நீலகேசி
🔹 "நீலகேசி" என்னும் நூல், ஐஞ்சிறுங்
காப்பியங்களில் ஒன்றெனப் போற்றப்படுகிறது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
🔹 இந்நூலுக்கு
"சமய திவாகர வாமன முனிவர்" என்பார் உரை எழுதியுள்ளார்.
🔹 இதன்
காலம் யாது என்பதை திட்டவட்டமாக அறிய முடியவில்லை இருப்பினும் கி.பி. நான்கு
அல்லது ஐந்தாம் நூற்றாண்டு எனக் கருத இடமிருக்கிறது.
🔹 தமிழில்
தோன்றிய *முதல் தருக்க நூல்* இதுவெனக் கூறலாம்.
🔹 இது
குண்டலகேசிக்கு மறுப்பாக எழுந்த நூலாகும்.
🔹 பழையனூர்
நீலியே குண்டலகேசியாகப் பிறந்து சமண சமயத்தினும் பௌத்த சமயமே மேலோங்கியது என
உணர்த்துவது குண்டலகேசிக் காப்பியம்.
🔹 அதே
பழையனூர் நீலியே நீலகேசியாகப் பிறந்து குண்டலகேசியை வாதில் வென்று சமணமே உயர்ந்த
சமயம் என நிறுவுகிறது நீலகேசிக் காவியம்.
🔹 குண்டலகேசி,
நீலகேசி, அஞ்சனகேசி, காலகேசிபோன்ற
நூல்கள் தருக்க நூல்களாகவே அமைந்துள்ளன.
🔹 தருக்கவியல்
சிந்தனையை மணிமேகலைக் காப்பியம் பின்னைய காதைகளில் பேசினாலும், அதனை முழுமையாகப் பேசுவது நீலகேசி மட்டுமே.
🔹 இத்தகைய
சித்தாந்த நூல்களுக்கு நீலகேசியே மூலாதாரம் என்பது தெளிவு.
🔹 நீலகேசி
– பெயர்க்காரணம்
🔹 நீலகேசி
என்பது ‘கேசி’ என்று முடியும் பெண்பால்
பெயர்களுள் ஒன்று.
🔹 கேசி
அழகிய கூந்தலை உடையவள்; நீலகேசி – அழகிய
கருங்கூந்தலை உடையவள் என்பது பொருள்.
------------
No comments:
Post a Comment