சங்கட நிவாரக பார்ஸுவநாத ஸ்தோத்திரம்



சங்கட நிவாரக பார்ஸுவநாத ஸ்தோத்திரம்




ஓம் நமோ பகவதே
பார்சுவநாதாய ஹ்ரீம் ப்ரகே
தரணேந்திர பத்மாவதி
ஸஹிதாய ஸதாஸ்ரிதே



அட்டே மட்டே ததாச்சுத்ரே
விசுடே க்ஷுத்ர மேவஹி
க்ஷுத்ரா ஸ்தம பய ஸ்தம்பய
ஸ்வாஹாந்தை ரேபி ரக்ஷரம்



பத்மாஷ்டக தலோ பேதம்
மயாங்க ஜிந லாம் க்ஷிதம்
பத்ர மத்யாந் தராலேஷு
பத்ரோபரி யதாக்ரமம்



அஷ்டெள அஷ்டெள ததாசாஷ்டெள
வித்ய ஸ்தாக்ஷர மண்டலே
ததாஷ்ட சத ஜாபேந
ஜ்வர பேகாந்த ராதிகம்




ரிபு சோர மஹிபால
சாகிநீ பூத சம்பவா:
மரண்யம் தேஹஜாம் பீதிம்
ஹந்தி பத்தம் பூஜாதிஷு



புஷ்பமாலாம் ஜபித்வாச
மந்த்ரே நாஷ்ட ஸ்தாதிகம்
ப்ர க்ஷிப்தா போத கண்டேஷு
பூத ஸ்வம்ப பதம் பயம்



குக்குலஸ்ய குடீ நாம்ச
ஸ்தமஷ் டோத்ராஹு தம்
துஷ்ட முச்சாடயேத் ஸத்ய:
ஸாந்திம் ச குருதே க்ருஹே.



ஸ்ரீ பார்சுவநாத ஜின சிம்ஹஸ்ய
நீல வர்ணஸ்ய சம்ஸ்தவான்
லபந்தே ஸ்ரேயசம் சித்திம்
ப்ரகுர்வன் வாஞ்சிதை ஸஹ



ஸ்ரீ அஸ்வஸேன குல பங்கஜ-பாஸ்கரஸ்ய
பத்மாவதி தரணி ராஜநி சேவிதஸ்ய
வாமாங்க ஜஸ்ய பதமேஸ்தவா ல்லபந்தே
பவ்யாஸ்ரிதம் ஸுபகத மபி வாஞ்சிதாநி



இதி சங்கட ஹரண பார்சுவநாத ஸ்தோத்திரம்.

-----------------

விளக்கம்


1. தரணேந்திர பத்மாவதியுடன் கூடிய எப்பொழுதும் நன்மையும் மங்களத்தையும் செய்கின்ற பார்சுவநாத பகவானை நான் வணங்குகிறேன்.


2 – 4 அட்டே மட்டே ததாச்சுத்ரே விசுடே க்ஷுத்ர மேவஹி க்ஷுத்ரா ஸ்தம பய ஸ்தம்பய
ஸ்வாஹா என்னும் இந்த எட்டு மந்திரங்களையும் எட்டு மலர் இதழ்களின் நடுவிலோ அல்லது முறையே எட்டு தாமரை இதழிலோ எழுதி இதை நூற்றெட்டு முறை ஜபம் செய்தால் முறை ஜுரம், மலேரியா ஜுரம் விலகும்.


5. இந்த மந்திரத்தை தகட்டில் எழுதி கையில் கட்டிக் கொண்டால் விரோதிகளாலும், திருடர்களாலும், அரசர்களாலும், பூதம், பிரேதம் என்னும் தீய தேவதைகளாலும் ஏற்படும் இன்னலும் மரணமும் விலகும்.


6. இந்த மந்திரத்தைக் கொண்டு நாற்றெட்டு முறை மந்திர புஷ்பம் செய்த மலர்களை மாலையாகத் தொடுத்து கழுத்தில் அணிந்து கொண்டால் பிசாசு, பூதம் முதலியவைகளால் பயம் ஏற்படாது.


7. கொங்குலியம் என்னும் பொருளை கோலியாகச் செய்து இந்த மந்திரத்தைச் சொல்லி நூற்றெட்டு முறை ஓமத்தில் ஆஹுதியாகச் செய்தால் வெகு  விரைவில் துஷ்டர்களால் ஏற்படும் பயம் விலகும்.


8. நீல நிற மேனியுள்ள பார்சுவநாத பகவானை துதி  செய்பவர்களுக்கு மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். அத்துடன் சுவர்க சுகமும் அனுபவித்து கடைசியில் முக்தி யுலகை யடைய வாய்ப்பும் உண்டு.



9. அஸ்வஸேந குலமென்னும் தாமரை மலரை மலரச் செவதற்கு சூரியனைப் போன்ற வரும், தரணேந்திர பத்மாவதி யக்ஷ, யக்ஷியரால் பூஜிக்கப்பட்டவரும் வாமாமாதாவின் சுபுத்திரரும் ஆகிய பார்சுவநாத பகவானின் திருவடியை பூஜிக்கும் பக்தர்கள் நல்ல பலனையும் நல்லோர் தொடர்பையும் தாம் விரும்பியதையும் பெறுவர்.

No comments:

Post a Comment