கிரியா கலாபம் - தச பக்தி

 


கிரியா கலாபம்

(கிரியையின் பக்தி, செயல் முதலியன விவரித்தல்)

 

தச பக்தி எனும் இந்நூல் திருவறத்தின் நற்செயலை விரிவு படுத்திக் கூறுவது ஆகும்.

 

 

      இந்நூல் வடமொழி சுலோகத்தினுடன், தமிழில் சுலோகம் அமைத்து விளக்கவுரை யுடன் போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும் உரியவரான வீடூர் பூர்ணசந்திரன் சாஸ்திரியார் அவர்கள் 1963 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.

 

அதனை திருவாளர் கம்பீர. துரைராஜ் அவர்கள் வாட்ஸ் அப் எனும் மின் ஊடகத்தில் தினத்தொடராக வழங்கியதின் தொகுப்பு. நண்பர் அவர்களுக்கு நன்றிகள் பல தெரிவித்துக் கொள்கிறேன்.

 

குறிப்பு:-- இந்நூல் சமஸ்கிருத ஸ்லோகங்கள் பகவான் பூஜ்யபாத ஸ்வாமி யாலும், ப்ராக்ருத மொழியில் பகவான் குந்த குந்தாச்சாரியாராலும் சைத்ய பக்தி மட்டிலும் கௌதம கணதர்ராலும் , இயற்றப்பட்டவை. இவையனைத்திற்கும் உரை எழுதியவர் பூஜ்யபாத ஸ்வாமி யாகும். தமிழ் சுலோகம் உரை வடிவம் வீடூர் திருவாளர் பூர்ணசந்திரன் அவர்களாவார்.

 

 

 

         இறை வணக்கம்

 

 

1

பாந்து ச்ரீபாத பத்மாநி பஞ்சாநாம் பரமேஷ்டிநாம்

லாலிதாநி ஸுராதீச சூடாமணி மரீசிபி:  - 1

 

ஸுராதீச

சூடாமணி

மரீசிபி:

லாலிதாநி

பஞ்சாநாம்

பரமேஷ்டிநாம்

பாத பத்மாநி

ந: பாந்து

 

 

          தேவேந்திரன் முதலாக நூறு இந்திரர்களும் வணங்கும்பொழுது, அவர்தம் கிரீடத்தின் முடி மணியின் (கிரணங்களின்) ஒளியினால் பற்றப்பட்ட (சூழப்பட்ட) பஞ்ச பரமேஷ்டிகளுடைய, ஒளிர்கின்ற தாமரை போலும் திருவடிகள், நம்(மவர்) எல்லோரையும் காப்பாற்றட்டும்.

 

 

 

2

ஜய ஜய ஜிந சச்வத் விச்வ வித்யைக மூர்த்தே

      ஹர ஹர துரிதம் மே  ஜந்ம ஜந்மந்ய தோஷ

நய நய நதநாகி வ்ராதமாம் முக்தி மார்க்கம்

      பவ பவ சரணம் மே ஜந்ம ஜந்மந்யதீச:

 

 

விச்வ வித்ய ஏக மூர்த்தே

ஜிந த்வம் சச்வத்

ஜய ஜய

அதோஷ : மே

ஜந்மஜந்மநி

துரிதம்

ஹர ஹர

நதநாகி வராத

மாம், முக்தி

மார்க்கம் நய நய

அதீச! மே

ஜந்ம ஜந்மநி

சரணம் பவ பவ

 

 

 

      உலகம் முற்றிலுமுள்ள யாவையும் ஒருங்கே அறியும் கேவல ஜ்ஞானமே உருவாய் விளங்குகின்ற ஜிநேஸ்வரனே! நீர், எந்த சமயத்திலும் எப்போதும் ஜயிக்கக்கடவாய்!! பதினெண் வகைக் குற்றங்களில் நீங்கியவரே! எமக்கு ஒவ்வொரு பிறவியிலும் ஏற்படும் தீவினைகளை அறவே ஒழிக்க வழி செய்வீராக! ஒழிக்க வழி செய்வீராக! தேவர்களின் சமூகங்களினால் வணங்கப்பட்டவரே! எம்மை முக்தியின் வழியில் திகழுமாறு செய்வீராக. ஜிநேஸ்வர ப்ரபுவே! எமக்கு ஒவ்வொரு பிறவியிலும் நீரே, காப்பாற்றுமவராக ஆகக் கடவீர்! ஆகக் கடவீர்!!

 

        உறுதியைக் குறித்தும், ஆதரவைக் குறித்தும் இரு முறையும் மும்முறையும் கூறுதல் மரபு. சகல கர்மங்களையும் வென்ற ஜினனை, "ஜயிக்கக் கடவாய்" என்று துதிப்பதன் காரணம் ; பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டவர்கள் தம் அன்பின் பெருக்கால் வெற்றியுடன் வாழக் கூறுதல் மரபு. நம் வினையை (நம் செயலாலன்றி) அவரால் நீக்கப்படுதல் இல்லை. எனினும், அவரை வணங்கும் நமக்கு, எண்ணம் தூயதாமாதலின், வினை நீங்க வழி பெறுகிறது. அவ்வழி கோலியவர் அவராதலின், உபசாரத்தால் அங்ஙனம் கூறினார். "நல்லோர்கள் போய வழி நாலடிப் போயினாலும், பொல்லாங்கு நீங்கிப் புகழாய்ப் புண்ணியமுமாகும்," என்பர் வாமன முனிவர்.

 

   பதினெண்குற்றமாவன:-

 

    பசி, தண்ணீர் தாகம், அச்சம் (பயம்), சினம் (கோபம்), ஆசை, மயக்கம்(மோகம்), சிந்தை (கலக்கம்), மூப்பு, ரோகம்(நோய்), மரணம், வியர்வை, ஆயாசம்(வருத்தம்), மதம்(கர்வம்), (காமபோக) விருப்பம், வியப்பு (ஆச்சரியம்), பிறப்பு, நித்திரை, துன்பம்; என்பதாகும்.

 

 

 

3

அபவித்ரப்பவித்ரோவா ஸுஸ்திதோ துஸ்திதோபி வா

த்யாயேத் பஞ்ச நமஸ்காரம் ஸர்வ பாபை: ப்ரமுச்யதே.

 

 

கச்சித் அபவித்ர:

பவித்ரோவா

ஸுஸ்தித: துஸ்தித:

அபி பஞ்ச நமஸ்காரம்

த்யாயேத் சேத் ஸ:

ஸர்வ பாபை:

ப்ரமுச்யதே.

 

 

         ஒருவன், தூய்மையற்றவனாக இருந்தாலும், தூய்மையாளனாக இருந்தாலும், இன்பத்தில் மகிழ்ந்திருந்தாலும், துன்பத்தில் வருந்தி இருந்தாலும், பஞ்ச பரமேஷ்டிகளின் நாமஷரங்களாகிய பஞ்ச மந்திரங்களை, தியானிப்பானாகில், அவன் எல்லாப் பாவங்களினின்றும் நன்கு விடுபடுகிறான்.

 

      பரமேஷ்டிகளின் தியானத்தால் பாபமனைத்தும் நீங்கப் பெறும். இனி, ஸுஸ்தித: துஸ்தித: என்பதற்கு ஆசாரமுடையவன், அநாசாரமுடையவன் என்று கூறினாலும் அமையும். செயலில் தூய்மையாளனாக இருப்பினும் முற்செய்த தீவினை யிருக்குமாதலின், அவனையும் சேர்த்துக் கூறினார். எல்லாப் பாவமும் என்றது முற்செய்த தீவினைகளையும் நோக்கியதாகும்.

 

 

 

4

அபவித்ரப் பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபி வா

யஸ் ஸ்மரேத் பரமாத்மாநம் ஸபாஹ்யா பயந்தரே சுசி:

 

 

ய: அபவித்ர:

பவித்ர: வா

ஸர்வ அவஸ்தாம்

கத: அபிவா

ஸ: பரமாத்மாநம்

ஸ்மரேத் சேத்

பாஹ்ய அப்யந்தரே

சுசி: பவதி ஹி.

 

   எவன் தூய்மையற்றவனோ, அல்லது சுத்தமானவனோ, அல்லது எல்லாவிதமான பால்யம், யௌவனம், முதுமை முதலிய நிலைமைகளையும் அடைந்தவனாயினும், அத்தகையோன், தன் உடலினுள் அடங்கியிருக்கும் பரிசுத்தமான ஆத்மனைத் தியானம் செய்யுமிடத்து; அவன், (அந்தரங்க பஹிரங்க) அகப்பற்று புறப்பற்றுகளில் நீங்கிப் பரிசுத்த(மானவ) னாக விளங்குகிறான்.

 

   தீவினையுடையவனாயினும், நல்வினை உடையவனாயினும், அல்லது வேறு எந்த நிலைமை அடைந்தவனாயினும், தன் ஆத்மனை மட்டும் முறைப்படி தியானிப்பானாகில், முக்தியை அடைகிறான் என்பது பொருள். பவித்ரவாந்- நல்வினையாளன்.

 

 

5

ஸ்ரீமத் பவித்ர மகளங்க மநந்த கல்ப்பம்

ஸ்வாயம் புவம் ஸகல மங்களம் ஆதி தீர்த்தம்

நித்யோத்ஸவம் மணிமயம் நிலயம் ஜிநாநாம்

த்ரைளோக்ய பூஷணமஹம் சரணம் ப்ரபத்யே.

 

ஸ்ரீமத்

பவித்ரம்

அகளங்கம்

அநந்த கல்ப்பம்

ஸ்வாயம்புவம்

ஸகல மங்கலம்

ஆதி தீர்த்தம்

நித்ய உத்ஸவம்

மணிமயம்

த்ரைளோக்ய

பூஷணம்

ஜிநாநாம்

நிலயம் அஹம்

சரணம்

ப்ரபத்யே.

 

      அந்தரங்க பஹிரங்க ஐஸ்வரியங்களோடு கூடி, பவித்திரனாக இருப்பவரும், எத்தகைய குற்றங்களும் இல்லாதவரும், எக்காலமும் அழிவில்லாதவரும், இயல்பாகிய கேவலஜ்ஞானத்தைப் பெற்றதனால், ஸ்வயம்பு வானவரும், சகல மங்களங்களுக்கும் தானே காரணமானவருமான ஆதிபகவ(ன் விருஷப தீர்த்தங்கர) னையும் ; மற்றும் ; நாள்தோறும் பவ்வியர்களாலியற்றும் உத்ஸவாதி தரும காரியங்களுடையதும், நவமணி மயமானதும், மூவுலகங்களுக்கும் பூஷண (அணி) மணி போன்றதுமான நூற்றெட்டு ஜிந பிம்பங்களை (பிரதிமைகளை) யுடைய இயற்கை ஜிநாலயங்களையும், யான் (எமக்கு இரஷணையாகும் பொருட்டு, திரிகரண சுத்தியோடு) பக்தி செய்கிறேன்.

 

      "ப்ரம்மா ஸ்வயம்பு: பகவாந்" என்பது அமரம். நிலயம், ஜாத்யேக வசனமாதலின் பன்மையாகக் கூறப்பட்டது. 'ஸ்ரீமத்' முதலியன ஜிநாலயத்துக்கும் விசேஷமாக்கிக் கூறலாம். அங்ஙனம் கூறும்போது, ஸ்ரீமத் - ஒளிர்கின்ற. ஸ்வாயம்புவம் - இயற்கையாய் அமைந்திருப்பன என்று கூறிக் கொள்க. கல்பம், கால வாசகம். மங்கள காரியத்திற்கு முன், இறை வணக்கம் முக்கியமானதாகும். விருஷப தீர்த்தங்கரர் முதலாக, மகாவீரர் இறுதியாகத் தீர்த்தங்கரர்கள் இருபத்து நால்வர். ஆதலின், ஈண்டு விருஷபதீர்த்தங்கரரை ஆதிபகவன் எனப்பட்டது. "ஆதிபகவன் முதற்றே யுலகு" என்பர் தேவரும்.

 

 

 

6

அத்யா பவத் ஸபலதா நயநத்வயஸ்ய

தேவ! த்வதீய சரணாம்புஜ வீக்ஷணேந

அத்ய த்ரிலோக திலக! ப்ரதி பாஸதே மே

ஸம்ஸார வாரிதிரயம் சுளுகப்ரமாணம்

 

 

தேவ த்வதீய சரண

அம்புஜ வீஷணேந

அத்ய மே நயந

த்வயஸ்ய ஸபலதா

அபவத் த்ரிளோக

திலக அத்ய மே அயம்

ஸம்ஸார வாரிதி:

சுளுக ப்ரமாணம்

ப்ரதி பாஸதே.

 

    தேவ தேவனே! உம்முடைய திருவடித் தாமரைகளைக் கண்டதனால், இப்பொழுதே என் இரு கண்களும் பயன் பெற்ற தன்மை கிடைக்கப் பெற்றன (எனவே, கண் பெற்ற பயனைப் பெற்றேன்), மூவுலகிற்கும் மனோகரமானவரே! உம்மைக் கண்ட இப்பொழுதே எனக்கு இப் பிறவிப் பெருங்கடல் நீர், உள்ளங்கை (தண்ணீர்) அளவாகக் காணப்படுகிறது.

 

            இதுவரை உம்மைக் காணாத கண், இப்போது கண்டதனால் மலர்ச்சி பெற்றதாகி, உள்ளத்தின் அச்சமும் நீங்கிப் பிறவிக்கடலை (உம்மைப் போல்) கடக்க எண்ணுகிறது.

 

7

அத்யமே க்ஷாளிதம் காத்ரம் நேத்ரேச விமலீக்ருதே

ஸ்நாதோ ஹம் தர்ம தீர்த்தேஷு ஜிநேந்த்ர தவ தர்சநாத்.

 

ஜிநேந்த்ர தவ

தர்சநாத் அஹம்

தர்ம தீர்த்தேஷு

ஸ்நாத: தத : மே

காத்ரம் அத்ய

க்ஷாளிதம்

நேத்ரேச

விமலீக்ருதே

 

    வினை வெல்லும் மாதவர்க்குத் தலைவ ! உம்மை நேரில் கண்டதனால், யான் உம் திருமொழியின் அறவுரையாகிய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தவன் (முழுகியவன்) ஆனேன். ஆகவே, என் உடல், இப்பொழுதே அழுக்கற சுத்தமாக (அலம்ப)ப் பட்டது ; என் (இரு) கண்களுங்கூட, மலமற்றதாக விளங்குகிறது. (எனவே, அறிவு விளங்கப்பெற்றது).

 

தீர்த்தம் - ப்ரவசனம், (பரமாகமம்), ஸ்வாமி ! ஆன்மாவாகிய யான், உம்மைக் கண்ட இன்றே ஞானக் கண் விழிப்படைந்து, திருவற முறையில் திகழத் தொடங்குகிறேன். (எனவே, உள்ளும் புறமும் சுத்தமாயின). திருவறத்தை தீர்த்தம் என்பதற்கேற்ப, "ஸ்நாத:"  என்றார். அறமாகிய தீர்த்தத்தில் முழுகியவன் ; வினைகளாகிய அழுக்கைப் போக்கிக் கொள்ளுகிறான்.

 

8

த்ரிலோக ராஜேந்த்ர திரீட கோடி

    ப்ரபாபி ராலீட பதாரவிந்தம்

நிர்மூல முந்மூலித கர்ம வ்ருக்ஷம்

     ஜிநேந்த்ர சந்த்ரம் ப்ரணமாமி பக்த்யா.

 

*த்ரிளோக ராஜ

இந்த்ர திரீடகோடி

ப்ரபாபி: ஆலீட பத

அரவிந்தம் நிர்மூலம்

யதா ததா உந்மூலித

கர்ம வ்ருக்ஷம்

ஜிநேந்த்ர சந்த்ரம்

பக்த்யா

ப்ரணமாமி.

 

   மூவுலக இந்திர(ர் நூற்றுவ)ரின் முடி மணிகளின் காந்தியினால் பற்றப்பட்ட திருவடித் தாமரைகளுள்ளவரும், வேர் சிறிதும் இல்லாதவாறு (வேரோடு) பிடுங்கி எறியப்பட்ட வினைகளாகிற விருக்ஷங்களையுடையவரும் (எனவே, கரும [விருக்ஷ]ங்களைத் தொலைத்தவரும்,) ஆகிய ஜிநேந்திர சந்திரனை (ஆதி பகவனை), மன, வசன, காயசுத்தியுடன் வணங்குகிறேன்.

 

பவணர்,  வியந்தரர்,  ஜோதிஷ்கர், கற்பவாசியர் என தேவர்கள் நான்கு வகையினர். அதற்கு மேல் கற்பாதீதர் என்ப. (அவை, நவக்ரைவேயகம் ஒன்பது,  நவாணுதிசை ஒன்பது,  பஞ்சாணுத்தரம் ஐந்து ஆகிய [23] இடங்களில் உள்ள தேவர்கள், ஒவ்வொருவரும் இந்திரர்களாதலின், அவர்கள் அகமிந்திரர் என்ற பெயருடையவராவார். அவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை [விமானத்தை] விட்டு வெளிவருதல் இலர். இறை வணக்கம் செய்யும்போதும் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே துதித்து வணங்குவார்கள். மேலும், அவர்களுக்கு, மனைவி முதலிய பரிவாரங்களின்றி, முக்தி இன்பத்துக்கு இணையான ஆன்ம லாபத்தையே அனுபவிப்பர்.) மற்றும் மேலே கூறிய நால்வகை தேவர்களில், பவணர் :-- அசுர குமாரர் , நாக குமாரர், வித்யுத் குமாரர், சுவர்ண குமாரர், அக்கினி குமாரர், வாத குமாரர், ஸ்தனித குமாரர், உததி குமாரர், தீப குமாரர், திக் குமாரர் எனப் பத்துவிதப் பிரிவு உடையவராவார். அவர்களில் ஒவ்வொரு பிரிவினருக்கும் (தலைவர்) இந்திரர் இருவர், பிரதீந்திரர் இருவர்; ஆக (10 × 4= 40) நாற்பது இந்திரர் உளர்; அவ்வாறே, கின்னர, கிம்புருஷ, கருட, காந்தர்வ, யக்ஷ, ராக்ஷஸ, பூத, பிசாசர் என்ற எண்வகை வியந்தரர்களில் (8 × 4 = 32) இந்திரர் முப்பத்திருவர் உளர்; சூரிய, சந்திர, நக்ஷத்திர, கிரஹ, தாரகைகள் என்ற ஜோதிஷ்க தேவர்களின் பிரிவாகிய ஐந்துக்கும், சூரிய இந்திரன், சந்திர இந்திரன் என இருவரே யுளர்;  சௌதர்மர், ஈசானர், சனத்குமாரர், மாகேந்திரர், பிரமர், பிரமோத்தரர், லாந்தவர், காபிஷ்டர், சுக்கிரர், மகா சுக்கிரர், சதாரர், சகஸ்ராரர், ஆனதர், பிராணதர், ஆருணர், அச்சுதர் என்ற பதினறுவர்,  கற்பவாசி தேவர்களில்; பிரம்மோத்தரர், காபிஷ்டர், சுக்கிரர், சதாரர் நீங்கலாக ஏனைய பனிரண்டிலும், இந்திரர் ஒருவர்; பிரதீந்திரர் ஒருவர் ஆக (12 × 2 = 24) இருபத்துநான்கு இந்திரர் உளர். ஆகவே, பவணரில் நாற்பது, வியந்தரரில் முப்பத்திரண்டு, ஜோதிஷ்கரில் இரண்டு, கற்பவாசியரில் இருபத்துநான்கு ஆக (40 + 32 + 2 + 24 = 98) தொண்ணூற்றெட்டும், மனிதர்களின் தலைவனாகிய (சக்கரவர்த்தி) நரேந்திரன் ஒன்று, மிருகங்களின் தலைவனாகிய (சிங்கம்) மிருகேந்திரன் ஒன்று, என்ற இந்திரர்கள் நூற்றுவரையும் குறிப்பிடவேண்டி, "த்ரிளோக ராஜேந்த்ரர்"  என்று குறிப்பிட்டார் ஆசிரியர். "இந்த சத வந தியாணம்" என்பவர் பஞ்சாஸ்திகாயம் முதல் காதையிலும், காதி கர்மங்களை மட்டும் வென்ற அருகத் பரமேஷ்டிக்கு வேதனீயம் முதலிய அகாதி கர்மங்கள் இருந்தும், காதி கர்மத்தின் பிரிவாகிய மோகனீயத்தின் சகாயமின்றி அவைகள் பயன்  தராதாதலின்,  "உன் மூலித கர்ம வ்ருக்ஷம்" என்றார். வ்ருஷம் ஜாத்யேக வசனம்.

 

  9                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   

நிஸ்ஸங் கோஹம் ஜிநாநாம் ஸதநமநுபமம்

   த்ரீப் பரீத்யேத்ய பக்த்யா

ஸ்தித்வா கத்வா நிஷித்யுச்சரண பரிணதோ ந்

    தச்சநைர் ஹஸ்த யுக்மம்

பாலே ஸம்ஸ்தாப்ய புத் த்யா மம துரிதஹரம்

    கீர்த்தயே சக்ர வந்த்யம்

நிந்தா தூரம் ஸதாப்தம் க்ஷயரஹித மமும்

    ஜ்ஞாந பா நும் ஜிநேந்த்ரம்.  -  9

 

அஹம் நிஸ்ஸங்க:

ஸந்ஜிநாநாம் அநுபமம்

ஸதநம் பக்த்யா

த்ரி: பரீத்ய ஏத்ய

ஸ்தித்வா நிஷிதி

உச்சரண பரிணத:

அந்த: சநை: கத்வா

ஹஸ்த யுக்மம்

பாலே ஸம்ஸ்தாப்ய

மம துரித ஹரம்

சக்ரவந்த்யம்

நிந்தா தூரம்

ஸத் ஆப்தம்

க்ஷய ரஹிதம்

ஜ்நாந பாநும்

அமும் ஜிநேந்த்ரம்

புத்யா கீர்த்தயே.

 

           யான் பற்றற்றவனாகி ஜிந பகவான்களுடைய இணையற்ற கோயிலை, பக்தி பரிணாமத்தோடு மும்முறை வலமாகச் சுற்றி வந்து (த்வாரத்தின்) வாசற்படியின் அருகில் நின்று நிஷிதி (இனி, என் உள்ளத்தைத் தீய வழிகளில் செல்லாமல் தடுத்துக் கொள்கிறேன்) என்று கூறி, துவாரபாலகரின் அனுமதி பெற்றவனாகி, மெதுவாக ஆலயத்தின் உள் சென்று, இருகைகளையும் நெற்றிக்கு நேராகக் குவித்து வணங்கி, "என்னுடைய தீவினைகளை அகற்றுமவரும், தேவேந்திரர்களாலும் வணங்கப்பட்டவரும், நிந்தை முதலிய குற்றமில்லாதவரும், எச்சமயமும் நன்மையைத் தரும் சற்குணவான்களுக்கு இறைவரும், அழிவற்றவரும், கேவலஜ்ஞானத்தால் சூரியன் போலப் பிரகாசிப்பவரும் ஆகிய ஜிநேந்திரனை" என் சிற்றறிவுக்கு எட்டியவாறு துதி பாடுகிறேன்.

 

   இனி, ஸதாப்தன் (என்பதற்கு) சிரேஷ்டமான இறைவன் எனவும், எக்காலத்தும் இறைவன் என்று கூறவும் அமையும்.

 

 

10

ஜய ஜய ஜய த்ரைலோக்ய காண்ட  சோபி சிகாமணே

நுத நுத நுத ஸ்வாந்தத்வாந்தம் ஜகத் கமலார்க்க ந:

நய நய நய ஸ்வாமிந் சாந்திம் நிதாந்த மநந்தி மாம்

நஹி நஹி நஹி த்ராதா லோகைக மித்ர பவத் பர: - 10

 

த்ரைளோக்ய காண்ட

சோபி சிகாமணே

ஜய ஜய ஜய

ஜகத் கமல அர்க்க ந:

ஸ்வ அந்தம்

த்வாந்தம்

நுத நுத நுத

ஸ்வாமிந்

அநந்திமாம்

நிதாந்தம் சாந்திம்

நய நய நய

லோக ஏக மித்ர

ந: த்ராதா

பவத் பர:

நஹி நஹி நஹி

 

         இம்மூவுலகத்துக்கும் சூடாமணி போலும் ஞான ஜோதியுடன் விளங்கும் ஸ்வாமியே! ஜயிக்கக் கடவீர்! ஜயிக்கக் கடவீர்!! ஜயிக்கக் கடவீர்!!!  மூவுலகிலுமுள்ள உயிர்களின் உள்ளக் கமலங்களை மலரச் செய்யும் சூரியனாக விளங்கும் ஸ்வாமியே!  எம்முடைய உள்ளத்திலிருக்கும் (அறியாமை யென்னும்) இருளை விலகச் செய்வீர்! விலகச் செய்வீர்!! விலகச் செய்வீர்!!!  எம்பெருமானே!  முடிவில்லாதிருக்கிற சம்பூர்ணமான சாந்தியை (முக்தியை) அடைவிக்கக் கடவீர்!  அடைவிக்கக் கடவீர்!! அடைவிக்கக் கடவீர்!!!  ஏனெனில், உலகத்திலுள்ள உயிர்களுக்கு உதவி புரியும் முக்கிய நண்பரான இறைவனே ! எம்மைக் காப்பவர், உம்மைக் காட்டிலும் வேறொருவர் இல்லை!  இல்லை!! (இல்லவே) இல்லை!!!.

 

        மூன்று உலக மாவன :-- கீழுலகம், மத்தியம உலகம், மேலுலகம் என்பன. நரகர் வசிக்கும் கீழ் உலகத்தினை, இன்னாவுலகம் என்றும், நாம் வசிக்கும் மண்ணுலகத்தினை, இவ்வுலகம் என்றும், தேவர் வசிக்கும் மேல் உலகத்தினை, அவ்வுலகம் என்றும், தேவர் கூறியுள்ளார்.  இதனை,

 

 

"அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை; இருள் சேர்ந்த

இன்னா வுலகம் புகல்."      (குறள் 243)

 

 

"அருளிலார்க்  கவ்வுலக மில்லைப் பொருளிலார்க்(கு)

இவ்வுலக மில்லாகி யாங்கு."     (குறள் 247)

 

என்ற குறட்பாவில் கண்டு கொள்க.

 

      "ஸ்வாந்தம்,  ஹ்ருத், மாநஸம், மந:" என்பது அமரம்.  "காண்ட:  அஸ்த்ரீ தண்ட, பாணா, அர்வ, வர்க்க, அவஸரம் வாரிஷு " அமரம். (அர்வ - குதிரை.) வர்க்க - பிரிவு.

 

11

சித்தே முகே சிரஸி பாணி பயோஜயுக்மே

பக்திம் ஸ்துதிம் ப்ரணதிமஞ்சலி மஞ்ஜஸைவ

சேக்ரீயதே சரிகரீதி சரிகரீதி

யச்சர்க்க ரீதி தவதேவ ஸஏவ தந்ய:  -  11

 

தேவ ய: சித்தே தவ

பக்திம் சேக்ரீயதே

முகே தவஸ்துதிம்

சரிக ரீதி சிரஸி

ப்ரணதிம் சரீகரீதி

பாணி பயோஜ யுக்மே

அஞ்சலிம் தவ

அஞ்ஜஸா ஏவ

சர்க்கரீதி ஸ

ஏவலோகே தந்ய:

 

      தேவாதி தேவனே!  எவனொருவன் தன் உள்ளத்தில் உம் பொருட்டு (ச் செய்ய வேண்டிய முறைப்படி) பக்தியை அதிசயமாகச் செய்கிறானோ, நாவினால் உம்முடைய தோத்திரத்தை அதிசயமாக நவில்கின்றானோ, சிரம் வணங்கி தாமரை மொட்டு போலத் தன் இரு கைகளையும் குவித்துச் சிரசின் மேல் பொருந்தச் செய்து, சிறப்புற வணங்குகின்றானோ, அவனே இவ்வுலகில் புண்ணியவான் (ஆகிறான்).

 

    "அதிசயேந குருதே சேக்ரீயதே" , "அதிசயேந கரோதி சரிகரீதி, சரீகரீதி, சர்க்க ரீதி" என்பன வியாகரண விதி.

 

    உலகில் பக்தி செய்து துதிப்பவன் நற்குணவான் ஆவதனால் யானும் பக்தி செய்கிறேன் என்பது கருத்து.

 

 

 

12

ஜந்மோந்மார்ஜ்ஜம்  பஜது பவதப் பாத பத்மம்  நலப்யம்

தச்சேத் ஸ்வைரம் சரது நச துர்தேவதாம் ஸேவதாம் ஸ:

அச்நாத்யந்நம் யதிஹ ஸுலபம் துர்லபம் சேந்மு தா ஸ்தே

க்ஷுத்வ்யா வ்ருத்யை கபளயதிகக் காளகூடம் புபுக்ஷு:

 

கச்சித் ஜந்ம

உந்மார்ஜ்ஜம்

பவத: பாத பத்மம்

பஜது தத்

நலப்யம் சேத் ஸ:

ஸ்வைரம் சரது தர்ஹி

துர்த்தேவதாம், ச

ந ஸேவதாம் லோகே

இஹ கச்சித் அந்நம்

யதி ஸுலபம் சேத்

அஸ்நாதி தத்

துர்ல்லபம் சேத்

முதா ஆஸ்தே கிம்து

புபுக்ஷு: க:

க்ஷுத்யா வ்ருத்யை

காள கூடம் கபளயதி.

 

      ஒருவன், (தன் உயிரோடு கலந்து துன்புறுத்துகின்ற) பிறவிப் பிணியை நல்கும் தீவினைகளாகிற அழுக்கைப் போக்கக் கூடிய, உம்முடைய திருவடிக் கமலங்களைப்  பக்தி பூர்வமாக வணங்கட்டும்; அவ்வாறு, நும் திருவடிக் கமலங்கள் கிடைக்கப் பெறாவிடின் தன் விருப்பம் போல், நடக்கட்டும்; ஆனால், அவன் தீய தெய்வங்களை மட்டும் சேவித்து வணங்கவேண்டாம். எவ்வாறெனில் ? இவ்வுலகில் ஒருவன் உண்ணும் உணவு சுலபமாகக் கிடைத்தால் உண்ணுகிறான். (அவன் வருந்தியும்) அவ்வுணவு கிடைக்கப் பெறாவிடின் பேசாமல் இருந்து விடுகிறான். ஆனால், பசியோடு வருந்திய எவன்தான், அப்பசியைப் போக்குவதற்காகத் தனக்குக் கிடைத்த கொடிய ஆலகால விஷத்தை உட்கொள்ளுவான் ?

 

        தீய தெய்வ வழிபாடு, விஷத்தைப் போலத் துன்பத்திலாழ்த்தும் என்பதாம். விவரம் மேலே கூறுவாம்.

 

 

 

13

ரூபந்தே நிருபாதி  ஸுந்தரமிதம் பச்யந் ஸஹஸ்ரே க்ஷண:

ப்ரேக்ஷா கௌதுக காரிகோத்ர பகவந் நோபைத்யவஸ்தாந்தரம்

வாணீம் கத்கதயந் வபுப் புளகயந் நேத்ர த்வயம் ஸ்ராவயந்

மூர்த்தாநம் நமயந்கரௌ முகுளயந் சேதோபி நிர்வாபயந்.

 

பகவந் அத்ர தே

நிருபாதி ஸுந்தரம்

இதம் ரூபம் ஸஹஸ்ர-

ஈக்ஷண: பச்யந்

ப்ரேக்ஷா கௌதுக -

காரிக: வபு:, புளகயந்

நேத்ர த்வயம்

ச்ராவயந் வாணீம்

கத்கதயந்

மூர்த்தாநம் நமயந்

கரௌ முகுளயந்

சேத: அபி நிர்வாபயந்

அவஸ்தாந்தரம் ந

உபைதி

 

       பூஜ்யனான பகவானே! அணி ஆடை முதலியன அணியாத உந்தன் இயற்கை அழகொன்றே கண்களைக் கவரும். அத்தகைய உம் திருவுருவத்தைக் கண்டு, தன் இரு கண்களாலும் பருகித் திருப்தி அடைய முடியாமல், வியப்பின் பெருக்கால் தன் உடலில் ஆயிரங்கண்களை நிருமித்துக் கொண்ட தேவேந்திரன், உம்மைக் கண்டபோதே உடல் (சிலிர்த்து) மயிர்க் கூச்செறிந்து, இரு கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பெருகி வழிய, சொல்லும் தழதழத்துத் தடுமாறி, இரு கரங்களையும் சிரசின் மேல் குவித்துச் சிரம் வணங்கிச் சிந்தனை வேறொன்றில் செல்லாமல் மகிழ்ந்து துதி பாடுகின்றான்.

 

     அன்பும், அச்சமும் அளவுகடந்தபோது வாய் குழறுவதும், மயிர்க் கூச்செறிவதும் இயல்பு. இந்திரன், ஆயிரங் கண்களை நிருமித்துக் கொண்டான் என்பதனை, ஸ்ரீ புராணம், மஹா புராணம் முதலியவற்றிலும், மற்றும், "களியானை நாற் கோட்டத் தொன்றுடைய செல்வன், கண்ணொராயிர முடையான் கண் விளக்க மெய்தும் ஒளியான் " என சூளாமணி துறவு 67- ஆம் செய்யுளுரையிலும், காணலாகும். இதுபற்றியே " ஐந்தவித்தானாற்றல் அகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலுங்கரி " என்றார் தேவர் குறளிலும்.

 

 

14

த்ரஸ்தாராதி ரிதித்ரிகால விதிதி த்ராதா த்ரிலோக்யா இதி

ச்ரேயஸ் ஸூதிரிதி ச்ரியாம் நிதிரிதி ச்ரேஷ்டஸ் ஸுராணாமிதி

ப்ராப்தோஹம் சரணம் சரண்யமகதிஸ் த்வாம் தத்ய ஜோபேக்ஷணம்

ரக்ஷக்ஷேம பதம் ப்ரஸீத ஜிநகிம் விஜ்ஞாபிதைர் கோபிதை:

 

ஜிந !

அஹம் அகதி: ஸந்

சரண்யம் த்வாம்

த்ரஸ்த அராதி: இதி

த்ரிளோக்யா:

த்ரிகால வித் இதி

சரியாம் நிதி: இதி

த்ராதா இதி

ச்ரேய: ஸூதி: இதி

ஸுராணாம்

ஸ்ரேஷ்ட: இதிச

சரணம் ப்ராப்த:

தத் (மயி)

உபேக்ஷணம்

த்யஜ (மாம்) ரக்ஷ மே

க்ஷேம பதம் ப்ரஸீத

கோபிதை:

விஜ்ஞாபிதை : கிம்

 

         (ஆகவே, ) பகவந்தனே ! உம்மைத் தவிர வேறு திக்கில்லாதவனாகிய யான் ஆதரவு அற்றவர்க்கெல்லாம் சிறந்த அபயம் அளிக்கும் தீந பந்துவாகிய உம்மை, வினைப் பகைவரை வென்றவர் என்றும், அதனால் மூவுலகத்திலும், முக்காலத்திலும் நிகழும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒருங்கே அறிந்தவரென்றும், அதனால் அந்தரங்க லக்ஷ்மி பஹிரங்க லக்ஷ்மி ஆகிய செல்வ மாதர்களை என்றும் விலகாதவாறு உம்மிடமே நிலை நிறுத்தினவரென்றும், மூவுலகத்தையும் இரக்ஷிப்பவர் நீரே என்றும், எவ்வுயிர்க்கும் நன்மை அளிப்பவர் என்றும், தேவர்களுக் கெல்லாம் சிறந்த தேவாதி தேவனென்றும் அறிந்து நம்பி, உம்மைச் சரணமாக அடைந்தேன். ஆகவே, என்னிடம் பராமுகமாய் இருப்பதை விட்டு, என்னையும் ஆதரிப்பீராக. எனக்கு முக்தி பதத்தை அடையும் வழியை அருள் புரிவீராக. என் உள்ளத்தின் ஆவலை வெளிப்படுத்தாமல் மறைத்து வைப்பதால் யாது பயன் ? (ஆகவே வாய்விட்டுக் கூறிவிட்டேன்.)

 

   தேவேந்திரன் போன்ற நல்வினையாளர்களாயே, வணங்கும் தகுதியுடைய சர்வஜீவ தயாபரனாகிய உம்மை, வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முற்றவுணர்ந்த முனைவனாகிய உம்மை யானும் புகலாக அடைந்தேன்; என் உள்ளக் கருத்தையும் கூறி விட்டேன்; என்னையும் காப்பாற்றுவீர் என்று விண்ணப்பம் செய்தவாறு என்க.

 

 

 

ஸ்ரீமத் பரம கம்பீரம் ஸ்யாத்வா தா மோக லாஞ்ஜநம்.

ஜீயாத் த்ரைளோக்ய நாதஸ்ய சாஸநம் ஜிநசாஸநம். - 15

 

ஈண்டு பரமாகமத்தைக் கூறித் துதிக்கின்றார்

 

ஸ்ரீமத்

பரம கம்பீரம்

ஸ்யாத்வாத

அமோக லாஞ்சநம்

த்ரைளோக்ய

நாதஸ்ய

சாஸநம்

ஜிந சாஸநம்

ஜீயாத்

 

                முக்திச் செல்வத்தை அளிக்கும் ஆழ்ந்த கருத்துடையதும்,  தவறாமல் பயனளிக்க வல்ல ஸ்யாத்வாத மென்கிற அடையாளத்தை, சப்த பங்கி நியாயத்தை மேற்கொண்டிருப்பதும்,  முற்றவுணர்ந்த மூவுலகநாதன் அருளிச் செய்த அறவுரையின் கட்டளையை மேற்கொண்டிருப்பதும் ஆகிய (ஜிநசாஸநம்) பரமாகமம் என்ற முதன்நூல், வெற்றி பெற்று விளங்கட்டும். எனவே, ப்ரவசனத்தையும் பக்தி செய்கின்றேன் என்றவாறு.

 

    "நிம்நம், கபீரம், கம்பீரம், உத்தாநம், தத் விபர்யயே " அமரம். (நிம்நம் - ஆழம்) "மோகம் நிரர்த்தகம்." அமரம். ஈண்டு, சாஸநம் - கட்டளையைத் தெரிவிப்பது, அல்லது, கல்வியைக் கற்பிப்பது என்ற இருபொருளுடையது. இனி, சாஸநம், சிக்ஷை என்றுமாம். வித்தையைக் கற்பித்தல் என்ற பொருளையே யுடையது; (ஈண்டு, தண்டனையன்று) இனி, ஸ்யாத்வாதம் என்பது யாதெனில் ?

 

           இவ்வுலகின் கண்; பௌத்தம், ஜைனம், சாங்கியம், மீமாம்ஸம், வேதம் முதலாகப் பல மதங்கள் உள்ளன. அவையனைத்தையும் தொகுத்துப் பொதுவாக, ஏகாந்தவாதம் அநேகாந்தவாதம் என்ற இரு பிரிவாகக் கூறப்படுகிறது. ஸ்யாத்வாதத்தை அடிப்படையாகவுடைய அநேகாந்தவாதம் ஜைனருடையது. அதாவது, உயிர் முதலிய பொருள்கள், நித்தியம், அனித்தியம், பின்னம், அபின்னம், அவாச்சியம், சூனியம் என்ற அறுவகைத் தன்மைகளை ஒவ்வொரு வகையில் பொருந்தியுள்ளன. அவையனைத்தும் ஒரு பொருளின் தன்மையினவே, என்று கூறுவது அநேகாந்தவாதம். நித்தியம் முதலியவைகளைத் தனித்தனியாக மேற்கொண்டிருப்பது, ஏனைய பிற மதங்களின் ஏகாந்தவாத மாகும். அதாவது, நித்திய மேவ என்று ஒருவரும், அனித்திய மேவ என்று ஒருவரும் இவ்வாறே ஒவ்வொன்றையே தங்கள் தங்களுடைய கொள்கைகளாகக் கூறுவர்.

 

      அநேகாந்த  வாதத்தில் முக்கியமாக கூறப்படுவது சப்தபங்கி நியாயமாகும். அதாவது ஒவ்வொரு (திரவியப்) பொருள்களும் இயற்கையை அடிப்படையாகக் கொண்டு, எக்காலத்திலும் அழிவின்றி (நிலைபேறுடையதாகி); அதுவே, செயற்கையால் சமயம் சமயந்தோறும் அழிவுடைய (பரியாயப்) பொருள்களாக மாறிமாறிக் காணப்படுகிறது : தண்ணீர், இயற்கையில் தண்மையுடையதாகக் காணப்படுகிறது. அது, சூடேறியபோது, வெந்நீராக மாறிவிடுகிறது. அது, சூடு நீங்கி (ஆறி)ய போது, தண்மையையே அடைகிறது. (உருண்டை வடிவமாக உள்ள) ஒரு பொன்; வளையல், செயின், மோதிரம் முதலிய பல உருவமாகச்  செய்த போதிலும், பொன்னின் இயற்கைக் குணமாகிய மஞ்சள் நிறம், நயம் முதலியவற்றில் மாறுவதில்லை.

 

இயற்கையை, வடமொழியில் அந்வயம் அல்லது அஸ்தித்வம் என்றும், செயற்கையை, வ்யதிரேகம் அல்லது நாஸ்தித்வம் என்றும் கூறப்படும், (சத், அசத் என்று கூறுவதும் உண்டு): எனவே, அஸ்தி என்பது அழிவற்றது, நாஸ்தி என்பது சமயந்தோறும் அழிவுடையது என்பதாகும். (சமயந்தோறும் என்பது அடிக்கடி, அல்லது அவ்வப்போது என்பதாகும்.) இந்த அஸ்தி, நாஸ்தி இரண்டையும் தமிழில், உண்டு. இல்லை என்று கூறப்படும். (இதனையே உண்மை, இன்மையென்று கூறுவதும் உண்டு).

 

            இனி, அநேகாந்த வாதத்திற்கு ஆதாரமானது, சப்தபங்கி எனப்படும். பங்கி - பிரிவு. எழுவகைப் பிரிவு உள்ளது. சப்தபங்கி, (சப்தபங்கம் எனவும் வழங்கும்) இவ் ஏழுவிதப் பிரிவுகளுக்கும் (பங்கங்களுக்கும்) மூலகாரணமான சொற்கள் மேற்கூறிய உண்டு, இல்லை என்பனவே. உண்டு இல்லை என்ற முரண்பட்ட குணங்கள் ஒவ்வொரு பொருள்களிடத்தும் ஒவ்வொரு வகையினால் காணப்படுகின்றன. அதாவது ஒரு குடத்தை நோக்கி, 'இது மண்ணாலானது,  பொன்னாலானது அன்று ' என்று கூறுமிடத்து, குடத்தில் மண் தன்மை உண்டு என்றும், பொன் தன்மை இல்லை யென்றும் விளங்குவதுபோல, ஒவ்வொரு பொருளினிடத்தும்  உண்டு, இல்லை என்ற இரு குணங்களும் விளங்குகின்றதனை ஊகித்தறிக.

 

           பொருள், இடம், காலம், குணம் என்ற இந் நான்கையும் குறித்து இவ் வேறுபாடு உண்டாகிறது.

 

         என்னை ? யெனின், ஒரு மனிதனைக் குறித்து, இவன் மனிதனா ? தேவனா ? என்று கேட்குமிடத்து, 'இவன் மனிதன்;  தேவன் அல்லன் ' என்று பொருளின் உருவத்தை (ஆக்ருதியை)க் குறித்தும், ' இவன் இவ்விடத்தில் இருக்கின்றான் ; அவ்விடத்தில் (வேறு இடத்தில்) இல்லை ' என்று இடத்தைக் குறித்தும், ' இவன் இன்று இவ்விடத்தில் இருக்கின்றான் ; நேற்று இல்லை ' என்று காலத்தைக் குறித்தும், ' இவன் இப்பொழுது அறிவாளியாகக் காண்கிறான் ; இதற்குமுன் இங்ஙனம் இல்லை' என்று குணத்தைக் குறித்தும், ஒரு மனிதனிடமே உண்டு, இல்லை என்ற இரு தன்மைகளும், விளங்குவது அறிக. (தன்பொருள், இடம், காலம், குணம் என்ற நான்கினாலும், உண்டு எனவும்; பிறபொருள், இடம், காலம், குணம் என்ற நான்கினாலும் இல்லை எனவும் பெறப்படும்.  இங்கு,  தன்குணம், பிறகுணம் என்றது, நெருப்பிற்கு உள்ள வெம்மையைத் தன் குணமென்றும், தண்மையை பிறகுணம் என்றும் கூறப்படும்).

 

        இங்ஙனம் ஒருவகையால் உண்டு, ஒருவகையால் இல்லை என்ற இவ்விரு தன்மைகளும், ஏழுவித பங்கங்களுள். 1. உண்டு,  2. இல்லை என்ற முதல் இரண்டு பங்கங்களாகக் கூறப்படும். இதனை,

 

"உண்டே தனதியல்பி னுணருங்காலை யுயிரென்றி

யுண்டாய வவ்வுயிரே பிறிதினில்லை யெனவுரைத்தி"

 

  என்ற, (சீவக சிந்தாமணி 1419 ஆம்) செய்யுளின் உரையில்,

 

     " உணருங் காலத்து உயிர் தனதியல்பால் உண்டேயென்று கூறாநின்றாய் ; உண்டாய அந்த வுயிர்தானே பிறிதொன்றி னியல்பான் இல்லையென வுரையானின்றாய் " எனவும், ஒரு பொருளிலே  உண்டுமில்லையுங் கூறினார். " உயிர் ஒருவனிடத்துண்டு தூணிலில்லை.  தூணிலில்லாமையும்  அவ்வுயிர்க் கேற்றுக. இதனால் உயிர்தனக்கே  உண்டுமில்லையுந்தங்கின ". எனவும் கூறிய நச்சினார்க்கினியர் உரையாலும்,

 

" தந்தவுலகின் பொருளனைத்தும் தமதுண்மையினா லுளவாகும்

அந்தமிலதன் பிறகுணத்தி னுளவல்லனவா மெனவறைந்தாய் "

 

 என்று திருக்கலம்பகத்தில் (7-ல்) கூறியதனாலும் அறியலாகும்.

 

ஒரு பொருளினிடத்துள்ள உண்டு, இல்லை என்ற தன்மைகள் ஒவ்வொரு வகையால் காணப்பட்ட போதிலும், அவ்விரண்டும் ஒரு பொருளின் தன்மையாதலால், அவற்றை முறையே 3. உண்டும் இல்லையும் என்று கூறுவது மூன்றாவது பங்கமாகும். " உண்மையு மின்மைதானு மொரு பொருள் தன்மையாகும், வண்மையைச் சொல்லும் மூன்றாம் பங்கம் ". என்று (மேருமந்தரம் 709, இல்) கூறியது காண்க. இங்கு உண்மை என்றது உண்டு என்னும் பொருளது. மற்றும்,

 

      " பொருள் ஒன்றாகலின், தன்மையினை மட்டும் இரண்டாகக் கூறுவானேன் ? அவ்விரு தன்மைகளையும் ஒரேசமயத்து ஒருங்கே ஒரு சொல்லாகக் கூறுக" எனின் கூறவியலாது. அஃது 4. உரைக் கொணாமை (சொல்லொணாமை) என்ற நான்காவது பங்க மாகும். அதாவது, உண்டு இல்லை என்பன ஒரு பொருளின் தன்மை யாதலானும், அவ்விரு தன்மைகளும் ஒரு பொருளிலேயே கிடத்தலானும், அவ்வுண்மையைத் தொகுத்து ஒருபொருளில் ஒருசொல்லால் கூற வியலாததே சொல்லொணாமை, அல்லது அவக்தவ்யம் என்ற நான்காம் பங்கமாகும்.

 

         சிறந்த மாம்பழத்தின் உருசி இனிப்பாய் இருக்குமென்று கூறி விடலாம், அவ்வினிப்பு எப்படி இருக்கும் ? என்று கேட்போமானால், அதனை வேறுசொல்லால் விளக்கிக் கூற இயலாது ; அத்தன்மை போல, ஒரு பொருளின் தன்மைகளை உண்டு, இல்லை என்று கூறிவிடலாம் ; அவ்வுண்டு மில்லையும் என்ற இரு தன்மைகளையும் சேர்த்து ஒரு சொல்லாகக் கூற வியலாததே, சொல்லொணாமை யென்றுணர்க. அவ்வினிப்பைச் சொல்லால் கூற இயலாதேயன்றி அவ்வினிப்பு அவ்விடத்து (அப்பொருளில்) இல்லாத தன்று. அங்ஙனமே, உண்டு இல்லை என்பதன் தன்மைகளை ஒருங்கே ஒரு சொல்லால் கூற இயலாதனவே யன்றி, அவ்வுண்டு இல்லை என்ற இருதன்மைகளும் அவ்விடத்து இல்லாதன அல்ல ; அங்ஙனமாயின், பொருள்கள் சூனியமாகிக் கெடும். உலகிலுள்ள பொருள்களனைத்தும், இயற்கையாலோ, செயற்கையாலோ ஒவ்வொரு வகையிலும், ஒரு தன்மையை உட்கொண்டிருத்தல் கண்கூடு. அதாவது, ஒருபொருள் அதன் இயற்கையால் என்றும் அழியாதிருப்பதைக் கொண்டு உண்டு எனவும்; அதுவே, செயற்கையால் சமயந்தோறும் மாறும் தன்மையைக் கொண்டு (அதனிடம் நிலைத்த தன்மை) இல்லை எனவும், அந்த ஒரு பொருளினிடமே இயற்கை செயற்கை இரண்டும் அமைந்திருப்பதைக் கொண்டு, உண்டுமில்லையும் எனவும், அவ்வியற்கை செயற்கை ஆகிய இரண்டையும் ஒரு சொல்லால் கூறவியலாததே சொல்லொணாமை (அவக்தவ்யம்) எனவும், இதுவரை நான்கு பங்கங்கள் ஏற்பட்டன. (இவற்றை 1. ஸ்யாத் அஸ்தி, 2. ஸ்யாத்நாஸ்தி, 3. ஸ்யாத் அஸ்தி நாஸ்தி, 4. ஸ்யாத் அவக்தவ்யம் என்பர் வடநூலார்), இவ்வாறுரைப்பது பிரமாண சப்தபங்கி எனப்படும். இதனையே, நயத்தின் மூலமாகவும் கூறுவதுண்டு. அதாவது  நிச்சய நயம், வியவஹார நயம் எனப் பொதுவாக நயம் இரண்டு விதம். ஒரு ஆத்மன் நிச்சய நயத்தால் என்றும் அழியாத தன்மையுடையதாயினும், வியவஹார நயத்தால் வினைகளின் வசமாகி, நாற்கதிகளிலும் பன்முறைத் தோன்றி மாய்ந்து, பல பிறவிகளில் சுழல்கிறது. அந்தப் பல பிறவிகளையும் ஒருங்கே சொல்ல இயலாததே; சொல்லொணாமை என்று கூறப்படுகிறது. எனவே, ஒவ்வொரு பொருளும் சொல்லொணாமையைப் பொருந்தியுளது என்பதறிக. ஆதலின், சொல்லொணாமை என்ற நான்காம் பங்கத்தோடு, உண்டு, இல்லை, உண்டு மில்லையும் என்ற மூன்றையும் கூட்டி முறையே, 5. உண்மையும் சொல்லொணாமையும், 6. இன்மையும் சொல்லொணாமையும், 7. உண்மையு மின்மையும் சொல்லொணாமை யும் என்று கூறுவது, மற்றைய மூன்று பங்கமாகும். இவ் வேழுவகைக்கு மேல் எவ்வகையில் ஆராய்ந்த போதிலும் வேறு பங்கங்கள் (பிரிவுகள்) பிறவா என்று உணர்க. (கேள்வியினாலேயே, இந்தப் பங்கங்கள் பிறக்கின்றன.) இவற்றை வடநூலார் (ஒக பங்கம், த்வி சம்யோக பங்கம், த்ரி சம்யோக பங்கம் என்பர். அதாவது,) ஒரு பதம் உடைய பங்கம், இரண்டு பதம் சேர்ந்த பங்கம், மூன்று பதம் சேர்ந்த பங்கம் என்பர். அதாவது, உண்மை, இன்மை, உரைக்கொணாமை என்ற மூன்றும் ஒருபதமே உடைய பங்கங்கள், உண்மையும் இன்மையும், உண்மையும் உரைக்கொணாமையும்,  இன்மையும் உரைக்கொணாமையும் என்ற மூன்றும், இரண்டு பதங்கள் சேர்ந்த பங்கங்கள் ; உண்மையு மின்மையும் உரைக்கொணாமையும் என்பது மூன்று பதம் சேர்ந்த பங்கம் என்ப. இங்ஙனம் ஏழுவிதமாகக் கூறும் வழக்கினை,

 

"உண்மை நல் லின்மை யுண்மை யின்மையு முரைக்கொணாமை உண்மை நல் லின்மை யுண்மை யின்மையோ டுரைக்கொணாமை நண்ணிய மூன்றுமாக நயபங்கமேழு"

 

என்று மேருமந்தரச் செய்யுளில் (704.) கூறியுளது கண்டுகொள்க.

 

ஒரே பொருள் இப்படி ஏழுவிதமாக எங்ஙனம் பொருந்துமெனின், ஒரே மனிதன்; தன் மகனை நோக்குழித் தந்தை யென்றும், தன் தந்தையை நோக்குழித் தனயனென்றும், மனைவியை நோக்குழிக் கணவனென்றும், மாமனை நோக்குழி மருகனென்றும், இவ்வாறு பலமுறை யிட்டழைப்பதுபோலப் பொருந்துமென்க. " ஓரேழுபங்க வுரை வரம்பில் குணந்தோறும் ஒரு பொருளுக்கோதி" என்று திருக்கலம்பகத்தில் (81) கூறியிருப்பது காண்க. இவ்வேழு பங்கங்களினாலேயே ஒரு பொருள், நித்தியம், அனித்தியம், பின்னம், அபின்னம், தூயதன்மை, தூயதல்லாத தன்மை முதலிய பல குணங்கள் ஒவ்வொரு வகையால் உள்ளதென உணருவதற்கும், பொருள்களை உள்ளவாறு காண்பதற்கும் தகுதியாகின்றன.

 

        இவற்றை வடமொழியில், 1 ஸ்யாத் அஸ்தி, 2 ஸ்யாத் நாஸ்தி, 3 ஸ்யாதஸ்தி நாஸ்தி, 4 ஸ்யாத் அவக்தவ்யம், 5 ஸ்யாதஸ்தி அவக்தவ்யம், 6 ஸ்யாத் நாஸ்தி அவக்தவ்யம், 7 ஸ்யாதஸ்தி நாஸ்தி அவக்தவ்யம் என்று கூறப்படும். ஸ்யாத் என்பது ஒரு பிரகாரத்தால் என்னும் பொருளுடையது. இதுபற்றியே, 'ஸ்யாத்வாத அமோக லாஞ்சநம்' என்றார் ஆசிரியர்.  "ஸ்யாத்வாத ஸூக்திமணி தர்ப்பண வர்த்தமான " என்று ஸுப்ரபாதத் தோத்திரத்திலும், மற்றும் பல இடத்திலும் கூறியிருப்பது கண்டுகொள்க. இதன் உண்மையை உணராமல் ஜினமதம் " அநேகாந்த வாதமதம். " அதனை, எப்படிச் சொன்னாலும் பொருந்தும் என்று கூறுவார் உரை, அறியாமையின் பாற்படும்.

 

16

மயகா துஷ்க்ருதம் யத்யத் பாபிஷ்டேந துராத்மநா

தத்ஸநிந்தம் ஸகர்ஹஞ்ச முஞ்சே தேவ ப்ரஸாத த: - 16

 

தேவ

பாபிஷ்டே ந

துர்

ஆத்மநா

தஸ்ஸ நிந்தம்

மயகா

ஸகர் ஹம் ச

யத் யத்

துஷ்க்ருதம்

தத்

தேவ ப்ரஸாதத :

ஹி முஞ்சே

 

          ஸ்வாமி ! கொடும் பாவம் செய்தவனும், துர்புத்தி யுள்ளவனுமான என்னால், பிறர் பழி தூற்றுவதற்குக் காரணமான, அதாவது யான் அறிந்தே ஆணவத்தால் செய்த (நிந்தை) கொடுமைகளும், அறியாமையால் செய்து அவ்வாறு செய்தபின் அறிந்து அருவருப்பு (கர்ஹம்) அடைகின்ற கொடுமைகளும், ஆகிய எந்தெந்த கொடுஞ்செயல்கள் உண்டோ, அவையனைத்தையும் நன்கு ஆராய்ந்து உம் அருளால் (இனி உம்மைச் சாட்சியாக வைத்து உம் எதிரிலேயே) சத்தியமாக விட்டு விடுகின்றேன்.

 

       பாப முள்ளவன், பாபந், பாபிகள் இருவரில் ஒருவனைக் காட்டிலும் ஒருவன் மிக்க பாவம் செய்தவன், பாபீயாந் எனப்படும். பாபிஷ்ட்ட:- பாவம் செய்தோர் அனைவரிலும் தலைமை வாய்ந்த கொடும்பாவம் செய்தவன் என்ற பொருள் உடையதாகும். இனி, ஸநிந்தம் என்பதற்கு, என் (ஆத்ம)னை நிந்தித்து; என்றும், கர்ஹம் என்பதற்கு யான் செய்த இந்தத் தோஷத்திற்குப் பரிகாரம் என்ன செய்யவேண்டும் என்று ஆராய்ந்து செய்தல் எனினும் அமையும்.

 

 

ஈர்யாபத சுத்தி :

 

(இடம் விட்டு வேறு இடம் செல்கையில் ஏற்படும் குற்றங்களைப் பரிகரித்தல்)

 

17

கரசரண தநுவிகாதா தடதோ நிஹத ப்ரமாததப் ப்ராணீ

ஈர்யாபதமிதி பீத்யா முஞ்சே தத்தோஷ ஹாந்யர்த்தம்.  -  17

 

(அஹம்) அடத : மம

ப்ரமாதத :

கர சரண தநு

விகாதாத்

ப்ராணீ நிஹத :

ஸ்யாத் இதி பீத்யா

         தத்

தோஷஹாநிஅர்த்தம்

ஈர்யாபதம் முஞ்சே.

 

       (யான்), ஓரிடத்திலிருந்து மற்றோரிடம் செல்கின்ற(போது) என்னுடைய கவனத்தின் குறைவால், வீசிய கைகள், நடந்த கால்கள், உடல் ஆகிய இவைகள் மோதுகின்ற தாக்குதல்களினால், பிறவுயிர்கள் கொல்லப்படுமே என்ற அச்சத்தால் அத்தகைய (கொலைக்) குற்றம் நேராமல் தடுக்கும் பொருட்டு, அவ்வாறு சஞ்சரிக்கும் செயலை விட்டு விடுகிறேன் (எனவே கவனித்து நடக்கின்றேன்).

 

18

படிக்கமாமி பந்தே இரியாவஹியா ஏ விராஹணா ஏ அணாகுத்தே அயிகமணே ணிக்கமணே டாணே கமணே சங்கமணே பாணுக் கமணே பீஜுக்கமணே ஹரிதுக் கமணே உச்சார பஸ்ஸவண கேள ஸிம்மாணய வியடி பயிட்டாவணியா ஏ ஜே ஜீவா ஏ இந் தியா வா வே யிந்தியா வா தே இந்தியா வா சவுரிந்தியாவா பஞ்சேந்தியா வா ணொள்ளிதா வா பெள்ளிதா வா ஸங்கட்டி தா வா ஸங்காதிதா வா உத்தாவிதா வா பரிதாவிதா வா கிரிச்சிதா வா லெஸ்ஸிதா வா சிந்திதா வா பிந்திதா வா டாணதோவா டாண சங்கமணதோ வா தஸ்ஸ உத்தர குணம் தஸ்ஸபாய சித்த கரணம் தஸ்ஸ விஸோஹிகரணம் ஜாவ அரஹந்தாணம் பயவந்தாணம் ணமோக்காரம் கரேமி தாவகாயம் பாவகம்மம் துச்சரியம் போஸராமி, ணமோஹூணம்.  -  18

 

பந்தே

படிக்கமாமி

அயிகமணே

ணிக்கமணே

டாணே

கமணே

சங்கமணே

பாணுக்கமணே

பீஜுக்கமணே

ஹரிதுக்கமணே

உச்சார -

பஸ்ஸவண, கேள

ஸிம்மாணய

வியடி பயிட்டா -

வணியாயே,

இரியா வஹியாயே

அணாகுத்தே

ஏ இந்தியாவா

வே இந்தியாவா

தே இந்தியாவா

சவுர் இந்தியாவா

பஞ்ச இந்தியாவா

ஜே ஜீவா

ணொல்லிதாவா

பெல்லிதாவா

ஸங்கட்டிதாவா

டாணதோவா டாண

சங்கமணதோவா

உத்தாவிதாவா

பரிதாவிதாவா

கிரிச்சிதாவா

லெஸ்ஸிதாவா

சிந்திதாவா

பிந்திதாவா

விராஹணாயே

தஸ்ஸ

உத்தர குணம்

தஸ்ஸ

பாயச்சித்தகரணம்

விசோஹிகரணம்

பயவந்தாணம்

அரஹந்தாணம்

நமொக்காரம்

ஜாவ கரேமி

ணமோஹூணம்

தாவ, காயம்

பாவகம்மம்

துச்சரியம்

போஸராமி.

 

ஞானவானே ! (இறைவனே !) ப்ரதிக்ரமணம் செய்கிறேன் (யான் செய்த குற்றங்களைப் போக்கிக் கொள்ளுகிறேன்). எவ்வாறெனில் ? யான்,  ஓரிடத்திலிருந்து புறப்பட்டு வந்த இடத்திலும், அவ்வாறே புறப்பட்டுச் சென்ற விடத்திலும், நிற்கின்ற விடத்திலும், நடக்கின்ற இடங்களிலும், உலவுகின்ற இடங்களிலும், (இரண்டு இந்திரியம், மூன்று இந்திரியம், நான்கு இந்திரியம் ஆகிய) விகலேந்திரியங்களின் மேல் நடக்கின்ற இடத்திலும், முளைத்த (அங்குரம்) விதையின் மேல் நடக்கின்ற இடத்திலும், பசுமையான புல், பூண்டு முதலியவற்றின் மேல் நடக்கின்ற இடத்திலும், மலம் கழிக்குமிடத்திலும், சிறுநீர் கழிக்கும் இடத்திலும், எச்சில் உமிழும் இடத்திலும், மூக்கு (ச்சளி) சிந்தி எறியும் இடத்திலும், எரி முட்டை (வறட்டி) முதலியவற்றை வீசி எறியும் இடத்திலும் இவ்விதமாகச் செல்கின்ற சமயங்களில், மனம், சொல், உடல் ஆகிய மூன்றின் அடக்கம் இல்லாத காரணத்தினால், ஓர் அறிவு உள்ள உயிர், ஈர் அறிவு உள்ள உயிர், மூவறிவு உள்ள உயிர், நாலறிவு உள்ள உயிர், ஐயறிவு உள்ள உயிர் ஆகிய எந்த உயிர்கள் ; தம் விருப்பமான இடத்துக்குப் போகாமல் தடுக்கப்பட்டனவோ ; விருப்பமான இடத்திலிருந்து ஓட்டப்பட்டனவோ, மோதப்பட்டனவோ, கொல்லப்பட்டனவோ, அவைகள் உள்ள இடத்திலேயாவது, அவைகள் உலவுகின்ற இடங்களிலேயாவது, அவைகளைக் கிளப்பி ஓட்டப்பட்டனவோ, அல்லது, அவைகள் தவிக்குமாறு செய்யப்பட்டனவோ, பொடிப் பொடியாக்கப் பட்டனவோ, மூர்ச்சை அடைவிக்கப்பட்டனவோ, அறுத்துச் சேதிக்கப்பட்டனவோ, பிளக்கப்பட்டனவோ இவ்விதமாக (விகரித்து) ச் செல்லும் காலங்களில், அவ்வுயிர்களுக்குப் பல்வேறு பீடைகள் செய்யப்பட்டிருக்குமானால் ? அத்தகைய தீய செயல்களி னின்றும் நீங்கி மேன்மையான குணம் பெறச் செய்வதும், அத் தீயசெயல் நீங்குவதற்குத் தக்க பரிஹாரமானதும் (கழுவாயும்), அத்தீய செயல் தன்னிடம் சேராமல் தடுக்கும் விசோதி பரிணாமம் தருவனவும் ஆகிய பகவான் அருகத் பரமேஷ்டியினுடைய வணக்கத்தை (நமோங்கார மந்திரத்தை) எவ்வளவுக்கெவ்வளவு செய்கிறேனோ, அவ்வளவுக் கவ்வளவு என்னுடைய உடலை வளர்ப்பதனையும், தீய தீவினைகளைச் சேகரிப்பதனையும், தீய செயல்களில் நிகழ்வதனையும், விட்டு விலகுகின்றேன்.

 

           எனவே, தீய செயல்களில் நீங்கி வணங்குவதனால், நல்வினை மிகப் பெற்று, மேலே செய்ததாகக் கூறிய தீவினைகளுக்கு ஓரளவு பரிகாரமாவது அறிதற்பாலது. பாணுக் கமணே, என்றது விகலேந்திரியங்களை குறிக்கும். பீஜம் - விதை. ஹரிதம் - புல் பூண்டு. உச்சார - மலம் கழித்தல், பஸ்ஸவண - சிறுநீர் கழித்தல். கேள - எச்சில் உமியல். ஸிம்மாணய - மூக்கு சிந்துதல். குப்தி என்பதற்கு குத்தே என்றது பாகவதம். கிரிச்சிதா, என்பது பொடியாக்குதல். லெஸ்ஸிதா - மூர்ச்சையடையச் செய்தல்.

 

 

"நாசாமலந்து ஸிம்காணம்" என்பது அமரம்.

 

 

19

நம: பரமாத்மநே நமோநே காந்தாய சாந்தய

ஈர்யாபதே ப்ரசலதாத்ய மயா ப்ரமாதாத்

ஏகேந்த்ரிய ப்ரமுக ஜீவ நிகாய பாதா

நிர்வர்த்திதா யதி பவேத யுகாந்தரேக்ஷா

மித்யாததஸ்து துரிதம் குருபக்திதோ மே.  -  19

 

பரமாத்மநே நம:

அநேகாந்தாய நம:

சாந்தயேநம:

       (அஹம்)

அத்ய ஈர்யாபதே

ப்ரசலதாமயா

அயுக அந்தர ஈக்ஷா

ப்ரமாதாத்

ஏகேந்த்ரிய

ப்ரமுக ஜீவநிகாய

பாதா நிர்வர்த்திதா

யதிபவேத்

தத்துரிதம்

மே குருபக்தித:

மித்யா அஸ்து.

 

        முக்தியடைந்த பரமாத்மனுக்கு நமஸ்காரம், ஸ்யாத்வாத தத்துவத்தை விளங்க உபதேசம் செய்த ஸ்வாமிக்கு நமஸ்காரம், கலக்கமற்ற பரம சாந்தி மயமான ஸ்வாமிக்கு நமஸ்காரம், யான் இப்பொழுது நடக்கின்ற (சஞ்சரிக்கின்ற) வழியில், நடந்து செல்கின்ற என்னால், என் எதிரில் ஒரு நுகத்தடி அளவு, கூர்ந்து நோக்கிச் செல்லாததனால், (ஜாக்கிரதை யென்னும் கவனம் இல்லாத காரணத்தினால்) ஒரு பொறி முதலாக, ஐம்பொறி வரையிலும் உள்ள ப்ராணிகளின் சமூகங்களுக்குப் பீடை ஏற்பட்டிருக்குமாயின், அதனால், என்னிடம் வந்து சேரும் தீவினைகள், யான் செய்யும் பஞ்ச குருபக்தியினால் அவை, பயனளிக்காமல் வீணாகப் போகட்டும்.

 

20

      இச்சாமி பந்தே இரியா வஹியஸ்ஸ ஆளோசேவும் புவ்வுத்தர தக்கிண பச்சிம சவுதிஸு விதி ஸாஸு விஹரமாணேண ஜுகந்தர திட்டிணா தட்டவ்வா டவடவ சரியாயே பமாத தோஸேண பாணபூத ஜீவஸத்தாணம் ஏதேஸிம் உவகாதோ கதோவா காரி தோவா கீரந் தோவா ஸமணு மணிதோ தஸ்ஸ மிச்சாமே துக்கடே  -  20

 

பந்தே!

இரியா வஹியஸ்ஸ

ஆளோசேவும்

இச்சாமி

புவ்வ தக்ஷிண

பச்சிம உத்தர

சவுதிஸு

விதிஸாஸு

ஜுகந்தர திட்டிணா

விஹரமாணேந

மயா

தட்டவ்வா

பமாத தோஸேண

டவடவ சரியாயே

பாண

பூத

ஜீவ

ஸத்தாணம்

ஏ தேஸிம்

உவகாதோ

க தோவா

காரி தோவா

ஸம்ப்ரதி

மயா

கீரந்தோவா

ஸமணு மணிதோவா

தஸ்ஸதுக்கடே

மிச்சா

மே ஹொந்து

 

      ஞான ஸ்வரூபனான பகவந்தனே ! யான், நடக்கும் வழியில் ஏற்படும் ப்ராணிபீடா தோஷத்தை (உள்ளத்தே ஆராய்ந்து) ஆலோசிப்பதற்கு விரும்புகிறேன். எவ்வண்ணமெனில்? கிழக்கு,தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய நான்கு திக்குகளிலேயும், தென் கிழக்கு முதலான நான்கு மூலைகளிலேயும், ஒரு நுகத்தடி யளவு (நான்கு முழ தூரம்) கூர்ந்து நோக்கி நடக்கும் என்னால், ஒருபொறி முதலாக, ஐம்பொறி எல்லையாகவுள்ள உயிர்கள் காணப்படுகின்ற விடத்திலே, ஜாக்கிரதை (எச்சரிக்கை) யில்லாமல், படபடவென்று வேகமாக நடக்கும்போது (2, 3, 4 பொறிகளாகிய) விகலேந்திரிய ஜீவன்கள்; மண், நீர், நெருப்பு, காற்று ஆகிய இவைகளையே உடலாகவுடையனவும், புல், பூண்டு முதலியனவுமாகிய ஏகேந்திரிய ஜீவன்கள்; ஐம்பொறியில் வாழும் பஞ்சேந்திரிய ஜீவன்கள்  ஆகிய சமூகமான இவைகளுக்கு (என்னால்) நாசமாகத்தக்க பீடை செய்யப்பட்டாலும், (பிறரை ஏவி) செய்விக்கப்பட்டாலும், (என்னால் இப்போது) தற்சமயம் செய்து கொண்டிருந்தாலும், இத்தகைய குற்றங்களைப் பிறர் செய்கின்றபோது (யானும் சம்மதத்தோடு) அனுமதிக்கப்பட்டாலும், அத்தகைய பீடைகளுக்கு (நாசத்துக்கு)ச் சம்பந்தமான தீயசெயல் வீணாக பொய்யாக ஆகட்டும் (எனக்குப் பயனளிக்காதிருக்கட்டும்).

 

21

 

பாபிஷ்ட்டேந துராத்மநா ஜடதியா

       மாயாவிநா லோபிநா

ராக த்வேஷ மலீமஸேநமயகா*

         துஷ்க்கர்ம யந்நிர்மிதம்

த்ரைலோக்யாதி பதே ஜிநேந்த்ர பவதச்

          ச்ரீ பாத மூலே துநா

நிந்தா பூர்வமஹம் ஜஹாமி ஸததம்

            நிர்வ்ருத்தயே கர்மணாம். -  21

 

 

த்ரைளோக்ய அதிபதே,

ஜிநேந்த்ர

பாபிஷ்டேந துர்

ஆத்மநா ஜடதியா

மாயாவிநா

லோபிநா ராக- த்வேஷ

மலீமஸேந

மயகா யத்

துஷ்கர்ம நிர்மிதம்

தத் அஹம் பவத : ஸ்ரீ

பாதமூலே ஸததம்

கர்மணாம்

நிர்வ்ருத்தயே

அதுநா

நிந்தா பூர்வம்

ஜஹாமி.

 

         மூவுலகத்துக்கும் இறைவனான ஜிநேந்திரனே ! கொடும்பாவம் செய்தவனும், துஷ்டத்தனம் மிக்கவனும், உண்மையை அறிய வியலாத மந்தபுத்தி யுடையவனும், கபட முள்ளவனும், உலோபத் (தனத்)தால் பேராசை மிக்கவனும், உள்ளத்தே (ராக த்வேஷங்களென்னும்) ஆர்வ செற்றங்களாகிய மாசு படிந்தவனும் ஆகிய, என்னால் எத்தகைய தீவினை செய்யப்பட்டதோ, அதனை யான் உம்முடைய திருவடிகளிலே கீழ்ப்படிந்து இனி, எப்போதும் அந்தத் தீயவினை நிருச்சரை அடையும் பொருட்டு இப்பொழுது (என்னை விட்டு விலகும் பொருட்டு) முதலாவதாக என்னை நிந்தித்துக்கொண்டு, தியாகஞ் செய்கிறேன்.(தீய செயலை விட்டு விடுகிறேன்)

 

 

ஸாமாயிகம்

 

22

நமச் சரீ வர்த்தமாநாயா நிர்த்தூத கலிலாத்மநே

ஸாலோகாநாம் த்ரிலோகாநாம் யத்வித்யா தர்ப்பணாயதே.  -  22

 

யத் வித்யா

ஸ அலோகாநாம்

த்ரிலோகாநாம்

தர்ப்பணாயதே

(தஸ்மை) நிர்த்தூத

கலில ஆத்மநே

ஸ்ரீ வர்த்தமாநாய

நம:

 

         எந்த பகவானுடைய கேவல ஜ்ஞானம் அனந்தானந்த மயமாகிய அலோகத்தோடு கூடிய மூவுலகத்திற்கும் கண்ணாடி போல் ஆசரிக்கிறதோ (பிரதிபலிக்கிறதோ) அத்தகைய ஞானஸ்வரூபியும், கர்ம மலங்கள் அனைத்தையும் கெடுத்தவரும், அந்தரங்க பஹிரங்க லக்ஷ்மிநாயகருமான, மகா வீரருக்கு நமஸ்காரம் செய்கிறேன்.

 

     உலகம் முற்றிலுமுள்ளவற்றை அறிந்து, அறிந்தவாறே அறிவிக்கின்றமையின், ஸ்வாமி (யின் அறிவு) க்குக் கண்ணாடி உவமையாயிற்று. எண்ணற்ற பல கடல்களும் தீவுகளும் சூழ்ந்த இம் மண்ணுலகத்திற்குக் கீழே ஏழு கயறும் மேலே ஏழு கயறும் ஆக உயரம் பதினாலு கயறும், தெற்கு வடக்கு நீளம் ஏழு கயறும், கிழக்கு மேற்கு அகலம் அடியில் ஏழுகயிறும் (நாம் வசிக்கும் இடமாகிய) மத்தியில் ஒரு கயிறும், பிரம்மகல்ப்ப அந்தியத்தில் ஐந்து கயிறும், சித்தர் உலகில் ஒரு கயிறும் ஆக, முந்நூற்று நாற்பத்து மூன்று கயற்றளவுள்ளதும், மூன்றுவகை காற்று வலையங்களால் சூழப்பட்டதும், மற்றும் உயிர் முதலிய அறுவகைத் திரவியங்களும் உள்ள இடமே உலகம் என்றும், அதனைச் சூழ எப்பக்கமும் அனந்தானந்த மயமாகிய ஆகாச ப்ரதேசம் மட்டிலும் உள்ள இடம் அலோகம் என்றும் கூறப்படும். இதனை விவரமாக அறியவேண்டின் பாண்டவ புராணம் இரண்டாம் பாகம் (2609, 2610) சுலோகங்களின் உரையிலும்; மற்றும், சூளாமணி, ஸ்ரீபுராணம், கரதல லோகாணி முதலியவற்றிலும் கூறியுள்ளன, ஆங்குக் கண்டு கொள்க.

      

23

ஜிநேந்த்ரமுந்மூலித கர்மபந்தம்

    ப்ரணம்ய ஸந்மார்க்க க்ருத ஸ்வரூபம்

அநந்த போதாதி பவம் குணெளகம்

    க்ரியா கலாபம் ப்ரகடம் ப்ரவக்ஷ்யே.  -  23

 

உந்மூலித

கர்ம பந்தம்

ஸந்மார்க்க

க்ருத ஸ்வரூபம்

அநந்த போதாதி

பவம் குணெளகம்

ஜிநேந்த்ரம் ப்ரணம்ய

க்ரியா கலாபம்

ப்ரகடம்யதா ததா

ப்ரவக்ஷ்யே

 

       வினைகளின் சேர்க்கை முழுவதையும் நாசஞ் செய்தவரும், முக்தி அடையும் வழியை (மோக்ஷமார்க்கத்தை) நன்முறையில் அருளிச் செய்தவரும், கடையிலா ஞானம் முதலான (வைகளால் ஏற்பட்ட) குணசமூகங்களை யுடையவரும், ஆகிய ஜிநேந்திரனைப் பக்தி பூர்வகம் வணங்கி, தினந்தோறும் செய்ய வேண்டிய விதிகளை (கிரியைகளை) யாவரும் அறியும் வண்ணம் தெளிவாகச் சொல்வோம் என்றனர்.

 

         ஈண்டு, "அனந்த போதாதி" என்றது, நவ கேவல லப்தியைக் குறிப்பதாகும். அது, மேலே 25 ஆம் சுலோகத்தில் கூறப்படும். இனி, கடையிலா ஞானம் முதலிய எண்குணங்களைக் குறிப்பிட்டார் எனினுமாம். ஈண்டு, "கிரியா கலாபம் " என்று கூறியதைக் கொண்டே இந்தப் புத்தகத்துக்கு கிரியா கலாபம் என்ற பெயர் அமைத்துள்ளேன்.

 

சுபோபயோகத்தின் தன்மையை வருணித்தல்

            

24

யஸ்ஸர்வாணி சரா சராணி விவித த்ரவ்யாணி தேஷாம்

பர்யாயாநபி பூத பாவி பவத: ஸர்வாந் ஸதா ஸர்வதா

ஜாநீதே யுகபத் ப்ரதிக்ஷணமதஸ் ஸர்வஜ்ஞ இத்யுச்யதே

ஸர்வஜ்ஞாய ஜிநேச்வராய மஹதே வீராய தஸ்மை நம:  -  24

 

ய: ஸர்வாணி

சர அசராணி

விவித த்ரவ்யாணி

தேஷாம் குணாந்

பூத பாவி பவத:

பர்யாயாந்

ஸர்வாந் அபி

ஸதா ஸர்வதா

ப்ரதிக்ஷணம் யுகபத்

ஜாநீதே அத:

ஸ: ஸர்வஜ்ஞ:

இதி உச்யதே

தஸ்மை ஸர்வஜ்ஞாய

ஜிநேச்வராய

மஹதே

வீராய நம:

அஸ்து.

 

        எவர் சமஸ்தமான (பல்வேறு வகையினதாகிய) ஈரறிவு, மூவறிவு, நாலறிவு, ஐயறிவு ஆகிய, ஓர் இடம் விட்டு வேறு இடம் செல்லும் உயிர்களையும், இருக்கும் இடம் விட்டுப் பெயர வியலாத ஓரறிவு உயிர்களையும், அவைகளின் முக்காலத்து நிகழும் குணங்கள், பரியாயங்கள் ஆகிய நிகழ்ச்சிகள் அனைத்தையும், அனந்தங் காலத்திற்கும் அழியாமல், பிரத்தியக்ஷமாக சமயம் சமயந்தோறும் ஒருங்கே (ஒரு தடவையிலேயே) அறிகின்றாரோ, அத்தகைய கேவல ஜ்ஞானத்தையுடைய அவர், ஸர்வக்ஞன் எல்லாம் அறிந்தவர் என்று சொல்லப்படுகிறார். அத்தகைய கேவல ஜ்ஞானத்தினால் சமஸ்தத்தையும் அறிந்தவரும் வினைவென்றவர் யாவரிலும் சிறந்தவருமாகிய மகாவீரர் (வர்த்தமானர்) பொருட்டு நமஸ்காரம் செய்கிறேன்.

 

       சராசரங்களையும், அவைகளின் குண பரியாயங்களையும், அவைகள் முக்காலத்து நிகழும் நிகழ்ச்சிகள் அனைத்தையும், மற்றுமுள்ள இதர திரவியங்களையும், சமயம் சமயந்தோறும் ஒருங்கே பிரத்தியக்ஷமாக அறியும் ஞானம் கேவலஜ்ஞானம். அத்தகைய ஞானத்தை அடைந்தவர் 'பகவான் மகாவீரர்'. அவரை வணங்கிச் சுபோபயோகத்தைப் பெறுவோம் என்றனர்.

 

        ஞானாவரணீயம், தரிசனாவரணீயம், மோஹநீயம், அந்தராயம் ஆகிய காதி கர்மங்களை வென்று, கேவல ஜ்ஞானம், கேவலதரிசனம், கேவல இன்பம், கேவல வீரியம் ஆகிய நான்கு குணங்களையடைந்த பகவான், (மேகத்தால் மறைக்கப்படாத சூரியன் போல) லோகா லோகத்திலுள்ள சமஸ்தத்தையும், ஞானத்தால் அறிந்து, அறிந்தவாறே நூல் முகமாக நமக்குத் தெரிவித்ததனால், அவரை வணங்கும் கடமை ஏற்படுகிறது. கேவலஞானம் - அஸஹாயமான ஞானம். அதாவது இந்திரியாதி சகாயமின்றித் தோன்றும் சம்பூர்ண ஞானம் 'கேவல ஜ்ஞானம்' என்பர். அஷ்ட பதார்த்த சாரத்திலும். (ஸர்வம் - சமஸ்தத்தையும், ஞ:- அறிந்தவன்) "பூத பாவி பவத: " இறந்த காலம், எதிர்காலம், நிகழ்காலம் ஆகிய முக்காலத்தையும் குறிப்பிட்டதாகும். மகாவீரர், கடைசி தீர்த்தங்கரராகிய வர்த்தமானர்.

 

சுத்தோப யோகத்தை யுடையவர் அடையும் கதியினைக் கூறுகின்றார்.

 

25

யே ப்யாஸயந்தி கதயந்தி விசாரயந்தி

  ஸம்பாவயந்தி ச முஹுர் முஹுராத்ம தத்வம்!

தே மோக்ஷமக்ஷய மநூந மநந்த ஸௌக்யம்

  க்ஷிப்ரம் ப்ரயாந்தி நவ கேவல லப்தி ரூபம்!!  -  25

 

யே ஆத்ம தத்வம்

முஹுர் முஹு :

அப்யாஸயந்தி

கதயந்தி

விசாரயந்தி

ஸம்பாவயந்தி

ச தே

அக்ஷயம்

அநூநம்

அநந்த ஸௌக்யம்

நவ கேவல லப்தி ரூபம்

மோக்ஷம்

க்ஷிப்ரம் ப்ரயாந்தி

 

         யாவர் சிலர், ஆத்மனுடைய உண்மை ஸ்வரூபத்தை அடிக்கடி அப்பியாசித்து (ச்சிந்தித்து)ப் பழகுகின்றார்களோ, ஒருவரோடு ஒருவர் பேசுகின்றார்களோ, (அல்லது உபதேசம் செய்வதும், உபதேசம் பெறுவதுமாகின்றார்களோ), அடிக்கடி ஆலோசிக்கின்றார்களோ, நன்முறையில் எண்ணித் தியானிக்கின்றார்களோ, அவர்கள் ஒருக்காலும் கேடில்லாததும், குற்றங்குறை எதுவுமில்லாததும், கடையிலா இன்ப முதலாகிய நவகேவல லப்தி மயமானதும் ஆகிய பாவ மோக்ஷத்தை (பரிணாமத்தால் எய்தும் கைவல்யத்தை) விரைவில் அடைகிறார்கள்.

 

     மேலே (24 - ல்) இறை வணக்கம் செய்தலாகிய சுபோப யோகத்தைக் கூறிய ஆசிரியர், ஈண்டு, தன் ஆத்மனையே முக்கியமாகத் தியானித்து முதலில் காதி கர்மங்களை வென்று, நவகேவல லப்தியையும், குணத்தாலடையும் கைவல்யத்தையும் பெற்று அருகத் பதவி அடைந்துப் பின்னர், அகாதி கர்மங்களையும் வென்று திரவிய மோக்ஷத்தையும் சித்தர் பதவியையும் அடைவதற்கு முதற் காரணமான சுத்தோப யோகத்தைப் பற்றிக் கூறினார். அதாவது, யோகம்; தியானம் எனவும் வழங்கும். அது விரிவகையால் பலவிதமாயினும், தொகைவகையால் மூன்று வகைப்படும். அவை - அசுபோப யோகம், சுபோப யோகம், சுத்தோப யோகம் என்பன. அவற்றுள்,

 

1. அசுபோப யோகம்:--

      தீயவாஞ்சை, கோபம் முதலிய எண்ணங்களுடையதும், பிறவித் துன்பத்திற்குக் காரணமாகியதுமாகும். இது ஆர்த்தத் தியானம், ரௌத்திரத் தியானம் என்ற இரண்டும் உடையது.

 

2. சுபோப யோகம்:--

      தூய வாஞ்சை, இறைவன் வணக்கம், ஜீவகாருண்யம் முதலிய தூய எண்ணங்களுடையதும், தர்மானுபந்தி புண்ணியம் உயிருடன் சேர்வதற்கும்,  சுத்தோப யோகத்திற் பொருந்தச் செய்வதற்கும் காரணமாகியதுமாகும். இதனை, தர்மத் தியானம் என்றும், வியவஹார இரத்தினத் திரய பாவனையென்றும் கூறுவர்.

 

3. சுத்தோப யோகம்:--

       இறைவன் வணக்கம் முதலிய யாதோர் எண்ணமுமின்றி, நல்வினை தீவினை இரண்டையும் தகர்த்துக் கைவல்யம் எய்துதற்குக்  காரணமான தன்னுடைய தூய உயிர் ஒன்றனையே எண்ணுவதாகும். இதனைச் சுக்கிலத் தியானம் என்றும், (பாலனைய சிந்தை என்றும்) நிச்சய இரத்தினத் திரய பாவனை யென்றும் கூறுவர்.

 

         இறைவனை வணங்குவதும் நல்வினைகளுக்குக் காரணமாதலின், நல்வினை தீவினை இரண்டையும் தகர்ப்பவரான சுத்தோப யோகிகளுக்கு இறைவன் வணக்கம் வேண்டா வென்க. ஆகவே, " ஆத்ம தத்வம் முஹுர் முஹு: அப்யா சயந்தி " யென்றார். (திரும்பத்திரும்ப ஆத்ம பாவனையிலேயே சிந்தை செலுத்துதல் என்பதாகும்). " சேதியின் நெறியின் வேறு சிறந்தது சிந்தை செய்யா சாது " என்றார் யசோதர காவியம்; 56- ஆம் செய்யுளிலும்,

 

      மோக்ஷம் - கைவல்யம், கேவலஜ்ஞானத்தைப் பெற்று அடையும் முக்தி நிலை. அது, குணத்தாலடைந்த கைவல்ய நிலை, குணத்தாலும் திரவியத்தாலும் அடைந்த கைவல்ய நிலை என இருவகைப்படும். பாவ மோக்ஷம், திரவிய மோக்ஷம் என்பர் வடநூலார். இதனை, மேரு மந்தரம் (105, 106 -ஆம்) செய்யுட்களால் அறியலாகும். ஈண்டு, பாவம் - பரிணாமம். பாபம் அல்ல.

 

      இனி, சுத்தோப யோகத்தை யுடையார் குணத்தாலடையும் கைவல்ய நிலையையும், நவ கேவல லப்தியையும் அடையும் விதம் எங்ஙனம் எனின்? வினைகள்  காதி, அகாதி என இரண்டு வகைப்படும். அவை ஒவ்வொன்றும் நான்கு பிரிவினை யுடையதாக வினைகள் எட்டாகும். அந்த எட்டின் உட்பிரிவினால் வினைகள் நூற்று நாற்பத்தெட்டாகும்.

 

காதி வினைகளும் அவற்றின் உட்பிரிவும்

 

1. ஞானாவரணீயம் -  5

2.தரிசனாவரணீயம்-  9

3. மோஹநீயம்.     -     28

4. அந்தராயம்.         -     5

                                   ----------

                          ஆக.     47

                                   ----------

 

அகாதி வினைகளும் அவற்றின் உட்பிரிவும்

 

1. வேதனீயம்        -   2

2. ஆயுஷ்யம்         -   4

3. நாமம்                  -93

4. கோத்திரம்         -  2

                            -----------

                    ஆக     101

                            -------------

1.ஞானாவரணீயம்:--

 

           உயிரின் இயற்கையான அறிவை விளங்கவொட்டாமல் மறைப்பது (ஆவரணீயம் - மறைத்தல்).

 

2.தரிசனாவரணீயம்:--

 

         உயிரின் இயற்கையான தரிசனத்தை விளங்கவொட்டாமல் மறைப்பது.

 

3. மோஹநீயம்:--

 

          கட்குடியனை, கள் மயக்குவது போல  உயிரை மயங்கச் செய்வது.

 

4. அந்தராயம்:--

 

          தானம், லாபம் முதலியவற்றைப் பெறவொட்டாமல் தடுப்பது.

 

5. வேதனீயம்:--

 

         உயிருக்கு இன்ப துன்பங்களை உண்டு பண்ணுவது.

 

6. ஆயுஷ்யம்:--

         காலிற் பூட்டிய இரும்புத் தளை (விலங்கு) போல உயிரை நாற்கதிகளிலும் தங்கிச் சுழலச் செய்வது.

 

7. நாமம்:--

 

        ஓர் ஓவியன் பல சித்திரம் வரைவது போல உயிருக்கு உடல் முதலிய அவயங்களை அமையச் செய்வது.

 

8. கோத்திரம்:--

 

         சிறிதும் பெரிதுமாகிய பாண்டங்களைச் செய்யும் குயவனைப் போல, உயிரை தூய உச்ச, நீச குலங்களிற் பிறக்கச் செய்வது.

 

 

       இவற்றை இன்னும் விரிவாக அறியவேண்டின் மேருமந்தரம் 613, 614 - ஆம் செய்யுட்களிலும், மற்றும் கர்மஸ்வரூபம் முதலிய நூல்களிலும் கண்டு கொள்க. ஆன்ம குணத்தைக் கெடுப்பது காதி வினையே ஆகும். (காதம் - கெடுப்பது) ஈண்டு, அதன் பிரிவு நாற்பத்தேழாக இருப்பினும், அகாதி வினையின் பிரிவான, நாமகருமத்தில் பதின்மூன்றும் ஆயுஷ்யத்தில் மூன்றும் சேர்ந்து, காதிவினை அறுபத்து மூன்று என்றும், அகாதிவினை எண்பத்தைந்து என்றும் கூறப்படும். இதனை, "ஆயிடை யெண்பத்தைந்து வினைவிட்ட வக்கணத்தே, போயுலகுச்சி புக்கான் பொருந்தி யெண் குணங்களோடும் " என்று மேருமந்தரத்தில் (811 - ஆம் செய்யுளில்) கூறுவதனால் அறியலாகும்.

 

      இனி, காதி வினைகளின் பிரிவு நான்கிலும் மோஹனீயம் வலி மிக்கதாதலின் அதனை முன்னால் கொடுத்த பிறகே மற்ற வினைகளை வெல்ல முடியும்.

 

" முடிவிலா கொடுமைத்தாய மோஹந்தான் முன்னமில்லா

    கடிய தீவினைகளெல்லாம் கட்டவே தானுங்கட்டும்

கெடுவழிதான் கெடாமுன் கேடெந்த வினைக்கும் ஒட்டாது

    அடுதலுக்கரிய மோஹமரசனாம் வினைகட் கென்றான். "

          என்று மேரு மந்தரத்தில் (615 - ல்) கூறுவது காண்க.

 

இனி, பாகத (ப்ராக்ருத) மொழியில் கூறும் ஆன்ம பாவனையைக் கூறுகிறார்.

 

26

கமாமி ஸவ்வ ஜீவாணம் ஸவ்வே ஜீவா கமந்து மே

மெத்திமே ஸவ்வ பூதேஸு வேரம் மஜ்சம் ந கேணசித். - 26

 

ஸவ்வ ஜீவாணம்

கமாமி, ஸவ்வே

ஜீவா மே கமந்து

ஸவ்வ பூதேஸு

மே மெத்தி பவது

கேநசித் மச்சம்

வேரம் ந அஸ்தி

 

      யான், எல்லா ஜீவன்களுடைய குற்றமனைத்தையும் (அவைகள் மேல்) வெறுப்படையாமல் பொறுத்துக் கொள்கிறேன்; எல்லா ஜீவன்களும் என்னுடைய குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளட்டும். (எனவே யான் யாதொரு குற்றமும் செய்யாதிருக்கிறேன்) ; எல்லா ஜீவன்களிடத்திலும் எனக்கு ஸ்நேகமான (அன்பான)து ஆகட்டும் ; எந்த ஜீவன்களோடு எனக்குப் பகை (வைரம்) இல்லை.

 

27

அசரண மசுபமநித்யம் துக்கமநாத்மாநமாவஸாமி பவம்

மோக்ஷஸ் தத் விபரீதாத்மேதி த்யாயந்து ஸாமாயிகே. - 27

 

அசரணம்

அசுபம்

அநித்யம்

துக்கம்

அநாத்மாநம்

பவம்

ஆவஸாமி

மோக்ஷ:

தத்விபரீத ஆத்மா

இதி ஸாமாயிகே

பவந்த:

த்யாயந்து

 

        எவராலும் (துன்பம் அணுகாமல்) காப்பாற்ற முடியாததும், நன்மையில்லாத (தீமையே ஸ்வரூபமான)தும், ஸ்திரமில்லாத (சஞ்சலத்தோடு கூடிய)தும், (இன்பமில்லாத) துன்பமயமானதும், ஆன்ம ஸ்வரூபத்துக்கு வேறாகிய (புத்கலமயமான)தும், ஆகிய இப்பிறவிச் சுழற்சியில்(உடலில்), அனாதிகாலமாகச் சுழன்று வசிக்கிறேன்; (யான் எய்தவேண்டிய) முக்தி(யின்பம்) என்பது ; இப்பிறவிச் சுழற்சிக்கு மாறான தன்மையது, (அதாவது, சரணமுடையதும், சுபமானதும், சாஸ்வதமானதும், இன்ப மயமானதும், ஆத்மனாலேயே சாதிக்கக் கூடியதுமாகும்) என்று, சமதாபாவத்தில் (சாமாயிக பக்தி செய்யுமிடத்தில்) எம்மைப் போலவே, நீங்களும் தியானியுங்கள்.

 

அருகன் துதி

 

29, 30

 

ஸித்தம் ஸ்ம்பூர்ண பவ்யார்த்தம் ஸித்தே: காரண முத்தமம்

ப்ரசஸ்த தர்சந ஜ்ஞான சாரித்ர ப்ரதி பாதிநம்.

ஸுரேந்த்ர மகுடாச்லிஷ்ட பாத பத்மாம்சு கேஸரம்

ப்ரணமாமி மஹாவீரம் லோக த்ரிதய மங்களம். – 29, 30

 

ஸித்தம் ஸம்பூர்ண

பவ்யார்த்தம் ஸித்தே:

உத்தமம் காரணம்

ப்ரசஸ்த தர்சந

ஜ்ஞான சாரித்ர

ப்ரதிபாதிநம்

ஸுரேந்த்ர மகுட

ஆச்லிஷ்ட பாத பத்ம

அம் சு கேஸரம்

லோக த்ரிதய

மங்களம் மஹாவீரம்

ப்ரணமாமி

 

        நல்வினையாளரான பவ்வியர்களுக்கு உரிய அறவுரையின் பயன் நிறைந்தவரும், அவர்கள் (பவ்வியர்கள்) முக்தி யடைவதற்கு மூலகாரணமானவரும், நற்காட்சி, நன்ஞானம், நல் ஒழுக்கம் ஆகிய மூன்றும் நிறைந்த பிறகே முக்தி அடைய முடியும் என்று முடிவு கூறியவரும், தேவேந்திரன் (வணங்கும்போது தன்) மகுட மணியின் கிரணங்கள் பற்றப்பட்ட திருவடித் தாமரையின் கிரணமாகிய கேசரத்தை யுடையவரும், மூவுலகிற்கும் முக்கிய மங்களமாயிருப்பவருமான மஹாவீர பகவானை நமஸ்கரிக்கின்றேன்.

 

       கேஸரம் என்பது, தாமரையின் மகரந்தத்தாள் கர்ணிகையைச் சூழ்ந்து, சுற்றிலும் உள்ளன; தாமரை இதழ்களின் உட்புறத்தே (நடுவில்) மகரந்தத்தோடு கூடி விளங்குவது அது. கிரீடங்களின் கிரணங்கள் கேஸரமாகவும், திருவடிகளைத் தாமரைகளாகவும் உருவகம் செய்துள்ளனர் ஆசிரியர்.

 

     அசரீரி (சித்தர்) துதி

 

31

ஸித்த வஸ்துவசோ பக்த்யா ஸித்தாந் ப்ரணமதாம்

ஸித்த கார்ய்யாச்சிவம் ப்ராப்தா ஸித்திம் ததது நோவ்யயாம். -  31

 

ஸித்த வஸ்து

வசோ பக்த்யா

சித்தாந் ஸதா

ப்ரணமதாம்

ந: , ஸித்த கார்யா :

சிவம் ப்ராப்தா :

ஸ : அவ்யயாம்

சித்திம்

த த து

 

           சித்த பரமேஷ்ட்டிகளைத் துதிக்கத் தக்க பதங்கள் அமைந்த தோத்திரப் பாமாலையைக் கூறிக்கொண்டு, பக்தியுடன் சித்த பரமேஷ்ட்டிகளை எப்போதும் வணங்குகின்ற நமக்கு, தாம் செய்ய வேண்டிய காரியமனைத்தையும் பாக்கியின்றிச் செய்து முடித்த (க்ருத க்ருத்யராகிய)வரும், கைவல்யத்தை அடைந்தவருமான சித்த பரமேஷ்ட்டிகள், ஒருகாலும் அழிவென்பதே யில்லாத (கேடில்லாத) கைவல்ய பதவியை அளிக்கட்டும்.

 

      இனி, வஸ்து ஸ்தவம், ரூப ஸ்தவம், குண ஸ்தவம் என்ற மூன்று விதமான துதிகளில், சித்தர் அசரீரியாதலின், வஸ்து தவம், குணஸ்தவம் என்ற இரண்டையும் கூறினார் எனினும் அமையும்.

 

 

சித்தர்களோடு சாதுக்களையும் துதிக்கின்றார்.

 

32

நமோஸ்து துதபாபேப்ய: ஸித்தேப்ய: ரிஷி ஸம்ஸதே

ஸாமாயிகம் ப்ரபத்யேஹம் பவப்ரமண ஸூதநம். -  32

 

துத பாபேப்ய:

ஸித்தேப்ய :

துத பாபேப்ய:

ரிஷி ஸம்ஸதே

நம : அஸ்து

தத: அஹம்

பவ ப்ரமண

ஸூதநம்

ஸாமாயிகம்

ப்ரபத்யே

 

       நல்வினை தீவினைகளை முழுவதும் கெடுத்தவரான சித்த பரமேஷ்டிகளுக்கும்; நல்வினை தீவினைகளை கெடுக்கத்தக்க ஆசாரியர்,  உபாத்தியாயர், சர்வசாதுக்கள் ஆகிய சாது பரமேஷ்டிகள் மூவருக்கும், யான் செய்யும் வந்தனையோடு கூடிய துதி சேரட்டும். அதன் பிறகே, யான் பிறவிச் சுழற்சியை ஒழிக்கத்தக்க சாமாயிகத்தை (சமதாபாவத்தை அதிசயமாக) முதலாவதாக அடைகிறேன்.

 

33

ஸமதா ஸர்வ பூதேஷு ஸம்யமச் சுப பாவநா

ஆர்த்த ரௌத்ர பரித்யாக: தத்தி ஸாமாயிகம் வ்ரதம். - 33

 

ஸர்வ பூதேஷு

(ஆத்ம) ஸமதா

ஸம்யம:

சுப பாவநா

ஆர்த்த

ரௌத்ர

பரித்யாக:

யத் தத் ஹி

ஸாமாயிகம்

விரதம்

 

         எல்லாப் பிராணிகளிடத்திலும் ஏற்றத் தாழ்வின்றி அவைகள் தம் உயிருக்கு இணையென்று கருதச் செய்வதும், பொறிகளைப் புலன்களிற் செல்லவொட்டாமல் தடுத்து விரதம் மேற்கொள்ளச் செய்வதும், உயிர்களுக்கு நன்மை பயக்கும் தூய எண்ணத்தைத் தருவதும், ஆர்த்த ரௌத்திரத் தியானங்களை விட்டுத் தரும சுக்கிலத் தியானங்களில் திகழச் செய்வதும் ஆகிய இத்தன்மைகள், எதனால் உண்டாகின்றனவோ, அதுவே சாமாயிக விரதம் எனப்படும்.

 

        இனி, எல்லா உயிர்களிடத்திலும் பேதமின்றி யிருப்பதும், விரதம் மேற்கொண்டு நல்ல எண்ணத்தை அடைவதும், ஆர்த்த ரௌத்திரத்தை விடுவதும் சாமாயிக விரதம் என்று கூறினும் அமையும்.

 

1. ஆர்த்த த்யானம், 2. ரௌத்ர த்யானம், 3. தர்ம த்யானம், 4. சுக்கிலத் தியானம்  எனத் தொகை வகையால் தியானம் நான்கு வகை. அவை விரிவகையால் ஒவ்வொன்றும் நான்கு வகைப்படும். அவை வருமாறு ;

 

1.   ஆர்த்தத் தியானம் நான்கு வகை.

 

அவையாவன:--

 

(1) இஷ்ட வியோகம் --

         தனக்கு இஷ்டமான மனைவி, மனை, மாடு, வீடு முதலியன கேடடையுங்காலத்து ஏற்படும் இடைவிடாத துன்பம்.

 

(2) அநிஷ்ட சம்யோகம் -

          தனக்கு இஷ்டமில்லாத மனைவி, மனை, மாடு, வீடு முதலியன வாய்க்கு மிடத்து ஏற்படும் இடைவிடாத துன்பம்.

 

(3) லாபஜம் -

              எமக்கு லாபம் வரவில்லையே என்று சதாகாலமும் கருதி வருந்துதல்.

 

(4) ரோகஜம் -

              எமக்கு நோய் வந்துவிட்டதே என்று சதாகாலமும் எண்ணி வருந்துதல் என்பனவாம். இந் நான்கினுள் ஏதாவது ஒன்றில் இரண்டு நாழிகை பரிணமிக்குமிடத்து, அது, மறுமையில், விலங்கு கதியில் சேர்க்கும்.

 

2. ரௌத்திரத் தியானம் நான்கு வகை.

 

அவையாவன,

 

(1) ஹிம்ஸானந்தம் -

    உயிர்களை வதைத்தலில் ஏற்படும் மகிழ்ச்சி.

 

(2) ஸ்தேயானந்தம் -

           பிறர் உடைமைகளைக் களவாடுதலில் ஏற்படும் மகிழ்ச்சி.

 

(3) ம்ருஷானந்தம் -

         பொய்யுரைத்தலில் ஏற்படும் மகிழ்ச்சி.

 

(4) சம்ரக்ஷண ஆனந்தம்-

         'பெண்டு, பிள்ளை, (மனை) முதலியவற்றை யானே காப்பாற்றுகிறேன், யான் இல்லையேல் இவர்களைப் பிறர் இரக்ஷணை செய்ய இயலாது' என்று எண்ணும் மகிழ்ச்சி என்பனவாம். இந்நான்கு மகிழ்ச்சிகளுக்கும் விக்கினம் (தடை) ஏற்படுமிடத்து ரௌத்திரம் உண்டாவதனால் இந்நான்கும் ரௌத்திரத் தியானம் என்று பெயர் பெறும். இந்த நான்கினுள்ளும் ஏதாவதொன்றில் இரண்டு நாழிகை பரிணமிக்குமிடத்து ; அது, நரக கதியில் சேர்ப்பிக்கும்.

 

3. தர்மத் தியானம் நான்கு வகைப்படும்.

 

அவையாவன:-

 

(1) ஆஜ்ஞா விசயம் -

          இறைவன் அருளிய அறமொழியின் கட்டளையை விசாரித்தறிதல்.

 

(2) அபாய விசயம் -

          பிறவிச் சுழற்சியின் அபாயங்களை விசாரித்தறிதல்.

 

(3) விபாக விசயம் -

           148, கர்மங்களின் அனுபாகம் (அனுபவிக்கும் தன்மை) முதலியவற்றை விசாரித்து அறிதல்.

 

(4) சம்ஸ்தான விசயம் -

           இம் மூவுலகங்களிலும் உத்தம(ர் பிறக்கும்) இடம் எவ்வெவ்விடங்களில் உள்ளதென விசாரித்து அறிதல். இவை நான்கும் தேவ கதியில் சேர்ப்பிக்கும்.

 

4 . சுக்கிலத் தியானம் நான்கு வகைப்படும்.

 

அவையாவன:-

 

(1) ப்ரதக்த்வ விதர்க்க வீசாரம் -

        உயிர், (அவ்வுயிரோடு கலந்து தோன்றும்) உடல், (அதற்குக் காரணமான) வினைகள் முதலியன, வேறு வேறு தன்மைகளை உடையன என்று, அவற்றை நன்றாக தர்க்கம் செய்து அறிந்து, பற்றறத் திகழ்தல்.

 

(2) ஏகத்வ விதர்க்க வீசாரம் -

         ஆன்ம ஸ்வரூபத்தை மட்டும் தியானித்தல். இவ்விரண்டும் காதிகர்மங்களை நாசம் செய்யும் தன்மையன.

 

(3) சூக்ஷ்மக்ரியா ப்ரதிபாதி-

          காதிவினை கெட்டவுடன் தேவர்கள் இயற்றிய கந்தகுடி முதலியவற்றை விட்டுத் தனியே (ஏக விகாரியாகிச்) சென்று, தபோயோகத்தில் நின்று, மன, வசன, காயங்களாகிய யோகங்களை, சூட்சுமமாகச் செய்தல்.

 

(4) வ்யுபரதக் க்ரியா நிவ்ருத்தி -

           அகாதி வினையையும் வென்று முக்தி அடைதல், ஈண்டு கூறிய சுக்கிலத் தியானம் நான்கனுள், சூக்ஷ்மக்ரியா ப்ரதிபாதி, வ்யுபரதக் க்ரியா நிவ்ருத்தி என்ற இரண்டும் உபசாரத்தால் கூறப்படும். அதாவது காதிவினையின் பிரிவான மோகனீயத்தை வென்ற அருகன், அதற்குமேல் தியானிக்க வேண்டிய பிரமேயம், நிச்சயமாய் இல்லை. அகாதிவினை (கட்டுவதற்கு இயலாத) வெந்த வைக்கோற்புரி போன்றது என்று பரமாகமத்துள் கூறப்படுதலால் என்க. இனிமேல் கூறவேண்டிய தர்ம, சுக்கிலத் தியானங்களைத் தொடர்ச்சி நோக்கி இவ்விடமே கூறப்பட்டுள்ளன என கண்டு கொள்க.

 

 

34

ஸாம்யம் மே ஸர்வ பூதேஷு வைரம் மம ந கேநசித்

ஆசா: ஸர்வா: பரித்யஜ்ய ஸமாதி மஹ மாச்ரயே. -  34

 

ஆசா: ஸர்வா :

ஏவம்

ஸர்வ பூதேஷு

மே ஸாம்யம் அஸ்தி

கேந சித் மம

வைரம் நாஸ்தி

தத: அஹம் ஸர்வா :

ஆசா: பரித்யஜ்ய

ஸமாதிம்

ஆச்ரயே

 

      இவ்வண்ணம் சாமாயிகம் மேற்கொண்டதனால் எல்லா உயிர்களிடத்திலும் எனக்கு (சமதாபாவம் அதாவது மன்னுயிரைத் தன் உயிர் போல் கருதும்) சமத்வம் இருக்கிறது, எந்த உயிர்களினிடத்திலும் எனக்கு பகைமை (தரும் த்வேஷம் ) இல்லை; ஆதலால் இனி யான் இல்லறப் பற்றனைத்தையும் பூர்ணமாக விட்டு, நிரந்தரமான ஆத்மத் தியானத்தை நிஜமாக மேற்கொள்கிறேன்.

 

35

ராக த்வேஷாந் மமத்வா த்வா ஹா மயாயே விரோதிதா:

க்ஷாம்யந்து ஜந்தவஸ்தேமே தேப்யோ ம்ருஷ்யாம்யஹம் புந:  -  35

 

ராகாத் வா

த்வேஷாத் வா

மமத்வாத் வா

ஹா மயா

யே ஜந்தவ:

விரோதிதா:

தே ஜந்தவ:

மே க்ஷாம்யந்து

அஹம் புந:

தேப்ய:

ம்ருஷ்யாமி

 

        ஆசையினாலாவது, கோபத்தினாலாவது, (மித்தியாத்துவ கர்மத்தினால் அறிவு மயங்கி என்னுடையதல்லாதவற்றை என்னுடையது என்று எண்ணும்) செறுக்கென்னும் அகங்காரத்தினாலாவது, ஐயோ! என்னால் எந்த உயிர்கள் பீடிக்கப்பட்டு (பகையடைந்து) ள்ளனவோ, அந்த உயிர்கள் இனி என் பொருட்டு பொறுத்துக் கொள்ளட்டும்; (என்று வேண்டுகிறேன்). இனிமேல் யானும் அவைகள் பொருட்டு, பொறுத்துக் கொள்கிறேன்.

 

       அறியாமையால் மயங்கிய யான் இதுவரை பல குற்றம் புரிந்துள்ளேன் ; தெரியாமற் செய்த அக்குற்றங்களுக்காக அறிவு பிறந்த இப்போது, மன்னிப்பு கோருதல் கடமையாதலின், தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். என்ற இது பச்சாத்தாபத்தின்பாற்படும். "யான் எனதென்னும் செறுக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்" , என்று (திருக்குறள் 346ல் ) தேவரும்,

 

"அறிவிலா ராய காலத் தமைவில செய்த வெல்லாம்

நெறியினி லறிவ தூற நின்றவை விலகி நிற்பர். "

 

       என்று யசோதர காவியம், 299 - ஆம் செய்யுளிலும் கூறியவை ஈண்டு ஒப்புநோக்கி அறிதற்பாலன.

 

 

36

மநஸா வபுஷா வாசா க்ருத காரித ஸம்மதை:

ரத்ந த்ரய பவம் தோஷம் கர்ஹே நிந்தாமி வர்ஜ்ஐயே. -  36

 

மநஸா வபுஷா

வாசா

க்ருத

காரித

ஸம்மதை:

ரத்ந த்ரய

பவம்

தோஷம்

கர்ஹே

நிந்தாமி

வர்ஜ்ஜயே

 

     உள்ளம், சொல், உடல் (மனம், வசனம், காயம் என்ற) மூன்றினால் யானே செய்யப்பட்டதும், பிறரைக் கொண்டு செய்யப்பட்டதும், (யான் ஏவாமலே) பிறரால் செய்யப்பட்டதற்குச் சம்மதப்பட்டதும் (அனுமதித்ததும்) ஆகிய செயல்களால் மும்மணிகளுக்கு (மோக்ஷ மார்க்கத்துக்கு)  ஏற்படும் குற்றங்களைச் செய்யுமாறு தூண்டிய என் தீய செயலை நிந்தித்துப் பச்சாத்தாபமடைகிறேன் ; அவ்விதம் வினைகளின் வயப்பட்டுத் தீய வழியில் சென்ற என் ஆத்மனையும் நிந்திக்கின்றேன் ; அத்தகைய தீய செயலைச் செய்யாமல் இனி விட்டு விலகுகின்றேன்.

 

    இனி, கர்ஹே என்பதற்கு, குருவை சாட்சியாக வைத்து ஆலோசிக்கின்றேன் எனினும் அமையும்.

 

37

தைர சசம் மாநவம் தைவம் உபஸர்க்கம் ஸஹேதுநா

காயாஹார கஷாயா தீந் ப்ரத்யாக்யாமி த்ரி சுத்தித: -  37

 

அஹம்

த்ரி சுத்தித:

தைரச்சம்

மாநவம்

தைவம்

உபஸர்க்கம்

அதுநா ஸஹே

காய

ஆஹார

கஷாயாதீந்

ப்ரத்யாக்யாமி

 

       யான் (என்) உள்ளம், சொல், உடல் ஆகியவற்றின் தூய்மையால், பறவை முதலிய விலங்கினங்களால் ஏற்படுவதும், மனுஷ்யரால் ஏற்படுவதும், தேவதைகள் தேவர்கள் முதலியோரால் ஏற்படுவதுமாகிய வேதனையைத் தரும் பீடைகளை இப்பொழுது பொறுத்துக் கொள்கிறேன் ; அவ்வாறே (ஐந்து வித) உடலின் மீதுள்ள பற்றையும், (அறுவகை) உணவின் மேல் ஏற்படும் விருப்பத்தையும், மோஹனீயம் முதலான எண் வினைகள் வருவதற்குக் காரணமான குற்றங்களையும் (த்ரிகரண சுத்தி பூர்வகம்) விட்டு விடுகிறேன்.

 

 

காயாஹார கஷாயாதீந் என்றது, காயம் முதலியவற்றின் மேல் ஏற்படும் விருப்பு வெறுப்பை விடுகிறேன் என்பதற்குத் தொகுத்துக் கூறியதாகும். அதாவது, ஔதாரிகம், வைக்ரீயகம், ஆஹாரகம், தைஜஸம், கார்மணம் என உடல்களின் பிரிவு ஐவகையாகும், அவை வருமாறு :---

 

  1.  மனிதர், விலங்கினம் ஆகிய இரு கதிகளில் தோன்றும் உயிர்களுக்கு அமையும் உடல்களுக்கு ஔதாரிகம் என்று பெயர்.  2. தேவர், நரகர் ஆகிய இருகதியில் தோன்றும் உயிர்களுக்கு அமையும் உடல்களுக்கு வைக்ரீயகம் என்று பெயர். (பல்வேறு உருவங்களை அடைவதற்குத் தகுதி வாய்ந்த விகுர்வணா சக்தி உடையது. 3. முனிவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டபோது அவர்களின் நல்வினையால் அவர்கள் வலது தோளில் ஒரு முழ உயரத்தில் ஓர் உருவம் தோன்றி அதுவே, கேவலிகள் இருப்பிடம் சென்று சந்தேகம் தெளிந்துப் பின் இரண்டு நாழியில் மீண்டும் வந்து அம் முனிவர்கள் உடலிலேயே அடங்கிவிடுவது ஆஹாரக(சரீர)ம் என்று பெயர்,  4. தைஜஸம்,  5. கார்மணம் என்பன உலகிலுள்ள ஒவ்வொரு உயிரினிடமும் பொருந்தியிருப்பனவாகும். அவற்றுள், தைஜஸம் என்பது (தேஜஸம்) ஒளி என்பதாகும். கார்மணம் என்பது ஒவ்வொரு உயிரின் மேலும் (கவர் போன்று) சூட்சுமமாகச் சூழ்ந்திருப்பது. அது, யானை முதலிய பெரிய உடலெடுக்கும்போது உயிர், விரிந்தும் , எறும்பு முதலிய சிறிய உடல் எடுக்கும்போது (தானும்) சுருங்கியும் முக்தி அடையும் காலம் வரை தொடர்ந்து உயிரைப் பற்றியிருப்பது. இவ்விரண்டு(உடலு)ம் விட்ட பிறகே உயிர் முக்தியடையும். ஔதாரிகம் முதலியவை ஒன்றுக்கொன்று சூட்சுமமானது. மற்றும் இதன் விவரத்தினை "ஔதாரிக வைக்ரீயக ஆஹாரக தைஜஸ கார்மணாநி சரீராணி, பரம் பரம் சூட்சுமம் " என்ற தத்வார்த்த சூத்திரத்தின் உரை நூல்களிலும், பதார்த்த சாரத்திலும் நன்கு அறியலாகும்.

 

      கர்மாஹாரம் முதலாக ஆஹாரம் அறுவகை. அவை வருமாறு:---

1. கர்மாஹாரம் -

     (கருமத்துக்கு யோக்கியமான) கார்மண வர்க்கணைகள், கருமத்தின் தன்மை பெற்று உயிரோடு கலத்தல்.

 

2. நோகர்மாஹாரம் -

         உயிர்களின் நல்வினை தீவினைகளுக்குத் தக்கவாறு தாம் பொருந்தியுள்ள உடலுக்கு வேண்டிய புத்கல பரமாணுக்கள் சமயம் சமயந்தோறும் உடலில் வந்து சேரல்.

 

3. கபளாஹாரம் -

        கவளம் கவளமாக உண்ணும் உணவைக் குறிப்பிடுவதாகும். (இக்காலத்து யானை உண்ணும் ஒரு கை உணவுக்கே கவளம் என வழங்குகிறது) உண்பன,  தின்பன, நக்குவன, பருகுவன என நான்கும் கபள ஆஹாரத்தில் அடங்கும்.

 

4. லெப்பாஹாரம் -

          உணவு உட்கொள்ள இயலாதபோது (அதாவது களைப்படைதல், உண்ணாவிரதம் ஏற்ற காலங்கள், உணவு உட்கொள்ளத் தகாத இரவு ஆகிய சந்தர்ப்பங்களில்) உண்ணத்தக்க உணவு, மருந்து முதலியவற்றை வயிறு முதலிய அவயங்களின் மேல் வைத்து உணவின் சத்து  உடலில் சேரும்படி செய்தல்.

 

5. ஓஜாஹாரம் -

          பறவை முதலானவை அவயம் காத்து அதன்மூலம் முட்டைக்குள்ளிருக்கும் குஞ்சுகளை வளரச் செய்தல். (கருவில் உள்ள உயிர்கள் சிலவற்றுக்கும் ஓஜா ஹாரமே கூறலாம்.)

 

6. மனஸா ஹாரம் -

             இது தேவர்களுக்கு உரியது. தேவர்களுக்கு பசி தோன்றும்போது பசி எடுக்கின்றது என்று உள்ளத்தே எண்ணும்போது அவர்களின் பசி தணிதல். (இதற்கு விபரீதமானது நரகர்களுக்குக் கூறுவதாகும்.)

 

ராகம் த்வேஷம் பயம் சோகம் ப்ரஹர்ஷௌத் ஸுக்ய தீநதா:

வ்யுத்ஸ்ரஜாமி த்ரிதா ஸர்வம் அரதிம் ரதி மேவ ச.  -  38

 

ராகம் த்வேஷம்

பயம் சோகம்

ப்ரஹர்ஷ -

ஔத்ஸுக்ய

தீநதா:

அரதிம் ரதிம்

ஸர்வம் ஏவ த்ரிதா

வ்யுத்ஸ்ரஜாமி

 

              ஆசை, கோபம், அச்சம், (பிறர் கருணை காட்டத்தக்க) சோகம், (மிக்க) மகிழ்ச்சி (உள்ளத்தே தோன்றும் முயற்சி) யின் ஆவல், (கெஞ்சுதலோடு கூடிய) ஏழ்மைத்தனம், வெறுப்பு, விருப்பு முதலான பலவற்றையும் உள்ளம், சொல், உடல் என்ற மூன்றின் (த்ரிகரண) சுத்தியோடு விட்டு விடுகிறேன்.

 

     ஹர்ஷம் - மகிழ்ச்சி. (ப்ர, உபசர்க்கம். அதிகத்தைக் குறிப்பிடுவது) தனக்குத்தானே அடைவது மகிழ்ச்சி. பிற பொருள்களை ஆதரவோடு விரும்புவது ப்ரீதி.

 

      இதுமுதல் (45 - ஆவது சுலோகம் வரை) சாமாயிக விரதத்தை மேற்கொண்டவன் (லக்ஷியத்தை) இருக்க வேண்டிய முறையைக் குறிப்பிடுகிறார்.

 

39

ஜீவிதே மரணே லாபேலாபே யோகே விபர்யயே

பந்தாவரௌ ஸுகே துக்கே ஸர்வதா ஸமதா மம.  -  39

 

(ஸாமாயிக விரத ஸ்வீகார : அஹம்)

மம ஜீவிதே

மரணே

லாபே

அலாபே ச

யோகே

விபர்யயே

பந்தௌ

அரௌ

ஸுகே

துக்கே

ஸர்வதா

ஸமதா

பூயாத்

 

          (யான் சாமாயிக விரதத்தை மேற்கொண்டுள்ளேன் ஆதலின் இனி), எனக்கு என் உயிர் வாழ்க்கை நீடித்துப் பிழைத்திருந்தாலும் சரி, அல்லது மரணம் நேர்ந்தாலும் சரி, எனக்கு மிக்க லாபம் வந்தாலும் சரி, அல்லது பெருத்த நஷ்டம் ஏற்பட்டபோதிலும் சரி, அவ்வாறே எனக்குத் தேவையான பொருள்கள் கிடைத்தபோதிலும் சரி, அல்லது என் தேவைக்கு (விபரீதமான) எதிரிடையான பொருள் நேர்ந்தாலும் சரி, (அல்லது உள்ளது நாசமானபோதிலும் சரி), ஒருவர் என்னை உறவாடி பூஜித்து உதவி செய்தபோதிலும் சரி, அல்லது பகைவராகி துன்புறுத்தியபோதிலும் சரி, எனக்கு இன்பம் நேர்ந்தபோதிலும் சரி, அல்லது துன்பமே நேர்ந்தபோதிலும் சரி என்ற விருப்பு வெறுப்பற்ற தன்மை (ஒரே விதமான சமதாபாவம்) என்னிடம் எப்பொழுதும் இருக்குமாறு என் உளம் திருந்தட்டும்.

 

       உயிரோடு நீடித்திருக்கவேண்டும் என்று எண்ணமாட்டேன். இனி, இத் துன்பத்தைச் சகித்திருப்பதைவிட என் உயிர் இப்போதே பிரிந்துவிடக் கூடாதா? என்று எண்ணவும் மாட்டேன் என்பதாம். (இவ்வாறு எண்ணுவது தற்கொலை [புரிந்து நரகத்தே சேர்கின்றவன்] எண்ணத்தோடு ஒக்குமாதலின் என்க) மம என்பதனை எவ்விடத்தும் கூட்டுக. இன்பம் வந்தபோது மகிழாமலும், துன்பம் வந்தபோது அஞ்சாமலும் இருப்பதுவே ஸாமாயிகத்தின் முக்கியமான குறிக்கோளாகும்.

 

40

த்யஜாம்யஹம் மமத்வம் ச நிர்மமத்வ முபஸ்தித:

மஹா லம்பநமாத்மைவ வர்ஜ்ஜயே சாவ சேஷகம். -  40

 

அஹம்

மமத்வம் ச

த்யஜாமி

நிர்மமத்வம்

உபஸ்தித:

அபி ச

ஆத்மா

ஏவ மே

மஹா -

ஆலம்பநம்

அவ சேஷகம்

வர்ஜ்ஐயே

 

          யான் இதுவரை மேற்கொண்டிருந்த (யான் எனதென்னும்) மமகார அகங்காரங்களாகிய செறுக்கை விட்டு விடுகிறேன் ; இனி, மேலும் அத்தகைய மமகார அகங்காரங்களை என்னிடம் சேராதவாறு கவனமுடன் பார்த்துக் கொள்கிறேன். (எனவே, அகப்பற்றையும் புறப்பற்றையும் விட்டுத் துறக்கிறேன்.) இனி, என் ஆத்மனே எனக்குத் தஞ்சம் (புகல், அல்லது அடைக்கலம் என்று நம்பி அமைகிறேன்), என் ஆத்மன் ஒன்று தவிர (என் அந்தரங்கத்தே நிறைந்துள்ள ஆத்மன் தவிர, பகிரங்கங்களாகிய) உடல், பொருள், ஆவி, உறவினர் முதலியவற்றின் மேல் ஏற்படும் பற்றை அறவே விட்டுத் துறக்கின்றேன்.

 

41

ஆத்மைவ மே ஸதா ஜ்ஞாநே தர்சநே சரணே ததா

ப்ரத்யாக்யாநே மமாத்மைவ ததா ஸம்வர யோகயோ: -  41

 

தத : மே ஸதா

ஜ்ஞாநே தர்சநே

ததா சரணே

மம ஆத்ம ஏவ

ப்ரத்யாக்யாநே

ஆத்மா ஏவ

மஹாந்

ஆலம்ப:

ததா ஸம்வர

யோகயோ :

ஆத்மா ஏவ

 

         ஆகவே எனக்கு எந்தக் காலத்திலேயும் நல் அறிவு, நற்காட்சி (அவ்விரண்டிலுமே பொருந்தி நிற்பதாகிய) நல் ஒழுக்கம் ஆகிய மூன்றிலுமே என் ஆத்மன் பொருந்தி (ஐக்கியமாகி) யுளது (எனவே, வேறெவ்விதப் பற்றுமில்லை) : இனி வருங்காலத்திலும் என் ஆத்மனிடம் சேரும் குற்றங்குறைகளை மேற்கொள்ளாமல் விட்டு விலகுகின்ற விடத்திலும், என் ஆத்மனையே பற்றுக் கோடாக ஏற்று (அதாவது ஆத்மனைக் கொண்டே) அவைகளை நீக்குகின்றேன் : அவ்வாறே கர்மங்கள் வந்து சேராமல் தடுக்கும் சம்வரையிலும், தபோ யோகம் முதலியவற்றாலாகும் நிர்ஜரையிலும், பொருந்துவதற்கும் என் ஆத்மனே மூலகாரணம் (அல்லது முதற்காரணம்) என்றுணர்ந்துள்ளேன் ஆதலின், ஆத்ம பாவனையிலேயே நிலையாக நிற்கின்றேன்.

 

         இனி, யோகம் என்பது, மனம்  வசனம் காயம் என்று கொள்ளுமிடத்து ஆஸ்ரவம் என்று கூறவும் அமையும்.

பொதுவாக நோக்குமிடத்து உலகிலுள்ள ஜீவ வகை, முக்தி ஜீவனென்றும் சம்ஸார ஜீவனென்றும் இருவகையாகக் கூறப்படும். அவ் விரண்டிற்கும் முக்கியமான காரணம் யாதென நூல்களில் ஆராயுமிடத்து; ஆசை, கோபம், மயக்கம் (ராகம், த்வேஷம், மோஹம்) ஆகிய இம்மூன்றும் சம்ஸாரத்திற்கு (ப்பிறவிச் சுழற்சிக்கு)க் காரணமென்றும், நற்காட்சி, நல்லறிவு, நல்லொழுக்கம் ஆகிய மூன்றும் முக்திக்கு (வீடு பேற்றுக்கு)க் காரணமென்றும் அறிவித்துள்ளது. " சம்யக் தரிசன ஜ்ஞாந சாரித்ராணி மோக்ஷ மார்க்க: " என்று தத்வார்த்த சூத்திரத்தில் கூறியது காண்க. சூரியனுக்கு உஷ்ணமும் ஒளியும் இயல்பாய் உள்ளவை போல ; உயிர்களுக்கு காட்சியும் அறிவும் இயற்கைப் பண்புகளாகும்.

 

         நற்காட்சி; சம்யக்த்வம் அல்லது சம்யக்தரிசனம் எனவும் வழங்கும். சம்யக்த்வம் பொதுவாக மூன்று வகைப்படும். அவை, உபஸம சம்யக்த்வம், வேதக சம்யக்த்வம், க்ஷாயிக சம்யக்த்வம் என்பன. உபஸம சம்யக்த்வம் என்பது, ஐயமின்மை முதலிய எண்வகைக் குணங்களை உடையதும் ; ஐயம் (சந்தேகம்) முதலிய இருபத்தைந்து குற்றங்களில் நீங்கியதுமாகும்.

 

 எண்வகைக் குணங்களாவன :--

 

1. ஐயமின்மை - 

(முனைவன் உரைத்த முதல் நூல், அதன் வழிநூல், சார்பு நூல்களில் உள்ள) திருவறத்தில் ஐயமின்றித் தெளிதல்.

 

2. அவாவின்மை --

 (உலகப்) பற்றின்றி யிருத்தல்,

 

3. உவர்ப்பின்மை --

 பரமாணுக் கூட்டங்களின் தன்மையை உள்ளவாறு உணர்ந்து அருவருப்பு இன்றி யிருத்தல்.

 

4. மயக்கமின்மை --

     மூடச் செயல்களில் மயங்கி நடவாதிருத்தல், " இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சியவர்க்கு " என்று (குறள் : 352 - ல்) தேவர் கூறியது ஈண்டு ஒப்புநோக்கி யறியும் தன்மையது.

 

5. செய்பழி நீக்கல் --

       உலகோர் (பெரியோர்) செய்த பழியை வெளியாகாவண்ணம் மறைத்தல்.

 

6. திரிந்தாரை நிறுத்தல் --

       நீதியினின்றும் நழுகினவரை முன்போல் நீதியில் நடக்கச் செய்தல்.

 

7. அன்புடைமை --

     பெரியாரைக் காணின் கன்று கண்ட கறவை போல அன்புடனிருத்தல்.

 

8. அறவிளக்கஞ் செய்தல் --

       திருவறத்தை யாவருக்கும் உபதேசித்தல் (போதித்தல்) என்பனவாம். இவற்றை வடநூலார் ; 1. நிச்சங்கை, 2. நிர்க்காம்க்ஷை, 3. நிர்விசிகித்ஸை, 4. அமூட த்ரஷ்டித்வம், 5. உப கூஹனம், 6. ஸ்திதி கரணம், 7. வாத்ஸல்யம், 8. மார்க்க ப்ரபாவனை என்பர். " உறுவர் பேணல் உவர்ப்பின்மை " என்பர் சிந்தாமணியாரும்.

 

ஈண்டுக் கூறிய எண்வகைக் குணங்கட்கும் (மாறான) எதிரிடையான ஐயம் முதலிய குற்றங்கள் எட்டு ; மற்றும், 1. (தாயின் சம்பந்தமான) பிறப்பு, 2. குலம், 3. வல்லமை, 4. செல்வம், 5. சிறப்பு (பெருமை), 6. வடிவழகு, 7. தவம், 8. அறிவு ஆகிய இவற்றால் பெரியோம் யாம் என்று பிறரை இகழும் கர்வம் எட்டு ; 1. உலகமூடம், 2. தேவமூடம், 3. பாஷண்டி மூடம் என மூடம் மூன்று, (அதாவது)

 

1. உலகமூடம்:- கடல், ஆறு முதலியவைகளில் நீராடுவதனால், புண்ணியம் பெறலாம் என்பதும் ; வேள்வியில் ஆடு முதலியன பலியிடுதல் முதலியனவாகும்.

 

2. தேவமூடம்:- கடவுள் தன்மையற்ற சிறு தெய்வங்களை வணங்குதல், தேவதைகள் நம்மைக் காப்பாற்றும் என்று பிரார்த்தனை செய்தல், பிள்ளை வரம் வேண்டல் முதலியனவும் இதில் அடங்கும்.

 

3. பாஷண்டி மூடம்:- பஞ்சாக்கினி மத்தியில் நின்று தவம் செய்பவர் முதலாகிய பாஷண்டிகளிடமிருந்து நாம் நன்மை பெறலாம் என்று மயங்கி விரும்புதல் முதலியனவாகும். பொய் வேதம் முதலியவற்றிற்கு வணங்குதலாகிய தீய சேவை ஆறு ஆக இந்த (8 + 8 + 3 + 6 = 25 ) இருபத்தைந்தும் - நற்காட்சியினை எய்துவோர்களுக்குக் குற்றமாகும். பொய் என்பது 'மித்யா' என்று வடமொழியில் கூறப்படும். அவை , மித்தியா தெய்வம், மித்தியா ஆலயம், மித்தியா சாஸ்த்திரம், மித்தியா சாஸ்த்திரி, மித்தியா தபம், மித்தியா தபஸ்வி என விரியும். இவற்றை இன்னும் விவரமாக அறிய விரும்புவோர் அருங்கலச் செப்பு, அறநெறிச்சாரம், மேரு மந்தரம், சிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் முதலியவற்றுள் கண்டு கொள்க.

 

      இருபத்தைந்தாவது சுலோகத்திற் கூறியவாறு அனந்தாநுபந்தி குரோதம் முதலிய சப்த ப்ரக்ருதி ஏழினையும் உபசமம் அடையச் செய்வது; (அதாவது உதயத்திற்கு வராமல் செய்வது) உபசம சம்யக்த்வம் என்றும், அவ் வேழையும் அறவே கெடுத்து விடுவது க்ஷாயிக சம்யக்த்வம் என்றும் கூறப்படும்.

 

 சந்தேஹம் விபரீதம் முதலிய குற்றங்களின்றி நூல்களை அறிவது ஸம்யக் ஞானம் (நல்லறிவு) ஆகும்; அவற்றைச் சந்தேகமறத் தெளிதல் ஸம்யக் தரிசனம் ஆகும். அந்த அறிவு காட்சியிலேயே பொருந்தி நிற்றல் மாமுனிவர்களின் ஒழுக்கமாகும். மற்றையோர்க்கு குப்தி, சமிதி முதலாகப் பலவிதமாகக் கூறப்படும். அவைகளையும் சம்வரை நிர்ஜ்ஜரை முதலியவற்றையும் மேலே தெரிவிக்கப்படும்.

 

42

ஏகோ மே சாச்வத ச்சாத்மா ஜ்ஞாந தர்சந லக்ஷண:

சேஷா பஹிர் பவா பாவா: ஸர்வே ஸம்யோக லக்ஷணா: - 42

 

ஜ்ஞாந

தர்சந

லக்ஷண:

ஆத்மா ஏக:

மே சாச்வத:

சேஷா:

பஹிர்பவா:

ஸர்வேபாவா:

மே ஸம்யோக

லக்ஷணா:

 

      இயற்கை குணங்களாகிய அறிவு காட்சி மயமான ஆத்மா ஒருவனே, என்னிடம் எக்காலத்தும் அழியாமல் இருப்பவன் ; அறிவு காட்சி மயமான அந்த ஆத்மன் தவிர (பாஹ்யங்களாகிற) புறம்பே இருக்கின்ற உடலும், அதன் சம்பந்தத்தாலான புத்திரன், மித்திரன், மனைவி, மனம், தனம், தானியம், வேலையாள், பசு, வாகனம் முதலானவை யாவும், (என் ஆத்மனுக்கு) எனக்கு சேர்க்கையாக வந்து சேர்ந்தனவேயாகும் ; (எனவே, நிலையில்லாதவேயாகும்.)

 

43

ஸம்யோக மூலம் ஜீவேந ப்ராப்தா துக்க பரம்பரா

தஸ்மாத் ஸம்யோக ஸம்பந்தம் த்ரிதா ஸர்வம் த்யஜாம்யஹம்.  -  43

 

ஜீவேந

ஸம்யோக மூலம்

துக்க பரம்பரா

ப்ராப்தா

தஸ்மாத் அஹம்

ஸம்யோக

ஸம்பந்தம்

ஸர்வம் த்ரிதா

த்யஜாமி

 

         ஜீவனால், பாஹ்யப் பொருள்களின் மேல் ஏற்ப்பட்ட பற்றின் (மோகங்) காரணமாக ஈட்டிய வினைகளின் உதயத்தாலே துன்பங்களின் வரிசை ஒன்றின்மேல் ஒன்றாக அடையப்படுகிறது ; ஆதலால் யான், என்னுடைய தல்லாதவற்றை, எண்ணுடையதாக எண்ணி, சேர்த்துக் கொண்ட, அப்பொருட் பற்றனைத்தையும் மன வசன காய (த்ரிகரண) சுத்தி பூர்வமாக விட்டுத் துறக்கின்றேன்.

 

       ஸாமாயிகத்தை மேற்கொண்டவன், தன்னுடையதல்லாதவற்றை மயக்கத்தால் தன்னுடையது என்று எண்ணி பற்று கொண்ட காரணத்தினால், வினையின் தொடர்ச்சி மாறி மாறி வந்து சேர்கிறது ; அத் துன்பங்களினின்றும் விலகி, ஆத்மன் தன் நிலைமையை அடைய வேண்டுமாயின், பாஹ்யப் பொருள்களின் மேல் கொண்ட பற்றை விட்டுத் துறப்பதே முதல் கடமையாதலின், அவைகளை முற்றும் துறக்கின்றேன் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும் என்பது குறிக்கோள்.

 

44

ஏவம் ஸாமாயிகாத் ஸம்யக் ஸாமாயிகம் கண்டிதம்

வர்த்ததாம் முக்தி மாநிந்யா வச்ய சூர்ணாயிதம் மம. -  44

 

ஏவம்

ஸாமாயிகாத்

ஸம்யக்

ஸாமாயிகம்

முக்தி மாநிந்யா:

வச்ய சூர்ணாயிதம்

மம அகண்டிதம்

வர்த்ததாம்

 

          இவ்வண்ணம் என்னால் ஏற்றுக்கொண்ட ஸாமாயிக விரதத்தினின்றும் ஏற்படும் நன்மை மிக்க (இன்பம் துன்பம் எதுவந்த போதிலும் சமானமாக எண்ணுவ) தாகிய ஸாமாயிக பக்தியானது ; முக்தி யென்னும் கன்னிகையை வசம் செய்யத்தக்க சூர்ணமாகும் ; அத்தகைய இது என்னிடம் இடைவிடாமல் வர்த்திக்கட்டும் (என்றும் நழுவாமல் நிலைக்கட்டும்) என்பதாம்.

 

      ஸாமாயிக விரதம் விருப்பு வெறுப்பு அற்ற தன்மையதாகலின் ; அது, முக்தியை அடைவிக்கும் என்று குறிப்பிட்டார். முக்தியை கன்னிகையாகக் கூறியதற் கேற்ப, ஸாமாயிக விரதத்தை வசிய சூர்ணமாக உருவகம் செய்தார் ஆசிரியர். இவ்வாறு கூறுதல் கவி மரபு, இதனை, இறைவன் மேல் கொண்ட பக்தியே, முக்தி என்னும் கன்னிகையை மணப்பதற்குப் பரியம் போன்றுளது என்ற கருத்தில், வாதீப சிம்மசூரி என்பவரால்,

 

"ஸ்ரீ பதிர் பகவான் புஷ்யாத் பக்தானாம் வஸ்ஸமீஹிதம்

யத் பக்தி சுல்கதாம் ஏதி முக்தி கந்யா கரக்ரஹே"

 

     என்று க்ஷத்ர சூடாமணியில் கூறியிருப்பது காண்க. வேண்டுதல் வேண்டாமை யில்லாத வீரன் கூறியதே வேண்டுதல் வேண்டாமையாகிய ஸாமாயிகம் என்க.

 

45

அணு வ்ரதஞ்சைவ குண வ்ரதம்ச

       சிக்ஷா வ்ரதம் பஞ்ச விதம் த்ரிபேதம்

சதுர் விதஞ்சேதி குரூப திஷ்ட்டம்

         மஹ்யம் ஸதா ஸ்தாம் விமலம் த்ருடஞ்ச. -  45

 

இதி மஹ்யம் குரு

உபதிஷ்டம் பஞ்ச

விதம் அணுவ்ரதம்

த்ரிபேதம் குணவ்ரதம்

சதுர்விதம் ச

சிக்ஷா வ்ரதம்

ச இதி

விமலம் த்ருடம் ச

ஸதா ஆஸ்தாம்

 

        இல்லற தருமத்தை மேற்கொண்ட என்பொருட்டு அதற்கு உறுதுணையாகி ; அருகர், ஆசாரியர், உபாத்தியாயர் ஆகிய மூவர் குருக்களாலும் அறவுரையின் மூலம் அருளிச் செய்யப்பட்ட அணுவிரதம் ஐந்து,  குணவிரதம் மூன்று, சிக்ஷா விரதம் நான்கு ஆகிய பன்னிரண்டும் என்னிடம் களங்கமின்றி பரிசுத்தமாகவும், உறுதியாகவும் எப்பொழுதும் நிலைத்திருக்கட்டும்.

 

 

1.   எவ்வுயிரையும் கொல்லாமையும், 2. அறவுரை தவிர மற்றவை பேசாமையும், 3. பிறர் பொருள்களை விரும்பாமையும், 4. மாதரையே விரும்பாமையும், 5. அகப்பற்று புறப்பற்றின்றி இருத்தலும் ஆகிய ஐந்தும் முனிவர்களுக்கு உரிய மகாவிரதம் எனப்படும்.

 

இல்லறத்தார் இவ்வைந்தையும் ஓரளவு ஏற்று நிகழ்வதனால் அது, அணுவிரதம் என்று கூறப்படும். அவை, 1. ஓரிடம் விட்டு ஓரிடம் நகரும் தன்மையுள்ள இரண்டறிவு முதலாக ஐயறிவு வரை உள்ள உயிர்களைக் கொல்லாமை யும், 2. தனக்கும், பிறருக்கும் தீமை தருவதாகிய பொய் யுரையாமையும், 3. பிறர் பொருளை கள்ளாமை யும் (பிறர் மனமாறக் கொடாத பொருளை அபகரிக்காமையும்), 4. தன் மனைவி தவிர மறுமாதரை விரும்பாமை யும், 5. தேவைக்கு வேண்டியவை தவிர மற்றவைகளில் பேராசை யின்றி யிருத்தலாகிய மிகுபொருள் விரும்பாமை யும் ஆகிய ஐந்தும் பஞ்ச அணுவிரதம் என்று கூறப்படும். இவற்றோடு (எண்ணற்ற தீவினைக்கும், உயிர் கொலைக்கும் காரணமாகிய) 6. தேன், 7. புலால், 8. கள் ஆகியவற்றை உண்ணுவதில்லை என்று விரதம் மேற்கொள்ளல், எண்வகை மூல குணம் என்று கூறப்படும். இனி, அத்தி, ஆல், அரசு, கல்லாலன், இலந்தம் ஆகிய இவைகளின் பழங்களைப் புசியாமல் இருப்பதும் தேன், புலால், கள் உண்ணாமலிருப்பதும் ஆகிய இந்த எட்டும் மூலகுணம் என்றும், கொல்லாமை முதலிய ஐந்தும் , விரதம் என்றும் கூறுவதுண்டு.

 

          திக் விரதம், அனர்த்த தண்டவிரதம், போகோப போக பரிமாண விரதம் என்ற மூன்றும் குண விரதம் என்றும், தேசவிரதம், ஸாமாயிக விரதம், ப்ரோஷதோபவாச விரதம், அதிதிஸம் விபாக விரதம் என்ற நான்கும் சிஷா விரதம் என்றும் கூறப்படும். அவை வருமாறு,

 

1. திக் விரதம் - கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என திக்கு நான்கு, மூலைகள் நான்கு, மேல் கீழ் ஆக பத்து திக்குகளிலும் (வெகு தொலைவு வரை) எல்லை வகுத்துக்கொண்டு, அதற்குமேல் எவ்வித காரணத்தை முன்னிட்டும் யான் செல்வதில்லை என விரதம் மேற்கொள்ளல்.

 

2. அனர்த்த தண்ட விரதம் -

      பயனில்லாத வீண் காரியங்களைச் செய்யாமல் கவனமாக நடந்து கொள்கிறேன் என்று விரதம் மேற்கொள்ளல்: (அர்த்தம் - ப்ரயோஜனம்)

 

3. போகோப போக பரிமாண விரதம் -

 

        போக உப போகப் பொருள்களை (நுகருமிடத்து) மெட்டு செய்து (மிதம் செய்து) நுகர்தல்.

 

(1). தேச விரதம், தேசாவகாசிகம் எனவும் வழங்கும். திக் விரதத்துக்குக் கூறியது போலவே அவ்வப்போது நாள், மாதம், வருஷம் முதலியவற்றை வரையறுத்து, ஊர்களையும், நதி முதலானவைகளையும் எல்லையாக ஏற்று, விரதம் மேற்கொள்ளல்.

 

(2). சாமாயிக விரதம்-

                  வேண்டுதல் வேண்டாமையின்றி ஆத்ம பாவனை செய்தல், கிரியா பாராயணம் செய்தல் முதலியவனவாகும். (இது விடியற் காலையிலும், நடுப்பகலிலும், மாலையிலும் ஏற்று நடப்பது வழக்கமாக உள்ளது.)

 

(3). ப்ரோஷத உபவாச விரதம் -  போசத உபவாசம் எனவும் வழங்கும், அஷ்டமி, சதுர்தசி முதலிய பஞ்ச பர்வங்களில் ; உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன ஆகிய நால்வகை உணவையும் துறந்து உபவாசமாக இருத்தல். உப, ஸமீபே என்பது தாது பாடமாதலின், தன் ஆத்மனிடத்திலேயே நழுகாமல் வர்த்திப்பது உபவாஸம் எனப்படும். உண்பன முதலிய நான்கு வகை உணவுகளை மட்டும் துறந்து மனக்கிலேசமடைதல் 'ரவ்கணம்' (பட்டினி ) எனப்படும். உமவாஸத்துக்கு முந்தின நாளும், மறுநாளும் பகலில் ஒருவேளை மட்டும் உணவு உட்கொள்ளல், ப்ரோஷத உபவாசம் எனப்படும்.

 

" உண்டி மறுத்த லுபவாசம் போசதம்

உண்ட லொருபோ தெனல்," அருங்கலச்செப்பு 125.

 

(4). அதிதி ஸம் விபாகம் - இது வையாப்ருத்யம் எனவும் வழங்கும். இல்லறத்தார்,  முனிவர், ஆர்யகை முதலியோருக்கு ; உணவு, மருந்து, திருவறம் சம்பந்தமாகிய நூல் ஆகியவற்றை தானமாகக் கொடுப்பதும், அபயதானம் அளிப்பதும், அல்லது (ஆவாஸம்)  இடம் அளிப்பதுமாகும். (அதிதி - திதியைக் கருதாமல் எந்நாளிலும், தங்கள் சக்திக்குத் தக்கவாறு உபவாஸம் முதலிய தவத்தை மேற்கொள்ளல் அதிதிஸம் விபாகம்)  என்பதாம்.

 

     இவ்விரதங்கள் ஒவ்வொன்றினுக்கும் ஐந்து ஐந்து பாவனைகளும், அவ்வாறே ஐந்தைந்து அதீசாரங்களும் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன. ஈண்டு, அவற்றையெல்லாம் கூறப் புகின் நூல் விரியுமாதலின் சுருக்கமாகக் கூறப்பட்டது. இவற்றை இன்னும் விரிவாக அறிய விரும்புவோர் , அருங்கலச் செப்பு 83, முதல் 142 வரையிலும், க்ஷத்ர சூடாமணி காவியம் 414, 415 - ஆம் சுலோகங்களிலும், அஷ்டபதார்த்த சாரத்திலும், பதார்த்த சாரத்திலும், மேரு மந்தரம் 356 - ஆம் செய்யுளிலும் அதன் உரையிலும், தத்துவார்த்த சூத்திரத்திலும், நல்லறத்தில் வெளியிட்ட, 'பகவான் விருஷதேவர்' என்ற தமிழ் மொழிப் பெயர்ப்பிலும் கண்டு கொள்க.

 

      இனி, குணவிரத சிக்ஷா விரதங்களை மேற் கூறியவாறின்றி, "திக் தேசாநர்த்த தண்ட விரதி ஸாமாயிக ப்ரோஷதோபவாஸ உப போக பரிபோக பரிமாண அதிதி ஸம் விபாக வ்ரத ஸம்பந் நச்ச" என்று கூறியதைக் கொண்டு திக், தேச, அநர்த்த தண்ட விரதம் என்ற மூன்றும் குணவிரதம் என்றும், மற்றவை நான்கும் சிக்ஷா விரதம் என்றும் கூறியிருப்பன (பொருந்தா உரையாகும்) அசதி மறதியினால் ஏற்பட்ட வழு என்றேகோடல் வேண்டும்.

 

46

அத ஆஷாட மாஸ சுக்ல பக்ஷ ஆஷ்ட்டான்னிக

மாத்யாந்நிக தேவதா ஸ்தவநேந ஸஹ ப்ரதமதிந நந்தீச்

வர மஹா பர்வ க்ரியாயாம் பூர்வா சார்யா நுக்ரமேண ஸகல

கர்ம க்ஷயார்த்தம் பாவ பூஜா வந்தநா ஸ்தவ ஸமேதம்

ஸ்ரீமத் ஸித்த பக்தி காயோத் ஸர்க்கம் கரோம்யஹம். - 46

 

அத அஹம் ஆஷாட -

மாஸ சுக்லபக்ஷ

ஆஷ்டாந்நிக

மாத்யாந்நிக

தேவதா ஸ்தவநேந

ஸஹ ப்ரதமதிந

நந்தீச்வர மஹா

பர்வ க்ரியாயாம்

பூர்வ ஆசார்ய

அநுக்ரமேண ஸகல -

கர்ம க்ஷயார்த்தம்

பாவபூஜா வந்தநா

ஸ்தவ ஸமேதம்

ஸ்ரீமத் ஸித்த பக்தி

காயோத் ஸர்க்கம்

கரோமி

 

           அதன்பிறகு யான், ஆடிமாதத்து சுக்கில பக்ஷத்து அஷ்டமி முதலான பௌர்ணமி வரையிலும் (எட்டு நாளைக்கும்) ஏற்று நடத்தும் விரத தினங்களில் மத்தியான காலத்தில் செய்யும் நவதேவதா ஸ்துதியோடு கூடி, நந்தீச்வர பர்வத்தின் முதல்நாள் காரியத்தில், பூர்வாசாரியர்களால் ஏற்று நடந்த முறைப்படியே (என்னுடைய) எல்லா கர்மங்களும் நாசமாகும் பொருட்டு, பரிணாமத்தினால் செய்யும் பாவ பூஜை, வந்தனை, ஸ்தோத்திரம் முதலியவற்றோடு கூடி முக்தியெய்தின சித்த பரமேஷ்டிகளுடைய பக்தி (பூர்வகம் யானும் அந்) நிலையை அடையவேண்டி அதற்குத் தக்க காயோத் ஸர்க்கத்தை முறைப்படி ஏற்றுச் செய்கின்றேன்.

 

(ஸாமாயிகம் முற்றும்)

 

சத்தாரி மங்களம்

 

47

ஏஸோ பஞ்ச ணமோங்காரோ ஸவ்வ பாபப் பணாஸணோ

மங்களாணஞ்ச ஸவ்வேஸம் படமம் வோஹி மங்களம். - 47

 

ஸவ்வ பாப பணாஸணோ,

ஏஸோ பஞ்ச நமோங்காரோ, வ:

ஸவ்வேஸம்

மங்களாணம் ச

படமம் மங்களம் ஹி

 

         எல்லாப் பாவத்தையும் நாசம் செய்யத்தக்க இந்தப் பஞ்ச பரமேஷ்டிகள் பொருட்டுச் செய்யும் வணக்கம் உங்களுக்கு (நீங்கள் செய்ய வேண்டிய) எல்லா மங்களங்களுக்கும் முதலில் செய்ய வேண்டிய மங்களமாகும்.

 

48

ஓம் சத்தாரி மங்களம்:- அரஹந்தா மங்களம், ஸித்தா மங்களம், ஸாஹூ மங்களம், கேவலி பண்ணத்தோ தம்மோ மங்களம் ; சத்தாரி ளோகுத்தமா :- அரஹந்தா ளோகுத்தமா, ஸித்தா ளோகுத்தமா, ஸாஹூ ளோகுத்தமா, கேவலி பண்ணத்தோ தம்மோ ளோகுத்தமா, சத்தாரி சரணம் பவ்வஜ்ஜாமி, அரஹந்தே ஸரணம் பவ்வஜ்ஜாமி, ஸித்தே ஸரணம் பவ்வஜ்ஜாமி, ஸாஹூ ஸரணம் பவ்வஜ்ஜாமி, கேவலி பண்ணத்தோ தம்மோ ஸரணம் பவ்வஜ்ஜாமி. - 48

 

ஓம் சத்தாரி மங்களம்

அரஹந்தா மங்களம்

ஸித்தா மங்களம்

ஸாஹூ மங்களம்

கேவலி பண்ணத்தோ

தம்மோ மங்களம்

சத்தாரி ளோகுத்தமா

அரஹந்தா ளோகுத்தமா

சித்தா ளோகுத்தமா

ஸாஹூ ளோகுத்தமா

கேவலி பண்ணத்தோ

தம்மோ ளோகுத்தமா

சத்தாரி ஸரணம்

பவ்வஜ்ஜாமி

அரஹந்தே ஸரணம்

பவ்வஜ்ஜாமி

சித்தே ஸரணம்

பவ்வஜ்ஜாமி

ஸாஹூ ஸரணம்

பவ்வஜ்ஜாமி

கேவலி பண்ணத்தோ

தம்மோ ஸரணம்

பவ்வஜ்ஜாமி.

 

             இவ்வுலகிலே சிறப்புடைய மங்களங்கள் நான்கு உள ; அவை, அருகத் பட்டாரகரும் மங்களகரமானவர், சித்த பரமேஷ்டிகளும் மங்களகரமானவர், (ஆசார்ய உபாத்தியாய சர்வ சாது ஆகிய) சாதுக்களும் மங்களகரமானவர், கேவலஜ்ஞானிகளால் திருமொழியின் மூலம் அருளிச் செய்யப்பட்ட திருவறமும் மங்களகரமானது ; உலகில் (உத்தமச்) சிறப்புடையன நான்கே உள. அவை, அருகத் பட்டாரகர் உலக உத்தமர், அவ்வாறே, சித்த பரமேஷ்டிகளும் உலக உத்தமர், (ஆசார்ய உபாத்தியாய சர்வ சாது ஆகிய)  சாதுக்களும் உலக உத்தமர்கள், கேவலிகளால் விரித்துரைத்த திருவறமும் உலகத்துள் உத்தமமானது.

 

       ஆகவே, யான் நான்கு வகை சரணத்தையும் புகலாக அடைகிறேன். அதாவது அருகத் பட்டாரகரை சரணமாக அடைகிறேன், சித்த பரமேஷ்டிகளையும் சரணமாக அடைகிறேன்; (ஆசார்ய உபாத்தியாய சர்வ சாது ஆகிய) சாதுக்களையும் சரணமாக அடைகிறேன், கேவலியால் கூறப்பட்ட , திருவறத்தையும் சரணமாக அடைகிறேன்.

 

  ஓம் என்பது, பஞ்ச பரமேஷ்டிகளின் நாம அக்ஷரங்களில் முதல் எழுத்து ஐந்தும் சேர்ந்ததாகலின், அவர்களை எண்ணித் துதிப்பதைக் குறிப்பிடுவதாகும். அதாவது; அருகர், அசரீரி (சித்தர்), ஆயிரியர் (ஆசாரியர்), உபாத்தியாயர், முனி (சர்வ சாது) ஆகிய பஞ்ச பரமேஷ்டிகள் பெயரின் முதலெழுத்து ஐந்து ; அவற்றுள், (அ + அ + ஆ + உ + மு = ஓம்) இரண்டு அ + அ சேர்ந்தால், ஆ என்றாகும் ; பஞ்ச், அ + அஸ்திகாயம் - பஞ்சாஸ்திகாயம் தர்ம், அ + அம்ருதம் - தர்மாம்ருதம் என்று சந்தியில் சேர, ஆ என்றாவது அறிக. அவ்வாறே இரண்டு அ + ஆ  சேர்ந்தால் ஒரு ; ஆ. ஆகும்.  ஸ்ரீலீலா + ஆயதனம் - ஸ்ரீலீலாயதநம் என்று சந்தியில் ஒரே ஆ, ஆவதனை அறிக. அவ்வாறே, ஆ+உ சேர்ந்தால் ஓ என்றாகும்.  கந்தா + உதகம் - கந்தோகம் என்றாவதனை உணர்க. இனி, மு என்பதில் முதல் எழுத்தாகிய  ம் (+உ - மு) சேர்ந்து ஓம் என்றாயிற்று என்றுணர்க. இதனை,

 

" அறிவரிய குணத்தருக னசரீரி யாயிரிய னுவாத்தி கோதஞ்

செறிவரிய முனிவரெனுந் திருநாம முதலெழுத்தோ ரைந்துஞ் சேர்ந்து

பிறிவரிய வோங்கார முன்னுரைப்பர் ",

 

           எனக் கலம்பத்திலும்,

 

" அரஹந்தா  அசரீரா ஆயிரியா தஹ உவச்சயா முணிநோ

படமக்கர ணிப்பண்ணோ ஓங்கார பஞ்ச பரமேஷ்டி "

 

        என்று பிராக்ரதத்திலும் கூறுவதனால் உணரலாகும்.

 

               அதாவது, அருகனுடைய முதலெழுத்தும், அசரீரியினுடைய முதலெழுத்தும் சேர்ந்தால், ஆ - என்றாயிற்று , இதனோடு ஆசாரியருடைய முதலெழுத்தாகிய (அ+ஆ =) ஆ, சேர்ந்தால் ஒரு ஆ ,  ஆயிற்று. இதனோடு உபாத்தியாயருடைய முதலெழுத்தாகிய  உ,  சேர்ந்தால் (ஆ+உ)= ஓ என்றாயிற்று, இதனோடு முனிகளின் முதலெழுத்தாகிய ; ம், சேர்ந்து ஓம் என்றாயிற்றென்க.

 

 

பதினைந்து கர்ம பூமிகளைக் குறிப்பிட்டு அவற்றுள் (முக்காலத்திலும்) விளங்கும் பஞ்ச பரமேஷ்டிகளை, அவரவர்கள் குணங்களைக் கூறித் துதிக்கின்றார்.

 

49

அட்டா இஜ்ஜேஸு தீவேஸு தோஸு ஸமுத்தேஸு, பண்ணாரஸ கம்மபூமிஸு, ஜாவ அரஹந்தாணம் பயவந்தாணம் ஆதியராணம் திக்தயராணம் ஜிணாணம் ஜிணுத்தமாணம் கேவலியாணம் ஸித்தாணம் புத்தாணம் பரிணிவ்வுதாணம் அந்தயடாணம் ; பாரயடாணம் ; தம்மாயிரியாணம் ; தம்மதேஸயாணம் ; தம்மணாயகாணம் ; தம்மவர சாவுரங்க சக்கவட்டீணம் தேவாஹி தேவாணம் , ணாணாணம், தம்ஸணாணம் சரித்தாணம், ஸதா கரேமி கிரியம்மம். - 49

 

அட்டா இஜ்ஜேஸு

தீவேஸு

தோஸு

ஸமுத்தேஸு

பண்ணாரஸ

கம்ம பூமிஸு

ஜாவ பயவந்தாணம்

 

ஆதியராணம்

தித்தயராணம்

ஜிணாணம்

ஜிணுத்தமாணம்

கேவலியாணம்

 

அரஹந்தாணம்

புத்தாணம்

 

பரிணிவ்வு தாணம்

அந்தயடாணம்

பாரயடாணம்

 

ஸித்தாணம்

தம்ம ஆயிரியாணம்

தம்ம தேசயாணம்

தம்ம ணாயகாணம்

தம்மவர

சாவுரங்க

சக்கவட்டீணம்

தேவாஹி தேவாணம்

(தாவத : ஸந்தி

பஞ்ச பரமேஷ்டி ந:

நமஸ்க்ருதய)

ணாணாணம்

தம்ஸணாணம்

சரித்தாணம்

(ஸ்வீக்ருத்ய)ஸதா

கிரியம் மம் கரேமி.

 

           ஜம்பூ த்வீபம், தாதகிஷண்ட த்வீபம், புஷ்கரார்த்த த்வீபம் ஆகிய (2 1/2) இரண்டரைத் தீபங்களிலும், இலவணம், காளோதகம் என்ற இரண்டு சமுத்திரங்களிலும், ஐந்து பரதம், ஐந்து விதேகம், ஐந்து ஐராவதம் ஆகிய பதினைந்து கர்மபூமிகளிலும் (முக்காலத்திலும்) எவ்வளவு பேர், (ஏனையோரால் பூஜிக்கத்தக்க) பகவன் தன்மை அடைந்தவராயும் (பகவந்தராயும்), உலகிற்கே ஆதியில் (முதன்முதலாக) திருவறத்தை உபதேசித்த தீர்த்தங்கரராயும், (அதன் பின்னர்) அந்தந்தக் காலங்களிலும் பரம்பரையாகத் திருவறத்தை உபதேசித்து வந்தவராயும், காதிகர்மங்களை மட்டும் வென்றவராயும், கைவல்ய பதவிக்குக் காரணமான கேவலஜ் ஞானத்தை அடைந்தவர்களாயுமுள்ள அருகத்பட்டாரகர் களையும் ; முக்தியடைந்த ஆன்மாவுக்குச் சைதன்ய அறிவு இல்லையென்று கூறுகின்ற நையாயிக, வைசேஷிகர் கொள்கைகளைத் தவறு என்று தெளிவிக்கத் தக்க உண்மை அறிவோடு விளங்கியவராயும், முக்தருக்கு அறிவும் இன்பமும் யுக்தியால் கூறும் சாங்கிய மதத்தைத் தவறு என்று நிராகரித்துத் தெளிவிக்கத் தக்க ஆன்மாவின் இயற்கையறிவும், கடையிலா இன்பமும் பெற்றவராயும், ஈச்வரன் ஸர்வதா முக்தனாகவேயுளன் என்கிற மதத்தைத் தவறு என்று தெளிவிக்கத்தக்க முறையில்; பிறவியையும், காதி அகாதி வினைகளையும்  வென்று, முக்தி அடைந்தவராயும், பிறவிப் பெருங்கடலின் கரையை அடைந்தவர்களாயுமுள்ள ஸித்த பரமேஷ்டி களையும்;  பஞ்சாசாரம், தசதருமம் முதலான ஒழுக்கங்களில் தவறாமல் நடக்கும் ஆசார்ய பரமேஷ்டி களையும் ; பவ்வியர்களுக்குத் திருவறத்தை உபதேசிக்கும் தன்மையுள்ள உபாத்தியாய பரமேஷ்டி களையும் ; திருவறம் ஒன்றே குறிக்கோளாக நின்று முக்தி நெறியைச் சாதிக்கும் சர்வ சாது பரமேஷ்டி களையும் ; தர்மம் என்கிற சாதுரங்க படைகளுக்கு (த்தலைவராயும்) சக்கரவர்த்திகளாயும், தேவாதி தேவர்களுமாகிய பரமேஷ்டிகள் எவ்வளவுபேர்கள் இனி இருப்பார்களோ, முன் இருந்தார்களோ, இப்போது இருக்கின்றார்களோ அந்தப் பஞ்சபரமேஷ்டிகள் அனைவரையும் நமஸ்கரித்துத் துதித்து (வணங்கி) நல்லறிவையும், நற்காட்சியையும், நல்லொழுக்கங்களையும் எக்காலமும் மேற்கொண்டு ஆஷ்டான்னிகக் கிரியா கலாப த்தைப் பக்தி பூர்வகம் செய்கிறேன்.

 

பஞ்ச பரமேஷ்டிகள் ஐவரும், ஒருவரே தவிர ஐவர் அல்ல ; எவ்வாறெனில் ? (பள்ளிமாணவன் ஒருவன் முதல் வகுப்பிலிருந்துப் பின், தன்னுடைய அறிவுக்கும், செயலுக்கும் தக்கவாறு மேல் வகுப்புகளில் சென்று பரீக்ஷை தேறி வீடடைவது போல), ஆசார்யராக இருந்த முனிவரே தன் அறிவும் செயலும் விளங்கப்பெற்று உபாத்தியாயராகிப் பின், அவரே சர்வ சாதுவாகிக் காதி வினையை வென்று அருகர் தன்மையை எய்தி, அகாதியையும் வென்று சித்தராவார் என்றுணர்க. அதாவது, மதி ஜ்ஞானம், சுருத ஜ்ஞானம், அவதி ஜ்ஞானம் என்ற மூன்று ஞானத்தையும் அடைந்த ஆசார்ய பரமேஷ்ட்டி யாய் இருந்தவர், (1) மோக்ஷ மார்க்கத்தைச் சாதிக்க வேண்டி யோகத்திலிருப்பதும், (2) யோகம் முடிந்தபின் பவ்வியர்களுக்கு அறம் போதிப்பதும்,  (3) புதிதாகத் துறவு மேற்கொள்வோருக்குத். தீக்ஷை கொடுப்பதும் ஆகிய மூன்று செயல்களை உடையவராகி இருந்துப் பின் அவரே நான்காவது மனப்பர்யய ஞானத்தையும் பெற்று உபாத்தியாய பரமேஷ்ட்டி யாவார். இவர்களையே கணதரர் என்று கூறுவதும் உண்டு ; சிலர் ஆசார்ய பரமேஷ்டியே கணதரர்  என்று கூறுவதுமுண்டு.) இவர்கள் (1) மோக்ஷமார்க்கத்தைச் சாதிப்பதற்காக யோகத்திலிருப்பதும், (2) யோகம் முடித்து பவ்வியர்களுக்கு அறம் போதிப்பதும் ஆகிய இரண்டு செயல் உடையவராகி இருந்துப் பின் * அவரே சாது பரமேஷ்ட்டி யாகி விடுகிறார். மோக்ஷமார்க்கத்தை சாதிப்பதாகிய யோகத்தில் இருப்பது தவிர, அறம் போதிப்பதும் இல்லையாதலின், அவர்கள்  சர்வ சாது எனப்பட்டார் ; அதன் பின்பு அவரே காதி வினையை மட்டும் வென்று அருகத் பரமேஷ்ட்டி யாகி (கேவலஜ்ஞானியாகி), தேவர்களால் இயற்றப்பட்ட கந்தகுடி, சிம்மாசனம், தாமரை முதலிய அதிசயங்களைப் பெற்று அறம் போதிக்கின்றார் ; அதன் பின்பு அவரே (அரகந்தரே) அகாதி வினையையும் வென்று சித்த பரமேஷ்ட்டி யாகி முக்தி அடைகின்றார்  என்றுணர்க.

 

             இனி கர்மபூமி முதலியவற்றின் விவரமாவன :-- நாம் வசிக்கும் பூமியாகிய இது ' ஜம்பூ த்வீபம்' எனப்படும், இது தட்டையாயும், வட்ட வடிவமாயும், இலக்ஷயோசனை பரப்புள்ளதாயும் (மூவுலகத்துக்கும் மத்தியில் உள்ளதாயும்,) இருக்கிறது. இந்த ஜம்பூ த்வீபத்தைச் சுற்றிலும் இலவண (உப்பு) சமுத்திரம், (ஆரக்கால் நீங்கிய வண்டிச் சக்கர வட்டையின் வளையம் போல்,) இரண்டு லக்ஷ யோசனைப் பரப்பில் சூழ்ந்திருக்கிறது ; இங்ஙனமே ஒன்றை ஒன்று சூழ்ந்து, ஒன்றற்கொன்று இரட்டித்த அளவுள்ளனவாகி,  1. ஜம்பூ த்வீபம்,  இலவண சமுத்திரம்,   2. தாதகிஷண்ட த்வீபம், காளோதக சமுத்திரம்,  3. புஷ்கர வர த்வீபம், புஷ்கர வர சமுத்திரம்,  4. வாருணிவர த்வீபம், வாருணிவர சமுத்திரம்,  5. ருசகவர த்வீபம், ருசகவர சமுத்திரம்,  6. புஜகவர த்வீபம், புஜகவர சமுத்திரம்,  7. க்ரௌஞ்சவர த்வீபம், க்ரௌஞ்சவர சமுத்திரம்,  8. நந்தீச்வர த்வீபம், நந்தீச்வர சமுத்திரம் என இவ்வாறே எண்ணற்ற பல த்வீபங்களும், பல கடல்களும் உள்ளன. அவைகளின் கடைசியில் உள்ளவை,  சுயம்பு ரமண த்வீபமும், சுயம்பு ரமணக் கடலுமாகும்.

----------------------------------------------------

 

*  பல முனிவர் கூட்டங்களுக்குத் தலைவர் ஒருவர் இருப்பார். அவர், தம் கடைசி காலத்தில் சங்கங்களில் உள்ள சிறந்த (அவதி) ஜ்ஞானிக்குத் தன் பதவியை அளித்துத் தான் சர்வ சாதுத் தன்மையை அடைவது மரபு.

 

16 லக்ஷ யோசனை அகலமுள்ள புஷ்கரவர த்வீபத்தின் (வெளிப்) பாதியில், 8 லக்ஷ யோசனை அகலத்தில், சுற்றிலும் மானுஷோத்தர பர்வதம் (என்னும் மலை) சூழ்ந்திருப்பதனால் மனிதர் வாழும் இடம் ; ஜம்பூ த்வீபம் 1.  தாதகி ஷண்ட த்வீபம் 1. புஷ்கரார்த்த த்வீபம் (அர்த்தம் - பாதி) 1/2 ஆக (2 1/2) இரண்டரைத் த்வீபமும் லவண காளோதக மென்ற இரண்டு சமுத்திரமும் ஆகிய 45 லக்ஷ யோசனை ஆகும்.

 

      அதாவது, லவண சமுத்திரம் 2 லக்ஷம், தாதகி ஷண்ட த்வீபம் 4 லக்ஷம், காளோதக சமுத்திரம் 8 லக்ஷம், புஷ்கரார்த்தம் 8 லக்ஷம், ஆக (2+4+8+8 = 22) ஒரு பக்கத்திற்கு 22 லக்ஷம் ; இரண்டு பக்கத்திற்கு 22+ 22 = 44 லக்ஷம் ; இதனோடு ஜம்பூ த்வீப விஸ்தாரம் ஒரு லக்ஷம் சேர (44+1 = 45) நாற்பத்தைந்து லக்ஷ யோசனை என்ப.  கடல் மையத்திலிருந்தும் மாமுனிவர்கள் வினை வென்று வீடடைவதனாலும், இந்த நாற்பத்தைந்து லக்ஷ யோசனையே சித்தர் சிலையின் அளவாகக் கூறியிருப்பதனாலும், ஈண்டு, "தோஸு ஸமுத்தேஸு " என்று இரண்டு கடலையும் ஒருங்கே கூறினார் ஆசிரியர்.

 

    அதன் விவரமாவன :--

மாமுனிவர்கள் தங்கள் தபோ மாகாத்மியத்திற்குத் தக்கவாறு, பலவிதமான சாரண ரித்தியை அடைவர். அவர்களில், (நீரின் மேல் தங்கள் பாதம், நீரில் அழுந்தாமல் செல்லும்) ஜலகதர், (பூமியில் பாதம் படாமல் நான்கு அங்குலத்துக்கு மேல் செல்லும்) ஸ்தலகதர், (பறவைகள் பறந்து செல்வது போல, வான்வழியாகச் செல்லும்) * ஆகாச சாரணர் முதலாகப் பல வகை உண்டு. அவர்கள் ஒரு நாட்டை விட்டு மற்றொரு நாடு செல்லும்போதும் ; கடல் மையத்தில் செல்லும்போது (வழிப்போக்கன் ஒருவன் தன் உயிர் பிரியவேண்டிய நியதி ஏற்படுமாயின், அவ்வழியிலேயே உயிர் நீங்குவதை நாம் காண்பது போலத்) தாங்கள் முக்தியடைய வேண்டிய காலம் நெருங்கிவிட்டதாயின், அவ்விடமே கால் நிலந் தோயாக் கடவுளாக விளங்கி, வினை வென்று, வீடுபேறு அடைவதும் உண்டு.

 

       வட்டமாகவுள்ள  ஜம்பூ த்வீபத்தைச் சூழ்ந்துள்ள தாதகி ஷண்ட த்வீபமும், புஷ்கரார்த்த த்வீபமும் ஆகிய இரண்டின் தெற்கிலும் வடக்கிலும் இஷ்வாகாரம் என்னும் நான்கு மலைகள் தெற்கு வடக்கு * 24, லக்ஷ யோசனை நீளம் நீண்டு வளர்ந்திருப்பதனால், அவற்றுள் ஒவ்வொன்றும் இரண்டிரண்டு பாகமாகப் பிரிந்து, ஜம்பூ த்வீபத்தோடு (தாதகி ஷண்ட த்வீபத்தின் பிரிவு இரண்டு, புஷ்கரார்த்த த்வீபத்தின் பிரிவு இரண்டு ஆக) ஐந்து பிரிவு ஆகின்றது ; அவ் வைந்திலும் மையத்தில் மகமேரு என்னும் பொன்மலைகள் ஐந்து அமைந்திருக்கின்றன. மற்றும்,  ஜம்பூ த்வீபம் 1, தாதகி ஷண்ட த்வீபத்தின் பிரிவு 2 , புஷ்கரார்த்தத்தின் பிரிவு 2, ஆகிய ஐந்திலும்,  ஹிமவான், மஹா ஹிமவான், நிஷதம், நீலி, ருக்மி, சிகரி என்ற ஆறு (குலகிரி) மலைகள் குறுக்கே வீழ்ந்து; அதனால், பரதம், ஹைமவதம், ஹரிவர்ஷம், விதேகம், ரம்யகம்; ஹைருண்யவதம்; ஐராவதம் என, ஏழு நாடாகப் பிரிந்து ( 5 × 6 = 30 ; மலைக்கு 5+ 7 = 35) நாடுகள் முப்பத்தைந்து ஆயின.

                தொடர்ச்சி நாளை----

 

---------------------------+------+----------------------

 

* ஆகாச சாரணர் -இதன் விபரம் பதார்த்த சாரத்திலும், மேருமந்தரம் சமவசரண சுருக்கத்திலும் கூறியிருப்பது கண்டு கொள்க.

 

* ஒருபக்கத்தின் நீளம் 22, யோசனையில் கடல் 10 யோசனை போக, ஒரு பக்கத்திற்கு 12 யோசனை ; இருபக்கமும் சேர்ந்து  24 ஆகும். அதாவது, தாதகி ஷண்ட த்வீபத்தின் தெற்கில் 4; வடக்கில் 4; புஷ்கரார்த்த த்வீபத்தில் தெற்கில் 8, வடக்கில் 8 ஆக (4+4+8+8 =24) இருபத்து நான்கு ஆகும்.

 

அவற்றுள் தெற்கில் உள்ள ஐந்து பரதமும், வடக்கில் உள்ள ஐந்து ஐராவதமும், மத்தியில் உள்ள ஐந்து விதேகமும் ஆகிய 15 - நாடுகளும் கர்மபூமி என்றும், ஏனைய இருபது நாடுகள் போகபூமி என்றும், அவற்றுள்ளும் விதேகநாடு ஐந்தும் எக்காலத்தும் கர்ம பூமியாகவே இருப்பதனால் நியத கர்ம பூமி என்றும், பரத ஐராவதம் பத்தும் போக பூமியாகவும் கர்ம பூமியாகவும் (உத்ஸர்ப்பிணி, அவஸர்ப்பிணி ஆகிய காலங்களில்) மாறுவதனால் அநியத கர்ம பூமியென்றும் வழங்கப்படும். இவற்றையே  "பண்ணாரஸ கம்ம பூமிஸு" என்று குறிப்பிட்டார் ஆசிரியர்.

 

         மகமேரு, விதேகம், போகபூமி முதலியவற்றின் உண்மையை நூல்கள் வாயிலாக அறிய விரும்புவோர்,  ஜினமத நூல்களிலும், வால்மீகி இராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் 43 - வது சருக்கத்தில், 33- வது சுலோகத்திலிருந்து 57 - வது சுலோகம் வரையிலும் கூறப்பட்டுள்ள வடமொழி சுலோகங்களிலும் கண்டுகொள்க.

 

      இனி, 'கேவலியாணம்' என்பதற்கு, (1) தீர்த்தங்கர கேவலிகள், (2) இரண்டு நாழியில் காதி, அகாதி கர்மங்களை வென்று முக்தியடைந்த (தருமர் , பீமர்,  அருச்சுனர் முதலிய ) அந்தர் முகூர்த்த கேவலிகள், (3) ஜீவந்தரர் முதலிய இதர கேவலிகள் என்று கூறினாலும் அமையும். (கணதரர் சுருத கேவலி எனப்படுவார்.)

 

        தருமம் முதலியவற்றை படைகளாகக் கூறும் வழக்கினை, "ஒளிறுதேர் ஞானம் பாய்மா" என்று சிந்தாமணி (3074 -ஆம்) செய்யுளிலும், சூளாமணி முக்திச் சருக்கத்திலும் கண்டு கொள்க:  "தேவர் தம் தேவர்க்கு தேவா" என்பர் நீலகேசி யிலும்.

 

50

*கரேமி பந்தே ஸாமாயிகம், ஸவ்வ ஸாவஜ்ஜ ஜோகம் பச்சக்காமி ஜாவஜ்ஜீவம் திவிஹேண மணஸா, வசியா, காயேண ண கரேமி, ண காரேயமி, அண்ணம் கரந்தம் விட ஸமனு மண்ணாமி, தஸ்ஸ பந்தே அயிசாரம் படிக்கமாமி, நிந்தாமி அபபாணம் கரகஹாமி அம்பாணம், ஜாவ அரஹந்தாணம் பயவந்தாணம் பஜ்ஜுவாஸம்  கரேமி தாவகாலம் பாப கம்மம் துச் சரியம் போஸ ராமி ணமோ ஹூணம். -  50

 

பந்தே ஸாமாயிகம்

கரேமி ஸவ்வ

ஸாவஜ்ஜ ஜோகம்

பச்சக்காமி

ஜாவஜ்ஜீவம்

மணஸா வசியா

காயேணே ணகரேமி

ண காரயேமி

கரந்தம் அண்ணம் வி

ண ஸமணு மண்ணாமி

திவிஹேண

பச்சக்காமி

பந்தே தஸ்ஸ

அயிசாரம்

படிக்கமாமி

அப்பாணம்

நிந்தாமி

அப்பாணம்

கரஹாமி

அப்பாணம்

ஜாவ பயவந்தாணம்

அரஹந்தாணம்

பஜ்ஜுவாஸம்

கரேமி தாவ காலம்

பாப கம்மச் - துச்சரியம்

போஸராமி

ணமோஹூணம்

 

             ஞானவானே ! மேற்கூறிய சாமாயிகத்தைச் செய்கிறேன் ; (எவ்வாறெனில்?) குற்றங்கள் அனைத்துக்கும் காரணமான மன, வசன, காய வியாபாரங்களை, இப்போது அறவே விட்டு விடுகிறேன், இனிமேலும் அவ்விதக் குற்றங்களை என் உயிர் உள்ளவரை,  உள்ளம், சொல், உடல் ஆகிய மூன்றினாலும் செய்யேன்,  பிறரொருவரைக் கொண்டும் செய்யமாட்டேன், பிறர் ஒருவர் செய்கின்றதையும் அனுமதிக்கமாட்டேன் (சம்மதிக்க மாட்டேன்);ஆதலால், அவைகளை மன, வசன, காய சுத்தியோடு விட்டுத் துறக்கின்றேன் ; பட்டாரகனே ! சாமாயிகக் காரியத்தின் (விரதத்தின்) அதீசாரத்தையும், (சாமாயிகம் நிறைவேறாமல் தடுக்கும் செயல்களையும்) விட்டு விடுகிறேன்; இந்நாள்வரை இச்செயலில் ஈடுபடாத என் ஆத்மனையும் நிந்திக்கின்றேன் ; அதனுக்கே இறைவனை சாட்சியாக வைத்து (என்னை நிந்தித்து) விட்டு விடுகிறேன் ; எவ்வளவு காலம் வரை பகவந்தரான (பூஜ்யரான) அரஹந்தர்களை (பிரதி உபஸாநம்) சேவை புரிதனைச் செய்கின்றேனோ, அவ்வளவு காலம் வரையில், தீவினையைத் தருகின்ற தீய எண்ணங்களையும், தீமைதரும் செயல்களையும் விட்டுத் துறந்து விடுகிறேன், நமஸ்கரிக்கிறேன்.

 

         சாமாயிக பக்தியை மேற்கொண்ட ஒருவனே, ஏனைய சித்த பக்தி முதலியவைகளையும் செய்கின்றான். ஆதலால், சாமாயிக பக்தியோடு ஏனைய பக்திகளும் தொடர்ச்சியாய் நின்று அனுகூலமாகின்றன. ஆகவே, 'ஸாமாயிகம் கரேமி' என்றார் ஆசிரியர்.

 

      சத்தாரி மங்களம் முற்றும்.

 

ஜபம்-4 சத்தாரி மங்களம் முடிந்தவுடன் மூன்று சுற்று (27 தரம்) நவ தேவதா மந்திரத்தை உச்சரித்து ஜபம் செய்யவும்.

 

தோஸ்ஸாமி தண்டகம் (அல்லது , தோஷ்யாமி தண்டகம்).

 

51

தோஸ்ஸாமிஹம் ஜிணவரே தித்தயரே கேவளீ அணந்த ஜிணே

ணரப வரளோய மஹியே விஹுயரய மளே மஹப்பண்ணே. - 51

 

மஹப்பண்ணே

ஜிணவரே

கேவலீ

அணந்த ஜிணே

ணரப

வர ளோய

ம ஹி யே

விஹுயரய

மளே தித்தயரே

அஹம் தோஸ்ஸாமி

(ஸ்தோஷ்யாமி)

 

       மிகச்சிறந்த அறிவு முதலிய குணங்களை உடையவரும் (ப்ராஜ்ஞரும்), வினை வென்றவர்களில் சிறந்தவரும், (அஸஹாய ஞானமான) கேவல ஜ்ஞானத்தைப் பெற்றவரும், முடிவில்லாத மோஹனீயம் முதலியவற்றை முறிய(அ)டித்தவரும், அரசர்களுக்கு அதிபராகிய, சக்கரவர்த்திகள் முதலானவர்களால் சேவிக்கப் பட்டவரும், பசி, தாகம் முதலிய பதினெண் குற்றங்களை நீக்கியவருமான தீர்த்தங்கர பரம தேவர்களை யான் துதிக்கின்றேன்.

 

   இனி, நர ப்ரவா, நரபவர என்று பிரித்துரைப்பினும் அமையும்.

 

   ஈண்டு, "ஜிணவரே' என்றது, ஜினர்களுக்குள் (கேவலக் ஞானிகளுக்குள்) சிறந்தவர் என்பதாம். வினைகளை வென்று கேவலக் ஞானத்தைப் பெற்றவர், ஜினர் எனப்படுவார். அதாவது, காதி வினையை வென்று, கேவலக் ஞானத்தைப் பெற்று சமவ சரணம் முதலிய சிறப்பினை எய்தியவர் (1) தீர்த்தங்கர கேவலிகள் என்றும் ; காதி வினையை வென்று கேவலக் ஞானத்தைப் பெற்று, (சமவசரணத்தின் மையத்திலுள்ள) கந்த குடியை மட்டும் சிறப்பாக எய்தியவர் (2) இதர கேவலிகள் என்றும் ; காதி, அகாதி ஆகிய  இருவினையையும் இரண்டு நாழியில் வென்று கேவலக் ஞானமுடன் முக்தி எய்தியவர்  (3) அந்தர் முகூர்த்த கேவலிகள் என்றும், கேவலிகள் மூவகையினராவர்.  எனவே, ஈண்டு சிறப்பாக, தீர்த்தங்கரரை குறிப்பிட வேண்டி, "ஜினவரே" என்றார் ஆசிரியர்.

 

52

ளோயஸ்ஸ உஜ்ஜோயயரே தம்மம் தித்தங்கரே ஜிணவந்தே

அரஹந்தே கித்திஸ்ஸே சுஉவீஸஞ்சைவ கேவளிணோ.  -  52

 

ஸோயஸ்ஸ

உஜ்ஜோயயரே

தம்மம்

தித்தம்

கரே

ஜிணே

கேவளிணோ

வந்தே

(புந:)

சவுவீஸம்

அரஹந்தே

ச ஏவ

கித்திஸ்ஸே

வந்தே

 

       உலகத்துக்கு ப்ரகாசம் செய்கின்ற (எனவே, உலகிலுள்ள பவ்வியர்களின் அஞ்ஞானத்தைப் போக்கி நன் ஞானத்தை விளங்கச் செய்கின்ற), தரும தீர்த்தத்தை (திருவறமழையைச் சொற்பொழிவு மூலம்) பொழிகின்றவரகளாகி (இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றில்) திகழ்கின்ற (திகழ்ந்த) தீர்த்தங்கரர்களையும், அந்தர் முகூர்த்த கேவலிகளையும், இதர கேவலிகளையும் (த்ரிகரண சுத்தி பூர்வகம்) நமஸ்கரிக்கின்றேன் ; மீண்டும் நிகழும் (வர்த்தமான) காலத்தின்  அரஹந்தர்களாகிய ஆதிபகவன் முதல் மகாவீரர் வரையிலுள்ள இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களையும் அவர்கள் பெயரைத் தனித்தனியே கூறிப் புகழ்ந்து துதிக்கின்றேன்.

 

----------------------------------------------- 

56

ஏவம்மயே அபித்துதா விஹுயரயமளா பஹீண ஜரமரணா

சவுவீஸம்பி ஜிணவரா தித்தயரா மே பஸீயந்து.  -  56

 

ஏவம் மயே

அபித்துதா

விஹுய ரய மளா

பஹீண ஜர மரணா

ஜிணவரா:

சவுவீஸம்பி

தித்தயரா

மே பஸீயந்து

 

            இவ்வண்ணம் என்னால் பக்தி பூர்வகம் துதிக்கப் பட்டவர்களாயும், காதி கர்ம மலங்களைக் கெடுத்தவர்களாயும், (தமக்கு ஏற்படும்) பிறப்பு  இறப்பு என்பதை முழுவதும் இல்லாமல் கெடுத்தவர்களாயும், ஜிநோத்தமர்களாயும் உள்ள இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களும் எனக்கு நல்ல வரப்பிரசாதத்தை அளிக்கட்டும் (அனுக்கிரஹம் செய்யட்டும்).

 

57

கித்திய வந்திய மஹியா ஏதேளோ குத்தமா ஜிணா ஸித்தா

ஆரொக்க ணாணளாஹம் திந்து ஸமாஹிம் ச மே போஹிம்.  -  57

 

கித்திய-

வந்திய மஹியா

ளோகுத்தமா

ஸித்தா

ஏதே ஜிணா

மே ஆரொக்க-

ணாணளாஹம்

போஹிம்

ஸமாஹிம் ச

திந்து

 

           நான்கு வகை தேவர்கள், கணதரர், முனிவர் முதலிய பவ்விய ஜீவன்களினால், புகழ்ந்து வணங்கிப் பூஜிக்கப்பட்டவர்களும், உலகத்திற்கே உத்தமர்களும், பாவமோக்ஷத்தை அடைந்தவர்களும் ஆகிய இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களும் எனக்கு, உடல் ஆரோக்கியத்தையும், (சந்தேஹம், விபரீதம், மயக்கம் முதலிய) குற்றங்களில் நீங்கிய நல்லறிவும், நற்காட்சியும், நல்லொழுக்கமும் ஆகிய மும்மணிகளும் எய்தி விளங்குமாறு அருள் (செய்து) பாலிக்கட்டும்.

 

58

சந்தேஹிம் ணிம்மளயரா ஆயிச்சேஹிம் அஹியப் பயாஸந்தா

ஸாயரா இவ கம்பீரா ஸித்தா ஸித்திம் மம திஸந்து.  -  58

 

சந்தேஹிம்

ணிம்மளயரா

ஆயிச்சேஹிம்

அஹியம்

பயாஸந்தா

ஸாயர இவ

கம்பீரா

ஸித்தா ஸித்திம்

மம திஸந்து

 

             சந்திரனைக் காட்டிலும் நிர்மலமானவரும், சூரியனை (ஆதித்தனை)க் காட்டிலும் மிகவும் ஒளிரும் ஜோதிமயமானவரும், ஸாகரம் (கடல்) போல ஆழமான கம்பீரம் உடையவரும், (சித்தர் உலகை அடையத்தக்க) * பாவ மோக்ஷத்தை யடைந்தவரும் ஆகிய இருபத்துநால்வரும் ; தாங்கள் அடையும் சித்த பதவியை, யானும் அடையும் வண்ணம் எனக்கு அருள் புரியட்டும்.

 

* பாவ மோக்ஷம் : பரிணாமத்தினால் அடைந்த மோக்ஷம் விவரம்  மேருமந்தரம் முதல் சருக்கத்துக்குக் காண்க.

 

59

சஉவீஸம் தித்தயரே உஸஹாய வீர பச்சிமே வந்தே

ஸவ்வேஸம் குணகணஹரே ஸித்தே ஸிரஸா ணமஸ்ஸாமி.

 

உஸஹாய வீர-

பச்சிமே சவுவீசம்

தித்தயரே வந்தே

ஸவ்வேஸம் ஸித்தே

ஸவ்வேஸம்

குண கண ஹரே

ஸிரஸா

ணமஸ்ஸாமி

 

           மீண்டும், ஆதிபகவன் முதலாக மகாவீரர் வரையிலுமுள்ள இருபத்துநான்கு தீர்த்தங்கரரையும் வணங்குகிறேன்;  அவ்வாறே, எல்லா சித்த பரமேஷ்டிகளையும் ; சகல நற்குணங்களையும் அடைந்த கணதரர் முதலிய முனிவர் (ஸமுதாயக்) கூட்டங்களையும் (உத்தம அங்கத்தினால்) சிரஸி[னா]ல் கை குவித்து வணங்குகிறேன்.

 

தோஸாமி தண்டகம் முற்றும்.

 

 

60

ஸ்ரீ நிவாஸாய சாந்தாய சிதாநந்தாத்மநே நம:

நமஸ் ஸ்வாத்மோத்த ஸௌக்யாய நமஸ் த்ரைளோக்ய பந்தவே. - 60

 

ஸ்ரீ நிவாஸாய

சித் ஆநந்த

ஆத்மநே

ஸ்வ ஆத்ம உத்த

ஸௌக்யாய

த்ரைளோக்ய

பந்தவே

சாந்தாய

நம: நம: நம:

 

           அந்தரங்க பஹிரங்க லக்ஷ்மிக்கு இருப்பிடமானவரும், ஆத்மத்தியான (சுத்தோப யோக) த்தினால் அடைந்த ஆநந்த மயமான அனந்த ஜ்ஞான ஸ்வரூபரும்; தன் ஆன்மாவின் இயற்கைப் பண்பினாலேயே வினையின் நீங்கி விளங்கிய அறிவுடன், கடையிலா இன்பமுடையவரும்; மூவுலகிலுமுள்ள பவ்வியர்களின் துன்பத்தை நீக்கி எச்சமயத்தும் இன்பமளிப்பவரும் ஆகிய சாந்த ஸ்வரூபியான சாந்தி ஜினன் பொருட்டு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

 

           பக்தியின் பெருக்கத்தினால் மும்முறை வணங்கல் முறை.  ஈண்டு, மத்திய மங்கள காரணமாகவும், தொடங்கப்போகும் சித்த பக்தி இடையூறின்றி முடியும் பொருட்டும், சாந்தி ஜினரை வணங்கினார். ஈண்டு, இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களில், பதினாறாவது சாந்தி நாதரை வணங்கக் காரணம் என்னவெனில் ? சாந்தி பகவான் தன் முற்பிறவிகளில் பத்துபவம் வரை, துன்பமற்ற இன்பம் துய்த்தவராதலாலும், மூன்று பிறவி (யில்) முறையே சக்கரவர்த்தி பதவி பெற்ற புண்ணியவான் ஆதலாலும், அவரை வணங்கித் துதித்தவர்களுக்குச் சர்வ சாந்தி அடைவதனாலும் என்று கூற அமையும்.

 

61

விசுத்த ஸித்தாஷ்ட்ட குணை ரபீ டயம்

       விநஷ்ட்ட கர்மாஷ்ட்டக நிஷ்களங்கம்

த்ரிலோக சூடாமணி ஸித்த நாதம்

        நமோ விசுத்த்யா ப்ரணமாமி நித்யம், - 61

 

விசுத்த சித்த

அஷ்ட குணை:

அபீட்யம்

விநஷ்ட

கர்ம அஷ்டக

நிஷ்களங்கம்

த்ரிலோக சூடாமணி

ஸித்த நாதம்

மநோ விசுத்யா

நத்யம் ப்ரணமாமி.

 

            (குற்றமற்ற) நிர்மலமானவரும், (அனாதியாகவே ஆன்மாவிடம் பொருந்தியிருந்ததுவுமான, இயற்கையான) எண்குணங்களுடன் விளங்குவதனால், துதிக்கப்படத்தக்கவரும், காதி அகாதியாகிய செயற்கையினாலான எண்வினைகளையும் வென்றதனால் எவ்விதக் குற்றமும் இல்லாதவரும், ஆகிய மூவுலகின் உச்சியில் முடிமணிபோல விளங்குகின்ற சித்த பரமேஷ்டிகளைத் திரிகரண சுத்தியோடு நாள்தோறும் வணங்குகின்றேன்.

 

           இவ்வண்ணம் முக்கிய மங்கள கர்த்தாக்களான அருக சித்தரை வணங்கி, சித்த பக்தியை தொடங்குகிறார்.

 

        பொன்னை, அதன் கனியிலிருந்து வெட்டி எடுக்கும்போதே அது கிட்ட காளிதங்களோடு கூடியிருப்பது போல, அனாதியாகவே ஆன்மாவைத் (துன்புறுத்தித்) தொடர்ந்து வந்த வினைகளை வேரற வென்று, இயற்கைப் பண்புகளாகிய எண் குணங்களையும் அடைந்தவர் சித்தர் என்க.

 

ஸித்தா நுத்தூத கர்ம ப்ரக்ருதி ஸமுதயாந்

   ஸாதி தாத்ம ஸ்வ பாவாந்

வந்தே ஸித்தி ப்ரஸித்த்யை

     ததநுபமகுண ப்ரக்ரஹாக்ருஷ்டி துஷ்ட்ட:

ஸித்திஸ் ஸ்வாத்மோப லப்தி: ப்ரகுண குண

   கணாச்சாதி தோஷா பஹாராத்

யோக்யோ பாதாந யுக்த்யா த்ருஷத

     இஹ யதா ஹேம பாவோப லப்தி: - 62

 

உத்தூத கர்ம

ப்ரக்ருதி

ஸமுதயாந்

ஸாதித ஆத்ம

ஸ்வபாவாந்

ஸித்தாந்

தத் அநுபம குண

ப்ரக்ரத ஆக்ருஷ்டி

துஷ்ட:

அஹம் மம

ஸித்தி ப்ரசித்யை

வந்தே

யோக்ய உபாதாந

யுக்த்யா

ப்ரகுண

குண கண

ஆச்சாதி தோஷ

அபகாராத்

இஹ த்ருஷத:

தோஷ அபகாராத்

ஹேம பாவ

உபலப்தி:

யதா ததா

ஸ்வாத்ம

உபலப்தி:

சித்தி:

மே ஸ்யாத்

 

            மூல ப்ரக்ருதி, உத்தர ப்ரக்ருதி, உத்தரோத்தர ப்ரக்ருதி என்ற பேத பின்னங்களாகிய (பிரிவாகிய) காதி அகாதி வினைகளின் சமூகங்களைக் கெடுத்தவர்களும் ; அதனால் தன் ஆன்மாவின் இயற்கைப் பண்புகளை தவத்தின் மூலம் சாதித்துப் பெற்றவர்களும் ஆகிய ஸித்த பரமேஷ்டிகளை ; அவர்கள் எய்திய இணையற்ற குணங்களாகிற கயிற்றின் மூலமாக என் உள்ளத்தைப் பற்றி ஈர்க்கப் படுவதனால் (அக்குணங்களைக் கண்டு, அவ்வாறே யாமும் அடையவேண்டும் என்று) மகிழ்ச்சியடைந்த யான் ; என் ஆத்ம சித்தியை அடையும் பொருட்டுத் துதித்து வணங்குகின்றேன். அந்த ஆத்ம சித்தியைப் பெற, மிகச் சிறந்தவற்றையே மேற்கொள்ள வேண்டும் (தீமையை விலக்கி நன்மையைக் கடைபிடிக்க வேண்டும்) ஆதலின், சிரேஷ்டமுள்ள குண சமூகமான எண் குணங்களையும், அனாதியாக விளங்கவொட்டாமல் மூடி மறைத்திருக்கின்ற எண் வினைகளாகிற குற்றங்களைக் கண்டு, இவ்வுலகில் மக்களுக்குப் பொன்னோடு பொருந்தியிருக்கிற கல்லில் (கிட்ட காளிதங்களில்) இருந்து பாதரசம் முதலியவற்றைக் கொண்டு களங்கத்தைப் போக்கி அப்பொன்னைப் பெறுவது எவ்வாறோ அவ்வாறே, உயிரினின்றும் வினைகளைப் பிரித்து நீக்கி ஆன்மலாபத்தைப் பெறுவதாகிய அந்த ஸித்தி எனக்கு ஆகட்டும்.

 

 

      வினைகளை வென்று ஆன்ம குணங்களை அடைந்த சித்தர்களை வணங்கி, அவர்களடைந்த குணங்களை நாம் அடையும் பொருட்டுத் தீமையை நீக்கி நன்மையைக் கடைபிடிக்க வேண்டும் ; ஆதலின், அவர்களை வணங்கி வினை வெல்லும் வழியைக் கடைபிடிப்போமாக என்றவாறு,

 

      ஞானாவரணீயம் முதலிய எண் வினைகளும் மூலப்ரக்ருதி யென்றும், அவற்றின் பிரிவாகிய 148 - ம் உத்தரப்ரக்ருதி யென்றும், அவைகளின் விரிவு உத்தரோத்தரப்ரக்ருதி யென்றும் கூறப்படும். உதாரணமாக, வேதனீயம் - சாதவேதனீயம், அசாத வேதனீயம் என இரண்டேயாகும். அதன் விரிவு பலவிதமாகும். என்னையெனின் ? தலைவலி, பல்வலி, ஜுரம் முதலிய பலவேறு நோய்களுக்கும், மற்றும் உள்ளத்தே தோன்றும் துன்பங்களுக்கும், அசாத வேதனீயம் என்ற ஒன்றே கூறப்படும் ; இன்ப காரணம் முதலிய பலவற்றிற்கும் சாதவேதனீயம் எனப்படும்.

 

ஜீவன் :-  முக்தியடைந்தவிடத்தும் நாசமடையாமல் நிற்பதும், அழிவற்ற தன் குணங்களோடு கூடியதும், நிலையான தன்மை யுடையதும், (கனியில் வெட்டி எடுக்கும் பொன்னைப் போல) அனாதியாகவே வினைகளோடு சம்பந்தப்பட்டதும், பிறவியில் வினைவசமாகித் தன்னால் சம்பாதிக்கப்பட்ட (ஈட்டிய) வினைப் பயன்களை அனுபவிக்கின்றதும், அவ் வினைகளை வென்று முக்தி இன்பத்தை அடைகின்றதும், அறிவு காட்சி மயமான, தன் இயற்கை குணங்களினால் எல்லாவற்றையும் அறிகின்றதும் ; எல்லாவற்றையும் காண்கின்றதும், தான் எடுத்த உடலின் அளவாகவே உருவத்துக்குத் தகுந்தவாறு சிறிதும் பெரிதுமாக மாறி, ஆன்மஸ்வரூபமாக விளங்குகின்றதும், பிறவியில் தான் ஈட்டிய வினை வசத்தால் தான் அடையும் உடல்கள் தோறும் சுருங்குதல் பெருகுதலாகிய தன்மையுடையதும், (உத்பாத, வியய திரவியம் என்ற) தோன்றுதல், மாய்தல், நிலைத்திருத்தல் என்ற முக்குணங்களை உடையதும், இயற்கையான ஞானம் முதலிய எண் குணங்களோடு பொருந்தி யிருப்பதும் என்ற உயிரின் இயற்கைப் பண்புகளைக் கூறுகின்றார்.

 

63

நா பாவஸ் ஸித்தி ரிஷ்ட்டா ந நிஜ குணஹதி

     ஸ்தத் தபோபிர் நயுக்தே:

அஸ்த்யாத்மா நாதி பத்தஸ் ஸ்வக்ருத ஜபலபுக்

     தத் க்ஷயாந் மோக்ஷ பாகீ

ஜ்ஞாதா த் ர ஷ்ட்டா ஸ்வதேஹ ப்ரமிதி ருபஸமா

         ஹார விஸ்தார தர்ம்மா

த்ரௌவ் யோத்பத்தி வ்யயாத்மா ஸ்வ குணயுத

         இதோ, நா ந்யதா ஸாத்ய ஸித்தி: -  63

 

தத் தபோபி:

அபாவ:   

ஸித்தி:

ந இஷ்ட்டா

 

தத் தபோபி:

நிஜகுணஹதி:

ஸித்தி:

ந இஷ்ட்டா

யுக்தே: ஸித்தி:

ந இஷ்ட்டா

ஆஸ்தி ஆத்மா

அநாதி பத்த:

ஸ்வக்ருத

ஜ பல புக்

தத் க்ஷயாத்

மோக்ஷபாகி

ஜ்ஞாதா

த்ரஷ்ட்டா

ஸ்வதேஹ

ப்ரமிதி:

உபஸமாஹார-

விஸதார தர்மா

த்ரௌவ்யா

உத்பத்தி

வ்யய

ஆத்மா

ந இஷ்ட்டா

நிஜ குண யூத:

 இத:

அந்யதா

ஸாத்ய ஸித்தி: ந

                  

பௌத்தர்களுடைய (சிவந்த காவி வஸ்த்திரத்தைப் போர்த்துக் கொள்கிறது முதலான) தவங்களுள் அவர்களால் கூறும் "ஜீவனுடைய நாசம் முக்தி"  யென்பது விரும்பத்தக்கதல்ல ! நையாயிக வைசேஷிகருடைய (பஸ்மத்தைப் பூசுகிறது முதலான) தவங்களுள் அவர்களால் கூறும் "ஜீவனுடைய புத்தி முதலிய குணங்களின் நாசம் முக்தி " யென்பது விரும்பத் தக்கதல்ல; இவ்வாறு யுக்தியினால் கூறும் கூற்று விரும்பத் தக்கதல்ல; (எனவே, தன் இயற்கைப் பண்புகளோடு நிலைத்திருப்பதுவே முக்தி; ஆத்மா அஸ்தி யென்பதாயிற்று; அத்தகைய) ஆத்மன் என்ற ஒரு பொருள் உண்டு; எனவே, "ஆன்மா நிலையாக இல்லை"  யென்ற பௌத்தமதக் கொள்கை உண்மையானதல்ல.  மற்றும் ஆத்மா, அனாதி காலமாகவே வினைகளால் கட்டப்பட்டவன் (எனவே, ஆத்மன் "பந்தகன் அல்லன் " என்ற சாங்க்ய மதக்கொள்கை விரும்பத் தக்கதல்ல), உண்மையில் ஆத்மன் தன்னால் ஈட்டப்பட்ட வினையின் பயனை அனுபவிக்கின்றான். (எனவே, ஆத்மன் "கர்ம பலத்தை அனுபவிக்கமாட்டான் " என்ற சாங்க்யமதக் கொள்கை விரும்பத்தக்கதல்ல).

 

                அந்தக் கர்மங்களின் விநாசத்தினால் ஆத்மன் முக்தியை அடைகின்றான் ஆகவே, ஆத்மன்  " கரியை [க் கழுவினாலும் கரியே யாவதை]ப் போல் *கர்ம விபாகத்தால் நிர்மலமாகமாட்டான் " என்கிற மீமாம்ஸக மதக் கொள்கை விரும்பத் தக்கதல்ல,

 ஆத்மன், எல்லாவற்றையும் அறிகிறவன் ; ஆத்மன், எல்லாவற்றையும் காண்கிறவன் ; ஆத்மன்,  தான் எடுத்த உடலின் அளவாக நிறைந்துள்ளவன் (எனவே, ஆத்மன் "எவ்விடத்தும் வியாபித்துள்ளான் " என்ற சாங்க்யம், மீமாம்ஸகம், யோகம் என்ற மூன்று மதக் கொள்கைகளும் விரும்பத் தக்கனவல்ல),  ஆத்மா தான் எய்திய உடலுக்குத் தக்கவாறு (அணுவளவாயும், மகத்தாயும்) சுருங்குதல் விரிதல் என்ற இரண்டு தன்மைகளை அடைகிறது. (அதாவது *தீப ஒளி தான் இருக்கும் இடத்திற்குத் தக்கவாறு காணப்படுவது போல்)

 

ஆத்மன் என்றும் அழியாமல் ஸ்திரமாக இருத்தல், உத்பத்தியாதல் (பிறத்தல்),  அழிதல் என்ற மூன்று தன்மைகளை யுடையவன் (த்ரௌவ்யம் எனவே, க்ஷணிகவாதியான பௌத்தமதக் கொள்கையும்,  உத்பத்தி, வ்யயம் எனவே சர்வதா நித்யம் என்று கூறும் சாங்கியர் மீமாம்ஸகருடைய கொள்கைகளும் விரும்பத் தக்கவையல்ல.)

 

ஆத்மன், தன் இயற்கையான குணங்களோடு பொருந்தி யிருப்பவன் (எனவே "நிர்க்குண பிரம" மென்ற அத்வைத மதக் கொள்கை விரும்பத்தக்கதல்ல), ஆதலின் , "ஸ்வாத்மோப லப்தியே சித்தியாம் " என்ற அருகன் மதத்தைத் தவிர , இதரமான மதக் கொள்கைகளால் மோக்ஷத்தை அடைவதென்பது ஒன்றில்லை.

 

      ஸ்வக்ருத ஜபலபுக் என்பது, ஸ்வ - தன்னுடைய, க்ருத - செயலால் ஈட்டப்பட்ட கர்மங்களால், ஜ - பிறந்த சுக துக்கரூபமான பலனை, புக் - அனுபவிக்கிறான். ஈண்டு, க்ருதம் என்பது கர்மம் என்றாயிற்று, (ஸுக்ருதம், துஷ்க்ருதம் - புண்ய பாபம் என்றாற் போல்வது.)

 

      த்ருவஸ்ய பாவ: த்ரௌவ்யம், த்ரு, என்பதிலுள்ள உ, ஔ ஆகி முடிவில் யத் ப்ரத்யயம் வந்து த்ரௌவ்யம் என்றாகும், சாதாரணமாக, த்ரவ்யம் என்பது பொருளைக் குறிக்கும். ஆகவே, சாஸ்வதமான, த்ருவமான தத்வம் த்ரௌவ்யம் என்க. கைவல்யத்தை யடையப்படுவதற்கு முக்தி எனப்படும்.

 

         சாங்கியம், மீமாம்ஸம் முதலிய ஏனைய மதங்களிலுள்ள இரண்டொருக் குற்றங்களைக் கூறிக் கண்டனம் செய்தார் என்க. அம்மதக் கொள்கைகளை விவரமாக அறிய விரும்புவோர் நீலகேசி, பதார்த்த சாரம், ராஜவார்த்திகம் முதலியவற்றுள் கண்டு கொள்க.

-------------------------------------------------------

* கர்ம விபாகம் என்பது , நன்மை தீமைகளைப் பகுத்துணர்ந்து தீமையை நீக்கி நன்மையைக் கடைபிடிப்பது.

 

*  " ப்ரதேச ஸம்ஹார விஸர்ப்பாப்யாம் ப்ரதீபவத் " என்ற தத்வார்த்த சூத்ரம், ஈண்டு ஒப்பு நோக்கி அறிதற் பாலது.

 

ஸத்வந்தர் பாஹ்யஹேது ப்ரபவ விமல ஸத்

     தர்சந ஜ்ஞாந சர்யா

ஸ்ம்பத் தேதி ப்ரகாத க்ஷத துரித தயா

     வ்யஞ்ஜிதா சிந்த்ய ஸாரை:

கைவல்ய ஜ்ஞாந த்ருஷ்ட்டி ப்ரவர ஸுக மஹா

      வீர்ய்ய ஸம்யக்த்வ லப்தி

ஜ்யோதிர் வாதாயநாதி ஸ்திர பரம குணை:

       அத்புதைர் பாஸமாந: - 64

 

ஸது

அந்த: (ஹேது)

பாஹ்ய ஹேது

ப்ரபவ விமல

ஸத் தர்சந:

ஜ்ஞாந, சர்ய்யா

ஸம்பத் ஹேதி

ப்ரகாத

க்ஷத துரித தயா

வ்யஞ்சித

அசிந்த்ய

ஸாரை:

அத்புதை:

கைவல்ய ஜ்ஞாந - த்ருஷ்டி

ப்ரவர ஸுகம்

மஹா வீர்யம்

ஸம்யக்த்வம்

லப்தி

ஜோதி:

வாதாய நாதி

ஸ்திர பரம குணை:

பாஸமாந: அஸ்தி

 

       அத்தகைய ஆத்மாவோ வெனில், தர்சன மோகனீயம், சாரித்திர மோகனீயம் முதலான கர்மங்களின் உபஸம, க்ஷயோபம, க்ஷயங்களென்னும் அந்தரங்க ஹேதுக்களாகிய முக்கிய காரணங்களாலும் ; வினை நீக்கிக் கொள்வதற்குத் தகுந்த உத்தம க்ஷேத்திரம், உத்தம காலம், உத்தம ஆசான் அறவுரை முதலிய பாஹ்ய காரணங்களினாலும் (தோன்றிய) புறம்பான குற்றமற்ற நிர்மலமான நற்காட்சி, நல்லறிவு, நல்லொழுக்கம் என்னும் செல்வங்களாகிற ஆயுதங்களின் அறைதலினால்,  மோதி வினைப்பகைவராகிய காதி கர்மங்களை வென்றதனால் ; நன்றாகக் காணப்பட்ட உள்ளத்தாலும் அறிய வியலாத ; அதாவது, நம் எண்ணத்திற்கு எட்டாத மிகச்சிறந்த மாஹாத்மியத்தை உடையனவும் ; ஆச்சர்யகரமான அனந்த ஜ்ஞானம், அனந்த தரிசனம், அனந்த சுகம், அனந்த வீரியம், க்ஷாயிக சம்யக்த்வம், க்ஷாயிக தானம், க்ஷாயிக லாபம், க்ஷாயிக போகம், க்ஷாயிக உப்போகம் என்கிற பரம குணங்களாகிற நவ கேவல லப்திகளையும், மற்றும் ப்ரபா மண்டலம், முக்குடை, க்ஷாமரை முதலிய பல அதிசயங்களையும் பெற்று, என்றும் அழியாத தன்மையுடன் பகவானாக விளங்கிக் கொண்டிருக்கின்றார்.

 

       வினைகள் எண்வகை. அவை மோகனீயம் முதலாகக் கூறப்படும், அம் மோகனீயம்; தரிசன மோகனீயம், சாரித்திர மோகனீயம் என இரு பிரிவினதாகும். அவற்றுள், தரிசன மோகனீயம் ஏழு பிரிவினதாகவும், சாரித்திர மோகனீயம் இருபத்தொரு பிரிவினதாகவும் விரியும்.

தரிசன மோகனீயமாவன :-

அனந்தானுபந்திக் குரோதம், மானம், மாயம், லோபம் ; மித்யாத்வம், சம்யக் மித்யாத்வம், சம்யக்த்வ ப்ரக்ருதி என ஏழாகும்; இவற்றை சப்த ப்ரக்ருதி யெனவும் வழங்குவதுண்டு. இவைகளின் விவரம் சூளாமணி உரை நூல், 181- ம் பக்கத்தில் காணலாகும்.

 

       இந்தத் தரிசன சாரித்திர மோகனீயங்கள் உதயத்திலிருக்கும் வரை, ஆத்மனுடன் புதிது புதிதாகக் கர்மங்கள் வந்து சேர்கின்றன ; அம் மோகனீயங்கள் உபசமத்தை அடையும்போது, கர்மங்கள் உதயத்திற்கு வராமல் அடங்கி, மனம் தூய வழியில் செல்லத் தூண்டுகிறது ; அம் மோகங்கள் க்ஷயோபசமத்தை அடையுமானால், மனம் நல்வழியில் நிலைத்து நிற்கிறது ; அம் மோகங்கள் க்ஷயத்தை (கேட்டை) அடையுமானால், ஆத்மனுடன் மாறாகக் கட்டப்பட்டு, பந்தித்து நின்ற, காதி கர்மங்கள் வேறரக் கெட்டு நீங்கி, ஆத்மனின் இயற்கையான தன்மை (குணங்)களைப் பெறமுடிகிறது. எனவே, தரிசன சாரித்திர மோகங்களை அந்தரங்கக் காரணம் என்று கூறப்பட்டது. தவம் மேற்கொண்டு முக்தியடையத் தக்க பிறவியாகிய (கூன் குருடு செவிடு பேடு நீங்கிய) உத்தம மானிடப் பிறவி, கர்ம பூமியாக மாறிய காலத்துத் தரும கண்டத்தே தோன்றுதல் முதலியன, பாஹ்ய காரணமென்று கூறப்படும். வினைகளின் சேர்க்கையை வேரறுப்பதற்கு மும்மணிகளே காரணமாதலின், அவற்றைப் படையாக உருவகம் செய்தார். துரிதம் - பாபம், ஈண்டு, நவகேவல லப்தியைக் கூறியதனால், இடத்திற் கேற்றவாறு துரிதம் - காதி கர்மங்கள் எனக் கூறப்பட்டது. க்ஷத துரித தயா - நாசமடைவிக்கப்பட்ட பாபமுள்ள தன்மையினால் என்பது பொருள். இறைவனின் குணங்கள் அனந்தமாதலின், "அசிந்த்ய ஸாரை: " என்றார். வாதம் - காற்று.  மெல்லிய காற்றை வீசுவதனால் வாதாயம் சாமரை எனப்பட்டது.

 

அருகன் தன்மையைக் கூறித் துதிக்கின்றார்.

 

ஜாநந் பச்யந் ஸமஸ்தம் ஸமமநுபரதம்

    ஸம்ப்ர த்ருப்யந் விதந்வந்

துந்வந் த்வாந்தம் நிதாந்தம் நிசிதமநு ஸபம்

      ப்ரணீயந்நீச பாவம்

குர்வந் ஸர்வ ப்ரஜாநாம் அபரமபி பவந்

     ஜ்யோதி ராத்மாந மாத்மா

ஹ்யாத்மந்யே வாத்ம நாஸௌ க்ஷணமுப ஜநயந்

       ஸந் ஸ்வயம்பூ: ப்ரவர்த்த:  - 65

 

 

ஸமஸ்தம்

ஸ ம ம்

அநுபரதம்

ஜாநந்

பச்யந்

ஸம்ப்ர த்ருப்யந்

விதந்வந்

நிதாந்தம்

நிசிதம்

த்வாந்தம்

துந்வந்

அநுஸபம்

ப்ரீணயந்

ஸர்வ ப்ரஜாநாம்

ஈசபாவம் குர்வந்

அபரம் ஜோதி:

அபிபவந்

ஆத்மா

ஆத்மாநம்

ஆத்மநா

ஆத்மந்யேவ

ப்ரதிக்ஷணம்

உபஜநயந் ஸந்

ஸ்வயம்பூ:

ப்ரவர்த்த:

 

         மூவுலகிலுமுள்ள யாவையும் ஒருங்கே இடைவிடாமல், அனந்த ஞானத்தால் அறிகின்றவரும், அனந்த தரிசனத்தால் காண்கின்றவரும், அனந்த சுகத்தால் (பரம த்ருப்தியாகிய) பேரானந்தத்தை அடைகின்றவரும், அனந்த வீரியத்தால் மூவுலகங்களிலும் அலோகத்திலும் ஞானத்தால் (பரம்பி) சர்வ வியாபியாகி நிற்கின்றவரும், மிக மிக அதிகமாக வியாபித்துக் கொண்டிருக்கிற மக்களின் அஞ்ஞானமாகிற இருளை அறவுரையினால் நாசம் செய்கின்றவரும், சமவசரணத்திலுள்ள சபையில் (கோஷ்ட பூமியில்) வீற்றிருக்கும் பவ்வியர்களை அறவுரையால் பிரீதி செய்கின்றவரும், சகல ப்ராணிகளுக்கும் பிரபுவான தன்மையை அடைவிக்கின்றவரும், தன்னுடைய சுத்தாத்ம ஜோதியினால் இதரமான ஜோதிக ளெல்லாவற்றையும் தோல்வி அடைவிக்கின்றவரும் ; பகவன் தன்மை அடைந்தவருமான ஆத்மன், தன்னைத்தானே, தன்னிடமே (தன்னாலேயே), (சமயந்தோறும்) ஒவ்வொரு சமயமும், வெளிப்படுத்தி விளங்கச் செய்பவருமாகி (தானாகவே விளங்கப்பட்டவராகி) ஸ்வயம்பு என்ற தன்மையுடன் நன்கு விளங்குகின்றார்.

 

      ஆத்மன் தன் இயற்கைப் பண்புகளை அடைவதற்குத் தன்னால், தானே ; தன்னின்றுமே அடைகின்றான் என்பதற்குத்தான் அன்றி வேறொருவர் காரணமில்லை என்பதனைக் குறிப்பாகக் கூறியது கருதத் தக்கது.

 

       ஈண்டு, மோகனீயம் முதலிய காதி கர்மங்களை வென்றதனால், அனந்த ஞானம் முதலிய நான்கு குணங்களை யடைந்த அருகத் பரமேஷ்டியே, எஞ்சியுள்ள அகாதி கர்மங்களையும் வென்று, எண் குணங்களுடன் சித்தர் பதவி அடைவதனை அடுத்த சுலோகத்துள் கூறித் துதிக்கின்றார் ஆசிரியர்.

 

சிந்தந் சேஷாந சேஷாந் நிகள பல கலீம்

      ஸ்தைரநந்த ஸ்வ பாவை:

ஸூக்ஷ்மத்வா க்ர்யாவ காஹா குரு லகுக குணை:

      க்ஷாயிகை: சோபமாந:

அந்யைச்சாந்ய வ்யபோஹ ப்ரவண விஷய ஸம்

       ப்ராப்த லப்தி ப்ரபாவை:

ஊர்த்வம் வ்ரஜ்யா ஸ்வபாவாத் ஸமய முபகதோ

      தாம்நி ஸந்திஷ்ட தேக்ரே. -  66

 

ஸ: பகவாந்

நிகளபலகலீம்

சேஷாந், அசேஷாந்

சிந்தத் தை:

அநந்த ஸ்வபாவை:

ஸூக்ஷ்மத்வ

அக்ரிய, அவகாஹ

அகுரு லகுக

குணை:

லப்தி ப்ரபாவை:

க்ஷாயிகை குணை:

சோபமாந :

அந்யை: ச

அந்யை: வ்ய போஹ

ப்ரவண விஷய ஸம்

ப்ராப்த லப்தி

ப்ரபாவை:

ஊர்த்வம்

வ்ரஜ்யா

ஸ்வபாவாத்

ஸமயம் - உபகத:

அக்ரே தாம்நி

ஸந் திஷ்டதே

 

           அவ்வாறு ஸ்வயம்புவாயிருந்த பகவான் தன்னிடம், கால் (விலங்குத்) தளை போல நெடுநாளாகக் கட்டியிருந்த (பந்தித்திருந்த) ஆயுள் முதலிய எஞ்சிய நான்கு அகாதி கர்மங்கள் முழுவதையும் நாசம் செய்து, அதனால் சிறந்த முடிவில்லாத தன்மையுள்ள, அதி சூக்ஷ்மத்வம், சிரேஷ்டமான அவ்யா பாதத்வம், எல்லாவற்றிலும் பொருந்தி இருத்தலாகிய அவக கனத்வம், சிறிதும் பெரிதுமல்லாத அகுரு லகுத்வம் ஆகிய நான்கு குணங்களும், முன்னர் காதி கர்மத்தை வென்றபோது அடைந்த, அனந்த ஞானாதி நான்கு குணங்களுடன் சேர்ந்து எண் குணங்களாகி, என்றும் அழிவில்லாத க்ஷாயிகங்களால் விளங்க ; இவ்வாறு மூலோத்தர (ப்ரக்ருதி) கர்மங்கள் அனைத்தையும் வென்றதனால், பந்தத்தினின்றும் விடுபட்டதினால், சுத்தாத்ம ஸ்வரூபமுடன்,  மேல் நோக்கிச் செல்லும் ஊர்த்துவ கதி ஸ்வபாவத்தினால், ஒரு க்ஷண நேரத்தில் உலக உச்சியில் உள்ள, எட்டாவது அஷ்டம ப்ரத்வியில் சித்தர் உலகத்தில் சென்று ; சித்த பரமேஷ்டியாகி நிலைத்திருக்கின்றார். அத்தகைய பரமேஷ்டியை வணங்குவாம் என்றவாறு, (காதி நான்கு அகாதி நான்கு ஆகிய எண் வினைகளும் கெட்டதனால், எண் குணங்கள் விளங்குவது மரபு.)

 

     அவற்றுள், அகாதி கர்மங்களின் பிரிவாகிய வேதனீயம், ஆயுஷ்யம், நாமம் , கோத்திரம் என்ற நான்கும் கெட்டதனால், அவ்யாபாதத்வம், அதி சூக்ஷ்மத்வம், அகுரு லகுத்வம், அவ சுகனத்வம் என்ற நான்கு குணங்களும் விளங்குகின்றன. இந்த எண் குணங்களையும் தமிழில், கடையிலா ஞானம், கடையிலாக் காட்சி, கடையிலா வீரியம், கடையிலா இன்பம், நாம மின்மை,கோத்திரமின்மை, ஆயுவின்மை,அந்தராயமின்மை என்று கூறுவர்.

இதனை சூளாமணி நிகண்டில்,

 

"கடையிலா ஞானத் தோடு காட்சி வீ ரியமே யின்ப

மிடையுறு நாம மின்மை விதித்தகோத் திரங்க ளின்மை

அடைவிலா வாயு வின்மை யந்தர யங்க ளின்மை

உணையவன் யாவன் மற்றிவ் வுலகினுக் கிறைவ னாமே"

    

        என்று சூடாமணி நிகண்டு பன்னிரண்டாம் தொகுதி 74- ஆம் செய்யுளில் கூறியுள்ளது கண்டு கொள்க.

 

ஜீவன்கள், மேல் நோக்கிச் செல்லும் தன்மையை இயற்கையாக  வுடையன. வினைகளுள்ளவரை மறைந்திருந்த அத்தன்மை வினை நீங்கியவுடன் மேல்நோக்கிச் சென்று முக்தியில் நிலைத்து நிற்கிறது. அதற்குமேல் செல்வதற்குத் தர்மாஸ்திகாயம் இல்லையாதலின், மேலே செல்வதற்கில்லை. அவ்வாறு ஜீவன் சென்று தங்குவதனை, "வானோர்க் குயர்ந்த உலகம் புகும்" என்று தேவரும், "கேவலப் பேரொளியால்........... உயர்ந்த உலகின் முடிக்கு ஓர் சூளாமணி யானான் " என்று தோலாமொழித் தேவரும், "ஓங்கிய வுலகத்தும்பர் ஒளி சிகாமணியின் நின்றார்." என்று யசோதர காவியத்திலும் கூறியிருப்பதனாலறியலாகும்.

 

         இம்மூவுலகையும் எண் வகையாகப் பிரித்துக் கூறுதல் மரபு.  1. (பூமியின் அடியிலுள்ள) நிகோதம், 2. நரகர் உலகம், 3. பவணர் உலகம், 4. மனுஷ்யர் உலகம், 5. ஜோதிர் உலகம், 6. கற்பவுலகம், 7. அகமிந்த்ர வுலகம், 8. சித்தருலகம் என்பன. இதனை, "நிகோதத்தோடு"  "ஏழு நாரகர் நஞ்சுதாரிகள் நரர் ஒளியர் மேலவர் அஞ்சொலா ரிலாதவர் அகதியார்க்கிடம்."  என்று மேரு மந்தரத்தில் வாமன முனிவர் கூறுவதனாலும் அறியலாகும். மேலே 71 - ம் சுலோகத்திலும், 'அட்டமபுடவி ' என இவ்வாசிரியரே கூறுகின்றார்.

 

அந்யாகாராப்தி ஹேதுர் நச பவதி பரோ

        யேந தேநால்ப்ப ஹீந:

ப்ரா காத்மோபாத்த தேஹ ப்ரதிக்ருதி ருசிரா

         காரயேவ ஹ்யமூர்த்த:

க்ஷுத் த்ருஷ்ணா ச்வாஸ காஸ ஜ்வர மரண ஜரா

          நிஷ்ட்ட யோக ப்ரமோஹ

வ்யா பத்யாத் யுக்ர துக்க ப்ரபவ பவஹதே

      கோஸ்ய ஸௌக்யஸ்ய மாதா.  -   67

 

     

தஸ்ய யேந

அந்ய ஆகார

ஆப்தி ஹேது ஏந

பர: ந பவதி

தேந அல்பஹீந:

ப்ராக் ஆத்ம-

உபாத்த தேஹ-

ப்ரதிக்ருதி

ருசிர ஆகார ஏவ

அமூர்த்த: ஹி

க்ஷுத் த்ருஷ்ணா

ச்வாஸ காஸ

ஜ்வர மரண ஜரா

அநிஷ்ட்டயோக

ப்ரமோஹ

வ்யாபத்தி ஆதி

உக்ர துக்க

ப்ரபவ பவஹதே:

அஸ்ய ஸௌக்யஸ்ய

மாதா க:

 

           அந்த சித்த பரமேஷ்டிக்கு யாதொரு காரணத்தால் வேறொரு உடலை அடைவதற்குக் காரணமான நாம கருமம் (இப்போது) இல்லையாதலின், அந்தக் காரணத்தால், அவருக்கு, முன் தன்னால் அடையப்பட்ட உடலின் அளவில் ஈசல் இறகு ப்ரமாணம் குறைந்த ப்ரதிபிம்பப் படிவம் போல, மனோகரமான ஆகாரமுள்ளவராக (அடையாளமுள்ளவராக) இருந்தும், உடல் இல்லாதவரேயாவர். ஆகவே, பசி, தாகம், மேல்மூச்சு, இருமல் (ஜ்வரம்) காய்ச்சல், சாதல்(மரணம்), கிழத்தனம், தனக்கு விருப்பம் அல்லாதவை வந்து சேரல், மெய் மறதி (மயக்கம்), ஆபத்து முதலாகிய கொடிய துன்பங்களுக்கு இடமான  பிறவியை , நாசஞ் செய்திருக்கின்ற இந்த சித்த பரமேஷ்டியினுடைய சுகத்தை (இன்பத்தை) இவ்வளவு என்று அளவிட்டுச் சொல்பவன் எவன் இருப்பான்? (எவராலும் இயலாது).

 

ஆத்மோ பாதாந ஸித்தம் ஸ்வயமதி சயவத்

     வீத பாதம் விசாலம்

வ்ருத் திஹ்ராஸ வ்யபேதம் விஷய விரஹிதம்

      நிஷ்ப்ரதி த்வந்த்வ பாவம்

அந்ய த்ரவ்யாந பேக்ஷம் நிருபம மமிதம்

      சா ச்வதம் ஸர்வ காலம்

உத்க்ருஷ்ட்டாநந்த ஸாரம் பரம ஸுக மதஸ்

      தஸ்ய ஸித்தஸ்ய ஜாதம்.  - 68

 

தஸ்ய ஸித்தஸ்ய

ஜாதம் பரமஸுகம்

அத : ஆத்ம-

உபாதாந ஸித்தம்

அத : ஸ்வயம்

அதிசய வத்

வீதபாதம் விசாலம்

வ்ருத்தி ஹ்ராஸ

வ்ய பேதம்

விஷய விரஹிதம்

நிஷ்ப்ரதி

த்வந்த்வ பாவம்

அந்ய த்ரவ்ய

அநபேக்ஷம்

நிருபமம் அமிதம்

சாச்வதம்

ஸர்வகாலம்

உத்க்ருஷ்ட

அநந்தஸாரம் அபூத்

 

          அத்தகைய பரம ஆனந்தமயமான சித்தருக்கு உண்டான கடையிலா இன்பம், எந்தக் காரணத்தினால், தன்னையே (தன் ஆத்மனையே உபாதானமாக) முக்கிய காரணமாகக் கொண்டு சாதிக்கப் பட்டதோ, அந்தக் காரணத்தினால், தானாகவே (தனிப்பட்ட முறையில்) மிக்க மேன்மை பெற்றிருப்பதும், எவ்விதத் துன்பமும் அடையாமலிருப்பதும், மிகவும் மகத்தானதும், எக்காலமும் ஏற்றத் தாழ்வின்றி ஒரே மாதிரியாயிருப்பதும், பொறிப் புலன்களின் சம்பந்தம் ஒரு சிறிதும் இல்லாததும், வேறொரு திரவியங்களின் உதவியை நாடாமல் இயல்பாய் அமைந்ததும், (எனவே, தன்மயமான பரமானந்தத்தில் இருப்பதும்), தனக்கு வேறெதுவும் உவமையில்லாத (இணையற்ற)தும், யாவராலும் அளவிடப்படாததும், என்றும் அழிவின்றி, எக்காலத்திலும் நிலைத்திருப்பதும், மிகச்சிறந்த (அளவில்லாத) மகிமை தங்கியதுமாகும்.

 

     ' ஸர்வகாலம் ' பஹ்வ்ரீஹி ஸமாசமானதால் எக்காலத்திலும் நிலைத்திருப்பது என்று பொருள் கொள்ளப் பட்டது. (மஹாபாஹு என்பதற்கு பெரிய தோளை உடையவன் என்று பொருள் கொள்வது போல என்க) நிஷு, நிர் என்பது நிஷ் என நின்றது. த்வந்த்வம் - தன்னைப்போல் வேறொன்று, ப்ரதி - எதிர், பாவம் - உள்ளது, நிஷ் - இல்லாதது.

 

நார்த் த:  க்ஷுத் த்ருட் விநாசாத் விவித ரஸயுதை

      ரந்நபாநைர சுச்யா

நாஸ் ப்ருஷ்ட்டேர்கந்த மால்யை: நஹி ம்ருது

     சயநை: க்லாநி நித்ராத்ய பாவாத்

ஆதங்கார்த் தேரபாவே ததுப சமந ஸத்

        பேஷஜா நர்த்த தாவ த்

தீபாநர்த்தக்ய வத்வா வ்யபகத திமிரே

      த்ருச்யமாநே ஸமஸ்தே.  -  69

 

ஆதங்க ஆர்த்தே:

அபாவே தத் உபசமந-

ஸத், பேஷஜ

அநர்த்ததா வத்

வா வ்யபகத

திமிரே ஸதி ஸமஸ்தே

த்ருச்ய மாநே ஸதி

தீப ஆநர்த்தக்யவத்

க்ஷுத் த்ருட்

விநாஸாத் (தஸ்ய)

விவித ரஸயுதை:

அந்ந பாநை: ச

அசுச்யா

அஸ்ப்ருஷ்டே:

கந்த மால்யை: ச

க்லாநி

நித்ரா ஆதி அபாவாத்

ம்ருது சயநை:

அர்த்த: ந

 

                 (இவ்வுலகில்) உயிரைப் போக்கக்கூடிய கொடிய நோய் இல்லாதபோது அந்நோயைத் தடுக்கக் கூடிய சிறந்த மருந்தை உட்கொள்ள வேண்டிய  அவசிய மில்லாதது போலவும்; அதுவன்றி, இருள் இல்லாதபோது, அதாவது நம் கண்ணுக்கு, எல்லாம் நன்கு காணப்படும்போது, ஒளியுள்ள தீபத்தின் அவசியம் வேண்டப்படாததும் போல; அந்த சித்த பரமேஷ்டிக்குத்  தான், முன்பு தனக்கிருந்த பசி, தாகம் இரண்டையும் கெடுத்திருப்பதனால் (இனி, அவருக்கு) பலவகையான சுவைகளுடன் கூடிய அன்னம், தண்ணீர் முதலியவைகளாலும், அவ்வண்ணமே அசுத்தமான உடலின் சேர்க்கையின்றிக் கெடுத்திருப்பதனால், நறுமணம் மிக்க சந்தனம், புஷ்பம் முதலியவைகளாலும், ஆயாசம்(களைப்பு), நித்திரை முதலியவை யின்றி யிருப்பதனால், மென்மையான படுக்கை (மெத்தை) முதலியவைகளாலும் ப்ரயோஜனமில்லை. (என்று உணர்க)

 

தாத்ருக் ஸம்பத் ஸமேதா விவித நய தபஸ்

    ஸம்யம ஜ்ஞாந த்ருஷ்ட்டி

சர்யா ஸித்தா: ஸமந்தாத் ப்ரவிதத யசஸோ

     விச்வ தேவாதி தேவா:

பூதா பவ்யா பவந்த: ஸகல ஜகதியே

     ஸ்தூயமாநா விசிஷ்டை:

தான் ஸர்வாந் நௌம்யநந்தாந் நிஜிகமிஷுரரம்

        தத் ஸவரூபம் த்ரிஸந்த்யம்.  -  70

 

 

தாத்ருக்

ஸம்பத் ஸமேதா

விவித நய தப

ஸம்யம ஞாந

த்ருஷ்டி சர்யா

சித்தா ஸமந்தாத்

ப்ரவிதத யசஸ:

விச்வ தேவ அதி - தேவா: ஸகல -

ஜகதி விசிஷ்டை:

ஸ்தூய மாநா:

பூதா: பவ்யா:

பவந்த: யே

அநந்தாந்

நான் ஸர்வாந்

தத் ஸ்வரூபம்

அரம்

நிஜிகமிஷு: (அஹம்)

த்ரிஸந்த்யம்

நௌமி

 

          அத்தகைய (அனந்த ஜ்ஞானாதி குணங்களாகிற) செல்வத்தால் நிறைந்தவர்களும், பல்வேறு வகையான நயம், தபம், ஸம்யமம், அறிவு, காட்சி, ஒழுக்கம் ஆகிய இவைகளுள் ஒவ்வொன்றையே முக்கியமாகக் கொண்டு முக்தி எய்தியவர்களும், உலகமெங்கும் மிகச் சிறந்த புகழ் தங்கியவர்களும், தேவர்கள் யாவர்க்கும் மிகச் சிறந்த தேவாதி தேவர்களும் என்று மூவுலகிலுமுள்ள அறிஞர் யாவராலும் துதிக்கப்படுபவர்களும், முன்னரே முக்தி அடைந்தவர்களும், இனிமேல் (முக்தியை) அடையப் போகின்றவர்களும்,  இப்பொழுது (முக்தியை) அடைகின்றவர்களுமான எந்தச் சித்தர்கள் உண்டோ, எண்ணற்றவர்களான அவர்கள் எல்லோரையும்; அவர்களடைந்த முக்தி ஸ்வரூபத்தை அதிவிரைவில் (அவர்களடைந்தவாறே) அடைய விரும்பும் யான், மூன்று காலங்களிலேயும் வணங்குகின்றேன்.

 

      தாத்ருக் என்பது மேலே கூறிய குணங்களைக் குறிப்பிடுவதாகும். நயஸித்தர், தபஸித்தர் என்று ஒவ்வொன்றுக்கும் கூறிக்கொள்க.  இந்தக் கருத்தையே 93 - ஆம் காதையில், "தவஸித்தே நயஸித்தே"  என்று கூறியிருப்பது கண்டு கொள்க. சித்தர் எண்குணம் அடைந்தவராதலின்,  "விச்வ தேவாதி தேவா: " என்றார். ஏனைய கடவுளர்க்கும் மேலானவர் எனினும் அமையும். 'அரம்' என்பது விரைவைக் குறிக்கும்.

 

       (ஜீவோத) " சீக்ரம் த்வரிதம் லகு ஷிப்ர அரம் த்ருதம், ஸத்வரஞ்ச பலம் தூர்ணம் அவிலம்பித ஆசுச ", அமரம் ஜிகமிஷு: என்ற தாது ; நி, என்ற உபஸர்க்காக்ஷரத்தோடு கூடி நின்றது. த்ரிசந்த்யம், த்விகு ஸமாஸம். நௌமி என்பதற் கேற்ப அஹம் என்பது வருவிக்கப்பட்டது.

 

அட்டவிஹ கம்மமுக்கே அட்ட

    குண்ட்டே அணோவமே ஸித்தே

அட்டம புடவி ணிவிட்டே ணிட்டிய

    கஜ்ஜேய வந்திமோ ணிச்சம். -  71

 

 

அட்டவிஹ

கம்ம முக்கே

அட்ட குணட்டே

அணோவமே

அட்டம புடவி

ணிவிட்டே

ணிட்டிய கஜ்ஜேய

ஸித்தே

நிச்சம்

வந்திமோ

 

       மோஹனீயம் முதலான எண்வகைக் கருமங்களினால் விடப்பட்டவரும், அனந்த ஞானாதி எண் குணங்களால் நிறைந்தவரும், தனக்குவமை யில்லாத (இணையற்ற) வரும், எட்டாவது பூமியான சித்தர் சிலையில் நிலைத்திருப்பவரும், (இனிமேல்) செய்யவேண்டிய காரியம் எதுவுமின்றிச் செய்து முடித்தவரும் ஆகிய சித்த பரமேஷ்டி களையே தினந்தோறும் (இடைவிடாமல்) யாம் நமஸ்காரம் செய்வோம் என்றவாறு.

 

எண்வகை வினைகளை 78 - ஆம் காதையில் காண்க.

 

கஜ்ஜம் - கார்யம். " க்ருத க்ருத்யனும், அபுநர் பவநும், சித்த சாத்யனுமாகி," என்பர் ஸமயஸார உரையிலும்.

 

தித்தயரே தர ஸித்தே ஜலதள

     ஆயாஸ நிவ்வுதே ஸித்தே

அந்தயடேதர ஸித்தே உக்கஸ்ஸ

       ஜஹண்ண மஜ்சி மோகாஹே.  -  72

 

 

தித்தயர இதர

ஸித்தே

ஜல தள ஆயாஸ

நிவ்வுதே ஸித்தே

அந்தயட இதர

ஸித்தே

உக்கஸ்ஸ

ஜகண்ண

மஜ்ஜிமோகாஹே

வந்திமோ

          

          தீர்த்தங்கர கேவலிகளையும், இதர கேவலிகளையும்; நீர், நிலம், ஆகாயம் ஆகிய இவ்விடங்களிலிருந்து முக்தியடைந்த சித்தர்களையும்; * அந்தக்ருதராயும் அந்த க்ருதரல்லாதவராயும் (அந்தர் முகூர்த்த கேவலியாயும் இதர கேவலியாயும்) உள்ள சித்தர்களையும்; (சித்தர் உயரத்தின்) அதிகமான 525 வில் உயரமுள்ள சித்தர்களையும், குறைந்த அளவான ஏழுமுழம் உயரமுள்ள சித்தர்களையும், இவற்றின் மத்திய அளவாகிய உடலின் உயரத்தில் பொருந்தியவர்களுமான சித்தர்களையும் நமஸ்கரிக்கின்றேன்.

 

      தித்தயர+ இதர, தித்தயரேதர. அந்தயட+இதர, அந்தயடேதர. கேவலிகள் யாவரும் ஞானத்தால் சமமாயினும், வைபவத்தால் தீர்த்தங்கரரைப் பிரித்துக் கூறினார்.

 

      ஆகாச சாரணத்தன்மை பெற்ற மாமுனிவர், ஒரு த்வீபத்திலிருந்து மற்றொரு த்வீபத்திற்கு (க்கடல் தாண்டி)ச் செல்லும் சக்தி உடையவராதலின், அவ்வாறு செல்லும்போது அவர்கள், கடலின் மையத்தில் செல்லும்போதே தமக்குக் கர்மக்ஷயம் செய்யவேண்டிய காலம் நெருங்கி விட்டதாயின், அவ்விடமே (அதாவது அக்கடல் நீரிலேயே) நின்று முக்தியடையவராதலின்,  "ஜல தள ஆயாஸ" என்றார். மலையுச்சி முதலியவற்றை ஆகாஸம் என்றதறிக.

 

     பாகுபலி ஸ்வாமியின் உயரம் 525 வில், மகாவீரரின் உயரம் 7- முழம். மற்றையோர உயரம் பலப்ரகாரம். (எனவே, 525- வில்லுக்கு அதிகமும், 7- முழத்திற்கு குறைவும் இல்லையென்றுணர்க.)

 

----------------------------------------------------

 

* " அந்தயடேதர" என்பதற்குச் சரியான பொருள் விளங்கவில்லை யாதலின், (இரண்டு நாழியிலேயே காதி அகாதி இரண்டையும் கெடுக்கும்) அந்தர் முகூர்த்த கேவலி என்றும், இதர கேவலி யென்றும் பொருள் கூறியுள்ளேன். அந்தக்ரத் கேவலி என்பது உபசர்க்கத்தை (பிறரால் செய்யும் தீமையை)அடைந்து அதனால் இரண்டு நாழிகையில் காதி அகாதி இரண்டையும் வென்றவர்களான தருமர், பீமன், அருச்சுனன் முதலியோரைக் குறிக்கும் எனலாம், என ஸ்ரீபாலவர்ணிஜீ அவர்கள் கூறுகிறார்.

 

[உரையாசிரியர்:- வீடூர் பூர்ணசந்திர சாஸ்திரியார் அவர்கள்]

 

 

உட்டமஹ திரிளோயே சவ்விஹ

      காளையே ணிவ்வுதே ஸித்தே

உவஸக்க நிருவஸக்கே

      தீவோ தஹி ணிவ்வுதேய வந்தாமி. -  73

 

உட்டம் அஹ திரிய

ளோயே

சவ்விஹ காளேய

நிவ்வுதே ஸித்தே

உவஸக்க-

நிருவஸக்கே ஸித்தே

தீவோதஹி

நிவ்வுதேய ஸித்தே

வந்தாமி

 

       மேலேயும், கீழேயும் , நாற்புறமும் உள்ள (கர்ம க்ஷயத்திற்கு யோக்யமான) உலகங்களிலும்; தீக்ஷை, சிக்ஷை, ஆத்ம ஸம்ஸ்காரம், கணபோஷணம், பாவனை, சல்லேகனை ஆகிய ஆறு காலங்களிலும் முக்தியடைந்த சித்தர்களையும், தீவுகளிலும் கடல்களிலும் முக்தியடைந்த சித்தர்களையும் நமஸ்கரிக்கின்றேன்.

 

     " உட்டமஹ திரிய ளோயே " என்றது ஜம்பூத்வீபம், தாதகி ஷண்ட த்வீபம், புஷ்கரார்த்த த்வீபம் ஆகிய மனிதர் பிறக்கும் இடத்தை மட்டும் குறிக்கும். தீக்ஷை, துறவு மேற்கொள்ளுதல், சிக்ஷை, உபதேசம் செய்து (கழுவாய்) ப்ரதிக்ரமணம் கூறல், ஸம்ஸ்காரம் - நற்குணத்தை அடையச் செய்தல் (சுத்தி பண்ணுதல் "ஸம்ஸ்கார : குண ஆதாந: " என்பர் மேலோர்.) கண போஷணம், மாணவர்களுக்கு உணவு முதலிய வகைகளை அறவுரை மூலம் அறிவித்தல். பாவனை, ஆத்ம பாவனை, சல்லேகனை :-- வீடுபற்றி(க் கொண்டவுடனே பலர் முயன்றும் அணைக்க வியலாமல்) எரியும்போது கையில் அகப்பட்ட சிறந்த பொருளை (எடுத்து)க் கொண்டோடுவது போன்று; நாம் இறக்கும் தறுவாய் (மரணமடையும் சமயம்) நெருங்கி விட்டது, (இனி நாம் பிழைக்க வழியில்லை) என்று நிச்சயமாக அறிந்த முனிவர் முதலியோர் தம் உயிர் உள்ளவரை (மரண காலம் வரை) உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன ஆகிய நான்கு வகை உணவையும் உட்கொள்ளுவதில்லை என்று விரதம் மேற்கொண்டு ஆத்ம பாவனையில் தளராமல் (நழுவாமல்) நிற்றல் (சல்லேகனை) என, காலம் ஆறுவிதமாகும்.

 

பச்சா டேயர ஸித்தே துக

       திக சதுணாண பஞ்ச சதுரயமே

பரிவடியா பரிவடியே ஸஞ்ஜம

      ஸம்மத்த ணாணமா தீஹிம்.  -  74

 

 

துக (ணாண)

திக (ணாண)

சது ணாண

பஞ்ச

சதுரயமே

பச்சா டேயர

ஸஞ்ஜம

ஸம்மத்த

ணாணம்

ஆதீஹிம்

பரிவடியா

அபரிவடியே

ஸித்தே

வந்தே

 

         மதி ஜ்ஞானம் சுருத ஞானம் என்ற இரண்டையாவது, மதி சுருத அவதிஞானம் என்ற மூன்றையாவது, மதி சுருத அவதி மனப்பர்யயம் என்ற நான்கு ஞானங்களையாவது அடைந்து; ஸாமாயிகம், சேதோபஸ்தாபனம், பரிஹார விசுத்தி, சூக்ஷ்ம ஸாம்பராயம், யதாக்யாத சாரித்ரம் என்ற ஐந்து ஸம்யமங்களையாவது ; அல்லது மத்யமம் நீங்கலாக நான்கு ஸம்யமங்களையாவது; மேற்கொண்டு, ஸம்யமம், ஸம்யக்த்வம், ஞானம் முதலியவைகளில் தொடர்ந்து வருகிறதனால் உபஸம சிரேணி மூலம் ஏறி, மீண்டும் மித்யாத்வத்தை அடைந்து, பிறகு முன்போல உபஸம சிரேணி பூர்வகம் க்ஷபக சிரேணியினை அடைந்து கர்மங்களைக் கெடுத்து சித்தரானவர்களையும், அவ்வாறின்றி க்ஷபக சிரேணியை மட்டும் ஏறி,  கர்மங்களைக் கெடுத்து சித்தரானவர்களையும் நமஸ்கரிக்கின்றேன்.

 

      மதிஜ்ஞானம், சுருத ஞானம், அவதி ஞானம், மனப்பர்யய ஞானம், கேவல ஜ்ஞானம் என ஸம்யக் ஞானம் ஐந்து விதம். மதிஞானம் சுருதஞானம் இரண்டும் பரோக்ஷ ஞானம் (பிற வஸ்துக்களைக் கொண்டு அறியும் அறிவு), அவதிஞானம் மனப்பர்யய ஞானம் கேவல ஞானம் மூன்றும்  ப்ரத்யக்ஷ ஞானம் (ஆத்மனைக் கொண்டே நேரில் அறியும் அறிவு); எனப்படும். அவற்றுள் அவதிஞானம் மனப்பர்யய ஞானம் இரண்டும் விகல ப்ரத்யக்ஷம் எனவும், கேவல ஞானம் ஸகல ப்ரத்யக்ஷம் எனவும் கூறப்படும்; ஞானாவரணீய கர்மத்தின் க்ஷயோபஸம, க்ஷயங்களால் இவைகள் ஏற்படுவதாகும்.

 

1. மதி ஞானம் :- பொறிப் புலன்களைக் கொண்டு அறியும் அறிவு.

 

2. சுருத ஞானம் :- மதி ஞானம் மூலமாக நூல் (ஆகமப்) பொருள்களை அறியும் அறிவு.

 

3. அவதிஞானம் :- ஐம்புலன்களின் உதவியின்றியே சூக்ஷ்மமாகிய ஞானாவரணீயம் முதலிய திரவிய கர்மம் முதலியவைகளை அறியும் அறிவு. (ஆகவே) இதனை முற்பவ உணர்வு என்று கூறப்படும்.

 

4. மனப்பர்யய ஞானம் :-

   அவதி ஞானத்தின் சக்தியைவிட அளவில் மீறியதாகி, பிறர் உள்ளத்தில் உள்ளவற்றையும் அறியும் அறிவு.

 

5. கேவல ஞானம் :- லோகாலோகத்தையும் அறியும் அறிவு.

 

        முக்தியடையும் பக்குவமுள்ள பவ்வியர்கள், மதிஞானம், சுருத ஞானம் என்ற இரண்டையும் அடைந்தவுடனே, கேவல ஞானத்தை அடைந்து முக்தி அடைவதும்; சிலர் மதி சுருத அவதி ஞானத்தை அடைந்தவுடனே, கேவல ஞானத்தை அடைவதும், சிலர் மதி சுருத அவதி மனப்பர்யயம் என்ற நான்கு ஞானங்களையும் அடைந்து, பிறகு கேவல ஞானத்தை அடைவதும் மரபு. ஆதலின்,  'துக, திக, சதுணாண ' என்றார். இந்த ஞான விசேஷங்களை விவரமாக அறிய விரும்புவோர் தத்வார்த்த சூத்திர உரையிலும், ஞானார்ணவம் என்ற நூலிலும் கண்டு கொள்க.

 

ஸஞ்ஜமம் - ஸம்யமம். (சாரித்ரம் என்பதும் இது) அதுவும் ஐவகை ஆகும். அவையாவன:-

 

(1) ஸாமாயிகம் :- முனிவர்கள் தாங்கள் மேற்கொண்ட தவம், விரதம் முதலியவை சிறப்பை அடையும் பொருட்டு, காலத்தை அறுதியிட்டுக் காயோத் ஸர்க்கமாக நின்றாவது, அல்லது உட்கார்ந்தாவது ஸாமாயிகம் செய்தல். (இதனை முன்னர் ஸாமாயிக பக்தியில் கூறியுள்ளது)

 

(2) சேதோபஸ்தாபநம் :- முனிவர்கள் தாங்கள் மேற்கொண்ட தவம், விரதம் முதலியன நழுவின காலத்து (தவறிய காலத்து) மீண்டும் (புனர் தீக்ஷை) பெற்று நிறையச் செய்தல்.

 

(3) பரிஹார விசுத்தி :- தவம் முதலியவற்றுக்கு இடையூறு உண்டாகி தோஷமாகுமாயின், அதற்கு நூல்கள் நுவலும் கட்டளைப்படி பரிஹாரம் (தேடல் கழுவாய்) செய்து சுத்தம் செய்தல்.

 

(4) சூக்ஷ்ம ஸாம்பராயம் :- சினம், கர்வம், மாயம், உலோபம் ஆகிய கக்ஷாயங்களைக் குறைத்து, சூக்ஷ்மமாகச் செய்தல்.

 

(5) யதாக்யாத சாரித்ரம்:- 

   ஆன்மாவின் இயற்கைப் பண்புகளாகிய அறிவுக் காட்சியிலேயே நிலைத்து நின்று முக்தியடைய முயலல்.

 

     இவ்வைந்தனுள் பரிஹார விசுத்தி நீங்கலாக மற்ற நான்கினை மட்டும் கடைப்பிடித்து முக்தியடைய முயல்வதும் உண்டு. (இவ்வைந்தையும் வேறுவிதமாகக் கூறுவாரும் உளர்) எனவே, "பஞ்ச சதுரயமே பச்சாடேயர ஸஞ்ஜம " என்றார். "ஸஞ்ஜம ஸம்மத்தணாணம் ஆதிஹிம் " என்றது, மும்மணியும் நிறைந்தாலன்றி முக்தியடைய வியலாதாதலின், மூன்றையும் ஒருங்கு கூறினார். இனி, உபசம, வேதக, க்ஷாயிகமென்னும் சம்யக்த்வங்களை, பஞ்ச லப்தியின் மூலம் அடைந்தவர்களே உபஸம சிரேணி அல்லது, க்ஷபக சிரேணியை அடைவர் என்க. அவைகளின் விவரமாவன, சிரேணி என்பது வரிசையைக் குறிக்கும் சொல்.

 

      கல்வி நிலையங்களில் , மாணவனின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப பல வகுப்புக்கள் ஏற்பட்டிருப்பது போலக் குணங்களையும் செயல்களையும் அனுசரித்து மக்களின் நிலை பதினான்கு வகையாகப் பிரித்துக் கூறப்பட்டுள்ளன. (அவை, குணஸ்தானம் 14 எனப்படும்) அவை வருமாறு :-

 

   1. மித்தியா திருஷ்டி, 2. சாசாதனன், 3. மிச்ரன், 4. அசம்யதன், 5. தேச சம்யதன், 6. ப்ரமதத்தன், 7. அப்ரமதத்தன், 8. அபூர்வ கரணன், 9. அநிவிருத்தி கரணன், 10. சூட்சும சாம்பராயன், 11. உபசாந்த கஷாயன், 12. க்ஷீண கஷாயன், 13. ஸயோகி கேவலி, 14. அயோகி கேவலி என குணஸ்தானம் பதினான்காகும்.

 

         அவற்றுள் ஒன்று முதல் ஐந்து வரை இல்லறத்தாரின் குணங்களையும் செயல்களையும் அனுசரித்தும், ஆறு முதல் பன்னிரண்டு வரை முனிவர்களின் குணங்களையும் செயல்களையும் அனுசரித்தும், பதிமூன்றும் பதினான்கும் (கைவல்ய நிலையைக் குணத்தால் எய்திய) இறைவனின் குணங்களையும் செயல்களையும் அனுசரித்தும் கூறப்பட்டுள்ளன. இல்லறத்தார்களுக்குக் கூறிய ஐந்து குணஸ்தானங்களுள்ளும் முதல் மூன்று குணஸ்தானங்களிலுள்ளவர்களுக்கு (எந்தக் காலத்திலும்) நற்காட்சி பெறும் சக்தி இல்லை யாதலின், அவர்கள் சிறப்பினராகக் கூறப்படமாட்டார் (அதாவது இல்லறத்தார் என்று கூறுவதற்கே தகுதி உடையவரல்லர்).

 

நான்காவது குணஸ்தானத்திலுள்ளார்  அசம்யத சம்யக் திருஷ்டியர் எனப்படுவர். இவர்கள் (சங்கை முதலிய 25, குற்றங்களின் நீங்கியதும், நிச்சங்கை முதலிய எண்குணங்களுடன் ப்ரசம, ஸம்வேக, அனுகம்ப, ஆஸ்திக்யச் சின்னங்களுடையதுமாகிய) நற்காட்சி மட்டும் அமைந்தவராகி, விரதங்களை ஏற்று அனுஷ்டிக்காதவராவர். இயல்பினால் (நூல் முறையினால்) இல் வாழ்க்கையிலிருந்துப் பின் முறைப்படி துறந்து, முக்தியடைய முயல்வார் அனைவருக்கும் முதலாமவன் என்ற கருத்தில்,

 

" இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாரு ளெல்லாந் தலை. "

 

      என்று தேவர் கூறியதும் இவர்களையே யாகும் என்ப. மேருமந்தரம், 160 - ஆம் பக்கத்திலும், 355- ஆம் செய்யுளிலும், மற்றும் அருங்கலச்செப்பு முதலான பல நூல்களிலும் நற்காட்சியின் சிறப்பை உணரலாகும். மேலும் அந் நற்காட்சி பஞ்சலப்தி (சாமக்ரீ) யை அடைந்தார்க்கே ஆவதாகும். அவை வருமாறு:--

 

       ஐந்து விதமான பரிணாமம் ஆத்மனிடம் வந்தடைவதற்குப் பஞ்ச லப்தி என்று பெயர், (லப்தி - அடைவது) அவை,

1.க்ஷயோபஸம லப்தி, 2. விசோதி லப்தி, 3. தேசனா லப்தி, 4.ப்ராயோக்யதா லப்தி 5. கரண லப்தி எனப்படும். கடைசியில் கூறிய கரண லப்தி. 1. அதப்ரவர்த்தி கரணம், 2. அபூர்வ கரணம், 3. அநிவ்ரித்தி கரணம் என மூன்று பிரிவினதாகும்.

தேசனா லப்தியினை, உபதேசனா லப்தியென்றும் கூறுவதுண்டு. இவையெல்லாம் இரண்டு நாழி எல்லை (அளவை)யுடையன்.

 

       எழுபது கோடாகோடி கடற்கால நிலையினையுடைய தரிசன மோஹனீயத்தின் பிரிவாகிய மித்யாத்வ (கர்ம) ப்ரக்ருதி ஓரளவு குறையும் போதுதான், பஞ்ச லப்தி வந்தடையும். அவற்றுள் முதலாவதாகிய (1)க்ஷயோப ஸம லப்தி அடைந்த மனிதன் (பவ்விய ஜீவனாகி), அதுவரை ஆத்மனின் உண்மை அறியாமல் மயங்கியிருந்தவன், ஓரளவு அறிவு விளங்கப் பெற்று, ஆன்ம தத்துவங்களை அறிஞர் வாயிலாகக் கேட்டு, உண்மை அறிந்து தனக்கு ஏற்பட்ட  மகிழ்ச்சியினால் (விசோதி பரிணாமத்தால்) பக்தி மார்க்கத்தில் ஈடுபட, மேலே கூறிய மித்யாத்வ ப்ரக்ருதி வந்தடையும். அந்தச் சமயம் தான், நற்காட்சி வந்தடையும். அச்சமயம் இரண்டாவதாகிய விசோதி லப்தி தோன்றி மித்யாத்வ ப்ரக்ருதியின் அளவில், ஒரு கோடா கோடி கடற்காலமும், ஒரு அந்தர் முகூர்த்தமும் நிற்க, மற்றவைகளை உதயத்திற்கு வராமல் கெடுக்கும். அதன்பிறகு, 3- வது தேசனா லப்தி தோன்றி (மேலே) கோடா கோடியும் அந்தர் முகூர்த்தமுமாகக் குறைந்திருந்த அளவையும் கண்டங் கண்டமாக்கி உதயத்திற்கே வராமல் தடுக்கும் ; இவ்வாறே நாற்பத்தோரு கர்மங்களுக்கு பந்தம் ஆகவொட்டாத நற் பரிணாமத்தை அடையச் செய்யும் (எனவே நாற்பத்தோரு கர்மங்கள் ஆத்மனுடன் வந்து (கலக்காமல்) பந்தமாகாமல் நிற்கும்.

 

நாற்பத்தோரு கர்மங்கள்:-

 

1. மித்தியாத்வம், 2. நபும்ஸக வேதம், 3. நரகாயுஷ்யம், 4. நரக கதி, 5. நரக கத்யானு பூர்வி, 6. ஏகேந்திரிய ஜாதி, 7. த்வீந்திரிய ஜாதி, 8. த்ரீந்திரிய ஜாதி, 9. சதுரேந்திரிய ஜாதி, 10. கொண்ட ஸம்ஸ்தாநம், 11. அஸம்ப்ராப்த ஸ்ரபாடிகா ஸம்ஹநநம், 12. ஆதபம், 13. ஸ்தாவரம், 14. ஸூக்ஷ்மம், 15. அபர்யாப்தம், 16. சாதாரண சரீரம், 17. நித்ரா நித்ரை, 18. ப்ரசலா ப்ரசலை, 19. ஸ்த்யாந க்ரந்தி, 20. அனந்தானு பந்திக் குரோதம், 21. மானம், 22. மாயம், 23. லோபம், 24. ஸ்த்ரீ வேதம், 25. திரியக் ஆயுஷ்யம், 26. திரியக் கதி, 27. திரியக் கத்யானுபூர்வி, 28. ந்யக்ரோத ஸம்ஸ்தாநம், 29. ஸ்வாதி ஸம்ஸ்தாநம், 30. வாமன , 31. குப்ஜ , 32. கீலித ஸம்ஹனனம், 33. நாராச , 34. அர்த்தநாராச , 35. வஜ்ரநாராச , 36. உத்யோதம், 37. அப்பிரஸ்த விஹா யோகதி, 38. துர்ப்பகம், 39. துஸ்வரம், 40. அநாதேயம், 41. நீசைக் கோத்திரம், என்பனவாம்.

 

     மற்றும், நல்வினை தீவினைகளைக் குறைத்துத் தன் கால எல்லையாகிய இரண்டு நாழிகை வரை நின்று நீங்கும். அதன்பின், ஸம்யக்த்வ குணங்களை மிகுதியாகவுடைய 4- வது ப்ராயோக்யதா லப்தி வந்தடைந்து நல்வினையை மிகச்செய்து, தீவினையைக் குறையச் செய்யும். அதன்பின் 5- வது கரண லப்தியின் முதற் பகுதியாகிய அதப்ரவர்த்திகரணம் தோன்றி அதுவும் ப்ராயோக்யதா லப்திக்குக் கூறிய பலனையே மிகச் செய்து, இரண்டு நாழியில் நீங்கிவிட, அதன்பின் இரண்டாவது பகுதியாகிய அபூர்வகரண பரிணாமம், தோன்றி தீவினைகளின் ஸ்திதி (நிலை)யையும், அனுபாகத்தையும் குறைப்பது; நல்வினைகளின் ஸ்திதியையும், அனுபாகத்தையும் அதிகமாக்குவது; நற்குணங்களை சேரச்செய்வது; அவைகளை விருத்தியடையச் செய்வது ஆகிய ஆறு விதமான தன்மைகளைச் செய்து இரண்டு நாழியில் நீங்கிவிட, அதன்பிறகு மூன்றாவது பகுதியாகிய அநிவ்ருத்தி கரண பரிணாமம் தோன்றி ஆத்மனுக்குப் பல அதிசயங்களைச் செய்து, தீவினைகளுக்கு சத்வத்தையும், உதீரணையினையும் (நிர்ச்சரையினையும்) ; நல்வினைகளுக்கு பந்தத்தையும், உதயத்தையும் செய்து, மேலும் பல நற்குணங்களிலும் உருக்கமாக நின்று, முன் விசோதி லப்தியில் குறைந்திருந்த மத்யம ஸ்திதியாகிய ஒரு கோடா கோடி கடற்காலமும் அந்தர் முகூர்த்தமாகிய அதனையும், ஜகன்ய ஸ்திதியாகிய அந்தர் முகூர்த்தமாக (இரண்டு நாழிகையாக)க் குறைத்து ; அதனையும் (மித்யாத்வப்ரக்ருதியையும்) தன் ஆத்மனுடைய கீழ் பாகத்திலும் மேல் பாகத்திலும் தள்ளி, நடுவில் பிரகாசத்தை (ஆத்ம ஜோதியை)ச் செய்து, மேல் பாகத்திலுள்ள மித்யாத்வத்தின் வெம்மையை (வெப்பத்தை)க் குளிரச் செய்து, கீழ் பாகத்திலுள்ள மித்யாத்வத்தைத் தானாகவே நீங்கச் செய்கிறது ; அக்கணமே அளவிலா நன்ஞானமும், நற்காட்சியும் விளங்குகிறது. அதன்பின்னர் வெளியின் மேல் தணிந்திருந்த மித்தியாத்வம் (இயந்திரத்தில் அரைத்த வரகு ;  வரகு, கப்பி, அரிசி என மூன்று பிரிவாக விழுவதைப் போல), மித்யாத்வம், சம்யக் மித்யாத்வம், சம்யக்த்வ ப்ரக்ருதி என மூன்று துண்டமாக வீழும் : அவற்றோடு அனந்தாநு பந்தி க்ரோத மான மாயாலோபம் ஆகிய சப்த ப்ரக்ருதிகளை, உபசமத்தை அடையச் செய்தவனாகின்றான். அவனே சம்யக்த்வமாகிற ரத்ன பர்வதத்தின் மேல் நின்று, பிறவிக் கடலின் கரையைக் காண்கின்றவனாகின்றான். இவ்வண்ணம் பஞ்ச லப்தி மூலமாக எய்திய உபஸம சம்யக்த்வத்தின் (நற்காட்சியின்) கால எல்லை இரண்டு நாழிகை ஆகும் ; அவ்விரண்டு நாழி முடிவதற்குள் அனந்தாநுபந்தி க்ரோத மான மாயா லோபங்களில் யாதானுமொன்று உதயமாகில் சம்யக்த்வ பர்வதத்தின் மேல் நின்று தலைகீழாக விழுகிற பரிணாமமாகும். அவ்வாறாகிய அது தாழ்ந்ததாகிய சாசாதன குணஸ்தானத்தை அடையும்.

 

உபஸம காலமாகிய இரண்டு நாழிகை முடிந்த பின்னர் சப்த ப்ரக்ருதியில் மித்யாத்வப் பிரக்ருதி உதயமாகில், மித்யாத்வமும்; சம்யக் மித்யாத்வம் உதயமாகில் ; சம்யக் மித்யாத்வமும்; சம்யக்த்வ ப்ரக்ருதி உதயமாகில், சம்யக்த்வமும் ஆகும். இந்த உபஸம சம்யக்த்வத்தை ஒருதரம் அடைந்த ஜீவன், மீண்டும் பிறவியில் நழுவி அழுந்தினாலும் மீண்டும் நற்காட்சியைப் பெற்று முக்தியடைவது திண்ணம். அவ்வாறு பிறவியில் நழுவிய ஆத்மன் இரண்டு மூன்று பிறவிகளில் முக்தியை அடைந்து விடும் ; நீடித்தால் (அர்த்த புத்கல பராவர்த்தனகாலம் அதாவது) இவ்வுலகிலுள்ள புத்கல பரமாணுக்களில் பாதி புத்கலத்தை அனுபவிக்கும் வரை நிற்கும் , அதற்குமேல் கண்டிப்பாக முக்தி அடையும்.

 

      இனி, வேதக சம்யக்த்வ மென்பது சப்தப்ரக்ருதியில் சம்யக்த்வ ப்ரக்ருதிமாத்திரம் உதயத்திற்கு வந்து, மற்ற ஆறும் உதயமின்றி அடங்கி, இரண்டு நாழிகை நிற்குமாகில், அப்பொழுது வேதக சம்யக்த்வம் பூர்த்தியடையும் ; அதன் முடிவில் (வேதக சம்யக்த்வ மூலம்) சப்தப்ரக்ருதி ஏழும் ஆத்மப்ரதேசத்தை விட்டு அகன்று (க்ஷயமாகுமாகில்) கெட்டொழியுமாகில் அப்பொழுதான்  க்ஷாயிக சம்யக்த்வம் நிலைபெறும். இவ்வாறு க்ஷாயிக சம்யக்த்வத்தை அடைந்த (க்ஷாயிக சம்யக்த்ருஷ்டி) இப்பிறவிப் பிணியில் இரண்டு அல்லது மூன்று பிறவிக்கு மேல் வர்த்தியார். (அதாவது மூன்று பிறவி முடிவதற்குள் முக்தியடைவர்.)

 

        இதுவரை அஸம்யத குணஸ்தானத்தில் அடையும் சம்யக்த்வ விவரம் கூறப்பட்டன. இவ்வாறே ; அஸம்யதன், தேச சம்யதன், ப்ரமத்தன், அப்ரமத்தன் ஆகிய நான்கு குணஸ்தானத்தில் உள்ளவர்களுக்கு உபஸம சம்யக்த்வம், வேதக சம்யக்த்வம், க்ஷாயிக சம்யக்த்வம் ஆகிய மூன்றும் ஆகும்; அதாவது மூன்றில் எதானாலும் ஒன்று ஆகும்.

 

         இவ்வாறு, உபஸம சம்யக்த்வத்தை அடையும் தகுதியுள்ளவர்களாகிய 8- வது, அபூர்வகரணன்: 9- வது, அனிவ்ருத்தி கரணன், 10- வது, சூஷ்ம சாம்பராயன், 11- வது, உபஸாந்த கஷாயன் என்ற நான்கு குணஸ்தான வர்த்திகளுக்கும் உபஸம சம்யக்த்வம் ஒன்றே யாகும். 8- வது அபூர்வகரணன், 9- வது, அனிவ்ருத்தி கரணன், 10- வது சூஷ்ம சாம்பராயன், 12- வது: க்ஷீணகஷாயன், 13- வது ஸயோகி கேவலி, 14- வது, அயோகி கேவலி ஆகிய ஆறு குணஸ்தான வர்த்திகளுக்கும் க்ஷாயிக சம்யக்த்வம் ஒன்றே யாகும். (சம்யக்த்வம் என்பதனை தமிழில் நற்காட்சி எனப்படும்). இவைகளின் விவரம் அறிய விரும்புவோர் மேருமந்தரம் 711, லிருந்து 723- ஆம் கவி வரையிலும் கூறியிருப்பதனையும்,

 

"அடக்கமிலானை யாதி நால்வர்க்கு மூன்றுமாகும்

உடைத்திடா துவசமிப்பார் நால்வருக் குபச மித்தாங்

கெடுத்தவ ரறுவர்க் காகிற் கேட்டின்க ணாயதாகும்,"

 

என்னும் 724- ஆம் செய்யுளில் கூறியதனையும் கண்டு கொள்க.

 

 

ஸாஹரணா ஸாஹரணே ஸம்மு க்காதே

      தரேய ணிவ்வாதே

டிதபளியங்கணி ஸண்ணே விகயமளே

   பரமணாணகே வந்தே.  -  75

 

 

ஸாஹரண

அஸாஹரணே

ஸமுத்காதே

இதரேய, டித

பளியங்க

ணிஸண்ணே விகய-

மளே, பரமணாணகே

நிவ்வாதே ஸித்தே

வந்தே

 

        ஹிம்சை காரணமாகக் கொண்டுபோக வேண்டிய இடத்திற்குச் சென்றும் ; அவ்வாறு போகாமலும், கேவலி ஸமுத்காதத்தை அனைத்தும், அவ்வாறு, அடையாமலும் ; காயோத் ஸர்க்கமாக நின்றும், பல்யங்காசனமாக உட்கார்ந்தும், தவமியற்றிக் கருமங்களைப் போக்கி, கேவல ஞானத்தை அடைந்தவர்களாகி, முக்தியை அடைந்திருக்கின்ற சித்தர்களை நமஸ்கரிக்கின்றேன்.

 

            விதேஹ நாட்டிலிருந்த சஞ்சயந்த பட்டாரகரைப் பரத கண்டத்தில் கொண்டு வந்து, ஹிம்ஸை செய்தது,  ' ஸாஹரண ' என்பதற்கு உதாரணம். (மேரு மந்தரத்தில் கூறப்பட்டுள்ளது). ஸப்த சமுத்காதத்தில் கேவலி ஸமுத்காதம் ஒன்று. அதாவது,  நாம் இத்துணைக் காலம் உயிருடன் இருக்கவேண்டும் என்று நமக்கு கால எல்லை (ஆயுஷ்யம்) இருப்பது போலவே எண்வினைகளுக்கும் கால எல்லைகள் உள்ளன. இதனை,

 

"ஏழுமூன் றிரண்டு பத்தா லெறிந்தன கோடா கோடி

ஆழிக ளாகு மான்ற நிலையல்ல தந்த மூழ்த்தம்

மோழைமோ வத்தி னுக்கு முதல்மும்மை யீற்றி னுக்கும்

ஆழிய நாம கோதத் தாயுமுப் பத்து மூன்றே. "

 

    என்று (மேருமந்தரம்- 103 ல்) வாமன முனிவர் கூறியதனாலும் உணரலாகும்.

 

       அகாதி வினைகள் நான்கும் ஒருங்கே கெடுதல் இயல்பு. ஆகவே, ஆயுஷ்ய கர்மத்தை விட, வேதனீய, நாம, கோத்திரங்களுக்குக் கால எல்லை அதிகமாக இருப்பின், அவைகளை சரிகட்ட வேண்டி, முக்தியடையும் ஆத்மன், விரிந்து சுருங்குவதற்கு கேவலி ஸமுத்காதம் என்று பெயர்.(ஒரு வஸ்திரத்தை நனைத்துப் பிழிந்து அப்படியே முறுக்குப் பிரியாமல் வைப்பின் விரைவில் ஈரம் உலராது ; அதனை வெய்யலிலாவது காற்றிலாவது விரித்து உலர்த்தினால், விரைவில் ஈரம் உலர்ந்து விடுவது எவ்வாறோ அவ்வாறே), முக்தியடையும் ஆத்மன் , எட்டு சமயத்தில் விரிந்து சுருங்குகிறது. அதாவது, அந்த ஆத்மன் ; முதல் சமயத்தில் இவ் வுலகத்தின் உயரமான மேலே ஏழு கயறு கீழே ஏழு கயறு ஆகிய பதினாலு கயிறும் கோல் போல நீண்டு, இரண்டாம் சமயத்தில் கதவு திறப்பது போல இருபக்கமும் (உலகம் உள்ளவரை பக்கத்தே) விரிந்து, மூன்றாம் சமயத்தில் நாற்புறமும் (உலகத்தே) பரம்பி, நான்காம் சமயத்தில் இவ்வுலகத்தின் கன அளவான, 343 கயிற்றளவும் (ரஜ்ஜுப்ரமாணமும்), பூர்ணமாக நிறையும். அதன்பின் முன் பெருகிய முறைப்படியே நான்கு சமயத்தில் சுருங்கி தன் ஆத்மன் தங்கியிருந்த உடலிலேயே அடங்கிவிடும். இந்த எட்டு சமயத்தில் அகாதி நான்கும் ஓர் அளவினதாகிக் கெட்டு அவ் வாத்மன் முக்தியடையும். இதனுக்கே கேவலி ஸமுத்காதம் என்று கூறப்படும். சமுத்காதங்களின் விவரம் பதார்த்த சாரத்தில் கண்டு கொள்க.

 

 

புவ்வேதம் வேதந்தா ஜே புரிஸா

      கவகஸே டிமாரூடா

ஸேஸோதயேணவி தஹா

   ஜ்சாணுவ ஜுத்தாய தேது ஸிஜ்சந்தி.  -  76

 

 

பத்தேய ஸயம் புத்தா

    போஹிய புத்தாய ஹொந்தி தே ஸித்தா

பத்தேயம் பத்தேயம் ஸமயே ஸமயேச

    பணிவதாமி ஸதா.  -  77

 

பும் வேதம்

வேதந்தா

ஜே புரிஸா

கவக ஸேடிம் ஆருடா

ஜ்சாணுவ ஜுத்தாய

ஸிச்சந்தி தஹா

ஸேஸோத யேணவி

ஜே புரிஸா:

தேது ஸ:

ஸிஜ்சந்தி

 

 

பத்தேய-

ஸயம்புத்தா

போஹிய புத்தாய

தே ஸித்தா

ஹொந்தி

பத்தேயம் பத்தேயம்

ஸமயே

ஸமயே ஸமயேச

ஸதா பணிவதாமி

 

           ஆண் மக்களை மேலாகக் கருதுகின்ற (பாவ பும் வேதத்தை அனுபவிக்கின்ற) யாவர் சிலர் திரவிய புருஷர்கள் தவமியற்றி க்ஷபக சிரேணியை ஏறி, சுக்கிலத் தியான பலத்தால் சித்தியை அடைகின்றவர்களையும் ; மற்ற பாவ ஸ்திரீ வேத,  பாவ நபும்ஸக வேதத்திலிருந்து மாறி, திரவிய புருஷர்களாகித் தவமியற்றி க்ஷபக சிரேணியை ஏறி, சுக்கிலத் தியான பலத்தால் சித்தியை அடைந்தவர்களையும்; இடி வீழ்தல், மேக விநாசங் காணல் முதலிய பல்வேறு காரணங்களைக் கொண்டு விரக்தரான ப்ரத்யேக புத்தர், அவ்வாறின்றி இயல்பாகவே வெறுப்படைந்த ஸ்வயம்புத்தர், பிறர் உபதேசத்தைக் கேட்டு விரக்தியடைந்து தவம் மேற்கொண்ட போதித புத்தர், ஆகிய அவர்கள் மூவரும் சித்தராகின்றார்கள் ; ஆதலின், அவர்களையும் ; தனித் தனிக் காலங்களிலாவது, அல்லது எல்லோரையும் ஒருங்கே ஒரு சமயத்திலாவது, எப்பொழுதும் வணங்குகின்றேன்.

 

              ஒரு மனிதன் தன் எண்ணத்தில் (பரிணாமத்தில்), இதர மனிதர்களை  மேலாகக் கருதி விரும்புகின்றான். அவ்வாறே, பெண்களையும், அலியையும் கருதுகின்றான். அவ்வாறின்றித் தன் எண்ணத்தைத் தன் ஆத்மனிலேயே நிலைக்கச் செய்து சுத்த பாவத்தை அடையும் பொழுதே, தவமியற்றும் சக்தி ஏற்படுகின்றது ; விவரம் தத்வார்த்த சூத்திரம் இரண்டாவது அத்தியாயம் ராஜவார்த்திகத்தின் உரையில் கண்டு கொள்க.

 

 

பண ணவ து அட்டவீஸா

      சவு திய ணவதீய தொண்ணி பஞ்சேவ

பாவண்ண ஹீண பியஸய

     பயடி விணாஸேண ஹொந்தி தே ஸித்தா.  - 78

 

 

பண நவ

     து

அட்டவீஸா

சவு, திய ணவதீய

தொண்ணி, பஞ்சேவ

பாவண்ண ஹீண

பியஸய பவடி

விணாஸேண, தே

ஸித்தா ஹொந்தி

 

         ஞானாவரணீயம் ஐந்து, தரிசனாவரணீயம் ஒன்பது, வேதனீயம் இரண்டு, மோகனீயம் இருபத்தெட்டு, ஆயுஷ்யம் நான்கு, நாமம் தொண்ணூற்று மூன்று, கோத்திரம் இரண்டு, அந்தராயம் ஐந்து ஆகிய, ஐம்பத்திரண்டு குறைந்த இருநூறு (எனவே நூற்று நாற்பத்தெட்டு) கர்மங்களையும் வென்றழிப்பதனாலேயே மேற்கூறிய ப்ரத்யேகாதி புத்தர்கள் சித்தராகிறார்கள்.

 

அயிஸயமவ்வா பாஹம்

    ஸொக்க மணந்தம் அணோவமம் பரமம்

இந்திய விஸயா தீதம் அப்பத்தம்

    அச்சவம் ச தே பத்தா.  - 79

 

 

தே, அயிஸயம்

அவ்வாபாஹம்

அணந்தம்,

அணோவமம் பரமம்

இந்திய விஸய

அதீதம் அச்சவம் ச

அப்பத்தம்

ஸொக்கம்

பத்தா

 

          அந்தச் சித்தர்கள், அதிசயமானதும், எவ்விதத் தடையுமில்லாததும், எண்ணற்றதும் (அளவு கடந்ததும்), இணையற்றதும், எல்லாவற்றையும் விட மிகச் சிறந்ததும் (மேன்மை தங்கியதும்), பொறிப் புலன்களை(க் கடந்து) மீறியதும், ஒருகாலும் நழுகாததும் (நாசமில்லாததும்), பிறவியில் உள்ளவர்களுக்குக் கிடைக்காததுமாகிய ஆத்மானந்தமயமான இன்பத்தை அடைந்தார்கள்.

 

(இதைவிட, பர:- சிரேஷ்டம், ம- இல்லை, யஸ்மாத்ஸ: பரம:)

 

 

ளோயக்க மத்த யத்தா

    சரம ஸரீரேண தேஹு கிஞ்சூணா

கயஸித்த மூஸ கப்பே

    ஜாரிஸ ஆயார தாரி ஸாயாரா. -  80

 

 

ளோயக்க

மத்தயத்தா தேஹு

சரம ஸரீரேண

கிஞ்சூணா

கய ஸித்த

மூஸ கப்பே

ஜாரிஸ ஆயார

தாரிஸ

ஆயார ஹொந்தி

 

         மூவுலகின் உச்சியிலுள்ள அந்தச் சித்தர்கள்; முக்தியடையும்போதிருந்த கடைசி சரீரத்தின் அளவில் சிறிது குறைந்த (அதாவது ஈசல் இறகின் [கன] அளவு குறைந்த) வர்களாகி, மெழுகினால் செய்த உருவத்தையுடைய; மூஷகைக்குள்ளே அம்மெழுகு எடுத்த பிறகு எவ்வித உருவம் (ஆகாரம்) இருக்கின்றதோ, அத்தகைய உருவத்தை உடையவர்களாகின்றார்கள்.

 

ஜரமரண ஜம்ம ரஹியா  தே ஸித்தா

     மம ஸுபத்தி ஜுத்தஸ்ஸ

தெந்து வரணாண ளாஹம்

     புஹ ஜண பரிபத்தணம் பரம ஸுத்தம்.  - 81

 

 

ஜர மரண ஜம்ம

ரஹியா தே ஸித்தா

ஸுபத்தி ஜுத்தஸ்ய

மம புஹஜண பரிபத்தணம்

பரமஸுத்தம்

வரணாணளாஹம்-

தெந்து

 

         மூப்பு, இறப்பு, பிறப்பு இவைகளில்லாத அந்தச் சித்தர்கள்; சிறந்த பக்தியோடு கூடிய எனக்கு, அறிஞர்களால் விரும்பப் படுகின்றனவும், குற்றமற்றுச் சிறந்துள்ளனவுமான, கேவல ஞான லாபத்தைக் கொடுக்கக் கடவார்கள்.

 

கிச்சா காஉஸ்ஸக்கம் சஉரட்டய

     தோஸ விரஹியம் ஸுவி ஸுத்தம்.

அயிபத்திஸம்ப உத்தோ ஜோ வந்தயி

      ஸோலஹு லஹயி ஸித்தி ஸுஹம்.  -  82

 

 

ஜோ சவுரட்டய

தோஸ விரஹியம்

ஸு வி ஸுத்தம்

காஉஸ்ஸக்கம்

கிச்சா அயிபத்தி

ஸம்ப உத்தோ

சவுரட்டய

தோஸ விரஹியம்

வந்தயி ஸோ

ஸித்தி ஸுஹம்

லஹு லஹயி

 

           யாதொரு பவ்வியன், (காயோத் ஸர்க்கத்துக்குக் கூறிய 4 × 8 = 32) முப்பத்திரண்டு குற்றங்களில்லாமல் நூல் முறைப்படி மன வசன காய சுத்தியோடு செய்யும் காயோத் ஸர்க்கத்தைச் செய்து; மீண்டும், மிக்க பக்தியில் ஈடுபட்டவனாகி, வந்தனைக்குக் கூறும் முப்பத்திரண்டு குற்றங்களின் நீங்கியவனாகி, மேற்கூறிய சித்தர்களை வணங்குகின்றானோ அந்தப் பவ்வியன், முக்தி இன்பத்தை அதி விரைவில் அடைகின்றான்.

 

32, குற்றங்களை மேலே கூறப்படும்.

 

எண் குணங்களைக் கூறுகின்றார்.

 

ஸம்மத்தணாண தம்ஸண வீரிய

    ஸுஹுமம் தஹேவ அவகஹணம்

அகுரு லஹுகம பாஹம் அட்ட குணா

     ஹொந்தி ஸித்தாணம்.  -  86

 

 

ஸம்மத்த தஹேவ

ணாண தம்ஸண

வீரிய ஸுஹுமம்

அவகஹணம் அகுரு

லகுகம் அபாஹம்

அட்டகுணா:

ஸித்தாணம் ஹொந்தி

 

       க்ஷாயிக ஸம்யக்த்வத்தினாலான அனந்த சுகமும், அவ்வாறே அனந்த ஞானமும், அனந்த தரிசனமும், அனந்த வீரியமும்,  அதி சூக்ஷ்மத்வமும், அவகாஹனமும், அகுரு லகுத்வமும், அவ்யாபாதத்வமும் ஆகிய இயற்கையாயுள்ள எண்குணங்களும், ஸித்தர்களுக்கு நன்கு விளங்குகின்றன.

 

 

ஜயமங்கள பூதாணம்

    விமளாணம் ணாண தம்ஸண மயாணம்

தயிளோய ஸேஹராணம் ணமோ

     ஸதா ஸவ்வ ஸித்தாணம்.  - 87

 

 

ஜயமங்கள பூதாணம்

விமளாணம் ணாண-

தம்ஸண மயாணம்

தயிளோய

ஸேஹராணம்

ஸவ்வ ஸித்தாணம்

ஸதா ணமோ அஸ்து

 

       வினைகளின் வெற்றியினால் மங்கள ஸ்வரூபத்தை அடைந்தவர்களாயும் ; நிர்மலமானவர்களாயும், (அனந்த) ஞான தரிசன மயமானவர்களாயும், மூவுலகிற்கும் முடிமணி போன்றவர்களாயுமுள்ள, எல்லாச் சித்தர்களுக்கும், எப்பொழுதும் நமஸ்காரம் ஆகட்டும்.

 

    மயட் (மய) என்ற ப்ரத்யயத்திற்குப் பொருள் மூன்று வகை. அவற்றுள்,

 

(1) ப்ராசுர்யார்த்தம்  (உதாரணம். சூத்ரமயோ க்ராம :- கிராமத்தில் சூத்திரர் அதிகமாயுள்ளனர் என்பது.)

 

(2) விகாரார்த்தம்  (ஹிரண்மயம் குண்டலம் -- உருண்டை வடிவமாகவுள்ள பொன், குண்டலத்தின் உருவமாக மாறுதல்.)

 

(3) ஸ்வார்த்தே  (சின்மய ஆத்மா -- சித் ஸ்வரூபமே ஆத்மா என்பது.) எனவே, ஈண்டு, ' மயாணம் ' என்பதற்கு ஸ்வார்த்தே ப்ரத்யயமே மேற்கொள்ளப்பட்டது.

 

        நம :  என்பதற்கு வணக்கம் என்பது பொருள். இதற்கு, அஸ்து, அல்லது கரோமி என்ற இரு பதங்களில் ஒன்றை, சேர்த்துக் கூறுவதே இலக்கணம். இதில் அஸ்து என்று கூறுமிடத்து,  நம : என்பது முதல் வேற்றுமையாகும். இவை அல்லாமல்,  நம : என்று வேற்றுமையில்லாத அன்வய சப்தமும் உண்டு. அது (சதுர்த்தி) நாலாம் வேற்றுமையாகும். விவரம் அறிய விரும்புவோர் ' சப்தானு சாஸனம் ' என்ற இலக்கண நூலுக்கு அமைந்த கன்னட உரையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது அவற்றுள் கண்டு கொள்க.

 

அமரண வந்தியாணம்

   கிண்ணர புஜ கந்த கருட மஹியாணம்

பவ வஸஹ விரஹியாணம்

     ணமோ ஸதா ஸவ்வ  ஸித்தாணம்.  - 88

 

 

அமர தர வந்தியாணம்

கிண்ணர

புஜ கந்த கருட

மஹியாணம்

பவ வஸஹ

விரஹியாணம்

ஸவ்வ ஸித்தாணம்

அஹம் ணமோ

ஸதா கரேமி

 

          தேவர்களாலும், மனிதர்களாலும் வணங்கப்படும் தகுதியுள்ளவர்களும், மற்றும், கின்னரர்,  பவணர்,  கந்தர்வர் கருடர் ஆகிய இவர்களாலும் பூஜிக்கப்படுபவர்களும், பிறவி வாழ்க்கையை (பற்றற) நீக்கியவர்களுமான சித்த பரமேஷ்டிகள் யாவருக்கும், யான் துதியோடு கூடிய வணக்கத்தை எப்பொழுதும் செய்கின்றேன்.

 

ஸித்தா ணட்டட்ட மளா விஸுத்த

     புத்தீய லத்த ஸப்பாவா

திஹுவண ஸிரஸேஹரயா

     பஸியந்து பண்டாரயா ஸவ்வே. - 89

 

 

ணட்டட்ட மளா

விஸுத்த புத்தீய-

லத்த ஸப்பாவா

திஹுவண ஸிர

ஸேஹரயா

பண்டாரயா

ஸவ்வே ஸித்தா:

மம பஸியந்து

 

        எண் வினைகளை வென்றவரும், அதனால் அனந்த ஞானம் முதலிய எண் குணங்களும் விளங்கப் பெற்றவரும், எனவே, தன்னுடைய இயற்கையான ஆன்மலாபத்தைப் பெற்றவரும், மூவுலகிற்கும் முடிமணி போன்றவரும், குணங்களாகிற நிதிக்கு இருப்பிடமானவர்களுமான சித்தர் யாவரும், எனக்குத் தெளிவை உண்டாக்கட்டும்.

 

  ப்ரஸந்நம் - தெளிவு. இனி, பஸியந்து என்பதற்கு அனுக்கிரகம் செய்யட்டும் என்று கூறினும் அமையும்.

 

 

ஸோமே திஹுவண மஹியோ ஸித்தோ

    புத்தோ ணிரஞ்ஜணோ ணிச்சோ

திஸது வரணாணளாஹம்

     சரித்த ஸித்திம் ஸமாஹிம் ச. -  90

 

 

திஹுவண

மஹியோ

ஸித்தோ புத்தோ

ணிரஞ்ஜணோ

ணிச்சோ

ஸோ ஸித்தோ மே

வரணாண ளாஹம்

சரித்த ஸித்திம்

ஸமாஹிம் ச

     திஸது

 

      மூவுலகோராலும்  போற்றப்பட்டவரும், (பூசிக்கப்பட்டவரும்) முக்தியடைந்தவரும், இயற்கையான கேவல ஞான முள்ளவரும், வினை(யின்) நீங்கியவரும், என்றும் அழிவில்லாதவரும்  ஆகிய, அந்த சித்த பரமேஷ்டிகள் ; எனக்குச் சிறந்த கேவல ஞான லாபத்தையும், முக்தி பெறத்தக்க ஒழுக்கத்தையும்  (யதாக்யாத சாரித்திரத்தையும்), சமதாபாவமான சாமாயிகத்தையும் அருள் செய்யட்டும்.

 

திஹுவண மந்தர மஹியே திளோய

     புத்தே திளோய மத்தத்தே

தேளொக்க விதித வீரே

     திவிஹேணய பணிவதே ஸித்தே.  - 91

 

 

திஹுவண மந்தர

மஹியே, திளோய

புத்தே, திளோய மத்தத்தே,

தேளொக்க

விதித வீரே ஸித்தே

திவிஹேணய

பணிவதே

 

     மூவுலகிலும் உள்ள அறிஞர்களால், பூஜித்துத் துதிப்பவரும், மூவுலகம் முழுவதிலும் உள்ள அனைத்தையும் சமயந்தோறும் அறிபவரும், மூவுலக உச்சியில் முடிமணி போல் விளங்குகின்றவரும், மூவுலகத்தாராலும் நன்கு அறியப்பட்ட அனந்த வீரியமுடையவருமான, சித்த பரமேஷ்டிகளை ; உள்ளம், உடல், சொல் ஆகிய மூன்றினாலும் வணங்குகின்றேன்.

 

உடலால் வணங்குதல் என்பது கைகுவித்துத் தலைவணங்குதல்.

 

 

ஸித்தாணம் ணமோக்காரம்

    பாவேணய ஜோ கரேதி பயடிமதீ

ஸோ ஸவ்வ துக்க மொக்கம்

      பாவதி அசிரேண காளேண.  - 92

 

 

பயடிமதீ ஜோ ஸித்தாணம்

ணமொக்காரம்

பாவேணய கரேதி ஸோ

ஸவ்வ துக்க

மொக்கம், அசிரேண

காளேண பாவதி

 

          தெளிந்த அறிவுடைய எவன் ஒருவன் சித்தர்களுடைய நமஸ்காரத்தைப் பற்றற்ற தூய எண்ணமுடன் (மேற் கூறியவாறு) செய்கின்றானோ அவன், எவ்விதத் துன்பங்களும் இல்லாத முக்தியை அதி விரைவில் அடைகின்றான்.

 

தவஸித்தே ணயஸித்தே

    ஸஞ்ஜம ஸித்தே சரித்த ஸித்தேய

ணாணம்மி தம்ஸணம்மிய ஸித்தே

    ஸிரஸா ணமம்ஸாமி. - 93

 

 

தவஸித்தே

ஸித்தே

நயஸித்தே ஸித்தே

ஸஞ்ஜம ஸித்தே

ஸித்தே,

ணாணம்மி

தம்ஸணம்மிய

சரித்த ஸித்தே

ஸித்தே ஸிரஸா

ணமம்ஸாமி

 

            (சுக்கிலத் தியானமாகிற அக்கினியோடு சேர்ந்த) பன்னிருவகை தவத்தினால் முக்தியடைந்த சித்தர்களையும், சுத்தத் திரவியார்த்திக நயத்தினால் முக்தியடைந்த சித்தர்களையும், மேன்மையான விரதத்தினாலேயே முக்தியடைந்த சித்தர்களையும், இயற்கையான அறிவு காட்சியிலேயே பொருந்தி நிற்றலாகிய உத்தம ஒழுக்கத்தால் முக்தியடைந்த சித்தர்களையும், முறைப்படித் தலையில் இரு கைகளையும் குவித்து, சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்.

 

(12 வகை தவத்தின் விவரம் யசோதர காவியம் 31- ஆம் பக்கத்தில் கூறியுள்ளதை ஆங்குக் கண்டு கொள்க) விரதம்; யமம், நியமம் என இரண்டாக விரியும். அருங்கலச்செப்பில் காண்க.

 

    நிச்சய நயம், வியவஹார நயம் என நயம் இரண்டு விதம். அவற்றுள், 

நிச்சய நயம் :-- சுத்த நிச்சய நயம், அசுத்த நிச்சய நயம் என இரண்டு விதமாகும்.

வியவஹார நயம்:-- உபசரித சத்பூதம், அனுபசரித சத்பூதம், உபசரித அசத் பூதம், அனுபசரித அசத்பூதம் என நான்கு விதமாகும்.

அவை வருமாறு,

 

(1) பிறவிச் சுழற்சியில் உள்ள ஒவ்வொரு ஆத்மனும் சுத்தாத்ம ஸ்வரூபமுடையவர்களே (சித்தருக்குச் சமமானவர்களே)  என்று அறிந்து நம்புவது சுத்த நிச்சய நயம்.

 

(2) வினைகளின் சேர்க்கையினால் தோன்றிய ஆசை முதலிய அசுத்த பரிணாமங்கள் ஆத்மனுடையதே என்று மாறுபாடாக அறிந்து நம்புவது அசுத்த நிச்சய நயம்.

 

(1)  வினைகளின் க்ஷயோபஸமத்தால் ஏற்படும் மதிஞானம் முதலிய குணங்கள் ஆத்மனுடையதே என்பது உபசரித சத்பூத வியவஹார நயம்.

 

(2) வினைகள் விலகியவுடன் விளங்கும் கேவல ஞானாதி குணங்கள் ஆத்மனுடையதே என்பது, அனுப சரித சத் பூத வியவஹார நயம். (இல்லாதவற்றை உள்ளதாகக் கூறுவது உப சரித சத் பூதம், உள்ளவற்றையே உள்ளதாகக் கூறுவது அனுப சரித சத்பூதம்.  அவற்றுள் சத்ய ஸ்வரூபமாகிய [இயற்கையான] வை சத்பூதம் எனப்படும். அசத்ய ஸ்வரூபமாகிய [செயற்கையான] வை அசத்பூதம் எனப்படும்)

 

(3) நிகழ்காலத்தின் கண்ணும் ஒன்றாகச் சேர்த்துக் கூறவியலாத தேசம், வீடு, திரவியம் முதலானவை என்னுடையது என்பது உபசரித அஸத் பூத வியவஹார நயம் எனப்படும்.

 

(4) நிகழ்காலத்தின் கண்ணும் பிரிக்கவியலாத (பாலும் நீரும் போல் கலந்துள்ள) இவ்வுடல் என்னுடையதே என்றறிவது அனுப சரித அஸத்பூத வியவஹார நயம். இவைகள் அத்யாத்ம பாஷையினால் கூறப்படும். இனி, ஆகம பாஷையினால் நிச்சய வியவஹார நயங்களை திரவ்யார்த்திக, பர்யாயார்த்திக நயங்கள் என்று கூறுவர். அவை; நைகம நயம், ஸங்க்ரஹ நயம், வியவஹார நயம், ருஜு ஸூத்ர நயம், சப்த நயம், சம்பீருட நயம், ஏவம்பூத நயம் என ஏழு பிரிவினதாகும். நைகம, சங்க்ரஹ, வியவஹார நயங்கள் மூன்றும் திரவ்யார்த்திக நயத்தினுடைய அம்சங்கள்; மற்ற நான்கும் பர்யாயார்த்திக நயத்தின் அம்சங்கள். அவற்றுள்ளும் ருஜுஸூத்ரம் அர்த்த நயம். (பொருளை அனுசரித்தவை.) மற்ற மூன்றும் சப்த நயங்கள். அவையாவன,

 

(1) நைகம நயம் :-- நைகமம் என்பது தற்சமயம் நடப்பவற்றை அனுசரித்ததாகும். அது, பூத நைகமம், பாவி நைகமம், வர்த்தமான நைகமம் என மூன்றாக விரியும். அவை வருமாறு:--

 

A. வருடந்தோறும் தீபாவளி தினத்தன்று,  மக்கள் இன்று மகாவீரர் முக்தியடைந்தார் என்று கொண்டாடுவது பூத நைகமம். (முற்காலத்தில் நடந்தவற்றை இன்று நடப்பதாகக் கூறுவது).

 

B. எதிரே வருகின்ற யுவராஜனை நோக்கி, இதோ நமது அரசர் பெருமான் வருகிறார் என்று கூறுவது பாவி நைகமம். (எதிர் காலத்தைக் குறிப்பிட்டுக் கூறுவது.)

 

C.)  சமையல் செய்வதற்கு நீர் கொண்டு செல்லும் ஒருவனை நோக்கி, நீ என்ன செய்கிறாய் என்று கேட்டால், அவன் சமையல் செய்கிறேன் என்று பதிலளிப்பது வர்த்தமான நைகம நயத்தால் பொருந்துவதாகும்.

 

(2) சங்க்ரஹநயம் :-- பலவற்றை ஒருங்கே ஒரு சொல்லால் கூறுவது. அது, ஜாதி, வனம் என்பன போல்வது.

 

(3) வியவஹார நயம்:--  ஒரு பொருளிடமுள்ள குணங்களையும் பர்யாயங்களையும் விவரிப்பது முதலியனவாகும். சமயம் சமயந்தோறும் மாறுவதற்குப்  பரியாயம் எனப்படும்.

 

(4) ருஜுஸூத்ர நயம் :--  சமயம் சமயந்தோறும் மாறும் தன்மைகளில் ஒவ்வொன்றைக் குறிப்பிட்டுக் கூறுவது.

 

(5) சப்த நயம் :-- ஒரு சொல்; பால், திணை, வேற்றுமை முதலானவற்றை அனுசரித்து மாறும் தன்மையைக் கூறுவது.

 

(6) ஸமபீரூட நயம் :--  ஒரு சொல்லுக்குப் பல பொருள் இருந்தும் அவற்றுள் ஒன்றையே முக்கியமாகக் கூறுவது. அதாவது, ' கௌ ' , என்னும் சொல்லுக்கு ஆகாயம், பூமி கிரணம், அம்பு, பசு முதலான பல பொருள் இருந்தும், கௌ - பசு, என்று கூறுவது போல்வது.

 

(7) ஏவம் பூத நயம் :-- என்பது முக்கியமாகக் காரணப் பெயர்களைக் குறிப்பிடுவதாகும். சக்கரன், புரந்தரன் என்பன தேவேந்திரனைக் குறிப்பது போல்வது, மேற்கூறிய இந் நயங்களையும் மற்றும் உள்ளவைகளையும் விவரமாக அறிய விரும்புவோர் நயச்சக்கராதி கிரந்தத்தில் கண்டு கொள்க.

 

இச்சாமி, பந்தே, ஸித்தபத்தி, காஉஸ்ஸக்கோ, கஓதஸ்ஸ, ஆளோசேவும், ஸம்மணாண, ஸம்மதம்ஸண, ஸம்ம சாரித்த ஜுத்தாணம், அட்டவிஹ கம்ம விப்ப முக்காணம், அட்ட குண ஸம்பண்ணாணம், உட்ட ளோய மத்த யம்மி, *பவட்டியாணம், தவ ஸித்தாணம், ணய ஸித்தாணம், ஸஞ்ஜம ஸித்தாணம், சரித்த ஸித்தாணம், பத்தீயே ணிச்ச காளமச்சேமி, பூஜேமி, வந்தாமி, ணமம் ஸாமி, துக்கக்கவோ, கம்மக்கவோ, போஹிளாஹோ, ஸுகயி கமணம், ஸமாஹி மரணம், ஜிந குண ஸம்பத்தி ஹோவு மஜ்சம்.  -  94

 

 

பந்தே ஸித்த பத்தி

காவுஸ்ஸக்கோ

கவோ தஸ்ஸ

ஆலோசேவும்

இச்சாமி ஸம்ம ணாண

ஸம்ம தம்ஸண

ஸம்ம சாரித்த

ஜுத்தாணம்

அட்டவிஹ கம்ம

விப்பமுக்காணம்

அட்ட குண ஸம்பண்ணாணம்

உட்டளோய

மத்தயம்மி பவட்டியாணம்

தவ ஸித்தாணம்

நய ஸித்தாணம்

ஸஞ்ஜம ஸித்தாணம்

சரித்த ஸித்தாணம்

ஸித்தாணம் பத்தீயே

நிச்சகாலம் அச்சேமி

பூஜேமி வந்தாமி

நமம்ஸாமி, மச்சம்

துக்கக் கவோ

கம்மக் கவோ

போஹிளாஹோ

ஸுகயி கமணம்

ஸமாஹி மரணம்

ஜிண குண

ஸம்பத்தி ஹோ உ

 

            முனிபுங்கவரே!  சித்த பக்தியின் காயோத் ஸர்க்கம் என்னால் இப்பொழுது செய்யப்பட்டது; அதனை ஆலோசிப்பதற்கு விரும்புகிறேன். நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் ஆகிய இவற்றோடு சேர்ந்தவர்களும், எண்வகை வினைகளையும் அறவே அகற்றியவரும், எண் குணங்களும் நன்கு விளங்கப் பெற்றவரும், மூவுலகின் உச்சியாகிய (அஷ்டம ப்ரத்வியாகிய) முக்தியில் நிலைத்திருப்பவரும், அன்றியும் (தவம் விரதம் முதலியவற்றுள்ளும் முக்கியமாகக் கருதிப் பார்க்குமிடத்து), தவத்தின் மூலம் முக்தியடைந்தவரும், நயத்தின் மூலம் முக்தியடைந்தவரும், ஸம்யத்தின் மூலம் முக்தியடைந்தவரும், ஒழுக்கத்தின் மூலம் முக்தியடைந்தவரும் ஆகிய சித்த பரமேஷ்டிகளை, அளவுகடந்த பக்தியோடு இடைவிடாமல் எப்பொழுதும் (எண் வகைப் பொருள்களைக் கொண்டு) அர்ச்சிக்கிறேன், பூஜிக்கிறேன், துதிபாடுகிறேன், வணங்குகிறேன்; ஆகவே, எனக்குத் துன்பத்தின் கேடும், வினை வெல்லும் தன்மையும், (கர்ம க்ஷயமும்), நல்லறின் வாய்ப்பும், (ஞான லாபமும்), மேலான கதி அடைதலும், (நற்கதி ப்ராப்தியும்), ஸமதா பாவமான ஸமாதி மரணமும், வினை வென்றவர்கள் அடைந்த  குணச் செல்வம் பெறுதலும் நன்முறையில் ஆகட்டும்.

 

   விப்ப முக்காணம் என்பதில்  வி, யும் ; ப்ர, வும் உபசர்க்காக்ஷரங்கள். வந்தாமி என்பது வணங்குதல், துதித்தல் ஆகிய இருவிதப் பொருளுடையது.  "வதி அபிவாதந ஸ்துத்யோ: " என்பது தாது மாலை. ஹோ உ, பவது, ப்ரார்த்தனையாம் லோட்.

 

அத *ஆஷாட மாஸ சுக்லபக்ஷ ஆஷ்ட்டாஹ்நிக

மாத்யாஹ்நிக தேவதா ஸ்தவநேந ஸஹ ப்ரதம திந நந்தீச்வர மஹா பர்ய க்ரியாயாம் பூர்வாசார்யாநுக்ர மேண ஸகல கர்ம க்ஷயார்த்தம் பாவ பூஜா வந்தநா ஸ்தவ ஸமேதம், ஸ்ரீமத் சைத்ய பக்தி, காயோத் ஸர்க்கம் கரோம்யஹம்.

 

சத்தாரி மங்களம்; அரஹந்தா மங்களம், ஸித்தா மங்களம், ஸுஹூ மங்களம், கேவளி பண்ணத்தோ தம்மோ மங்களம், இத்யாதி போஸராமி தோஸாமி ஹம் ஜிணவரே ஸித்தா ஸித்திம் மம திஸந்து.  - 95

 

 

அதம் அஹம் ஆஷாடமாஸ,

சுக்லபக்ஷ

ஆஷ்டாந்நிக

தேவதா ஸ்தவநேந

ஸஹ ப்ரதம திந

நந்தீச்வர மஹா

பர்வ க்ரியாயாம்

பூர்வ ஆசார்ய

அநுக்ரமேண

ஸகல கர்ம

க்ஷயார்த்தம்

பாவபூஜா வந்தநா

ஸ்தவ ஸமேதம்

ஸ்ரீமத் சைத்ய பக்தி

காயோத் ஸர்க்கம்

கரோமி

சத்தாரி மங்களம்

அரஹந்தா மங்களம்

ஸித்தா மங்களம்

ஸாஹூ மங்களம்

கேவலி பண்ணத்தோ

தம்மோ மங்களம்

 

இத்யாதி........

........போஸராமி

தோஸாமிஹம்

ஜிணவரே.........

ஸித்தா

ஸித்திம்

மம திஸந்து

 

       அதன்பிறகு யான், ஆடிமாதத்து சுக்கில பக்ஷத்து அஷ்டமி முதலாக பௌர்ணமி வரையிலும் (எட்டு நாளைக்கும்) ஏற்று நடத்தும் விரத தினங்களில், மத்தியான காலத்தில் செய்யும் நவ தேவதா ஸ்துதியோடு கூடி, நந்தீச்வர பர்வத்தின் முதல் நாள் காரியத்தில், பூர்வாசாரியர்களால் ஏற்று நடந்த முறைப்படியே (என்னுடைய) எல்லா கர்மங்களும் நாசமாகும் பொருட்டு, பரிணாமத்தினால் செய்யும் பாவ பூஜை, வந்தனை, ஸ்தோத்திரம் முதலியவற்றோடு கூடி, இயற்கை ஜிந ஆலயங்களில் உள்ள இயற்கை பிம்பங்களையும், செயற்கை ஜிந ஆலயங்களிலுள்ள செயற்கை பிம்பங்களையும், (மூர்த்திகளையும்) பக்தி பூர்வகம் துதித்து, அதற்குத் தக்க காயோத் ஸர்க்கத்தை முறைப்படி ஏற்றுச் செய்கின்றேன். இவ்வுலகிலே சிறப்புடைய மங்களங்கள் நான்கு உள ; அவை, அருகத் பட்டாரகரும் மங்களகரமானவர், சித்த பரமேஷ்டிகளும் மங்களகரமானவர், (ஆசார்ய உபாத்தியாய சர்வ சாது ஆகிய) சாதுக்களும் மங்களகரமானவர்,  கேவலஜ்ஞானிகளால் திருமொழியின் மூலம் அருளிச் செய்யப்பட்ட திருவறமும் மங்களகரமானது ;

 

     என்ற இது முதலாகச் சத்தாரி மங்களத்தைக் கூறி வணங்கி, தீமை தரும் எண்ணங்களையும் தீய செயல்களையும் போக்கி, ஜினவரர்களான நிகழ்கால (24) தீர்த்தங்கரர்கள்யும் வணங்குகின்றேன்; இதனால் அவர்களடையும் சித்த கதியை யானும் அடையும் வண்ணம் எனக்கு (அவர்கள்) நன்கு அருள் பாலிக்கட்டும்.

 

(எனவே சத்தாரி மங்களம், தோஸாமி தண்டகம் என்ற இரண்டையும் சுருக்கமாகக் கூறி முடித்துக் கொள்கிறேன் என்பதாம்.)

 

    *குறிப்பு :-- கார்த்திக மாதமாயின், 'கார்த்திக மாஸ' என்றும், பங்குனி மாதமாயின், 'பால்குண மாஸ' என்றும் மாற்றிக்கொண்டு படிக்க. அவ்வாறே, ப்ரதமதின, த்விதிய தின, த்ருதீயதின, சதுர்த்த தின, பஞ்சம தின, ஷஷ்டம தின, சப்தம தின, அஷ்டம தின; என்று எட்டு நாளைக்கும், மறுநாள் காலையில் சம்பூர்ண தினம் எனவும் மாற்றிக் கூறிக் கொள்க.

 

(ஸித்த பக்தி முற்றும்)

 

கௌதமர், கணதரரான  வரலாறு.

 

மகாவீரர், தவமியற்றி, வினைகளை வென்று கேவலஜ்ஞானி யாக விளங்குகிறார். அக்கணமே அதனையுணர்ந்த தேவராசிகள், இந்திரனுடன் அங்கு வந்து சமவ சரண மென்ற கோயிலை (நிருமித்து) அமைக்கின்றனர். அங்குக் கூடியிருந்த பன்னிரு கணங்களும் அறவுரை கேட்க விழைகின்றனர் ; ச்ரோதா (கணதரர்) இல்லாத காரணத்தினால், த்வ்யத்வனி (ஜினவாணி) புறப்படவில்லை; அவ்வமயம் தேவேந்திரன் "கணதரராக வரக்கூடியவர் யார் என்று தன் அவதி ஜ்ஞானமாகிற கண்ணைத் திறந்து நோக்குகின்றான்; அவ்வாறு வரத் தகுதியுடையவர் *கௌதமர் என்ற பிராமணரே என்று காண்கின்றான் ; அவரை இங்கு அழைத்துவரத் தக்க உபாயம் எது? என்று ஆராய்ந்து, தான் சிராவக வேடம் பூண்டு அவரிடம் செல்கின்றான்.

 

        கௌதமர் என்பவர் பிராமணர். சிறந்த அறிஞர் ; ஐந்நூறு மாணவர்களுக்குத் தலைவர். தம்மைக் காட்டிலும் கல்வியில் மிக்கவர் எவருமிலர் என்ற பெருமிதங் கொண்டவர் ; ஆயினும், எவர் எந்தக் கேள்வி கேட்டபோதிலும், அதற்குப் பதிலுரைத்த பிறகே உணவு உட்கொள்வதென்ற நியதியையும் மேற்கொண்டிருந்தார் ; மேற்கூறிய சிராவக வேடம் பூண்ட தேவன், அவரை அணுகி, சுவாமி !  " சித்தார்த்த மஹாராஜனின் புதல்வர் மகாவீர ருக்குக் கேவல ஜ்ஞானம் என்ற, கடையிலா ஞானம் நன்கு விளங்குகிறது ; நீவிர் அங்கு வரவேண்டும் என்று வணங்குகின்றான்.

 

      அதற்குத் கௌதமர்,  "சித்தார்த்தன் புதல்வர் யானறிந்தவரே. அவருக்கு மட்டும் எங்ஙனம் அதிக ஞானம் உண்டாகியிருக்க முடியும்? எனவே யாம் அங்கு வர இயலாது " என்று விடை பகிர்கின்றார். அப்போது தேவன், "அங்ஙனமாயின் , அவர் கூறியதொரு சுலோகத்துக்குப் பொருள் விளங்கும் வண்ணம் உரை பகர வேண்டும்"  கௌதமர் அதற்குச் சம்மதிக்கவே, தேவன் தன் அறிவின் பெருமையால் ;

 

த்ரைகால்யம் த்ரௌவ்ய ஷட்கம் நவபத ஸஹிதம்

      ஜீவஷட்காய லேஸ்யா

பஞ்சாந்யே சாஸ்திகாயா வ்ரத ஸமிதி கதி

     ஜ்ஞான சாரித்ர பேதா :

இத்யேதந் மோக்ஷமூலம் த்ரிபுவந மஹிதை:

     ப்ரோக்த மர்ஹத்பிரீசை:

ப்ரத்யேதி ச்ரத்ததாதி ப்ரதிதிச மதிமாந்

     யஸ்ஸவை: சுத்த த்ருஷ்டி: "  -  95

 

      என்ற ஒரு சுலோகத்தைத் தானே அமைத்துக் கூறுகின்றார்.  பார்த்தார் கௌதமர், வியப்புண்டாகிவிட்டது. என்ன ? த்ரைகால்யம் -- மூன்று காலம் சரி, 'த்ரௌவ்ய ஷட்கம்'  ஆறு திரவியங்களென்பது யாது? நவபத ஸஹிதமா ? இஃதென்ன யாவும் புதிதாக உள்ளனவே ? சரி ! சரி !! புறப்படு, யானும் அங்கு வருகின்றேன், என்று கூறிப் புறப்படுகின்றார். ஐந்நூறு மாணவர்களும் பின் தொடர்கின்றனர். அங்ஙனம் சென்றதும், கௌதமர் சமவசரணத்தில் உள்ள மானஸ்தம்பத்தை நிமிர்ந்து பார்க்கின்றார். அவ்வளவுதான், தன்னுடைய கர்வமெல்லாம் பறந்தோடின. உடனே, பகவந்தனே ! "நீரே எம்மை வெற்றி கொண்டீர்" என்று பொருளடங்கிய , "ஜயதி பகவாந்"  என்று தொடங்கி, சைத்ய பக்தியை இயற்றி வணங்குகின்றார். பின்னர் துறவு பூண்டு கணதரரானார்,  என்று கர்ண பரம்பரைச் செய்தி ஒன்று வழங்கி வருகிறது.

 

    இவ்வரலாற்றையே, ஸ்ரீ புராணம், 505- ஆம் பக்கத்தில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

--------------------------------------------------

   * இவர் இயற்பெயர் இந்திரபூதி. இவர் கௌதம கோத்திரத்துள் தோன்றியவராதலின், இவருக்குக் கௌதமர் என்ற பெயரே வழங்கலாயிற்று.

---------------------------------------------------

 

 

சைத்ய பக்தி

 

வந்தே ஜிநவரம்

 

ஹரிணீச் சந்த :

 

மஹாவீரரை நேரில் கண்டு கௌதம கணதரர் துதித்தல்.

 

ஜயதி பகவாந் ஹேமா அம்போஜ ப்ரசார விஜ்ரும்பிதா

வமர மகுடச் சாயோத்கீர்ண ப்ரபா பரிசும்பிதௌ

கலுஷ ஹ்ருதயா மாநோத்ப்ராந்த: பரஸ்பர வைரிண:

விகத கலுஷா: பாதௌ யஸ்ய ப்ரபத்ய விசச்வஸு:  96

 

 

கலுஷ

ஹ்ருதயா

மாந

உத்ப்ராந்தா:

பரஸ்பர

வைரிண:

ஜீவா:

ஹேம அம்போஜ

ப்ரசார

விஜ்ரும்பிதௌ

அமர மகுடச் சாயா

உத்கீர்ண ப்ரபா

பரிசும்பிதௌ

யஸ்ய பாதௌ

ப்ரபத்ய

விகத கலுஷா:

விசச்வஸு:

ஸ: பகவாந்

ஜயதி தந்

நமாமி

அஹம்

 

         ஆசை, கோபம் முதலானவைகளால், கலங்கிய உள்ளம் உடையனவும் ; (அவற்றுள்ளும்) கர்வத்தால் (மான கஷாயத்தால்), மயங்கிய உள்ளமுடையனவும், ஒன்றுக்கொன்று ஜன்ம வைரம் உள்ளனவும் (அதாவது பிறந்ததிலிருந்தே பகைமை கொண்டிருப்பனவும்) ஆகிய, சிங்கம், யானை, பாம்பு, கீரி முதலிய ஜீவன்கள் ; தேவ நிர்மித (பொன்மய) மான செந்தாமரையின் மேல் (ஸ்ரீ விகாரமாக, வந்து சமவ சரணத்தில்) விளங்குகின்றனவும், தேவர்கள் வணங்குமிடத்து அவர்களுடைய மகுட மணிகளினின்றும் புறப்படுகின்ற காந்திகளினாலும் ஜொலித்துக் கொண்டிருப்பனவுமான, எந்த மகாவீர பகவானின் திருவடிக் கமலங்களை யடைந்து (திருவறத்தை மேற்கொண்டு), தன் உள்ளத்தின் கலகத்தை ( பகைமையை) விட்டு, அத்தகைய ஜிந பகவான் (வர்த்தமானர்), சர்வ உத்கிருஷ்டமாக விளங்குகிறார். ஆதலின், அவரை யானும் வணங்குகின்றேன்.

 

   எந்த மகாவீரரைக் கண்டு, ஜன்ம வைரமுள்ள விலங்கினங்களும் தத்தம் பகைமையினை நீங்கி அன்பு கொண்டனவோ, அத்தகைய மகாவீரரை யானும் வணங்குகிறேன் என்று துதி பாடுகின்றனர் கௌதம கணதரர்.

 

ததநு ஜயதி ச்ரேயாந் தர்ம: ப்ரவ்ருத்த மஹோதய :

குகதி விபத க்லேசாத் யோஸௌ விபாசயதி ப்ரஜா:

பரிணத நயஸ்யாங்கீ பாவாத் விவிக்த விகல்ப்பிதம்

பவது பவதஸ்த்ராத்ரு த்ரேதா ஜிநேந்த்ர வசோம்ருதம்.  -

 

ததநு ய:

ப்ரஜா :

குகதி விபத

க்லேசாத்

விபாசயதி

ஸ : அஸௌ

ச்ரேயாந் தர்ம:

ப்ரவ்ருத்த

மஹோதயஸ் ஸந்

ஜயதி ச

பரிணத நயஸ்ய

அங்கீ பாவாத்

விவிக்த

விகல்ப்பிதம்

த்ரேதா

ஜிநேந்த்ர

வசஸ் அம்ருதம்

பவத :

ப்ரஜா :

த்ராத்ரு

பவது

தம் தத் ச

அஹம் வந்தே

 

        இவ்வாறு, ஜினனை வணங்கிய பிறகு யாதொரு தர்மம்; பவ்விய ஜீவன்களை நரகம் முதலிய தீய கதிகளில் (செல்லுகின்ற தீய வழியில்) ஏற்படும், துன்பத்தினின்றும் விடுவிக்கின்றதோ (தீக்கதிச் செலவினைத் தடுக்கின்றதோ), அத்தகைய சிறந்த ஜிந தர்மம், சிறப்புற்றோங்கியதாகி, உலகிலுள்ள தருமம் அனைத்திற்கும், மேன்மையுடன் வெற்றி பெற்று விளங்குகிறது ; மேலும் அது, பரிபக்குவமான அறிஞர்களால் முடிவு காணப்பட்டு, இயற்கை செயற்கையாகிய நிச்சய வியவஹார நயம்; அல்லது, திரவியார்த்திக பர்யாயார்த்திக நயம் ஆகியவற்றை, ஆதாரமாக (க் கொண்ட சப்த பங்கி நயத்தை) அங்கீகரித்திருப்பதும், 12 அங்கம், 14 பூர்வம், 16 ப்ரகீர்ணகம் என்ற மூன்று பிரிவாகக் கணதரரால் விரித்துரைத்தனவும், ஜிந பகவான் வசனத்தினின்றும் புறப்பட்டதும் ஆகிய, தர்மாம்ருதம், பிறவிச் சுழற்சியினின்றும் மக்களை (க் கெடாதவாறு), பாதுகாப்பதாக ஆகட்டும், அந்த தர்மத்தையும், தர்மாம்ருதத்தையும் யான் துதித்து வணங்குகின்றேன்.

 

 

ததநு ஜயதாஜ் ஜைநீ வித்தி: ப்ரபங்க தரங்கிணீ

ப்ரபவ விகமத்ரௌவ்ய த்ரவ்ய ஸ்வபாவ விபாவிநீ

நிருபம ஸுகஸ்யேதம் த்வாரம் விகட்ய நிரர்களம்

விகத ரஜஸம் மோக்ஷம் தேயாந் நிரத்யய மவ்யயம்.  -  98

 

 

ததநு

ப்ரபங்க

தரங்கிணீ

ப்ரபவ

விகம

த்ரௌவ்ய

த்ரவ்ய

ஸ்வபாவ

விபாவிநீ

ஜைநீ வித்தி:

ஜயதாத்

இதம்

விகத ரஜஸம்

நிரத்யயம்

அவ்யயம்

மோக்ஷம்

நிருபம

ஸுகஸ்ய

த்வாரம்

நிரர்க்களம்

விகட்ய தேயாத்

 

      அதன்பிறகு, ஒன்றின்மேல் ஒன்றாகத் தொடர்ந்து வருகின்ற நதியின் அலைகளைப் போல, ஸ்யாத் அஸ்தி, ஸ்யாத் நாஸ்தி முதலாகிய ஏழுவகைப் பிரிவுடைய, சப்த பங்கி நியாயத்தை உட்கொண்டிருப்பதும் ; (உத்பாத வியய த்ரௌவ்ய மென்கிற) தோன்றுதல், மாய்தல், (இவ்விரண்டிற்கும் ஆதாரமாகி) நிற்றல் ஆகிய மூன்று தன்மைகளும், இயல்பாகவே பொருந்தியுள்ள, திரவிய ஸ்வபாவங்களை உட்கொண்டிருப்பதும்; வினையின் நீங்கிய, ஜிந பகவானிடம் விளங்கியதுமாகிய கேவலஜ்ஞானம் ஜயிக்கட்டும். இத்தகைய கேவலஞானம் ; எவ்விதக் குற்றமும் இல்லாததும் (வினைகளிலகன்றதும்),  எவ்வித மாறுதலும் அடையாத நிர்விகாரமானதும், கேடில்லாததுமாகிய முக்தியின்பத்தை ; இணையிலா இன்பகாரணமான முக்தி நகருக்குச் செல்லும் வாயிலை, வினைகளாகிற தாளை நீக்கிக் கதவைத் திறந்து நாம் பெறும் வண்ணம், நமக்கு அளிக்கட்டும்.

 

  அத்யயம் - அதிக்ரமம், மீறியது என்ற பொருளில் நின்றது. "அத்யயோதிக்ரமே க்ருச்ரே, தோஷே தண்டேபி" என்பது அமரம். (க்ருச்ரம் - துன்பம்) இனி ஜனன மரணமில்லாதது எனலுமாம், விகத ரஜஸம் என்பது, வினைகளின் நீங்கியது என்று கூறவும் அமையும். கேவலஞானம் நதியின் அலையை உடையதாகக் கூறியது மேலே 23, 29 - ஆம் ஸ்லோகங்களால் அறியலாகும். சப்த பங்கியின் விவரம் முன் (முன்  முகஸ்துதி அத்தியாயத்தில்) கூறப்பட்டுள்ளது.

 

பஞ்ச பரமேஷ்டிகளின் வந்தனை

அர்ஹத் ஸித்தா சார்யோ பாத்யா யேப்ய:

    ததாச ஸாதுப்ய :

ஸர்வ ஜகத் வந்த்யேப்யோ

    நமோஸ்து ஸர்வத்ர ஸர்வேப்ய:  -  99

 

 

    ஸர்வத்ர ஸர்வஜகத் எவ்விடத்திலேயும், மக்கள் யாவராலும், வந்த்யேப்ய : அர்ஹத் வணங்கப்படுகின்ற அருகர், சித்தர், ஸித்தாசார்ய உபா - ஆசாரியர், உபாத்தியாயர், (அவ்வாறே) த்யாயேப்ய: ததாச  ஸர்வஸாது ஆகிய பஞ்ச பரமேஷ்டிகள் ஸாதுப்ய: ஸர்வேப்ய: அனைவருக்கும் என் வணக்கம் (நமஸ்காரம்) மே நம: அஸ்து    ஆகட்டும்.

 

24. தீர்த்தங்கரர் துதி.

 

மோஹாதி ஸர்வ தோஷா அரி

     காத கேப்ய: ஸதா ஹதரஜோப்ய:

விரஹித ரஹஸ்க்ருதேப்யோ

      பூஜார்ஹேப்யோ நமோர்ஹத்ப்ய:  -  100

 

 

மோஹ ஆதி

ஸர்வ தோஷ அரி

காத கேப்ய:

ஹத ரஜோப்ய:

விரஹித

ரஹஸ் க்ருப்தேப்ய:

பூஜா அர்ஹேப்ய:

அர்ஹத்ப்ய:

நம:

ஸதா அஸ்து

 

         குற்றங்களனைத்துக்கும் மூல காரணமாக விளங்கும் முதல்வனான (தலைவனான), மோகனீயம் என்கிற பகையரசனை அழித்தவரும், ஞானாவரணீயம் தரிசனாவரணீயம் இரண்டையும் நாசம் செய்தவரும், அந்தராய கருமத்தையும் வென்று அழித்தவரும், தேவர் முதலானவர்களினால் செய்யும் பூஜைக்கு அர்ஹதை (யோக்கியம்) உள்ளவரும் ஆகிய ஆதிபகவன் (விருஷபர்) முதல் மகாவீரர் வரையிலுமுள்ள  தீர்த்தங்கர பரம தேவர்களுக்கு, என் நமஸ்காரம் எப்பொழுதும் ஆகட்டும்.

 

     இனி, அர்ஹத்ப்ய: என்பதற்கு மீண்டும் அருகத் பரமேஷ்டியையே ஸ்துதித்தார் என்று கூறவும் அமையும்.

 

 

க்ஷாந்த்யார்ஜ்ஜவா தி குணகண ஸுஸாதநம்

     ஸகல லோக ஹித ஹேதும்

சுபதாமநி தாதாரம்

     வந்தே தர்மம் ஜிநேந்த்ரோக்தம்.  - 101

 

 

க்ஷாந்தி ஆர்ஜ்ஜவ

ஆதி குண கண ஸு

ஸாதநம் ஸகல

லோக ஹித ஹேதும்

ஸுப தாமநி

தாதாரம் ஜிந இந்த்ர

உக்தம் தர்மம்

வந்தே

 

           உத்தம க்ஷமை, உத்தம ஆர்ஜ்ஜவம் முதலாகிய குண சமூகங்களை நன்னெறியில் சாதிப்பதும், சகல பிராணிகளுக்கும் நன்மையை அளிக்கத்தக்க காரணமானதும், மங்களகரமான முக்தியில் பவ்வியர்களை அடையச் செய்து நிலை நிறுத்துவதும், ஜிந பகவான் கூறியருளியதுமான உத்தமமான ஜிந்தருமத்தைத் துதித்து வணங்குகிறேன்.

 

                 ப்ரியமானதும், ஹிதமானதும் சேர்ந்ததே நன்மை என்க. பாலே மருந்தாயின் நலமானது போல என்க.

 

ஜிந ச்ருத வந்தனை.

 

மித்யா ஜ்ஞாந தமோவ்ருத

     லோகைக ஜ்யோதிரமித கம யோகி

ஸாங்கோ பாங்கமஜேயம்

     ஜைநம் வசநம் ஸதா வந்தே.  - 102

 

 

மித்யா ஜ்ஞாந

தமஸ் வ்ருத

லோக ஏசு

ஜோதி:

அமித

கமயோகி

ஸ அங்க

உபாங்கம்

அஜேயம்

ஜைநம்

வசநம்

ஸதா வந்தே

 

       மித்தயா ஞானமென்னும் இருளினால் (அந்தகாரத்தால்), சூழப்பட்டிருக்கிற மக்களுக்கு (அவ்விருள் நீங்கி ஞானம் பெறுவதற்குரிய) ஒப்பற்ற ஜோதியுடன் விளங்குவதும், கடையிலா ஞானமான கேவல ஞான ஸம்பந்தமானதும், பன்னிருவகை அங்கம், பதினான்கு வகை உபாங்கம் (பூர்வம்), பதினாறு வகை ப்ரகீர்ணகம் ஆகியவற்றோடு கூடி விசாலமாயுள்ளதும், ஏனைய பர வாதிகளால் வெல்ல இயலாத தன்மையுடையதுமான, பகவான் கூறியருளிய அர்த்தமாகதி பாஷையை (ஜிநவாணியை), எப்பொழுதும் துதித்து வணங்குகின்றேன்.

 

     "ஏகே" என்பது; முக்கியம், அந்யம், கேவலம் என்ற மூன்று பொருளுடையது. "ஏகே முக்யாந்ய கேவலா:" அமரம்.  கதி: கமநம், கதம், கம: என்ற இந்நான்கும் ஒரு பொருளின் அர்த்தத்தையே உடையதாகும். "கத்யர்த்தகா நாம் ஞானார்த்த கத்வம் " கதியென்ற அர்த்தத்துக்கெல்லாம் ஞானம் என்று பெயர். கரணம் சாதக தமம், என்று கூறுவதறிக. 'ஸஹ' என்பதற்கு ஸமாசத்தில், ஸ, என்று நிற்கும். "ஸஹஸ்ய ஸ: " என்ப.

 

    ஜிந சைத்ய வந்தனை.

 

பவந விமாந ஜ்யோதிர் வ்யந்தர

    நரலோக விச்வ சைத்யாநி

த்ரிஜகதபி வந்திதாநாம்

    த்ரேதா வந்தே ஜிநேந்த்ராணாம். - 103

 

 

ஸ்த்ரிஜகத் அபி

வந்திதாநாம்

ஜிநேந்த்ராணாம்

பவந

விமாந, ஜோதி:

வ்யந்தர

நரலோக

விச்வ சைத்யாநி

த்ரேதா

வந்தே

 

          மூவுலகோரால் துதித்து வணங்கப்பட்ட ஜிநேச்வரர்களின் சம்பந்தமானதும், பவணர் உலகம், தேவருலகம், ஜோதிர்லோகம், வியந்தர லோகம், மனுஷ்ய லோகம் ஆகிய உலகங்க(ளில் விளங்கும் விமானங்களின் இயற்கை ஜிந ஆலயங்க)ளில் உள்ளனவுமான பிரதி பிம்பங்கள் அனைத்தையும் (மனம், வாக்கு, காயம் ஆகிய) திரிகரண சுத்தியுடன் துதித்து வணங்குகின்றேன்.

 

   ' லோக ' என்பதனை, ஒவ்வொன்றினுக்கும் கூறிக் கொள்க.  விமாநம்- தேவருலகம்; வைமானிகர் என்பர் வாமன முனிவர்.

ஜிந சைத்யாலய வந்தனை

 

புவந த்ரயேபி புவந

     த்ரயாதிபாப்யர்ச்ய தீர்த்த கர்த்ரூணாம்

வந்தே பவாக்நி சாந்த்யை

   விபவாநாம் ஆலயாலீஸ்தா:  - 104

 

 

விபவாநாம்

புவந்த்ரய

அதிப அப்யர்ச்ய

தீர்த்த

கர்த்ரூணாம்

புவந த்ரயேபி

தா : ஆலய அலீ :

மே பவ அக்நி

சாந்த்யை வந்தே

 

          பிறவிச் சுழற்சியில் அகன்றவரும் ; மூவுலகிலுள்ள இந்திரர்களான நூற்றுவர் இந்திரர்களால், அருச்சித்து வணங்கப்பட்டவரும் ; தரும தீர்த்த கர்த்தாக்களுமான, பகவந்தர் களின் பிரசித்தி பெற்ற, மூவுலகங்களிலும் அமைந்துள்ள இயற்கையான ஜிநாலய ங்களின் வரிசை (எண்ணிக்கை) களை, என்னுடைய பிறவியாகிற நெருப்பின் தாபத்தைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு, துதித்து வணங்குகிறேன்.

 

      "விபூதீர் பூதிரைச்வர்யம்" அமரம். விகத: பவ: ஏஷாம்தே விபவா: " வீச்யாளி ராவளி பங்க்தி : ச்ரேணி ரேகாஸ்து ராஜய:" வீசீ, ஆளி:, ஆவளி: பங்க்தி: ச்ரேணி ஆகிய இவைகள், வரிசையின் பெயர். ஆளி: என்பது விபக்தியில் அலீ: என்றாயிற்று. பவமாகிற அக்னி அவிய, தீர்த்தம் கூறினார். தீர்த்தம் என்பதனை 23 - 29 ஆம் சுலோகங்களின் உரையில் கண்டுகொள்க.

 

நவ தேவதா வந்தனை.

 

இதி பஞ்ச மஹா புருஷா:

    ப்ரணுதா: ஜிநதர்ம வசந சைத்யாநி

சைத்யாலயாச்ச விமலாம்

      திசந்து போதிம் புத ஜநேஷ்ட்டாம்  - 105

 

 

இதி ப்ருணுதா:

பஞ்சமஹா புருஷா:

ப்ருணுதா:

ஜிந, தர்ம,

வசந, சைத்யாநி,

சைத்யாலயா: ச

மஹ்யம் விமலாம்

புதஜந

இஷ்ட்டாம் போதும்

திசந்து

 

       மேலே கூறியவாறு, நம்மால் துதிக்கப்பட்ட மகான்களாகிய பஞ்ச பரமேஷ்டிகளும்; நம்மால் துதி செய்யப்பட்ட ஜிந தருமம், ஜிந ச்ருதம், ஜிந சைத்யம், ஜிந சைத்யாலயம் என்ற (நான்கும் சேர்ந்த) நவதேவதா ஒன்பதும், நம் உள்ளத்துக்குத் தெளிவைத் தரும் நிர்மலமானதும், கணதரர் முதலான பவ்வியர்கள் விரும்பக் கூடியதுமான கேவல ஞான லாபத்தை, நமக்கு அருள் செய்யட்டும்.

 

இயற்கையும் செயற்கையுமான மூர்த்திகள் வந்தனை.

 

அக்ருதாநி க்ருதாநி சாப்ரமேய

      த்யுதிமந்தி த்யுதிமத்ஸு மந்திரேஷு

மநுஜாமர பூஜிதாநி வந்தே

     ப்ரதி பிம்பாநி ஜகத் த்ரயே ஜிநாநாம்.  - 106

 

 

ஜகத்ரயே

த்யுதி மத்ஸு

மந்திரேஷு

அப்ரமேய

த்யுதிமந்தி, மநுஜ

அமர பூஜிதாநி

அக்ருதாநி ச

க்ருதாநி

ஜிநாநாம்

ப்ரதி பிம்பாநி

வந்தே

 

         இம் மூவுலகங்களிலுமுள்ள விமானங்கள், மலைகள் ஆகியவற்றில் விளங்குவனவும், நவமணிகளின் ஜோதியும் ஒளியிடுகின்ற ஜிநாலயங்களின் மையத்தேயுள்ள, கந்தகுடியின் நடுவில் விளங்குவனவும், அளவில்லாத காந்தியுடன் விளங்குகின்றனவும், மாந்தரும், தேவரும் பூஜிக்கப்பட்டனவும், யாவராலும் இயற்றப்படாத இயற்கையாயுள்ளனவும், மக்களால் இயற்றப்பட்டனவுமான, ஜிந பகவானின் பிரதி பிம்பங்களை (படிமைகளை)த் துதித்து வணங்குகின்றேன்.

 

*த்யுதி மண்டல பாஸுராங்க யஷ்ட்டீர்

    புவநேஷு த்ரிஷு ப்ரவ்ருத்தா:

வபுஷா ப்ரதிமா ஜிநோத்தமாநாம்

      ப்ரதிமா: ப்ராஞ்ஜலிரஸ்மி வந்தமாந: - 107

 

 

த்ரிஷு புவநேஷு

பூதயே ப்ரவ்ருத்தா:

வபுஷா அப்ரதிமா:

த்யுதி மண்டல

பாஸுரே

அங்க யஷ்டீ:

ஜிநோத்தமாநாம்

ப்ரதிமா: அஹம்

ப்ராஞ்ஜலி:

வந்தமாந: அஸ்மி

 

        மூவுலகங்களிலும் உள்ள பவ்வியர்களின் க்ஷேமத்திற்காக, நன்கு விளங்குகின்றனவும், கண்களைக் கவரத்தக்க உருவத்தினால் இணையற்றனவும், பிரபா மண்டலத்தின் காந்திகளினால், கோல்கள் நாட்டி வைத்தன போன்று சூழ்ந்திருக்கின்ற அங்க அழகு உடையனவுமான, ஜிநேந்திரர்களின் படிமைகளை, யான்; தாமரை மொக்குப்போல, என் இரு கைகளையும் குவித்துத் தோத்திரம் செய்து வணங்குகின்றேன்.

 

   யஷ்டீ: என்பது கோல், அல்லது தண்டம் என்று பெயர். ப்ரஸ்ருதி - உள்ளங்கை. அவை இரண்டு கூடுவது ப்ராஞ்சலி:  "பாணி: நிகுப்ஜ: ப்ரஸ்ருதி: தௌ யுதௌ அஞ்சலி: புமாந்" அமரம்.

 

 

விகதாயுத விக்ரியா விபூஷா:

    ப்ரக்ருதிஸ்தா: க்ருதிநாம் ஜிநேச்வராணாம்

ப்ரதிமா: ப்ரதிமா க்ருஹேஷு காந்த்யா ப்ரதிமா:

     கல்மஷ சாந்தயேபி வந்தே.  - 108

 

 

ப்ரதிமா க்ருஹேஷு

ஸ்திதா: விகத ஆயுத

விக்ரியா விபூஷா:

ப்ரக்ருதிஸ்தா

காந்த்யா

அப்ரதிமா:

க்ருதிநாம்

ஜிநேச்வராணாம்

ப்ரதிமா:

அஹம் மே

கல்மஷ சாந்தயே

அபி வந்தே

 

        ஜிந பிம்பங்கள் பொருந்திய, ஜிநாலயங்களிலுள்ளனவும், கண்டவர் அஞ்சும் வண்ணம் ஆயுதங்களை ஏந்தி, விகார உருவங்களை அடையாதனவும், ஆடை ஆபரணங்கள் அணியாத அழகுடையனவும், பிறந்தபோது உண்டான (பற்றற்ற) இயற்கை உருவமே அமைந்தனவும், ஒளியினால் வேறொன்றையும் உவமை கூறுவதற்கில்லாதனவும், தீர்த்தங்கர நாம மஹா புண்ணிய ஸ்வரூபமாயினவும், ஆகிய ஜிநேச்வரர்களுடைய பிரதிமை (படிமை)களை, யான் என்னுடைய தீவினைகளின் நாசத்தின் பொருட்டு எப்பொழுதும் துதித்து வணங்குகின்றேன்.

 

    இனி, க்ருதிநாம் என்பதற்கு க்ருத க்ருத்யன், இனிச் செய்யவேண்டியது ஒன்றும் இல்லாதவன் எனினுமாம். சமம், சாந்தி, சமனம், சாந்தம் இந்நான்கும் ஒரு பொருளன.

 

கதயந்தி கஷாய முக்தி லக்ஷ்மீம்

     பரயா சாந்ததயா பவாந்தகாநாம்

ப்ரணமாமி விசுத்தயே ஜிநாநாம்

     ப்ரதி ரூபாண்யபிருப  மூர்த்திமந்தி. - 109

 

 

பரயா சாந்த தயா

கஷாய முக்தி

லக்ஷ்மீம்

கதயந்தி

அபிரூப மூர்த்திமந்தி

பவ அந்தகாநாம்

ஜிநாநாம்

ப்ரதிரூபாணி

மே விசுத்தயே

ப்ரணமாமி

 

     சிறந்த சாந்த ஸ்வரூபமாகக் காண்பதனால், கோபம் முதலான கஷாயத்தின் விடுதலையால் ஆகிய காந்தியை க் குறிப்பிட்டு காட்டுகின்றனவும் (தெரிவிக்கின்றனவும்); மிகவும் அழகிய வடிவம் உள்ளனவும்; மற்றும் பிறவிப் பிணியை அடியோடு ஒழித்த காரணத்தால் அமைந்தனவுமாகிய ஜிநேந்திரர்களுடைய ப்ரதிமைகளை, யான் என்னுடைய அந்தரங்க சுத்திக்காக (கர்மமலத்தைப் போக்கிக் கொள்வதற்காக)த் துதித்து வணங்குகின்றேன்.

 

     சாந்தியுள்ளது சாந்தம், சாந்தத்தின் தன்மை சாந்ததா ; என்பது. அதுவே, சாந்தி என்றாயிற்று. லக்ஷ்மீ - காந்தி. புன் சிரிப்போடு கூடிய சாந்த உருவத்தை ; அவ்வுருவமே, கோப தாபம் முதலியன இல்லாத தன்மையைச் சூசிக்கின்ற (து தெரிவிக்கின்ற) தென்றனர். பவத்துக்கு முடிவு காண்பவன், அந்தகன் - யமன். அந்தரங்கம் - உள்ளம்.

 

யதிதம் மம ஸித்த பக்தி நீதம்

   ஸுக்ருதம் துஷ்க்ருத வர்த்ம ரோதி தேந

படுநா ஜிநதர்ம ஏவ பக்திர் பவதாத்

    ஜந்மநி ஜந்மநி ஸ்திரா மே.  - 110

 

 

மம ஸித்த பக்தி நீதம்

துஷ்க்ருத கர்ம

வர்த்ம ரோதி

இதம் ஸுக்ருதம் யத்

படுநா தேந

மே ஜந்மநி ஜந்மநி

ஜிந தர்மே ஏவ

பக்தி: ஸ்திரா

பவதாத்

 

         எனக்கு ஏற்பட்ட (ப்ரஸித்தமான) படிமைகளின் பக்தி காரணத்தால் உண்டானதும், தீவினைகள் வரும் வழியைத் தடுப்பதுவுமான, இந்த(த் தர்மானுபந்தி)ப் புண்ணியம் என்பது எதுவோ, முக்தியைச் சாதிக்கும் சாமர்த்தியமுள்ள அதனால், எனக்குப் பிறவிதோறும் (ஒவ்வொரு பிறவியிலும்) ஜிந தர்மத்திலேயே, (சிரத்தா) பக்தி, என்றென்றும் நிலையாக ஆகட்டும்.

 

      ஸித்தம், சித்தமானது; சாதிக்கப்பெற்றது. (சாதனையின் பலன்). வர்த்ம - வழி. தர்ம, என்பது பதம் பிரியும்போது, தர்மே என்று வருதல் மரபு. (சிரத்தை - நம்பிக்கை)

 

அர்ஹதாம் ஸர்வ பாவாநாம் தர்சந ஜ்ஞான ஸம்பதா

கீர்த்த யிஷ்யாமி சைத்யாநி யதா புத்தி விசுத்தயே.  - 111

 

 

தர்சந ஞாந ஸம்பதா

ஸர்வ பாவாநாம்

அர்ஹதாம்

சைத்யாநி

விசுத்தயே

யதா புத்தி

கீர்த்தயிஷ்யாமி

 

      கேவல ஞான தரிசன, செல்வத்தால் சகல பதார்த்தங்களையும் (நன்றாகக் காண்பதும், அறிவதுமாகிய தன்மையை) உட்கொண்டிருக்கும் ப்ரபுவான, அருகத் பரமேஷ்டியின் பிரதி பிம்பங்களை ; என் தீவினை விலகும் பொருட்டு; யான், என் அறிவுக்குத் தகுந்தவாறு (எட்டியவாறு), துதித்து வணங்குகின்றேன்.

 

      ஸர்வ பாவம் என்பது, மூவுலகங்களில் உள்ளவற்றையும் அலோகத்தையும் குறிப்பிடுவதாகும். தீவினை விலகிய பிறகே சுத்தம் ஏற்படும்  என்றுணர்க.

 

ஸ்ரீமத் பவந வாஸஸ்தா: ஸ்வயம் பாஸுர மூர்த்தய:

வந்திதா நோ விதேயாஸு: ப்ரதிமாம் கதிம். - 112

 

 

ஸ்வயம் பாஸுர

மூர்த்தய:

வந்திதா: ஸ்ரீமத்

பவந வாஸஸ்தா:

ப்ரதிமா: ந:

பரமாம் கதிம்

விதேயாஸு:

 

       இயற்கையாகவே ஒளி தங்கிய மூர்த்திகளை (ஆகாரங்களை) யுடையனவும், பவ்வியர்களால் வந்தனை செய்து வணங்கப்படுகின்றனவுமான காந்திமிக்க, பவணவாசி தேவர்களின் விமானங்களில் அமைந்திருக்கிற ஜிந பிம்பங்கள், வணங்கும் நமக்கு உத்தம கதியை (முக்தியை) அளிக்கட்டும்.

 

 

 

யாவந்தி ஸந்தி லோகேஸ்மிந் அக்ருதாநி க்ருதாநிச

தாநி ஸ்வாணி சைத்யாநி வந்தே பூயாம்ஸி பூதயே. - 113

 

 

அஸ்மிந் லோக

அக்ருதாநி க்ருதாநிச

பூயாம்ஸி சைத்யாநி

யாவந்தி ஸந்தி

தாநி ஸர்வாணி

பூதயே வந்தே

 

        இம் மானிடர் உலகத்தில், இயற்கையும், செயற்கையுமாயுள்ள பலவிதமான ஜிந பிம்பங்கள் எவ்வளவு உண்டோ, அவைகள் எல்லாவற்றையும், யான்  முக்திச் செல்வம் அடையும் பொருட்டுத் துதித்து வணங்குகின்றேன்.

 

வியந்தர உலக விமானங்களிலுள்ள ஆலயங்களைத் துதிக்கின்றார்.

 

 

 

யே வ்யந்தர விமாநேஷு ஸ்தேயாம் ஸ: ப்ரதிமா க்ருஹா:

தேச ஸங்க்யாமதிக்ராந்தாஸ் ஸந்துநோ தோஷ சாந்தயே. - 114

 

 

வ்யந்தர விமாநேஷு

ஸ்தேயாம்ஸ:

ப்ரதிமா க்ருஹா:

யே ஸங்க்யாம்

அதிக்ராந்தா:

தேச ந: தோஷ

சாந்தயே ஸந்து

 

         வியந்தர விமானங்களில் இயற்கை பிம்பங்களுடன் விளங்குகின்ற இயற்கை ஜிநாலயங்கள் எவைகள் உண்டோ, எண்ணிக்கையில்லாத (முடிவற்ற) அவைகள் முழுவதும், நம்முடைய தீவினைகளின் நாசத்தின் பொருட்டு (நம் வணக்கத்தை ஏற்பதாக) இருக்கட்டும். (எனவே, வணங்குவோமாக.)

 

 

ஜ்யோதிஷாமத லோகஸ்ய பூதயேத்புத ஸம்பத:

க்ருஹா: ஸ்வயம்புவஸ் ஸந்தி விமாநேஷு நமாமி தாந். - 115

 

 

அத ஜோதிஷாம்

லோகஸ்ய

விமாநேஷு

ஸ்வயம் புவ:

அத்புத ஸம்பத:

யே க்ருஹா:

ஸந்தி தாந் மம

பூதயே நமாமி

 

          மங்களகரமான ஜோதிஷ்க தேவர்களுடைய உலகமான, சந்திர, சூரியராதிகளின் விமானங்களில் இயற்கையாய் உள்ளனவும், வியக்கத்தக்க விபூதிகளை யுடையனவுமான எந்த ஜிநாலயங்கள், எண்ணற்றனவாக இருக்கின்றனவோ, அவைகளை; என்னுடைய அறிவுச் செல்வத்தை அடையும் பொருட்டு வணங்குகின்றேன்.

 

ஸ்வயம், இயற்கை. அத என்பதற்கு, பிறகு எனினுமாம்.

 

வந்தே ஸுராஸ்திரீடாக்ர மணிச் சாயாபிஷேகம்

யா: க்ரமைரேவ ஸேவந்தே ததர்ச்சா: ஸித்தி லப்தயே.  - 116

 

 

ஸுரா: திரீட-

அக்ர மணி

சாயா

அபிஷேசநம் யதா

ததா க்ரமை: ஏவ

ஸேவந்தே யா:

தத் அர்ச்சா:

அஹம் அபி ஸித்தி-

லப்தயே வந்தே

 

     (கற்ப உலகம், அகமிந்திர உலகம் ஆகிய) தேவருலக தேவர்கள், தங்கள் கிரீடத்தின் உச்சியில் உள்ள முடிமணியின் காந்தியினால், அபிஷேகம் செய்வதைப் போல(த் தம் சிரம் தாழ்ந்து), முறைப்படியே வணங்கி எந்த பிம்பங்களைச் சேவிக்கின்றார்களோ, அந்தப் பிம்பங்களை; யானும், முக்தியை அடையும் பொருட்டுத் துதித்து வணங்குகின்றேன்.

 

   "த்ரீடாநி - த்ரிசிகா முகுடாநி" என்று ப்ரபா சந்த்ர ஆசாரியர் உரை கூறியதனால், திரீட மெ என்பதற்கு, " மூன்று சிகையுள்ள மகுடம்" என்று கூறினும் அமையும்.

 

இதி ஸ்துதி பதாதீத ஸ்ரீ ப்ருதாமர்ஹதாம் மம

சைத்யாநாமஸ்து ஸம்கீர்த்தி: ஸர்வாஸ்ரவ நிரோதிநீ. -  117

 

 

ஸ்துதி பத

அதீத ஸ்ரீப்ருதாம்

அர்ஹதாம்

சைத்யாநாம்

இதி ஸம்கீர்த்தி:

மம ஸர்வ

ஆஸ்ரவ நிரோதிநீ

அஸ்து

 

          துதிக்கும் முறையைக் கடந்திருக்கிற (எனவே) எண்ணற்ற அந்தரங்க, பஹிரங்க ஐஸ்வர்யமுள்ள, அருகத் பரமேஷ்டியின் பிரதிமைகளுக்குச் சம்பந்தப்பட்ட, மேலே கூறிய இந்த ஸ்தோத்திரமானது, எனக்குப் பத்து விதமான ஊற்றுகள் (ஆச்ரவங்கள்) அனைத்தையும் தடுப்பதான, திரவிய பாவ சம்வரையாகட்டும்.

 

ஊற்று பத்துவிதம் என்பதனை,

 

" ஈனமே யதிக மீரா பதகமே சாம்ப ராயம்

ஞானமே ஞான மின்மை நல்லவாம் புண்ய பாவந்

தேனுலா மலங்கல் வேந்தே தவியமே பாவ மென்று

தானெலா வுயிர்க்கு மாகு மூற்றிவை தாம்பத் தாகும்."

 

என்ற (மேருமந்தர புராணம் 98 - ஆம்) கவியின் உரையில் கண்டு கொள்க.

 

[ அந்த ஊற்றானது  ஈனம், அதிகம், ஈர்யாபதம், சாம்பராயம், ஞானம், ஞானமின்மை, நல்ல புண்ணியம், பாபம், திரவியம், சிந்தனை என்னும் பத்து வகையும் மாற்றுயிர்களை அடையக் கூடியதாம்.]

 

அர்ஹந் மஹா நத வர்ணநம் (ஸ்கந்தச்சந்தே:) (எட்டுகண முடையது)

 

அர்ஹந் மஹா நதஸ்ய த்ரிபுவந

   பவ்ய ஜந தீர்த்த யாத்ரிக துரிதம்

ப்ரக்ஷாளநைக காரண மதி லௌகிக

   குஹக தீர்த்த முத்தம தீர்த்தம்.  - 118

 

த்ரிபுவந பவ்யஜந

தீர்த்த யாத்ரிக

துரிதம் ப்ரக்ஷாளந

ஏக காரணம்

அதி லௌகிக குகக

தீர்த்தம் அர்ஹந்

மஹா நதஸ்ய

உத்தம தீர்த்தம்

 

               மூவுலகிலுமுள்ள பவ்விய ஜனங்களாகிற தீர்த்த யாத்திரிகர்களுடைய, ஆத்மனிடம் பற்றியுள்ள தீவினைகளாகிற அழுக்கைப் போக்குவதற்கு (அலம்புவதற்கு), முதல் தரமான (முக்கியமா)னதும், உலகத்தே பரவி வருகின்ற, போலி தீர்த்தங்களின் சக்தியை மீறி இருக்கின்றதுவுமான அருகத் பரமேஷ்டியாகிற மகா நதியின் உத்தம தீர்த்தம் :-

 

லோகா லோக ஸுதத்வ

   ப்ரத்யவபோதந ஸமர்த்த திவ்யஜ்ஞாந

ப்ரத்யஹ வஹத் ப்ரவாஹம்

    வ்ரத சீலாமல விசால  கூலத்விதயம். – 119

 

லோகா லோக ஸு

தத்வ ப்ரதி

அவபோதந ஸமர்த்த

ப்ரத்யஹ வஹத்

திவ்ய ஞாந

ப்ரவாஹம்

அமல விசால

வ்ரத சீல

கூல த்விதயம்

 

           லோகா லோகங்களையும், உலகிலுள்ள தத்துவங்களையும், அவையவைகளின் பரியாயங்களையும், தெரிவிக்கும் (அறியச் செய்யும்) தெளிவுடன் கூடி, இரவும் பகலும் இடைவிடாமல் ஒருபோதும் வற்றாமல், பெருகி வருகின்ற கேவல ஞான மாகிற வெள்ள முடையதும்,

 

 

 

 

சுக்லத்யாந ஸ்திமிதஸ்திக

   ராஜத் ராஜ ஹம்ஸ ராஜித மஸக்ருத்

ஸ்வாத்யாய மந்த்ர கோஷம்

   நாநாகுண ஸமிதி குப்தி ஸிகதா ஸுபகம்.  - 120

 

சுக்ல த்யாந

ஸ்தித

ஸ்திமித ராஜத்

ராஜஹம்ஸ

ராஜிதம்

அஸ க்ருத்

ஸ்வாத்யாய

மந்த்ர கோஷம்

நாநா குண

ஸமிதி குப்தி

ஸிகதா

ஸுபகம்

         அசுசி எதுவுமின்றி, நிர்மல முடையதும், கரைந்தும் அறுந்தும் சிறியதாகாமல், விசால முடையதுமான விரத, சீலங்களென்னும் இரு கரை களை யுடையதும்; (வேறு விதமான தியானங்களில் அகன்று) வெண்மையும் செம்மையுமுடைய சுக்கிலத் தியானத்தில், அசையாமல் (பிறழாமல்) நின்று யோகம் புரியும் யோகிகளாகிய அன்னங் களால் சோபிக்கின்றதும்;

 

   சாஸ்திரமாகிற மந்திர தந்திரங்களை இடைவிடாமல் தோன்றச்செய்து கம்பீரமாக இரைந்து ஒலி யிடுகின்றதும், மூலகுணம், உத்தரகுணம் முதலான நானாவித நற்குணங்களோடு கூடி, திரிகுப்தி, பஞ்ச சமிதி முதலான அழகிய மணற் குவியலை அங்கங்கே உடையதும்;

 

க்ஷாந்த்யாவர்த்த ஸஹஸ்ரம்

   ஸர்வ தயா விகச குஸும விலஸல் லதிகம்

துஸ்ஸஹ பரீஷஹாக்ய த்ருததர

    ரங்கத் தரங்க பங்குர நிகரம்.  - 121

க்ஷாந்தி

ஆவர்த்த ஸஹஸ்ரம்

ஸர்வதயா

விகச குஸும

விலசத் லதிகம் துஸ்ஸஹ

பரீஷக ஆக்ய

த்ருததர ரங்கத்

தரங்க பங்குர நிகரம்

 

             உத்தம க்ஷமை முதலான சுழிகள் பலவற்றை நிரந்தரமாகவுடையதும்; உயிர்கள் பலவற்றிற்கும் உதவி புரிவதாகிய கருணை என்னும் மலர்ந்த மலர்களினால் விளங்குகின்ற (நீர்ப்பூவின்) கொடிகளுடையதும், ஒன்றன்பின் ஒன்றாக வேகமாக வந்து குதித்து மேலெழும்பி அவிகின்ற பரீஷக ஜெயமென்கிற அலைகளின் சமூக முடையதும், நவ நோ கஷாயங்களாகிய நுரை கள் இல்லாததும், 

 

 

வ்யபகத கஷாய பேநம்

   ராக த்வேஷாதி தோஷ சைவல ரஹிதம்

அத்யஸ்த மோஹ கர்த்தம மதிதூர

   நிரஸ்த மரண மகர ப்ரகரம்.   - 122

 

வ்யபகதகஷாயபேநம்

ராகத்வேஷ ஆதி

தோஷ சைவல

ரஹிதம் அத்யஸ்த

மோஹ கர்த்தமம்

அதிதூர நிரஸ்த

மரண மகர ப்ரகரம்

 

ஆசை, கோபம் முதலான கஷாயங்களாகிய பாசி களினாலகன்றதும், மோகனீயமாகிற சேறு சிறிதுமில்லாததும்; மரணம் என்கிற மகர மத்ஸ்யங்க ளை வெகு தொலைவில் துள்ளியோடச் செய்வதும், விருஷபசேனர் முதலான கணதரர்களின் தோத்திரப் பாமாலையால், கண கணவென்று சப்திக்கும் கம்பீரமான ஒலியுடைய முனிவர்களான நீர்வாழ் பறவை களின் ஒலியுள்ளதும்,

 

ரிஷி வ்ருஷபஸ்துதி மந்த்ரோத் ரேகித

   நிர்க்கோஷ முகர விஹக த்வாநம்

விவித தபோநிதி புளிநம்

   ஸாஸ்ரவ ஸம்வரண நிர்ஜ்ஜரா நிஸ்ரவணம். - 123

 

ரிஷி வ்ருஷப ஸ்துதி

மந்த்ர உத்ரேகித

நிர்க்கோஷ முகர

விஹக த்வாநம்

விவித தபோநிதி

புளிநம்

ஸாஸ்ரவ ஸம்வரண

நிர்ஜ்ஜரா

நிஸ்ரவணம்

 

 

          பலவகையான தபோனர்களின் நிதிக் குவியலாகிய மணல் மேடுகள் (திடர்கள்)உடையதும், அனுப்ரேக்ஷை முதலியவற்றாலான புண்யாஸ்ரவம் சம்வரை, நிர்ஜ்ஜரை ஆகிய மூன்று கிளை நதிகளையுடையதும்;

 

 

கணதர சக்ர தரேந்த்ர ப்ரப்ருதிமஹா பவ்ய

   புண்டரீகை: புருஷை:

பஹுபி: ஸ்நாதம் பக்த்யா கலிகலுஷ

 மலாபகர்ஷணார்த்த மமேயம்.  – 124

 

கணதர சக்ரதர

 

இந்த்ர ப்ரக்ருதி

மஹா பவ்ய

புண்டரீகை: பஹுபி:

புருஷை: கலிகலுஷ

மல அபகர்ஷணார்த்தம்

பக்த்யா, ஸ்நாதம்

அமேயம்

 

             முனீந்திரர், நரேந்திரர், தேவேந்திரர் முதலான பவ்விய ஜீவன்களாகிய மகான்கள் பலராலும் பஞ்சம காலத்தில் ஏற்பட்ட பாபமாகிற அழுக்கை அலம்பிக் கொள்வதற்காக அந்தரங்க பக்தியோடு ஸ்நானம் செய்யப்பட்டதும், ஏனையோரால் அளவிட முடியாத பெருமை வாய்ந்தது (எனவே யாம் துதிப்பதற்கும் தகுதி வாய்ந்தது)மாகும்.

 

காசி, கோசலம், விநீதை முதலிய நகரத்துக்குச் செல்பவர்,  யாத்ரீகர் எனப்படுவர். அவ்வாறே முக்தி நகருக்குச் செல்லுமவர்கள் யாத்ரீகர் எனப்படுவர். ஜீவகன் அறம் மேற்கொள்ள சமவ சரணத்துக்குச் செல்லும்போது, ஆசிரியர் (திருத்தக்கதேவர்) பெரிய யாத்திரை என்று குறிப்பிடுவது, ஈண்டு கருதற்பாலது. யாத்திரை செய்யும் மக்கள் கங்கை, யமுனை முதலிய தீர்த்தத்தில் முழுகி ஸ்நானம் செய்கின்றனர். அவை சாதாரண தீர்த்தங்களே யாகும். அவை உடலின் மேலுள்ள மலத்தையே (அழுக்கையே) சுத்தம் செய்யும், உள்ளத்தின் அழுக்கைப் போக்காது; ஈண்டு கூறும் (தீர்த்தங்கனாகிற) பகவன் என்னும் நதியின் தீர்த்தம், உத்தம தீர்த்தம் எனப்படும். அது, ஆத்மனிடத்தில் (பாலும் நீரும் போலக் கலந்து) பற்றியுள்ள கர்ம மலங்களை (வினைகளாகிற அழுக்கை)ப் போக்கும் சக்தி வாய்ந்தது ; எனவே புண்ணிய காரணமென்று மக்களை ஏமாற்றும் போலி உரையினின்றும் நீங்கியதாகும். உண்மையிலேயே முக்தி இன்பத்தை அளிக்கும் சக்தி வாய்ந்ததுவுமாகும். சாதாரண தீர்த்தம் தன்னுள் பார்க்கப்பட்டவர் முகம் முதலிய உருவங்களையே காட்டும் (முகம் முதலியவற்றின் நிழல் தெரியும்); அதுவும், காற்று முதலியன வீசும்போது கலைந்து காணும். உத்தம தீர்த்தம் அவ்வாறின்றி, லோகா லோகம் முழுவதையும் உள்ளவாறே காண்பிக்கும். ஆதலின், 'ப்ரத்யவ போதந ஸமர்த்தம்" என்றார்.

 

     (ப்ரதி - ஒவ்வொன்றையும், அவ - முழுவதையும், போதந சமர்த்தம் - காண்பிக்கும் சாமர்த்தியமுடையது.) ஸாதாரண தீர்த்தம், மழை மிகுதியாகும் போழுது வெள்ளம் கரை புரண்டும், மழை இல்லாதபோது வற்றியும் காணப்படும். உத்தம தீர்த்தம் பவ்வியர்களின் புண்ணிய மகிமைக்கேற்ப ஏற்றத் தாழ்வின்றி இடைவிடாமல் பெருகிக் கொண்டிருக்கும். (வஹத் - பெருகுதல்). கங்கை முதலிய நதியின் கரைகள், சரிந்தும், இடிந்தும், கரைந்தும், மலம் முதலியவற்றால் அசுசி மயமானதாகக் காணப்படுகின்றன. உத்தம தீர்தமுள்ள அருகன் நதியின் கரைகள், பழுதற்ற பஞ்ச மஹா விரதம், விசாலமான சீல சப்தகம் ஆகிய கரைகளையுடையதாகின்றன. கூலம் -கரை. "கூலம் ரோதஸ்ச்ச தீரஞ்ச, ப்ரதீரம்ச தடம் த்ரிஷு", அமரம். (அஸக்ருத் - இடைவிடாமல்.)

 

மென்மையுடையதாகலின் நவநோகஷாயத்தை நுரையோடு உவமித்தார். நவநோகஷாயமாவன :- சிரிப்பு, விருப்பம், வெறுப்பு, துன்பம், அச்சம், அருவறுப்பு முதலியவற்றுடன் ; புருஷன், மாதர், அலி ஆகிய மூவரையும், ஆண்களும் பெண்களும் விரும்புவதாகிய (ஸ்த்ரீ பும் நபும்ஸக வேதம் என்ற) மூன்றும் சேர்ந்த ஒன்பதும் (நவநோகஷாயம்) ஆகும். மற்றும், பாசியில் சிக்கினோர் மீள்வது அரிதாகலின், அதனைக் கஷாயம் என்றார். அது, அனந்தானுபந்தி முதலிய பதினாறாக விரியும். துன்பத்துக்கே காரணமாதலின், சேற்றை மோகனீயத்தோடு உவமித்தார். மோகனீயம், கஷாயம் என்பவனவற்றை விவரமாக அறிய விரும்புவோர் சூளாமணி முக்திச் சருக்கம் 181 - ஆம் பக்கம் பார்க்க. லதை - கொடி. லதிகம் - க ப்ரத்யம். பஹ்வ்ரீக்ஹி ஸமாசமானதால் லதைகளை உடையது என்ற பொருளில் நின்றது. மரணம் இல்லாமையே முக்தி யின்பமாதலின், மரணத்தை மீன்களுக்கு உவமித்தார்.

 

     "பங்குரம், நாசம், அழிவு ",  " நிஷத்ரவஸ்து ஜம்பால: பங்கோ ஸ்த்ரீ ச்யாத கர்த்தமௌ. " அமரம். சேற்றுக்குக் கூறுவது, நீர்வாழ் பறவைகள் நீரிலேயே வசிப்பதனால், (அவற்றுக்கு) இடைவிடாமல் துதிபாடும் தபோதனரை உவமித்தார்.

 

     சாரண பரமேஷ்டிகளின் விபவம் மகத்தானதும் பல்வேறு விதமுமாதலின், கூட்டம் கூட்டமாகக் குழுமியுள்ள அவர்களை ' மணல் மேடாக உவமித்தார். " ஆறிடு மேடும் மடுவும் போலாம் செல்வம்" என்று கூறப்படுதலின்,  ஆற்றின் திடர்கள் ஓரிடம் உள்ளனவே மற்றோரிடம் சென்று குவியும். உத்தம தீர்த்தத்தின் திடர்கள் அவ்வாறின்றி என்றும் நிலைபேறுடையன என்பது கருதத்தக்கது மற்றும், உத்தம தீர்த்தத்தில் முழுகினவர் புண்ணிய ஆஸ்ரவம், சம்வரை, நிர்ச்சரை ஆகிய மூன்றையும் இடைவிடாமல் அடைகின்றன ராதலின், அவற்றைக் கிளை நதிகளாகக் கூறினார். வினை நீங்கி வீடடைய எண்ணும் பவ்வியர்கள் அனைவரும் மேற்கொள்ளும் தீர்த்தமாதலின்,  'பக்த்யா ஸ்நாதம் ' எல்லோரும் பக்தியுடன் ஸ்நானம் செய்கின்றன ரென்றார். ஆகவே , அர்ஹந் மஹா நதியின் உத்தம தீர்த்தம் அளவிட்டுக் கூற இயலாத பெருமை வாய்ந்தது என்று உணர்க.

 

கங்கை முதலிய சாதாரண தீர்த்தத்தில் உள்ள அன்னங்கள் ராஜ ஹம்ஸம் என்று சொல்வதற்கில்லை; பாதமும் மூக்கும் சிவந்து தூய வெண்மை யுடையதாகக் காணப் படாமையின். உத்தம தீர்த்தத்தில் உள்ள ஹம்ஸம் (அன்னம்) சுக்கிலத் தியானமாகிற அக்கினியுடைய ஞானிகளாகிற அன்னங்களாதலின், அவை ராஜ ஹம்ஸங்கள் எனப்பட்டன.

 

" ராஜ ஹம்ஸஸ்து தே ஸஞ்சு சரணை: ஸிதா:

தார்த்த ராஷ்ட்ரா: ஸிதேதரை: "

 

  அமரம். லோஹிதை: - சிவந்த, ஸஞ்சுசரணை: - மூக்கு பாதங்களோடு கூடி, ஸிதா - வெண்மையா யுடையது, ராஜ ஹம்ஸம் எனப்படும். இதரை : - மற்ற அன்னங்கள் கருத்த மூக்கும் பாதமும் உடையனவாகும்.

 

     சாதாரண நதிகள், அலைகளினாலும் கல், மரம் முதலியவற்றின் தடையினாலும் இரைந்து செல்லும் ; உத்தம தீர்த்தம் நூல்களின் சாரங்களையே கம்பீரமாக எப்பொழுதும் ஒலியிடுவதாகும். சாதாரண தீர்த்தம் சேற்றோடு கூடிய மணல் நிறைந்ததாகும் ; உத்தம தீர்த்தம், மூலோத்தர குணங்களையுடைய முனிவர்களின் குணங்களாகிற த்ரிகுப்தி, பஞ்ச சமிதி யாகிய மணற் குவியலை உடையதாகும். மூலகுணம் 28, உத்தரகுணம் 36 விவரம் பதார்த்த ஸாரத்திலும், கிரியா கலாபம் 2 ஆம் பாகம் சாரித்ர பக்தியிலும் கண்டு கொள்க. ஸிகதா வாலுகா என்பன மணல்கள். இனி 8400000 குணங்கள் எனினுமாம்.

 

        சாதாரண தீர்த்தம், தன் சுழியிலகப்பட்டவற்றை அழுத்தி உள்ளுக்கு இழுத்துச் செல்லும் தன்மையுடையது. உத்தம தீர்த்தத்தின் சுழிகள், முனிவர்களின் உத்தம குணங்களாகிய உத்தம க்ஷமை முதலியன, 10 ஆகும். விவரம் சூளாமணி துறவுச் சருக்கத்துள் காண்க. " ஆவர்த்தோ அம்பதாம் ப்ரம: " அமரம். ஆவர்த்தம், நீரின் சுழற்சி. அம்பு - தண்ணீர். மேலும், அச்சுழிகள் பிறவியில் அழுந்தும் உயிர்களைக் கரையேற்றி முக்தி நகரில் சேர்ப்பிக்கும் தன்மையன. சாதாரண தீர்த்தத்துள் உள்ள மலர்கள் , அவற்றை அடைந்தார்க்கே (அது வாடாத முன்னர்) மணமும் மகிழ்ச்சியும் அளிக்கும். உத்தம தீர்த்தத்தில் உள்ள மலர்கள் ; கண்டவர், காணாதவர் முதலிய யாவருக்கும் எப்பொழுதும் கருணையை (அபய தானத்தை) அளிப்பதாகும். மேலும் அதன் அலைகள் சம்வரை நிர்ச்சரைக்குக் காரணமான பரீஷக ஜயம் என்று கூறப்பட்டுளது. நுரை, பாசி, சேறு ஆகிய மூன்றும் உத்தம தீர்த்தத்துக்கு இல்லையென்று குறிப்பிட்டார். ஆகவே, அம்மூன்றையும் முறையே, நவ நோ கஷாயம், கஷாயம், மோகனீயம் என்றார். (சைவலம் - பாசி, ' சைவால சைவலே ' என்பர் அமரத்திலும்).

 

மென்மையுடையதாகலின் நவநோகஷாயத்தை நுரையோடு உவமித்தார். நவநோகஷாயமாவன :- சிரிப்பு, விருப்பம், வெறுப்பு, துன்பம், அச்சம், அருவறுப்பு முதலியவற்றுடன் ; புருஷன், மாதர், அலி ஆகிய மூவரையும், ஆண்களும் பெண்களும் விரும்புவதாகிய (ஸ்த்ரீ பும் நபும்ஸக வேதம் என்ற) மூன்றும் சேர்ந்த ஒன்பதும் (நவநோகஷாயம்) ஆகும். மற்றும், பாசியில் சிக்கினோர் மீள்வது அரிதாகலின், அதனைக் கஷாயம் என்றார். அது, அனந்தானுபந்தி முதலிய பதினாறாக விரியும். துன்பத்துக்கே காரணமாதலின், சேற்றை மோகனீயத்தோடு உவமித்தார். மோகனீயம், கஷாயம் என்பவனவற்றை விவரமாக அறிய விரும்புவோர் சூளாமணி முக்திச் சருக்கம் 181 - ஆம் பக்கம் பார்க்க. லதை - கொடி. லதிகம் - க ப்ரத்யம். பஹ்வ்ரீக்ஹி ஸமாசமானதால் லதைகளை உடையது என்ற பொருளில் நின்றது. மரணம் இல்லாமையே முக்தி யின்பமாதலின், மரணத்தை மீன்களுக்கு உவமித்தார்.

 

     "பங்குரம், நாசம், அழிவு ",  " நிஷத்ரவஸ்து ஜம்பால: பங்கோ ஸ்த்ரீ ச்யாத கர்த்தமௌ. " அமரம். சேற்றுக்குக் கூறுவது, நீர்வாழ் பறவைகள் நீரிலேயே வசிப்பதனால், (அவற்றுக்கு) இடைவிடாமல் துதிபாடும் தபோதனரை உவமித்தார்.

 

     சாரண பரமேஷ்டிகளின் விபவம் மகத்தானதும் பல்வேறு விதமுமாதலின், கூட்டம் கூட்டமாகக் குழுமியுள்ள அவர்களை ' மணல் மேடாக உவமித்தார். " ஆறிடு மேடும் மடுவும் போலாம் செல்வம்" என்று கூறப்படுதலின்,  ஆற்றின் திடர்கள் ஓரிடம் உள்ளனவே மற்றோரிடம் சென்று குவியும். உத்தம தீர்த்தத்தின் திடர்கள் அவ்வாறின்றி என்றும் நிலைபேறுடையன என்பது கருதத்தக்கது மற்றும், உத்தம தீர்த்தத்தில் முழுகினவர் புண்ணிய ஆஸ்ரவம், சம்வரை, நிர்ச்சரை ஆகிய மூன்றையும் இடைவிடாமல் அடைகின்றன ராதலின், அவற்றைக் கிளை நதிகளாகக் கூறினார். வினை நீங்கி வீடடைய எண்ணும் பவ்வியர்கள் அனைவரும் மேற்கொள்ளும் தீர்த்தமாதலின்,  'பக்த்யா ஸ்நாதம் ' எல்லோரும் பக்தியுடன் ஸ்நானம் செய்கின்றன ரென்றார். ஆகவே , அர்ஹந் மஹா நதியின் உத்தம தீர்த்தம் அளவிட்டுக் கூற இயலாத பெருமை வாய்ந்தது என்று உணர்க.

 

 

அவதீர்ணவத: ஸ்நாதும்

    மமாபி துஸ்தர ஸமஸ்த துரிதம் தூரம்

வ்யபஹரது பரம பாவநம்

     அநந்ய ஜய்ய ஸ்வபாவ பாவ கபீரம். - 125

 

தத்

பரம பாவநம்

அநந்ய ஜய்ய

ஸ்வபாவ பாவ

ஸ்வஸ்மிந் ஸ்நாதும்

அவதீர்ண வத:

மம அபி துஸ்தர

ஸமஸ்த துரிதம்

தூரம் வ்யபஹரத்

 

            ஆகவே, அந்த (அர்ஹந் நதமாகிய) உத்தம தீர்த்தம், மிகவும் பரிசுத்தமானதும் ; ஏனைய மதக் கொள்கைகளை மேற்கொண்டவர்களால் வெல்ல இயலாத தன்மையும் பொருந்தியிருப்பதனால், மிகவும் கம்பீரமானதாகும். ஆதலால், அந்த உத்தம தீர்த்தத்துள் இருந்து ஸ்நானம் செய்வதற்குத் தொடங்கி இருக்கின்ற எனக்கும் கடத்தற்கரிய (தாண்ட வியலாத) என் தீவினைகள் எல்லாவற்றையும், தூரமாகப் போக்கட்டும். (என்னிடமிருந்து அகன்றோடச் செய்யட்டும்).

 

     எனவே, யானும் பக்தியுடன் வணங்கி மேற்கொள்ளுகிறேன் என்பதாம். இதுவரை, பகவானை நதியாக வருணித்துத் துதித்து இனி, உருவத்தின் அங்கங்களுள் சிலவற்றைக் கூறித் துதிக்கின்றார்.

 

பகவந்தன் முகத்திலுள்ள முக்கிய அம்சங்களில் சிலவற்றைக் கூறிப் புகழ்கின்றார். ப்ருத்வீ சந்த :

 

அதாம்ர நயநோத்பலம் ஸகலகோப வஹ்நேர் ஜயாத்

 கடாக்ஷ சரமோக்ஷ ஹீந மவிகாரதோ த்ரேகத :

விஷா தமத ஹாநித ; ப்ரஹஸிதாய மாதம் ஸதா

முகம் கதயதீவ தே ஹ்ருதய சுத்திமாத்யந்திகீம்.  - 126

 

 

ஸ்வாமிந் ! த்வம்

ஸகல கோப

வஹ்நேர்

ஜயாத்

அதாம்ர நயந

உத்பலம்

அவிகாரதா

உத்ரேகத:

கடாக்ஷ

சரமோக்ஷ

ஹீநம்

 

விஷாத மத

ஹாநித: ஸதா

ப்ரஹஸிதாய

மாநம் தே

முகம் ஆத்யந்திகீம்

ஹ்ருதய சுத்திம்

கதயதி இவ

அஸ்தி

 

 

       பகவந்தனே ! நீர், அனந்தானுபந்தி முதலான கோபாக்கினிகளை (உம் உள்ளத்தே சேராமல் கெடுத்திருப்பதனால் கோபங்களை)யே கோபித்து வென்றிருப்பதனால்,  (கோபம் மிக்கபோது காணப்படும்) சிவப்பில்லாத நெய்தல் மலர் போன்ற கண்களின் அழகு தங்கியதும் ; எவ்வித மனோவிகாரமும் அடையாத தன்மையை அதிசயமாகப் பெற்றிருப்பதனால், காம விருப்பத்தைத் தரும் கடைக் கண் பார்வையாகிற கூரிய அம்பை ஏவும் மாதர்களின் விருப்பத்திற்கே இடமில்லாத தன்மை வாய்ந்தனவும் ;

 

வருத்தப்படல், கர்வமடைதல் முதலானவைகளை அறவே கெடுத்திருப்பதனால், எப்பொழுதும் புன்சிரிப்பு உள்ளதுபோல் காணப்படுவதுமான உம்முடைய முகம் (இதற்கு மேல் ஒன்று உண்டு என்று கூறுவதற்கில்லாத) கடையில்லாத உள்ளத்தின் தூய்மையை நன்கு சூசித்துக் காட்டுவதுபோல விளங்குகின்றது.

 

தாம்ர - சிவப்பு, ஆத்யந்திகீம் - கட்டக் கடைசியிலுள்ளது,(முக்தியின்பம்).  'அகத்தினழகு முகத்தில் தெரியிம்' என்பது பழமொழி.

               

 

 

பகவந்தனின் உடலின் உருவத்தைக் கூறித் துதிக்கின்றார்.

 

நிராபரண பாஸுரம் விகத ராக வேகோதயாத்

நிரம்பர மநோஹரம் ப்ரக்ருதி ரூப நிர்த்தோஷத :

நிராயுத ஸுநிர்பயம் விகத ஹிம்ஸ்ய ஹிம்ஸாக்ரமாத்

நிராமிஷ ஸுத்ருப்திமத் விவித வேதநாநாம் க்ஷயாத்.   -  127

 

 

ஜிநேந்த்ர !

தவ ரூபம்

விகத ராக வேக

உதயாத் ராபரண

பாஸுரம்

ப்ரக்ருதிரூப

நிர்தோஷத :

நிரம்பர

மநோஹரம்

விகத ஹிம்ஸ்ய

ஹிம்ஸா

க்ரமாத்

நிராயுத

ஸு நிர்ப்பயம்

 

விவித

வேதநாநாம்

க்ஷயாத்

நிராமிஷ

ஸுத்ருப்திமத்

 

      பகவந்தனே ! உம்முடைய உருவம்; மிகவும் தீவிரமான ஆசை, கோபம் முதலியவற்றைக் கெடுத்துப் பற்றற்ற உருவமாக அமைந்திருப்பதனால், அணி முதலியன அணியாதிருந்தும் சுந்தரமாயுளது ; இயல்பாகவே குற்றங்குறை எதுவுமின்றி (பிறந்த ஸ்வரூபமாகவே) விளங்குவதனால், ஆடை அணியாதிருந்தும் மனோஹரமாயுளது ;

எவ்வித ஆயுதங்களைக் கொண்டும், ஏனையோரால் ஹிம்சை  செய்ய வியலாத பரம ஔதாரிக சரீரம் அமைந்திருப்பதனாலும், (வேண்டுதல் வேண்டாமை இலானாகியும்) நார் ஸர்வஜீவ தயாபரனானதால், பிற உயிரை ஹிம்சிக்க வேண்டிய ப்ரமேயம் இல்லை ஆதலாலும், (அதாவது தான் இம்சிக்கப் படுவது, தான் மற்றொன்றில் மற்றொன்றில் ஹிம்ஸிப்பது என்ற முறை இல்லையாதலின்), ஆயுதங்களை மேற்கொள்வதும், (ஆயுதம் இல்லாமையினால் ) அஞ்சுவதும் ஆகிய இரண்டும் இல்லை ;பசி, தண்ணீர் தாகம் முதலிய பலவகையான வேதனைகள் தோன்றாவண்ணம் கெடுத்திருப்பதனால், பரம திருப்தியை அடைந்த தன்மையை வெளியிடுகின்றது.

 

    ஆமிஷம் போக வஸ்து என்பதற்கு, ஆதாரம் இருக்கின்றதா ? எனின், ஒன்றல்ல பல உண்டு. அவற்றுள் சில வருமாறு ; காளிதாசன் இயற்றிய ரகுவம்ச காவியத்தில், இந்துமதி என்னும்  பெண்ணரசியின் சுயம்வரத்தில், இந்துமதியை அஜன் வரித்த பிறகு அவன்மேல் பொறாமை(யை) மேற்கொண்ட ஏனைய வேந்தர், அஜன் அயோத்திக்குச் செல்லும் வழியில், அவனோடு போரிட்டு வென்று, இந்துமதியைக் கைப்பற்ற வேண்டும் என்ற சதியாலோசனை செய்கின்றபோது, "ஆதாஸ்யமாந : ப்ரமதாமிஷம் தத் " என்று காளிதாசன் இயற்றிய (7 ம் சருக்கம் 31 - ஆம்) சுலோகத்தின் உரையில், ப்ரமதா [பெண்] ஆமிஷம் என்ற பதத்துக்கு உரை எழுதிய மல்லிநாதர், " ஆமிஷம் து அஸ்த்ரியாம் மாம்ஸே ததா ஸ்யாத் போக்ய வஸ்துநி " என கேசவ நிகண்டிலிருந்து ஆதாரமாக மேற்கோள் காட்டி " பெண்ணென்னும் போக வஸ்து " என்று பொருள் கூறியிருக்கின்றார்.

 

       மற்றும், வைதீக மதத்தில் வழங்கிவரும் ஆஞ்சநேய ஸ்தோத்திரத்தில் " ஆமிஷீ க்ருத மார்த்தண்டம், மஸகீ க்ருத ராக்ஷஸம் " என்பதற்கு, அனுமஹான் சூரியனை  ஆமிஷமாக(ப் பழமாக) எண்ணியவன், (இராவணனைக் கொசுவாக எண்ணியவன்) என்று கூறியுளது. மற்றும், திரௌபதியின் சுயம்வரத்தில் திரௌபதியை, " ஏகாமிஷம் " என்று கூறியிருப்பதனாலும் ஈண்டு,  ஆமிஷம் என்பதற்கு, போக்கிய வஸ்து என்ற பொருள் மிகவும் அமைவுடையதாகும். (அம்பரம் - ஆடை)

 

மிதஸ்தித நகாங்கஜம் கத ரஜோமலஸ்பர்சநம்

நவாம்புருஹ சந்தந ப்ரதிம திவ்ய கந்தோதயம்

ரவீந்து குலிசாதி புண்ய பஹு லக்ஷணாலங்க்ருதம்

திவாகர ஸஹஸ்ர பாஸுரம் அபீக்ஷணாநாம் ப்ரியம்.  - 128

 

 

மிதஸ்தித நக

அங்கஜம்

கத ரஜோ மல

ஸ்பர்சநம்

நவ அம்புருஹ

சந்தந ப்ரதிம

திவ்ய கந்த உதயம்

ரவி இந்து குலிச

ஆதி புண்ய பஹு

லக்ஷண அலங்க்ருதம்

திவாகர

ஸஹஸ்ர பாஸுரம்

அபி ஈக்ஷணாநாம்

ப்ரியம்

 

        பகவந்தனே ! மேலும் உம் உடலில், நகங்களும், உரோமங்களும் (கேவலக் ஞானம் அடைந்த போதிருந்த) அளவாகவே (மிதமாகவே) பொருந்தியுள்ளன ; எனவே வளராமலிருக்கின்றன) ; அழுக்கு முதலியனவும் ஒட்டாதிருக்கின்றன ; புதிதாக மலர்ந்த தாமரை, புதிய சந்தனம் ஆகியவற்றின் மணம் போன்ற திவ்வியமான நறுமணம் மிக்கதாயுள்ளன ; சந்திரன், சூரியன், குலிசம் ஆகிய சங்கரேகை, சக்கரரேகை, வஜ்ராயுதம் முதலான சுப லக்ஷணம் பலவற்றினால், அலங்காரமாயுள்ளன ; கோடி சூர்யனுடைய காந்தி யுடையதாயிருந்தும் பார்வைக்கு மனோஹரமாயுள்ளன.

 

ஹிதார்த்த பரிபந்திபி: ப்ரபல ராக மோஹாதிபி:

கலங்கித மநா ஜநோ யதபி வீக்ஷ்ய சோசுத்த்யதே

ஸதாபிமுகமேவ யஜ்ஜகதி பச்யதாம் ஸர்வத:

சரத் விமல சந்த்ர மண்டலமிவோத்திதம் த்ருச்யதே. - 129

 

 

ததேததமரேச்வர ப்ரசல மௌலி மாலாமணி

ஸ்புரத் கிரண சும்பநீய சரணார விந்த த்வயம்

புநாது பகவஜ்ஜிநேந்த்ர தவரூபமந்தீ க்ருதம்

ஜகத் ஸகலமந்ய தீர்த்த குரு ரூப தோஷோ தயை.  -  130

 

 

ஹித அர்த்த

பரிபந்திபி:

ப்ரபல ராக

மோஹாதிபி:

கலங்கித மநா : ஜந:

யத் அபிவீக்ஷ்ய

சோ சுத்யதே ச

யத் ஜகதி ஸதா

அபிமுகம் ஏவ

பச்யதாம் ஸர்வத:

உத்திதம் சரத் விமல

சந்த்ர மண்டல இவ

த்ருச்யதே தத் ஏதத்

அமரேச்வர ப்ரசல

மௌலி மாலா மணி

ஸ்புரத் கிரண

சும்பநீய சரண

அரவிந்த த்வயம்

தவரூபம்

அந்ய தீர்த்த

குருரூப தோஷ

உதயை:

அந்தீக்ருதம் ஜகத்

ஸகலம் புநாது

 

          கடையிலா இன்பகாரணமான முக்தியை ஆக வொட்டாமல் தடுக்கின்ற, வினைப் பகைவராகிய வலிய ராகம் மோகம் முதலியவைகளால் கலக்கமடைந்த உள்ளமுடைய மக்கள், எந்த ஜிநனுடைய உருவத்தைக் கண்டு ராகம் முதலியவற்றை விட்டுப் பரிசுத்தமாகின்றனரோ, மற்றும், உலக மக்கள் எந்த சமயமும் உம்மை நேரில் கண்டபோது, எங்கும் உதயமாகிக் காண்கின்ற சரத் காலத்தின் நிர்மலமான சந்திர மண்டலம் போலக் காணப்படுகின்றதோ, அத்தகைய உம்முடைய உருவம் தேவேந்திரன் முடி மணிகளின் வரிசையில் விரிந்து ஒளிர்கின்ற கிரணங்களினால் பற்றப்பட்டிருக்கின்ற திருவடித் தாமரைகள் இரண்டுடன் விளங்குகின்றன. அத்தகைய மகிமை மிக்க உம் உருவம், ஏனைய பிற மதக் குருக்களால் உபதேசித்துப் பிறந்த வேதங்களின் மூலம் தீமையைக் கடைபிடித்து நன்மையைக் காணவொட்டாமல் குருடராகச் செய்யப்பட்ட மக்களனைவரையும், அக் குற்றங்களினின்றும் நீங்கி அவர்களை ஞானமார்க்கத்தில் ஈடுபடச் செய்யட்டும்.

 

பூம்புவநே தாது லோட் புநாது.  ப்ரதிம, சமமானது.

 

 

த்வௌ குந்தேந்து துஷார ஹார தவளௌ*

     த்வா விந்த்ர நீலப்ரபௌ

த்வௌ பந்தூக ஸமப்ரபௌ ஜிந வ்ருஷௌ

     த்வௌ ச ப்ரியங்கு ப்ரபௌ

சேஷா : ஷோடச ஜந்ம ம்ருத்யு ரஹிதா :

     ஸந்தப்த ஹேம ப்ரபா :

தே ஸத் ஜ்ஞாந  திவாகரா: ஸுரநுதா:

     ஸித்திம் ப்ரயச்சந்து ந:  -  131

 

சவ்வீஸ்

தீர்தங்கரேஷு

த்வௌ

ஜிநவ்ருஷபௌ

குந்த இந்து துஷார

ஹார தவளௌ

ஜிந வ்ருஷபௌ

த்வௌ

இந்த்ர நீல ப்ரபௌ

த்வௌ பந்தூக

ஸமப்ரபௌ

ஜிந வ்ருஷபௌ

த்வௌ ப்ரியங்கு

ப்ரபௌ

ஜிந வ்ருஷபா :

 

 

ஷோடஸ

ஸந்தப்த

ஹேம ப்ரபா:

தே ஜந்ம

ம்ருத்யு ரஹிதா:

ஸுரநுதா:

ஸத் ஞாந

திவாகரா :

ந: ஸித்திம்

ப்ரயச்சந்து

 

                      இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களில் ஜிந சிரேஷ்டர்களான சந்த்ரப்ரபரும், புஷ்பதந்தரும் முல்லை மலர், சந்திரன், பனி, முத்து மணி ஆகிய இவை போன்ற வெண்மை நிறமுடையவர் ; ஜிந சிரேஷ்டர்களான முனிசுவ்ரதரும், நேமி நாதரும் நீலமணிபோலும் நீல நிறமுடையவர் ; ஜிந சிரேஷ்டர்களான பத்மப்ரபரும், வாசுபூஜ்யரும் செந்தாமரை இதழ்போன்ற வெளிறிய சிவப்புக் கலந்த சிவந்த நிறமுடையவர் ; ஜிந சிரேஷ்டர்களான சுபார்ஸ்வநாதரும், பார்ஸ்வஜிநரும் நாணலுக்கிணையான பச்சை வர்ணமுடையவர் ; ஜிந சிரேஷ்டர்களான, வ்ருஷபர் (ஆதிபகவன்), அஜிதர், சம்பவர், அபிநந்தனர், ஸுமதிநாதர், சீதள நாதர், சிரேயாம்ஸ நாதர், விமல நாதர், அனந்த நாதர், தர்மநாதர், சாந்தி நாதர், குந்துநாதர், அரதீர்த்தங்கரர், மல்லி நாதர், நமி நாதர், மகாவீரர் ஆகிய பதினாறுபேரும், (களங்கமறக் காயப்பட்ட) ஸ்புடம் போடப்பட்ட  பொன் போன்ற நிறமுடையவர். அத்தகைய சரீர காந்தியுடையவர்களும், பிறப்பு இறப்பு நீங்கியவர்களும், தேவர்களினால் துதிக்கப்பட்டவர்களும், கேவலக் ஞானமாகிற சூரியர்களுமான இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களும் பக்தி பூர்வகம் துதிக்கின்ற நமக்கு (அவர்களடைந்த) முக்தி, இன்பத்தை அளிக்கட்டும்.

 

" பதினறுவர் பொன் வண்ணர் பச்சை யிருவர்

மதிவண்ணர் மற்றோ ரிருவர் -- கதியடைந்த

செம்மைநிறத் தோரிருவர் சேர்ந்த முகிலிருவர்

எம்மைக்கும் தெய்வம் எமக்கு ".

            [திருக்கலம்பகம்]

 

 

வரகநக சங்க வித்ரும

   மரகத கந ஸந்நிபம் விகத மோஹம்

ஸப்ததி சதம் ஜிநாநாம்

    ஸர்வாமர பூஜிதம் வந்தே.  - 132

 

 

வரகநக சங்க

வித்ரும மரகத கந

ஸந்நிபம் விகத

மோஹம் ஸர்வ

அமர பூஜிதம்

ஸப்ததி ஸதம்

ஜிநாநாம் வந்தே

 

       சிறந்த பொன், சங்கு, பவழம், பச்சைமணி, மேகம் இவைகளைப்போன்ற நிறமுடையவர்களும், மோகனீயம் முதலான எண்வினைகளையும் நீக்கியவர்களும், தேவர்களால் வணங்கப்பட்டவர்களும், நூற்றெழுபது தர்ம கண்டங்களிலும் அறம்பகவர்ந்தவர்களுமான நூற்றெழுபது ஜிநர்களையும் துதித்து வணங்குகிறேன்.

 

வர்ஷேஷு வர்ஷாந்தர பர்வதேஷு

   நந்தீச்வரேயாநி ச மந்தரேஷு

யாவந்தி சைத்யாயதநாநி லோகே

    ஸர்வாணி வந்தே ஜிந புங்கவாநாம்.  - 133

 

 

வர்ஷேஷு வர்ஷ

அந்தர பர்வதேஷு

நந்தீச்வரே

மந்தரேஷு, ஜிந

புங்கவாநாம் யாநி

சைத்யாயதநாநி

ஸந்தி, சலோகே

யாவந்தி சைத்யாயத-

நாநி, ஸந்தி தாநி

தாவந்தி ஸர்வாணி

வந்தே

 

        பரதம் முதலிய முப்பத்தைந்து நாடுகளிலும், அந் நாடுகளின் மத்தியிலுள்ள ஹிமவான் முதலிய முப்பது மலைகளிலும், நந்தீச்வர த்வீபத்தின் மையத்திலுள்ள ஐம்பத்திரண்டு மலைகளிலும், ஐந்து மகம் மேருவிலேயும் எந்த ஜிநேஸ்வரர்களுடைய இயற்கை ஜிநாலயங்கள் உள்ளனவோ, மற்றும் இதர உலகங்களில் எவ்வளவு ஜிநாலயங்கள் உள்ளனவோ, அவைகள் எல்லாவற்றையும் மன வசன காய சுத்தியுடன் துதித்து வணங்குகிறேன்.

 

 

அவநிதல கதாநாம் க்ருத்ரிமாSக்ருத்ரிமாணாம்

வர பவந கதாநாம் திவ்ய வைமாநிகாநாம்

இஹமநுஜ க்ருதாநாம் தேவராஜார்ச்சிதாநாம்

ஜிநவர நிலயாநாம் பாவதோSஹம் ஸ்மராமி. -  134

 

 

அவநிதல கதாநாம்

இஹமநுஜ க்ருதா-

நாம், க்ருத்ரிம அக்-

ருத்ரிமாணாம், ஜிநவர

நிலயாநாம் வரபவந

கதாநாம் திவ்ய

வைமாநிகாநாம்

தேவராஜார்ச்சிதா-

நாம், அக்ருத்திமாணாம்

ச அஹம்

பாவத : ஸ்மராமி

 

       பூமியிலிருக்கின்ற இவ்வுலக மாந்தர்களால் வணங்கப்படுகின்ற செயற்கை, இயற்கை ஆகிய ஜிநர்களுடைய சிறந்த ஆலயங்களையும், சிறந்த பவணருலகிலிருக்கின்றனவும், திவ்வியமான கற்பவுலகங்களில் இருக்கின்றனவும் தேவர்களால் பூஜிக்கப்படுகின்றனவுமான இயற்கை ஜிநாலயங்களையும், யான் மனப் பூர்வமாகத் தியானிக்கின்றேன். (பரிணாமசுத்தியுடன் நமஸ்மரிக்கின்றேன்).

 

ஜம்பூ தாதகி புஷ்கரார்த்த வஸுதா

     க்ஷேத்ர த்ரயே யே பவா:

சந்த்ராம்போஜ சிகண்டி

    கண்ட கநக ப்ராவ்ருட் கநாபா ஜிநா :

ஸம்யக் ஜ்ஞாந சரித்ர லக்ஷணதரா :

    தக்தாஷ்ட்ட கர்மேந்தநா:

பூதாSநாகத வர்த்தமாந ஸமயே

   தேப்யோ ஜிநேப்யோ நம :  - 135

 

 

ஜம்பூ தாதகி

புஷ்கரார்த்த

வஸுதா

க்ஷேத்ர த்ரயே

பூத அநாகத

வர்த்தமாந

ஸமயே பவா:

சந்த்ர அம்போஜ

சிகண்டி கண்ட

கநக ப்ராவ்ருட் கந

ஆபா : ஸம்யக் ஞாந

சரித்ர லக்ஷண

தரா : தக்த

அஷ்ட கர்ம

இந்தநா : யே

ஜிநா : தேப்யோ

ஜிநேப்யோ

நம : கரோமி

 

          ஜம்பூ த்வீபம், தாதகி ஷண்ட த்வீபம், புஷ்கரார்த்த த்வீபம் ஆகிய இரண்டரைத் த்வீபங்களிலே, இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் ஆகிய மூன்று காலங்களில் முறையே பிறந்தவர்களும், பிறக்கப் போகின்றவர்களும், பிறந்திருக்கின்றவர்களும், சந்திரன் போன்ற வெண்மை, தாமரை போன்ற செம்மை, மயில் கழுத்து போன்ற பசுமை, சுவர்ணம் போன்ற செம்மை கலந்த மஞ்சள்,  மழைக் காலத்தில் திரண்டுவரும் மேகம் போன்ற நீலம் ஆகிய ஐவகை நிறமுள்ளவர்களும், க்ஷாயிக ஞான, க்ஷாயிக தரிசன, க்ஷாயிக சாரித்ரம் முதலான இலக்கணம் அமைந்தவர்களும், எண்வினைகளாகிற விறகுகளை எரித்துச் சாம்பலாக்கி அழித்தவர்களும் ஆகிய, எந்த ஜிநர்கள் உள்ளனரோ, அத்தகைய  ஜிநர்களின் பொருட்டு, மீண்டும் மீண்டும் நமஸ்காரம் செய்கிறேன்.

 

ஸ்ரீமந் மேரௌ குலாத்ரௌ ரஜத கிரிவரே

   சால்மலௌ ஜம்பு வ்ருக்ஷே

வக்ஷாரே சைத்ய வ்ருக்ஷே ரதிகர ருசகே

   குண்டலே மாநுஷாங்கே

இஷ்வாகாரே ஜ்ஞநாத்ரௌ ததிமுக சிகரே

   வ்யந்தரே ஸ்வர்க்க லோகே

ஜோதிர் லோகேபி வந்தே

    பவந மஹிதலே யாநி சைத்யாநி தாநி.  - 136

 

 

ஸ்ரீமந்

மேரௌ

குலாத்ரௌ

ரஜதகிரிவரே

சால்மலௌ

ஜம்பு வ்ருக்ஷே

வக்ஷாரே

சைத்ய, வ்ருக்ஷே

ரதிகர,  ருசகே

குண்டலே

மாநு ஷாங்கே

இஷ்வாகாரே

அஞ்சநாத்ரௌ

ததிமுக சிகரே

வ்யந்தரே

ஸ்வர்க்க லோகே

ஜோதிர் லோகே

பவநமஹிதலே

யாநி சைத்யாநி

தாநி , அபிவந்தே.

 

      பொன்மலையான ஐந்து மேரு பர்வதங்களிலும், முப்பது குலகிரி பர்வதங்களிலும், நூற்றெழுபது விஜயார்த்த பர்வதங்களிலும், மகம்மேருவின் அருகிலுள்ள ஐந்து சால்மலி விருக்ஷங்களிலும், மகம்மேருவின் அருகினுள்ள ஐந்து ஜம்பூ விருக்ஷங்களிலும், எண்பது வக்ஷார பர்வதங்களிலும், சைத்ய விருக்ஷங்களிலும், நந்தீச்வர த்வீபத்திலுள்ள முப்பத்திரண்டு ரதிகர பர்வதங்களிலும், ருசகவர த்வீபத்தே நான்கு பக்கங்களிலுமுள்ள நான்கு பர்வதங்களிலும், குண்டலவர த்வீபத்தே நான்கு பக்கங்களிலுமுள்ள நான்கு பர்வதங்களிலும், மானுஷோத்தர பரவதத்தே நான்கு பக்கங்களிலுமுள்ள நான்கு ஆலயங்களிலும், அவ்வாறே, இஷ்வாகாரம் என்ற நான்கு மலைகளின் மையத்திலும், நந்தீச்வர த்வீபத்திலேயுள்ள நான்கு அஞ்சன பர்வதங்களிலும், அவற்றின் நான்கு பக்கங்களிலுமுள்ள பதினாறு,  த தி மு க பர்வதங்களிலும், (இம் மத்தியம உலகத்தில் விளங்கும்) வியந்தர லோகத்திலுள்ள விமானங்களிலும், தேவருலகத்திலுள்ள விமானங்களிலும், ஜோதிர் லோகத்திலுள்ள விமானங்களிலும், பவணருலகிலுள்ள விமானங்களிலும் எவ்வளவு ஜிந பிம்பங்கள் இருக்கின்றனவோ, அவைகள் எல்லாவற்றையும் துதித்து வணங்குகிறேன்.

 

 

தேவாஸுரேந்த்ர நரநாத ஸமர்ச்சி தேப்ய:

 பாப ப்ரணாசகர பவ்ய மநோஹரேப்ய:

கண்டா த்வஜாதி பரிவார விபூஷி தேப்யோ

நித்யம் நமோ ஜகதி ஸர்வ ஜிநாலயேப்ய: - 137

 

 

ஜகதி தேவ அஸு-

ரேந்த்ர, நரநாத

ஸமர்ச்சி தேப்ய:

பாப ப்ராணாச கர

பவ்ய மநோஹரேப்ய:

கண்டாத்வஜ ஆதி

பரிவாரவிபூஷிதேப்ய:

ஸர்வ ஜிநாலயேப்ய:

நித்யம் அஹம்

நம : அஸ்து

 

        இம் மூவுலகிலும் ; தேவேந்திரர், தரணேந்திரர், சக்கரவர்த்தி ஆகியவர்களால் பூஜிக்கப்பட்டனவும், தீவினைகளைப் போக்குவதனால் மகிழ்ந்த பவ்வியர்களின் உள்ளங்களைக் கவருகின்றனவும், ஜெயகண்டை, த்வஜஸ்தம்பம் முதலான (தேவர்கள் இயற்றிய) பரிவாரங்களால் அலங்கரிக்கப்பட்டனவுமான எல்லா ஜிநாலயங்களுக்கும், இடைவிடாமல் எப்பொழுதும், என் வணக்கம் ஆகட்டும். எனவே எப்பொழுதும் வணங்குகிறேன் என்பதாம்.

   

கோட்யாSர்ஹத் ப்ரதிமா : சதாநி நவதீ

    பஞ்சோத்தரா விம்சதி:

பஞ்சாசத் த்ரியுதா : ஜகத்ஸு கணிதா :

    லக்ஷா: ஸஹஸ்ராணி து

ஸப்தாக்ராபி ச விம்சதிர் நவசதீர்

   த்வ்யூநம் சதார்த்தம் மதா:

தாந் நித்யாந் புருதுங்க பூர்வமுக ஸத்

   பர்ய்யங்க பத்தாந் ஸ்துவே.  - 138

 

 

ஜகத்ஸு

அர்ஹத் ப்ரதிமா:

கோட்யா சதாநி

நவதீ பஞ்சோத்தரா

விம்சதி: லக்ஷா:

த்ரியுதா: பஞ்சாசத்

ஸஹஸ்ராணி

ஸப்தாக்ரா விம்சதி:

நவசதீ: த்வ்யூநம்

சதார்த்தம்:

கணிதா : இதிமதா:

நித்யாந் தாந்

புருதுங்க

பூர்வமுகஸத்

பர்யங்க பத்தாந்

பிம்பாந் ஸ்துவே

 

       மூவுலகங்களிலுமுள்ள (எண்ணற்ற ஆலயங்களுள்ள வியந்தர, ஜோதிஷ்க உலகங்கள் தவிர ஏனைய) இயற்கை ஜிநாலயங்களின் பிரதிமைகள், (கோடியோடு சேர்ந்த தொள்ளாயிரத்து இருபத்தைந்தும், எனவே) தொள்ளாயிரத்து இருபத்தைந்து கோடியும்,  ஐம்பத்துமூன்று இலக்ஷமும், இருபத்தேழாயிரமும், தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டும் என்ற (9255327948) எண்களுள்ளன வென்று  அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டன. என்றென்றும் அழியாமல் நித்தியமாயுள்ள அவைகள், ஆதிபகவானாகிய விருஷப தேவரின் உயரத்தின் அளவான ஐந்நூறு வில் உன்னதமுடன், கீழ்த் திசை நோக்கும் முகமுடையனவாகி, சிறந்த பல்யங்காசனத்தில் அமர்ந்தனவாகி (இயற்கையாய்) உள்ளன. அந்த ஜிந பிம்பங்களையும் யான் துதித்து வணங்குகிறேன்.

 

    தொள்ளாயிரத்து இருபத்தைந்து கோடியே ஐம்பத்து மூன்று இலக்ஷத்து இருபத்தேழாயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டு இயற்கை ஜிந பிம்பங்களின் பல்யங்காசனத்தின் உன்னதமே ஐந்நூறு வில் உடையனவாகி, மூவுலகங்களிலும் விளங்குகின்றன என்க. (த்யூநம் சத அர்த்தம் - இரண்டு குறைந்த ஐம்பது, 48.

 

 

இச்சாமி பந்தே சேதியபத்தி காஉஸ்ஸக்கோ கஓதஸ்ஸ ஆளோசேவும் அஹளோய திரியளோய  உட்டளோயம்மி கட்டிமா கட்டிமாணி ஜாணி ஜிண சேயியாணி தாணி திஸுவி ளோயேஸு பவந வாஸிய வாணவெந்தர ஜோயிஸிய கப்பவாஸியத்தி சவுவிஹா தேவாஸ பரிவாரா திவ்வேஹி கந்தேஹி, திவ்வேஹி அக்கேஹி, திவ்வேஹி புப்பேஹி, திவ்வேஹி தீவேஹி, திவ்வேஹி தூவேஹி, திவ்வேஹி சுண்ணேஹி, திவ்வேஹி வாஸேஹி, திவ்வேஹிண்ணாணேஹி ணிச்சகாளமச்சந்தி பூஜந்தி வந்தந்தி ணமம்சந்தி சேதிய மஹா கள்ளாண புஜ்ஜம் கரந்தி அஹமபி இஹ ஸந்தோ தத்த ஸந்தாயி பத்தீயே ணிச்ச காளமச்சேமி பூஜேமி வந்தாமி ணமம்ஸாமி துக்கக்கஓ கம்மக்கஓ போஹிளாஹோ ஸுகயி கமணம் ஸமாஹிமரணம் ஜிந குண ஸம்பத்தி ஹோஉமஜ்சம்.  - 139

 

 

பந்தே! சேதிய பத்தி

காஉஸ்ஸக்கோ கஓ

தஸ்ஸ ஆளோசேஉம்

அஹ ளோய திரிய

ளோய உட்டளோயம்மி

கட்டிமா கட்டிமாணி

ஜிண சேஇயாணி ஜாணி

திஸுவிளோஏஸு

பவண வாஸிய

வாணவெந்தர

ஜோஇஸிய

கப்பவாஸிய இதி

ச உவிஹா தேவா

ஸ பரிவாரா

திவ்வேஹி கந்தேஹி

திவ்வேஹி அக்கேஹி

திவ்வேஹி புப்பேஹி

திவ்வேஹி தீவேஹி

திவ்வேஹி தூவேஹி

திவ்வேஹி

சுண்ணேஹி

திவ்வேஹி வாஸேஹி

திவ்வேஹி ணாணேஹி

ணிச்சகாளம் அச் --

சந்தி பூஜந்தி வந்தந்தி

ணமம் ஸந்தி சேதிய

மஹாகல்லாண

புஜ்ஜம் கரந்தி அஹமபி

இஹஸந்தோ

தத்த ஸந்தாயிபக்தீயே

ணிச்சகாளம் அச்சேமி

பூஜேமி வந்தாமி

ணமம்ஸாமி மச்சம்

துக்கக் கஓ கம்மக்கஓ

போஹி ளாஹோ

ஸுகயி கமணம்

ஸமாஹி மரணம்

ஜிந குண ஸம்பத்தி

ஹா உ

 

      ஞானவானே ! சைத்ய பக்தியினுடைய காயோத் ஸர்க்கம் செய்யப்பட்டது ; அதனை ஆலோசிக்கிறேன் ; அதோ லோகம், மத்தியமலோகம், ஊர்த்துவலோகம் (கீழுலகம் நாம் வசிக்கும் உலகம், மேலுலகம்) என்கிற இவைகளில் செயற்கை இயற்கை ஜிந பிம்பங்கள் எவ்வளவு உண்டோ அவைகளை ; மூவுலகங்களிலும் உள்ளவர்களான ; பவணவாசி தேவர்கள், வானில் செல்லும் தன்மையுடைய வியந்தர தேவர்கள், ஜோதிஷ்க தேவர்கள், கல்பவாசி தேவர்கள் என்கிற நான்கு வகை தேவர்களும், அன்னவர் (பவண, வியந்தர, ஜோதிஷ்க, கல்ப்ப வாசியர் ஆகிய நான்குவகை தேவ) தேவியர் முதலான பரிவாரங்களுடன் கூடினவர்களாகி, திவ்வியமான சந்தனங்களாலும், திவ்வியமான மலர்களாலும், திவ்வியமான தீபங்களினாலும், திவ்வியமான தூபங்களினாலும், திவ்வியமான சூர்ணங்களினாலும், (அபிஷேகம் முடிந்தவுடன் துவட்டும்) திவ்வியமான வஸ்திரங்களினாலும், (முதலிலே தொடங்கும்) திவ்வியமான அமிஷேகங்களினாலும் (விசேஷமாகப் பக்தி செய்து) தினந்தோறும் அர்ச்சிக்கிறார்கள், பூஜிக்கிறார்கள், துதி பாடுகிறார்கள், வணங்குகிறார்கள் ; பிம்பங்களின் மஹாகல்யாண பூஜையைச் செய்கிறார்கள், அவ்வாறே யானும் இங்கு இருந்துகொண்டே அங்கு உள்ளவன் போல எண்ணிக்கொண்டு, பக்தியுடன் எப்பொழுதும் அர்ச்சிக்கிறேன், பூஜிக்கிறேன், (1008 திருநாமங்களைக் கூறி) வந்திக்கிறேன், நமஸ்கரிக்கின்றேன். அதனால் எனக்குப் பிறவிச் சுழற்சியில் ஏற்படும் துன்பக்கேடும், கர்மக்ஷயமும், (கைவல்யம் எய்துவதற்குக் காரணமான) ஞானலாபமும் நற்கதி ப்ராப்தியும் சமாதி மரணமும், ஜிந குணங்களின் ப்ராப்தியும் ஆகட்டும்.

 

----------------------------------------------- 

 

அத ஆஷாட மாஸ சுக்லபக்ஷ ஆஷ்ட்டாந்நிக மாத்யாந்நிக தேவதா ஸ்தவநேந ஸஹ ப்ரதமதிந நந்தீச்வர மஹா பர்வ க்ரியாயாம் பூர்வா சார்யாநு க்ரமணே ஸகல கர்ம க்ஷயார்த்தம் பாவ பூஜா வந்தநா ஸ்தவஸமேதம் ஸ்ரீமத் நந்தீச்வர ஜிந சைத்ய சைத்யாலய பக்தி காயோத் ஸர்க்கம் கரோம்யஹம்.  - 140

 

 

    சத்தாரி மங்களம்; அரஹந்தா மங்களம், ஸித்தா மங்களம், ஸாஹூ மங்களம், கேவலி பண்ணத்தோ தம்மோ மங்களம், இத்யாதி போஸராமி தோஸாமி ஹம் ஜிணவரே ஸித்தா ஸித்திம் மம திஸந்து.

 

அதம் அஹம் ஆஷாடமாஸ

சுக்லபக்ஷ

ஆஷ்ட்டாந்நிக

தேவதா ஸ்தவநேந

ஸஹ ப்ரதம திந

நந்தீச்வர மஹா

பர்வ க்ரியாயாம்

பூர்வ ஆசார்ய

அநுக்ரமேண

ஸகல கர்ம

க்ஷயார்த்தம்

பாவபூஜா வந்தநா

ஸ்தவ ஸமேதம்

ஸ்ரீமத் நந்தீச்வர

ஜிந சைத்ய

சைத்யாலய பக்தி

காயோத் ஸர்க்கம்

கரோமி

சத்தாரி மங்களம்

அரஹந்தா மங்களம்

ஸித்தா மங்களம்

ஸாஹூ மங்களம்

கேவலி பண்ணத்தோ

தம்மோ மங்களம்

இத்யாதி..........

........போஸராமி

தோஸாமிஹம்

ஜிணவரே........

ஸித்தா

ஸித்திம்

மம திஸந்து

 

         அதன்பிறகு யான், ஆடிமாதத்து சுக்கில பக்ஷத்து அஷ்டமி முதலாக பௌர்ணமி வரையிலும் (எட்டு நாளைக்கும்) ஏற்று நடத்தும் விரத தினங்களில், மத்தியான காலத்தில் செய்யும் நவ தேவதா ஸ்துதியோடு பூடி, நந்தீச்வர பர்வத்தின் முதல்நாள் காரியத்தில், பூர்வாசாரியர்களால் ஏற்று நடந்த முறைப்படியே (என்னுடைய) எல்லா கர்மங்களும் நாசமாகும் பொருட்டு, பரிணாமத்தினால் செய்யும் பாவபூஜை, வந்தனை, ஸ்தோத்திரம் முதலியவற்றோடு கூடி, மகிமை தங்கிய (எட்டாவதான) நந்தீச்வர த்வீபத்திலுள்ள ஐம்பத்திரண்டு இயற்கை ஜிந ஆலயங்களையும் அவைகளிலுள்ள (5616) இயற்கை ஜிந பிம்பங்களையும்,(மூர்த்திகளையும்) பக்தி பூர்வகம் துதிக்கும் பொருட்டு அதற்குத் தக்க காயோத் ஸர்க்கத்தை முறைப்படி ஏற்றுச் செய்கின்றேன். இவ்வுலகிலே சிறப்புடைய மங்களங்கள் நான்கு உள ; அவை, அருகத் பட்டாரகரும் மங்களகரமானவர், சித்த பரமேஷ்டிகளும் மங்களகரமானவர், (ஆசார்ய உபாத்தியாய சர்வ சாது ஆகிய) சாதுக்களும் மங்களகரமானவர், கேவலஜ்ஞானிகளால் திருமொழியின் மூலம் அருளிச் செய்யப்பட்ட 'திருவறமும்' மங்களகரமானது;

           என்ற இது முதலாகச் சத்தாரி மங்களத்தைக் கூறி வணங்கி, தீமைதரும் எண்ணங்களையும் தீய செயல்களையும் போக்கி, ஜினவரர்களான நிகழ்கால (24) தீர்த்தங்கரர்களையும் வணங்குகின்றேன் ; இதனால் அவர்களடையும் சித்த கதியை யானும் அடையும் வண்ணம் எனக்கு (அவர்கள்) நன்கு அருள் பாலிக்கட்டும்.

 

    எனவே சத்தாரி மங்களம், தோஸாமி தண்டகம் என்ற இரண்டையும் சுருக்கமாகக் கூறி முடித்துக் கொள்ளுகிறேன் என்பதாம்.

 

   சைத்ய பக்தி முற்றும்.


நந்தீச்வர பக்தி

 

யாவந்தி ஜிநசைத்யாநி வித்யந்தே புவந த்ரயே

தாவந்தி ஸததம் பக்த்யா த்ரிப் பரீத்ய நமாம்யஹம்.  - 141

 

 

புவந த்ரயே யாவந்தி

ஜிந சைத்யாநி

வித்யந்தே தாவந்தி

அஹம் பக்த்யா த்ரி:

பரீத்ய ஸததம் நமாமி 

 

          மூவுலகங்களிலும் எவ்வளவு ஜிநாலயங்கள் இருக்கின்றனவோ, அவ்வளவையும் யான், சிறந்த பக்தியுடன் (முறைப்படி) வலம் வந்து எப்பொழுதும் (இடைவிடாமல்) நமஸ்கரிக்கின்றேன்.

  

 சமவ சரண வருணனை

 

மாநஸ்தம் பாஸ் ஸராம்ஸி ப்ரவிமல

   ஜல ஸத் காதிகா புஷ்பவாடீ

ப்ராகாரோ நாட்ய சாலா த்விதயமுபவநம்

   வேதி காந்தர் த்வஜாத்வா

ஸாலக் கல்ப்ப த்ருமாணாம் ஸபரிவ்ருதிவநம்

   ஸ்தூப ஹர்ம்யாவளீச

ப்ராகாரஸ் ஸ்பாடி கோந்தர் - 142

 

    ந்ருஸுர முநிஸபா பீடிகா க்ரேஸ்வயம்பூ:

 

மாந ஸ்தம்பா:

ஸராம்ஸி

ப்ரவிமல  ஜலஸத்

காதிகா  புஷ்பவாடி

ப்ராகரா :  நாட்யசாலா

த்விதயம்  உபவநம்

வேதிகா  அந்த:

த்வஜாத் வா  சால:

ஸ பரிவ்ருதி  வநம்

கல்பத்ருமாணாம்

ஸ்தூப

ஹர்ம்ய ஆவளீ ச

ஸ்பாடிக:  ப்ராகார:

அந்த: ந்ரு ஸுர முநி

ஸபா  பீடிகா

அக்ரே  ஸ்வயம்பூ:

(அஸ்தி தந் நமாமி)

 

        (சமவ சரணத்தின் [மேல் ஏறுவதற்கு முதல் படியில் கால் வைத்தவுடன் கடைசி படியில் கொண்டுபோய் சேர்க்கும் தெய்வீகத் தன்மை அமைந்த]  2000 படிகளையும், தூளி சாலமென்னும் மதிலையும் கடந்து உள்ளே சென்றதும் விளங்கும்),

 

       மானஸ்தம்பம், தடாகம் முதலியனவுடைய முதலாவது (ப்ராஸத சைத்ய) பூமியும் ; அதன் உட்புறத்தே தெளிந்த தண்ணீருடைய இரண்டாவது அகழ் பூமியும் ; அதனுள் மலர் நிறைந்த மூன்றாவது (பூங்)கொடி பூமியும் ; அதன் உட்புறத்தே உதயதர மென்னும் மதிலும், அம்மதிலின் நாட்புறமும் மூன்று நிலை(களை)யுடைய உதயதர கோபுரமும் ; அதனுள் வீதியின் இருபக்கமும் விளங்கும் நடன மாளிகைகளும், மூலை(கோணங்)களில் ஏழிலம்பாலை, செண்பகம், தேமா, அசோகம் முதலிய மரங்களுள்ள நான்காவது வனபூமியும் ; அதனுள் ப்ரீதிதரமென்னும் மதிலும் ; அதன் நாற்புறமும் ஐந்து நிலையுடைய ப்ரீதி தரமென்னும் கோபுரமும், அதனுள் வீதிகளில் இருபக்கமுமுள்ள நடன மாளிகைகளும், மூலைகளில் சுற்றுமதில் முதலியனவுமுடைய ஐந்தாவது கொடி பூமியும் ; அதன் உட்புறத்தே கல்யாண தரமென்னும் மதிலும், அதன் நாற்புறமும் ஏழு நிலையினையுடைய கல்யாண தரமென்னும் கோபுரமும், அதன் உள்வீதிகளிலுள்ள நடன மாளிகைகளும், மூலைகளில் கற்பக விருக்ஷம் முதலான பல்வேறு வகை அதிசயங்களும் நிறைந்த , ஆறாவது கற்பக விருக்ஷ பூமியும் ; அதனுள் (உலகம் முதலான) ஸ்தூபைகளும், ஹர்ம்யங்களின் வரிசையும் நிறைந்த ஏழாவது கிரஹாங்கண(ம் அல்லது நவ ஸ்தூபா) பூமியும் ; அதனுள் ஸ்ரீநிலயமென்னும் பளிங்குச் சுவரினாலான மதிலும், அம் மதிலின் உட்புறத்தே  மானிடர், தேவர், முதலியோருடைய கூட்டமுள்ள பன்னிருவகையான சபையும்(கோஷ்ட பூமியும்), அதன் மையத்தில் த்ரிமேகலாபீடமும், அதன்மேல் உள்ள கந்தகுடி மண்டப மையத்தில் நன்கு அமைந்த சிம்மாசனமும் அமைந்து, அதன் மேலுள்ள மலர்மிசை தன் இயல்பான ஸ்வரூபத்தையடைந்த பகவான் எழுந்தருளி விளங்குகிறார் ; எனவே அவரை பக்தியுடன் வணங்குகிறேன்.

 

(உத்தம மானிடர்) முற்பிறவியில் தவமியற்றி (ஷோடஸ பாவனை யென்னும்) பதினாறு பாவனைகளைத் தியானித்துத் தீர்த்தங்கர நாம மஹா புண்ணியத்தைப் பெற்று, இம்மையில் ஜினகுமாரனாகத் தோன்றித் துறந்து, காதி வினைகளைக் கெடுத்துக் கைவல்ய ஞானம் விளங்கப்பெற்று, முனைவன் தன்மை அடைந்தவுடன் ; இந்திரனால், ஏழு சுற்று ப்ராகாரம் முதலியனவுடைய சமவசரணம் என்ற கோயிலை நிருமித்துத் துதிப்பது மரபு. அதாவது, 1. ப்ராசாத சைத்ய பூமி, 2. காதிகா பூமி, 3. வல்லி பூமி, 4. வன பூமி, 5. த்வஜ பூமி, 6. கற்பக விருக்ஷ பூமி, 7. க்ருஹாங்கண (பூமி அல்லது நவஸ்தூபா) பூமி என்ற ஏழு சுற்றுப்ப்ராகார(ம் அமைந்த7) பூமிகளின் மையத்தில் ஸ்ரீநிலயம் என்னும் மண்டபமும், அதன்மேல் 375. நிலையுடைய உயரமான கோபுரமும் விளங்கும் ; அம் மண்டபத்தின் உள் கோவிலில் பன்னிரு கணங்கள் தங்குவதற்குரிய கோஷ்ட பூமியும், அதன் மையத்தில் த்ரிமேகலா பீடம் என்னும் மூன்று மேடைகளும், அதன் மேல் கந்தகுடி என்னும் (விமானம் போன்ற) உள் மண்டபமும், அதன் மையத்திலமைந்த சிம்மாசனத்தின்மேல் நிருமித்துள்ள தாமரையும், அதன்மேல் (நாலங்குலத்துக்கு மேல்) தீர்த்தங்கர பரமதேவன் எழுந்தருளியிருப்பதும் மரபு. இவற்றை இன்னும் விவரமாக அறிய விரும்புவோர் மேருமந்தரம் ஸ்ரீவிகாரச் சருக்கம், சமவசரண சருக்கம் ஆகிய இரண்டிலும் கண்டு கொள்க.

 

 

த்ரிதசபதி மகுட தடகத மணிகண கர நிகர

    ஸலில தாராதௌத

கர்ம கமல யுகள ஜிநபதி ருசிரப்ரதி பிம்ப

     விலய விரஹித நிலயாந்.  - 143

 

நிலயாநஹமிஹ மஹஸாம் ஸஹஸா ப்ரணி பதந

   பூர்வ மவநௌம்யவநௌ

த்ரய்யாம் த்ரய்யா சுத்த்யா நிஸர்க்க சுத்தாந்

    விசுத்தயே கந ரஜஸாம்.  - 144

 

 

மஹஸாம் நிலயாந்

நிஸர்க்க சுத்தாந்

த்ரய்யாம் (ஸ்திதாந்)

த்ரிதசபதி

மகுட தட கத

மணிகண

கர நிகர ஸலில

தாரா தௌத

க்ரம கமல யுகள

ஜிநபதி ருசிர -

ப்ரதிபிம்ப

விலய விரஹித

நிலயாந்

அஹம் கந ரஜஸாம்

விசுத்தயே இஹ

த்ரய்யா  ஸுத்யா

ஸஹஸா அவநௌ

ப்ரணிபதந பூர்வம்

அவநௌமி

 

        பலவகையான நவமணிகளின் ஒளிகள் நிறைந்துள்ளனவும், இயல்பாகவே (குற்றமற்ற) பவித்திர முள்ளனவும், மூவுலகங்களிலும் நிலை பெற்றுள்ளனவும்,  தேவேந்திரர்களுடைய கிரீடங்களில் அழகுற ஆங்காங்கே பதிந்துள்ளனவாகிய மணிக்குவியல்களின் காந்தி சமூகமாகிற (ஒளிப் பிழம்பாகிற), நீர்ப் பெருக்கினால் அலம்பப்பட்ட, கமல மலரொத்த இரண்டு திருவடிகளையுடைய ஜிநேந்திரர்களின் காட்சிக்கினிய மனோஹரமான ஜின ப்ரதிமைகள் அமைந்திருக்கின்றனவும் ; (அதாவது தேவர்கள் பணியும் பாத தாமரைகளுள்ள ஜின பிம்பங்களுடையனவும்), எக்காலத்திலும் அழிவில்லாதிருக்கின்றனவுமான அக்ரத்திம (இயற்கை) ஜிநாலயங்களை, யான் என்னிடம் நிறைந்திருக்கிற வினைகளின் (சேர்க்கைக்) குவியல்கள் நீங்கும் பொருட்டு, யானிருக்கும் இம்மானிட உலகிலிருந்தே, மன, வசன, காய சுத்தி பூர்வகம் அதிவிரைவில் பூமியில் என் உடல் படியும் வண்ணம் வீழ்ந்து சாஷ்டாங்கமாக வணங்கித் துதிக்கிறேன்.

 

பாவந ஸுர பவநேஷு த்வா ஸப்ததி

    சத ஸஹஸ்ர ஸங்க்யாப்யதிகா:

கோட்யஸ் ஸப்த ப்ரோக்தா: பவநாநாம்

    பூரி தேஜஸாம் பவநாநாம்.  - 145

 

 

பாவநஸுரபவநேஷு

பவநா நாம் பூரி

தேஜஸாம் பவநாநாம்

த்வாஸப்ததி சத

ஸ்ஹஸ்ர

ஸங்க்யாப்யதிகா:

ஸப்த கோட்ய: (இதிபுதை:)

ப்ரோக்தா:

 

         பவணருலகில் வசிக்கும் பவண தேவர்களுடைய (77200000) விமானங்கள் ஒவ்வொன்றிலும், ஒவ்வொன்றாக உள்ளனவும், சொல்லொணா ஜோதிமயமுமான (அக்ரத்திம ஆலயங்கள்) இயற்கை ஜிநாலயங்களின் எண்ணிக்கை ஏழு கோடியே எழுபத்திரண்டு இலக்ஷம் உள்ளன என்று அறிஞர்களால் கூறப்பட்டுள்ளன.

 

(த்வா ஸப்ததி)- எழுபத்திரண்டு, (சத ஸஹஸ்ரம் - நூறாயிரம் இலக்ஷம் (ஸங்க்யா அப்யதிகா : என்ற எண்ணிக்கை) அதிகமான (ஸப்த கோட்ய:) ஏழு கோடிகள், * இது இந்தியில் மாறியுளது.

 

த்ரிபுவந பூத விபூநாம் ஸங்க்யா தீதாந்ய

    ஸங்க்ய குண யுக்தாநி

த்ரிபுவந ஜநநயந மந: ப்ரியாணி பவநாநி

    பௌம விபுத நுதாநி.  - 146

 

 

(பௌம விபுத பவநேஷு)

பௌம விபுதநுதாநி,

த்ரிபுவந

ஜந நயந மந:

ப்ரியாணி

அஸங்க்ய குண

யுக்தாநி

த்ரிபுவந பூதவிபூ நாம்

பவநாநி

ஸங்க்யா அதிதாநி

 

      வியந்தரலோகத்திலுள்ள விமானங்களிலும், எண்வகை வியந்தர தேவர்களால் சேவித்து வணங்கப் பட்டனவும், மூவுலகிலுள்ள தேவர் முதலியோர் கண்களையும், உள்ளங்களையும் கவரக் கூடியனவும், அளவிலா மகிமை தங்கிய (மேன்மையுடைய) னவுமான ; மூவுலகிலுமுள்ள ஜீவன்களுக்கும், இறைவர்களான ஜினேந்திரர்களுடைய இயற்கை ஜிநாலயங்கள் எண்ணற்றஙைகளாயுள்ளன.

 

    இயற்கை ஜிநாலயங்கள் வியந்தர லோகத்திலும், ஜோதிர் லோகத்திலும் எண்ணவியலாதனவாகவும் ; பூமியில் 458 - ம், பவணருலகில், 77200000- ம் கற்ப லோகத்தில் 8497024 -ம் உள்ளன என்ற பொருளில்,

 

"பாரிடையீ ரிருநூற் றைம்பத் தெட்டாம் பவணத்

தோரெழுகோடி எண்ணென்பா னிலக்கம் உயர்ந்த கற்பத்

தோரியல் யோனித் தொண்ணேழாயிரச் சின்னம் எண்ணவொண்ணா

சீரியவந்தரர் சோதிடத் தீசர் முச் சேதியமே."

 

          என்று திருநூற்றந்தாதியில் கூறியுள்ளதனை ஈண்டு  ஒப்பு நோக்கி அறிக. வியந்தரர் வணங்கும் விமானம் எனவே, அவ் விமானங்களிலுள்ள இயற்கை ஜிநாலயங்களைக் குறிக்கும்.

 

இப்பொழுது ஜோதிர் லோகத்திலும், தேவர் உலகிலும் உள்ள (84,97,023) ஆலயங்களைக் கூறுகின்றார்.

 

தாவந்தி ஸந்தி காந்த ஜ்யோதிர் லோகாதி

   தேவதாபி நுதாநி

கல்ப்பேSநேக விகல்பே கல்ப்பாதீதே ஹமிந்த்ர

    கல்ப்பே S நல்ப்பே.  -  147

 

 

விம்சதிரத த்ரிஸஹிதா ஸஹஸ்ர குணிதா ச

    ஸப்த நவதிப் ப்ரோக்தா

சதுரதிகா சீதிரதப் பஞ்சக சூந்யேந

   விநிஹிதாந்யநகாநி.  - 148.

 

(ஜோதிர்லோக பவநேஷு)

காந்த ஜோதிர்லோக

அதிதேவதா

அபிநுதாநி பவநாநி

தாவந்தி ஸந்தி

அநேக விகல்ப்பே

கல்ப்பே

கல்ப்பாதீதே

அநல்ப்பே அஹமிந்த்ர

கல்ப்பே  அநகாநி

பவநாநி

த்ரிஸஹிதா விம்சதி:

ஸஹஸ்ர குணிதா

ஸப்த நவமி: அத:

பஞ்சக சூந்யேந

விநிஹிதாநி

சதுரதிகா சீதி

இதி ப்ரோக்தா

 

           அவ்வண்ணமே, ஜோதிர் லோகத்திலுள்ள விமானங்களில் விளங்கும் மனோஹரமான, ஜோதிர் லோகத்திலிருக்கும் தேவர்களால் சேவித்து வணங்கப் படுகின்ற இயற்கை ஜிநாலயங்கள், மேலே வியந்தர லோகத்துக்குக் கூறிய எண்ணற்றனவாகவே இருக்கின்றன. பல்வேறு வகையான பிரிவுடைய சௌதர்ம கற்பம் முதலான (16) கற்ப லோகத்திலும், அவைகளுக்கு மேலே (கற்ப லோகத்தைக் கடந்து) உள்ள மகிமை தங்கிய நவக்ரைவேயகம், நவாணுதிசை, பஞ்சாணுத்தரம் ஆகிய அகமிந்திரவுலகங்களிலும், குற்றங்குறையின்றி (நல்வினை ஈட்டுவதற்குக் காரணமாகி) விளங்குகின்ற இயற்கை ஜிநாலயங்கள் ; இருபத்து மூன்றும், அதனோடு ஆயிரத்தால் பெருக்கப்பட்ட தொண்ணூற்றேழும் (எனவே, தொண்ணூற்றேழாயிரமும்), அதனோடு ஐந்து சுன்னங்களோடு கூடிய எண்பத்து நான்கும் (எனவே, எண்பத்து நான்கு இலக்ஷமும்) ஆகியவை 8497023 என்று அறிஞர்களால் சொல்லப்படுகின்றன.

 

குறிப்பு :- மேற்குறிப்பிட்ட கணக்கு விவரம் : 20+3 = 23 + 97000 = 97023 + 8400000 = 8497023, தேவருலகில் உள்ளன.

 

அதிகதா என்பது அங்குள்ள என்று பொருள்.

 

சௌதர்ம கற்பத்தில்

இயற்கை ஆலயம்- 3200000

ஈசான கற்பத்தில்- 2800000

சனத்குமார கற்பத்தில்- 1200000

மாஹேந்திர கற்பத்தில்- 800000

பிரம,பிரமோத்தர கற்பகங்களில்- 400000

லாந்தவ,காபிஷ்ட கற்பகங்களில்- 50000

சுக்ர,மஹாசுக்ர கற்பகங்களில்- 40000

ஸதார,ஸஹஸ்ரார கற்பகங்களில்- 6000

ஆனத,பிராணத கற்பகங்களில்- 400

ஆரண,அச்சுத கற்பகங்களில்- 300

ஹேஷ்டிமத் திரயத்தில்- 111

மத்திமத் திரயத்தில்- 107

உபரிமத் திரயத்தில்- 91

நவாணுதிசையில் - 9

பஞ்சாணுத்தரத்தில்- 5

 

    ஆக 8497023.

 

அஷ்டா பஞ்சா சதத: சதுச்சதாநீஹ

   மாநுஷேச க்ஷேத்ரே

லோகாலோக விபாக ப்ரலோக நாலோக

   ஸம்யுஜாம் ஜயபாஜாம்.  - 149

 

 

இஹ மாநுஷே

க்ஷேத்ரே ஸ்திதாநி

லோக அலோக

விபாக ப்ரலோகந

ஆலோக ஸம்யுஜாம்

ஜயபாஜாம் பவநாநி

அஷ்டா பஞ்சாசத்

அத: சது: சதாநி

ஸந்தி

 

         நாம் வசிக்கும் மத்திம உலகமாகிய இம் மண்ணுலகில், லோகா லோகத்தின் பிரிவு எது என்று காண்கின்ற (ஆலோக) கேவல தரிசன (கேவல ஞான)த் தோடு கூடியவர்களும், வினைப் பகைவர்களை வென்றவர்களுமான ஜின பகவானின் படிமைகள் அமைந்த இயற்கை ஜிநாலயங்கள் ஐம்பத்தெட்டும், அவற்றோடு சேர்ந்த நானூறு, ஆகிய நானூற்று ஐம்பத்தெட்டே அமைந்துள்ளன.

 

 

நவநவ சதுச்சதாநிச ஸப்தச

    நவதி ஸஹஸ்ரகுணிதா ஷட்ச

பஞ்சாசத் பஞ்சவியத் ஸஹிதா :

    புநரத்ரகோட யோஷ்டௌ ப்ரோக்தா:  - 150

 

 

ஏதாவந்த்யேவ ஸதாம் அக்ரதிமாண்யத

    ஜிநேசிநாம் பவநாநி

புவந த்ரிதயே த்ரிபுவந ஸுரஸமிதி

    ஸம்ர்ச்யமாந ஸத் ப்ரதிமாநி.  - 151

 

 

புவந த்ரிதயே அத

ஸதாம்ஜிநேசிநாம்

த்ரிபுவந ஸுர ஸமிதி

ஸமர்ச்சமாந

ஸத் ப்ரதிமாநி

அக்ருத்திமாணி

பவநாநி ஏதா-

வந்த்யேவ, அத்ர

நவநவ சதுச் சதாநி

ஸஹஸ்ர குணிதா

ஸப்தச நவதி:

பஞ்சவியத் ஸஹிதா:

ஷட் பஞ்சாசத் முன்:

அஷ்டௌ கோடய:

இதி ப்ரோக்தா:

 

        மூவுலகம்  முழுவதிலும் உள்ள முனைவன் தன்மை விளங்கப்பெற்ற ஜினேந்திரர்களின் (திருவடிகளில்), மூவுலக வானவர்களால் நன்கு பூஜிக்கப்படுகின்ற தூய படிமைகள் (பிரதிமைகள்) நிறைந்த இயற்கை ஜிநாலயங்கள், இங்கு மேற்கூரிய இவ்வளவே , அவை எவ்வளவு எனில் ? ஒன்பதால் பெருக்கப்பட்ட ஒன்பதும் (9 × 9 = 81 -ம்) நானூற்றும் (400 -ம்) ஆயிரத்தால் பெருக்கப்பட்ட தொண்ணூற்றேழும் ( 97 × 1000 = 97000-ம்) ஐந்து சுன்னங்களோடு கூடிய ஐம்பத்தாறும் (5600000-ம்), பிறகு எட்டு கோடிகளும் என்று அறிஞர்களால் சொல்லப்படுகின்றன. எனவே ,  8, 56, 97, 481 என்று அறியவும்.

 

வக்ஷார ருசக குண்டல ரௌப்யந கோத்தர

    குலேஷுகார நகேஷு

குருஷுச ஜிந பவநாதி த்ரிசதாந்யதிகாநி

   தாநி ஷட்விம்சத்யா.  - 152

 

 

வக்ஷார ருசக

குண்டல ரௌப்ய நக

உத்தர குல

இஷுகார நகேஷு

குருஷு

ச ஸ்திதாநி

தாநி ஜிந பவநாநி

ஷ்ட்விம்சத்யா

அதிகாநி

த்ரிசதாநி

 

      வக்ஷாரம், ருசகம், குண்டலம், விஜயார்த்தம் (வெள்ளியம் பெருமலை), மானுஷோத்தரம், குல பர்வதம் ஆகிய மலைகளிலும், இஷுகாரம் என்கிற மலைகளிலும், உத்தர, தக்ஷிண குருக்களிலுள்ள ஜம்பூ, சால்மலி விருக்ஷங்களின் கீழும், ச என்றதனால் அங்கே சூழ்ந்துள்ள கஜதந்த பர்வதங்களிலும் இருக்கின்ற, அந்த இயற்கை ஜிநாலயங்கள் இருபத்தாறு அதிகமான முன்னூறு (326) இருக்கின்றன.

 

    ருசகம் - ருசகவரத்வீபத்திலும், குண்டலம் - குண்டலவர த்வீபத்திலும் உள்ளவற்றைக் குறிக்கும்.

 

1. ஒரு விதேகத்திற்கு வக்ஷாரபர்வதம் 16. ஆக ஐந்து விதேகத்திற்கும் (16× 5 = 80) ஆகிய வக்ஷார பர்வதங்களில் உள்ள இயற்கை ஜிநாலயங்கள் - 80.

 

2. ருசகவர த்வீபத்தில் நாற்புறமும் ஒவ்வொன்றாக உள்ளவை - 4.

 

3. குண்டலவர த்வீபத்தில் நாற்புறமும் ஒவ்வொன்றாக உள்ளவை - 4.

 

4. ஒரு விதேகத்திற்கு கச்சா முதலிய விதேக நாடுகள் 32. ஐந்து விதேகத்திற்கும் (32 × 5 =)160. தெற்கேயுள்ள பரதம் 5. வடக்கேயுள்ள ஐராவதம் 5.  ஆக (160+5+5 =) 170 தர்ம கண்டங்களிலும் உள்ள வெள்ளியம் பெருமலைகளில் உள்ள இயற்கை ஜிநாலயங்கள் 170.

மானுஷோத்தர பருவதத்தின் நாற்புறமும் ஒவ்வொன்றாக (நாற்புறமும்) உள்ளவை 4.

 

5. ஒவ்வொரு மகமேருவின் இருபக்கங்களிலும், ஹிமவான் முதலிய குலகிரி 6. ஆக, ஐந்து மேருவுக்கும் குலகிரிகள் (5×6=30) உள்ளன. அவைகளின் மேலுள்ள இயற்கை ஜிநாலயங்கள் 30.

 

6. தாதகிஷண்ட த்வீபத்தையும், புஷ்கரார்த்த த்வீபத்தையும் இரண்டிரண்டாகப் பிரிப்பதற்கு அமைந்துள்ள, இஷுவாகார (பாணம் போன்ற) பர்வதங்களின் மேல் அமைந்துள்ள இயற்கை ஜிநாலயங்கள் 4.

 

7. உத்தம போக பூமியாகிய உத்தரகுரு தக்ஷிண குரு என்ற 10  இடங்களின் அருகிலுள்ள ஜம்பூ விருக்ஷம், சால்மலி விருஷங்களிடம் அமைந்துள்ள ஆலயங்கள் (5×2 =) 10.

 

8. (குருஷு) " ச " என்றதனால் மேரு பர்வதங்களிலிருந்து நீலி பர்வதம் வரை வளைவாக (யானைத் தந்தம் போல) நீண்டுள்ள கஜதந்த பர்வதங்களின் மேலுள்ள இயற்கை ஜிநாலயங்கள் (5×4=) 20.

 

                      ஆக. 326 

 

9. 154 - ஆம் சுலோகத்துள் கூறிய நந்தீச்வரத்வீபத்தின் நாற்புறமும் உள்ள ஆலயங்கள் (13×4=) 52.

 

10. 161 ஆம் சுலோகத்துள் கூறிய மகமேருவின் நாற்புறமும் உள்ள பத்ராஸால, நந்தந, ஸௌபனஸ, பாண்டுகம் என்ற வனங்கள் நான்கிலும் உள்ள ஜிநாலயங்கள் (16×5 =) 80.

 

   ஆக மத்திம லோகத்தில் (பூமியில்) உள்ள ஜிநாலயங்கள் (326+52+80) 458 ஆகும்.

 

நந்தீச்வர ஸத்த்வீபே நந்தீச்வர

    ஜலதி பரிவ்ருதே த்ருத சோபே

சந்த்ரகர நிகர ஸந்நிப ருந்தர யசோ

    விதத திக்மஹீ மண்டலகே.  - 153

 

 

தத்ரத்யாஞ்ஜந ததிமுக ரதிகர புருநக

    வராக்ய பர்வத முக்யா:

ப்ரதி திசமேஷாமுபரி த்ரயோத சேந்த்ரார்ச்சி

    தாநி ஜிந பவநாநி. - 154

 

 

நந்தீச்வர ஜலதி

பரிவ்ருதே

த்ருத சோபே

சந்த்ர கர

நிகர, ஸந்நிப

ருந்த்ர

யசோ விதத

திக் மஹீ

மண்டலகே

நந்தீச்வர

ஸத் த்வீபே

ப்ரதி திசம்

தத்ரத்ய

அஞ்ஜந

ததிமுக

ஏதிகர

புருநக

வர ஆக்ய

பர்வத முக்ய:

ஏஷாம் உபரி

த்ரியோதச

ஜிநபவநாநி, தாநி

இந்த்ரார்ச்சிதாநி

 

        எட்டாவதாகிய நந்தீச்வர சமுத்திரத்தினால் வட்டமாகச் சூழ்ந்துள்ளதும், நவமணிகளின் காந்தி நிறைந்ததும், கோடைக்காலத்தின் தாபத்தைப் போக்கும் கலை வளர்ச்சியுள்ள நிலவின் ஒளியைப் போலப் பிறவிப் பிணியிலுழலும் பக்தர்களின் சந்தாபத்தைப் போக்கக் கூடியதும், மகத்தான கீர்த்தியினால் பரப்பப்பட்ட பெரியோர்களின் விசாலமான உள்ளம் போல, நாற்புறமும் வட்ட வடிவமான விசாலமான உள் அகலம் (163, 84, 00000 யோஜனை) உள்ள எட்டாவது நந்தீச்வர த்வீபத்தில் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய நான்கு பக்கங்களின் மையத்திலும், பக்கத்திற்கு ஒவ்வொன்றாக விளங்கிக் கொண்டிருக்கிற (நான்கு) அஞ்சன பர்வதங்களும்; அந்த அஞ்சன பருவதத்திற்கு நான்கு பக்கங்களிலும் உள்ள நான்கு தடாகங்களின் நடுவில் (ஒவ்வொன்றாக நாற்புறமும்) நான்கு ததிமுக பர்வதங்களும் ; அந் நான்கு தடாகங்களுக்கும் வெளிப் பக்கங்களிலுள்ள இரண்டிரண்டு மூலைகளிலும், மூலைக்கொன்றாக (அதாவது அந்த தடாகங்களின் வெளிப்புறத்தே சூழ்ந்துள்ள வனங்களின் உள் கோணங்களில்) அமைந்துள்ள எட்டு ரதிகர பர்வதங்களும் (எனவே, பக்கத்திற்குப் பதிமூன்று) ஆகிய, இவைகள் மிகச் சிறந்து உலகப் பிரசித்தமான உன்னதமுள்ள மலைகள் (52) என்று பேர் பெற்றுள்ளன. இம்மலைகளின் உச்சியில் (ஒவ்வொரு பக்கத்திற்கும்) பதின்மூண்று இயற்கை ஜிநாலயங்கள் உள்ளன ; அவைகள் இந்திரர்களால்தான் பூஜிக்கப் படுகின்றன.

 

நாம் வசிக்கும் ஜம்பூ த்வீபம் வட்டவடிவமானது, ஒரு லக்ஷ யோஜனை (விஸ்தீர்ணம்) அகலம் உடையது. அதனைச் சுற்றிலும் வட்டமாகச் சூழ்ந்துள்ள இலவண சமுத்திரம் இரண்டு லக்ஷ யோஜனை உள் அகலம் உடையது. இவ்வாறே, தீவுகளும், கடல்களும் ஒன்றையொன்று இரட்டித்த அளவாகச் சென்ற இடத்தில், எட்டாவது நந்தீச்வர த்வீபம் 1638400000 யோஜனை (உள்) அகலம் உடையதாகி, ஏழாவது சமுத்திரமும், எட்டாவது நந்தீச்வர சமுத்திரமும் உள்ளும், புறமும் சூழப்பட்டனவாகி, (ஆரக்கால் இல்லாத வண்டிச் சக்கரத்தின் வட்டயைப்போல்) விளங்குகிறது.

 

         அதன் ஒவ்வொரு திக்கிலும் அஞ்சன மலை ஒன்று, ததிமுக மலை நான்கு, ரதிகரமலை எட்டு (ஆக 1+4+8 = 13) ஆக, நான்கு பக்கத்திற்கும் (13 × 4=) 52, மலைகளாகின்றன. அவைகளின் மேலேயே இயற்கை ஜிநாலயங்கள் விளங்குகின்றன. அவைகளுள், அஞ்சனமலை நீலமணியின் மயமானது. (கருமை வண்ணமுடையது) 84,000 யோசனை உயரமுடையது ; ததிமுகம், ஸ்படிகமணியின் மயமானது (வெண்மையானது) 10,000 யோசனை உயரமுடையது; ரதிகரம் பல மணிகளின் மயமானது (பல வர்ணமுடையது), 1000 யோசனை உயரம் உடையது ; அது, காண்பவர் கண்களையும் உள்ளத்தையும் கவரக்கூடிய காட்சிக்கினியதாயிருக்கும் காரணத்தால், ரதிகரம் என்ற பெயர் பொருந்துவதாயுளது. (ஆலயத்துக்கு நான்கு பக்கமும் நான்கு தடாகங்கள் உள்ளன) மேற்கூறிய ஆலயங்கள் ; ஒவ்வொன்றும், தெற்கு, வடக்கு அகலம் 50 யோசனை, கிழக்கு மேற்கு நீளம் 100 யோசனை, மூலஸ்தாந கோபுரம் உள்பட உயரம் 75 யோசனை உடையனவாகும். நாற்புறமும் நான்கு கோபுரமும், கோபுர வாயிலும் உடையனவாகும்.

 

       மற்றும், கோபுர வாயிலுக்குள் பலிபீடமும், மானஸ்தம்பமும், சைத்ய விருக்ஷமும், வைஜயந்தை யென்னும் கொடியும், 108 அஷ்டமங்கல சமூகமும், (த்வஜ ஸ்தம்பம் முதலியனவும்) வரிசை பெற்றுள்ளன. இவைகளுக்கு உட்புறத்தில் தெற்கு வடக்காக மூன்று பத்திகளையுடைய கிழக்கு பார்த்த மண்டபம் ஒன்றுளது. அது, உழைக்கல மண்டபம் எனப்படும். அதன் உள்ளும், புறமும், மேற்புறமும் புராண வரலாறு முழுவதும், பல சித்திரக் கலைகளாக அமைந்துள்ளன. அதனால், அவற்றைக் காண்கிறவர்கள் புராணங்களில் கூறும் விஷயங்கள் அனைத்தையும், அறிந்து கொள்வதற்குத் தக்கவண்ணம் அமைந்துள்ளன. அதனுள் தெற்கு வடக்கு அகலத்தில் முப்பத்தாறு முப்பத்தாறாக மூன்று வரிசையில் 108 கந்தகுடி மண்டபங்களும், அவைகளுள் 500 வில் உன்னதம் பல்யங்காசனமாக அமைந்த 108 ஜிந பிம்பங்களும், மற்றும் பல அதிசயங்களும் , விளங்குகின்றன.

 

ஆஷாட கார்த்திகாக்யே பால்குண மாஸேஸ

    சுக்ல பக்ஷேsஷ்டம்யா:

ஆரப்யாஷ்ட்ட திநேஷுச ஸௌதர்ம ப்ரமுக

    விபுத பதயோ பக்த்யா.  - 155

 

 

தேஷு மஹாமஹமுசிதம் ப்ரசுராக்ஷத

   கந்த புஷ்ப தீபைர்தூபை:

ஸர்வஜ்ஞ ப்ரதிமாநாம் அப்ரதிமாநாம்

    ப்ரகுர்வதே ஸார்வ ஹிதம்.  - 156

 

 

ஸௌதர்ம ப்ரமுக

விபுத பதய: தேஷு

அப்ரதிமாநாம்

ஸர்வஜ்ஞ-

ப்ரதிமாநாம்

ஆஷாட கார்த்திக

ஆக்யே

பால்குண மாஸே ச

சுக்லபக்ஷே

அஷ்டம்யா : ஆரப்ய

அஷ்டதிநேஷு

ப்ரசுர அக்ஷத

கந்த புஷ்ப

தீபை : தூபை :

உசிதம்

ஸார்வஹிதம்

மஹாமஹம்

பக்த்யா ப்ரகுர்வதே

 

      சௌதர்ம கற்பம் முதலான, கற்ப அமரர்களுக்குத் தலைவர்களான தேவேந்திரர்கள் (சௌதர்மேந்திரன் முதலானவர்கள்), அந்த நந்தீச்வர த்வீபத்தின் இயற்கை ஜிநாலயங்களி(ன் 108 கந்தகுடியி)லுள்ள இணையற்றனவாகிய ஜிந பிம்பங்களுக்கு, ஆடி மாதம் , கார்த்திகை மாதம், பங்குனி மாதம் ஆகிய மூன்று மாதங்களிலும் வருகின்ற பூர்வபக்ஷத்தின் எட்டாவது நாளான அஷ்டமியில் தொடங்கி (ஆரம்பித்து) பௌர்ணமி வரையில் எட்டு நாட்கள் தோறும் இடைவிடாமல், விசேஷமான வாலரிசி, செஞ் சந்தனம், சிறந்த மலர்கள், தீபங்கள், தூபங்கள் முதலிய அர்ச்சனா திரவியங்களால் ; நூல் முறைப்படி தகுதியுள்ளதும், யாவருக்கும் நன்மை தருகின்றனவுமான, மிக மிகச் சிறந்த மகிமையுள்ள பூஜையை பக்தி பூர்வகம் செய்கிறார்கள்.

 

 

பேதேந வர்ணநா கா ஸௌதர்ம:

    ஸ்நபந கர்த்ருதாம் ப்ரதிபந்ந:

பரிசாரக பாவமிதா: சேஷேந்த்ரா

    ருந்த்ர சந்த்ர நிர்மல யசஸ:  -  157

 

 

மங்கள பாத்ராணி புநஸ் தத்தேவ்யோ

    பிப்ரதிஸ்ம சுப்ரகுணாட்யா:

அப்ஸரஸோ நர்த்தக்ய:

   சேஷ ஸுராஸ்தத்ர லோகந வ்யக்ரதிய:  - 158

 

 

தத்ர ஸௌதர்ம:

ஸ்நப கர்த்ருதாம்

ப்ரதிபந்ந:

ருந்த்ர சந்த்ர

நிர்மல யசஸ:

சேஷேந்த்ரா:

பரிசாரக பாவம்

இதா: சுப்ரகுணாட்யா:

தத் தேவ்ய: புந:

மங்கள பாத்ராணி

பிப்ரதிஸ்ம

அப்ஸரஸ: புந:

நர்த்தக்ய: அபவந்

சேஷ ஸுரா:

லோகந வ்யக்ர

திய: அபவந்

தத் பேதேந

வர்ணநா, கா?

 

         அந்தப் பூஜையில் சௌதர்மேந்திரன் அபிஷேகம் செய்தலை மேற்கொண்டான் ; களங்கமற்ற பௌர்ணமிச் சந்திரனின் காந்தியைப் போல நன்கு விளங்குகின்ற, புகழ் தங்கிய ஏனைய இந்திரர்களும், தேவர்களும், சௌதர்மேந்திரன் ஏவலைக் கேட்டு அதன்படி நடக்கும் தன்மையை மேற்கொண்டனர் ; சிறந்த நற்பண்புகள் வாய்ந்த தேவமாதர்களும், நல்வினைகளின் வருவாய்களுக்குக் காரணங்களான குடை முதலிய (8) மங்கலத் திரவியங்களை ஏந்தி நிற்கின்றனர் ; நடன மாதர்களான தேவ வனிதையர்களும், துதிபாடி நடனம் செய்பவர்களாயினர் . ஏனைய தேவர் குழுவெல்லாம் (தங்கள் மனம் வேறொன்றில் செல்லாமல்) அந்தப் பூஜையைக் காண்பதிலேயே ஆழ்ந்த உள்ளமுடையவர்களாயினர். ஆகவே, அத்தகைய பூஜையை விவரமாக வருணிப்பதற்கு எங்ஙனம் முடியும் ?.

 

வாசஸ்பதி வாசாமபி கோசரதாம்

     ஸம்வ்யதீத்ய யத்க்ரம மாணம்

விபுதபதி விஹித விபவம் மாநுஷ மாத்ரஸ்ய

    கஸ்ய சக்தி: ஸ்தோதும்.  - 159

 

 

வாசஸ்பதி

வாசாமபி

கோசரதாம்

ஸம் வ்யதீத்ய

விபுதபதி விஹித

விபவம்

க்ரமமாணம் யத்

தத் ஸ்தோதும்

மாநுஷ மாத்ரஸ்ய

கஸ்ய சக்தி: அஸ்தி

 

       (உலகிலுள்ள ஒவ்வொன்றையும் விசேஷமாக வருணித்துக் கூறும்) தேவகுருவான ப்ரஹஸ்பதியின் வசனத்துக்கும், எட்டாத மஹிமை தங்கியதாய், தேவேந்திரர்களால் நூல் முறைப்படி செய்யப்பட்ட மிக்க சிறப்புடன் நடத்துகின்ற எந்தப் பூஜையுண்டோ, அதனைப் புகழ்ந்து வருணிப்பதற்கு அறிவிற் குறைந்த மானிடர்களாகிய நம் போன்ற யாருக்குத்தான் திறம் உண்டு ? (எவருக்குமில்லை).

 

      அறிவிற் சிறந்த தேவ குருவாலும் வருணிக்க இயலாத, பெருமை வாய்ந்த பூஜையின் சிறப்பை , அறிவிற் குறைந்த மானிடராகிய, யாம் எவ்வாறு கூற இயலும் ? இயலாதென்க.

 

 

நிஷ்ட்டாபித ஜிநபூஜா: சூர்ணஸ்நபநேந

   த்ருஷ்ட விக்ருத விசேஷா:

ஸுரபதயோ நந்தீச்வர ஜிநபவநாநி

   ப்ரதக்ஷிணீ க்ருத்ய புந:  - 160

 

 

பஞ்ச ஸுமந்தர கிரிஷு ஸ்ரீ பத்ர

   ஸால நந்தந ஸௌமநஸம்

பாண்டுக வநமிதி தேஷு ப்ரத்யேகம்

   ஜிநக்ருஹாணி சத்வார்யேவ.  - 161

 

 

தாந்யத பரீத்ய தாநிச நமஸித்வா

   க்ருதஸு பூஜநாஸ் தத்ராபி

ஸ்வாஸ்பதமீயுஸ்ஸர்வே ஸ்வாஸ்பத மௌல்யம்

   ஸ்வசேஷ்ட்டயா ஸங்க்ருஹ்ய.  - 162

 

 

நிஷ்ட்டாபித

ஜிநபூஜா:

சூர்ண ஸ்நபநேந

த்ருஷ்ட விக்ருத

விசேஷா: ஸுரபதய:

புந: நந்தீச்வர

ஜிநபவநாநி

ப்ரதக்ஷிணீக்ருத்ய

தத: நிர்க்கத்ய

மந்தரகிரிம்

ப்ராப்ய தத்ரத்ய

பஞ்சஸு மந்தர

கிரிஷு ஸ்ரீ

பத்ரஸால

நந்தந ஸௌமநஸம்

பாண்டுக

வநம் இதி தேஷு

ப்ரத்யேகம்

ஜிந க்ருஹாணி

சத்வாரி ஏவ, அத

தாநி பரீத்ய

தாநிச நமஸித்வா

தத்ராபி

க்ருதஸு பூஜநா:

ஸர்வே

ஸ்வசேஷ்டயா

ஸ்வாஸ்பத

மௌல்யம்

ஸங்க்ருஹ்ய

ஸ்வாஸ்பதம்

ஈயு :

 

             மேற்கூறியவாறு ஜிந பூஜையை செய்தவர்களும், அவ்வாறு ஜிந அபிஷேகம் செய்யும்பொழுது தங்கள்மேல் சிதறப்பட்ட கந்தோதகத்தோடு சேர்ந்த, சூர்ணப் பொடிகளினால், காண்பதற்கு மங்களகரமாக மாறின உருவமுடையவர்களுமான தேவேந்திரர்கள் ; மீண்டும் ஒருமுறை நந்தீச்வர த்வீப ஜிநாலயங்களை வலம் வந்து (பூயாத் புனர் தரிசனம் என்று) வணங்கி அங்கு நின்றும் புறப்பட்டு வந்து மேரு கிரிகளை அடைந்து, அங்குள்ள (1) ஸுதர்சன மேரு, (2) விஜய மேரு, (3) அசல மேரு, (4) மந்தர மேரு, (5) வித்யுந்மாலினி மேரு என்ற ஐந்து மேரு பருவதங்களிலும் உள்ள மனோகரமான (1) பத்ராஸாலவனம், (2) நந்தனவனம், (3) ஸௌமனஸ வனம், பாண்டுக வனம் என்ற (பெயருடைய) சிறந்த அவ் வனங்களில் ; அடியிலிருந்து வரிசையாகவுள்ள அவைகள் ஒவ்வொன்றிலும் பொருந்தியுள்ள இயற்கை ஜிநாலயங்கள், பக்கத்துக்கு நான்கு நான்கேயாகும் ; மங்களகரமான அந்த ஜிநாலயங்களை மும்முறை வலம் வந்து மீண்டும் மீண்டும் துதிபாடி , அந்த ஆலயங்களிலுள்ள ஜிந பிம்பங்களுக்கும் சிறந்த பூஜையைச் செய்தவர்களான அவர்கள் (தேவர்கள்) எல்லோரும், தத்தம் உத்தமச் செயல்களால், நற்பதவிக்குக் காரணமான மதிப்பிட முடியாத நல்வினைகளைச் சேகரித்துக் கொண்டு, தேவருலகிலுள்ள தங்கள் தங்களிருப்பிடத்தைச் சென்றடைந்தனர்.

 

ஸஹதோரண ஸத்வேதீ பரீதவந

   யாக வ்ருக்ஷ மாநஸ்தம்ப

த்வஜ பங்க்தி தசக கோபுர சதுஷ்ட்டய

    த்ரிதய ஸால மண்டப வாயை :  - 163

 

 

அபிஷேக ப்ரேக்ஷணிகாssக்ரீடந ஸங்கீத

   நாடகாலோக க்ருஹை :

சில்பி விகல்ப்பித கல்ப்பந ஸங்கல்பாதீத

   கல்பநை: ஸமுபேதை:  - 164

 

 

வாபீஸத் புஷ்கரிணீ ஸுதீர்க்கிதாத்யம்பு

    ஸம்ஸ்ரிதை: ஸமுபேதை :

விகஸித ஜலருஹ குஸுமை: நபஸ்யமாநை :

   சசிக்ர ஹர்க்ஷைச் சரதி  - 165

 

 

ப்ருங்கா ராப்தக கலசாத்யுப கரணை

   ரஷ்ட சதக பரிஸங்க்யாநை:

ப்ரத்யேகம் சித்ரகுணை: க்ருதசண சண

   நிநதே விதத கண்டா ஜாலை: -  166

 

 

ப்ரப்ராஜந்தே நித்யம் ஹிரண்மயா

   நீச்வரேசிநாம் பவநாநி

கந்த குடீகத ம்ருகபதி விஷ்டர ருசிராணி

    விவித விபவ யுதாநி.  -  167

 

 

கந்தகுடீ கத

ம்ருக பதி விஷ்ட்டர

ருசிராணி

விவித விபவயுதாநி

ஹிரண்மயாநி

ஈச்வரேசிநாம்

பவநாநி

சில்பி விகல்பித

கல்ப்பந ஸங்கல்ப்ப

அதீத கல்ப்பநை:

ஸமுபேதை: விகஸித

ஜலருஹ, குஸுமை:

சரதி சசி க்ரஹ

(ர்)ருக்ஷை:

நபஸ்யாமாநை:

வாபீஸத், புஷ்கரிணீ, ஸு

தீர்க்கிகா ஆதி

அம்பு ஸம்ச்ரிதை:

ஸமுபேதை:

ஸஹ தோரண

ஸத்வேதீ பரீத

வந யாக வ்ருக்ஷ

மாநஸ்தம்ப

த்வஜபங்க்தி தசக

கோபுர சதுஷ்ட்டய

த்ரிதய ஸால

மண்டப வர்யை:

அபிஷேக,  ப்ரேக்ஷணிக

ஆக்ரீடந, ஸங்கீத நாடக

ஆலோக க்ருஹை:

ப்ரத்யேகம், சித்ரகுணை:

அஷ்ட சதக

பரிஸங்க்யாநை:

ப்ருங்கார

அப்தக கலச

ஆதி உபகரணை:

க்ருத் சண சண

நிநத  விதத

கண்டாஜாலை:

நித்யம்

ப்ரப்ராஜந்தே

 

        108 கந்தகுடி மண்டபங்களினுள் இருக்கின்ற (108) சிம்மாஸனங்களால் மனோஹரமாகியனவும், பல்வேறு சிறப்புக்களால் பொருந்தியனவும், குற்றமற்ற பொன்மயங்களுமான ஜிந பகவானின் பிரதிமைகள் உள்ள இயற்கை ஜிநாலயங்கள் ; சிற்பிகள் உள்ளத்திலும் அறிய வியலாத பல்வேறு வகை விசேஷ சிறப்புகள் அமைந்தனவும், மணங்தங்கிய மலர்ந்த கமல மலர் முதலிய நீர் பூக்களினால் நிறைந்து, சரத் காலத்தில் பிரகாசிக்கும் சந்திரன், கிரகங்கள், நக்ஷத்திரங்கள் ஆகியவற்றோடு சேர்ந்தாகாயம் போல் விளங்குகின்ற, நீர் நிறைந்த வட்டமான குளம், முக்கோணமான குளம், நாற்சதுரமான குளம் முதலான தடாகங்களினால் சிறப்புற்றோங்கியதும், மங்களகரமான தோரணம் முதலியவற்றோடு சேர்ந்த மேடைகளால் சூழப்பட்ட கற்பகவனங்களும், த்வஜஸ்தம்பங்களும், மானஸ்தம்பங்களும், மயில் முதலான பத்துவகைக் கொடிகள் தங்கிய த்வஜங்களின் வரிசைகளும், நாற்புறமும் நான்கு கோபுரங்கள் விளங்கும் வாசற்படிகளும், மூன்று அட்டாலயங்களை (விளிம்புகளை) யுடைய மூன்று மதில்களும், மூன்று பிரிவு உடையதாகிய உழைக்கல மண்டபங்களும் ஆகிய இவைகளாலும் ; மற்றும் அபிஷேகத்தின் போது (ஆனந்த நர்த்தனம் செய்யத்தக்க) நடன மண்டபம், ஹாஸ்யம் செய்து விளையாடும் க்ரீடார்த்தி மண்டபம், அதிசயமான பதினெண் வகை வாத்தியக் கருவிகளைக் கொண்டு ஒலியிடும் சங்கீத மண்டபம், தேவமாதரின் நடனம் காணும் நாட்டிய மண்டபம் ஆகிய இவைகளாலும் ; மற்றும், இயற்கை ஆலயம் ஒவ்வொன்றிலும் உள்ள நூற்றெட்டு என்கிற எண்ணுள்ள கெண்டீர், கண்ணாடி, கலசம் முதலான மங்கலத் திரவியங்களாலும், கண கணவென ஒலியிடும் கம்பீரமான தோற்றமுள்ள கண்டாமணிகளின் சமூகங்களாலும் நிறைந்து, எந்தக் காலத்திலும் அழிவென்பதேயில்லாமல், நித்திய ஸ்வபாவமுடையனவாகி நன்கு விளங்கிக் கொண்டிருக்கின்றன.

 

யேஷு ஜிநேசாம் ப்ரதிமா: பஞ்சசத

   சராஸ நோர்ச்சிதா ப்ரதிமா:

மணிகநக ரஜத விக்ருதா: திநகர கோடி

   ப்ரபாதிக ப்ரப தேஹா:  - 168

 

 

தாநி ஸதா வந்தேsஹம் பாநு ப்ரதிமாநி

   யாநி காநிச தாநி

யசஸா மஹஸா ப்ரதி திச மதிசய

   சோபா விபாஞ்ஜி பாப விபஞ்சி.  - 169

 

 

யேஷு, ஜிநேசாம்

ப்ரதிமா: பஞ்ச

சத சராஸந

உத்ச்ரிதா  அப்ரதிமா:

மணி கநக ரஜத

விக்ருதா:

திநகரகோடி

ப்ரப அதிக

ப்ரபதேஹா: தாநி

யசஸா மஹஸா

ப்ரதிதிசம்  அதிசய

சோபா விபாஞ்ஜி

பாப விபஞ்ஜி

பாநு ப்ரதிமாநி

யாநி காநிச

பவநாநி தாநி

அஹம் ஸதா வந்தே

 

           எந்த இயற்கை ஜிநாலயங்களில் ; (பல்யங்காசனமாக) அமைந்திருக்கின்ற ஜிநேஸ்வரர்களுடைய பிரதி பிம்பங்கள் ஐந்நூறு வில் உன்னதம் உடையனவும், இணையற்றனவும், நவமணிகள், பொன், வெள்ளி முதலியவற்றாலான கந்தகுடியின் மையத்திலிருப்பதனால், நானாவித வர்ணமாகக் காட்சி யளிக்கின்றனவும், கோடி சூரியர்களுடைய காந்தியைக் காட்டிலும், அதிகமான காந்தியுள்ள பிரதி பிம்பங்களுமாகி யிருக்கின்றனவோ; அத்தகைய, பெருமை வாய்ந்தனவும், அளவிலா ஒளிப் பிழம்பினால் எத்திக்கிலும் காண்பதற்கு வியப்பெய்துமாறு மனோஹரமான சோபையுடன் விளங்குகின்றனவும், பவ்வியர்களின் தீவினையைப் போக்குகின்றனவும், சூரியன் போல விளங்குகின்றனவுமான இயற்கை ஜிநாலயங்கள் எவ்வளவு இருக்கின்றனவோ, அவைகளையெல்லாம் யான் எப்பொழுதும் துதித்து வணங்குகிறேன்.

 

     "ஈசாம்" என்பது,  "ஈட், ஈசௌ, ஈச " என்ற முதல் விபக்தியின், ஆறாவதில், "ஈச : , ஈசோ; , ஈசாம் " என்று வருவதனைப் பின்பற்றியதாகும். "கோடிந்து ஸூர்யநிப தேஹப்ரகாசாய " என்பர்.

 

  ----------------------------------------------- 

தர்ம கண்டங்களில் முக்காலங்களிலும் தோன்றி முக்தி (யடைந்த, அடையப் போகின்ற,) அடைகின்ற ஜிநேந்திரர்களைக் குறித்து வணங்குகின்றார்.

           *******   

 

ஸப்தத்யதிக சதப்ரிய தர்மக்ஷேத்ர

   கத தீர்த்த கரவர வ்ருஷபாந்

பூத பவிஷ்யத் ஸம்ப்ரதி கால பவாந்

   பவ விஹாநயே விநதோஸ்மி.  -  170

 

சப்ததி அதிக சத

ப்ரிய தர்மக்ஷேத்ர

கத, பூதகால பவாந்

ஸம்ப்ரதி கால பவாந்

தீர்த்தகர வர

வ்ருஷபாந்  அஹம்

பவ விஹாநயே

விநத: அஸ்மி

 

      நூற்றெழுபது தர்மகண்டங்களில் ; இறந்த காலத்தில் பிறந்தவர்களும், எதிர்காலத்தில் பிறக்கப் போகின்றவர்களும், நிகழ் காலத்தில் பிறக்கின்றவர்களுமாகி அறவுரை பொழிந்து, முன்னம் முக்தியடைந்த, இனி அடையக்கூடிய, இப்பொழுது அடைகின்ற சிரேஷ்டர்களான மிகச் சிறந்து விளங்கிய ஜிநேந்திரர்களை யான், என் பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு வணங்குமவனாகின்றேன். (வணங்குகிறேன்.)

 

   " ஸ்யு : உத்தரபதே வ்யாக்ர புங்கவ ரிஷப குஞ்சர ஸிம்ம ஸார்த்தூல நாகாத்யா பும்ஸி சிரேஷ்ட்டார்த்த கோசரா: " அமரம். வியாக்ர, புங்கவ, ரிஷப, குஞ்சர, ஸிம்ம, ஸார்த்தூல நாகம் முதலானவை உத்தரபதமாக வந்து புல்லிங்கமாகி இருப்பின், சிரேஷ்ட்டார்த்தம் என்பது நூற்பொருளாதலின், ஈண்டு, "தீர்த்தகர வ்ருஷபரந்" என்பது சிரேஷ்டமான பொருளையே தந்தது. வ்ருஷபாந் என்ற பதம் முதலில் இருந்தால் மட்டும் தீர்த்தங்கரனைக் குறிக்கும். விநத : என்பது யான் நமஸ்காரம் செய்தவன் என்று கர்த்தரி ப்ரயோகமாக நின்றது.

 

 

அஸ்யாமவஸர்ப்பிண்யாம் வ்ருஷப ஜிந:

   ப்ரதம தீர்த்த கர்த்தா பர்த்தா

அஷ்ட்டா பதகிரி மஸ்தக கதஸ்திதோ

   முக்திமாப பாபாந் முக்த:  - 171

 

 

அஸ்யாம்

அவஸர்ப்பிண்யாம்

வ்ருஷப ஜிந:

ப்ரதம தீர்த்த-

கர்த்தா, பர்த்தா

ஸ: (பகவாந்)

அஷ்டாபத கிரி

மஸ்தக கத ஸ்தித:

பாபாத் முக்த:

முக்திம் ஆப

தம் விநநோஸ்மி

 

            இந்த அவஸர்ப்பிணி காலத்தில் (அறம் போதித்த தீர்த்தங்கரர் இருபத்து நால்வரில்) விருஷப தீர்த்தங்கரர் முதல் தீர்த்தங்கரராகி (ஆதிபகவானாகி), பவ்வியர்களுக்கு ஆதியில் அறமுரைத்துக் காப்பவரானார். அதன்பிறகு அவர், எட்டு பட்டையாகவுள்ள கைலாஸ கிரியின் உச்சியை அடைந்து காயோத் ஸர்க்கமாக யோகத்தில் நின்று, அகாதி கர்மத்தாலும் விடப்பட்டவராகி, முக்தியை அடைந்தார். அந்த ஆதி பகவனைப் பக்தியுடன் வணங்குகிறேன்.

 

       மாறி மாறித் தோன்றும் உத்ஸர்ப்பிணி அவஸர்ப்பிணி காலங்களில், இப்பொழுது நடப்பது உண்டாவஸர்ப்பிணி காலம் என்பதைக் குறிப்பிட வேண்டி,  'அஸ்யாம் அவஸர்ப்பிணியாம் ' என்றார். கைலாசகிரி, அர்க்ககீர்த்தி குமாரனால் எட்டு பட்டையாகச் செய்யப்பட்டது என்பது புராண வரலாறு.

 

ஸ்ரீ வாஸு பூஜ்ய பகவாந் சிவாஸு

   பூஜாஸு பூஜிதஸ்த்ரித தசாநாம்

சம்பாயாம் துரிதஹர: பரமபதம்

   ப்ராப்தாப தாமந்த கதா:  - 172

 

 

சிவாஸு பூஜாஸு

த்ரிதசாநாம் பூஜித:

ஸ்ரீ வாஸு பூஜ்ய

பகவாந் துரித ஹர:

ஆபதாம் அந்தகத:

சம்பாயாம்

பரம்பதம் ப்ராபத்

தம்ச விநதோஸ்மி

 

   மங்களகரமான ஸ்வாமியின் கர்ப்ப அவதரணம் முதலிய பஞ்ச கல்யாண பூஜையில், தேவர்களால் பூஜிஐஃகப்பட்ட அந்தரங்க லக்ஷ்மி நாயகரான வாஸுபூஜ்ய பகவான் (சம்பாபுரத்தில்), வினைகளைக் கெடுத்தவராய்த் துன்பகரமான பிறவியின் முடிவை (கரையை)க் கண்டு சம்பாபுரத்தில் முக்தி அடைந்தார். அவரையும் துதித்து வணங்குகிறேன்.

 

   பூஜித:  என்ற கிருதந்தத்தின் சம்பந்தத்தை அடைந்திருக்கிற 'த்ரிதசாநாம்' என்ற ஷஷ்டி விபக்திக்கு மூன்றாம் வேற்றுமைக்குக் கூறவேண்டிய கர்த்ரு அர்த்தம் கூறவேண்டியதென்பது நூல்முறை. "ஷஷ்டி சேஷே கர்த்ரு கர்மணோ க்ருதி" என்பதறிக.

 

முதிதமதி பல முராரி ப்ரபூஜிதோ

   ஜிதகஷாய ரிபுரத ஜாத:

ப்ருஹ தூர்ஜ்ஜயந்த சிகரே சிகாமணி

     ஸ்த்ரி புவநஸ்ய நேமிர் பகவாந்.  173

 

 

முதித மதி  பல முராரி

ப்ர பூஜித:

ஜித கஷாய ரிபு:

அத நேமி: பகவாந்

ப்ருஹத்

ஊர்ஜ்ஜயந்த சிகரே

த்ரிபுவநஸ்ய

சிகாமணிஜாத:

தம்ச விநதோஸ்மி

 

       உள்ளத்தே மிக்க மகிழ்ச்சி கொண்டவர்களான பலதேவர் கிருஷ்ணர் ஆகிய இருவராலும் பூஜிக்கப்பட்டவரும், கொடிய பகைவனாகிய மோகனீயமென்னும் கர்மராஜனை (அவன் படைகளாகிய ஞானாவரணீயம், தரிசனாவரணீயம், அந்தராயம் ஆகியவற்றோடு) வென்றவருமான நேமி தீர்த்தங்கரர் பகவன் தன்மையடைந்து அறமுரைத்துப் பின்பு பெருமை தங்கிய ஊர்ஜ்ஜயந்தகிரி யின்மிசை யோகத்திலமர்ந்து , அகாதி கர்மங்களையும் வென்று, எண் குணங்களுடன் மூவுலகிற்கும் முடிமணி போன்ற முக்திகதியைச் சென்றடைந்து விளங்கினார். அவரையும் துதித்து வணங்குகிறேன்.

 

 

பாவா புரவர ஸரஸோ மத்யகதஸ்

   ஸித்திவ்ருத்தி தபஸாம் மஹஸாம்

வீரோ நீரதநாதோ பூரிகுணச்

    சாரு ஸௌக்ய மாஸ்பதமகமத்.  - 174

 

 

நீரத நாத:

பூரிகுண:

ஸித்தி வ்ருத்தி

தபஸாம் மஹஸாம்

ஆஸ்பதம் வீர:

பாவாபுர வர

ஸரஸ: மத்யகத:

சாரு ஸௌக்யம்

ஆஸ்பதம் அகமத்

தம் ச விநதோஸ்மி

 

            மேக கர்ஜனை போன்ற இயற்கையான த்வ்யத்வனியுடையவரும், அனந்த ஞானாதி (எண்) குணங்களை உடையவரும், சித்தியை அளிக்கவல்ல தவங்களுக்கும், மன வசன காய ஜோதிகளுக்கும் இருப்பிடமானவரும் ஆகிய, மகாவீர பகவான் ; பாவாபுரத்தில் உள்ள தடாகத்தின் மையத்தில் (அமைந்த கற்பாறையில்) யோகமடைந்தவராகி, மனோஹரமான இன்பத்திற்கு இருப்பிடமான முக்தியை அடைந்தார். அவரையும் துதித்து வணங்குகிறேன்.

                       

ஸம்மதகர வநபரிவ்ருத ஸம்மேத

    கிரீந்த்ர மஸ்தகே விஸ்தீர்ணே

சேஷாயே தீர்த்தகரா: கீர்த்தி ப்ருத:

   ப்ரார்த்தி தார்த்த ஸித்திமவாபந்.       175

 

 

கீர்த்தி ப்ருத:

சேஷா: தீர்த்தகரா:

யே தே விஸ்தீர்ணே

ஸம்மத கர வந

பரிவ்ருத ஸம்மேத

கிரீந்த்ர மஸ்தகே

ப்ரார்த்தி தார்த்த

ஸித்திம் அவாபந்

தாந் ச  விநதோஸ்மி

 

              மூவுலகோராலும்  புகழப் பட்டவர்களான அஜிதர் முதலாகவுள்ள மற்ற இருபது தீர்த்தங்கரர்கள் (அஜிதநாதர், சம்பவநாதர்,  அபினந்தநாதர், சுமதிநாதர்,பத்மபிரப நாதர், சுபார்ஸ்வநாதர், சந்திரபிரப நாதர், புஷ்பதந்தநாதர், சீதளநாதர், சிரேயாம்ஸ நாதர்,  விமலநாதர், அனந்தநாதர், தர்மநாதர், சாந்திநாதர், குந்துநாதர், அரநாதர், மல்லிநாதர், முனிசூவிரத நாதர், நமிநாதர், பார்சுவநாதர்) எவர்களுண்டோ ; அவர்கள் எல்லோரும், விசாலமான (பரப்பளவுள்ள) தும், காண்பவர் உள்ளத்தைக் கவர்ச்சி செய்கின்ற மூலிகைகள் நிறைந்த வனங்களால் சூழப்பட்டனவுமான மிகச் சிறந்த சம்மேத கிரியின் மேல் பரப்பில் தாங்கள் விரும்பிய காரிய ஸித்தியை (முக்தியை) அடைந்தார்கள். அவர்களையும் துதித்து வணங்குகிறேன்.

 

சேஷாணாம் கேவலிநாம சேஷமத வேதி

   கணப்ருதாம் ஸாதூநாம்

கிரிதல விவர தரீஸரி துருவந

    தருவிடப ஜலதி தஹந சிகாஸு.  - 176

 

 

மோக்ஷகதி ஹேதுபூத ஸ்தாநாநி

    ஸுரேந்த்ர ருந்த்ர பக்திநுதாநி

மங்கள பூதாந்யேதாந்யங்கீக்ருத

      தர்ம கர்மணாமஸ்மாகம். - 177

 

 

கிரி   - மலைகள்,

தல    -தாழ்வரை (மலைச்சாரல்)கள்,

விவர -  மரப் பொந்துகள்,

தரீ - மலைக் குகைகள்

சரித் உருவந - ஆறுகள், பெரிய வனங்கள்,

தருவிடப - கிளைகள் அடர்ந்த மரங்கள்,

 

ஜலதி தஹநசிகாஸு

ஏதேஷு சேஷாணாம்

கேவலிநாம்

அசேஷமத வேதி

கண ப்ருதாம்

ஸாதூநாம்

மோக்ஷகதி ஹேது

பூத ஸ்தாநாநி

ஸுரேந்த்ர ருந்த்ர

பக்தி நுதாநி பவந்தி

அங்கீக்ருத

ஏதாநி தர்மகர்மணாம்

அஸ்மாகம் மங்கள

பூதாநி பவந்து

 

          கடல்கள், ஏரியின் மையம் ஆகிய இவைகளில் கேவலஜ்ஞானம் அடைந்த (தீர்த்தங்கரர்கள் தவிர) ஏனையோர்கள், உலகிலுள்ள ஏனைய மதக் கொள்கைகளை (யும்) அறிந்த கணதரர்கள், முக்தி நெறியைச் சாதிக்கும் சாது பரமேஷ்டிகள் ஆகியோர் மோக்ஷம் அடைவதற்குக் காரணமான இடங்கள், ஆகியவை தேவேந்திரர்களால் பக்தியிடன் கூடி துதித்து வணங்கும் இடங்களாக ஆகின்றன. ஆகவே, இவ்விடங்கள் அறச்செயலில் ஈடுபட்டுள்ள நமக்கு எந்தக் காலங்களிலேயும் (இடைவிடாமல்) மங்களகரமானதாக (தர்மானுபந்தி புண்ணியத்தை அடைவிப்பதாக) ஆகட்டும்.

 

      மலைகள், கடல்களின், மேல்நீர் மட்டம், ஆறு முதலிய இடங்களில் முனிவர்கள் தவமியற்றி முக்தியடைவார்கள் ; ஆகவே, அவ்விடங்கள் தேவராதியோரும் வணங்கும் தகுதி பெறுகிறது. அவ்விடங்கள் முக்தி ஸ்தானங்களாதலின் ; நமக்கு, இறைவனை வணங்குவது போலவே, அவன் நின்ற இடங்களும் வணங்கும் தகுதி உடையதாகிறது.

 

ஜிநபதயஸ் தத்ப்ரதிமா :

    ததாலயா ஸ்தந் நிஷத்யகா ஸ்தாநாநி

தே தாச்ச தேச தாநிச பவந்து

       பவகாத ஹேதவோ பவ்யாநாம்.  - 178

 

 

தே ஜிநபதய:

தா: தத்ப்ரதிமா:

தே தத் ஆலயா:

தாநி தந் நிஷத்யகா-

ஸ்தாநாநி,

பவ்யாநாம் அஸ்-

மாகம், பவகாத

ஹேதவோ பவந்து

 

      மேற்கூறிய 24 தீர்த்தங்கர பரமதேவர்களும் மேற்கூறிய அவர்களின் ஜிநப்பிரதிமைகளும் மேற்கூறிய அவர்களின் இயற்கை ஜிநாலயங்களும், மேற்கூறிய அந்த ஜிநர்கள் முக்தியடைந்த ஸ்தானங்களில் அமைந்த மேடை முதலியனவும், பவ்வியர்களாகிய நமக்கு, பிறவிச் சுழற்சியைக் கெடுப்பதற்குக் காரணங்களாக ஆகட்டும்.

 

ஸந்த்யாஸு திஸ்ருஷு நித்யம்

   படேத்யதி ஸ்தோத்ரமேத்துத்தம யசஸாம்

ஸர்வஜ்ஞாநாம் ஸார்வம் லகு லபதே

   சருத தரேடிதம் பதமமிதம்.  - 179

 

 

உத்தம யசஸாம்

ஸர்வஜ்ஞாநாம்

ஏதத் ஸ்தோத்ரம்

கச்சித் நித்யம்

திஸ்ருஷு

ஸந்த்யாஸு

படேத்யதி ஸ:

ச்ருததர ஈடிதம்

ஸார்வம், அமிதம்

பதம் லகு லபதே

 

         மிகமிகச் சிறப்பு வாய்ந்த உலகம், அலோகம் ஆகியவற்றிலுள்ள சமஸ்தத்தையும் அறியும் கேவல ஞானிகளான ஜினேந்திரர்களுடைய இந்தத் தோத்திரத்தை ; ஒருவன் தினந்தோறும் காலைப்பொழுது, உச்சிப்பொழுது, மாலைப் பொழுது ஆகிய மூன்று காலங்களிலும், தவறாமல் படிப்பானாகில், அவன், கணதர பரம தேவர்களால் துதிக்கப் பட்டதும், யாவருக்கும் முக்தி இன்பத்திற்குக் காரணமானதும் ஆகிய, அனந்த வீரியத்தை அடைவதற்குக் காரணமான முக்தியை அதிவிரைவில் அடைகிறான்.

 

உடலின் இயற்கை அதிசயம் பத்தாவன,

 

நித்யம் நி:ஸ்வேதத்வம் நிர்மலதா

   க்ஷீரகௌர ருதிரத்வஞ்ச

ஸ்வாத்யாக்ருதி ஸம்ஹநநே ஸௌரூப்யம்

   ஸௌரபஞ்ச ஸௌலக்ஷ்ம்யம்.  - 180

 

 

அப்ரமித வீர்யதாச ப்ரியஹித

   வாதித்வ மந்யதமித குணஸ்ய

ப்ரதிதா தச ஸங்க்யாதா: ஸ்வதிசய

   தர்மா: ஸ்வயம்புவோ தேஹஸ்ய.  - 181

 

 

அமிதகுணஸ்ய

ஸ்வயம்புவ:  தேஹஸ்ய

ஸு அதிசய  தர்மா:

அந்யத்  நித்யம்

நிஸ்வேதத்வம்

நிர்மலதா

க்ஷீர கௌர ருதிரத்வம்

ஸ்வாத்யாய   ஆக்ருதி-

ஸம்ஹநநே

ஸௌரூப்யம்

ஸௌரபம்

ஸௌலக்ஷ்ம்யம்

அப்ரதிம  வீர்யதா

ப்ரியஹித- வாதித்வம்,

தச  ஸங்க்யாதா:

இதி ப்ரதிதா.

 

          கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா இன்பம், கடையிலா வீரியம் ஆகிய நான்கு குணங்களைப் பெற்று ஸ்வயம்புவான தீர்த்தங்கர பரமதேவனுக்கு (அருகனுக்கு)ப் பொருந்தியுள்ள பரம ஔதாரிக திவ்ய சரீரத்தினுடைய இயற்கை (ஸ்வபாவ) அதிசயங்கள் (பத்தும்) உலகத் தன்மைக்கு (உலகமக்களின் உடலமைப்புக்கு) மாறான தன்மையன. அதாவது, அவர் (பகவானுடைய) திருமேனியில் எப்பொழுதும் வேர்வை இல்லாதிருத்தல் (ஸ்வேதாபாவம்), அவர் உடலில் தூசு படியாமலும், அழுக்கின்றியும் இருத்தல், (ரஜோமலாபாவம்), உடலின் உதிரம் பால் போல வெண்மையாய் இருத்தல், (க்ஷீரஸமாந ரஸ விசேஷம்), (பொதுவாக) உடலமைப்புக்குக் கூறிய அறுவகை அங்க அளவில் (அடையாளத்தில்) முதலாவதாகிய (அங்கோபாங்கம்), உடலின் நாற்புறமும் இருக்கவேண்டிய அளவு ஒத்து அமைந்திருத்தல் (சது சதுரம்ஸ ஸம்ஸ்தாநம்), அவ்வாறே அறுவகை வலிமைக்குக் கூறிய ஆறில் முதலாவதாகிய, வஜ்ஜிரம் போன்ற எலும்பு(க் கூடு)கள், ஒன்றோடொன்று பொருந்தி அவை, விலகாதவண்ணம் ஆணி அடித்தது போன்ற எலும்பின் உறுதி அமைந்திருத்தல், (வஜ்ரவ்ருஷப நாராச ஸம்ஹநநம்), (பகவான்)  திருவுருவம் இணையின்றி அழகுடன் இருத்தல்,(உபமாதீத ஸௌந்தர்யம்), அந்த திவ்ய உடல் சுகந்தமான நறுமணங் கமழ்ந்திருத்தல் (பரமமான பரிமள கந்தம்), அவர் திருமேனியில் (1008) திருமறுவின் உலக கணம் அமைந்திருத்தல் (ஸ்ரீதேவ்யாதி ஸ்ரீலக்ஷணம், மற்றும் பகவந்தனுக்கு), அளவில்லாத வீர்ய (பல)ம் அமைந்திருத்தல், (அளவில்லாத மஹாபலம்), மேலும், கேட்பவர்க்குப் பிரியமான நன்மையளிக்கவல்ல சொல்லின் திறதை (சக்தி) பொருந்தி இருத்தல், (ஸ்ரவணப்பிரியமான வசன ப்ரவர்த்தி) ஆகிய இந்த பத்து வகையான குணங்களை (தன்மைகளை) இயல்பாகவே பெற்றவர், என்று நூல்களில் விளக்கமாகக் கூறப்படுகின்றன.

 

 

  ஸம்ஹநநம் உறுதியையும், மஹாபலம் வீரியத்தையும் குறிக்கும், சிறிது விசேஷமுண்டு.

 

"விலங்கரசன் வலிவிலக்கி வேர்ப்பொழிந்து

   விமலமாய் வெளிதா யுன்மேல்

இலங்குபொறி யாயிரத்தெட் டிருந்தழகார்ந்

   திளநாற்ற மியல்பா யின்சொல்

புலந்தனக்கின் னமுதமாகி வஜ்ஜிரப்பூண்

    செறிந்தாணி யறைந்த யாப்பாய்

இலங்குவடி வுடையதிரு மூர்த்தியியல்

    பதிசயனெம் மிறைவ நீயே. "

         - மேருமந்தரம் 1192-

 

     ஸம்ஸ்தாநம், ஸம்ஹநநம் இரண்டும் நாம கருமத்தின் உட்பிரிவு ஆகும். அவை ஒவ்வொன்றும் ஆறு பிரிவுகளை உடையன. ஸம்ஸ்தாநம் - அடையாளம். ஸம்ஹநநம் - பலம் (வலிமை). அவைகள் வருமாறு,

 

(1) ஸமசதுரஸ்ர ஸம்ஸ்தாநம் :- உடலின் உருவம் நாபிக்கு (கொப்பூழ்க்கு) மேலும் கீழும் சமானமாயிருத்தல்.

 

(2) ந்யக்ரோத ஸம்ஸ்தாநம் :- நாபிக்குக் கீழ் (அடி) சிறுத்தும் மேல் பெருத்தும் இருத்தல் (ஆலமரத்தைப் போல்வது)

 

(3) ஸ்வாதி ஸம்ஸ்தாநம் :- அடி பெருத்தும், மேல் சிறுத்தும் இருத்தல் (புற்று போல்வது).

 

(4) குப்ஜ ஸம்ஸ்தாநம் :-முதுகு கூனாக வளைந்திருத்தல்.

 

(5) வாமந ஸம்ஸ்தாநம் :- குள்ளமான உருவமடைந்திருத்தல்.

 

(6) ஹுண்ட ஸம்ஸ்தாநம் :- சிறிதும் பெரிதுமாகிய கற்களைக் கோணியில் கட்டிவைத்தது போன்று சில அவயவம் சிறுத்தும், சில பெருத்தும் விகாரமடைந்திருத்தல் என்பன.

 

ஸம்ஹநநம் 6, ஆவன.

 

(1) வஜ்ர ரிஷப நாராச ஸம்ஹநநம் :-  வஜ்ஜிரம் போன்ற  எலும்புகள் இரண்டிரண்டாக இணைந்திருக்குமிடத்தில், வஜ்ஜிரம் போன்ற உறுதியான கீலும் பூட்டும் பொருந்தி, வஜ்ஜிரம் போன்ற ஆணியும் அடித்தது போன்று உறுதியா யிருத்தல்.

 

(2) வஜ்ர நாராச ஸம்ஹநநம் :-  மேலே கூறியவற்றுள் ஆணி மட்டும் இல்லாமல் மற்றவை அமைந்திருத்தல்.

 

(3) நாராச ஸம்ஹநநம் :- வஜ்ரம் போன்று அதிக உறுதியில்லாமல் ஓரளவு உறுதியுடன், கீல் பூட்டுபோன்று அமைந்திருத்தல்.

 

(4) அர்த்த நாராச ஸம்ஹநநம் :- நாராச ஸம்ஹனனத்தில் பாதி வலிமையுடையதாகி, ஒரு பக்கத்தே கீல்பூட்டும், மற்றப் பக்கத்தே அவை இல்லாமலும் பொருந்தியிருத்தல்.

 

(5) கீலக ஸம்ஹநநம் :- கீல் பூட்டு எதுவுமின்றி எலும்புகள் ஒன்றோடொன்று சேர்ந்து இருத்தல், கீலிதம் எனலுமாம்.

 

(6) அஸம்ப்ராப்த ஸ்ருபாடிகா ஸம்ஹநநம் :-  உள் எலும்புகள் ஒன்றோடொன்று பொருந்தாமலிருந்து, அதன்மேல் உள்ள சிறு நரம்புகள் புலால் முதலியவை பொருந்தியிருத்தல் என்ப. ஆகவே, சமசதுரஸ்ர ஸம்ஸாதாந்த்தையும், வஜ்ர ரிஷப நாராச ஸம்ஹனனத்தையும் குறிப்பிடவேண்டி, "ஸ்வாத்யாக்ருதி ஸம்ஹநநே " என்றார் ஆசிரியர்.

ஈண்டு கூறிய அதிசயங்களை, ஸ்ரீபுராணத்திலே வர்த்தமான ஸ்வாமி புராணப் பகுதியில் கூறப்பட்டுள்ளன. அவை வருமாறு, "ஸ்வபாவாதிசயம்"  பத்துடன் கூடியருளினன் ; அந்த அதிசயம் யாவையோ ? எனில் :-  1. ஸ்வேதாபாவம், 2. ரஜோமலா பாவம், 3. க்ஷீரஸமான ரஸவிசேஷம், 4. ச்ரவண ப்ரியமான வசனப்ரவ்ருத்தி, 5. உபமாதீத ஸௌந்தர்யம், 6. பரமமாகிய பரிமள கந்தம், 7. ஸ்ரீ தேவ்யாதி ஸ்ரீ லக்ஷணம், 8. அளவில்லாத மஹாபலம், 9. வஜ்ர ரிஷபநாராச ஸம்ஹநநம், 10. ஸம சதுரஸ்ர ஸம்ஸ்தாநம் என,

 

     (1)  ஸ்வேதாபாவமாவது - அவர் திருமேனியில் ஒரு காலமும் வேர்ப்பு இல்லாதது, (2) ரஜோ மலாபாவமாவது - பஞ்சேந்த்ரியத்திலும் ஜல மலங்களில்லாதது, (3) க்ஷீரஸமாந ரஸ விசேஷமாவது - திருமேனியில் ரக்தாதிகள் க்ஷீரம் போன்றிருத்தல், (4) ஸ்ரவண ப்ரியதன வசன ப்ரவர்த்தியாவது - ஸர்வ பிராணிகளுக்கும் ஹிதமான வசனமே பாஷித்தருளுவர். (5) உபமாதீத ஸௌந்தர்யமாவது - திருவுருவம் அநேக விசக்ஷணராலும் ரூபிக்கவும் ஒப்பிடவும் போகாதது. (6) பரமமாகிய பரிமள கந்தமாவது - ஸப்த தாதுக்களுக்கும் திசைகள் தோறும் விசிஷ்டமான பரிமளமாயிருக்கும், (7) ஸ்ரீதேவ்யாதி ஸ்ரீ லக்ஷணமாவது : -  சுபமாயிருக்கப்பட்ட ஆயிரத்தெட்டு லக்ஷணத்தையும் உடையார், (8) அளவில்லாத மஹாபலமாவது :- முடிவில்லாத மஹா வீரியம், (9) வஜ்ர ரிஷப நாராச ஸம்ஹநநமாவது :- ஸர்வராலும் போதிக்கப்படாத சரீரம், (10) ஸம சதுரச்ர ஸம்ஸ்தானமாவது :- சதுர் திக்கிலும் அழகிய ரூபம்.

 

கர்மக்ஷயாதிசயம் பத்தாவன :- 1. அச்சாயத்வமும், 2. நிர்புக்தியும், 3. நிருபஸர்க்கமும், 4. நிர் நிமேஷத்வமும், 5. நிர்ஜ்ஜந்துக வதையும், 6. துர்பிக்ஷ விரஹமும், 7. ஸர்வ வித்யேஸ்வரத்வமும், 8. ஸமான நக கேசத்வமும்,9. வ்யோம கமனத்வமும், 10. சதுராநநத்வமும் என.

 

(1) அச்சாயத்வமாவது - அவர் திருமேனியில் நிழலில்லாதது, (2) நிர்புக்தித்வமாவது - அவர்க்கு புக்தியில்லாத து, (3) நிருபஸர்க்கமாவது:- அவர்க்கு உபஸர்க்கமில்லாதது, (4) நிர் நிமே ஷத்வமாவது:- இமை கொட்டாதது, (5) நிர்ஜந்துகவதையாவது :- ஜீவ வதையில்லாதது, (6) துர்பிக்ஷ விரஹமாவது:- அவர் எழுந்தருளியிருந்த தேசத்தில் க்ஷாமம் இல்லாதது, (7) ஸர்வ வித்யே ஸ்வரத்வமாவது:- அவரைத் தியானித்தவளவில் ஸகல வித்தைகளும் ப்ரவேசிக்கும், (8) ஸமான நக கேசத்வமாவது :- நக கேசங்கள் ஸமானமாயிருக்கும், (9) வ்யோம கமனத்வமாவது :- ஆகாசத்தில் சரிப்பது, (10) சதுராநந்த்வமாவது :- சதுர் திக்கிலும் சதுர் வடிவாய் எழுந்தருளியிருப்பர்.

 

தைவீகாதிசயம் பதினாலாவன ; 1. ஸகல பாஷா ஸமந்விதவாக் ப்ரவ்ருத்தி , 2. ஷட்ருது ஸம்பூர்ண ஸஹப்ரவ்ருத்தி , 3. ஸர்வ ஜீவஸ்ய மித்ரபாவம், 4. ஸமஸ்த ஜீவஸ்ய ஸந்தோஷ ப்ரவ்ருத்தி, 5. தர்ப்பண ஸமான பூதலம், 6. மந்தமாருத சலனம்,7. வாயுகுமார உந்மார்ஜ்ஜநம், 8. மேக குமார ஜலப்ரோக்ஷணம், 9. ஜயஜய ஜயாரவதேவ கோஷணை, 10. பூதலே ஸர்வ ஸஸ்யாதி ஸம்வ்ருத்தி, 11. ஆகாச திசா வைமல்யம், 12. அஷ்ட மங்கல சமூகம், 13. அரவிந்த ச்ரேணி, 14. தர்ம சக்ரம் என.

 

அவற்றுள், (1) ஸகல பாஷா ஸமந்வித வாக் ப்ரவ்ருத்தியாவது -- சகல ஜீவன்களுக்கும் தத்தம் பாஷையில் தெரிவிக்கிற திருவாக்கு. (2) ஷட்ருது ஸம்பூர்ண ஸஹ ப்ரவ்ருத்தியாவது -- த்வாதச மாசத்திலுண்டான புஷ்பாதி ஸகல பதார்த்தங்களும் ஸ்வாமி எழுந்தருளியிருந்த தேசத்தில் ஸம்வ்ருத்தியாயிருக்கும். (3) ஸர்வ ஜீவஸ்ய மித்ரபாவமாவது -- ஸகல ஜ

 

தைவீகாதிசயம் பதினாலாவன ; 1. ஸகல பாஷா ஸமந்விதவாக் ப்ரவ்ருத்தி , 2. ஷட்ருது ஸம்பூர்ண ஸஹப்ரவ்ருத்தி , 3. ஸர்வ ஜீவஸ்ய மித்ரபாவம், 4. ஸமஸ்த ஜீவஸ்ய ஸந்தோஷ ப்ரவ்ருத்தி, 5. தர்ப்பண ஸமான பூதலம், 6. மந்தமாருத சலனம்,7. வாயுகுமார உந்மார்ஜ்ஜநம், 8. மேக குமார ஜலப்ரோக்ஷணம், 9. ஜயஜய ஜயாரவதேவ கோஷணை, 10. பூதலே ஸர்வ ஸஸ்யாதி ஸம்வ்ருத்தி, 11. ஆகாச திசா வைமல்யம், 12. அஷ்ட மங்கல சமூகம், 13. அரவிந்த ச்ரேணி, 14. தர்ம சக்ரம் என.

 

அவற்றுள், (1) ஸகல பாஷா ஸமந்வித வாக் ப்ரவ்ருத்தியாவது -- சகல ஜீவன்களுக்கும் தத்தம் பாஷையில் தெரிவிக்கிற திருவாக்கு. (2) ஷட்ருது ஸம்பூர்ண ஸஹ ப்ரவ்ருத்தியாவது -- த்வாதச மாசத்திலுண்டான புஷ்பாதி ஸகல பதார்த்தங்களும் ஸ்வாமி எழுந்தருளியிருந்த தேசத்தில் ஸம்வ்ருத்தியாயிருக்கும். (3) ஸர்வ ஜீவஸ்ய மித்ரபாவமாவது -- ஸகல ஜீவன்களிடத்திலும் மித்ரத்வமாயிருப்பார். (4) ஸமஸ்த ஜீவஸ்ய ஸந்தோஷ ப்ரவ்ருத்தியாவது-- அவர் எழுந்தருளியிருந்த தேசத்தில் கூன், குருடு, செவிடு, முடம் இது முதலாகிய துக்கங்களில் நீங்கி வர்த்திப்பர். (5) தர்ப்பண ஸமான பூதலமாவது -- அவர் எழுந்தருளியிருந்த ஸமவ ஸரண க்ஷேத்திரம் அதி நிர்மலமாகி ப்ரதிபலிக்கும். (6) மந்த மாருத சலனமாவது -- சைத்ய மாந்த்ய ஸௌரப்யமுமாகிய வாயு, ஸமவ ஸரணத்திலே ப்ரவேசிக்கும். (7) வாயுகுமாரோந் மார்ஜ்ஜநமாவது -- வாயு குமாரன் ஸமவ ஸரணத்தில் தூளி முதலாயினவற்றைப் போக்குவிக்கும். (8) மேக குமார ஜல ப்ரோக்ஷணமாவது -- ஸுகந்தி ஹிம ஜலங்களால் மேககுமாரன்  ஸமவ ஸரணம் எப்பக்கமும் ப்ரவேசிக்கும். (9) ஜயஜய ஜயாரவ தேவகோஷணையாவது -- தேவர்களாலும் மனுஷ்யர்களாலும் ஸ்துதி பூர்ணமானது. (10) பூதலே ஸர்வ ஸஸ்யாதி ஸம்வ்ருத்தியாவது -- ஸ்வாமி எழுந்தருளின தேசத்தில் ஸகலமான தான்யங்களும் ஸம்பூர்ணமாயிருக்கும். (11) ஆகாச திசா வைமல்யமாவது -- ஆகாசங்களும்,திக்குகளும் நிர்மலமாயிருக்கும். (12) அஷ்ட மங்கல ஸமூஹமாவது -- த்ரிமேகலா பீடத்திலும், இரண்டாம் பீடத்திலும் அஷ்டமங்கலம் ஸம்பூர்ணமாயிருக்கும். (13) அரவிந்த ச்ரேணியாவது -- ஸிம்ஹாஸநத்தின் மேல் மத்ய கமலத்திற்கு முன் ஏழாயிரம், பின் ஏழாயிரம் தாமரைகளாகும். (14) தர்ம சக்ரமாவது --  ஸமவ ஸரணத்தில் நாற்றிசையிலும் பூதங்களால் தரிக்கப்பட்ட ரத்ந மயமான தர்ம சக்ரம் நான்கு"   என்ப.

 

 

கர்மக்ஷயாதிசயம் (10)

 

கவ்யூதி சத சதுஷ்ட்டய ஸுபிக்ஷதா

   ககந கமநமப்ராணிவத:

புக்த்யுப ஸர்க்காsபாவ: சதுராஸ்ய

   த்வஞ்ச ஸர்வ வித்யேச்வரதா.  - 182

 

அச்சாயத்வ மபக்ஷ்ம ஸ்பந்தச்ச

   ஸமப்ரஸித்த நக கேசத்வம்

ஸ்வதிசய குணா பகவதோ

   காதிக்ஷயஜா பவந்தி தேபி தசைவ.  -  183

 

 

கவ்யூதி

சத சதுஷ்டய

ஸுபிக்ஷதா

ககந கமநம்

அப்ராணிவத:

புக்தி அபாவ:

உபஸர்க்க அபாவ:

சதுரு ஆஸ்யத்வம்

ஸர்வ- வித்யேச்வரதா

அச்சாயத்வம்

அபக்ஷ்ம, ஸ்பந்த :

ஸமப்ரஸித்த

நக கேசத்வம்

இதிஸு அதிசய

குணா: பகவத:

காதிக்ஷயஜாபவந்தி

தே அபி தச ஏவ

 

         பகவான் அறவுரைப் பகரும் சமவசரணத்தின் நாற்புறமும், நானூறு யோசனை (நானூறுகவ்யூதி) தூரம் வரையிலும் பஞ்சமின்றி க்ஷேமமாயிருத்தல், (துர்ப்பிக்ஷவிரஹம்) ஆகாயத்தில் (வான் வழியாகச்) செல்லல் (வ்யோம கமனத்வம்), அவருள்ள இடத்தில் எவ்வுயிர்க்கும் அழிவு ஏற்படாதிருத்தல் (நிர்ஜந்துகவதை), உணவு உட்கொள்ளாதிருத்தல் (நிர்புக்தித்வம்), எவ்வித உபசர்க்கமும் (துன்பந்தரும் வதையும்) இல்லாதிருத்தல் (நிருபஸர்க்கம்), சமவசரண மத்ய கமலத்தில் நாற்புறமும் நான்கு முகமுடைய உருவமாக அமைந்திருத்தல் (சதுராநநத்வம்), பகவானைத் தியானித்த அளவில் சகல வித்தைகளும் சாதகமாவதற்குத் தகுந்த தலைவராயிருத்தல் (ஸர்வ வித்யேச்வரத்வம்), பரம ஔதாரிக திவ்ய திரேகமானதால் அவர் திருமேனியில் நிழல் இல்லாதிருத்தல் (அச்சாயத்வம்),  (கண்) இமை கொட்டாதிருத்தல் (நிர் நிமேஷத்வம்), நகமும் ,கேசமும் வளராமல் சமானமாயிருத்தல் (ஸமான நககேசத்வம்), என்ற இச்சிறந்த அதிசயத் தன்மைகள் ஜிநேந்திரனுக்குக் காதி கர்ம க்ஷயத்தினால் ஆனவைகளாகும் ; அந்த அதிசயங்களும் பத்தேயாகி யிருக்கும்.

 

      கவ்யூதி என்பது யோசனைக்கே அமையவேண்டும் ஏனெனில் ? "யோசனை நானூறகத்தின் " என்ற மேருமந்தரத்துள் 1193 - ல் கூறுவர்.  " கவ்யூதி ஸ்த்ரீ க்ரோசயுகம் " என்று அமரத்தில் கூறியிருப்பதனால் ; ஈண்டு அது, க்ஷல்லக யோசனை என்ற பொருள் தரும் எனலாம்.

 

"சாயைபசி யிமைப்பொழிந்து சதுமுகமாய்

   மயிருகிர்தம் அளவிற் கேற்றுக்

காயமிசை யுலவிநல கலைக்கெல்லா

   மிறைவனுமாய்க் கருமக் கேட்டின்

ஓசனைநா னூறகத்தி னுயிர்கழிவு

   பயிர்களுப சருக்க நீங்கத்

தேசினொடு திளைத்திருந்த திருமூர்த்தி

    அதிசயனெஞ் செல்வ னீயே." 

(மேருமந்தரம்-1193)

 

  யோசனையின் விவரம் சூளாமணி உரைநூல் துறவுச் சருகம் 107; ஆம் கவியின் உரையில் காண்க.

 

 

ஸார்வார்த்தமாக தீயா

   பாஷா மைத்ரீச ஸர்வஜநதா விஷயா

ஸர்வர்த்து பலஸ்தபக ப்ரவாள குஸுமோப

   சோபி தரு பரிணாமா.  - 184

 

 

ஆதர்ச தலப்ரதிமா ரத்நமயீ

   ஜாயதே மஹீச மநோஜ்ஞா

விஹரணமந்வேத்யநில: பரமாநந்தச்ச

    பவதி ஸர்வ ஜநஸ்ய.  - 185

 

 

மருதோsபி ஸுரபிகந்த வ்யாமிச்ரா

   யோஜநாந்தரம் பூபாகம்

வ்யுபசமித தூளி கண்டக த்ருண கீடக

    சர்க்கரோபலம் ப்ரகுர்வந்தி.  - 186

 

 

ததநு ஸ்தநித குமாரா வித்யுந்மாலா

   விலாஸ ஹாஸ விபூஷா:

ப்கிரந்தி ஸுரபி கந்திம் கந்தோதக

   வ்ருஷ்ட்டிமாஜ்ஞயா த்ரிதசபதே:  - 187

 

 

வர பத்மராக கேஸரமதுல ஸுக

   ஸ்பர்சஹேம மயதள நிசயம்

பாதந்யாஸே பத்மம் ஸப்தபுர

   ஸ்ப்ருஷ்ட்ட தச்ச ஸப்த பவந்தி.  - 188

 

 

பலபார நம்ரசாலி வ்ரீஹ்யாதி

   ஸமஸ்த ஸஸ்யத்ருத ரோமாஞ்சா

பரிஹ்ருஷிதேவ ச பூமி: த்ரிபுவந

    நாதஸ்ய வைபவம் பச்யந்தீ.  - 189

 

 

சரதுதய விமல ஸலிலம் ஸரிவககநம்

   விராஜதே விகதமலம்

ஜகதி ச திசஸ்திமிரிகாம் விகதரஜ:

    ப்ரப்ருதி ஜிஹ்ம்பாவம் ஸத்ய:  - 190

 

 

ஏதைதேதி த்வரிதம் ஜோதிர் வ்யந்தர

    திவௌகஸா மம்ருதபுஜ:

குலிச ப்ருதாஜ்ஞாபநயா குர்வந்த்யந்யே

    ஸமந்ததோ வ்யாஹ்வாநம்.  - 191

 

 

ஸ்புரதர ஸஹஸ்ர ருசிரம் விமல மஹா

    ரத்ந கிரண நிகர பரீதம்

ப்ரஹஸித ஸஹஸ்ர கிரண த்யுதி மண்டல

    மக்ரகாமி தர்மஸு சக்ரம்.  - 192

 

 

இத்யஷ்ட்ட மங்களம் ச ஸ்வாதர்ச

    ப்ரப்ருதிபக்திராக பரீதை:

உப கல்ப்யந்தே த்ரிதசை: சதுர்தசை

      தேsபி நிருபமாதி விசேஷா :  - 193

 

ஸார்வார்த்த

மாகதீயா

பாஷா

 

      மக்கள் அனைவரும் பேசும் அவரவர் பாஷை (18) க்கும் பொருள் விளங்கும் தகுதியுள்ள பகவத் திவ்ய பாஷையான அர்த்தமாகதி பாஷை ஒலியிடல் (ஸகல பாஷா ஸமந்விதவாக் ப்ரவ்ருத்தி)

 

ஸர்வஜநதா

விஷயா

மைத்ரீ

 

     பிறவியில் வாழும் ஜீவன்கள் விஷயத்தில் வேற்றுமையின்றி யாவருடனும் மித்திரன் போன்று கருணையுடன் இருத்தல். (ஸர்வ ஜீவஸ்ய மித்ரபாவம்);

 

ஸர்வர்த்து

பல ஸ்தபக

ப்ரவாள

குஸும

உபசோபி

தரு பரிணாம

 

      அறுவகை, ருதுகாலங்களிலும் (12 மாதங்களிலும்), கிடைக்கின்ற பழங்கள், கொத்து கொத்தாகிய தளிர்கள், மலர்கள், முதலியன ஸ்வாமி எழுந்தருளியபோது ஒருங்கே பலிதமாகி, மரம் செடி முதலியன வளம் பெற்றிருத்தல். (ஷட்ருது ஸம்பூர்ண ஸஹப்ரவ்ருத்தி);

 

மஹீச ஆதரிச

தல ப்ரதிமா

ரத்நமயீ ஜாயதே

மநோஜ்ஞா

 

        சமவ சரணபூமி கண்ணாடி போல் வழவழப்பாயும், மணிமயமாகி பளபளப்பாயும், மனோஹரமாயும் விளங்கியிருத்தல். (தர்ப்பண ஸமாந பூதலம்);

 

அதில்:

விஹரணம்

அந்வேதி ச

 

        பகவான் ஸ்ரீ விஹாரமாகச் செல்லும்பொழுது, குளிர்ந்த, நறுமணம் மிக்க இளங்காற்று, யாவரும் இனிய சுகம் பெற வீசுதல். (மந்தமாருத சலநம்);

 

ஸர்வஜநஸ்ய

பரம ஆநந்த:

 

            மக்களனைவரும் யாதொரு குறையுமின்றிப் பரம ஆனந்த மயமாகி மகிழ்தல். (ஸமஸ்த ஜீவஸ்ய ஸந்தோஷ ப்ரவ்ருத்தி),

 

த்ரிதசபதே: ஆஜ்ஞயா

மருத: அபி ஸுரபி

கந்த வ்யாமிச்ரா :

யோஜந அந்தரம்

பூபாகம் வ்யுபசமித

தூளிகண்டக த்ருண

கீடக சர்க்கர

உபலம் ப்ரகுர்வந்தி

 

          தேவேந்திரன் கட்டளையால் வாயுகுமாரர்கள் நறுமணம் மிக்க சுகந்தமான காற்றை வீசுபவர்களாகி, பகவான் தங்கியுள்ள இடத்திலிருந்து ஒரு யோசனை தூரம் பூமியில் தூசுகள், முள், புல், எறும்பு முதலிய உயிர்கள், சின்னஞ்சிறு கற்கள் முதலியன இல்லாமல் பூமியைச் சுத்தம் செய்தல். (வாயு குமார உந்மார்ஜ்ஜநம்),

 

ததநு ஸ்தநித

குமாரா: வித்யுந்-

மாலா, விலாஸ

ஹாஸ விபூஷா:

ஸுரபி கந்திம்

கந்தோதக வ்ருஷ்-

டிம், ப்ரகிரந்தி

 

           அதன்பிறகு மேக குமாரர்கள், மின்னல்களின் ஜொலிப்பாகிற சிரிப்பைப் பூஷணமாக உடையவர்களாய் (எனவே மின்னலோடு கூடி) இந்திரன் ஆணையைப் பெற்று, நறுமணம் மிக்க சந்தனம் கலந்த நீர்த்தாரையை மழை பொழிவது போலச் சொரிதல். (மேக குமார ஜல ப்ரோக்ஷணம்),

 

வரபத்மராக

கேஸரம் அதுல

ஸுகஸ்பர்ச ஹேம

மயதள நிசயம்

பாதந்யாஸே

பத்மம் புர:

ப்ருஷ்டத: ஸப்த

ஸப்த பவந்தி

 

              மிகச் சிறந்த மாணிக்க மணியிலான கேஸரங்களுடையனவும்,  இணையிலா இன்பந்தரும் ஸ்பர்சகுணமுள்ளனவும், பொன்மயமான ஆயிரம் இதழ்கள் உடையனவுமான தாமரைகள், பகவான் திருவடிகளின் கீழ் உள்ள மரைமலரின் முன் ஏழு (ஆயிரம்), பின் ஏழு (ஆயிரம்) வரிசை பெற்றிருத்தல் (அரவிந்த ச்ரேணி),

 

பூமி: த்ரிபுவந

நாதஸ்ய வைபவம்

பச்யந்தி

பரிஹ்ருஷிதே இவ

பலபார நம்ரசாலி

வ்ரீஹ்யாதி ஸமஸ்த

ஸஸ்ய த்ருத

ரோமாஞ்ச

யதாததாபவதி

 

          பூமிதேவி மூவுலக நாதனாகிய பகவந்தனுடைய வைபவத்தைக் கண்டு மகிழ்ந்தவள் போலத் தன் உடலாகிற பூமியெங்கும் பழுத்த கதிர்களின் பளுவினால் விளைந்திருக்கிற நெல், தினை முதலாகிய பல்வேறு வகை பயிர்களாகிற மயிர்கூச்சலடைந்தாலொப்ப மக்களுக்கு வேண்டிய தானிய வகைகள் நிறைந்திருத்தல் (பூதலே ஸர்வ ஸஸ்யாதி ஸம் வ்ருத்தி) ;

 

ககநம், சரத் உதய

விமல சலிலம் விகத-

மலம் ஸர இவ விரா-

ஜதே திசஸ்த ஸத்ய:

விகத ரஜ: ப்ரப்ருதி

ஜிஹ்ம பாவம்

யதா ததா

திமிரிகாம் ஜகதி

 

            ஆகாயம் ; ஐப்பசி கார்த்திகை மாதங்களில் (சரத் காலத்தின் ஆரம்பத்தில்) விளங்குகின்ற, தெளிந்த நீர் நிறைந்த குளத்தைப் போல ; மேகம் , புகை , தூள்கள் முதலியவை நீங்கி, நிர்மலமாகி ஒளிர ; அதனுடனே திக்குகளும் அழுக்கில்லாதனவாகி, இருள் நீங்கி விளங்குதல். (ஆகாச திசாவைமல்யம்);

 

குலிச ப்ருத்

ஆஜ்ஞாபநயா

அந்யே அம்ருதபுஜ:

ஸமந்தத: ஜோதிர்

வ்யந்தர திவௌக-

ஸாம், த்வரிதம்

ஏதா ஏதா இதி

ஆஹ்வாநம் குர்வந்தி

ஸ்புரத் அர

 

          இந்திரன் கட்டளையை மேற்கொண்ட வாயுகுமாரர், மேககுமாரர் தவிர, ஏனைய பவண தேவர்கள் ; எப்பக்கமும் குழுமியுள்ள ஜோதிஷ்க தேவர், வியந்தர தேவர் முதலானவர்களைச் சீக்கிரமாக வாருங்கள் ! வாருங்கள் !! என்று அழைத்தவர்களாகி, அவர்கள் எல்லோரும் ஜய! ஜயா !! என்று கோஷித் (துத் துதித்)தல், (ஜயஜய ஜயாரவ தேவகோஷனை) ;

 

ஸஹஸ்ர ருசிரம்

விமல மஹா ரத்ந-

கிரண நிகர பரீதம்

ப்ரஹஸித ஸஹஸ்ர

கிரணத்யுதிமண்டலம்

தர்ம ஸு சக்ரம்

அக்ரகாமி

 

           ஜோதிமயமான ஆயிரம் ஆரக்கால்களுடையதும், மனோஹரமானதும், நிர்மலமானதுமான மிகச்சிறந்த மணிகளாலாம் வட்டைகளால் சூழ்ந்துள்ளதும், சூரியன் ஒளியையும் பரிகசிக்கத்தக்க காந்தி மிளிர்வதும், நாற்புறமும் உள்ளனவுமாகிய சிறந்த தர்ம சக்கரம் (அறவாழி) பகவான் முன் தொடர்ந்து செல்லுதல். (தர்ம சக்கரம்)

 

அஷ்டமங்களம் ச

பக்தி ராக பரீதை:

த்ரிதசை:

ஸ்வாதர் ச ப்ரப்ருதி

உபகல்ப்யந்தே

இதி ஏதேபி

சதுர்த்தசா

நிருபம அதிவிசேஷா :

பவந்தி

 

         தூய கண்ணாடி முதலாகிய அஷ்ட மங்கலங்கள் (நூற்றெட்டு நூற்றெட்டாக) வரிசை பெற்றுள்ள அவைகளை, அன்பும் ஆர்வமும் கலந்த பக்தியுள்ள தேவர்களால் ஏந்தி முன் செல்லுதல், அர்ச்சித்தல் முதலிய சேவைகளைச் செய்தல் (அஷ்டமங்கல சமூகம்) என்ற இந்தப் பதினான்கும், இணையில்லாத தெய்வீக சம்மந்தமான சிறந்த அதிசய விசேஷங்களாகும்.

 

 

  ஸ்நிதம்- மேகத்வனி,  "ஸ்தநிதம் கர்ஜ்ஜிதம் மேக நிர்க்கோஷே ரஸிதாரிச"  அமரம், ஹாஸ- சிரிப்பு. தாமரையின் மையத்திலுள்ள கர்ணிகையைச் சூழ்ந்து சுற்றிலும் நீண்டு நின்று (தலையில்) உச்சியில் மகரந்தப் பொடியுள்ள கோல்கள் நாட்டியது போன்றுள்ளதற்குக் கேஸரம் என்று (பெயர்) கூறப்படும். குலிசம் - வஜ்ராயுதம், "குலிசம் பிதுரம் பவி: "  அமரம். ப்ருத் என்பது தரித்தல், போஷித்ததல் என்ற இரு பொருளுடையது.  " ப்ருத் தாரண பூஷணையோ : " என்பதறிக.

 

" திருமொழியின் வியத்தகவு மனைத்துயிரின்

       மைத்திரியுந் திக்காகாய

நிருமலமாய் விளங்குதலெவ் விருதுவும்வந்

     துடனிகழ்த னிலத்துப்  பைங்கூழ்ப்

பெருமையொடு மங்கலங்க ளறவாழி

    பூமாரி நறுங்காற் றம்பொன்

மரைமலரி னிரைமுதல்வா னவரின்வரு

     மதிசயனெம் மன்ன னீயே. "

                    மேரு. 1194.

 

      ஈண்டு கூறிய 14 அதிசயங்களும் தேவர்களால் இயற்றப்பட்ட தென்பது பொருந்தாவுரையாகும். அதாவது, ஸகல பாஷா ஸமந்வித வாக் ப்ரவர்த்தி என்ற முதல் அதிசயத்தைப் பற்றித் தேவர்கள் இயற்றியதெனின் முற்றும் பொருந்தாமை, பின்வரும் சுலோகங்களாலும், அவற்றின் உரையினாலும் விளங்கும்.

 

69. " திவ்ய மஹாத்வநிரஸ்ய முகாப்ஜாத்

    மேகரவாநு கதிர் நிரகச்சத்:

பவ்ய மநோகத மோஹ தமோக்நந்

      அத்யுத தேஷ யதைவ தமோரி:

 

70. ஏகதயோபிச சர்வ ந்ருபாஷா

     ஸோந்தர நேஷ்ட பஹுச்ச குபாஷா

அப்ரதி பத்திமபாஸ்ய ச தத்வம்

     போதயதிஸ்ம ஜிநஸ்ய மஹிம்நா.

 

71. ஏக தயோபி யதைவ ஜலௌக:

     சித்ர ரஸோ பவதி த்ருமபேதாத்

பாத்ரவிசேஷ வசாச்ச ததாயம்

       ஸர்வ விதோ த்வநி ராப பஹுத்வம்.

 

72. ஏக தயோபி யதா ஸ்படிகாஸ்ம

       யத்யதுபாஹித மஸ்ய விபாஸம்

ஸ்வச்ச தயா ஸ்வயமப்யநு தத்தே

       விச்வ புதோபி ததா த்வநிருச்சை:

 

73. தேவ க்ருதோ த்வநி ரித்யஸத் ஏகத்

       தேவகுணஸ்ய ததா விஹதிஸ்யாத்

சாக்ஷர ஏவச வர்ண ஸமூஹாத்

      நைவ விநாsர்த்த கதிர் ஜகதி ஸ்யாத். "

 

    என, மஹாபுராணத்திலே ஆதி புராணப் பகுதி 23 - ஆம் பர்வம் (69 - 73 வரை உள்ள) சுலோகங்களில் கண்டு கொள்க.

 

பகவானின் அதிசயங்களான அஷ்டமங்கலங்களைக் கூறுவாராய் அசோக விருஷத்தைக் கூறுகின்றார்.

 

 

வைடூர்ய ருசிர விடப ப்ரவாள

     ம்ருது பல்லவோப சோபிதசாக:

ஸ்ரீமாநசோக வ்ருக்ஷோ வரமரகத

    பத்ர கஹந பஹளச்சாய: - 194

 

 

ஸ்ரீமாந்

அசோக வ்ருஷ:

வைடூர்ய

ருசிர விடப

ப்ரவாள

ம்ருது பல்லவ

உப சோபித

சாக:

வரமரகதபத்ர

கஹந பஹள

சாய : அஸ்தி

 

          (பகவானுடைய பின்புறத்தே உள்ள மூன்று மேடைகளில், இரண்டாவது மேடையில் தோன்றி வளர்ந்து, கந்தகுடியின் மேலே தழைந்து) காந்தியுடன் விளங்குகின்ற அசோக தரு ; வைடூர்ய மணிகளான பெரிய கிளைகளையுடையதும், சிவந்த பவழ மணிகளான மென்மையான தளிர்களினால் ஜோதியுடன் விளங்குகின்ற, விஸ்தாரமான ஏனைய கிளைகளையுடையதும், சிறந்த பச்சை மணிகளான இலைகளின் நெருக்கத்தால் காந்தி மிக்க நிழலுடையதுமாகி விளங்குகிறது.

 

ஸ்ரீமாந் - காந்தியுடையது.

 

மந்தார குந்த குவலய நீலோத்பல

   கமல மாலதீ வகுளாத்யை:

ஸமத ப்ரமர பரீதை: வ்யாமிச்ரா

     பததி குஸும வ்ருஷ்ட்டிர் நபஸ: - 195

 

 

ஸமத ப்ரமர பரீதை:

மந்தார குந்த

குவலய நீலோத்பல

கமல மாலதீ வகுள

ஆத்யை:  வ்யாமிஸ்ரா

குஸும வ்ருஷ்டி:

நபஸ: பததி

 

        மதத்தோடு ரீங்காரஞ் செய்கின்ற வண்டினங்களினால் சூழப்படுகின்ற மந்தாரம், வனமுல்லை, சிவந்த நெய்தல், நீலோத்பலம் (கருநெய்தல்), தாமரை, சாதி, மல்லிகை, வகுளம் (மகுடம்) முதலாகிய மலர்களின்  தொகுதிகளினால் மணங்கமழும் மலர் மழை வானிலிருந்து (தேவர்களினால்) சொரியப் படுகின்றது.

 

கடக கடிஸூத்ர குண்டல கேயூர

     ப்ரப்ருதி பூஷிதாங்கௌ ஸ்வாங்கௌ

யக்ஷௌ கமல தலாக்ஷௌ பரிவிக்ஷிபத:

     ஸலில சாமர யுகளம்.  - 196

 

 

(ஸ்வ அங்கௌ)

கடக,  கடி சூத்ர

குண்டல கேயூர

ப்ரப்ருதி பூஷிதாங்கௌ

ஸ்வா அங்கௌ

கமல தள அக்ஷௌ

யக்ஷௌ ஸலில

சாமர யுகளம்

பரிவிக்ஷிபத:

 

            தேவர்கள் பிறக்கும்போதே (அவர்களின் உடல் அமையும் போதே) இயல்பாகத் தோன்றின அஸ்த கங்கணம் (கடகம்), அரைஞாண் கயிறு, கர்ண குண்டலம், (ஒரு காதில் கடுக்கனும் மற்றொரு காதில் குண்டலமும்), தோள்வளை (பாஹுவலயம்) முதலான (பதினாறு) ஷோடச ஆபரணங்களினால் அழகு தங்கிய அங்கமுடையவர்களும், மனோஹரமான உடலுடையவர்களும், தாமரையிதழ் போலும் சிவந்த கண்களுடையவர்களுமான யக்ஷ தேவர்கள், இருபக்கமும் வரிசையாக நின்று, நீரின் அலைகள் போன்ற சாமரைத் தொகுதிகளை இருபக்கமும் நின்று வீசுகின்றனர்.

 

ஆகஸ்மிக மிவ யுகபத் திவஸகர

    ஸஹஸ்ரம்பகத வ்யவதாநம்

பாமண்டலமவிபாவித ராத்ரிந்திவ பேத

     மதிதராமவபாதி.  - 197

 

 

ஆகஸ்மிக இவயுகபத்

திவஸகர ஸஹஸ்ரம்

இவ அபகத வ்யவதாநம்

அவிபாவித ராத்ரிம்

திவபேதம்  பாமண்டலம்

மதிதராமவபாதி.

 

    எதிர்பாராமல் (அகஸ்மாத்தாய்) திடீரென ஒருங்கே ஆயிரம் சூரியன் உதயமானது போல, இரவு பகல் என்ற வித்தியாசம் காணாமல், எங்கும் ஒரே ஜோதிமயமாக ஒளியிடுகின்ற ப்ரபாவலயம் பகவானின் பின்புறத்தே  இருபக்கங்களிலிருந்து (ம்)வட்டமாகப் பிரகாசித்திருக்கின்றது.

 

ப்ரபல பவநாபிகாத ப்ரக்ஷுபித

    ஸமுத்ர கோஷ மந்த்ர த்வாநம்

தம்த்வந்ய தே ஸுவீணா வம்சாதிஸு

     வாத்ய துந்துபி ஸ்தாலஸமம்.  - 198

 

 

ப்ரபல பவந அபிகாத

ப்ரக்ஷுபித

ஸமுத்ர கோஷ

மந்த்ர த்வாநம்

ஸுவீணாவம்சம் ஆதி

ஸுவாத்ய துந்துபி:

தால ஸமம்

தம் த்வந்யதே

 

         பெருங்காற்றின் மோதுதலால கலங்கிய கடல் ஒலிபோன்ற கம்பீரமான த்வனியுடைய, குற்றங்குறையில்லாத வீணை (நரம்புக் கருவி), புல்லாங்குழல் (துளைக்கருவி தோற்கருவி, கஞ்சங்கருவி) முதலான வாத்தியக் கருவிகளோடு சேர்ந்திருக்கிற தேவதுந்துபி, தாளத்தோடு கலந்து இசையுடன் அதிசயமாக ஒலியிடுகின்றது.

 

ஈண்டு, மந்த்ரம் கம்பீரமான ஒலியைக்குறிக்கும்.

 

 

த்ரிபுவந பதிதா லாஞ்சந மிந்து த்ரய

    ஸத்ரச மதுல முக்தா ஜாலம்

சத்ர த்ரயஞ்ச ஸுப்ருஹத் வைடூர்ய

     விக்லுப்த தண்ட மதிக மநோஜ்ஞம். - 199

 

 

இந்து த்ரய ஸத்ரு சம்

அதுல முக்தாஜாலம்

ஸுப்ருஹத்

வைடூர்ய விக்லுப்த

தண்டம் சத்ர த்ரயம்

த்ரிபுவந பதிதா

லாஞ்ஜநம்

அதிக மநோஜ்ஞம்

யதா ததா சோபதே

 

       மூன்று முழுச் சந்திரனை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி வைத்தாற் போன்றதும், சுற்றிலும் விளிம்பு (ஓரங்)களிலே தொங்குகின்ற இணையற்ற முத்து மணிகளின் சரங்களுடையதும், அழகும் அளவுக்கேற்ற பருமனும் (கனமும்) உள்ள வைடூர்ய மணியினால் நிருமிக்கப்பட்ட குடையின் காம்பு உள்ளதுமாகிய முக்குடை, மூவுலகிற்கும் இவரே இறைவன் என்ற தன்மையைக் குறிப்பாக (அடையாளமாக) த் தோற்றுவித்து, மிக்க மனோஹரமாக விளங்குகிறது.

 

த்வநிரபி யோஜநமேகம் ப்ரஜாயதே

     ச்ரோத்ர ஹ்ருதய ஹாரி கபீர:

ஸஸலில ஜலதர படல த்வநிதமிவ

     ப்ரவித தாந்தராசா வலயம்.  - 200

 

 

ச்ரோத்ர ஹ்ருதய

ஹாரி கபீர: த்வநி:

அபி ஸஸலில ஜலதர

படல த்வநிதம் இவ

ப்ரவிதத அந்தர

ஆசா வலயம்

ஏகம் யோஜநம்

ப்ரஜாயதே

 

        (அறவுரை கேட்கும் பவ்வியர்களின்) செவியையும், உள்ளத்தையும் கவரக் கூடிய, கம்பீரமான திவ்வியத்வனி ; நீர் நிறைந்த மேக படலத்தின் கர்ஜனையைப் போல, வட்டமான சமவசரணம் எப்பக்கமும் பரந்து ஒலியிட்டு விளங்குகின்றனவாகி, ஒரு யோசனை தூரம் உள்ளவர்க்கும் கேட்கின்றது.

 

ஸ்புரிதாம்சு ரத்நதீதிதி பரிவிச்சுரிதா

     மரேந்த்ர சாபச்சாயம்

த்ரியதே ம்ருகேந்த்ர வர்யை: ஸ்படிக சிலா

     கடித ஸிம்ஹ விஷ்டர மதுலம்.  - 201

 

 

அதுலம்

ஸ்புரிதா அம்சுரத்ந

தீதிதி பரிவிச்சுரித

அமரேந்த்ர சாப

சாயம் ஸ்படிகசிலா

கடிதஸிஹ்ம விஷ்டரம்

ம்ருகேந்த்ர

வர்யை: த்ரியதே

 

           இணைகூற இயலாததும், ஜொலிக்கின்ற நவமணிகளின் பல்வேறு விதமான காந்திகளால் வட்டமாகச் சூழ்ந்திருக்கிற, வானவில்லின் காந்தியால் பற்றப்பட்டது போலக் காட்சியளிப்பதும், ஸ்படிக மணியினால் இயற்றப்பட்டதுமாகிய சிம்மாசனம் ; கம்பீரமான தோற்றமுள்ள சிங்கங்களால் தாங்கப்பட்டனவாக அமைந்துள்ளது.

 

 

யஸ்யேஹ சதுஸ்த்ரிம்சத் ப்ரவர குணா:

    ப்ராதிஹார்ய லக்ஷ்ம்யச் சாஷ்டௌ

தஸ்மை நமோ பகவதே த்ரிபுவந

     பரமேச்வரார்ஹதே குண மஹதே.  - 202

 

 

யஸ்ய இஹ சது:-

த்ரிம்சத் ப்ரவரகுணா:

அஷ்டௌ ப்ராதி-

ஹார்ய லக்ஷ்ம்ய: ச

அபூவந் தஸ்மை

பகவதே

குணமஹதே த்ரிபுவந

பரமேச்வர

அர்ஹதே மம

நம: அஸ்து

 

        எந்த பகவந்தனுக்கு இந்தச் சமவசரண பூமியில் மிகச் சிறந்த முப்பத்துநான்கு அதிசயங்களும், எண்விதமான ப்ராதி ஹார்ய விபூதிகளும், ஏற்பட்டனவோ, அத்தகையவரும் இந்திராதி தேவர் முதலியோரால் பூஜிக்கப்பட்டவரும், அனந்த ஞானாதி எண் குணங்களும் விளங்கப் பெற்றவரும், மூவுலக நாதனுமான ஆதிபகவன் அருகத் பரமேஷ்டிக்கு என்னுடைய நமஸ்காரம் ஆகட்டும்.

 

     வாசலில் காவல் புரிபவனுக்குப் ப்ராதிஹாரி என்று பெயர். ஈண்டு, தேவர்கள் சேவித்துத் தொண்டு புரியும் இடமாகையால், அவர்களால் இயற்றிய ப்ராதிஹார்யம் மங்களகரமானது என்று கூறலாம்.  "ஸ்த்ரீ த்வார் த்வாரம் ப்ரதீஹார: " அமரம்.

 

இச்சாமி பந்தே ணந்தீஸரவர சேதிய பக்தி காஉஸ்ஸக்கோ கஓதஸ்ஸ, ஆளோசேவும் ணந்தீஸரவர தீவம்மி சவுதிஸு  விதிஸாஸு அஞ்ஜண தஹிமுஹ ரயியர புரு ணகவரேஸு ஜாணி பாவண்ண ஜிண சேயியாணி தாணி திஸுவி ளோயேஸு பவணவாஸிய வாணவெந்தர ஜோயிஸிக கப்பவாஸியத்தி சவுவிஹா தேவா ஸபரிவாரா திவ்வேஹி கந்தேஹி, திவ்வேஹி தீவேஹி, திவ்வேஹி தூவேஹி, திவ்வேஹி சுண்ணேஹி, திவ்வேஹி வாஸேஹி, திவ்வேஹிண்ஹாணேஹி, ஆஷாட கத்திய பாகுண மாஸாணம் அட்டமியாயிம் காவூண ஜாவ புண்ணிமாஸந்தி ணிச்சகாளம் அச்சந்தி, பூஜந்தி வந்தந்தி ணமம்ஸந்தி நந்தீஸரவர சேயிய மஹா கள்ளாண புஜ்ஜம் கரந்தி, அஹமபி இஹஸந்தோ தத்த ஸந்தாயிம் பத்தீயே ணிச்ச காளம் அச்சேமி பூஜேமி வந்தாமி ணமம்ஸாமி  துக்கக்கவோ கம்மக் கவோ போஹிளாஹோ ஸுகயிகமணம் ஸமாஹி மரணம் ஜிண குண ஸம் பத்தி ஹோஉ மஜ்சம்.

 

      அத ஆஷாட மாஸஸ்ய சுக்ல பக்ஷஸ்ய ஆஷ்டாந்நிக மாத்யாந்நிக தேவதா ஸ்தவநேந ஸஹ ப்ரதம திந நந்தீச்வர மஹா பர்வ க்ரியாயாம் பூர்வா சார்ய்யாநு க்ரமணே  ஸகல கர்ம க்ஷயார்த்தம் பாவ பூஜா வந்தநா ஸ்தவ ஸமேதம் ஸ்ரீமத் பஞ்சகுரு பக்தி காயோத் ஸ ர்க்கம் க்ரோம்யஹம்.

 

    சத்தாரி மங்களம் ; அரஹந்தா மங்களம், ஸித்தா மங்களம், ஸாஹூ மங்களம், கேவலி பண்ணத்தோ தம்மோ மங்களம், இத்யாதி போஸராமி, தோஸாமிஹம் ஜிணவரே ஸித்தா ஸித்திம் மம திஸந்து.  - 203

 

 

பந்தே நந்தீஸரவர

சேதியபத்தி காஉஸ்ஸக்கோ

கஓ தஸ்ஸ

ஆளோ சேஉம்

 

            ஞானவானே! சிறந்த நந்தீச்வரத்வீபத்திலுள்ள ஜிந ப்ரதிமைகளின் பக்தியின் சம்பந்தமான காயோத் ஸர்க்கம் செய்யப்பட்டது. அதனை, என் உள்ளத்தே எண்ணி ஆலோசிக்கிறேன்.

 

நந்தீஸரவர தீவம்மி

சவுதிஸு விதிதாஸு

அஞ்ஜண தஹிமுஹ

ரயியர புரு

ணகவரேஷுயாநி

பாவண்ண ஜிண

சேயியாணி தாநி

திஸுவி ளோயேஸு

பவண வாஸிய

வாணவெந்தர

ஜொயிஸிக

கப்பவாஸியத்தி

சவுவிஹா தேவா

ஸபரிவாரா

திவ்வேஹி கந்தேஹி

திவ்வேஹி அக்கேஹி

திவ்வேஹி புப்பேஹி

திவ்வேஹி தீவேஹி

திவ்வேஹி தூவேஹி

திவ்வேஹி சுண்ணேஹி

திவ்வேஹி ணாணேஹி

திவ்வேஹி வாஸேஹி

ஆஷாட கத்திய

பால்குண மாஸாணம்

அட்டமியாயிம்

கா ஊண ஜாவ

புண்ணி மாஸந்தி

நிச்சகாளம் அசச்ந்தி

பூஜந்தி வந்தந்தி

ணமம் ஸந்தி நந்தீஸரவர

சேயிய மஹா கள்ளாண

புஜ்ஐம்

 

            மிகச் சிறந்த நந்தீச்வர த்வீபத்தின் நாற்புறங்களிலும் பக்கத்துக்கு ஒவ்வொன்றாக உள்ள அஞ்ஜந பர்வதங்கள் நான்கும், அவைகளின் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய நான்கு பக்கங்களிலும் உள்ள ததிமுக பர்வதங்கள் (4×4=) பதினாறும், அவைகளின் வெளி மூலைகள் எட்டிலும் [அதாவது வனங்களின் கோணங்களிலும்] உள்ள ரதிகர பர்வதங்கள் (4×8=) முப்பத்திரண்டும் ஆகிய மிகவும் உன்னதமான பருவதங்களில் எந்த ஐம்பத்திரண்டு, ஜிநாலயங்கள் உள்ளனவோ , அவைகளை, மூவுலகிலும் உள்ளவர்களான; பவண தேவர்கள், (வனம் முதலியவற்றில் வாழும்) வியந்தர தேவர்கள், ஜோதிஷ்க தேவர்கள், கல்பவாஸி தேவர்கள் ஆகிய நான்கு வகை தேவர்களும், அவர்களின் தேவியர் முதலான பரிவாரங்களுடனும் கூடினவர்களாகி, சிறந்த சந்தனக் குழம்பினாலும், சிறந்த அக்ஷதைகளினாலும், சிறந்த புஷ்பங்களினாலும், சிறந்த தீபங்களினாலும், சிறந்த தூபங்களினாலும், சிறந்த நறுமணப் பொடிகளினாலும், சிறந்த அபிஷேக ஸ்நானங்களினாலும், (அபிஷேகம் முடிந்தவுடன், ஈரத்தைத் துவட்டும்) சிறந்த வஸ்திரங்களினாலும், ஆடி (மாதம்), கார்த்திகை (மாதம்), பங்குனி (மாதம்), ஆகிய மூன்று மாதங்களில், அஷ்டமி முதலான பௌர்ணமி வரையில் (எட்டு நாட்களிலும்) இரவும் பகலும் இடைவிடாமல் தினந்தோறும் அர்ச்சிக்கிறார்கள், பூஜிக்கிறார்கள், துதிக்கிறார்கள், வணங்குகிறார்கள்.

கரந்தி அஹமபி

இஹஸந்தோ

தத்த ஸந்தாயிம்

பத்தீயே நிச்சகாலம்

அச்சேமி பூஜேமி

வந்தாமி ணமம்ஸாமி

ஏதேஹி துக்கக்கவோ

கம்மக்கவோ

போஹி லாஹோ

ஸுகயி கமணம்

ஸமாஹி மரணம்

ஜிணகுண ஸம்பத்தி

மச்சம் ஹோ உ

இச்சாமி ஏதம்வா

அஹம்

 

       இவ்வண்ணம் நந்தீச்வர த்வீபத்திலுள்ள (ஜிநாலய) கந்தகுடி அனைத்திலும் மஹா கல்யாண பூஜையைச் செய்து முடிக்கிறார்கள். யானும் (இங்குள்ள ஜிநாலயத்தை அடைந்து எட்டு நாளைக்கும்) இவ்விடத்திலிருந்தே அங்கேயுள்ள ஜிநபிம்பங்களை எண்ணி மன வசன காய சுத்தியோடு பக்தியுடன் எப்பொழுதும் அர்ச்சிக்கிறேன். பூஜிக்கிறேன், துதிக்கிறேன் , வந்தனை செய்கிறேன். இதனால், துன்பக் கேடும், இருவினைகளின் நாசமும், கேவல ஞான லாபமும், நற்கதியினைச் சென்றடைவதும், சமாதி மரணமும், ஜிந குணங்களைப் பெறுவதும் எனக்கு ஆகட்டும். இதனையே யான் விரும்புகிறேன். (இதைத் தவிர்த்து வேறொன்றுமில்லை.)

 

அத அஹம் ஆஷாட-

மாஸஸ்ய, சுக்லபக்ஷஸ்ய

ஆஷ்டாந்நிக

மாத்யாந்நிக

தேவதா ஸ்தவநேந

ஸஹ ப்ரதம திந

நந்தீச்வர மஹா

பர்வ க்ரியாயாம்

பூர்வ ஆசார்ய

அநுக்ரமேண ஸகல-

கர்ம க்ஷயார்த்தம்

பாவபூஜா வந்தநா

ஸ்தவ ஸமேதம்

ஸ்ரீமத் பஞ்சகுரு பக்தி

காயோத் ஸர்க்கம்

கரோமி

 

        அதன்பிறகு யான், ஆடிமாதத்து சுக்கில பக்ஷத்து அஷ்டமி முதலாக பௌர்ணமி வரையிலும் (எட்டு நாளைக்கும்) ஏற்று நடத்தும் விரத தினங்களில், மத்தியான காலத்தில் செய்யும் நவ தேவதா ஸ்துதியோடு கூடி, நந்தீச்வர பர்வத்தின் முதல் நாள் காரியத்தில், பூர்வாசாரியர்களால் ஏற்று நடந்த முறைப்படியே (என்னுடைய எல்லா கர்மங்களும் நாசமாகும் பொருட்டு, பரிணாமத்தினால் செய்யும் பாவபூஜை, வந்தனை ஸ்தோத்திரம் முதலியவற்றோடு கூடி முக்திக்குக் காரணமான பஞ்ச பரமேஷ்டிகளுடைய பக்தி (பூர்வகம் யானும் அந்) நிலையை அடையவேண்டி அதற்குத் தக்க காயோத் ஸர்க்கத்தை முறைப்படி ஏற்றுச் செய்கிறேன். மற்றவை முன்போல.

 

பஞ்ச குரு பக்தி

 

     அருகர்கள் வந்தனை

 

ஸ்ரீமதமரேந்த்ர மகுட ப்ரகடிதமணி

      கிரண வாரி தாராபி:

ப்ரக்ஷாளித பத யுகளாந்

     ப்ரணமாமி ஜிநேச்வராந் பக்த்யா.  - 204.

 

ஸ்ரீமத் அமரேந்த்ர

மகுட ப்ரகடித

மணி கிரணவாரி

தாராபி: ப்ரக்ஷாளித

பத யுகளாந்

ஜிநேச்வராந் (அஹம்)

பக்த்யா ப்ரணமாமி

 

       ஜிந பகவானின் பூஜை செய்வதற்குரிய நல் வினையாளராகிய தேவேந்திரர்களின் கிரீடத்தில் பொருந்தியிருக்கிற மணிகளின் ஒளிப் பிழம்பாகிற நீர்த் தாரைகளினால், அலம்பப்பட்ட இரண்டு பாதங்களையுடைய அருகத் பரமேஷ்டிகளை ; யான் பக்தி பரிணாமத்தோடு துதித்து வணங்குகிறேன்.

 

    *தேவேந்திரர்கள் செய்யும் பூஜைக்கு அருகன் ; யோக்யமானவன், கிரணங்களை, வாரி என்றதற்கேற்ப, ப்ரக்ஷாளித பாதம் என்றார். ஆகவே, திருவடிகளின் கீழ்ப்படிந்து வணங்குதனைக் குறிப்பிட்டார் என்க.

 

     சித்தர்கள் வந்தனை

 

அஷ்ட குணைஸ் ஸமுபேதாந் ப்ரணஷ்ட

    துஷ்டாஷ்ட கர்ம ரிபுஸமிதீந்

ஸித்தாந் ஸதத மநந்தாந்

      நமஸ்கரோ மீஷ்ட ஸம்ஸித்த்யை.  -  205.

 

ப்ரணஷ்ட துஷ்ட

அஷ்ட கர்ம ரிபு ஸமி-

தீந் அஷ்ட குணை:

ஸமு பேதாந்

அநந்தாந் ஸித்தாந்

மம இஷ்டஸம்-

ஸித்யை ஸததம்

நமஸ்கரோமி

 

        மோகனீயம் முதலிய கொடிய வினைப் பகைவர்களாகிய எண்வினைகளையும் கெடுத்ததனால், ஆத்மனின் இயல்பாகிய எண் குணங்களும் விளங்கப் பெற்றவர்களாகிய எண்ணற்ற சித்த பரமேஷ்டிகளை ; வினை வென்று வீடடைய எண்ணும் என் எண்ணம் நிறைவேறும் பொருட்டு, எப்பொழுதும் துதித்து வணங்குகிறேன்.

 

ஆசார்யர்கள் வந்தனை

 

206

ஸ்வாசார ச்ருத ஜலதீந் ப்ரதீர்ய

    சுத்தோரு சரண நிரதாநாம்

ஆசார்யாணாம் பதயுக கமலாநி

    ததே சிரஸி மேsஹம்.

 

ஸ்வா சார

ச்ருத ஜலதீந்

ப்ரதீர்ய

சுத்த உரு சரண

நிரதாநாம்

ஆசார்யாணாம்

பதயுக

கமலாநி அஹம்

மே சிரஸி ததே

 

      தன்னுடைய ஆசாரமான பஞ்சாசாரம் முதலியவற்றை விவரித்துக் கூறும் சாஸ்திரமாகிற கடலைக் கடந்த (ஆசாரங்களிலும் சாஸ்திரங்களிலும் கரை கண்ட)வரும் ; நிருமலமானதும், தாங்குவதற்கரியதுமான ஒழுக்கங்களில் நிலைத் திருப்பவருமாகிய  ஆசார்ய பரமேஷ்டிகளின், மரைமலர் போன்ற இரண்டு திருவடிகளையும், யான் என் சிரசில் வைத்துத் தாங்குகிறேன்.

 

 உபாத்தியாயர்கள் வந்தனை

 

மித்யாவாதி மதோக்ர த்வாந்த ப்ரதவம்ஸி வசந ஸந்தர்பாந்

    உபதேசகாந் ப்ரபத்யே மம துரிதாரி ப்ரணாசாய.  - 207

 

 

மித்யாவாதி மத

உக்ர த்வாந்த

ப்ரத்வம்ஸி

வசந ஸந்தர்ப்பாந்

உபதேசகாந் மம

துரித அரி ப்ரணாசாய

ப்ரபத்யே

 

      தத்துவ மல்லாதவற்றைத் தத்துவமென்று கூறும் ஏனைய மதக் கொள்கைகளாகிற மிக்க இருளை, அறவே நாசம் செய்கின்ற வசனத் தொடர்புள்ள (நூல் வல்லமையுள்ள) உபாத்தியாய பரமேஷ்டிகளை என்னுடைய தீவினைகளாகிற பகைவர்களை நாசம் செய்யும் பொருட்டுச் சரணமடைகிறேன்.

 

     ஈண்டு, சரணமடைகிறேன் என்றது, அவர்கள் திருவடிகளில் தன் ஆத்மனைப் பொருந்தச் செய்கிறேன் என்பதாம்.

 

சர்வ சாதுக்கள் வந்தனை

 

ஸம்யக் தர்சந தீப ப்ரகாசிதா : மோக்ஷ பவந பூதாயே

    பூரி சரித்ர பதாகாஸ்தே ஸாது கணாஸ்துமாம் பாந்து.  - 208

 

 

யே ஸம்யக் தர்சந

தீப ப்ரகாசிநா :

மோக்ஷபவந பூதா:

பூரி சரித்ர பதாகா :

(பவேயு:) அஸ்துதே

ஸாது கணா:

மாம் பாந்து

 

      யார் சிலர், நற்காட்சியாகிற விளக்கின் ஒளிமயமாகவே விளங்குமவரும், முக்திக்கு இருப்பிடமானவரும், மோக்ஷ மார்க்கத்தைச் சாதிக்கப்பட்டவரும், யதாக்யாத சாரித்ரமென்னும் அடையாளமுள்ளவரும் ஆவார்களோ, அத்தகைய குழுவினராகிய சாது பரமேஷ்டிகள் என்னை ரக்ஷிக்கட்டும்.

 

----------------------------------------------- 

ஜிநஸித்த ஸூரி தேசக

     ஸாதுவரா நமல குணகணோ பேதாந்

பஞ்ச நமஸ்கார பதைஸ்த்ரி ஸந்த்ய

     மபிநௌமி ஸம் ப்ரீத்யா.  - 209

 

அமலகுண கணோ-

பேதாந், ஜிநஸித்த

ஸூரி தேசக ஸாது

வராந் ஏதாந் பஞ்ச

நமஸ்காரபதை:

த்ரிசந்த்யம்

ஸம்ப்ரீத்யா

அபிநௌமி

 

      நிர்மலமான (குற்றமற்ற) குணங்கள் நிறைந்தவர்களான அருகர், சித்தர், ஆசாரியர், உபாத்தியாயர், ஸர்வ ஸாதுக்கள் என்ற இந்த பஞ்ச பரமேஷ்டிகளை, அவர்களின் நாமாக்ஷரங்களைக் கூறி; அவர்களின் நற்குணங்களை எண்ணியபடியே பஞ்ச மந்திரங்களை உச்சரித்து (ஜபித்து) இவ்வாறே மூன்று காலங்களிலேயும், மிக்க பக்தியுடன் துதித்து வணங்குகிறேன்.

 

ஸர்வாந் ஜிநேந்த்ர சந்த்ராந் ஸித்தா நாசார்ய பாடகாந் ஸாதூந்

 ரத்ந த்ரயஞ்ச வந்தே ரத்ந த்ரயஸித்தயே பக்த்யா.  - 210

 

 

ஸர்வாந் ஜிநேந்த்ர

சந்த்ராந் ஸித்தாந்

ஆசார்ய பாடகாந்

ஸாதூந்

ரத்ந்த்ரயம் ச

அஹம் ரத்ந்த்ரய-

ஸித்தயே

பக்த்யா வந்தே

 

    (முன்னர் முக்தியை அடைந்தவர், இனி அடையப் போகின்றவர், இப்பொழுது அடைகின்றவர் ஆகிய) அருகர், சித்தர், ஆசாரியர், உபாத்தியாயர், ஸர்வ சாதுக்கள் ஆகிய பஞ்ச பரமேஷ்டிகள் அனைவரையும் அவர்களடைந்த (நற்காட்சி, நல்லறிவு, நல்லொழுக்கமாகிய) மும் மணிகளையும்; யான் அவர்களடைந்தவாறே மும்மணி நிறையப் பெற்று, முக்தியடையும் பொருட்டு, பக்தியுடன் துதித்து வணங்குகிறேன்.

 

   அஞ்ஞானமாகிய இருளைப் போக்கும் ஜிநேந்திரனாகிய சந்திரன் என்க. ஸர்வாந் ஸித்தாந், ஸர்வாந் ஆசார்ய பாடகாந், ஸர்வாந் ஸாதூந் என்று கூறிக் கொள்க. ரத்னத்ரயம் பூர்த்தியடைந்த பிறகே முக்தி பெறுவது முறையாதலின், "ரத்ந்த்ரயம்" என்றார்.

 

குரவ: பாந்து நோநித்யம் ஜ்ஞாந தர்சந நாயகா :

சாரித்ரார்ணவ கம்பீரா: மோக்ஷமார்க்கோபதேசகா: - 211

 

 

ஞாந தரிசந-

நாயகா: சாரித்ர-

அர்ணவ கம்பீரா:

மோக்ஷ மார்க்க

உபதேசகா:  குரவ:

ந: நித்யம் பாந்து

 

     அறிவு, காட்சி மயமானவரும், கம்பீரமான கடல் போன்ற ஒழுக்கம் நிறைந்தவரும், முக்தியை அடையும் வழியை (அறவுரையின் மூலம்) அருளிச் செய்தவரும் ஆகிய, பஞ்ச பரமேஷ்டிகள் நம்மைத் தினந்தோறும் ரக்ஷிக்கட்டும் (பிறவிப் பிணி வராமல் தடுக்கட்டும்.)

 

"கு சப்தஸ் தந்தகாரஸ்யாத் ரு சப்தஸ் தந் நிரோதக :

அந்தகார நிரோதித்வாத் குருரித்வபி தீயதே."

 

கு, என்பது அஞ்ஞானமாகிற இருள், ரு, என்பது அதனைத் தடுப்பது. ஆகவே, அஞ்ஞானமாகிற இருளைத் தகர்த்து இனி வராமல் தடுப்பவர். ஆதலின், அவருக்குக் குரு என்ற பெயர் அமைந்ததென்க.

 

 

ஏஷ பஞ்ச நமஸ்கார: பாப கர்ம விநாசந:

மங்களாநாஞ்ச ஸர்வேஷாம் ப்ரதமம் மங்களம் பவேத். - 212

 

ஏஷ பஞ்ச நமஸ்கார:

பாப கர்ம விநாசந:

ச ஸர்வேஷாம்

மங்களாநாம்

ப்ரதமம்

மங்களம் பவேத்

 

        இந்தப் பஞ்ச பரமேஷ்டிகளுக்குச் செய்யும் துதி பூர்வகமான வணக்கம், தீவினைகளை மட்டும் நாசம் செய்கிறது; மற்றும் நல்வினை வருவதற்குக் காரணமான மங்கள காரியம் எல்லாவற்றிற்கும் முதல் மங்கள மாகவும் ஆகிறது. (ப்ரதமம் - முக்கியமுமாம்.)

 

 

காவூண ணமோங்காரம் அரஹந்தாணம்

    தஹேவ ஸித்தாணம்

ஆயிரிய உவஜ்ச யாணம்

    ளோயம்மிய ஸவ்வ ஸாஹூணம். - 213

 

அரஹந்தாணம்

தஹேவ ஸித்தாணம்

ளோயம்மிய ஆயிரிய-

உவச்சயாணம் ஸவ்வ-

ஸாஹூணம் ணமோ-

ங்காரம் காவூண

 

       அருகத் பரமேஷ்டிகளுக்கும், அவ்வண்ணமே சித்த பரமேஷ்டிகளுக்கும், இவ்வுலகிலுள்ள ஆசார்ய பரமேஷ்டிகளுக்கும், உபாத்யாய பரமேஷ்டிகளுக்கும், ஸர்வ ஸாது பரமேஷ்டிகளுக்கும் துதி பூர்வகமான வணக்கத்தைச் செய்கிறேன்.

 

 

அஸ்மாகம் ஜிந ஸித்தஸ்ரீ ஸூர்யுபாத்த்யாய ஸாதவ:

குர்வந்து குரவ; ஸர்வே நிர்வாண பரமச்ரியம். ||  - 214

 

ஜிந ஸித்தஸ்ரீ ஸூரி

உபாத்யாய ஸாதவ:

ஸர்வே குரவ :

அஸ்மாகம் நிர்வாண

பரமச்ரியம் குர்வந்து

 

     அருகர், சித்தர், முக்தி ஸ்ரீயை நல்கும் தீக்ஷையருளும் ஆசாரியர், உபாத்தியாயர், ஸர்வ ஸாதுக்கள் என்னும் பஞ்ச பரமேஷ்டிகள் யாவரும், எங்களுக்கு முக்திச் செல்வத்தை (அடையும் வண்ணம்) செய்யட்டும்.

 

 

இச்சாமி பந்தே பஞ்ச குரு பக்தி காஓஸக்கோகஓதஸ்ஸ ஆளோசேவும், அட்ட மஹாபாடிஹார ஸஞ்ஜுத்தாணம் அரஹந்தாணம், அட்டவிஹ கம்ம விப்பமுக்காணம் ஸித்தாணம், அட்ட பவயணமாஉ வாயிஸஞ்ஜுத்தாணம் ஆயரியாணம், ஆயாராதி ஸுதணாணோவ தேஸயாணம் உவஜ்சயாணம், திரயண குண பாளணரயாணம் ஸவ்வ ஸாஹூணம், பக்தீயே நிச்சகாளமச்சேமி, பூஜேமி, வந்தாமி ணமஸ்ஸாமி துக்கக்கவோ, கம்மக்கவோ போஹிளாஹே ஸுகயி கமணம் ஸமாஹி மரணம் ஜிநகுண ஸம்பத்தி ஹோஉ மஜ்சம்.

 

    அத ஆஷாட மாஸஸ்ய சுக்ல பக்ஷஸ்ய ஆஷ்டாந்நிக மாத்யாந்நிக தேவதா ஸ்தவநேந ஸஹ ப்ரதம திந நந்தீச்வர மஹா பர்வ க்ரியாயாம் பூர்வா சார்ய்யாநு க்ரமேண ஸகல கர்ம க்ஷயார்த்தம் பாவ பூஜா வந்தநா ஸ்தவ ஸமேதம் ஸ்ரீமத் சாந்தி பக்தி காயோத் ஸர்க்கம் கரோம்யஹம்.

 

     சத்தாரி மங்களம் ; அரஹந்தா மங்களம், ஸித்தா மங்களம், ஸாஹூ மங்களம், கேவலி பண்ணத்தோ தம்மோ மங்களம், இத்யாதி போஸராமி தோஸாமிஹம் ஜிணவரே ஸித்தா ஸித்திம் மம திஸந்து.  - 215

 

 

பந்தே, பஞ்ச குருபத்தி

காஓஸக்கோ கஓ

தஸ்ஸ ஆளாசேஉம்

 

      ஞானவானே! பஞ்ச பரமேஷ்டிகளுடைய பக்தியின் காயோத் ஸர்க்கம் செய்யப்பட்டது ; அதனை ஆராய்ச்சி செய்கிறேன்.

சாந்தி ஜிநம் சசி நிர்மல வக்த்ரம்

   சீல குணவ்ரத ஸம்யம பாத்ரம்

*அஷ்ட சதாஞ்சித லக்ஷண காத்ரம்

   நௌமி ஜிநோத்தம மம்புஜ நேத்ரம்.  - 216

 

சசி நிர்மல-

வக்த்ரம் சீல

குண வ்ரத

ஸம்யம பாத்ரம்

அஷ்டசத அஞ்சித

லக்ஷண காத்ரம்

அம்புஜ நேத்ரம்

ஜிந உத்தமம்

சாந்தி ஜிநம்

நௌமி

 

      களங்கமற்ற முழுச் சந்திரன் போன்ற முகம் உடையவரும், பதினெண்ணாயிரம் சீலாசாரம், எண்பத்து நான்கு லக்ஷம் குண விரதம், நூற்றுக்கோடி மஹாவிரதம் யதாக்யாத சாரித்ரம் ஆகிய இவைகளுக்கு இருப்பிடமானவரும், நூற்றெட்டு இலக்கணம் பொருந்திய பரம ஔதாரிக திவ்ய சரீரம் உடையவரும், ஜிநர்களுக்குள் சிறந்த நல்வினையாளருமாகிய ஸ்ரீ சாந்தி தீர்த்தங்கரரைத் துதித்து வணங்குகிறேன்.

 

    (* 'அஷ்ட சதார்ச்சித' பாடபேதம்,) 24 தீர்த்தங்கரர்களும்  சமவசரணம் முதலிய விபூதிகளாலும், குணங்களாலும், மற்றும் பலவற்றாலும் சமானமாயிருந்தாலும், அன்னவர் (பூர்வபவங்களை) முற்பிறவிகளை நோக்க,  சாந்தி தீர்த்தங்கரர் தமக்கு முன் பத்து பவம் வரை அரசராகவும், தேவராகவும், மூன்று முறை   சக்ரவர்த்தியாகவும் இன்பம் நுகர்ந்தவராதலாலும், சர்வ சாந்திக்கும் காரணமான பெயர் அமைந்தவராதலாலும் (அவர் பெயரைத் துதித்த போதே துன்பம் அகலும் ஆதலாலும்), "ஜின உத்தமம் " என்று புகழப்பட்டார்.

 

பஞ்சம மீப்ஸித சக்ரதராணாம்

    பூஜித மிந்த்ர நரேந்த்ர கணைச்ச

சாந்திகரம் குண சாந்திம்பீப்ஸு:

    ஷோடச தீர்த்தகரம் ப்ரணமாமி.  -  217

 

ஈப்ஸித

சக்ர தராணாம்

பஞ்சமம்

இந்த்ர, நரேந்த்ர

கணைச் ச

பூஜிதம்

சாந்திகரம்

ஷோடச தீர்த்தகரம்

அஹம் குண சாந்திம்

அபீப்ஸு :

ப்ரணமாமி

 

      (மக்கள் தேவர் முதலியோரால்) விரும்பப் படுகின்ற சக்கரவர்த்திகள் பன்னிருவரில், ஐந்தாம் சக்கரவர்த்தியானவரும், தேவேந்திரர்கள், அரசர்கள், கணதரர் முதலிய முனிவர்கள் ஆகியோர்களால் பூஜிக்கப்பட்டவரும், அறவுரை மேற்கொள்ளும் உயிர்களனைத்திற்கும் சாந்தியை உண்டாக்குபவரும் ஆகிய பதினாறாம் தீர்த்தங்கரரான  ஸ்ரீ சாந்தி நாதர் பகவானை, யான் நற்குணங்களையும், மனச் சாந்தியை அடையும் விருப்பம் மிக்கவனாய் துதித்து வணங்குகிறேன்.

 

 

திவ்ய தருஸ் ஸுர புஷ்ப ஸுவ்ருஷ்டி :

   துந்து பிராஸந திவ்ய நிநாதௌ

ஆதப வாரண சாமர யுக்மே

     யஸ்ய விராஜித மண்டல தேஜ:  - 218

 

தம் ஜகதர்ச்சித சாந்தி ஜிநேந்த்ரம்

   சாந்திகரம் சிரஸா ப்ரணமாமி

ஸர்வகணாயது யச்சது சாந்திம்

   மஹ்யமரம் படதே பரமாம்ச.  - 219

 

யஸ்ய திவ்ய

தரு: ஸுர

புஷ்ப ஸுவ்ருஷ்டி:

துந்துபி: ஆஸந

திவ்ய நிநாதௌ

ஆதப வாரண

சாமர யுக்மே

விராஜித மண்டல

தேஜ: ஸந்தி

தம் சாந்திகரம்

 

ஜகத் அர்ச்சித

சாந்தி ஜிநேந்த்ரம்

சிரஸா ப்ரணமாமி

ஸ: பகவாந்

ஸர்வ கணாய

படதே மஹ்யம் ச

பரமாம் சாந்திம்

அரம் யச்சது

 

          யாதொரு ஸ்வாமிக்கு ; சிறந்த திவ்வியத் தன்மை வாய்ந்த அசோக மரமும், தேவர்களால் பொழிகின்ற நறுமணம் மிக்க மலர் மாரியும், பேரிகை முதலியன ஒலிக்கின்ற தேவதுந்துபியும், சிம்மாசனமும், திவ்யத்வனியும், (வெப்பத்தைத் தடுக்கும்) முக்குடையும், இருபக்கமும் வீசுகின்ற சாமரைகளும், ஸ்வாமியின் மேல் (வட்டமாகச் சூழ்ந்து) விளங்குகின்ற ப்ரபாவலயமும், இருக்கின்றனவோ, அத்தகையவரும், மூவுலகிலுள்ள உயிர்கள் அனைத்திற்கும் (உள்ளத்தின் தெளிவை) சாந்தியை அளிப்பவருமான அறிஞர்களால் பூஜித்து அர்ச்சிக்கின்ற சாந்தி தீர்த்தங்கரரைப் புவியில் தலை படும் வண்ணம் சாஷ்டாங்கமாக வணங்குகிறேன் ; அவர் (பகவான்) பவ்வியர்கள் அனைவருக்கும், இவ்வண்ணம் துதிபாடுகின்ற எனக்கும் சிறந்த சாந்தியை (முக்தியின்பத்தை)ச் சீக்கிரமாக அளிக்கட்டும்.

 

 

உபேந்த்ர வஜ்ரா

 

     (ஜத சங்க யுக்மம்)

 

அசோக வ்ருக்ஷஸ் ஸுர புஷ்ப வ்ருஷ்டி :

  திவ்ய த்வநிச் சாமரே ஆஸநஞ்ச

பாமண்டலம் துந்து பிராதபத்ரம்

ஸத்ப்ராதிஹார்யாணி ஜிநேச்வராணாம்.  - 220

 

ஜிநேச்வராணாம்

அசோக வ்ருக்ஷ :

ஸுர புஷ்ப வ்ருஷ்டி:

த்வயத்வநி: சாமரே

ஆஸநம் ச

பாமண்டலம், துந்துபி:

ஆதபத்ரம் ஏதாநி

ஸத்ப்ராதி

ஹார்யாணி பவந்தி

 

          கேவல ஜ்ஞானமடைந்த ஜிநர்கள் யாவருக்கும், அசோக தருவும், தேவர்கள் சொரியும் பூமழையும், த்வயத்வனியும், சாமரைகளும் சிம்மாசனமும், ப்ரபா மண்டலமும், தேவ துந்துபியும், (வெயிலின் தாபத்தைக் தடைசெய்து காக்கும்) , முக் குடையும்,என்ற இவகள் சிறந்த (அஷ்ட மஹா ப்ராதிகார்யங்கள்) எண்வகை அதிசயங்கள் ஆகின்றன.

 

யேsப்யர்ச்சிதா மகுட குண்டல ஹார ரத்நை:

  சக்ராதிபிஸ் ஸுரவரை: ஸ்துத பத பத்மா:

தேமே ஜிநா: ப்ரவர வம்ச ஜகத் பிரதீபா:

     தீர்தங்கரா: ஸதத சாந்திகரா பவந்து.  - 221

 

யே மகுட குண்டல

ஹார ரத்நை:

சக்ராதிபி:

ஸுரவரை :

அர்ச்சிதா:

ஸ்துத பாத பத்மா:

ப்ரவர வம்ச

ஜகத் ப்ரதிமா:

ஜிநா: தே

தீர்த்தங்கரா:

மே ஸதத

சாந்திகரா:

பவந்து

 

      எவர்கள் ; மணிமகுடம் , கர்ணகுண்டலம், மாணிக்க மாலை முதலான இயல்பான ஆபரணங்களுயுடைய தேவேந்திரன் முதலான மகர்த்திக தேவர்களினால் பூஜிக்கப்பட்டவரும், மூவுலகோரால் துதி செய்து வணங்கப்பட்ட திருவடித் தாமரைகளை யுடையவரும், சிறந்த உத்தம குலத்து உதித்தவரும், உலகத்தவரின் அஞ்ஞானமாகிற இருளை நீக்கும் கேவல ஞானமாகிற விளக்கை உடையவரும், காதி கர்மங்களை வென்றவருமாகி இருக்கின்றார்களோ, அத்தகைய தீர்த்தங்கர பரம தேவர்கள் எனக்கு எப்பொழுதும் (இடைவிடாமல்) மனச்சாந்தியை அளிப்பவர்களாகட்டும்.

 

 

ஸம்பூஜகாநாம் ப்ரதிபாலகாநாம்

  யதீந்த்ர ஸாமாந்ய தபோதநாநாம்

தேசஸ்ய ராஷ்ட்ரஸ்ய புரஸ்ய ராஜ்ஞ :

    கரோது சாந்திம் பகவாந் ஜிநேந்த்ர :  - 222

 

பகவாந் ஜிநேந்த்ர:

ஸம்பூஜகாநாம்

ப்ரதி பாலகாநாம்

யதீந்த்ர, ஸாமாந்ய

தபோதநாநாம்

தேசஸ்ய, ராஷ்ட்ரஸ்ய

புரஸ்ய ராஜ்ஞ:

சாந்திம் கரோது

 

       பூஜ்யரான சாந்தி பகவான் ; தம்மைப் பக்தி பூர்வகம் துதித்து வணங்குகின்றவர்களுக்கும், ஜிந தர்மத்தைக் காப்பாற்றுமவர்களுக்கும், யதிவரர்களான கணதரர் முதலானவர்களுக்கும், துன்பத்தைத் தாங்கும் ஏனைய முனிவர்களுக்கும், தேசத்திற்கும் (நாட்டிற்கும்), மாகாணத்திற்கும், நகரத்திற்கும், மன்னனுக்கும், இன்ப காரணமான சர்வ சாந்தியை உண்டாக்கட்டும்.

 

ஸ்ரீஸௌபாக்ய பரம்பரோ தயகரம் புண்யம் பவித்ரம் பரம்

தாமாநந்த ருஜா ஜரா பஹரணம் பவ்ய ப்ரஜாநாம் ஸதா

த்ரைளோக்யேந்த்ர திரீடகோடி விலஸத் ரத்ரப்ரபாபாடலம்

சாந்தீசச் சரண த்வயம் திசதுநஸ்ஸந் மங்களம், மங்களம்.  - 223

 

பவ்ய ப்ரஜாநாம்

ஸ்ரீ ஸௌபாக்ய

பரம்பர உதயகரம்-

புண்யம் பவித்ரம்

பரம் தாம அநந்த

ருஜா ஜரா

அபஹரணம்

த்ரைளோக்ய

இந்த்ர திரீட

கோடி விலஸத்

ரத்ந ப்ரபா

பாடலம், மங்களம்

சாந்தி ஈச:

சரணத்வயம் ந: ஸதா

ஸந்மங்களம் திசது.

 

       பவ்ய ஜீவன்களுக்குத் தம் பிறவியில் (இல் வாழ்க்கையில்) அடையத்தக்க செல்வங்களையும், அதன் பின்னர் பரம்பரையாய் உண்டாகும் முக்திச் செல்வத்தையும் அளிக்கவல்லதும்; நல்வினையைப் பெறச் செய்வதும் ; குற்றமற்ற தன்மையை அடைவிப்பதும், (பரிசுத்தமானதும்), முக்திக்குக் காரணமான  பரம ஔதாரிக திவ்ய தேகத்திற்கு ஆதாரமானதும, (அல்லது சிறந்த காந்தியுள்ளதும்), எண்ணற்ற ரோகம் (அல்லது பிறவிப் பிணி),  மூப்பு இவைகளைப் போக்கடிப்பதும், மூவுலக இந்திரர்களுடைய கிரீடங்களின் உச்சியில் ஜ்வலிக்கின்ற மாணிக்க மணியின் ஒளிகளினால் சூழ்ந்திருக்கின்றதும்; (தேவர்கள் வணங்குவதும்) ,முக்கிய மங்களமானதும் ஆகிய  சாந்தி பட்டாரகருடைய திருவடிகள் இரண்டும் நமக்கு எப்பொழுதும் சிறந்த மங்களத்தை அளிக்கட்டும்.

 

 

க்ஷேமம் ஸர்வ ப்ரஜாநாம் ப்ரபவது

  பலவாந் தார்மிகோ பூமி பால :

காலே காலேச ஸம்யக் வர்ஷது மகவா

  வ்யாதயோ யாந்து நாசம்

துர்பிக்ஷம் சோரமாரி க்ஷணமபி

  ஜகதாம் மாஸ்மபூத் ஜீவ லோகே

ஜைநேந்த்ரம் தர்ம சக்ரம் ப்ரபவது ஸததம்

   ஸர்வ ஸௌக்ய ப்ரதாயி.  - 224

 

ஸர்வ ப்ரஜாநாம்

க்ஷேமம் ப்ரபவது

பூமிபால; பலவாந்

தார்மிக : ப்ரபவது

மகவா காலே காலேச

ஸம்யக் வர்ஷது

வ்யாதய: நாசம்

யாந்து ஜகதாம்

துர்ப்பிக்ஷம்

சோர மாரி

க்ஷணமயி மாஸ்ம பூத்

ஜீவலோகே

ஸர்வ ஸௌக்ய

ப்ரதாயி ஜைநேந்த்ரம்

தர்ம சக்ரம்

சததம் ப்ரபவது

 

    இவ்வுலகில் உள்ள மக்கள் முதலிய உயிர்கள் அனைத்திற்கும் இன்ப காரணமான நன்மை ஆகட்டும் ; (அவ்வுயிர்களைக் காக்கும்), அரசன் படைப் பலமுடன் தரும குணத்தில் தவறாதவனாக இருக்கட்டும் ; மேகம், பயிர்களின் வளர்ச்சிக்கு அனுகூலமான காலங்களில் (அவ்வப்போது தேவைக்குத் தக்கவாறு), வேண்டிய அளவு மழை பொழியட்டும் ; கொடிய பூச்சி முதலிய நோய்கள் தோன்றாமல் இருக்கட்டும் ; இவ்வுலக மக்களுக்கு, பஞ்சமும் களவாடும் எண்ணமும், (ப்ளேக், கால்ரா) அம்மை முதலான வியாதிகளும் ஒரு சமயங்கூட தோன்றாதிருக்கட்டும் ; இவ்வுலக மக்கள் அனைவருக்கும் இன்பத்தைத் தருகின்ற ஜிநேந்திரர்களின் அறவாழி எப்பொழுதும் நிலைத்து நிற்கட்டும்.

 

     "நச அதர்சநே" என்பது தாது பாடம் ஆதலின் நாசம், என்பது தோன்றாமலிருக்கட்டும் என்ற பொருள் தரும். தோன்றி நாசமடைவதை விட தோன்றாமலிருப்பது மேல் ஆதலின் என்க.

 

      இவ்வாசிரியர் தம்மைப் போலவே உலகமும் க்ஷேமம் அடையவேண்டும் என்ற விருப்புடன், " க்ஷேமம் ஸர்வ ப்ரஜா நாம் " என்றார்.  ஸர்வப்ரஜாநாம் என்றது ஜாதிமத பேதமின்றி சகல உயிர்களையும் குறிப்பிடுவதாகும்.

 

    ப்ரஜைகள் க்ஷேமம் அடைய வேண்டுமாயின், மக்களைக் காக்கும் மன்னவன் படைப் பலமுடன் வீரம் மிக்கவனாக இருக்க வேண்டும் ; அதனோடு, அவன் (அரசன்), தர்மவானாகவும் அமையவேண்டும் ; அங்ஙனமாயினும், நாடு செழிப்படைவதற்குக் காரணமான பருவமழை, காலம் தவறாமல் பொழிய வேண்டும் ; அவ்வாறு நாடு செழிப்படைந்த போதிலும், நோய் முதலிய துன்பங்கள் அணுகாமல் இருக்கவேண்டும். இவை யாவும் நிலைக்க வேண்டுமாயின், நல்வினை மிகவேண்டும். ஆதலின் அந் நல்வினை மிகுதற்குக் காரணமான அறவாழியின் அறநெறி ஓங்கவேண்டும் என்று (ஓம் படை) முடிவு கூறினார்.

 

 

ப்ரத்வஸ்த காதி கர்மாண : கேவல ஜ்ஞாந பாஸ்வரா :

 குர்வந்து ஜகதாம் சாந்திம் வ்ருஷபாத்யா ஜிநேச்வரா :  - 225

 

ப்ரத்வஸ்த  காதி

கர்மாணே :       

 

கேவல ஜ்ஞாந

பாஸ்வரா:

வ்ருஷபாத்யா :

ஜிநேச்வரா : ஜகதாம்

சாந்திம் குர்வந்து

 

       காதிகர்மங்களக் கெடுத்தவர்களும் மற்றும், கேவல ஞானத்தினால் விளங்கப்பட்டவர்களுமான, விருஷபர் முதலாக மகாவீரர் வரையிலுள்ள இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களும் உலக மக்களுக்கு (மனச்) சாந்தியை உண்டாக்கட்டும்.

 

இச்சாமி பந்தே ஸந்தி பக்தி காஓஸக்கோ கஓ தஸ்ஸ ஆளோசேவும் பஞ்ச மஹா கல்லாண ஸம்பண்ணாணம் அட்டமஹா பாடி ஹார ஸஹியாணம் சொத்தீஸ அஇஸய விஸேஸ ஸஞ்ஜுத்தாணம் பத்தீஸ தேவிந்த மணிமௌலி மத்தய மஹியாணம், பலதேவ வாஸுதேவ சக்கஹர ரிஸி முணி ஜயி அணகாரோவ கூடாணம், துயிஸய ஸஹஸ்ஸ ணிளயாணம் உஸஹாயி வீராவஸாணம் மங்கள மஹா புரிஸாணம் பக்தீயே ணிச்ச காலம் அச்சேமி பூஜேமி வந்தாமி ணமம்ஸாமி துக்கக்கவோ கம்மக்கவோ போஹிளாஹோ ஸுகயி கமணம் ஸமாஹி மரணம் ஜிந குண ஸம்பத்திஹோஉ மஜ்சம். 

 

 அத ஆஷாட மாஸ சுக்லபக்ஷ ஆஷ்ட்டாந்நிக மாத்யாந்நிக தேவதா ஸ்தவநேந ஸஹ ப்ரதமதிந நந்தீச்வர மஹா பர்வ க்ரியாயாம் பூர்வாசார்யாநுக்ரமேண ஸகல கர்ம க்ஷயார்த்தம் பாவ பூஜா வந்தநா ஸ்தவ ஸமேதம் ஸ்ரீமத் ஸித்த பக்தி சைத்ய பக்தி நந்தீச்வர ஜிந சைத்ய சைத்யாலய பக்தி பஞ்ச குரு பக்தி சாந்தி பக்திம் விதாய தத் ஹீநாதிக தோஷ விசுத்யர்த்தம், ஸர்வ அதீசார தோஷ விசுத்யர்த்தம் ; மம ஆத்ம சுத்தி காரணார்த்தம், பாவ பூஜா வந்தநாஸ்தவ ஸமேதம் ஸ்ரீமத் ஸமாதி பக்திம் காயோத் ஸர்க்கம் கரோமி அஹம். – 226

 

பந்தே ஸந்தி பக்தி

காஓஸக்கோ கஓ

தஸ்ஸ ஆளோசேஉம்

பஞ்ச மஹாகல்யாண

ஸம்பண்ணாணம்

அட்டமஹாபாடிஹார

ஸஹியாணம் சொத்தீஸ

அயிஸயவிஸேஸ

ஸஞ்ஜுத்தாணம்

பத்தீஸ தேவிந்தமணி

மௌலிமத்தய மஹி-

யாணம், பலதேவ,

வாசுதேவ சக்கஹர

ரிஸி முணி ஜயி

அணகார உவகூடாணம்

துயிஸய ஸஹஸ்ய

ணிளயாணம்,

 உஸஹாயி

வீராவஸாணம்

மங்கள மஹாபுரி-

ஸாணம், நிச்சகாளம்

அச்சேமி, பூஜேமி

வந்தாமி ணமஸ்ஸாமி

மச்சம் துக்கக்கவோ

கம்மக்கவோ போஹி-

லாஹோ, ஸுகயி-

கமணம், ஸமாஹி

மரணம் ஜிநகுணஸம்-

பத்திஹோஉ இச்சாமி

 

        ஞானவானே! சாந்தி பக்தியினுடைய காயோத் ஸர்க்கம் செய்யப்பட்டது ; அதனை ஆலோசிக்கிறேன். கர்ப்பாவதரணம் முதலிய ஐந்து மஹா கல்யாணங்களை நன்முறையில் அடைந்தவர்களும்; அஷ்ட மஹா ப்ராப்தி ஹார்ய அதிசயங்களோடு விளங்கியவர்களும்; முப்பத்துநான்கு அதிசயங்களோடு கூடி அறமுரைத்தவர்களும்; முப்பத்திருவர் தேவேந்திரர்களின் மகுட மணிந்த (மஸ்தகத்தால்) தலையால் வணங்கி பூஜிக்கப் பட்டவர்களும் ; பலதேவர், வாசுதேவர் ஆகிய அர்த்த சக்கரவர்த்திகளும்,  (அவதி ஞானம் மனப்பர்யய ஞானம் முதலியவற்றையுடைய) ரிஷிகளும், முனிகளும், யதிகளும், (கேவல ஞானம் அடைந்த)கேவலிகளும் ஆகிய தபோதனர்களால் சூழ்ந்திருப்பவர்களும், ஸஹஸ்ரநாமம் முதலிய பலவிதத் துதிகளுக்கு இருப்பிடமானவர்களுமான விருஷபன் முதலாக மகாவீரன் வரையிலுள்ள முக்கிய மங்கள கர்த்தாக்களான , இருபத்துநான்கு தீர்த்தங்கர பரம தேவர்களையும் நாள்தோறும் (இடைவிடாமல்) அர்ச்சிக்கிறேன், பூஜிக்கிறேன், துதிக்கிறேன், வணங்குகின்றேன். இதனால் எனக்குத் துன்பங்களின் (விடுதலையும்) அழிவும், கர்ம க்ஷயமும், ஞான லாபமும், நற்கதி பெறுதலும், ஸமாதி மரணமும் ஜிநகுண ப்ராப்தியும் ஆகட்டும், என்பதற்காக யான் இதனையே விரும்புகிறேன்.

 

     அவதி ஞானமுடையவர் ரிஷிகள், மனப்பர்யய ஞானம் முதலியன உடையவர் முனிகள், சாரணருத்தி பெற்ற மகான்கள் யதிகள். அழகாகக் கத்தரித்துக் கன்னத்தில் தொங்கவிடப்பட்ட மயிருக்கும், கிரீடத்துக்கும், தலை மயிருக்கும் மௌலி என்பது. ஈண்டு, மௌலி - கிரீடம். " சூடா கிரீடகேசாச்ச ஸம்யதா மௌலயஸ்த்ரய ; அமரம். முப்பத்தீராயிரம் மன்னர்களால் சேவித்துத் திறை செலுத்தும் தன்மையும், பதினான்கு ரத்தினங்களும், ஆறு கண்டங்களை ஆள்வதும், மற்றும் பல வைபவமும் உடையவர்; அதாவது, பதினாறாயிரம் அரசர்களால் சேவிப்பதும் மூன்று கண்டம் மட்டிலும் ஆள்வதும், ஏழு இரத்தினங்கள் மட்டும் உடையவரும் அர்த்த சக்கரவர்த்திகள் எனப்படும். அவர்கள், பலதேவர், வாசுதேவர், ப்ரதி வாஸுதேவர் என மூவகையராவர். (ஜயி, யதி என்று மாறும்)

 

கோமள கதளீ பத்ர ஸ்படிகம் பாலார்க்க ஹேம நீலாபம்

பஞ்ச பரமேஷ்ட்டி வர்ணம் பாவநம் பவ விநாசநம்.

 

பஞ்ச பரமேஷ்டி

வர்ணம்

கோமள கதளீ பத்ர

ஸ்படிக பால அர்க்க

ஹேம நீல ஆபம்

ஏதேஷாம் பாவநம்

பவ விநாசநம் பவதி

 

    பஞ்ச பரமேஷ்டிகளின் தன்மை யடைந்த தீர்த்தங்கரர்களின் திருமேனியின் வர்ணங்கள், முற்றாத இள வாழையிலை போன்ற பச்சை வர்ணமும், ஸ்படிகம் போன்ற வெள்ளை வர்ணமும், இளஞ் சூரியன் போலும் சிவந்த வர்ணமும், பொன் போன்ற சிவப்பு கலந்த மஞ்சள் வர்ணமும், நீலமணி போன்ற நீல வர்ணமும் ஆகிய பஞ்ச வர்ணங்களாயுள்ளன. இறைவர்களாகிய இவர்களை உள்ளத்தே எண்ணித் துதிப்பதனால் அது பிறவிப் பிணியை நாசம் செய்வதாக ஆகிறது.

 

ஆபம் - சமானமான. தீர்த்தங்கரர்கள் ஒவ்வொருவரும் பஞ்ச பரமேஷ்டிகளின் தன்மை அடைந்தவர்களாதலின், ' பஞ்ச பரமேஷ்டி வர்ணம் ' என்றார் எனினும் அமையும்.

 

 

சதுர் விம்சதி தீர்த்தேசாந் சதுர்க்கதி நிவ்ருத்தயே

வ்ருஷபாதி மஹாவீர பர்யந்தாந் ப்ரணமாம்யஹம்.

 

வ்ருஷபாதி மஹாவீர

பர்யந்தாந்

சதுர்விம்சதி

தீர்த்தேசாந் அஹம்

சதுர்கதி நிவ்ருத்தயே

ப்ரணமாமி

 

      விருஷபர் முதலாக மஹாவீரர் வரையிலுள்ள இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களையும் யான் (செல்லும்) சதுர்கதியின் செலவினைத் தடைசெய்யும் பொருட்டு (அதாவது நான்கு கதியில் செல்லுதலையும் நீக்கிக் கொள்ளும் பொருட்டு)த் துதித்து வணங்குகிறேன்.

 

      எட்டு கோடியே ஐம்பத்தாறு லக்ஷத்து தொண்ணூத்தேழாயிரத்து நானூற்று எண்பத்தோரு அக்ரத்திம ஜிந சைத்யாலயங்களுக்கும், தொளாயிரத்து இருபத்தைந்து கோடியே ஐம்பத்து மூன்று லக்ஷத்து இருபத்தேழாயிரத்து தொளாயிரத்து நாற்பத்தெட்டு அக்ரத்திம ஜிந பிம்பங்களுக்கும் அநந்த ஸங்க்யை உடைத்தாயிருக்கின்ற சித்த பரமேட்டிகளுக்கும் த்ரிகரண சுத்தியினாலே த்ரிஸந்த்யா காலங்களிலேயும் ப்ரத்யேகம், ப்ரத்யேஹம் த்ரிப்ரதக்ஷிணம் செய்து அனந்தானந்த வாரம் நமோஸ்து நமோஸ்து நமோஸ்து.

 

"அர்ஹத் வக்த்ர ப்ரஸூதம் கணதர

  ரசிதம் த்வாதசாங்கம் விசாலம்

சித்ரம் பஹ்வர்த்த யுக்தம் முநிகண

     வ்ருஷபை: தாரிதம் புத்தி மத்பி:

மோக்ஷாக்ர த்வார பூதம்

   வ்ரத சரண பலம் ஜ்ஞேய பாவ ப்ரதீபம்

பக்த்யா நித்யம் ப்ரவந்தே ச்ருதமஹமகிலம்

   ஸர்வ லோகைக ஸாரம்".

 

அர்ஹத் வக்த்ர

ப்ரஸூதம்

கணதர ரசிதம்

த்வாத சாங்கம்

விசாலம்

சித்ரம்

பஹு அர்த்த

யுக்தம்

புத்தி மத்பி:

 

           அருகன் முகத்தினின்றும் புறப்பட்டதும் (வெளி வந்ததும்), கணதரர்களால் கிரந்த ரூபமாக (எழுதப்பட்டதும்) செய்யப்பட்டதும், பன்னிருவகை அங்கங்கங்களையுடையதும் (துவாதசாங்க பரமாகமும்), விரிவான பொருள் உள்ளதும், வியப்பைத் தருவதும், (ஆச்சரியம் உண்டாக்குவதும்), பல்வேறு வகையான அர்த்தங்களுடன் சேர்ந்திருக்கின்றதும், மதி சுருத அவதி மனப்பர்யாயமென்ற நான்கு ஞானங்களையும் அடைந்திருக்கின்ற,

 

 

முநிகண வ்ருஷபை:

தாரிதம்

மோஷ அக்ர

த்வார பூதம்

வ்ரத சரண

பலம்

ஜ்ஞேய பாவ

ப்ரதீபம்

 

           முனி நாயகர்களான விருஷபஸேந கணதரர் முதலான கணதரர்களால் உட்கொண்டிருப்பதும் (தரித்திருப்பதும்), உலக உச்சியில் உள்ள முக்திக்குச் செல்லும் வாயிலானதும், விரதங்களையும் சீலங்களையும் பயனாக அளிப்பதும், அறியவேண்டிய தத்துவப் பொருள்களுக்குத் தீபம் போன்றதும் (அதாவது இருளை நீக்கி வஸ்துக்களைக் காட்டும் விளக்கைப் போல ; அஞ்ஞானமாகிற இருளை விலக்கி உண்மைப் பொருள் விளங்குமாறு தோற்றுவிக்கும் விளக்குப் போன்றதும்);

 

 

ஸர்வலோக

ஏகஸாரம்

அகிலம் ச்ருதம்

அஹம் நித்யம்

பக்த்யா

ப்ரவந்தே

 

               உலக மக்கள் அனைவருக்கும் உபயோகமுள்ள ஸாரமான (ஸத்தான)தும், ஆகிய நாற்பத்திரண்டு விதமான பரமாகமங்கள் முழுவதையும் யான் தினந்தோறும் பக்தி பூர்வகம் துதித்து வணங்குகிறேன்.

 

இருபத்தெட்டு மூலகுணம் முப்பத்தாறு உத்தரகுணம் பதிணெண்ணாயிரம் சீலா சாரம் எண்பத்து நான்கு லக்ஷம் குண வ்ரதம் நூற்றுக்கோடி மஹா வ்ரதம் ஸப்த ரித்தி ஸம்பந்நர்களுமான கணதராதி பரம தேவர்களுக்கும் நாற்பத்திரண்டு பரமாகமங்களைத் தரித்த த்ரயோதச கிரியை நிறைந்த மஹா முனிகளுக்கும், எட்டு கோடியே தொண்ணூத் தொன்பது லக்ஷத்து தொண்ணூத் தொன்பதாயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்றேழு ஸர்வ ஸம்யதர்களுக்கும் த்ரிகரண சுத்தியினாலே த்ரிஸந்த்யா காலங்களிலேயும் ப்ரத்யேஹேம் ப்ரத்யேஹேம் த்ரிப்ரதக்ஷணம் செய்து அனந்தானந்த வாரம் நமோஸ்து நமோஸ்து நமோஸ்து.

 

"மந்த்ரஹீநம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஜிநார்ச்சயா

பூஜிதந்து மயாதேவ பரிபூர்ணகமுச்யதே"

 

ஜிந ! தேவ !

அர்ச்சய

மந்த்ரஹீநம்

க்ரியாஹீநம்

பக்திஹீநம் மயா

பூஜிதம் யத் தத்

பரிபூர்ணகம்

உச்யதே

 

      ஜிநேச்வரரே ! தேவாதி தேவனே ! உன்னுடைய பூஜையி(ல் என் அறியாமை அல்லது அசதி மறதியி) லிருந்து மந்திரங்கள் குறைவாகவும், பக்தியில் குறைவாகவும், செயல் முறையில் குறைவாகவும், என்னால் பூஜிக்கப்பட்டவை யாவையுண்டோ அவை குறையின்றிப் பூர்ணமானவையே போன்று அறிஞர்களால் சொல்லப்படுகின்றன.

 

        ஆப்த ஆகமகுருச்ரத்தாநம் பஞ்சகுருப்யோ நமோந்நம : வித்யா குருப்யோ நமோந்நம : ஜிநஸேநா சார்யர்க்கு நமோஸ்து நமோஸ்து, குணபத்ரா சார்யர்க்கு நமோஸ்து நமோஸ்து, குந்தகுந்தா சார்யர்க்கு நமோஸ்து நமோஸ்து, சகலகீர்த்தி ஆசார்யருக்கு நமோஸ்து நமோஸ்து, ஜிநாயநம ; ஜிநவராய நம ; ஜிநவ்ரஷபாய நம.  அஷ்ட கர்மங்களைக் கெடுத்து அனந்த ஜ்ஞானத்தைப் பெற்ற அருகத் பரமேஷ்டிகளுக்கும், சித்த பரமேஷ்டிகளுக்கும் அனந்தாநந்த வாரம் நமோஸ்து நமோஸ்து நமோஸ்து.

 

சாந்தி பக்தி முற்றும்.

 

ஸமாதி பக்தி:

 

வ்யுத்ஸ்ருஜ் தோஷாந் நிச்சேஷாந்

     ஸத்த்யாநீ ஸ்யாத் தநுஸ்ரஜௌ

ஸஹேதாப் யுபஸர்க் கோர்மீந்

     கர்மைவம் பித்யதே தராம்.  - 227

 

(ய: கச்சித் பவ்ய:)

தநு ஸ்ரஜௌ

நிச்சேஷாந் தோஷாந்

வ்யுத்ஸ்ருஜ்ய

ஸத் த்யாநீ ஸ்யாத்

உபஸர்க்க ஊர்மீந்

ஸஹேதா அபி

ஏவம் ஸ்யாத்

தஸ்ய கர்ம

பித்யதே தராம்

 

        யாதொரு பவ்வியன் ; தன் மரணகாலத்தில், தன் உடலை விடும்பொழுது முப்பத்திரண்டு தோஷங்களையும் விட்டு நீங்கித் தன் இயற்கையான ஆன்ம ஸ்வரூபத்தையே தியானிக்க வேண்டும் ; மற்றும் கடல் அலைகளைப் போலத் தொடர்ந்து வருகின்ற பிற உயிர்களால் ஏற்படும் கொடுமை மிக்க துன்பங்களைச் சகித்துக் கொள்ளவும் வேண்டும் ; இவ்வாறாகில் அவனுடைய வினைகள் ஆத்மனை விட்டு அறவே விலகுகின்றன.

 

வி + உத் + ஸ்ருஜ்ய = வ்யுத் ஸ்ருஜ்ய,

 

த்யாநாசுசு க்ஷணாவித்தே மநருத்வித் ஸமீஹிதா :

ஸ்வகர்ம ஸமிதோ பாவ ஸர்ப்பிஷா ஜுஹுமோsதுநா.  -228

 

மந

ருத் விக் ஸமீஹிதா :

ஸ்வ கர்ம ஸமித:

பாவ ஷர்ப்பிஷா

இத்தே த்யாந

ஆசுசு க்ஷணௌ

அதுநா

ஜுஹும :

 

         உள்ளத்தே தோன்றும் எண்ணங்களென்கிற ருத்விக்குகளால் (ஹோமம் செய்பவர்களால்), தன் ஆத்மனிடம் பற்றியுள்ள கர்மங்களாகிற சமித்துகளை (விறகுகளை), நற் பரிணாம மென்கிற நெய்யுடன் சேர்த்து (நெய்யைச் சொரிந்து) நன்றாகக் கொழுந்துவிட்டு எரிகின்ற தியானமாகிற நெருப்பில், இப்பொழுது ஹோமம் செய்கிறோம்.

 

     ஹோம கர்த்தா ஆத்மா, மனம் ருத்விக்குகள்,  கர்மங்கள் சமித்துகள், எண்ணம் நெய், த்யானம் நெருப்பு, இவற்றின் பலன் நிஜஸ்வரூப ப்ராப்தி (முக்தி).  "க்ருத மாஜ்யம் அவி : ஸர்ப்பி:" நெய்க்குக் கூறுவது அமரம். "ரோஹிதாச்வோ வாயு ஸஹ: சிகாவாந் ஆசுசுக்ஷணி:" அமரம். ஆசுசுஸ்ரக்ஷணி என்பது நெருப்பு, ஏழாம் வேற்றுமையில் ஆசுசுக்ஷணௌ ; என்றாயிற்று.

 

அஹமேவாsஹமித்யாத்ம ஜ்ஞாதந்யத்ர சேதநாம்

 இதமஸ்மி கரோமீதம் இதம் புஞ்ஜமிதி க்ஷிபேத்.  -  229

 

(ஸித்த ஸத்ரஸ)

அஹம் ஏவ அஹம்

இதி ஆத்ம ஞாநாத்

இதம் அஸ்மி

இதம் கரோமி

இதம் புஞ்ஜம்

இதி அந்யத்ர

சேதநாம்

க்ஷிபேத்

 

      (வினைகள் அகன்ற சித்தருக்கு இணையான ஆத்மனாகிய) யானே, யான் என்று (குரு மூலம்) ஆத்மனின் உண்மையை அறிந்ததனால், யான் இந்தச் சரீரமேயாகி யிருக்கின்றேன்,  இவ்வுடலுக்கு வேண்டிய செயல்களையே செய்கின்றேன், இவ்வுடலுக்கு வேண்டிய பொறிப்புலன்களையே அனுபவிக்கிறேன் என்கிற (ஆத்மனை விட்டு மற்றவைகளை யான் என்று எண்ணும்) புத்தியை, அறவே விட்டுவிடத் தகுந்தது.

 

அஹமேவா ஹமித்யந்தர் ஜல்ப்ப: ஸம்வ்ருத்த கல்ப்பநாம்

 த்யக்த்வாsவாக் கோசரம் ஜ்யோதிஸ் ஸ்வயம் பச்யாமி சாச்வதம்.  230

 

அஹம் ஏவ

அஹம் இதி

அந்தர் ஜல்ப்ப:

ஸம்வ்ருத்த

கல்ப்பநாம்

த்யக்த்வா

அவாக் கோசரம்

சாச்வதம்

ஸ்வயம்

ஜோதி:

பச்யாமி

 

        சுத்த ஸ்வரூபனாகிய ஆத்மனே, யான் என்று உள்ளத்தே எண்ணி அதனையே இடைவிடாமல் சொல்லிக் கொண்டிருக்கிற யான், புத்ர மித்ராதிகள் என்னுடையதென்கிற கற்பனைகளை (ஏற்பாட்டை)ப் பற்றற விட்டு ; இத்தகையது, இவ்வளவு, இத்தன்மையது என்று வசனத்தாலும் கூற முடியாததும்,  எக்காலமும் அழிவில்லாததுமான என்னுடைய ஆத்ம ப்ரகாசத்தை ஞானத்தால் நன்கு அறிகிறேன் ; அவ்வாறே ஞானத்தால் காண்கிறேன்.

 

அமுஹ்யந்த மரஜ்யந்த மத்விஷந்தஞ்ச யஸ் ஸ்வயம்

சுத்தே நிதத்தே ஸ்வேசுத்தமுபயோகம் ஸஸித்த்யதி.  - 231

 

ய :

அமுஹ்யந்தம்

அரஜ்யந்தம்

அத் விஷந்தம்ச

சுத்தம்

உபயோகம்

ஸ்வயம்

சுத்த ஸ்வே

நிதத்தே

ஸ்வஸித்தே

ஸ : ஸித்யதி

 

      எவன் ஒருவன் (மோகனீய கர்மத்தின் உதயமாகிய) மயக்கத்தினின்றும் நீங்கியதும், (இறைவனிடத்து உண்டாகும் பக்தியிலும்) பற்றின்றி நீங்கியதும், (உத்தம க்ஷமையை மேற்கொண்டதனால்) சிறிதளவும் துவேஷத்தை (கறுவு பகை முதலியவற்றை) மேற்கொள்ளாததும் ஆகிய (மோஹராக த்வேஷங்களிலகன்ற) சுத்தோப யோகத்தை (சுத்தாத்ம தியானத்தை) இயல்பாகவே சுத்தமாயிருக்கிற (வினைகளிலகன்ற) தன் சுத்தாத்ம ஸ்வரூபத்தில் நிலையாக மேற்கொண்டு நின்று, தியானிக்கிறானோ, அவன், ஸித்தரின் ஸ்வரூபத்தை அடைகிறான்.

 

போதி ஸமாதி விசுத்த

   ஸ்வசிதுபலப்த்யுஜ்வலத் ப்ரமோத பரா :

ப்ரம்ம விதந்தி பரம்யே தே

   ஸத் குரவோ மம ப்ரஸீதந்து.  - 232

 

யே போதி

ஸமாதி விசுத்த

ஸ்வ சித் உபலப்தி

உஜ்வலத்

ப்ரமோத பரா : தே

பரம் ப்ரம்ம விதந்தி

தே ஸத் குரவ :

மம ப்ரஸீதந்து

 

        எவர்கள், ஸம்யக் ஞானத்தாலும், நிரந்தரமான ஆத்மத் தியானத்தாலும், பரிசுத்தமான தன் ஆன்ம லாபத்தை அடைவதனால், நன்றாகப் பிரகாசிக்கின்ற பரமானந்த (மய)த்தில் ஒன்றாகக் கலந்து விருப்பமுடன் பக்தி செய்கிறார்களோ, அவர்கள் பரப்ரம்ம ஸ்வரூபமான நிஜாத்ம ஸ்வரூபத்தை அறிந்தவர்களாவார்கள் ; அத்தகைய சிறந்த பரமேஷ்டிகள், எனக்கு நன்மையளிக்கட்டும்.

 

ஆத்யந்த வர்ஜ்ஜித மசேஷ விகல்ப்ப சூந்யம்

   ராகாதி தோஷ ரஹிதஞ்ச விமுக்த தேஹம்

யந்நித்ய மவ்யய மசிந்த்ய மநந்த போதம்

   தத் ப்ரம்ம சுத்த மஹமேவ ஸுக ஸ்வரூபம்.  - 233

 

ஆதி அந்த வர்ஜ்ஜிதம்

அசேஷ விகல்ப்ப-

சூந்யம், ராகாதி

தோஷ ரஹிதம் ச

விமுக்த தேஹம்

யத் தத் நித்யம்

அவ்யயம்

அசிந்த்யம்

அநந்தபோதம்

ஸுத்தம்

ஸுகஸ்வரூபம்

தத் ப்ரம்ம அகம் ஏவ

 

        ஆதியும், அந்தமும் (முதலும், முடிவும்) இல்லாததும், வேறு வகையான பல பேதங்கள் எதுவும் இல்லாததும், ஆசை கோபம் மயக்கம் முதலான குற்றங்கள் இல்லாததும், உடலால் விடப்பட்டதும் (எனவே உடலில் நீங்கினதும்) ஆகிய, எந்த ஆத்ம ஸ்வரூபமோ ; அது, எக்காலமும் நிலையாக இருப்பதும், அழிவற்றதும், சிந்தனைக்கு எட்டாததும், கடையிலா ஞான ஸ்வரூபமானதும், நிர்மலமானதும், கடையிலா இன்பமயமானதாகும் ; அத்தகைய சுத்த ஆத்ம ஸ்வரூபம் யானே ஆகின்றேன் (என்று தியானிக்கவும்).

 

ஸாகாரஞ்ச நிராகாரம் சுத்த ஸ்படிக பிம்பவத்

ஸித்த மஷ்ட்ட குணோபேதம் அஷ்டகர்ம ஹரம்யஜே.  - 234

 

சுத்த ஸ்படிக

பிம்பவத்

ஸாகாரம்

நிராகாரம்ச

அஷ்டகுண

உபேதம்

அஷ்டகர்ம ஹரம்

ஸித்தம் யஜே

 

         எவ்வித வர்ணமுமில்லாத தூய ஸ்படிகம் போன்ற ஆகாரம், ஒருவிதத்தினால் (அதாவது ஸித்தர் பதவி அடையும் முன் இருந்த உடலின் அளவில் சிறிது குறைந்த உருவம்) உடையதும், அமூர்த்த ஸ்வபாவமானதால் ஆகாரம் (எவ்வித உருவமும்) இல்லாததும் (காணப்படாததும்), எண். குணங்ங்கள் நிறைந்து விளங்குவதும், எண் வினைகளை அறவே (வென்றதும்) நீக்கியதும் ஆகிய ஸித்த ஸ்வரூபத்தை (ஸித்த பரமேஷ்டியை) பூஜிக்கிறேன்.

 

     ஜினமதத்தில் தேஹமாத்திரம் பிரமாணம் முக்கியமானதால் ஸாகாரம் என்றபடி, ஆத்மா ஒருவகையில் உருவமுடையது, ஒருவகையில் இல்லை யென்றார். எங்ஙனமெனில் ? சித்தர் பதவி எய்திய ஆத்மன் தான் முன்பு மேற்கொண்டிருந்த மானிட உடலின் அளவில் சிறிது குறைந்த அளவினதாகக் கூறப்படுதலின்,  ஆகாரம் (உருவம்). உடையது என்றும் ;  அந்த ஆத்மா ஆமூர்த்த. ஸ்வபாவம் உடையதாதலின் எவ்வித உருவமும் இல்லாதது. (அரூபியானது) என்றும் கூறினார்.

 

இச்சாமி பந்தே ஸமாஹி பக்தி காஓஸ் ஸக்கோ கஓ தஸ்ஸ ஆளோசேவும் ரயணத்தயரூப பரமப் பஜ்சாணலக்கணம் ஸமாஹிம் ஸவ்வகாள மச்சேமி பூஜேமி வந்தாமி ணமஸ்ஸாமி துக்கக்கவோ கம்மக்கவோ போஹிளாஹோ, ஸுகயி கமணம் ஸமாஹி மரணம் ஜிநகுண ஸம்பத்தி ஹோஉ மஜ்சம்.  - 235

 

பந்தே ஸமாஹிபக்தி

கா ஓஸ்ஸக்கோ கஓ

தஸ்ஸ ஆளோசேஉம்

ரயணத்தய ரூப பரம:

பஜ்சாணலக்கணம்

ஸமாஹிம் ஸவ்வ

காளம் அச்சேமி

பூஜேமி வந்தாமி

மச்சம் ணமஸ்ஸாமி

துக்கக் கவோ

கம்மக்கஓ போஹி

லாஹோ ஸுகயி

கமணம் ஸமாஹி

மரணம் ஜிநகுண

ஸம்பத்தி ஹோஉ

இச்சாமி

 

          ஞானவானே ! ஸமாதி பக்தியினுடைய காயோத் ஸர்க்கம் இப்போது செய்யப்பட்டது. அதனை அலோசிக்கிறேன். முக்திக்கு முதற் காரணமாகிய ஸம்யக் தரிசனம், ஸம்யக் ஞானம், ஞான தரிசனத்திலேயே நழுகாமல் நிற்பதாகிய ஸம்யக் சாரித்ரம் ஆகிய இரத்தினத்திரய மயமான பரமாத்ம தியான லக்ஷணமாகிய (அந்திய சல்லேகனையோடு கூடிச்) சிறந்த சமாதியை, சர்வகாலமும் அர்ச்சிக்கிறேன், பூஜிக்கிறேன், துதிக்கிறேன், வணங்குகிறேன் ; அதனால் எனக்குத் துன்பக் கேடும் கர்மக் கேடும், ஞான லாபமும், நற்கதி ப்ராப்தியும் ஆகட்டும் ; இதனையே யான் என்றென்றும் விரும்புகிறேன்.

 

ஸமாதி பக்தி முற்றும்.

 

ஸ்தோத்திரம்

 

சாஸ்த்ராப் யாஸோ ஜிநபதி நுதிஸ் ஸங்தி ஸர்வதாsர்யை:

ஸத்வ்ருத்தாநாம் குணகணகதா தோஷாவாதேது மௌநம்

ஸர்வஸ்யாபி ப்ரியஹித வசோ பாவநா சாத்ம தத்வே

ஸம்பதயந்தாம் மம பவ பவே யாவதே தாநி முக்தி:  - 236

 

சாஸ்தர அப்யாஸ:

ஜிநபதி நுதி:

ஸர்வதா ஆர்யை:

ஸங்கதி:

ஸத் வ்ருத்தாநாம்

குண கண கதா

தோஷ வாதே து

மௌநம்

ஸர்வஸ்ய அபி

ப்ரிய ஹித வச:

ஆத்ம தத்வே

பாவநா ச ஏதாநி

மம முக்தி:

யாவத் பவதி தாவத்

பவ பவே

ஸம்பத்யந்தாம்

 

           நன்மை தீமைகளை தெரிவிக்கவல்ல சிறந்த சாஸ்திரங்களில் இடைவிடாத பயிற்சியும், ஜிநேந்திரர்களைத் துதிக்கின்றதும், எப்பொழுதும் அறிஞர்களுடன் சேர்ந்து பழகுவதும், நல்லொழுக்கம் உடையவர்களின் நற்குணங்கள் பலவற்றையும் புகழ்ந்து பேசுவதும், (ஆராய்வதும்) குற்றமான விஷயங்களைப் பேசுமிடத்தில் மௌனமாக (ப் பேசாமல்) இருப்பதும், எல்லோருக்கும் பிரியமும் நன்மையுமான வசனங்களையே சொல்லுவதும்; தன் ஆத்மனின் நிஜ ஸ்வரூபத்தையே (பாவிப்பதும்) தியானிப்பதும், ஆகிய இவைகள், "எனக்கு முக்திச் செல்வம் எப்பொழுது கிடைக்கின்றதோ அதுவரையில்" யான் மேற்கொள்ளும் ஒவ்வொரு பிறவியிலும் தவறாமல் நன்கு கிடைக்கட்டும்.

 

   கதயதி - பேசுகிறான். வச: என்பது க்ருதந்தம் ஆதலின் சொல்வது என்ற பொருளும் அதிலேயே அடங்கும். ஸம்பத்யந்தாம் என்பதில், ஸம் உபசர்க்காக்ஷரம். பது, தாது, யதாம் ஆகட்டும் என்ற கிரியாபதம் (ஏக வசனம்), யந்தாம் என்பது பஹு வசனம், அடுத்தது, ரத்தோத்ததா என்ற விருத்தம், 11 எழுத்துக்களை உடையது. ர3+ந3+ர3+ல1+இ1 ஆக = 11.

 

 

ஜைந மார்க்க ருசிரந்ய மார்க்க நிர்வேகதா

    ஜிந குணஸ்துதௌ மதி:

அகளங்க விமலோக்தி பாவநா

    ஸம்பவந்து மம ஜந்ம ஜந்மநி.  - 237

 

ஜைந மார்க்க ருசி:

அந்யமார்க்க

நிர்வேகதா

ஜிந குண

ஸ்துதௌ மதி:

அகளங்க விமல

உக்தி பாவநா

இதி ஏதாநி

மம ஜந்ம ஜந்மநி

ஸம்பவந்து

 

       ஜிநேந்திரர் அருளிச்செய்த அஹிம்சையை அடிப்படையாகக் கொண்ட (ஜிந) தர்ம மார்க்கத்தில் விருப்பமும், ஏனையோர் உபதேசித்துள்ள ஹிம்சை முதலியவற்றுக்குக் காரணமான வேறு மார்க்கத்தில் வெறுப்பும்;  ஜினனுடைய குணங்களைத் துதிப்பதிலேயே கருத்தும் ; வினைகளின் நீங்கி நிர்மலமாயிருக்கின்ற தன் ஆத்மனின் உண்மைத் தத்துவத்தைப் பேசுவதிலேயே எண்ணமும், (ஞாபகமும்) ஆகிய இவை போன்றவைகள், என்கு இனி ஏற்படும் பிறவிதோறும் தவறாமல் கிடைக்கட்டும்.

 

ஆர்யா வ்ருத்தம்

 

குரு மூலே யதி நிசிதே சைத்யே

     ஸித்தாந்த வார்த்தி ஸத்கோஷே

மம பவது ஜந்ம ஜந்மநி

    ஸந்யஸந ஸமந்விதம் மரணம்.  -  238

 

ஜந்மஜந்மநி

யதி நிசிதே குரு

மூலே, சைத்யே

ஸித்தாந்த வார்த்தி

ஸத்கோஷ

மம ஸந்யஸந

ஸமந்விதம்

மரணம் பவது

 

            யான் அடையும் ஒவ்வொரு பிறவியிலும் யதிகள் சூழ்ந்த குருவினுடைய பாத மூலத்திலாவது (குருவின் இடத்திலாவது), ஜிந பிம்பத்தின் சமீபத்திலாவது, கடல் போன்ற பரமாகமங்களின் வேதமொழிகள் ஒலிக்கின்ற சிறந்த இடத்திலாவது, எனக்குப் பற்றற்ற தன்மையுடைய சந்நியாசத்தோடு கூடிய சமாதி மரணம் கிடைக்கட்டும்.

 

ஸம் நி அஸக - ஸந்யஸந

 

ஜந்ம ஜந்ம க்ருதம் பாபம் ஜந்மகோடி ஸமார்ஜ்ஜிதம்

ஜந்ம ம்ருத்யு ஜரா தங்கம் ஹந்யதே ஜிந வந்தநாத்  - 239

 

மம ஜந்மஜந்ம க்ருதம்

ஜந்மகோடி

ஸமார்ஜ்ஜிதம் பாபம்

ஜந்ம ம்ருத்யு

ஜரா ஆதங்கம்

ஜிந வந்தநாத்

ஹந்யதே

 

            யான் என்னுடைய பிறவிகள் தோறும் பல தீயசெயல்களில் ஈடுபட்டு ; இவ்வாறு, பற்பல பிறவிகளிலும், அளவின்றிச் சம்பாதிக்கப்பட்ட தீவினைகளும், அதனாலாம், பிறப்பு இறப்பு மூப்புப் பிணிகள் என்னும் துன்பங்களும் ஜிநேஸ்வரனைத் தியானிப்பதனால் நாசமாகின்றன.

 

ஆதங்க: என்பது, ருக் - ரோகம், தாப - ஸந்தாபம் (துன்பம்). ஸங்கா - பயம் என மூன்று பொருளுடையன.

 

     "ருக் தாப ஸங்கா ஸ்வாதங்க: " அமரம், பாபம் ஜாத்யேக வசனம்.

 

 

ஆபால்யாத் ஜிந தேவதேவ பவத: ஸ்ரீபாதயோ: ஸேவயா, ஸேவாssஸக்த விநேய கல்ப்ப லதயா காலோs த்ய்யாவாந்கத: த்வாம் தஸ்யா: பலமர்த்தயே தத்துநா ப்ராண ப்ரயாணக்ஷணே, த்வந் நாம ப்ரதிபத்த வர்ண படநே கண் டோஸ்த்வ குண்டோ மம. 240

 

தேவதேவ ஜிந

ஸேவயா ஆஸக்த-

விநேய கல்ப்ப

லதயா பவத:

ஸ்ரீ பாதயோ : தத்

ஸேவா ஆஸக்த

அஹம் ஆபால்யாத்

அத்ய ஸேவயா

யாவாந் கால: கத :

அதுநா ப்ராண-

ப்ரயாண க்ஷணே,

தஸ்யா : பலம்

த்வாம் அர்த்தயே

தத் (தஸ்மிந்க்ஷணே)

த்வத் நாம

ப்ரதி பத்த

வர்ண படநே மம

கண்டக : அகுண்ட. :

அஸ்து

 

               தேவாதி தேவனே ! ஜிநேச்வரனே ! (வணக்கமுள்ள) வினய ஜனங்களாகிற பக்தர்களுக்குத் தம் விருப்பம் மிக்க (கற்பகத்தின் மேல் படரும்) சேவையாகிற கொடிக்கு ஆதாரமாயிருக்கிற உம் திருவடிக் கமலங்களுக்கு, அவ்வாறே சேவை செய்து தொண்டு புரிவதில் விருப்பங்கொண்ட யான், என் பால்ய வயதிலிருந்து இதுவரை சேவை செய்ததில் எவ்வளவோ காலங்கள் கழிந்து விட்டன ; இப்பொழுது மூப்பு மிகுதியாகி, என் பிராணன் பிரியும் காலமும் நெருங்கிவிட்டது ; ஸ்வாமி ! இந்நாள்வரை செய்த (சேவைக்குத்) தொண்டிற்குப் பயனாக, உம்மை (ஒன்றே) ஒன்று யாசிக்கின்றேன் அஃது யாதெனில் ? என் மரணத் தறுவாயில் உன் பெயரை உட்கொண்டுள்ள நாமாக்ஷரங்களாகிய பஞ்சாக்ஷரங்களை உச்சரிக்குமிடத்தில், என்னுடைய குரல் (தொண்டை), கோழை முதலியவற்றால் தடைப்படாததாக ஆகட்டும்.

 

         ஜினனைத் தருவாகவும், சேவையைக் கொடியாகவும் உருவகம் செய்தார். பக்தியில் பொருந்துவதனை, மரத்தைச் சூழ்ந்து பற்றும் கொடியோடு உவமித்தார். இனி, பக்தர்களுக்குக் கொடி போன்றிருக்கிற பாதம் எனினுமாம். பஞ்ச மந்திரத்தைக் குறிப்பிட்டார்.

 

தவ பாதௌ மம ஹ்ருதயே மம ஹ்ருதயம்

    தவ பாதாப்ஜயோர் லீநம்

திஷ்ட்டது ஜிநேந்த்ர யாவத்

     தாவந் நிர்வாண ஸம்ப்ராப்தி :  241

 

ஜிநேந்த்ர ! தவ

பாதௌ மமஹ்ருதயே

மம ஹ்ருதயம் தவ

பாத அப்ஜயோ: லீநம்

திஷ்ட்டது ஏதத் மம

நிர்வாணஸம்ப்ராப்தி:

யாவத் தாவத்

திஷ்ட்டது

 

          ஜிநேச்வரரே ! உம்முடைய திருவடிகள் எம் உள்ளத்திலும் ; என் உள்ளம், உம்முடைய திருவடிக் கமலங்களிரண்டிலும், இரண்டறக் கலந்து, ஒன்றாகப் பற்றியிருக்கட்டும் ; இந்த (இந்) நிலை எனக்கு எப்பொழுது முக்தியின்பம் கைகூடி வருகின்றதோ, அந்நாள் வரை (மாறாமல்) இவ்வாறே நிலைத்திருக்கட்டும்.

 

அக்கர பயத்தஹீணம்

    மத்தாஹீணம்ச தம்ஹவேயத்தா

ரக்க மமணாணளாஹம்

    தேஉ ஸமாஹிம்ச மே போஹிம்.  - 242

 

தேவ! அக்கர பயத்த

ஹீணம், மத்தாஹீணம்

ச தம்மவேயத்தா

மே ரக்க

மம ணாணளாஹம்

ஸமாஹிம்

போஹிம் தேஉ

 

            சுவாமி ! அக்ஷரம் பதம் அர்த்தம் ஆகிய மூன்றின் குறைவையும் மாத்திரைகளின் குறைவையும் பொருட்படுத்தாமல் (என் துதியை வீணாக்காமல்) என்னை ரக்ஷிக்கக் கடவாய் ; அதுவன்றியும் எனக்கு ஸம்யக் ஞானத்தையும், அந்த்ய (ஸல்லேகனையுடன் கூடிய) சமாதியையும், கேவல ஞானத்தையும் கொடுக்கக் கடவாய்.

 

 

ஏகாபி ஸமர்த்தேயம் ஜிநபக்திர் துர்க்கதிம் நிவாரயிதும்

புண்யாநி ச பூரயிதும் தாதும் முக்திச்ரியம் க்ருதிந:  243

 

இயம்ஜிநபக்தி: ஏகாபி

க்ருதிந : துர்க்கதிம்

நிவாரயிதும் ச

புண்யாநி பூரயிதும்

முக்தி ச்ரியம்

தாதும் ஸமர்த்தா

 

            இந்த ஜிநபக்தி ஒன்றே (நல்லொழுக்கமுடைய) புண்ணியசாலிகளுக்குத் தீவினை வசத்தால் உண்டாகக் கூடிய துர்கதியைத் தடை செய்வதற்கும், மற்றும் பூரணமான நல்வினைகளை அளிப்பதற்கும், முக்திச் செல்வத்தைக் கொடுப்பதற்கும் தகுதியுடையதாகிறது.

 

பஞ்ச யரிஞ்ஜயணாமே பஞ்சய

   மதிஸாயரே ஜிணேவந்தே

பஞ்ச யசோதர ணாமே பஞ்சய

   ஸீமந்தரே ஜிணே வந்தே.  244

 

பஞ்ச அரிஞ்ஜயணாமே

ஜிணே வந்தே

பஞ்சய மதி ஸாயரே

ஜிணே வந்தே

பஞ்ச  யசோதர ணாமே

ஜிணே வந்தே

பஞ்சய ஸீமந்தரே

ஜிணே வந்தே.

 

               (ஐந்து விதேக க்ஷேத்திரங்களிலும், என்றும் இடையறாமல் வர்த்திப்பவர்களாகிய) அரிஞ்ஜயரென்று பெயர் உடைய ஐந்து தீர்த்தங்கரர்களையும் துதித்து வணங்குகின்கிறேன். அவ்வாறே ஐந்து விதேக நாட்டில் என்றும் இடையறாமல் வர்த்திப்பவர்களாகிய மதிசாகரர் என்ற ஐந்து தீர்த்தங்கரர்களையும் துதித்து வணங்குகின்றேன். அவ்வாறே ஐந்து விதேக நாட்டிலும் இடையறாமல் உள்ள யசோதர்ர் என்ற ஐந்து தீர்த்தங்கரர்களையும் துதித்து வணங்குகின்றேன். அவ்வாறே ஐந்து விதேக நாட்டில், என்றும் இடையறாமல் வர்த்திக்கின்ற ஸீமந்தரர் என்ற ஐந்து தீர்த்தங்கரர்களையம் துதித்து வணங்குகின்றேன்.

 

       மேற்கூறிய இருபது தீர்த்தங்கரர்களைப் போலவே மற்றும் இருபது தீர்த்தங்கரர்களையும் ஆராதனா விதானங்களில் தனித்தனி பெயர் கூறி, இடம் முதலியவற்றோடு விவரமாகக் கூறப்பட்டுள்ளன. எண்ணிக்கையில் இருபதே இருந்தாலும், பெயர் மாறிக் கூறப்பட்டுள்ளன ; ஆகவே இதை சிந்திக்கத் தக்க விஷயம்...

 

விதானங்களில் கூறும் தீர்த்தங்கரர்கள் பெயர் வருமாறு :-

 

1. ஸீமந்தரர்

2.யுக்மந்தரர்

3.பாஹு

4. ஸுபாஹு

5. ஸஞ்ஜாதர்

6.ஸ்வயம்ப்ரபர்

7. வ்ருஷபாநநர்

8. அனந்தவீர்யர்

9. ஸூரப்ரபர்

10.விசாலகீர்த்தி

11.வஜ்ரதரர்

12.சந்த்ராநநர்

13.சந்த்ரபாஹு

14.புஜங்கமர்

15.ஈச்வரர்

16.நேமிப்ரபர்

17.வீரஸேநர்

18.மஹாபத்ரர்

19.தேவயசர்

20.அஜிதவீர்யர்

              என்பவனவாகும்.

 

 

ரயணத்தயஞ்ச வந்தே சவுவீஸ

      ஜிணஞ்ச ஸவ்வதா வந்தே

பஞ்ச குரூணம் வந்தே சாரண

    சரணம் ஸதா வந்தே.  245

 

ரயணத்தயம்

ஸதா வந்தே

சவுவீச

ஜிணஞ்ச

ஸவ்வதா வந்தே

பஞ்ச குரூணம் ச

ஸவ்வதா வந்தே

சாரண சரணம்

ச ஸதா வந்தே

 

         நற்காட்சி, நல்லறிவு, நல்லொழுக்கமாகிய மும்மணிகளை, எப்பொழுதும் எண்ணி வணங்குகிறேன் ; ஆதிபகவன் (விருஷபர்) முதலாக மகாவீரர் வரையிலுள்ள இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களையும் எப்பொழுதும் துதித்து வணங்குகிறேன் ; அவ்வாறே, பஞ்ச பரமேஷ்டிகளையும் எப்பொழுதும் துதித்து வணங்குகிறேன் ; மற்றும், இருவர் இருவராக இணைபிரியாமற் சென்று பவ்வியர்களுக்கு அறம் போதிக்கும் சாரண பரமேஷ்டிகளையும் எப்பொழுதும் துதித்து வணங்குகிறேன்.

 

கர்மாஷ்ட்டக விநிர்முக்தம் மோக்ஷ லக்ஷ்மீ நிகேதநம்

ஸம்யக்த்வாதி குணோபேதம் ஸித்த சக்ரம் நமாம்யஹம். - 246

 

கர்ம அஷ்டக

விநிர் முக்தம்

மோக்ஷ லக்ஷ்மீ

நிகேதநம்

ஸம்யக்த்வ ஆதி

குண உபதேசம் ஸித்த-

சக்ரம் அஹம் நமாமி

 

                 மோகனீயம் முதலான எண் வினைகளால் பற்றற விடப்பட்டவரும் (வினை நீங்கியவரும்), மோக்ஷ லக்ஷ்மிக்கு இருப்பிடமானவரும், அனந்தசுகம் முதலான எண்குணங்களுடன் கூடியவருமான சித்தர் சமூகத்தையும் யான் எப்பொழுதும் துதித்து வணங்குகிறேன். (இனி சித்தசக்கரத்தை வணங்குகிறேன் எனினுமாம்.)

 

அர்ஹமித்யக்ஷரம் ப்ரம்ம வாசகம் பரமேஷ்ட்டிந:

ஸித்த சக்ரஸ்ய ஸத் பீஜம் ஸர்வத : ப்ரணி தத்மஹே.  - 247

 

ப்ரம்ம வாசகம்

பரமேஷ்டி ந: ஸித்த-

சக்ரஸ்ய சத் பீஜம்

அர்ஹம் இதி அக்ஷரம்

ஸர்வத: வயம்

ப்ரணி தத்மஹே

 

             பரப்ரம்ம ஸ்வரூபத்தின் மறு பெயருடையதும், முக்தி பெற்ற சித்தர் சமூகத்துக்கு நல்ல வித்தாகி இருப்பதும் ; ஆகிய அர்ஹம் ( ர்ஹம்) என்ற அக்ஷரத்தை (பதத்தை) எவ்விடங்களிலும், யாங்கள்  நன்றாகத் தியானிக்கிறோம்.

 

  "ஆகர்ஷண: வசீகரண, உச்சாடன, மாரண, ஸ்தம்பந, மோசநம்" ஆகிய ' ஆபிசாரிக மந்த்ரக்ரியா ' என்ற அறுவகைத் தன்மைகளையும் உடையது "பஞ்சமந்திரம்" என்று அமைத்து உரைக்கின்றார்.

 

ஆக்ருஷ்ட்டிம் ஸுர ஸம்பதாம்

      விதததீ முக்தி ச்ரியோ வச்யதாம்

உச்சாடம் விபதாம் சதுர்கதி

    புவாம் வித்வேஷ மாத்மைநஸாம்

ஸ்தம்பம் துர்க்கமநம் ப்ரதி ப்ரயததாம்

    மோஹஸ்ய ஸம்மோஹநம்

பாயாத் பஞ்ச நமஸ்க்ரியாக்ஷரமயீ

   ஸாssராதநா தேவதா.  - 248

 

ஸுர ஸம்பதாம்

ஆக்ருஷ்டிம்

விதததீ முக்தி-

ச்ரிய: வச்யதாம்

விதததீ சதுர்கதி

புவாம் விபதாம்

உச்சாடம் விதததீ

துர்க்கமநம்

ப்ரதி ப்ரயததாம்

ஸ்தம்பம் விதததீ

மோஹஸ்ய

ஸம்மோஹநம்

விதததீ

பஞ்ச நமஸ்க்ரியா

அக்ஷரமயீ தேவதா

அஸ்மாபி: ஸாராதநா

ந: பாயாத்

 

       தேவாதி வைபவங்களை (ஆகர்ஷணம் செய்து) இழுத்துக்கொண்டு வந்து நம்மிடம் தருகின்றதும் ; முக்தி லக்ஷ்மி வசமாகும் தன்மையை நமக்கு அளிப்பதும் ; நாற்கதியிலும் தோன்றுகின்ற (உயிர்களின்) ஆபத்துக்களை (அகன்றோடுமாறு) ஓட்டும் தன்மையை அளிப்பதும் ; ஆத்மனிடத்துள்ள தீவினை (ப் பகைவர்) களைப் பகைத்து விலக்கும் தன்மையை அளிப்பதும் ; துர்க்கதியைக் குறித்துச் செல்லும் முயற்சியை ஆகவொட்டாமல் நிறுத்திவைக்கும் தன்மையை அடைவிப்பதும் ; பிறவிச் சுழற்சியில் அழுந்தச் செய்யும் மோகனீய கர்மத்துக்கே மயக்கம் வரச் செய்கின்றதுமான பஞ்ச பரமேஷ்டிகளுடைய நமஸ்கார மந்திரமான, நாமாக்ஷரங்க ளென்கிற தேவதை நம்மால் ஆராதிக்கப்பட்டதாகி நம்மை இரக்ஷிக்கட்டும், என்பதற்காக அதனை ஸதாகாலமும் தியானிக்கிறேன்.

 

      ஆக்ருஷ்ணம் - இழுத்தல். வசீகரணம் - வசம் செய்தல். உச்சாடனம் - ஓட்டுதல்,  மரணம் - மரிக்கச் செய்தல். ஸ்தம்பனம் - நிறுத்தல். மோஹனம் - மயங்கச் செய்தல்.

 

அநந்தாநந்த ஸம்ஸார ஸந்ததிச் சேத காரணம்

ஜிநராஜ பதாம் போஜ ஸ்மரணம் சரணம் மம.  249

 

அநந்தாநந்த

ஸம்ஸார ஸந்ததி

சேதகாரணம்

ஜிநராஜ பத-

அம்போஜ ஸ்மரணம்

மம சரணம் அஸ்து

 

            (அனந்தம் என்ற எண்ணிக்கையை அனந்தமாகவுடைய அதாவது) அனந்தாநந்தமான மிறவியின் தொடர்பை அறுப்பதற்குக் காரணமான ஜிநேஸ்வரனின் திருவடிக் கமலங்களின் தியானமே எனக்குத் தஞ்சமாகட்டும் (ரக்ஷணையாகட்டும், என்னைக் காப்பாற்றட்டும்) என்பதாம்.

 

அந்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம

தஸ்மாத் காருண்ய பாவேந ரக்ஷ ரக்ஷ ஜிநேச்வர ! - 250

 

            ஜிநேந்திரரே ! எனக்கு உம்மைத் தவிர வேறொருவர் கதியில்லை ; ஆகவே, நீரே எனக்குத் தஞ்சம் (புகல்), ஆதலால் சர்வ ஜீவ தயாபரராகிய நீவிர், நின் கருணை நிறைந்த உள்ளத்தோடு என்னைக் காப்பாற்றுவீராக ! காப்பாற்றுவீராக !!

 

        விரைவைக் குறித்து இரண்டு முறைக் கூறினார். அதிவிரைவில் என்னைக் காப்பாற்றுங்கள் என்பது பொருள்.  'அந்யதா' என்றது வேறு தெய்வங்களையும், புத்ர மித்ராதிகளையும் குறிப்பிடுவதாகும்.

 

நஹித்ராதா நஹித்ராதா நஹித்ராதா ஜகத் த்ரயே

வீதராகாத் பரோதேவோ நபூதோ நபவிஷ்யதி.  251

 

 

ஜகத்ரயே மம

த்ராதா வீதராகாத்

பரோ தேவ: நஹி

வர்த்தமாநே த்ராதா

ந அஸ்தி நஹிநஹி

நபூத: ந பவிஷ்யதிஹி

 

            (ஏனெனில்) இம்மூவுலகிலும் என்னைக் காப்பாற்றுகிறவர், ஜிநேஸ்வரனைக் காட்டிலும் வேறொருவர் இல்லை; நிச்சயமாக இல்லை ; இல்லவே இல்லை; கடந்துபோன காலத்திலும் இருந்ததில்லை, இனி எதிர்காலத்தில் இருக்கப்போவதும் இல்லை. இது நிச்சயம்.

 

விக்நௌகா : ப்ரளயம் யாந்தி சாகிநீ பூத பந்நகா:

விஷம் நிர்விஷதாம் யாதி ஸ்தூயமாநே ஜிநேச்வரே.  252

 

ஜிநேச்வரே

ஸ்தூயமாநே ஸதி

சாகிநீ பூதபந்நகா:

விக்நௌ கா:

ப்ரளயம் யாந்தி

விஷம்

நிர்விஷதாம்யாதி

 

           ஜிநேஸ்வரர் என்னால் துதிக்கப்படுகின்ற அளவில் (ஜிநனை யான் துதிக்குமிடத்து) பிசாசு, பூதம், சர்ப்பம் ஆகிய இவை முதலான பல்வேறு இடையூறுகளும் நாசமடைகின்றன. மற்றும், கொல்லும் தன்மையுள்ள கொடிய விஷமும், தன்தன், தன்மையில் மாறி அம்ருதமாக நலம் அளிக்கிறது.

 

 

ஜிநேபக்திர் ஜிநேபக்திர் ஜிநேபக்திர் திநே திநே

ஸதாமேஸ்து ஸதாமேஸ்து ஸதாமேஸ்து பவே பவே.  - 253

 

பவேபவே திநேதிநே

ஜிநே பக்தி

ஜிநே பக்தி ஜிநே பக்தி

ஸதா மே அஸ்து

ஸதா மே அஸ்து

ஸதா மே அஸ்து

 

            ஒவ்வொரு பிறவியிலும் ஒருநாளும் தவறாமல் நாள்தோறும் ஜிநரிடம் யான் செய்யும் பக்தியானது மும்முறையும் எப்பொழுதும் எனக்கு ஆகட்டும், எப்பொழுதும் எனக்கு ஆகட்டும், எப்பொழுதும் எனக்கு ஆகட்டும்.

 

 

 

யாசேsஹம் யாசேsஹம் யாசேsஹம் ஜிந

     தவ சரணாரவிந்தயோர் பக்திம்

யாசேsஹம் யாசேsஹம் யாசேsஹம்

     புநரபி தாமேவ தாமேவ. - 254

 

ஜிந தவ சரண

அரவிந்தயோ:

பக்திம் அஹம் யாசே

அறம் யாசே அஹம்

 யாசே புநரபி தாம் ஏவ

தாம் ஏவ தாம் ஏவ

அஹம் யாசே

 

            ஜிநேஸ்வரரே! உம்முடைய திருடித் தாமரைகள் இரண்டிலும் செய்யும் பக்தியை யான் யாசிக்கிறேன், யான் யாசிக்கிறேன், யான் யாசிக்கிறேன் ; மீண்டும் மீண்டும் அந்தப் பக்தியை யான் யாசிக்கிறேன் ; மும்முறையும் யாசிக்கிறேன்.

 

" ஸர்வேந்த்ர ஸ்துத்ய பாதாப்ஜம் ஸர்வஜ்ஞம் தோஷ வர்ஜ்ஜிதம்

ஸ்ரீஜிநாதீச்வரம் நௌமீ பரமாநந்த மக்ஷயம்.

நமஸ்தஸ்மை ஸரஸ்வத்யை: விமல ஜ்ஞாந மூர்த்தயே

விசித்ரா லோகயா த்ரேயம் யத் ப்ரஸாதாத் ப்ரவர்த்தே.

நமோ வ்ருஷப ஸேநாதி கௌதமாந்த்ய கணேஸிநே

மூலோத்தர குணாட்யாயாம் ஸர்வஸ்மை முநயேந் நம:

குரு பக்த்யா வயம் ஸார்த்த த்வீப த்விதய வர்த்திநாம்

வந்தாமஹே த்ரிஸங்க்யோந நவகோடி முநீச்வராந்.

அஜ்ஞாந திமிராந்தாநாம் ஜ்ஞாநாஞ்ஜந சலாகயா சாந்தி

சக்ஷு ருந் மீலிதம் யேந தஸ்மை ஸ்ரீ குரவே நம: "

 

       ஸ்ரீ பரம குரவே நம : பரம்பராசார்ய வித்யா குருப்யோ நமோ நம:

 

ஸ்தோத்திரம் முற்றும், சுபம்.

 

 

பரிநிர்வாண பக்தி :

 

விபுதபதி ககப நரபதி

    தநதோரக பூத யக்ஷபதி மஹிதம்

அதுல ஸுக விமல நிருபம

    சிவமசலம் அநாமயம் ப்ராப்தம்.  255

 

கல்யாணை: ஸம்ஸ்தோஷ்யே

    பஞ்சபிரநகம் த்ரிளோக பரம குரும்

பவ்ய ஜந துஷ்ட்டி ஜநநை :

    துரவாபை : ஸந்மதிம் பக்த்யா.  256

 

விபுதபதி ககப நரபதி

தநத உரக பதி பூத-

பதி, யக்ஷபதி

பவ்யஜந துஷ்டி

ஜநநை :

துரவாபை: பஞ்சபி:

 

கல்யாணை :

மஹிதம் அதுலஸுக

விமல நிருபம

அசலம்

அநாமயம் சிவம்

ப்ராப்தம் அநகம்

த்ரிளோக

பரமகுரும்

ஸந்மதிம்

பக்த்யா

ஸம்ஸ்தோஷ்யே

 

         தேவேந்திரர், விஞ்சைய வேந்தர், குபேரன், தரணேந்திரன், வியந்தரேந்திரன், யக்ஷேந்திரன் ஆகியோரால், பவ்வியர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றனவும், நல்வினையாளர்க்கன்றி ஏனையோர்க்கு எளிதாகக் கிடைத்தற்கரியனவுமான ; கர்ப்பாவதரணம், ஜன்மாபிஷேகம், பரிநிஷ்க்ரமணம், கேவல ஞானம், பரிநிர்வாணம் ஆகிய பஞ்ச கல்யாண பூஜைகளால் பூஜிக்கப்பட்டவரும், கடையிலா இன்பமுடையதும், நிர்மலமானதும், இணையற்றதும், சலனமற்ற நித்தியமானதும் (குற்றமற்றதும்) மங்கள ஸ்வரூபமானதுமான முக்தியின்ப த்தை அடைந்தவரும் ; பாவமில்லாதவரும், சிறந்த மூவுலக நாதனுமான மகாவீரரை ப் பக்தி பரிணாமமுடன் துதித்து வணங்குகிறேன்.

 

           தேவேந்திரன் முதலியோரால் பஞ்சகல்யாண பூஜையை அடைந்த முக்தியின்ப நாதரான மகாவீரரை வணங்குகிறேனென்பதாம்.

 

கர்ப்பாவதார கல்யாண வர்ணநம்

 

ஆஷாட ஸுஸித ஷஷ்ட்யாம்

       ஹஸ்தோத்தர மத்யமாச்ரிதே சசிநி

ஆயாதஸ் ஸ்வர்க்க ஸுகம்

     புக்த்வா புஷ்ப்போத்தராதீச:  257

 

ஸித்தார்த்த ந்ருபதி தநயோ

    பாரத வாஸ்யே விதேஹ குண்ட புரே

தேவ்யாம் ப்ரிய காரிண்யாம்

    ஸுஸ்வப்நாந் ஸம்ப்ரதர்ச்ய விபு:   258

 

விபு; ஆஷாட

ஸுஸித ஷஷ்ட்யாம்

சசிநி ஹஸ்த உத்தர

மத்யம ஆச்ரிதே

ஈச: ஸ்வர்க்க-

ஸுகம் புக்த்வா-

புஷ்போத்தராத்

பாரத வாஸ்யே

விதேஹ குண்டபுரே

 

ஸித்தார்த்த

ந்ருபதி தநய:

தேவ்யாம்

ப்ரிய காரிண்யாம்

ஸு ஸ்வப்நாந்

ஸம்ப்ரதிஸ்ய

ஆயாத:

 

            பகவான் தன்மை அடைந்த மகாவீரர், ஆடி மாதத்து சுக்கில பக்ஷ ஷஷ்டி திதியில், சந்திரன் உத்திரம் அஸ்தம் ஆகிய இரண்டின் மையத்தை அடைந்த அளவில் (நன்னாளில்), (முற்பிறவியில்) அச்சுத கற்பத்திலுள்ள புஷ்போத்தர விமானத்தில் அமரேந்திரனாக இருந்தவர், தனக்குக் கட்டின ஆயுள்ளவும் தேவ இன்பம் நுகர்ந்து (ஆயுள் முடிவில்), அவ்விமானத்தினின்றும் இறங்கி, ஜம்பூத்வீப பரத கண்டத்தில் உள்ள விதேக தேசத்தில் குண்டலபுர த்தின் அரசரான சித்தார்த்த மகாராஜனுக்குப் புதல்வராக, அம்மன்னவனின்  மகா ராணியான பிரியகாரிணி மகாதேவியினிடம், கஜேந்திரன் முதலான பதினாறு ஸ்வர்ப்பனங்களைக் கனவின் மூலம் காண்பித்து, அவள் கருவில் வந்தடைந்தார்.

 

        மகாவீரர் முற்பிறவியில் தேவராகியிருந்தார் ; அவர் குண்டலபுரம் அரசன் சித்தார்த்தருக்கும், பிரியகாரிணிக்கும் புதல்வராக, சுப ஸ்வப்ன மூலம், ஆடிமாதத்தில் ஜின மாதாவின் கருவில் வந்தடைந்தார்.

 

கஜேந்திரன் - சிங்கம் முதலான பதினாறு கனவின் விவரம்,

 

"கஜேந்த்ர வ்ருஷ ஸிஹ்ம போத கமலாலய தாமகம்

சசாங்க ரவிமீந கும்ப நளிநாங்கராம்போ நிதி:

ம்ருகாதிப த்ருதாஸநம் ஸுரவிமாந நாகாலயம்

மணிப்ரசய வந்நிநாம் ஸஹ விலோஹிதம் மங்களம்."

 

என்று ஸ்வப் நஸ்தவத்தில் கூறியுளது, ஆங்கு கண்டு கொள்க.

 

ஜந்மாபிஷேக கல்யாண வர்ணநம்

 

சைத்ரஸித பக்ஷ பால்குநி

    சசாங்க யோகே திநே த்ரயோதச்யாம்

ஜஜ்ஞே ஸ்வொச்சஸ் தேஷு க்ருஹேஷு

    ஸௌம்யேஷு சுப லக்நே.  259

 

(இதி கர்ப்பஸ்தித பகவாந்)

சைத்ரஸித

பக்ஷபால்குநி சசாங்க

யோகே திநே

த்ரயோ தச்யாம்

ஸௌம்யேஷு

க்ரஹேஷு, ஸ்வ

உச்சஸ் தேஷு

சுபக்லநே ஜஜ்ஞே

 

              (மேற்கூறியவாறு கர்ப்பத்திலடைந்திருக்கிற) வீரஜிநர், சித்திரை மாதத்து சுக்கில பக்ஷத்தில் பூரம் உத்திரம் என்ற நக்ஷத்திரங்களின் மையத்தில், சந்திரன் அடைகின்ற காலத்தில் திரயோதசி திதியில், சூரியன் முதலிய சுப கிரகங்கள் தங்கள் தங்களுக்கு உரிய வீட்டில் உச்சமாக  இருக்கும் நன்னாளில் (நன் முகூர்த்தத்தில்), பிறந்தார்.

 

       அஜம் - மேஷச் சூரியன், வ்ருஷப - ரிஷபச் சந்திரன், ம்ருக - விருச்சிக அங்காரகன், அங்கநா - கந்யா புதன், குலீராகா: - கடகக் குரு,  ஜஷ - மீனச் சுக்கிரன், வணிஜௌ - துலா சனி என்பன உச்ச க்ரஹம் எனப்படும்.

 

"அஜ வ்ருஷப ம்ருகாsங்கநா குலீராகா

ஜஷ வணிஜௌ திவாக ராதி துங்கா " என்பதறிக.

 

ஹஸ்தாச்ரிதே சசாங்கே சைத்ர

    ஜ்யோத்ஸ்நே சதுர்தசி திவஸே

பூர்வாஹ்ணே ரத்ந கடை :

    விபுதேந்த்ராச் சக்ரு ரபிஷேகம்.  260

 

சைத்ர ஜ்யோத்ஸ்நே

சதுர்த்தசி திவஸே

சசாங்கே ஹஸ்த

ஆச்ரிதே ஸதி

பூர்வாஹ்ணே

விபுதேந்த்ரா :

ரத்ந கடை :

அபிஷேகம்

சக்ரு :

 

              சித்திரை மாத சுக்கில பக்ஷ சதுர்த்தசியில், சந்திரன் அஸ்த நக்ஷத்திரத்திலடைந்த சமயத்தில் காலையில், கற்பத்து அமரர் தலைவனான சௌதர்மேந்திரன்,  ஈசான இந்திரன் ஆகிய இருவரும், ஏனைய தேவர்களால் கொண்டுவரப்பட்ட ரத்தினகடங்களில் நிறைந்த பாற்கடல் நீரால் ; ஜிநபாலனாகிய  *மகாவீரருக்கு, மேரு மலையின் மேலுள்ள பாண்டுக சிலை மண்டபத்தில் ஜன்மாபிஷேக (கல்யாண) த்தைச் செய்தார்கள்.

 

பரிநிஷ்க்ரமண கல்யாண வர்ணநம்.

 

புக்த்வா குமார காலே

     த்ரிம்சத் வர்ஷாண்யநந்த குணராசி:

அமரோப நீத போகாந்

    ஸஹஸாபிநி போதிதேந்யேத்யு:  261

 

நாநாவித ரூப சிதாம்

    விசித்ர கூடோர்ச்சிதாம் மணி விபூஷாம்

சந்த்ர ப்ரபாக்ய சிபிகாம்

    ஆருஹ்ய புராத் விநிஷ்க்ராந்த:  - 262

 

மார்க்கசிர க்ருஷ்ண தசமி

     ஹஸ்தோத்தர மத்யமாச்ரிதே ஸோமே 

ஷஷ்டேந த்வபராண்ணே

    பக்தேந ஜிந ப்ரவ வ்ராஜ.  263

 

அநந்த குண ராசி :

குமார காலே

த்ரிம்ஸத் வர்ஷாணி

அமர உபநீத

போகாந் புக்த்வா

அந்யேத்யு: ஸஹஸா

அபிநி போதித:

 

 

நாநாவித

ரூப சிதாம்

விசித்ர கூட

உர்ச்சிதாம்

மணி விபூஷாம்

சந்த்ர ப்ரப ஆக்ய

சிபிகாம் ஆருஹ்ய

புராத்

விநிஷ்க்ராந்த:

மார்க்க சிர

க்ருஷ்ண தசமி

ஸோமே

 

ஹஸ்த உத்தர

மத்யம

ஆச்ரிதேஸதி

அபராண்ணே

ஷஷ்டேந

அபக்தேந

ஜிந:

ப்ரவவ்ராஜ

 

              முடிவிலா நற்குணங்களையுடைய பகவான் மகாவீரர் குமார காலத்தில், முப்பது ஆண்டு வரையில் இடைவிடாமல் தேவர்களால் கொண்டு வரப்பட்ட அணி, ஆடை, மாலை முதலிய போகப் பொருள்களை அனுபவித்து வருகின்றபோது ; ஓர் நாள் தனக்கு ஏற்பட்ட பவஸ்ம்ருதி என்னும் முற்பிறவியில் நடந்தவற்றை அறியும் அவதி ஞானத்தால், தான் (முன்னர்) சிம்மமாயிருந்ததைக் கண்டு, கண்டவுடனே இல்லற இன்பத்தில் வெறுப்பு கொண்ட பகவான், லௌகாந்திக தேவர்களால் போதனை மூலம் எச்சரிக்கப் பட்டவராய் ; பலவகையான சித்திர வேலைப்பாடமைந்த உருவமுடன் விசித்திரமும் உன்னதமுமான சிகர முடையதும், நவமணிகளால் அலங்கரிக்கப்பட்டதுமான சந்த்ர ப்ரபை என்ற பல்லக்கில் ஏறி அமர்ந்து, குண்டல புரத்தினின்றும் வெளிப் போந்து வனமடைந்து, மார்கழி மாத க்ருஷ்ண பக்ஷ தசமியில் சந்திரன், அஸ்தம் உத்திரம் என்ற இரண்டு நக்ஷத்திரத்தின் மையத்தை அடைந்த மாலைக் காலத்தில் ஆறுபொழுதுடைய இரண்டு நாள் உபவாச விரதத்தை மேற்கொண்ட பகவான் விதிப்படி துறவு பூண்டார். எனவே, தீக்ஷா கல்யாணத்தை தேவர்களால் இயற்றப் பெற்று முனிவரானார்.

 

பால்யம், கௌமாரம், யௌவனம் மூன்றும் சேர்ந்தது குமார காலம் எனப்படும்.  " கால அத்வநோ: அத்யந்த ஸம்யோகே " என்பது நியாயம். அதாவது, கால வாசகம், அத்வ வாசகம் ஆகிய இரண்டுக்கும் இடைவிடாமல் என்ற பொருள் (அர்த்தம்) தோன்றினால் சப்தமிக்கு த்விதியா விபக்திவரும். (அத்வம் - வழி) எனவே, ஈண்டு வர்ஷாணி என்பதுக்கு இடைவிடாமல் என்ற பதம் சேர்க்கப்பட்டது. உர்ச்சிதம் - உயர்ந்ததான. ப்ரவ்ருஜ்யா - ப்ரக்ருஷேணவ்ரஜதி, வ்ரஜகதௌ -  கமனம் என்பது நியாயம். அதாவது, ஓரிடத்தில் நிலைத்து நிற்காமல் செல்பவர் முனிவர் ஆதலின், அவர்களின் துறவுக்கு ' ப்ரவ வ்ராஜ ' என்றார்.

 

           உத்தம சிராவகன் உணவு கொள்ள வேண்டிய முறை ; ஒரு நாளைக்கு ஒருவேளை உணவும், ஒருவேளை தின்பண்டமும் ஆக இரண்டு வேளையாகும்.  அவன் துறவு மேற்கொள்ளும் தினத்திற்கு முந்தினநாள் (பூர்வ சேர்வையில்) ஒருவேளை மட்டும் உணவு கொள்ளவேண்டும் ; உபவாசத்துக்கு மறுநாளும் (பாரனையிலும்) ஒரு பொழுது உண்ண வேண்டும். ஆகவே, இரண்டு நாள் உபவாசத்துக்கு நான்கு வேளை, முன்னும் பின்னும் இரண்டுவேளை ஆக ஆறு பொழுதுடைய இரண்டுநாள் உபவாசத்துக்கு " ஷஷ்டேந அபக்தேந " என்றார்.

 

" ஸமுத்பந்ந மஹாபோதி: ஸ்ம்ருத பூர்வ பவாந்தர :

லௌகாந்தி காsமரை ; ப்ராப்ய ப்ரஸ்துத ஸ்துதிபி: ஸ்துத: " 297

 

" ஸிம்மேநைவ மயாப்ராப்தம் வநே முநிவதாத் வ்ரதம்

மத்வே வேத்யே கதாம் தத்ர ஸைந்ஹீம் வ்ருத்திம் ஸமாபஸ: " 315

 

             என்று மகாபுராண  உத்தர புராணத்தில் (வர்த்தமான புராணத்தில்) கூறியிருப்பதைக் கொண்டு ஈண்டு, உரை வகுக்கப்பட்டது.

 

 

கேவல ஞான கல்யாண வர்ணநம்

 

க்ராம புர கேட கர்வட

    மடம்ப கோஷா கராந் ப்ரவிஜஹார

உக்ரைஸ் தபோ விதாநை:

    த்வாதச வர்ஷாண்யமர பூஜ்ய:   - 264

 

அத

அமர பூஜ்ய:

உக்ரை: தபோ-

விதாநை:

க்ராம புர

கேட

கர்வட

மடம்ப

கோஷ ஆகராந்

த்வாதச வர்ஷாணி

ப்ரவிஜ ஹார

 

           அதன்பிறகு, தேவர்களால் பூஜிக்கப்பட்டவரான மகாவீர முனிவர், தவத்தில் நிகழும் முறைப்படியே, வேலியினால் சூழப்பட்ட கிராமங்களிலும், கோட்டை, மதில், அகழ் முதலியனவுடைய நகரங்களிலும், ஆற்றினால் சூழப்பட்ட கேடங்களிலும், மலைகளினால் சூழப்பட்ட கர்வடங்களிலும், ஐந்நூறு கிராமங்களுக்குத் தலைநகரான மடம்பங்களிலும், இடைச் சேரியிலும், சிறந்த நவமணிகள் உற்பத்தியாகும் ஆகரங்களிலும், பன்னிரண்டு ஆண்டுகள் வரை  சஞ்சரித்தார்.

 

 

ருஜுகூலாயாஸ்தீரே சாலத்ரும

    ஸம்ச்ரிதே சிலாபட்டே

அபராண்ணே ஷஷ்டேந

      ஸ்திதஸ்ய கலு ஜ்ரும்பிகா க்ராமே.  – 265

வைசாகஸித தசம்யாம்

    ஹஸ்தோத்தர மத்யாமாச்ரிதே சந்த்ரே

க்ஷபக ச்ரேண்யா ரூட ஸ்யோத்பந்நம்

    கேவல ஜ்ஞாநம்.   -  266

 

ருஜுகூலாயா: தீரே

ஜ்ரும்பிகா க்ராமே

சாலத்ருமஸம்ச்ரிதே

சிலாபட்டே

ஷஷ்டேந ஸ்திதஸ்ய

க்ஷபக ச்ரேணி

ஆரூடஸ்ய வைசாக-

ஸித தசம்யாம்

அபராண்ணே சந்த்ரே

ஹஸ்த உத்தர

மத்யம ஆச்ரிதேஸதி

கலு, கேவல ஜ்ஞாநம்

உத்பந்நம்

 

            ருஜுகூலம் என்கிற ஆற்றின் கரையில் ஜ்ரும்பிக மென்கிற கிராமத்தில் குங்கிலிய மரத்தின் கீழ் உள்ள கற்பாறையின் மேல், ஆறுபொழுதுடைய இரண்டு நாள் உபவாசத்தோடு கூடி, குணஸ்தான வரிசையில் க்ஷபகசிரேணியில் ஏறி (அனிவ்ருத்திகரண குணஸ்தானத்தில் காதி) வினைகளை வென்றிருக்கிற மகாவீர முனிவருக்கு, வைகாசி மாத சுக்லபக்ஷ தசமியில், மாலையில் சந்திரன் ஹஸ்தம் உத்திரம் என்ற நக்ஷத்திரங்களின் மையத்தில் அடைந்தபோது, அறிஞர்களால் உடன்படப்பட்ட கேவலஞானம் உதயமாகி (விளங்கி)யது.

 

அத பகவாந் ஸம்ப்ராபத்

    திவ்யம் வைபார பர்வதம் ரம்யம்

சாதுர் வர்ண்யஸு ஸங்கஸ்

    தத்ராபூத் கௌதம ப்ரப்ருதி.  - 267

 

அத பகவாந் ரம்யம்

திவ்யம்வைபாரபர்வ-

தம் ஸம்ப்ராபத் தத்ர

கௌதம ப்ரப்ருதி

சாதுர் வர்ண்ய ஸு

ஸங்க: அபூத்

 

             பிறகு மகாவீர பகவான், மனோஹரமானதும், திவ்வியமுமான வைபார பர்வத்தை அடைந்தார்.  அவ்விடத்தில் கௌதம கணதரர் முதலான யதிகள், ஆர்யாங்கனைகள் , சிராவகர் (சாவகர்), சிராவகியர் ஆகியோருடைய கூட்டம் ஒருங்கு கூடியது.

 

 

சத்ராசோகௌ கோஷம்

     ஸிம்ஹாஸந துந்துபீ குஸும வ்ருஷ்டிம்

வர சாமர பாமண்டல

     திவ்யாந்யந்யாநி சாவாபத்.  - 268

 

ஏவம்ஸ்தித: பகவாந்

சத்ர அசோகௌ

கோஷம்ஸிம்ஹாஸந

துந்துபீ குஸும

வ்ருஷ்டிம், வரசாமர

பாமண்டலதிவ்யாநி

அந்யாநிச அவாபத்

 

              இவ வண்ணம் சங்கமுடன் கூடிய பகவான், முக்குடை, அசோக தரு, திவ்வியத்வனி, சிம்மாஸனம், தேவ துந்துபி, பூமாரி இவைகளையும், சிறந்த சாமரை, ப்ரபாமண்டலம், ஆகியவற்றுடன் ஏனைய திவ்வியத் தன்மை வாய்ந்த தெய்வீக அதிசயம் முதலான சிறப்பையும் அடைந்தார்.

 

தசவித மநகாராணா மேகாதசதா

    ததேதரம் தர்மம்

தேசயமாநோ வ்யஹரத்

    த்ரிம்சத் வர்ஷாண்யத ஜிநேந்த்ர:  269

 

அத ஜிநேந்த்ர:

அநகாராணாம்

தசவிதம் தர்மம்

ததா ஏகாதசதா

தத் இதரம் தர்மம்

தேசயமாந :

த்ரிம்சத் வர்ஷாணி

வ்யஹரத்

 

       அதன் பிறகு பகவான், யதிகளுக்கு யோக்கியமான உத்தம க்ஷமை முதலிய பத்து தர்மங்களையும், அவ்வாறே, தர்சனீகன் முதலான பதினோரு வகை சிராவக தர்மங்களையும், உபதேசம் செய்பவராகி, இவ்வண்ணம் முப்பது ஆண்டு வரை இடைவிடாமல் அறம் போதித்து, எவ்விடங்களிலும் சமவசரணமுடன் விசேஷமாகச் சஞ்சரித்தார்.

 

பத்மவந தீர்க்கிகாயாம்

    விவித தரும் ஷண்ட மண்டிதே ரம்யே

பாவா நகரோத்யாநே

      வ்யுத்ஸர்க்கேண ஸ்திதஸ்ஸமுநி:  270

 

கார்த்திக க்ருஷ்ண ஸ்யாந்தே

    ஸ்வாதாவ்ருக்ஷே நிஹத்யகர்ம ரஜ:

அவசேஷம்ஸம் ப்ராபத் வ்யஜராமர

    மக்ஷயம் ஸௌக்யம்.  - 271

 

அத பகவாந்

விவித த்ரும ஷண்ட

மண்டிதே ரம்யே

பாவா நகர

உத்யாநே பத்மவந

தீர்க்கிகாயாம்

ஸ முநி:

வ்யுத்ஸர்க்கேண

ஸ்தித: கார்த்திக

க்ருஷ்ணஸ்ய அந்தே

ஸ்வாதௌ ருக்ஷே

அவசேஷம் கர்ம ரஜ:

நிஹத்ய

வ்யஜராமரம்

அக்ஷயம் ஸௌக்யம்

ஸம்ப்ராபத்

 

            அதன்பிறகு மகாவீர பகவான், பலவகை மரங்களின் சமூகத்தால் வளம் பெற்று அலங்காரமான, அழகதிசயம் பெற்ற பாவாபுரி என்னும் நகரத்தைச் சூழ்ந்துள்ள ஷண்டம் என்னும் உத்யான வனத்தின் மையத்திலுள்ள, தாமரை நிறைந்திருப்பதனால் பத்மவன சரோவரம் என்று பெயர் பெற்ற தடாக மையத்தின் கற்பாறையில், மற்றும் சில முனிவர்களுடன் பரமதியானத்துக்கு உரிய காயோத் ஸர்க்கமாக நின்று, *கார்த்திகை மாத கிருஷ்ண பக்ஷத்தின் முடிவில், ஸ்வாதி நக்ஷத்திரத்தில் முன் கெடாதிருந்த அகாதி கர்மங்கள் நான்கையும் (நாசம் செய்து) கெடுத்து, மூப்பு இறப்பு இல்லாததும், என்றும் அழியாததுமான அனந்த சுகத்தை அடைந்து சித்தரானார். (முக்தியடைந்தார்).

 

      ஸ்வாதௌ வ்ருக்ஷே என்பது, சந்தியால் ஔ,ஆ ஆகி  ஸ்வாதா வ்ருக்ஷே என்றாயிற்று. வி+அ+ஜரா+மரம் - வ்யஜரா மரம் என்றாயிற்று. வி- விசேஷமாக, அ- அல்லாத, ஜரா- மூப்பு, மரம்- மரணம். (அமரன் - மத்தியில் மரணமில்லாதவன் என்பதறிக.) ஸம்+ ப்ரா+ஆபத் - ஸம்ப்ராபத். ஆபத் - அடைதல்.

பரிநிர்வ்ருதம் ஜிநேந்த்ரம்

     ஜ்ஞாத்வா விபுதாஹ்யதாசு சாகம்ய

தேவதரு ரக்த சந்தந காலாகரு

    ஸுரபி கோசீர்ஷை:  272

 

 

அக்நீந்த்ராஜ் ஜிநதேஹம் முகுடாநல

    ஸுரபிதூப வரமால்யை:

அப்யர்ச்ய கணதராநபி

     கதாதிவம் கஞ்ச வந பவநே.  273

 

அத விபுதா:

ஜிநேந்த்ரம்

பரிநிர்வ்ருதம்

ஜ்ஞாத்வா ஆசு ச

ஆகம்ய

ஜிந்தேஹம்

தேவதரு ரக்த சந்தந

கால அகுரு

ஸுரபி கோ சீர்ஷை:

 

அக்நிஇந்த்ராத்முகுட

அநல ஸுரபிதூபம்

வரமால்யை:

அப்யர்ச்ய

கணதராந் அபி

அப்யர்ச்ய

திவம் கம் வந

பவநே

கதா:

 

         பிறகு நான்கு வகை தேவர்களும், மகாவீர பகவான் முக்தி அடைந்தார் என்று, தத்தம் அவதி ஞானத்தால் அறிந்து, அவ்விடத்தே விரைந்து வந்து பகவானைப் போன்ற ஓர் உருவத்தை நிருமித்து; அதனை, தேவதாரு, செஞ்சந்தனம், கருத்த அகில், வாசனைமிக்க கோசீர்ஷம் ஆகிய வாசனையுள்ள சந்தனக் கட்டைகளாலும், அக்கினி குமாரனின் மகுடத்தினின்றும் உண்டான நெருப்புப் பொறியினாலும், வாசனை மிக்க தூபங்களாலும், சிறந்த மாலைகளினாலும், அர்ச்சித்து தகனம் செய்து; கணதர பரமேஷ்டிகளையும் எண்வகைப் பொருள்களால் அர்ச்சித்து வணங்கி, கற்ப அமரர்கள் தேவலோகத்தையும், ஜோதிஷ்க தேவர்கள் ஆகாசத்தையும், வியந்தர தேவர்கள் தேவாரண்யம் முதலான வனத்திலுள்ள வியந்தர லோகத்தையும், பவண தேவர்கள் பவணர் உலகத்தையும் அடைந்தார்கள்.

 

இத்யேவம் பகவதி வர்த்தமாந சந்த்ரே

    ய: ஸ்தோத்ரம் படதி ஸுஸந்த்யயோ: த்வயோர்ஹி

ஸோsநந்தம் பரமஸுகம் ந்ருதேவ லோகே

    புக்த்வாந்தே சிவபத மக்ஷயம் ப்ரயாதி.  274

 

இதி ஏவம் பகவதி

வர்த்தமாந சந்த்ரே

ஸ்தோத்ரம் ய:

ஸுஸந்த்யயோ:

த்வயோர்ஹி படதி

ஸ: ந்ருதேவலோகே

பரமஸுகம்

புக்த்வா, அந்தே

அநந்தம் அக்ஷயம்

சிவபதம் ப்ரயாதி

 

          இவ்வண்ணம் பகவான் மகாவீரர் முதலான தீர்த்தங்கரர்களைத் துதிக்கும் பரிநிர்வாணக் கிரியையை எவன் ஒருவன், காலையிலும், மாலையிலும் சிறந்த பக்தியுடன் படிக்கின்றானோ அவன், இம்மானிடர் அனுபவிக்கும் இன்பங்களில் சிறந்தவற்றையும், மறுபிறவியில் தேவனாகப் பிறந்து அனுபவிக்கும் தேவ இன்பத்தையும் அனுபவித்துக் கடைசியில் (பிறவி முடிவில்), அனந்தமானதும், என்றும் அழிவில்லாததும் ஆகிய இன்ப காரணமான முக்தியைத் தவறாமல் அடைவான்.

 

 

யத்ரார்ஹதாம் கணப்ருதாம் ச்ருத பாரகாணாம்

    நிர்வாண பூமிரிஹபாரத வர்ஷஜாநாம்

தாமத்ய சுத்தமநஸா க்ரியயா வசோபி:

          ஸம்ஸ்தோது முத்யதமதி: பரிணௌமி பக்த்யா.  - 275

 

இஹ பாரத வர்ஷ

ஜாநாம் அர்ஹதாம்

ச்ருத பாரகாணாம்

கணப்ருதாம்

(ஏதேஷாம்)

நிர்வாணபூமி: யதர

தாம் அஹம் அத்ய

சுத்த மநஸா

க்ரியயா வசோபி:

ஸம்ஸ்தோதும்

உத்யதமதி: பக்த்யா

பரிணௌமி

 

            ஜம்பூத்வீப பரதகண்டத்தில் தோன்றி(அறம் கூறி)ய தீர்த்தங்கரர் முதலான அருகத் பரமேஷ்டிகள், கணதர பரமேஷ்டிகள் ஆகியோர், கர்மக்ஷயம் செய்து முக்தியடைந்த இடம், எங்கெங்கு உண்டோ, அவ்விடங்களை யெல்லாம் யான் இப்பொழுது பரிசுத்தமான மனத்தாலும், அமைதியான வசனத்தாலும், வணங்கும் முறையாகிய செயல்களாலும், நன்முறையில் துதிப்பதற்கு முயற்சியுள்ள உள்ளம் உடையவனாகி, பக்தி பரிணாமத்துடன் துதித்து வணங்குகின்றேன்.

 

 

கைலாஸ சைல சிகரே பரிநிர்வ்ருதோsஸௌ

    சைலேசி பாவமுபபத்ய வ்ருஷோ மஹாத்மா

சம்பாபுரே ச வஸுபூஜ்ய ஸுதஸ் ஸுதீமாந்

    ஸித்திம் பராமுபகதோ கதராக பந்த:  - 276

 

அஸௌ மஹாத்மா

வ்ருஷ:

சைலேசி பாவம்

உப பத்ய

கைலாஸ சைலசிகரே

பரிநிர்வ்ருத: அபூத்

ஸு தீமாந்

கதராக பந்த:

வசுபூஜ்ய ஸுத:

பராம்ஸித்திம்

சம்பாபுரே உபகத:

 

         இந்த (அவஸர்ப்பிணியில் முதன் முதல் அறம் பாலித்த) மகாத்மாவான விருஷப தேவர் (ஆதிபகவன்), சீலம் முதலான ஆசாரத்தை யாவரும் அறியத் தோற்றுவித்துத் தானும் மேற்கொண்டிருக்கும் தன்மையை அடைந்து, கைலாசகிரியில் பரிநிர்வாணமடைந்தார். மதி சுருத அவதிஜ்ஞானத்தோடு பிறந்தவரும், ராகத்வேஷ மோகங்களை விட்டவரும், வசுபூஜ்ய மகாராஜன் புதல்வருமான, 'வாசுபூஜ்யர்' பகவான் கர்மக்ஷயம் செய்து அடையும் முக்தியை சம்பாபுரத்தி(ன் அருகி)ல் அடைந்தார்.

 

     " சம்பாபுரவர வாலுகா நதி அக்ரமந்தர பர்வத சிகரஸ்தித மோக்ஷகத வாஸுபூஜ்ய ஜிநதேவ " என்று அர்ச்சிப்பதனாலும், சம்பாபுரத்தின் அருகில் என்று அறியலாகும். அது மந்தாரகிரி என வழங்குகிறது.

 

 

யத் ப்ரார்த்த்யதே சிவஸுகம் விபுதேச்வ ராத்யை:

    பாஷண்டி பிச்ச பரமார்த்தக வேஷ சீலை:

நஷ்டாஷ்ட்ட கர்ம ஸமயே ததரிஷ்ட்ட நேமி:

    ஸம்ப்ராப்தவாந் க்ஷிதிதரே ப்ரஹதூர்ஜ்ஜயந்தே.  277

 

 

விபுதேச்வர ஆத்யை:

பரம அர்த்த கவேஷ

சீலை: பாஷண்டிபி: ச

யத் ப்ரார்த்யதே தத்

அரிஷ்டநேமி : நஷ்ட-

அஷ்டகர்ம ஸமயே

ப்ரஹத்

ஊர்ஜ்ஜயந்தே

க்ஷிதிதரே

சிவஸுகம்

ஸம் ப்ராப்தவாந்

 

             தேவேந்திரன் முதலானவர்களாலும் சிறந்த தத்துவப் பொருளைத் தேடுகின்ற சீல ஸ்வபாவத்தை மேற்கொண்ட பாஷண்டி தபஸ்விகளாலும், எந்த முக்தியின்பம் வேண்டப்படுகிறதோ; அந்த முக்தியின்பத்தை, வினைகளை வென்று அடைபவரான நேமி பகவான், எண்வினைகளும் கெடுகின்ற சமயமான அயோகி குணஸ்தானத்தின் அந்திய சமயத்தில், உன்னதமான ஊர்ஜ்ஜயந்தகிரியின் உச்சியில் முக்தி அடைந்தார்.

 

 

பாவாபுரஸ்ய பஹிருந்நத பூமிதேசே

    பத்மோத்பலா குலவதாம் ஸரஸாம் ஹி மத்த்யே

ஸ்ரீ வர்த்தமாந ஜிநதேவ இதி ப்ரதீதோ

    நிர்வாணமாப பகவா நவதூத பாப்மா.  278

 

ஸ்ரீ வர்த்தமாந: இதி

ப்ரதீத: ஜிந்தேவ:

அவதூத பாப்மா

பாவா புரஸ்ய பஹி:

பத்ம உத்பலா

ஆகுலவதாம்

ஸரஸாம் மத்யே

உந்நத பூமி தேசே

நிர்வாணம் ஆப

 

               வர்த்தமானர் என்று புகழப்பெற்ற பகவான் மகாவீரர், எண் வினைகளையும் கெடுத்தவராகி, பாவாபுரத்தினுடைய அருகில் உள்ள தாமரை நெய்தல் முதலிய மலர்கள் நிறைந்த தடாக மத்தியில் நீர் மட்டத்துக்கு மேலே ஓரளவு உயர்ந்து, விசாலமாகவுள்ள கற்பாறையில் (பவ்வியர்கள் அனைவரும் விரும்பத்தக்க) முக்தியை அடைந்தார்.

 

சேஷாஸ்து தே ஜிநவரா: ஜிதமோஹ மல்லா:

     ஜ்ஞாநார்க்க பூரிகிரணை ரவபாஸ்ய லோகாந்

ஸ்தாநம் பரம் நிரவதாரித ஸௌக்ய நிஷ்ட்டம்

     ஸம்மேத பர்வத தலே ஸமவாபு ரீசா:  279

 

ஜித மோஹ மல்லா:

ஈசா: சேஷா:

தே ஜிநவரா:

ஞாந அர்க்க

பூரி கிரணை:

லோகாந் அவபாஸ்ய

ஸம்மேத

பர்வததலே

நிரவதாரித

ஸௌக்ய நிஷ்டம்

பரம் ஸ்தாநம்

ஸமவாபு:

 

         மோகனீயம் முதலான வலிய வினைப் பகைவர்களை வென்றவர்களும், மூவுலக நாதர்களுமான அஜிதர் முதலான இருபது தீர்த்தங்கரர்களும், கேவலஞானமென்கிற சூரியனுடைய மாபெரும் ஒளியால், உலக மக்களின் அஞ்ஞானமாகிற இருளைப் போக்கி, நன்மார்க்கத்தை விளங்கச் செய்து, ஸம்மேதகிரியின் தாழ்வரை, உச்சி முதலிய இடங்களில், (இத்தகைய பெருமை உடையதென்று) வருணித்துக் கூற இயலாத பரம ஆனந்தமயமான இன்பத்துக்கு இருப்பிடமான முக்தியை அடைந்தார்கள்.

 

நிலைத்து நிற்கும் இடத்துக்கு, நிஷ்டம் என்றார்.

 

ஆத்யச் சதுர்தச திநை: விநிவ்ருத்த யோக:

    ஷஷ்டேந நிஷ்ட்டித க்ருதி: ஜிநவர்த்தமாந:

சேஷா விதூத கநகர்ம நிபத்த பாசா:

    மாஸேந தேயதிவராஸ் த்வபவந் வியோகா: 280

 

ஆத்ய:

சதுர்தச திநை:

விநி வ்ருத்த யோக:

அபூத் ஜிந வர்த்தமாந

ஷஷ்டேந

நிஷ்டிதக்ருதி: அபூத்

சேஷா: து தே

யதிவரா:

விதூத

கந கர்ம நிபத்த

பாசா: மாஸேந

வியோகா: அபவந்

 

           ஆதிபகவான் (விருஷபதேவர்) தான் முக்தியடைவதற்கு முன், பதினான்கு நாள் முன்னதாகவே (திரவிய) மன வசன காயத்தை விட்டவரானார் ; மகாவீரர் நிர்வாணமடைவதற்கு இரண்டு நாள் முன்னதாக (மேற்கூறியவாறு) யோகத்தை விலக்கினார் ; மற்ற இருபத்திரண்டு தீர்த்தங்கரர்களும் கர்மங்களென்னும் கயிற்றினால் வலிவாகக் கட்டப்பட்டிருப்பதனை விடுவித்துக் கொண்டவர்களாய் முக்தியடைவதற்கு ஒரு மாதம் முன்னதாக யோகத்தைத் தடை செய்தவர்களானார்கள்.

 

          முனிவர்கள் முக்தி அடையும்போது இதரமான எவ்வித வியாபாரமும் இல்லாதவர்களாய், மன வசன காயத்தை அடக்கி ஏகாக்ர சிந்தையிலிருந்து, அகாதி கர்மங்களைக் கெடுத்தல் இயல்பு. ஆகவே, ஆதிபகவன் பதினான்கு நாளும், மகாவீரர் இரண்டு நாளும், ஏனையோர் ஒரு மாதமும் உண்டென்னும் அளவில் யோகத்தை நிரோதம் (தடை) செய்தனர் என்க. மகாவீரருக்கு ஆறுநாள் என்று கூறுவாருமுளர். ஈண்டு, யோகம் என்பது, மனம், வசனம், காயம். அவை திரவிய, பாவமென இரண்டாக விரியும். அவற்றுள் திரவிய மன வசன காயத்தை அடக்குவதனையே ஈண்டு கூறினார். என்னை யெனில்? மோகனீயத்தை வென்ற அருகத் பரமேஷ்டி இனி தியானிக்க வேண்டிய ப்ரமேயம் இல்லையாதலின் என்க.

 

மால்யாநி வாக் ஸ்துதிமயை: குஸுமை: ஸுத்ருப்தா

    ந்யாதாய மாநஸகரை ரபித: கிரந்த:

பர்மேய ஆத்ருதியுதா பகவந் நிஷத்யா:

    ஸம்ப்ரார்த்திதா வயமிமே பரமாம் கதிம் தாம்.  281

 

வாக் ஸ்துதி மயை:

குஸுமை: ஸுத்ருப்தாநி

மால்யாநி

மாநஸகரை: ஆதாய

பகவந் நிஷத்யா:

அபித: கிரந்த:

இமே வயம் தாம்

பரமாம் கதிம்

ஸம்ப்ரார்த்திதா:

ஆத்ருதியுதா: பகவந்

நிஷத்யா: பர்யேம:

 

        வசன ரூபமான தோத்திரங்களென்கிற மலர்களால், நன்முறையில் தொகுத்துக் கட்டப்பட்டிருக்கிற நற்பாமாலைகளை, மனமென்னும் கைகளால் எடுத்துக்கொண்டு, பகவந்தன் நிர்வாணமடைந்த இடங்கள் எங்கும் சூழ்ந்து (சிதறாநின்ற) தூவுகின்ற இந்த (துதிபாடும்) யாங்கள், அத்தகைய மோக்ஷகதியை பெற வேண்டுபவர்களாய் மிக்க விருப்பமுடன் (ஆதரவுடன்) கூடி பகவன் நிர்வாணமடைந்த க்ஷேத்திரங்களை வலம் வருகின்றோம்.

 

 

சத்ருஞ்ஜயே நகவரே தமிதாரி பக்ஷா:

    பண்டோஸ்ஸுதா: பரம நிர்வ்ருதி மப்யுபேதா:

துங்க்யாந்து ஸங்கரஹிதோ பலபத்ர நாமா

    நத்யாஸ்தடே ஜிதரிபுச்ச ஸுவர்ண பத்ர:  282

 

 

தமிதாரி பக்ஷா:

பண்டோ: ஸுதா:

சத்ருஞ்ஜயே நகவரே

பரம நிர்வ்ருதிம்

அபி உப இதா:

துங்க்யாம் து

ஸங்க ரஹித:

பலபத்ர நாமா

பரம நிர்வ்ருதிம்

அப்யுபேத:

நத்யாஸ்தடே ஜிதரிபு:

ஸுவர்ணபத்ர:

பரி நிர்வ்ருதிம்

அப்யு பேத:

 

            துரியோதனன் முதலான பகைவர்களை வென்றவர்களான, பாண்டு மன்னனின் மக்களான தருமன், பீமன், அருச்சனன் என்ற மூன்று முனிவர்களும், மலைகளில் சிறந்ததாகிய சத்ருஞ்சயகிரி யில் மேலான முக்தி(யின்பத்தை உடன்பட்டனர். எனவே முக்தி) யை அடைந்தனர். துங்கி என்ற மலையின் மேல், பற்று முதலிய பாஹ்யாப்யந்தர பரிக்ரஹங்களை விட்டுத் துறவு கொண்டவரான பலபத்ர முனிவர் முக்தி எய்தினார். அம்மலையருகே செல்லும் ஆற்றின் கரையில், வினைப் பகைவரை வென்றவரான சுவர்ண பத்ர ஸ்வாமி முக்தி யடைந்தார்.

 

 

த்ரோணீ மதி ப்ரவர குண்டல மேண்ட்ர கேச

    வைபார பர்வத தலே வரஸித்த கூடே

(ர்)ருஷ்யாத்ரிகேச விபுலாத்ரி பலாஹ கேச

    விந்த்யே ச பௌதநபுரே வ்ருஷ தீபகேச.  283

 

ஸஹ்யாசலே ச ஹிமவத்யபி ஸுப்ரதிஷ்ட்டே

    தண்டாத்மகே கஜபதே ப்ரதுஸார யஷ்ட்டௌ

யே ஸாதவோ கதமலா: ஸுகதிம் ப்ரயாதா:

    ஸ்தாநாநி தாநி ஜகதி ப்ரதிதாந்ய பூவந். 284

 

த்ரோணீமதி

ப்ரவர குண்டல

மேண்ட்ர கேச

வைபார பர்வத தலே

வர சித்த கூடே

ருஷ்யாத்ரிகேச

விபுலாத்ரி

பலாஹ கேச

விந்த்யேச

பௌதநபுரே

வ்ருஷ தீப கேச

ஸஹ்யாசலே

ஹிமவதி அபி

ஸுப்ரதிஷ்டே ச

தண்டாத்மகே

கஜபதே ப்ரதுஸார

யஷ்டௌ, ச

யே, ஸாதவ:

கதமலா:

ஸுகதிம் ப்ரயாதா:

தாநி ஸ்தாநாநி

ஜகதி ப்ரதி தாநி

அபூவந்

 

             மற்றும் த்ரோணீ என்ற மலையின் மேலும், மிகச்சிறந்த குண்டலபுரத்தின் அருகிலுள்ள பாறையின் மேலும், மேண்டர கிரி என்ற முக்தாகிரி யின் மேலும், (அதன் பக்கத்தேயுள்ள ஸ்வர்ணா கிரியிலும்), வைபார பர்வதத்தின் மேலும், மேலான சித்திரகூட பர்வதத்தின் மேலும், சிரவணகிரி யின் மேலும்(ச்ரவண பெளி குளத்திலும்), விபுலாசத்திலும், பலாஹகிரியின் மேலும், பௌதனபுரத்திலும், வ்ருஷ தீபமென்கிற மலையின் மேலும், ஸஹ்யாசலம் என்ற மேற்கு மலைத்தொடரிலேயும், (இமயமலை என்ற) ஹிமவத் பர்வதத்தின் மேலும், ஸுப்ரதிஷ்ட மலையின் மேலும், தண்டாத்மகம் என்ற மலையின் மேலும், மதுரை யிலுள்ள கஜபத மென்ற யானை மலை யின் மேலும், (மிகவும் சாரமான பொருள்கள் உற்பத்தியாகும் காரணத்தினாலும், கோல்போல் உயர்ந்திருப்பதனாலும் ஆகிய) ப்ரதுஸாரயஷ்டி என்ற மலையின் மேலும், மற்றும் இவை போன்ற பல இடங்களிலும், எந்த எந்த முனிவர்கள் கர்ம மலங்கள், அகன்றவர்களாகி முக்தி அடைந்தார்களோ, அவர்கள் அடைந்த அந்த இடங்கள் இவ்வுலகில் மிகவும் பிரசித்தி பெற்ற புகழ் வாய்ந்த இடங்களாக விளங்குகின்றன.

 

(பலாகம் - மேகம்) "ச்ரமணா வாதவசநா: " நிகண்டு ச்ரமணர் காற்றை வஸ்திரமாகவுடையவர், திகம்பரர்.

 

        * ச்ரவணம் ச்ரமணம் என்பதன் மரூஉ. வால்மீகி ராமாயண பாலகாண்டத்தில் தசரதன் புத்ரகாமேஷ்டியாகம் செய்தபோது (யாக உணவை தாபஸரும் ச்ரமணரும் உண்டனர்) ச்ரமணாச்சைவ புஞ்ஜதே - சிரமணரும் உண்டனர். " தாபஸா புஞ்ஜதே சாபி, ச்ரமணா புஞ்ஜதே ததா, சதுர்த்தம் ஆச்ரமம் ப்ராப்தா: ச்ரமணா நாம தே மதா" என்று கூறியுளது.

 

 

இக்ஷோர் விகார ரஸப்ருக்த குணேந லோகே

    பிஷ்ட்டோ திகம் மதுரதாமுபயாதி யத்வத்

தத்வச்ச புண்ய புருஷை ருஷிதாநி நித்யம்

     ஸ்தாநாநி தாநி ஜகதாமிஹ பாவநாநி. - 285

 

லோகே பிஷ்ட:

இக்ஷோ: விகார

ரஸப்ருத்த குணே ந

அதிகம் மதுரதாம்

யத்வத் உபயாதி

தத்வத் புண்ய

புருஷை: உஷிதாநி

தாநி ஸ்தாநாநி, இஹ

ஜகதாம் நித்யம்

ஸந்தி பாவநாநி

 

           இவ்வுலகில், அரிசியின் மா, கருப்பங் கழியினின்றும் பிழிந்தெடுத்த (கருப்பஞ்) சாற்றில் தயாரித்த வெல்லத்துடன் சேர்ந்த தன்மையால் இனிமை அதிகமாகும் தித்திப்பை அடைகின்றது. அது எவ்வாறோ, அவ்வாறே புண்ணிய புருஷர்கள் தங்கி முக்தி யடையப்பட்ட அந்த இடங்கள் ; இவ்வுலக மக்களுக்கு எப்பொழுதும் பரிசுத்தமும் புண்ணிய காரணமுமாக நிலைத்திருக்கின்றன.

 

இத்யர்ஹதாம் சமவதாம் ச மஹாமுநீநாம்

    ப்ரோக்தா மயாத்ர பரிநிர்வ்ருதி பூமிதேசா:

தேமே ஜிநா: ஜிதபயா முநயச்ச சாந்தா:

    திச்யாஸுழாசுஸு கதிம் நிரவத்ய ஸௌக்யாம்.  286

 

 

அத்ர இதி அர்ஹதாம்

சமவதாம் மஹா

முநீநாம் பரிநிர்வ்ருதி

பூமிதேசா: மயா

ப்ரோக்தா: தேஜிநா:

ஜிதபயா: சாந்தா:

முநய: ச மே

நிரவத்ய ஸௌக்யாம்

ஸுகதிம் ஆசு

திச்யாஸு:

 

              இவ்விடத்தில், இவ்வண்ணம் இருபத்துநான்கு தீர்த்தங்கரர், பரம சாந்தியடைந்த ஏனைய முனிவர்கள், கணதரர் முதலான மகா யதிகள் ஆகியோர் நிர்வாணமடைந்த தேசங்களும், மலைகளும் என்னால் கூறப்பட்டன. அரஹந்தப் பதவியடைந்த அந்த ஜிநர்களும், எவ்வித பயமுமின்றி பரம சாந்தியடைந்த கணதரர் முதலிய முனிவர் கூட்டங்களும், எனக்குக் குற்றங் குறையில்லாத இன்பமுடைய நிர்வாணத்தை (முக்தி யின்பத்தை) சீக்கிரம் அளிக்கட்டும்.

 

கைலாஸாத்ரௌ முநீந்த்ர: புருரப துரிதோ

    முக்திமாப ப்ரணூத:

சம்பாயாம் வாஸுபூஜ்ய ஸ்த்ரிதச பதிநுதோ

     நேமிரப்யூர்ஜ்ஜயந்தே

பாவாயாம் வர்த்தமாந ஸ்திரிபுவந குரவோ

     விம்சதி: ஸ்தீர்த்த நாதா:

ஸம்மேதாக்ரே ப்ரஜக்மு: ததது விநமதாம்

    நிர்வ்ருதிம் நோ ஜிநேந்த்ரா:  287

 

கைலாஸாத்ரௌ

முநீந்த்ர: புரு: அபதுரித:

முக்திம் ஆப

சம்பாயாம், ப்ரணூத:

வாசு பூஜ்ய: முக்திம்

ஆப ஊர்ஜ்ஜயந்தே

த்ரிதச பதிநுத: நேமி:

முக்திம் ஆப பாவாயாம்

வர்த்தமாந:

முக்திம் ஆப

ஸ்த்ரிபுவந குரவ:

விம்சதி தீர்த்தநாதா:

ஸம்மேத அக்ரே

முக்திம் ப்ரஜக்மு:

தே ஜிநேந்த்ரா:

விநமதாம் ந: அபி

நிர்வ்ருதிம் ததது

 

             கைலாசகிரியில், முனிநாயகரான ஆதிபகவன் விருஷபதேவர், கர்மங்களைக் கெடுத்து முக்தியடைந்தார் ; சம்பாபுரத்தில் அறிஞர்களால் புகழப்பட்ட வாசுபூஜ்யர் முக்தியடைந்தார் ; ஊர்ஜ்ஜயந்தகிரி யில் தேவேந்திரர்களால் துதிக்கப்பட்ட  (அரிஷ்ட) நேமி தீர்த்தங்கரர் முக்தியடைந்தார்; பாவாபுரி யில் பவ்வியர்களால் வணங்கப்படுகின்ற மகாவீரர் முக்தியடைந்தார் ; மூவுலக நாயகர்களான அஜிதர் முதலான இருபது தீர்த்தங்கரர்களும் ஸம்மேத கிரி யின் மேல் முக்தியடைந்தார்கள். இவ்வண்ணம் முக்தியடைந்த இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களும் ; (அவர்களைத்) துதித்து வணங்குகின்ற நமக்கு அவர்களடைந்த முக்தியை அளிக்கட்டும்.

 

அட்டா வயம்மி உஸஹோ

    சம்பாயே வாஸுபுஜ்ஜ ஜிணணாஹோ

உஜ்ஜந்தே ணேமிஜிநோ

    பாவாயே நிவ்வுதோ மஹாவீரோ.  288

 

அட்டாவயம்மி

உஸஹோ சம்பாஏ

வாஸு புஜ்ஜ ஜிண-

ணாஹோ உஜ்ஜந்தே

நேமி ஜிநோ பாவாஏ

மஹாவீரோநிவ்வுதோ

 

         அஷ்டாபத மென்னும் கைலாசகிரியில் விருஷபரும் (ஆதி பகவனும்), சம்பாபுரத்தில் வாஸுபூஜ்ய ஜிநநாதரும், ஊர்ஜ்ஜயந்தகிரியில் நேமி ஜினரும், பாவாபுரியில் மகாவீரரும் நிர்வாணத்தை அடைந்தார்கள்.

 

  நிர்வாணம் - அணைதல், அதாவது சரீரம் நாசமாதல், "நிர்வாணோவாதே' என்பது வியாகரண சூத்ரம்.  பரதசக்ரவர்த்தி குமாரன் அர்க்ககீர்த்தியால் கைலாசகிரியை எட்டு பட்டையாகச் செய்யப்பட்டதென்பது புராண வரலாறு. விவரம் ஸ்ரீ புராணத்தில் காணலாகும். ஜிநநாதர், ஜிநேந்திரர் என்பது போன்ற வாக்கியம்.

 

 

வீஸந்து ஜிணவரிந்தா

    அமராஸுர வந்திதா துதகிலேஸா

ஸம்மேத கிரிஸஹரே

    ணிவ்வாண கயா ணமோ தேஸிம். 289

 

அமராஸுர வந்திதா

துத கிலேசா

வீஸந்து

ஜிணவரிந்தா

ஸம்மேத கிரிஸிஹரே

ணிவ்வாண கயா

தேஸிம் ணமோ

ஹொந்து

 

              தேவர்கள் முதலியோரால் துதிக்கப்பட்டவர்களும், பிறவித் துன்பங்களை ஒழித்தவர்களும், ஜிந சிரேஷ்டர்களுமான அஜிதர் முதலான இருபது தீர்த்தங்கரர்களும் சம்மேதகிரியின் உச்சியில் பரம நிர்வாணத்தை (முக்தியை) அடைந்தார்கள். அவர்கள் பொருட்டு என் நமஸ்காரம் இருக்கட்டும். (சேரட்டும்).

 

 

ராமஸுதா பெண்ணி ஜிணா

    லாட ணரிந்தாண பஞ்ச கோடீஓ

பாவாயே கிரிஸிஹரே

    ணிவ்வாண கயா ணமோ தேஸிம். 290

 

ராமஸுதா

பெண்ணி ஜிணா

லாட ணரிந்தாண

பஞ்சகோடீஓ

பாவாயே கிரிஸிகரே

ணிவ்வாண கயா

தேஸிம் அஹம்

ணமோ அஸ்து

 

           இராமஸ்வாமி யின் குமாரர்களான லவன், குசன் ஆகிய இரண்டு ஜிந முனிவர்களும், லாட தேசத்து நரேந்திரர்களான ஐந்து கோடி எண்ணிக்கையுள்ள ஜிந முனிவரர்களும் (பாவாபுரத்தின் பக்கத்தேயுள்ள) பாவாகிரி என்னும் மலையின் மேல் நிர்வாணத்தை அடைந்தார்கள். அவர்கள் பொருட்டும் என் நமஸ்காரம் சேரட்டும்.

 

லவன், குசன் ஆகிய இருவரும் ஸ்ரீ ராம்பிரானின் புதல்வர்களே!

 

 

ணமஸாமி பஜ்ஜுண்ணோ

    ஸம்புகுமாரோ தஹேவ அணிருத்தோ

பாஹத்தரி கோடீஓ

    உஜ்ஜந்தே ஸத்தஸயா ஸித்தா.  291

 

உஜ்ஜந்தே பஜ்-

ஜுண்ணோ, ஸம்பு

குமாரோ தஹேவ

அணிருத்தோ

பாஹத்தரி கோடீஓ

ஸத்தஸயா ஸித்தா:

தேஸிம் ணமஸாமி

 

            ஊர்ஜ்ஜயந்த கிரியின் உச்சியில், (வாசுதேவன் மனைவி, ருக்மணியின் பிள்ளையான) ப்ரத்யும்னரும், ஜம்புகுமாரரும், அவ்வாறே,அநிருத்தரும் முதலாக (த்வாசபத்தி). எழுபத்திரண்டு கோடியுடன் எழுநூறு பேர்கள் முக்தியடைந்தார்கள். அவர்கள் பொருட்டும் வணங்குகிறேன்.

 

 

292

வரதத்தோய வரங்கோ

    ஸாயர தத்தோய தர வரணயரே

ஆவுட்டய கோடிஓ

      ணிவ்வாண கயாணமோ தேஸிம்.

 

தாரவரணயரே வர-

தத்தோய, வரங்கோ

ஸாயர தத்தோய ச

ஆவுட்டய கோடிஓ

ணிவ்வாண கயா

தேஸிம்

மம ணமோ அஸ்து

 

       (ஹுப்ளிக்கு அருகிலுள்ள) தார்வார நகரத்திலே, வரதத்த முனிவர், வராங்க முனிவர், ஸாகரதத்தர் முதலான முனிவர்களின் சமூகங்கள் மூன்றரைக் கோடி பேர்கள் நிர்வாணமடைந்தனர். அவர்கள் பொருட்டும் என் நமஸ்காரம் ஆகட்டும். (சேரட்டும் எனவே), அவர்களையும் வணங்குகின்றேன்.

 

பண்டு ஸுதா திண்ணி ஜணா

    தவிடணரிந்தாண அட்ட கோடீஓ

ஸத்துஞ்ஜய கிரிஸிஹரே

    ணிவ்வாண கயாணமோ தேஸிம். 293

 

ஸத்துஞ்ஜய கிரிஸி-

ஹரே பண்டுஸுதா

திண்ணி ஜிணா

தவிட ணரிந்தாண

அட்டகோடீஓ ணிவ்-

வாண கயா தேஸிம்

அஹம் நமோஸ்து

 

         சத்ருஞ்ஜய கிரியின் மேலே, பாண்டு மன்னன் புதல்வர்களான தருமர், பீமன், அருச்சுனன் ஆகிய மூவரும் திராவிட நரேந்திரர்களான (அரசர்களான) எட்டு கோடி பேர்களும் (பற்றற்று துறவு மேற்கொண்டு தவமியற்றி) நிர்வாணமடைந்தார்கள் ; அவர்களுக்கும் என் வணக்கம் ஆகட்டும்.

 

ராமோ ஸுக்கீவ ஹணுமோ

    கவய கவக்கோய ணீளமஹா ணீளோ

துங்கீயே கிரிஸிஹரே

    ணிவ்வாண கயாணமோ தேஸிம்.  294

 

 

துங்கீஏ கிரி ஸிகரே

ராமோ சுக்கீவ

அணுமோ கவய

கவக்கோய நீள

மஹாணீளோ

ணிவ்வாணகயா

தேஸிம் அஹம்

ணமோ அஸ்து

 

           துங்கீ என்ற மலையின் மேலே (பத்ம பலதேவராகிய) ஸ்ரீராமபிரானும், வித்தியாதர அரசனான சுக்ரீவனும், ஹநுமானும், (அணுமஹானும்), கவயன், கவாக்ஷன் ஆகிய இருவரும், நீலன், மஹாநீலன் ஆகிய இருவரும், நிர்வாணமடைந்தார்கள். அவர்கள் பொருட்டும் யான் நமஸ்காரம் செய்கிறேன்.

 

ஸ்ரீ இராமபிரான் முதலியோர் முக்தியடைந்த விவரம் ஸ்ரீ புராணத்திலும் காணலாம்.

 

          இச்சாமி பந்தே பரிணிவ்வாண பக்தி காஉஸ்ஸக்கோ கஓதஸ்ஸ ஆளோசேவும் இம்மிஸே அவஸப்பிணியே சவுத்த ஸமயஸ்ஸ பச்சிமே பாகே ஆவுட்டமாஸே ஹீணவாஸ சவுக்காவாஸே ஸகாளம்மி பாவாயே ணயரீயே கத்திய மாஸஸ்ஸ கிண்ண சவுத்தஸீயே ரத்தீயே ஸாதீயே ஸாக்கத்தே பச்சூஸே பயவதோ வட்டமாணோ ஸித்திம் கதோ திஸுவி லோயேஸு பவணவாஸிய வாணவெந்தர ஜோயிஸிய கப்பவாஸியத்தி சவுவிஹாதேவா, ஸபரிவாரா திவ்வேண கந்தேண திவ்வேண அக்கேண திவ்வேண புப்பேண திவ்வேண தீவேண திவ்வேண தூவேண திவ்வேண சுண்ணேண திவ்வேண வாசேண திவ்வேண ணாணேண ணிச்சகாள  மச்சந்தி பூஜந்தி வந்தந்தி ணமம்ஸந்தி பரிணிவ்வாண மஹாகல்லாண புஜ்ஜம் கரந்தி அஹமபி இஹ ஸந்தோதத்த ஸந்தாயிம் பக்தீயே ணிச்சகாளம் அச்சேமி பூஜேமி வந்தாமி ணமம்ஸாமி துக்கக்கவோ கம்மக்கவோ போஹிளாஹோ ஸுகயிகமணம் ஸமாஹி மரணம் ஜிணகுண ஸம்பத்திஹோஉ மச்சம்.  295

 

பந்தே பரிநிவ்வாண

பத்தி காஓஸக்கோ

கவோதஸ்ஸ ஆளோ

சேஉம் இம்மிஸே அவ-

ஸப்பிணிஏ சவுத்தஸம

யஸ்ஸ பச்சிமபாகே

ஆவுட்டமாஸ ஹீணே-

வாஸே, சவுக்காவாஸே

ஸகாளம்மி பாவாஏ

ணயரீஏ கத்திய

மாஸஸ்ஸ, கிண்ண

சவுத்தஸீஏ ரத்தீயே

ஸாதீயே நக்கத்தே

பச்சூஸே பயவதோ

ளட்டமாணோ ஸித்திம்

கதோ திஸுவிளோ

ஏஸு பவணவாஸிய

வாண வெந்தர

ஜோயிஸிய, கப்பவா

ஸிய, இதி சஉவிஹா

தேவா ஸபரிவாரா

திவ்வேண கந்தேண

திவ்வேண அக்கேண

திவ்வேண புப்பேண

திவ்வேண தீவேண

திவ்வேண தூவேண

திவ்வேண சுண்ணேண

திவ்வேண வாசேண

திவ்வேண ணாணேண

ணிச்சகாளம்

அச்சந்தி பூஜந்தி

வந்தந்தி ணமம்ஸந்தி

பரிநிவ்வாண மஹா-

கல்லாண புஜ்ஜம்

கரந்தி அஹமபி இஹ-

ஸந்தோதத்தஸந்-

தாயி, ணிச்சகாளம்

அச்சேமி பூஜேமி

வந்தாமி ணமஸ்ஸாமி

மச்சம் துக்கக்கஓ

கம்மக்கஓ போஹி

லாஹோ ஸுகயி கம-

ணம் ஸமாஹி மரணம்

ஜிநகுண ஸம்பத்தி

ஹோஉ இச்சாமி

 

ஞானவானே !

பரிநிர்வாண பக்தியின் காயோத் ஸர்க்கம் செய்யப்பட்டது அதனை ஆலோசிக்கிறேன். இப்போது நடக்கிற ஹுண்ட அவசர்பிணியின் நாலாங்காலமான 'துஷமஸுஷம' மென்கிற காலத்தின் கடைசி பாகத்தில் மூன்று வருஷமும், எட்டரை மாதமும் உண்டென்னும் அளவில் (அதாவது மிச்சம் இருக்கிற காலத்தில்) பாவா நகரத்தில் கார்த்திகை மாத கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசியின் இரவில் ஸ்வாதி நக்ஷத்திரத்தில், விடியற்காலத்தில், பகவந்தரான வர்த்தமானர் (மகாவீரர்) முக்தியடைந்தார். அவரை, மூவுலகில் உள்ளவர்களான பவணவாசி தேவர்களும், வியந்தர தேவர்களும், ஜோதிஷ்க தேவர்களும், கற்பவாசி தேவர்களும் ஆகிய நான்கு வகை தேவர்களும், தங்கள் தங்கள் தேவியர் முதலான பரிவாரங்களுடன்,

திவ்வியமான கந்தத்தினலும்,

திவ்வியமான அக்ஷதையினாலும்,

திவ்வியமான மலர்களினாலும்,

திவ்வியமான தீபங்களினாலும்,

திவ்வியமான தூபங்களினாலும்,

திவ்வியமான சூர்ணங்களினாலும்,

ஈரம் துவட்டும்

திவ்வியமான வஸ்திரங்களினாலும்,

திவ்வியமான அபிஷேக ஸ்நானங்களினாலும், எப்பொழுதும் (அன்று முதல் இன்றைய வரையில்)

அர்ச்சிக்கிறார்கள், பூஜிக்கிறார்கள், துதி செய்கிறார்கள், வணக்கம் செய்கிறார்கள், பரிநிர்வாண கல்யாண பூஜையை செய்கிறார்கள். அவ்வாறே யானும் இவ்விடம் இருந்தே அவ்விடம் உள்ளவனாக (பாவித்து) எண்ணி, பக்தியுடன், நித்தியமும் அர்ச்சிக்கிறேன், பூஜிக்கிறேன், துதிக்கிறேன், வணங்குகிறேன் . இதனால் எனக்குத் துன்பங்களின் நாசமும், கர்மக்ஷயமும், நல்ல ஞானம் பெறுவதும், நற்கதிச் செல்வதும், ஸமதா பாவமான சமாதி மரணமும், ஜிநனுடைய குணங்களை அடைவதும் எனக்கு ஆகட்டும். இவைகளையே இச்சிக்கின்றேன்.

 

பரிநிர்வாண பக்தி முற்றும்.

 

                 சுபம்.

  வணங்குதற்குரிய வீடூர் பூர்ணசந்திர சாஸ்திரியார் அவர்களால்  ஜூன் 1963 ஆம் வருடம் தமிழ் உரையுடன், சென்னை-14 ஆதிபகவன் அறநூற் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட,  "கிரியா கலாபம்" என்கிற இந்த அறநூலில் உள்ள சமண அறம் பற்றி பலரும் அறியவேண்டும் என்ற நோக்குடன்,

 

  02-11- 2018 அன்று  கிரியா கலாபம் என்கிற இந்நூல் சிறு முன்னுரையுடன் இக்குழுவில் பதிவிடத்தொடங்கி,(தொடர் பதிவுகள் சிலநாள் தள்ளியும்) ஆக 190 நாட்கள் தொடர் பதிவாக  இக்குழுவில் பதிவிட்டேன். எனது பதிவில் எங்கேயேனும் சிறு பிழைகள் தென்பட்டாலும் அதற்காக மறைந்த நூலாசியர் அவர்களை நினைவு கூர்ந்து மன்னிப்பு கேட்டுக்கொள்வதுடன், எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்த திரு. பத்மராஜ் ராமசாமி அவர்கள், திரு. மல்லிநாதன் அவர்கள், திருமதி வசந்தலட்சுமி ஜெயக்குமார் அவர்கள் மற்றும் குழுவில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

சமண அறம் திக்கெட்டும் பரவட்டும் !

              

திருவறம் வளர்க !

           இங்ஙனம்,

  கம்பீர- துரைராஜ், செய்யாறு.


No comments:

Post a Comment