tattvartha sutra - chapter 5



தத்வார்த்த சூத்திரம்: - அத்தியாயம் # 5



கடவுள் வாழ்த்து



 மோக்ஷ மார்கஸ்ய நேதாரம் பேதாரம் கர்ம பூப்ப்ருதாம்
 ஞாதாரம் விஸ்வ தத்த்வானாம் வந்தே தத்குண லப்த்தயே

 த்ரைகால்யம் த்ரவ்ய ஷட்கம் நவபத ஸ்ஹிதம் ஜீவ ஷட்காய லேஸ்யா:
 பஞ்சான்யே சாஸ்திகாயா வ்ரத ஸ்மிதி கதி ஞான சாரித்ர பேதா:

 இத்யேதன் மோக்ஷ மூலம் த்ரிபுவன மஹிதை:ப்ரோக்தம் அர்ஹத் பிரீஷை:
 ப்ரத்யேதி ஸ்ருத்ததாதி ஸ்ப்ரூஷதி ச மதிமான் ய: ஸ வை சுத்தத்ருஷ்டி:

 ஸித்தே ஜ்யப்பஸித்தே சவ்விஹராஹணா ஃபலம் பத்தே
 வந்தித்தா அரஹந்தே வோச்சம் ஆராஹணா கமஸோ

 உஜ்ஜோவணம் உஜ்ஜவணம் ணிவ்வஹணம் ஸாஹணம் ச ணிச்சரணம்
 தம்ஸணணாண சரித்தம் தவாணம் ஆராஹணா ஃபணியா



அஜீவப் பொருள்கள்



அஜீவகாயா தர்மாதர்மாகாசபுத்கலா: - (சூ1) = (169)

अजीवकाया धर्माधर्माकाशपुद्गलाः

Ajivakaya dharmadharmakasha-pudgalah



அஜீவகாயா அஜீவ அஸ்திகாயா;  தர்மாதர்மாகாசபுத்கலா: - அதர்ம, ஆதர்ம, ஆகாச, மற்றும் புத்கல திரவியம் அஜீவ அஸ்திகாயம் ஆகும்.

The non-living substances (bodies) are the medium of motion, the medium of rest, space and matter.


காயம் - உடல்

தர்மம், அதர்மம், ஆகாசம் மற்றும் புத்கலம் ஆகிய நான்கும் உயிரில்லாதவையாகவும், அநேக பிரதேசங்களை யுடையவையாகவும் உள்ளது.

பரமாணு – ஒரு ஆகாஸப் பிரதேசம் கொண்டது (அப்ரதேசி)

ஸ்கந்தம் – ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்கள் ஒன்று சேர்ந்தது.

புத்கலம் – பல ஸ்கந்தங்கள் ஒன்று சேர்ந்தது; அதனால் ஒன்றுக்கு மேல் ஆகாஸப்பிரதேசங்களைக் கொண்டுள்ளது

காயம்(உடல்) – புத்கலப் பொருள்கள் ஒன்று சேர்ந்த கூட்டுப்பொருள்.

தர்மம், அதர்மம் போன்றவற்றிலும் ஒன்றுக்கு  மேற்பட்ட ஆகாஸப்பிரதேசங்களைக் கொண்டுள்ளதால் காயம் என்று சொல்லப்படுகிறது. (பஹுபிரதேசி)

-----------------

தர்மம்: உயிர், உயிரற்ற பொருள்களின் அசைவுக்கு காரணமானது தர்மம் என்று குறிப்பிடப்படுகிறது.  பாகதத்தில் தன்மம் என்றும் சமஸ்கிரதத்தில் தர்மம் என்றும் சொல்லப்படுகிறது.

(அறம் செய்தல், தர்மம் செய்தல் / பிறர்க்கு உதவிசெய்தல் என்று நடைமுறையில் உள்ள தர்மம் என்ற சொல் வேறு.)

அதர்மம் (அதன்மம்): உயிர், உயிரல்லாத பொருட்கள் நிற்றலுக்கு காரணமாக இருப்பது.

(வழக்கிலுள்ள தர்மத்திற்கு எதிர்ச்சொல்லாய் வரும் அதர்மம் என்பது வேறு,)

ஆகாஸம்: (Space) அனைத்து பொருட்களும் நிலை கொள்வதற்கு இடந்தருவது ஆகாசம் ஆகும்.

புத்கலம்: (matter) உருவம் உள்ளதும், புலன் களால் அறியக்கூடியதுமாகிய (கண்ணுக்கு தெரியக்கூடிய) எல்லா பொருட்களும் புத்கலம் ஆகும்.

இந் நான்கும் உயிரல்லன தத்வங்களாகும். (பஹுபிரதேசி)

காயம்: விஸ்தீர்ணம் (அ) பரப்பு என்பர். ஒரு உடல் எந்த அளவுக்கு பரந்துள்ளதோ அதனை காயம்/ பரப்பு என்பர். ஒன்றுக்கு மேற்பட்ட அகாச, பிரதேசங்களைக் கொண்டது.

காலம்: ஒரு பிரதேசமே (அப்ரதேசி) ஆதலால் இது காயமல்ல. அதன் எண்ணற்ற காலாணுக்கள் லோகாசம் முழுவதும் குவியல் போன்று இடைவிடாது பரந்துள்ளது.
-----------------

திரவியங்கள் பற்றிக் காண்போம்.....

-------------- 



திரவியங்கள்


திரவ்யாணி - (சூ2) = (170)


द्रव्याणि


Dravyani



திரவ்யாணி - தர்ம, ஆதர்ம, ஆகாச, மற்றும் புத்கல பொருட்கள் திரவியங்கள்;


These (four) are substances (drayas).


இவை நான்கும் பொருள்களும் திரவியங்கள் ஆகும்.


--------------
எவற்றில்  குணம் நிரம்பியதாயும்;  பர்யாயம் (மாறுதல்) மூன்று காலங்களிலும் நடைபெறுகிறதோ அதுதான்  திரவியம்.

மேற்கூறிய நான்கும் உயிரல்லாத திரவியங்கள் (பதார்த்தங்கள்,பொருட்கள்) எனப்படும்.

இவற்றுடன் பின்வரும் உயிர், காலத்தை சேர்த்தால் ஆறு திரவியங்கள் ஆகும்.

பதார்த்தம் என்பது பல பண்புகளின் உறைவிடம். அப்பண்புகள் பிரிக்க முடியாதவை.

சர்க்கரைக்கட்டியில்; இனிப்பு, நிறம், கடினத்தன்மை ஒன்று போல் எல்லா அணுக்களிலும் இருக்கும்.

அதுபோல் பதார்த்தங்களின் எல்லாப் பாகங்களிலும், அதன் பரிணாமங்களிலும் கட்டாயம் இருக்கும். இதை அதன் சாமான்ய குணம் (பண்பு) என்பர்.  அச்சாமான்ய குணம் ஆறு பண்புகளைக் கொண்டது.

அஸ்தித்வம் :  முக்காலமும் இருப்பது, அழிக்க முடியாதது. எனவே நிலையானது.

வஸ்தித்வம்: செயல்படுந் தன்மை

திரவியத்வம்:  மாறுந்தன்மை கொண்டது.

பிரமேயத்வம்: அறியக் கூடியது. அறியும் பொருள்

அகுருல குத்வம் :  தனித்தன்மை ஒன்று மற்றொன்றாக மாறாத தன்மை.

பிரதேசத்துவம்: இடத்தை அடைத்துக் கொள்ளும் தன்மை. எனவே ஏதாவது ஒரு வகையான உருவம் உள்ளது.
-----------

சேதனத்துவம் (consciousness); அமூர்த்தத்வம் (உருவமின்மை, immaterial) இவை இரண்டும் ஆன்மாவின் பொதுப்பண்புகளாகும்.

அசேதனத்துவம் (விழிப்புணர்வின்மை) , மூர்த்தத்வம் (உருவம் உடையது) மற்ற பதார்த்தங்களின் பொதுப்பண்பாகும்.

குறிப்பிட்ட பதார்த்ததின் பண்புகளை சிறப்பாக அறிய இயலும்.

அவ்வழியே ஒரு தொகுதிக்கும், மற்ற தொகுதிக்கும் உள்ள வேறுபாடுகளை அறிய உதவும்.

பண்புகளில் தான் மாறுதல்கள் நிகழ்கின்றன, திரவியங்களில் அல்ல.

-------------

மேலும் உள்ள இரண்டு திரவியங்கள் பற்றி...... 

------------- 



திரவியங்கள்




ஜீவாச்ச  -  (சூ3) = (171)


जीवाश्च

Jivashcha



ஜீவாச்ச – ஜீவனும் திரவியம்  ஆகும்.

The souls are the living things and are also substances. Thus there are six sustances the living things (souls), the matter, the medium of motion, the medium of rest, the space and the time.


இவ்வைந்து திரவியத்துடன் இனி விளக்கப்பட உள்ள காலத்துடன் திரவியங்கள் ஆறு.

ஒவ்வொரு திரவியத்திலும் அஸங்கியாத பிரதேசங்கள் உள்ளன. அதனால் அவை அஸ்திகாயம் ஆகும்.

அவை எக்காலத்திலும், எக்காரணத்தினாலும் அதிகமாவதும்/குறைவதும் இல்லை. மேலும் தனி உருவமற்றவை.

நிலம், நீர், காற்று மற்றும் மனம் ஆகியன உருவம், சுவை, மணம் மற்றும் தொடுதல் ஆகிய பண்புகளை உடையது. ஆகையால் இவை புத்கலத்தில் சேர்ந்தவையாகும்.

---------
காற்று குடம், குவளையில் பரவியிருப்பது அனுமானிக்கப்படுகிறது. அதனால் அதற்கும் உருவமுண்டு என்பது உறுதியாகிறது. அதனால் உருவம், ஸ்பரிசம் உடையதாகிறது.

(பரமாணுக்கள் இருப்பதை அனைத்து தரிசனங்களும் ஒத்துக் கொண்டுள்ளது. அவையும் கண்களுக்கு புலப்படுவதில்லை)

பூமியைத் தொட்டு உணர்வது போன்று, நீரும் மண குணமுடையது. அது போலவே நெருப்பும் சுவை, மண முடையது.

மனத்தில் திரவிய, பாவ என இரண்டு வகையுள்ளது. பாவ(bhava)த்தில் ஞான வடிவாக உள்ளது. ஞானம் ஜீவ குணமாதலால் அதன் கீழ் மனம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

திரவிய மனம், நிறம், மணம் மற்றும் ஸ்பரிசம் முதலிய பண்புகள் கொண்டதாக கூறப்படுகிறது. ஆகவே புத்கல திரவியத்தின் பர்யாயமாக இருக்கிறது.

ஒலியும் புத்கலத்தன்மை கொண்டது, அதனால் உருவமிருக்கிறது.

------------
It is contended that we do not see the sir and mind producing the effect(karyatvam) of colour, taste, etc., as we do in the case of atoms

We say that such an effect can be produced in their case also. For we admit that all atoms can produce effects containing (all) colours, tastes, smells, etc.

There are no atoms of the class of earth, water, fire or air.

For all activity proceeds with the intermixture or blending of classes. Directions is included in space.


The convention of east, west, etc., in the series or rows of the points of space is based on the rise of the sun etc.

For instance, this direction is here. (The east is in this direction of sunrise)
---------------

அதன் பிரத்யேகப் பண்புகளை காண்போம்.

------------- 



திரவியங்கள்



நித்யாவஸ்திதான்யரூபாணி -  (சூ4) = (172)


नित्यावस्थितान्यरूपाणि


Nityavasthitanyarupani



நித்யாவஸ்திதானி  -  நித்யமாகவும், நிலையாகவும்; அரூபாணி – அரூபமாகவும் இருக்கின்றன.

These six substances are eternal, non-destructible, fixed in number (i.e. six) and, except for matter, are formless.


உயிர், புத்கலம், தர்மம், அதர்மம், ஆகாசம், காலம் இந்த ஆறு திரவியங்களும் நிலையானவை (eternal), எக்காலத்திலும் இருப்பவை.

இவை எக்காலத்திலும், எக்காரணத்தாலும் கூடுவதும் இல்லை, குறைவதும் இல்லை.

புத்கலம் தவிர மற்றவை அரூபியானவை. (உருவமற்றவை)

இவ்வைந்து பொருட்களும் நிறம், சுவை, மணம், ஸ்பரிசம் ஆகியவை இல்லாதவை.

ஐம்பொறிகளுக்கும் தோன்றாதவை இதனால் அரூபிக்கானப் பொருள் அமூர்த்தம் என்றாகிறது.
-----------
விதிவிலக்கினை அடுத்து காண்போம்......


----------------- 




புத்கலம் அரூபியன்று





     ரூபிண: புத்கலா -  (சூ5) = (172)


    रूपिणः पुद्गलाः


    Rupinah pudgalah



ரூபிண: - ரூபத்தோடு (உள்ளன); புத்கலா - புத்கலங்கள்


The matter has taste, smell, colour and touch and, therefore, have form.



நிறம்,  சுவை, கந்தம், ஸ்பர்சம் உள்ளவை புத்கலங்கள்.

இவை ஒருங்கே அமைவது மூர்த்தி/உருவம்/ரூபம்.

அதாவது குணம் எதனில் உள்ளதோ அவை ரூபி என அழைக்கப்படுகிறது.

ஸ்கந்தம் மற்றும் பரமாணுக்கள் பலவற்றால் ஆனது புத்கலம், அநேக பிரிவுகளை உடையது.

----------

பிற திரவியங்களும் அநேக பிரிவுகளை உடையது.

---------------------- 



தனித்தனி திரவியங்கள்




ஆ ஆகாசாதேகத்ரவ்யாணி -  (சூ6) = (173)


आकाशादेकद्रव्याणि


A akashadekadravyani



ஆ ஆகாசாத் – ஆகாச திரவியம் வரை எல்லாம் ; ஏகத்ரவ்யாணி – ஒவ்வொரு திரவியம் ஆகும்.

The medium of motion, the medium of rest and space each is a single continuous extention with regard to substances, but with regard to place, time and thought, each substance is innumberable and infinite.


தர்ம, அதர்ம, ஆகாச திரவியங்கள் ஒவ்வொரு திரவியம் ஆகும்.

இவை ஒவ்வொரு திரவியம்; லோகம் முழுவதும் உள்ளன.

இவை திரவியம், க்ஷேத்ரம், காலம் மற்றும் பாவம் ஆகிய நோக்கில் எதுவாகிலும் தனித்தனியாகவே உள்ளன.


ஜீவ திரவியம், புத்கல திரவியம் மாதிரி பலவகைகளாக (எண்ணிலடங்காதவை) இல்லை.
-----------
இவை மூன்றினிடத்தும் உள்ள சிறப்பான குணங்களைக் காண்போம்...


---------------



நிஷ்கிரியாணி ச -  (சூ7) = (174)


निष्क्रियाणि च


Nishkriyani cha



ச – மற்றும்; நிஷ்கிரியாணி – தர்ம, அதர்ம, ஆகாச திரவியங்களில் கிரியை இல்லை.


These three (the medium of motion, the medium of rest and space) are also without activity (movement), since these are spread in the whole universe.



தர்மம், அதர்மம், ஆகாசம் மூன்று திரவியங்களில் கிரியை (இடம் விட்டு இடம் நகர்தல்) அற்றவை.

தர்ம, அதர்ம திரவியம் உலகம் முழுவதும் பரவியிருக்கும்.

ஆகாசம் லோகத்திலும், அலோகத்திலும் பரவியிருக்கும்.

ஆதலின் அவை செல்வதற்கு வேறு இடங்கள் இல்லாததால் அவைகளுக்கு இயக்கம் இல்லை.

தர்ம, அதர்ம போன்றவை பொருட்களின் இயக்கத்திற்கு ஊடகமாக துணை புரிகிறதேயன்றி, அவற்றின் இயக்கத்தை கட்டாயப் படுத்துவதில்லை.

-------------
அடுத்து பிரதேசங்களின் எண்ணிக்கையை பற்றி...........

----------------- 


திரவியங்களின் பிரதேசங்கள்




அஸங்க்யேயா: ப்ரதேசா: தர்மாதர்மைக ஜீவானாம் -  (சூ8) = (175)


असंख्योयाः प्रदेशा धर्माधर्मेकजीवानाम्


Ashamkhyeyah pradeshah dharmadharmaikajivanam



அஸங்க்யேயா: ப்ரதேசா: - எண்ணிலடங்கா பிரதேசம் உடையன; தர்மாதர்மைக ஜீவானாம் – தர்ம திரவியம், அதர்ம திரவியம், ஒரு ஜீவ திரவியம் இவை ஒவ்வொன்றும்

There are innumberable space points in the medium of motion, the medium of rest and in each individual soul. One space point is the space occupied by one elementary particle of matter.



தர்ம திரவியம், அதர்ம திரவியம், ஒரு ஜீவ திரவியம் இவை ஒவ்வொன்றும் எண்ணிலடங்கா (எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட) பிரதேசம் உடையன,

பிரதேசம் எண்பது ஒரு பரமாணு தன் இயல்பான நிலையில் அடைத்துக் கொள்ளும் இடஅளவு ஆகும்.

ஒரு ஜீவனின் பிரதேசங்களின் எண்ணிக்கை மற்ற இரண்டு திரவியங்களினுடைய பிரதேசங்களின் எண்ணிக்கை அளவே இருந்த போதிலும்;

ஜீவன் சுருங்கி விரியும் தன்மையுடையதாக இருக்கின்றது.

அது வினைகளின் காரணத்தினால், சிறிய அல்லது பெரிய உடலைப் பெற்று அதன் அளவிலேயே பரவி இருக்கிறது.
-----------
ஆனால் கேவலி சமுத்காதத்தின் போது , முக்தி அடையும் முன்னர், உலகம் முழுவதும் பரவும் போது முதலில் ஜீவனின் நடு எட்டு பிரதேசங்கள், மேரு மலையின் கீழே உள்ள சித்ராபூமியின் வஜ்ரமயமான படலத்தின் நடுப்பகுதியில்  பரவி, பின்னர் கீழே மேலேயுள்ள மற்றெல்லாப் பிரதேசங்களிலும் மற்றும் பக்கவாட்டிலும் பரவி உலகம் முழுவதும் விரிந்து பரவுகிறது.
----------------
ஸங்க்யாதம்  - எண்ணிக்கை
அசங்கியாதம் – எண்ணிக்கை அற்றது
அனந்தம்  -  முடிவில்லாதது
பிரதேசம்  -  மேலும் துண்டிக்க முடியாத ஒரு நுண்ணிய புத்கல பரமாணுவானது தங்குவதற்கான ஒரு இடம்.
-----------
ஆகாச திரவியத்தின் பிரதேசங்கள் பற்றி............


---------------- 





ஆகாச திரவியம்



ஆகாசஸ்யானந்தா:  -  (சூ9) = (176)


आकाशस्यानन्ता:


Akasasyanantah



ஆகாசஸ்யானந்தா: ஆகாசம் முடிவில்லாத (infinite) பிரதேசங்கள் உடையது.

The space points in the space are infinite, but are innumerable in the universe. 

 

ஆகாசத்தின் அகாசப் பிரதேசங்கள் அனந்தமாகும்.

ஆகாசப் பொருள் லோகாகாசம் (universe) மற்றும் அலோகாகாசம் (non-universe) முழுவதும் பரவியுள்ளது.

லோகம் – தன்மம், அதன்மம், காலம், புற்கலம் மற்றும் உயிர் ஆகிய இவ்வைந்தும் பரவியுள்ளது லோகம், லோகாகாசம்.

அலோகம் – ஆகாசப் பொருள் மட்டுமே பரவிய பகுதி. மற்ற திரவியங்கள் இல்லை.

-------------------
மூர்த்தப் பொருள்களின் (forms of matter) பிரதேசங்கள் பற்றி காண்போம்…..

----------------------- 


ஆகாச திரவியம்



ஸங்க்யேயாSஸங்க்யேயாச்ச புத்கலானாம் -  (சூ10) = (177)


संख्येयासंख्येयाश्च पुद्गलानाम्


Sankhyeyasankhyeyashcha pudgalanam


ஸங்க்யேயாSஸங்க்யேயாச்ச – ஸங்க்யாதம், அஸங்க்யாதம் பிரதேசமும் உள்ளன; புத்கலானாம் – புத்கலத்திற்கு

The matter has numberable, innumberable and infinite space points.


புத்கலங்களுக்கு ஸங்க்யாதம், அஸங்க்யாதம் மற்றும் அனந்தப் பிரதேசங்கள் உள்ளன.


புத்கல திரவிய பரமாணுக்களில் சில ஸங்க்யாத் (countable) பிரதேசங்களையும், சில அஸங்கியாத (countless) பிரதேசங்களையும், சில அனந்தப் (infinite) பிரதேசங்களையும் உடையனவாக இருக்கின்றன.

ஒரு அணு சுயமாக ஒரு பிரதேசத்தில் அடங்குகிறது. லோகாகாசத்தில் முடிவில்லாத அணுக்கள் முடிவில்லாத பிரதேசங்களை அடைத்துக் கொள்ளுகின்றன.

மூன்று அணுக்களைக் கொண்ட ஒரு ஸ்கந்தம் குறைவான பிரதேசத்தை எடுத்துக் கொள்ளும்.

மூன்று அணுக்கள் சுதந்திரமாக இருந்தால் அவை அடைத்துக் கொள்ளும் பிரதேசத்தைவிட இந்த ஸ்கந்தம் குறைவான பிரதேசத்தையே அடைத்துக் கொள்ளும்.

அணுத்துகள்கள் முடிவில்லாதன சேர்ந்து ஒரே ஸ்கந்தமாக ஆகும் பொழுது அவை ஒரு பிரதேசத்திற்கு மேற்படாத இடத்தையே அடைத்துக் கொள்ளும் தன்மையன.

------------------
ஒரு அறையில் ஒரு விளக்கின் வெளிச்சம் அடங்கியுள்ளது. அந்த அறையில் இன்னும் 50 விளக்குகள் ஏற்றி வைத்தாலும் அது வேறு பிரதேசங்களை தேடிப் போவதில்லை. எல்லா வெளிச்சமும் அந்த அறையிலேயே அடங்கி விடும். அதேபோலத்தான் புத்கலத் திரவியம்.

புத்கலங்கள் எண்ணிக்கையுடைய (சங்க்யாதம்) பிரதேசங்கள், எண்ணிக்கையற்ற (ஆசங்கியாதம்) பிரதேசங்கள், முடிவில்லாத (அனந்தம்) பிரதேசங்கள் கொண்டு மூன்று வகையாக உள்ளன.  புத்கலத்தின் வடிவத்திற்கு ஏற்ப பிரதேசங்களின் அளவுகள் அளவுகள் மாறுபடுகின்றன.

ஆயினும் அளவில் சிறியதான ஒரு புத்கலம் அனந்த பிரதேசங்களைக் கொள்வதாகவும் அமைவதுண்டு.

புதகலம் ஸ்தூலமாக இருக்கும் போது சங்கியாத, அசங்கியாத பிரதேசங்களைக் கொள்கிறது. ஸ்தூலப் பொருள் சூக்ஷ்மமாக மாறும் போது அனந்த பிரதேசங்களைக் கொள்கிறது.
-------------------

பரமாணுக்களுக்கு கூட பிரதேசம் உண்டு என அடுத்து வரும் சூத்திரம் கூறுகிறது….

-------------------- 


பரமாணு பிரதேசம்



நாணோ: -  (சூ11) = (178)

नाणो:

Nanoh



நா – ஒரு பிரதேசம் ; அணோ – பரமாணுவுக்கு

The elementary unit of matter is extremely small compared to atom (in today’s science) and is indivisible and occupies one space point.



பரமாணுவுக்கு ஸங்க்யாதம், அஸங்க்யாதம், அனந்த பிரதேசம் ஆவதில்லை. ஒரு பிரதேசம் மட்டுமே.

அவை புத்கலங்களுக்கு மட்டுமே சூ.10ல் கூறியபடி பொருந்தும்.

எவ்விதம் ஒரு ஆகாசப் பிரதேசத்தில் பிரதேச பேதமில்லாத்தால் அது அப்ரதேசி எனக் கருதப்படுகிறதோ, அதுபோலவே பிரிக்க முடியாத ஒரு புற்கல பரமாணுவின் பிரதேசம் கூட ஒரு ஆகாச பிரதேசம் ஆகும்.
----------------
தர்மம் முதலான பொருட்கள் எங்கு இருக்கின்றன…..

----------------

திரவியங்களுக்கு ஆதாரம்



லோகாகாசேSவகாஹ: -  (சூ12) = (179)


लोकाकाशेऽवगाहः


Lokakashe(a)vagahah


லோகாகாசே – லோக ஆகாசத்தில்; அவகாஹ: - தர்மம முதலான எல்லா திரவியங்களுக்கும் இடம் இருக்கிறது.

These substances_the media of motion and rest, the time, the souls and the matter are located in the space of the universe. The splace outside the universe has no substance other than space.


எல்லா திரவியங்களும் லோக ஆகாசத்தில் இருக்கின்றன. எங்கே திரவியங்கள் உள்ளனவோ அங்கே லோக ஆகாசம் (universe) ஆகும்.

திரவியங்கள் இல்லையோ அங்கு அலோக ஆகாசம் ஆகும்.

ஆகாசத்திற்கு அதுவே அதற்கு ஆதாரமாக இருக்கிறது.

ஆகாசத்தை விட பெரிய பரப்புடைய திரவியம் ஏதும் இல்லை. மற்றதைக் காட்டிலும் அனந்த மடங்கு உள்ளதாக இருக்கிறது.

வியவகார நோக்கில் (empirical point of view) மற்ற திரவியங்களுக்கு ஆகாசம் ஆதாரமாக உள்ளது போல் சொல்லப்படுகிறது.

ஆனால் உண்மையான நய நோக்கில் (exact point of view) எல்லாத் திரவியங்களும் அதனதன் இடத்திலேயே உள்ளன.

தர்ம, அதர்ம திரவியங்கள் இருப்பதினால்தான் லோகாகாசம், அலோகாகாசம் என்ற வேறுபாடு இருக்கிறது என்பதை நிர்ணயம் செய்ய முடியாது.
---------------

மேலும் அவற்றின் விபரங்களைக் காண்போம்…..

---------------- 


தர்மாதர்மயோ: க்ருத்ஸ்னே -   (சூ13) = (180)


धर्माधर्मयोः कृस्ने


Dharmadharmayoh kratsne



தர்மாதர்மயோ: - தர்ம, அதர்ம திரவியத்துக்கு இடம்:  க்ருத்ஸ்னே – லோக ஆகாசம் முழுவதும் ஆகும்.

The media of motion and rest pervade the entire universe-space and both coexist without interference.


தர்ம திரவியமும், அதர்ம திரவியமும் லோகஆகாசம் முழுவதும் எள்ளில் எண்ணெய் இருப்பது போல நிரம்பி இருக்கிறது.

இவைகள் தடை, இடைவெளி ஏதுமின்றி லோகாகாசம் முழுவதும் எல்லாப் பகுதியிலும் பரவியிருக்கின்றன.

அவற்றின் ஊடுருவும் தன்மை காரணமாக இவற்றின் பிரதேசங்கள் ஒன்றுக்குள் ஒன்று ஊடுருவி/கலந்து  முழுவதுமாக பரவியிருக்கின்றன.

-------------------
புத்கலங்களின் சிறப்பு ஆற்றல்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் காண்போம்…


------------------ 


புத்கலங்களின் பிரதேசங்கள்



ஏகப்ரதேசாதிஷு பாஜ்ய: புத்கலானாம் -   (சூ14) = (181)


एकप्रदेशादिषु भाज्यः पुद्गलानाम्


Ekapradesadishu bhajyah pudgalanam


ஏகப்ரதேசாதிஷு – ஒரு பிரதேசம், இரு பிரதேசம் முதலாக அஸங்க்யாத பிரதேசம் வரை; பாஜ்ய: - பங்கிடலாம்; புத்கலானாம் – புத்கலத்தினுடைய இருப்பிடம்.

The matter occupy (inhabit) space from one to innumerable space points.


புத்கல திரவியத்தின் இருப்பிடம் லோகாகாசத்தின் ஒரு பிரதேசம் முதலான அனந்த பிரதேசங்கள் வரை பிரிக்கக் கூடியதாகும்.

ஆகாசப்பிரதேசங்களில் புற்கல திரவியங்கள் பல்வேறு வகை வடிவங்களோடு இருக்கின்றன.

ஒரு பரமாணு ஒரு ஆகாயப் பிரதேசத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது.

இரண்டு பரமாணுக்கள் ஒன்று சேர்ந்தோ அல்லது தனியாகவோ ஒன்று அல்லது அதற்கு அதிகமான ஆகாசப் பிரதேசங்களை இணைந்திருக்கும் தன்மையை பொருத்து அடைத்துக் கொள்கிறது.

அது போலவே ஸங்கியாத, அஸங்கியாத மற்றும் அனந்த பரமாணுக்கள் ஒரு பிரதேசமோ, எண்ணக்கூடிய/ எண்ணில் அடங்கா ஆகாசப் பிரதேசங்களை அமைத்துக் கொண்டிருக்கும்.

மூர்த்தப் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து நுட்பமான பொருளாகும் தன்மையுடையது
------------
உதாரணமாக ஒரு அறையில் இருக்கும் பல விளக்குகளின் ஒளி ஒன்றுடன் ஒன்று கலந்து விடுவதைப் போன்றதாகும்.
-------------

ஜீவன்களுடைய இருப்பிடம் பற்றி….

---------------- 


உயிர்களின் பிரதேசங்கள்



அஸங்க்யேயபாகாதிஷு ஜீவானாம் -   (சூ15) = (182)


असंख्येयभागादिषु जीवानाम्


Asankhyeyabhagadishujivanam



அஸங்க்யேயபாகாதிஷு – லோகத்தினுடைய அஸங்க்யாத பாகத்தில் இடம் பெறும்; ஜீவானாம் – ஜீவன்கள்

The Soul inhabits from one to innumberable space points in the universe-space.


ஜீவன்கள் உலகத்தின்(universe of space) அஸங்கியாதத்தில் ஒரு பாகம் முதல் உலகம் முழுமையும் அவற்றின் இருப்பிடமாகக் கொண்டுள்ளன.

உலகஆகாயம் எண்ணிலடங்கா பிரிவுகளாக பிரிக்கப் படுகிறது.

அதில் ஒருபகுதியினை ஒரு ஆகாசப் பிரதேசம் எனலாம்.

இந்த எண்ணற்ற பிரதேசங்களில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட பிரதேசங்களையோ ஒரு ஆன்மா எடுத்துக் கொள்ள முடியும்.

ஆன்மாக்கள் சூக்ஷ்ம (subtle) உடல் மற்றும் பருமை (பாதர, gross) உடல் கொண்டதாயும் உள்ளன.

பருமை உடல் கொண்ட ஒரு ஆத்ம பிரதேசத்தில் எண்ணற்ற சூக்ஷ்ம ஆத்மப் பிரதேசங்கள் இருக்கும்.

ஆகவே ஒரு உயிரே ஒன்று, இரண்டு,..... என அஸங்க்யாத பாகங்களிலும் உலகம் முழுவதும் இருக்கும்.
--------------
ஸமுத்காத அவஸ்தையில் லோக முழுவதும் (அஸங்க்யாத பிரதேசம்) இருக்க முடியும்.

-------
ஒரு  ஜீவனின் சுருங்கி, விரிவது பற்றி அடுத்து காண்போம்....


----------- 



ஜீவனின் சுருங்கி விரியும்  தன்மை




ப்ரதேசஸம்ஹாரவிஸ்ர்பாப்யாம் ப்ரதீபவத்  -   (சூ16) = (183)


प्रदेशसंहार विसर्पाभ्या प्रदीपवत्


Pradesha-sanhara-visarpabhyampradipavat



ப்ரதேசஸம்ஹாரவிஸ்ர்பாப்யாம் – பிரதேசத்தினுடைய சுருங்குதல் விரிதல் காரணமாக அமைகிறது;  ப்ரதீபவத் – விளக்கு ஒளி போல

The space points of a soul can change by contraction and expansion as in the case of a lamp, light expands and fill the space available around it – a small pot or a huge room.



ஆன்மாக்கள் எண்ணற்ற பிரதேசங்களைக் கொண்டிருந்தாலும் அவை அப்பிரதேசங்கள் சுருங்கவும், விரியவும் செய்யும். 

ஒரு விளக்கின் வெளிச்சம் அவ்விளக்கு வைத்துள்ள அறையின் அளவே பரவுவது போல ஆன்மாவும் தன் வினைக்கு தக்கவாறு அமையும் உடலுக்கு தக்கவாறு தான் எடுக்கும் உடலின் உருவத்தனவே அடங்கியிருக்கும்.

உடலின் மிகப்பெரிய உடலைக் கொண்ட உயிர் சுயம்புரமண சமுத்திரத்திலுள்ள மகாமச்சம் (திமிங்கலம் போன்றது) ஆயிரம் யோசனையுடையது, அதுவே உலகத்தின் மிகப்பெரிய உடலாக இருக்கிறது.

மிகச்சிறிய நுட்பமான நிகோத அபர்யாப்த உயிரும் உடலை யேற்று இருக்கும்.

(மனிதனின் சுவாசநேரத்தில் சிறிய நிகோத உயிர் மனிதனுடைய சுவாச நேரத்தில் 18 முறை இறந்து பிறக்கும் தன்மையுடையது.)
-------------
ஒரு தீபத்தை ஒரு பெரியவீட்டில் வைத்தால் அதன் ஒளி விரிந்து வீடு முழுதும் பரவிவிடுகிறது. அதையே ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்தால் அதன் அளவிலேயே சுருங்கி விடுகிறது.

அது போல ஜீவனும் தன் வினைக்கேற்ற உடலுக்குத் தகுந்த வாறு சுருங்கி, விரிந்து இருக்கிறது.

ஒரு கேவலி சமுத்காத நிலையில் ஜீவன் (ஆன்மா) லோகாகாசம் முழுவதிலும் பரவி விடுகிறது.
சித்த நிலையில் கடைசி உடலைக் காட்டிலும் கொஞ்சம் குறைந்த அளவினதாக நிலைத்து விடுகிறது.
-------------
எல்லாப் பொருள்களும் பரஸ்பரம் ஒன்றுக்குள் ஒன்று சேர்ந்து கலந்தும் விடுகின்றன, இருந்தாலும் அவை அவற்றின் இயல்புத் தன்மையினை விட்டுக் கொடுப்பதில்லை.
--------------
தர்மம் முதலிய திரவியங்களுடைய இயல்புத் தன்மையில் உள்ள வேறுபாட்டினைக்......


 -------- 

தர்ம அதர்ம திரவிய பயன்




கதிஸ்தித்யுபக்ரஹெளதர்மாதர்மயோருபகார: -   (சூ17) = (184)


गतिस्थ्त्युपग्रहौ धर्माधर्मयोरुपकारः


Gatisthityupagrahau dharma-dharmayorupakarah



கதிஸ்தித்யுபக்ரஹெள – ஜீவன் மற்றும் புத்கலங்களின் கதி மற்றும் ஸ்திதிக்கு உதவுதல்; தர்மாதர்மயோ – தர்ம அதர்ம திரவியத்தின்; உபகார: - உபகாரமாகும்.


கதி – போதல், இடம் பெயர்தல் ;   ஸ்திதி – இருத்தல், நிலையாய் இருத்தல்.
உபக்ருஹ்யதே – உதவி புரிதல்.

The functions of the media of motion and rest are to assist motion and rest respectively of the soul and the matter.



ஜீவனும் புத்கலங்களும் இயங்கவும், நிற்கவும் துணைபுரிதல் முறையே தர்ம, அதர்ம திரவியமாகும்.

(இரண்டுமே ஆக்குபவை அல்ல, கர்த்தா அல்ல துணைபுரிபவை)

மீன் நீந்துவதற்கு நீர் நிலைகள் தன்னளவில் செயலின்றி துணைபுரிதல் போன்று தர்மப்பொருள் ஜீவ, புத்கலங்கள் செல்லுவதற்கு ஆதாரமாக உள்ளது.

குதிரை முதலிய விலங்குகள் தங்குவதற்கு நிலம் ஆதாரமாக இருப்பது போன்று ஜீவ, புத்கலங்கள் இடப்பெயர்ச்சியின்றி நிலையாய் இருப்பதற்கு அதர்மப்பொருள் ஆதாரமாக உள்ளது.

இத் தர்ம, அதர்ம பொருட்கள் தங்க இடம் தருவது ஆகாயமாகும். அது இயங்க, நிலைத்திருக்க துணைபுரிவதில்லை எனக் கொள்ள வேண்டும்.

---------
ஆகாயத்தின் செயல் பாட்டை அனுமானிக்க முடியுமா….


------------- 


ஆகாச திரவியத்தின் உபகாரம்



ஆஹாசஸ்யாவகாஹ: -   (சூ18) = (185)


आकाशस्यावगाहः


Akasasyavagahah




ஆஹாசஸ்ய – ஆகாச திரவியத்தினுடைய உபகாரம் ஆகும்; அவகாஹ: - எல்லா திரவியங்களுக்கும் இடம் தருதல்.

The function of space is to provide accommodation to all substances.  



அனைத்து திரவியங்களுக்கும் இருக்க இடம் கொடுப்பது ஆகாச திரவியம்.

இயக்கத்திலும்/ செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஜீவன் மற்றும் புத்கலங்களுக்கும் இடம் கொடுப்பது ஆகாசமே.

ஆகாச திரவியத்தில் இயக்கம் இல்லை.

தர்ம, அதர்ம திரவியங்களால் ஊடுருவல் இல்லையெனினும் ஆகாயப் பிரதேசங்கள் அனைத்திலும் பரவி இருக்கின்றன.

-------------

கல், சுவர், எஃகு போன்ற பருமைப் பொருட்களுக்குள் தடைகள் இருப்பது பரஸ்பரமாக அவற்றில் நிகழ்வது.

இந்த தடை ஆகாயத்தினுடைய இடம் தரும் ஆற்றலுக்கு பாதிப்பு உண்டாவதில்லை.

-------
இச்சிறப்பு (அனைத்து திரவியங்களுக்கும் இடமளிப்பது) ஆற்றல் லோகாகாசத்திலும் மற்றும் அலோகாகாசத்திலும் உண்டு.
----------- 

இனி புத்கலப் பொருள் எப்படி உதவி புரிகிறது என……


----------- 


புத்கலத்தினால் உண்டானவை



சரீரவாங் மன: ப்ராணாபானா: புத்கலானம்  -   (சூ19) = (186)


शरीरवाङ्मनः प्राणापानाः पुद्गलनानाम्


Shariravanmanahpranapanahpudgalanam



சரீரவாங்மன: ப்ராணாபானா: - சரீரம், வசனம், மனம், சுவாசோச்சுவாசம்;  புத்கலானம் – புத்கலத்தினுடைய பயன்பாடு.

The function of matter is to form the basis of the body and the organs of speech and mind and respiration.



ஒளதாரிகம் முதலிய உடல், மொழி(வசனம்) மனம் மற்றும் சுவாசோஸ்வாசம் (உயிர்ப்பு) புற்கலத்தினால் உண்டாகின்றன. 

அதாவது உடலின் அமைப்பு புற்கல திரவியத்தினால் ஏற்படுகிறது.

ஒளதாரிகம் போன்ற ஐந்து உடல்களில் சில உடல்கள் நுட்பமானவை அதனால் புலங்களுக்கு புலப்படுவதில்லை.

வினையுடல் கூட புத்கலமே, ஏனெனில் விருப்பு, வெறுப்பு உணர்வுகளால் வினைகள் உதயமாகிறது, அதன் பலனாக கார்மண உடல் அமைகின்றன.

மொழி/வசனம் (பேச்சு) திரவிய வசனம், பாவ (bhava) வசனம் என்ற இருவகையாகும்.

இதில் பாவ வசனம் வீர்யாந்தராயம், மதிஞானாவரணம் மற்றும் சுருத ஞானாவரணம் ஆகியவை க்ஷயோபசமம் (destruction cum subsidence) ஆவதாலும் அங்கோபங்க நாமகர்மத்தாலும் (உதயத்தினால்) உண்டாகிறது. அச்செயல்பாடு புத்கலத்தினால் ஏற்படுகிறது.

திரவிய வசனம் செவிப்பறைக்கு சம்பந்தப்பட்டுள்ளதால் அதுவும் புத்கலமாகும்.

இவை இரண்டும் ஆத்மாவின் வழியே ஊக்குவிக்கப்பட்டு புத்கலம் வசனமாக வருகிறது.

மனதை பொருத்தவரை திரவிய, பாவ என இரண்டுள்ளது.

பாவமனம் லப்தி மற்றும் உபயோக லக்ஷணம் உள்ளது. அதனால் அறியும் சக்தியும், உணர்வும் கூடிய சிறப்புகளுடன் இருக்கிறது. இதற்கும் புத்கலம் உதவி புரிகிறது.

திரவியமனம்: ஞானாவரணம் மற்றும் வீர்யந்திராயத்தின் கேடும், தணிவும் (க்ஷயோபசமம்) ஆவதினாலும், அங்கோபங்க நாம கர்மத்தினாலும் புற்கல பரமாணுக்கள் மனதிற்குள் எது நல்லது/கெட்டது என்பதை அறியவும் மற்றும் நினைவுகூறும் ஆற்றலையும் வளர்க்கின்றன. அவ்வழியே அதுவும் புற்கலமாக உள்ளது.

முகத்தை கையினாலோ துணி வைத்து மூடுவதாலும் சுவாசம் தடைபடுகிறது. ஆகையினால் சுவாசமும் புத்கலமாகிறது. மூச்சை இழுப்பதும், வெளிவிடுதலும் கூட உயிரின் துணையினால் ஏற்படும்  செயலபாடு என நிரூபிக்கிறது.

-----------

இன்னும் வேறு ஏதேனும் உள்ளதா…..

---------------


புத்கலத்தினால் உண்டானவை





ஸுகது:சுஜீவிதமரணோபக்ரஹாச்ச -   (சூ20) = (187)


सुखदुःखजीवितमरणोपग्रहाश्च


Sukhaduhkhajivitamarano-pagrahashcha



ஸுகது:சுஜீவிதமரணோபக்ரஹா – இன்பம், துன்பம், வாழ்வு, இறப்பு முதலான காரியங்களும் புத்கலத்தின் உபகாரமாகும்.


The function of matter is also to contribute to sensuous pleasure, suffering, life and death of living beings.  



இன்பமும்-துன்பமும், பிறப்பும்-இறப்பும் புற்கல திரவியத்தின் உதவிகளாலாகும் (நிமித்தத்தினால்)

புத்கலத்தின் செயல் ஆன்மாவுக்கு உலகத்தில் இன்பமும், துன்பமும்; பிறப்பும், இறப்பும் உண்டாக்குவதாகும்.

எல்லாக் கருமங்களும் பெளதிகத் துகள்களேயாதலால் இது சாத்தியமாகிறது. புத்கலமே புத்கலத்திற்கு மாறுதல்களைச் செய்கிறது.

எனவே தான் உபக்ரஹம் என்ற சொல் சூத்திரத்தில் கையாளப்பட்டிருகிறது.

வெண்கலம் சுத்தமாவதற்கு சாம்பலும், நீர் முதலானவற்றை சுத்தம் செய்ய படிகாரம் போன்றவையும், இரும்பு முதலானவற்றை நீராலும் சுத்தம் செய்ய உபகாரம் செய்வது போல.

உபகாரம் என்ற சொல்லுக்கு நிமித்தம் என்று இங்கு பொருள் கொள்ள வேண்டும்.
(துக்கம், இறப்பு முதலியவற்றை உபகாரம் என்ற சொல்வது வழக்கிலில்லை.)
----------
ஆன்மாவுக்கு புறகல உபகாரம்:

புத்கலத்தினால் உடல் சுகமான போது தர்மம் முதலான காரியங்களை செய்ய முடிகிறது. அவை விலகும் போது அதுவே வைராக்கியத்திற்கு நிமித்தமாகலாம். ஆகவே இன்பமும் உபகாரமாகிறது.

துக்கம் வரும்போது கர்மத்தின் இயல்பு பற்றி சிந்தனை தோன்றுகிறது. உலகம் துக்கமயம் என தெரியவருதலால் மோட்ச மார்க்கத்தில் உற்சாகம் அடைகிறது. துக்கமும் ஆன்ம தூய்மைக்கு உபகாரம் செய்கிறது.

அது போல நல்ல கதி கிடைக்க மரணமும் நல்ல உதவியைச் செய்கிறது. ஆகவே மோட்சம் அடைய மரணமும் உபகாரம் செய்கிறது.

---------
மரணத்தை ஐந்து வகையாக சாஸ்திரத்தில் குறிப்பிடப் படுகிறது.

பாலபால மரணம் – மித்யா திருஷ்டிக்கு ஏற்படுகிறது.
பால மரணம் – சம்யக் திருஷ்டிக்கும்;
பால பண்டித மரணம் – தேச விரதிக்கும்;
பண்டித மரணம் – முனிவருக்கும்;
பண்டித பண்டித மரணம் – பகவானுக்கும் அமைகிறது.

கீழேயுள்ள நான்கும் நல்ல மரணங்கள் என்று தெளிவு பெறலாம்.
----------

உயிர்கள் எப்படி உதவுகின்றன….

-------------- 




ஜீவ உபகாரம்



பரஸ்பரோபக்ரஹோ ஜீவானாம்  -   (சூ21) = (188)


परस्परोपग्रहो जीवानाम्


Parasparopagrahojivanam


பரஸ்பரோபக்ரஹ – ஒருவருக்கொருவர் உதவி செய்தல்;  ஜீவானாம் - ஜீவனுடைய உபகாரமாகும்.

The function of souls is to help one another.  



ஒன்றுக்கொன்று உதவி புரிவது ஜீவனின் இயல்பு

நாம் அனைவரும்  ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம்.

விவசாயி சமூகத்திற்கு உணவு தருகிறான். நெசவாளி துணிமனிகள் தருகிறான்.

அம்மா பிள்ளைக்கு உதவி செய்கிறாள். பிள்ளை அவன் பேச்சை கேட்கிறது. கணவன் மனைவிக்கு காசு கொடுக்கிறான். மனைவி அவனுக்கு உதவி செய்கிறாள்;

சீடன் குருவுக்கு சேவை செய்கிறான். குரு அவனுக்கு உபதேசம் செய்கிறார், ஞானம் வருகிறது.

தீர்த்தங்கரர்/ முனிவர்களைத் தரிசனம் செய்கிறது விலங்கு; தருமம் கேட்கிறது, ஸம்யக் திருஷ்டி கூட ஆகலாம்.

தர்ம க்ஷேத்ர உபகாரம் மட்டுமே ஒழிய, உலகியல் உபகாரம் என்பது இல்லை.

-----------
உபகாரம் செய்தவருக்கு உபகாரம் செய்ய வேண்டும் என நினைப்பது தவறு.

உபகாரம்  செய்வது நமது கடமை. முன்னே ஒருவர் செய்திருக்கலாம் அல்லது பின்னால் செய்யலாம் அது நமக்கு தெரிவதில்லை. எனவே உபகாரம் செய்தல்  நமது கடமையாகும்.
--------------
ஒரு சிறுவனுக்கு படிக்கும் தகுதி யிருக்கிறது. ஆகையினால் ஆசிரியரோ, புத்தகமோ அவனது அறிவிற்கு நிமித்த காரணமாகின்றன.

ஆனால் தத்துவப்படி ஆசிரியரோ, புத்தகமோ அவனது ஆன்மாவில் அறிவை உற்பத்தி செய்யவில்லை. (ஞான, தரிசனம் இயல்பாகும்)

அதனால் ஈஸ்வர வாதம் அறிவை உற்பத்தி செய்கிறது  என்று கூறுவதை, ஜின தர்மத்தில் ஏற்றுக் கொள்வதில்லை.

----------
அடுத்து காலத்திரவியம் என்ன உபகாரம் செய்கிறது என்பதைக் காண்போம்.

------------


காலத்திரவியத்தின் உதவி (உபகாரம்)




வர்தனாபரிணாமக்ரியா: பரத்வாபரத்வே ச காலஸ்ய -   (சூ22) = (189)


वर्तनापरिणामक्रियाः परत्वापरत्वे च कालस्य


Vartana-parinama-kriyah- paratvaparatve ca kalasya



வர்தனாபரிணாமக்ரியா: பரத்வாபரத்வே – வர்தனா, பரிணாமம், கிரியா, பரத்வம், அபரத்வம்  இவை;  ச – மேலும்;  காலஸ்ய – கால திரவியத்தின்  உபகாரம்.

The function of time is to assist substances in their continuity of being (through gradual changes), in their modifi-cations, in their actions and in their proximity and non-proximity in time.  



வர்தனா – பொருள் அப்படியே இருக்கச் செய்தல்,

திரவியங்களில் ஒவ்வொரு சமயமும் தோற்றம், அழிவு, நிலைத்தல் என்பவை நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

தங்கக்கட்டியினை உருக்கி நாணயம், மோதிரம், மாலை போன்ற மாறுதல்கள் செய்தாலும் தங்கம் அப்படியே உள்ளது.

பொருட்களில் ஏற்படும் மாறுகைகளுக்கு காலம்  ஒரு புறக்காரணமாகும்.


பரிணாமா – சுபாவத்தை விட்டு விட்டு மாறுதல், முன்  பரியாயம் போகும், வேறு பரியாயம் வருதல்.

உயிரின் சினம்,  செருக்கு, வஞ்சகம், பேராசை முதலியன

-------------
வர்த்தனா, பரிணாமம் இரண்டும் மாறுதல்களைக் குறித்தாலும்;  வர்த்தனா  என்பது காணமுடியாத அணுப்பிரமாணமான மாறுகைகள் ஆகும். தொடர்ந்து  பொருளில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் பரிணாமம் என்பது பொறிகளின் அறிவுக்கு  கிட்டக் கூடியதாகவும், பெரிய மாறுதல்களாகவும் இருக்கின்றன.
---------------

க்ரியா – அதிர்வு வடிவான மாறுகைகள், ஒரு இடத்திலிருந்து வேறு இடம் போதல்

இந்த செயல் உயிர் மற்றும் புத்கலங்களில் காணப்படுகின்றன.



பரத்வா பரத்வே – சிறியதாதல் பெரியதாதல்  என்னும் பகுப்பு

பர – பல நாட்கள் எடுத்துக் கொள்வது; அபர – குறைந்த நாட்கள் எடுத்துக் கொள்வது.

ஆகிய இவைகள் கால திரவியத்தினுடைய உதவியாகும்.

---------------
கால திரவியம் நிச்சய காலம், வியவகார காலம் என இரு பிரிவுகளாக உள்ளன.

வர்த்தனா நிச்சய காலத்தின் லக்ஷணம். பரிணாமம் வியவகார காலத்தின் லக்ஷணம்.

ஜீவன் மற்றும்  புற்கலங்களில் ஏற்படும் மாற்றங்களே வியவகார  காலமாகும். இதனில் இறந்த, நிகழ், எதிர் காலம் என மூன்று பிரிவுகள் உள்ளன.

இரவு, பகல்; நாழிகை, முகூர்த்தம் முதலியன  ஏற்படுவதிலிருந்து நிச்சய காலத்தின்  இருப்பு உள்ளது என தெரிகிறது.

லோக ஆகாசத்தின் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு காலணு நிலைத்திருக்கிறது. அதுவே நிச்சயகாலம் அகும்.
 --------------------

புற்கலங்களின்  சிறப்பு இலக்கணங்களைக் காண…..

--------------- 


புத்கல திரவிய குணங்கள்




ஸ்பர்சரஸகந்தவர்ணவந்த:  புத்கலா   -   (சூ23) = (190)


स्पर्शरसगन्धवर्णवन्तः पुद्गलाः


Sparsha-rasa-gandha-varnavantahpudgalah



ஸ்பர்சரஸகந்தவர்ணவந்த: - ஸ்பரிசம், ரஸம், கந்தம், வர்ணம் (உடையது)  புத்கலா – புத்கலம்.


The forms of matter are characterized by touch, taste, smell and colour.


புற்கல  திரவியத்தில் ஒரே நேரத்தில் தொடுபுலன் (ஊறு), சுவை, வாசனை, நிறம் ஆகிய நான்கு குணங்களை (பண்புகள்) காணலாம்.

தொடுபுலன்: தொட்டு உணரும்  உணர்வு; மென்மை, கடினம், பளு, பளுவின்மை, குளுமை, வெம்மை, மழமழப்பு, சொரசொரப்பு என எட்டு வகையாக இருக்கின்றன.

சுவை:  சுவைத்தன்மை (ருசி) ரச எனப்படுகிறது. அவை கசப்பு, உறைப்பு, துவர்ப்பு, புளிப்பு, இனிப்பு என ஐந்து வகையாகும்.

நாற்றம்: எது நறுமணத்துடன் மட்டுமே உள்ளதோ அது கந்தம் அல்லது நாற்றம் எனப்படுகிறது. நறுநாற்றம், தீநாற்றம் என இரண்டாகும்.

நிறம்: கருப்பு, வெண்மை, நீலம், மஞ்சள், சிவப்பு என ஐந்து வகையாக உள்ளது.

---------
மேற்கூறிய பிரிவுகளெல்லாம் பிரதான பிரிவுகளாகும். இவை ஒவ்வொன்றின் உட்பிரிவுகள் சங்கியாதம், அசங்கியாதம் மற்றும் அனந்தம் என உள்ளன.

ஒரு அணுவுக்கு இந்த இருபது வகைகளில் ஒரே நேரத்தில் ருசி, வாசனை, நிறம் இவை ஒவ்வொன்றுடன் தொடு உணர்வில் இரண்டு குளிர்ச்சி/உஷ்ணம்; வழவழப்பு/சொரசொரப்பு என ஐந்தும் இருக்கும்.

ஒரு ஸ்கந்தத்திற்கு ஏழு குணங்கள்; மேற்சொன்ன ஐந்துடன் கடினம்/வழவழப்பு மற்றும் லேசானது/பளுவானது என இரண்டும் சேர்ந்து மொத்தம் ஏழாக இருக்கும்.
---------

புற்கலங்களின் மாறுகைகளை அடுத்து காண்போம்…..

------------- 

புத்கல திரவிய குணங்கள்





சப்தபந்தஸெளக்ஷ்ம்யஸ்தெளல்யஸ்மேதானபேததமச்சாயாதபோத்யோதவந்தச்ச -   (சூ24) = (191)


शब्दसौक्ष्म्यस्थौल्य संस्थान भेदतश्छायातपोद्योतवन्तश्च


Sabda-bandha-saukshmya-sthaulya-sansthana-bheda-tamashchhayatapodyotavantashcha



ச – மேலும்; சப்தபந்தஸெளக்ஷ்ம்யஸ்தெளல்யஸ்மேதானபேத தமச்சாயா தபோத்யோதவந்த – சப்தம், பந்தம், சூஷ்மதா,ஸ்தூலதா, ஆகாரம்,  பேதம், அந்தகாரம், சாயா, ஆதாபம்,உத்யோதம் (உடையது);

Sound, union, fineness, grossness, shape, divison, darkness, image, warm light (sunshine) and cool light (moon-light) also characterize the forms of matter.  



ஒலி (ஸப்தம்) மொழியுடையது (பாஷாத்மக) , மொழி அல்லாதது (அபாஷாத்மக) என மேலாக இருவகையுடையது. அவற்றை

மொழியுடையதில்;  எழுத்துடையது ,அக்ஷரம் உடையவை ஸாக்ஷர, எழுத்தில்லாதது, அனக்ஷர என இருவகையும்.

மேலும் மொழியுடையதில் 1. அக்ஷராத்மக சப்தம்; அதாவது தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் போன்ற மொழிகளின் சப்தம்;

2. அநக்ஷராத்மக சப்தம்; அதாவது விலங்கு , பறவை வண்டு,புழு முதாலனவை பேசும் மொழியாகும்.

1. அக்ஷராத்மக சப்தம் இதில்
1.A. பிரயோகிக (செயற்கை ஒலி,contrived) வீணை, மத்தளம், தாளம் முதலானவற்றிலிருந்து வெளிவரும் ஒலிகள்

இதில் உட்பிரிவுகளாக:
  தத : தோல் இசைக்கருவிகளின் ஒலிகள். (மத்தளம், பேரிகை)

  விதத: தந்திக் கருவிகளின் இசை ஒலி. (வீணை, யாழ்)

  கன: ஜாலரா, மணி போன்ற கருவிகளிலிருந்து வரும் சப்தம்.

ஸெளஷிரகே: சங்கு, புல்லாங்குழல் போன்றவற்றை ஊதினால் எழும்பும் ஒலி. (ஸெளஷிர்)


1.B. வைஸ்ரஸிக, இயற்கை (natural) ஒலி; இடி, நெருப்பு, வானவில் முதலியவற்றிலிருந்து  வெளிப்படும் ஒலிகள்.

அடுத்து பந்தம்:  வைஸ்ரஸிக, பிரயோகி என இருவகையாகும்.

வைஸ்ரஸிக (natural) பந்தம்: மனிதர்களுடைய முயற்சி இன்றி இயற்கையாகவே சேர்தல் அதாவது மின்னல், வானவில் முதலானவைகளுள் அணுக்கள் சேர்ந்திருப்பது போல  ஆகும்.

பிரயோகி (contrived) பந்தம்: மனித முயற்சியால் ஏற்படுவதில் இருவகை உள்ளது.

(1) உயிர் பந்தம்: மரம் முதலியவற்றை பிசின்,  மெழுகு போன்றவற்றால் ஒன்றாக சேர்த்தல்

(2) உயிர், உயிரல்லாத பந்தம்: கர்மம், நோகர்மம் இவை உயிருடன்  சேர்தல்.


நுண்மை:
அந்த்யம் (fineness); சூக்ஷ்மமானது, பிரிக்கமுடியாத பரமாணுக்களால் காணப்படுவது.

ஆபேஷிகம் (relative); சூக்ஷ்மமானது ஒன்றைக்காட்டி ஒன்று சிறிய தென்பது. நெல்லிக்காயை விட விளாங்காய் பெரியது  என்பது போல.

பருமை: (grossness) இதிலும் அந்த்யம், அபேஷிகம் என இரு பிரிவுகள் உள்ளன.

உருவம்: (shape) இதிலும் அந்த்யம், அபேஷிகம் என்ற பேதங்கள் உள்ளன.

பேதம்: (division/separation) பிரிவு, பிளத்தல் என அறுவகை உள்ளன.
 பிளத்தல்: மரம் முதலிவற்றை பிரிவுபடல்

 அரைத்தல்:  அரிசி, கோதுமை யை மாவு/குரூணையாக்குதல்

 உடைத்தல்: பானை முதலான வற்றை துண்டு துண்டாக்குதல்

 சூர்ணிகம்: துவரை, உளுந்து முதலியவற்றை பருப்பாக உடைத்தல்

 நீங்குதல்: ப்ரதரம்,  மேக படலம்  நீங்குதல்

 கிளம்புதல்: பழுக்க காய்ச்சிய இரும்பை சம்மட்டியால் அடிக்கும் போது பொறி கிளம்புதல்

இருள்: தமம், வெளிச்சத்திற்கு எதிரானது.

சாயா: நிழல், பகலில் மரத்தின் கீழே காணப்படுவது.

ஆதபம்: உஷ்ணமான சூரிய  ஒளி

உத்யோதம்: குளிர்ந்த நிலவோளி

மேற்கூறிய அனைத்தும் புற்கல மாறுகைகள்  ஆகும்.
-----------

மேலும் புற்கலம் பற்றி…..

--------------- 


புற்கலத்தின் முக்கிய பிரிவுகள்



அணவ: ஸ்கந்தாச்ச - (சூ25) = (192)


अणवः स्कन्धाश्च


Anavahskandhasca



அணவ: - அணு; ச – மற்றும்; ஸ்கந்தாச்ச – ஸ்கந்தமாக இருக்கின்றன.

அணு – மேலும் பிரிக்க முடியாதது ; 
ஸ்கந்தம் – 2 அணு முதலான சேர்ந்த பிண்டம், பரமாணுக்களின் தொகுதி

The elementary particle and the stock (a number of elementary particles under one unified identity) are the two main divisons of matter.  


அணு ஒரு பிரதேசத்தை (space point) மட்டும் உடையதாகவும் எல்லாவற்றையும் விட சிறியதாகவும் இருக்கிறது.

முதல்-நடு-இறுதி (பகுதி) எனப் பகுத்துக் கூற முடியாதது அது பரமாணு என்பதாகும்.

எந்தப் பொறியினாலும் அறிய முடியாது.

எல்லாக் ஸ்கந்தங்களுக்கும் மூலகாரணமாக, பிரிக்க முடியாத, நுண்ணிய தானது.

பரமாணுக்கள் சேர்ந்த தொகுதி ஸ்கந்தத்தினை (molecule, in gross stat) கையினால் எடுக்க, வைக்க முடியும்.

புத்கலம் எண்ணிலடங்கா வகையில் இருந்தாலும் அணு, ஸ்கந்தம் என இரு பெரிய பிரிவுகளாக பகுக்கப்பட்டுள்ளது.

அணுக்கள் ஸ்பரிசம்,  சுவை, மணம் மற்றும் நிறம் உடையவை.

ஸ்கந்தங்கள் ஒலி, பந்தம், நுண்மை, பருமை, உருவம், பிரித்தல், இருள், நிழல், ஆதபம் (வெஞ்சுடர்), உத்யோதம் (தண்கதிர்) ஆகியவற்றுடன் அணுக்களின் பண்புகளையும் கொண்டுள்ளது.
----------------

ஸ்கந்தத்தின் தோற்றத்திற்கான காரணங்கள்…..

--------------

ஸ்கந்த உற்பத்தி




பேதஸங்காதேப்ய உத்பத்யந்தே - (சூ26) = (193)


भेदसंघातेभ्य उत्पद्यन्ते


Bhedasanghatebhyautpadyante



பேத-ஸங்கா-தேப்ய – பேதம், ஸங்காதம், பேதஸங்காதம்;  உத்பத்யந்தே – இவற்றால் உற்பத்தி யாகும்.

The stocks are formed by division (fission), union (fusion) and division-cum-union.

  

அணுக்கள் பிரிதல், இணைதல், பிரிதலும்  இணைதலும் ஆகிய இவற்றால்  ஸ்கந்தங்கள்  உண்டாகின்றன.

இரண்டு வெவ்வேறு பரமாணுக்கள் சேர்வதால் ஒரு ஸ்கந்தம் உருவாகிறது. ( ஹட்ரஜன்  (2) + ஆக்ஸிஜன் (1) = H2O (molecule) , தண்ணீராகிறது.

அதுபோல் 50 பரமாணுக்கள் உள்ள ஒரு ஸ்கந்தத்தில், 10 விலகினால் இரண்டு 10,40 என இரண்டு ஸ்கந்தமாக பிரிகிறது.

அந்த 40 உடன் 15 பரமாணுக்கள் சேர்ந்தால் 55 பரமாணுள்ள ஒரு  ஸ்கந்தமாகிறது.

இது போலவே சங்க்யாதம் (numerable), ஆஸங்கியாதம் ( innumerable), அனந்த (infinite)  மடங்குள்ள ஸ்கந்தங்கள் அனந்த பிரதேசங்களுடன்  தோன்றுகின்றன.

இது போல பிரிப்பதால் இரண்டு அணுக்கள் கொண்ட மிகச் சிறிய ஸ்கந்தமாக தோன்றும்.
-----------
By the process of splitting and union (fusion) in the same instant, molecules of two atoms and so on are formed. 

Theயy are produced by fusion from some (molecules) and fusion  with others (atoms or molecules).

Thus the formation of molecules is described
---------------

அணுவின் தோற்றம் பற்றி காண்போம்….

------------- 


ஸ்கந்த உற்பத்தி





பேதாதணு: - (சூ27) = (194)


भेदादुणुः


Bhedadanuh



பேதாத் – பேதத்தால் உற்பத்தியாகிறது; அணு: - பரமாணு

The elementary particle is produced only by divison (fission)of stock.  



ஸ்கந்தங்கள் மேன்மேலும் பிரிவடைவதால் அணுக்கள் உண்டாகின்றன.

அதாவது கடைசியாக பிரிக்கமுடியாத நிலையில் உற்பத்தியாவது பரமாணு ஆகும்.

மேலும் அணுவானது பிரிவுறுதலால்  மட்டுமே உற்பத்தியாகிறதே தவிர சேர்க்கையினாலோ அல்லது ஒரே நேரத்தில்  நிகழும் சேர்க்கை பிரிதல் நிகழ்ச்சியினால் அன்று.
-----------

கண்களால் அறிந்து கொள்ள கூடிய ஸ்கந்தம் எவ்வாறு உற்பத்தியாகிறது…..


-------------------- 


புலப்படும் ஸ்கந்தங்கள் 


பேதஸங்காதாப்யாம் சாக்ஷுஷ: - (சூ28) = (195)

भेदसंघाताभ्यां चाक्षुषः

Bhedasanghatabhyamchakshushah



பேதஸங்காதாப்யாம் - பேதம் அல்லது ஸங்காதத்தால் ; சாக்ஷுஷ: - கண்ணுக்கு தெரியும். (பார்க்க முடியும்)

The stock produced by the combined action of division (fission) and union (fusion) can be perceived by the eyes.  


அணுக்கூட்டதில் சில பிரிவதாலும், தனியாக உள்ள  சில அணுக்கள் சேர்வதாலும் உண்டாகும்  ஸ்கந்தமானது கண்களுக்கு  புலப்படுகிறது.

அனந்தானந்த(infinite) பரமாணுக்களைக் கொண்டதாக ஸ்கந்தங்கள் இருந்தாலும்;

நுட்பமான அளவுள்ள  ஒரு ஸ்கந்தம் பிரிகிற போழ்து அதனுடைய நுட்பத்தன்மையை விடுவதில்லையாயின் கண்களுக்கு புலப்படுவதில்லை.

அதே  ஸ்கந்தம் பிரிந்து மற்றொன்றுடன் சேரும் போது  கண்களுக்கு புலப்படுகின்றன. (அதாவது நுட்பத்தன்மையை இழந்து பருமைத்தன்மையை அடைகிறது)

--------------
புத்கல ஸ்கந்தமான ஹைட்ரஜன்; ஆக்ஸிஜன் கண்களுக்கு தெரிவதில்லை. ஆனால் இரண்டும்  சேர்ந்து தண்ணீர் ஆனபோது கண்ணுக்கு தெரிகிறது. (ஸங்காதம், கூடுதல்)

ஒரு பாத்திரத்தில் நிர் வழியவழிய இருக்கிறது தெரிவதில்லை. சற்று குறைத்தால்  தெரியவருகிறது ( பேதம், பிரிதல்)
---------
Marsh gas treated with chlorine gives methyl chloride and hydrochloric acid.

The formula is CH2+cl2 = CH2cl+Hcl

(Both division and union occurs)
-----------------

மெய்ப்பொருட்களின்  பொதுவான இயல்புகள் பற்றிக் காண்போம்…..

-----------

 திரவிய லக்ஷணம்




ஸத் த்ரவ்யலக்ஷணம் - (சூ29) = (196)


सद्द्रव्यलक्षणम्


Sat dravyalakshanam



ஸத் – நிலைத்திருத்தல்;  த்ரவ்யலக்ஷணம் – திரவியத்தின் இயல்பாகும்.

To exist and to remain in existence is the characteristic of the substance.


எது நிலைத்திருக்கிறதோ அது  திரவியம் எனப்படும். அஸ்தித்வம் உள்ளது.

------------
ஸத் - அதாவது தோன்றுதல், அழிதல், நிலைத்திருத்தல் ஆகியவைகள் கூடியது.



விரிவாக  அடுத்து காண்போம்.

--------------------


ஸத்தாவின் இயல்பு



உத்பாதவ்யயத்ரெளவ்யயுக்தம் ஸத் - (சூ30) = (197)


उत्पादव्ययध्रौव्युक्तं सत्


Utpada-vyaya-dhrauvya-yuktam sat




உத்பாதவ்யயத்ரெளவ்யயுக்தம்உத்பாதம்வ்யயம், த்ரெளவ்யம் கூடியது; ஸத்



Existence of a substance is characterized by origination (production), disappearance (destruction) and permanence.  


உத்பாதம்உற்பத்தியாதல்தோன்றுதல்
வ்யயம்அழிதல்,
த்ரெளவ்யம்நிலைத்து  இருத்தல்

இம்மூன்று தன்மைகளை உடையது ஸத்தாவாகும் (existence).

பொருள் தன் இயல்பினை துறக்காமலேயே புதிய பரியாயம் (மாறுகை) அடைவதை உத்பாதம் என்பர்.

முன் பரியாயத்தினை துறப்பது வ்யயம்.

தொடக்கமற்ற காலமாக மாறிக் கொண்டிருக்கும் இயல்பினை ஒன்றுக்கொன்று தொடர்புடன் நிலைத்து இருப்பதை த்ரெளவ்யம் (நிலைத்தல்) என்பர்.

மண் உருண்டை குடமாக (பானை) மாறுதல், மனிதப்  பரியாயம்  போய் தேவ பரியாயம் ஆவது. போன்றவை உத்பாதம்.


முன்பு இருந்த மண் உருண்டை அழிவது, மனித கதி  அழிவது போன்றவை வ்யயம் (அழிதல்) எனப்படுகிறது.


மண் உருண்டையாக இருந்த போதும், குடமாக ஆனபோதும், உடைந்து சில்லாக மாறினாலும் மண் என்ற பொருள் நிலைத்திருப்பதும், மனித, தேவ கதியில் அதே ஜீவன் இருப்பது போன்றவை த்ரெளவ்யம் எனப்படும்.

உத்பாதம், வ்யயம் இருண்டுமே இருவகைப்படும்.

ஸ்வநிமித்தம்: அடிப்படை வஸ்துவின் பண்புகளில் உண்டாகும் மாறுதல் காரணமாக ஏற்படுவது. இது கால திரவியத்தினால் ஏற்படுவது.

பரநிமித்தம்: இது தர்மம், அதர்மம், ஆகாயம் மற்றும் காலம் இவற்றால் ஏற்படுவது.

--------
திரெளய்ய திருஷ்டி உடையவருக்கு ராக, துவேஷ இல்லா சமமான பார்வை இருக்கும்.

தகப்பனுடைய ஒரு மகனுக்கு மாலை விருப்பம், மற்றவனுக்கு குடம் விருப்பம். தங்க மாலையை அழித்து, குடம் செய்யப்படுகிறது. ஒருவன் அழுகிறான்மற்றவன் மகிழ்கிறான். ஆனால் தகப்பன் தங்கத்தை  மற்றும்  பார்க்கிறார்.

ஞானி விரதம், தபம், சல்லேகனை எல்லாம் ஏற்கிறார். மரணம் பற்றிக் கவலையில்லை. (மற்றவர்கள் மரணம் பற்றி கவலை  கொள்கின்றனர்.) எந்த  கதி போனால் என்ன ஜீவன் அழிவதில்லை என்ற நிலையில் உள்ளார்.

ஏனென்றால் அவருக்கு ராக, துவேஷம் இல்லா நிலை.
--------------
சரி  நித்யம் என்றால்  என்ன? ..



-----------

நித்யத்தின் இலக்கணம்.



தத்பாவாவ்யயம் நித்யம் – (சூ31) = (198)


तदभावाव्ययं नित्यम्


Tadbhavavyayamnityam



தத்பாவாவ்யயம் – வஸ்து பாவம்(தன்மை) அழியாது  இருத்தல்;  நித்யம் – நீங்காதிருத்தல்.

Permanence is indestructi-bility of the essential nature (quality) of the substance.  



த்பாபாவ்யம் – திரவியத்தின் குணம்/பண்பு (bhavam)/ அடிப்படைத்தன்மை (அழியாது இருத்தல்) நித்யம் (permanence) - நிலைபெறாய் இருத்தல்

ஜீவனது தன்மைகளாகிற ஞான, தரிசனம்; புற்கலத்தின் தன்மைகளாகிய நிறம், சுவை,வாசனை, தொடு உணர்வு ஆகியவைகள் எக்காலத்திலும் எவ்வித மாறுதல்களிலும் நீங்காதிருத்தல்  என்பது நித்யமாகும்.

எது  நினைவு கூறுவதற்கு காரணமாக இருக்கிறதோ அது தத்பாவம் எனப்படுகிறது.

முன்னர் ஒரு பொருள் குணம்/ பண்புகளின் அடிப்படையில் பார்க்கப்பட்டதோ பின்னர் ஒரு சமயம் அதே பொருள் பார்க்கும் போது அதன் குணம் அடிப்படையில் இது அதுவே என நினைவு கூறுதல் தத்பாவ் எனப்படுகிறது (பிரதிபிஞ்ஞானம்)

-----------
நித்யத்தன்மை  பொருளில் இயல்பாக காணப்படுவது திரவிய அபேக்ஷை எனப்படும்.

அதே பொருள் மாறுகையில் உண்டாகும் புதியதை வேறு வகையானதோ என்றும் கூறுகிறோம். அது பர்யாய அபேக்ஷை எனப்படும்.

எனவே ஒரு வகையில் (குணம், பண்பில்) நித்யமாகவும் , வேறோரு வகையில் அநித்யமாகவும் காணப்படுகிறது.

எப்பொழுதும் நித்யம் என்று கொண்டு விட்டால் உலகில் மாறுகையே இல்லாமலே  போய் விடும்.

ஒரு ஆன்மா கதிகள் மாறி மாறி முக்தி அடைவது ஒருவகையில் (குணத்தில்) நித்யம் வேறொருவகையில் (மாறுகையில்) அநித்யம்.

---------------

நித்யமும் ,அநித்யமும் சேர்ந்திருப்பது  முரணில்லை என்பதை அடுத்து …….

------------------ 

நித்யமும்,  அநித்யமும் ஒரே பொருளில்



அர்பிதானர்பிதஸித்தே: – (சூ32) = (199)


अर्पितानर्पितसिद्धेः


Arpitanarpitasiddheh



அர்பித – சொல்லுதல்; அனர்பித – சொல்லாமல் விடுதல்; ஸித்தே: (என இருப்பதால்) தெளிவாகிறது.

The contradictory characteristics of a substance are established from different points of view.  



தேவையின் அடிப்படையில் பொருளின் பல பண்புகளில் ஏதேனும்  ஒன்றை மட்டும் எடுத்துக் கூறல் அர்பிதம் அல்லது உபநீதம்;

மற்றும் தேவையில்லாத பிற பண்புகளைப் பற்றிக்  கூறாது இருத்தல்  அனர்பிதம்;

ஆகிய இரண்டும் ஒரு பொருளில்  இருத்தலே நித்யமும் அநித்யமுமாகும்.

இப்போது மனிதனாக இருக்கும் ஒருவர் முன்னே நரகத்தில் இருந்தார் எனில்;
தற்போது  மனிதனாக இருக்கிறார் என சொல்கிறோம். முன் பரியாயம்  முக்கியமில்லாததால் சொல்லாமல் விடுகிறோம்.

தன் தந்தை நோக்கில் பையன்; மனைவி நோக்கில் கணவன்; பையன் என்று சொல்லும் போது  கணவன் சொல்லப்படாமல் விடப்படுகிறது.

---------------
பொருளின் பொது  சிறப்பு என்கின்ற பிரிவு கிடையாது. ஆனால் பொருளின் இயல்பை தன்மையினை விளங்கிக் கொள்ள பொதுப் பண்புகள், சிறப்புப் பண்புகள் என  பிரிந்து பிரித்துக் கூறப்படுகிறது.

காணப்படும் பொதுப் பண்புகளை நித்யம் என்றும், மாறுகின்ற பண்புகளை அநித்யம் என்றும் கூறப்படுகிறது.
----------
அடுத்து  அசாதாரணமான நிகழ்வுகளைப் பற்றி காண்போம்….

-------------------- 




அணுக்கள் சேரும் விதி




ஸ்நிக்த ரூக்ஷத்வாத் பந்த – (சூ33 ) = (200)


स्निग्धरुक्षत्वाद् बन्धः


Snigdha-rukshatvadbandhah



ஸ்நிக்த ரூக்ஷத்வாத் – வழவழப்பான/ஒட்டக்கூடிய, சொரசொரப்பான/ பசையற்ற;  பந்த – (பரமாணு ஒன்றுடன் ஒன்று) சேர்தல்

Combination of elementary particles of matter takes place by virtue of greasy (sticky) and dry (roughy) properties associated with them.  


ஸ்நிக்தம் – ஒட்டும் தன்மை; வெண்ணெய், நெய் முதலான பசைத்தன்மை போன்ற (sticky)
ரூக்ஷம் – வறட்சித்தன்மை; மண்,கல் முதலான பசையற்றது போன்ற (rough)

பந்தம் – உதிரியாக உள்ள பொருட்கள் ஒன்று சேர்வது  ஆகும்.

வழவழப்பு மற்றும் சொரசொரப்பு தன்மை ஆகிய இரண்டும் பொருட்கள் ஒன்று சேர்வதற்கு காரணமாகின்றன.

அவ்வாறு இரண்டு வகை ஒன்று சேரும் போது இரண்டு பரமாணுக்களை கொண்ட ஸ்கந்தம் உருவாகிறது.

அதுபோல ஸ்னிக்த குணத்தில் ஒன்று, இரண்டு, என… சங்க்யாதம், ஆஸங்க்யாதம்,  அனந்த வேறுபாடுகள் உள்ளன.

இதுபோலவே வறட்சி குணத்திற்கும் பொருந்தும்.

நீர், வெள்ளாட்டுப்பால், பசும்பால், ஒட்டகப்பால், நெய் முதலியவற்றில் வழவழப்புத் தன்மை வெவ்வேறு அளவுகளில் (various degrees) இருக்கின்றது.
தூசி, ஒரு தானிய மணி அளவு உள்ள தூசி, மணல் போன்றவற்றில் வறட்சித்தன்மையும் வெவ்வேறு அளவில் உள்ளது.

இந்த இருதன்மைகளை ஒருங்கே கொண்ட பரமாணுக்களும் உள்ளன.
----------
இப்படி பந்தம் ஏற்படுவதில் சில விதிவிலக்குகளும் உள்ளது….


------------- 



ந ஜகண்ய  குணாநாம் – (சூ34) = (201)


न जघन्यगुणानाम्


Na jaghanyagunanam



ந  - பந்தம் ஆவதில்லை: ஜகண்ய  குணாநாம் – மிகக் குறைந்த சக்தியுள்ள பரமாணுக்கள்.


There is no combination between the elementary particles hving only the lowest degree of these two properties with the other elementary particles.  


எது குறைந்த குணம்/சக்தி யுள்ளதாக, வழவழப்புத்தன்மை, வறட்சித்தன்மையாக இருக்கிறதோ அவற்றில் பந்தம் ஆவதில்லை.

அவ்வாறு உள்ள பரமாணு ஒன்று, இரண்டு,…  ஸங்க்யாதம், அஸங்கியாதம், அனந்த குணமுள்ள வழவழப்பு, வறட்சியான பரமாணுக்களுடன் (பரஸ்பரம்) பந்தம் ஏற்படுவதில்லை.
----------

மேலும்  பந்தம் ஆகாதவைகள் பற்றி…..

----------- 




அணுக்கள் பந்தமாகாதது பற்றி



குணஸாம்யே ஸத்ருசானாம் – (சூ35) = (202)


गुणसाम्ये सदृशानाम्


Gunasamyesadrsanam



குணஸாம்யே – ஸ்னிக்த மற்றும் ரூக்ஷ குணங்கள் சமமான நிலையில் : ஸத்ருசானாம் – ஒத்த பரமாணுக்கள் பந்த மாவதில்லை.

There is no combination between equal degrees of the same property


குணங்கள் அல்லது பண்புகள் அல்லது ஆற்றல்கள் சம அளவு இருப்பினும், ஓர் இன அணுக்களிடையே பந்தமாவதில்லை.

ஒன்று/இரண்டு குணமுள்ள பரமாணுக்கள் வழவழப்பானவை/சொரசொரப்பானவை அதே அளவுள்ள, ஒன்று/இரண்டு, அதனதன் இனத்துடன் சேர்வதில்லை

(ஒரே இன அல்லது  இதற்கு எதிரான பரமாணுக்களின் இடையே வழவழப்புத் தன்மை மற்றும் வறட்சி தன்மையில் வேறுபாடுகள் இருந்தாலும், சம அளவு குணம் அல்லது பண்பு அல்லது  ஆற்றல் உள்ள ஒரே வகையான அல்லது எதிரெதிர் பண்புகளை உடைய பரமாணுக்களுக்கிடையேயும் பந்தம் ஏற்படுகிறது.)
---------------
உலகில் கூட சமமானவர்கள் ஒன்றாக இருப்பதில்லை.

இரண்டு தீர்த்தங்கரர்கள் ஒன்றாக இருப்பதில்லை.

ஏனெனில் குணம் குறைவானவர், அதிகமானவருடன் சேர்வர்.
-------------
அடுத்து பந்தமாவது பற்றி மேலும்…..


--------------- 


அணுக்கள் பந்தம் பற்றி



த்வியதிகாகுணாநாம் து  -   (சூ36) = (203)


द्वयाधिकादिगुणानां तु


Dvyadhikadigunanamtu



த்வயதிகாதிகுணாநாம் – இரண்டு அதிகம் முதலான குணமுடைய பரமாணுக்கள் பந்தமாகும்;  து - ஆனால்

But there is combination between the elementary particles having different degrees of properties.  



ஒன்றை விட மற்றொன்றின் பரமாணுக்கள் இரண்டு அளவுகள் மேல்  இருந்தால் பந்தம் ஆகும். (  த்வயதிக, இரண்டு அலகு அதிகம், increase by two units)

சம ஆற்றல்/குண அளவுள்ள அல்லது சம அளவில்லாத பரமாணுக்களாயிருந்தாலும் சரி, ஒன்றைக் காட்டிலும் மற்றொன்றில் இரு  அலகு ஆற்றல் அல்லது  பண்பு அல்லது குணம் அதிகம் இருக்க வேண்டும்.

2 குணம் உள்ள அணு நாலு குணங்களுடன் சேரும்;  3 அல்லது ஐந்து குணமுடைய அணுக்களுடன் ஒன்று சேராது.

7, 9 உடன் பந்தம் ஆகும்; 8 ,10 உடன் பந்தம் ஆகாது
--------------
குணம் என்பது ஆற்றலின் கூறு

ஜகன்ய சக்தியுள்ள பரமாணுக்கள் தவிர,  எங்கெங்கு இரண்டு அலகு குணங்கள் அதிகமாக ‘வழவழப்பானவை, வறட்சியானவை இருக்கின்றதோ;

அங்கு சம அளவு,சம அளவு இல்லாத குணங்களுடன் கூடியவைகளுடன் அதாவது வழவழப்புத் தன்மை வழவழப்புத் தன்மையுடனும்; வறட்சி, வறட்சித்தன்மையுடனும்;

மற்றும் வழவழப்பு, வறட்சித்தன்மையுடனும் பந்தம் ஏற்படுகிறது.
-------------

பந்தம் ஏற்படுவதற்கும்,  ஏற்படாததற்கான பதிலை அடுத்து காண்போம்….

-------------- 


பந்தம் உண்டாகும்  விதம்



பந்தேSதிகெள பாரிணாமிகெள ச  - (சூ37) = (204)


बन्धेऽधिकौ पारिणामिकौ च


Bandhe(a)dhikauparinamikau cha



பந்தேSதிகெள – பந்தத்தில், அதிக குணமுடைய  பரமாணு; பாரிணாமிகெள – மாற்றிக் கொள்கிறது;  ச – மேலும்.

In the process of combination the higher degrees transform the lower ones.  


பந்தமாகும் போது அதிக சக்தியுள்ளவை குறைந்த சக்தியுள்ளவற்றை தன்னுடையதாக மாற்றிக் கொள்ளும்.

அதிக சக்தியுள்ள பரமாணுவுடன் குறைந்த சக்தியுள்ள பரமாணு சேர்ந்தால் அதிக சக்தியுள்ள பரமாணுவும் மாறிவிடும்.

-------------
வெல்லப்பாகு தன்னுடன் சேர்ந்த பிறவகைத் தூள்களை இனிப்பாக்குவதைப் போல

10 லிட்டர் பாலில் ஒரு கரண்டி தயிர் சேர்த்தால் பால் தயிராகி விடுவது போன்று
---------
வழவழப்பு/ வறட்சி குணங்கள் ஜகன்ய (குறைந்த) ஆற்றல் உடைய பரமாணுக்களாக எவை  இருக்கின்றனவோ அவை புற்கல பரமாணுக்களுடன்  பந்தமாவதில்லை.

சம அளவுள்ள ஆற்றல்களை ஒரே இன பரமாணுக்களுடன் பந்தமாவதில்லை.

இரண்டு அலகு குணங்கள் அதிகம் உடைய புற்கல பரமாணு முதலியனவே இரண்டு அலகு குணங்களுக்குக் குறைவான குணங்களையுடையவை புற்கல பரமாணுக்கள் முதலியவற்றுடன்  பந்தம் ஆகிறது.

அதாவது வழவழப்பு அதே குணத்துடனும், வறட்சி குணமுள்ளவை அதே இனத்துடனும், வழவழப்பு வறட்சி குணமுடைய பரமாணுக்களுடன் பந்தமாகின்றன.
---------------

அடுத்து மற்ற விதங்களில் பொருளின் இலக்கனம் கூறப்படுகிறது.

--------------- 


பொருள்களின் இலக்கணம்



குணபர்யயவத்த்ரவ்யம்  - (சூ38) = (205)


गुणपर्ययवत् द्रव्यम्


Gunaparyayavaddravyam



குணபர்யயவத்  - குணமும் பர்யாயம் உடையது; த்ரவ்யம் – திரவிய(ம்)

That which has qualities and modes is a substance.  


எது குணமும், மாறுகையும் கொண்டுள்ளதோ அது திரவியமாகும் (பொருளாகும்).

--------------
ஒரு பொருளுடன் எந்த பண்புகள் எப்பொழுதும் தொடர்ந்து இணைந்து இருக்கின்றனவோ அவை குணங்கள் (characteristics) ஆகும்.

ஒரு பொருள் மற்றொரு பொருளினின்று தனியானதாக எது காட்டுகிறதோ அது குணமாகும். (நிலைப்புத்தன்மை, அஸ்தித்வம்)
-------------
எந்த பண்புகள் தொடர்ந்து இணைந்திருக்காமல் மாறிக் கொண்டிருக்கின்றனவோ அவை பரியாயங்கள் ஆகும் (modes)  .

குணங்களுடைய மாறுகைகள் பிரிக்கக் கூடியவைகளாக இருப்பதால் அவை பரியாயங்கள் எனப்படும்.
----------
பிரித்து பார்ப்பதனை குணம் என்றும், மாறுகையைப் பரியாயம் என்றும்; இவ்விரண்டும்  பொருளில் பிரிக்க முடியாத தொடர்பு உடையதாயும், நிலைத்து இருக்கக்கூடியதாயும் (permanent) கூறப்படுகிறது.

அறிவு முதலான குணங்கள் எப்பொழுதும் உயிர்களிடத்திலேயும்,
உருவம், நிறம் முதலியவை புற்கலங்களிடத்தேயும் இணைத்து உள்ளன.

------------
நீரோட்டம் எவ்விதம் ஒரே உருத் தன்மையுடயதாக இருக்கிறதோ அது போன்றது குணம்.
அதனில் அவ்வப்போது கலந்திடும் புதிய நீருடன் ஓடிக் கொண்டே இருப்பது போன்றது மாறுகைகள்.
-------------

அடுத்து காலம் பற்றிக் காண்போம்….

-------------- 

காலத்திரவியம் பற்றி




காலச்ச  -  (சூ39) = (206)


कालश्च


Kalashcha



காலச்ச – காலமும் ஒரு திரவியமாகும்.

Time also is a substance.  


கால திரவியத்தில் உத்பாதம் (உற்பத்தி), வ்யயம் (அழிவு), த்ரெளவ்ய (நிலைப்பு) போன்ற குணங்கள், பர்யாயம் ஆகியவை உள்ளன.

லோகாகாசத்தில் எத்தனை பிரதேசங்கள் உள்ளனவோ, அத்தனை காலாணுக்கள் இயக்கமற்றவைகளாக, நிலையாக இருக்கின்றன.

காலாணுக்கள் உருவம், நிறம், முதலான குணங்களின்றி இருக்கின்ற படியால் அமூர்த்தமாக இருக்கிறது.

ஒவ்வொரு பொருளின் மாறுகையிலிருந்து கால திரவியத்தின் அஸ்தித்வத்தின் அஸ்தித்வம் விளக்கப்படுகிறது.

----------------
பொருள்களின் மாறுதலுக்கு காரண பூதமாக இருப்பது நிச்சய காலம் (real time) ஆகும்.


அம்மாறுகை மூலமாக அறிய வேண்டிய வியவகார (conventional) காலத்தினுடைய அளவைப் பற்றிக் காண்போம்….

--------------- 


நிச்சய மற்றும் வியவஹார காலம்



ஸோSனந்தஸமய:  - (சூ40) = (207)


सोऽनन्तसमयः


So(a)nantasamayah



ஸ – அந்த காலத்திரவ்யம்; அனந்தஸமய – அநந்த சமயங்களை உடையது.

It (conventional time) consists of infinite instants. One instant is the time taken by a slow moving elementary particle of matter to move from one space point to the adjacent space point
 

கால திரவியம் நிகழ்காலத்தில் ஒரு சமயம் உளதாயினும், சென்ற சமயங்கள், வரும் சமயங்கள் ஆகியவற்றை அனுசரித்து அனந்த சமயம் உளதென்று கூறப்பட்டது.

சமயம் என்ற சொல் திரவியம் மற்றும் பரியாயம் என இரண்டு அர்த்தங்களில் சொல்லப்படுகிறது.

பரியாய வடிவ அர்த்தத்தில் வியவஹார காலம் மற்றும் நிச்சய காலம் என இரண்டு காலம் உள்ளது.

சமயம் என்பது மிகக் குறைவான காலம்.

மந்தமாகச் செல்லும் ஒரு பரமாணுவானது ஆகாச திரவியத்தின் ஒரு பிரதேசத்திலிருந்து மற்றொரு பிரதேசத்தை அடைவதற்கு எவ்வளவு நேரமோ அது ---சமயம் ஆகும்.
-----------
நூறு தாமரை இலைகளை ஒன்றாக அடுக்கி ஊசியினால் தைத்தால் ஒரு இலையிலிருந்து அடுத்த இலைக்குச் செல்ல ஆகும் நேரம் ஒரு சமயம்.
------------
சமயம், ஆவலி, நாழிகை, முகூர்த்தம் போன்றவை வியவகார கால அளவுகள்.

வியவகார காலம் என்பது நிச்சயகாலத்தின்  பர்யாயம் ஆகும்.

நிச்சய காலத் திரவியம் லோகாகாசத்தில் ஒவ்வொரு பிரதேசத்திலும் ரத்னக் குவியல் போன்று தனித்தனியாக இருக்கும். பரதேசி மற்றும் உருவமற்றதாகும்.

சமய பர்யாயம் இல்லாமல் மற்ற திரவியங்கள் அனைத்திலும் பர்யாயங்கள் ஏற்பட முடியாது.

நிச்சய காலம் அச்சு (axle) மாதிரி உள்ளது, வியவஹார காலம் சக்கரம் (wheel) போன்று உள்ளது.
----------

அப்படியானால் கால திரவியத்தின் குணம் என்ன?

-------------- 

விசேஷ குணம்



த்ரவ்யாச்ரயா: நிர்குணா: குணா:  -  (சூ41) = (208)


द्रव्यश्रया निर्गुणा गुणाः


Dravyashrayanirgunagunah



த்ரவ்யாச்ரயா – திரவியத்தை சார்ந்திருப்பது;  நிர்குணா: - வேறு குணம் இல்லாமல் இருப்பது; குணா: - குணமாகும்.


Those, which have substance as their substratum and which are not themselves the substratum of other attributes, are qualities.  


எது திரவியத்துடன் சேர்ந்தும், மேலும் வேறு குணமில்லாமலும், அதனை விட்டு பிரிக்க இயலாதோ அது குணம் ஆகும்.

வேறு குணம் இல்லாமல் இருப்பது நிர்குணா:

திரவியம் ஆதாரமாக இருக்கிறது, குணம் ஆதேயமாக அதில் இருக்கிறது.

இரண்டும் தனியாக பிரிக்க முடியாததாக இருக்கிறது.

ஒரு வஸ்துவில் ஒரு சமயத்தில் பல பண்புகள் இருக்கலாம். ஆனால் ஒரு பண்புக்கு வேறு பண்பு இருக்க முடியாது.

ஒரு  குணத்தில் மற்றொரு குண  விசேஷம்  இருக்காது.

ஏதாவது ஒரு காரணத்திற்காக ஒரு திரவியம் மற்ற திரவியங்களிலிருந்து மாறுபட்டு இருந்தால் அவை விசேஷம் அதாவது சிறப்பு குணங்களாகும்.

எவை ஒன்றுக்கு அதிகமான திரவியங்களில் இருக்கின்றனவோ அவை சாமான்ய  குணங்கள் ஆகும்.

எவை ஒவ்வொரு பொருளின் குண சிறப்புத்தன்மையினை எடுத்துக் கூறுகிறதோ அது  விசேஷ குணம் ஆகும்.

------------

பரிணாமம் பற்றி அடுத்து  காண்போம்…..

-------------- 


பரிணாமம்



தத்பாவ: பரிணாம:  -  (சூ42) = (209)


तद्भावः परिणामः


Tadbhavahparinamah




தத்பாவ: - குணத்தினுடைய மாறுதலுக்கு;  பரிணாம: - பரியாயம் என்று பெயர்.

The condition of a substance is a mode.



திரவியங்கள் (ஜீவன் முதலியன) எந்தெந்த வகையான வேறு வேறு தன்மைகளை அடைகின்றனவோ, அந்த தன்மைகளில் இருப்பதற்கு பரிணாமம் (பர்யாயம்) எனப்பெயர்.

வஸ்துவின் பண்புகளின் குணமாறுபாடே பர்யாயம் (பரிணாமம்)  ஆகும்.

பரியாயங்கள் குணங்களைப் போல பொருள்(திரவியங்)களுடன் எப்போதும் சேர்ந்திருப்பதில்லை.

-----------
ஜீவனின் பர்யாயம் தேவ, மனித,  விலங்கு, நரக கதி முதலியன.
---------------
They have a beginning in soul.

Insentient matters undergo  only modal  transformations.

They have a beginning among Pudgals, but those taking place in Dharmastikay, Adharmastikay and Akashastikay are without beginning.

Transformations  among them have been taking place since the infinity.
--------------


இத்துடன் ஐந்தாவது அத்தியாயம் முற்றும்.


குறிப்பு: முதல் நான்கு அத்தியாயம் ஜீவனைப் பற்றியும், ஐந்தாவது அஜீவ தத்துவத்தைப் பற்றியும் கூறியது.

இவ்வைந்தின் மீதும் நம்பிக்கை வைத்தால் நற்காட்சி தோன்றும்.

----------------

மங்களாஷ்டகம்:


கோடி சதம் த்வாதஸம் சைவ கோட்யோ லக்ஷாண்யஷீதிஸ்த்ரயதிகாணி சைவ
பஞ்சாஸதஷ்டெள ச ஸஹஸ்ர ஸங்க்யாமேதத் ஸ்ருதம் பஞ்ச பதம் ணமாமி
 அரஹந்த ப்பாஸியத்தம் கணயர தேவேஹிம் கந்தியம் ஸவ்வம்
பணமாமி பக்தி ஜுத்தோ சுதணான மஹோவயம் ஸிரஸா

அக்ஷரமாத்ரபத ஸ்வரஹீனம் வயஞ்ஜன ஸந்தி விவர்ஜிதரேஃபம்
ஸாது பிரத்ர மம க்ஷமிதவ்யம் கோ ந விமுஹ்யதி ஸாஸ்த்ர ஸமுத்ரே

தஸாத்த்யாயே பரிச்சன்னே தத்த்வார்த்தே படிதே ஸதி ஃபலம் ஸ்யாதுபவாஸஸ்யப்பாஷிதம் முனிபுங்கவை:

ததத்வார்த்த ஸுத்ர கர்த்தாரம் க்ருத்த் பிச்சோபலக்ஷிதம்
வந்தே கணீந்த்ர ஸஞ்சாதமுமாஸ்வாமி முனீஸ்வரம்

ஜம் ஸக்கயி தம் கீரயி ஜம்ண ஸக்கயி தஹேவ ஸத்தஹணம்
ஸத்தஹணமாணோ ஜீவோ பாவயி அஜராமரம் ட்டாணம்

தவயரணம் வயதரணம் ஸஞ்சம சரணம் ச ஜீவதயாகரணம்

அந்தே ஸமாஹிமரணம் சஉவிஹ துக்கம் ணிவாரேஇ

-------------- 

No comments:

Post a Comment