பக்தி செய்து வணங்குதல்



பக்தி செய்து வணங்குதல்



ஓம் நமோ அரஹந்தானம்

ஓம் நமோ ஸித்தானம்

ஓம் நமோ ஆயிரியாணம்

ஓம் நமோ உவஜ்ஜாயாணம்

ஓம் நமோ ளோயே ஸ்வ்வ ஸாகூனம்



ஜிநாலயம் திரிலோகேஷு அதோ மத்யம ஊர்தவயோ
ஜிநா பிம்பானி வந்தேகம் கருணைச் சுத்ரி காலயேது கோமள கதளிபத்ரம் ஸ்படிகம் பாலார்க்க ஹேம நீலாபம் பஞ்சபரமேஷ்டி வர்ணம் பாவநம் பவ விநாசனம் சதுர்விம்சதி தீர்த்தே சான் சதுர்கதி நிவர்த்தயே விரஷபாதி மஹாவீர்யம் பர்யந்தம் ப்ரணமாம் யகம்.


சர்வார்த்த சித்திக்கு மேல் 12 யோசனை உயரம் சென்ற அளவில்  தெற்கு வடக்கு 7 கயிறு நீளமும் கிழக்கு மேற்கு ஒரு கயிறு அகலமும் உள்ள எட்டாவது பிரத்வியின் நடுவில் 8 யோஜனை உயரமும் 45 லட்ச யோஜனை பரப்பளவு உள்ளதும் ஐப்பசிப் பிறை போன்றதுமான சித்த சிலையில் 170 தர்ம கண்டத்திலுள்ள ஜைன வம்சத்து  சிராவக ஜனங்கள் தவங்களைக் கொண்டு தவப் பிரபாவத்தால் கர்ம க்ஷயம் செய்து வீடுபேறு அடைந்த உயர்ந்த அவகாகனசித்தர் 525 வில் உயரமும் தாழ்ந்த அவகாகன சித்தர் 7 முழ உயரமும் நடுத்தர அவகாகன சித்தர் நானாவிதங்களாகவுமிருக்கும் சித்த பரமேஷ்டிகளுக்கும், முக்கால மூவுலக பவ்ய ஜனமஹித 72 தீர்த்தங்கர்களுக்கும் பஞ்சமேரு சதுஷ்கோண விதேக க்ஷேத்ரஸ்தித விந்தியமான சமவசரணாதி விபூ´ கேவலக்ஞான சம்பன்ன நியத ஸ்ரீமந்தரர் முதல் அஜிதவீர்யர் வரை 20 தீர்த்தங்கரர்களுக்கும் நந்தீஸ்வர த்வீப பஞ்சமேரு சதுர்திக்கு சதுர்த்திசாவர அக்ருத்திம ஜிநாலய ஜிநபிம்பங்களுக்கும் நமோஸ்து  நமோஸ்து.


பரத பாகுபலி பவ்ய ஜன ஹஸ்தாவலம்பித தசலக்ஷண தசதர்மாய ஷோடச பாவன காரண மகாதிசயாய ஜினகுண சம்பத முக்திபத காரண ஸ்வரூபாய பஞ்ச மகாவிரத பஞ்ச சமிதி திரி குப்தி பஞ்சாஸ்தி காய ஷட் ஜீவ நிகாயிக நவபதார்த்தஸ்ய திரியத்திரிம்  சத்ரத்தியா சாதனாய சர்வ தோஷ பிராயச்சித்தாய ஞானாவரணாதி மூலோத்தர உத்ரோத்தர பிரகிருதி கர்ம ரஹிதாய அனேக சங்கட சம்சார துக்க நிவாரணாய ஸ்ரீகைலாசகிரி, சம்மேத கிரி, சம்பாபுரி, பாவாபுரி, ஊரஜயந்தகிரி, சத்ருஞ்சய கிரி, கஜபந்தா, மங்கி துங்கி, தாரங்காதி பரிநிர்வாண பூமி சித்த க்ஷேத்ர சித்தவர கூட சித்த சமூகங்களுக்கும்எட்டு கோடியே ஐம்பத்தி ஆறு லட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து நானூற்றி எண்பத்து ஒன்று அகிருத்திம ஜிநாலயங்களுக்கும் ஆதிபகவான் உயரமாகிய ஐநூறு வில் பிரமாணமாகி கிழக்கு முகம் நோக்கி பர்யங்காசனமாய் அமர்ந்திருக்கும் தொள்ளாயிரத்து இருபத்து ஐந்து கோடியே ஐம்பத்தி முன்று லட்சத்து இருபத்து ஏழாயிரத்து தொளாயிரத்து நாற்பத்தெட்டு அகிருத்திம ஜின பிம்பங்களுக்கும் அனந்த சங்கியை யுடைய சித்த பரமேஷ்டி களுக்கும் திரிகரண சுத்தியால் மூவேளைகளிலும் மூவலம் வந்து அனந்தானந்த வாரம் நமோஸ்து நமோஸ்து நமோஸ்து

இருபத்தி எட்டு மூலகுணமும் முப்பத்திஆறு உத்தரகுணமும் பதினெண்ஆயிரம் சீலாச்சாரமும் எண்பத்து நான்கு லட்சம் குணவிரதமும் நூறு கோடி மகாவிரதமும் தரித்த சப்த ரித்தி சம்பன்னர்களுமான கணதராதி பரம தேவர்களுக்கும் நாற்பத்தி இரண்டு பரம ஆகமங்களைத் தரித்த த்ரயோதச கிரியை நிறைந்த மஹாமுனிகட்கும் எட்டு கோடியே தொன்னூற்று ஒன்பது லட்சத்து தொன்னூற்று ஒன்பதாயிரத்து தொளாயிரத்து தொன்னூற்றி ஏழு சர்வ சம்யத்துவர்களுக்கும் நித்தம் திரிகரண சுத்தியால் மூவேளைகளிலும் மூவலம் வந்து அனந்தானந்த வாரம் நமோஸ்து நமோஸ்து நமோஸ்து.



No comments:

Post a Comment