குறட்பாவில் சமய
சாரம்
இந்நூல் பவ்யர்
சல்லேகனா விரதி வணக்கத்திற்குரிய ஜெ. அப்பாண்டைராசன் அவர்கள் நமக்களித்த பல
ஆக்கங்களில் ஒன்றாகும்.
இவருடைய தமிழில்
தத்வார்த்த சூத்திரம் என்ற நூல் எனை கவர்ந்த குறட்பா வடிவ நூலாகும்.
இந்நூலும்
அவ்வழியே எழுதப்பட்டமையால் தற்போது அனைவரும் படித்து பயன் பெறும் வண்ணம் தினமும்
அஞ்சல் செய்ய உள்ளேன்.
இப்பெறும்
பாக்கியத்தை வழங்கிய தெய்வத்திருவடிகளுக்கு ஒப்பான நூலாசிரியருக்கு எனது சிரம்
தாழ்ந்த வணக்கங்கள்.
அவர் சமாதி விரதமும்
எவ்வித சிரமமும் இன்றி ஈடேற இறைவனை அனைவரும் இவ்வேளையில் பிரார்த்திப்போம்.
நன்றியுடன்
பத்மராஜ் ராமசாமி.
குறிப்பு: மன்னார்குடி ஜிநாலய பிரதிஷ்டா மஹோற்சவத்தின்
பின்சேர்க்கையான மண்டல பூஜை முடிவு நாளன்று நடைபெற்ற அறச் சொற்பொழிவில் கலந்து கொண்ட
போது பவ்யர் அவர்கள் இந்நூல் ஆக்கத்தில் இருப்பதாக தெரிவித்தார்கள். அந்நிகழ்வின் நினைவாகவும் ……..
ஆசாரியர் குந்த
குந்த தேவர் சமண மெய்யியலை விளக்கும் பல அரிய நூல்களை இயற்றியருளியுள்ளார்கள்.
இவர் 84 பாகுடங்களைப் பாகத மொழியில் இயற்றியுள்ளார் என்றபோதும், நமக்குச் சில நூல்களே கிடைத்துள்ளன.
அவற்றுள் சமய
சாரம், பிரவசன சாரம், பஞ்சாஸ்திகாயம், நியமசாரம், பாரஸ அனுவேக்கா முதலானவை மிகவும் போற்றப்படுவன வாகும். இவரே தமிழில்
திருக்குறளை எழுதியர் என்பது சமண அறிஞர்களின் கருத்தாகும்.
நான் ஏற்கனவே
பஞ்சாஸ்திகாயத்தை வெண்பா வடிவில், பைந்தமிழில் ஐந்தத்திகாயம் என்ற பெயரில் எழுதி வெளியிட்டுள்ளேன். பாரஸ
அனுவேக்காவை, பன்னிரு
சிந்தனைகள் என்ற பெயரில் விருத்தப் பாக்கள் வடிவில் தெளிவுரையுடன் எழுதி
வெளியிட்டுள்ளேன். சமய சார சன்மார்க்கம் என்னும் தமிழ் உரைநடை நூலையும் எழுதி
வெளியிட்டுள்ளேன். சமயம் என்றால் உயிர் என்றே பொருள்.
குந்தகுந்த தேவர்
அருளிய இந்நூலில் 9 அதிகாரங்களில் 415 காதைகள் உள்ளன. 415 காதைகளையும் அவற்றின்
மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு, குறட்பாக்களாக ஆக்கியுள்ளேன். பிழைகள் இருப்பின் பொறுத்திட வேண்டுகிறேன்.
இந்நூலின்
சிறப்புணர்ந்த நல்லற ஆர்வலர், சென்னை, ஜவகர் நகர்,
திருமிகு. து. பூபாலன் அவர்கள்
நூற்பதிப்புச் செலவு முழுவதையும் தாமே முன்வந்து பெருமகிடிநவுடன் நன்கொடையாக
வழங்கியுள்ளார்கள். “உயிரின் இயல்பு” என்ற பெயரில் சமய சாரத்தின் உரைநடைத் தொகுப்பை தம்
குமாரரின் திருமண விழா அன்பளிப்பாக வணக்கத்திற்குரிய முனிமகராஜ் ஸ்ரீ ஆர்ஜுவ சாகர்
பெருமானின் நல்லாசியுடன் வெளியிட்டச் சிறப்பு இவர்க்குண்டு. திருவறம் போற்றிடும்
அப்பெருமகனாருக்கு என் உளமார்ந்த நன்றி உரித்தாகுக !
உயிரின் இயல்பை
நிச்சய நோக்கில் விளக்கும் இப்புனித நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ள
பேரன்பிற்குரிய பெரும்புலவர் திருவறக்கவிஞர் திருமிகு. தோ. ஜம்புகுமாரன்
அவர்களுக்கும், நூலை நன்கு
அச்சிட்டுத் தந்த பல்லாவரம், கல்யாணி
பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்கும், நூல் வெளிவர உதவிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் என் நன்றி உரித்தாகுக!
வாழிய நல்லறம் !
உயிர் இயல்பு
உணர்வோம் !
உன்னத விடுதலை
பெறுவோம் !
அன்பன்
ஜெ.
அப்பாண்டைராசன்
நூலாசிரியர்
ஸ்ரீ ஜிநாய நம :
குறட்பாவில் சமய
சாரம்
பிராகிருத மூலம்:
ஆசாரியர் குந்த
குந்த தேவர்
தமிழில்
திருவறப்பாவலர்
வங்காரம் ஜெ.
அப்பாண்டைராசன்
பம்மல், சென்னை - 75.
வெளியீடு:
நன்கொடையாளர்
திருமிகு. து.பூபாலன்
அவர்கள்
பொறியாளர் ஓய்வு
எண். 5, நான்காம் தெரு, S.R.P. காலனி,
ஜவகர் நகர்,
சென்னை - 82.
பதிப்பு :
ஆதிபகவன் அறப்பணி
மன்றம்
அறநூற்பதிப்பு
மையம்,
எண் : 4, டாக்டர் இராதா கிருஷ்ணன் தெரு,
வ.உ.சி. நகர்,
பம்மல், சென்னை - 600 075.
நூலின் விபரம்
சமய சாரம்
(குறட்பா)
-----------------
வாழ்த்துக்
கவிமாலை
திருவறக் கவிஞர் :
கவிக்கோ.
காவியப்புலவர் திருமிகு. தோ.ஜம்புகுமாரன்
அவர்கள்
குறட்பாவில் சமய
சாரம்
1. எழுசீர்
சமயசாரம் இன்சொல் குறட்பாப்
பழச்சாறு
நல்லுயிர்ப் பாங்கு
2. சமயம்சேர்
சாரமதைச் சாற்றும் குறட்பா
அமிழ்தினை
ஆர்ந்தேன் இனிது
3. குந்தகுந்தர்
இன்றிருப்பின் கொள்ளை மகிழ்வடைவார்
செந்தமிழ்நூல்
சீர்மை அறிந்து.
4. தத்துவம்
போற்றிடும் அற்புதப் பாக்களின்
வித்தகம் கண்டேன்
வியந்து
5. கோதில்லாத்
தத்துவங்கள் கூறுகின்ற இந்நூலை
ஓதுவார் உய்வார்
விரைந்து
6. பேச்சில்
வெளிப்படும் பீடுநடை போலெழுத்து
வீச்சும் இவர்க்கே
உரித்து
7. ஒப்பா
ரிலாக்கவி வாணருள் ஏறென்போம்
அப்பாண்டை யாரை
உவந்து
8. சிந்தனையில்
தேற்றமும் செப்புவதில் ஓர்மிடுக்கும்
வந்துறையும் வாமன் இவர்
9. அரும்பெரும்
சாதனை ஆற்றும் திருவறப்
பாவலர் வாழ்கபல் லாண்டு.
10. வாழி !
இவர்தமிழ்நூல் வாழ்க! திருத்தொண்டு
வாழ்கவே! என்றும் புகழ்!
அன்புடன்
புலவர் தோ.
ஜம்புகுமாரன்,
திருவறக்கவிஞர்.
--------------------------
முதல் அதிகாரம்
உயிரும்
உயிரல்லதும்
பாகத மொழி தமிழ்
வடிவம்:
1. வந்தித்து
ஸவ்வஸித்தே துவமசலமணோவமம் கதிம் பத்தே
வோச்சாமி
ஸமயபாஹுடமிணமோ ஸுதகேவலீபணிதம்
தமிழில் குறட்பா:
ஒப்பிலாச்சித் தர்சலன மில்நிலையின் பர்போற்றி
செப்புவேன்
நூலறிவர் சொல்.
தமிழ் உரை:
ஒப்பற்ற, சலனமற்ற, பேரின்பத்தில் நிலைபெற்ற அனைத்து சித்தர்களையும் வணங்கி, நூல் உணர்ந்தோரால் அருளப்பட்ட கருத்துகளின்
தொகுப்பான “ சமய சாரம்” என்னும் இந்நூலை எழுதுகின்றேன்.
------------------------------
2.(பா) ஜீவோ
சரித்ததம்ஸணணாணட்டி தம் வு ஸஸமயம் ஜாண
போக்கலகம்மபதேஸட்டிதம்
ச தம் ஜாண பரஸமயம்
(த-கு). மும்மணி
தன்னில் நிலைத்தலே ஓருயிர்
தம்இயல்பாம்
மற்றே திரிபு
(த-உ). எவ்வுயிர்,
நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் ஆகியவற்றில் நிலைத்துள்ளதோ, அவ்வுயிர் தன் இயல்பு நிலையில் உள்ளது. எவ்வுயிர், புற்கலப் பொருளாகிய வினைகட்குத்
தன்னிடத்தில் இடம் அளித்துள்ளதோ, அவ்வுயிர், திரிபு
நிலையில் உள்ளது.
----------------------------
3.(பா). ஏயத்தணிச்சயகவோ ஸமவோ ஸவ்வத்த ஸுந்தரோ லோயே
பந்தகஹா ஏயத்தே
தேண விஸம்வாதிணீ ஹோதி
(த-கு). உயிரும்
பிறவும் தனித்தே அழகாம்
அயலார் தொடர்பே
முரண்
(த-உ). உயிராயினும்
அல்லது எப்பொருளாயினும் தனித்துள்ள நிலையில், அதன் இயல்புக்கேற்ற அழகுடன் விளங்குகிறது.
பிறவற்றோடு கூட்டுநிலை உருவானால், அவ்வுயிர் அல்லது அப்பொருள் தன் அழகில் இருந்து முரண்படுகிறது.
----------------------------
4.(பா). ஸுதபரிசிதாணுபூதா ஸவ்வஸ்ஸ வி காமபோகபந்தகஹா
ஏயத்தஸ்ஸுவலம்போ
ணவரி ண ஸுலபோ விஹத்தஸ்ஸ
(த-கு). காமமும்
பற்றும் உயிரைத்தான் கட்டிடும்
ஏமம் அடைதல்
அரிது
(த-உ). பிறவியில்
உழலும் எல்லா உயிர்களும், காமம்
சார்ந்த, பல்வேறு வகையான
இன்பங்கள் சார்ந்த, செயல்பாடுகளில்
கட்டுறுகின்றன. ஆனால் ஓர் உயிர் தன்னுடைய தூய்மை நிலையை அடைதல் என்பது எளிதாக
இல்லை.
----------------------------
5.(பா). தம் ஏயத்தவிஹத்தம் தாயேஹம் அப்பணோ ஸவிஹவேண
ஜதி தாயேஜ்ஜ
பமாணம் சுக்கேஜ்ஜ சலம் ண கேத்தவ்வம்
(த-கு).
உரைக்கின்றேன் தூய உயிரின் இயல்பை
அறிக விடுக பிழை
(த-உ). தன்நிலையில்
திரிபு அடையாமல், ஒருமையில்
தூய்மையாக உள்ள உயிரின் சிறப்பை, யான் விளக்க முனைகின்றேன். ஏற்புடையதென்றால், ஏற்றுக்கொள்ளுங்கள்: பிழை உடையதென்றால் விலக்கிவிடுங்கள்
----------------------------
“ண வி ஹோதி அப்பமத்தோ ண பமத்தோ ஜாணவோ து ஜோ பாவோ
எவம் எணந்தி
ஸுத்தம் ணாதோ ஜோ ஸோ து ஸோ சேவ”
6. விழிப்பு
விழிப்பின்மை யில்லை உயிர்தான்
முழுத்தூய்மை
நின்றிட்ட போது
(உரை) எவர் ஒருவர்
தன் உயிரின் தூய இயல்பினைத் தானே முற்றும்
உணர்கின்றாரோ, அவரிடம் விழிப்புடைமை, விழிப்பின்மை ஆகிய இரு
நிலைகளுமே
காணப்படாது.
----------------------------
“
வவஹாரேணுதிஸ்ஸஇ ணாணிஸ்ஸ சரித்த தம்ஸணம் ணாணம்
ண வி ணாணம் ண
சரித்தம் ண தம்ஸணம் ஜாணகோ ஸுத்தோ”
7. மும்மணி என்ப
வழக்கில்தான் அம்மூன்றும்
தானுடைத்தே ஞான
உயிர்
(உரை) உலக
வழக்கில் நற்காட்சி, நல்லறிவு,
நல்லொழுக்கம் ஆகியவை
கூறப்பட்டாலும், உண்மை நோக்கில் கூறுங்கால், தூய ஆன்மாவில்
இம்மூன்றும்
ஒருங்கிணைந்த பேரறிவு நிலையே காணப்படும்.
----------------------------
“ ஜஹ ண
வி ஸக்கமணஜ்ஜோ அணஜ்ஜபாஸம் விணா து காஹேதும்
தஹ வவஹாரேண விணா
பரமத்துவதேஸணமஸக்கம்”
8. உலகியலை
முன்வைக்கா துண்மை யியலை
விளக்குதல் யார்க்கும்
அரிது
(உரை) தானாகப்
புரிந்து கொள்ளும் தன்மையற்றவனுக்கு, அவன்
அறிந்த
மொழியாலன்றிப் பிறமொழிகளால் கருத்தை விளக்க முடியாது.
அது போன்றே, உலக வழக்கை அடிப்படையாகக் கொள்ளாமல்
(வியவகார
நயம் இல்லாமல்)
உண்மைத் தன்மையை உணர்த்த முடியாது.
----------------------------
“ ஜோ ஹி
ஸுதேணஹிகச்சயி அப்பணாமிணம் து கேவலம் ஸுத்தம்
தம்
ஸுதகேவலிமிஸிணோ பணந்தி லோயப்பதீவயரா”
9. நன்னூல்
துணைகொண்டே தன்னுயிர் தானறிவர்
பன்னூல் அறிவர்என்
பார்.
(உரை) நூல்களை
நன்குணர்ந்தவர், தன்
ஆன்ம இயல்பை உணர்ந்தவர்
ஆகின்றார். எனவே
உண்மை நோக்கில் அவர் சுருத கேவலி எனக்
கருதப்படுவார்.
----------------------------
“ ஜோ
ஸுதணாணம் ஸவ்வம் ஜாணதி ஸுதகேவலிம் தமாஹு ஜிணா
ணாணம் அப்பா
ஸவ்வம் ஜம்ஹா ஸுதகேவலீ தம்ஹா”
10. பன்னூல்கற்
றோர்தமை நல்லறிவர் என்றே
பகர்வர் உலகோர்
உவந்து
(உரை) நூல்களைக்
கற்றவர், உலக வழக்கிலும்
சுருத ஞானி யென்றே
கருதப்படுவர்.
----------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
வவஹாரோ பூதத்தோ பூதத்தோ தேஸிதோ து ஸுத்தணவோ
பூதத்த மஸ்ஸிதோ கலு ஸம்மாதிட்டீ ஹவதி ஜீவோ
தமிழில் குறட்பா:
11. உலக வழக்குண்மை யாகாதே உண்மை
நலமென்ப நற்காட்சி யாம்
உரை:
உலக வழக்கில் கூறப்படும் கருத்து, பொருளின் உண்மை
நிலையை உரைப்பதாகாது. எனவே உண்மைநய நோக்கில் கூறப்படும்
கருத்தை ஏற்பதே நற்காட்சியாகும்.
------------------------------
(பா) ஸுத்தோ ஸுத்தாதேஸோ ணாதவ்வோ பரமபாவதரஸீஹிம்
வவஹாரதேஸிதா புண ஜே து அபரமே ட்டிதா பாவே
12. உண்மை நயத்தால் அறிக உயிரையத்
தன்மை வரையுலக நோக்கு
தூய உயிரின் இயல்பை உண்மை நயத்தால் உணர்தல்
வேண்டும். அவ்வாறு உணர இயலாதோர் ( அத்தகுதியைப் பெறும் வரை)
உலக வழக்கை அறிதல் வேண்டும்.
----------------------------
(பா) பூதத்தேணபிகதா ஜீவாஜீவா ய புண்ணபாவம் ச
ஆஸவஸம் வர ணிஜ்ஜர பந்தோ மோக்கோ ய ஸம்மத்தம்
13. நற்காட்சி என்ப உயிர்முதலாடீநு ஒன்பதாம்
நற்பொருள் தேர்தலே யாம்
உண்மை நயத்தால், உயிர், உயிரல்லவை, புண்ணியம், பாவம்,
ஊற்று, கட்டு, செறிப்பு, உதிர்ப்பு, வீடு ஆகிய ஒன்பது பதார்த்தங்களை
அறிதலே நற்காட்சியாகும்.
----------------------------
(பா) ஜோ பஸ்ஸதி அப்பாணம் அபத்தபுட்டம் அணண்ணயம் நியதம்
அவிஸேஸமஸம் ஜுத்தம் தம் ஸுத்தணயம் வியாணீஹி
14. மாறாத் தனித்தன்மைத் தாம்உயிர் எஞ்ஞான்றும்
வேறே கலப்பின்மை யால்
பிறபொருள் கலப்பில்லாதது : வேறொன்றாக மாறாதது : ஏற்ற,
இறக்க மாற்றங்கள் இல்லாதது : தனித்தன்மையுடையது : நிறம் முதலான
வடிவமைப்பு இல்லாதது : இத்தகைய இயல்புகளை உடையதே உயிர்
என்பது உண்மை நய நோக்காகும்.
----------------------------
(பா) ஜோ பஸ்ஸதி அப்பாணம் அபத்தபுட்டம் அணண்ணமவிஸேஸம்
அபதேஸஸுத்த மஜ்ஜம் பஸ்ஸதி ஜிநஸாஸணம் ஸவ்வம்
15. அறிவர் முழுமையாடீநுத் தன்னை அறிவார்
அவர்நூ லறிவரு மாம்.
எவர் தன்னை (தன் உயிரை) முழுமையாக அறிகின்றாரோ,
அவர், நூலறிவராகவும் ஆகின்றார்.
----------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
தம்ஸணணாணசரித்தாணி ஸேவிதவ்வாணி ஸாஹுணா ணிச்சம்
தாணி புண ஜாண திண்ணி வி அப்பாணம் சேவ ணிச்சயதோ
தமிழில் குறட்பா:
16. மும்மணி ஏற்றல் வழக்குநயம் உண்மையில்
மும்மணி யேதான் உயிர்
உரை:
. உலக வழக்குநோக்கில், மெடீநுயுணர்வுபெற்ற தன்முயற்சியாளர்,
நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் ஆகியவற்றை ஏற்க வேண்டும்
என்று கூறப்படும். உண்மை நய நோக்கில் இம்மூன்றும் இணைந்ததே
உயிர் என்று கருதப்படும்.
------------------------------
(பா) ஜஹ ணாம கோ வி புரிஸோ ராயாணம் ஜாணிஊண ஸத்தஹதி
தோ தம் அணுசரதி புணோ அத்தத்தீஒ பயத்தேண.
17. பொருள்வேண்டும் என்பான் ஒருவன் வேண்டிப்
பொருள்கேட்பான் வேந்தனிடம் சென்று
பொருள் வேண்டும் எனக்கருதும் இரவலன் கொடுக்கும்
இயல்புடைய மன்னரிடம் சென்று, பணிந்து, வேண்டுதல் செய்வான்.
----------------------------
(பா) ஏவம் ஹி ஜீவராயா ணாதவ்வோ தஹ ய ஸத்தஹேதவ்வோ
அணுசரிதவ்வோ ய புணோ ஸோ சேவ து மோக்ககாமேண.
18. வீடுவேண்டும் என்பான் ஒருவன் உயிர்தன்னின்
பீடுணர்ந்தே நிற்றல் கடன்
அதுபோலவே, வீடுபேறு வேண்டும் ஒருவன் தன் உயிரின்
இயல்பை உணர்ந்து, அவ்வுயிர், தன் இயல்பில் நிற்க முயற்சி செய்தல்
வேண்டும்.
----------------------------
(பா) கம்மே ணோகம்மம்ஹி ய அஹமிதி அஹகம் ச கம்ம ணோகம்மம்
ஜா ஏஸா கலு புத்தீ அப்படிபுத்தோ ஹவதி தாவ.
19. காரணன் உண்மையில் தானே வழக்கினில்
கூறுவர் குற்றம் வினை
. உயிர், உண்மை நய நோக்கில், தன் செயலுக்குத் தானே கர்த்தா
ஆகின்றது. வழக்கு நய நோக்கில் அவ்வுயிரே புத்கலவினைகளைச்
செய்வதாகவும் கூறப்படுகின்றது.
----------------------------
(பா) அஹமேதம் ஏதமஹம் அஹமேதஸ் ஸேவ ஹோமி மம ஏதம்
அண்ணம் ஜம் பரதவ்வயம் ஸச்சித்தாசித்தமிஸ்ஸம் வா
20. தன்னினும் வேறாம் உறவுகள் தன்னுடைத்தாய்
எண்ணல் உயிரின் மயக்கு
உயிர், தன்னினும் வேறான பொருள்களான மனைவி, அல்லது
கணவன் மக்கள், பொன், வீடு, ஊர், நாடு முதலானவற்றைத் தன்னுடைய
பொருள்களாகக் கருதுகின்றது.
----------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஆஸி மம புச்சமேதம் ஏதஸ்ஸ அஹம் பி ஆஸி புவ்வம் ஹி
ஹோஹிதி புணோ மமேதம் ஏதஸ்ஸ அஹம் பி ஹோஸ்ஸாமி
தமிழில் குறட்பா:
21. பொருளெலாம் என்னுடைமை யானே உரியோன்
எனப்பிழைபாய் எண்ணும் உயிர்
உரை:
பிற பொருட்கள், முன்பே என்னுடையனவாக இருந்தன.
இப்பொழுதும் என்னுடையனவாக இருக்கின்றன. நானே அவற்றின்
உரிமையாளன் ஆவேன் என்று உயிர் தவறாகக் கருதுகின்றது.
------------------------------
(பா) ஏயம் து அஸப்பூதம் ஆதவியப்பம் கரேதி ஸம்மூடோ
பூதத்தம் ஜாணந்தோ ண கரேதி து தம் அஸம்மூடோ
22. பிழையாய்க் கருதிடும் பேதை உயிர்தான்
முழுமை உணர்தல் அறிவு
இவ்வாறு, உண்மைக்குப் புறம்பானவற்றை எண்ணிக்
கொண்டிருப்பவன் முழு மூடன் ஆவான். பொருட்களின் மெய்யான
தன்மையை அறிபவனே அறிவுடையவன் ஆவான்.
----------------------------
(பா) அண்ணாணமோஹிதமதீ மஜ்ஜமிணம் பணதி புக்கலம் தவ்வம்
பத்தமபத்தம் ச தஹா ஜீவோ பஹுபாவஸஞ்ஜுத்தோ.
23. அறிவில் தெளிவின்மை புத்கலப் பற்று
விருப்பு வெறுப்புக்கே வித்து
அறியாமையில் மயங்கிய உயிர், தன்னுடன் தொடர்புள்ள உடல்,
பொன், பொருள் முதலான புத்கலப்பொருட்களைத் தன்னுடையவை என்று
கருதுகின்றது. அதனால் கடும் விருப்பு, வெறுப்புகளை உடையதாகின்றது.
----------------------------
(பா) ஸவ்வண்ஹுணாணதிட்டோ ஜீவோ உவவோகலக்கணோ ணிச்சம்
கஹ ஸோ புக்கலதவ்வீபூதோ ஜம் பணஸி மஜ்ஜமிணம்.
24. அறிவே உயிரின் தனிப்பண்பாம் என்னின்
புறப்பற்று தோன்றுதல் ஏன்?
24. உயிர் எப்பொழுதும் அறிவுப் பண்பினை உடையதாகும்.
அப்படியானால் அது ஏன் புற்கலப் பொருட்களின் இயல்பினை
உடையதாகின்றது? அது ஏன் புறப்பொருளைத் தன்னுடையவை என்று
கருதுகின்றது?
----------------------------
(பா) ஜதி ஸோ புக்கலதவ்வீபூதோ ஜீவத்துமாகதம் இதரம்
தோ ஸக்கோ வத்தும் ஜே மஜ்ஜிமிணம் புக்கலம் தவ்வம்
25. உயிர்தான் புத்கலமாய் மாறாதே அஃதும்
உயிராயின் உண்டாமே பற்று
உயிர், புற்கலப்பொருட்களின் இயல்பை உடையதாக மாறாது.
அவ்வாறு மாறுமேயானால், உயிரல்லாத புற்கலப் பொருள்களும்
உயிருடையனவாக மாறக்கூடும் அல்லவா? அந்நிலையில் புற்கலப்
பொருள்களும், பிறபொருள்களைத் தம்முடையவை என்று கூறக்கூடும்
அல்லவா?
----------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஜதி ஜீவோ ண ஸரீரம் தித்தயராயரியஸந்துதீ சேவ
ஸவ்வா வி ஹவதி மிச்சா தேண து ஆதா ஹவதி தேஹோ
தமிழில் குறட்பா:
26. உயிருடல் வேறெனின் தீர்த்தன் துதியும்
தவறன்றோ என்பான்மூ டன்
உரை:
உயிரும் உடலும் ஒன்றாகவே காணப்படுகிறது. அப்படியிருக்க
உயிரும் உடலும் ஒன்றல்ல என்று கூறினால், தீர்த்தங்கரர்களையும்,
ஆசாரியர்களையும் சர்வ சாதுக்களையும் குறித்துப் பாடப்படும் துதிகள்
எல்லாமே பொய்யாகி விடாதா? எனவே உயிரும் உடலும் ஒன்றே என்று
கருதுகிறான் அறிவிலி.
------------------------------
(பா) வவஹாரணவோ பாஸதி ஜீவோ தேஹோ ய ஹவதி கலு இக்கோ
ண து ணிச்சயஸ்ய ஜீவோ தேஹோ ய கதா வி ஏக்கட்டோ.
27. உலகியலில் ஒன்றாம் உயிருடல் உண்மை
நிலையியலில் வேறுவே றாம்
உலகவழக்கில் உயிரும் உடலும் ஒன்றே எனக்
காணப்படுகின்றது. ஆனால் இவ்விரண்டும் எப்போதுமே
தனித்தனித்தன்மையானவை என்று உண்மை நோக்கில் கருதப்படும்.
“ஒற்றுமை நயத்தின் ஒன்றெனத் தோன்றினும்
வேற்றுமை நயத்தின் வேறே உடலுயிர்” (நன்னூல் 49)
----------------------------
(பா) இணமண்ணம் ஜீவாதோ தேஹம் புக்கலமயம் துணிந்து முனி
மண்ணதி ஹு ஸந்துதோ வந்திதோ மயே கேவலீ பயவம்
28. உயிரதன் வேறாம் உடல்வணங்கும் சாது
மயக்கு பொருந்துமோ காண்
உயிரிலிருந்து வேறுபட்ட உடலை (உடலின் நிறம்
முதலானவற்றைக் கூறி)த் துதி செய்யும் முனிவர், தான் கேவலி
பகவானைத் துதி செய்தேன் என்று கூறுகின்றார் ( இது பொருந்துமா?)
----------------------------
(பா) தம் ணிச்சயே ண புஜ்ஜதி ண ஸரீரகுணா ஹி ஹோந்தி கேவலிணோ
கேவலிகுணோ துணதி ஜோ ஸோ தச்சம் கேவலிம் துணதி
29. உடலை வணங்குதல் வீணே கடவுள்
குணத்தை நினைத்தல் துதி
அத்தகையத் துதி, உண்மையில் துதி ஆகாது; ஏன்எனில்
உடலின் குணம் கேவலி பகவானின் குணம் அல்ல. கேவலி பகவானின்
குணத்தை எத்துதிக் குறிப்பிடுமோ அத்துதியே, உண்மையான துதியாகும்.
----------------------------
(பா) ணயரம்மி வண்ணிதே ஜஹ ண வி ரண்ணோ வண்ணணா கதா ஹோதி
தேஹகுணே துவ்வந்தே ண கேவலிகுணா துதா ஹோந்தி.
30. திருநகர் சுட்டுமோ வேந்தனின் செங்கோல்
திருமேனி ஆமோ குணம்
ஒரு நாட்டின் தலை நகரத்தை வருணனை செய்வது,
அந்நாட்டின் அரசனைப் பற்றிய வருணனையாகாது. அதுபோன்றே, உடல்
வருணனை, பகவானின் குணத்தைக் குறிப்பதாகாது.
----------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஜோ இந்தியே ஜிணித்தா ணாணஸஹாவாதியம் முணதி ஆதம்
தம் கலு ஜிதிந்தியம் தே பணந்தி ஜே ணிச்சிதா ஸாஹு
தமிழில் குறட்பா:
31. நல்லறிவால் ஐம்பொறி வென்றாரை வென்றவராய்ச்
சொல்லுவர் சாதுவர் தாம்
உரை:
நல்லறிவின் துணை கொண்டு, யார் ஒருவர் தம் ஐம்பொறிகளை
வென்றாரோ, அவரே தன் ஆன்ம இயல்பை உணர்ந்தவர் ஆவார் என்பதே
சாதுவர் கூறும் உண்மை நய நோக்கு.
------------------------------
(பா) ஜோ மோஹம் து ஜிணித்தா ணாணஸஹாவாதியம் முணதி ஆதம்
தம் ஜிதமோஹம் ஸாஹும் பரமட்டவியாணயா விந்தி
32. நல்லறிவால் பொய்மயக்கு வென்றாரே தன்னுயிர்
நல்லியல்பு தாம்கண்டார் நன்கு
நல்லறிவின் துணை கொண்டு, யார் ஒருவர் மயக்கத்தை
வென்றாரோ, அவரே தன் ஆன்ம இயல்பை உணர்ந்தவர் ஆவார் என்பதே
உண்மை நய நோக்கு.
----------------------------
(பா) ஜிதமோஹஸ்ஸ து ஜயியா கீணோ மோஹோ ஹவிஜ்ஜ ஸாஹுஸ்ஸ
தயியா ஹு கீணமோஹோ பண்ணதி ஸோ ணிச்சயவிதூஹிம்
33. நல்லறிவால் மோகமதை வென்றாரே தன்னுயிர்
நல்லியல்பு தாம்கண்டார் நன்கு
நல்லறிவின் துணை கொண்டு, யார் ஒருவர் மோக உணர்வை
வென்றாரோ, அவரே, அத்துறவியே, தன் உயிரின் இயல்பை, உணர்ந்தவர்
ஆவார் என்று கணதரர் அருளியுள்ளார்.
----------------------------
(பா) ணாணம் ஸவ்வே பாவே பச்சக்காயீ பரே த்தி ணாதூண
தம்ஹா பச்சக்காணம் ணாணம் ணியமா முணேதவ்வம்
34. எவ்வுயிர் தன்னின் புறம்கண்டு போக்குமோ
அவ்வுயிரே தூய உயிர்
34. தன் அனுபவ அறிவால், எவ்வுயிர் தன்னினும் வேறுபட்ட
புறப்பொருள்களை அறிந்து விலக்குகின்றதோ, அவ்வுயிரே, உண்மையில்
தூய உயிராகும்.
----------------------------
(பா) ஜஹ ணாம கோவி புரிஸோ பரதவ்வமிணம் தி ஜாணிதும் சயதி
தஹ ஸவ்வே பரபாவே ணாவூண விமுஞ்சதே ணாணி
35. உரிமையில் ஓர்பொருள் வேண்டார்போல் தூயர்
விருப்புவெறுப் பேதுறப் பர்
உலகில் நல்ல மனிதன், பிறருடைய பொருட்களை தனதல்ல
வென்று கருதி விலக்கி விடுகின்றான். அதுபோன்றே நல்லறிவு உடையவர்
என்போர், தன் உயிருக்குப் புறம்பான உணர்வுகளை நீக்கிவிடுவர்.
----------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ணத்தி மம கோ வி மோஹோ புஜ்ஜதி உவவோக ஏவ அஹமிக்கோ
தம் மோஹணிம்மமத்தம் ஸமயஸ்ஸ வியாணயா மிந்தி
தமிழில் குறட்பா:
36. மோகம் இயல்பல்ல யான்அறிவன் நல்லுப
யோகமே என்ப அறிவு
உரை:
மோகம் என்பது என்னுடையது அல்ல : ( அது என் உயிரின்இயல்புக்கு புறம்பானது) நான் நல்லறிவன் மட்டுமே : (நல்லுபயோகமே என்இயல்பு) நான் செருக்கில்லாதவன் என்று கருதுபவனே அறிவன் ஆவான்.
------------------------------
(பா)ணத்தி மம தத்மஆதி புஜ்ஜதி உவவோக ஏவ அஹமிக்கோ
தத் தம்மணிம்மமத்தம் ஸமயஸ்ஸ வியாணயா விந்தி
37. தன்மம் முதலாம் பொருளைந்தும் வேறென்றே
தன்னுயிர் ஓர்தல் அறிவு
உலகின் பிற பொருள்களான தன்மம், அதன்மம், ஆகாயம், காலம், புத்கலம் ஆகிய பொருட்கள் உயிராகிய என்னிடமிருந்துவேறுபட்டவை. நானும் அவற்றிலிருந்து முற்றிலும் வேறு பட்டவன் என்றுஉணரும் அறிவனே, நூலறிவு பெற்றவன் ஆவான் ( இங்கு கூறப்பட்டவைஐந்தும் உயிரற்றவை)
----------------------------
(பா)அஹமேக்கோ கலு ஸுத்தோ தம்ஸணணாணமயிவோ ஸதாரூவீ
ண வி அத்தி மஜ்ஜ கிஞ்சி வி அண்ணம் பரமாணுமேத்தம் பி.
38. தூயன் தனியன் உருவிலன் மும்மணியன்
தோயன்மற் றென்பான் உயிர்
நான் தனியானவன் : நான் தூய்மையானவன் : நான் காட்சியும்அறிவுமாகிய வடிவினன். நான் உருவம் அற்றவன் : பிற பொருள்களில் ஓர்அணு அளவும் என்னுடையதல்ல என்று உணர்பவனே அறிவன் ஆவான்..
----------------------------
(பா) அப்பாணமயாணந்தா மூடா து பரப்பவாதிணோ கேயீ
ஜீவம் அஜ்ஜவஸாணம் கம்மம் ச தஹா பரூவேந்தி
39. விருப்பு வெறுப்பே உயிரின் பிறிதாம்
திரிபே வினைகளின் ஊற்று
வெறுப்பு, முதலான திரிபு உணர்வுகளை உயிரின்
குணங்களாகக் கூறுவதும் புற்கலப்பொருள்களாகிய வினைகளை உயிர்
என்று கருதுவதும் பிழையாகும்.
----------------------------
(பா) அவரே அஜ்ஜவஸாணேஸு திவ்வடந்தாணுபாககம் ஜீவம்
மண்ணந்தி தஹா அவரே ணோகம்மம் சாவி ஜீவோ த்தி
40. விருப்பு வெறுப்பு குறுவினை யாகா
சிறப்புயிர் என்றே உணர்
விருப்பு, வெறுப்பு, உடல் சார்ந்த வினைகள் முதலானவை
உயிரின் குணங்களாகா.
(குறுவினை - நோகர்மம்)
----------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
41. கம்மஸ்ஸுதயம் ஜீவம் அவரே கம்மாணுபாகமிச்சந்தி
திவ்வத்தணமந்தத்தணகுணேஹிம் ஜோ ஸோ ஹவதி ஜீவோ
தமிழில் குறட்பா:
41. வினைஉதயம் மந்தம் வினைப்பயன் ஆகா
இனிய உயிரென்றே காண்
உரை:
வினை உதயம், வினை மந்தம், வினைப்பயன் முதலானவற்றைஉயிர் என்று எண்ணுதல் தவறு.
.
------------------------------
(பா)ஜீவோ கம்மம் உதயம் தோண்ணி வி கலு கேயி ஜீவமிச்சந்தி
அவரே ஸஞ்ஜோகேண து கம்மாணம் ஜீவமிச்சந்தி
42. வினையும் உயிரும் இணைந்ததே ஆன்மா
எனும்மொழி தான்பிழையே யாம்
வினையும் உயிரும் சேர்ந்ததே ஆன்மா என்னும் கருத்தும்தவறானது.
----------------------------
(பா)ஏவம்விஹா பஹுவிஹா பரமப்பாணம் வதந்தி தும்மேஹா
தே ண து பரமட்டவாதீ ணிச்சயவாதீஹிம் ணித்திட்டா
43. பலரும் தவறாகக் கூறும் கருத்து
நிலையான உண்மை மறைப்பு
அவ்விதம் பலரும் கூறுகின்ற கருத்து உண்மைக்குமாறானதாகும்.
----------------------------
(பா) ஏதே ஸவ்வ பாவா போக்கலதவ்வபரிணாமணிப்பண்ணா
கேவலிஜிணேஹிம் பணியா கஹ தே ஜீவோ த்தி புச்சந்தி
44. புத்கலச் சேர்க்கை விருப்பும் வெறுப்பும்தான்
உத்த மவுயிராகா தே!
விருப்பு, வெறுப்பு முதலான உணர்வுகள், புற்கலப்பொருள்களின் கலப்பினால் தோன்றியவையாகும் என்று முழுதுணர்ஞானியான அருகன் அருளியுள்ளார். எனவே அவற்றை உயிர் என்று கூறமுடியாது.
----------------------------
(பா) அட்டவிஹம் பி ய கம்மம் ஸவ்வ போக்கலமயம் ஜிணா விந்தி
ஜஸ்ஸ பலம் தம் உச்சதி துக்கம் தி விபச்சமாணஸ்ஸ.
45. எட்டு வகைவினைகள் புத்கலமென் றார்பகவன்
முட்டும் பெருந்துயர் வித்து
வினைகள் எட்டு வகைப்படும் என்று ஜின பகவான்கூறியுள்ளார். அவ்வினைகள் உயிரோடு கலந்து, உரிய காலத்தில் பயனைத்தருவதால், இன்பமும், துன்பமும் தோன்றுகின்றன.
----------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
வவஹாரஸ்ஸ தரீஸணமுவஏஸோ வண்ணிதோ ஜிநிவரேஹிம்
ஜீவா ஏதே ஸவ்வே அஜ்ஜவஸாணாதவோ பாவா
தமிழில் குறட்பா:
46. திரிபாம் உணர்வும் உயிரென அத்தன்
உரைத்தார் உலகியல் நோக்கு
உரை:
விருப்பு, வெறுப்பு முதலான உணர்வுகள் உயிரினுடையவைஎன்றும், ஜினபகவான் அருளியுள்ளார் என்பதும் உண்மைதான். அதுவழக்கு நயத்தில் கூறப்பட்டதாகும்..
------------------------------
(பா)ராயா ஹுணிக்கதோ த்தி ய ஏஸோ பலஸமுதயஸ்ஸ ஆதேஸோ
லவஹாரேண து உச்சதி தத்தேக்கோ ணிக்கதோ ராயா.
47. வேந்தன் விரைகின்றான் என்பர் படைநான்கும்
மாந்தர் மறந்த நிலை
நாற்படைகள் சூழ அரசர் செல்லும்போது, “அரசர் போகின்றார்” என்பர் உலகோர், படைகளைக் குறிப்பிடாமல், அரசருக்கு முக்கியத்துவம்தரப்படுவது உலகியல் வழக்கு.
----------------------------
(பா)ஏமேவ ய வவஹாரோ அஜ்ஜவஸாணாதிஅண்ண பாவாணம்
ஜீவோ த்தி கதோ ஸுத்தே தத்தேக்கோ ணிச்சதோ ஜீவோ
48. இயல்பில் முரணாம் திரிபுகளைச் சொல்வார்
உயிரென்றே பொய்மை மயக்கு
அதுபோன்றே விருப்பு, வெறுப்பு முதலான தன் இயல்புக்குமாறுபட்ட உணர்வுகளில் உயிர், உழலும்போது, அவ்வுணர்வுகளைக்குறிப்பிடாமல், உயிரைக் குறிப்பிடுதல் உலக வழக்காகும்.
----------------------------
(பா) அரஸமரூவமகந்தம் அவ்வத்தம் சேதணாகுணமஸத்தம்
ஜாண அலிங்கக்கஹணம் ஜீவமணித்திட்டஸண்ட்டாணம்.
49. உயிர்தான் உருவம் சுவைமண மின்றி
வயங்கிய ஞானம் உடைத்து
உயிர் சுவையற்றது : உருவம் அற்றது : மணம் அற்றது :கண்களுக்குப் புலப்படாதது : ஒலி அற்றது : அடையாளங்களாலும் அறியமுடியாதது! : குறிப்பிட்ட வடிவம் இல்லாதது: ஆனால் அறிதல் பண்புடையது, (அறிதல் தவிர்த்த பிறயாவும் புற்கலத்தின் குணங்களாகும் என்பது
உணர்த்தப்பட்டது)
----------------------------
(பா) ஜீவஸ்ஸ ணத்தி வண்ணோ ண வி கந்தோ ண வி ரஸோ ண வி ண பாஸோ
ண வி ரூவம் ண ஸரீரம் ண வி ஸண்டாணம் ண ஸம்ஹணணம்
50. உயிர்தான் நிறமுடல் ஊறிலது மாறாப்
பயன்பாடுப் பேறும் உடைத்து
உயிர் நிறம் அற்றது: ஊறும் அற்றது : உடலும் அற்றது : உடற்கட்டமைப்பு அற்றது : மாறுபாடில்லாப் பயன்பாடு என்னும் சிறப்பினைஉடையது.
----------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஜீவஸ்ஸ ணத்தி ராகோ ண வி தோஸோ ணேவ விஜ்ஜதே மோஹோ
ணோ பச்சயண கம்மம் ணோகம்மம் சாவி ஸே ணத்தி.
தமிழில் குறட்பா:
51. உயிர்தான் விருப்பு வெறுப்பிலது வாட்டும்
செயிர்வினை கள்தாம் இல
உரை:
தூய உயிருக்கு விருப்பும் இல்லை. வெறுப்பும் இல்லை : மோகம்இல்லை : வினைகளும் இல்லை : உடல் சார்ந்த அமைப்பிற்கானவினைகளும் (நோகருமம்) இல்லை.
------------------------------
(பா)ஜீவஸ்ஸ ணத்தி வக்கோ ண வக்கணா ணேவ பட்டயா கேயீ
ணோ அஜ்ஜபபட்டாணா ணேவ ய அணுபாகடாணாணி
52. தூய உயிர்க்கே வினைதொகுப் பில்லைநோய்
மேவும் கலப்பு மிலை
தூய உயிருக்கு புற்கலப் பொருட்களான, பரமாணுக்களின்
தொகுப்புக் கூட்டும் இல்லை : வினைக்கலப்பும் இல்லை. எனவே வினைத்
துய்ப்பும் இல்லை .
------------------------------
(பா)ஜீவஸ்ஸ ணத்தி கேயீ ஜோயட்டாணா ண பந்தடாணா வா
ணேவ ய உதயட்டாணா ண மக்கணட்டாணயா கேயீ
53. தூய உயிர்க்கே யோகமிலை கட்டுதயம்
யாவுமிலை துன்ப மிலை
தூய உயிருக்கு யோகஸ்தானமும் இல்லை : பந்த ஸ்தானமும்இல்லை : உதயஸ்தானமும் இல்லை : மார்க்கணா ஸ்தானமும் இல்லை.( யோகம் என்பது மனம், மொழி, உடல் செயல்பாடுகளால் உயிரில்ஏற்படும் அசைவுகளைக் குறிக்கும். பந்தம், உதயம் மார்க்கணா ஆகியவைவினை சார்ந்த நிகழ்வுகளாகும்.)
------------------------------
(பா) ணோ டிதிபந்தட்டாணா ஜீவஸ்ஸ ண ஸங்கிலேஸடாணா வா
ணேவ விஸோஹிட்டாணா ணோ ஸஞ்ஜமலத்திடாணா வா.
54. தூய உயிரில்தான் தங்கல் வினைவிலகல்
யாவுமிலை துன்ப மிலை
தூய உயிருக்கு ஸ்திதி பந்தஸ்தானம், ஸங்க்லேச ஸ்தானம்,விசுத்த ஸ்தானம் ஸம்யம லப்தி ஸ்தானம் ஆகியவையும் இல்லை.ஸ்திதி பந்தம் - வினைகள் உயிரில் தங்கி நிற்றல்நிலைஸ்ங்க்லேசம் - பாவவினை உண்டாகக் காரணமாகும் உணர்வுகள்விசுத்தி - புண்ணிய வினை உண்டாகக் காரணமாகும் உணர்வுகள்ஸம்யம லப்தி - சாரித்திர மோகனிய வினை விலகும் நிலை.
------------------------------
(பா) ணேவ ய ஜீவட்டாணா ண குணட்டாணா ய அத்தி ஜீவஸ்ஸ
ஜேண து ஏதே ஸவ்வே போக்கலதவ்வஸ்ஸ பரிணாமா
55. தூய உயிரில் குணநிலை வேறுபாடு
யாவுமிலை புத்கலப் பண்பு
தூய உயிருக்கு ஜீவஸ்தானமும் இல்லை. குணஸ்தானமும்இல்லை. ஏன் எனில் இவை புற்கலப் பொருளினால் உண்டாகும்நிகழ்வுகளாகும். ( ஜீவஸ்தானம் என்பது உயிரில் உண்டாகும் நிகழ்வு நிலைவேறுபாடுகளைக் குறிக்கும். குணஸ்தானம் என்பது குணநிலைகளின்படிப்படியான உயர்வு நிலைகளைக் குறிக்கும். இவை பிறவி உயிரின் மீதுஏற்றிச் சொல்லப்படும் நிலைகளாகும். தூய உயிரில் இத்தகைய நிலைகள்இல்லை.)
----------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
வவஹாரேண து ஏதே ஜீவஸ்ஸ ஹவந்தி வண்ணமாதீயா
குணடாணந்தா பாவா ண து கேயீ ணிச்சயணயஸ்ஸ
தமிழில் குறட்பா:
56. நிறம்குணம் யாவும் அமைந்த உயிராய்
உரைப்பர் உலகியல் நோக்கு
உரை:
முன்குறித்த நிறம் முதற்கொண்டு குணஸ்தானம் வரையிலானநிலைகள், வழக்கு நயத்தால் உயிரின் குணங்களாக, உயிர் ஏற்கும்குணங்களாக கூறப்படுகின்றது. உண்மை நோக்கில் அவை எதுவும்உயிரின் குணங்கள் ஆகா.
------------------------------
(பா) ஏதேஹிம் ய ஸம்பந்தோ ஜஹேவ கீரோதயம் முணேதவ்வோ
ண ய ஹோந்தி தஸ்ஸ தாணி து உவவோககுணாதிகோ ஜம்ஹா
57. பாலுடன் நீர்கலப்பே போல்தான் உயிருடல்
நாளும் அவைவேறு வேறு
பாலும் நீரும் ஒன்றாகக் கலப்பது போன்றே உயிர்தங்கியஉடலில், நிறம் முதலான குணங்கள் கலந்துள்ளன. ஆயினும் அத்தகயக்குணங்கள் உயிரினுடையதல்ல. உயிர் தனக்கே உரிய அறிவுப் பயன்பாடுஎன்ற குணத்தால், அவற்றிலிருந்து வேறுபட்டதாகும்.
------------------------------
(பா) பந்தே முஸ்ஸந்தம் பஸ்ஸிதூன லோகா பணந்தி வவஹாரீ
முஸ்ஸதி ஏஸோ பந்தோ ண ய பந்தோ முஸ்ஸதே கோயீ
58. திருட்டு வழிஎன்பர் மக்கள் வழக்கில்
திருடுமோ நாளும் வழி?
ஒரு பாதையில் வழிப்போக்கன் செல்லும் போது, திருடர்கள்அவன் பொருளைக் கவர்ந்து சென்றால், மக்கள், அச்சாலையைத் “திருட்டுவழி”என்று கூறுவர். இது உலகவழக்கு; உண்மையில் வழிதிருடுவதில்லையல்லவா?
------------------------------
(பா) தஹ ஜீவே கம்மாணம் ணோகம்மாணம் ச பஸ்ஸிதும் வண்ணம்
ஜீவஸ்ஸ ஏஸ வண்ணோ ஜீணேஹிம் வவஹாரதோ உத்தோ
59. உயிர்கலந்த வெவ்வினையால் மேனி நிறமே
உயிர்க்குண்டோ ஓர்நிறம்நாற் றம்?
அதுபோன்றே, உயிர் தங்கிய உடலின் நிறம் முதலானவைஉயிரின் குணங்களாக உலக வழக்கில் கூறப்படுகின்றது. உண்மையில்உயிரில் கலந்த வினைகள், மற்றும் உடல் சார்ந்த வினைகள்ஆகியவற்றினால் தான், அவ்வுடல், நிறம் முதலான குணங்களைப்பெறுகின்றது. இதுவே ஜினபகவான் அருளுரையாகும்.
------------------------------
(பா) கந்தரஸபாஸரூவா தேஹோ ஸண்டாணமாயியா ஜே ய
ஸவ்வே வவஹாரஸ்ஸ ய ணிச்சயதண்ஹு வவதிஸந்தி.
60. உலகியலில் கூறுவர் புத்கலத்தின் பண்பை
நிலையுயிர் மேல்ஏற்றி யே
இதைப்போன்றே சுவை, மணம், ஊறு, வடிவம் முதலானவை, உலக வழக்கில் உயிரின் மேல் ஏற்றிக்கூறப்படுகின்றது. உண்மையில்அவை, உயிரின் குணங்கள் அல்ல.
----------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
தத்த பவே ஜீவாணம் ஸம்ஸாரத்தாண ஹோந்தி வண்ணாதீ
ஸம்ஸாரபமுக்காணம் ணத்தி ஹு வண்ணாதவோ கேயீ
தமிழில் குறட்பா:
61. பிறவியில் உள்ளவரை இவ்வுயிரைச் சொல்வர்
நிறத்து டனும்தான் இணைத்து
உரை:
பிறவியில் உழலும் உயிரிடத்து, முன்கூறிய நிறம் முதலானவைகூறப்படுகின்றது. வீடு பேறு அடைந்த நிலையில், உயிரில் அவை இல்லை.
------------------------------
(பா) ஜீவோ சேவ ஹி ஏதே ஸவ்வே பாவ த்தி மண்ணஸே ஜதி ஹி
ஜீவஸ்ஸாஜீவஸ்ஸ ய ணத்தி விஸேஸோ து தே கோயீ
62. புத்கலத்தின் பண்பே உயிருடைத் தாயினங்கே
எத்தகைத்தாம் வேற்றுமை உண்டு?
நிறம் முதலான (புற்கலத்) தன்மைகள் உயிரினுடையவை எனக்கொண்டால், அந்நிலையில் உயிர், உயிரல்லவை என்ற வேறுபாடு இல்லாமல்போகும்.
------------------------------
அஹ ஸம்ஸாரத்தாணம் ஜீவாணம் துஜ்ஜ ஹோந்தி வண்ணாதீ
தம்ஹா ஸம்ஸாரத்தா ஜீவா ரூவித்தமாவண்ணா
63. பிறவியில் எவ்வுயிரும் புத்கலம் என்றால்
உருவமே எய்தும் உயிர் !
பிறவி நிலையில் உள்ள உயிர்களுக்கு, நிறம் முதலானவைஉண்டு எனக்கொண்டால், அவ்வுயிர்களும் உருவம் உடையவைஎன்றாகிவிடும் !
------------------------------
ஏவம் போக்கலதவ்வம் ஜீவோ தஹலக்கணேண மூடமதீ
ணிவ்வாணமுவகதோ வி ய ஜீவத்தம் போக்கலோ பத்தோ
64. உருவம் உடையதே புத்கலத்தின் பண்பு
பெறுமோ அவைஉயிர்போல் வீடு?
அவ்வாறாயின், புத்கலப் பொருள்களை, உயிர் எனக்கருதவேண்டிவரும் ! புத்கலப் பொருளும் வீடுபேறு அடையும் எனக் கொள்ளவேண்டும் ! இது அறிவின்மையாகும்.
------------------------------
ஏக்கம் ச தோண்ணி திண்ணி ய சத்தாரி ய பஞ்ச இந்தியா ஜீவா
பாதரபஜ்ஜத்திதரா பயடீவோ ணாமகம்மஸ்ஸ
65. ஒன்றுமுதல் ஐந்தறிவு கொண்டதாம் பல்வகை
நுண்ணுடலும் நாமவினை யால்
ஓரறிவு முதல் ஐயறிவு வரையிலான ( ஐம்பொறிகளை உடைய)உயிர்கள், பருவுடலிகள், நுண்ணுடலிகள், நிறை உயிர்கள் நிறைவடையாஉயிர்கள் ஆகிய அனைத்து வகையான உயிரினங்களும் வினையின்விளைவுகள் ஆகும்.
----------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஏதாஹி ய ணிவ்வத்தா ஜீவட்டாணா வு கரணபூதாஹிம்
பயடீஹிம் போக்கலமயிஹிம் தாஹிம் கஹம் பண்ணதே ஜீவோ
தமிழில் குறட்பா:
66. புத்கலச் சேர்க்கை உயிரில் புகுதலால்
எத்தனையோ மெய்வகை யாம்
உரை:
வினைகளாகிய புற்கலத் தொகுதி, உயிரில் கலந்துவிடுவதால்உயிர் அவ்வாறான உடல்களில் சென்று தங்குகின்றது. எனவே வினைத்தொகுதியை, எவ்வாறு உயிர் எனக் கருதமுடியும்? (முடியாது)
------------------------------
பஜ்ஜத்தாபஜ்ஜத்தா ஜே ஸுஹுமத பாதரா ய ஜே சேவ
தேஹஸ்ஸ ஜீவஸண்ணா ஸுத்தே வவஹாரதோ உத்தா
67. நிறைகுறை நுண்ணுயிர் மற்று பருமன்
அறைதல் உலகியல் நோக்கு
நிறை உயிர், நிறைவுறா உயிர், நுண்ணுயிர், பருவுடலுடை உயிர்எனப் பலவகையாக நூல்களில் கூறப்படுவது உலக வழக்கில்தான்என்றறிய வேண்டும் ( உண்மையில் உயிருக்கு உருவம் ஏதும் இல்லை)
------------------------------
மோஹணகம்மஸ்ஸுதயா து வண்ணியா ஜே இமே குணட்டாணா
தே கஹ ஹவந்தி ஜீவா ஜே ணிச்சமசேதணா உத்தா
68. மோகவினைத் தாக்கம் குணநிலைகள் ஓருயிரில்
ஆகும் திரிபென்றே காண்.
அவ்வாறே நூல்களில் குணஸ்தானங்கள் கூறப்பட்டுள்ளன.மோக வினையின் உதயத்தால், உயிரில் உண்டாகும் திரிபு நிலைகளே ,பல்வேறு குணங்களின் படிநிலைகள் ஆகும். ( தூய உயிரில்குணஸ்தானங்களாகிய பேதங்கள் இல்லை)
------------------------------
அதிகாரம் 2
கர்த்தாவும் கருமமும்
(செய்பவனும் வினையும்)
ஜாவ ண வேதி விஸேஸந்தரம் து ஆதாஸவாண தோண்ஹம் பி
அண்ணாணீ தாவ து ஸோ கோஹாதிஸு வட்டத்தே ஜீவோ
69. தன்னியல்பின் மாறாம் துவர்ப்பசைத் தோய்தலே
மன்னுயிர் பேதைமை யாம்
ஓர் உயிர், எதுவரை தன் இயல்புக்கு மாறான கோபம் முதலானஉணர்வுகளில் மூழ்கிவிடுகின்றதோ, அதுவரை அறியாமையில் உள்ளதுஎன்று பொருள்.
------------------------------
கோஹாதீஸு வட்டம்தஸ்ஸ தஸ்ஸ கம்மஸ்ஸ ஸஞ்சவோ ஹோதி
ஜீவஸ்ஸேவம் பந்தோ பணிதோ கலு ஸவ்வதரிஸீஹிம்
70. முன்வினை ஊற்றின் பயனாய்த் துவர்ப்பசையில்
மன்னுயிர் தோய்தலா மே
வினை ஊற்றின் காரணமாகவே, உயிர், கோபம் முதலானதுவர்ப்பசைகளில் தோய்கின்றது என ஜினபகவான் அருளியுள்ளார்.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஜயியா இமேண ஜீவேண அப்பணோ ஆஸவாண ய தஹேவ
ணாதம் ஹோதி விஸேஸந்தரம் து தஇயா ண பந்தோ ஸே
தமிழில் குறட்பா:
71. எவ்வுயிர் தன்வினை ஊற்றை உணருமோ
அவ்வுயிரில் உண்டாம் செறிப்பு
உரை:
எப்போது ஓர் உயிருக்கு வினை ஊற்று பற்றிய தெளிவுஉண்டாகின்றதோ, எப்போது உயிர், கோபம் முதலானவை, தன் இயல்புக்குமாறு பட்டவை என்று உணர்கின்றதோ, அப்போது புதிய வினை ஊற்றுதடுக்கப்படும்.
------------------------------
ணாதூண ஆஸவாண அஸுசித்தம் ச விவரீயபாவம் ச
துக்கஸ்ஸ காரணம் திய ததோ ணியத்திம் குணதி ஜீவோ.
72. ஊற்றே அழுக்கு துயரத்தின் காரணம்
ஊற்றை அடைத்தல் கடன்
72. வினை ஊற்று என்பது தூய்மையற்றது : உயிரின் இயல்புக்கு
மாறுபட்டது : எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாவது : இதை
உணருகின்ற உயிர், வினை ஊற்று உண்டாகாத நிலையில் நிற்கும்.
------------------------------
அஹமேக்கோ கலு ஸுத்தோ ணிம்மமவோ ணாணதம்ஸணஸமக்கோ
தம்ஹி டிதோ தச்சித்தோ ஸவ்வே ஏதே கயம் ணேமி
73. நற்காட்சி தூய்மை தனிமை பசையின்மை
தற்காப்பு என்றறிதல் மாண்பு
நான் தனியானவன் : நான் தூய்மையானவன்: நான்செருக்கில்லாதவன்: நான் அறிவன் : நான் நற்காட்சியாளன் : நான்முழுமையானவன் : எனவே நான் கோபம் முதலான வினை ஊற்றுக்கானசெயல்களில் ஈடுபட மாட்டேன் என்று தூய உயிர் உறுதி கொள்ளும்.
“நானென்றும் தனிமை யானவன் நல்லான்மன் அருவ மானவன்
நானென்றும் தூய்மை யானவன் நன்ஞானம் காட்சி யானவன்
நானென்றும் மோகம் அற்றவன் நலமழிக்கும் தாகம் அற்றவன்
நானென்றும் சீலம் ஏற்றவன் நண்ணுகஇவ் வெண்ணம் நாளுமே!”
பன்னிரு சிந்தனைகள் (பாரஸ அணுவேக்கா - 20)
------------------------------
ஜீவணிபத்தா ஏதே அதுவ அணிச்சா தஹா அஸரணா ய
துக்கா துக்கப்பல த்தி ய ணாதூண ணிவத்ததே தேஹிம்
74. ஊற்றுதான் மாறிடின் துக்கம் விலகிடும்தன்
ஆற்றல் உணர்தல் அறிவு
74. வினை ஊற்றுகள் உயிரோடு கலந்துள்ளன. ஆயினும் அவைநிலையில்லாதவை : மாறும் தன்மையுடையவை : அடைக்கலம் இல்லாதவை: துன்பவடிவின : துக்கம் தருவன : இவ்வாறு அறியும்போது தன் இயல்புக்குமாறானவற்றிலிருந்து அவ்வுயிர் விலகத்துணியும்.
------------------------------
கம்மஸ்ஸ ய பரிணாமம் ணோகம்மஸ்ஸ ய தஹேவ பரிணாமம்
ண கரேஇ ஏயமாதா ஜோ ஜாணதி ஸோ ஹவதி ணாணி.
75. உயிர்வினை யொன்றையும் ஆக்குவ தில்லை
உயிர்அறி தல்மட்டுமே யாம்
உயிர், தானே மூலமாக (உபாதானமாக) நின்று, வினைகளின்செயல்களையோ, உடல் சார்ந்த வினைகளின் (நோகருமங்களின்)செயல்களையோ செய்யவில்லை என்பதை அறிவன் உணருகின்றான்.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
வி பரிணமதி ண கிண்ஹதி உப்பஜ்ஜதி ண பரதவ்வபஜ்ஜாயே
ணாணீ ஜாணந்தோ வி ஹு போக்கலகம்மம் அணேயவிஹம்
தமிழில் குறட்பா:
76. நல்லறிவன் தானறிவான் புத்கல மேவினை
நல்லுறுதி கொள்வான் தடுப்பு
உரை:
புற்கல வினைகள் பலவாகும் என்று அறிவன் அறிகின்றான்என்றாலும் நல்லறிவன் அத்தகைய மாறுகைகட்குத் தன்னைஉட்படுத்தாமல் இருப்பதில் உறுதி கொள்வான். அவ்வுறுதியின்காரணமாக, அவன், தன்னிடம் வினைகளைச் சேர்த்துக் கொள்வதில்லை.
------------------------------
ண வி பரிணமதி ண கிண்ஹதி உப்பஜ்ஜதி ண பரதவ்வபஜ்ஜாயே
ணாணீ ஜாணந்தோ வி ஹு ஸகபரிணாமம் அணேயவிஹம்
77. உயிரியல்பு தன்னை அறிதலே ஞானம்
மயங்கிடான் நல்லறிவன் தான்
நல்லறிவன், உயிரில் நிகழும் பலவகையான நிகழ்வுகளைஅறிவான் : எனவே அவன் தன் உயிரின் இயல்புக்குப் புறம்பானநிகழ்வுகளில் ஈடுபடுவது இல்லை : அவ்வித நிகழ்வுகளை அவன்ஏற்படுத்துவதும் இல்லை.
------------------------------
ண வி பரிணமதி ண கிண்ஹதி உப்பஜ்ஜதி ண பரதவ்வபஜ்ஜாயே
ணாணீ ஜாணந்தோ வி ஹு போக்கலகம்மக்கல மணந்தம்
78. எண்ணிலாத் துன்பங்கள் இன்பங்கள் தன்வினையால்
என்றறிவான் எய்தான் திரிபு
நல்லறிவன் வினைகளால் வரக்கூடிய எண்ணற்ற,அளவில்லாத இன்ப, துன்பங்களை அறிவான். எனவே அவன்,தனதல்லாத பிற பொருள்களைத் தனது என்று ஏற்பதும் இல்லை :உண்டாக்குவதுமில்லை.
------------------------------
ண வி பரிணமதி ண கிண்ஹதி உப்பஜ்ஜதி ண பரதவ்வபஜ்ஜாயே
போக்கலதவ்வம் பி தஹா பரிணமதி ஸயேஹிம் பாவேஹிம்
79. புத்கலமும் மாறாது வேறொன்றாய் அஃதும்தான்
அத்தன்மை தன்னில் நிலை
புத்கலமும் பிற பொருளாக மாறுவது இல்லை. பிறபொருள்களைஉண்டாக்குவதும் இல்லை. தன்னுடைய தன்மையில் அப்பொருளும்நிலைத்துள்ளது.
------------------------------
ஜீவ பரிணாஹேதும் கம்மத்தம் போக்கலா பரிணமந்தி
போக்கலகம்மணிமித்தம் தஹேவ ஜீவோ வி பரிணமதி
80. புத்கலமும் ஓருயிரும் ஒன்றில் பிறிதொன்று
தொத்தும் நிமித்தமே யாம்
புற்கலம், உயிரின் திரிபு உணர்வை நிமித்தமாகக் கொண்டு,உயிரில் கலந்து விடுகிறது. உயிரும் புற்கல வினையை நிமித்தமாகக்கொண்டு செயலாற்றுகிறது. ( எனவே உயிர், தன் இயல்பை மறந்து திரிபுஅடைந்துத் துன்புறுகின்றது).
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ண வி குவ்வதி கம்மகுணே ஜீவோ கம்மம் தஹேவ ஜீவகுணே
அண்ணோண்ணணிமித்தேண து பரிணாமம் ஜாண தோண்ஹம் பி
தமிழில் குறட்பா:
81. ஆக்குவதில் ஒன்றே பிறிதொன்றின் பண்பினை
ஆக்கம் நிமித்தத் திரிபு
உரை:
உயிரும், வினைகளின், குணங்களை ஆக்குவது இல்லை: வினைகளும் உயிரின் பண்புகளை ஏற்பது இல்லை. ஆயினும் ஒன்றுக்குப் பிறிதொன்று நிமித்தமாவதால், ஒன்றுடன் ஒன்று கலந்து திரிபு நிலைகளை அடைகின்றன.
------------------------------
ஏதேண காரணேண து கத்தா ஆதா ஸயேண பாவேண
போக்கலகம்மகதாணம் ண து கத்தா ஸவ்வபாவாணம்
82. உயிரின் உணர்வுக்கே அவ்வுயிர்தான் மூலம்
உயிர்செய்யா புத்கலத்தின் பண்பு
உயிரில் உண்டாகும் நல்ல, தீய உணர்வுகளுக்கு அவ்வுயிரே காரணம் (கர்த்தா). உயிர், எப்போதும் புத்கலத்தின் குணங்களை ஆக்குவதில்லை.
------------------------------
ணிச்சயணயஸ்ஸ ஏவம் ஆதா அப்பாணமேவ ஹி கரேதி
வேதயதி புணோ தம் சேவ ஜாண அத்தா து அத்தாணம்
83. உண்மையில் தூய்மைக்கும் தன்திரிபுக் கும்துன்பத்
தன்மைக்கும் தானே பொறுப்பு
உண்மை நோக்கில், உயிர் தூயதாகவும் உள்ளது. தன் தூய நிலையில் மாறுபடும் திரிபு நிலைக்கும் தானே காரணம் ஆகின்றது. அத்திரிபினால் உண்டாகும் விளைவையும் தானே நுகருகின்றது.
------------------------------
வவஹாரஸ்ஸ து ஆதா போக்கலகம்மம் கரேதி அணேயவிஹம்
தம் சேவ ய வேதயதே போக்கலகம்மம் அணேயவிஹம்
84. உயிரே வினைகளை யாக்குமெனச் சொல்லல்
மயங்கும் உலக வழக்கு
வழக்கு நய நோக்கில், உயிர், தானே புற்கல வினைகளைச் செய்கின்றது. அவற்றின் பயனைத் தானே நுகருகின்றது என்று சொல்லப்படுகின்றது.
------------------------------
ஜதி போக்கலகம்மமிணம் குவ்வதி தம் சேவ வேதயதி ஆதா
தோகிரியாவாதித்தம் பஸஜ்ஜதே ஸோ ஜிணாவமதம்
85. புத்கல வாக்கம் நுகர்தல் எனவிரு
தத்துவம் இல்லை உயிர்க்கு
உலகவழக்கில் கூறப்படுவது போன்று உயிரே, புற்கல வினைகளைச் செய்கின்றது. அதுவே அவற்றின் பயனை நுகருகின்றது என்பதை ஏற்றுக்கொண்டால் உயிருக்கு இருவேறுபட்ட செயல்களையாக்கும் நிலை உண்டு என்றாகிவிடும். உண்மையில் இக்கருத்து, ஜினபகவானால் ஏற்கப்படாத ஒன்று.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஜம்ஹா து அத்தபாவம் போக்கலபாவம் ச தோ வி குவ்வந்தி
தேண து மிச்சாதிட்டீ தோகிரியாவாதிணோ ஹுதி
தமிழில் குறட்பா:
86. தன்னுணர்வு புத்கலப் பண்பாக்கம் என்றிரண்டும்
மன்னுயிர் செய்யுமெனல் பொய்
உரை:
உயிரின் நிகழ்வும் புற்கலப்பொருள் நிகழ்வும் ஆகிய இரு நிகழ்வுகளும் உயிராலேயே நிகழ்கின்றன என்பது பொய்க் காட்சியாகும். உண்மையில் புற்கல வினைகளை, உயிர் தன்னுடைய திரிபு உணர்வுகளால், தன்னுடன் கலக்குமாறு செய்கின்றது. அக்கலப்பின் பயனை அவ்வுயிரே துய்க்கின்றது.
------------------------------
மிச்சத்தம் புணம் துவிஹம் ஜீவமஜீவம் தஹேவ அண்ணாணம்
அவிரதி ஜோகோ மோஹோ கோஹாதீயா இமே பாவா
87. பொய்மை வகையிரண் டேஉயிரில் புத்கலத்தில்
பொய்யறிவு யோகமோக மும்
பொய்மை, உயிரினுடையது, புத்கலத்தினுடையது என இருவகைப்படும். அதுபோலவே அறியாமை, யோகம், மோகம், கோபம் முதலானவையும் இரண்டிரண்டு வகைப்படும்.
------------------------------
போக்கலகம்மம் மிச்சம் ஜோகோ அவிரதி அணாணமஜ்ஜீவம்
உவஓகோ அண்ணாணம் அவிரதி மிச்சம் ச ஜீவோ து
88. பொய்மோகம் பேதைமை நோன்பின்மை யோகமெலாம்
செய்வினை யவ்வுயிர்ப் பாடு
பொய்க்காட்சி, மோகம், அறியாமை, விரதமின்மை, யோகம் முதலானவை உயிரால் உயிரில் உண்டானவையாகும். அவை புத்கல வினைச் சேர்க்கையின் விளைவாகும்.
------------------------------
உவஒகஸ்ஸ அணாயீ பரிணாமா திண்ணி மோஹஜுத்தஸ்ஸ
மிச்சத்தம் அண்ணாணம் அவிரதிபாவோ ய ணாதவ்வோ
89. தொடக்கம் முதல்மோகம் சேர்க்கையால் பொய்மை
அடக்கமின்மை பேதைமை யாம்
தொடக்கமற்ற காலமாக, உயிரோடு, புத்கல வினைத் தொடர்பு கூடி உள்ளது. எனவே பொய்மையும், அறியாமையும், புலன் அடக்கமின்மையும் ஆகிய மூன்று தன்மைகளும் உயிரோடு உள்ளன.
------------------------------
ஏதேஸுய உவஓகோ திவிஹோ ஸுத்தோ ணிரஞ்ஜணோ பாவோ
ஜம் ஸோ கரேதி பாவம் உவஓகோ தஸ்ஸ ஸோ கத்தா
90. உண்மையில் தூய உயிர்வினைச் சேர்க்கையால்
தன்மை திரிந்தே கெடும்
உண்மை நோக்கில் உயிர் தூயதுதான் : குற்றமற்றதுதான் : ஆனால் தொடக்கமற்ற காலமாக உள்ள வினைகளின் தொடர்பினால், மேற்கூறிய மூன்று குற்றங்களையும் உயிரே புரிகின்றது. தன்னிடம் தோன்றும் திரிபு நிலைகளுக்குத்தானே கர்த்தா ஆகின்றது- (வினைகள் அக்குற்றங்களைச் செய்யவில்லை. வினைத்
தொடர்பால், உயிரே செய்கின்றது )
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஜம் குணதி பாவமாதா கத்தா ஸோ ஹோதி தஸ்ஸ பாவஸ்ஸ
கம்மத்தம் பரிணமதே தம்ஹி ஸயம் போக்கலம் தவ்வம்
தமிழில் குறட்பா:
91. உயிரின் உணர்விற் குயிரேதான் மூலம்
உயிரல்ல வைக்குமது போன்று
உரை:
உயிரில் உண்டாகும் உணர்வுகளுக்கு உயிரே கர்த்தா : அதுபோன்றே, புற்கலப் பரமாணுக்களின் வினையாக மாறும் தன்மைக்கு, அப்புற்கலப் பொருள்களின் தன்மையே காரணம் ஆகின்றது. (புற்கலப் பொருள்கள் தாமே தான் வினைகளாக மாறுகின்றன)
------------------------------
பரமப்பாணம் குவ்வதி அப்பாணம் பி ய பரம் கரிந்தோ ஸோ
அண்ணாணமவோ ஜீவோ கம்மாணம் காரகோ ஹோதி
92. பேதை உயிர்பிற வற்றைத் தனதாக்கும்
ஆதலால் கட்டும் வினை
அறியாமையுடைய உயிர், பிறபொருள்களைத் தன்னுடையனவாகக் கருதுகின்றது. தானும், தன் தூய இயல்புக்குப் பொருந்தாத, திரிபுணர்வை அடைகின்றது. இவ்விதம் அது, வினைக் கட்டுக்குத் தானே கர்த்தா ஆகின்றது.
------------------------------
பரமப்பாணமகுவ்வம் அப்பாணம் பி ய பரம் அகுவ்வந்தோ
ஸோ ணாணமவோ ஜீவோ கட்மமாணமகாரகோ ஹோதி.
93. பொருளென்ப தன்னுயிர் என்பான் அறிவன்
வருவதுண் டோவினை யாங்கு?
தன்னுயிரைத் தவிர மற்றவையாவையும் புறப்பொருளே என்றுணரும் உயிர் அறிவன் ஆகின்றது. அத்தகைய உயிர், பிற பொருள்களைத் தனதாகக் கருதுவதில்லை. எனவே அவ்வுயிரில் புதிய வினைகள் சேருவதில்லை.
------------------------------
திவிஹோ ஏஸுவவோகோ அப்பவிடீநுப்பம் கரேதி கோஹோஹம்
கத்தா தஸ்ஸுவவோகஸ்ஸ ஹோதி ஸோ அத்தபாவஸ்ஸ
94. பொய்க்காட்சி பொய்யறிவு பொய்யொழுக்கம் மூழ்குதலால்
வெவ்வினை கூட்டும் உயிர்
பொய்க்காட்சி, பொய்யறிவு, பொய் ஒழுக்கம் ஆகியவற்றில் மூழ்கிய உயிர், கோபம் முதலான திரிபு உணர்வுகளில் மூழ்கிவிடுவதால், தன் நிகழ்வுகளுக்குத் தானே கர்த்தாவாகி வினைகளைக் கட்டிக் கொள்கின்றது.
------------------------------
திவிஹோ ஏஸுவவோகோ அப்பவியப்பம் கரேதி தம்மாதி
கத்தா தஸ்ஸுவவோகஸ்ஸ ஹோதி ஸோ அத்தபாவஸ்ஸ
95. தன்னியல் மாறிப்புறப் பொருள் தன்னுடைத்தாய்
எண்ணுதல் பாவனைக்குற் றம்
உயிர், தன் இயல்பிலிருந்து மாறி, பிற பொருள்களைத் தன்னுடையவை என எண்ணுதல், அவ்வுயிரின் உணர்வில் ஏற்படும் குற்றங்களாகும். (பாவனைக் குற்றம்).
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஏவம் பராணி தவ்வாணி அப்பயம் குணதி மந்தபுத்தீவோ
அப்பாணம் அவி ய பரம் கரேதி அண்ணாணபாவேண
தமிழில் குறட்பா:
96. தன்னுயிர் தான்மறந்தே மற்றவற்றைத் தன்னுடைத்
தென்பார் அறிவிலி கள்
உரை:
தன்னுடைய இயல்பை மறந்து, பிற பொருள்களைத் தன்னுடையவை என்று கருதுவோர் அறிவிலிகள் ஆவர்.
------------------------------
ஏதேணா து ஸோ கத்தா ஆதா ணச்சயவிதாஹிம் பரிகஹிதோ
ஏவம் கலு ஜோ ஜாணதி ஸோ முஞ்சதி ஸவ்வகத்திதம்
97. தன்துய்ப்பிற் குத்தானே காரணம் என்றுணர்வார்
தன்னூற்று தான்தவிர்ப் பார்
உண்மை நிலையை உணரும் அறிவர், தன் நிகழ்வுகளுக்குத்
தானே கர்த்தா என்றுணர்கின்றார். எனவே வினை உதயத்துக்குக்
காரணமான நிகழ்வுகளிலிருந்து விலகியிருக்கின்றார்.
------------------------------
வவஹாரேண து ஆதா கரேதி கடபடரதாணி தவ்வாணி
கரணாணி ய கம்மாணி ய ணோகம்மாணீஹ விவஹாணி
98. ஆன்மா வினைகளை யாக்கும் காரணி
தானென்ப பொய்யுலக நோக்கு
உயிரே வினைகளை யாக்கும் கர்த்தா என்பது பொய்மையின்
கூற்றாகும். உலகியல் நோக்காகும்.
------------------------------
ஜதி ஸோ பரதவ்வாணி ய சுரேஜ்ஜ ணியமேண தம்மவோ ஹோஜ்ஜ
ஜம்ஹா ண தம்மவோ தேண ஸோ ண தேஸிம் ஹவதி கத்தா
99. உயிர்தான் பிறபொருள் ஆக்குவ தில்லை
உயிரும் பிறவாகா வாம்
உயிர், பிற பொருள்களை யாக்குவதுமில்லை : தானும்
பிறபொருள்களாக மாறுவதுமில்லை.
------------------------------
ஜீவோ ண கரேதி கடம் ணேவ படம் ணேவ ஸேஸகே தவ்வே
ஜோகுவவோகா உப்பாதகா ய தேஸிம் ஹவதி கத்தா.
100. உயிரென்ப யோகவுப யோகத்தின் மூலம்
உயிர்செய் வதிலையே மற்று
உயிர், யோகத்திற்கும் உபயோகத்திற்குமே கர்த்தாவாகும். பிற பொருள்களை உயிர் செய்வதில்லை.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஜே போக்கலதவ்வாணம் பரிணாமா ஹோந்தி ணாண ஆவரணா
ண கரேதி தாணி ஆதா ஜோ ஜாணதி ஸோ ஹவதி ணாணீ
தமிழில் குறட்பா:
101. ஞான மறைப்பு முதலாம் வினைகளெலாம்
ஞானியறி வான்தன்னின் வேறு
உரை:
ஞானமறைப்பு முதலான வினைகள் தன்னுடையவை யல்ல என்பதை நல்லறிவன் நன்கறிவான்.
------------------------------
ஜம் பாவம் ஸஹமஸுஹம் கரேதி ஆதா ஸ தஸ்ஸ கலு சுத்தா
தம் தஸ்ஸ ஹோதி கம்மம் ஸோ தஸ்ஸ து வேதகோ அப்பா
102. தன்னுடைப் பாவனைக்குத் தானேதான் காரணன்
தன்வினைத் துய்ப்பானும் தான்
உயிரே, இன்ப, துன்பங்களுக்குக் காரணமான செயல்களைச்
செய்கின்றது. அது செய்யும் செயல்களின் பயனை அதுவே துய்க்கின்றது.
------------------------------
ஜோ ஜம்ஹி குணே தவ்வே ஸோ அண்ணம்ஹி து ண லங்கமதி தவ்வே
ஸோ அண்ணமஸங்கந்தோ கஹ தம் பரிணாமயே தவ்வம்
103. பொருளொன்றின் பண்பு பிறிதொன்றாய் மாறாப்
பொருளுயிரும் புத்கலமா கா !
எந்த ஒரு பொருளும் தனக்கே உரிய குணங்களுடன் உள்ளது. அக்குணத்தை அது இழப்பதில்லை. எனவே குணம், பொருளை விட்டுப் பிரிந்து, வேறு ஒரு பொருளில் கலக்க முடியாது. உயிர் புத்கலமாகவோ, புத்கலம் உயிராகவோ மாறாது.
------------------------------
தவ்வகுணஸ்ஸ ய ஆதா ண குணதி போக்கலமயம்ஹி கம்மம்ஹி
தம் உபயமகுவ்வந்தோ தம்ஹி கஹம் தஸ்ஸ ஸோ கத்தா
104. பொருள்குணம் என்றிரண்டும் செய்வதில்லை ஆன்மா
அறிகமூலம் இல்லை யவன்
உயிர், புத்கலத்தையோ, புத்கலத்தின் குணங்களையோ,
ஆக்குவதில்லை. எனவே புத்கலத்தின் குணங்களுக்கு உயிர்
காரணமாகாது.
------------------------------
ஜீவம்ஹி ஹேதுபூதே பந்தஸ்ஸ து பஸ்ஸிதூண பரிணாமம்
ஜீவணே கதம் கம்மம் பண்ணதி உவயாரமேத்தேண
105. எண்வினை தம்விளைவுக் கோருயிர் தான்நிமித்தம்
பண்ணுமென்ப இவ்வுலக நோக்கு
தூய்மையற்ற உயிரின் திரிபு உணர்வுகளால் எண் வினைகள்உயிருடன் கலக்கின்றன. இதனையே உலக வழக்கில், “உயிர் வினைகளைச் செய்தது”என்று கூறப்படுகிறது.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஜோதேஹிம் கதே ஜுத்தே ராயேண கதம் தி ஜமபதே லோகோ
லவஹாரேண தஹ கதம் ணாணாவரணாதி ஜீவனே
தமிழில் குறட்பா:
106. போரிடுவர் வீரர் வழக்கினில் வேந்தென்பார்
ஆருயிரைக் கூறுவ ராங்கு
உரை:
போரில் வீரர்கள் ஈடுபடுகின்றனர், ஆயினும் உலக வழக்கில், அரசன் போரிட்டான் என்று கூறப்படுகின்றது. அதுபோலவே, அறிவு மறைப்பு முதலான புற்கல வினைகளை, உயிர் செய்கின்றது என்று கூறப்படுகின்றது.
------------------------------
உப்பாதேதி கரேதி ய பந்ததி பரிணாமயேதி கிண்ஹதி ய
ஆதா போக்கலதவ்வம் லவஹாரணயஸ்ஸ வத்தவ்வம்
107. புத்கலத்தின் ஆக்கம் கலப்பு நுகர்வெல்லாம்
சத்துயிர் ஆக்குமென்ப பொய்
எனவே, உயிரே, புற்கல வினைகளைச் செய்கின்றது. நிலைப்படுத்துகின்றது. பயன் பெறுமாறு செய்கின்றது என்றெல்லாம் கூறப்படுவது உலகியல் நோக்காகும். ( உண்மை நய நோக்காகாது)
------------------------------
ஜஹ ராயா லவஹாரா தோஸகுணுப்பாதகோ த்தி ஆலவிதோ
தஹ ஜீவோ லவஹாரா தவ்வகுணுப்பாதகோ பணிதோ
108. மக்கள் துயரம்அம் மன்னவனால் என்பரன்றோ
குற்றம் அதுபோல் உயிர்க்கு
மக்கள் எய்தும் துன்பங்களுக்கு, நாட்டு மன்னனே காரணம் என்பர். அதுபோல் உயிரே புத்கல வினைகளையாக்குகின்றது என்பர் உலகோர்.
------------------------------
ஸாமண்ணபச்சயா கலு சவுரோ பண்ணந்தி பந்தகத்தாரோ
மிச்சத்தம் அவிரமணம் கஸாயஜோகா ய போத்தவ்வா
109. பொய்மை விரதமின்மை யோகம் துவர்ப்பசைகள்
செய்வினைக்கட் டின்கா ரணம்
உண்மையில் வினைக்கட்டுக்கு நான்கு காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை 1) பொய் நம்பிக்கை 2) புலனடக்கமின்மை 3) துவர்ப்பசைகள் 4) யோகம் என்பன.
------------------------------
தேஸிம் புணோ வி ய இமோ பணிதோ போதோ து தேரஸவியப்போ
மிச்சாதிட்டீஆதி ஜாவ ஸஜோகிஸ்ஸ சரமந்தம்
110. பொய்க்காட்சி யாளன் முதல்பதின் மூன்றுநிலை
எய்தும் குணத்தானங் கள்
எனவே மனிதனின் குணநிலைகள் ,பொய்க் காட்சியாளன்
முதற்கொண்டு சயோகி கேவலி வரை, பதின்மூன்றாகக் கூறப்பட்டுள்ளது.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஏதே அசேதணா கலு போக்கலகம் முதயஸம்பவா ஜம்ஹா
தே ஜதி கரேந்தி கம்மம் ண வி தேஸிம் வேதகோ ஆதா
தமிழில் குறட்பா:
111. புத்கலத்தின் சேர்க்கையால் அப்பதின் மூன்றுநிலை
சத்துயிரில் தானமையு மாம்
உரை:
இந்த 13 நிலைகளும் உண்மையில், உயிரற்ற புற்கல வினைகளின் கலப்பினால் உயிரில் அமையும் நிலைகளாகும்.
------------------------------
குணஸண்ணிதா து ஏதே கம்மம் குவ்வந்தி பச்சயா ஜம்ஹா
தம்ஹா ஜீவோகத்தா குணா ய குவ்வந்தி கம்மாணி
112. தான்செய்வ தில்லை வினைகளை ஓருயிர்
மாண்பு கெடுதல் திரிபு
உயிர் வினைகளைச் செய்யாவிட்டாலும் புற்கல வினைகளின் கலப்பினால், தன் இயல்பான தூய்மை நிலைக்குப் பொருந்தாத திரிபு நிலையில், அத்தகைய குணவேறுபாடுகளை அடைகின்றது.
------------------------------
ஜஹ ஜீவஸ்ஸ அணண்ணுவவோகோ கோஹோ வி தஹ ஜதி அண்ணணோ
ஜீவஸ்ஸாஜீவஸ்ஸய ஏவமணண்ணத்தமாவண்ணம்
113. உபயோகம் என்ப உயிருடைத்தாம் கோப
விபரீதம் ஆகா உயிர்
உயிரின் குணமான உபயோகம், உயிரிலிருந்து வேறுபட்டது அன்று. ஆனால் கோபம் முதலான உணர்வுகள் உயிரின் இயல் குணங்கள் அல்ல. ஆகவே அவற்றை உயிரிலிருந்து வேறுபட்டனவாகவே கொள்ளுதல் வேண்டும்.
------------------------------
ஏவமிஹ ஜோ து ஜீவோ ஸோ சேவ து ணியமதோ தஹாஜீவோ
அயமேயத்தே தோஸோ பச்சயணோகம்மகம்மாணம்
114. பொய்க்காட்சி யோடு குறுவினைகள் யாவுமே
மெய்யுயிர்ப் பண்பாகா தே!
அதுபோன்றே, பொய்க்காட்சி, உடல்சார்ந்த வினைகள் ஆகியவையும் உயிரற்ற புற்கலச் சேர்க்கையால் உயிரில் நிகழும் கலப்புகளாகும். அவற்றை உயிரின் குணங்களாக ஏற்பது பிழையாகும்.
------------------------------
அஹ தே அண்ணோ கோஹோ அண்ணுவவோகப்பகோ ஹவதி சேதா
ஜஹ கோஹோ தஹ பச்சய கம்மம் ணோகம்மவி அண்ணம்.
115. குறுவினை பொய்க்காட்சி தீச்சினம்பண் பாயின்
பிரிக்க முடியுமோ பின்
மேற்கூறிய வெகுளி, பொய்க்காட்சி, உடல் சார்ந்த வினைகள் ஆகியவற்றை உயிரின் இயல் குணங்களாக ஏற்றால், அவை என்றுமே உயிரிலிருந்து பிரிக்க முடியாதவை என ஆகிவிடக்கூடும். எனவே அவை உயிரிலிருந்து வேறானவை எனத் தெளிதல் வேண்டும்.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஜீவே ண ஸய பத்தம் ண ஸயம் பரிணமதி கம்மபாவேண
ஐஇ போக்கலதவ்வமிணம் அப்பரிணாமீ ததா ஹோதி
தமிழில் குறட்பா:
116. இணைதல்சேர் தல்செய்யா புத்கலங்கள் தாமே
எனும்மொழி தான்பிழை யாம்
உரை:
புற்கலங்களான வினைகள் உயிரோடு கட்டுறுதல் இல்லை. புற்கலங்கள் தாமே வினையாக நிகழ்வதுமில்லை என்று கருதுதல் பிழையாகும்.
------------------------------
கம்மயியவக்கணாஸுய அபரிணமத்தீஸு கம்மாபாவேண
ஸம்ஸாரஸ்ஸ அபாவோ பஸஜ்ஜதே ஸங்கஸமவோ வா
117. வினையாகும் தன்மைதான் இல்லாயின் ஆங்கே
வினைக்கட் டொடுபிறவி யில்
புற்கலங்களுக்கு வினையாகும் தன்மை இல்லாது போனால், வினைக்கட்டுமில்லை : பிறவிச் சுழற்சியும் இல்லை.
------------------------------
ஜீவோ பரிணாமயதே போக்கலதவ்வாணி கம்மபாவேண
தே ஸயமபரிணமந்தே கஹம் து பரிணாமயதி சேதா
118. புத்கலத்தை ஓருயிர் தான்வினைக ளாக்குமெனின்
உத்தம ஞானம்தான் ஏன்?
புற்கலப் பொருளை, உயிரே வினைகளாக மாற்றுகின்றது என்றால், அறிவுப் பண்புடைய உயிர், எவ்வாறு அதனைச் செய்யும்?
------------------------------
அஹ ஸயமேவ ஹி பரிணமதி கம்மபாவேண போக்கலம் தவ்வம்
ஜீவோ பரிணாமயதே கம்மம் கம்மத்தமிதி மிச்சா.
119. புத்கலமும் மாறும் வினகளாய்த் தாமெனும்
தத்துவமும் பொய்மை யுடைத்து
அவ்வாறே, புற்கலப் பொருள், தாமே வினைகளாக மாறி, உயிருடன் கலந்து விடுகிறது என்று சொல்வதும் பொய்யாகும்.
------------------------------
ணியமா கம்மபரிணதம் கம்மம் சிய ஹோதி போக்கலம் தவ்வம்
தஹ தம் ணாணாவரணாயிபரிணதம் முணஸுதச்சேவ
120. ஓருயி ரின்திரிபால் புத்கலச் சேர்க்கையாம்
மாறுதல் புத்கலப் பண்பு.
உயிர், தன் இயல்புக்கு மாறான திரிபு நிலையில் உள்ள போது, வினையாக மாறும் புற்கலத்தோடு நிமித்த, நைமித்திக நட்பு கொள்கின்றது. அதன் காரணமாக, புற்கலம் வினைவடிவமாக மாற்றம் பெறுகின்றது. புற்கலத்துக்கும் நிகழ்வுறும் ஆற்றல் உள்ளதால், அது வினையாக மாறுகின்றது.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ண ஸயம் பத்தோ கம்மே ண ஸயம் பரிணமதி கோஹமாதீஹிம்
ஜஇ ஏஸ துஜ்ஜ ஜீவோ அப்பரிணாமீ ததா ஹோதி
தமிழில் குறட்பா:
121. கட்டில்லை யோர்திரிபு மில்லை யெனின்உயிரின்
சொத்தில்லை யோர்நிகழ்வே காண்
உரை:
உயிர் தன்னிடம் வினையைக் கட்டிக் கொள்வதில்லை : அது திரிபு உணர்வுகளில் மூழ்குதலும் இல்லை என்று கொண்டால், உயிரிடத்து நிகழ்வாக்கமே இல்லையென்று ஆகிவிடும் ( உயிர் நிகழ்வாக்கம் உடையது என்பதே உண்மை)
------------------------------
அபரிணமந்தம்ஹி ஸயம் ஜீவே கோஹாதிஏஹிம் பாவேஹிம்
ஸம்ஸாரஸ்ஸ அபாவோ பஸஜ்ஜதே ஸங்கஸமவோ வா.
122. ஆருயிர் தன்னில் திரிபுணர்வே இல்லெனின்
சேருமோ நாற்கதி மாற்று
உயிரில் திரிபுணர்வே இல்லையாயின், அவ்வுயிர் நாற்கதிப் பிறவிச் சுழற்சியில் சிக்கும் நிலையே எழாது.
------------------------------
போக்கலகம்மம் கோஹோ ஜீவம் பரிணாமஏகி கோஹத்தம்
தம் ஸயமபரிணமந்தம் கஹம் ணு பரிணாமயதி கோஹோ
123. தன்னிகழ் வாக்கம் உயிரினில் இல்லாயின்
உண்டாமோ புத்கலக் கூட்டு
புற்கலவினைக் கலப்பால் உயிர் கோபம் முதலான திரிபு உணர்வுகளை உடையதாக ஆகிவிடுகின்றது. ஆயினும் உயிரில் சுய நிகழ்வாக்கம் இல்லாது போனால், புற்கலம் உயிரை எப்படி அத்தகைய உணர்வுகளை உடையதாக்க முடியும்?
------------------------------
அஹ ஸயமப்பா பரிணமதி கோஹபாவேண ஏஸ தே புத்தி
கோஹோ பரிணாமயதே ஜீவம் கோஹத்தமிதி மிச்சா
124. தானே வினையாகும் என்றால் உயிரியல்பு
தானேது ஆங்கேபொய் நோக்கு
உயிர், தானேதான் வினையாக மாறும் என்றால், உயிரின் இயல்பே பொய்யாகி விடும்.
------------------------------
தோஹுஜுத்தோ கோஹோ மாணவஜுத்தோ ய மாணமேவாதா
மாவுவஜுத்தோ மாயா லோஹுவஜுத்தோ ஹவதி லோஹோ
125. எப்பசை யோருயிர் தான்இணை கின்றதோ
அப்பற் றுடைத்தாம் உயிர்
வெகுளியுடன் கூடிய உயிர், வெகுளியுடையது : அவ்வாறே செருக்குடன் கூடிய உயிர், செருக்குடையது : மாயம் இணைந்த உயிர், மாயமுடைத்து : கடும் பற்றுடன் இணைந்த உயிர் பற்றுடையதாகின்றது. எனவே இவ்வுணர்வுகள் உயிரில் தோன்றும் மாறுகைகள் ஆகும். உயிரின் இயல்பு அன்று.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஜம் குணதி பாவமாதா கத்தா ஸோ ஹோதி தஸ்ஸ கம்மஸ்ஸ
ணாணிஸ்ஸ ஸ ணாணமவோ அண்ணாணமவோ அணாணிஸ்ஸ
தமிழில் குறட்பா:
126. எவ்வுணர்வோ அவ்வுணர்வின் மூலம்தான் அவ்வுயிரே
எஞ்ஞான மும்தானவ் வாறு
உரை:
உயிர், எச்செயலைச் செய்கின்றதோ, அச்செயலுக்கு அதுவே கர்த்தாவாகும். எனவே நல்லறிவனுக்கு அவனுடைய அறிவே கர்த்தாவாகும். அவ்வாறே, அறியாமையில் உள்ளவனுக்கு, அவனுடைய அறிவின்மையே கர்த்தா வாகும். (அவரவர், தம்தம் அறிவுக்கும், அறிவின்மைக்கும் ஏற்ப செயல்புரிகின்றனர்)
------------------------------
அண்ணாணமஓ பாவோ அணாணிணோ குணதி தேண கம்மாணி
ணாணமவோ ணாணிஸ்ஸ து ண குணதி தம்ஹா து கம்மாணி
127. அஞ்ஞானி தன்வினையை ஈட்டுவான் ஞானியோ
எஞ்ஞான்றும் ஈட்டுதல் இல்
அறிவிலி வினைக்கட்டுக்கு ஆளாகின்றான். நல்லறிவன் வினைக்கட்டிலிருந்து விலகிவிடுகின்றான்.
------------------------------
ணாணமயா பாவாவோ ணாணமவோ சேவ ஜாயதே பாவோ
ஜம்ஹா தம்ஹா ணாணிஸ்ஸ ஸவ்வே பாவா ஹு ணாணமயா.
128. நல்லறிவன் தன்நிகழ்வே நல்லறிவுச் சார்பாகும்
நல்லறிவன் தன்னுணர்வே போல்
அறிவனுக்கு அனைத்து நிகழ்வுகளும் அறிவின் வடிவமாகவே அமைகின்றன. அந்நிகழ்வுகள் அவன் நல்லுணர்வுக் கேற்பவே அமைகின்றன.
------------------------------
அண்ணாணமயா பாவா அண்ணாணோ சேவ ஜாயதே பாவோ
ஸவ்வே தம்ஹா பாவா அண்ணாணமயா அணாணிஸ்ஸ
129. தீயறிவன் தன்நிகழ்வே தீமையின் சார்பாகும்
தீயறிவன் தீயுணர்வே போல்
அறிவில்லாதவனுக்கு அனைத்து நிகழ்வுகளும் அறியாமையின் வடிவமாகவே அமைகின்றன.
“நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்” ( குறள் - 833)
------------------------------
கணயமயா பாவாதோ ஜாயந்தே குண்டலாதவோ பாவா
அயமயயா பாவாதோ ஜஹ ஜயந்தே து கடயாதீ
130. பொன்னால் இரும்பால் பொருளாதல் போன்றேதன்
எண்ணம்போல் ஆகும் உயிர்
பொன்னால், பொன் அணிகலன்கள் அமையும் : இரும்பால், இரும்புப் பொருள்களே ஆகும். ( பொன்னால், இரும்புப் பொருள்களோ, இரும்பால் பொன் அணிகலன்களோ, ஆக முடியாது அல்லவா?) எனவே அவரவர் செயல்பாடுகளுக்கேற்ப, வினைக்கட்டோ கட்டின்மையோ அமையும்.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
அண்ணாணமயா பாவா அணாணிணோ பஹுவிஹா வி ஜாயந்தே
ணாணிஸ்ஸ து ணாணமயா ஸவ்வே பாவா தஹா ஹோந்தி
தமிழில் குறட்பா:
131. நன்மைதான் நல்லறிவால் தீமைதான் பொய்யறிவால்
உண்டாம் தெளிக உணர்ந்து
உரை:
எனவே அறிவினால் அறிவுமயமான நிகழ்வுகளும் அறிவின்மையால் அறியாமை வடிவிலான நிகழ்வுகளும் உண்டாகும் என்பது தெளிவு.
------------------------------
அண்ணாணஸ்ஸ ஸ உதவோ ஜா ஜீவாணம் அதச்ச உவலத்தி
மிச்சதஸ்ஸ து உதவோ ஜீவஸ்ஸ அஸத்தஹாணத்தம்
132. பொய்யினை நம்புதலால் பொய்க்காட்சி நல்லடக்கம்
பொய்ப்பின் விரதமின்மை யே
உயிருக்கு பொய்யானவற்றில் நம்பிக்கை ஏற்பட்டால், பொய்க்காட்சி தோன்றுகிறது. அதுபோன்றே, புலனடக்கம் இன்மையால் விரதமின்மை அமைகிறது.
------------------------------
உதவே அஸஞ்ஜமஸ்ஸ து ஜம ஜீவாணம் ஹவேயி அவிரமணம்
ஜோ து கலுஸோவஓகோ ஜீவாணம் ஸோ கஸாஉதவோ
133. பொருளல்லாப் பல்பொருள் நாடுவான் பேதை
கருமனம் தான்பசை யால்
பொய் அறிவின் காரணமாக, உயிர்கள், பொய்ப் பொருளை நுகர்கின்றன. துவர்ப்பசைகளின் காரணமாக, தீய எண்ணங்கள் தோன்றுகின்றன.
------------------------------
தம் ஜாண ஜோகஉதயம் ஜோ ஜீவாணம் து சிட்டவுச்சாஹோ
ஸோஹணமஸோஹண வா காயவ்வோ விரதிபாவோ வா
134. யோகம் மனம்மொழி யால்செயலால் அன்னியம்
ஆகின் அமையுமின்ப துன்பு
உயிர், தன்மனம், மொழி, செயல்களால் தன்னில் நிகழ்வுகளைத் தோற்றுவிக்கின்றது. அதையே யோகம் என்பர். அத்தகைய யோகம் புறச் செயல்களில் அமையும் போது, இன்பமோ துன்பமோ உண்டாகின்றது.
------------------------------
ஏதேஸு ஹேதுபூதேஸு கம்மயிவக்கணாகதம் ஜம் து
பரிணமதே அட்டவிஹம் ணாணாவரணாதிபாவேஹிம்
135. புறப்பொருள் நாட்டம் வினைத்தொகுப்பாம் அஃதே
மறைப்பு முதல்வினை எட்டு
புற நிமித்தங்களால் வினைகளின் தொகுப்பு உண்டாகின்றது. அவ்வினைத் தொகுப்பே, அறிவு மறைப்பு முதலான எட்டுவகை வினைகள் ஆகின்றன ( தொகுப்பு, வர்க்கணை எனச் சுட்டப்படும்)
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
தம் கலு ஜீவணிபத்தம் கம்மயியவக்கணாகதம் ஜபியா
தயியா து ஹோதி ஹேதூ ஜீவோ பரிணாமபாவாணம்
தமிழில் குறட்பா:
136. வினைவரவு உள்ளவரை வெவ்வினைச் சேர்க்கை
வினைவரவின் மூலம் உயிர்
உரை:
உயிரில் எதுவரை வினைகளின் வருகை உள்ளதோ, அதுவரை அவ்வுயிர் அவ்வினைகளுடன் கூடியுள்ளது. அவ்வுயிர் எய்தும் விளைவுகளுக்கு அவ்வுயிரே காரணமாகும்.
------------------------------
ஜஇ ஜீவேண ஸஹ ச்சிய போக்கலதவ்வஸ்ஸ கம்மபரிணாமோ
ஏவம் போக்கலஜீவா ஹு தோ வி கம்மத்தமாவண்ணா
137. விருப்பு வெறுப்புகள் புத்கலத்தில் இல்லை
இருப்பு உயிரில்தான் உண்டு
விருப்பு, வெறுப்பு முதலான உணர்வுகள் உயிரில் தான்
தோன்றுகின்றன. புத்கலங்களான வினைக்கு விருப்பு, வெறுப்பு ஏதும்
இல்லை.
------------------------------
ஏகஸ்ஸ து பரிணாமோ போக்கலதவ்வஸ்ஸ கம்மபாவேண
தா ஜீவபாவஹேதூஹிம் விணா கம்மஸ்ஸ பரிணாமோ
138. உயிரில் திரிபுண்டாம் இல்லை வினைக்கே
உயிரற் றதேவினை யாம்
உயிரில் தோன்றும் திரிபு உணர்வுகள், வினையில் நிகழுவதில்லை. வினை உயிரற்றது.
------------------------------
ஜீவஸ்ஸ து கம்மேண ய ஸஹ பரிணாமா து ஹோந்தி ராகாதி
ஏவம் ஜீவோ கம்மம் ச தோ வி ராகாதிமாவண்ணா.
139. புத்கலமே தான்வினை யாகுமெனி னும்வினை
சத்துயி ரின்திரிபி னால்.
புத்கலங்கள்தாம் வினைகளாக மாறுதல் அடைகின்றன என்றாலும் வினை உருவாக்கம் என்பது உயிரின் திரிபுணர்வு நிமித்தத்தால் உருவாகின்றது.
------------------------------
ஏகஸ்ய து பரிணாமோ ஜாயதி ஜீவஸ்ஸ ராகமாதீஹிம்
தா கம்மோதய ஹேதூஹிம் விணா ஜீவஸ்ஸ பரிணாமோ
140. உயிரில் வினைகலக்கும் ஆயினும் அஃதே
உயிரின் பிறிதாம் பொருள்
என்றாலும் அத்தகைய வினை உருவாக்கம் உயிரினின்று வேறுபட்டதாகும்.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஜீவே கம்மம் பத்தம் புட்டம் சேதி வவஹாரணயபணிதம்
ஸுத்தணயஸ்ஸ து ஜீவே அபத்தபுட்டம் ஹவதி கம்மம்
தமிழில் குறட்பா:
141. உயிர்வினைச் சேர்க்கை உலகியல் நோக்கே
உயிர்ஒன்றா தென்றும் வினை
உரை:
உயிரும், வினையும் ஒருங்கே இணைந்துள்ளது : இயைந்துள்ளது என்று சொல்லப்படுவது வழக்கு நய நோக்கில் தானே தவிர உண்மை அதுவல்ல : உண்மை நோக்கில் வினை உயிருடன் இரண்டற இணைவதில்லை : இயைவதுமில்லை.
------------------------------
கம்மம் பத்தமபத்தம் ஜீவே ஏவம் து ஜாண ணயபக்கம்
பக்காதிக்கந்தோ புண பண்ணதி ஜோ ஸோ ஸமயஸாரோ
142. கட்டுதலும் அல்லவும் சொல்வர் உலகியலில்
கட்டில்லை தூயவுயிர்க் கே
உயிரில் வினை கட்டியுள்ளது : கட்டவில்லை என்று கூறுவது நயக் கோட்பாட்டில்தான். உண்மையில் தூய உயிர் நயங்களுக்கு அப்பாற்பட்டதாகும்.
------------------------------
தோண்ஹ வி ணயாண பணிதம் ஜாணதி ணவரம் து ஸமயபடிபத்தோ
ண து ணயபக்கம் கிண்ஹதி கிஞ்சி வி ணயபக்கபரிஹீணோ
143. தூய உயிரறியும் உண்மை உலகியல்
ஆயினும் இல்லதே சார்பு
முழுதும் தூய நிலையில் உள்ள உயிர், உண்மை நோக்கு, உலகியல் நோக்கு ஆகிய இரண்டையும் அறியும் ( ஏன்எனில் அது முழுதுணர் ஞானம் உடையது) ஆயினும் நயச்சார்புகளுக்கு அப்பாற்பட்டதே அத்தூய உயிர்.
------------------------------
ஸம்மத்தம்ஸணணாணம் ஏஸோ லஹதி த்தி ணவரி லவதேஸம்
ஸவ்வணயபக்கரஹிதோ பணிதோ ஜோ ஸோ ஸமயஸாரோ
144. நயம்சாரா நல்லுயிரே நற்காட்சி ஞான
நயன்சேர்ந்தத் தூய்மை வடிவு
எனவே நயங்களின் சார்பு இல்லாததே தூய உயிராகும். அவ்வுயிரே நற்காட்சியும் நல்லறிவும் உடையதாகும். (தூய உயிர் என்பதே நற்காட்சியும் நல்லறிவும் இணைந்த வடிவம் ஆகும்.)
------------------------------
அதிகாரம் 3
பாவம், புண்ணியம்
கம்மமஸுஹம் குஸீலம் ஸுஹகம்மம் சாவி ஜாணஹ ஸுஸீலம்
கிஹ தம் ஹோதி ஸுஸீலம் ஜம் ஸம்ஸாரம் பவேஸேதி
145. தீவினையோ நல்வினையோ அவ்விரண்டும் நல்லதல்ல
யாவுமே நாற்கதி வித்து
தீவினை பாவமாகும். நல்வினை புண்ணியமாகும் என கூறப்படுகின்றது. உண்மையில் பிறவியைத் தரக்கூடிய வினைகள் எப்படி நல்லதாக இருக்க முடியும்? இருவினையுமே பிறவிக்கு வித்துதான்.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஸெளவண்ணியம் பி ணியலம் பந்ததி காலாயஸம் பி ஜஹ புரிஸம்
பந்ததி ஏவம் ஜீவம் ஸுஹமஸுஹம் வா கதம் கம்மம்
தமிழில் குறட்பா:
146. இரும்பென்ன பொன்னென்ன எல்லாம் விலங்கே
இருவினை யும்தான் விலங்கு
உரை:
கைவிலங்கு இரும்பால் செய்யப்பட்டதாயினும் பொன்னால் செய்யப்பட்டதாயினும், விலங்கு விலங்குதானே? அதுபோல நல்வினை, தீவினை இரண்டுமே, பிறவிச் சுழற்சியைத் தான் தரும்.
------------------------------
தம்ஹா து குஸீலேஹி ய ராகம் மா குணஹ மா வ ஸம்ஸக்கம்
ஸாஹுணோ ஹி விணாஸோ குஸீலஸம்ஸக்கராயேண
147. தூய்மைதான் வேண்டின் இருவினைப் போக்குதல்
ஆய்ந்தறிந் தார்தம் கடன்
உண்மை நோக்கில், இரண்டு வினைகளுமே உயிருக்கு நன்மை பயப்பனவல்ல. எனவே உயிர் தூய்மையாக வேண்டுமெனில், இரண்டையுமே விலக்குதல் வேண்டும்.
------------------------------
ஜஹ ணாம கோவி புரிஸோ குச்சியஸீலம் ஜணம் வியாணித்தா
வஜ்ஜேதி தேண ஸமயம் ஸம்ஸக்கம் ராககரணம் ச
148. தீயோர் தமையறிந்தே சேராது நாடாது
காயாது வாழ்தல் கடன்
தீய குணம் கொண்டோருடன் சேராது, அவர்கள் தொடர்பை நாடாது ( அவர்களிடம் வெறுப்புணர்வையும் செலுத்தாது) வாழ்தல் நன்னெறியாகும்.
------------------------------
ஏமேவ கம்மபயடீஸீலஸஹாவம் ஹி குச்சிதம் ணாதும்
வஜ்ஜந்தி பரிஹரந்தி ய தஸ்ஸம்ஸக்கம் ஸஹாவரதா
149. வெவ்வினைத் தாக்கம் இயல்பறி வான்யாரும்
அவ்வினை நீக்கல் கடன்
வினைகளின் இயல்பையும் தாக்கத்தையும் நன்கறியும் ஒருவன், அவ் வினைகளிலிருந்து விலகுதல் வேண்டும்.
------------------------------
ரத்தோ பந்ததி கம்மம் முச்சதி ஜீவோ விராகஸம்பண்ணோ
ஏஸோ ஜிணோவதேஸோ தம்ஹா கம்மேஸு மா ரஜ்ஜ
150. ஆசை வெறுப்பினால் தோன்றும் வினைவிலக்கல்
மாசகன்ற அண்ணல் நெறி
வேட்கை உடையவர், வினைகளைச் சேர்த்துக் கொள்ளுகின்றார். வேட்கை துறந்தவர், வினைக்கட்டிலிருந்து விடுபடுகின்றார், எனவே வேட்கையை விடுங்கள்! என்றார் பகவன்.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
பரமட்டோ கலு ஸமவோ ஸுத்தோ ஜோ கேவலீ முணீ ணாணீ
தம்ஹி ட்டிதா ஸஹாவே முணிணோ பாவந்தி ணிவ்வாணம்
தமிழில் குறட்பா:
151. பற்றினை விட்டொழித்தச் சாதுவர் நல்லறிவர்
வெற்றியால் எய்துவர் வீடு
உரை:
எம்முனிவர் பற்றிலிருந்து முற்றிலும் விலகியுள்ளாரோ, அழுக்குகளை மனத்தில் சேராமல் காத்துக் கொள்ளுகின்றாரோ, நல்லறிவனாக நிலைத்துள்ளாரோ, அவர் வீடுபேறு அடைகின்றார்.
------------------------------
பரமட்டம்மி து அடிதோ ஜோ குணதி தவம் வதம் ச தாரேதி
தம் ஸவ்வம் பாலதவம் பாலவதம் விந்தி ஸவ்வண்ஹூ
152. எம்முனிவர் தன்னியல்பில் இல்லையோ அம்முனிவர்
நல்லறி வில்லாச் சிசு
எவர் தன் இயல்பில் நிற்கவில்லையோ, அவர் தவம் செய்யும் நிலையில் இருந்தாலும், அறிவு முதிர்ச்சியடையாத குழந்தையைப் போன்றவரே யாவார் !
------------------------------
வதணியமாணி தரந்தா ஸீலாணி தஹா தவம் வ குவ்வந்தா
பரமட்டபாஹிரா ஜே ணிவ்வாணம் தே ண விந்தந்தி
153. நோற்பார் விரதிகள் சாதுவர் யாரேனும்
ஏற்காக்கால் மூடர் இயல்பு
நோன்பினை ஏற்பவராயினும், சில ஒழுக்கங்களை மேற்கொண்டவராயினும், துறவு ஏற்றவர்களாயினும், உயிரின் தூய இயல்பை அறியாதவரை, அத்தகையோர் அறியாமையில் இருப்பவரே ஆவர்.
------------------------------
பரமட்ட பாஹிரா ஜே தே அண்ணாணேண புண்ணமிச்சந்தி
ஸம்ஸாரகமணஹேதும் பி மோக்கஹேதும் அஜாணந்தா
154. புண்ணியம் வேண்டி வினைபுரிவர் நல்வினை
நண்ணுவர் நாடாரே வீடு
உயிரின் முழுத் தூய்மையை உணராமல், புண்ணியத்தை விரும்பி, நற்செயல்களைச் செய்பவர்கள் நல் வினைக்கட்டுக் குள்ளாவார்களே தவிர, வீடுபேற்றை எய்த முடியாது.
------------------------------
ஜீவாதீஸத்தஹணம் ஸம்மத்தம் தேஸிமதிகமோ ணாணம்
ராகாதீபரிஹரணம் சரணம் ஏஸோ து மோக்கபஹோ
155. நம்புதலாம் காட்சி அறிதலாம் ஞானமுடன்
வெம்மை உணர்வின்றேல் வீடு
உயிர் முதலான மெய்ப்பொருள்களை நம்புதலே நற்காட்சியாகும். அம்மெய்ப்பொருள்களைப் பற்றி நன்கு அறிதலே நல்லறிவாகும். விருப்பு, வெறுப்பு முதலான திரிபுணர்வுகளை நீக்குதலே நல்லொழுக்கமாகும். இம்மூன்றும் இணைந்ததே வீட்டு நெறியாகும்.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
மோத்தூண ணிச்சயட்டம் வவஹாரேண விதுஸா பவட்டந்தி
பரமட்டமஸ்ஸிதாண து ஜதீண கம்மக்கவோ ஹோதி
தமிழில் குறட்பா:
156. உண்மை உணர்வானே நல்லறிவன் பொய்வழக்கு
எண்ணான் வினைக்கட் டிலன்
உரை:
உண்மைநயம் குறிப்பிடும் கருத்தை உணர்பவனே நல்லறிவாளன் ஆவான். அவன் வழக்கு நயத்தை ஏற்பதில்லை. எனவே அத்தகைய நல்லறிவாளனுக்கு வினை கட்டு அழியும்.
------------------------------
வத்தஸ்ஸ ஸேதபாவோ ஜஹ ணாஸேதி மலமேலணாசத்தோ
மிச்சத்தமலோச்சண்ணம் தஹ ஸம்மத்தம் கு ணாதவ்வம்
157. வெண்ணிறம் மங்கும் அழுக்கினால் பொய்மையால்
தன்குணம் காட்சி கெடும்
வெண்மை நிறமுள்ள ஆடையில் அழுக்கு படிந்தால், அந்நிறம் மங்கிவிடுகிறது. அது போலவே பொய்மை என்னும் அழுக்கு உயிரில் படிந்தால், உயிர் தூய்மை கெட்டு, நற்காட்சி அழிந்துவிடுகிறது.
------------------------------
அதிகாரம் 4
வினை ஊற்று (வரவு)
வத்தஸ்ஸ ஸேதபாவோ ஜஹ ணாஸேதி மலமேலணாசத்தோ
அண்ணாணமலோச்சண்ணம் தஹ ணாணம் ஹோதி ணாதவ்வம்
158. தன்னிறம் மங்கும் அழுக்கினால் ஆடைபோல்
தன்னறிவு மங்குவான்மூ டன்
அழுக்கினால், கெடுகின்ற ஆடைபோல் அறியாமை என்னும்
அழுக்கினால், நல்லறிவு கெடுகின்றது.
------------------------------
வத்தஸ்ஸ ஸேதபாவோ ஜஹ ணாஸேதி மலமேலணாசத்தோ
அண்ணாணமலோச்சண்ணம் தஹ ஸம்மத்தம் கு ணாதவ்வம்
159. அழுக்குறும் ஆடைபோல் நாற்பசையால் மாந்தர்
ஒழுக்கமும் ஆங்கே கெடும்
அவ்விதமே துவர்ப்பசைகள் என்னும் அழுக்கு படிந்தால் நல்லொழுக்கம் கெட்டுவிடுகின்றது.
------------------------------
ஸோ ஸவ்வணாணதரிஸு கம்மரயேண ணியேணவச்சண்ணோ
ஸம்ஸாரஸமாவண்ணோ ண விஜாணதி ஸவ்வதோ ஸவ்வம்.
160. எல்லாம் அறியும் திறனுடைத்தே ஆயினும்
வல்வினை மாய்க்கும் உயிர்
உலகின் அனைத்துப் பொருள்களையும் அறியும் திறன் உடையது உயிர். ஆனால், வினை என்னும் அழுக்கு அவ்வுயிரில் கலந்து விடுவதால், பிறவியில் உழல்கின்றது. பிறவி உயிர், எல்லாப் பொருள்களையும் அறியும் திறனை இழக்கின்றது.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஸம்மத்தபடிணிபத்தம் மிச்சத்தம் ஜிணவரேஹி பரிகஹியம்
தஸ்ஸோதயேண ஜீவோ மிச்சாதிட்டி த்தி ணாதவ்வோ
தமிழில் குறட்பா:
161. காட்சி மறைப்பதே பொய்மை வினைதன்னின்
ஆட்சியென் றார்நம் இறை
உரை:
நற்காட்சியைத் தடைசெய்வது பொய்க் காட்சி என்று வினை வென்ற மேலோர் கூறியுள்ளனர். பொய்மைவினை ( காட்சி மறைப்பு வினை) உதயத்தால், உயிர், பொய்க்காட்சியுடையதாகின்றது.
------------------------------
ணாணஸ்ஸ படிணிபத்தம் அண்ணாணம் ஸிணவரேஹி பரிகஹியம்
தஸ்ஸோதயேண ஜீவோ அண்ணாணி ஹோதி ணாதவ்வோ
162. அறிவை மறைப்பதே பொய்மை வினையின்
கரமென்றார் நம்இறை வன்
நல்லறிவைத் தடை செய்வது பொய்யறிவு என்று வினை வென்றோர் கூறியுள்ளனர். பொய்யறிவு வினை ( அறிவு மறைப்பு வினை) உதயத்தால், உயிர், பொய்யறிவு உடையதாகின்றது
------------------------------
சாரித்தபடிணிபத்தம் கஸாயம் ஜிணவரேஹி பரிகஹியம்
தஸ்ஸோதயேண ஜீவோ அசரித்தோ ஹோதி ணாதவ்வோ.
163. ஒழுக்கம் இழப்பதும் பொய்மை வினையாம்
அழுக்கினால் என்றார் இறை
நல்லொழுக்கத்தைத் தடை செய்வது துவர்ப்பசைகள் என மேலோர் கூறியுள்ளனர். துவர்ப்பசை வினை ( மோகனீய வினை) உதயத்தால் உயிர், ஒழுக்கமற்றதாகின்றது. (எனவே வினை வெல்லும் மும்மணியை எய்தினால் தான் வீடு பேறு வாய்க்கும்)
------------------------------
மிச்சந்தம் அவிரமணம் கசாயஜோகா ய ஸண்ணஸண்ணா து
பஹுவிஹபேயா ஜீவே தஸ்ஸேவ அணண்ணபரிணாமா
164. பொய்மை விரதமின்மை யோகம் பசைநான்கும்
மெய்யுயிர் சேர்வினைக ளாம்
பொய்க்காட்சி, விரதமின்மை ,யோகம், துவர்ப்பசைகள் ஆகிய நான்கும் வினைக் கட்டிற்குக் காரணங்களாகின்றன.
------------------------------
ணாணாவரணாதீயஸ்ஸ தே து கம்மஸ்ஸ காரணம் ஹோந்தி
தேஸிம் பி ஹோதி ஜீவோ ய ராகதோஸாதிபாவகரோ.
165. அந்நான்குந் தான்நிமித்த காரணம் வெவ்வினைக்கே
தோன்றும் உணர்வேமூ லம்
முன்கூறிய நான்கும் வினைக் கட்டிற்கு நிமித்த காரணங்களே யாகும். மூல காரணம் ( உபாதானம்) அவ்வுயிரேயாம்.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ணத்தி து ஆஸவபந்தோ ஸம்மாதிட்டிஸ்ஸ ஆஸவணிரோஹோ
ஸந்தே புவ்வணிபத்தே ஜாணதி ஸோ தே அபந்தந்தோ
தமிழில் குறட்பா:
166. ஊற்றில்லை கட்டில்லை காட்சி உடையார்க்கே
ஊற்றில்லார் நல்லறிவ ராம்
உரை:
நற்காட்சியாளருக்கு ஊற்றும் இல்லை : கட்டும் இல்லை : செறிப்பு உண்டாகின்றது. ஏற்கனவே கட்டியிருக்கும் வினையை அவர் அறிகின்றார். எனவே அவர் புதிய வினைகளைச் சேர்த்துக் கொள்ளுவதில்லை. அவரே நல்லறிவராம்.
------------------------------
பாவோ ராகாதிஜுதோ ஜீவேண கதோ து பந்தகோ பணிதோ
ராகாதி விப்பமுக்கோ அபந்தகோ ஜாணகோ ணவரி
167. விருப்புவெறுப் பில்லார்கட் டில்லார் அவர்கள்
அறிபவர் மட்டுமே யாம்
உயிரில் தோன்றும் ஆர்வம் முதலான திரிபுணர்வுகளால் தான்
வினைக்கட்டு உண்டாகின்றது. அவ்வாறான ஆர்வம் முதலான
திரிபுணர்வுகள் இல்லாத நிலையில் கட்டு இல்லை என்பதை நல்லறிவன்
அறிவான்.
------------------------------
பக்கே பலம்ஹி படியே ஜஹ ண பலம் பஜ்ஜதே புணோ விண்டே
ஜீவஸ்ஸ கம்மபாவே படிஏ ண புணோதயமுவேதி
168. உதிர்ந்த கனிமரம் சேர்தலில்லை ஞானி
உதிர்த்த வினையுமவ் வாறு
பழங்கள் மரத்திலிருந்து கீழே விழுந்தால் மீண்டும் மரத்தில் சேர்வதில்லை. அவ்வாறே வினைக் கட்டிலிருந்து விடுபட்ட நல்லறிவனை, வினைகள் மீண்டும் சேருவதில்லை (சித்தநிலை அடைந்த உயிர், மீண்டும் பிறவியில் உழல்வதில்லை)
------------------------------
புடவீ பிண்டஸமாணா புவ்வணிபத்தா து பச்சயா தஸ்ஸ
கம்மஸரீரேண து தே பத்தா ஸவ்வே வி ணாணிஸ்ஸ
169. நல்லறிவன் அஞ்சிடான் முன்வினைக்கே தன்உடலில்
வல்வினை ஓருருண்டை மண்
ஆர்வம் முதலானவை இல்லாத நல்லறிவரிடம், முன்பு கட்டிய அனைத்து வினைகளும் மண் உருண்டை போல், கார்மண உடலில் புதைந்துகிடக்கும்.
------------------------------
சவுவிஹ அணேயபேயம் பந்தந்தே ணாணதம்ஸணகுணேஹிம்
ஸமயே ஸமயே ஜம்ஹா தேண அபந்தோ த்தி ணாணி து.
170. கணந்தோறும் வல்வினைக் கட்டுண்டாம் ஞானி
வினைக்கலப் பில்லவனே யாம்
பொய்மை, புலனடக்கமின்மை, துவர்ப்பசைகள், யோகம் (மனம், மொழி, மெய்களின் செயல்பாடுகள்) ஆகியவற்றால் ஒவ்வொறு கணமும் உயிரின் இயல்புக் குணங்களான அறிவும் காட்சியும் திரிபு நிலை அடைவதால், பலவகையான வினைக்கட்டு உண்டாகின்றது. ஆனால் நல்லறிவன் அத்தகைய வினைக்கட்டு இல்லாதவன் ஆகின்றான்.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஜம்ஹா து ஜஹண்ணாதோ ணாணகுணாதோ புணோ வி பரிணமதி
அண்ணத்தம் ணாணகுணோ தேண து ஸோ பந்தகோ பணிதோ
தமிழில் குறட்பா:
171. காட்சி அறிவு குறைந்தால் வினைக்கட்டால்
வீழ்ச்சி யுறுமே உயிர்
உரை:
நற்காட்சி, நல்லறிவு குறைந்தால் வினைக்கட்டுண்டாகின்றது.
------------------------------
தம்ஸணணாணசரித்தம் ஜம் பரிணமதே ஜஹண்ணபாவேண
ணாணி தேண து பஜ்ஜதி போக்கலகம்மேணே விவிஹேண
172. நன்ஞானம் காட்சி ஒழுக்கம் குறைந்திடின்
எந்நாளும் வெவ்வினைக் கட்டு
மேற்கூறிய இரண்டுடன் நல்லொழுக்கம் சிதைவதால் வினைக்கட்டுண்டாகின்றது.
------------------------------
ஸவ்வே புவ்வணிபத்தா து பச்சயா சந்தி ஸம்மதிட்டிஸ்ஸ
உவவோகப்பாவோகம் பந்தந்தே கம்மபாவேண
173. முன்னரே கட்டிய வினைகள் இருந்துயிரில்
இன்பதுன்பத் துய்ப்பைத் தரும்
முன்னரே உயிரில் கலந்த வினைகளால் அவ்வுயிர் இன்ப துன்பங்களை யடைகின்றது.
------------------------------
ஸந்தா து ணிருவபோஜ்ஜா பாலா இத்தீ ஜஹேவ புரிஸஸ்ஸ
பந்ததி தே உவபோஜ்ஜே தருணீ இத்தீ ஜஹ ணரஸ்ஸ
174. கட்டிய வினைகள் உரியதாம் காலங்கள்
எட்டுமுன் துய்ப்பில்வா ரா!
உயிரில் கலந்த வினைகள், உரிய காலம் வரு முன்னர் பயன் தருவதில்லை.
------------------------------
ஹோதூண ணிருவபோஜ்ஜா தஹ பந்ததி ஜஹ ஹவந்தி உவபோஜ்ஜா
ஸத்தட்டவிஹா பூதா ணாணாவரணாதிபாவேஹிம்
175. முன்வினைத் துய்க்கின்ற போதே புதுவினையும்
வந்துயிரில் சேர்தலும் உண்டு
ஓருயிர் தன் முன்வினைப்பயனை நுகரும்போதே, புதிய வினைகளும் வந்து சேருகின்றன.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஏதேண காரணேண து ஸம்மாதிட்டீ அபந்தகோ ஹோதி
ஆஸவபாவாபாவே ண பச்சயா பந்தகா பணிதா
தமிழில் குறட்பா:
176. நற்காட்சி உற்றார்க்கே ஊற்றில்லை ஓருதயம்
கட்டில்லை உண்மை உணர்
உரை:
நற்காட்சி உடையார்க்கு, வினையூற்று, வினை உதயம், வினைக்கட்டு முதலானவை இல்லை.
------------------------------
ராகோ தோஸோ மோஹோ ய ஆஸவா ணத்தி ஸம்மதிட்டிஸ்ஸ
தம்ஹா ஆஸவபாவேண விணா ஹேதூ ண பச்சயா ஹோந்தி
177. ஆர்வமோ செற்றமோ வஞ்சமோ காட்சியரைச்
சேர்வதில்லை கட்டில்லை யாங்கு
ஆர்வம், செற்றம், மயக்கம் முதலானவை நற்காட்சியர்க்கு இல்லை : எனவே புதிய வினைக்கட்டும் இல்லை.
------------------------------
ஹேதூ கதுவ்வியப்போ அட்டவியப்பஸ்ஸ காரணம் பணிதம்
தேஸிம் பி ய ராகாதீ தேஸிமபாவே ண பஜ்ஜந்தி
178. கட்டுக்காம் காரணங்கள் இன்மையால் காட்சியர்
கட்டின்றி மீள்வர் தெளிந்து
வினைக்கட்டுண்டாவதற்கான காரணங்கள் இன்மையால், நற்காட்சியாளர், கட்டிலிருந்து விலகியுள்ளார்.
------------------------------
ஜஹ புரிஸேணாஹாரோ கஹிதோ பரிணமதி ஸோ அணேயவிஹம்
மம்ஸவஸாருஹிராதீ பாவே உதரக்கி ஸஞ்ஜுத்தோ.
179. உணவுதான் உட்சென்றே மாறும் செரிப்பால்
நனிகொழுப்பு தோல்குருதி யாய்
ஒருவர் உட்கொண்ட உணவு வயிற்றில் ஜீரணம் ஆகின்றது. பின்னர் இறைச்சியாகவும், கொழுப்பாகவும், இரத்தமாகவும் பலவகை மாற்றங்களாக உடலில் நிகழ்வாக்கம் அடைகின்றது.
------------------------------
தஹ ணாணிஸ்ஸ து புவ்வம் ஜே பத்தா பச்சயா பஹுவியப்பம்
பஜ்ஜந்தே கம்மம் தே ணயபரிஹீணா து தே ஜீவா.
180. முன்சேர்த்தத் தன்வினைகள் ஊற்றாகித் தன்திரிபால்
தான்பிறழக் காரண மாம்
அதுபோன்றே, முன்பு கட்டிய புற்கல வினைகள், திரிபுணர்வை நிமித்தமாகக் கொண்டு, புதிய வினைகட்டுக்குக் காரணம் ஆகின்றன. அந்நிலையில் அவர் தூய நிலையிலிருந்து இழிந்தவர் ஆகின்றார். (ஊழ்வினை உருத்துவந்து ஊட்ட, தாழ்நிலையை அடைகின்றார்)
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
உவவோகே உவவோகே கோஹாதிஸு ணத்தி கோ வி உவவோகா
கோஹோ கோஹே கேவ ஹி உவவோகே ணத்தி கலு கோஹோ.
தமிழில் குறட்பா:
181. தூயதாய்த் தானிருப்பின் தோன்றாத் துவர்ப்பசைகள்
தூயதில்லை தோன்றின் பசை
உரை:
உயிர்தன் தூய உபயோகத்தில் உள்ளபோது சினம் முதலானவை தோன்றுவதில்லை, எனவே சினம் முதலானவை தோன்றும் போது உயிர் தன் தூய நிலையில் இல்லை.
------------------------------
அட்டவியப்பே கம்மே ணோகம்மே சாவி ணத்தி உவவோகோ
உவவோகம்ஹி ய கம்மம் ணோகம்மம் சாவி ணோ அத்தி
182. தானிருப்பின் தூயதாய் எவ்வினையும் அங்கில்லை
தானில்லை தோன்றின் வினை
உயிர் தன் தூய உபயோகத்தில் உள்ளபோது எட்டுவகையான வினைத் தொடர்பும், நோகருமத் தொடர்பும் உயிருக்கு இல்லை. எனவே வினைகளும் நோகருமமும் உதயமாகும் நிலையில், உயிர் தன் தூய நிலையில் இல்லை. ( நோகருமம் - உடல் சார்ந்த அமைப்பிற்கான வினைகள்)
------------------------------
ஏதம் து அவிவரீதம் ணாணம் ஐயியா து ஹோதி ஜீவஸ்ஸ
தபியா ண கிஞ்சி குவ்வதி பாவம் உவவோகஹுத்தப்பா
183. உண்மை யறிவே உபயோக மாயினுயிர்த்
தன்மை திரிபில்லை யாங்கு
அவ்வாறே, உயிருக்கு எப்போது உண்மையான அறிவு உண்டாகின்றதோ, அப்போது உயிர், தன் தூய நிலையில் உள்ளது. அத்தகைய உயிர் தன் இயல்புக்கு மாறான திரிபுணர்வுகளில் இருப்பதில்லை.
------------------------------
ஜஹ கணயமக்கிதவியம் பி கணயபாவம் ண தம் பரிச்சயதி
தஹ கம்மோதயதவிதோ ண ஜஹதி ணாணீ து ணாணித்தம்
184. சுட்டாலும் பொன்தன் இயல்பில் வினைவயப்
பட்டாலும் ஞானியவ் வாறு
நெருப்பினால் சுடப்பட்டாலும் தங்கம் தன் குணத்தை இழப்பது இல்லை : அதுபோலவே வினைகளால் துன்பங்கள் நேர்ந்தாலும், அறிவன் தன் தூய இயல்பை விடுவதில்லை.
“சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுத் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு” (குறள் -267)
------------------------------
ஏவம் ஜாணதி ணாணீ அண்ணாணீ முணதி ராகமேவாதம்
அண்ணாணதமோச்சண்ணோ ஆதஸஹாவம் அயாணந்தோ
185. அறியாமை மூழ்கும் உயிர்தன் இயல்பை
அறியாது வீழும் விருப்பு
அறியாமை இருளில் மூழ்கும் உயிர், தன் உண்மை இயல்பை உணராமல், ஆர்வத்தில் மூழ்கிவிடுகின்றது.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஸுத்தம் து வியாணந்தோ ஸுத்தம் சேவப்பயம் லஹதி ஜீவோ
ஜாணந்தோ து அஸுத்தம் அஸுத்தமேவப்பயம் லஹதி
தமிழில் குறட்பா:
186. தன்தூய்மை தானுணர்ந்தால் தானாகும் தூய்மையே
அன்னியம் மாசுடைத்தே யாம்
உரை:
உயிர் தான் தூய்மையானவன் என்பதை உணரும்போது தூய்மையாகின்றது. பிறபொருள் துய்ப்பில் ஆழ்ந்தால், மாசுபடுகின்றது.
------------------------------
அப்பாணமப்பணா ருத்திஊண தோபுண்ணபாசஜோகேஸு
தம்ஸணணாணம்ஹி டிதோ இச்சாவிரதோ ய அண்ணம்ஹி
187. நன்ஞானி நற்காட்சி பெற்றே பிறபொருள்
தன்மோகம் நீக்கிடு வான்
நல்லறிவன் ,தன்னுடைய நற்காட்சியின் மாண்பினால், பிற
பொருள்கள் மீதுள்ள மோகத்தை விலக்கிவிடுவான்.
------------------------------
ஜோ ஸவ்வஸங்கமுக்கோ ஜாயதி அப்பாணமப்பணோ அப்பா
ண வி கம்மம் ணோகம்மம் சேதா சிந்தேஹி ஏயத்தம்.
188. அகப்புறப் பற்றின்றி வல்வினை யின்றிச்
சுகம்துய்ப்பான் நல்லறிவ னாம்
அகப்பற்று, புறப்பற்றுகளை நீக்கி வினையின் தாக்குதலிலிருந்து விடுபட்டு உண்மைச் சுகத்தைத் துய்ப்பவனே ஞானியாவான்.
------------------------------
அப்பாணம் ஜாயந்தோ தம்ஸணணாணமவோ அணண்ணமவோ
லஹதி அசிரேண அப்பாணமேவ ஸோ கம்மபவி முக்கம்
189. தனித்தூய்மை காட்சி அறிவின் வடிவாம்
வினையின் விடுதலை யாம்
தனித் தூய்மையான உயிரே நற்காட்சி நல்லறிவின் வடிவ முடைத்தாம். அத்தகைய உயிர் வினைகளிலிருந்து விடுதலை பெற்றதாகும்.
------------------------------
தேஸிம் ஹேதூ பணிதா அஜ்ஜவஸாணாணி ஸவ்வதரிஸீஹிம்
மிச்சத்தம் அண்ணாணம் அவிரதிபாவோ ய ஜோகோ ய
190. பொய்மை விரதமின்மை யோகம் அறியாமை
உய்க்கும் வினைகளின் ஊற்று
பொய்க்காட்சி, விரதமின்மை, யோகம், அறியாமை ஆகியவை வினை ஊற்றை உண்டாக்கும் என அருகன் அருளியுள்ளார்.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஹேதுஅபாவே ணியமா ஜாயதி ணாணிஸ்ஸ ஆஸவணிரோஹோ
ஆஸவபாவேண விணா ஜாயதி கம்மஸ்ஸ வி ணிரோஹோ
தமிழில் குறட்பா:
191. காரணங்கள் இல்லாயின் ஊற்றில்லை வெவ்வினைச்
சேருதலும் இல்லை செறிப்பு
உரை:
ஊற்றுக்கான காரணங்கள் இல்லையேல் ஊற்று உண்டாவதில்லை. வினைகள் உயிரில் வந்து சேருவதில்லை.
------------------------------
கம்மஸ்ஸாபாவேண ய ணோகம்மாணம் பி ஜாயதி ணிரோஹோ
ணோகம்மணிரோஹேண ய ஸம்ஸாரணிரோஹணம் ஹோதி.
192. எண்வினைகள் இல்லாயின் ஆங்கே குறுவினை
என்றுமிலை நாற்கதியும் இல்
எட்டு வகையான வினைகள் இல்லையேல் உடல் சார்ந்த குறுவினையும் நாற்கதிச் சுழற்சியும் இல்லை.
------------------------------
அதிகாரம் 6
வினை உதிர்ப்பு
உவபோகமிந்தியேஹிம் தவ்வாணமசேதாணாணமிதராணம்
ஜம் குணதி ஸம்மதிட்டீ தம் ஸவ்வம் ணிஜ்ஜரணிமித்தம்
193. எப்பொருள் துய்ப்பினும் நற்காட்சி பெற்றோர்கள்
அப்பொருளால் ஆகும் உதிர்ப்பு
நற்காட்சியுடையோர், உயிருள்ள அல்லது உயிரற்ற
எப்பொருனை நுகர்ந்தாலும், அந்நுகர்வு வினை உதிர்ப்புக்கே காரணமாகும்.
------------------------------
தவ்வே உவபுஜ்ஜந்தே ணியமா ஜாயதி ஸுஹம் வ துக்கம் வா
தம் ஸுஹதுக்கமுதிண்ணம் வேததி அத ணிஜ்ஜரம் ஜாதி
194. துய்ப்பரே இன்பதுன் பங்கள் பிறபொருளால்(
துய்த்தபின் ஆகும் உதிர்ப்பு
நற்காட்சியுடையோர், பிறபொருள்களின் மூலம் இன்ப
துன்பங்களை நுகரும் நிலையில் வினை உதிர்ப்பு உண்டாகிறது.
------------------------------
ஜஹ விஸமுவபுஜ்ஜந்தோ வேஜ்ஜோ புரிஸோ ய மரணமுவயாதி
போக்கலகம்மஸ்ஸுதயம் தஹ புஞ்ஜதி ணேவ வஜ்ஜதே ணாணீ
195. மருத்துவரால் நஞ்சும் மருந்தாம் வினையும்
அறிவரைக் கட்டாது காண்
நல்ல மருத்துவர், நஞ்சைக் கூட மருந்தாகப் பயன்படுத்துவார். அதுபோன்றே வினைகள் நல்லறிவரை கட்டுவதில்லை.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஜஹ மஜ்ஜம் பிவமாணோ அரதீபாவேண மஜ்ஜதே ண புரிஸோ
தவ்வுவபோகே அரதோ ணாணீ வி ண பஜ்ஜதி தஹேவ
தமிழில் குறட்பா:
196. விரும்பாது கள்குடித்தார் போன்றே அறிவன்
விருப்பிலான் கட்டிலான் தான்
உரை:
விருப்பம் இல்லாமல் கள் குடிப்பவனைப் போன்றே, நல்லறிவன் புறப் பொருள்மீது விருப்பின்றி நுகர்தல் செய்கின்றான். எனவே அவனுக்கு நுகர்வில் விருப்பம் இல்லை யாதலால் வினைக்கட்டு ஏற்படுவதில்லை
------------------------------
ஸேவந்தோ வி ண ஸேவதி அஸேவமாணோ வி ஸேவகோ கோயீ
பகரணசேட்டா கஸ்ஸ வி ண ய பாயரணோ த்தி ஸோ ஹோதி
197. துய்ப்பினும் காட்சியர் துய்ப்பிலரே பொய்மையர்
துய்க்கா விடினும்துய்த் தார்
நற்காட்சியுடையோர் பற்றின்மையால் பிறபொருள்களைத் துய்த்தாலும் அவற்றில் மூழ்கி விடுதல் இல்லை : பொய்க்காட்சியர், பிறபொருள்களை நேரிடையாகத் துய்க்காத போதும் பற்றினால், துய்த்தவராகின்றார்.
------------------------------
உதயவிவாகோ விவிஹோ கம்மாணம் வண்ணிதோ ஜிணவரேஹிம்
ண து தே மஜ்ஜ ஸஹாவா ஜாணகபாவோ து அஹமேக்கோ
198. வினைஉதயம் பல்வகை யாமே அவைதாம்
தனின்வேறே என்ப தறிவு
வினைகளின் உதயத்தால் தோன்றும் திரிபுணர்வுகள் பலவாகும் என்று ஜினபகவான் அருளியுள்ளார். அத்தகைய திரிபுணர்வுகள் என்னுடையவை அல்ல : நான் தனித்த அறிவுப் பண்பு உடையவன் என்று அறிபவனே அறிவன் ஆவான்.
------------------------------
போக்கலகம்மம் ராகோ தஸ்ஸ விவாகோதவோ ஹவதி ஏஸோ
ண து ஏஸ மஜ்ஜ பாவோ ஜாணகபாவோ ஹு அஹமேக்கோ
199. விருப்புதான் புத்கலம் தன்னுடைத் தாகா
அறிதலே ஞானி கடன்
வினை உதயம் பலவகைப்படும். அத்தகைய புத்கல வினை உதயம் என் உயிரினுடையதல்ல என்றுணர்பவனே நல்லறிவன்.
------------------------------
ஏவம் ஸம்மாதிட்டீ அப்பாணம் முணதி ஜாணகஸஹாவம்
உதயம் கம்மவிவாகம் ச முயதி தச்சம் வியாணந்தோ.
200. தன்னியல்பு தானறிந்தே தன்வினை ஊற்றடைத்தல்
நன்மைசேர் நற்காட்சி யாம்.
தன் தூய இயல்பை அறிந்து, முன்வினையின் தாக்கத்தையும் அறிந்து, வினையின் வருகையைத் தடுத்தலே நற்காட்சியின் சிறப்பாகும்.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
பரமாணுமித்தயம் பி ஹு ராகாதீணம் து விஜ்ஜிதே ஜஸ்ஸ
ண வி ஸோ ஜாணதி அப்பாணயம் து ஸவ்வாகமதரோ வி
தமிழில் குறட்பா:
201. அணுவளவே பற்றிருப்பின் பன்னூல் பயின்றும்
குணமிலவே தானறியார் வீண்
உரை:
உண்மையில், ஒருவர் எல்லா மெய்நூல்களைக் கற்று தேர்ந்தவராயினும், அவரிடம் அணு அளவு திரிபுணர்வு உள்ளவரை அவரால் உயிரின் இயல்பை அறிய முடியாது.
------------------------------
அப்பாணமயாணந்தோ அணப்பயம் சாவி ஸோ அயாணந்தோ
கஹ ஹோதி ஸம்மதிட்டீ ஜீவாஜீவே அயாணந்தோ
202. தன்னுயிர் தானறியார் தான்மற் றறியார்தாம்
எங்ஙனம் காட்சியரா வர்
உயிரியல்பை அறியாதவர் எப்படி நற்காட்சியாளர் ஆக முடியும்?
------------------------------
ஆதம்ஹி தவ்வபாவே அபதே மோத்தூண கிண்ஹ தஹ ணியதம்
திரமேகமீமம் பாவம் உபலப்பந்தம் ஸஹாவேண
203. உணர்வுபொருள் என்றிரு வெவ்வினை ஓர்ந்தே
தனதியல் காண்ப தறிவு
உணர்வு வினை பொருள்வினை என இருவகையான வினைகளின் வலிமையறிந்து, தன்னுயிர்ச் சிறப்பை உணர்ந்து தேருதலே நல்லறிவாகும்.
------------------------------
ஆபிணிஸுதோஹிமணகேவலம் ச தம் ஹோதி ஏக்கமேவ பதம்
ஸோ ஏஸோ பரமட்டோ ஜம் லஹிதும் ணிவ்வுதிம் ஜாதி
204. அறிவைந்தும் பெற்றவுயிர் தன்னை அறிந்தால்
உரித்தாகும் முக்தி யுலகு
இயல்பிலேயே ஐவகையான அறிவைப் பெற்ற உயிர் தன்னை உணர்ந்தால், முக்திப் பேறு அடையலாம் ( மதி, சுருதி, அவதி, மனப்பரியய, கேவலம் எனபன ஐவகை அறிவாம்)
------------------------------
ணாணகுணேண விஹீணா ஏதம் து பதம் பஹு வி ண லஹந்தே
தம் கிண்ஹ ணியதமேதம் ஜதி இச்சஸி கம்மபரிமோக்கம்
205. எத்தனைதான் செய்தென்ன வெவ்வினை தான்விலக
உத்தம நல்லறிவே கொள்
உலகியலில் எத்தனைச் செயல்களைப் புரிந்துதான் என்ன பயன்? நல்லறிவின் துணையால் வினைகளை வென்றிட முயலுதல் வேண்டும்.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஏதம்ஹி ரதோ ணிச்சம் ஸந்துட்டோ ஹோஹி ணிச்சமேதம்ஹி
ஏதேண ஹோஹி தித்தோ ஹோஹதி துஹ உத்தமம் ஸோக்கம்
தமிழில் குறட்பா:
206. இன்பம் நிறைவார்வம் ஞானத்தில் உண்டாயின்
இன்பம்பே ரின்பமே வாழ்வு
உரை:
பவ்வியர்கள் நல்லறிவைப் பெறுவதில் ஆர்வம் கொள்ளுதல் வேண்டும் : நிறைவு அடைதல் வேண்டும் : மகிழ்வடைதல் வேண்டும் : அத்தகைய ஞான ஆர்வமே பேரின்பமாகும்.
------------------------------
கோ ணாம பணிஜ்ஜ புஹோ பரதவ்வம் மமஇமம் ஹவதி தவ்வம்
அப்பாணமப்பணோ பரிகஹம் து ணியதம் வியாணந்தோ.
207. தன்னுயிரே தன்னுடைமை என்பான் அறிவனவன்
அன்னியத்தை நாடுவனோ ஆங்கு
தன்னுடைமை என்பது தன்னுயிர் மட்டுமே என்றுணரும் நல்லறிவன், பிற பொருள் நாட்டம் கொள்ளுவதில்லை.
------------------------------
மஜ்ஜம பரிக்கஹோ ஜதி ததோ அஹமஜீவதம் து கச்சேஜ்ஜ
ணாதேவ அஹம் ஜம்ஹா தம்ஹா ண பரிக்கஹோ மஜ்ஜம்
208. அன்னியம் தன்னுடைத் தென்பான் அறிவிலியே
தன்னுடைத்து நல்லறிவே தான்
பிற பொருள்கள் என்னுடைமை என்று கருதுபவன் அறிவிலியே. நல்லறிவே தன்னுயிரின் இயல்பாகும்.
------------------------------
சிஜ்ஜது வா பிஜ்ஜது வா ணிஜ்ஜது வா அஹவ ஜாது விப்பலயம்
ஜம்ஹா தம்ஹா கச்சது தஹ வி ஹுண பரிக்கஹோ மஜ்ஜ.
209. என்னுடலும் பல்பொருளும் இன்றே அழிந்திடினும்
என்னுடைத்தே அல்ல அவை
“என்னுடைய உடலும், நான் பெற்ற பலவகைப் பொருள்களும் இன்றே அழிந்தாலும், நான் வருந்த மாட்டேன், ஏன் எனில் அவை உண்மையில் என்னுடையவையல்ல”என்பவனே நல்லறிவன்.
------------------------------
அபரிக்கஹோ அணிச்சோ பணிதோ ணாணி ய ணேச்சதே தம்மம்
அபரிக்கஹோ து தம்மஸ்ஸ ஜாணகோ தேண ஸோ ஹோதி
210. நல்லறிவன் பற்றற்றான் பார்ப்பவன் மட்டுமே
நல்வினையை நாடான் அவன்
நான் பொருட்பற்றற்றவன் : நிகழ்வுகளைப் பார்ப்பவனே தவிர, அவற்றில் அழுந்தி விடுபவன் அல்லன்; என்பவன் நல்வினையையும் நாடுவதில்லை.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
அபரிக்கஹோ அணிச்சோ பணிதோ ணாணீ ய ணேச்சதி அதம்மம்
அபரிக்கஹோ அதம்மஸ்ஸ ஜாணகோ தேண ஸோ ஹோதி
தமிழில் குறட்பா:
211. பற்றற்றான் நல்லறிவன் பார்ப்பவனே பாவத்தை
விட்டிடுவான் எந்நாளும் தான்
உரை:
பற்றில்லாதவனே நல்லறிவன் : அவன் உலகியலை அறிந்தவனே தவிர , துய்ப்பவன் அல்லன். அத்தகையோன், பாவ வினைக்கட்டைச் சேர்ப்பதில்லை.
------------------------------
அபரிக்கஹோ அணிச்சோ பணிதோ ணாணீ ய ணேச்சதி அஸணம்
அபரிக்கஹோ து அஸணஸ்ஸ ஜாணகோ தேண ஸோ ஹோதி
212. முற்றும் துறந்தார் உணவும் விரும்பாரே
பற்றிலை பார்ப்பவரே தான்
முற்றும் துறந்த துறவியர், உணவையும் விரும்புவதில்லை,. உணவை அறிபவரே தவிர, சுவைக்க ஆசைப்படுவதில்லை.
------------------------------
அபரிக்கஹோ அணிச்சோ பணிதோ ணாணீ ய ணிச்சதே ணாணம்
அபரிக்கஹோ து பாணஸ்ஸ ஜாணகோ தேண ஸோ ஹோதி
213. முற்றும் துறந்தார் குடிநீரும் வேண்டாரே
பற்றிலை பார்ப்பவரே தான்
முற்றும் துறந்த முனிவர், குடிநீரையும் வேண்டுவதில்லை. அதன் மீது பற்றுடையவர் அல்லர்.
------------------------------
ஏமாதியே து விவிஹே ஸவ்வே பாவே ய ணேச்சதே ணாணீ
ஜாணகபாவோ ணியதோ ணீராலம்போ து ஸவ்வத்த
214. முழுஞானி எப்பொருளும் எவ்வுணர்வும் வேண்டார்
பழுதிலா நல்லறிவ ராம் !
முழுஞானி என்பார் எப்பொருளையும் விரும்பாதவர் : விருப்பு வெறுப்பென்னும் எவ்வுணர்வும் இல்லாதவர் : குற்றமற்ற நல்லறிவே அவருடைய வடிவம் :
------------------------------
உப்பண்ணோதயபோகோ வியோகபுத்தீயே தஸ்ஸ ஸோ ணிச்சம்
கங்காமணாகதஸ்ஸ ய உதயஸ்ஸ ண குவ்வதே ணாணீ
215. முழுஞானி இக்காலம் மற்றெதிர் காலம்
விழையாது தான்விலகு வார்
நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய பாகுபாடுகள் முழுஞானிக்கு இருப்பதில்லை. எப்பொழுதும் வினை உதயத்திலிருந்து விலகியே இருப்பார்
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஜோ வேததி வேதிஜ்ஜதி ஸமயே ஸமய விணஸ்ஸதே உபயம்
தம் ஜாணகோ து ணாணீ உபயம் பி ண கங்கதி கயாவி.
தமிழில் குறட்பா:
216. துய்த்தலும் துய்க்கப் படுதலும் தானழியும்
துய்த்தல் இலான்அறி வன்
உரை:
தன் துய்ப்பு நிலையும், தான் துய்க்கும் பொருள்களும் ஒவ்வொரு கணமும் அழியக் கூடியவை என்றறிபவனே நல்லறிவன், எனவே அவன் பற்றிலன் ஆகின்றான்.
------------------------------
பந்துவபோகணிமித்தே அஜ்ஜவஸாணோதஏஸு ணாணிஸ்ஸ
ஸம்ஸாரதேஹவிஸயேஸு ணேவ உப்பஜ்ஜதே ராகோ
217. கட்டும் பொருளாசை யும்பிறவிக் காரணங்கள்
விட்டு விலகல் அறிவு
வினைக்கட்டும், பொருளாசையுமே பிறவிச் சுழற்ச்சிக்கான காரணங்கள் என்றுணர்ந்து விலகுதலே நல்லறிவாகும்.
------------------------------
ணாணீ ராகப்பஜேஹோ ஸவ்வதவ்வேஸு கம்மஜ்ஜகதோ
ணோ லிப்பதி ரஜஏண து கத்தமமஜ்ஜ ஜஹா கணயம்
218. சேற்றிலும் பொன்குணம் போவதில்லை பற்றிலான்
மாட்டும் வினைசேர்வ தில்
சேற்றில் கிடந்தாலும் பொன், தன்குணத்தை இழப்பது இல்லை. அதுபோலவே உலகில் பலவாறான நிகழ்வுகளின் மத்தியில் அறிவன் வாழ்ந்தாலும் அவனிடத்து ஆர்வம், மயக்கு, கோபம், செருக்கு முதலான திரிபுணர்வுகள் தோன்றுவது இல்லை. அதனால் அவனுக்கு வினைக்கட்டும் இல்லை.
------------------------------
அண்ணாணீ புண ரத்தோ ஸவ்வதவ்வேஸு கம்மஜ்ஜகதோ
லிப்பதி கம்மரஏண து கத்தமமஜ்ஜே ஜஹா லோஹம்
219. சேற்றில் இரும்பு துருப்பிடிக்கும் பற்றுடையான்
மாட்டு வினைக்கட் டுறும்
சேற்றில் விழுந்த இரும்பு துருப்பிடிக்கும். அதுபோல் பற்று கொண்டவனை வினைக்கட்டும்.
------------------------------
புஜ்ஜந்தஸ்ஸ வி விவிஹே ஸச்சித்தாசித்தமிஸ்ஸியே தவ்வே
ஸங்கஸ்ஸ ஸேதபாவோ ண வி ஸக்கதி கிண்ஹகோ காதும்
220. வெண்சங்கு தன்நிறம் மாறுமோ தண்ணீரில்
உண்டாலும் எண்ணில் பொருள்.
தண்ணீரில் வெண்சங்கு பலபொருள்களை உட்கொண்டாலும், வெண்மை நிறத்தில் மாறுவதில்லை.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
தஹ ணாணிஸ்ஸ வி விவிஹே ஸச்சித்தாசித்தமிஸ்ஸியே தவ்வே
புஞ்ஜந்தஸ்ஸ வி ணாணம் ண ஸக்கமண்ணாணதம் ணேதும்
தமிழில் குறட்பா:
221. நல்லறிவன் எப்பொருள் துய்ப்பினும் எஞ்ஞான்றும்
நல்லறிவைத் தானிழத்தல் இல்
உரை:
அதுபோன்றே, நல்லறிவன் எப்பொருளை நுகர்ந்தாலும், தன் நல்லறிவை இழத்தலில்லை.
------------------------------
ஜயியா ஸ ஏவ ஸங்கோ ஸேதஸஹாவம் தயம் பஜஹிதாண
கச்சேச்ச கிண்ஹபாவம் தயியா ஸுக்கத்தணம் பஜஹே
222. வெண்சங்கும் ஏதோ ஒருநிலையில் தன்நிறம்
மங்கிக் கருமையா கும்
சில சூழ்நிலைகளில், வெண்சங்கு, தன்நிறம் மங்கிக் கருமையாகக் கூடும்.
------------------------------
தஹ ணாணீ வி ஹு ஜயியா ணாணஸஹாவம் தயம் பஜஹிதூண
அண்ணாணேண பரிணதோ தயியா அண்ணாணதம் கச்சே
223. நல்லறிவன் தானும் புறப்பொருளால் தன்குணம்
நில்லாது பேதையா வான்
அதுபோன்றே, சில சூழ்நிலைகளில், அறிவாளியும், புறப்பொருள் மோகத்தால் பேதையாகின்றான்.
------------------------------
புரிஸோ ஜஹ கோ வி இஹம் வித்திணிமித்தம் து ஸேவதே ராயம்
தோ ஸோ வி தேதி ராயா விவிஹே போகே ஸுஹுப்பாயே
224. வேந்தன் அவையில் பணிபுரிந்தால் வேந்தனும்
வேண்டும் பொருள்தரு வான்
அரசனுடைய அவையில் பணிபுரிந்தால், அரசனும் ஊதியம் தருவான்.
------------------------------
ஏமேவ ஜீவபுரிஸோ கம்மரயம் ஸேவதே ஸுஹநிமித்தம்
தோ ஸோ வி தேதி கம்மோ விவிஹே போகே ஸுஹுப்பாயே
225. புறச்சுகம் வேண்டி உழைத்தால் வினைகள்
தரும்சுகம் பற்பல வாம்
அதுபோன்றே, உலகியல் சுகம் வேண்டி உழைக்கும் போது, நல்வினைகளால் பல (தற்காலிக) உலகியல் சுகங்களைப் பெறலாம்.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஜஹ புண ஸோ ச்சிய புரிஸோ வித்திணிமித்தம் ண ஸேவதே ராயம்
தோ ஸோ ண தேதி ராயா விவிஹே போகே ஸுஹுப்பாயே
தமிழில் குறட்பா:
226. வேந்தனிடம் வேலைதான் இல்லாயின் வேந்தனும்
வேண்டும் பொருள்தாரா னே
உரை:
அரசவையில் பணிபுரியாத போது அரசன் ஊதியம் தருவதில்லை.
------------------------------
ஏமேவ ஸம்மதிட்டீ விஸயத்தம் ஸேவதே ண கம்மரயம்
தோ ஸோ ண தேதி கம்மோ விவிஹே போகே ஸுஹுப்பாயே
227. பொருட்சுகம் வேண்ழ்ற் காட்சியர் யாரும்
வெறுவினை யைச்சேரா ரே!
அதுபோன்றே, நற்காட்சியர் உலகியல் சுகம் வேண்டி உழைத்து பாவ வினைகளைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்.
------------------------------
ஸம்மாதிட்டீ ஜீவா ணிஸ்ஸங்கா ஹோந்தி ணிப்பயா தேண
ஸத்தபயவிப்பமுக்கா ஜம்ஹா தம்ஹா து ணிஸ்ஸங்கா.
228. காட்சி உடைத்தாம் உயிர்ஐயம் தானிலது
வாட்டும்ஏழ் அச்சம் இலது
நற்காட்சி உடைய உயிர், மெய்ப்பொருள்களில் ஐயம் இல்லாதது : எனவே அது ஏழு வகையான அச்சங்களும் இல்லாதது.
------------------------------
ஜோ சத்தாரி வி பாஏ சிந்ததி தே கம்மபந்தமோஹகரே
ஸோ ணிஸ்ஸங்கோ சேதா ஸம்மாதிட்டீ முணேதவ்வோ
229. பொய்மை விரதமின்மை யோகமூடம் நான்கில்லார்
ஐயமிலா நற்காட்சி யர்
யார் ஒருவர், வினைக்கட்டு, மயக்கம், தடை செய்தல் ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் துவர்ப்பசைகள், பொய்மை, புலனடக்கமின்மை, யோகம் ஆகிய நான்கையும் நீக்குகின்றாரோ, அவரே ஐயம் அற்ற நற்காட்சியாளர் ஆவார்.
------------------------------
ஜோ து ண கரேதி கங்கம் கம்மபலேஸு தஹ ஸவ்வதம்மேஸு
ஸோ ணிக்கங்கோ சேதா ஸம்மாதிட்டீ முணேதவ்வோ
230. மாசுடைப் பல்பொருள் துய்ப்பில் விருப்பில்லார்
ஆசையில் நற்காட்சி யர்
நிலையற்ற பிறபொருள்களைத் துய்ப்பதில் தீவிர விருப்பம் இல்லாதவர்களே ஆசையை வென்ற நற்காட்சியர் ஆவர்.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஜோ ண கரேதி துகுஞ்சம் சேதா ஸவ்வேஸிமேவ தம்மாணம்
ஸோ கலு ணிவ்விதிகிச்சோ ஸம்மாதிட்டீ முணேதவ்வோ
தமிழில் குறட்பா:
231. வெறுப்பே எதன்மீதும் தோன்றா நிலையே
அருவருப்பில் நற்காட்சி யாம்
உரை:
எதன்மீதும் வெறுப்படையாதவர்களே அருவருப்பில்லா நற்காட்சியர் ஆவர்.
------------------------------
ஜோ ஹவதி அஸம்மூடோ சேதா ஸத்திட்டி ஸவ்வபாவேஸு
ஸோ கலு அமூடதிட்டீ ஸம்மாதிட்டீ முணேதவ்வோ
232. மயங்கிடான் தன்வினையால் தன்இயல்பில் நிற்பான்
மயக்கிலா நற்காட்சி யன்
வினை உதயத்திற்கு வரும் போது தன் இயல்பில் குன்றாமல் நிற்பவரே மயக்கிலா நற்காட்சியர் ஆவர்.
------------------------------
ஜோ ஸித்தபத்திஜுத்தோ உவகூஹணகோ து ஸவ்வதம்மாணம்
ஸோ உவகூஹணகாரி ஸம்மாதிட்டீ முணேதவ்வோ
233. சித்தரைப் போற்றித் திருவறம் தூற்றிடாப்
பக்தரே நற்காட்சி யர்
முழுத்தூய்மை பெற்ற சித்த பகவானைப் போற்றி, நல்லறத்தைப் பழிக்காத பான்மையாளரே உத்தம நற்காட்சியர் ஆவர்.
------------------------------
உம்மக்கம் கச்சதம் ஸகம் பி மக்கே டவேதி ஜோ கேதா
ஸோ டிதிகரணாஜுத்தோ ஸமமாதிட்டீ முணேதவ்வோ
234. தளர்ந்தாரை நல்லறம் தன்னில் நிறுத்தல்
வலுவான காட்சியர் மாண்பு
நிலை தளர்ந்தாரை நல்லறப்பாதையில் நிலை நிறுத்துவோரே
நற்காட்சியர் ஆவர்,
------------------------------
ஜோ குணதி வச்சலத்தம் திண்ஹம் ஸாதூண மோக்கமக்கம்ஹி
ஸோ வச்சலபாவாஜுதோ ஸம்மாதிட்டீ முணேதவ்வோ
235. அறவோ ரிடம்அன்பு மும்மணி ஏற்றல்
சிறப்பான காட்சியர் மாண்பு
அறவோர்களிடம் அன்புசெலுத்தி, மும்மணியை ஏற்றவர்களே நற்காட்சியர் ஆவர்.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
விஜ்ஜாரஹமாரூடோ மணோரஹபஹேஸு பமயி ஜோ சேதா
ஸோ ஜிணணாணபஹாவீ ஸம்மாதிட்டீ முணேதவ்வோ.
தமிழில் குறட்பா:
236. அறிவென்னும் தேரேறி வெவ்வினை போக்கும்
அறமுரைப்பார் நற்காட்சி யர்!
உரை:
அறிவு என்னும் தேரில் ஏறி, வினைகளை வெல்லும் நல்லறத்தைப் பரப்புவோர் நற்காட்சியாளர் ஆவர்,
(பாடல் 229 முதல் 236 வரை நற்காட்சியின் எட்டு அங்கங்களான ஐயமின்மை, ஆசையின்மை, அருவருப்பின்மை, மயக்கமின்மை, அறப்பழி நீக்கல், அழிந்தாரைத் தாங்கல், அறவோரைப் போற்றுதல், அறம் பரப்புதல் ஆகியவை விளக்கம் பெற்றுள்ளன)
------------------------------
அதிகாரம் 7
வினைக்கட்டு
ஜஹ ணாம கோ வி புரிஸோ ணேஹப்பத்தோ து ரேணுபஹுலம்மி
டாணம்மி டாயிண ய கரே யிஸத்தேஹிம் வாயாதூம்
237. தூசுடை ஓரிடம் எண்ணெய் உடலெங்கும்
பூசியாடின் தூசாகும் மெய்
தூசு படியும் ஓரிடத்தில் ஒருவன் தன் உடலெங்கும் எண்ணெய்
பூசி விளையாடினால் அவன் உடலெங்கும் தூசு படிந்திருக்கும்.
------------------------------
சிந்ததி பிந்ததி ய தஹா தாளீதளகயிலிவம்ஸபிண்டீவோ
ஸச்சித்தாசித்தாணம் கரேதி தவ்வாணமுவகாதம்
238. கத்தியால் தாவரங்கள் வெட்டின் பசையுடல்
சுத்தமின்றி மாசுறுமன் றோ?
பசுமையான அல்லது உலர்ந்த தாவரங்களை எண்ணெய் பூசிய உடலோடு ஒருவன் வெட்டும் போது அவன் உடல் அழுக்காகுமன்றோ?
------------------------------
உவகாதம் குவ்வந்தஸ்ஸ தஸ்ஸ ணாணாவிஹேஹிம் கரணேஹிம்
ணிச்சயதோ சிந்திஜ்ஜ ஹு கிம்பச்சயகோ து ரயபந்தோ.
239. உடலெங்கும் தூசுதான் ஒன்றுபல வாகிப்
படிந்திடும் காரணம் யாது?
அவ்விதம், உடலெங்கும் தூசு படிந்திருக்கும் காரணம் தான்
யாது?
------------------------------
ஜோ ஸோ து ணேஹபாவோ தம்ஹி ணரே தேண தஸ்ஸ ரயபந்தோ
ணிச்சயதோ விண்ணேயம் ண காயசேட்டாஹிம் ஸேஸாஹிம்.
240. உடலின் பசையால் அழுக்கு படியும்
உடலின் செயல்களால் அன்று
உடலிலுள்ள எண்ணெய்ப் பசையால் தான், அழுக்கு
ஒட்டுகின்றதே ஒழிய, செய்யும் செயல்களால் அன்று.
------------------------------
பாகத மொழி தமிழ் வடிவம்:
ஏவம் மிச்சாதிட்டீ வட்டந்தோ பஹுவிஹாஸு சிட்டாஸு
ராகாதீ உவவோகே குவ்வந்தோ லிப்பதி ரயேண
தமிழில் குறட்பா:
241. விருப்புவெறுப் பாம்பசை யால்பல் வினைகள்
இறுகும்பொய்க் காட்சியி னால்
உரை:
அவ்வாறே, விருப்பு வெறுப்பாகிய பசைகளால், பொய்க்காட்சியின் காரணமாக வினை மாசு வந்தடைகின்றது.
------------------------------
ஜஹ புண ஸோ சேவ ணரோ ணேஹே ஸவ்வம்ஹி அவணிதே ஸந்தே
ரேணுபஹுலம்மி டாணோ கரேதி ஸத்தேஹிம் வாயாமம்
242. எண்ணெய்ப் பசையிலா மேனி அழுக்கினைத்
தன்னில் இணைப்ப தரிது
எண்ணெய்ப் பசையில்லாத உடலில் அழுக்கு வந்து ஒட்டுதல் அரிது.
------------------------------
சிந்ததி பிந்ததி ய தஹா தாளீதளகயலிவம்ஸ பிண்டீவோ
ஸச்சிந்தாசித்தாணம் கரேதி தவ்வாணமுவகாதம்
243. தாவரங்கள் வெட்டுதல் செய்தும் பசையின்றேல்
ஆவதில்லை மேனி அழுக்கு
தாவரங்களை வெட்டுதல் செய்த போதும், பசையில்லா
உடலில் தூசு படிவதில்லை.
------------------------------
உவகாதம் குவ்வந்தஸ்ஸ தஸ்ஸ ணாணாவிஹேஹிம் கரணேஹிம்
ணிச்சயதோ சிந்திஜ்ஜ ஹு கிம்பச்சயகோ ண ரயபந்தோ.
244. பலவாம் செயலாற் றினும்பசை யின்றேல்
இலதாம் அழுக்காய் உடல்
எத்தனை விதமான செயல்களில் ஈடுபட்டாலும் உடலில் பசையில்லாவிடில் அழுக்கு படிவதில்லை.
------------------------------
ஜோ ஸோ அ ணேஹபாவோ தம்ஹி ணரே தேணா தஸ்ஸ ரயபந்தோ
ணிச்சயதோ விண்ணேயம் ண காயசேட்டாஹிம் ஸேஸாஹிம்
245. எண்ணெய்ப் பசைதான் உடலில் இலதென்றால்
ஒண்டுமோர் தூசும் இலை
எண்ணெய்ப் பசை உடலில் இல்லையேல் தூசு ஒட்டுதல் இல்லை.

ஏவம் ஸமமாதிட்டீ
வட்டந்தோ பஹுவிஹேஸு ஜோகேஸு
அகரந்தோ உவவோகே
ராகாதி ண லிப்பதி ரயேண
தமிழில் குறட்பா:
246. பசையிலாக்
காட்சியர் பல்தொழில் செய்தும்
நசிவினைக்
கட்டுதல் இல்
உரை:
அதுபோலவே, துவர்ப்பசைகள் (கஷாயங்கள்) இல்லாத நற்காட்சியர்
பல செயல்களைச் செய்கின்ற நிலையிலும், வினைக் கட்டுக்கு ஆளாவதில்லை.
------------------------------
ஜோ மண்ணதி
ஹிம்ஸாமி ய ஹிம்ஸிஜ்ஜாமி ய பரேஹிம் ஸத்தேஹிம்
ஸோ மூடோ அண்ணாணீ
ணாணீ ஏத்தோ து விவரீதோ
247. துன்புதரு
வன்நான் பிறரால் பெறுவனெனல்
அஞ்ஞானி
யின்பொய் மயக்கு
247. பிறரால்
தனக்குத் துன்பம் உண்டாகின்றது என்று யார் கருதுகின்றாரோ, அவர்
மயக்கம் உடையவர்: அறியாமை உடையவர். அறிவன் அவ்வாறு கருதமாட்டான்.
(தீதும்
நன்றும் பிறர்தர வாரா - புறநானூறு)
------------------------------
ஆவுக்கயேண மரணம்
ஜீவாணம் ஜிணவரேஹிம் பண்ணத்தம்
ஆவும் ண ஹரேஸி
துஹம் கஹ தே மரணம் கதம் தேஹிம்
248. ஆயுள்
வினைமுடிவே சாவென்றார் ஆகாதே
சாவுதான்
உன்னால் பிறர்க்கு
ஆயுள்வினைக்கேற்பவே
மரணம் நிகழும் என்றார் பகவன்: எனவே உன்னால் பிறருக்கு மரணம் ஏற்படாது.
------------------------------
ஆவுக்கயேண மரணம்
ஜீவாணம் ஜிணவரேஹிம் பண்ணத்தம்
ஆவும் ண ஹரந்தி
துஹம் கஹ தே மரணம் கதம் தேஹிம்
249. ஆயுள்
வினைமுடிவே சாவென்றார் ஆகாதே
சாவு
பிறரால் உனக்கு
உயிர்களுக்கு
மரணம் ஆயுள் முடிவதால் ( ஆயுள் வினைக்கேற்ப) உண்டாகும் என்று ஜினபகவான்
கூறியுள்ளார். அப்படியிருக்க உன்னைப் பிறரால் எப்படிச் சாகடிக்க முடியும்?
------------------------------
ஜோ மண்ணதி ஜீவேமி
ய ஜீவிஜ்ஜாமி ய பரேஹிம் ஸத்தேஹிம்
ஸோ மூடோ அண்ணாணீ
ணாணீ ஏத்தோ து விவரீதோ
250. என்னால்
பிறரும் பிறரால்தான் யானுமென்ப
அஞ்ஞானி
யின்பொய் மயக்கு
என்னால் தான், பிறர் இன்ப துன்பங்களை அடைகின்றனர் என்று
கருதுவதும், பிறரால் நான் இன்ப துன்பங்களை அடைந்தேன் என்று கருதுவதும்
அறிவிலியிடம் தோன்றும் பொய் மயக்காகும்.
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
ஆவூதயேண ஜீவதி
ஜீவோ ஏவம் பணந்தி ஸவ்வண்ஹு
ஆவும் ச ண தேஸி
துமம் கஹம் தயே ஜீவிதம் கதம் தேஸிம்
தமிழில் குறட்பா:
251. அவராயுள்
அவ்வவரால் என்றார் பகவன்
தவறாகும்
தந்தேன் எனல்
உரை:
ஒவ்வொருவரின்
ஆயுளும் அவரவர் ஆயுள் வினைக்கேற்பவே அமையும் என்றருளினார் அருகதேவன். எனவே நான்
அவனை வாழவைத்தேன் என்பது தவறாகும்.
------------------------------
ஆவூதயேண ஜீவதி
ஜீவோ ஏவம் பணந்தி ஸவ்வண்ஹு
ஆவும் ச ண திந்தி
துஹம் கஹம் னு தே ஜீவிதம் கதம் தேஹிம்
252. அவராயுள்
அவ்வவரால் என்றார் பகவன்
தவறாகும்
தந்தார் எனல்
அதுபோலவே பிறர்
தனக்கு வாழ்வளித்தார் என்பதும் தவறேயாகும்.
------------------------------
ஜோ அப்பணா து
மண்ணதி துக்கிதஸுஹிதே கரேமி ஸத்தே த்தி
ஸோ மூடோ அண்ணாணீ
ணாணீ ஏத்தோ து விவரீதோ
253. தன்னால்
பிறர்க்கே சுகதுக்கம் என்பானோர்
மூடனே
ஞானியல் லன்
என்னால் தான்
மற்றவர்கள் இன்ப துன்பங்களை அடைந்தனர் என்று கூறுபவன் அறிவில்லா மூடனே யாவான்.
------------------------------
கம்மோதஏண ஜீவா
துக்கிதஸுஹிதா ஹவந்தி ஜதி ஸவ்வே
கம்மம் ச ண தேஸி
துமம் துக்கிதஸுஹிதா கஹ கயா தே
254. துக்கம்
வினைஉதயம் தன்னால் பிறர்க்குநீ
துக்கம்
தரலாகா தே !
சுகதுக்கங்கள்
அவரவர் வினைகளுக்கு ஏற்பவே உண்டாகின்றன. எனவே உன்னால் பிறர்க்கு அவற்றைத்
தரலாகாது.
------------------------------
கம்மோதஏண ஜீவா
துக்கிதஸுஹிதா ஹவந்தி ஜதி ஸவ்வே
கம்மம் ச ண திந்தி
துஹம் கஹ தம் ஸுஹிதோ கதோ தேஹிம்
255. துக்கம்
வினைஉதயம் தன்னால் பிறருனக்கே
துக்கம்
தரலாகா தே!
அதுபோலவே பிறரால்
உனக்குச் சுகதுக்கங்களைத் தரவியலாது.
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
கம்மோதஏண ஜீவா
துக்கிதஸுஹிதா ஹவந்தி ஜதி ஸவ்வே
கம்மம் ச ண திந்தி
துஹம் கஹ தம் ஸுஹிதோ கதோ தேஹிம்
தமிழில் குறட்பா:
256. அனைத்துயிர்
இன்பம் அவற்றின் வினையால்
உனக்கின்பம்
யார்கொடுப் பார்?
உரை:
ஒவ்வொரு உயிரின்
இன்பமும் அதனதன் வினையால் அமையுமெனில், உனக்கு யாரால் இன்பம் கொடுக்க முடியும்.
------------------------------
ஜோ மரதி ஜோ ய
துஹிதோ ஜாயதி கம்மோதயேண ஸோ ஸவ்வோ
தம்ஹா து மாரிதோ
தே துஹாவிதோ சேதி ண ஹு மிச்சா
257. துன்பம்
மரணம் வினைஉதயம் நானேதான்
தந்தேன் எனின்த
வறு
துன்பமும் மரணமும்
உயிர்களின் வினை உதயத்தால் நிகழ்வனவாகும். நானே அவற்றைத் தந்தேன் எனல் தவறு.
------------------------------
ஜோ ண மரதி ண ய
துஹிதோ ஸோ வி வ கம்மோதயேண சேவ கலு
தம்ஹா ண மாரிதோ ணோ
துஹாவிதோ சேதி ண ஹு மிச்சா
258. துன்புறாமை
இன்புறாமை அவ்வுயிர் தன்வினையால்
எங்ஙனம்
நீதான் பொறுப்பு
துன்பமடையாமை
அல்லது இன்பமடையாமை அவ்வுயிரின் வினைக்கேற்பவே நிகழும். அதற்கு நீ எப்படி
பொறுப்பாக முடியும்?
------------------------------
ஏஸா து ஜா மதீ தே
துக்கிஸுஹிதே கரேமி ஸத்தே த்தி
ஏஸா தே மூடமதீ
ஸுஹாஸுஹம் பந்ததே கம்மம்
259. ஆக்குவேன்
இன்பதுன்பம் என்ப அறியாமை
ஆக்கு
மதுவே வினை
நானே பிறர்க்கு
இன்ப துன்பங்களைக் கொடுப்பேன் என்று கூறுவது அறியாமை. அத்தகைய எண்ணமும் கூற்றும்
வினை ஊற்றுக்கே காரணமாகும்.
------------------------------
துக்கிதஸுஹிதே
ஸத்தே கரேமி ஜம் ஏவமஜ்ஜவஸிதம் தே
தம் பாவபந்தகம் வா
புண்ணஸ்ஸ வ பந்தகம் ஹோதி
260. ஆக்குவேன்
இன்பதுன்பம் என்ப மயக்கமே
ஆக்கு
மதுவே வினை
நானே பிறர்க்கு
இன்ப துனபங்களைக் கொடுத்தேன் என்பது மயக்கமாகும். அம் மயக்கம் வினை ஊற்றுக்குக்
காரணமாகும்.
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
மாரிமி ஜீவாவேமி ய
ஸத்தே ஜம் ஏவமஜ்ஜவஸிதம் தே
தம் பாவபந்தகம் வா
புண்ணஸ்ஸ வ பந்தகம் ஹோதி
தமிழில் குறட்பா:
261. மயக்கமே வாழ்வுசாவு
என்னால்தான் என்ப
மயக்கமே
ஆக்கும் வினை
உரை:
வாழ்வும் மரணமும்
என்னால் தான் என்று கூறுவது மயக்கமே. அத்தகைய மயக்கம் வினை ஊற்றுக்குக்
காரணமாகும்.
------------------------------
அஜ்ஜவஸிதேண பந்தோ
ஸத்தே மாரேஉ மா வ மாரேஉ
ஏஸோ பத்ஸமாஸோ
ஜீவாணம் ணிச்சயணயஸ்ஸ
262. கொலைநீ
புரியினும் இல்லெனினும் தோன்றும்
கொலையுணர்வால்
கட்டும் வினை
கொலையை நீ
செய்தாலும், செய்யாத போதும்,
கொலை, செய்யவேண்டும் என்ற எண்ணமே வினைக் கட்டிற்குக்
காரணமாகும்.
------------------------------
ஏவமலியே அதத்தே
அபம்பசேரே பரிக்கஹே சேவ
கீரதி அஜ்ஜவஸாணம்
ஜம் தேண து பஜ்ஜதே பாவம்.
263. பொய்களவு
காம மயக்குதான் பாவவினை
உய்க்கும்
உயிரில் இணைந்து
பொய், திருட்டு, காமம், வஞ்சனை முதலானவற்றால் பாவ வினைக் கட்டுண்டாகும்.
------------------------------
தஹ விய ஸச்சே
தத்தே பம்பே அபரிக்கஹத்தணே சேவ
கீரதி அஜ்ஜவஸாணம்
ஜம் தேண து பஜ்ஜதே புண்ணம்.
264. உண்மை
மிகுபொருள் நண்ணாமை வாய்மைதான்
புண்ணியம்
சேர்க்கும் மயக்கு
உண்மை, மிகுபொருள் விரும்பாமை மயக்கமின்மை முதலானவற்றால்
புண்ணியவினை உண்டாகும்.
------------------------------
வத்தும் படுச்ச ஜம்
புண அஜ்ஜவஸாணம் து ஹோதி ஜீவாணம்
ண ய வத்துதோ து
பந்தோ அஜ்ஜவஸாணேண பந்தோத்தி
265. பொருள்களால்
உண்மையில் கட்டில்லை தோன்றும்
விருப்பத்தால்
ஆவதே கட்டு
வினைக்கட்டுக்கு
உயிரின் திரிபுணர்வுகள் தான் காரணமே தவிர, பிறபொருள்கள் அல்ல.
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
துக்கிதஸுஹிதே
ஜீவே கரேமி பந்தேமி தஹ விமோசேமி
ஜா ஏஸா மூடமதீ
ணிரத்தயா ஸா ஹு தே மிச்சா
தமிழில் குறட்பா:
266. நானே
கொடுப்பவன் நானே தடுப்பவன்
வீணேயவ்
வெண்ணம் தவறு
உரை:
நானே
சுகதுக்கங்களைக் கொடுக்கும் வல்லமையும், தடுக்கும் வல்லமையும் உடையவன் என்ற எண்ணம் தவறானது. வீணானது.
------------------------------
அஜ்ஜவஸாhணணிமித்தம் ஜீவா பஜ்ஜந்தி கம்மணா ஜதீ
ஹி
முச்சந்தி
மோக்கமக்கே மிதா ய தா கிம் கரேஸி துமம்.
267. உன்னால்
அவற்றின் வினையென்றால் முக்தியில்
உன்செயல்
தானுண்டோ சொல்
பவ்வியனே !
உன்னால் பிறவற்றின் வினைகளை ஆக்க முடியுமென்றால், அவ்வுயிர்கள் முக்தி யடையும்போது உன் செயல் தான் ஒன்றுண்டோ?
எண்ணிப்பார்!
------------------------------
ஸவ்வே கரேதி ஜீவோ
அஜ்ஜவஸாணேண திரியணேரயியே
தேவமணுயே ய ஸவ்வே
புண்ணம் பாவம் ச ணேயவிஹம்
268. மயக்க
உணர்வினால் நாற்கதித் துன்பம்
பயக்கும்
இருவினைகள் தாம்
ஓருயிர் தன்னிடம்
தோன்றும் மயக்க உணர்வுகளால் தான் நாற்கதிகளில் சுழலுவதற்குக் காரணமான
இருவினைகளையும் ஈட்டுகின்றது.
------------------------------
தம்மாதம்மம் ச தஹா
ஜீவாஜீவே அலோகலோகம் ச
ஸவ்வே கரேதி ஜீவோ
அஜ்ஜவஸாணேண அப்பாணம்
269. உயிரில்
பொருளையும் ஓருயிர் தானாய்
மயக்க உணர்வால்எண்
ணும்
மயக்க உணர்வினால்
தான் ஓருயிர், உயிரற்ற,
தன்மம் அதர்மம் முதலான பொருள்களையும் தானென்று கருதுகின்றது.
------------------------------
ஏதாணி ணத்தி
ஜேஸிம் அஜ்ஜவஸாணாணி ஏவமாதீணி
தே அஸுஹேண ஸுஹேண வ
கம்மேண முணீ ண லிப்பந்தி
270. எம்முனிவர்
ஓர்மயக்கம் இல்லவரோ அம்முனிவர்
சேர்ப்பதில்லை
புண்ணியபா வம்
மயக்கம் நீங்கிய
முனிவர் ,புண்ணிய பாவ
வினைகளைச் சேர்த்துக் கொள்ளுவதில்லை.
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
புத்தி வவஸாவோ வி
ய அஜ்ஜ்வஸாணம் மதீ ய விண்ணாணம்
ஏக்கட்டமேவ ஸவ்வம்
சித்தம் பாவோ ய பரிணாமோ
தமிழில் குறட்பா:
271. எண்ணம்
முடிவறிவு சிந்தனை உணர்வுபாவம்
என்னும்சொற்
கள்பொருளால் ஒன்று
உரை:
எண்ணம், முடிவு, அறிவு,
சிந்தனை, உணர்வு பாவம் என்னும் பல சொற்கள் ஒரே
பொருளைக் குறிப்பனவே வாகும்.
------------------------------
ஏவம் வவஹாரணஓ
படிசித்தோ ஜாண ணிச்சய ணயேண
ணிச்சயணயாஸிதா புண
முணிணோ பாவந்தி ணிவ்வாணம்
272. முன்னுரைகள்
யாவும் உலகியலே சாதுவர்
உண்மை
நயத்தினால் வீடு
முன்னுரைத்தவை
யாவும் உலகியலில் கூறப்படுவனவாகும். உணமை நயத்தை ஏற்பதனாலேயே சாதுவர்
முக்தியடைகின்றனர்.
------------------------------
வதஸமிதிகுத்தீஒ
ஸீலதவ ஜிணவரேஹி பண்ணத்தம்
குவ்வத்தோ வி
அபவ்வோ அண்ணாணீ மிச்சதிட்டீ து.
273. பான்மையில்
சீலம் தவம்சமிதி நோன்புகுப்தி
வீண்பொய்மை
மூடமே யாம்
உண்மையற்ற
ஒழுக்கம், தவம், சமிதி, குப்தி, விரதம் முதலான யாவும்
வீணான பொய்மை மூடமே யாகும்.
------------------------------
மோக்கம்
அஸத்தஹந்தோ அபவியஸத்தோ து ஜோ அதீயேஜ்ஜ
பாடோ ண கரேதி
குணம் அஸத்தஹந்தஸ்ஸ ணாணம் து
274. நம்பிக்கை
யின்றிப் பலநூல் பயின்றாலும்
இம்மியும்
உண்டோ பயன்?
நன்னம்பிக்கை
இல்லாமல் எத்தனை நூல்களைப் பயின்றாலும் பயனில்லை.
------------------------------
ஸத்தஹதி ய பத்தேதி
ய ரோசேதி ய தஹ புணோ ய பாஸேதி
தம்மம் போகணிமித்தம்
ண து ஸோ கம்மக்கயணிமித்தம்
275. உலகின்பம்
நோக்கித் தருமம் புரியின்
விலகாது
வெவ்வினைக் கட்டு
உலகில் கிடைக்கும்
புகழ்ச்சி, மகிழ்ச்சி,
பெருமை முதலானவைகளுக்காக அறச் செயல்களைப் புரிவதால் வினைக்கட்டு ஒருபோதும்
விலகாது.
-------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
ஆயாராதி ணாணம்
ஜீவாதீ தம்ஸணம் ச விண்ணேயம்
சஜ்ஜீவணிகம் ச தஹா
பணதி சரித்தம் து வவஹாரோ
தமிழில் குறட்பா:
276. கற்றலே
ஞானம்நம் பிக்கையே காட்சிசீலம்
வற்றாநல்
லன்பே வழக்கு
உரை:
ஆசாரங்கம் முதலான
நூல்களைக் கற்றலே அறிவு என்றும் , உயிர் முதலானவற்றை ஏற்றலே காட்சி என்றும், உயிரைப்
போற்றுவதே ஒழுக்கம் என்றும் கூறப்படுவது வழக்கு நயமாகும்.
------------------------------
ஆதா கு மஜ்ஜ ணாணம்
ஆதா மே தம்ஸணம் சரித்தம் ச
ஆதா பச்சக்காணம்
ஆதா மே ஸம்வரோ ஜோகோ
277. உண்மை
நயத்தில் உயிரேதான் மும்மணி
சம்வரை யோக
மெலாம்
என் உயிரே அறிவு :
என்னுயிரே காட்சி : என்னுயிரே ஒழுக்கம்: என்னுயிரே விடுதலை வடிவம் : என்னுயிரே
செறிப்புடையது : என்னுயிரே தியானம் என்பது உண்மைச்சுட்டு ஆகும்.
------------------------------
ஜஹ பலிஹமணீ ஸுத்தோ
ண ஸயம் பரிணமதி ராகாமாதீஹிம்
ரங்கிஜ்ஜதி
அண்ணேஹிம் து ஸோ ரத்தாதீஹிம் தவ்வேஹிம்
278. நிறமில்
பளிங்குதான் செம்மையாய் மாறும்
பிறபொருள்
சேர்க்கை விளைவு
பளிங்கு தன்
இயல்பில் நிறமற்றது. ஆனால் பிற பொருள் சேர்கையால் செம்மை நிறமாதல் காணலாம்.
------------------------------
ஏவம் ணாணீ ஸுத்தோ
ண ஸயம் பரிணமதி ராகமாதீஹிம்
ராடீநுஜ்ஜதி
அண்ணேஹிம் து ஸோ ராகாதீஹிம் தோஸேஹிம்
279. அன்னியம்
சேர்வதால் நல்லறிவன் ஆசைகள்
தன்னில்
கலப்பதே மாற்று
அதுபோன்று, பிறபொருள் மோகத்தால் நல்லறிவனும் ஆசைவயப்பட்டு
தன்நிலை மாறி, துன்ப மடைகின்றான்.
------------------------------
ண ய ராகதோஸமோஹம்
குவ்வதி ணாணீ கஸாயபாவம் வா
ஸயமப்பணோ ண ஸோ தேண
காரகோ தேஸிம் பாவாணம்
280. தானாக
ஞானிசெய்யான் காமவாசை நாற்பசைகள்
தானாகான்
கர்த்தா உணர்வு
நல்லறிவன், விருப்பு, வெறுப்பு,
காமம், முதலான துவர்ப்பசைகளில் தானாக மூழ்காத
போது, அவ்வுணர்வுகளுக்குத் தான் கர்த்தா ஆவதில்லை.
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
ராகம்ஹி ய தோஸம்ஹி
ய கஸாயகம்மேஸு சேவ ஜே பாவா
தேஹிம் து
பரிணமந்தோ ராகாதி பந்ததி புணோ வி
தமிழில் குறட்பா:
281. நாற்பசை
காமவாசைத் தோற்றத்தால் மூடர்கள்
சேர்ப்பரே
வெவ்வினைக் கட்டு
உரை:
ஆனால் மேற்கூறிய
குற்றங்களில் மூழ்கும் மூடர்கள் வினைக்கட்டுக்கு ஆளாகின்றனர்.
------------------------------
ராகம்ஹி ய தோஸம்ஹி
ய கஸாயகம்மேஸு சேவ ஜே பாவா
தேஹிம் து
பரிணமந்தோ ராகாதீ பந்ததே சேதா
282. விருப்புவெறுப்
போடு பசையுதயம் தோன்றின்
இறுகும்
உயிர்தன்னில் கட்டு
விருப்பு, வெறுப்பு, நாற்பசை
உதயம் தோன்றினால் வினைக்கட்டுண்டாகும்.
------------------------------
அப்படிகமணம்
துவிஹம் அபச்சக்காணம் தஹேவ விண்ணேயம்
ஏதேணுவதேஸேண ய
அகாரகோ வண்ணிதோ சேதா
283. தானிரங்கல்
ஓர்விரத மின்மை வகையிரண்டே
தானில்லை மூலம்
அதற்கு
தன் தவறுக்கு
வருந்தாமை, விரதமின்மை
ஆகியவை ஒவ்வொன்றும் இரண்டு வகைப்படும். அவற்றிற்குத் தூய உயிர் கர்த்தா ஆவதில்லை
என்று சொல்லப்பட்டுள்ளது.
------------------------------
அப்படிகமணம்
துவிஹம் தவ்வே பாவே அபச்சக்காணம் பி
ஏதேணுவதேஸேண ய
அகாரகோ வண்ணிதோ சேதா
284. முன்னிரண்டும்
தன்னுணர்வால் தன்செயலால் அவ்வகையாம்
தன்னுயிர்
தானிலைமூ லம்
மேற்கூறிய
இரண்டும் உணர்வாலும் செயல்களாலும் என இருவகைப்படும். அவற்றிற்குத் தூய உயிர்
உபாதானம் ஆவதில்லை.
------------------------------
ஜாவம் அப்படிகமணம்
அபச்சக்காணம் ச தவ்வபாவாணம்
குவ்வதி ஆதா தாவம்
கத்தா ஸோ ஹோதி ணாதவ்வோ
285. தன்னுணர்வில்
தன்குற்றம் நோன்புறுதி தானின்மை
தன்வினைக் கேமூல
மாம்
தன் உணர்வில்
உண்டாகும் குற்றம், நோன்பின்மை,
உறுதியின்மை, ஆகியவற்றால் ஏற்படும்
மாற்றங்களுக்கும், வினைக்கட்டுக்கும், அவ்வுயிரே
உபாதானமாகும்.
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
ஆதாகம்மாதீயா
போக்கலதவ்வஸ்ஸ ஜே இமே தோஸா
கஹ தே குவ்வதி
ணாணீ பரதவ்வகுணா து ஜே ணிச்சம்
தமிழில் குறட்பா:
286. தீவினை
நல்வினை ?புத்கலத்தின் செய்கையாம்
மேவுமோ தூய உயிர்
உரை:
நல்வினை, தீவினை ஆகிய யாவுமே புத்கலச்
செயல்களாகும். தூய உயிர் அவற்றைச் செய்வதில்லை.
------------------------------
ஆதாகம்மம்
உத்தேஸியம் ச போக்கலமயம் இமம் தவ்வம்
கஹ தம் மம ஹோதி
கயம் ஜம் ணிச்சமசேதணம் உத்தம்
287. உயிரிலாப்
புத்கலமே யாம்வினைகள் ஆமோ
உயிரின்
செயல்களாய் தாம்
புத்கலங்கள்
உயிரற்றவை. உயிரற்ற புத்கல வினைகள் உயிரின் செயல்களாய் ஆவதில்லை.
------------------------------
அதிகாரம் 8
வீடுபேறு
ஜஹ ணாம கோ வி
புரிஸோ பந்தணயம்ஹி சிரகலபடிப்பத்தோ
தவ்வம் மந்தஸஹாவம்
காலம் ச வியாணதே தஸ்ஸ
288. பன்னாள்
விலங்குத் தளைப்பட்டான் தானறிவன்
துன்ப மிகுதி
குறைவு
பலநாட்களாக
விலங்கினால் பூட்டப்பட்ட ஒருவன், அதனால் உண்டான துன்பங்களை அறிவான்.
------------------------------
ஜயி ண வி குணதி
ச்சேதம் ண முச்சதே தேண பந்தணவஸோ ஸம்
கலேண உ பஹுகேண வி
ண ஸோ ணரோ பாவதி விமோக்கம்
289. விடுபடத்
தன்முயற்சி இல்லாயின் பன்னாள்
கிடப்பன்
விலங்கின் சிறை
அவ்விலங்கை அவன்
உடைத்தாலன்றி அவனுக்குத் துன்ப விடுதலை இல்லை ( தன் முயற்சியினாலன்றி விடுதலை
இல்லை)
------------------------------
இய கம்மபந்தணாணம்
ஏதேஸடிஇபயடி மேவ மணு பாகம்
ஜாணந்தோ வி ண
முச்சதி முச்சதி ஸோ சேவ ஜதி ஸுத்தோ
290. வினைக்கட்டின்
தன்மை அறிந்திடினும் தூய்மை
தனையெய்தல்
என்றும் அரிது
அதுபோன்றே
வினைகளாகிய விலங்கால் கட்டுண்ட ஒருவன்,
துன்பங்களை அறிந்திருப்பினும், அவற்றை
உடைத்தாலன்றி, அவனுக்குப் பிறவிச் சுழற்சியிலிருந்து விடுதலை
இல்லை.
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
ஜஹ பந்தே
சிந்தந்தோ பந்தணபத்தோ ண பாவதி விமோக்கம்
தஹ பந்தே
சிந்தந்தோ ஜீவோ வி ண பாவதி விமோக்கம்
தமிழில் குறட்பா:
291. எண்ணம்
இருந்தால் விடுதலை கூடுமோ
தன்விருப்பம்
தான்தருமோ வீடு?
உரை:
எண்ணம் மட்டுமே
விடுதலையைத் தராது என்பதை உணர்தல் வேண்டும்.
------------------------------
ஜஹ பந்தே சேத்தூண
ய பந்தணபத்தோ து பாவதி விமோக்கம்
தஹ பந்தே சேத்தூண
ய ஜீவோ ஸம்பாவதி விமோக்கம்
292. சங்கிலி
யைத்தான் அறுத்தல்போல் ஆங்குயிர்
தங்கிய
கட்டறுத்தால் வீடு
சங்கிலியை
அறுத்தல் போன்றே உயிரில் தங்கிய வினைக்கட்டை அறுத்தலே வீடு பேறாகும்.
------------------------------
பந்தாணம் ச ஸஹாவம்
வியாணிதும் அப்பணோ ஸஹாவம் ச
பந்தேஸு ஜோ
விரஜ்ஜதி ஸோ கம்மவிமோக்கணம் குணதி
293. வினையியல்பு
தன்னியல்பு தானுணர்ந்தால் நெஞ்சின்
முனைப்புறுதி
வீடு தரும்
வினையின்
இயல்பையும் தன் உயிரின் இயல்பையும் நன்குணர்ந்தால், விடுதலை பெற வேண்டும் என்னும் முனைப்பான உறுதியிருந்தால்,
முக்தி வாய்க்கும்,
------------------------------
ஜீவோ பந்தோ ய தஹா
சிஜ்ஜந்தி ஸலக்கணேஹிம் ணியயேஹிம்
பண்ணாசேதணயேண து
சிண்ணா ணாணத்தமாவண்ணா
294. வேறுவேறாம்
பண்புடைக் கட்டும் உயிரும்தான்
வேறுவேறாம்
ஞானவா ளால் !
அந்நிலையில்
உயிரும் வினைகளும் நல்லறிவு என்னும் சிற்றுளியால் வேறு வேறாகப்
பிரிக்கப்படுகின்றன.
------------------------------
ஜீவோ பந்தோ ய தஹா
சிஜ்ஜந்தி ஸலக்கணேஹிம் ணியயேஹிம்
பந்தோ சேததவ்வோ
ஸுத்தா அப்பா ய கேத்தவ்வோ
295. தத்தம்
இயல்பால் முரணாம் இரண்டுமெனச்
சுத்த
உயிரே உணர்
உயிரும் வினையும்
தத்தம் இயல்பால் முற்றிலும் வேறுபட்டவை என்பதை உணர்தல் வேண்டும்.
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
கஹ ஸோ கிப்பதி
அப்பா பண்ணாயே ஸோ து கிப்பதே அப்பா
ஜஹ பண்ணாஇ விபத்தோ
தஹ பண்ணாயேவ கேத்தவ்வோ
தமிழில் குறட்பா:
296. தூய
உயிரை அடைதலென்ப அவ்விரண்டின்
ஆய குணமறித லாம்
உரை:
தூய உயிரை அடைதல்
என்பதே அவ்விரண்டின் வேறுபாட்டை அறிதலாகும்.
------------------------------
பண்ணாயே கித்தவ்வோ
ஜோ சேதா ஸோ அஹத் து ணிச்சயதோ
அவஸேஸா ஜே பாவா தே
மஜ்ஜ பரே த்தி ணாயவ்வா
297. தன்னுயிரும்
பல்பொருளும் வேறுவேறே என்றறிதல்
உண்மையாம் பொய்யே
பிற
உயிரும் உலகின்
பிற பொருள்களும் வேறு வேறே என்று பிரித்தறிதலே நிச்சயநோக்கு. பிரித்தறியாமையே
பொய்க்காட்சி.
------------------------------
பண்ணாயே கித்தவ்வோ
ஜோ தட்டா ஸோ அஹம் து ணிச்சயதோ
அவஸேஸா ஜே பாவா தே
மஜ்ஜ பரே த்தி ணாதவ்வா
298. பிரித்துணர்தல்
வேண்டும் உயிரை ஒருவன்
பிறபொருள் அல்லதன
தென்று
எனவே தன்னுயிரைப்
பிற பொருள்களிலிருந்து பிரித்தறிதலே ஞானம்.
------------------------------
பண்ணாயே கித்தவ்வோ
ஜோ ணாதா ஸோ அஹம் து ணிச்சயதோ
அவஸேஸா ஜே பாவா தே
மஜ்ஜ பரே த்தி ணாதவ்வா
299. அறிவ
தெதுவோ அதுவே உயிராம்
அறியாதே வேறே
பொருள்
அறிவே உயிர்:
உயிரே அறிவு. உயிரற்ற பிற பொருள்கள் அறியும் திறம் அற்றவை.
------------------------------
கோ ணாம பணிஜ்ஜ
புஹோ ணாதும் ஸவ்வே பரோயியே பாவே
மஜ்ஜயிணம் தி ய
வயணம் ஜாணந்தோ அப்பயம் ஸுத்தம்.
300. கூறுவனோ
தூய்மை உணர்வான்தான் வேறுணர்வே
தன்பொருள்
தானென்றே சொல்
உயிரின் தூய
தன்மையையும், புறப்பொருள்களின்
தொடர்பால் உயிரில் வினைத்தொடர்பு ஏற்படுகின்றது என்பதையும் நன்குணர்ந்த அறிவன்,
புறப்பொருள்களைத் தன்னுடையவை என்று கூறுவானோ? (கூறமாட்டான்)
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
தேயாதீ அவராஹே ஜோ
குவ்வதி ஸோ உ ஸங்கிதோ பமயி
மா பஜ்ஜேஜ்ஜம் கேண
வி சோரி த்தி ஜணம்ஹி வியரந்தோ
தமிழில் குறட்பா:
301. திருட்டு
முதலாம் பெருங்குற்றம் செய்வான்
உறுவான்
பிடிபடுமச் சம்
உரை:
திருடுதல் முதலான
குற்றங்களைச் செய்தவன் பிடிபட்டு விடுவோமோ என்று அச்சம் கொண்டிருப்பான்.
------------------------------
ஜோ ண குணதி அவராஹ
ஸோ ணிஸ்ஸங்கோ து ஜணவதி பமதி
ண வி தஸ்ஸ
பஜ்ஜிதும் ஜே சிந்தா உப்பஜ்ஜதி கயாயி
302. குற்றமே
தும்தாம் புரியார் உறுதலுண்டோ
அச்ச உணர்வே
உளத்து
குற்றமேதும்
செய்யாதோர்க்கு எவ்வித அச்சமும் இல்லை அல்லவா?
------------------------------
ஏவம்ஹி ஸாவராஹோ
பஜ்ஜாமி அஹம் து ஸங்கிதோ சேதா
ஜயி புண ணிராவராஹோ
ணிஸ்ஸங்கோஹம் ண பஜ்ஜாமி
303. அஞ்சுவர்
தீங்குதான் செய்வார் வரும்வினைக்கே
அஞ்சிடார் குற்ற
மிலார்.
அவ்வாறே, தீமை புரிபவர், வினைகளின் வருகையை எண்ணி அஞ்சுவர். குற்றம் புரியாதவர் அஞ்சுவதில்லை.
------------------------------
ஸம்ஸித்திராதஸித்தம்
ஸாதியமாராதிய ச ஏயட்டம்
அவகதராதோ ஜோ கலு
சேதா ஸோ ஹோதி அவராதோ
304. நன்மை
நிறைவுதன்னைத் தானறிதல் யாவுமொன்றே
தன்குற்றம்
மாசுடைத்தே யாம்
நன்மை அடைதல், நிறைவு பெறுதல், தன்னைத் தான் அறிதல் முதலானவை ஒரே பொருளுடையனவாகும். எவ்வுயிர்
குற்றமுடைத்தோ, அவ்வுயிர் தூய்மையில் இல்லை.
------------------------------
ஜோ புண ணிராவராதோ
சேதா ணிஸ்ஸங்கிஓ உ ஸோ ஹோஇ
ஆராஹணாயி ணிச்சம்
வட்டேஇ அஹம் தி ஜாணந்தோ
305. குற்றமில்லா
ஓருயிர்க் கச்சமிலை தூய்மையால்
பெற்றிடும்
பேரின்பம் தான்
குற்றமில்லா
உயிர்க்கு அச்சமில்லை. அவ்வுயிர் தன் தூய்மையால் பேரின்பம் பெற்றிடும்.
------------------------------
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
படிகமணம் படிஸரணம்
பரிஹாரோ தாரணா ணியத்தீ ய
ணிந்தா கரஹா ஸோஹி
அட்டவிஹோ ஹோதி விஸகும்போ
தமிழில் குறட்பா:
306. நிந்தனைபோற்
றல்கழுவாய் நிற்றலடக் கம்தூய்மை
மன்னிப்பு
தீங்கறுத்தல் நஞ்சு
உரை:
தன்னையே
நிந்தித்தல், போற்றுதல்,
கழுவாய், ஒருநிலையில் நிற்றல், மன அடக்கம், தூய்மையாதல், மன்னிப்பு
கோருதல், தீமை விலகல் ஆகிய எட்டும் “தான் செய்கிறோம்” என்ற எண்ணத்தால் நஞ்சுக்குடம் போலாம்.
------------------------------
அபடிகமணப்படிஸரணம்
அப்பரிஹாரோ அதாரணா சேவ
அணியத்தீ ய
அணிந்தாகரஹாஸோஹீ அமயகும்போ.
307. அந்நஞ்செட்
டின்மை அமுத கலசமாம்
அன்னியம் என்பான்
தனக்கு
முன்கூறிய எட்டும்
இல்லா நிலை, அமுத
கலசமாகும், ஏன் எனில் அந்நிலையில் உயிருக்கு, “நான் செய்கிறேன்”என்ற கர்த்தா உணர்வு இல்லை.
------------------------------
அதிகாரம் 9
முழு தூய அறிவு
தவியம் ஜம
உப்பஜ்ஜயி குணேஹிம் தம் தேஹிம் ஜாணஸு அணண்ணம்
ஜஹ கடயாதீஹிம் து
பஜ்ஜயேஹிம் கணயம் அணண்ணமிஹ
308. தங்க
வளையல் அதன்குணத்தில் நிற்பதுபோல்
தங்கும் பொருளில்
குணம்
பொன், வளையல் முதலான அணிகலன்களாக ஆனாலும்,
அது தன் குணத்தில் மாறுபடுவதில்லை. அதுபோன்றே எப்பொருளும் தத்தம்
குணங்களிலிருந்து மாறுபடுவதில்லை.
------------------------------
ஜீவஸ்ஸாஜீவஸ்ஸ து
ஜே பரிணாமா து தேஸிதா ஸுத்தே
தம் ஜீவமஜீவம் வா
தேஹிமணண்ணம் வியாணாஹி
309. உயிரும்
உயிரிலதும் தத்தம் குணத்தின்
நியதிமாறா
தென்றுரைக்கும் நூல்
அதுபோன்றே உயிரும்
உயிரற்ற பொருள்களும் தத்தம் இயல்புகளிலிருந்து பிரிவதில்லை என்று ஆகமங்கள்
கூறுகின்றன.
------------------------------
ண குதோசி வி
உப்பண்ணோ ஜம்ஹா கஜ்ஜம் ண தேண ஸோ ஆதா
உப்பாதேதி ண
கிஞ்சி வி காரணமவி தேண ண ஸ ஹோதி
310. ஆகாதே
ஓருயிர் மற்றொன்றின் ஆக்கமாய்
ஆக்குவதில் அஃதும்
பிற
உயிர், எதிலிருந்தும் தோன்றுவதில்லை.
உண்மையில் அது வேறு எதையும் தோன்றச் செய்வதும் இல்லை. அதனால் அது எதனுடைய காரியமும்
அன்று. எதனுடைய காரணமும் அன்று.
பாகத மொழி தமிழ்
வடிவம்:
கம்மம் படுச்ச கத்தா
கத்தாரம் தஹ படுச்ச கம்மாணி
உப்பஜ்ஜந்தி ய
ணியமா ஸித்தீ து ண தீஸதே அண்ணா
தமிழில் குறட்பா:
311. வினைதன்
னுடன்கலக்கத் தானேதான் கர்த்தா
வினையின்கர்த்
தாவும் வினை
உரை:
உயிருடன் வினை
வந்து கலப்பதற்கு உயிரே தான் மூல காரணம். அதுபோன்றே புத்கலப் பொருள் வினையாக
மாறுவதற்கு அப்பொருளின் தன்மையே காரணமாகும்.
------------------------------
சேதா து
பயடியட்டம் உப்பஜ்ஜயி விணஸ்ஸயி
பயடீ வி சேயயட்டம்
உப்பஜ்ஜயி விணஸ்ஸயி
312. வெவ்வினை
யாலுயிர்ச் சீரழியும் அவ்வினையும்
அவ்வுயிர்
தன்திரிபால் தான்
உயிர், வினைகளால், தன்நிலை
கெட்டுத் துன்புறுகின்றது. அத்தகைய வினை ஊற்றும், உயிரின்
திரிபுணர்வால் தான் நிகழ்கின்றது.
------------------------------
ஏவம் பந்தோ உ
தோண்ஹம் பி அண்ணோண்ணப்பச்சயா ஹவே
அப்பணோ பயடீயே ய
ஸம்ஸாரோ தேண ஜாயதோ
313. ஒன்றுக்கொன்
றேநிமித்தம் அவ்விரண்டின் கட்டினால்
உண்டாம் பிறவிச்
சுழல்
ஒன்றுக்குப்
பிறிதொன்று நிமித்தமாகின்றது. வினைக் கலப்பால், உயிர் பிறவிச் சுழலில் சிக்கி விடுகின்றது.
------------------------------
ஜா ஏஸ பணடியட்டம்
சேதா ணேவ விமுஞ்சயே
அயாணவோ ஹவே தாவ
மிச்சாதிட்டீ அஸஞ்ஜவோ
314. வினைத்தொடர்பு
தான்வில காதவரை தன்னில்
மணிமூன்றும் இல்லான்
உயிர்
வினைத் தொடர்பு
முற்றும் விலகாதவரை, உயிர்
மும்மணி வடிவமானது என்ற நிலையும் இல்லாமற் போகும்.
------------------------------
ஜதா விமுஞ்சயே
சேதா கம்மபலமணந்தயம்
ததா விமுத்தோ ஹவதி
ஜாணவோ பாஸவோ முணீ.
315. வினைப்பயனைத்
தான்முழு தும்விடும் போதே
மணிமூன்றின்
வண்ணம் உயிர்
எப்பொழுது உயிர், வினை, விளைவுகளை
முழுதும் விலக்கிவிடுகின்றதோ, அப்போது அவ்வுயிர் மும்மணியின்
வடிவமாகி விடுகின்றது.
-----------------
-----------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
அண்ணாணி கம்மபலம்
பயடிஸஹாவட்டிதோ து வேதேதி
ணாணீ புண கம்மபலம்
ஜாணதி உதிதம் ண வேதேதி
தமிழில் குறட்பா:
316. பேதை
நுகர்வான் பழவினைத் தாக்கமே
மேதை அறிபவனே தான்
உரை:
முன்வினைப்பயனை
அறிவிலியே நுகர்கின்றான். நல்லறிவன் பார்ப்பவனாக மட்டுமே உள்ளான். நுகர்வதில்லை.
------------------------------
ண முயதி
பயடிமபவ்வோ ஸுட்டு வி அஜ்ஜாயிதூண ஸத்தாணி
குடதுத்தம் பி
பிபந்தா ண பண்ணயா ணிவ்விஸா ஹோந்தி
317. பால்தான்
பருகினும் நஞ்சுவிடாப் பாம்புபோல்
நூல்கற்றான் தீயன்
குணம்
நச்சுப்பாம்பு, இனிப்புகலந்த பாலைக் குடித்தாலும்
தன் நச்சுத்தன்மையை விடுவது இல்லை : அதுபோன்றே, வீடுபேறு
பெறத் தகுதியில்லாதவன், மெய்நூல்கள் பலவற்றைக் கற்றாலும்,
பிறவியில் உழலும் நிலையிலிருந்து விடுதலை பெறுவதில்லை.
------------------------------
ணிவ்வேயஸமாவண்ணோ
ணாணீ கம்மபலம் வியாணேதி
மஹுரம் கடுயம்
பஹுவிஹமவேயஓதேண ஸோ ஹோஇ
318. நல்லுறுதி
கொண்டறிவன் நற்பயன் தீங்கறிவான்
இல்லை நுகர்தல்
அவன்
அறிவன் வீடுபேறு
அடையவேண்டும் என்னும் உறுதி உடையவன். இன்பம், துன்பம் முதலான முன்வினைப்பயன்களை அறிவன் அறிவான். ஆனால் அவன்
அவற்றைத் துய்ப்பதில்லை என ஜினர் அருளியுள்ளார்.
------------------------------
ண வி குவ்வஇ ண வி
வேயஇ ணாணீ கம்மாயிம் பஹுபயாராயிம்
ஜாணஇ புண கம்மபலம்
பந்தம் புண்ணம் ச பாவம் ச.
319. பல்வினை யாக்கலும் துய்த்தலும் இல்லானே
நல்லறிவன் பார்ப்பவனே யாம்
நல்லறிவன்
பல்வகைப்பட்ட வினைகளை யாக்குவதும்
அவற்றின் பயனை
நுகர்வதும் இல்லை: பார்ப்பவனாக மட்டுமே அவன்
உள்ளான்.
------------------------------
திட்டீ ஜஹேவ ணாணம்
ஆகாரணம் தஹ அவேதயம் சேவ
ஜாணஇ ய
பந்தமோக்கம் கம்முதயம் ணிஜ்ஜரம் சேவ
320. காணும்கண்
கள்பொருள் ஆக்கம் நுகர்வுமிலை
ஞானம் அதுபோன்றே
தான்
கண்கள்
பொருள்களைக் காணும் கருவிகளாக உள்ளன. அக்கண்கள் எப்பொருளையும் ஆக்குவதில்லை.
துய்ப்பதுமில்லை. ஞானமும் அது போன்றுதான் .
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
ஸோயஸ்ஸ குணதி
விண்ஹு ஸுரணாரயதிரியாமாணுஸே ஸத்தே
ஸமணாணம் பி ய
அப்பா ஜதி குவ்வதி சவ்விஹே காயே
தமிழில் குறட்பா:
321. திருமால்
படைப்பென்பார் உண்டுயிர் ஆக்கம்
அறுவுடல் என்பார்
முனி
உரை:
திருமால் உலகைப்
படைக்கின்றான் என்பர் சிலர். ஆறுவித
உடல்களை உயிர்
பெற்றுள்ளது என்பர் சாதுக்கள்.
------------------------------
லோயஸமணாணமேயம்
ஸித்தம் தம் ஜஇ ண தீஸதி விஸேஸோ
லோயஸ்ஸ குணஇ
விண்ஹு ஸமணாண வி அப்பவோ குணதி.
322. மக்களும்
சாதுவரும் செப்பும் வகையிரண்டில்
முக்கிய
வேறுபாடுண் டோ?
அவ்வாறு
உலகமக்களும் சாதுவரும் கூறுகின்ற மொழிகளில் முக்கிய வேற்றுமை தான் உண்டோ?
------------------------------
ஏவம் ண கோ வி மோக்கே
தீஸதி லோயஸமணாணம் தோண்ஹ பி
ணிச்சம்
குவ்வந்தாணம் ஸதேவமணுயாஸுரே லோயே
323. படைப்புச்
செயலுண்மை யாயின் உயிர்கள்
விடுதலை காணுதல்
ஏது?
படைப்புச் செயல்
என்பது உண்மையாயின் உயிர்கள் முக்தியடைதல் என்பது தான் ஏது?
------------------------------
வவஹாரபாஸிதேண து
பரதவ்வம் மம பணந்தி அவிதிதத்தா
ஜாணந்தி ணிச்சயேண
து ண ய மஹ பரமாணுமித்தமவி கிஞ்சி
324. பிறபொருள்
தம்முடைத்தாய்க் காணுவர் மூடர்
உரித்தல்ல
ஓரணுவும் ஈங்கு
பிறபொருள்களைத்
தம் பொருளென உரிமை கொண்டாடுவோர் அறிவிலிகள். அது உலகியல் நோக்கு. உண்மையில் ஓரணுவும்
உயிருக்குச் சொந்தமாகாது.
------------------------------
ஜஹ கோ வி ணரோ
ஜம்பதி அம்ஹம் காமவிஸயணயரரட்டம்
ய ண ஹோந்தி ஜஸ்ஸ
தூணி து பணதி ய மோஹேண ஸோ அப்பா
325. தன்னுடைத்
தென்கின்றார் நாடுநக ரம்வீடு
உண்மை அறியாமோ கம்
மோக உணர்வினால், நாடு, நகரம்,
வீடு முதலானவற்றை மக்கள் தம்முடைத்தென்கின்றனர். அக்கூற்று
உண்மையாகாது.
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
ஏமேவ மிச்சதிட்டீ
ணாணீ ணிஸம்ஸயம் ஹவதி ஏஸோ
ஜோ பரதவ்வம் மம
இதி ஜாணந்தோ அப்பயம் குணதி
தமிழில் குறட்பா:
326. பிறபொருள்
தன்னுடைத் தென்பார்தாம் யாரும்
அறிவில்பொய்க்
காட்சி யரே
உரை:
பிறபொருள்களைத்
தம்முடையவை என்பார், அறிவு
மயங்கிய பொய்க் காட்சியரே யாவர்.
------------------------------
தம்ஹா ண மே த்தி
ணச்சா தோண்ஹ வி ஏதாண கத்தவிவஸாயம்
பரதவ்வே ஜாணந்தோ
ஜாணேஜ்ஜோ திட்டிரஹிதானம்
327. பிறவற்றைத்
தம்முடைத்தாய் எண்ணுவரை ஞானி
கருதுவர்
காட்சியில ராய்
பிற பொருள்களைத்
தம்முடையனவாகக் கருதுவோரை, நற்காட்சி யற்றவராகவே நல்லறிவர் கருதுவர்.
------------------------------
மிச்சத்தம் ஜதி
பயடீ மிச்சாதிட்டீ கரேதி அப்பாணம்
தம்ஹா அசேதணா தே
பயடீ ணணு காரகோ பத்தோ
328. மோகவினை
தன்இயல்பால் பொய்க்காட்சி யாக்குமேல்
ஆகுமே கர்த்தா
அதற்கு
மோகனீய வினை, உயிரைப் பொய்க்காட்சியுடையதாகச் செய்கிறது
என்றால், உயிரற்ற வினை பொய்க்காட்சியின் கர்த்தா ஆகிவிடும்.
அவ்வாறு கருதுதல் தவறு.
------------------------------
அஹவா ஏஸோ ஜீவோ
போக்கலதவ்வஸ்ஸ குணதி மிச்சத்தம்
தம்ஹா
போக்கலதவ்வம் திச்சாதிட்டீ ண புண ஜீவோ
329. புத்கலத்தை
ஓருயிர் பொய்க்காட்சி யாக்குமேல்
புத்கலமும்
பொய்க்காட்சி யாம்
உயிரே, புத்கலத்தைப் பொய்க் காட்சியுடைத்தாக்கும்
என்றால், புத்கலமும் பொய்க்காட்சியுடையதாகிவிடும். உயிரற்ற
புத்கலம் எப்படிப் பொய்க்காட்சி உடையதாகும்?
------------------------------
அஹ ஜீவோ பயடீ தஹ
போக்கலதவ்வம் குணந்தி மிச்சத்தம்
தம்ஹா தோஹிம் கதம்
தம் தோண்ணி வி புஞ்ஜந்தி தஸ்ஸ பலம்.
330. புத்கலத்தை
ஓருயிரும் மற்றணுவும் பொய்யாக்கின்
புத்கலத்தோ
டவ்வுயிரும் துய்ப்பு
உயிரும்
அணுத்திரள்களும் சேர்ந்து புத்கலத்தைப் பொய்க்காட்சியுடையதாக்கும் என்றால், உயிரோடு, புத்கலமும்
சேர்ந்து தானே, வினைப்பயனைத் துய்க்கவேண்டும்? எனவே அது தவறு.
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
அஹ ண பயடீ ண ஜீவோ
போக்கலதவ்வம் கரேதி மிச்சத்தம்
தம்ஹா
போக்கலதவ்வம் மிச்சத்தம் தம் து ண ஹு மிச்சா
தமிழில் குறட்பா:
331. புத்கலம்
தானாகப் பொய்மை யுறுவதில்லை
அத்தன்மை
ஓருயிரின் பாங்கு
உரை:
புத்கலம் தானாகவே
பொய்க்காட்சியுடைய தாகும் என்று கூறுவதும் தவறு. ஏன் எனில் பொய்க்காட்சி என்பதே
உயிரின் நிகழ்வு அல்லவா?
------------------------------
கம்மேஹி து
அண்ணாணீ கிஜ்ஜதி ணாணீ தஹேவ கம்மேஹிம்
கம்மேஹி
ஸுவாவிஜ்ஜதி ஜக்காவிஜ்ஜதி தஹேவ கம்மேஹிம்
332. ஞானமூடம்
தூக்கவி ழிப்பெலாம் வல்வினையால்
ஆனவே என்ப வழக்கு
அறிவுடைமை,
அறிவின்மை, தூக்கம், விழிப்பு
முதலான யாவும் வினைகளால் விளைவன என்பது உலகியல் நோக்கு.
------------------------------
கம்மேஹி
ஸுஹாவிஜ்ஜதி துக்காவிஜ்ஜதி தஹேவ கம்மேஹிம்
கம்மேஹி ய
மிச்சத்தம் ணிஜ்ஜதி ணிஜ்ஜதி அஸஞ்ஜமம் சேவ
333. இன்பதுன்பம்
பொய்மை ஒழுக்கம் பழவினை
தந்ததென்ப
வும்பொய் வழக்கு
இன்பமும்
துன்பமும் மெய்ம்மையும் பொய்மையும் நல்லொழுககமும் தீயொழுக்கமும் முன்வினைப்பயனே
என்பதும் பொய்யான உலகியல் வழக்கு.
------------------------------
கம்மேஹி
பமாடிஜ்ஜதி உட்டமஹோ சாவி திரியலோயம் ச
கம்மேஹி சேவ
கிஜ்ஜதி ஸுஹாஸுஹம் ஜேத்தியம் கிஞ்சி
334. முன்வினையால்
போகும் உயிர்மூ வுலகெங்கும்
என்பதே பொய்மை
வழக்கு
உயிரின் மூவுலகப்
பிறவிச் சுழற்சி, முன்வினையால்
அமையும் என்பதும் பொய்மை வழக்குத்தான்.
------------------------------
ஜம்ஹா கம்மம்
குவ்வதி கம்மம் தேதி ஹரதி த்தி ஜம் கிஞ்சி
தம்ஹா உ ஸவ்வஜீவா
அகாரகா ஹோந்தி ஆவண்ணா
335. வல்வினை
யேகொடுக்கும் வாங்கும் எனவழக்கில்
சொல்வர் உயிரை
மறந்து
இன்ப துன்பங்களைக்
கொடுப்பதும் நீக்குவதும் வலிமையான வினைகளே என்பதும், உயிரின் சிறப்பை மறந்து கூறப்படும் உலகியல் கூற்றே ஆகும்.
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
புரிஸித்தியாஹிலாஸீ
இத்தீகம்மம் ச புரிஸமஹிலஸதி
ஏஸா
ஆயரியபரம்பராகதா ஏரிஸீ து ஸுதி
தமிழில் குறட்பா:
336. பெண்ணொடு
ஆணும்தான் காமுறவே பண்ணுமென
வல்வினையைச்
சொல்லுமே நூல்
உரை:
முன்வினைப் பயனால்
தான் ஆணும், பெண்ணும்
காமத்தில்
திளைப்பர் என்று
நம் நூல்கள் கூறுகின்றன.
------------------------------
தம்ஹா ண கோ வி
ஜீவோ அபம்பசாரீ து அம்ஹ உவேதஸ
ஜம்ஹா கம்மம் சேவ
ஹி கம்மம் அஹிலஸதி இதி பணிதம்
337. வினையே
அனைத்துமுண் டாக்குமேல் யார்தான்
முனிவரா யாவர்
விளம்பு
பவ்வியர்களே !
அனைத்துக்கும் காரணம் வினைகளே என்றால்,
முனிவர்களாய்த் துறவேற்பார் யார் என்று எண்ணிப் பாருங்கள்.
------------------------------
ஜம்ஹா காதேதி பரம்
பரேண காதிஜ்ஜதே ய ஸா பயடீ
ஏதேணத்தேண கிர
பண்ணதி பரகாதணாமேத்தி
338. கொலைசெய்தல்
செய்யப் படுதல் இரண்டின்
நிலைக்கும்
வினைமேல் பழி
கொலை
செய்தலுக்கும், செய்யப்படுவதற்கும்
வினைமேல் பழி போடுகின்றனர் ! இது சரியா என எண்ணுங்கள் !
------------------------------
தம்ஹா ண கோ வி
ஜீவோ சகாதேவோ அத்தி அம்ஹ உவதேஸே
ஜம்ஹா கம்மம் சேவ
ஹி கம்மம் காதேதி இவி பணிதம்
339. வினையே
அழித்தலாக்கல் செய்யின் உயிரின்
பணிதான் உலகினில்
ஏது?
அனைத்தையும்
ஆக்குவதும் அழிப்பதும் வினைகளே என்றால், உயிரின் செயல்தான் என்ன? எண்ணுங்கள்!
------------------------------
ஏவம் ஸங்குவஏஸம்
ஜே உ பரூவேம்தி ஏரிஸம் ஸமணா
தேஸிம் பயடீ
குவ்வதி அப்பா ய அகாரகா ஸவ்வே
340. சாங்கியம்
கூறும் வினைமேல் பழிஏற்பின்
ஆங்குண்டோ ஆற்றல்
உயிர்க்கு
சாங்கிய நெறியினர்
கூறும் வினையைப் பழிக்கும் நிலையை ஏற்றுக் கொண்டால், உயிரின் ஆற்றல் தான் உண்டோ?
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
பாகத மொழி தமிழ்
வடிவம்:
அஹாவா மண்ணஸி
மஜ்ஜம அப்பா அப்பாணமப்பணோ குணதி
ஏஸோ மிச்சஸஹாவோ
தும்ஹம் ஏயம் முணந்தஸ்ஸ
தமிழில் குறட்பா:
341. தன்னுயிரே
தன்னைப் பொருள்வடி வாக்குமெனில்
உண்டாங்கே பொய்மை
மயக்கு
உரை:
தன்னுயிரே தான்,
தன்னைப் புத்கலவினை என்னும் பொருள் வடிவமாக்குமென்றால்
அது பொய்யுரையாகும்.
------------------------------
அப்பா ணிச்சோ
அஸங்கேஜ்ஜபதேஸோ தேஸிதோ து ஸமயம்ஹி
ண வி ஸோ ஸக்கதி
தத்தோ ஹீணோ அஹிஓ ய காதும் ஜே
342. ஓரள வில்லா
இடப்பரப்பே எவ்வுயிரும்
ஓரழி வில்லாக்
குணம்
உயிரானது அளவற்ற
இடப்பரப்பும் அழிவில்லாக் குணமும் உடையது.
------------------------------
ஜீவஸ்ஸ ஜீவருவம்
வித்தரதோ ஜாண லோகமேத்தம் கு
தத்தோ ஸோ கிம்
ஹிணோ அஹிவோ ய கஹம் குணதி தவ்வம்
343. விரியுமே
ஓருயிர் இவ்வுல கெங்கும்
பெரிதுசிறி
தாக்கலாகா தே
உயிரின் விரிவு
உலகளவு ஆகும். அதைப் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ ஆக்குதல் ஆகாது.
------------------------------
அஹ ஜாணகோ து பாவோ
ணாணஸஹாவேண அச்சதே த்தி மதம்
தம்ஹா ண சி அப்பா
அப்பயம் து ஸயமப்பனோ குணதி
344. ஞானம்
உயிரின் இயல்பெனினும் ஓருயிர்
தானே தனக்குக்
குரு
அறிவுடைமை உயிரின்
இயல்பாகும். என்றாலும் ஓருயிர்க்கு அவ்வுயிரே குருவாகும்.
------------------------------
கேஹிம்சி து
பஜ்ஜயேஹிம் விணஸ்ஸயே ணேவ கேஹிம்சி து ஜீவோ
ஜம்ஹா தம்ஹா
குவ்வதி ஸோ வா அண்ணோ வ ணேயந்தோ
345. அழியுமழி
யாதுயிர் செய்யுமது செய்யா
மொழியெலாம் ஏகாந்த
மாம்
உயிர் அழியும்
என்றும் அழியாது என்றும் செய்யும் என்றும் செய்யாது என்றும் பலவாறாகக் கூறப்படுவது
ஏகாந்த வாதமாகும்.
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
கேஹிம்சி து
பஜ்ஜயேஹிம் விணஸ்ஸயே ணேவ கேஹிம்சி து ஜீவோ
ஜம்ஹா தம்ஹா வேததி
ஸோ வா அண்ணோ வ ணேயந்தோ
தமிழில் குறட்பா:
346. அழிவுமின்மை
தானும் நுகர்வும் பிறவும்
மொழிதல் ஒருமுனை
நோக்கு
உரை:
உயிர், ஒருநிலையில் அழிந்து மறுநிலையில்
தோன்றும் எனவும் உயிர் அழிவதே இல்லை என்றும் தன்வினைப் பயனை நுகரும் என்றும் நுகராது
என்றும் கூறுவதெல்லாம் ஒருமுனை நோக்கே யாகும்.
------------------------------
ஜோ சேவ குணதி ஸோ
சிய ண வேதயே ஜஸ்ஸ ஏஸ ஸித்தந்தோ
ஸோ ஜீவோ ணாதவ்வோ
மிச்சாதிட்டீ அணாரிஹதோ
347. ஓருயிர்
செய்யும் நுகராதென் றேபொய்மை
கூறுவர் ஓரார்
நெறி
உயிர், செய்யும் ஆனால் அதன் பயனை அவ்வுயிர்
நுகராது என்று கூறுவது உண்மையறியாப் பொய்க்கூற்றாகும்.
------------------------------
அண்ணோ கரோதி அண்ணோ
பரிபுஞ்ஜதி ஜஸ்ஸ ஏஸ ஸித்தந்தோ
ஸோ ஜீவோ ணாதவ்வோ
மிச்சாதிட்டீ அணாரிஹதோ
348. செய்வாரும்
துய்ப்பாரும் வேறுவேறென் பார்மூடர்
மெய்நெறி தான்அறி
யார்
348. யாரோ
ஒருவர் செயல்புரிகின்றார் : வேறுயாரோ ஒருவர் பயன்
நுகருகின்றார்
என்று கருதுவது அருக நெறிக்கு முரண்பட்டது.
------------------------------
ஜஹ ஸிப்பிவோ து
கம்மம் குவ்வதி ண ய ஸோ து தம்மவோ ஹோதி
தஹ ஜீவோ வி ய
கம்மம் குவ்வதி ண ய தம்மவோ ஹோதி
349. பல்பொருள்
ஆக்கும் தொழிலாளி யாவனோ
பல்பொருளாய்
மாறும் வடிவு
பொற்கொல்லர்
நகைகளைச் செய்கின்றார். ஆனால் அவர் அவற்றோடு ஒன்றிவிடுவதில்லை. அது போலவே உயிரும், அறிவு மறைப்பு முதலான
வினைக்கட்டுக்குக் காரணமான செயல்களைச் செய்கின்றது. என்றாலும் அவ்வுயிர் அவ்வினைகளோடு
இரண்டறக்கலந்து விடுவதில்லை.
------------------------------
ஜஹ ஸிபபிவோ து
கரணேஹிம் குவ்வதி ண ய ஸோ து தம்மவோ ஹோதி
தஹ ஜீவோ கரணேஹிம்
குவ்வதி ண ய தம்மவோ ஹோதி
350. கருவிகள்
கொண்டே பொருள்பல செய்வான்
கருவியாய் ஆவனோ
தான் !
பல கருவிகளைக்
கொண்டு, பலவிதமான
பொருள்களைத் தொழிலாளி செய்கின்றான். ஆயினும் அவன் அக்கருவிகளாக மாறுவது இல்லையல்லவா?
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
ஜஹ ஸிப்பிவோ து
கரணாணி கிண்ஹதி ண யஸோ து தம்மவோ ஹோதி
தஹ ஜீவோ கரணாணி து
கிண்ஹதி ண ய தம்மவோ ஹோதி
தமிழில் குறட்பா:
351. பொருள்பல
செய்யும் ஒருவன் செயலாய்
மருவுதல் இல்லையே
தான்
உரை:
அவ்வாறே, தொழிலாளி, அத்தொழிலாகவே
மாறுவதும் இல்லை.
------------------------------
ஜஹ ஸிப்பி து
கம்மபலம் புஞ்ஜதி ண ய ஸோ து தம்மவோ ஹோதி
தஹ ஜீவோ கம்மபலம்
புஞ்ஜதி ண ய தம்மவோ ஹோதி
352. ஓருயிர்
தன்வினையைத் தானாக்கும் ஆயினும்
மாறாதே இன்பதுன்ப
மாய்
அதுபோன்றே ஓருயிர்
தன்வினையைத் தானே ஆக்கும்
என்றாலும்
அவ்வுயிர் இன்ப துன்பமாய் மாறாது.
------------------------------
ஏவம் வவஹாரஸ்ஸ து
வத்தவ்வம் தரிஸணம் ஸமாஸேண
ஸுணு ணிச்சயஸ்ஸ
வயணம் பரிணாமகதம் து ஜம் ஹோதி
353. உலகியல்
நோக்குரைத்தோம் உண்மை நயத்தை
விளக்குவோம் காண்க
இனி
உலகியல்
நோக்கினைக் கூறினோம். இனி உண்மை
நோக்கைக்
காண்போம்.
------------------------------
ஜஹ ஸிப்பிவோ து
சேட்டம் குவ்வமி ஹவதி ய தஹா அணண்ணோ ஸே
தஹ ஜீவோ வி ய
கம்மம் குவ்வதி ஹவதி ய அணண்ணோ ஸே
354. ஒன்றுபடும்
ஓர்கலைஞன் போன்றே உயிரும்தான்
ஒன்றுபடும் ஆசை
வெறுப்பு
கலைஞன், தன் கலையில் மனம் ஒன்றி நிற்பது
போன்றே, உயிரும் ஆசையிலும் வெறுப்பிலும் ஒன்றிவிடுகிறது.
------------------------------
ஜஹ சேட்டம்
குவ்வந்தோ து ஸிப்பிவோ ணிச்சதுக்கிவோ ஹோதி
தத்தோ ஸியா அணண்ணோ
தஹ சேட்டந்தோ துஹி ஜீவோ
355. தன்வேலை
தான்செய்யுங் கால்ஒருவன் துன்புறுவன்
துன்பம்தான்
தன்னால் உயிர்க்கு
தன் வேலையைச்
செய்யுங்கால் ஒருவன் துன்பப்பட வேண்டியுள்ளது. அது போன்றே உயிரும், தன் செயலால் துன்புறுகின்றது.
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
ஜஹ ஸேடியா து ண
பரஸ்ஸ ஸேடியா ஸேடியா ய ஸா ஹோதி
துஹ ஜாணகோ து ண
பரஸ்ஸ ஜாணகோ ஜாணகோ ஸோ து
தமிழில் குறட்பா:
356. சுவராக
மாறாதே சுண்ணாம்பு ஞானி
தவறாக எண்ணான்
பொருள்
உரை:
சுண்ணாம்பு சுவரை
வெண்மையாக்குகின்றது. ஆயினும் சுண்ணாம்பின் குணமும் சுவரின் குணமும் வேறு வேறானது.
அதுபோன்றே வினைகளால் உயிர் அழுக்கடைந்தாலும் உயிரின் இயல்பும் வினைகளின் இயல்பும்
வேறு வேறானவையே, என்றறிவான்
அறிவன்.
------------------------------
ஜஹ ஸேடியா து ண
பரஸ்ஸ ஸேடியா ஸேடியா ய ஸா ஹோதி
தஹ பாஸகோ து ண
பரஸ்ஸ பாஸகோ பாஸகோ ஸோ து
357. சுண்ணாம்பு
தன் குணத்தில் நிற்றல்போல் ஞானியர்
தன்இயல்பில்
நிற்பர் நிலைத்து
சுண்ணாம்பு தன்
குணத்தில் நிற்பது போல் நல்லறிவரும் தன் நிகழ்வுகளைக் காண்பவராகவே நிலைத்து
நிற்பர்.
------------------------------
ஜஹ ஸேடியா து ண
பரஸ்ஸ ஸேடியா ஸேடியா ய ஸா ஹோதி
தஹ ஸஞ்ஜதோ து ண
பரஸ்ஸ ஸஞ்ஜதோ ஸஞ்ஜதோ ஸோ து
358. சுண்ணாம்பு
தன்குணத்தில் நிற்றல்போல் நற்சீலர்
தன்இயல்பில்
நிற்பர் நிலைத்து
சுண்ணாம்பு தன்
குணத்தில் நிற்பது போல் நல்லொழுக்க சீலரும் தன் ஒழுக்கத்தில் நிலைத்து நிற்பர்.
------------------------------
ஜஹ ஸேடியா து ண
பரஸ்ஸ ஸேடியா ஸேடியா ய ஸா ஹோதி
தஹ தம்ஸணம் து ண
பரஸ்ஸ தம்ஸணம் தம்ஸணம் தம் து
359. சுண்ணாம்பு
தன்குணத்தில் நிற்றல்போல் காட்சியர்
தன்இயல்பில்
நிற்பர் நிலைத்து
சுண்ணாம்பு தன்
குணத்தில் நிற்பது போல் நற்காட்சியாளரும் தம் இயல்பில் நிலைத்து நிற்பர்.
------------------------------
ஏவம் து
ணிச்சயணயஸ்ஸ பாஸிதம் ணாணதம்ஸணசரித்தே
ஹுணு வவஹாரணயஸ்ஸ ய
வத்தவ்வம் ஸே ஸமாஸேண
360. சொல்லிய
மூன்றுமே நிச்சய நோக்கினி
சொல்வோம் உலகியல்
நோக்கு
இதுவரை சொல்லிய
மூன்றும் நிச்சய நோக்காகும். இனி உலகியலைச் சொல்லுவோம்.
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
ஜஹ பரதவ்வம் ஸேடதி
ஹு ஸேடியா அப்பணோ ஸஹாவேண
தவ பரதவ்வம் ஜாணதி
ணாதா வி ஸயேண பாவேண
தமிழில் குறட்பா:
361. சுண்ணாம்
பினால்சுவர் வெண்மையாம் மன்னுயிரும்
தான்அறிதல்
செய்யும் பொருள்
உரை:
சுண்ணாம்பின்
தன்மையால் சுவர் வெண்மை நிறமாகின்றது. அதுபோல் உயிர் தன்னுடைய அறிவுடைமைப்
பண்பினால், பிற பொருள்களை
அறிகின்றது.
------------------------------
ஜஹ பரதவ்வம் ஸேடதி
ஹு ஸேடியா அப்பணோ ஸஹாவேண
தஹ பரதவ்வம்
பஸ்ஸாத ஜீவோ வி ஸயேண பாவேண
362. சுண்ணாம் பினால்சுவர்
வெண்மையாம் தன்இயல்பால்
பார்க்கும் பிறவே உயிர்
சுண்ணாம்பின்
தன்மையால் சுவர் வெண்மையாதல் போன்று உயிர் தன்னுடைய இயல்பினால் பிறபொருள்களைப்
பார்க்கின்றது.
------------------------------
ஜஹ பரதவ்வம் ஸேடதி
ஹு ஸேடியா அப்பணோ ஸஹாவேண
தஹ பரதவ்வம்
விஜஹதி ணாதா வி ஸயேண பாவேண
363. சுண்ணாம்
பினால்சுவர் வெண்மையாம் மன்னுயிரும்
தன்இயல்பால்
நீக்கும் பிற
சுண்ணாம்பின்
தன்மையால் சுவர் வெண்மையாதல் போன்று, உயிரும் தன் இயல்பாகிய அறியும் திறனால் பிறபொருள்களை விட்டு விலகும்.
------------------------------
ஜஹ பரதவ்வம் ஸேடதி
ஹு ஸேடியா அப்பணோ ஸஹாவேண
தஹ பரதவ்வம்
ஸத்தஹதி ஸம்மதிட்டீ ஸஹாவேண
364. சுண்ணாம்
பினால்சுவர் வெண்மையாம் மன்னுயிரும்
தானறியும்
பல்பொருட் பண்பு
சுண்ணாம்பின்
தன்மையால் சுவர் வெண்மையாதல் போன்று உயிரும் தன் நற்காட்சியால் பிற பொருள்களின்
இயல்புகளை அறியும்.
------------------------------
ஏவம் வவஹாரஸ்ஸ து
விணிச்சவோ ணாணதம்ஸணசரித்தே
பணிதோ அண்ணேஸு வி
பஜ்ஜஏஸு ஏமேவ ணாதவ்வோ
365. காட்சி
யறிவுசீலம் தம்மின் இயல்பினைக்
காட்டும் உலக
வழக்கு
அவ்வாறு உலக
வழக்கில் பல எடுத்துக் காட்டுகளின் மூலம் நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கத்தின் இயல்பு
கூறப்படும்.
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
தம்ஸணணாணசரித்தம்
கிஞ்சி வி ணத்தி து அசேதணே விஸயே
தம்ஹா கிம் காதயதே
சேதயிதா தேஸு விஸஏஸு
தமிழில் குறட்பா:
366. காட்சி
யறிவுசீலம் மூன்றும் உயிரிலா
வேற்றுப்
பொருளினில் இல்
உரை:
நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம்
ஆகிய மூன்றும் உயிரற்ற பொருள்களில் இல்லை.
------------------------------
தம்ஸணணாணசரித்தம்
கிஞ்சி வி ணத்தி து அசேதணே கம்மே
தம்ஹா கிம் காதயதே
சந்தயிதா தம்ஹி கம்மம்ஹி
367. உயிரில்
வினைகளில் மும்மணி உண்டோ?
உயிர்தான்
அழித்தலுண் டோ?
உயிரற்ற வினைகளில்
மும்மணி இல்லை யாதலால், உயிரால்
வினைகளில் அழிவு என்ன செய்ய முடியும்.
------------------------------
தம்ஸணணாணசரித்தம்
கிஞ்சி வி ணத்தி து அசேதணே காயே
தம்ஹா கிம் காதயதே
சேதயிதா தேஸு காயேஸு
368. உயிரில்
உடல்தன்னில் மும்மணி உண்டோ?
உயிர்தான்
அழித்தலுண் டோ?
உயிரற்ற உடலில்
மும்மணி இல்லையாதலால் உயிரால் அவ்வுடலில் அழிவென்ன செய்ய முடியும்?
------------------------------
ணாணஸ்ஸ தம்ஸணஸ்ஸ ய
பணிதோ காதோ தஹா சரித்தஸ்ஸ
ண வி தம்ஹி
போக்கலதவ்வஸ்ஸ கோ வி காதோ து ணித்திட்டோ
369. காட்சி
அறிவுசீலம் தான்அழி யாதென்றோம்
வீழ்ச்சி உடைத்தே
பொருள்.
உயிரால்
அழிக்கப்பட காட்சி, ஞான
ஒழுக்கங்கள் உயிரற்ற பொருள்களில் இல்லை என்றுதான் கூறப்பட்டதே ஒழிய, பொருள்களின் அழிவு பற்றிக் கூறப்படவில்லை.
------------------------------
ஜீவஸ்ஸ ஜே குணா
கேயி ணத்தி கலு தே பரேஸு தவ்வேஸு
தம்ஹா
ஸம்மாதிட்டிஸ்ஸ ணத்தி ராகோ து விஸயேஸு
370. உயிர்ப்பண்பே
வேறொன்றில் இல்லையே காட்சி
மயக்கம் விருப்பம்
இலது
உயிரின் குணம்
உயிரற்ற வேறு எப்பொருளிலும் இல்லை. எனவே நற்காட்சி பெற்றவனிடம் பிற பொருள்கள் மீது
மயக்கமோ விருப்பமோ எழுதல் இல்லை.
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
ராகோ தோஸோ மோஹோ
ஜீவஸ்ஸேவ ய அணண்ணபரிணாமா
ஏதேண காரணேண து
ஸத்தாதிஸு ணத்தி ராகாதி
தமிழில் குறட்பா:
371. மோகம்
விருப்புவெறுப் பெல்லாம் உயிரில்தான்
ஆகும் பிறபொருளில்
இல்
உரை:
ஆசை, விருப்பு, வெறுப்பு
முதலானவை உயிரில் தான் உண்டே யொழிய பிறவற்றில் இல்லை.
------------------------------
அண்ணதவியேண
அண்ணதவியஸ்ஸ ணோ கீரயே குணுப்பாவோ
தம்ஹா து
ஸவ்வதவ்வோ உப்பஜ்ஜந்தே ஸஹாவேண
372. எப்பொருளும்
வேறொன்றின் பண்பினை யாக்காதே
அப்பொருள் தத்தம்
இயல்பு
ஒருபொருள் வேறு
ஒரு பொருளின் குணத்தை யாக்குவதில்லை. ஒவ்வொரு பொருளும் தத்தம் பண்பிலேயே உள்ளது.
------------------------------
ணிந்திதஸந்துதவயணாணி
போக்கலா பரிணமந்தி பஹுகாணி
தாணி ஸுணிதூண
ரூஸதி தூஸதி ய புணோ அஹம் பணிதோ
373. புத்கலச்
சேர்வால் புகழ்ச்சி இகழ்ச்சியாம்
அத்தன்மை யாக்கும்
சினம்
போக்கலதவ்வம்
ஸத்தத்தபரிணதம் தஸ்ஸ ஜவி குணோ அண்ணோ
தம்ஹா ண துமம்
பணிதோ கிஞ்சி வி கிம் ரூஸஸி அபத்தோ.
------------------------------
உயிரில் புத்கல
வினையின் கலப்பு ஏற்படுவதால், புகழ்ச்சி, இகழ்ச்சியான சொற்களும் அதன் விளைவாக
சினம் முதலான திரிபுணர்வுகளும் தோன்றுகின்றன.
374. சொற்களே
புத்கலம் தாம்உன தல்லவே
உற்றசினம் உன்னில்
எதற்கு?
சொற்கள்
புத்கலங்களேயாகும். புத்கலங்கள் உயிரினுடையவையாகா. எனவே சினம் கொள்ளுதல் ஏன் என்று
சிந்திக்க வேண்டும்.
------------------------------
அஸுஹோ ஸுஹோ வ
ஸத்தோ ண தம் பணதி ஸுணஸுமம் தி ஸோ சேவ
ண ய ஏதி
விணிக்கஹிதும் ஸோயவிஸயமாமகதம் ஸத்தம்
375. தன்னில்தான்
தோயுமுயிர் எந்தவோர் சொல்லுமே
தன்செவி
கேட்பதில்லை யே
தன்னில்
முழுமையாகத் தோயும் ஓருயிர், எச்சொற்களையுமே தன் காதில் வாங்குவதில்லை.
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
அஸுஹம் ஸுஹம் வ
ரூவம் ண தம் பணதி பேச்ச மம் தி ஸோ சேவ
ண ய ஏதி
விணிக்கஹிதும் சக்குவிஸயமாகதம் ரூவம்
தமிழில் குறட்பா:
376. தன்னில்தான்
தோயுமுயிர் எந்த உருவையும்
தன்விழி
காண்பதில்லை யே
உரை:
தன்னில்
முழுமையாகத் தோயும் ஓருயிர் எந்தப் பொருளையும்
தன் கண்களால்
காண்பதில்லை.
------------------------------
அஸுஹோ ஸுஹோ வ
கந்தோ ண தம் பணதி ரஸய மம் தி ஸோ சேவ
ண ய ஏதி
விணிக்கஹிதும் காணவிஸயமாகதம் கந்தம்
377. தன்னில்தான்
தோயுமுயிர் எந்தவோர் வாசமும்
தன்மூக்
கிழுப்பதில்லை யே
தன்னில்
முழுமையாகத் தோயும் ஓருயிர் எந்தவொரு வாசனையையும் தம் மூக்கில் நுகர்வதில்லை.
------------------------------
அஸுஹோ ஸுஹோ வ ரஸோ
ண தம் பணதி ரஸய மம் தி ஸோ சேவ
ண ய ஏதி
விணிக்கஹிதும் ரஸணவிஸயமாகதம் து ரஸம்
378. தன்னில்தான்
தோயுமுயிர் எந்தச் சுவையும்தான்
தன்நா
சுவைப்பதில்லை யே
தன்னில்
முழுமையாகத் தோயும் ஓருயிர் எந்தவொரு சுவையையும் தன் நாவால் சுவைப்பதில்லை.
------------------------------
அஸுஹோ ஸுஹோ வ பாஸோ
ண தம் பணதி புஸஸு மம் தி ஸோ சேவ
ண ய ஏதி
விணிக்கஹிதும் காயவிஸயமாகதம் பாஸம்
379. தன்னில்தான்
தோயுமுயிர் மேவும் தொடுவுணர்வே
தன்உடல் கொள்ளாது
காண்
தன்னில்
முழுமையாகத் தோயும் ஓருயிர் தன் உடலால் எந்தவொரு பொருளையும் தொட்டறிவதில்லை.
------------------------------
அஸுஹோ ஸுஹோ வ குணோ
ண தம் பணதி புஜ்ஜ மம் திஸோ சேவ
ய ண ஏதி
விணிக்கஹிதும் புத்திவிஸயமாகதம் து குணம்
380. தன்னில்தான்
தோயுமுயிர் பண்புடைப் பல்பொருள்
தன்மனம் கொள்ளாது
காண்
தன்னில்
முழுமையாகத் தோயும் ஓருயிர் தன்மனத்தில்
பல்வகைப்
பண்புகளாலான பொருட்களை எண்ணுவதில்லை.
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
அஸுஹம் ஸுஹம் வ
தவ்வம் ண தம் பணதி புஜ்ஜ மம் தி ஸோ சேவ
ண ய ஏதி
விணிக்கஹிதும் புத்திவிஸயமாகதம் தவ்வம்
தமிழில் குறட்பா:
381. தன்னில்தான்
தோயுமுயிர் பல்பொருட் பண்பினைத்
தன்மனம் கொள்ளாது
காண்
உரை:
தன்னில்
முழுமையாகத் தோயும் ஓருயிர் பல்பொருட் பண்பினைத் தன் மனத்தால் எண்ணுவதில்லை.
------------------------------
ஏயம் து ஜாணிவூணம்
உவஸமம் ணேவ கச்சதே மூடோ
ணிக்கஹமணா பரஸ்ஸ ய
ஸயம் ச புத்திம் ஸிவமபத்தோ
382. பல்பொருள்
பண்பறிந்தும் மூடர் நிறைவடையார்
நல்லறி வெய்தார்
நலிந்து
அறிவிலிகள், பல்வகையான பொருள்களையும் அவற்றின் குணங்களையும்
அறிந்திருந்தும், மனம் நிறைவு பெறுவதில்லை. நல்லறிவு பெறுவதில்லை
: அமைதி உறுவதில்லை.
------------------------------
கம்மம் ஜம்
புவ்வகயம் ஸுஹாஸுஹமணேயவித்தரவிஸேஸம்
தத்தோ ணியத்ததே
அப்பயம் து ஜோ ஸோ படிக்கமணம்
383. முன்வினை
தாம்விலகி நின்றார் பிழையுணர்ந்தார்
தன்மனம்
தான்வருந்து வர்
முன்வினைப்பயன்
உணர்ந்து விலகியுள்ளோர், தம் குற்றங்களுக்காக மனம் வருந்துவர்.
------------------------------
கம்மம் ஜம்
ஸுஹமஸுஹம் ஜம்ஹி ய பாவம்ஹி வஜ்ஜதி பவிஸ்ஸம்
தத்தோ ணியத்ததே ஜோ
ஸோ பச்சக்காணம் ஹவதி சேதா
384. வரும்நாள்
இருவினைக் கட்டுறா நெஞ்சின்
உறுதியே நல்விரத
மாம்
இனிவரும் காலத்தில், இருவினைக் கட்டுறா வண்ணம், நெஞ்சில் உறுதி பூண்டு நல்விரதங்களை ஏற்பர்.
------------------------------
ஜம்
ஸுஹமஸுஹமுதிண்ணம் ஸம்படி ய அணேயவித்தரவிஸேஸம்
தம் தோஸம் ஜோ
சேததி ஸோ கலு ஆலோயணம் சேதா
385. கணந்தோறும்
தோன்றிடும் கட்டறிந்து போக்கல்
குணவான்தன்
குற்றநீக்க லாம்
ஒவ்வொரு கணமும்
வினைக்கட்டு நிகழ்ந்து கொண்டே தான் உள்ளது என்பதை அறிவன் அறிந்து, போக்குதல் செய்வான். அத்தகையோன் தன்
குற்றம் களையும் பண்பினன் ஆவான்.
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
ணிச்சம்
பச்சக்காணம் குவ்வதி ணிச்சம் படிக்கமதி ஜோ ய
ணிச்சம் ஆலோசேயதி
ஸோ ஹு சரித்தம் ஹவதி சேதா
தமிழில் குறட்பா:
386. வருந்துதல்
நல்விரதம் குற்றநீக்கம் மூன்றும்
பொருந்துதல்
நற்சீல மாம்
உரை:
குற்றங்களுக்காக
வருந்துதல், குற்றங்களை
நீக்குதல், நல்விரதங்களை ஏற்றல் ஆகிய மூன்றும் நல்லொழுக்க
நெறியாகும்.
------------------------------
வேதந்தோ கம்மபலம்
அப்பாணம் குணதி ஜோ து கம்மபலம்
ஸோ தம் புணோ வி
பந்ததி பீயம் துக்கஸ்ஸ அட்டவிஹம்
387. தன்னுடைத்தே
வல்வினை என்றெண் ணிடினாங்கே
எண்வினை மீண்டும்
வரவு
வினைகள்
என்னுடையவை என்று கருதினால், அவ்வுயிரிடம் மீண்டும் எண்வினை ஊற்று உண்டாகும்.
------------------------------
வேதந்தோ கம்மபலம்
மயே கதம் முணதி ஜோ து கம்மபலம்
ஸோ தம் புணோ வி
பந்ததி பீயம் துக்கஸ்ஸ அட்டவிஹம்
388. தன்னால்
வினைப்பயன் என்றெண்ணல் மீண்டுந்தான்
எண்வினைத் துன்ப
விதைப்பு
வினைகள் என்னால்
ஏற்பட்டன என்று கருதும் போதும் எண்வினை வரவு தொடரும். அவ்வெண்ணம் மீண்டும் துன்ப
வினைக்கே விதையாகும்.
------------------------------
வேதந்தோ கம்மபலம்
ஸுஹிதோ துஹிதோ ய ஹவதி ஜோ சேதா
ஸோ தம் புணோ வி
பந்ததி பீயம் துக்கஸ்ஸ அட்டவிஹம்
389. துய்க்கும்
உயிரிடத்தே இன்பதுன்பம் மீண்டுந்தான்
உய்க்கும்
வினையெட்டின் கட்டு
இன்ப துன்பங்கள்
தன்னுடையவை என்றெண்ணித் துய்க்கும் உயிரிடத்து, மீண்டும் எண்வினைக் கட்டு ஏற்படும்.
------------------------------
ஸத்தம் ணாணம் ண
ஹவதி ஜம்ஹா ஸத்தம் ண யாணதே கிஞ்சி
தம்ஹா அண்ணம்
ணாணம் அண்ணம் ஸத்தம் ஜிணா பேந்தி
390. நூல்கள்
எதையும் அறியா தெனவேஅந்
நூல்கள் அறிவாதல்
இல்
நூல்களும்
உயிரற்றவையே. எனவே அவை எதையும் அறிவதில்லை. நூல்களும் நல்லறிவும் வேறு வேறே
என்றான் ஜினபகவான்.
--------------------------------
ஸத்தோ ணாணம் ண
ஹவதி ஜம்ஹா ஸத்தோ ண யாணதே கிங்சீ
தம்ஹா அண்ணம்
ணாணம் அண்ணம் ஸத்தம் ஜிணா பேந்தி
தமிழில் குறட்பா:
391. சொற்கள்
எதையும் அறியா தெனவேஅச்
சொற்கள் அறிவின்
பிற
உரை:
சொற்கள்
புத்கலத்தின் ஆக்கம். எனவே சொற்கள் எதையும்
அறியா.
------------------------------
ரூவம் ணாணம் ண
ஹவதி ஜம்ஹா ரூவம் ண யாணதே கிஞ்சி
தம்ஹா அண்ணம்
ணாணம் அண்ணம் ரூவம் ஜிணா பேந்தி
392. உருவம்
புத்கலத்தின் பண்பேயாகும். எனவே உருவங்கள்
அறிவுடையவை
அல்லனவே!
உருவம் எதையும்
அறியா தெனவே வுருவம் அறிவின் பிற
------------------------------
வண்ணோ ணாணம் ண
ஹவதி ஜம்ஹா வண்ணே ண யாணதே கிஞ்சி
தம்ஹா அண்ணம்
ணாணம் அண்ணம் வண்ணம் ஜிணா பேந்தி
393. நிறங்கள்
எதையும் அறியா தெனவே
நிறங்கள் அறிவின்
பிற
நிறங்கள்
புத்கலத்தின் பண்பே. எனவே நிறங்கள்
அறிவுடையனவல்ல.
------------------------------
கந்தோ ணாணம் ண
ஹவதி ஜம்ஹா கந்தோ ண யாணதே கிஞ்சி
தம்ஹா அண்ணம்
ணாணம் அண்ணம் கந்தம் ஜிணா பேந்தி
394. நாற்றம் எதையும்
அறியா தெனவேஅந்
நாற்றம் அறிவின்
பிற
நாற்றம்
புத்கலத்தின் பண்பே. எனவே நாற்றமும் அறிவுப்பண்பினை உடையது அல்ல.
------------------------------
ண ரஸோ து ஹவதி
ணாணம் ஜம்ஹா து ரஸோ ண யாணதே கிஞ்சி
தம்ஹா அண்ணம்
ணாணம் ரஸம் ச அண்ணம் ஜிணா பேந்தி
395. சுவைதான்
எதையும் அறியா தெனவே
சுவைதான் அறிவின்
பிற
சுவையும்
புத்கலத்தின் குணமே: எனவே சுவையும் அறிவுத்திறன் உடையது அல்ல.
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
பாஸோ ண ஹவதி ணாணம்
ஜம்ஹா பாஸோ ண யாணதே கிஞ்சி
தம்ஹா அண்ணம்
ணாணம் அண்ணம் பாஸம் ஜிணா பேந்தி
தமிழில் குறட்பா:
396. தொடுதல்
எதையும் அறியா தெனவே
தொடுதல் அறிவின்
பிற
உரை:
தொடுதலும் உடலின்
செயலாகும்: எனவே அதுவும்
அறிவாகாது.
------------------------------
கம்மம் ணாணம்
ண ஹவதி ஜம்ஹா கம்மம் ண யாணதே கிஞ்சி
தம்ஹா அண்ணம் ணாணம்
அண்ணம் கம்மம் ஜிணா பேந்தி
397. வினைகள்
எதையும் அறியா எனவே
வினைகள் அறிவின்
பிற
வினைகள்
புத்கலங்களே. எனவே வினைகளும் அறிதல் திறனற்றவையே.
------------------------------
தம்மோ ணாணம் ண
ஹவதி ஜம்ஹா தம்மோ ண யாணதே கிஞ்சி
தம்ஹா அண்ணம்
ணாணம் அண்ணம் தம்மம் ஜிணா பேந்தி
398. தன்மம்
எதையும் அறியா எனவேஅத்
தன்மம் அறிவின்
பிற
தன்மப் பொருள்
உயிரற்றதேயாகும். எனவே அதுவும் அறிதல் பண்பற்றதே.
------------------------------
ணாணமதம்மோ ண ஹவதி
ஜம்ஹாதம்மோ ணயாணதே கிஞ்சி
தம்ஹா அண்ணம்
ணாணம் அண்ணமதம்மம் ஜிணா பேந்தி
399. அதன்மம்
எதையும் அறியா தெனவே
அதன்மம் அறிவின்
பிற
அதன்மப் பொருளும்
உயிரற்றதே: எனவே அதுவும் அறிதல் பண்பற்றதே.
------------------------------
காலோ ணாணம் ண ஹவதி
ஜம்ஹா காலோ ண யாணதே கிஞ்சி
தம்ஹா அண்ணம்
ணாணம் அண்ணம் காலம் ஜிணா பேந்தி
400. காலம்
எதையும் அறியா எனவேஅக்
காலம் அறிவின் பிற
காலமும் எதையும்
அறிவதில்லை. ஏன் எனில் காலம் என்னும்
பொருளும் உயிர்
அற்றதே.
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
ஆயாஸம் பி ண ணாணம்
ஜம்ஹாயாஸம ண யாணதே கிஞ்சி
தம்ஹாயாஸம் அண்ணம்
அண்ணம் ணாணம் ஜிணா பேந்தி
தமிழில் குறட்பா:
401. விண்ணும்
எதையும் அறியா எனவேஅவ்
விண்ணும் அறிவின்
பிற
உரை:
ஆகாயம் எதையும்
அறியும் ஞானம் இல்லாததே.
------------------------------
ணஜ்ஜவஸாணம் ணாணம்
அஜ்ஜவஸாணம் அசேதணம் ஜம்ஹா
தம்ஹா அண்ணம்
ணாணம் அஜ்ஜவஸாணம் தஹா அண்ணம்
402. முயற்சி
உயிரிலது நல்லறிவின் வேறே
முயற்சி நவின்றார்
இறை
முயற்சி என்பதும்
உயிரிலது தான். அஃது நல்லறிவின் வேறானதே என்றார் ஜினபகவான்.
------------------------------
ஜம்ஹா ஜாணதி ணிச்சம்
தம்ஹா ஜீவோ து ஜாணகோ ணாணீ
ணாணம் ச ஜாணயாதோ
அவ்வதரித்தம் முணேயவ்வம்
403. உயிர்தான்
அறிவாம் அறிவே உயிராம்
பிரிக்க வியலா
விரண்டு
உயிர் மட்டுமே
அறிவுப் பண்புடையது. அறிவே உயிர். உயிரையும் அறிவையும் பிரிக்க வியலாது.
------------------------------
ணாணம்
ஸம்மாதிட்டிம் து ஸஞ்ஜமம் ஸுத்தமங்கபுவ்வகயம்
தம்மாதம்மம் ச தஹா
பவ்வஜ்ஜம் அப்புவந்தி புஹா
404. நற்காட்சி
நல்லடக்கம் நன்னூல்கள் தன்மதன்மம்
நற்றவம் ஓர்தல்
அறிவ
நற்காட்சி, நல்லடக்கம், நன்னூல்கள்,
தன்ம அதன்மம் முதலான ஆறுபொருள்கள் நற்றவம் முதலானவற்றை அறிதல்,
அறிவின் பண்பாகும்.
------------------------------
அத்தா ஜஸ்ஸாமுத்தோ
ண ஹு ஸோ ஆஹாரகோ ஹவதி ஏவம்
ஆஹாரோ கலு முத்தோ
ஜம்ஹா ஸோ போக்கலமவோ து
405. உருவில்
உயிர்தான் எதையுமுண்ப தில்லை
உருவுடைத்தாம்
ஊண்புத் கலம்
உயிர் உருவமற்றது.
உணவு உருவமுடைய புத்கலப் பொருள்.
எனவே உயிர் உணவு
எதையும் உண்பதில்லை.
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
ண வி ஸக்கதி
கேத்தும் ஜம் ண விமோத்தும் ஜம் ச ஜம் பரத்தவ்வம்
ஸோ கோ வி ய தஸ்ஸ
குணோ பாவுகிவோ விஸ்ஸஸோ வா வி
தமிழில் குறட்பா:
406. நிலைப்புமாற்றம்
கொண்டவுயிர் ஏற்றல் விடுதல்
பலபொருள் இல்லை
தொடர்பு
உரை:
நிலைத்தல் பண்பும்
மாறுகை (பரியாய)ப் பண்பும் உடைய உயிர்,
பிற பொருள்களை ஏற்றல் அல்லது விட்டு விடுதல் என்னும் நிலைகள் உடையது
அல்ல.
------------------------------
தம்ஹா து ஜோ
விஸுத்தோ சேதா ஸோ ணேவ கேண்ஹதே கிஞ்சி
ணேவ விமுஞ்சதி
கிஞ்சி வி ஜீவாஜீவாண தவ்வாணம்
407. தூயஉயிர்
தான்பிற வாம்பொருள் ஏற்புநீக்கம்
மேவி யிருத்தல்
இலை
தூய்மையான உயிர், பிற பொருள்களை ஏற்று மகிழ்வதோ,
நீங்கித்
துன்புறுவதோ இல்லை.
------------------------------
பாஸண்டீலிங்காணி வ
கிஹிலிங்காணி வ பஹுரப்பயாராணி
கேத்தும் வதந்தி
மூடா லிங்கமிணம் மோக்கமக்கோ த்தி
408. மூடர்
உரைக்கும் முனிசீலம் இல்லறம்
வீடுபெறும் நன்னெறியா
கா
உண்மை நிலையறியா
அறிவிலிகள் கூறும் இல்லற நெறியும்
துறவறமும்
முக்திப் பாதைகள் ஆகா.
------------------------------
ண து ஹோதி
மோக்கமக்கோ லிங்கம் ஜம் தேஹணிம்மமா அரிஹா
லிங்கம் முயித்து
தம்ஸணணாணசரித்தாணி சேவந்தி
409. வெளிவேடங்
கள்முக்திப் பாதையா காதே
தெளிவறிவு சீலமே
வீடு
வெளிவேடங்களால்
முக்தியடைதல் ஆகாது. நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் மூன்றும் இணைந்ததே வீட்டு நெறி.
------------------------------
ண வி ஏஸ
மோக்கமக்கோ பாஸண்டீகிஹிமயாணி லிங்காணி
தம்ஸணணாணசரித்தாணி
மோக்கமக்கம் ஜிணா பேந்தி
410. இல்லறமோ
சாதுவரோ காட்சிஞானம் நல்லொழுக்கம்
கொள்ளுதலே வீட்டு
நெறி
இல்லறமாயினும், துறவறமாயினும் மும்மணியே முக்தி நெறியாகும்.
------------------------------
பாகத மொழி தமிழ்
வடிவம்:
தம்ஹா ஜஹிந்து லிங்கே
ஸாகாரணகாரயேஹிம் வா கஹிதே
தம்ஸணணாணசரித்தே
அப்பாணம் ஜுஞ்ச மோக்கபஹே
தமிழில் குறட்பா:
411. வேடங்கள்
தள்ளிமணி மூன்றும் இரண்டறத்தார்
ஈடுபடல் வீட்டு
நெறி
உரை:
இல்லறத்தார், துறவியர் ஆகிய இருநிலையினரும்,
புறவேடங்களை நீக்கி மும்மணிகளை ஏற்றலே முக்தி நெறியாகும்.
------------------------------
மோக்கபஹே அப்பாணம்
டவேஹி தம் சேவ ஜாஹி தம் சேய
தத்தேவ விஹர
ணிச்சம் மா விஹரஸு அண்ணதவ்வஸு
412. வீட்டுநெறி
யில்வில காதுநில்லுங் கள்வேறு
மாற்றுவழி
வேண்டாம் உயிர்க்கு
வீடுபேறு நல்கும்
உயரிய பாதையில் விலகாது உறுதியுடன் நில்லுங்கள். வேறு பொய்மை வழியில் செல்ல
வேண்டாம்.
------------------------------
பாகண்டீலிங்கேஸு வ
கிஹிலிங்கேஸு வ பஹுப்பயாரேஸு
குவ்வந்தி ஜே
மமத்திம் தேஹிம் ண ணாதம் ஸமயஸாரம்
413. புறவேட
தாரிகள் தன்னுயிர்ச் சாரம்
அறிவதில்லை
வேண்டாம் மயக்கு
வெளிவேடதாரிகள்
உயிரின் இயல்பை அறிவதில்லை. எனவே மயக்கு நீங்குதல் வேண்டும்.
------------------------------
வவஹாரிவோ புண ணவோ
தோண்ணி வி லிங்காணி பணதி மோக்கபஹே
ணிச்சயணவோ ண
இச்சதி மோக்கபஹே ஸவ்வலிங்காணி
414. வெளிவேடம்
வீட்டுநெறி என்பர் உலகோர்
விலக்குதல் உண்மை
நயம்
உலகியலில்
புறவேடத்தாலும் முக்தியடையலாம் என்பர். உண்மையில் புறவேடம் நீங்கி, உயிர்த் தூய்மையாதலே வீட்டு
நெறியாகும்.
------------------------------
ஜோ ஸமணபாஹுடமிணம்
படிதூணம் அத்ததச்சதோ ணாதும்
அத்தே டாஹீ சேதா
ஸோ ஹோஹீ உத்தமம் ஸோக்கம்.
415. யாருணர்ந்தார்
இச்சமய சாரம் அவரெல்லாம்
பேறடைவர் ஆன்ம
நலம்
இந்நூலில்
கூறப்பட்டுள்ள உயிரின் இயல்பை யாரெல்லாம் நன்கு அறிந்து ஒழுகுவார்களோ, அவரெல்லாம் முக்திப் பேரின்பம் அடைவர்.
ஆன்ம நலம் பெறுவர்.
------------------------------
சமய சாரம் கருத்துரையும்
குறட்பாக்களும்
நிறைவு பெற்றன.
அன்றே அருகன்
அருள்
அறத்தின் பிழிவைக்
கணதரர்கள்
நன்கே விரித்தார்
நல்லவையில்
நாளும் பரப்பினர்
சாதுவரே
பின்பே அதனைக்
குந்தகுந்தர்
பெய்தார்
பன்னூல் மழையாக
நன்மை விளைக்கும்
சமயசாரம்
நாளும் பயின்றே
நலம்பெறுவோம்.
-------------
இந்த பதிவினை வழங்க காரணமாக இருந்த மேதைகளுக்கும், வெளியீட்டார்களுக்கும்
வணக்கத்தையும், நன்றியை உரித்தாக்குகிறேன்.
-----------------------------------
No comments:
Post a Comment