவிர தீய கஷாய உணர்வுகளும் அவ்வாறான ஒரு தவறானதெளிவை அளித்துக் கொண்டிருக்கிறது. அதுவரை வியவகாரத்தில் வீழ்ந்துள்ள இவ்வான்மாவை;

நிச்சய நோக்கில், உண்மை நிலையில் சரியான நம்பிக்கை, நற்காட்சியும்; முழுவதையும் அறியும் நல்ல ஞானத்தையும்; அதற்குரிய செயல்பாடுகளும், நல்லொழுக்கங்களும் கொண்டது. அவையே அதற்கு நித்ய சுகத்தை அளிக்கவல்லது.

ஆனால் புரியாமல் நிச்சிய நோக்கிற்கு செல்லவிடாமல் தடுக்கும் வியவகார நோக்குகளை தவறென நமக்கு புரியவைத்து, தெளிய வைத்து நம்மை நல்லொழுக்கத்தில் செல்வதற்கான கருத்துக்களை வழங்கிய பகவான் மஹாவீரரின் சிந்தனைகளை, உபதேச மொழியின் சாரங்களை, உயிரின் சாரமாக நமக்கு எடுத்துரைப்பதே நமது சமண சமய நோக்கம், மோட்ச மார்க்கம், துன்ப வாழ்விலிருந்து வெளியேறும் விடுதலைப் பயணத்திற்கான வழிகாட்டல். இவற்றை ஆச்சார்யர் இந்நூலின் வழியாக பல பாடல்களிலும் வழங்கி வருகிறார்.

இதுவே ஆத்மானுசாசனத்தின் நிச்சய நோக்கு என்றும் கொள்ளலாம். வியவகார நோக்கில் பல எடுத்துக்காட்டுகளும், ஒப்பீடுகளும் தருவித்து அதை நமக்கு விளங்க வைக்க முயன்றுள்ளார் தனது 270 பாடல்களின் வழியாக….




स्वाधीन्याद् दुःखमप्यासीत्सुखं यदि तपस्विनाम् । 
स्वाधीनसुखसम्पन्ना न सिध्ढा: सुखिनः कथम् ।।267।।

ஸ்வாதீன் யாத்து: கமப்யா ஸீத் ஸுகம் யதி தபஸ்வினாம் | 

ஸ்வாதீன ஸுக ஸம்பன்னா ந ஸித்தா: ஸுகின: கதம் ||26 ||
7|| When the ascetics are happy even out of their endurance of self-inflicted pain, like mortification of the body, why would the liberated souls, endowed with self-dependent bliss, not be happy?
சந்நியாசிகள் தங்கள் உடலை வருத்தி ஒடுக்கி வலியைத் தாங்கிக் கொள்வதால், சந்தோஷங்களை விலக்கி, உடலைச் சிதைப்பது போல தவமிருந்து வினைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆத்மாக்கள், சுய ஆனந்தத்தால், பேரானந்தத்தில் திளைக்கும் போது ஏன் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள்?

முனிவர்கள் காயக்கிலேசம் முதலான துன்பங்களை எல்லாம் சுகமாகக் கருதும் போது, சித்த லோகத்தில் கிடைக்கும் தடையற்ற சுகம் எவ்வாறு சுகமாகாது போய்விடும் என்கிறார் முனிவர் பெருமான்.

காயக் கிலேசம் என்றால் - காயம் எனில் உடல், கிலேசம் எனில் வருத்தம் – உடலை வருத்தி ஒடுக்குதல் என்ற கடுமையான தவநெறியை மேற்கொள்பவர்கள் முனிவர்கள். இவ்வுலக சுகத்தை துச்சமாக மதிப்பவர்கள். அது அவ்வப்போது வந்து போகக்கூடியது. ஒரு நாள் சுகத்திற்கு பல நாட்கள் துன்பத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது. இந்த உண்மையை அறிந்து, முழுவதுமாக துன்ப உணர்வை தாமாகவே ஏற்றுக் கொண்டு, அதனை வலி, வேதனை என்று ஒதுக்கி தள்ளிவிடாமல், என்னால் இந்த வேதனையை, வலியை பொறுத்துக் கொள்ள முடியாது என்று எந்த ஒரு ஆன்மீயப் பயிற்சியையும் அச்சம் கொண்டு கடைபிடிக்காமல் இருப்பதில்லை.

பல நாட்கள் உண்ணா நோன்பை ஏற்று தவமியற்றும் போது மழை, வெயில், குளிர் என மாறி மாறி வரும் பருவ உஷ்ணத்தின் தாக்குதலால் உடலில் ஏற்படும் வலியை துச்சமாக ஏற்கும் சகிப்புத்தன்மை, மனவலிமை போன்றவை குன்றாமல் விடுதலை மார்க்கத்தில் பயணிப்பவர்கள் என்பதை இப்பாடலில் தெரிவிக்கிறார்.

அதன் பலனாக பேரானந்த, நித்யானந்த சுகத்தில் உறைகின்றனர். மீண்டும் பிறவா நிலைக்கான பிரதேசத்தில் தங்கி விடுகின்றார்கள். அந்த தூய ஆன்ம நிலையில் தங்கு தடையில்லா சுகம், வீர்யம், ஞானத்தை மீட்டெடுத்தவர்கள் என்பதையும் நமக்கு எடுத்துரைக்கிறார்.





इति कतिपयवाचां गोचरीकृत्य कृत्यं रचितमुचितमुच्चैशचेतसां चित्तरम्यम् । 
इति कतिपयवाचां गोचरीकृत्य कृत्यं सपदि विपदपेतामाश्रयन्ते श्रियं ते ।।268।।

இதி கதி பயவாசாம் கோசரீக்ருத்ய க்ருத்யம், 

ரசிதமு சிதமுச்சைச் சேதஸாம் சிதரம்யம்: | 
இதமவிகலமந்த: ஸந்ததம் சிந்தயத:, 
ஸபதி விபதபேதாமஷ்ர யந்தே ஷ்ரியம் தே ||268||
This way, using a few words, this useful work (for performance of the four adorations*) has been composed. This will be enchanting to the hearts of the men with noble thoughts. May the potential-souls (bhavya), who ponder this compositioncontinuously and wholly, soon get rid of all adversities and attain the Lakshmī of liberation!
இந்த வழியில், சில சொற்களைப் பயன்படுத்தி, இந்த பயனுள்ள எழுத்துப்பணி (நான்கு தானங்களின் வகைப்பாட்டில்) இயற்றப்பட்டுள்ளது. இது உன்னத எண்ணங்களுடன் மனிதர்களின் இதயங்களை மயக்கும். இந்த ஆக்கத்தை தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் சிந்திக்கும் பவ்யஆத்மாக்கள் விரைவில் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட்டு மோட்சலஷ்மியை அடையட்டும்!

எவர் ஒருவர் மஹாபுருஷர்களின் குணங்களைச் சிந்திக்கின்றாரோ அவர் விரைவில் களங்கமற்ற அழிவற்ற விடுதலைப்பேற்றை பெறுவர்.

ஒருவர் சிந்தனை எத்தகையதோ அதற்கேற்ற பலனையே அவர் அடைவார். எவ்வாறு மணமிக்க மலர்களின் சேர்க்கையால் மணமில்லாதவைகூட மணம் பெற்று விடுகிறதோ, அதுபோல மஹாபுருஷர்களின் குணங்களைச் சிந்திப்பதனால் தாமும் தூய்மை அடைகின்றனர்.





जिनसेनाचार्यपादस्मरणाधीनचेतसाम् । 
गुणभद्रभदन्तानां कृतिरात्मानुशासनम् ।।269।।

ஜின சேனாசார்ய பாதஸ்மரணாதீன சேதஸாம்: | 

குணபத்ர பதந்தரணாம் க்ருதிராத்மானு சாஸனம்: ||269||
The ascetics are like the army of Lord Jina, the destroyer of karma-enemies. The apostles (ganadhara) are the preceptors of the ascetics. Remembering always their pious feet, the worshipful ācārya(s), themselves possessing many propitious qualities, have crafted this composition that expounds the nature of the soul.
முனிகள் கர்மா-எதிரிகளை அழிக்கும் இறைவன் ஜினரின் சேனையைப் போன்றவர்கள். ஆச்சார்யர்கள் (கனதரர்) சந்நியாசிகளின் முன்னோடிகள். அவர்களின் புனித பாதங்களை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், வணக்கமுள்ள ஆச்சார்யர்(கள்) பல உயர்ந்த குணங்களைக் கொண்டவர்கள், ஆன்மாவின் தன்மையை விளக்கும் இந்த ஆக்கத்தை வடிவமைத்துள்ளார்.

இந்நூல் ஆசிரியர் குணபத்ராசிரியார் தம் குருவை நினைந்து வணங்குகிறார்.

முனி கணத்தின் அதாவது ஜின சேனையின் ஆசாரியரை, கணதரதேவரின் பாத கமலங்களை வணங்கி, எனது மனத்தில் நினைவு கூர்ந்து குணங்களின் இருப்பிடமான இந்த ஆத்மானு சாஸனத்தை இயற்றியுள்ளேன். என்றவாறு ஜின சேனாச்சாரியரின் பாதகமலங்களை வணங்கி, நினைவு கூர்ந்து இந்த ஆத்மானு சாஸனம் என்ற நூலை ஆக்கியுள்ளார்.

ஜினவரர்களுக்குச் சேவை செய்த ஆசாரியர்களுள் மிகமுக்கியமானவர் கணதர தேவர். அவரது பக்தியால் எவரது மனம் திடமாக இருக்கிறதோ அந்த குணங்களால் நிரம்பிய ஆச்சாரியரால் இந்த மங்கலவடிவான நூல் இயற்றப்பட்டது. அதாவது, இந்நூல் ஜினசேனாசாரியாரின் சீடர் குணபத்ராசாரியர் வாயிலாகக் கூறப்படுகிறது.





क्रुषभो नाभिसूनूर्यो भूयात्स भविकाय वः । 
यज्ज्ञानसरसि विश्वं सरोजमिव भासते ।।270।।

ருஷபோ நாபி ஸுனூர்யோ பூயாத்ஸ பவிகாய வ: | 

யஜ்ஞானஸரஸி விச்வம் ஸரோஜமிவ பாஸதே: ||270||
May Lord Rishabha Deva, son of Nābhirājā, in whose knowledge-lake the world appears like a lotus, bring you propitiousness!
எவர் ஞானமெனும் பொய்கையில் அனைத்துலக தாமரை மலர்களுக்கு ஒப்ப ஒளிவீசித் திகழ்கிறாரோ, அவரே நாபிமஹாராஜனின் மகனான பகவான் ஸ்ரீ விருஷப தேவர்- ஆதிபகவன் – அவர் உனது முக்திக்கு நிமித்தமாக அமைவாராக!

இந்தப் பாடல் சமணர்களின் பரமகுருவாக விளங்கும் ரிஷபதேவருக்கான மங்கலாசரணமாக வழங்குகிறார் முனிவர் குணபத்ராச்சார்யர். முதற்பாடலில் தனது குருவிற்கும், இப்பாடலில் தன் குருவிற்கும் மற்றும் நிகழ்காலத்தில் தோன்றிய அத்துனை குருவிற்கும் குருவாக விளங்கிய முதன்மைகுருவிற்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

எவ்வாறு இரவில் இதழ்களை சுருக்கி உறங்கிய தாமரையை தனது கிரணங்களால் மலரச்செய்கிறதோ பகலவன், அதுபோன்று உலக மாந்தரின் மனதில் உள்ள இருளை விலக்கி உள்ளொளியாய் திகழும் ஞானஒளியை மலரச் செய்கிறாரோ, அதாவது மனம் மலரச்செய்கிறாரோ அவரே ஞான குருவானவர். அந்த ஞானக்குருக்களில் முதன்மையானவர் ரிஷபதேவர் என்னும் பகவலவன், அவரது பாதாரவிந்தங்களில் விழ்ந்து நாமும் வணங்கிடுவோம்.

அத்துடன் அந்த பகலவனின் ஒளியை இரவிலும் பிரதிபலிக்கும் சந்திரன் போன்று அவர் மறைந்தாலும் அவரது கருத்துக்களை இன்றும் நம்மிடையே ஒளிரச் செய்யும் ஆச்சார்யர்கள், முனிவர்கள் குறிப்பாக தர்னாச்சார்யர், புஷபதந்தர், பூதபலி, ஜினசேனாச்சார்யார், குணபத்ராச்சார்யார், குந்தகுந்தாச்சார்யார், அமிர்தகதி ஆச்சார்யர், அமுதச்சந்திரர் மற்றும் இது போன்ற வாழ்வியல்கருத்துக்களை உள்ளடக்கிய நாலடியார், திருக்குறள், சீவகசிந்தாமணி, மேருமந்திரம் போன்ற நூல்களை வழங்கிய தமிழக சமண முனிவர்கள் மற்றும் நம் காலத்தில் வாழும் அறிஞர்கள் பெருமக்கள் அனைவருக்கும், இந்த ஆத்மானு சாசனம் தமிழில் வழங்க பேருதவியாய் இருந்த பவ்யர் திரு. க.வி. அஜிததாஸ் அவர்கள், Sri J.L. Jaine, Shri Vijay K. Jain போன்றோர்களுக்கு எனது மேலான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நூலின் பாடல்களை தினத்தொடர் அஞ்சல் வழியில் பெற்றவர்கள் அதன் ஆழ்ந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள், தவறுஏதுமிருந்தால் அவை எனது பிழையாக கருதி பொருத்தருள வேண்டுகிறேன்.

ஆத்மானு சாசனம் என்னும் இந்த ஞானப்பொக்கிஷ நூலின் தொடர் இன்றுடன் முடிவடைகிறது.

நன்றி.





No comments:

Post a Comment