Showing posts with label Aurangabad Dt. Show all posts
Showing posts with label Aurangabad Dt. Show all posts

Friday, September 29, 2017

PAiTHAN - பைத்தான்


SHRI MUNISUVRAT NATH BHAGWAN ATISHAYA KSHETRA

ஸ்ரீ முனுசூவ்ரத் பகவான் அதிசய க்ஷேத்திரம்.




It lies on the google map with coordination of (19.47259, 75.38432)




பைத்தான்.


நல்ல தங்குமிட வசதியுடன் கூடியது.

மிகப் புனிதமான , புராதனமான யாத்திரை ஸ்தலம்.

கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள இஜ்ஜிநாலயத்தின் மூலவராக  ஸ்ரீமூனுசூவிரத ஸ்வாமியை நிறுவியுள்ளனர்.

ஸ்ரீராமர் காலத்தின் மோட்ச ஸ்வாமியானதால் , அவரால் வணங்கப்பட்ட ஜினராவார்.

கி பி மூன்றாம் நூற்றாண்டில் பெரும் பஞ்சம் காரணமாக அந்திம சுருதகேவலி பத்ரபாகு முனிவர் தமது  12000 சீடர்களுடன், சந்திரகுப்த மாமன்னருடன் தாம் இருந்த இடமிருந்து வெளியேறி பைத்தான் நகருக்கு வந்து தங்கி இருந்ததாக வரலாறு கூறுகிறது.

பின்னர் விசாகாச்சாரியார் மற்றும் கல்காச்சார்யரும் விஜயம் செய்த ஸ்தலமாக கருதப்படுகிறது.








 அதிசய க்ஷேத்ரம்


முற்காலத்தில் வாழ்ந்த சிம்னா பண்டிதர் அமாவாசை திதியை தவறாக பெளர்ணமி என பிற மத பண்டிதர்களிடம் தவறாக கூறி விட்டார்.

பின்னர் தாம் செய்த தவறுக்கு வருந்தி, மூலவரிடம் மனமுருகி வேண்டியதால் யக்ஷியின் கருணையால்,  அன்று இரவு நிலவு உதயமானதாக கர்ண-பரம்பரைச்  செய்தியுள்ளது.

மேலும் இவ்வாலத்திலிருந்து நறுமணப்புகை யொன்று அடிக்கடி வந்து மணவீசுவதாகவும் கூறப்படுகிறது.

அதனால்  இச்க்ஷேத்ரம் அதிசய பூமியாக கருதப்படுகிறது. 








முதல் தளத்தில் அமைந்துள்ள இஜ்ஜிநாலயத்தில் மானஸ்தம்பமும், கண்ணாடி வேலைபாடுகள் கொண்ட சன்னதியும், பிரார்த்தனை கூடமும் அலங்கரிக்கின்றன.

மூலவர் முனுசூவ்ரதர் கருமை நிற மணற் கல்லால் 3 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளார். அப்புராதன ஜின பிரதிமையின் பின்புறம் அழகிய வேலைப்பாடுடைய வெண்-உலோக பல சிறப்புகளை வெளிக்கொணரும் தகட்டால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல ஜினர்களின்  பிரதிமைகளும் அலங்கரிக்கின்றன.

அப்பூமியை அகழாய்வு செய்த போது  கிடைத்த ஸ்ரீ ஆதிநாதர் சிலையும் இங்கு சன்னதியில் நிறுவப்பட்டுள்ளது.


----------------------












PAITHAN

This holy & ancient pilgrimage place is situated at Paithan, an old city.

 This Kshetra is situated at the beautiful bank of river Godavari. It is said that this Kshetra belongs to fourth era and the principal deity of this Kshetra is Bhagwan Munisuvrat Nath—the 20th Teerthankar contemporary to Bhagvan Ram.
According to sayings Shri Ram Chandraji worshiped this magnificent idol.
This is said that at the time of twelve years drought [in 3rd century], during the migration by Antim Shrut-Kevli Acharya Bhadrabahu with his scholar-the famous Mourya Emperor Chandra Gupta and 12000 monks, Acharya Bhadrabahu came here. Later on Vishakhaacharya and Kalkaacharya also visited Paithan.

Atishaya – So many stories are popular regarding miracles of this Kshetra. Some times fragranced fumes are seen coming out of the basement.

A story is very popular regarding miracles of this place.

During 17th century Shri Chimna Pandit- a scholar of Bhattarak Ajitkeerti lived here, he was a great poet of Marathi language.

Great hindu saint Shri Eknathji and a muslim saint were his friends. One day these three were discussing about spiritual maters, one of them asked to Chimna Pandit about date [tithi] of that day.

Chimna Pandit answered that it is the day of full moon [Poornima], both the friends laughed at this answer and told him that this is the day of Amaavasyaa [the day of moon less night].

But Pandit denied this fact again and again. At last they decided to confirm the truth at night. After some time Chimna Pandit recalled the fact and he felt in great sorrow, then he went to the temple direct and stayed before Bagvan Munisuvrat Nath’s idol for prayer, he engrossed himself in devotion.

At night all saw that the moon was shining in the sky of Paithan and closer area. This was the miracle of Paithan’s Bhagvan Munisuvrat Nath. 








Main Temple & Idol :

The principal deity in this ancient temple is Bhagvan Munisuvrat Nath’s idol in cross legged seating posture [padmasanasth], made of black sand stone. This ancient idol is magnificent and beautiful, inviting the visitors for meditation and to search peace and pleasure in their own self.


A Bhagvan Aadinath’s idol in seating posture also present here , that was recovered from earth. Art of this ancient idol is eye catching-worth seen.


************************************ 



On the last day We conduct a felicitation meet to honour

Shri Mr. JEEVAGAN, Spiritual tour organisor


















Our Bus drivers and Van driver with cook

Tuesday, September 26, 2017

Ellora 2 & 3 - எல்லோரா - இரு ஜினாலயங்கள்



எல்லோரா -  மேலும் இரு ஜினாலயங்கள்.


எல்லோரா குருகுல மந்திர்

Ellora Gurugul Mandir






The Kshetra has hostel for 200 student, hospital guest house and a beautiful Temple. A Digambar Jain Gurukul is performing nicely under motivation of Aacharya Shree Samantbhadra Maharaj and Aacharya Shree Aaryanandi Maharaj.













இவ்வூரில் மேலும் இரு ஜிநாலயங்கள் பாரிஸ்வரை மூல நாயகராக கொண்டவை. குருகுலம் ஒன்று பள்ளியாக மாற்றப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அவை ஆச்சார்ய்ய ஸ்ரீ சமந்தபத்ர மகராஜ் மற்றும் ஆச்சார்ய்ய ஸ்ரீ ஆர்யநந்தி மகாராஜ் அவர்களை நினைவு கூறும் முகமாக நடத்தப்படுகிறது.

******************

ஸ்ரீ பார்ஸ்வநாத அதிசய க்ஷேத்ரம்

Shri Parswanath Athisaya Kshetra.





Ellora – another two Jinalayas.



In the back of these caves at a distance of 1 km from here, there is a Parsvanath Temple on hill, in which a high colossus of Lord Parsvanath with nine serpent hoods. 16 feet in height & 9 feet in width in Ardh Padmasana (Semi sitting posture) is established. It has  600 staircases to reach the peak Jinalaya.


The hill area also called as Jinagiri.




























அந்த சாரநந்திரி மலை வரிசையில் குடவரைக் கோயிலுக்கு பின்புறத்தில் 600 படிகளைக் கொண்ட இரு குகை ஆலயங்கள் உள்ளன.

மேற்புறம் உள்ள குகை ஜிநாலயத்தில் 16 அடி உயரமும்,  9 அடி அகலமும் உள்ள பிரம்மாண்ட பார்ஸ்வநாதர் ஒன்பது தலை நாகம் படமெடுத்து குடை பிடிக்கும் கோபத்தில் மிக அழகாக, கண்கவர் வண்ண ஒளிமாறும் விளக்குடன் காட்சியளிக்கிறார்.

தேவ, தேவியரின்  புடைப்புச் சிற்பங்களும் இருபுறமும் உள்ளன.

ஜைன கிரி என்றும் அழைக்கின்றனர்.

--------------------