Showing posts with label KARNATAKA. Show all posts
Showing posts with label KARNATAKA. Show all posts

Sunday, December 29, 2019

GOMMATAGIRI - கோமட்டகிரி

Bhagawan Bahubali -  பகவான் பாகுபலி





Gommatagiri:


Gps coordinates is (12.37062, 76.48741)

Bettadur, Between Mysuru and Madikeri route, at 15 take diversion for 4.5 km spot.


கோமடகிரி:

தலைக்காவிரியிலிருந்து மைசூர்சாலையில் 15 கிமீ. முன்னர் இடதுபுறச்சாலையில் திரும்பி 4.5 கிமீ. பயணித்ததும் கோமடகிரி குன்றின் மீதுள்ள பகவான் பாகுபலியை, நிரந்தர அபிஷேக சாரக்கட்டமைப்பிற்கு முன் கண்டோம்.


அத்தலம் சென்றபோது மிகவும் அமைதி, எங்கும் சந்தடியே இல்லாத காலை 11 மணி. சிறிய குன்றின்மீது நல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது. சற்றொப்ப 70 படிகள் உயர்ந்ததும், உயரத்தோற்றத்துடன் நின்ற பகவான் பாகுபலியின் திவ்ய தரிசனம் கிட்டியது.


ஸ்ரவணபெலகொலா, வேனூர், கார்காளா, தர்மஸ்தலா போன்று குன்றின் மீது தியானக் கோலத்தில் தனித்து நின்று கொண்டிருக்கும் பாகுபலியை கோமடகிரியிலும் கண்டபோது கைகள் இரண்டும்  தாமாகவே கூப்பி வணங்கத்துவங்கின.  


அதே  உருட்டையான கம்பீர சரீரம், புற்றிலிருந்து வெளியேறிய பாம்புக்களுக்கிடையே நிற்கும் கால்கள், மாதவிக்கொடிகள் படர்ந்த புஜங்கள், அமைதி தவழும் முகம், மன்மதனும் மயங்கும் அழகுத் தோற்றம், வசீகரிக்கும் பாகுபலியை இங்கு வணங்கினாலும் நம்மை நாம் மறப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. மிகச் சிறியோனாகிய நாம் அந்த பிரம்மாண்டத்தைக் கண்டு வணங்குவதைத்தவிர வேறென்ன செய்ய முடியும்.


சற்று நேரம் அவருக்கெதிரே நின்று கண்களை மூடி தியானம் (என்று ஏதோ) செய்து விட்டு கீழே இறங்கும் போது, வலது புறம் சம்மேதகிரி பாத கூடங்களும், இடது புறம் சமவசரணக் கோவிலும் தென்பட்டன. எதிரில் பிரம்மஸ்தம்பமும், சாலையைக்கடந்து தங்குமிடமும் தென்பட்டன. (அங்கும் யாருமே இல்லை. ஸ்தலத்திற்கு கூட்டத்துடன் செல்லவும்…)



----------------------------------


















In Karnataka, Shravanabelagola is one of the most famous Jain sacred centres. However, there are many Jain religious places which have an interesting history. Gommatagiri in Mysore is one of the Jain religious places in Karnataka known for its history.
We visited this temple on the way from Madikeri to Mysore.
Temple is situated nearly 25 kms from Mysuru. On the national highway it is situated at 4.5 kms distance inside.

Gommatagiri is famous for the statue of Bahubali (Gommateshwara) which is located on a hillock named 'Shravana Gudda'. This 700-year-old granite statue of Gommateshwara belongs to the early Vijayanagara style of architecture.

The Gommateshwara looks similar to the statue in Shravanabelagola. However, this figure of Gommatagiri is much smaller in size when compared to the other. Therefore, Gommatagiri serves as one of the prominent Jain religious places in Karnataka.

The annual Mahamastakabhishekha is also celebrated at Gommatagiri. A structure will be fixed behind the statue where priests will stand and perform the Abhishekha (holy bath) to the idol. Although, it is not as famous as the Shravanabelagola's Mahamastakabhisheka which happens every 12 years. This is one of the big events at Gommatagiri and many people around the state come here to witness this festival. You can see many Jain pilgrims coming here to seek the blessings from Bahubali.



















Actually, there are a few similarities between Gommatagiri and Shravanabelagola. One has to climb a hillock at Shravanabelagola and here also the visitors have to climb up to visit the temple.


The granite statue of Bahubali looks similar to Gommateshwara at Shravanabelagola. However, this statue is small, yet splendid. Unfortunately, this heritage is threatened due to lack of preservation and illegal land activities happening in the area.


Tourists have to climb several stairs to reach the summit. A footprint of Bahubali can be seen up the hill before the temple. As you climb, the statue of Gommateshwara becomes clearer to the vision. He is in the standing posture and emanates a rustic charm. Except for the time of the festival, this place is really calm and peaceful. So, you can enjoy a heritage surrounded by greenery and spend a quality time at this hill.


A Model of Sammed shigari also built with 24+ Tonks with Jinar and saints footprints on scattered granite rocks made the surrounding more sacred divinity. Apart from a Samavasaran miniature structure also constructed here.


Gommatagiri is around 15km from Mysore city. It is situated in a place called Bilikere Hobli at Hunsur Taluk. It is better to go in private vehicle from Mysore




















கர்நாடகாவில் சுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்ட பல சமண மத ஸ்தலங்களும் உள்ளன. மைசூரில் உள்ள கோமதகிரி(கோமடகிரி) கர்நாடகாவின் சமண புனித ஸ்தலங்களில் ஒன்றாகும்.


கோமதகிரி மைசூர் நகரிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது. 'ஷ்ரவணா குடா' என்ற குன்றின் மீது அமைந்துள்ள பாகுபலி (கோமதேஸ்வரா) சிலை மிகவும் பிரபலமானது. 700 ஆண்டுகள் பழமையான இந்த கோமடேஸ்வராவின் கிரானைட் சிலை ஆரம்பகால விஜயநகர பாணி கட்டிடக்கலைக்கு சான்றாக உள்ளது.


கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து இப்பகுதியில் நிறைய ஜைனக் குடும்பங்கள் வாழ்ந்துள்ள தாக தெரிகிறது. சென்ற நூற்றாண்டில் (1948 ல்) தான் இந்த குன்றில் மீது பல செடிகளுக்கும், முட்புதர்களுக்குமிடையே கோமதீஸ்வரரின் அழகான உருவம் தரிசனத்திற்கு கிட்டியுள்ளது.


16 அடி உயரமுள்ள ஸ்ரீ கோமதீஸ்வரர், ஒற்றைப் சிலைக்கு புகழ் பெற்றது. இந்த கிரானைட் சிலை ஸ்ரவணபெலகோலாவில் உள்ள கோமட்ட சாமுண்டராயன் வடித்த சிலைக்கு ஒத்ததாக காட்டியளிக்கிறது. இருப்பினும், இந்த கோமதகிரி பாகுபலி சிலை மற்றவற்றுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியதாக இருக்கிறது.


சிலையின் இருபுறமும் புற்றுக்களிலிருந்து வெளிவந்த பாம்புகள் மிகவும் கவர்ச்சிகரமானவை மற்றும் மாதவிக்கொடிகள் தோள்கள் வரை படந்திருப்பது தனித்துவமானவை. இங்கு காணப்படும் கோமதீஸ்வர சிலையின் தொன்மையைப் பற்றிய விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், செங்கல்வராயன் மற்றும் கொங்கல்வராயன் காலத்தில் இந்த புனித ஸ்தலம் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.


பாஹுபலியின் கிரானைட் சிலை ஸ்ரவனபெலகோலாவில் உள்ள 58 அடியுயர கோமதேஸ்வராவைப் போலவே, 16(/18) அடியுயர இந்த சிலை சிறியதானாலும் அற்புதமானது. துரதிர்ஷ்டவசமாக, இந்த பாரம்பரியம் பாதுகாப்பின்மை மற்றும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் காரணமாக அச்சுறுத்தலில் உள்ளதாக தெரிகிறது.


உச்சிமுகட்டை அடைய சுற்றுலா பயணிகள் 72 படிக்கட்டுகளில் ஏற வேண்டும். பாஹுபலியின் பாதம் கோயிலுக்கு முன்னால் மலையின் மேலே காணப்படுகிறது. அவர் நிற்கும் தோரணையில் நின்று ஒரு பழமையான கவர்ச்சியை வெளிப்படுத்துகிறார். திருவிழாவின் நேரத்தைத் தவிர, மற்ற வேளையில் இந்த இடம் உண்மையில் அமைதியாக இருக்கிறது. எனவே, நீங்கள் பசுமையால் சூழப்பட்ட ஒரு பாரம்பரியத்தை அனுபவிக்க முடிகிறது. ஆம் இந்த மலையில் தனிமையில் ஒரு ரம்மியமான நேரத்தை செலவிடலாம்.




















அதன் அடிவாரத்தில் இடதுபுறம் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களின் பாதகூடங்கள் சம்மேத கிரியை நினைவுகூறுவது போன்றளவில் மாதிரி வடிவம் ஒன்றை இயற்கையாய் இறைந்துள்ள பாறைகளில் அமைத்துள்ளனர். இது மேலும் கூடுதல் அழகை தருகிறது. அந்த டோங்குகளில் உள்ள பாதங்களை ஏற்ற இறக்கத்தில் நடந்து சென்று தரிசிக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது பெரும் பாக்கியமே.


அருகில் பாவாபுரி ஜலமந்திர் போன்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். மேலும் வலதுபுறம் சமவசரணக் கோவில் ஒன்றும் உருவாக்கியுள்ளனர். அந்த கோமதீஸ்வரர் சிலைக்குன்றிற்கு எதிரில் ஒரு பிரம்ம ஸ்தமபமும் 20 அடியுயரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.


முதல் மஹாமஸ்தாபிஷேகம் 1950 ம் ஆண்டு நடைபெற்றுள்ளது. சென்ற ஆண்டு இச்சிலைக்கு வழமைபோல் மஹாமஸ்தாபிஷேகம் நிறைவேறியுள்ளதை செய்திகள் மூலம் அறிந்திருக்கலாம். இந்த கோமதகிரியைப் பொருத்த மட்டில் இது ஒரு பெரிய நிகழ்வாகும், இந்த விழாவைக் காண பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் பலர் இங்கு வந்து குவிகிறார்கள். பாகுபலியிடமிருந்து அருளைப் பெற்று மனநிறைவுடன் செல்கிறார்கள்.


இங்குள்ள யாத்ரி நிவாஸ் சரியாக பராமரிப்பில் இல்லாததால், அருகில் 23 கிமீ. தொலைவிலுள்ள மைசூரில் தங்கிச் சென்று தரிசனம் செய்யலாம்.

Tuesday, September 4, 2018

Shri Kshetra Kanakagiri - ஸ்ரீ க்ஷேத்ர கனககிரி

Kanakagiri Siddha Athisaya kshetram  
கனககிரி சித்த அதிசய க்ஷேத்ரம்













It lies on the google map with coordination of (11.94957, 76.77211)


30.07.2018
திங்கள்

காலை 7.30 மணியளவில் காலையுணவை முடித்துக்கொண்டு மைசூருவைவிட்டு நஞ்சங்கூடு வழியாக ஊட்டிச் சாலையில் பேகூர் தாண்டியதும் இடதுபுறம் மெலயூரு (Maleyuru) செல்லும் சாலையில் பயணித்தோம். குக்கிராமச்சாலை ஆனால் மலைப்பிரதேசத்தின் அழகை ரசித்துக் கொண்டே சென்றபோது சரியாக 58 கி.மீ. ல் நுழைவாயில் வளைவு கனககிரி க்ஷேத்திரத்திற்கு அழைத்தது.


Shri Kshetra Kanakagiri

The place has a small hill with 350 steps with Temples on the top. There are in all 3 temples and 24 'tirthankar' tonks to worship.




 ----------------------------------------------- 
கனககிரி எனும் ஜைன ஸ்ரீக்ஷேத்ரம்

கர்நாடகா, கேரளா மாநிலத்திற்கு அருகில்; கர்நாடகா மைசூரிலிருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஜைன சித்த, அதிசய க்ஷேத்ரம் ஆகும். அமைதியும், முழுஇயற்கைச் சூழலும் நிறைந்த தொன்மையான ஜைன வரலாற்றுச் சின்னங்களைக் கொண்ட இத்ஸ்தலம்; மயங்கச் செய்யும் இயற்கை அழகுடன் காணப்படுகிறது. இத்தலம் அழகு நிறைந்த மலையும், மலையைச் சார்ந்த பள்ளத்தாக்குச் சுற்றுப்புறமும், குளிர்ச்சியான சீதோஷ்ணமும், தூய்மையான காற்றும் நிறைந்த பகுதி என்றால் மிகையாகாது. இத்தலத்தில் தமிழக, கர்நாடக கட்டிடக்கலைகளைக் கலந்து உருவாக்கப்பட்ட தரைப்பகுதி ஆலயங்களும், உச்சி மலை வரையில் பல ஜினாலயங்களையும் கொண்டுள்ளது. கங்கர்கள், ஹொய்சளர்கள் காலத்திய 27 கல்வெட்டுக்களைக் கொண்ட வரலாற்று சிறப்புடைய ஜைன ஸ்தலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1600 ஆண்டுகளைக் கடந்த 1008 பார்ஸ்வநாதர் பஸ்தியும் அதில் 1500 ஆண்டுகளைக் கடந்த ஸ்ரீ பத்மாவதி தேவியின் சிலை மற்றும் ஆச்சார்ய 108 ஸ்ரீ பூஜ்யபாதரால் எழுதப்பட்ட புர்ஜ்பத்ரா எனும் அகமங்கள் பாதுகாப்பகமும், அவரது நிஷாதி மண்டபமும் கொண்டுள்ளது இதன் சிறப்பாகும். மேலும் ஆங்காங்கே காணப்படும் 24 தீர்த்தங்கரர்களின் பாதகூடங்களின் விமானங்களுடனான மலைப்பாதையும் கொண்ட திவ்யக்ஷேத்ரம் எனின் மிகையாகாது.

நாகஸர்ப்ப தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் தேடும் ராகு, கேது தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் கருதப்படுகிறது.

(பேருந்து வசதி அடிக்கடியில்லை, பிற வாகன வசதியும் அரிதாக உள்ளது. அதனால் வாகனத்துடன் விஜயம் செய்வதே சாலச் சிறந்தது.)

----------------------------------------------- 

கனககிரிக்கு பின்னனியில் சுவாரஸ்யமான கதையொன்று செவிவழிச் செய்தியாக தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.. முனி பூஜ்யபாதரின் அம்மான் மகன் நகார்ஜுனா இக்குன்றுக்கருகில் மிகவும் ஏழ்மைநிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார்.  அவ்வேளையில் அக்குன்றின் குகையில் தீவிர தவவாழ்வில் ஆழ்ந்திருந்த அம்முனிவருக்கு தான் கையில் எடுக்கும் எந்தப்பொருளையும் பொன்னாக்கும் திவ்ய சக்தியை பெற்றார். பரவசமூட்டும் இம்மந்திரத்தின் மகிமையால் அவர் தங்கியிருந்த அம்மலையையே பொன்னாக மாற்றி வந்தார். அச்சக்தியை வரமாக அளித்த யக்ஷி பத்மாவதி அவரது இந்த முட்டாள்தனமான இச்செயலை தடுத்து, அத்தங்கத்தைக் கொண்டு அம்மலையில் ஒரு ஜினாலயத்தை நிறுவ உத்தரவிட்டது. அக்கட்டளையை ஏற்று (தற்போது மலைமீதுள்ள) ஒரு பார்ஸ்வநாதர் பஸ்தியை அக்காலத்தில் நிறுவியுள்ளார்.

அவ்வேளையில் இம்மலையைச் சுற்றிலும்  தங்கக்கட்டிகள்  இறைந்துள்ளன. அதனால் இப்பர்வதம் கனககிரி (பொன்மலை) என்ற பெயரைப் பெற்றது. அவ்வதிசய நிகழ்விற்குப் பின் கனககிரி அதிசய க்ஷேத்ரமாக அழைக்கப்பட்டுள்ளது. மேலும் அக்காலத்தில் இப்பகுதியை ஆண்ட ஹொய்சள மன்னன் போருக்கு செல்லும் முன் இவரை வழிபட்டு சென்ற போதெல்லாம் வெற்றி கண்டுள்ளான். அதனால் அம்மூலவரை விஜய பார்ஸ்வநாதர் என்று புகழ்ந்து பூஜித்து வந்துள்ளான்.
----------------------------------------------- 

உள்ளே நுழைந்ததும் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் வேனை நிறுத்தி இறங்கினோம். அருகிலிருந்த தங்குமிட அலுவலகத்தில் க்ஷேத்ர ஆலயங்களைப் பற்றியும் அவற்றுக்கு செல்லும் பாதைகளை கேட்டறிந்து அருகிலிருந்த மானஸ்தம்பத்தை கண்டதும்  புதிய ஜினாலயத்தின் பக்கம் தரிசனம் செய்ய நெருங்கினோம்.


----------------------------------------------- 
Best jain religious place near Mysore on Ooty road to visit. Calm, quite & natural environment, ancient and historical jain temple group. Mesmerizing view of the nature. This Atishya Kshetra is really beautiful place with awesome surrounding and weather in its purest form. It is quite a famous Atishya Kshetra of Jains and a lot of pilgrims visit here for Pooja Path. There are many temples here some are on ground level and others are situated on the top of the hills. The architecture is a mixture of different cultures and not just southern Indian other temples. The temples and inscriptions of Gangas and Hoysala periods are found here.

About 1600 hundred years old Sthal. 1008  Bhagwan Parshwanath Mandir, aprox. 1500 years old Shri Padmavati Devi idol, and mainly 108 Shri Pujyapad swami written manuscripts inscribed on burjpatra are the best things to see. . Also there are 24 Charan temples in a dedicated mandap situated on the different parts of the hill here.

People come for Naag Sarp dosh pariharam Rahu ketu Dosh pariharam . It is filled with positive energy .
----------------------------------------------- 
   There is an interesting story behind the name of the hill. Pujyapada's nephew Nagarjuna, who lived here, was driven to poverty after the death of his father. He undertook rigorous penance in a cave on the hill and acquired the power to convert everything he laid his hands on into gold. Ecstatic with newly found magical powers, he began to convert the entire hill into gold. However Padmavathi Devi, who had granted him the boon, prevented him from the foolish pursuit and ordained that a temple be built there instead. Accordingly, he built the present temple of Sri Parshwanatha on the hill.
   It is said that in those days fragments of gold could be seen strewn around the hillock. And it was thus named Kanakagiri or Kanakadri. With the temple having sprung up, it became Athishaya Kshetra Kanakagiri. After the Hoysala kings worshiped here and won a major battle, they called this Vijaya Parshwanatha.
----------------------------------------------- 

முதலில் 30 அடியுயர மானஸ்தம்பம் வெளிர் சிவப்புநிற சலவைக்கல்லால் அழகாக செய்யப்பட்டு அனைத்து அம்சங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது.

உள்ளே மூலவராக முன்றடி உயர பார்ஸ்வ ஜினரின் கருங்கற் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வலது புறம் உள்ள பெரிய மாடத்தில் ஸ்ரீ சந்திரப்ரப ஜினரின் சலவைக்கல் சிலையும், பீடத்தினடியில் ஸ்ரீ ஜ்வாலாமாலினி தேவி சிலை அலங்காரத்துடனும், இடது புறம் உள்ள பெரிய மாடத்தில் ஸ்ரீ பத்மாவதி கருங்கல் சிலை நிறுவப்பட்டு அலங்காரத்துடன் காட்டியளித்தது.

அங்கு தரிசனத்தை முடித்துக் கொண்டு மலைமீது ஏற புறப்பட்டோம்….

மேலே உள்ள விஜய பார்ஸ்வநாதர் புராதன ஜிநாலயத்திற்கு செல்ல அடிவாரத்தில் உள்ள இந்த நூதன பார்ஸ்வநாதர் ஆலயத்தின் வழியே செல்ல படிக்கட்டுகள் உள்ளன. இருப்பினும் மலைமீது செல்ல அலங்கார வளைவின் வழியாக செல்லும் தார்சாலையில் வாகனங்களில் அவ்வாலய வடக்குவாயிலை சென்றடையவும் முடிகிறது.























----------------------------------------------- 
New Shri Parswanathar foothill basadi

A 30 feet high Manasthamp welcome all to the Jinalaya.

3 feet high Shri Parshwanathar black stone idol in Katkasana posture with seven headed snakehood was installed on the vedi.
On left of Moolnayak Shri Padmavathi matha granite idol installed is decorated on that day.
Small mukhamantap, Navrang, Suhanasi, Garbhakudi of all festures were built in the basadi.



*************************************


ஸ்ரீ விஜய பார்ஸ்வநாதர் பஸ்தி

கிழக்கு முகப்பு வாயில் முகப்புத்தோற்றம் மிக அழகாக வடிவமைத்துள்ளார்கள். படிக்கட்டுகளில் ஏறியதும் நுழைவாயில் நிலைக்கு மேல் கோட்டையின் மீதுள்ள திரிவிமான வடிவத்துடனும், திருச்சுற்றின் மதில்களின் முன்சுவர் மூலைகளில் அழகிய எண்கோண வடிவ விமானமும் அழகாக பொன்னிறத்தில் கலசத்துடன் காட்சியளிக்கின்றன.

எதிரே 40 அடி உயர மானஸ்தம்பம் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

கிழக்கு வாசலுக்கு உள்ளே சென்றதும் தகரக் கூரையினை முன்னால் கொண்ட முகமண்டப  கட்டமைப்பு காணப்படுகிறது. அதன் மேலுள்ள மாடத்தில் அழகிய பத்மாவதி சுதைச்சிலை அமர்த்தப்பட்டுள்ளது.


அகன்ற முகமண்டபத்தினுள் ஸ்ரீ க்ஷேத்ரபாலகர் சன்னதி நாலுகால் வளைவுமண்டபம் போன்றமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே செல்லும் பாதையின் இருபுற மாடங்களில் சலவைக்கல் மற்றும் உலோகத்தினாலான ஜினர் சிலைகள்; எதிர்புறம் யக்ஷ,யக்ஷியர், இந்திரன் தர்மச்சக்கரத்துடன் யானைமீதமர்ந்த சிலையும்  காணப்படுகின்றன. 


மூலவராக பல நூற்றாண்டுகளைக் கடந்த 4.5 அடியுயரத்திற்கும் குறையாத ஸ்ரீ பார்ஸ்வநாதரின் கட்காசன கருங்கல் சிலை எழுதலை நாகம், முக்குடைக்கு முன் படம்விரித்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளது.


அர்த்தமண்டபத்தில் எதிரும் புதிருமாக கற்சிலைகள் அரிமானத்துடன் இருப்பதைக் காணும் போது மிகப்புராதனமானதென்பது புரிகிறது. ஏழுதலை நாகபடத்தின் மீது ஸ்ரீதரணேந்திரர், ஸ்ரீபத்மாவதி உருவங்கள் புடைப்புடன் செதுக்கப்பட்டு நிற்கிறது. அடுத்து ஸ்ரீ பிரம்மதேவர் அருகில் குதிரையுடன் நிற்கும் கோலத்தில் வடிக்கப்பட்டிருப்பது புதியதோற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் எதிரும் புதிருமாக ஸ்ரீ கூஷ்மாண்டினி சிலை, ஸ்ரீபத்மாவதி தேவி, ஸ்ரீஜ்வாலாமாலினி திருவுருவச்சிலை அனைத்தும் கருங்கல்லில் செத்துக்கப்பட்டு, அனைத்தும் உன்னாழியில் பிரதிஷ்டை செய்திருப்பது தனித்துவமானதாகும். திவ்ய க்ஷேத்திரமாக கருதப்படுவதின் மகத்துவத்தை இக்காட்சிகளே விளக்கிடும். மிகப்புராதனமான அச்சிலைகளின் சக்திகளத்தின் மகிமையை நுழைந்தமாத்திரத்திலேயே பக்திமான்களால் உணரமுடியும் என்று நினைக்கிறேன், ஆனால் என்போன்ற பாமரனால்….

ஆலயச் திருச்சுற்றில்; கருங்கல்லில் செதுக்கப்பட்ட ஸ்ரீபார்ஸ்வஜினரின் சிலையில் உயர மேடைக்கு கீழ் ஸ்ரீ பத்மாவதி சிலையும் மொட்டை மண்டபத்தில் நிறுவியுள்ளனர். அருகே 24 தீர்த்தங்கரர் சிலைகள் தனிகற்பலகைகளில் முழுபுடைப்பாக செதுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஓரிடத்தில் நிறுவுவதற்கு முன் ஏற்பாடுகளாக தோன்றுகிறது. வடபுற வாயிலுக்கு செல்லும் வழியில் மேலும் ஒரு பார்ஸ்வ ஜினர் சன்னதி பாதத்தின் கீழ் ஸ்ரீபத்மாவதி சிலையுடன் காணப்படுகிறது.

தரிசனம் செய்து முடித்தவுடன் அப்புராதன ஆலயத்தை விட்டு வெளியேறினோம்…









































 




































Ancient Jain Temple and the Royal Heritage –
Vijaya Parshwanatha basadi.

The main temple situated atop the hill belongs to Bhagawan Sri Parshwanatha who constitutes the main deity of the temple in Kayotsarga. Lord Parshwanatha was worshiped by Hoysala kings. Goddess Sri Padmavathidevi has blessed the place. The kings of the Ganga dyansty is said to have built this temple in the 5-6th century. The Hoysala Kings worshipped Bhagawan Parshwanatha before proceeding to war and is said to have been won these wars against all odds and thus described Sri Parshwanatha Swamy as Sri Vijaya Parshwanatha Swamy.
----------------------------------------------- 
So much for the name. About 370 steps have been cut out from the rock face to enable the devotees to climb up to the shrine. A motorable road is also being laid, side by side, to the top. The flight of steps passing through the arches leads to the northern entrance of the temple. But the eastern doorway with a well carved stone arch is very attractive.
----------------------------------------------- 

   The sanctum has an attractive four foot image of Parshwanatha. The images of Kushmandini and Padmavathi Devi are facing each other. A rare feature of the images is that the goddesses are an embodiment of Rahu and Kethu respectively and they are so placed in order to generate a special force, Divyashakthi, between them which can eliminate the ill-effects of Rahu and Kethu, known as Kalasarpa Dosha. It is only here that Rahu and Kethu face each other and nowhere else. Many people troubled by planetary effects visit the place. Even Queen Deveerammanni from Mysore visited the temple to find a solution to her problems and once her problems were solved, she presented a specially made snakehood with the figures of Dharanendra and Padmavathi to the temple.
----------------------------------------------- 
  
******************************************** 

அதன் பின்புறத்தில் நாகார்ஜுனர் தவமியற்றிய குகை யுள்ளது. அருகில் ஒரு நீர்நிலை நன்னீருடன் காணப்படுகிறது. அபிஷேக ஜலமாக அப்புனித நீரை உபயோகிக்கின்றனர். அங்கிருந்து மலை, படர்ந்த சமவெளிபோல் உயருகிறது. சுற்றிலும் உள்ள பள்ளத்தாக்கின் அழகு கண்ணைக் கவர்கிறது.

அந்நீர்நிலையில் துவங்கி அங்கொன்றும் இங்கொன்றுமாக உச்சிவரை 24 தீர்த்தங்கரர் பாத கூடங்கள், அடர்சிவந்த வண்ணத்தில் சிறிய விமானத்துடன் அமைக்கப்பட்ட மேடையில் ஜினர்பாதத்துடன் காணப்படுகிறது.

கீழே எந்த ஒரு குறிப்பும் காணப்படாத மேடையில் சிலையொன்று அமர்த்தப்பட்டிருப்பது , அந்திமகாலத்தில் அங்கு வாழ்ந்த சல்லேகனாவிரதி ஸ்ரீ பூஜ்யபாதராகத்தான் இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. 

ஒவ்வொரு கூடத்தையும் தரிசனம் செய்து கொண்டே செல்லும் சரிவான ஏறுபாதையின் நடுவே ஸ்ரீ வர்த்தமானரின் நான்கு ஜினர்சிலைகள் திசைக்கொன்றாக அமர்த்தப்பட்ட மேடையில் அழகான நீலவானத்தின் பின்னனியில் அமைந்திருப்பது சிறப்பானதாகும். அவர் இத்தலத்திற்கு வருகைபுரிந்து தேவர்களால் சமவசரணம் அமைக்கப்பட்டதை நினைவு கூற சதுர்முக சிலையும், உச்சியில் மானஸ்தம்பம் போன்ற ஒரு கம்பமும் காட்சியளிக்கின்றன.

மேலும் மூன்று முனிவர்களின் நிஷாதியும், பூஜ்யபாதருக்கான நிஷாதி, பாதகூடமும் அமைக்கப்பட்டுள்ளது. தேவநந்தி எனும் பிராமணகுலத்தில் கர்நாடகாவில் பிறந்த; ஆச்சார்ய ஸ்ரீ குந்தகுந்தருக்கும், ஸ்ரீ சம்பந்தபத்ரருக்கும் அடுத்தஸ்தானத்தில் புகழப்பட்ட; நந்திகணத் துறவி ஆச்சார்ய புஜ்யபாத ஸ்வாமி இம்மலையில் பலகாலம் வாழ்ந்து, இஷ்டோபதேசம், சமாதிசதகம், சர்வார்த்த சித்தி போன்ற நூல்களை சமணத்திற்கு வழங்கிய பின்னர் இங்கு சமாதி மரணம் எய்தியுள்ளார்.
----------------------------------------------- 


----------------------------------------------- 

மேலும் முனி ஸ்ரீஅனந்தபால் , முனி ஸ்ரீ ஞான்சந்த் இருவரும் இம்மலை குகையில் வாழ்ந்து கேவலஞானம் பெற்றுள்ளனர். முனிவர் ஸ்ரீபத்ரபாகு முனிவரும் விஜயம் செய்து இங்குள்ள குகையில் சிலகாலம் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் விபரங்கள் இங்குள்ள கல்வெட்டுக் குறிப்பில் காணப்படுகின்றன.

கடைசி பாதத்தை தொட்டு வணங்கி விட்டு உச்சியிலிருந்து சுற்றிலும் படர்ந்துள்ள பள்ளத்தாக்கின் அழகினை பார்த்து ரசித்த படியே புராதன ஜினாலயத்திற்கு வந்தடைந்தோம்.


















































































  A walk behind the temple takes one to Nagarjuna Gufa, the cave where he penanced. The pond nearby has fresh water all through the year and this water is used for abhisheka in the temple. The entire rocky terrain of the hill is punctuated by small, pink coloured cells with the footprints of Jain Thirthankaras. There are 24 of them in all, spread out on the hill, and it is a pleasure to stroll along the path that leads to each of these lovely structures. In the centre is a rather large mantapa which has the feet of Pujyapada. The view from the top of the hill is panoramic.
----------------------------------------------- 


----------------------------------------------- 


2017, சென்ற ஆண்டு ஜனவரி பிப்ரவரியில், ஜைன் கமிட்டியினரால் அதிசய மஹோத்சவ் கொண்டாடப்பட்டது. அவ்வேளையில் புதியதாக 18 அடி யுயரத்தில் சலவைக்கல்லில் செதுக்கப்பட்ட பகவான் பாகுபலிநாதரின் கட்காசனச் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மஹாமஸ்தகாபிஷேகமும் கொண்டாடப்பட்டது.

அழகாக உருவாக்கப்பட்ட இப்பேரழகரின் சிலை மேடையில் நிறுத்தப்பட்டு ஏறும் படிகளுடன் காணப்படுகிறது. அடிவாரத்திற்கும், மேல் ஜினாலயத்திற்கும் இடையில் கட்டப்பட்ட இப்பிரம்மாண்டச் சிலை கம்பீரமாக காட்சியளிக்கிறது.








Bagawan Bahubali temple:

18 feet Bahubali colossul of single stone is also installed in middle of the hill. The beautiful Kayotsarga idol is standing on a big platform have stairs and handrail at front.

The Jain committee had organised the Athishaya Mahothsava at Kanakagiri from January 16 to February 5, 2017. During that time, the first Mahamastakabhisheka of 18-feet statue of Bahubali was performed on Feb 2 2017, Several rituals were held during that period.
----------------------------------------------- 
Architect of Resurrection of Kanakagiri - Pujya Sri Chandrasagara Muni had chosen Kanakagiri for his penance and worship is the last century. He resurrected the place with 24 Jinakutas and also construed the steps to the hill. He awakened the people for charity and developed the place with modern facilities.



சம்மேத சிகர தரிசனம் செய்ததைப் போன்ற உணர்வுடன் அடிவாரத்தை அடைந்தோம்.
----------------------------------------------- 

ஜைன மடம் ஒன்று தரைப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளது.

கனககிரியில் பல முனிவர்கள் தங்கி தவவாழ்வைத்தொடர்ந்து சாதனை புரிந்த வண்ணம் இருந்தமையால் ஜைன மடம் ஒன்றும் தோற்றுவிக்கப்பட்டு பல்லாண்டுகளாய் ஜைன சமய முன்னேற்றத்திற்காக தொண்டாற்றி வருகிறது.

ஸ்வஸ்தி ஸ்ரீ புவனகீர்த்தி பட்டாரக ஸ்வாமிஜி தற்போதைய மடாதிபதியாக பட்டமேற்றுள்ளார். ஜைன சித்தாந்தங்களையும், அறவழிமுறைகளையும் சமஸ்கிரதம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நன்கு கற்று கடைபிடிப்பதோடு அனைவருக்கும் வழங்கியும் வருகிறார்.

மேலும் மைசூரிலும், சாம்ராஜ்நகரிலும் கல்விச்சாலைகளை அமைத்து மாணவச் செல்வங்களுக்கு கற்பிக்கும் சேவையை புரிந்து வருகிறார். அனாதையாக விடப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவு இல்லத்தை நிறுவி கல்வியும், தங்கும் விடுதி, உணவுடனான சமூகச் சேவையை இம்மடம் தொடர்ந்து செய்து வருவது போற்றத்தக்க செயலாகும்.

----------------------------------------------- 
பல மேன்மைகளைக் கொண்ட இத்தலத்தை சென்ற நூற்றாண்டில் பூஜ்ய ஸ்ரீ சந்திரசாகர முனிமகராஜ் அவர்கள் தங்கி தவ வாழ்வை மேற்கொண்டார். அவ்வேளையில் 24 தீர்த்தங்கர கூடங்களை நிர்மாணித்து, அவற்றை இலகுவாக காண படிகளை இம்மலையில் அமைத்து இப்புனித ஸ்தலத்தை மீண்டும் உயிர்த்தெழச் செய்துள்ளார் எனின் மிகையாகாது. பல நவீன வசதிகளை உருவாக்கியதோடு பொதுநல சேவைகளையும் துவக்கியுள்ளார்.

மேலும் இத்தலம் காலஸர்ப்பதோஷ நிவர்த்திக்கான மையமாக கருதப்பட்டு வருகிறது. பலர் வந்து ராகு, கேது கிரஹ தோஷத்திலிருந்து விடுவிக்கப்பட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
----------------------------------------------- 

அப்புனித ஸ்தலத்தை விட்டு மெலயூரு வழியாக சாம்ராஜ்நகரம் வந்தடைந்தோம். அங்கே மதிய உணவு அருந்தியதும் தாளவாய், திம்மம் மலையின் 27 கொண்டைஊசி வளைவினைக் கடந்து  பன்னாரி, சத்தியமங்கலம், ஈரோடு வழியாக திருச்சி வந்தடைந்தோம்.

அங்கிருந்து அவரவர் இல்லம் நோக்கி திரும்பினோம்…

கடமைக்கான காலம் என்றைக்கும் நம்மை விரட்டிக் கொண்டுதான் இருக்கும். அதனை ஒதுக்கித் தள்ளி விட்டு ஒரு முறை அத்தலங்களுக்குச் சென்று (செலவை மறந்து) மனநிறைவோடு திரும்பினால் விட்ட கடமைகளை மீண்டும் உத்வேகத்துடன் செயலாற்ற வழிவகுக்கும் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை.





Jain Math –

Kanakagiri is being managed by a Jain monastery (Muth). The names of many Jain saints are incarnated with this place, as they regarded the place as abode of achievements and pursuance. The Jain Muth came to existence in the light of these Jain saints.


His Holiness Swastisri Bhuvanakeerthi Bhattarakh Swamiji - His Holiness Swastisri Bhuvanakeerthi Bhattarakh Swamiji is the present pontiff heading Sri Kshetra Kanakagiri Peetha (Muth) which is known as the unique 'siddakshetra' of South India. He possesses a great patronage for the religion and erudition of knowledge. He has studied immensely the path of Jaina religion. His sphere of knowledge in Sanskrit, Hindi and religious studies are of high order.

At present the Muth is running the educational institutions in Mysore and Chamarajanagar imparting education to the poor and downtrodden children. Home for the deserted children at Mysore is unique in its character as it is the only institution of that kind initiated by the Jain Community.
****************************