ஜிந தேவதார்ச்சனை

 

ஓம் ஜிநாய நம :

 

த்ருஷ்டாஷ்டக ஸ்தோத்ரம்

ஜிநாலய காட்சி துதி

 

 

[ஜிநாலயத்திற்குச் செல்லும் போதோ அல்லது ஜிநாலயத்தில் வலம் வரும்போதோ ஜிநாலயத்தைத் தரிசிக்க வாய்த்த பெரும் புண் ணியத்தை எண்ணி மகிழ்ந்து பக்தியுடன் கீழ் வரும் "த்ருஷ்டாஷ்க ஸ்தோதரத்தைச் சொல்லலாம்.

 

1  த்ருஷ்டம் ஜிநேந்த்ர பவனம் பவதாபஹாரீ

பவ்யாத்மனாம் விபவ ஸம்பவ - பூரி -ஹேது I

துக்தாப்தி-பேன-தவளோஜ்ஜவல - கூட கோடீ-

நத்த - த்வஜ-ப்ரகர-ராஜி-விராஜமானம் II

 

1  எல்லையற்ற உயிர்களின் தாபத்தைத் தணிக்க வல்லதும், எல்லையற்ற வைபவங்களை அளிக்க வல்லதும், பால் மற்றும் கடல் நுரை போல வெண்மை ஒளியுடைய கோபுரங்களின் உச்சியில் கொடிகளோடு விளங்குவதுமான ஜிநேந்த்ர பவனத்தை (ஜிநாலயத்தை) இன்று நான் தரிசித்தேன் .

 

2  த்ருஷ்டம் ஜிநேந்த்ர பவனம் புவனைக லக்ஷ்மீ –

 தாமர்த்திவர்த்தித -மஹாமுனி-ஸேவ்ய மானம் I

வித்யாதராமர-வதூஜன முக்த திவ்ய-

புஷ்பாஞ்சலி- ப்ரகர-ஷோபித-பூமிபாகம் II

 

2  மூவுலக லக்ஷ்மீகளுக்கு இடமானதும், ரித்தி பெற்ற மகா முனிவர்களால் வணங்கப் படுவதும், வித்யாதரர் மற்றும் தேவ மகளிர்களாலும் தூவப் பட்ட திவ்ய மலர்களால் அழகு பெற்ற பூமியோடு கூடியதுமான ஜிநேந்த்ர பவனத்தை இன்று நான் தரிசித்தேன்.

 

3  த்ருஷ்டம் ஜிநேந்த்ர பவனம் பவனாதிவாஸ

விக்யாத- நாக- கணிகா- கண - கீயமானம் I

நாநாமணி-ப்ரசய - பாஸுர - ரஷ்மி ஜால

வ்யாளீட நிர்மல-விசால- கவாக்ஷஜாலம் ll

 

3  பவனவாசி முதலான தேவர்களின் கணிகைகள் பாடி மகிழ்வதும், பல வகையான மணிகளினால் அழகு பெற்ற அகன்ற சன்னல்களை உடையது மான ஜிநேந்த்ர பவனத்தை இன்று நான் தரிசித் தேன்.

 

4  த்ருஷ்டம் ஜிநேந்த்ர பவனம் ஸுரஸித்த-யக்ஷ

கந்தர்வ - கின்னர -கரார்பித- வேணு - வீணா I

ஸங்கீத - மிஸ்ரித- நமஸ்க்ருத- தீரநாதை

ராபூரிதாம்பர - தளோரு- திகந்தராளம் II

 

ஆகாயத்தில் எல்லா திசைகளிலும் தேவர். சித்தர், யக்ஷர், கந்தர்வர், கின்னரர் ஆகியோர்' வணங்கி தம் கைகளில் உள்ள வீணைகளினால் எழுப்பும், இசையினால் விளங்கித் தோன்றும் ஜிநேந்த்ர பவனத்தை இன்று நான் தரிசித் தேன்

 

5  த்ருஷ்டம் ஜிநேந்த்ர பவனம் விலஸத்விலோல

மாலாகுலாலி - லலிதாலக - விப்ரமாணம் I

மாதுர்ய வாத்ய-லய-ந்ருத்ய-விலாசினீனாம்

லீலா - சலத்வலய- ந்ருபுர-நாத ரம்யம் II

 

அசையும் அழகிய மாலைகளால் மயங்கிய வண்டு கள் சூழ்ந்த மாலைகள் கூந்தல் போல விளங்க. இனிய இசைக் கருவிகளில் எழுந்த இசைக்கு இசைவாக ஆடும் மகளிருடைய வளையல்களும், சிலம்புகளும் எழுப்பும் ஒலியோடு விளங்குகின்ற ஜிநேந்த்ர பவனத்தை இன்று நான் தரிசித் தேன்

 

6  த்ருஷ்டம் ஜிநேந்த்ர பவனம் மணி-ரத்னஹேம்

ஸாரோஜ்ஜவலை: கலச சாமர-தர்பணாத்யை: I

ஸன்மங்கலை: ஸததமஷ்டசத-ப்ரா பேதைர்

விப்ராஜிதம் விமல -மௌக்திக-தாமசோபம் II

 

மணி,ரத்தம், பொன்னால் அமைந்த 108 கலசங் கள்,சாமரை, கண்ணாடி முதலான நல்ல மங்கலப் பொருள்களால் விளங்குகின்ற,குற்ற மற்ற முத்து மாலைகளால் அழகு பெற்ற ஜிநேந்த்ர பவனத்தை இன்று நான் தரிசித் தேன்

 

 

7  த்ருஷ்டம் ஜிநேந்த்ர பவனம் வரதேவதாரு-

கர்ப்பூர -சந்தன துருஷ்க-சுகந்தி தூபை: I

மேகாய மான ககனம் பவனாபி காத-

ஞ்சச்வலத் விமல- கேதன - துங்க-சாலம் II

 

உயர்ந்த தேக்கு, உத்தம தேவதாரு, கற்பூரம் சந்தனம், முதலான நறுமணப் பொருள்களால் ஆக்கப்பட்ட தூபத்திலிருந்து எழுந்த புகையா னது ஆகாயத்தில் மேகம் படிந்தாற் போல அற்புத அழகுடன் விளங்குகின்றதும், வீசும் காற்றினால் அசைகின்ற கொடிகளோடு விளங்கு கின்றதுமான ஜிநேந்த்ர பவனத்தை இன்று நான் தரிசித்தேன்.

 

8  த்ருஷ்டம் ஜிநேந்த்ர பவனம் தவளாதபத்ர-

ச்சாய நிமக்ன - தனு - யக்ஷ குமார - வ்ருந்தை: I

தோதூயமான - ஸித-சாமர- பங்க்த்தி பாஸம்

பாமண்டல- த்யுதியுத ப்ரதிமாபிராமம் II

 

வெண்குடை நிழலில் உள்ள யக்ஷ குமாரர்கள் வீசும் வெண் சாமரை வரிசைகளின் அழகுடன் விளங்குகிற, பாமண்டல ஒளியுடன் கூடித் திகழும் பிரதிமைகளுடன் மிக அழகு வாய்ந்த ஜிநேந்த்ர பவனத்தை இன்று நான் தரிசித் தேன்.

 

9  த்ருஷ்டம் ஜிநேந்த்ர பவனம் விவிதப்ரகார

புஷ்போபஹார்-ரமணீய -ஸுரத்ந பூமி  I

 நித்யம் வஸந்த திலகச்சீரிய மாத தானம்

ஸன்மங்கலம் ஸகல - சந்த்ர முனீந்த்ர - வந்த்யம் II

 

பல வண்ண மலர் மாலைகளால் அழகிய ரத்ந பூமி சிறந்து விளங்குகின்ற, வசந்தகால திலக மலர்களுடன் விளங்குகின்ற, உத்தம மங்கல வடிவ முழு நிலவு ஒளிபோல குளிர்ச்சி செய்கிற முனிவர்கள் (அல்லது ஸகல சந்திர முனிவர்) வணங்குகிற ஜிநேந்த்ர பவனத்தை இன்று தரிசித்தேன் .

 

 

10  த்ருஷ்டம் மயாத்ய மணி - காஞ்சன- சித்ர-துங்க

ஸிம்ஹா ஸனாதி- ஜிந பிம்ப- விபூதியுக்தம் I

சைத்யாலயம் யததுளம் பரிகீர்திதம் மே

ஸன்மங்கலம் ஸதல-சந்த்ரமுனீந்த்ர - வந்த்யம் II

 

மணியும் பொன்னும் அமைந்தமையால் அழகு பெற்று விளங்குகின்ற சிம்மாசனம் முதலான வைபவங்களுடன் கூடி அழகுடன் திகழ்கிற, ஒப்பற்ற புகழுடன் கூடிய, எனக்கு மங்கலத்தைத் தருகின்ற, முழு நிலவு ஒளிபோல குளிர்ச்சி செய் கின்ற முனிவர்கள் (அல்லது ஸகல சந்த்ர முனிவர்) வணங்குகின்ற ஜிநேந்த்ர சைத்யால யத்தை இன்று தரிசித்தேன்.

 

 

அத்யாஷ்டக ஸ்தோத்ரம்

ஜிந பகவான் காட்சி துதி

 

[ஜிநாலயத்தை மூன்று முறை வலம் வந்த பின்பு உள்ளே சென்று ஜிநபிம்பத்தைத் தரிசிக்கும் போது இந்தத் துதியைச் சொல்ல வேண்டும். பகவானைத் தரிசிப்பதால், தான் பெறும் நன்மைகளை எல்லாம் சொல்லி மனம் குளிர்ந்து மகிழ வேண்டும்.)

 

1 அத்ய மே ஸபலம் ஜன்ம

நேத்ரே ஸபலே மம I

த்வாமத்ராக்ஷம் யதோ தேவ

ஹேது மக்ஷய ஸம்பத: II

 

1  தேவ! அழியா செல்வத்திற்கு (முக்திக்கு)க் காரணமான உம்மை இன்று நான் தரிசித்தேன். அதனால் என் பிறவி பயனடைந்தது; என் கண்களும் பயன் பெற்றன!

 

2 அத்ய ஸம்ஸார - கம்பீர

பாராவார் : ஸுதுஸ்தர: I

ஸுதரோயம் க்ஷணேனைவ

ஜிநேந்த்ர தவ தர்சனாத் II

 

2  ஜிநேந்த்ர! இன்று நான் உம்மை தரிசித்தலால் கடந்து செல்லுதற்கு அரியதாகிய இப் பிறவிப் பெருங் கடல் கண நேரத்தில் கடப்பதாக ஆகி விட்டது.

 

3 அத்ய மே க்ஷாளிதம் காத்ரம்

நேத்ரே விமலே க்ருதே I

ஸ்நாதோஹம் தர்ம தீர்த்தேஷு

 ஜிநேந்த்ர தவ தர்சனாத் II

 

3  ஜிநேந்த்ர! இன்று நான் உம்மை தரிசித்தலால் எனது உடல் தூய்மை பெற்றது; கண்கள் தூய்மை பெற்றன; தரும தீர்த்தத்தில் நான் குளித்தவன் ஆனேன்!

 

4 அத்ய மே ஸபலம் ஜன்ம

ப்ரசஸ்தம் ஸர்வ மங்கலம் I

ஸம்ஸாரார்ணவ - தீர்ணோsஹம்

ஜிநேந்த்ர தவ தர்சனாத் II

 

4  ஜினேந்த்ர! இன்று நான் உம்மை தரிசித்தலால் என் பிறவி பயன் பெற்றது; புகழான மங்கலங் கள் எல்லாம் எனக்கு வாய்த்தன; நான் பிறவிக் கடலை நீந்திக் கடந்தேன்!

 

5 அத்ய கர்மாஷ்டக - ஜ்வாலம் விதூதம் ஸகாஷயகம் I

துர் கதேர்வி நிவ்ருத் தோஹம் ஜிநேந்த்ர தவ தர்சனாத் II

 

5 ஜிநேந்த்ர! இன்று நான் உம்மை தரிசித்தலால் கஷாயங்களுடன் எட்டு வினைகளையும் எரித்து நீக்கி விட்டேன்; தீய பிறவியிலிருந்தும் தப்பி விட்டேன்!

 

6 அத்ய ஸௌம்யா க்ரஹா : ஸர்வே சுபாச்சைகாதச-ஸ்திதா: I

நஷ்டானி விக்ன - ஜாலானி ஜிநேந்த்ர தவ தர்சனாத் II

 

6 ஜிநேந்த்ர. இன்று நான் உம்மை தரிசித்தலால் எனது பன்னிரண்டு ஸ்தானங்களில் நிற்கும் எல்லா கிரஹங்களும் அமைதியும் நன்மையும் உடையனவாக ஆகிவிட்டன ; தடை வலைகள் அறுந்து விட்டன.

 

7 அத்ய நஷ்டோ மஹாபந்த: கர்மணாம் துக்க தாயக: I

ஸுக-ஸங்கம் ஸமா பன்னோ ஜிநேந்த்ர தவ தர்சனாத் II

 

7 ஜிநேந்த்ர! இன்று நான் உம்மை தரிசித்தலால் துன்பத்தைத் தரும் வினைக்கட்டு அழிந்தது ; சுகம் தரும் தொடர்பு பெற்றேன்!

 

8 அத்ய கர்மாஷ்டகம் நஷ்டம் துக்கோத்பாதன காரகம் I

ஸுக்காம் போதி - நிமக்னோsஹம் ஜிநேந்த்ரம் தவ தர்சனாத் II

 

8 ஜிநேந்த்ர! இன்று நான் உம்மை தரிசித்தலால் துக்கத்தைத் தரும் எட்டு வினைகளும் அழிந் தன ; நான் சுகக் கடலுள் அமிழ்ந்து போனேன்!

 

9. அத்ய மித்யாந்த காரஸ்ய ஹந்தா ஜ்ஞான - திவாகர: I

உதிதோ மச்சரீரே$ஸ்மின் ஜிநேந்த்ரம் தவ தர்சனாத் II

 

 

9 ஜிநேந்த்ர! இன்று தான் உம்மை தரிசித்தலால் என் உடலுள் அறியாமை இருள் அகன்று ஞான சூரியன் தோன்றினான்!

 

10 அத்யா ஹம் ஸுக்ருதீபூதோ நிர்தூதாசே கல்மஷ: I

புவன-த்ரய - பூஜ்யோsஹம் ஜிநேந்த்ர தவ தர்சனாத் II

 

10  ஜிநேந்த்ர! இன்று நான் உம்மை தரிசித்தலால் எல்லா களங்கங்களையும் கழுவிவிட்டு நல்லவ னாகி மூவுலகத்திலும் பாராட்டுதலுக்குரியவனா னேன்!

 

11 அத்யாஷ்டகம் படேத்யஸ்து குணா நந்தித- மானஸ: I

தஸ்ய ஸர்வார்த்த ஸம்ஸித்திர் ஜிநேந்த்ர தவ தர்சனாத் II

 

11  ஜிநேந்த்ர! இன்று நான் உம்மை தரிசிக்கும் போது உம்முடைய குணங்களில் ஆனந்தமாக என்னுடைய மனத்தை ஈடுபடுத்தி இந்த 'அத் யாஷ்ட' துதியைச் சொல்கிறேன்; உம்மை தரி சிப் பதாலேயே அதன் அறிகிறேன்; அல்லது அடைகிறேன்! எல்லாப் பொருளையும் ஸர்வாத்த ஸித்தியை

 

******************************

 

நித்ய அர்ச்சனை

நாள் வழிபாடு

 

[ஜிநாலயத்திற்குள் பகவானைக் கண்டு துதி செய்த பின்னர் அமர்ந்து கொண்டோ அல்லது நின்று கொண்டோ அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனை செய்யும் முன், இடம் முதலானவற்றை மந்திர பூர்வமாக சுத்தி செய்து கொள்ள வேண்டும். சுத்தி செய்யும் முறை கீழே தரப்பட்டுள்ளது.]

 

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரௌம் ஹ்ர: அஸி உஸா என இம் மூல மந்திரங்களைச் சொல்லி அருகரை பகவரை வணங்கித் தூய நீரால் நான் இருக்கும் இடத்தைத் தூய்மை செய்கிறேன்.

 

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரௌம் ஹ்ர: ஸி உஸா ணமோர்ஹதோ பகவதே ஸ்ரீமதே பவித்ர ஜலேன உப வேசனபூமி சுத்திம் கரோமி ஸ்வாஹா:

 

(இம் மந்திரத்தைச் சொல்லி தன்னைச் சுற்றி சிறு கரண்டியால் நீர் எடுத்துத் தெளிக்க வேண்டும்.)

----------

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரௌம் ஹ்ர: அஸீ உஸா என இம் மூல மந்திரங்களைச் சொல்லி அருகரை பகவரை வணங்கித் தூய நீரால் இரு கை களையும் கழுவுகிறேன்.

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரௌம் ஹ்ர: ஸி உஸா ணமோர் ஹதே பகவதே ஸ்ரீமதே பவித்ர ஜலேன மம ஹஸ்த சுத்திம் கரோமி ஸ்வா ஹா :

 

(இம் மந்திரத்தைச் சொல்லி நீர் தெளித்து இரு கைகளையும் கழுவுதல் வேண்டும்.)

--------------------

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரௌம் ஹ்ர: அஸு உஸா என இம் மூல மந்திரங்களைச் சொல் அருகரை பகவரை வணங்கித் தூய நீரால் முழு உட லையும் தூய்மை செய்கிறேன்.

 

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரௌம் ஹ்ர: ஸி உஸா ணமோர் ஹதோ பகவதே ஸ்ரீமதே பவித்ர ஜலேன ஸர்வாங்க சுத்திம் கரோமி ஸ்வாஹா :

 

(இம் மந்திரத்தைச் சொல்லி சிறு கரண்டியால் நீர் எடுத்துத் தன் தலையில் தெளித்துத் கொள்ள வேண்டும்.)

 

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரௌம் ஹ்ர: ஸி உஸா ணமோர் ஹதோ பகவதே ஸ்ரீமதே பவித்ர ஜலேன பூஜா பாத்ர சுத்திம் கரோமி ஸ்வாஹா:

 

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரௌம் ஹ்ர: அஸி உஸா என இம் மூல மந்திரங்களைச் சொல்லி அருகரை பகவரை வணங்கித் தூய நீரால் பூஜை பாத்திரங்களைத் தூய்மை செய்கிறேன்.

 

(இம் மந்திரத்தைச் சொல்லி எட்டு விதமான அர்ச்சனை பொருள் உள்ள பாத்திரங்கள் மீது நீர் தெளிக்க வேண்டும்.)

 

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரௌம் ஹ்ர: ஸி உஸா ணமோர் ஹதோ பகவதே ஸ்ரீமதே பவித்ர ஜலேன பூஜா த்ரவ்யம் சுத்திம் கரோமி ஸ்வாஹா:

 

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரௌம் ஹ்ர: அஸி உஸா என இம் மூல மந்திரங்களைச் சொல்லி அருகரை பகவரை வணங்கித் தூய நீரால் எட்டு வித மான பூஜை பொருள்களையும் தூய்மை செய்கிறேன்.

 

(இம் மந்திரத்தெச் சொல்லி எட்டு விதமான அர்ச்சனை பொருள்கள் மீது நீர்தெளிக்க வேண்டும்)

 

தூய்மை செய்தல் முடிந்தது. இனி அர்ச்சனை தொடங்குகிறது.

 

ஸ்ரீமஜ் ஜிநேந்த்ர மபிவந்த்ய ஜகத்த்ரயேஸம் ஸ்யாத்வாத- நாயக மனந்த-சதுஷ்டயார்ஹம்1 ஸ்ரீமூலஸங்க-ஸுத்ருசாம் ஸுக்ருதைகஹேதுர்- ஜைநேந்த்ர - யஜ்ஞவிதிரேஷ மயாப்யதாயி]]

 

மூவுலக ஈசன், ஸ்யாத்வாத நீதியின் நாயகன், அனந்த நான்மையுடைய செல்வன், ஜிநேந்த்ர பக வானை வணங்கி நான் மூல சங்கத்தை ஒட்டி, நல்லுயிர்களின் நற் செயல்களுக்கு ஒரே காரணமான ஜினேந்த்ர தேவனுக்கு இந்த பூஜை முறையைச் செய்கிறேன்!

(இந்த ஸ்லோகத்தைக் கூறி புஷ்பாஞ்சலிம் க்ஷிபாமி என்று புஷ்பாஞ்சலி இடுதல் தேண்டும்.)

 

ஓம் ஜய ஜய ஜய! நமோஸ்து! நமோஸ்து நமோஸ்து!

ணமோ அரிஹந்தாணம், ணமோ ஸித்தாணம், ணமோ ஆயிரியாணம், ணமோஉவஜ்ஜாயாணம், ணமோ ளோயே ஸவ்வ ஸா ஹூணம்.

பஞ்ச பரமேட்டி போற்றி ! போற்றி! வெல்வாராக! வெல்வாராக!

அருகருக்கு வணக்கம், ஸித்தருக்கு வணக்கம், ஆசாரியருக்கு வணக்கம், வணக்கம். உபாத்தியாயருக்கு

உலகில் உள்ள எல்லா ஸாதுக்களுக்கும் வணக்கம்.

 

(இதனைச் சொல்லிக் கொண்டே புஞ்சம் வைக்க லாம்.)

 

ஓம் ஹ்ரீம் அநாதி மூல மந்த்ரேப்யோ நம: புஷ்பாஞ்சலி க்ஷிபாமி.

ஓம் ஹ்ரீம் அநாதியான மூல மந்திரங்களுக்கு வணக்கம் ; புஷ்பாஞ்சலி இடுகிறேன்.

 

(இம் மந்திரத்தைச் சொல்லி மலர் () மஞ்சள் அரிசியை இடலாம்)

 

சத்தாரி மங்களம் ;

 

- அரஹந்தா மங்களம், ஸித்தா மங்களம், ஸாஹு மங்களம், கேவலி பண் ணத்தோ தம்மோ மங்க ளம்.

 

சத்தாரி லோகுத்தமா :- அரஹந்தா லோகுத்தமா,

 

ஸித்தா லோகுத்தமா, ஸாஹு லோ குத்தமா, கேவலி பண்ணத்தோ தம்மோ லோகுத்தமா.

 

 

நான்கு பொருள்கள்

 

மங்களமானவை : அரஹந்தர் மங்கலம், ஸித்தர் மங்களம், சாது மங்களம், கேவலியால் அருளப்பட்ட தருமம் மங்களம்

 

நான்கு பொருள்கள் மிக மேலானவை

 

; அரஹந்தர் மேலானவர், சித்தர் மேலானவர், சாது மேலானவர், கேவலியால் அரு ளப்பட்ட தருமம் மேலானது.

 

சத்தாரி ஸரணம் பவ்வஜ்ஜாமி :-

 

அரஹந்தே ஸரணம் பவ் வஜ்ஜாமி, ஸித்தே ஸர ணம் பவ்வஜ்ஜாமி, ஸாஹு ஸரணம் பவ்வஜ் ஜாமி, கேவலி பண்ணத் தம் தம்மம் ஸரணம் பவ் வஜ்ஜாமி.

ஓம் நமோர்ஹதே ஸ்வாஹா:. புஷ்பாஞ்சலி க்ஷிபாமி.

 

நான்கு அடைக்கலங் களை அடைகிறேன்

: அரஹந்தரை அடைக்கலமாக அடைகிறேன்; ஸி த்தரை அடைக்கலமாகஅடைகிறேன்; சாதுக்களை அடைக்கலமாக அடைகிறேன்; கேவலியால் அருளப்பட்ட ரு மத்தை அடைக்கலமாக அடைகிறேன்.

ஓம் அருகருக்கு வணக்கம். புஷ்பாஞ்சலி இடுகி றேன்.

(இம் மந்திரத்தைச் சொல்லி மலர் () மஞ்சளரிசி இடுதல் வேண்டும்.)

 

அபவித்ர: பவித்ரோ வா ஸுஸ்திதோ து: ஸ்திதோஒபி வா I

த் யாயேத் பஞ்ச - நமஸ்காரம் ஸர்வ பாபை: ப்ரமுச்யதே II

அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோஒபி வா I

: ஸ்மரேத் பரமாத்மானம் பாஹ்யாப்யேந்தரே சுசி: II

அபராஜித மந்த்ரோ ஒயம் ஸர்வ - விக்ன - விநாசன : I

மங்கலேஷு ஸர்வேஷு ப்ரதமம் மங்கலம் மத: II

 

மனிதன் தூயவனாக இருந்தாலும், தூய்மையற்றவ னாக இருந்தாலும், நலமாக இருந்தாலும், நலிந்து இருந்தாலும், பஞ்ச மந்திரத்தை தியானிப்பவனா னால் பாபங்களிலிருந்து விடுபட்டவனாகிறான்.

 

மனிதன் தூயவனாக இருந்தாலும், தூய்மை யற்றவனாக இருந்தாலும், எல்லா நிலையிலும் பரமான்மாவை நினைப்பானானால் அகத்திலும் புறத்திலும் அவன் தூயவனே.

 

இந்த பஞ்ச மந்திரத்தை வெல்ல முடியாது; எல்லா இடையூறுகளையும் அழிப்பது; எல்லா மங்கலங்களிலும் முதன்மையான மங்கல மாகும்.

ஏஸோ பஞ்ச - ணமோயாரோ ஸவ்வபாவப்பணாஸணோ I மங்கலாணாஞ்ச ஸவ்வேஸிம் படமம் ஹோயி மங்கலம்

 

கர்மாஷ்டக - விநிர்முக்தம் மோக்ஷ-லக்ஷ்மீ - நிகேதனம் 1

ஸம்யக்த்வாதி- குணோபேதம் ஸித்த சக்ரம் நாமாம்யஹம் ||

 

அர்ஹமித்யக்ஷரம் ப்ரம்ஹ வாசகம் பரமேஷ்டின : I

ஸித்த சக்ரஸ்ய ஸத்பீஜம் ஸர்வத: ப்ரணமாம் யஹம் II

 

விக்நௌதா: ப்ரலயம் யாந்தி சாகினி - பூத - பந்நகா:1

விஷம் நிர்விஷதாம் யாதி ஸ்தூயமாநே ஜிநேச்வர II

 

இந்த பஞ்ச மந்திரம் எல்லா பாபங்களையும் அழிக்க வல்லது; எல்லா மங்கலங்களிலும் முதன் மையான மங்கல மாகும்.

 

எட்டு வினைகள் இல்லாத, முக்திஸ்ரீயின் இருப்பிடமான, ஸம்யக்த்வம் முதலான குணங்களோடு வணங்குகிறேன் . கூடிய ஸித்தர்களை எட்டு நான்

 

'அர்ஹம்' இவ்வெழுத்துக்கள் பரபிரம்ம பரமேட்டியின் வாசகமாகும் ஸித்த சமூகத்தின் அழகிய 'பீஜ' எழுத்துக்கள். இவற்றை நான்மன வசன காயத்தால் வணங்குகிறேன்.

 

ஜிநேந்த்ர பகவானை துதிப்பதால் இடை யூறுகள் எல்லாம் விலகிப் போகின்றன: பேய், பிசாசு அச்சமும் வருவதில்லை; விஷமும் தன் தன்மை இழந்து போகிறது.

 

புஷ்பாஞ்சலி இடுகிறேன் என்று சொல்லி மஞ்சள் அரிசி இட வேண்டும்.

 

(இங்கே நேரம் இருந்தால் ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் படித்து முறையாக பத்து அர்க்யம் இடலாம். இல்லை என்றால் கீழே உள்ளதைப் படித்து அர்க்யம் இடலாம்.)

 

உதக-சந்தன-தண்டுல - புஷ்பகை ச்சரு ஸுதீப ஸுதூப-பலார்க்யகை: 1 தவள - மங்கல- கான -ரவாகுலே ஜிந-க்ருஹே ஜிநநாத- மஹம்யஜே  II

ஓம் ஹ்ரீம் ஸ்ரீபகவஜ்ஜின ஸஹஸ்ரநாமப்யோ அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா I

மங்கலமான துதிகளினால் நிறைந்த ஜிநா லயத்தில் ஜிநேந்தாருக்கு நீர், சந்தனம், அரிசி, பூ, சரு, தீபம், தூபம், பழம் மற்றும் 'அர்க்யம்' கொண்டு பூஜை செய்கிறேன்.

 

அனந்த சதுஷ்டயம், ஸமவஸரணம், எட்டு பிராதி ஹார்யம் முதலான வைபவங்களுடன் கூடிய ஜிநேந்த்ர தேவருக்குடைய 1008 பேரைச் சொல்லி 'அர்க்யம்' செய்கிறேன்.

 

ஸ்வஸ்தி த்ரிலோக குரவே ஜிந -புங்க வாய ஸ்வஸ்தி ஸ்வபாவ மஹிமோதய ஸுஸ்தி தாய I

ஸ்வஸ்தி ப்ரகாச-ஸஹஜோர்ஜித -த்ருங்மயாய வெடி ஸ்வஸ்தி ப்ரஸன்ன லலிதாத்புத-வைபவாய II

மூவுலக குரு,முனிவர்தம் சுவாமி மங்கலம் ஆகுக! தம் ஆன்ம இயல்பு சிறப்பினை அடைந்த பகவான் மங்கலம் ஆகுக! இயல்புச் சிறப்பும் கேவல தர்சனமும் கூடிய ஜிநேந்திரர் நன்மையுடையவர் ஆகுக! அழகிய சமவ சரணம் முதலான வைபவமுடைய பகவன் நன்மையுடையவர் ஆகுக!

 

ஸ்வஸ்தி ஜ்வலத்விமல போத-ஸுத -ப்ளவாய் ஸ்வஸ்தி ஸ்வபாவ - பரபாவ- விபாஸ்காய்1

ஸ்வஸ்தி த்ரிலோக வித்தைக-சிதுக்கமாய ஸ்வஸ்தி த்ரிகால ஸகலாயத - விஸ்த்ருதாயll தா

தூய கேவல ஞான அமிழ்தில் தவழ்பவர், தன்னையும் பிறவற்றையும் அறிபவர், மூவுலகிலும் பரவிய ஒரே ஞானத்தை உடையவர், முக்கால பொருளிலும் ஞானத்தால் பரவிய ஜிநேந்திரர் மங்கலம் ஆகுக!

 

த்ரவ்யஸ்ய சுத்தி மதிகம்ய யதானுரூபம் பாவஸ்யசுத் மதிகாமதி கந்துகாம:1

ஆலம்பனாநி விவிதாந்ய வலம்ப்ய வல்கன் பூதார்த்த -யஜ்ஞ புருஷஸ்ய கரோமி யஜ்ஞம் 11

என் தூய நிலையை அடைய விரும்பும் நான் தேசம் காலத்திற்கு ஏற்ப சந்தனம் முதலான தூய பொருள்களைக் கொண்டு ஜிந்துதி, ஜிந தர்ஸனம் முதலானவற்றைச் சார்ந்து அருகர் முதலானவர் களுக்கு பூஜை செய்கிறேன்.

 

அர்ஹன் புராண புருஷோத்தம பாவனாநி வஸ்தூன்ய னூன மகிளான்ய மேக ஏவ1

அஸ்மின்ஜ்வலத் விமல -கேவல-போத வன்ஹௌ புண்யம் ஸமக்ரமஹமேகமனா-ஜுஹோமி 11

 

(இதி புஷ்பாஞ்சலிக்ஷிபாமி -என்று சொல்லி மஞ்சள் அரிசி இடுதல் வேண்டும்.)

 

அருகா! புராண புருஷோத்துமனே! துணை யில்லாத நான் இந்த நீர் முதலான பொருள்களைக் கொண்டு என் புண்ணியங்களை எல்லாம்; விளங்குகின்ற தூய கேவல ஞான நெருப்பில் ஒருமனத்தனாகி ஓமமாக்குகிறேன். தூய

 

புஷ்பாஞ்சலி இடுகிறேன் என்று சொல்லி மஞ்சள் அரிசி இடுதல் வேண்டும்.

 

***************************

 

ஸ்வஸ்தி மங்கலம்

 

ஸ்ரீ வ்ருஷபோ : ஸ்வஸ்தி,

ஸ்ரீ அஜித: ஸ்வஸ்தி 1

ஸ்ரீ ஸம்பவ:, ஸ்வஸ்தி

ஸ்ரீ அபிநந்தன: ஸ்வஸ்தி 1

ஸ்ரீ ஸுமதி ஸ்வஸ்தி,

ஸ்ரீ பத்மபிரப: ஸ்வஸ்தி

ஸ்ரீ ஸுபார்ச்வ: ஸ்வஸ்தி,

 ஸ்ரீ சந்த்ரபிரப: ஸ்வஸ்தி

 

ஸ்ரீ புஷ்ப தந்த: ஸ்வஸ்தி,

ஸ்ரீ சீதள: ஸ்வஸ்தி

ஸ்ரீஸ்ரேயாம்ச:ஸ்வஸ்தி,

ஸ்ரீவாஸுபுஜ்ய: ஸ்வஸ்தி

ஸ்ரீ விமல: ஸ்வஸ்தி,

 ஸ்ரீ அனந்த: ஸ்வஸ்தி

ஸ்ரீ தர்ம: ஸ்வஸ்தி,

ஸ்ரீ சாந்தி: ஸ்வஸ்தி

ஸ்ரீ குந்த்து: ஸ்வஸ்தி,

ஸ்ரீ அரநாத: ஸ்வஸ்தி

 

ஸ்ரீ மல்லி: ஸ்வஸ்தி,

ஸ்ரீ முனிஸுவ்ரத: ஸ்வஸ்தி

 

ஸ்ரீ நமி: ஸ்வஸ்தி,

ஸ்ரீ நேமி : ஸ்வஸ்தி

ஸ்ரீ பார்ச்வ: ஸ்வஸ்தி,

ஸ்ரீ வர்த்தமான: ஸ்வஸ்தி

 

ஸ்ரீ விருஷப ஜிந தேவர் நமக்கெல்லாம் மங்கல வடிவமாவதாக!

 

ஸ்ரீ அஜித ஜிந தேவர் நமக்கெல்லாம் மங்கல வடிவமாவதாக!

 

ஸ்ரீ சம்பவ ஜிந தேவர் நமக்கெல்லாம் மங்கல வடிவமாவதாக!

 

ஸ்ரீ அபிநந்தன ஜிந தேவர் நமக்கெல்லாம் மங்கல வடிவமாவதாக!

 

 

ஸ்ரீ சுமதி ஜிந தேவர் நமக்கெல்லாம் மங்கல வடிவமாவதாக!

 

ஸ்ரீ பத்ம பிரபு ஜிந தேவர் நமக்கெல்லாம் மங்கல வடிவமாவதாக!

 

ஸ்ரீ சுபார்ஸ்வ ஜிந தேவர் நமக்கெல்லாம் மங்கல வடிவமாவதாக!

 

ஸ்ரீ சந்திர பிரபு ஜிந தேவர் நமக்கெல்லாம் மங்கல வடிவமாவதாக!

 

ஸ்ரீ புஷ்ப தந்த ஜிந தேவர் நமக்கெல்லாம் மங்கல வடிவமாவதாக!

 

ஸ்ரீ சீதள ஜிந தேவர் நமக்கெல்லாம் மங்கல வடிவமாவதாக!

 

ஸ்ரீ ஸ்ரேயாம்ச ஜிந தேவர் நமக்கெல்லாம் மங்கல வடிவமாவதாக!

 

ஸ்ரீ வாசு பூஜ்ய ஜிந தேவர் நமக்கெல்லாம் மங்கல வடிவமாவதாக!

 

ஸ்ரீ விமல ஜிந தேவர் நமக்கெல்லாம் மங்கல வடிவமாவதாக!

 

ஸ்ரீ அனந்த ஜிந தேவர் நமக்கெல்லாம் மங்கல வடிவமாவதாக!

 

ஸ்ரீ தர்ம ஜிந தேவர் நமக்கெல்லாம் மங்கல வடிவமாவதாக!

 

ஸ்ரீ சாந்தி ஜிந தேவர் நமக்கெல்லாம் மங்கல வடிவமாவதாக!

 

ஸ்ரீ குந்து ஜிந தேவர் நமக்கெல்லாம் மங்கல வடிவமாவதாக!

 

ஸ்ரீ அர ஜிந தேவர் நமக்கெல்லாம் மங்கல வடிவமாவதாக!

 

ஸ்ரீ மல்லி ஜிந தேவர் நமக்கெல்லாம் மங்கல வடிவமாவதாக!

 

ஸ்ரீ முனிஸ்வ்ரத ஜிந தேவர் நமக்கெல்லாம் மங்கல வடிவமாவதாக!

 

ஸ்ரீ நமி ஜிந தேவர் நமக்கெல்லாம் மங்கல வடிவமாவதாக!

 

ஸ்ரீ நேமி ஜிந தேவர் நமக்கெல்லாம் மங்கல வடிவமாவதாக!

 

ஸ்ரீ பார்சுவ ஜிந தேவர் நமக்கெல்லாம் மங்கல வடிவமாவதாக!

 

ஸ்ரீ மகாவீர ஜிந தேவர் நமக்கெல்லாம் மங்கல வடிவமாவதாக!

[புஷ்பாஞ்சலிம் க்ஷிபாமி என்று சொல்லி மஞ்சள் அரிசியால் புஷ்பாஞ்சலி இடுதல் வேண்டும்]

 

*******************

 

நவ தேவதை பூஜை

 

ஜிந ஸித்த சூரி பாடக ஸாதுவரான் நிகில பவ்ய ஜன மஹிதான் I

 தர்மாகம ஜிநசைத்ய சைத்யாலய ஸமன்விதான் பூஜயாமி நவதேவான்II

 

உபாத்தியாயர், ஜிநர், ஸித்தர், ஆசாரியர், சாதுக்கள், ஜிந தருமம், ஜிந ஆகமம், ஜி. சைத்யம், எனப் பவ்யர்கள் போற்றும் ஜிந சைத்யாலயம் ஒன்பது தேவர்களையும் நான் பூஜிக்கிறேன்

 

ஓம் ஹ்ரீம் அர்ஹத் ஸித்தர் ஆசார்யோபாத் யாய ஸர்வ ஸாதவ: ஜிந தர்ம ஜிந ஸ்ருத, ஜிந சைத்ய, ஜிந சைத்யாலயாக்ய நவ தேவா: அத்ர அவதரக அவதரத ஸம்வெளஷட்

 

ஓம் ஹ்ரீம் அருக ஸித்த ஆசார்ய உபாத்யாய ஸர்வம்ாதுக்களே! ஜிந தரும, ஜிந் சுருத, ஜிந்த என சைத்ய, ஜிந சைத்யாலயங்களே தேவர்களே! இங்கே எழுந்தருள்வீராக! ஒன்பது

 

ஓம் ஹ்ரீம் அர்ஹத் ஸித்தர் ஆசார்யோபாத் யாய ஸர்வ ஸாதவ: ஜிந தர்ம ஜிந ஸ்ருத ஜிந சைத்ய, ஜிந சையாலயாக்ய நவ தேவா: அத்ர திஷ்டத திஷ்டத : :

 

ஓம் ஹ்ரீம் அருக ஸித்த ஆசார்ய உபாத்யாய ஸர்வ சாதுக்களே! ஜிந் தரும, ஜிந் சுருதஜிந் சைத்ய, ஜிந சைத்யாலயங்களே என தேவர்களே! இங்கே இருப்பீராக இருப்பீராக! ஒன்பது

 

ஓம் ஹ்ரீம் அர்ஹத் ஸித்தர் ஆசார்யோபாத் யாய ஸர்வ ஸாதவ: ஜிந் தர்ம ஜிந ஸ்ருத ஜிந் சைத்ய ஜிந சைத்யாலயாக்ய நவ தேவா : அத்ர ஸன்னிஹிதா பவத பவத வஷட் ஸ்வாஹா

 

ஓம் ஹ்ரீம் அருக ஸித்த ஆசார்ய உபாத்யாய ஸர்வீ சாதுக்களே! ஜிந் தரும, ஜிந் சுருத, ஜிந் சைத்ய, ஜிந சைத்யாலயங்களே என ஒன்பது தேவர்களே! இங்கே என் அருகில் அமைவீராக அமைவீராக!

 

 

ஓம் ஹ்ரீம் அர்ஹத் ஸித்தாசார்யோபாத்யாய ஸர்வஸாது ஜிந தர்ம ஜிந ஸ்ருத ஜிந சைத்ய ஜிந சைத்யாலயாக்ய நவ தேவதேப்யோ ஜன்ம ஜரா ம்ருத்யு விநாசனாய ஜலம் நிர்வபாமீதி ஸ்வாஹா|

 

ஓம் ஹரீம் அருக ஸித்த ஆசாரிய உபாத்யாய ஸர்வ ஸாது ஜிந் தர்மம், ஜிந சுருதம், ஜிந சைத்யம், ஜிந சைத்யாலயமான ஒன்பது தேவர்களுக்கும், எனது பிறப்பு, மூப்பு, இறப்பு அழியும் பொருட்டு நீரை சமர்ப்பிக்கிறேன்.

 

ஓம் ஹ்ரீம் அர்ஹத் ஸித்தா சார்யோபாத்யாய ஸர்வ ஸாது ஜிநதர்ம ஜிநஸ்ருத ஜிநசைத்ய ஜிநசைத்யாலயாக்ய நவதேவதேப்யோ ஸாரதாப ஸ்வாஹா| ஸம் விநாசனாய சந்தனம் நிர்வபாமி

 

ஓம் ஹ்ரீம் அருக ஸித்த ஆசாரிய உபாத்யாய ஸர்வ ஸாது ஜிந தர்மம், ஜிந கருதம், ஜிந சைத்யம், ஜிந சைத்யாலயமான ஒன்பது தேவர்களுக்கு பிறப் பெனும் வெப்பம் எனக்கு தணியும் பொருட்டு சந்தனம் சமர்ப்பிக்கிறேன்.

 

 

 

ஓம் ஹ்ரீம் அர்ஹத் ஸித்தா சார்யோபாத்யாய ஸர்வஸாது ஜிந்தர்ம ஜிநஸ்ருத ஜிநசைத்ய ஜிந சைத்யாலயாக்ய நவ தேவ தேப்யோ அக்ஷய பல ப்ராப்தயே அக்ஷதான் நிர்வபாமி ஸ்வாஹா

 

ஓம் ஹ்ரீம் அருக ஸித்த ஆசாரிய உபாத்யாய ஸர்வ ஸாது ஜிந தர்மம், ஜிந சுருதம், ஜிநசைத்யம், ஜிந சைத்யாலயமான ஒன்பது தேவர்களுக்கும் அழியாத பதவி நான் பெறும் பொருட்டு அக்ஷதை சமர்ப்பிக்கிறேன்.

 

ஓம் ஹ்ரீம் அர்ஹத் ஸித்தா சார்யோபாத்யாய் ஸர்வ ஸாது ஜிந்தர்ம ஜிநஸ்ருத ஜிநசைத் ஜிநசைத்யாலயாக்ய நவ தேவ தேப்யே காமபாண ஸ்வாஹா | வித்வம்ஸநாய புஷ்பம் நிர்வபாமி

 

 

ஓம் ஹ்ரீம் அருக ஸித்த ஆசாரிய உபாத்யாய ஸர்வ ஸாது ஜிந் தர்மம், ஜிந சுருதம், ஜிந சைத்யம், ஜிந சைத்யாலயமான ஒன்பது தேவர்களுக்கு காமன் அம்பு என் பொருட்டு அழிவதற்காக மலர்களை சமர்ப்பிக்கிறேன்.

 

ஓம் ஹ்ரீம் அர்ஹத் ஸித்தா சார்யோபாத்யா ஸர்வ ஸாது ஜிநதர்ம ஜிநஸ்ருத ஜிநசைத் ஜிநசைத்யாலயாக்ய நவதேவதேப்யோ க்ஷு ரோக விநாசனாய சரும் நிர்வபாமி ஸ்வாஹ

 

ஓம் ஹ்ரீம் அருக ஸித்த ஆசாரிய உபாத்யாய ஸர்வ ஸாது ஜிந் தர்மம், ஜிந சுருதம், ஜிந சைத்யம் ஜிந சைத்யாலய மான ஒன்பது தேவர்களுக்கும் எனக்கு பசி எனும் நோய் அழியும் பொருட்டு சரு சமர்ப்பிக்கிறேன்.

 

 

ஓம் ஹ்ரீம் அர்ஹத் ஸித்தா சார்யோபாத்யாய ஸர்வஸாது ஜிந்தர்ம ஜிநஸ்ருத ஜிநசைத்ய ஜிந சைத்யாலயாக்ய நவதேவதேப்யோ மோஹாந்த கார விநாசனாய தீபம் நிர்வபாமீதி ஸ்வாஹா!

 

ஓம் ஹ்ரீம் அருக சித்த ஆசாரிய உபாத்யாய ஸர்வஸாது ஜிந தர்மம், ஜிந சுருதம், ஜிந சைத்யம், ஜிநசைத்யாலயமான ஒன்பது தேவர்களுக்கும் எனது மோக இருள் அழியும் பொருட்டு தீபம் சமர்ப் பிக்கிறேன் .

 

ஓம் ஹ்ரீம் அர்ஹத் ஸித்தா சார்யோபாத்யாய ஸர்வ ஸாது ஜிந்தர்ம ஜிநஸ்ருத ஜிநசைத்ய ஜிநசைத்யாலயாக்ய நவ தேவதேப்யோ கர்மாஷ்ட தஹனாய தூபம் நிர்வபாமீதி ஸ்வாஹா!

 

ஓம் ஹ்ரீம் அருக ஸித்த ஆசாரிய உபாத்பாய ஸர்வஸாது ஜிந் தர்மம், ஜிநசுருதம், ஜிந சைத்யம், ஜிநசைத்யாலயமான ஒன்பது தேவர்களுக்கும் எட்டு வினைகளும் எனக்கு அழியும் பொருட்டு தூபம் சமர்ப்பிக்கிறேன்.

 

ஓம் ஹ்ரீம் அர்ஹத் ஸித்தா சார்யோபாத்யாய ஸர்வ ஸாது ஜிந்தர்ம ஜிநஸ்ருத ஜிநசைத்ய ஜிந சைத்யாலயாக்ய நவ தேவ தேப்யோ மோக்ஷ பல ப்ராப்தயே பலம் நிர்வபாமீதி ஸ்வாஹா

 

ஓம் ஹ்ரீம் அருக ஸித்த ஆசாரிய உபாத்யாய ஸர்வஸாது ஜிந் தர்மம், ஜிந சுருதம், ஜிநசைத்யம், ஜிநசைத்யாலயமான ஒன்பது தேவர்களுக்கும் மோக்ஷ பயன் எனக்கு கிடைக்கும் பொருட்டு பழம் சமர்ப்பிக்கிறேன்.

 

ஓம் ஹ்ரீம் அர்ஹத் ஸித்தாசார்யோபாத்யாய ஸர்வ ஸாது ஜிநதர்ம ஜிநஸ்ருத ஜிநசைத்ய ஜிந சைத்யாலயாக்ய நவ தேவ தேப்யோ அனர்கள் பத ப்ராப்தயே அர்க்யம் நிர்வபாமீதி ஸ்வாஹா)

 

ஓம் ஹ்ரீம் அருக ஸித்த ஆசாரிய உபாத்யாய ஸர்வஸாது ஜிநதர்மம், ஜிந சுருதம், ஜிந சைத்யம், ஜிந சைத்யாலய மான ஒன்பது தேவர்களுக்கும் மிக உயர்ந்த நிலை (மோக்ஷ நிலை ) நான் பெறும் பொருட்டு 'அர்க்யம்' சமர்ப்பிக்கிறேன்.

 

ஓம் ஹ்ரீம் சாந்திதாராம் நிர்வபாமி ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் புஷ்பாஞ்சலிம் நிர்வபாமி ஸ்வாஹா

 

ஓம் ஹ்ரீம் சாந்தி தாரை (நீர்) செய்கிறேன்.

ஓம் ஹ்ரீம் மலரஞ்சலி செய்கிறேன்.

 

********************

 

தேவ சாஸ்த்ர குரு பூஜை

அருகன் ஆகமம் முனி பூஜை

 

 

ஸார்வ: ஸர்வ ஜ்ஞநாத: ஸகல - தனுப்ருதாம் பாப- ஸ்ந்தாப- ஹர்தா

த்ரை லோக்யா க்ராந்த கீர்த்தி: க்ஷத-மதநரிபுர் காதிகர்ம - ப்ரணாஸ : I

ஸ்ரீ மாந் நிர்வாண ஸம்பத் வரயுவதிகரா லீடகண்ட : ஸுகண்டை :

தேவேந்த்ரைர் வந்த்யபாதோ ஜயதி ஜிநபதி: ப்ராப்த - கல்யாண - பூஜ: II

எல்லோருக்கும் நன்மை செய்கிற, முழுதுணர் ஞானமுடைய, உயிர்களின் பாப வெப்பத்தைத் தணிக்கிற, எல்லா உலகிலும் புகழுடைய, புலனின் பங்களிலிருந்து விலகிய, காதி வினைகளை அழித்த சிறப்புடன் கூடிய, முக்திப் பெண்ணால் தழுவப்பட்ட, தேவேந்திரனால் வணங்கப்பட்ட, பஞ்ச கல்யாண வைபவங்களைப் பெற்ற ஜிநேந்த்ர பகவான் எப்போ தும் வெல்பவன் ஆகுக!

 

 

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ளீம் ஐம் அர்ஹம் பரம ப்ரம்ஹணே அனந்தானந்த ஜ்ஞாநசக்தயே அர்ஹத் பரமேஷ்டின் அத்ர அவதர அவதர ஸம் வெளஷட் I

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ளீம் ஹைம் அர்ஹம் பரம பிரம்மனே, அனந்த ஞான அருக பரமேட்டியே இங்கு எழுந்தருள்க! எழுந்தருள்க!

 

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ளீம் ஐம் அர்ஹம் பரம ப்ரம்ஹணே அனந்தானந்த ஜ்ஞாநசக்தயே அர்ஹத் பரமேஷ்டின் திஷ்ட திஷ்ட ட: :

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ளீம் ஹைம் அர்ஹம் பரம பிரம்மனே, அனந்த ஞான அருக பரமேட்டியே இங்கு இருப்பீராக! இருப்பீராக!

 

 

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ளீம் ஐம் அர்ஹம் பரம ப்ரம்ஹணே அனந்தானந்த ஜ்ஞாநசக்தயே அர்ஹத் பரமேஷ்டின் அத்ர மம ஸந்நிஹிதோ: பவ பவ வஷட் ஸ்வாஹா:] I

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ளீம் ஹைம் அர்ஹம் பரம பிரம்மனே, அனந்த ஞான அருக பரமேட்டியே என் அருகில் அமைவீராகஅமைவீராக!

 

தேவி ஸ்ரீ ஸ்ருத தேவதே பகவதி த்வத்பாத பங்கேருஹத்த வந்தே யாமி ஸிலீ முக்கத்வம்பரம் பக்த்யா மயா ப்ரார்த்யதே 1

மாதஸ் சேதஸி திஷ்ட தேமே ஜிந முகோத்பூதே ஸதா த்ராஹிமாம் த்ருக் த்யாநேன மயிப்ரஸீத தாதேன. பவதீம் ஸம் பூஜயா மோஒதுனா II

தேவி! சுருத தேவி! பகவதி! உன் திருவடி மலரில் வண்டாக நான் இருக்கிறேன்! தாயே! எப் போதும் நீ என் நினைவில் நிற்பாயாக!

உன் திரு வாயில் வெளிப்பட்ட ஜிந வாணி எப்போதும் என்னைக் காப்பதாக என்னைப் பார்த்து மகிழ்விப் பாயாக! நான் உன்னை பூஜிக்கிறேன்.

 

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ளீம் ஐம் அர்ஹம் ஜிந் முகோத் பூத த்வாதசாங்க ஸ்ருதஜ்ஞான அத்ர அவதர அவதர ஸம்வௌஷட்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ளீம் ஹைம் அர்ஹம் அருகர் திருவாயில் வெளிப்பட்ட பன்னிரண்டு அங்க சுருத ஞானமே இங்கு எழுந்தருள்க! எழுந்தருள்க!

 

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ளீம் ஐம் அர்ஹம் ஜிந் முகோத் பூத த்வாதசாங்க ஸ்ருதஜ்ஞான அத்ர திஷ்ட ட:  ட:

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ளீம் அர்ஹம் அருகர் திருவா யில் வெளிப்பட்ட பன்னிரண்டு அங்க சுருதஞானமே இங்கு இருப்பாயாக! இருப்பாயாக!

 

 

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ளீம் ஐம் அர்ஹம் ஜிந் முகோத் பூத த்வாதசாங்க ஸ்ருதஜ்ஞான அத்ர மம ஸந்நி ஹிதோ பவ பவ வஷட் ஸ்வாஹா |

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ளீம் ஹைம் அர்ஹ்ம் அருகர் திருவாயில் வெளிப்பட்ட பன்னிரண்டு அங்க சுருத ஞானமே இங்கு என் அருகில் அமைவாயாக!

 

ஸம்பூஜயாமி பூஜ்யஸ்ய பாதபத்மயுகம் குரோ :

தப: ப்ராப்த-ப்ரதிஷ்டஸ்ய கரிஷ்டஸ்ய மஹாத்மந:

தபத்தால் சிறப்புற்ற, பெருமையுள்ள மகாத்மா வான குருவின் திருவடிகளை நான் பூஜிக்கிறேன்.

 

ஓம் ஹ்ரீம் ஆசார்யோபாத்யாய ஸர்வஸாது ஸமூஹ! அத்ர அவதர அவதர ஸம்வௌஷட்!

ஓம் ஹ்ரீம் ஆசாரியர், உபாத்யாயர் மற்றும் எல்லா சாதுக்கள் குழுவே! இங்கு எழுந்தருள்க! எழுந்தருள்க!

 

 

 

ஓம் ஹ்ரீம் ஆசார்யோபாத்யாய ஸர்வ ஸாது ஸமூஹ! அத்ர திஷ்ட திஷ்டட::

ஓம் ஹ்ரீம் ஆசாரிய உபாத்யாய மற்றும் எல்லா சாதுக்கள் குழுவே! இங்கு இருப்பீராக! இருப்பீராக!

 

ஓம் ஹ்ரீம் ஆசார்யோபாத்யாய ஸர்வ ஸாது ஸமூஹ! அத்ர மம ஸந்நிஹிதோ பவ பவ வஷட் ஸ்வாஹா 1

ஓம் ஹ்ரீம் ஆசாரிய உபாத்யாய மற்றும் எல்லா சாதுக்கள் குழுவே! இங்கு என் அருகில் அமைவீராக! அமைவீராக!

 

 

தேவேந்த்ர - நாகேந்த்ர - நரேந்த்ர வந்த்யான் சும்பத்பதான் சோபித - ஸாரவர்ணான் I

துக்தாப்தி- ஸம்ஸ்பர்தி குணைர் ஜூலௌகைர் ஜிநேந்த்ர - ஸித்தாந்த - யதீன் யஜேஹம் II

தேவேந்திரன், தரணேந்தரன், நரேந்தரன் முதலானவர்கள் வணங்குகிற, மேலான மோக்ஷ பதவிக்கு அதிகாரியான, அழகிய வடிவுடைய ஜிநேந் தர தேவன், சாஸ்த்ரம், குருக்களை ; நான் பாற்கடல் நீர் போன்ற தூய நீரால் பூஜிக்கிறேன்.

 

 

ஓம் ஹ்ரீம் தேவ சாஸ்த்ர குருப்யோ ஜன்ம ஜராம்ருத்யு விநாசநாய ஜலம் நிர்வபாமி ஸ்வாஹா]

ஓம் ஹ்ரீம் தேவ சாஸ்திரம் குருக்களுக்கு நான் எனது பிறப்பு, மூப்பு, இறப்பு அழியும் பொருட்டு நீரை சமர்ப்பிக்கிறேன்.

 

தாப்யத் த்ரிலோகோதர - மத்யவர்தி - ஸமஸ்த- ஸத்வாஹித ஹாரி- வாக்யான்1

ஸ்ரீ சந்தனைர் கந்த- விலுப்த - ப்ருங்கைர் ஜிநேந்த்ர - ஸித்தாந்த யதீன் யஜேஹம் ||

துயருறும் எல்லா உயிர்களுடைய துன்பங் களையும் நீக்க வல்ல, உபதேசங்களையுடைய, தேவ சாஸ்த்ர குருக்களை ; நான் மிகுந்த மணத்தோடு கூடிய சந்தனத்தால் பூஜை செய்கிறேன்.

 

ஓம் ஹ்ரீம் தேவ சாஸ்த்ர குருப்யோ ஸம்ஸார தாப விநாசநாய சந்தனம் நிர்வாபாமி ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் தேவ சாஸ்த்ர குருக்களுக்கு நான் எனது பிறப்பெனும் வெப்பம் தணியும் பொருட்டு சந்தனம் சமர்ப்பிக்கிறேன்.

 

 

அபார் - ஸம்ஸார - மஹாஸமுத்ர - ப்ரோத்தாரணேப் ராஜ்யதரீன் - ஸுபக்த்யா !

தீர்காக்ஷ தாங்கைர் தவலாக்ஷதோகைர் ஜிநேந்த்ர- ஸித்தாந்த -யதீன் யஜேஹம் ||

கடத்தற்கு அரிய பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்கு தோணி போன்ற தேறியசாஸ்த்ர குருக் களை, குறை இல்லாத முனை முறியாத அரிசியாநக (அக்ஷதையால்) பூஜை செய்கிறேன்.

 

ஓம் ஹ்ரீம் தேவ சாஸ்த்ர குருப்யோ அக்ஷய ட்ராப்தயே அக்ஷதான் நிர்வபாமி பத் ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் தேவ சாஸ்த்ர குருக்களுக்கு; அழியா நிலை எனக்குக் கிடைக்கும் பொருட்டு அக்ஷதம் சமர்ப்பிக்கிறேன்.

 

விநீத பவ்யாப்ஜ-விபோத ஸுர்யான் வர்யான் ஸுசர்யா - கதநைக-துர்யான் 1

குந்தார விந்த-ப்ரமுகை*: ப்ரஸுநைர் ஜிநேந்த்ர ஸித்தாந்த -யதீன் யஜேஹம் ||

பணியும் பவ்யர்களாகிய தாமரை மலர்களை மலரச் செய்யும் பகலவன் போன்ற, சிறப்புடைய, சரணாநுயோகத்தை விளக்குவதில் முதன்மையான தேவ சாஸ்த்ர குருக்களை, இதழ் நிறைந்த தாமரை மலர்களால் நான் பூஜிக்கிறேன்.

 

ஓம் ஹ்ரீம் தேவ சாஸ்த்ர குருப்யோ காம பாண ஸ்வாஹா வித்வம்ஸநாய புஷ்பம் நிர்வபாமி ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் தேவ சாஸ்த்ர குருக்களுக்கு; காமன் அம்புகள் என் பொருட்டு அழிவதற்காக மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்.

 

குதர்ப - கந்தர்ப - விஸர்ப -ஸர்ப - ப்ரஸஹ்ய - நிர்ணாசனவைந்தேயான்I

ப்ராஜ்யாஜ்ய ஸாரை: சருபீரஸாட்யைர் ஜிநேந்த்ர - ஸித்தாந்த -யதீன் யஜேஹம் ||

செருக்குடைய எங்கும் பரவியுள்ள காமம் எனும் பாம்பைக் கொல்லுதலில் கருடனுக்கு ஒப்பான, தேவ சாஸ்த்ர குருக்களை உத்தம நெய்யில் செய்யப்பட்ட அறுசுவையுடைய செய்கிறேன். நைவேத்யத்தால் பூஜை

 

ஓம் ஹ்ரீம் தேவ சாஸ்த்ர குருப்யோ க்ஷுதா ரோக விநாசநாய சரும் நிர்வபாமி ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் தேவ சாஸ்த்ர குருக்களுக்கு, எனது நோய் அழியும் பொருட்டு நைவேத்யம் பசி சமர்ப்பிக்கிறேன்.

 

த்வஸ்தோத்ய மாந்தீக்ருத - விஸ்வ - விஸ்வ மோஹாந்தகார-ப்ரதிகாத - தீபான் 1

தீபை : கனக காஞ்சன- பாஜநஸ்தைர் ஜிநேந்த்ர- ஸித்தாந்த-யதீன் யஜேஹம் II

ஆன்ம நன்மையின் எல்லா முயற்சிகளையும் அழித்து; உலகு எல்லாம் இருளாக்கும் உயிர்களின் மோக வடிவ இருளை அழிப்பதில் தீபம் போன்ற தேவ சாஸ்த்ர குருக்களை ; தங்க விளக்கின் தீப ஒளி காட்டி நான் பூஜிக்கிறேன்.

 

ஓம் ஹ்ரீம் தேவ சாஸ்த்ர குருப்யோ மோஹாந்த கார விநாசநாய தீபம் நிர்வபாமி ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் தேவ சாஸ்த்ர குருக்களுக்கு ; எனது மோக இருள் சமர்ப்பிக்கிறேன். அழியும் பொருட்டு தீபம்

 

துஷ்டாஷ்ட கர்மேந்தன-புஷ்ட - ஜால ஸந்தூபனே பாஸுர-தூமகேதூன் 1 தூபைர் விதூதான்ய-ஸுகந்த- கந்தைர் ஜிநேந்த்ர-ஸித்தாந்த-யதீன் யஜேஹம் ||

எட்டு வினை என்னும் விறகு கட்டுக்களை அழிப்பதில் எரியும் நெருப்புப் போன்ற தேவ சாஸ்த்ர குருக்களை அதிக மணமுள்ள தூபத்தால் நான் பூஜிக்கிறேன்.

 

ஓம் ஹ்ரீம் தேவ சாஸ்த்ர குருப்யோ அஷ்ட கர்ம தஹனாய தூபம் நிர்வபாமி ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் தேவ சாஸ்த்ர குருக்களுக்கு, எனது எட்டு வினைகளும் அழியும் பொருட்டு நான் தூபம் சமர்ப்பிக்கின்றேன்.

 

 

க்ஷுப்யத்விலுப்யந் மனஸாமயகம்யான் குவாதி- வாதாஸ்க்கலித ப்ரபாவான் I

பலைரலம் மோக்ஷ பலா ஸாரைர் ஜிநேந்த்ர- ஸித்தாந்த-யதீன் யஜேஹம் ||

சஞ்சலமும் லோபமும் உள்ள மனத்தால் அறியப் படாத, மித்யாவாதிகள் மதத்தைப் பாதிப்பதான தேவ சாஸ்த்ர குருக்களை; மோக்ஷ பயன் எனக்குக் கிடைக் கும் பொருட்டு நான் பழங்களால் பூஜிக்கிறேன்.

 

ஓம் ஹ்ரீம் தேவ சாஸ்த்ர குருப்யோ மோக்ஷ பல ப்ராப்தயே பலம் நிர்வபாமி ஸ்வாஹா1

ஓம் ஹ்ரீம் தேவ சாஸ்த்ர குருக்களுக்கு மோக்ஷ பயன் எனக்குக் கிடைக்கும் பொருட்டு பழம் சமர்ப்பிக்கிறேன்.

 

 

ஸத்வாரி - கந்தாக்ஷத புஷ்ப ஜாதைர் நைவேத்ய-தீபாமல-தூப-தூம்ரை : I பலைர் விசித்ரைர் கன புண்ய-யோகாஜ்  ஜிநேந்த்ர ஸித்தாந்த-யதீன் யஜேஹம் !!

தூய நீர், சந்தனம், அக்ஷதை, மலர்கள் நைவேத்யம், தீபம், புகையுடன் கூடிய நல்ல தூபம், பழங்களால்; எனது பெரும் புண்ணியத்தினால் தேவ சாஸ்த்ர குருக்களை நான் பூஜிக்க்கிறேன்.

 

ஓம் ஹ்ரீம் தேவ சாஸ்த்ர குருப்யோ அனர்க்ய பல ப்ராப்தயே அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் தேவ சாஸ்த்ர குருக்களுக்கு; முக்தி நிலையை நான் பெரும் பொருட்டு 'அர்க்யம்' சமர்ப்பிக்கிறேன்.

 

யே பூஜாம் ஜிநநாத - சாஸ்த்ர- யமினாம் பக்த்யா ஸதா குர்வதே த்ரை ஸந்த்யம் ஸுவிசித்ர-காவ்ய- ரசனா முச்சாரயந்தோ நரா:1

புண்யாட்யா முனிராஜ-கீர்த்தி- ஸஹிதா பூத்வா தபோ பூஷணா ஸ்தே பவ்யா: ஸ்கலாவபோத - ருசிராம் ஸித்திம் லபந்தே பராம் 11

காலை, நடுப் பகல், மாலைகளில் பல துதிகள் கூறி பக்தியுடன் தேவ சாஸ்த்ர குருக்களுக்கு; பூஜை செய்யும் பவ்விய புண்ணியர்கள், துறவு ஏற்று தவ ஒழுக்கத்தில் சிறந்து, கேவல ஞானத்தை அடைந்து, மிக உயர்ந்த மோக்ஷ பதவியை அடைகின்றார்கள்.

 

ஓம் ஹ்ரீம் தேவ சாஸ்த்ர குருப்யோ ஸர்வ கர்மணாம் சாந்தயே சாந்திதாராம் கரோமி; புஷ் பாஞ்சலிம் நிர்வபாமி ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் தேவ சாஸ்த்ர குருக்களுக்கு, எனது எல்லா வினைகளும் தணியும் பொருட்டு சாந்தி தாரை செய்கிறேன்; புஷ்பாஞ்சலி செய்கிறேன்.

 

*************************

 

தீர்த்தங்கர பூஜை

 

ஓம் ஹ்ரீம் சதுர்விம்சதி தீர்த்தங்கர பரம் ஜிந்தேவா :

அத்ர அவதரத அவதரத ஸம்வெளஷட்

நான்கு தீர்த்தங்கரர்களே ஓம் ஹ்ரீம் இருபத்து நான்கு இங்கு எழுந்தருள்வீராக! எழுந்தருள்வீராக!"

 

ஓம் ஹ்ரீம் சதுர்விம்சதி தீர்த்தங்கர பரம ஜிந்தேவா : அத்ர திஷ்டத, திஷ்டதட : ட :

ஓம் ஹ்ரீம் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களே! இங்கு இருப்பீராக! இருப்பீராக!

 

ஓம் ஹ்ரீம் சதுர்விம்சதி தீர்த்தங்கர பரம ஜிந்தேவா :

அத்ர மம ஸந்நிஹிதோ பவத, பவத வஷட் ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களே! இங்கு என் அருகில் அமைவீராக! அமைவீராக!

 

 

 

ஜலம் முதலானவற்றை முன்பு போல வரிசையாக புஷ்பாஞ்சலி வரை செய்து இந்த அர்ச்சனையை முடிக்க.

 

************************

 

விருஷப தீர்த்தங்கரர் பூஜை

 

ஓம் ஹ்ரீம் வ்ரஷப ஜிநதேவ அத்ர அவதர, அவதர ஸம்வெளஷட்

ஓம் ஹ்ரீம் வ்ரஷப ஜிநதேவ அத்ர திஷ்ட திஷ்டட: ட:

ஓம் ஹ்ரீம் வ்ரஷப ஜிந்தேவ அத்ர மம ஸந்நிஹிதோ பவ பவ வஷட்

ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் விருஷப ஜிந தேவ! இங்கு எழுந்தருள்க! ஓம் ஹ்ரீம் விருஷப ஜிந் தேவ! இங்கு இருந்தருள்க! இருந்தருள்க! ஓம் ஹ்ரீம் விருஷப ஜிந் தேவ! இங்கு என் அருகில் அமைவீராக! அமைவீராக!

 

(ஜலம் முதலானவற்றை முன்பு போல வரிசையாக புஷ்பாஞ்சலி வரை செய்து அர்ச்சனையை முடிக்க. தனியாக ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் இது போல அர்ச்சனை செய்யலாம்.)

*******************

ஸித்தர் பூஜை

 

ஓம் ஹ்ரீம் ஸ்ரீஸித்த சக்ராதிபதே ஸித்த பரமேஷ் டின்1 அத்ர அவதர அவதர ஸம்வெளஷட் ஓம் ஹ்ரீம் ஸ்ரீ ஸித்த சக்ராதிபதே ஸித்த பரமேஷ்டின் I     அத்ர திஷ்ட திஷ்டட: ட:

ஓம் ஹ்ரீம் ஸ்ரீ ஸித் தசக்ராதிபதே ஸித்த பரமேஷ்டின் 1

அத்ர மம ஸந்நிஹிதோ பவ பவ வஷட் ஸ்வாஹா

 

ஓம் ஹ்ரீம் சித்த சக்ராதிபதி சித்த! இங்கு எழுந்தருள்க! எழுந்தருள்க! ஓம் ஹ்ரீம் சித்த சக்ராதிபதி சித்த! இங்கு இருந்தருள்க! இருந்தருள்க! ஓம் ஹ்ரீம் சித்த சக்ராதிபதி சித்த! இங்கு என் அருகில் அமைவீராக! அமைவீராக!

(ஜலம் முதலானவற்றை முன்பு போல வரிசையாக புஷ்பாஞ்சலி வரை செய்து அர்ச்சனையை முடிக்க )

************************

 

விதேக க்ஷேத்திர தீர்த்தங்கரர் பூஜை

 

 

ஓம் ஹ்ரீம் விதேஹ க்ஷேத்ர வித்யமான விம்சதி தீர்த்தங்கர பரம ஜிந்தேவா : அத்ர அவதரத அவதரத ஸம்வெளஷட்

ஓம் ஹ்ரீம் விதேஹ தேசத்தில் உள்ள 20 தீர்த் தங்கர பரம ஜிந தேவர்களே!

இங்கு எழுந்தருள்வீராக! எழுந்தருள்வீராக!

 

ஓம் ஹ்ரீம் விதேஹ க்ஷேத்ர வித்யமான விம்சதி தீர்த்தங்கர பரம ஜிநதேவா :   அத்ர திஷ்டத திஷ்டத ::

ஓம் ஹ்ரீம் விதேக தேசத்தில் தீர்த்தங்கர பரம ஜிந்தேவர்களே ! உள்ள 20

இங்கு இருந்தருள்வீராக! இருந்தருள்வீராக!

 

ஓம் ஹ்ரீம் விதேஹ க்ஷேத்ர வித்யமான விம்சதி தீர்த்தங்கர பரம ஜிநதேவா : அத்ர மம ஸந்நிஹிதோ பவத பவதவஷட் ஸ்வாஹா 1

ஓம் ஹ்ரீம் விதேக தேசத்தில் உள்ள 20 தீர்த்தங் கர பரம ஜிந் தேவர்களே.

இங்கு என் அருகில் அமைவீராக! அமைவீராக!

 

(ஜலம் முதலானவற்றை முன்பு போல வரிசை யாக புஷ்பாஞ்சலி வரை செய்து அர்ச்சனையை முடிக்க. )

 

***********************

 

அர்க்யம்

 

ஓம் ஹ்ரீம் க்ருத்ரிம அக்ருத்திம ஜிநசைத்யாலய ஜிநபிம்பேப்யோ திவ்ய அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா| (அர்க்யம் சமர்ப்பித்தல் வேண்டும்)

ஓம் ஹ்ரீம் செயற்கையாகவும், இயற்கையாகவும் அமைந்த ஜிநாலயங்களில் உள்ள ஜிநபிம்பங்களுக்கு சிறந்த அர்க்யம் சமர்ப்பிக்கிறேன். (அர்க்யம் செய்தல் வேண்டும்.)

 

ஓம் ஹ்ரீம் தர்ஸன விஸுத்யாதி ஷோடஸ காரண பாவனேப்யோ திவ்ய அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா :

ஓம் ஹ்ரீம் தர்சன விசுத்தி முதலான பதினாறு காரண பாவனைகளுக்கு சிறந்த அர்க்யம் சமர்ப்பிக் கிறேன்.(அர்க்யம் செய்தல் வேண்டும்)

 

ஓம் ஹ்ரீம் அஷ்டம நந்தீஸ்வர த்வீபே பூர்வ தக்ஷிண பச்சிம உத்தர திகஞ்சன ததிமுக ரதிகர பர்வத சிகர ஸ்திக தவி பஞ்சாஸத் அக்ருத்ரிம ஜிநசைத்யாலய ஜிநபிம்பேப்யோ திவ்ய அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா :

(அர்க்யம் சமர்ப்பித்தல் வேண்டும்)

ஓம் ஹ்ரீம்எட்டாவது நந்தீஸ்வர தீவில் கிழக்கு தெற்கு, மேற்கு, வடக்கில் உள்ள அஞ்சன,ததிமுகம், ரதிகர மலைகளில் இயற்கையாக அமைந்த 52ஜிநாலய ஜிந பிம்பங்களுக்கு சிறந்த அர்க்யம் சமர்ப்பிக்கிறேன் (அர்க்யம் செய்தல் வேண்டும்)

 

ஓம் ஹ்ரீம் வ்யவஹார நிஸ்சய ரத்னத்ர யேப்யோ திவ்ய அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 1 (அர்க்யம் சமர்பித்தல் வேண்டும்)

ஓம் ஹ்ரீம் வியவஹாரம் மற்றும் நிச்சய மும்மணி களுக்கு (நற்காட்சி நல்ஞானம் நல்லொழுக்கம் ) சிறந்த அர்க்யம் சமர்ப்பிக்கிறேன். (அர்க்யம் சமர்பித் தல் வேண்டும்) =

**********************

விஸர்ஜனம்

பூஜை முடித்தல்

 

ஜ்ஞானதோS ஜ்ஞானதோ வாபி சாஸ்த்ரோக்தம் க்ருதம் மயா I தத்ஸர்வம் பூர்ணமே வாஸ்து த்வத்ப்ரஸாதாஜ் ஜிநேஸ்வரll

 

சாஸ்திரங்களில் கூறிய விதியை நான் அறிந்தா லும் அறியாவிட்டாலும் அருகா! உன் அருளால் பூஜை முழுமையாக முடிந்தது.

 

ஆஹ்வானம் நைவ ஜானாமி நைவ ஜானாமி பூஜனம்! விஸர்ஜனம் ஜானாமி க்ஷமஸ்வ பரமேஸ்வர 1

எனக்கு அழைக்கவும் தெரியாது, பூஜை செய்ய வும் தெரியாது, முடிக்கவும் தெரியாது, பரமேஸ்வரா! பொறுத்தருள்க.

 

மந்த்ர - ஹீனம் க்ரியா ஹீனம் த்ரவ்ய ஹீனம் ததைவ 1 தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவ ரக்ஷ ரக்ஷ ஜிநேஸ்வர!

மந்திரத்தில் குறையிருந்தாலும், கிரியையில் குறை இருந்தாலும், பொருளில் குறை இருந்தாலும், தேவ! அவற்றைப் பொருத்தருள்க; காத்தருள்ககாத்தருள்க!

 

பூஜை முடிந்தபின் சிறிது நேரம் ஏதாவது சாஸ்த்திரம் படித்து விட்டுச் செல்ல வேண் ம் ஜிநாலயம் என்பது சமவசரண அமைப் பகவானைத் துதித்தாயிற்று. சாஸ்திரம் படிப்பதால் திவ்யதொனியைக் கேட்டதாகும்.

 

***************************

 

 

பின் இணைப்பு

 

அபிஷேகம்

 

பூஜை என்பது அபிஷேகமும் அர்ச்சனையும் கூடியது. தமிழ் நாட்டில் ஜிநாலயங்களில் பூஜையை உவாத்தியாயர் (வாத்தியார்)கள் செய் வதால் அபிஷேகம் மற்றும் அர்ச்சனையை அவர் களே செய்து வருகின்றனர். நம்முடைய முன் னோர்கள் என்ன காரணம் கருதி உவாத்தியாயர் ஏற்பாட்டினைச் செய்தார்களோ தெரியவில்லை. ஒருக்கால் பூஜை கிரியைகளைச் சிராவகர்களுக்கு (இல்லறத்தார்க்கு) கற்றுத் தரக் கூடிய ஆசிரியராக உவாத்தியாயரை அமர்த்தி இருக்கலாம். ஆனால் காலப் போக்கில் அதனால் ஏற்பட்ட விளைவு பெரும் தீங்காக அமைந்து விட்டது. நாள் தோறும் ஜிந பூஜை செய்ய வேண்டிய இல்லறத் தார் தம் இயல்பை மறந்து பூஜையை உவாத்தி யாயர்களிடம் விட்டு விட்டு வழிபாட்டால் பெறக் கூடிய பெரும் புண்ணியத்தை இழந்து நிற்கின்றனர்.

 

பெரிய பெரிய ஜிநாலயங்களையும் படிமை களையும் அமைத்த நம் முன்னோர்கள் எவ்வளவு சிறந்த பக்தியோடு நாள் தோறும் ஜிநாலயம் சென்று வழிபட்டிருப்பார்கள் என நாம் ஊகிக் கலாம் அந்த நிலை மீண்டும் தொடர வேண்டும். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சிறுவரும் நாள் தோறும் ஜிநாலயம் சென்று வழிபடல் வேண்டும் பூஜை செய்தல் வேண்டும்.

 

ஜிந பூஜை ஒவ்வொருவருடைய கடமை அன்று - அது உயிர் மூச்சாகும். சுவாசம் சீராக இருந்தால்தான் உடல் நலமாக இருக்கும். அது போல ஜிந பூஜையைச் சீராக செய்தால் தான் வாழ்வு சீரானதாக, இனியதாக, அமைதியானதாக அமையும். நம்முடைய மனமும் வாழ்வும் சாந்தி பெற ஜிந் பூஜை செய்வது தவிர வேறு வழியே இல்லை.

 

போக உபபோகங்களில் சுகம் இருப்பதாகக் கருதி இரவும் பகலும் அதற்காகவே உயிர்கள் உழைக்கின்றன. ஆனால், அந்த உழைப்புக்காக செய்யும் பாபங்களால் நாற்கதிபிறவிகளில் உழன்று கொண்டிருக்கின்றன; துக்கத்தில் துடிக்கின்றன . அநாதி காலமாக இருந்து வரும் இந்த நிலையை மாற்றக் கூடிய ஒரே நிலையம் ஜிநாலயம் தான்- ஜிநர் வழிபாடுதான். அதனை அறிய வில்லை என்றால் நாற்கதி சுழற்சி அவர்களுக்கு இன்னும் நெடுங்காலம் இருக்கிறது என்றுதான்பொருளாகும்.

 

இந்த நூலுள் அபிஷேகம் பற்றிய விதி தரப் பட வில்லை. ஏனெனில், ஜிநாலயத்தில் அபி ஷேகம் உவாத்தியாயரால் செய்யப்பட்டு விடு வதால் அர்ச்சனை விதி மட்டுமே தரப்பட் டுள்ளது. ஆனால் அபிஷேகம் செய்யப்படாத நிலையில் அர்ச்சனை மட்டும் செய்தல் உசிதமன்று. படிமைக்கு அபிஷேகம் செய்து விட்டு பிறகு அர்ச்சனை செய்தல் வேண்டும். இது தான் முறை.இதனை நினைவில் கொள்ளுங்கள்.

 

அபிஷேக விதி தெரிய வில்லை என்றால்

 

குறைந்த அளவு கீழ் வரும் மந்திரங்களைச் சொல்லி அபிஷேகம் செய்தல் வேண்டும். கொஞ்சம அரிசியை மனையில் பரப்பி வைத்து அதில் ஸ்ரீயையும் ஸ்வஸ்திகத்தையும் எழுத வேண்டும். அதன் மீது ஒரு சிறிய கலசத் தில் (சொம்பில்) ஜலம் ஊற்ற வேண்டும்.

 

'ஓம் ஹ்ரீம் ஸ்வஸ்தயே கலச ஸ்தாபனம் கரோமி ஸ்வாஹா'

என்று சொல்லி கலசத்தில் மலரிட - மஞ்சள் அரிசி இட-வேண்டும்.

 

பிறகு 'ஓம் ஹ்ரீம் ஸ்வஸ்தயே கல ஸோத்தரணம் கரோமி ஸ்வாஹா'

என்று சொல்லி கலசத்தை இரு கைகளாலும் எடுத்து,

 

'ஓம் ஹ்ரீம் அருஹதே பகவதே ஸ்ரீமதே பவித்ர ஜலனே ஜிநம்பிஷேசயாமி ஸ்வாஹா'

என்று இம்மந்திரத்தைச் சொல்லி பகவான் முடி மீது ஜல அபிஷேகம் செய்ய வேண்டும்.

 

பிறகு, 'ஓம் ஹ்ரீம் திவ்ய ஜலனே அக்ஷதேன புஷ்பேன சரும் தீபனே தூபேன, பலனே, அர்க் யம் நிர்வபாமி ஸ்வாஹா''

என்று சொல்லி அர்க்யம்செய்து சாந்திதாரை புஷ்பாஞ்சலி செய்ய வேண்டும்.

 

இதே போன்று, பாலாபிஷேகம் செய்ய விரும் பினால்,

'ஓம்-ஹ்ரீம் பவித்ர க்ஷிரேன (பாலால்) ஜிந் மபிஷேசயாமி ஸ்வாஹா'

என்று சொல்லி பாலால் அபிஷேகம் செய்து அர்க்யம்,சாந்தி தாரை, புஷ்பாஞ்சலி செய்ய வேண்டும். பிறகு நீர் விட்டு படிமையைக் கழுவி விட வேண்டும்.

 

பிறகு, 'ஓம்-ஹ்ரீம் பவித்ர கந்தோதகேன ஜிநமபிஷேசயாமி ஸ்வாஹா'

என்று சொல்லி சந்தனம் செய்து அர்க்யம், சாந்திதாரை, புஷ்பாஞ்சலி செய்ய வேண்டும்.

 

இதோடு அபிஷேகம் முடிகிறது. அபிஷேம் செய்த பிறகு பிம்பத்தை நன்றாகத் தூய நீரால் கழுவி துவைத்த தூய துணியால் துடைக்க வேண்டும். பிம்பத்தில் கொஞ்சமும் ஈரம் இல்லாத அளவுக்குத் துடைக்க வேண்டும். திருவடி மடிப்பு முதலான இடுக்குகளில் நீர் தங்கி விடும். அதனால் அங்கெல்லாம் விழிப்பாகப் பார்த்துத் துடைக்க வேண்டும். ஈரம் இருந்தால் உயிர்கள் உற்பத்தி யாகி இம்சைக்கு வழி கோலும். அதனால் பாபம் ஏற்படும். எனவே 'பகவானை' சுத்தம் செய்து வைப்பதில் எப்போதும் விழிப்பாக இருத்தல் வேண்டும்.

அபிஷேகம் செய்த பின்பு அர்ச்சனை செய்து பூஜையை முடிக்க வேண்டும். இது நியமம்.

*************************

 

முக்கால தீர்த்தங்கரர்கள்

 

இறந்த கால தீர்த்தங்கரர்கள்

 

ஸ்ரீநிர்வாண,  ஸ்ரீஸாகர,  ஸ்ரீமஹாசாது.  

ஸ்ரீ விமலப்ரப, ஸ்ரீதர, ஸ்ரீசுதத்த,

ஸ்ரீஅமலப்ரப, ஸ்ரீஉத் தர,ஸ்ரீஅங்கிர,

ஸ்ரீசன்மதி, ஸ்ரீஸிந்து, ஸ்ரீகுஸு மாஞ்சலி,

ஸ்ரீசிவகண, ஸ்ரீஉத்ஸாஹ, ஸ்ரீஜ்ஞானேஸ்வர,

ஸ்ரீபரமேஸ்வர, ஸ்ரீவிமலேஸ்வர, ஸ்ரீயசோதர,

ஸ்ரீகிருஷ்ண, ஸ்ரீஜ்ஞானமதி,ஸ்ரீசுத்த மதி,ஸ்ரீ

பத்ர,ஸ்ரீஅதி கிராந்த, ஸ்ரீசாந்த.

 

நிகழ்கால தீர்த்தங்கரர்கள்

 

ஸ்ரீ விருஷப நாதர், ஸ்ரீ அஜித நாதர்,ஸ்ரீ ஸம் பவ நாதர்,

ஸ்ரீ அபினந்தனர், ஸ்ரீ சுமதி நாதர்,ஸ்ரீ பத்மபிரபர்,

ஸ்ரீ சுபார்ஸ்வர், ஸ்ரீ சந்திரப்ரபர், ஸ்ரீபுஷ்பதந்தர்,

ஸ்ரீ சீதளர்,ஸ்ரீ ஸ்ரேயாம்ஸர், ஸ்ரீ வாசு பூஜ்யர்,

 ஸ்ரீ விமல நாதர், ஸ்ரீ அனந்த நாதர், ஸ்ரீ தர்மநாதர்,

ஸ்ரீ சாந்தி நாதர்,ஸ்ரீ குந்து நாதர், ஸ்ரீ அரநாதர்

ஸ்ரீ மல்லி நாதர்,ஸ்ரீ முனிசுவிரதர், ஸ்ரீ நமிநாதர்,

ஸ்ரீ நேமிநாதர்,ஸ்ரீ பார்சுவ நாதர், ஸ்ரீ வர்த்தமானர்.

 

வருங்கால தீர்த்தங்கரர்கள்

 

ஸ்ரீமஹாபத்ம,ஸ்ரீஸுரதேவ ஸ்ரீசுபார்ஸ்வ,

ஸ்ரீஸ்வயம்ப்ரப, ஸ்ரீஸர்வாத்மபூத, ஸ்ரீதேவ புத்ர,

ஸ்ரீகுலபுத்ர, ஸ்ரீஉதங்க, ஸ்ரீப்ரோஷ்ட்டில,

 ஸ்ரீஜய கீர்த்தி, ஸ்ரீமுனிஸுவ்ரத, ஸ்ரீஅர,

ஸ்ரீநிஷ்பாப ஸ்ரீநிஷ்கஷாய, ஸ்ரீவிபுல,

ஸ்ரீநிர்மல,ஸ்ரீசித்ர குப்த, ஸ்ரீசமாதி குப்த,

ஸ்ரீஸ்வயம்பு, ஸ்ரீ அனிவர்தக, ஸ்ரீஜய,

 ஸ்ரீவிமல ஸ்ரீதேவபால, ஸ்ரீ அனந்த வீர்ய.

 

***************************

 

துதிகள்

 

தமிழ் இலக்கியங்களில் உள்ள சில துதிகளைக் கீழே தந்துள்ளோம். பூஜை முடித்து பகவானுக்கு தீப ஆரத்தி எடுக்கும்போது அல்லது பகவானைத் தரிசிக்கும் போதும் இதனைப் பாடலாம்.

 

1 ஆதிவேதம் பயந்தோய் நீ அலர்மெய்ம் மாரி அமைந்தோய் நீ நீதி நெறியை உணர்ந்தோய் நீ நிகரில் காட்சிக்கு இறையோய் நீ நாதன் என்னப் படுவாய் நீ நவைசெய் பிறவிக் கடலகத்துஉன் பாத கமலம் தொழுவேங்கள் பசையாப்பு அவிழப் பணியாயே!

 

2 இன்னாப் பிறவி இகந்தோய் நீ இணைஇல் இன்பம் உடையோய்நீ மன்னா உலகம் மறுத்தோய்நீ வரம்பில் காட்சிக்கு இறையோய்நீ பொன்னார் இஞ்சிப் புகழ்வேந்தே பொறியின் வேட்கைக் கடல்அழுந்தி ஒன்னா வினையின் உழல்வேங்கள் உயப்போம் வண்ணம் உரையாயே!

 

3 உலகம் மூன்றும் உடையோய்நீ ஒன்பொன் இஞ்சி எழிலோய்நீ திலகம் ஆய திறலோய்நீ தேவர் ஏத்தப்படுவோய் நீ அலகை இல்லாக் குணக்கடலே யாரும் அறியப் படாயாதி கொலைஇல் ஆழி வலன்உயர்த்த குளிர்முக் குடையின் நிழலோய் நீ!

 

-சீவகசிந்தாமணி

 

4 காதி நன்மை கடந்தோய்நீ கடையில் நான்மை அடைந்தோய்நீ வேதம் நான்கும் விரித்தோய்நீ விகல நான்மை இரித்தோய்நீ கேதம் நான்மை கெடுத்தோய்நீ கேடுஇல் இன்பக் கடலோய்நின் பாத கமல பணிவாரே உலகம் பணிய வருவாரே!

 

5 பதினெண் குற்றம் அரிந்தோய் நீ பரம நான்மை அடைந்தோய்நீ இதம்எவ் வுயிர்க்கும் அளிப்போய்நீ இன்னாப் பிறவி எறிவோய்நீ கதமும் மதமும் காமனையும் கடந்து காலன் கடந்தோய்நின் பதபங் கயங்கள் பணிவாரே உலகம் பணிய வருவாரே!

 

6 சிந்திப் பரிய குணத்தோய்நீ தேவர் ஏத்தும் திறலோய்நீ பந்தம் பரியும் நெறியோய்நின் பாத கமலம் பணிவாருக்கு அந்தம் இல்லா இன்பத்தை அளித்து முத்தி அகத்திருத்தும் எந்தை பாதம் பணிவார்இவ் உலகம் பணிய வருவாரே!

 

-மேருமந்தரம்.

 

7 திருமறு மார்பினை! திலகமுக் குடையினை! அருமறை தாங்கிய அந்தணர் தாதையை! அருமறை தாங்கிய அந்தணர் தாதை! நின் எரிபுரை மரைமலர் இணை அடி தொழுதும்!

 

8 உலகுஉணர் கடவுளை! உருகெழு திறலினை நிலவிரிகதிர் அணி நிகர்அறு நெறியினை! நிலவிரி கதிர் அணி! நிகர்அறு நெறியை! நின் அலர்கெழு மரைமலர் அடிகளை தொழுதும்!

 

9 மறுஅற உணர்ந்தனை! மலம்அறு திகிரியை பொறிவரம்பு ஆகிய புண்ணிய முதல்வனை பொறிவரம்பு ஆகிய புண்ணியமுதல்வ! நின் நறைவிரி மரைமலர் நகும்அடி தொழுதும்!

 

10 கொங்கு விம்மு குளிர்பிண்டிக் குழவி ஞாயிற்று எழில்ஏய்ப்பச் சிங்கம் சுமந்த மணி அணைமேல் தேவர் ஏத்திச் சிறப்பு அயர எங்கும் உலகம் இருள் நீங்க இருந்த எந்தை பெருமானார் தங்கு செந்தா மரை அடிஎன் தலைய வேஎன் தலையவே!

 

- சீவக சிந்தாமணி.

 

 

----------------------------------

 


 

 

 


No comments:

Post a Comment