Showing posts with label Nagpur Dt. Show all posts
Showing posts with label Nagpur Dt. Show all posts

Thursday, September 21, 2017

Bazargoan - பாஜார் கெளவ்



Shri Adhinath digamber Jain Adhishayakshetra


ஸ்ரீ ஆதினாத் திகம்பர் ஜைன் அதிசயக்ஷேத்ரம்









Bazargoan Adhisayakshetra is situated 


in the coordination of (21.14022, 78.76853) Latt, Long.










              





பாஜார் கெளவ்


ராம் டெக் கிலிருந்து முக்தா கிரி செல்லும் சாலையில் 74 கி.மீ. ல் உள்ளது.

1200 ஆண்டுகள் பழமையான ஜிநாலயம்

இரவானாலும் ஒளி வெளிச்சத்தில் பகலாய் தெரிந்தது.

ஸ்ரீ ஆதிநாதரை மூலவராக கொண்டிருந்தாலும் ஸ்ரீ பார்ஸ்வநாதர், ஸ்ரீ சந்திரப் பிரபர், ஸ்ரீ சாந்திநாதர் ஸ்ரீ முனுசூவ்ரதர் ஸ்ரீவாசுபூஜ்யர் போன்ற ஜிநர்களுக்கும் தனித்தனியே சுருவறைகள் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சன்னிதி அறையிலும் 16 கால்கள் , 12 கால்களுடன் அலங்கார வளைவுகளின் இணைப்புடன் சிறிய மண்டபம் போன்று அமைக்கப்பட்டு, பின்பகுதியில் சலவைக் கல்லால் செதுக்கப்பட்ட முழு உருவச்சிலைகள் அமர்ந்த (பத்மாசன) நிலையில் நிறுவியுள்ளனர்'

(கீழ் சாத்தமங்கலம் கருவறை போல)

பளிங்குக் கல்லால் ஆன மண்டபங்கள் அனைத்தும் வண்ணங்கள் தீட்டப்பட்டு அழகாக கண்ணைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னர் தீப ஆரத்தி எடுக்கும் வண்ணம் ஆரத்தி தட்டு விளக்குடன் மேடையில் வைக்கப்பட்டுள்ளன.

முனிவாச அறையும் உள்ளது. தண்ணீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.



அங்கிருந்து 164 கி.மீ தொலைவில் உள்ள முக்தா கிரியை நோக்கிப் பயணம் நாளைய தரிசனத்திற்காக

------------------------- 


                  

                         
  
                           



Seventy four kms from Ramtek towards muktagiri road.


1200 years ancient Jinalaya in the mediaeval period.

We are reach at night time but many lamps with lights are illuminated there.

Shri Adhinathar marble stone statue was installed on the alter of garbagriha.
Also it has Shri Parswanathar, Shri Chandraprabanathar, Shri Santhinathar, Shri Munushuvirathanathar were also installed individually on separate rooms. All are displayed inside a Mandap with 12 to 16 pillars in semi-padmasana postures.  

All the Mandaps are painted colourfully.

There is Muni nivas and two rooms are there. Water facility also surplus inside the Jinalaya.




            



                        

RAMTEK JAIN TEMPLE - ராம்டெக் ஜினாலயம்

 


Shri Santhinathar Jain temple 

ஸ்ரீ சாந்திநாதர் ஜிநாலயம்.







It lies in the coordination of (21.40546, 79.32986)


Lies in Sagar district, Madhya pradesh.


வரலாற்று சிறப்பு வாய்ந்த ஸ்தலம் ராம்டெக். ராமர் வனவாசத்தின் போது தங்கியிருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அருகில் அகஸ்தியர் ஆஸ்ரம் இருந்தது. முனிவர்கள் வேள்விகளை துவங்கினால் அரக்கர்கள் வந்து இடையூறு செய்து நிறுத்துவதும், சிலரை கொன்றும் வந்ததினால்;

ராமன் அவர்களிடமிருந்து யாகத்தைக் காப்பதாக சூளுரைத்ததாக சொல்லப்படுகின்றது. அதாவது டெக் – பேச்சுமொழியில் சபதம் ஏற்பது. அதனால் இவ்விடம் ராம்டெக் என பெயர் பெற்றது.

ராமர் ஆலயம் பாதுகைகளுடன் மலையுச்சியில் உள்ளது.


அப்போதைய ராகுஜி போன்ஸ்லே என்ற நாகபுரி மன்னனால் கட்டப்பட்டது. 400 வருடங்களைக் கடந்த இவ்வாலயத்தின் பெருமையை, காளிதாசன் வசித்து மேகதூதத்தை எழுதி முடித்ததாக சொல்லப்படுகிறது. (நமது முன்னாள் பாரதப் பிரதமர் நரசிம்மராவ் இத்தொகுதியில் நின்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.













சாந்திநாதர் ஜினாலயம்.

ராம்டெக்கில் உள்ள இப்புராதன ஜினாலயத்தின் மூலவராக, மிகப்பழைமையான கல்சிலைக் கொண்ட, 16 வது தீர்த்தங்கரரான ஸ்ரீ சாந்திநாதரை நிறுவியுள்ளனர்.
ராகுஜி போஸ்லே தமது பரிவாரங்களுடன், திவானுடன் வந்திருந்து ராமர் கோவிலை உருவாக்கியுள்ளார்.

அவ்வாறு உருவாகி வரும் நாளில் திவான் தான் ஒரு ஜைனன் என்றும் தினமும் ஜினரை வணங்கித்தான் உணவு உட்கொள்வதாகவும், அதற்காக 30 மைல் சென்று வருவதாகவும் சொல்லியுள்ளார். அரசரும் தந்து பணியாட்களிடம், இவ்விடத்தில் ஏதேனும் ஜினாலயம் உள்ளதா என தேடுமாறு ஆணையிட்டார்.

அவ்வண்ணமே தேடியபோது ஒரு மரத்தின் கீழ் உள்ள ஜினர் பிரதிமையை சில ஜைனர்கள் மலையடிவாரத்தில் வணங்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.  அதனை செவியுற்ற அவ்வரசனும் உடன் அச்சிலைக்கு ஒரு ஆலயம் கட்ட உத்தர்வு இடுகிறான். பல நூற்றாண்டுகளாக வணங்கப்பட்ட ஸ்ரீ சாந்திநாதர் பிரதிமையை அஜ்ஜிநாலய வேதிகையில் நிறுவுகிறான்.

அச்சிலையே தற்போதும் வழிபாட்டில் உள்ளது. ஆலயம் 400 ஆண்டுகளைக் கடந்திருந்தாலும் மூலநாயகரான சாந்திநாதர் பல நூற்றாண்டுகளை கடந்து பூஜிக்கப் படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1993க்கு பின்னர் ஆச்சார்ய ஸ்ரீ வித்யாசாகர் ராம்டெக்கிற்கு விஜயம் செய்த பிறகு மேலும் பிரசித்தி பெற்று வருகிறது. (94, 2008, 2013, 2017 மழைக்காலத்தங்கலை இங்கு ஏற்று தங்கியுள்ளது சிறப்பாகும்.)

இப்புராதன ஜினாலயத்தில் பல அதிசய நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒரு முறை வித்யாசாகர் முனி மகராஜ் மழைக்காலத்தங்கலில் இங்கு வசித்த வேளையில் மான் ஒன்று பலத்த காயத்துடன் இவ்வாலயத்தில் வந்து வீழ்ந்துள்ளது. அதனைக் கண்ணுற்ற மகாராஜ் அவர்கள் அதற்கு பஞ்சமந்திரம் சொல்லிய சிறிது நேரத்திற்குள் முழுவதுமாக குணமாகி எழுந்து ஓடி மறைந்துள்ளது. இவை போன்று பல அதிசயங்கள் இங்கு நிகழ்ந்துள்ளன.

போன்லே சாம்ராஜ்ஜியத்திற்கு முன்னர், பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன், கோந்த பரம்பரையினர் ஆண்டுள்ளார்கள் என வரலாறு கூறுகிறது.
10 அடியுயர பொன்னிற வண்ணத்தினாலான பகவான் சாந்திநாதர் சிலை காயோசர்க்க நிலையில் காட்சி தருகிறார். இதன் சிற்ப வேலைப்பாடுகள் மிகவும் தொன்மையான, ஒப்பிட முடியாத, வித்தியாசமான வடிவங்களைக் கொண்டது.
     

தொன்மை பகவான் முனுசூவிரத சந்தான காலத்தில் அதாவது வரலாற்று காலத்திற்கும் முந்தியது. ஆச்சாரிய ரவிசேனர் எழுதிய பத்மபுரானத்தில் குறிப்புள்ளது. வன்ஷாகிரி என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாலய மூலவர் அனைத்து கஷ்டங்களையும் நிவர்த்தி செய்வார் என்று நம்புகின்றனர். அந்த மிகையான சிறப்புகளால் இத்தலம் அதிசய க்ஷேத்ரமாக கருதப்படுகிறது. 



                             




சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த ஜினாலயம்.

குஜராத்ய பாணியிலான கோபுரங்கள் மற்றும் கூடங்கள்.

பல்வேறு காலகட்டத்தில் பகுதி பகுதியாக கட்டப்பட்டுள்ளதை காணும் போதே தெரிகிறது.

24 தீர்த்தங்கரர் ஜிநாலப் பகுதி முகலாய அரைகோள  வடிவ உயர்ந்த மேற்கூரை, அடிப்பகுதியில் விசாலமான  கூடத்துடன் காட்சியளிக்கிறது.

கூடத்தின் மையத்தில் ரத்னத்ரய தீர்த்தங்கரர்கள் நுழைவாயிலுக்கு எதிரே கருவறையாக அமைக்கப்பட்டு , மேற்புறம் நெடிய கோபுர அமைப்புடன் மெய்சிலிர்க்க வைக்கிறது.

வட்ட வடிவ கூடத்தின் விளிம்பில் 24 திர்த்தங்கரர்கள் தனித்தனி கருவறைகள்

விளிம்பின் இடது கோடியில் ஸ்ரீ பரதரும், வலது கோடியில் பகவான் பாகுபலியும் காட்சியளிக்கின்றனர்.


           





இக் கூடத்தின் சிறப்பு யாதெனின் அனைத்து பிம்பங்களும் பஞ்சலோக சிலைகளாக 9 அடியிலிருந்து 5.5 அடி வரை உயர சிலைகள் அழகிய சிற்பியின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் ஐநூறு நபர்கள் நாற் திசையிலும் வட்டமடித்து தரிசனம் செய்ய ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.

தரிசனத்தின் முந்தாய்ப்பாக 108 ஸ்ரீ வித்யாசாகர் முனி மகராஜின் பார்வையில் அருள் பெறும் பாக்கியம் கிட்டியது .

அவரது பிரவசத்தை கேட்டு மகிழ்ந்தோம். (புகைப்படம் எடுக்க அனுமதியில்லை)

நம்மூர் சொற்பொழிகளில் அதிகமான பக்தர்கள் என்ற அளவில், அவ்வூரில் நிர்வாணத்தார்களும், மாதாஜிக்களும் அமர்ந்திருந்தனர்.

மதிய வேளையில் 500 பக்தர்கள் அமைதியாக அமர்ந்து அவரது சொற்பொழிவை கேட்டு மகிழ்ந்தனர்.

பக்தர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.





--------------------------------------  







Ramtek has got Historic temple of lord Rama. It is believed that Ramtek was the place where Rama, rested while he was in exile. Legend has it that the aashram of great Hindu sage Agastya was situated close to Ramtek. While the sages performed religious rites, the demons used to disrupt their activities and slayed a great number of holy men. Lord Rama was distressed to hear about this, and took a vow to relieve the world from the demons. 'Tek' means vow in local language, hence the word Ramtek comes from 'Vow of Ram'. Thus it is believed locally that whoever takes a vow at Ramtek is blessed by the gods for its fulfillment. The 'padukas' of Lord Ram are believed to have been worshipped here for centuries.


Ramtek is also known for ancient Jain temple with various ancient statues of Jain Tirthankara.The main idol of Shantinatha, the sixteenth Tirthankar has a legend associated with it.

The present temple is believed to have been built by the King of Nagpur, Raghuji Bhonsale, after his victory over fort of Deogarh in Chindwara. The present temple is 400 years old.

This place is also famous for its relation with great Sanskrit poet Kalidasa. It is believed that Kalidasa wrote Meghdootum in the hills of Ramtek. The Indian Prime Minister Mr. Narsimha Rao contested his election from Ramtek Constituency.

Jain Temple



Shantinath Jain temple


King Raghuji Bhosale, along with his munim (accountant) came to Ramtek for construction of Ram Mandir. One day, the munim came late after arrival of king bhosale. King asked the reason he said "oh king i am jain, i am bounded by the rule that i can't eat food without worshipping jain idol, so i went 30 km away (present day kamptee jain mandir) for worship. This answer satisfied the king, king had ordered his troops to go and search jain temple nearby ramtek. Troops had come back in evening and answered the king, "oh king there is no jain temple in ramtek but some people worship an idol down the hills which may be a jain idol. Munim of king went to see that idol it was placed under the tree and that was jain idol of main deity Shantinath bhagwan. King has ordered to make a big jain temple at that site. Today the main idol of the temple is exactly at that site where it was found.



It became more popular when one of the leading Digambar Jain Acharyas, Acharya Vidyasagar visited and stayed with his sangh in Ramtek in 1993, 94, 2008, 2013 and 2017 for the four months of chaturmas during the rainy season. With his inspiration, a big Jain temple has been constructed. Jain disciples report many miracles attributed to the ancient Jain statue and so the place is more popularly called as Atishayakshetra Ramtek ji by them.


Atishay = During chaturmas of Vidyasagar Maharaj once the injured deer came struggling inside the temple which was bleeding heavily. The deer was about to die. Vidyasagar came outside the room and chanted the holy Namokar Mantra for deer. After few hours deer was cured and was able to run.

The place was ruled by Gond rulers before being captured by the Bhonsle rulers of Nagpur in the eighteenth century.


Nearly 304 cms high, golden coloured idol of Bhagawan Shantinath in the Kayotsarya posture. The architecture of the pinnacles of these temples is very ancient, extraordinary and distinct.

The history of this tirth is believed to belong to the times of Bhagawan Munisuvrat, or it belongs to the pre-historical times. In the Padmapuran written by Acharya Raviseno is Vanshagiri, it is stated that Ramchandraji built a number of Jain temples. This vanshagiri is named Ramtek. the idol of Bhagawan Shantinath installed in Ramtek is believed to fulfil hearts desires. On account of exaggerated influence of the idol, this is also called Atishaya Kshetra.