tattvartha sutra - chapter 7


தத்வார்த்த சூத்திரம்: - அத்தியாயம் # 7
 




கடவுள் வாழ்த்து



மோக்ஷ மார்கஸ்ய நேதாரம் பேதாரம் கர்ம பூப்ப்ருதாம்
ஞாதாரம் விஸ்வ தத்த்வானாம் வந்தே தத்குண லப்த்தயே

த்ரைகால்யம் த்ரவ்ய ஷட்கம் நவபத ஸ்ஹிதம் ஜீவ ஷட்காய லேஸ்யா:
பஞ்சான்யே சாஸ்திகாயா வ்ரத ஸ்மிதி கதி ஞான சாரித்ர பேதா:

இத்யேதன் மோக்ஷ மூலம் த்ரிபுவன மஹிதை:ப்ரோக்தம் அர்ஹத் பிரீஷை:
ப்ரத்யேதி ஸ்ருத்ததாதி ஸ்ப்ரூஷதி ச மதிமான் ய: ஸ வை சுத்தத்ருஷ்டி:

ஸித்தே ஜ்யப்பஸித்தே சவ்விஹராஹணா ஃபலம் பத்தே
வந்தித்தா அரஹந்தே வோச்சம் ஆராஹணா கமஸோ

உஜ்ஜோவணம் உஜ்ஜவணம் ணிவ்வஹணம் ஸாஹணம் ச ணிச்சரணம்
தம்ஸணணாண சரித்தம் தவாணம் ஆராஹணா ஃபணியா

----------------

முன்  ஆறு அதிகாரம் வரை ஜீவ, அஜீவ, ஆஸ்ரவ பதார்த்தம் வரை வழங்கப்பட்டது.

தற்போது சுபச் செயல்களை சிறப்பாக அறிய விரதங்கள் பற்றி சொல்லப்படுகிறது.


சுப ஆஸ்ரவம் - விரதங்கள்



ஹிம்ஸாந்ருதஸ்தேயா ப்ரம்ஹ பரிக்ரஹேப்யோ விரதிர்வ்ரதம்  -  (சூ1) = (237)


हिंसाव-तस्तेयाब्रह्मपरिग्रहेभ्यौ विरतिर्व्रतम


Hinsa(a)nrta-steyabrahma-parigrahebhyo viratirvratam



ஹிம்ஸா – கொலை; அந்ருத – பொய்; ஸ்தேய- களவு; அப்ரம்ஹ – காமம்; பரிக்ரஹேப்யோ – பொருட்பற்று ஆகிய (இவற்றை) ; விரதிர் – விடுதல்; வ்ரதம் – விரதம் எனப்படும்.


Desisting from injury, falsehood, stealing, unchastity and attachment is the fivefold vow.  



கொலை, பொய், களவு, காமம், பொருட்பற்று ஆகிய இவ்வைந்தும் பாபங்களை செய்யாமல் விலகுவது விரதம் எனப்படும்.

நிதானத்துடன் யோசித்து, பின் உறுதி செய்து கொண்டு தனக்குத்தானே குறிப்பிட்ட விதிமுறைப்படி நடந்து  கொள்வதும் விரதம் எனப்படுகிறது.

இவை செயலாற்ற தகுந்தவை மற்றும் தகாதவை என்கின்ற பகுத்துணர்வுடன் நியமம் செய்வதும் விரதம் எனப்படும்.
--------------
அடுத்து  விரதங்களின் வகைகளைக் காண்போம்….

------------------


விரதங்களின் வகைகள்



தேசஸர்வதோSணுமஹதீ – (சூ2) = (238)


देशसर्वतोऽणुमहती


Desasarvato (a)numahati



தேசஸர்வத: – (கொலை முதலான பாபங்களை) ஏகதேசம் (partial) (ஒரு பகுதி)/ முழுவதுமாக (totally) விடுதல்; அணுமஹதீ – முறையே அணுவிரதம், மஹாவிரதம் ஆகும்.

The vow is of two kinds, small and great from its being partial and total. 



ஐம்பெரும் பாவங்களிலிருந்து சக்திக்கேற்ப விலகியிருத்தல் அணுவிரதம்;
முழுவதுமாக விலகியிருத்தல் மஹாவிரதம் என்றும் கூறப்படும்.

ஒருவர் இவ்விரதங்களை விழிப்புடன் குற்றமின்றி கடைபிடித்தால், அவருடைய துக்கங்கள் பனிபோல விலகி விடுகின்றன.

இம்சை ஸ்தாவர, திரஸ என இருவகையாகும்.

2,3,4,5 இந்திரிய ஜீவன்களுக்கு இம்சைகளை விடுதல் திரச இம்சை விடுதல்; அஹிம்சா அணுவிரதம்.

ஒரு இந்திரிய ஜீவன் களுக்கு, அதாவது அது 5 வகை மண்ணுடலி, நீருடலி, நெருப்புடலி, காற்றுடலி, தாவரம் போன்றவைகளுக்குமாக விடுதல் அஹிம்சை மகாவிரதம் ஆகும்.

அதே போல் பொய், திருடு, பிரம்மசர்யம், பற்று போன்றவற்றில் ஒருபகுதி விடுதல் அணுவிரதம். முழுவதுமாக விடுதல் மஹாவிரதம்.

அரச தண்டனை கிடைக்கும், உலக நிந்தை வரும் என பொய், திருட்டை விடுதல், அதாவது ஸ்தூலமாய் விடுதல் அணுவிரதம்; அப்படி பகுதியாக இல்லாமல் முழுவதுமாக பற்றின்றி விடுதல் மஹாவிரதம் ஆகும்.

மனைவியை தவிர மற்ற பெண்களை தாய், சகோதரி, மகளாக பாவிப்பது பிரம்மச்சரிய அணுவிரதம் ஆகும். அனைத்து பெண் இனத்தையும் தாய், சகோதரியாக பாவித்தல் மஹாவிரதம் ஆகும். (மேலும் முனிவர்களுக்கு 18000 சீலங்கள் சொல்லப்படுகிறது)

குடும்பத்திற்கு போதும் என்கிற அளவுக்கு பற்று வைத்திருப்பது அணுவிரதம்; தர்மத்திற்கு பயனபடும் சாஸ்திரம் முதலானவற்றை தவிர வேறொன்றின் மீதும் பற்றில்லாமல்  இருப்பது மஹாவிரதமாகும்.

---------------


இவ்விரதங்கள் எதற்காக, எவ்விதம் கடைபிடிக்க  வேண்டும்…… 

--------------


விரதங்கள் கடைப்பிடித்தல்




தத்ஸ்தைர்யார்த்தம் பாவனா பஞ்ச பஞ்ச – (சூ3) = (239)



तत्स्थैर्याथा भावनाः पाञ्च पञ्च



Tatsthairyartham bhavanah pancha-pancha



தத்ஸ்தைர்யார்த்தம்  - விரதங்கள், ஸ்திரப்பட;  பாவனா – பாவனைகள் (எண்ணங்கள்); பஞ்ச பஞ்ச – ஐந்து ஐந்து

For the sake of stabilising the vows, there are five observan-ces for each of these.  



இந்த ஐந்து விரதங்களை மனதில் நிலைநிறுத்துவதற்காக ஐந்து ஐந்து சிந்தனைகள் ஒவ்வொரு விரதத்திற்கும்  உள்ளன.

--------------

அதன் அடிப்படையில் கொல்லாமையைக் காண்போம்….

----------------- 


அஹிம்சாவிரதத்தின் ஐந்து பாவனைகள்



வாங்மனோகுப்தீர்யாதாநநிக்ஷேபணஸமித்யா லோகிதபாந போஜநாநி பஞ்ச – (சூ4) = (240)


वाङ्गमनोगुप्तीर्यादान निक्षेपण समित्यालोकितपान भोजनानि पंच


Van-mano-guptirya-dananikshepana- samityalokitapanabhojanani pancha



வாங்மனோகுப்தி – வசன குப்தி; மனோ குப்தி; எண்ணத்தில்  அடக்கம்; ஈர்யா – ஈர்யா சமிதி, நிலத்தை பார்த்து நடத்தல்; ஆதாநநிக்ஷேபணஸமிதி  - பொருள் வைக்கபடும் நிலத்தை நுண்ணுயிருக்கு தீங்கு நேராமல் பார்த்து வைத்தல்; அலோகிதபாந போஜநம் – உணவு, நீரை சோதித்து உட்கொள்ளுதல்; பஞ்ச – இவ்வைந்தும் கொல்லாமை விரத பாவனையாகும்.


Control of speech, control of thought, observing the ground in front while walking, care in taking and placing things or objects, and examine the food in the sunlight before eating/drinking are five observances of non-violence.  



பேசாமல் இருத்தல், பேசினால் அடக்கத்துடன், தர்மத்தை மட்டுமே பேசுதல்; மனதில் வீண் சிந்தனை செய்யாது இருத்தல்; ஆன்மா சம்பந்த சிந்தனை செய்தல்.

போகும் பாதையை நான்கு முழதூரத்தை முன்னமே பார்த்து போதல்; புல் இல்லாத, ஈரமான இடத்தில் (நீரின் நிறத்தில் பூச்சிகள் இருக்கும்); பகலிலும் பார்த்துப் போதல் வேண்டும்.

உட்காரும் போதும், பொருட்களை வைக்கும் போதும் ஜீவஹிம்சை யில்லாமல் ஜாக்கிரதையாக செய்தல் வேண்டும்.

சூரிய ஓளி உள்ள போதே சமையல் செய்து ஏற்க வேண்டும். இரவில் (விளக்கு இருந்தாலும்) உணவு, நீர் ஏற்க கூடாது. தண்ணீர் கூட உணவுதான். உண்ணல், தின்னல், நக்கல், குடித்தல் என  உணவு நான்கு வகையாகும்.
-----------

இரண்டாவது விரதத்தின் பாவனைகள் எவை…..

------------ 


பொய்யாமைக்கு ஏற்ற ஐந்து பாவனைகள்



க்ரோத லோப்பீருத்வஹாஸ்ய ப்ரத்யாக்யாநாந்யநுவீசீ பாஷணம் ச பஞ்ச – (சூ5) = (241)


क्रोधलोभ भीरुत्व हास्य प्रत्याख्यानान्युवी चिभाषणं च पंच


Krodha-lobha-bhirutva-hasya-pratyakhyana-nyanuvichi-bhashanam cha pancha



க்ரோத – குரோதம், கோபம்; லோப – லோபம், ஆசை; பீருத்வ – பயம்; ஹாஸ்யை- பரிகாசம், கேலி; ப்ரத்யாக்யாநம் - இவற்றை விடுதல்;  ச – மற்றும் அநுவீசீ பாஷணம் – சாஸ்திரபடி பேசுதல்; பஞ்ச – ஐந்தும் (விரத பாவனைகள்)

Giving up anger, greed, cowardice or fearfulness and jest, and speaking flawless words according to the scriptures are five observances of truth.  


கோபம், ஆசை, பயம், ஏளனம் போன்றவற்றால் பொய் பேசும் நிர்பந்தம் ஏற்படுகிறது. அதனால் அவற்றை விட்டு விடுதல் வேண்டும்.

மேலும் சாஸ்திரங்களில் (ஆகமங்களில்) கூறிய நெறிகளின்படி கட்டுப்பாட்டுடன், குற்றமின்றி பேசுதலே பொய்யாமை விரதம் காப்பாற்றுவதற்கான ஐந்து சிந்தனைகளாகும்.
----------

அடுத்து கள்ளாமை விரதம் பற்றிக் காண்போம்….

-------------------- 


கள்ளாமை விரதம் பற்றி



சூன்யாகாரவிமோசிதாவாஸ பரோபரோதாகரணபைக்ஷ சுத்திஸதர்மாவிம்ஸவாதா: பஞ்ச -  (சூ6) = (242)


शून्यागार विमोचिता वासपरोधा करण भैक्षशुद्धिसमधर्माविसंवादाः पंच


Shunyagara-vimochitavasa-paroparodhakarana-bhaikshashuddhi-sadharmavisanvadah pancha



சூன்யாகார – சூன்யமான,மறைவான இடத்தில்; விமோசிதாவாஸ -  குடியிருந்து காலை செய்த இடத்தில்; பரோபரோதாகரண – தானுள்ள இடத்தில் பிறருக்கு இடம் தருதல்; பைக்ஷ சுத்தி – ஆகார சரியைக்கு போதல்; ஸதர்மாவிம்ஸவாதா: - சகதர்மிகளோடு சண்டை போடாது இருத்தல்; பஞ்ச – இந்த ஐந்தும் (அசெளர்ய விரதத்தின் பாவனைகள்)


Residence in a solitary place, residence in a deserted habitation, causing no hindrance to residence by others, acceptance of clean food and not quarrelling with brother monks, are five observances of vow against stealing.  



மலை குகை, மரப்பொந்து போன்ற ஆள் அரவமில்லாத இடங்களில் வசித்தல். (பொருள் உள்ள இடத்தில் ஸாது தங்கினால் அவர் மீது பழிவரும்)

வசித்து காலியான குடியிருப்புகளில் அனுமதியுடன் வசித்தல்.

தனக்கும், பிறருக்கும் இடையூறு இல்லாத இடத்தில் இருத்தல்

ஆகமத்தில் உள்ளபடி ஆகாரம்  ஏற்பதற்கான வழிகளை பின்பற்றுதல் ( சரியையினால் 32 அந்தராயம், 46 தோஷம் வராமல் பார்த்துக் கொள்வர். இம்சை சத்தம், மரண ஓலம் கேட்டாலும் அந்தராயம் செய்கிறார்கள்)

சக தர்மிகளிடம் என்னுடையது, உன்னுடையது என பொருள் பாகுபாடு காட்டாது சேர்ந்திருத்தல்.

இவ்வைந்தும் கள்ளாமை மகாவிரத பாவனைகளாகும்.

--------------------


பிரம்மசர்ய விரதத்தின் பாவனைகளைக் காண்போம்….

------------------  


பிரம்மசர்யத்திற்கான பாவனைகள்




ஸ்த்ரீராககதாஸ்ரவண தன்மனோஹராங்க நிரீக்ஷண பூர்வரதானுஸ்மரண வ்ருஷ்யேஷ்ட ரஸஸ்வசரீர ஸம்ஸ்காரத்யாகா: பஞ்ச – (சூ7) = (243)


स्त्रीराग कथा श्रवणतन्मनोहरांग निरीक्षणपूर्व रतानुसम् रण वृष्येष्ट सरस्वशरीर संस्कार त्यागाः पंच


Striragakathashravana-tanmanoharanganirikshana-purvaratanusmarana-vrsyeshtarasa svasharirasanskaratyagah pancha



ஸ்த்ரீராககதாஸ்ரவண – பெண்ணாசை தூண்டும்  கதை; தன்மனோஹராங்க நிரீக்ஷண – ஸ்திரீகளின் அழகான அங்கங்களை பார்த்தல்; பூர்வரதானுஸ்மரண – முன்பு அனுபவித்த போகத்தை ஞாபகம் செய்தல்;  வ்ருஷ்யேஷ்டரஸ – கரிஷ்ட வஸ்துக்கள் (கெட்ட பாவனைகள் தூண்டும் உணவு); ஸ்வசரீர ஸம்ஸ்கார – தன் உடலை அழகாக அலங்கரித்தல்; த்யாகா – இவற்றைத் தியாகம் செய்தல்; பஞ்ச – பிரம்மசரிய விரதத்தின் ஐந்து பாவனைகள்.

Giving up listening to stories that excite attachment for women, looking at the beautiful bodies of women, recalling former sexual pleasure, delicacies stimula-ting amorous desire and adornment of own body, constitute five observances of chastity.  


பெண்ணாசையைத் தூண்டும் கதைகள்/நாளிதழ்கள், படித்தல், சொல்வதை கேட்டல் போன்றவற்றை தியாகம் செய்தல்;

மனதில் காம இச்சையை தூண்டும் பெண்களின் அங்கங்களை பார்க்க, ரசிக்க விருப்பம் கொள்ளாது  இருத்தல்;

முந்தைய காம சுகங்களை  நினைவு கூறுமல் இருத்தல்;

மயக்கத்தை தரக்கூடிய, கிளர்ச்சியை தூண்டும் பானங்களை, கரிஷ்ச வஸ்துக்களான முந்திரி, காய்ந்த பேரீட்சை, பாதாம், பிஸ்தா, பாலேடு முதலிய வற்றை தியாகம் செய்தல்;

உடலழகுக்கு முக்கியத்வம் தரும் சாதனங்களை தருவத்துக் கொள்ளாமலும், அலங்கரித்துக்  கொள்ளாமலும் இருத்தல்

இவ்வைந்தும் பாவனைகளை நீக்குவது என உறுதி செய்வது பிரம்மசர்யத்தை தரும்.

--------------------------

அடுத்து பொருட்பற்றின்மைப் பற்றி……

------------------ 


பரிக்ரஹ பாவனைகள் பற்றி




மனோஜ்ஞாமனோஜ்ஞேந்த்ரிய விஷ்யராகத்வேஷ்வர்ஜநானி பஞ்ச – (சூ8) = (244)


मनोज्ञामनोत्रज्ञन्द्रिय विषय रागद्वेष वर्जनानि पंच


Manogyamanogyendriyavishaya-raga-dvesha-varjanani pancha



மனோஜ்ஞ – இஷ்டமான ; அமனோஜ்ஞ – இஷ்டமில்லாத; இந்த்ரிய விஷ்ய – ஐந்து இந்திரிய விஷயங்களில்; ராகத்வேஷ – விருப்பு, வேறுப்பு; வர்ஜநானி – செய்யாமல் இருத்தல்; பஞ்ச – ஐந்தும் ப்ரிக்ரஹ பாவனைகள்.

Giving up attachment to objects agreeable to the five senses and aversion to objects disagreeable to the five senses constitute five observances of non-attachment.  



ஐம்புலன் களின் விருப்பமான பொருட்களில் விருப்பமும்;

அவற்றிற்கு விருப்பத்தை ஏற்படுத்தாத பொருட்களை மீது வெறுப்பும் கொள்ளாது இருத்தல் பொருட் பற்றின்மை விரதத்தின் ஐந்து பாவனைகளாகும்.


மென்மை, கடினம்  போன்ற ஸ்பரிசம் பற்றிய விருப்பு வெறுப்பு கூடாது.

சுவைக்கான விருப்பமோ, சுவை குறைவானவற்றின்  மீது வெறுப்போ கூடாது.

வாசனை, துர்நாற்றம் என்ற விருப்பு, வெறுப்பு கூடாது

பிடித்த நிறம், பிடிக்காத வண்ணம் என்ற பாவனை கூடாது.

காதுக்கு பிடித்த இசை, இரைச்சல் போன்ற விருப்பு, வெறுப்பு கூடாது.

அப்போது தான் பரிக்ரஹ தியாக விரதம் பாலிக்க முடியும்.
------------

கொலை முதலிய  ஐந்து பாவங்களைப் பற்றி பார்ப்போம்….. 

---------------------  


பஞ்சமா பாபங்கள் பற்றி




ஹிம்சாதிஷ்விஹாமுத்ராபாயாவத்யதர்ஸனம் – (சூ9) = (245)


हिंसादिष्वहामुत्रा पायावद्यदर्शनम्


Hinsadishvihamutrapaya-vadyadarshanam



ஹிம்சாதிஷு – இம்சை முதலான பாபங்கள் செய்யும் போது; இஹ – இவ்வுலகிலும்; அமுத்ர – பரலோகத்திலும்; (மறுமையிலும்) பாயாவத்யதர்ஸனம் – அழிவும், இழிவும் ஏற்படுதல் காணப்படுகிறது.

The consequences of violence, falsehood, stealing, unchastity and attachment are calamity and reproach in this world and in the next birth.  



இம்சை, பொய், திருட்டு, ஒழுக்கமின்மை, பொருட்பற்று ஆகியவைகள் செய்யக்கூடாதவையாகும். செய்பவர்களின் பெயர் கெட்டும், நிந்தைக்கும், தண்டனைக்கும் ஆளாகின்றனர். மேலும் மறுமையிலும் துன்பத்தை அனுபவிக்க நேரிடும்.

கொலை முதலிய துன்புறுத்தலை செய்கிறவன், ஆவேசத்துடனும், பகையுள்ளம் கொண்டவனாகவும் காணப்படுகிறான். அதனால் அரச தண்டனைக்கும், உலகினரால் நிந்திக்கப்படுவனாகவும், பாதிக்கப்பட்டவராலும் எதிர்துன்பத்தையும் அடைவதோடு,  மறுமையிலும் நரக கதியை அடைகிறான்.

பொய்யுரைப்பவனும் தண்டனைக்கு ஆளாவதோடு, பிறரின் நம்பிக்கைக்கு ஆளாகமலும் இடுப்பதோடு, மறுபிறவியில் துன்ப கதியை ஏற்கிறான்.

களவு செய்வதால் இப்பிறவியில் அடித்தல், வதைத்தல், கட்டுதல், குத்துதல், உதைத்தல், காதையறுத்தல், மூக்கறுத்தல் முதலான தண்டனைகளை இவ்வுலகில் பெறுவதோடு மறுபிறவியிலும் ஈன பிறவி எடுக்கிறான்.

பிறன மனையை அடைய முயற்சிக்கும், கற்பின்றி, தீய காமத்தில் உள்ளவர்கள். காட்டு யானை காமத்தால் மதம் பிடித்து துரத்துகிறபோது பிடிபட்டு, சிறை படுவது போல அரசினாலும், பிறமக்களாலும் தண்டிக்கப்படுவதோடு மறு பிறவிலும் துன்பத்திற்கு ஆளாகிறான்.

பொருட் வேட்கையில் மிகு பொருள் ஈட்டுபவர்களை, சிறு துண்டு மாமிசத்தை அலகில் வைத்திருக்கும் கழுகினை, மற்ற பறவைகள் எப்படி தாக்குகின்றனவோ அதுபோல திருடர்களும், கொள்ளையர்களும் தாக்கி அபகரிக்கின்றனர். நெருப்பு எவ்வளவு விறகிருந்தாலும் எரித்து விடுவதை போல, போதும் என்ற மனமில்லாதவர்கள் பகுத்தறிவின்றி சேர்ப்பதால் துனபத்தை அடைகின்றனர். மேலும் மறுமையில் கீழ் பிறவியில்  பிறக்கின்றனர்.

எனவே பஞ்சமா பாபங்களை கைவிட்டு பிறவித்துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும்.
-------------
மேலும் இம்சையின் மற்ற பாவனைகள் பற்றி…..



-------------------- 


துக்கமேவ வா  -  (சூ10) = (246)


दुःखमेव वा


Duhkhameva va



துக்கமேவ – துக்கம்தான்;  வா – மேலும் அப்பாவம்;

These five sins should be considered and thought off as the cause of all sufferings. 

 

மேற்கூறிய சூத்திரங்களில் கூறிய அனைத்து பாவங்களும் துக்கத்திற்கானவையே.

அன்னமே உயிர் என்பது போல. பாபங்களே துக்கத்திற்கு காரணமாகும்.

அஸாதாவேதனீய கருமத்திற்கு ஹிம்சை முதலான பாபங்களே காரணமாக இருக்கிறது. அக்கருமம் துக்கத்திற்கு காரணமாகிறது.

நல்ல  நீர் கெட்ட பொருள் சேரும்போது சாக்கடையாவது போல, செயலில் பாபங்கள் சேரும்போது ஆன்மாவில் இந்த ஐந்து பாபங்கள் சேருகின்றன.
-----------
கொலை,  திருடு போன்றவை செய்பவர்கள் சுகங்களும் அனுபவிக்கின்றனர் என்றால் அது சொற்ப நேரமே யன்றி அடுத்து துன்பத்தை  அனுபவிப்பர்.

சொறி,  சிரங்கு போன்ற தோல் நோய் உள்ளவர்கள் தினவு எடுக்கும் போது சொறிந்து கொள்ளும்  போது ஏற்படும் சுகம் போன்றது அப்பாபங்களை செய்பவர் அனுபவிக்கும்  க்ஷண நேர இன்பம்.
-------------
மேலும் சில  பாவனைகள் பற்றி…..


--------------- 


மற்ற பாவனைகள்



மைத்ரீப்ரமோதகாருண்யமாத்யஸ்தானிச ஸத்வகுணாதிக க்லீச்யமானாவினயேஷு – (சூ11) = (247)


मैत्रीप्रमोद कारुण्यमाध्यस्थ्यानि च सत्त्वगुणाधिक क्लिश्यमानाविनयेषु


Maitri-pramoda-karunya-madhyasthani cha sattva-gunadhika-klishyamanavineyeshu



ச – மற்றும்; ஸத்வ – பிராணிகள்; குணாதிக – குணசிறப்புடையோர்; க்லீச்யமான – துன்பமுடையோர்; அவினயேஷு – விபரீதமானவர் (இவர்களிடம்);
மைத்ரீ – அன்பு; ப்ரமோத – மகிழ்ச்சி; காருண்ய – தயை; மாத்யஸ்தானி – மாத்யஸ்த (விருப்பு/வெறுப்பு இல்லா)  பாவனை வேண்டும்.


Benevolence towards all living beings, joy at the sight of the virtuous, compassion and sympathy for the afflicted, and tolerance towards the insolent and ill-behaved are the right sentiments.  



எல்லா உயிர்களிடத்தும் அன்புடன் துன்பம் நேர கூடாது என்ற பாவனை (benevolence);

சிறந்த நற்குணங்கள் உள்ளவர்களைக் கண்டால் மகிழ்ச்சியுறும் பாவனை(joyess);

ஜீவகாருண்யத்துடன் பிற உயிர்களின் துன்பத்தை போக்க உதவிடும் எண்ணம்(compassion);

உண்மையான தத்துவத்தை நம்பாத, உபதேசத்தை தீயதாக கருதுபவர்களிடத்தில் விருப்பு/வெறுப்பின்றி மத்யஸ்த பாவனையில் இருத்தல் (tolerance/unconcern);

இந்நான்கும் எனக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்று சிந்தித்தல் வேண்டும்.
-------------------

மேலும் சில பாவனைகள்….. 

-------------------- 


ஜகத்காயஸ்வபாவெள வா ஸம்வேகவைராக்யார்த்தம் -  (சூ12) = (248)


जगत्कायस्व भावौ वा संवेग वैराग्यर्थम्


Jagatkayasvabhavau va sanvegavairagyartham



ஜகத்காயஸ்வபாவெள – ஸம்சாரம் மற்றும் உடல் ஸ்வபாவத்தை சிந்தித்தல்;  வா – அல்லது;  ஸம்வேகவைராக்யார்த்தம் – ஸம்வேகம் மற்றும் வைராக்கியத்திற்கு;


In order to cultivate awe at the misery of wordly existence and detachment to worldly things one should medidate over the nature of mundane existence of the universe and the body.  


உலக இயல்பையும், உடலின் தத்துவத்தையும் அறிதல் அவசியம்.

இவ்வுலகத்திலுள்ளவை நிலையற்றது, ஆரம்பமும் முடிவும் இல்லாத இவ்வுலகில் பிறவி உயிர்கள் பிறந்தும்/ இறந்தும் பல பிறவிகள் எடுக்கின்றன. அனுபவிக்கும் பொருட்களோ மின்னல், மேகம் போன்று தோன்றி மறைகின்றன. நீர்க்குமிழி பொன்ற வாழ்க்கை விரும்பத் தகாதது
; போன்று சிந்திப்பதால் ஸம்வேக பாவனை/ துன்பத்திலிருந்து மீள வேண்டும் என்ற சிந்தனையும்;


உடல் அசுத்தமானது, சாரமில்லாதது, துக்கத்திற்கு காரணமானது, ஒருநாள் அழியக்  கூடியது என்று சிந்திப்பதால், உடல் மீது  விருப்பு/வெறுப்பின்றி வைராக்ய பாவம்/ பற்றற்ற தன்மை/ ஒதுங்கும் தன்மை உண்டாகும்.

உலகையும், உடலையும் அதனதன் இயல்புகளைத் தொடர்ந்து சிந்தித்து வந்தால் ஸம்வேக பாவனையும், வைராக்கியமும் உண்டாகின்றன.

-------------

ஹிம்சை  போன்ற ஊறு விளைவிக்கும் செயல்களை விட்டு விலகுவது விரதம் ஆகும். அந்த ஹிம்சை என்றால் என்ன ..

------------------ 


இம்சையின் லக்ஷணம்



ப்ரமத்தயோகாத்ப்ராணவ்யபரோபணம்ஹிம்ஸா – (சூ13) = (249)


प्रमत्तयोगात्प्राणव्यपरोपणं हिंसा


Pramattayogatpranavyaparopanam hinsa



ப்ரமத்தயோகாத் – விழிப்பின்மை/கஷாயத்துடன் கூடிய யோகத்தால்;  ப்ராணவ்யபரோபணம் -  பிராணன்களை அழிப்பது;  ஹிம்ஸா – ஹிம்சை யாகும்.

The severance of vitalities through pramattayoga (the mind, the speach and the body out of passion) is injury or voilence.  



குரோத, மான, மாயா, லோபம் துவர்பசையாகும்.

துவர்பசையுடன் கூடியவரை பிரமத்தன் என்பர். அவர்களது செயல்கள் பிரமத்த யோகம் எனப்படும்.

ஐந்து இந்திரியம், மன பலம், வசன பலம், காய பலம், ஆயுஷ், சுவாசோர்வாசம் ஆகியன பத்து பிராணங்களாகும். (எல்லா  பிறவி உயிர்களிடத்தும் பத்தும் இருப்பதில்லை.)

இந்த பத்து பிராணன்களை அழிப்பது, ஊறு செய்வது, கொடுமை செய்வது இம்சை/ கொலை எனப்படுகிறது.

கஷாயத்துடன் கூடிய செயல்களால் பிராணன்களை அழிப்பது ஹிம்சை எனப்படும்.

ஒருவன் குரோதம் முதலான எண்ணத்துடன் பிறரைக் கொல்ல வேண்டும் என நினைத்தல் கூட பாபமாகும். அதாவது பன்முறை முயற்சி செய்தும் கொலை செய்ய முடியாவிட்டாலும் பாபம் வந்து சேரும்.

கஷாய பரிணாமம் ஏதும் இன்றி, கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம்  இன்றி ஒரு ஜீவனானது கொல்லப்பட்டாலும் அது கொலையாகாது. அவனுக்கு தெரியாமல் அவன் காலடியில் ஒரு பிராணி வதைபட்டு இறந்தாலும், அவனுக்கு கொலை யுணர்வின்றி நடந்ததால் கொலையாகாது. எந்த  ஒரு பாபமும் அணுகாது.

-----------
ஆகமங்கள் எவனொருவனுக்கு கஷாயம் உள்ளதோ அவன் தனக்குத்தானே இம்சை செய்து கொள்கிறான் என்கிறது.

இந்நிலையில் பிற உயிர்களுக்கு இம்சை செய்யப்படுகிறதா இல்லையா என்பது முக்கியமில்லை.
-------------

பொய்மையின்  இலக்கணம் பற்றிக்……

---------------- 


பொய்மை




அஸதபிதாநமந்ருதம் – (சூ14) = (250)


असदभिधानमनृतम्


Asadabhidhanamanrtam



அஸத் – பிரமாதத்தோடு கூடி உயிர்களுக்குத் தீமை/ பொய்மை;  அபிதாநம் – வசனம்  கூறுதல் அந்ருதம் – பொய் எனும் பாபமாகும்.


Speaking through pramattayoga what is not commendable is falsehood.



பிரமத்த யோகத்தின் காரணமாக உயிர்களுக்கு துன்பம்  விளைவிக்கும் சொற்களைக் கூறுதல், பிறர் துன்பமுறும் வகையில் இல்லாததை இருப்பதாக கூறுதல் பொய் ஆகும்.

எது  ஸத் இல்லையோ அது அஸத் பொய்யாகும்.

எது பாரட்டத்தக்க/புகழுக்குரியதாக இல்லையோ அது பொய்யாகும்.

எந்த மொழியினால் பிற உயிர்களுக்கு வலியும், துக்கமும் ஏற்படுகிறதோ அது பொய்யாகும் (அன்ருதம்).

-------------

களவு பற்றிக் காண்போம்….

------------------ 


களவு



அதத்தாதானம் ஸ்தேயம் – (சூ15) = (251)


अदत्तादानं स्तेयम्


Adattadanam steyam



அதத்தாதானம் – தராத பொருளை எடுத்தல்; ஸ்தேயம் - களவு

ஆதானம் – அபகரிப்பது.

Taking through pramattayoga anything that is not given is stealing. 



பிறருக்கு சொந்தமான பொருளை அனுமதி பெறாமல் தாமோ/ பிறர் வழியாகவோ எடுத்துக் கொள்வது திருடு ஆகும்.

ஒருவருக்கு சொந்தமான பொருளை எடுத்துக் கொள்வது மட்டும் களவு. சாலையில், தெருக்களில்  பயணித்தல் களவு ஆகாது. அனைவரும் சுதந்திரமாக அனுபவிக்கும் இடம்.

அதே நகரத்துக்கு பொதுவான பொருளை எடுத்துச் செல்வது பெரும்பாவம்.

தியாகம் செய்ய வேண்டிய இடங்களான ஆலயம், சமுதாய கூடங்கள் போன்ற தர்ம ஸ்தாபனங்களில்  திருடுவது,  திருட நினைப்பது, பணம்/பொருட்களை சொந்தப் பொருள் போல் பயன் படுத்துவது மகாபாவம்.

அவர்கள் கீழ் நரகம் வரை செல்வார்கள். பாபத்தில் கழுவ நினைக்கின்ற  இடத்தில் பாபத்தை சம்பாதிக்கிறார்கள், அந்த பாவத்தை வேறு எங்கும் கழுவ முடியாது.

ஆகமங்கள் தர்ம  சொத்தினை களவாட நினைப்பதை குற்றமாக கருதுகிறது.

பிரமத்த யோகத்துடன் (குரோதம்,  மானம், மாயை, லோபம்) பிறர் பொருளை ஏற்றாலும், ஏற்க படாமல் இருந்தாலும் அடைய வேண்டும், அனுபவிக்க வேண்டும் என தவறான  எண்ணம் கொள்வதே திருடாகும்.
-------------

அடுத்து பிரம்மசரிய இலக்கணம் பற்றி காண்போம்…

----------------- 


காமம்



மைதுனம ப்ரஹ்ம – (சூ16) = (252)


मैथुनमब्रह्म


Maithunamabrahma



மைதுனம் – இச்சை பரிணாமத்துடன்  ஆண் பெண் இருவரும் உடலுறவு கொள்ளுதல்;  அப்ரஹ்ம – பிரம்மச்சரியமின்மை

Copulation through pramattayoga is unchastity.  


பிரம்மத்த யோகத்தின் காரணமாக, சாரித்ர மோகனீய கர்மத்தின் (conduct deluding karmas) காம வேட்கை கொண்டு ஆண்,  பெண் இருபாலரும் ஒருவருக்கொருவர் பார்த்தல், தொட்டுக்கொண்டு பேசுதல், அணைத்துக் கொள்ளுதல், உடல் உறவு கொள்ள விழைதலுக்கு  மிதுனம் எனப்படும்.

அதுவே செயல்களாக மாறினால் மைதுனம், புணர்தல் (copulation) எனப்படுகிறது.

எவரொருவர் மைதுன சேவை செய்கிறாரோ அவர் இயங்கும் உயிர்களுக்கு ஹிம்சை ஏற்படுத்துகிறார்.

அஹிம்சை முதலான விரதங்களை கடை பிடிப்பவரையே பிரஹ்மா (நெறியாளர்) எனப்படுகிறார்.

அப்படியில்லையெனில் அபிரஹமா,  நெறிதவறியவர் எனப்படுகிறார்.

-------------------
கடும் பற்றிற்கான  இலக்கணங்களைக் காண்போம்….


-------------- 


பொருட் பற்று



மூர்ச்சா பரிக்ரஹ: - (சூ17) = (253)


मूर्च्छा परिग्रहः


Murchchha parigrahah


மூர்ச்சா – எனது என்னும் எண்ணம்;  பரிக்ரஹ: - பொருள் பற்றாகும்.

Infatuation is the desire through pramattayoga for acquisition, safeguarding and addition to external and internal possessions. 



மூர்ச்சை என்பது கரும் பொருட் பற்று, தீவிர வேட்கை, ஆசை; சுற்றியுள்ள புறப்பொருட்களை சம்பாதித்தல், காப்பாற்றுதல், அது  தொடர்பான செயல்கள் அனைத்தினால் மற்றும் கஷாயத்தினால், எனது என எண்ணம் கொள்ளுதல்.

புறப்பொருட்கள் இல்லையாயின் கூட ஒருவர் இது எனது என்று எண்ணினால் பற்றுடையவர் ஆகிறார்.

-----------
இவை எனது என எண்ணுபவர் அவற்றை காப்பாற்ற முற்படும் போது இம்சை அவசியம் நிகழ்கிறது. மேலும் பொய் கூறுகிறார், களவு புரிகிறார், மைதுனச் செயல்களில் முனைகிறார்;  அதனால் நரக கதி கிடைத்து துன்பங்களில் வீழ்கிறார்.
--------


அடுத்து விரதத்தின் இலக்கணம் காண்போம்…..

------------------ 


விரதி



நி:சல்யோ வ்ரதீ – (சூ18) = (254)


निःशल्यो व्रती


Nishshalyo vrati



நி:சல்யோ – சல்யம் இல்லாதவன்;  வ்ரதீ - விரதியாவான்

Any body free from deceitfulness, non-belief in realities and desire in worldly pleasures is the votary.  


வினை உதயத்தால் உடல், மனம், உயர் மூன்றிற்கும் , முள் குத்துவதை போன்று, துன்பம் உண்டாக்குவது சல்யம் எனப்படும்.

அதாவது துன்பங்களைத் தரக்கூடிய எண்ணங்களை மனதில்  தோன்றச் செய்யும்.

மாயா சல்யம் – சொல், செயல், எண்ணம் மூன்றும் வெவ்வேறாய் இருத்தல் கபடம்/ வஞ்சனை போன்றவை.

நிதான  சல்யம் - உலகத்து இன்பங்கள்/வைபவங்களை மறுபிறவியில் அனுபவிக்க வேண்டுமென்ற ஏண்ணத்துடன் தவம் செய்தல்.

மித்யா சல்யம் -  உண்மையான தத்துவங்கள், தேவ சாஸ்திர குருவின் பால்  நம்பிக்கை இன்மை.

------------
விரதிக்கான தகுதிகள் இரண்டு; ஒன்று  விரதங்களை ஏற்று கடைபிடித்தல், மற்றொன்று மூன்று சல்யங்கள் இல்லாமல் இருத்தல்.
-----------

அடுத்து விரதிகளின் வகைகள் பற்றி…..

----------------- 


அகார்யநகாரஸ்ச – (சூ19) = (254)


अगार्यनगारश्च


Agaryanagarashcha



அகாரி – கிரஹஸ்தர்; ச – மற்றும்; அநகார – முனி என இருவகையினர்.

The votaries are of two kinds – those who live in homes and those who  have denounced home.  



ஆகாரம் (habitation) – வீடு; ஆகாரி – இல்லறத்தான்.
அனகாரி – வீட்டைத் துறந்தவன்; துறவறத்தார்.

இல்லறத்தார், துறவறத்தார் என இருவகை விரதிகள் உள்ளனர்.

வீட்டை மனத்தளவில் துறந்தவர்தான் துறவி யாகிறார். இல்லாவிடில் கானகத்தில் இருந்தாலும் இல்லறத்தான் ஆகும்.

வீட்டை  துறந்து விட்டால் அவர் வீட்டில் வாழ்ந்தாலும், காட்டில் வாழ்ந்தாலும் வீடில்லாதவர், அதாவது துறவறத்தார் ஆகிறார்.
---------

அணுவிரதம் பற்றி……

-------------------- 


இல்லறத்தார் இலக்கணம்




அணுவ்ரதோSகாரீ – (சூ20) = (256)


अणुव्रतोऽगारी


Anuvrato (a)gari



அணுவ்ரதோ  - அணுவிரதங்களை சிறிய அளவில் கடைபிடிப்பவர்; அகாரீ -  இல்லறத்தார்.

One who observes the small vows and live at home is a householder.  



அணு – சிறிதளவில்.

எல்லா பாபங்களிலிருந்தும் இல்லறத்தாரால்  விலகி விட முடியாது. அதனால் அணு (சிறிதளவு) விரதம் எனப்படுகிறது.

அஹிம்சாணுவிரதம்:  ஈரறிவு முதல் ஐந்தறிவுள்ள உயிர்கள் வரை கொல்லாமை.

சத்யாணு விரதம்:  ஆசை/ அறியாமையால் பொய் கூறுதலின்  காரணமாக தன் வீட்டை அழித்தல், ஊரை அழித்தல் போன்றவை நடைபெறும் என்பதால் பொய்யுரைக்காமலிருத்தல்.

அசெளர்யாணு விரதம்: அரச தண்டனை மற்றும் பிறர் துன்பம் கருதி, தராத பொருளைக் களவாடாமல் இருத்தல்.

பிரம்மச்சர்யாணு விரதம்: தன் மனைவியைத் தவிர, பிறன் மனை/ கன்னியர்/ விதவையான பெண்களிடம் காம சேவை புரியாமல் வாழ்தல்.

பரிக்ரஹ பரிமாண விரதம்: தன் குடும்பத்துக்கு மிகவும் அவசியமான தேவைக்கு மட்டும் பொருளை வைத்துக் கொண்டு, மற்றதை தானம் செய்வது  என்ற நியமத்துடன் இருத்தல்.

---------------

இல்லறத்தார்க்கு வகுத்துள்ள விரதங்களை அவர்கள் சக்திக்கும், சூழ்நிலைக்கும், பயிற்சிக்கும் ஏற்ற வகையில் படிப்படியாக முன்னேற பதினோரு நிலைகளாக (ப்ரதிமா) வகுத்து கூறியுள்ளனர். அவை யாவன;

1.தர்சனீகன் (தர்ஸநப்ரதிமா) :  ஒரு உண்மையான சமணன் ஜிந தர்மத்தில் முழு முயற்சிக்கான  நம்பிக்கையும், அதில்  குற்ற மற்றதாகவும் இருக்க வேண்டும். மதக் கொள்கையையும், கடைபிடிக்கும் வழிமுறைகளையும் தெரிந்து அவ்வழியில் நடப்பவனாக இருக்க வேண்டும். மது, மாமிசம், தேன்  இவற்றை  விட்டு விலகி  இருக்க வேண்டும். அணுவிரதங்களை முடிந்த வரை கடைபிடிக்க வேண்டும்.

2. விரதீகன்(விரதப்ரதிமா):  இவன் ஐந்து அணுவிரதங்களை குறைவின்றியும், ஏழு  சீலங்களான குண விரதங்கள் மூன்றையும் குற்றமின்றியும், சிக்ஷா விரதங்கள் நான்கையும் தன் சக்திக்கு  ஏற்ற வகையில் கடைபிடிக்க வேண்டும்.

3. சாமாயிகன்: தினம் தோறும்;  தியானம் செய்தல், காலை, மதியம்,  மாலை  மூன்று வேளையிலும் 48  நிமிடங்கள் தவறாமல்  சமாயிகம் செய்ய வேண்டும். இடம், காலம், வினயம்,  ஆவர்த்தனம்,  காய சுத்தி, வசன சுத்தி,  மன சுத்தி இவைகளுடன்கூடி  செய்தல் அவசியம்.

4. புரோஷதோப  வாசன்: இவன் ஒவ்வொரு மாத அஷ்டமி,  சதுர்தசி போன்ற திதிகளில் தின்னல்,  உண்ணல்,  பருகுதல், நக்கல் ஆகிய நால்வகை உணவுகளை தியாகம் செய்து உண்ணா நோன்பு கடைபிடிக்க  வேண்டும். குறைந்தது வாரம் ஒருமுறையேனும் பட்டினி விரதம் ஏற்க வேண்டும்.

5. சரிலுசித்த அபுக்த தியாகி: உண்ணும் உணவிலும் தண்ணீரிலும், வடித்த நீரிலும் சூட்சும உயிர்கள், சம்மூர்த்த திரஸ ஜீவன்கள் தோன்றிக் கொண்டே இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வடிகட்டி  காய்ச்சிய பின் அருந்த வேண்டும். நன்கு பழுக்காத கனிகளை, பச்சையான இலை, காய்களை உண்ணுவதை நீக்கி விட வேண்டும்.

6. ராத்திரி அபுக்த தியாகி: இவன் உணவோ, திரவமோ இரவு நேரத்தில் தான் ஏற்பதோ, பிறர் ஏற்க கொடுக்கவோ கூடாது. இரவு உண்ணாமையை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். சிக்ஷா விரதம்  முழு அளவில் ஏற்று அதன் படி  ஒழுக வேண்டும்.

7. பிரம்மச்சாரி:  மனைவியிடத்தும் கூட  உடல்  உறவு நீக்கி,  காம வேட்கையை முற்றிலும்  வெறுத்து  அடக்கியவனாக, பெண்போக வாஞ்சையை துறந்தவனாக இருப்பவன்.

8. ஆரம்ப தியாகி: உயிர் வாழ்வதற்கான தொழில் களை, சமையல் செய்தலை  விட்டு விடுதலும், உலக விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பவன்.

9. அபரிக்ரஹன்: ஆடை தவிர பிற பற்றுக்களைக்களையும், அகப்பற்றுக்கலை முற்றிலும்  துறந்தவனாக இருக்க வேண்டும். குடும்பத் தொழிலினின்றும் விலகிய தோடு, பிறர் மூலம் செய்வித்தலையும் துறந்தவன். விரும்பும் போகப்  பொருட்கள் யாவும் உமிழும் உமிழ்நீருக்கு சமம்  என்ற பாவனியில் இருப்பவன்.

10. அனநுமதன்: வீட்டில் மனைவி, மக்களுடன் தாமரை இலைத்தண்ணீர் போன்ற பட்டும் படாத உறவுடன் இருத்தல். உலக விஷ்யங்களில்  எவ்வித  அறிவுரைகளையும் பிறருக்கு  வழங்காது இருத்தல், இல்வாழ்க்கை தொடர்பான செயல்களில்  சிறிதும் உடன்பாடு இல்லாது இருத்தல்.

11. உத்திஷ்ட பிண்ட விரதன்: சுயமாக  சமைத்தல் இன்றி, இல்லறத்தாரிடம் உணவு பெற்று உண்பர்.  சுல்லகர் என்பார் இடையில் ஒரு  துணியும்,  கெளபீனமும் அணிவர். உணவு உண்ணும்  பாத்திரம் பாத்திரம், கமண்டலம், மயிற்பீலியும் உண்டு.
ஐலகர் என்பார் வெறும் கெளபீனம் மற்றும் அணிவர். உணவை கையில் ஏற்பர். கமண்டலமும், மயிற்பீலியும் உண்டு.
முற்றும் துறந்த முனிகளுடன் தவமேற்ற வேண்டும்.

பதினோரு நிலையை ஏற்றவர் முனியாகிறான்/ சல்லேகனை ஏற்று சமாதி  மரண  பெருவிழா  என்னும்  நிலையை  எய்துகிறார்.

ஒவ்வொரு நிலையை அடைந்ததும் முன் நிலைவரை தொடர்ந்து கடை பிடிக்க வேண்டும்

முதல்  ஆறு நிலைவரை இல்லறத்தான்   என்றும்;
7,8,9 நிலையுள்ளவர்களை பிரம்மச்சாரி  என்றும்;
கடை  இருநிலைகளை பிக்ஷு என்றும்  கூறுகின்றனர்.

இவர்களை  கடை,  இடை,தலை ஸ்ராவகர் என்றும் அழைப்பதுண்டு.
----------

மேலும் இது பற்றி காண்போம்…..

--------------- 




திக்தேசாநர்த்தண்டவிரதிஸாமாயிகப்ரோஷதோபவாஸோபபோகபரிபோகபரிமாணாதிதஸம்விபாக வ்ரதஸம்பன்னஸ்ச  - (சூ21) = (257)



दिग्देशानर्थदण्ड विरतिसामायिक प्रोष धोपवासोपभोगपरिभोगपरिमाणातिथिसंविभागव्रतसंपन्नश्च


Digdeshanarthadandavirati-samayika-proshadhopa-
vasopabhogaparibhogaparimanatithi-sanvibhagavratasampannashcha



திக்தேசாநர்த்தண்டவிரதிதிசை, தேச, அனர்த்ததண்ட விரதம் (ஆகிய மூன்று குணவிரதங்கள்);   ஸாமாயிகஸாமாயிக விரதம் ; ப்ரோஷதோபவாஸம்பருவநாட்களில் உபவாசம்; போகபரிபோக பரிமாணம்போக/உபபோக பொருட்களை அளவுபடுத்திக் கொள்ளல்; மற்றும்; அதிதிஸம்விபாக வ்ரதஸம்பன்ன முனிவர்களுக்கு பிச்சி, கமண்டலம், சாப்பாடு, இடமளித்தல் (என நான்கு சிக்ஷா விரதங்கள்.


The householder votaries also follow three minor vows i.e. abstaining from activity with regard to direction, country and purposeless sin, an four supplementary vows i.e. periodical concen-tration, fasting at regular intervals (on eighth and fourteenth day of each lunar period of 15 days), limiting consumable and non-consumable things, and partaking of one’s food after feeding an ascetic.  



அணுவிரதி சிராவகர்,  முன்  கூறிய ஐந்து அணுவிரதங்களுடன்; ஏழு சீலங்களான, அணுவிரதத்தை தூய்மை செய்யும்;  திக், தேச, அனர்த்த தண்ட விரதங்கள் மூன்றும்; முனி அவஸ்தைகளுக்கு சிக்ஷை தருகிற ஸாமாயிக, புரோஷத உபவாச, உபபோக பரிபோக பரிமாணம், அதிதி ஸம்விபாகம் அகிய நான்கு சிக்ஷா விரதங்கள் நான்கும் சேர்த்து பன்னிரண்டு விரதங்களை கடை பிடிப்பர்.

அவர் விரதா விரதி என அழைக்கப்படுகிறார்.

1 திக் விரதம்: இதன் அடிப்படை சூட்சுமமாக பாபம் தியாகம் செய்யப்பட வேண்டும். மேலே, கீழே மற்றும் எட்டு திசைகளிலும்  சென்று வருவதை எல்லை வரையறை செய்து கொண்டு அப்பால் செல்லாமல்  இருப்பதால் நிலை/இயங்குயிர்களுக்கான ஹிம்சை நிகழாமல் இருக்கிறது. எல்லைக்குள் பெரிய பாபம் செய்யமாட்டார்கள். வெளியே எந்தப் பாபமும் நிகழ்வதில்லை, அதனால் இது ஒரு மஹாவிரதம் போல் ஆகிறது.

2 தேசா விரதம்: அவ்விரதத்தையே கொஞ்ச காலம்; மணி, நாள், வாரம், பக்ஷம் , மாதம் போன்று காலம் வரை க்ஷேத்திரத்தை எல்லை வைப்பார்கள். அதாவது ரூமுக்கு  வெளியே, வீட்டிற்கு வெளியேகோயிலுக்கு வெளியே, நாட்டுக்கு வெளியே வரையறுக்கப் பட்ட காலம் வரை செல்லாமல்  இருப்பது. இதுவும் ஒரு மஹாவிரதமாகிறது.

3 அனர்த்த தண்ட விரதம்: பாபங்களுக்கு காரணமான பயனில்லாத, பிரயோஜனமில்லாத செயல்களைச் செய்வது அனர்த்த தண்டம் எனப்படும். இது ஐந்து வகையாகும்.

3(1). பாபோபதேசம்: துன்பம் தரக்கூடிய செயல்களை செய்ய பிறரை தூண்டுவிப்பது. விலங்கு முதலானவற்றை கொல்ல தூண்டுவது, பூச்சி மருந்து  வைப்பது, நெருப்பு வைப்பது, அதற்காக விலங்குகளை விற்பதுஎப்படி பொய் சொல்ல வேண்டும், திருட வேண்டும் என்று கற்பிப்பது; காம சேவை செய்ய, பற்று வைக்க தூண்டுதல் போன்றவை.

3(2). ஹிம்சா தானம்: ஹிம்சைக்கு உபகரணம் தருதல், பொருள் தருதல் போன்றவை. விஷம், கத்தி, கயிறு, அங்குசம், நெருப்பு, கம்புதுப்பாக்கி முதலானவற்றை பிறருக்கு தருவது; பூனை, நாய் போன்றவற்றை தருவதும் ஹிம்சா தான்மாகும்.

3(3). அபத்தியானம்: வெறுப்பின் காரணமாக தீயவை நினைத்தல் (தியானித்தல்) ஒருவருக்கு  கஷ்டம்நஷ்டம்  வரவேண்டும்; திருடு போக வேண்டும், தீப்பிடித்து எரிய வேண்டும்; பிறர் வெற்றி/தோல்வி பற்றி சிந்திப்பது போன்றவை.

(டி.வி ல் மேட்சில் யார் ஜெயிப்பது, தோற்பது  என்பதைப் பற்றிய சிந்தனை, சினிமாவில், சீரியலில் ஐந்து பாபம்  பற்றிய காட்சிகளைக் காணுதல், பின்னர் சிந்தித்தல்அவை கனவிலும்  வருகிறது. இவையும் அபத்தியானமாகும்.)

3(4). துஸ்ஸுருதி: ஆசை, வெகுளி, மயக்கங்களை/ தீய செய்லகளை உண்டாக்கக் கூடிய/ தூண்டக்கூடிய நூல்களை படிப்பதுகேட்பது, சொல்லித்தருவது அசுபசுருதியாகும்.
(விகதைதேச கதை, ஸ்த்ரீ கதை, உணவு கதை, திருட்டு கதை எல்லாம் படிப்பது/ கேட்பது; சுற்றி இருப்பவர்கள் பற்றிய  கதைகள்,  நியூஸ் பேப்பரில் வரும் வதந்திகள்கெட்ட செய்திகள், ஹிம்சைக் கான  செய்திகள் விருப்பு/வெறுப்புக்கான வார்த்தை களை படிப்பதும், கேட்பதும் கூடாது.

3(5). பிரமாத  சரியை: பயனின்றி மரம், செடி, கொடிகளை, இலைகளை, கிளைகளை ஒடித்தல், வெட்டுதல்;   பூமியை குத்திக் கிளறுவது, நீரை எடுத்து  தெளித்தல்; நாய், பூனை வளர்த்தல்; அங்கும் இங்கும் பூமியில் சுற்றுதல், உட்காருதல், பேசுதல் போன்றவை செய்யாமல் இருப்பது.

மேற்சொன்ன மூன்றும் முதல் ஐந்து விரதங்களை கடை பிடிக்க உதவுவதால் குண விரதம் எனப்படுகிறது.

சிக்ஷா விரதங்கள்: நான்கு

(i) ஸாமாயிகம்:  ஸமய என்றால் தன்னில் ஆழ்வது, (நெய் எதனுடன் கூடுகிறதோ அதுவாக  ஆகிவிடுகிறது) ஒன்றி விடுதல்/ ஒருமுக சிந்தனை எனப்படும். ஆத்ம முன்னேற்றம் குறித்து, குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில், இத்தனை முறை தியானத்தில்/சாமாயிகத்தில்  இருப்பது  என்று நியமம் எடுத்துக் கொண்டால் அவர் மஹாவிரதத்தை அடைந்தவராவார்.

ராகதுவேஷம் விட்டு சமதா பாவனையோடு காலை, மதியம், மாலை மூன்று நேரங்களிலும்  சாமாயிகம்  செய்தல்  வேண்டும். அந்த நேரத்தில்  அங்கும் இங்கும் பாராமல், பேசாமல் நல்ல தரும சிந்தனை, நமோகார  மந்திர சிந்தனை, வைராக்ய சிந்தனை போன்ற எண்ணத்தில் இருக்க வேண்டும். அருங்கலச் செப்பில் விதி முறையைக்  காணலாம். அந்த நேரத்தில் ஸ்தூல,  சுட்சும பாபங்கள் தியாகமாகின்றன. அதனால் மஹாவிரதமாகிறது.

(ii) புரோஷத (பருவ) உபவாசம்: பிரதி மாதத்தில் இரு அஷ்டமி (8ம் நாள்), இரு சதுர்தசி (14ம் நாள்) ஆகிய புனித நாட்களில் ஐம்புலனுக்கான அனைத்து விஷயங்களையும் தியாகம் செய்து தன்னில் தோய்ந்திருத்தல் உபவாசமாகும். அன்றைக்கு முதல் நாள் மறுநாள் (தாரணை, பாரணை) ஒரு  வேளை உண்டு, அன்றைய தினம் பட்டினி விரதம் ஏற்று நடந்தால் உபவாசம் ஆகும். உடல் சக்தி பார்த்து விரதம் ஏற்றல் நலம்.

உபவாச தினத்தில் உடலை அழகு படுத்துதல், குளித்தல், வாசனை  திரவியம், மாலை, ஆபரணம், அலங்கரித்தலை தியாகம்  செய்ய வேண்டும். ஜிநாலயம்/ தனி இடத்தில் அன்று தர்ம கதை/ அறவுரை கேட்டல், ஆகமம் படித்தல் போன்ற நல்ல எண்ணங்களில்  மனதை ஈடுபடுத்த வேண்டும்.

(iii) உபபோக பரிபோக பரிமாண விரதம்:  ஒரு முறை மட்டும் பயன்படும் பொருட்களான உணவு, பானம், வாசனைப்பொருள், தாம்பூலம், பூக்கள் போன்றவை போகப் பொருட்களாகும்.
பலமுறை பயன் படும் ஆடை, ஆபரணங்கள், மேசை, நாற்காலி போன்ற தளவாடங்கள், வீடு, கார், வண்டி, குதிரைகள் முதலானவை உபபோக  பொருட்களாகும்.
போக, உபபோக  பொருட்களை அளவு படுத்திக் கொள்வது, அளவுக்கு மீறி பொருட்கள் மீது பற்றில்லாமல்  இருப்பது.
(சில  ஆகமங்களில் போகம்- உபபோகமாகவும், உபபோகம் – பரிபோகமாகவும் சொல்லப்பட்டுள்ளது.)

தியாகத்தில் இரு வகையுள்ளது.
நியமம்: குறிப்பிட்ட காலம் வரை எடுத்துக் கொள்வது.
யமம்: வாழ்நாள்  முழுவதும் எடுத்துக் கொள்வது.

சில பொருட்கள் உண்ணக்கூடாத தாகவும்,  உண்பதற்கு தகுதியற்றதாகவும் உள்ளவற்றை ஒரு போதும்  விரதிகள் பயன்படுத்தல் ஆகாது.

ஒருவர் உபபோக/பரிபோகத்தில் எவை எவை மிக அவசியம்  என்பதை நிர்ணயம்  செய்து கொண்டு நியமமாகவோ அல்லது யமமாகவோ விரதம்  ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.

(iv) அதிதி ஸம்விபாகம்: சுயகட்டுப்பாட்டுடன் ஒரு இடம் விட்டு மற்றொரு இடத்திற்கு
பயணம் செய்பவரை அதிதி என்பர். அல்லது குறிப்பிட்ட நாள் இன்றி எந்த நாளிலும் வருபவரையும்  அதிதி  என்பர்.

மோட்சப்பாதையில் செல்லும் முனிவர்களான  அதிதிகளுக்கு  தூய எண்ணத்துடன்  தூய உணவை  அளித்தல் வேண்டும். தங்க இடமும்; இம்சைகளை தடுக்க உதவும் மயிற்பீலி, கமண்டலம் முதலான உபகரணகளையும்; நற்காட்சிக்கான நூலகளையும் முனிவர்களுக்கு  அளித்தல் அதிதி ஸம்விபாகம் ஆகும்.

துறவறம் ஏற்க அடிப்படையான இந்நான்கும் சிக்ஷா விரதம் எனப்படுகிறது.


மேற்கூறியவற்றுடன் இல்லறத்தார்  கடமைகளையும் சேர்த்து பார்த்தல்  வேண்டும்.

-------------
இல்லறத்தார் கடமைகள் என்பவை...


------------- 


சல்லேகனை விரதம்



மாரணாந்திகீம் ஸல்லேகனாம் ஜோஷிதா – (சூ22) = (258)


मारणान्तिकीं सल्लेखना जोषिता


Maranantikim sallekhanam joshita


மாரணாந்திகீம்வாழ்வின்  கடைசியில்ஸல்லேகனாம்சன்யாச மரணத்தைஜோஷிதாநல்ல மகிழ்ச்சியோரு செய்தல்  வேண்டும்.

At the end of one’s duration of life, the householder votaries should make their body and internal passions emaciated by abandoning their sources gradually at the approach of death. This is called Sallekhana.  



இல்லறத்தார்கள் இறக்கும் தருவாயில் சல்லேகனை விரதம் ஏற்றல் வேண்டும்.

நல்ல  விதமாக உடலையும், ஆசை முதலிய  கஷாயங்களையும் ஒடுக்கியும், இவை வரும் வாயில்களை படிப்படியாக அடைத்தும் உயிர் நீப்பது சல்லேகனை  ஆகும்.

இல்லறத்தானின் பன்னிரண்டு விரதங்களுடன் முத்தாய்ப்பாக இந்த சல்லேகனா வைக்கப்பட்டுள்ளது.

ஒருவர் சல்லேகனையை விருப்பத்துடன், பிறர்  தலையீடு  இன்றி, முழு மனத்துடன் அவராகவே மேற்கொள்வர். ஜோஷிதாமகிழ்ச்சியுடன் ஏற்று ஒழுகுதல்.

ஆசை, வெகுளி, மயக்கமுடையார்  விஷம் மற்றும் ஆயுதம் கொண்டு தன்னைத்தானே உயிரைப் போக்கிக்கொள்வர். (நிறைவேறாத விருப்பத்துடன்) அதனால் இது தற்கொலையில்லை.

ஆனால் சல்லேகனை விரதம் ஏற்பவருக்கு ஆசை, வெகுளி, மயக்கம் மற்றும்  கடும் பற்று தோன்றாதிருத்தலே அகிம்சை என்றும், அவ்வாறு இல்லையாயின், ஹிம்சை எனவும் அருகப் பெருமான் உரைத்ததை நன்கு உணர்ந்திருப்பர்.

விற்பதற்காக பலவித பொருட்களை சேமித்து வைத்துள்ள கிடங்கு அழிவதை எந்த வியாபாரியும் விரும்புவதில்லை. ஆனால் தீப்பிடித்த சமயத்தில், அழிவை தடுக்க முடியாத நிலையில், அதிலுள்ள விலைஉயர்ந்த பொருட்களையாவது காப்பாற்ற முனைவார்.

அதுபோல இல்லறத்தார் அணுவிரதம், குணவிரதம் மற்றும் சிக்ஷா விரதத்தை காப்பாற்றி வரும் போது, உடல் அழியும்  நிலை வரும் போது  நற்குணங்கள் நிறைந்த செயல்கள் மூலம்  விரதங்களுக்கு ஊறு நேரா  வண்ணம் காப்பாற்ற நினைப்பதே சல்லேகனா  விரதம். அதனால் அது தற்கொலைக்கு சமமானது இல்லை.

அது இருவகைப்படும்.

பக்தப்ரதயாக்யானம்என்ற முறையில் திட உணவினை விட்டு, பால் குடித்தல், அதனை நீக்கி நீர்  அருந்துதல்  இவ்விதமாக படிப்படியாக அகாரத்தை  குறைத்து இறுதியில் காற்றை மட்டுமே உணவாக  கொண்டு உடலை ஒடுக்குதலாகும்.

ப்ரோயோபகமனம்: என்பது படிப்படியாக உணவை விடாமல்; ஒருமுறையே உணவு, பானகம்  முதலியவற்றை நீக்கி உடலின் சக்தியை குறைத்தல்.
-----------
மரண சமயத்தில் எண்ணம் எவ்வாறு உள்ளதோ அதற்கேற்றால் போல் மறுபிறவி அமையும் என்பதால், பாவனைகள் நல்லபடியாக  இருப்பதற்காகவே, உலகியல் பந்தங்களின் பற்றையும், உடல்மீதுள்ள  பற்றையும் விடுவதற்காகவே சல்லேகனை அவசியம் என்று கூறப்படுகிறது.

அதனை சமாதி மரணப்பெருவிழா அல்லது மிருத்யு மஹோத்ஸவ பெருவிழா என்றும்  கூறப்படும்.
--------

அடுத்து நற்காட்சியில் ஏற்படும் குற்றங்கள் பற்றி……

---------------- 


நற்காட்சிக்கான ஐந்து  அதிசாரங்கள்




சங்காகாங்க்ஷாவிசிகித்ஸாநந்யத்ருஷ்டி  ப்ரசம்ஸா ஸம்ஸ்தவா: ஸம்யத்ருஷ்டேரதீசாரா:  - (சூ23) = (259)


शंकाकाङक्षाविचिकत्सान्यदृष्टि प्रशंसा संस्तवाः सम्यग्दृष्टेरतीचाराः


Shankakanksha-vichikitsa-(a)nyadrstiprashansa-samyagdrsteraticharah



சங்காஜினபகவான் தத்துவங்களில் ஐயம் கொள்ளல்காங்க்ஷா உலக சுகத்தை விரும்புதல்; விசிகித்ஸா- ஏழைகளையும், முனிவர்களையும்  கண்டு அருவருப்படைதல்; அந்யத்ருஷ்டி ப்ரசம்ஸாஜினதர்மத்திற்கு எதிரான தர்மத்தை உயர்வாக  எண்ணுதல்ஸம்ஸ்தவா: - தீக்காட்சி யுடையோரை போற்றுதல்; ஸம்யத்ருஷ்டேரதீசாரா: - நற்காட்சியாளருக்கு இருக்கக் கூடாத ஐந்து அதிசாரங்கள்.


Doubt in the teachings of the Jina, desire for worldly enjoy-ment, repugnance or disgust at the afflicted, admiration for the knowle-dge and conduct of the wrong believer and praise of wrong believers, are the five trans-gressions of the right believer.  


நற்காட்சியாளரிடம் இருக்கக்கூடாத குறைபாடுகள் அல்லது வறம்பு மீறல்கள் அதிசாரம்  எனப்படும்அவையாவன.

ஸங்கா: ஜிந வசனத்தில் நம்பிக்கையற்று இருத்தல்/ ஏழு வகையான பயங்களுக்கு  உள்ளாகுதல்.

சூட்சும பதார்த்தங்களில் சந்தேகம் இருக்க கூடாது. ஜினர் வழி வந்த ஆசார்யர்கள் எழுதிய ஆகமங்களில் சந்தேகம் வரக்கூடாது. சிறந்த ஒழுக்கம், சிறந்த பாவனையுடையவரித்தில் தான் நல் உபதேசம் இருக்கும். சூட்சுமமாக கிரியை செய்பவரிடத்தில் தான் சூட்சுமமான பேச்சும் இருக்கும்.

காங்ஷா : ஐம்பொறிகளின் இன்பத்தை விரும்புதல்/ பிறவி சுகத்தை விரும்புதல்.

தர்மத்தை கடைபிடித்தால் உலகச் சுகம்  கிடைக்க வேண்டும் என்று நினைப்பது குற்றம்.

விசிகித்ஸா : நிர்வாண முனிவர்கள், நோயுற்றவர்கள், அங்கஹீனமானவர்கள் இவர்களைக் கண்டு வெறுப்பு  கொள்ளல்.
துறவியர் உடம்பைப் பார்த்து அருவெறுப்பு  கொள்ளுதல் கூடாது. அது விசிகித்ஸா தோஷம்  ஆகிறது. அவர்களுக்கு மும்மணி உள்ள போது உடம்பு அசூசையாக இருந்தாலும் பவித்ரமாகிறது. அதனால் வணங்குவது, பூஜைசெய்வது போன்ற வற்றை செய்தல்  வேண்டும்.

அந்ய த்ருஷ்டி ப்ரஸம்ஸா : நற்காட்சி இல்லாதவர்களின் (தவறான நம்பிக்கையை) அறிவினை உயர்வானது என்று எண்ணி மனதால் ஏற்றல்.

தீயகாட்சி யுடையவர்கள் பேச்சை கேட்டு சிறந்த பேச்சு, பொருள் என போற்றுதல் (ப்ரஸம்ஸா), மித்யா தேவ, தேவியர் ஆலங்கள் எவ்வளவு பெரியது, அழகாக இருக்கிறது, சிலை எவ்வளவு அழகு இப்படி பேசுவது ப்ரஸம்ஸா தோஷம் ஆகிறது.

அந்யத்ருஷ்டி ஸம்ஸ்தவம் : தீக்காட்டியுடையவரை பாராட்டுதல்/ உயர்வாக  பேசுதல்.

பஞ்சபரமேஷ்டி/நவதேவதை தவிர  வேறு மித்யா த்ருஷ்டிகளுக்கு துதி, புகழ் சொல்லுதல் கூடாது.

---------

அடுத்து பஞ்ச விரதங்கள் மற்றும்  ஏழு சீல விரதங்களுக்கும் அதிசாரங்கள் காண்போம்….

-------------------- 


வ்ரதசீலேஷு பஞ்ச பஞ்ச யதாக்ரமம் – (சூ24) = (260)


व्रतशीलेषु पञ्च पञ्च यथाक्रमम्


Vratashileshu pancha pancha yathakramam



வ்ரதசீலேஷு – அணுவிரதம், சீல விரதங்களுக்கும்; பஞ்ச பஞ்ச – ஐந்து, ஐந்து; யதாக்ரமம் – முறையே (அதிசாரங்கள்) சொல்லப்படுகின்றன.


There are five transgressions for each of the vows, minor vows and the supplementary vows.  



ஐந்து  அணுவிரதங்கள், ஏழு  சீலங்களுக்கும் முறையே (மூன்று குண விரதங்கள், நான்கு சிக்ஷா  விரதங்கள்)  ஐந்து,  ஐந்து  அதிசாரங்கள் உள்ளன.

-----------

அடுத்து கொல்லா விரதத்தின் அதிசாரங்களை…..

----------------- 


கொல்லாமைக்கான அதிசாரங்கள்



பந்தவதச் சேதாதிபாராரோபணான்னபான  நிரோதா: - (சூ25) = (261)


बन्धवधच्छेदातिभारोपणान्नपाननिरोधाः


Bandha-vadhachchhedati-bhararopanannapana-nirodhah



பந்தவத – கட்டுதல், வதைத்தல்;  சேத – அறுத்தல்; அதிபாராரோபணம் – அதிக பளு  ஏற்றுதல்; அன்னபான  நிரோதா: - ஆகாரம் கொடுக்காமல் இருத்தல்

Binding, beating, mutilating limbs, overloading and withholding food and drink are the fire transgressions of non-voilence.  


கொல்லாமை விரதத்தின் ஐந்து அதிசாரங்கள்:

பந்தம் : விரும்பியவாறு செல்ல தடை செய்தல்; பிராணிகளை,  மனிதர்களை கோபத்தினால்  கயிற்றால், சங்கிலியால் கட்டுவது; கூண்டில், சிறையில், வேலிக்குள் அடைப்பது

வதை : தடி, சாட்டை போன்றவற்றால் அடித்தல்; வேலை செய்ய வில்லை என்று அடிப்பது போன்ற துன்பங்களை தருவது வதையாகும்.

சேதம் : காது, மூக்கு போன்ற அவயங்களை அறுப்பது,  சூடு வைத்தல் போன்றவை.

அதிபராரோபணம் : விலங்குகளிடமும், மனிதர்களிடமும் அதிக வேலை வாங்குதல்; பளு தூக்கச் செய்தல் போன்றவை. (தர்ம க்ஷேத்திரத்தில் தானே அதிக வேலையை எடுத்துச் செய்வது அதிசாரம் இல்லை. அதே அவர்கள் கஷ்டமாக நினைத்தால் பாபம் கட்டும்.)

அன்னபான நிரொதம் : (with holding food and drink) பசு, மனிதர் (வேலையாள்) பசி நேரத்தில் தரவேண்டிய உணவு, நீரை அந்தந்த வேளைக்கு கொடுகாமல் காலம் தாழ்த்துதல்;
(விலங்குகள் வாயைக்கட்டுதல், காலை கழுத்துடன் கட்டுதல், வாயில் சூடு போடுதலினால் உணவு அருந்த முடியாமை, இதனால் அந்தராயம்  பந்தமாகிறது.)

--------------

அடுத்து ஸத்யாணு விரதத்தின் அதிசாரத்தை….. 

-------------------- 


ஸத்யாணு விரத  அதிசாரங்கள்




மித்யோபதேசரஹோப்யாக்யானகூடலேக க்ரியாந்யாஸாப ஹாரஸாகார மந்தரபேதா: - (26) = (262)


मिथ्योपदेश रहोभ्याख्यानकूटलेखक्रिया न्यासापहार साकारमन्त्र भेदाः


Mithyopadesha-rahobhyakhyana-kutalekhakriya-nyasapahara-sakaramantrabhedah



மித்யோபதேச – பொய் உபதேசம்; ரஹோப்யாக்யானம் – ரகசியங்களை வெளிப்படுத்துவது; கூடலேக க்ரியா – போலி ஆவணங்கள் தயாரித்தல்; ந்யாஸாப ஹாரம் – பிறர் பொருள் அபகரித்தல்; ஸாகார மந்தரபேதா: - மற்றவர்களது எண்ணங்களை வெளிப்படுத்துதல்.


Perverted teaching, divulging what is done under secrecy, forgery, misappropriation, and proclaiming others’ thoughts are the five transgressions of truth.


ஸத்யாணு விரதத்தின் ஐந்து அதிசாரங்கள்: -

மித்யோபதேசம் – உண்மையில்லாத நெறியினை பிரசாரம் செய்தல், தவறான கொள்கைகளை பரப்புதல், மோக்ஷத்திற்கான வழி எனச் சொல்லி தவறான, விபரீத வழியைக் காண்பித்தல், பேச்சால் வஞ்சித்தல், இன்பம், தர்மம் இல்லாத தீய உரை.


ரஹோப்யாக்யானம் : ஆண் பெண் தனிமையில் நடந்து கொண்ட ரகசியங்களை வெளியிடுதல், மறைவிடத்தில் ரகசியமாக நடந்த வற்றை வெளியிடுதல், நடைமுறை ஒழுக்கத்தை மீறுதல்.

கூடலேக க்ரியா : மாயாச்சாரத்தோடு கட்டுரை எழுதுதல், பிரசாரம் செய்தல், பொய்யான ஆவணம் தயாரித்தல், கையெழுத்திடுதல்; பொய்யை நல்லதாக கலப்படம் செய்தல் போன்றவை.

ந்யாஸாப ஹாரம் : (misappropriation ) பிறர் பொருளை வஞ்சகமாக அபகரித்தல்; கொடுத்துவைத்த பொருளை இல்லை யென  கூறுதல், நம்பிக்கை துரோகம்  செய்தல், கொடுக்கல் வாங்கலில் நேர்மையின்மை.

ஸாகார மந்தரபேதா : மற்றவர்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்துதல், பிறருடைய ரகசியங்களை குறிப்பால் உணர்ந்து, பொறாமையாலோ, வேறு காரணத்தாலோ வெளியிடல், வாயால் ஒன்றை கூறி கை சைகையில் வேறொன்றை தெரிவித்தல் போன்றவை.

--------------
அடுத்து அசெளயார்ணு விரதத்தின் அதிசார………….


--------------- 


களவின்மை விரத அதிசாரங்கள்



ஸ்தேனப்ரயோகததா ஹ்ருதாதாநவிருத்தரா ஜ்யாதிக்ரமஹீனாதிகமா னோந்மான ப்ரதிரூபகவ்ய வஹாரா:  - (சூ27) = (263)


स्तेन प्रयोगतदाह्वतादान विरुद्धराज्यातिक्रमहीनाधिक मनोन्मान प्रतिरुपक व्यवहाराः


Stenaprayoga-tadahrtadana-viruddharajyatikrama-hina-dhikamanonmanapratirupaka-vyavaharah



ஸ்தேனப்ரயோக – களவு செய்ய தூண்டுதல்; ததா ஹ்ருதாதாந – திருட்டுப் பொருட்களை விலை கொடுத்து வாங்குதல்; விருத்தராஜ்யாதிக்ரம – அரசு சட்டங்களை மீறுதல்;  ஹீனாதிகமா னோந்மான – வியாபாரத்தில்  தவறான எடை கல்லை பயன்படுத்துதல்;  ப்ரதிரூபகவ்யவஹாரா: - கலப்படம் செய்து விற்று ஏமாற்றுதல்.


Prompting others to steal, receiving stolen goods, underbuying in a disordered state, using false weights and measures, and deceiving others with artificial or imitation goods are the five transgressions of non-stealing.  


களவாமை விரதத்தின் அதிசாரங்கள்:

ஸ்தேனப்ரயோகம்: பிறரை களவு செய்ய ஊக்குவித்தல், உபாயம் செய்தல், செய்வதை அனுமதித்தல் போன்றவை.

ததாஹ்ருதாதாநம்: (receiving stolen goods) களவு செய்த பொருளை வாங்குதல் (விலை குறைவாக கிடைக்குமாதலால்)

விருத்தராஜ்யாதிக்ரம் :  (selling and buying goods under breach of law) அரசு சட்டதிட்டங்களுக்கு பணியாமல் நேர்மையற்ற முறையில் பொருட்களை, வாங்குவதும் விற்பதும் அதில் கொள்ளை லாபம் அடிப்பது போன்ற செயல்கள். வெளிநாட்டு பொருட்களை கடத்தலில் பெறுதல்/அனுப்புதல்; அன்னிய செலாவணி மோசடி செய்தல். வரி ஏய்ப்பு செய்தல் போன்றவை.

ஹீனாதிகமா னோந்மானம் – வியாபாரத்தில் கொள்முதல் அதிக எடை,குறைந்த விலையுடனும் விற்பனையில் குறைந்த எடை, அதிக விலையுடனும் விற்று ஏமாற்றுதல்;

 ப்ரதிரூபகவ்ய வஹாரம்: (deceiving others  with imitation goods) வியாபாரத்தில் மதிப்புள்ள பொருளுடன் மதிப்பற்ற போலிகளை கலப்படம் செய்தல்; செயற்கை கல்லை வைரமென்றும், உலோகப் போலிகளை தங்கம், வெள்ளி நகை என  விற்று ஏமாற்றுதல் போன்றவை.
-----------
அடுத்து பிரம்மச்சர்யாணு விரதத்தின் அதிசாரங்கள்….

---------------- 


பிரம்மச்சர்யாணு விரத மீறல்கள்




பரவிவாஹகரணேத்வரிகா பரிக்ருஹீதாநபரி க்ரூஹீதா கமநாநங்க க்ரீடாகாம தீவ்ராபினிவேசா:  - (சூ28) = (264)


परविवाहक रणेत्वरिका परिगृहीता गमनानाङ्गक्रीडा कामतीव्राभिनिवेशाः


Paravivahakaranetvarika-parigrhitaparigrhita-gamananangakridakama-tivrabhiniveshah



பரவிவாஹகரண – பிறருக்கு திருமணம்  செய்ய தர்கராக செயல் படுதல்: இத்வரிகா பரிக்ருஹீதா – திருமணமான, நடத்தை கெட்டவருடன் தொடர்பு கொள்ளுதல்; பரி க்ரூஹீதா கமந – கணவன் இல்லாத/விபசார பெண்ணிடம் தொடர்பு கொள்ளுதல்; அநங்க க்ரீடா – உருப்புமாறி காம இச்சையில் ஈடுபடுதல்; காம தீவ்ராபினிவேசா:  - காமத்தீயின் தூண்டுதாலால் இனவிருத்தி செயலில் ஈடுபடுதல்.


Bringing about marriage of persons other than own family members, intercourse with an unchaste married woman, cohabitation with a harlot, perverted sexual practices and excessive sexual passion are the five transgressions of chastity.  


தன் குடும்பத்தை தவிர அயலாருக்கு/ உலகத்தாருக்கு திருமணம் செய்விக்க தரகர் போல் செயல்படுதல்/ஆதரித்தல்;

கணவன் இல்லாத நேரத்தில் நடத்தை பிசகியவளிடமும்/கணவனை  இழந்தவளுடனும்/ விலை மாதரிடமும் தொடர்பு வைத்திருத்தல்

காம உணர்ச்சியின் மேலீட்டால் இனவிருத்திக்கான அங்கங்களை தவிர்த்து, இயற்கைக்கு மாறான முறையில் பிற உறுப்புகள்/ கருவிகளால் இச்சையை தீர்த்துக் கொள்ளுதல்.

மேலும் காமத்தீயின் வேட்கையால் இரவு, பகல் பாராது காமத்துய்ப்பு செய்தல்


ஆகிய இவையனைத்தும் பிரம்மச்சர்ய விரதத்தின் விதிமீறல்களாகும்.
------------

அடுத்து அபரிக்கிரஹ அதிசாரங்களைக் காண்போம்……

------------------ 


அபரிக்ரஹ விரதத்தின் விதிமீறல்கள்





க்ஷேத்ரவாஸ்து ஹிரண்ய ஸுவர்ணதன தான்யதாஸீதாஸ குப்யப்ரமாமா: - (சூ29) = (265)


क्षेत्रवास्तुहिरण्य सुवर्णधन धान्य दासीदास कुप्य प्रमाणतिक्रमाः


Ksetra-vastu-hiranya-suvarna-dhana-dhanya-dasi-dasa-kupya-pramanatikramah



க்ஷேத்ரவாஸ்து – நிலம் வீடு வரையறுக்குக் கொண்டதற்கு மீறி: ஹிரண்ய ஸுவர்ண – அளவு செய்ததற்கு அதிகமாக பொன், வெள்ளி, பணம், நாணயம் போன்றவற்றை சேகரித்தல்; தன தான்ய – வரையறைக்கு மீறி நிலம், பசு, நெல், கோதுமை போன்ற வற்றை சேகரித்தல்; தாஸீதாஸ குப்யப்ரமாணாதிக்ரமா: - துணி, பாத்திரம் போன்ற பொருட்களை அளவுக்கு அதிகமாக விரும்புதல் போன்றவை.

Exceeding the limits set by oneself with regard to cultivable lands and houses, riches such as gold and silver, cattle and corn, men and women servants and clothes are the five transgressions of non-attachment.  


உலகில் வாழ வகை செய்ய நிர்ணயித்துக் கொண்ட அளவை விட அதிகமாக வீடு, நிலங்கள், செல்வங்களான பணம், தங்கம், வெள்ளி, கால்நடைகள், உணவிற்கான  தான்யம், வேலையாட்கள், அணியும் ஆடைகள், புழங்கும் பாத்திரங்களை வைத்திருத்தல் பொருள் விருப்பத்தின் வரையறை அணுவிரத்தத்தின் விதி மீறல்கள் ஆகும்.


வாஸ்து – வாழுமிடம், வீடு போன்றவை

ஹிரண்ய – விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அணிகலன்கள், காசு போன்றவை

தனம் – பசு முதலிய கால்நடை செல்வங்கள்;

தான்யம் – நெல், கோதுமை, சோளம் போன்ற உணவுப் பொருட்கள்

தாசிதாச – ஆண், பெண் வேலையாட்கள்;

குப்யம் – பட்டு, பருத்தி துணி, அரைத்த சந்தனம்

பரிக்கிரஹ பரிமாணம் – அடிப்படை தேவைக்கேற்ற வகையில் மிகாமல் அளவிடுதல்/ வரையறை செய்தல்.

மேற்கூறிய செல்வங்களைப் பேராசையின் காரணமாக சேகரிப்பது, கொள்வது, திரட்டுவது, பெறுவது மிகுபொருள் விரும்பாமை விரதத்தின் அதிசாரங்கள் ஆகும்.
-------------------
அளவிடுதல் எவ்வாறு எனில் தமக்கும், பிறருக்கும் ஏற்படும் ஹிம்சையின்/சிரமத்தின் அளவீட்டை பொருத்து அமையும்.
---------------

இந்த ஐந்தின் அதிசாரங்களை கண்டோம், அடுத்து சீல விரதங்களின் விதிமீறல்கள் பற்றி…. 

--------------------------- 


திக்விரத விதிமீறல்கள்



ஊர்த்வாதஸ்திர்யக் வியதிக்ரம க்ஷேத்ரவ்ருத்தி ஸ்ம்ருத் யந்தராதாநாநி – (30) = (266)


ऊर्ध्वाधस्तिर्य ग्व्यतिक्रमःक्षेत्र वृद्धिस्मृत्यन्तराधानानि


Urdhvadhastiryagvyatikrama-kshetravrddhi-smrtya-ntaradhanani



ஊர்த்வ – தான் நிர்ணயித்துக் கொண்ட உயரத்திற்கு மேலேயோ; அதஸ்திர்யக் – நிர்ணயித்துக் கொண்ட ஆழத்திற்கு கீழேயோ ; வியதிக்ரம – செல்லுதல், இறங்குதல்;  க்ஷேத்ரவ்ருத்தி – ஒரு திசையில் குறைத்து, மறு திசையில் அதிகமாகவும் தூரத்தை மாற்றியமைத்தல்; ஸ்ம்ருத் யந்தராதாநாநி – விரத நிர்ணயத்தை மீறி பயணம் கொள்ளல்.


Exceeding the limits set in the directions, namely upwards, downwards and horizontally, enlarg-ing the boundaries in the accepted directions, and forgetting the bound-aries set, are the five transgressions of the minor vow of direction.  



மலை முதலானவற்றில் குறிப்பிட்ட உயரத்திற்கும் மேலே ஏறுதல்; (ஊர்த்வாத வ்யதிக்ரம)

கிணறு, சுரங்கம் முதலான பூமி மட்டத்திற்கு கீழே குறிப்பிட்ட அளவுக்கு கீழ் ஆழமாக இறங்குதல்; (அதோவ்யதிக்ரம)

சமதளத்தில் குறிப்பிட்ட வரையறை தூரத்திற்கு மேல் பயணம் செல்லுதல்; (திர்யக்வ்யதிக்ரம)

பேராசையின் காரணமாக திசைகளில் வரையறை செய்து கொண்ட எல்லையை அதிகமாகிக் கொள்ளுதல்; நிலம் கூட்டுதல், ஒரு பக்கத்தை வாங்கிக் கொண்டு வேறு பக்கத்தை விடுதல் போன்றவை.

ஏற்கனவே செய்து கொண்ட வரையறையை மறந்து விடுதல் மற்றும் நிர்ணயித்த எல்லைக்குள்ளும் குறிகோளின்றை திரிதல் போன்றவை திசை விரதத்தின் ஐந்து அதிசாரங்களாகும்.
---------------------

அடுத்து குண விரத்தின் அதிசாரங்களைக் காண்போம்…..

----------------------- 


தேச விரத்தின் அதிசாரங்கள்



ஆநயனப்ரேஷ்யப்ரயோகசப்தரூபாநுபாதபுத்கலக்ஷேபா: - (சூ31) = (267)


आनयन प्रेष्य प्रयोग शव्दरुपानुपात पुद्गलक्षेपाः


Anayana-preshyaprayoga-shabdarupanupata-pudgalakshepah



ஆநயன – இடத்தின் வரையறைக்கு வெளியே பொருட்களை வரவழைத்தல்;   ப்ரேஷ்யப்ரயோக – வரையறை எல்லைக்கு வெளியே வேலையாள்;   சப்தரூபாநுபாத – தும்புதல், இருமுதல், கனைத்தல், கைதட்டுதல் முதலிய சமிக்ஞையால் எல்லைக்கு அப்பால் கருத்தினை வெளியிடுதல்; புத்கலக்ஷேபா: - எல்லையை மீறி கல், மண் போன்றவற்றை எறிந்து தன் தேவையை பூர்த்தி செய்தல்


Asking someone staying outside the country of one’s resolve to bring something from there,  commanding someone there to do something, indicating one’s intentions by sounds, by showing oneself, and by throwing clod etc. are the five transgressions of the minor vow to abstain from activities beyond a country.  


தேச எல்லை வரம்புக்கு வெளியே தனது விருப்பத்தை பூர்த்தி செய்யும் பொருட்களை வரவழைத்தல்;

அதனை நிறைவேற்ற வேலையாட்கள், கடிதம் முதலையவற்றை அனுப்புதல்;

தும்முதல், இருமுதல் போன்ற குரல் சமிக்ஞை மூலமாக எல்லைக்கு வெளியே உள்ளவர்களுக்கு தெரிவித்தல்;

தேச எல்லைக்கு வெளியே உள்ளவர்களுக்கு உயரமான இடத்திலிருந்து கையசைத்தல், கொடிகள், சைகைகள் மூலமாக குறிப்பால் தம் எண்ணத்தை தெரிவித்தல்;

எல்லைக்கு வெளியே மண்ணாங்கட்டி, கல், கட்டிகளை எறிந்து தேவையை பூர்த்தி செய்ய எத்தனித்தல் போன்றவைகள்

தேச விரதத்தின் அதிசாரங்கள் ஆகும்.
------------------

அடுத்து அனர்த்த தண்ட விரத விதி மீறல்களை……

--------------------- 


அனர்த்ததண்ட விரத விதி மீறல்கள்



கந்தர்பகெளத்குச்ய மெளகர்யாஸமீக்ஷ்யாதி கரணோபபோக பரிபோகா நர்தக்யாநி – (சூ32) = (268)


कन्दर्पकौत्कुच्य मौखर्यासमीक्ष्याधिकरणोपभोग परिभोगानर्थक्यानि


Kandarpa-kautkucya-maukharya-samikshyadhi-kiranopabhoga-paribhoganarthakyani



கந்தர்பம் – உலக விருப்பம் மிகுந்த விகல்பத்தோடு சிரித்தல், நாகரீக மற்ற பேச்சு; கெளத்குச்யம் – ராத்தோடு கூடிய நாகரீகமில்லா சேஷ்டைகள்;  மெளகர்யம் – பிரயோஜனம் இல்லாமல் அதிகம் பேசுதல்;  அஸமீக்ஷ்யாதி கரணம் – பிரயோஜனம் இல்லாமல் எல்லைமீறி வேலை செய்தல்; யோகக் கிரியை செய்தல்;  உபபோக பரிபோகா நர்தக்யாநி – தேகைக்கதிகமாக போக உபபோக பொருட்கள் வைத்திருத்தல்.


Vulgar jokes, vulgar jokes accompanied by gesticulation, garrulity, unthinkingly indulging in too much action, keeping more than required consumable and non-consumable objects, are the five transgressions of the vow of desisting from unnecessary sin.  


செருக்குடனும், பரிகாசத்துடனும் தகுதியில்லா பேச்சுக்களை பிறர் பற்றி கூறுதல்;

தீய நடையுடை பாவனைகளான துஷ்டத்தனமாகவும், துடுக்குத்தனமாகவும் நாகரீக மற்ற முறையில் எப்போதும் பேசுதல்;

எந்த ஒரு காரியத்தையும், விசாரிக்காமல் மனவசன காய த்தின் மூலம்  அளவுக்கு மீறி, பயனற்றவைகளை செய்தல்;

தேவைக்கு அதிகமாக போக, உபபோக பொருட்களை சேமித்து வைத்துக் கொள்ளுதல்;

ஆகியவைகள் அனர்த்த தண்ட விரதத்தின் விதிமீறல்கள்  ஆகும்.

-----------------

அடுத்து சாமாயிகத்தின்…..

----------------- 


சாமாயிக விரத அதிசாரங்கள்




யோகதுஷ்ப்ரணி தாநாநாதர ஸ்ம்ருத்யனுபஸ் தாநாநி – (33) = (269)


योगदुष्प्रणिधानानाद रस्मृत्यनुपस्थानानि


Yoga-duspranidhananadara-smrtyanupa-sthanani


யோகதுஷ்ப்ரணி – எண்ணத்தில் ஒருநிலை இன்மை, மனதில் பிரயோஜனம் இல்லாத சிந்தனை, பேச்சு, செயல்/அசைதல்; அநாநாதர – விரத, சாமாயிகங்களில் உற்சாகம் இன்றி இருத்தல்; ஸ்ம்ருத்யனுபஸ் தான் – சாமாயிக நடைமுறைகளை மறந்து விடுதல்;


Misdirected activity of mind, speach and body, lack of earnestness and fluctuation of thought are the five transgressions of concentration.  


மனம், மொழி, உடல் வழிச் செயலகளை தவறான பாதையில் செலுத்துதல்;

ஸாமாயிகத்தில் ஆர்வமின்மை, மதிப்பு தராமல் இருத்தல், பாவனையோடு செய்யாமை;

மற்றும் ஒருமுகமின்றி, அலைபாயும் சிந்தனை.

ஆகியன ஐந்தும் சாமாயிக விரத அதிசாரங்கள் ஆகும்.

--------------


அடுத்து பிரோஷ தோபவாஸ விரத அதிசாரங்கள்…

----------------------- 


பிரோஷ தோபவாஸ்த்தின் விதிமீறல்கள்




அப்ரத்யவேக்ஷிதாப்ரமார்ஜிதோத்ஸர்க்காதானஸம்ஸ்தரோபக்ரமணானாதரஸ்ம்ருத்யனுபஸ்தானானி – (சூ34) = (270)


अप्रत्यवेक्षिता प्रमार्जितोत्सर्गादानसंस्तरोपक्रमणा नादर स्मृत्यनुपस्थानानि


Apratyaveksitapramarjitotsargadana-sanstaropa-kramananadara-smrtyanupasthanani


அப்ரத்ய வேக்ஷிதா ப்ரமார்ஜித உத்ஸர்க்கம் -  மல ஜலம் கழிக்கச் செல்லுமிடத்து தரையில் உயிர்கள் உள்ளதா என பார்க்காமல் கழித்தல்; அப்ரத்ய வேக்ஷிதா ப்ரமார்ஜித ஆதானம் – பாய் போன்ற தரைவிரிப்புகளை சோதிக்காமல் விரித்தல், பயன் படுத்துதல்;  அப்ரத்ய வேக்ஷிதா ப்ரமார்ஜித ஸம்ஸ்தரோபக்ரமணம் – புரோஷத உபவாசம் செய்யும் போது ஈடுபாடின்றி தர்ம காரியங்களைச் செய்தல்; ஸ்ம்ருத்யனுபஸ்தான – என்ன கடமை, எப்போது செய்தல் போன்றவற்றை மறந்து விடுதல்.


Excreting, handling sandal-wood paste, flowers, etc., and spreading mats and sitting or sleaping thereon without inspecting and cleaning the place and the materials, lack of earnestness and lack of concentration are the five transgressions of fasting at regular intervals.  


மலம், மூத்திரம் கழிக்கும் இடங்களை சரிபார்க்காமல் கழித்தல் (உயிர்வதைக்கு காரணமாகும்)

பூஜைக்கு வேண்டிய சாமான்களை அராய்ந்து பார்க்காமல் எடுப்பது, வைப்பது;

பசி முதலிய இன்னல்களினால் அவசியமான அறப்பணிகளை ஆர்வமின்றி செய்தல்;

செய்ய வேண்டிய அறப்பணிகளை மறந்து விடுதல்;

ஆகியன பிரோஷதோபவாச விரதத்தின் விதிமீறல்கள் ஆகும்.
------------------
உயிர்கள் உள்ளனவா இல்லையா என்று ஆராய்வது கண்களின் வேலை – பிரத்யவேக்ஷணம்.
மெல்லிய துணி முதலியவற்றால் சுத்தப்படுத்துவது, அப்புறப்படுத்துவது – பிரமார்ஜிதம்
---------------
அடுத்து உபபோக பரிபோக பரிமாண விரத மீறல்களை….


------------------------- 


உபபோக பரிபோக பரிமாண விரத மீறல்கள்




ஸசித்த ஸம்பந்த ஸம்மிஸ்ரா பிஷவதுஹ் பக்வாஹாரா: - (சூ35) = (271)


सचित्त सम्बन्धसंमिश्राभिषवदुः पक्वाहाराः



Sachittasambandha-sammishrabhishava-duhpakvaharah


ஸசித்த ஹார – காய்கனி, கிழங்கு முதலானவற்றை பச்சையாக சாப்பிடுதல்; ஸம்பந்த ஹாரா – ஜீவன் களுடன் கூடிய பழுத்த தானியம் போன்ற உணவை பச்சையிலையில் சாப்பிடுதல்; ஸம்மிஸ்ரா ஹார – உயிருள்ளதையும், உயிரில்லாத வற்றையும் கலத்தல்; அபிஷவ ஹார – உடலை உறுதி செய்யும் உணவு வகைகள், மயக்கதை தரும் பானங்களையோ உபயோகித்தல்; துஹ் பக்வாஹாரா: - அழுகிய, சமைக்காத, அதிகமாக வெந்த உணவுகளை உண்ணுதல்.


Taking food containing (one-sensed) organisms, placed near organisms and mixed with organisms, stimulants and ill-cooked, are the five transgressions of vow to limit consumbales and non-consumbales.


ஒரு பொறி உயிர்கள் உள்ள பச்சையான உணவுகளை(ஸச்சிதம்);

உணவுப் பொருட்கலை ஸச்சித பொருள் மீது வைத்தல் (பச்சை இலை மீது வைத்து உண்ணுதல்)

உயிரில்லாப் பொருள்களை இவ்வுயிர் பொருட்களுடன் கலந்துண்ணல்;

மயக்கம் தரும் மற்றும் அரைகுறையக சமைத்த உணவு ஆகிய வற்றினை உண்ணுதல்;

ஆகியவை உபபோகபரிபோக பரிமாண விரதத்தின் அதிசாரங்கள் ஆகும்.
--------------
அடுத்து அதிதிஸம்விபாக விரதத்தின் அதிசாரங்களை……


--------------- 


அதிதிஸம்விபாக விரதத்தின் விதி மீறல்கள்



ஸசித்த நிக்ஷேபாபிதான பரவ்யபதேச மாத்ஸர்யகாலாதிக்ரமா: - (சூ36) = (272)


सचित्तनिक्षेपा पिधानपरव्य पदेशमात्सर्यकालातिक्रमाः


Sachittanikshepapidhana-paravyapadesa-matsarya-kalatikramah


ஸசித்த நிக்ஷேப – தாமரை, வாழை போன்ற பச்சை தாவர இலைகளில் உணவுப் பொருட்களைக் கொடுப்பது;  ஸசித்த பிதான – உணவுப் பொருள்களைக் கொண்டு தானம் கொடுப்பது; பரவ்யபதேச – தனது பொருளைக் கொடுக்காமல், பிறர் பொருளை தானம் தருவது; மாத்ஸர்ய  - மரியாதை யின்றியோ, பிறர் தானச்செயல் மீது பொறாமை கொண்டோ தானமளிப்பது; காலாதிக்ரமா: - உரிய தருணத்திலின்றி காலம் கடந்து தானமளிப்பது.


Placing the food on things with organisms such as green leaves, covering it with such things, offer food donated by others inform the same, offer food without respect, and offer food in an untimely manner, are the five transgressions of vow to partake food after feeding an ascetic.  


லோபத்தால் ஆஹார தானப் பொருளை பச்சை இலை முதலான ஜீவனோடு கூடியவற்றில் வைத்தல்;

அதே பச்சை யிலையால் மூடித்தருதல்;

தான் கொடுக்காமல் பிறர் பொருளைத் தானம் செய்தல்;

தானம் கொடுப்பவரிடம் மரியாதை குறைவோடு தருதல்; வேறு ஒரு தான கர்த்தாவிடம் பொறாமை கொள்ளுதல்;

உரிய நேரத்தில் இல்லாமல் வேளை தவறி தானமளித்தல்;

ஆகியவை அதிதிஸம்விபாக விரத் விதிமீறல்கள் ஆகும்.

-------------------


அடுத்து ஸல்லேகனையின் அதிசாரங்கள்….

-------------- 


சல்லேகனை விரத விதிமீறல்கள்




ஜிவிதமரணாம்சஸாமித்ரானுராகஸுகானு பந்தநிதாநாதி -  (சூ37) = (273)


जीवितमरणासंसमित्रानुराग सुखानुबन्ध निदानानि


Jivitamaranashansa-mitranuraga-sukhanubandha-nidanani


ஜிவித ஸம்ஸா – விரதமேற்பிற்கு பின் இன்னும் சில நாட்கள் உயிர் வாழ விருப்பம்; மரணாஸம்ஸா – விரைவில் மரணம் சம்பவிக்காதா என நினைத்தல்; மித்ரானுராக -  நண்பர்களின் அனுபவத்தை நினைவு கூறுதல்; ஸுகானு பந்த – முன் சுகானுபவத்தை நினைவு கூறுதல்; நிதாந – மறுபிறவியில் சுகம் கிடைக்க விழைதல்.


Desire for life, desire for death, recollection of affection for friends, recollection of pleasures and constant longing for enjoyment, are the five transgressions of Sallekhana.


சல்லேகனை விரதம் ஏற்றவர் இன்னும் நிறைய ஆண்டு இருக்க வேண்டும் வாழ வேண்டும் என்று ஆசை வைத்தல்;

விரதத்திற்கு பின் கஷ்டம் சகிக்க முடியாமல் சீக்கிரம் காலமாக வேண்டும் என எண்ணுதல்;

நண்பர்கள் அல்லது வீட்டு மக்கள் பற்றி ஞாபகம் கொள்ளுதல்; பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று ஆசை கொள்ளுதல்;

முன்பு அனுபவத்த சுகத்தை ஞாபகம் செய்தல்; பஞ்சேந்திரிய சுகத்தை பற்றிய சிந்தனை;

அடுத்த பிறவியில் தேவேந்திர பதவி, சக்ரவர்த்தி, நல்ல வைபவம், பணக்கார குடும்பம் என்று கிடைக்க வேண்டும் என எண்ணுதல்:

பொன்றவை சல்லேகனை விரத அதிசாரங்களாகும்.

-----------


அடுத்து தானத்தின் சிறப்பு

------------------ 


தானத்தின் இலக்கணம்




அநுக்ரஹார்தம் ஸ்வஸ்யாதிஸர்கோ தானம் – (சூ37) = (273)


अनुग्रहार्थ स्यस्यातिसर्गो दानम्


Anugrahartham svasyatisargo danam


அநுக்ரஹார்தம் – தன்னுடைய, பிறருடைய நன்மைக்காகவும்; ஸ்வஸ்ய – தன் பொருட்களை; அதிஸர்க – கொடுத்தல்;  தானம் – தானம்.

Charity is the giving of one’s wealth to another for mutual benefit.


தானம் கொடுப்பதினால்;
கொடுப்பவருக்கு பாபம் க்ஷயமாகிறது, ஆன்மாவுக்கு புண்ணியம் கிடைக்கிறது,

பயமின்றி துன்பம் இல்லாமல் தரப்படும் தானத்தை பெறுபவருக்கு நல்ஞானம் தரும்  சாதனைகளில் முன்னேற்றம்  அடைகிறார்.

இவ்வாறு தானம் தருபவருக்கும், பெறுபவருக்கும் பயன்படுகிறது.
-------------

தானம் அளிக்கும் முறை பற்றி….

----------- 

தானம் அளிக்கும் முறை



விதித்ரவ்யதாத்ருபாத்ரவிசேஷாத்தத்விசேஷ: - (சூ39) = (275)


विधिद्रव्यदातृपात्रविशेषात्तद्विशेषः


Vidhi-dravya-datr-patra-visheshattadvisheshah



விதி – தானம் கொடுக்கும் முறை; த்ரவ்ய – தானத்திற்கான பொருள்; தாத்ரு – தானம் கொடுப்பவர்; பாத்ர – தானம் பெறுபவர்; விசேஷாத்தத்விசேஷ: - முதலியவற்றின் விசேஷத்திற்கு ஏற்ப தானத்தில் சிறப்பு ஏற்படுகிறது.


The distinction with regard to the effect of a gift consists in the manner, the thing given, the nature of the giver and the nature of the recipient. The desired qualities are the manner – with reverence, the thing – promotes austerities, study etc., the giver – free from envy and dejection, and the recipient – qualities which lead to salvation.



தானம் கொடுப்பதில் நான்கு விஷயங்களைப் பொருத்து பலன் உண்டாகும்.

கொடுக்கும் முறை, கொடுக்கும் பொருள், தானம் செய்பவன், தானம் பெறுபவன் இவற்றைப்  பொருத்தது.

தானம் கொடுத்தலில் நவதா பக்திகள் உள்ளன. (ஓன்பது விதிகள்)

ஆகார சரியைக்கு முனிவர்கள் வரும்போது எதிர் கொண்டு வரவேற்றல்;

உயர்ந்த ஆசனத்தில் அமரச் செய்தல்;

பாதங்களைத் தூய நீரால் கழுவுதல்;

அவருக்கு அஷ்டவித அர்ச்சனை செய்தல்;

அவரை துதி செய்தல்;

மன, வசன, காயம் இவைகள் சுத்தமாக இருக்க வேண்டும்;

ஆஹாரம் சுத்தமாகவும் வைக்க வேண்டும்.

மேலும் அவரது ஸ்வாத்யாயத்திற்கும், சாரித்திரத்திற்கும் ஊறு நேரா வண்ணம் அமைந்திருக்க வேண்டும்.

இவைகள் நவ புண்ணிய கிரமங்கள் இவற்றை எந்த வித பிழையின்றி கடைபிடிக்க வேண்டும்.
---------------
தானம் செய்யப்படும் பொருள் நல்ல வழியில் சம்பாதிதத்தாக இருக்க வேண்டும்.

கால மரியாதையோடு கூடி தூய்மையாக இருத்தல்;

உண்போரது தபம் முதலான சாதனைகளுக்கு உதவுவதாக இருக்க வேண்டும்.
-------------------
தானம் கொடுப்பவர்:

பலன் கருதாது கொடுத்தல்;  கோபமின்றியும், கர்வமில்லாமலும், வணக்கமாய் நின்று அளிக்க வேண்டும்;  சந்தோஷத்துடன் கொடுத்தல்;  கபடமின்றி கொடுத்தல்;  பொறாமையின்றி;  சோர்வின்றி கொடுத்தல்;  கோபிக்காமல் வழங்குதல்; தற்பெருமை கொள்ளாமலும் இருத்தல் வேண்டும்.
----------
தான் பெறுபவர்களின்:

உத்தம பாத்திரம் அதாவது முனிவர்கள், மஹா விரதிகளாக இருக்க வேண்டும்;
மத்திம பாத்திரம் அதாவது ஆர்யிகைகள்; விரதமேற்கும் சிராவகர்கள்;
ஜகன்ய பாத்திரம் – விரதம் ஏற்காத நற்காட்சியாளர்கள்;

இம்மூவரும் தானத்திற்கு ஏற்றவர்கள்.
------------
புற ஒழுக்கம் இருந்து நற்காட்சி இல்லாதவர்கள் (குறை பாத்திரம்);  இரண்டுமே இல்லாதவர்கள் (அபாத்திரம்) ஆவர். இவர்களுக்கு தானம் அளிப்பதில் பலன் இல்லை.

திருவற நெறியாளர், மற நெறியாளர், மனிதர், மற்ற பிராணிகள் என்ற பேதமின்றி தான மளிப்பது கருணைத் தானமாகும்.

தானம் – உணவு, மருந்து, அடைக்கலம், ஞானம் என நான்கு வகை தானங்கள் ஆகும்.
------------------

சுப ஆஸ்ரவம் -  ஏழாவது அத்தியாயம் முற்றிற்று.


மங்களாஷ்டகம்:

கோடி சதம் த்வாதஸம் சைவ கோட்யோ லக்ஷாண்யஷீதிஸ்த்ரயதிகாணி சைவ
பஞ்சாஸதஷ்டெள ச ஸஹஸ்ர ஸங்க்யாமேதத் ஸ்ருதம் பஞ்ச பதம் ணமாமி
 அரஹந்த ப்பாஸியத்தம் கணயர தேவேஹிம் கந்தியம் ஸவ்வம்
பணமாமி பக்தி ஜுத்தோ சுதணான மஹோவயம் ஸிரஸா

அக்ஷரமாத்ரபத ஸ்வரஹீனம் வயஞ்ஜன ஸந்தி விவர்ஜிதரேஃபம்
ஸாது பிரத்ர மம க்ஷமிதவ்யம் கோ ந விமுஹ்யதி ஸாஸ்த்ர ஸமுத்ரே

தஸாத்த்யாயே பரிச்சன்னே தத்த்வார்த்தே படிதே ஸதி ஃபலம் ஸ்யாதுபவாஸஸ்யப்பாஷிதம் முனிபுங்கவை:

ததத்வார்த்த ஸுத்ர கர்த்தாரம் க்ருத்த் பிச்சோபலக்ஷிதம்
வந்தே கணீந்த்ர ஸஞ்சாதமுமாஸ்வாமி முனீஸ்வரம்

ஜம் ஸக்கயி தம் கீரயி ஜம்ண ஸக்கயி தஹேவ ஸத்தஹணம்
ஸத்தஹணமாணோ ஜீவோ பாவயி அஜராமரம் ட்டாணம்

தவயரணம் வயதரணம் ஸஞ்சம சரணம் ச ஜீவதயாகரணம்
அந்தே ஸமாஹிமரணம் சஉவிஹ துக்கம் ணிவாரேஇ


 ----------- 

No comments:

Post a Comment