பக்தாமரம் - Bhaktamar
Special Features - சிறப்பு அம்சங்கள்
இதுவும் ஒரு பக்திமாலை, முழுவதும் சரணாகதியே நம்வாழ்வில் மறுமலர்ச்சியும்,
உய்ய வழியையும் அளிக்கும் என்பதை தெரிவிப்பது இதன் நோக்கம்.
*தன்னை சாமாண்யனாக பாவித்து, வணங்கும் தெய்வத்தின் தன்மைகளை உச்சரிக்கும்
போது, சிறுக சிறுக தனது ஆளுமையைச் சிதைத்து வணங்கும் தெய்வத்தின் குணங்கள் ஊடுருவச்செய்யும்,
சுயவசிய முறையே பக்திப் பாடல்கள் ஏற்பட்டதின் நோக்கம்.*
பக்தாமரம் 1100 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமஸ்கிரத பாடல், என்பதால்
சிலர் 44 பாடல் வரிகளை சொல்லி துதிக்கின்றனர் (ஸ்வேதாம்பர்). 48 பாடல்களைச் சொல்லி
வரும் மரபு பெரும்பாலானாவையாகும்.(திகம்பர்). மிகச்சிலரே 52 பாடல் வரிகளை கூறி துதிப்பவர்களும்
உண்டு. (அந்த 4 நான்கு செய்யுட்கள் கிடைக்க வில்லை, யாரேனும் வைத்திருந்தால் தெரிவிக்கும் படி கேட்டுக்
கொள்கிறேன்.)
மானதுங்காச்சாரியார் – பக்தாமரம் பற்றிய கதைகள் ஒவ்வொரு பகுதிக்கும்
சற்று வேறுபடுகின்றன. இதிலிருந்து ஆரம்ப காலத்தில்
செவி வழிச் செய்தியாக இருந்துள்ளது என்பதை அறியலாம். பின்னர் அந்தந்த கதாசிரியர்களும்
தங்களுக்கு தெரிந்த கதைகளை வழங்கியுள்ளனர். ஆனால் யாரும் இதன் சிறப்பை குறைத்து மதிப்பிடவில்லை.
தேவபாஷையான தேவநாகரி பரவலாக தெரியாதவர்கள் சமஸ்கிரதத்திலேயே பாடி
பயன் பெறுகின்றனர். இதனை சரியாக ஒலிபெயர்ப்பு ஆங்கிலத்தில் செய்யாமல் ரோமன் எழுத்துக்களையே
பயன் படுத்தியுள்ளனர்.
இதன் பாடல் வரிகள் ஒவ்வொன்றிலும் 14 சமஸ்கிரத எழுத்துக்களைக் கொண்டுள்ளது.
ஆக மொத்தம் 2880 எழுத்துக்களை பெற்றுள்ளது. ஒவ்வொரு உச்சரிப்பும் இசைப்பண்ணிற்கு
(musical notes) மிகச்சரியாக அமைக்கப்பட்டுள்ளன. அதனால் சரியான உச்சரிப்பை கற்றுக்
கொண்டால் பீஜ மந்திரத்திற்கு இணையான பலனை அளிக்கும் என்பதை பல ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்ற நூற்றாண்டுவரை பன்நிலை ஆராய்ச்சி மேற்கொண்டதில் ஒரு நோய்
நிவாரண மையமே (healing centre) துவங்கப்பட்டுள்ளது என்பதும், அதில் பல ஆங்கில மருத்துவர்கள்
பணிபுரிகின்றனர் என்பது வியப்பளிக்கும் செய்தியாகும்.
மொழிக்கடலான மானதுங்கரால் அழகான சரணங்கள், சீர்மையான வரிகளால் அமைக்கப்பட்ட
பக்தாமரம் எனும் பக்திப்பாடல் ரிஷபதேவரைக் குறித்துப் பாடப்பட்டதாக சொல்லப்பட்டாலும்,
அனைத்து ஜினர்களின் குணங்களையே பிரதானமாக தெரிவிக்கிறதென்பது உண்மையாகும்.
முதற்பாடலில் தீர்த்தங்கரரின் பாதகமலத்திற்கு தனது அஞ்சலியை தெரிவித்திருப்பினும்,
ப்ரனதமாம் ஜினேந்திரம் என்று குறிப்பிட்டதினால் முதல் ஜினரான ஆதிநாதரை குறித்து பாடுவதாக
பெரும்பாலானவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் எந்த ஒரு ஜினரின் நாமமும் செய்யுட்களில் சுட்டப்படவில்லை.
ஆரம்பத்தில் ரிஷபரை குறிப்பதாக எடுத்துக் கொண்டாலும், பின்வரும் பாடல்களில் “உனையே” என்றுதான் பக்தி மிகுதியில்
குறிப்பிடுகின்றார்.
நிகழ்கால சக்கரத்தின் முதல் தீர்த்தங்கரர் எனும் குறிப்புள்ளதால்
ஸ்ரீஆதிநாதருக்கான பக்தி மாலை என்று கூறப்படுகிறது. சூரியனைப் போன்ற வண்ணமுடியவரே போன்ற
உவமைகளைத் தவிர, மற்றபடி எந்த சரணங்களிலும் வேறு குறிப்புகள் இல்லை. அதே சமயம் வேறு
சில ஜினர்களும் அதே வண்ணத்தில் உள்ளனர்.
அதனால் இத்துதிப்பாடல் எந்த ஒரு ஜினரின் பண்புகளையும், மேன்மையையும்
எடுத்தியம்புவதாக இருப்பதினால் பொதுவான அருகர் துதிப்பாடலாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் முழுதுணர் ஞானம் அடைந்து விடுதலை பெற்ற அனைத்து முக்தஜீவன்களுக்கும் பொருந்துவனவாகவும் உள்ளது.
அதனால் இத்துதிகள் ஆன்ம முன்னேற்றம் அடைந்த அனைத்து ஆன்மாக்களுக்கான துதியாகவும் எடுத்துக்
கொள்ளப் படுகிறது.
மற்ற ஜின ஸ்தோத்திரங்களான கல்யாண மந்திரம், ஏகீபாவம், விஷாபஹாரம்,
பூபாளம் போன்றவை இதுபோன்றல்லாமல், குறிப்பிட்ட
ஒரு ஜினரைப் போற்றி பாடுவதாக அமைந்துள்ளன.)
எந்த ஒரு ஆத்மார்த்தமான துதிப்பாடலும், வணங்கப்படும் குணங்களை பெற்றுத்தரும்
என்பதை இந்த புலவர் தனது பாடலின் வழியே அறிவுறுத்துகின்றார்.
முழுநிறை ஓளியையும், முழுஅமைதிக்கான சமாதானத்தையும் அப்பக்திப்பாடல்களில்
தெரிவிப்பது ஒப்புயர்வற்றதாக ஜினரின் தனித்தன்மை மற்றும் பிரத்யேக சூழலை தெரிவிக்கும்
முகமான இருஅம்சங்கள் எங்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அடுத்து ஜினரின் முழுமையை வலியுறுத்தும் விதமாக பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேர்மறைக் குணங்களையும், அப்பழுக்கில்லா
தூய்மைத்தன்மையையும் கொண்டவராக தெரிவிக்கிறது.
சமணத்தின் பாலுள்ள நம்பிக்கையின் வழியே பாடலில் குறிப்பிட்ட நாமத்தை
கூறுவதாலும், நினைவுறுத்தி பாடுவதாலும் பிரத்யேக
ஆற்றலை அளிக்கிறது. அதனால் அது மந்திரமாக குறிப்பிடப்படுகிறது.
சில பாடல்கள் தனித்துவமான வேண்டுதல்களுக்கு நிறைவையளிக்கும் அதிசய
சக்தி வாய்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.
செல்வத்தை பெற 2ம், 36ம், 48ம்
ஞானத்தை பெற 6 வதும்
பேச்சுத்திறனை வளர்க்க 10 வது பாடலும்,
இடர்களிலிருந்து விடுதலை பெற 7 வதும்,
வியாதியிலிருந்து விடுபட, வலி குறைய 17ம், 45 மாக,
சிறை மற்றும் மன அழுத்ததிலிருந்து விடுதலை
பெற 46 வது பாடலும்
அச்சம் நீங்க 47ம்,
பாம்பு கடி, விஷமுறிக்கான பாடல் 41 ம்
மனோ வசிய தடுப்புக்கான பாடல் 9 ம்
தேவைகள் நிறைவேற பாடல்
19ம் ஆக
குறிப்பிடப்படுகிறது.
இத்தொகுப்புப் பாடல்கள் பக்தர்களுக்கு இதயபூர்வ சமண வழிபாட்டுமுறையை
செய்ய தூண்டுகிறது.
இப்பாடல்கள் இந்நவீன காலத்திலும் சமணத்தின் வழியே தெய்வீகத்தன்மையை
தெரிவிக்கின்றன.
அதனால், நாத்திகக் கொள்கையை கொண்டவரல்ல சமணர்கள் என்பதை உலகிற்கு
தெளிவுபடுத்துகிறது.
------------------------
Bhaktamara Stotra is a famous Jain Sanskrit prayer. It was
composed by Acharya Manatunga (seventh century CE).
The name Bhaktamara comes from a combination of two sanskrit
names, "Bhakta" (Devotee) and "Amar" (Immortal).
The prayer praises Rishabhanatha(adinath) , the first
Tirthankara of Jainism. There are forty-eight verses in total. The last verse
gives the name of the author Manatunga. Bhaktamar verses have been recited as a
stotra (prayer), and sung as a stavan (hymn), somewhat interchangeably.
Other Jain prayers have taken after these (such as the
Kalyānamandira stotra, devoted to the twenty-third tirthankara, and the
Svayambhu stotra, to all twenty-four); additional verses here praise the
omniscience of Adinatha,[2][3] while devotionals are considered a source for
lay understandings of Jain doctrine.[4]
As the second verse states, it is in the praise of the first
Tirthankara, Lord Rishabha. There is some variation in the number of verses in
the avaialble manuscripts, some have 48 verses while others have 44 verses. A
few have 52 verses. The last verse gives the name of the author Manatunga.
Bhaktamar, have given the original stanza in Sanskrit and
then the transliteration in Roman. Those readers who are not conversant with
the devnagari script can enjoy reciting the original Sanskrit text.
The Bhaktamar Stotra has 48 stanzas. Every stanza has four
parts. Every part has 14 letters. Thus the complete panegyric is formed by 2888
letters.
The poet has composed a hymn of praise to the first Jina,
who is specified at the beginning. However, the hymn pays more attention to the
general attributes of the Jina concept than to the individual qualities of Ṛṣabhanātha or Lord Ṛṣabha, the first Jina.
In the opening stanzas Mānatuṅga
pays homage ‘to the two feet of the Jina, who is like a support in the
beginning of the era’ – yugādau – and then says ‘I will praise the first Jina’
– prathamaṃ Jinendraṃ.
But no name as such appears in the poem. The Jina is first
referred to as 'him' and later, as devotion increases closeness, is addressed
as ‘you’. No individual reference or name relating to the life of the first
Jina, Ṛṣabhanātha or
Ādinātha, ‘the Lord of the beginning’, is found otherwise. There is no mention
of a specific feature except allusions to ‘his sun-like colour’, which can be
understood as referring to the golden colour of this Jina. Even so, other Jinas
are associated with the colour gold.
The Bhaktāmara-stotra is, rather, a hymn to any Jina because
it deals primarily with the nature and attributes of a Jina as a supreme
entity. Beyond karma and rebirth, he is dispassionate, representing infinite
knowledge as well as bliss. The hymn is thus a celebration of the liberated
soul. It is the result of full devotion – bhakti – to a spiritual being. Many
other Jain hymns narrate a specific Jina’s life in the form of a praise, but
not this one. Here the poet explicitly states that devotion justifies his
undertaking and gives it any quality it might have.
Two features are repeatedly underlined in the devotional
song. These following qualities make a Jina distinctive and create a special
atmosphere:
radiant light and perfect brightness, which are unequalled
perfect serenity and peace, also unmatched.
To demonstrate the points, the poet systematically compares
with the Jina other well-known standards of light or brightness, particularly
the sun and the moon.
Another recurring theme of the hymn is the emphasis on the
Jina’s perfection. He has only positive qualities, with no defects or
impurities. These qualities are beyond expression.
Demonstrating devotion in the Jain faith involves
mentioning, remembering or reciting a particular name, because it is credited
with a special power. It is significant that the name is described as a mantra.
It is said that some specific stanzas are miraculously
effective for fulfillment of different purposes
For wealth - 2nd, 36th, and 48th
For improving knowledge - 6th
For improving oratory to be true - 10th
For relief from disturbances - 7th
For relief from diseases and pain - 17th and 45th
For release from prison and state of depression - 46th
For removal of fears - 47th
For cure of snakebite and poisoning - 41st
For protection of bewitching spells - 9th
For fulfillment of needs - 19th
These are the groups of hymns that make up the heart of Jain
liturgy among devotees.
In modern times this hymn has been seen as containing a
definition of divinity in the Jain sense of the word. In the late 19th century
that it proves Jains are not atheists .
SHARE ME 52 SLOKS BHAKTAMAR
ReplyDeletehttp://www.ahimsaiyatrai.com/p/blog-page_72.html
ReplyDeleteonly 48 slokas in the site