Acharya Manatunga - மானதுங்காச்சாரியர்
போஜராஜன் எனும் அரசர் கி.பி. பதினோராம் நூற்றண்டில் உஜ்ஜயினி எனும்
நாட்டை ஆண்டு வந்தார். அவர் அரசவையில் சிறந்த அமைச்சர்களும் அறிஞர்களும் கவிஞர்களும்
இடம் பெற்றிருந்தனர்.
பெருங் கவியான, மேகதூதம் எழுதிய காளிதாசர் இந்த அவையில்தான் இருந்தார்.
அவருடன் தனஞ்சயன் எனும் பெரும் கவிஞரும் இருந்தார். அரசரும் சிறந்த அறிவாளி. ஒருமுறை
அரசர் தனஞ்சயனின் அறிவாற்றலைக் கண்டு மிகவும் பாராட்டினார். பாராட்டப்பட்ட தனஞ்சயன்,
எல்லாப் புகழும் குரு ஸ்ரீமானதுங்க ஆசார்யருக்கே என்றார். அது கேட்ட அரசர் அவ்வளவு
சிறந்த ஆசார்யரை சந்திக்க விரும்பி, அவரை அழைத்து வர ஆட்களை அனுப்பினார்.
ஆசார்யரோ தாம் ஒரு முற்றும் துறந்த முனிவரென்றும் அரசரால் ஆவது
ஒன்றுமில்லை எனக் கூறி வர மறுத்து விட்டார். அது கேட்ட அரசர் தன் கட்டளையை மீறிய ஸ்ரீமானதுங்கரைப்
பலவந்தமாகப் பிடித்து வர ஆணையிட்டார். காவலர்களும் அவ்வாறே செய்தனர்.
போஜராஜன் தன் அறிவுக் கூர்மையைக் காட்ட, அவரிடம் பல கேள்விகளைக்
கேட்டார். ஸ்ரீமானதுங்கரோ அன்று மவுன விரதமிருந்ததால் பதிலேதும் கூறவில்லை. அதனால்
கோபமுற்ற போஜராஜன் ஆசார்யருக்கு நாற்பதெட்டு விலங்குகள் பூட்டிச் சங்கிலியால் பிணைத்து
சிறையில் அடைத்து அவரின் திறனையும் ஜைன அறத்தின் வலிமையையும் காட்டுக என ஆணையிட்டார்.
ஸ்ரீமானதுங்கஆசார்யர் அன்று சிறையில் உண்ணா நோன்பேற்று ஆதிபகவனான
விருஷப தேவரை வணங்கிப் போற்றி அவர் மீது “பக்தாமர
ப்ரணத மௌலி” எனத் தொடங்கும்
பக்தாமரப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார்.
முதல் பாடலுக்கே ஒரு விலங்கு தானாக உடைந்து சிதறியது. அவ்வாறு ஸ்ரீமானதுங்கர்
பாடப்பாட ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு விலங்காக நாற்பத்தெட்டு விலங்குகளும் உடைந்து
சிதறி விழுந்தன. சிறைக் கதவுகளும் தானாகத் திறந்தன. இதைக் கண்ட அரசர் வியந்து, ஆசார்யரிடம்
மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
அப்பாடல்களே பக்தாமர பாடல்கள் அல்லது பக்தாமர தோத்திரம் எனப்படும்.
முதல் பாடலின் முதல் வார்த்தையே நூலின் பெயராயிற்று. நாட்டுமக்களும் ஸ்ரீமானதுங்க ஆசார்யரைப்
போற்றி வணங்கி பக்தாமரத்தைப் படித்து புண்ணியம் பெற்றனர்.
மகாகவி காளிதாசர் தனது மேகதூதம் எனும் நூலில் பக்தாமரப் பாடல்களிலுள்ள
நான்காவது வரிகளை எடுத்து தன் பாடல்களின் நான்காவது அடியாக அமைத்துள்ளார். இதனால் பக்தாமரப்
பாடல்களின் சிறப்பு மேலும் தெரியவருகிறது. பக்தாமரம் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்ச் மற்றும்
இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இன்றளவும் ஜைனர்கள் ஸ்ரீ மானதுங்க ஆசார்யரின்
பக்தாமரப் பாடல்களைப் போற்றி வழிபட்டு வருகின்றனர்.
----------------
Acharya Sri MANATUNGA
The Author of (Bhaktamar Stotra), Acharya Sri Manatunga was
a talented scholar, eminent missionary and prodigious ascetic. Each and every
word of Bhaktamara reveals his enlightening devotion and infinite faith in the
Lord Jina.
In the year 1100 AD there was a great king Bhoja in Ujjain
city of Malva. King Bhoja was a learned king of unsurpassed rank and was the
author himself of Sanskrit poetry. Great poet Kalidas was one of the members of
his assembly Royal Court. One Jain poet Dhananjaya was also becoming famous
those days in the city. One day King Bhoj called Dhananjaya in his royal court
and get introduced with him and praised him for his poems and wisdom. Shri
Dhananjaya told the king very politely that his all wisdom and knowledge was
due to his teacher Acharya Mantunga a Jain Muni , he said that all the
knowledge is due to the blessings of Acharya Mantunga.
Mantunga
Digambar Jain Acharya Muni Manatunga
After knowing about the praise worth Acharya Mantunga, King
Bhoj desired to meet with Acharya. King Bhoj ordered his servants to bring
Acharya Mantunga to his royal court with honor. At that time Acharya were
staying at Bhojpur and doing Tapa (Penance) for self realization -
purification. Servants of King Bhoj reached there, prayed Acharya again and
again to go with them to meet their King Bhoj. But ascetic saints have no
purpose in meeting with King or any other persons. The monk replied, "What
I have to do at the royal place? Only those go to the court who are either
concerned with it or have committed an offence. Then why should I go as I am an
ascetic? So Acharya engrossed in deep Tapa or meditation.
Servants returned to King and told about their failure. The
King Bhoj became angry and he ordered to bring the Acharya forcefully in his
royal court. Servants do the same and thus Acharya were brought before King
Bhoj. The king praised Acharya and requested to give some religious precepts to
the audience present there. But up to that time looking unfavorable situations,
Acharya decided to remain silent during such conditions. So all the prayers and
requests of King were all in vain. The King became angry and he ordered to his
soldiers to place the Acharya in prison. Thus Acharya Manatunga was put under
arrest in forty-eight chambers under locks and chains.
In the prison Acharya Mantunga entered the heavenly realms
of the Lord Adinath and started the prayer of Bhagwan Adinath. He wrote in
Sanskrit language a great poem the Bhaktamar Stotra having 48 Stanza (Verse).
The chants and prayers of Manatunga were thus in full brim, flowing with the
unbound energy of chain-reaction. Due to the effect of Bhaktamar Stotra,
Acharya Mantunga no more remained imprisoned. He came out of the locks, and
went out of the locks, and went straight out of the prison.
The guards awoke and saw this miracle, but thinking about
the self-ignorance, he again closed Acharya in prison and checked the locks
firmly. But after sometime locks of prison again opened and Acharya were free
again. Seeing this the guards hurried to the king and told him about the event.
King came there and he ordered the soldiers to tie Acharya firmly with strong
chains and kept in the prison having 48 locks.
Acharya again recited Bhaktamar Stotra and all the 48 locks
with chains broken. Acharya automatically came out of prison. Looking this
miracle, the whole city assembled around the prison in agitation and
admiration. The king had to realize the power of Janism and surrendered completely
to the facts. King Bhoj felt down in the feet of Acharya, he pardoned for his
mistake again and again. He prayed, "O Excellence! You were constituted of
as many ultimate particles as they were full of the peaceful love. This is the
the reason for your unparallel and beautiful form in the whole universe."
**************
No comments:
Post a Comment