சுருதபஞ்சமி.
தீர்த்தங்கரர்கள் வாலறிவு (கேவல ஞானம்) என்னும் முழுதுணர் ஞானத்தை அடைந்தவுடன், தான் பெற்ற வரம்பற்ற அறிவையையும், உயிர்கள்
உய்ய அடைய வேண்டிய அறத்தையும் உரைக்க தேவேந்திரனால் ஏற்படுத்தப்படும் “சமவசரணம்” என்னும் அறஉபதேச மண்டபத்தில் தியான ரூபியாக எழுந்தருளுவார்கள்.
அப்போது அவரிகளிடமிருந்து திவ்யமயமான ஒலி பிறக்கும். இதுவே “திவ்யதொனி” எனப்படும். தீர்த்தங்கரர்கள் உதடுகள் அசையாமலே இந்த த்வனி பிறக்கின்றன. அவ்வாறு வெளிவரும் ஓசையானது கம்பிரமாகவும்,மனத்திற்கு இனிமையாகவும்,குற்றமற்றதாகவும்,பூவுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் கேட்கும்படியாகவும் இருக்கும்.
இது தீர்த்தங்கரர்களுக்கு ஏற்படும் எண்வகை அதிசயங்களில் ஒன்று! கணதரர்கள் இவற்றின் பயன்களை பின்னர் வரும் சந்ததிகளுக்கும் பயன்படும் வண்ணம் ஆகமங்களாக தொகுத்தார்கள். அப்படித் தொகுத்த திருநாளே “சுருத பஞ்சமி” என்று குறிக்கப்படுகிறது.
------------------------
கால இழிவினால் சுருதஞானத்தை முழுமையாக அறிந்தோர் தோன்றாத நிலையில் முதன்முதலில் ஆசாரிய தரசேனர் காலத்தில்தான் இனி, செவிவழியாக கேட்டறிந்து ஆகமத்தை காப்பாற்ற இயலாது, அதற்கு வரிவடிவம் (எழுத்து வடிவம்) தரவேண்டும் என்று கருதலாயினர்.
அப்போது ஆசாரிய தரசேனர், பனிரெண்டாவது
அங்கத்தின் ஒரு பிரிவான 'அக்ராயணி' என்னும் பூர்வத்தின் 5-வது வஸ்து அதிகாரத்தின்
உட்பிரிவான 'மகாகர்ம ப்ரக்ருதி' என்னும் நான்காவது ப்ராப்ருதத்தை அறிந்திருந்தார்.
அதை அவர் தமது சீடர்களான புஷ்தந்த. பூதபலி மாமுனிவர்களுக்கு உபதேசித்தருள,
அவர்களும் அவ்வுபதேசத்திற்கேற்ப ப்ராக்ருத மொழியில் 'ஷட்கண்டாகமம்' என்னும்
நூலினை, ஜ்யேஷ்ட (ஆனி) சுக்ல (வளர்பிறை) பஞ்சமி (ஐந்தாம்நாள்) அன்று
எழுதியருளினர். இவ்வாறு ஆகமம் முதன்முதலாக வாரிவடிவம் (எழுத்து வடிவம்) பெற்றது.
அந்நான்னாளையே இன்றும் சுருதபஞ்சமி என்று கொண்டாடி, ஆகமத்தை வழிபடுகிறோம்.
சூத்திர வடிவிலான
இந்நூலுக்கு தவளம், மகாதவளம், ஜெயதவளம் என்னும் மூன்று விரிவான உரைகள்
எழுதப்பட்டுள்ளன.
ஆஸ்சாரிய தரஸேனருக்குப்
பிறகு ஆசாரிய குந்த குந்தர் தனது குரு பரம்பரை வழியாக பனிரெண்டாவது அங்கத்தின்
மற்றொரு பிரிவான 'ஞானப்ரவாத' பூர்வத்தின் பத்தாவது வஸ்து அதிகாரத்தில் மூன்றாவது
ப்ராப்ருதத்தை (பாகுடத்தை) அறிந்திருந்தார்.
அதை ஆதாரமாகக்கொண்டு 84
பாகுட (ப்ராப்ருத) நூல்களை ஆசாரிய குந்த குந்தர் இயற்றி அருளினார். அவற்றுள் பல
ஆன்மாவை மையமாக வைத்து எழுதப்பட்ட அத்யாத்ம நூல்கள் ஆகும்.
அவற்றைப் பின்பற்றி
பிற்கால ஆசாரியர்கள் பல்வேறு ஆன்மீய நூல்களையும், உரை நூல்களையும் படைத்தருளினர்.
இவ்வாறு ஆசாரிய குந்த
குந்தர் வழிவந்த இந்த சுருத பரம்பரையை இரண்டாம் சுருதஸ்கந்த பரம்பரை என்று
வழங்குவர்.
ஆசாரிய குந்த குந்தரால்
அருளப்பட்ட 84 பாகுட (ப்ராப்ருத) நூல்களுள் 52 நூல்களின் பெயர்கள் திரு. தி.
அனந்தநாத நயினார் அவர்களால் எழுதப்பட்ட 'திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைன ஸமய
சித்தாந்த விளக்கமும்' என்னும் நூலில் கீழ்கண்டவாறு தரப்பட்டுள்ளன.
1. பஞ்சாஸ்திகாயம்
2. பிரவசனஸாரம்
3. ஸமயஸாரம்
4. தரிசனபாகுடம்
5. சுத்தபாகுடம்
6. ஆசாரித்தபாகுடம்
7. போதபாகுடம்
8. பாவபாகுடம்
9. மோக்ஷபாகுடம்
10. ரயணஸாரம்
11. நியமஸாரம்
12. ஜோணிஸாரம்
13. கிரியாஸாரம்
14. ராதனாஸாரம்
15. லப்திஸாரம்
16. க்ஷபணஸாரம்
17. பந்தஸாரம்
18. தத்வஸாரம்
19. அங்கஸாரம்
20. திரவ்யஸாரம்
21. த்வாதச அணுவேக்கா
22. தோயபாகுடம்
23.சரணபாகுடம்
24. சமவாயபாகுடம்
25. நயபாகுடம்
26. ப்ரக்ருதிபாகுடம்
27. சூர்ணிபாகுடம்
28.பஞ்சவர்கபாகுடம்
29. கர்மவிபாகபாகுடம்
30. வஸ்துபாகுடம்
31. புத்திபாகுடம்
32.பயத்தபாகுடம்
(பயர்த்த)
33. உத்பாதபாகுடம்
34. திவ்யபாகுடம்
35. ஸிக்கபாகுடம்
36. ஜீவபாகுடம்
37. சாரபாகுடம்
38. ஸ்தானபாகுடம்
39. பிரமாணபாகுடம்
40. லாபபாகுடம்
41.சூலிபாகுடம்
42. ஷட்தரிசனபாகுடம 4
43. கமபாகுடம்
44. பயாபாகுடம்
45. வித்யாபாகுடம்
(வித்தியா)
46. உகாதபாகுடம்
47. திருஷ்டிபாகுடம்
48. சித்தாந்தபாகுடம்
49. நிதாயபாகுடம்
50. ஏயத்தபாகுடம்
51. விஹயபாகுடம்
52. ஸாலம்மிபாகுடம்
இவ்வாறு 52 பாகுடங்களின்
பெயர்களாகும். மீதமுள்ள 32 பாகுடங்களின் பெயர்கள் தொ¢யவில்லை.
மேற்கண்ட 52 பாகுடங்களில்
ஸமயபாகுடம், ரயணஸாரம்,
பஞ்சத்திகாய ஸங்கஹோ என்னும் இந்த ப்ராப்ருதத்ரயங்களும் (மூன்று பாகுடங்களும்)
தம்ஸன பாகுடம்,
சரித்த பாகுடம், ஸித்தபாகுடம்,
போதபாகுடம், பாவபாகுடம், மோக்கபாகுடம், லிங்கபாகுடம், சீலபாகுடம் என்னும் இந்த
அஷ்ட (எட்டு) பாகுடங்களும்,
நியமஸாரம், பாரஸ
அணுவேக்கா, ரயணஸாரம் ஆகிய மூன்றுடன் சேர்த்து 14 நூல்கள் அச்சிடப்பட்டு
வெளியிடப்பட்டுள்ளன.
----------------------
The efforts you took are really very great sir
ReplyDeletethank you sir
Delete