Showing posts with label Nasik Dt. Show all posts
Showing posts with label Nasik Dt. Show all posts

Friday, September 29, 2017

அஞ்சன கிரி - Anjanagiri


Shri Shantinath Digamber Jain temple

ஸ்ரீ சாந்திநாத் திகம்பர் ஜைன் மந்திர்





It lies in the coordination of (19.95034, 73.58538)











Anjaneri, Anjana giri


This place is just 16 km from Gajapantha Siddha Kshetra!

The huge mountain stands as the second highest peak in Maharashtra at 4500+ feet, and is the same Mountain where Hanuman took birth to Sati Anjana.


As per the inscription of 12th century there were 108 Jain temple at the bottom of this hill.
What remains now is two jain cave temples on hill, where you have Lord Mallinath in sitting posture (3 feet in hight), carved in the wall, and in second cave there were five idols.
There are more ruins around the foot of the Temple (10-12), and 3-4 Digambar Jain Temples are in a very bad state and almost on the verge of getting converted to ruins.

 One of the temple has Mahavir Idol 5 feet in Padmasana posture.

On the way to old jain heritages one new Jain mandir is on promotion basis. It has 500 years old sri parswanathar statue on the vedi of the new temple.

Apart from that a huge 10 feet Santhinath black store idol was on a 20 feet ht platform with staircases to reach.

In near future it will become more important jain pilgrimage centre near nasik surrounding.




அஞ்சநேரி, அஞ்சனகிரி


மஹாராஷ்ட்ராவில் பெரிய மலைகளில் ஒன்றாக விளங்குவது அஞ்சனநேரி மலை. 4500 அடி உயரத்தில் உள்ள இந்த கிராமத்தில் தான் அஞ்சனை ராணிக்கு மகனாக அவதரித்தார் அஞ்சனேயர்.

அங்குள்ள கல்வெட்டு எழுத்துக்களின் படி 12ம் நூற்றாண்டில் 108 ஜினாலயங்கள் இருந்ததாக தெரிகிறது.

தற்போது எஞ்சியுள்ள இரு குகை ஜினாலயங்களில் ஒன்றில் பகவான் மல்லிநாதர் அமர்ந்த நிலையிலும் மற்றொன்றில் ஐந்து சிலைகளும் மட்டுமே தென்படுகின்றன.

பல இடிந்த ஜினாலயங்கள் செல்லும் பாதையில் உள்ளன. இன்னும் சில காலத்தில் அனைத்தும் ஜீரணித்து விடும்  நிலையில் உள்ளன.

ஒன்றில் மஹாவீரர் ஐந்தடி உயரத்தில் பத்மாசன நிலையில் இருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

பழைய ஜினாலயங்களுக்கு செல்லும் பாதையில் புதியதாக ஒரு  ஜினாலயம் உருவாக்கத்தில் உள்ளது.

அதன் அலுவலகத்திற்கருகில் 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீபார்ஸ்வநாதர் சிலையொன்று அமர்ந்த நிலையில் பிரதிஷடை செய்யப்பட்ட சிறிய ஜினாலயம் உள்ளது.

அதன் எதிரே 20 அடி மேடை படிகளுடன் அமைக்கப்பட்டு அதில் 10 அடி உயர சாந்திநாதர் கருமை நிற கற்சிலை அமர்ந்த நிலையில் நிறுவியுள்ளனர்.

புதிய ஜினாலயத்தில் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால்  ஒரிரு ஆண்டுகளில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக மாறுவது உறுதி.




These two photos were got from the office.





Thursday, September 28, 2017

Mhasrul (Panchavadi) - Gajpantha - மஷ்ருல் (பஞ்சவடி) ஜினாலயா - கஜபந்தா


ஸ்ரீ மஹாவீரர் ஜினாலயம்
Sri Mahaveerar Jinalaya 








It lies on the google map with coordination of (20.04883, 73.80663)






 
















கஜபந்தா விலிருந்து 6 கி.மீ. தொலைவில் மஸ்ருல் (பஞ்சவடி) எனும் கிராமத்தில் சமவசரண மந்திர் என்னும் ஸ்ரீ மஹாவிரர் திகம்பர் ஜைன் மந்திர் புதிய பொலிவுடன் காட்சி யளிக்கிறது. மூல நாயகராக  பகவான் மஹாவீரர் அர்த்த பத்மாசன நிலையில் அமர்ந்து அருள் பாலிக்கிறார். 2 அடி உயர அச்சலவைக் கல் சிலையை தவிர பல ஜினர் சிலைகளும், சிறிய உலோகச்சிலைகளும் உள்ளன.

முன் வாயிலுக்கு எதிரில் 20 அடி உயர சலவைக்கல் மானஸ்தம்பம் நிற்கிறது. அதன் இடது, வலது புறம் 24 தீர்த்தங்கரர் சிலைகள் சில நின்ற நிலையிலும், சில தேவமாடம் போன்ற விமானத்திலும் அமர்த்தப்பட்டு வரவேற்கின்றன.

மேல் தளத்தில் மூல கோபுரம் 3 அடுக்கின்  கீழ் ஸ்ரீபார்ஸ்வ ஜினரின் சன்னதியும், நாற்திசைகளிலும் அடுக்கான மாடங்களில் ஜினர் சிலைகளும் அலங்கரிக்கின்றன.  அதன் எதிரில் கைப்பிடிச் சுவருக்கு அருகில் தீர்த்தங்கரர் பாதங்கள் விமானத்துடன் அமைத்துள்ளனர்.

-------------  













Masrul village is 6 km from Gajpantha. Here is beautiful jain temple name Samvsharan jain temple. 

Main idol of this temple is Lord Mahaveer of 2 feet height in suhasan posture is the Mool nayak of the kshetra. Except this idol there are more metal idols. On this temple there are marble standing posture with viman and sitting 24 thirthankars in small gallery in the front of the temple with a 20 ft Manasthamp at the centre.

Many art pictures of jain stories are framed with glass. The roof and surrounding walls of the ground floor lined by coloured glass piece oblique work.

On the top of the garpagriha a Storied conical shape viman with jinar idols in gallery and a shrine room of Shri Parswanath at roof level.


24 Jinar foot print with viman are decorated on both side of the parapet wall.

********************** 



அஜ்ஜினாலயத்திற்கு எதிரில் 300 மீட்டர் தொலைவில் திருப்பணமூரை சார்ந்த பவ்யர் முனி தீக்ஷை ஏற்று சுதர்மசாகரராக தமது அந்திம காலத்தில்  வாழ்ந்த ஆசிரமும், நிஷாதி மண்டபமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


  





On toward opposite side of the road about 300 meter distance a Ashram is there. Jain saint Muni Sudarmasagar,  belongs to Thirupanamur, Tamil Nadu has lead his last life there.


After attaing the last stage of life, through Sallekhana, A Nishathi mandap also built on memory of the sacred saint.