வீதராக ஆரதி




வீதராக ஆரதி




விதராக பகவந்தா சகல குணவந்தா
செய்குவேன் பக்தி உன்
சந்நிதியில் கிடைக்கட்டும் முக்தி
உன் சந்நிதியில் கிடைக்கட்டும் முக்தி

                       விதராக பகவந்தா

பற்பல பிறவியில் திரிந்து வந்தேன்
பன்னரிய இன்ப சுகம் அனுபவித்தேன்
பிறவிப்பிணி வேண்டாம் என் பக்தி
உன் சந்நிதியில் கிடைக்கட்டும் முக்தி

                       விதராக பகவந்தா


பவ பவங்களில் செய்த பாவங்களை
பட்டெனவே போக்க அத்தாபங்களை
பாடவே குணஸ்துதி ஏற்ப பக்தி
உன் சந்நிதியில் கிடைக்கட்டும் முக்தி

                       விதராக பகவந்தா


தரிசன ஞானமொடு சாரித்ரமும்
தந்திடும் அற்புதாநந்த குணாதிகளும்
நல்லாரதி செய்வேன் அடைய விரக்தி
உன் சந்நிதியில் கிடைக்கட்டும் முக்தி

                       விதராக பகவந்தா



சுப வீதராக ஜின குணம் படித்து
சிரி சமவ சரண தரிசனம் நினைத்து
சித்தமதில் காணவே மோக்ஷ யுக்தி
உன் சந்நிதியில் கிடைக்கட்டும் முக்தி

                       விதராக பகவந்தா


அனுதினம் ஆத்ம தியான மதை
அணு விரத நால்வித தானமதை
செய்யவே சேதன சின்மய சக்தி
உன் சந்நிதியில் கிடைக்கட்டும் முக்தி

                       விதராக பகவந்தா




No comments:

Post a Comment