Showing posts with label SHRI VIMALANATHAR. Show all posts
Showing posts with label SHRI VIMALANATHAR. Show all posts

Wednesday, August 29, 2018

Moodbidri PADU BASADI - மூடுபத்திரை படு பஸ்தி


Shri VIMALA, ANANDHA, DHARUMA NATHAR JINALAYA  -
  
ஸ்ரீ விமல, அனந்த, தருமநாதர் ஜிநாலயம் 






Location: with latitude, longitude of (13.07372, 74.99923)

click for map  put on the search box the above figure.

while travelling open navigator on the smart phone find your location and destination as (13.07372, 74.99923)


Bangaluru   Hassan   saklespur   Dharmasala   Moodbidri  = 352 Kms.

Mysore   Srirangapatna   Hassan   saklespur   Dharmasala   Moodbidri  = 285 Kms.








படு பஸ்தி

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த, குருபஸ்திக்கு முன்னதாக தோன்றிய ஜினாலயமாக இங்குள்ள அடையாளம் தெரிவிக்கிறது. மூடுபத்திரை கார்காளா சாலையில், மடத்திற்கு  முன்வரிசையில், நகரின்  மேற்குப்பகுதியில்  அமைந்துள்ளது. அதனால்  படு திசையில் உள்ள பஸ்தி  என்கின்றனர். 

முன்னர் உள்ள உயர்ந்த தூண்களில் அமைந்த மண்டபம் போன்ற காண்கிரீட் அமைப்பு சில காலத்திற்கு முன் கட்டப்பட்டது போன்று தோன்றுகிறது.

தற்காலத்தில் புதுக்கப்பட்ட முகமண்டபம், முற்காலத்து  தூண்களில் நிற்கும்  நவரங்க  மண்டபம், அந்தராளப்பகுதி மற்றும் மூன்று கருவறைகளைக் கொண்ட  பின்பகுதி ஆகியவை திறந்த திருச்சுற்றின் நடுவில் அமைந்துள்ளன.  பலிபீடம் மட்டுமே உள்ளது.

அர்த்தமண்டத்தின் முன்னால் உள்ள இரும்புக் கம்பிதட்டிகளினூடே உள்ளமைப்பு  நன்றாக காட்சி யளிக்கிறது. முதற் கருவறையில் ஸ்ரீ விமலநாதரின் 4 அடிக்கு குறையாத கட்காசன கருங்கல் புடைப்புச் சிலை, பிரபாவளி போன்ற அமைப்புடன்  காணப்படுகிறது. அச்சிலைக்கு முன்னர் ஸ்ரீபிரம்ம தேவரின் சன்னதி உள்ளது.

அதற்கடுத்து மையத்தில் ஸ்ரீ அனந்தநாதரின் 4.5 அடிக்கு  குறையான கட்காசன கருங்கல் முழு உருவச்சிலை பின்னால் பிரபாவளி முக்குடையுடன் அழகாக காட்சியளிக்கிறது.  அடுத்துள்ள கருவறையில் முழுப்பிதுக்கத்துடனான புடைப்புச் சிற்பமாக கட்காசனத்தில் ஸ்ரீதருமநாதர் சிலை பிரபாவளியுடன் கற்பலகையில் காணப்படுகிறது.

மேலும் செங்குத்தாக நிற்கும் மரப்பெட்டிகளில் உலோகத்தினாலான 24 ஜினர்சிலைகள் பிரபாவளியுடன் வைக்கப்பட்டுள்ளன.

கீழ்ப்புற மேடையில் 24 ஜினர் கற்தொகுதி சிலையும், 14 ஜினர் கற்தொகுதி சிலையும், ஸ்ரீ பார்ஸ்வநாதரின் வெண்சலவைக்கல்  சிலைகள் மூன்றும்,  உலோகத்தினாலான ஸ்ருதஸ்கந்தம், கணதரர்  மற்றும் நந்தீஸ்வர தீபமாதிரி  வடிவமும் அழகாக வரிசையில் அமர்த்தப்பட்டுள்ளன. 

இவ்வாலயத்தில் மேல்தளத்தில் ஏராளமான ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டும் அவ்வப்போது ஆராய்ச்சி செய்யப்பட்டும் வரப்படுகிறது.

மிகப்பழைமையான  இவ்வாலய பிரம்மதேவரின் சக்தியின்  மீது  நம்பிக்கை  வைத்து மஹேந்திரன் எனும்  கவிஞர் பக்தியுடன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

----------------------------------------------- 



















Padu basadi

The basadi is  a stone  structure. In the three  sanctum sanctorum of this basadi the  idols  of  Ratnathraya,  Bhagavan  Vimala, Anantha and dharmanatha Jinar are installed and worshipped.

From sunshade structure and Mugamantap  are latest construction. Other Mahamantap and Arthamantap, tri-garbhakudis were constructed very long back prior to Gurubasadi; which is witnessed by a  brass plate inscription.


The first garbhagraha has Shri Vimalanath, 4 feet high granite stone bas-relief with  prabavali. In front of this, shri Brahma deva’s shrine  was installed.  The brahma  deva  here is  believed to be  a great karanika Devatha. Mahendra the poet  has  written a book in  kannada titled Gejje  Brahma,  enchanting the  glory of this brahma deva.


The second and middle vedi contain shri Ananthanath, black granite prathima of 4.5 feet high in Katgasana pose was installed.  The last one has Shri Dharmanath black stone pratima like the Ananthanath was also  installed.

Apart from; granite 24 jinar  cluster, 14 jinar cluster, three white marble Parshwa jinar idols, Shruthaskanth, Gandhar and Nandheeswar model were also  exhibits.


Tuesday, August 14, 2018

Gerusoppa home of several Jinalayas


Gerusoppa Ancient Jinalayas





   






It lies with coordination of (14.22883, 74.66461) in the Google map



27.07.2018
வெள்ளி
மாலை

ஜெருசோப்பா;

நூற்றுக்கணக்கான ஜினாலயங்களை தன்னகத்தே கொண்டிருந்த சமணஸ்தலம்

வடான்பைல் ஸ்ரீ வளையல் பத்மாவதி அம்மனை  தரிசித்த பின் மீண்டும் ஜோக் நீர்வீழ்ச்சி பாலம் வந்தபின் ஹன்னோவர்  சாலையில் பயணிக்கத்தொடங்கினோம். 15 கிலோமீட்டர் சென்ற பின்னர் ஒரு வாகனம் சாலைச் சரிவில் இறங்கியதால் மேலும் செல்ல தடை செய்தனர். அதனை மீட்புக் குழுவினர் கயிற்றைக் கட்டி இழுத்துக்  கொண்டிருந்தனர். சில நிமிடங்கள் கடந்தும் வழி கிடைக்க வில்லை. அதுவோ அடர்ந்தகாட்டு பாதையாக இருந்தது. அங்கேயே நேரம் கடந்து கொண்டிருந்ததால் ஜெருசோப்பா சென்று திரும்புவது கடினமான செயலாகுமே என எண்ணியதால்  சகபயணிகளின் முகம் கலவரத்துடன் மன இறுக்கத்தை வெளிப்படுத்தினர்.  

மீட்புப்பணி முடியவில்லையாயினும் இடையில்,   அவர்கள் மனமிறங்கி இருபுறமும் சேர்ந்திருந்த வாகனங்களை கடந்து செல்ல வழி விட்டனர். தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவ்விடத்தை விட்டு அகன்றோம்.  சற்றொப்ப அரைமணி நேரமாக பயணம் தடை பட்டிருந்தாலும் பல மணி நேரம் ஆனது போன்ற உணர்வு.

மாலை 4.15
ஆகியிருந்தாலும் அடர்ந்த  மரங்களும், காட்டுக்கொடிகளுமாக சாலையின் இருபுறமும் மூடிக்கொண்டு இருந்ததால் அங்காங்கே  வெளிச்சம் குறைவாக தென்பட்டது. எப்படியும் சதுர்முக ஜினாலயத்தையும், ஸ்ரீ ஜ்வாலாமாலினி  அம்மனையும் சென்று தரிசித்து விட வேண்டும்  என்ற  உறுதியுடன் பயணத்தை மாற்றாமல்  தொடர்ந்தோம். கடைசியில் சாராவதி  நதியைக் கடக்க வசதியாக கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு செல்ல சற்று மோசமான பாதை, அப்பாலத்தைக் கடந்ததுமே மேகமூட்டமாக இருந்ததால் மிகுஇருள் சூழ்ந்த அடர்காட்டுப் பயணமாக  இருந்தது. அதில் பாதைப்பிரிவுகள் வரும்போது திசையை கேட்கக் கூட ஆள் நடமாட்டம் இல்லை. மன்னை ஸ்ரீஜ்வாலாமாலினி அம்பாளை மனதில் நிறுத்தி ஆங்காங்கே ஒருவழியை தேர்வு செய்து பயணத்தை தொடந்து கொண்டிருந்தோம்.  சரகுகள் விழுந்து சாலை மூடப்பட்டு மேடுபள்ளம் இருப்பது கூட தெரியவில்லை. இருப்பினும் பெரிய பள்ளங்கள் தடை ஏதும் இன்றி கடந்து கொண்டிருந்தோம். ஆபத்தான வளைவுகள், சரிவில் இறங்கினால் சாராவதி நதியில் மூழ்க வேண்டியது தான். தென் ஆப்பிரிக்க வனப்பயணத்தின் வேட்டைக்குழு போன்று  சிலிர்ப்பாக இருந்தது.


ஜோக் நீர்வீழ்ச்சியிலிருந்து 25 கி.மீ. தூரம்; அரைகுறை இருட்டான அக்காட்டுப்பாதையின் கடைசியில், இடது புறம் செல்லவும் என அம்புக்குறி தென்பட்டது, அப்போதுதான் சரியான பாதையில் நாங்கள் பயணித்துள்ளோம் என்று பேசிக்கொண்டிருந்தபோதே முன்னால் ஒரு வீடு தென்பட்டது. செல்லும் வழியில் மிகப்பழமையான சுற்றுச் சுவருடன் ஸ்ரீபார்ஸ்வநாதர் பஸ்தி, ஸ்ரீநேமிநாதர் பஸ்தி, ஸ்ரீவர்த்தமானர்  பஸ்தி என்ற ஆங்கிலப் பெயர்பலகைகள், தொல்லியல் இலாகாவின் எச்சரிக்கை குறிப்புகளை கொண்ட பலகைகளும் தென்பட்டது. மாலை ஐந்து மணிதான் ஆகியிருந்தது ஆனாலும் அந்திவேளை முடிந்து  இரவை  நெருங்கியது போன்ற ஓளிக்குறைவு.  சீக்கிரம் முடித்துக்  கொண்டு இந்த தொலைவில் ஒதுக்குப்புறமான இப்பகுதியை விட்டு அகல வேண்டும் என்ற நினைப்போடு அனைவருமே இறங்கினர்.



----------------------------------------------- 

கர்நாடகா, ஹன்னாவர் தாலுக்காவில் ஜெருசோப்ப நீர்வீழ்ச்சிக்கு ஏறக்குறைய 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஜெருசோப்பா ஸ்தலம். பலகாலத்திற்கு முன்னர், . கி.பி. 14, 15 வது நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில், சாளுவ மன்னர்களின் தலைநகராக விளங்கிய நகரம்.


அவ்வுண்மையை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜெருசோப்பா வியாபாரிகள் ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மிளகு போன்ற அம்மலைப்பகுதியில் விளைந்த பொருட்களை ஏற்றிச் சென்று வாணிகம் செய்து வந்தனர்; அப்போது ஆண்ட சென்னபைராதேவி அரசினால் அப்பகுதியின் பெருமை உச்சத்தில் இருந்தது. அவ்வரசி ஆண்ட 54 ஆண்டுகளில் செல்வம் பெருக்கெடுத்திருந்தது. ஒரு இந்தியப் பெண்மணி இவ்வளவு நீண்ட ஆண்டுகள் சிறப்பாக ஆண்டார் என்றால் அது சென்னபைராதேவியார் எனும் பராக்கிரமத்திற்கே சேரும்.


பல்வேறு காலகட்டத்தில் சமணர்களின் ஹரப்பா என்றழைக்கப்பட்ட இத்ஸ்தலம்; பல  ஜினாலயங்கள் ஒப்புஉயர்வற்ற கட்டுமானத்துடன்  இருந்ததை அப்போதைய இடிபாடுகளை, எச்ச மிச்சங்களைக் இப்போது காணும் போது தெரிந்து கொள்ளலாம்..


அவையனைத்தும் பூமிக்குள் புதைந்தும், பாராமரிப்பின்றி இடிந்தும், இந்த மேற்குத்தொடர்ச்சி மலை அடர்காட்டின் மரம் செடிகொடிகள் விழுங்கியும் இருக்கலாம்.



எஞ்சிய சிலவற்றையாவது காணும் பாக்கியம் இன்று கிட்டயதே என்ற ஆர்வம் மேலோங்க….

-----------------------------------------------         

ஸ்ரீ 1008 ஸ்ரீ பார்ஸ்வநாத தீர்த்தங்கரரு 

ஸ்ரீ ஜ்வாலாமாலினி அம்மனவாரு ஜினாலயா
   






 

ஸ்ரீபார்ஸ்வநாதர் ஜினாலயம்; போகும்பாதை மழையின் காரணமாக  வழுக்கலாக இருந்தது. முன்புறம்  ஆங்கில A வடிவ பிள்ளைக் கொட்டகையுடனான பலநூறு ஆண்டுகளைக் கடந்த புராதன ஜினாலயம் என்பது கட்டமைப்பைப் பார்த்தாலே தெரிந்தது.


சிறிது நேரத்தில் பண்டிட்ஜி பூஜிக்கும் முறையுடன், குளித்து மடித்துதுணி அணிந்து, வந்து திரையை விலக்கி மூலவர் ஸ்ரீ பார்ஸ்வ  ஜினருக்கு தீபஆராதனை காட்டியதோடு சில விளக்கங்களும் அளித்தார். அந்த  ஸ்தலத்திலிருந்த ஸ்ரீ ஜ்வாலாமாலினி  அம்மன் தான் சிம்மனஹத்தே சென்று யதாஸ்தானத்தை மாற்றியுள்ளது. ஆனால் அதன் மகிமை இன்னும் இங்கு குறையாமல் இப்பிரதேசத்தில் உள்ளது என்பதை அத்தெய்வீகச் சூழலே நிரூபித்துக் கொண்டிருந்தது.


நான்கடி உயர இருஅடுக்குகளைக் கொண்ட பிரபாவளைவின், முக்குடை கீழ் 2 அடி உயர ஸ்ரீபார்ஸ்வநாதர் எழுதலை தரணேந்திரர் பானாமுடியுடன் வழவழப்பான கருங்கல்லில் அர்த்த பத்மாசன நிலையில் புடைப்புச்சிற்பமாக காட்சியளித்தார். அவருக்கு இருபுறமும்  அவர் தலைக்கு மேல் உயரத்தில் இரண்டு சாமரைதேவர்களும் தென்பட்டனர். அவ்வேதி மேடையில் ஸ்ருதஸ்கந்தம் மேலும் பகவான் சந்திரப்ரபர், ஒரு அடிக்கும் கூடுதலாக ஸ்ரீ ஜ்வாலாமாலினி உலோகச்சிலை எட்டு கைகளில் ஆயுதத்துடன் உக்கிரமாக நின்றிருந்தது. 



கருவறைக்கு வெளியே தற்போதும் ஒரு இரண்டு அடி ஸ்ரீ ஜ்வாலாமாலினி கருங்கற் சிலை வலது புறம் அமர்ந்திருந்தது. மேலும் இடதுபுறம் குதிரை விரனைப்போல கருமைநிற கல்லிலான ஸ்ரீ பிரம்மதேவர் சிலை; அழகிய ஆபரணங்களை அணிந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் இரண்டுமே இருந்தன.




அடுத்தாற்போல்…

அவ்வாலயத்தின் பக்கத்தில் இடைபாடுகளில் கிடைத்த சில ஜினர் சிலைகள் பிரபாவளியுடன்  நின்ற கோலத்தில் தென்பட்டன.  மேலும் சில அழகிய வேலைப்பாடுகளுடன் தேவ, தேவியர், துவாரபாலகர், சாமரைதாரிகளின் கற்சிலைகளும்,  ஆலயத்தூண்  போதிகைகளும், அலங்கார சிற்பவேலைப்பாட்டுடன் கருங்கல் பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன. இவை யனைத்தும் இடிந்த ஜினாலயங்களிலிருந்து கிடைத்த எச்சமிச்சங்கள்.

அதன் பின்னர் ஏதேனும் ஆலயம் என்று திரும்பியபோது பண்டிட்ஜி திசையைக் காட்டினார். அடர்ந்த கானகத்தில் மறைவாக உள்ள ஒரு பிரம்மாண்ட  கட்டமைப்பு சற்று தொலைவில் தெரிந்தது. செல்லும் வழியே அவ்வளவு நேர்த்தி, சரியான அளவு சாலை, ஒரு பள்ளம் கூட ஏற்படாத புற்கள் முளைத்த மேட்டுடனான இருபுறம் பூச்செடிகள் வளர்க்கப்பட்ட 400 மீட்டர் பாதை.


முற்காலத்தில் அப்பகுதியை ஆண்ட பேரரசி சன்னபைராதேவி தினமும் வந்து தரிசித்து போயிருக்க வேண்டும். அதனால் தான் அவ்வழி இன்றும் அவள் பெருமையை பறை சாற்றிக்  கொண்டிருக்கிறது. அருகே செல்லச்செல்ல அழகிய ஹொய்சள கலையின் கட்டுமானத்தில் ஒரு சதுர்முக ஜினாலயம் முழுவதுமாக தெரிய வந்தது. 12 அடியுயர மேட்டுப்பகுதியில் உருவாக்கப்பட்டிருந்தது. தற்போதும் அப்பகுதியை தொல்லியல்  துறையினர் சுத்தமாக, புல்தரைகளுடன், தளவரிசை பாவித்து அழகுபட பராமரிப்பது பார்த்தாலே தெரிந்தது.



அந்த அடர்ந்த காட்டின் அமைதியிலும் ஒரு சப்தம் மனதில் ஒலித்துக் கொண்டிருந்தது. அது என்னவென்று தேடியபோது, அவ்விடிபாடுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஜெருசோப்ப மக்களால் வணங்கப்பட்ட பேரரசி, மஹாமண்டலேஸ்வரி சென்னபைரதேவியின் வரலாற்று நிகழ்வுகளாக இருந்தது. ஜெருசோப்பாவில் சமணத்தை வளர்த்த அந்த அரசியின் சரிதத்தை அசைபோட்டபடியே அவ்வாலயத்தினை நெருங்கினேன்…

----------------------------------------------------------  

Gerusoppa, Home to Several Basadis (Jain Temples)


 Frequently suggested to as the ‘Harappa of Jains’, Gerusoppa is institution to several basadis (Jain temples) with exclusive architecture, hundreds of inscriptions, groups of temples and structures that were all in the past part of an overseas trade hub. Currently, unfortunately, most of them have either been hidden under centuries of earth or endured as ruins, absorbed by the dense forests of the Western Ghats.

The history of Jainism in South India and its influence on the life and thought of the people is a fascinating subject. No topic of ancient South Indian history is more thought-provoking than the origin and development of the Jains who, in times past, intensely affected the political, religious and literary establishments of South India. It has occasionally been thought that an associated account of the Jains could not ever be written.

Rani Channabhairadevi Chaturmukha Basadi of Gerusoppa Situated deep inside the evergreen Sharavathi valley on the stores of the Sharavathi river, neither the sanctuaries nor the antique town can be accessed without difficulty. While Jain believers crowd the place in large numbers using private vehicles, the villages are more or less off limits to tourists due to an absence of publicity and information.

Previously known as Haive, Gerusoppa was afterwards named Nagar Bastikeri and subsequently Ngaire. Formerly a famous center of trade and commerce, Gerusoppa was ruled by the Saluva kings. While Honnavar functioned as a harbor for internal trade, nearby Bhatkal was celebrated as an intercontinental harbor.

The Saluva kingdom reached its zenith under the regime of Rani Channabhairadevi, who ruled between 1554 and 1603, and hailed as Mahamandaleshwari. Living the followers of Jainism, the queen organized the creation of the historic Chaturmukha Basadi in 1562. With several ship-loads of pepper and spices being methodically traded to the west, Gerusoppa was often the sticking point between numerous princely states. The rulers of Keladi were frequently at war with Gerusoppa for jurisdiction over the expensive province.

Moreover, Channabhairadevi had gone to war with the Portuguese, who attempted to grab the ports and take the reins of the spice trade. Two times, once in 1559 and then again in 1570, the queen efficaciously crushed the Portuguese maritime force with her military stratagem.

-------------------------------------------- 


ஜெருசோப்பா பேரரசி சென்னபைராதேவி,

மஹாமண்டலேஸ்வரி, மிளகுராணி….


அவ்வரசியார் ஹைய்வா, துளுவா, கொங்கன் பிரதேசத்தை தன் ஆட்சிக்குட்பட்டதாக வைத்திருந்தார் என கல்வெட்டுச் சான்று பகர்கின்றது. அதாவது தற்கால வட, தென் கன்னடப்பிரதேசம், கோவா மற்றும் மலபாரின் தென்பகுதியாகும்.


இம்முழுப் பிரதேசமும் மிளகு நாடென்றால் மிகையாகாது. அந்த கொடிவகை மிகுதியாக வளர்ந்து காய்த்துக் கொண்டிருந்தது. அவ்வகை மிளகின் தரத்திற்கு  ஐரோப்பிய சந்தையில் நல்ல விலை இப்போதும் கிடைக்கிறது. அதனால் பேரரசி சன்னபைராதேவி மிளகுராணி என்றே அக்காலத்தில் அழைக்கப்பட்டார். 


விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடைந்த நேரமானதால் தன் ஆட்சியை விஜயநகர துணைப்பேரரசு என்றே அழைத்துக் கொண்டார். எப்போதும் போர்த்துக்கீசியரின் ஊடுருவலை கண்காணிப்பதோடு, பக்கத்து நாடான கிலாடி அரசு மற்றும் பில்ஜி தலைமையிடமிருந்தும் தன்நாட்டைக் கவனத்துடன், எச்சரிக்கையுடன் பாதுகாத்து வந்தார்.


அவர் அரசவையில் சமணப் பெரியாரும், முனிவருமான அகளங்கர் எனும்குரு வாழ்ந்ததினால் சமணத்தின் பால் பற்றுக் கொண்டிருந்தார். அதனால் ஜெருசோப்பாவில் வாழ்ந்த கடல் வணிகம் செய்த வியாபாரிகள் கட்டிய பல ஜினாலயங்களுக்கு  அனுமதி அளித்ததோடு, தானும் சதுர்முக  பஸ்தி போன்று சில ஆலயங்களை நிறுவினார். அவற்றின் பராமரிப்புக்கும் வகை செய்திருந்தார்.  அதனால் அவ்வரசி மஹாமண்டலேஸ்வரி என்றும் போற்றப்பட்டார்.


அவ்வேளை பல்லாயிரம் ஜைனர்களும், நூற்றுக்கணக்கான ஜினாலயமும், சமணச்சின்னங்களும் அப்பகுதியில் இருந்துள்ளன என்பதை இப்போதைய இடிபாடுகளைக் காணும்போதே தெரிந்து கொள்ளலாம். சமணம் கோலோச்சி யிருந்த ஸ்தலமாகும்.


ஆனால் பிற்காலத்தில் கிலாடி அரசனும், பில்ஜிதலைவரும் சேர்ந்து தாக்கியபோது அரசி சென்னபைராதேவி பிடிபட்டு, சிறையில்   சிலநாட்களில் இறந்து போனார் என்பது வரலாறு. அதன் பின்னர் சமணம் பல பின்னடைவை சந்தித்தது. முகலாயர் காலத்தில் பெரும்பாலான  ஜினாலயங்கள்  அழிந்து பட்டன. பெரும்பாலான சமணர்கள் முகலாயக் கொடுமைக்கும், பெருமழைக்கும் பயந்து இடம்பெயர வேண்டியதாயிற்று.


அவ்வேளையில் சாசன தேவி ஸ்ரீ ஜ்வாலாமாலினி யக்ஷியும் தன் யதாஸ்தானத்தை முனிவர் பத்ரபாகுவின் மூலம் இடம்பெயர்ந்து சிம்மனஹத்தே ஸ்தலத்திற்கு மாற்றினார் என்பதையும் நாம் அறிவோம்.


இந்திய வராலாற்றில் சிறப்பான ஆட்சிக்காலம் என்று பொறிக்கப்பட்ட; மஹாமண்டலேஸ்வரி, மிளகுராணி என்றழைக்கப்பட்ட: ஜெருசோப்பாவை ஆண்ட துணிவுமிக்க, அன்பான, மக்களுக்காக எதையும் தாங்கும் துணிவுடைய, ஆதாரத்தூணா விளங்கி சமணத்தையும்  காத்த பேரரசி சென்னபைராதேவி யின் காலம் முடிவுக்கு வந்தது.



----------------------------------------------- 

Chennabhairadevi, the Queen of Gersoppa.

Chennabhairadevi  "Pepper Queen"


The municipality of Gerusoppa is located about 30 kms from the well-known Gerusoppa Falls on the banks of Sharavathi river in Honnavar taluk .

Gerusoppa is 25 km from the outlet of Jog Falls—a long time ago functioned as the capital of the Salva empire that reigned over the region between 14th and 15th centuries. Acknowledged to have trade interactions with Europe, the Middle East and Africa, the empire reached its pinnacle under the supremacy of Rani Chennabhairadevi. She governed over contemporary Dakshina Kannada, Udupi, and Uttara Kannada for 54 years: the lengthiest reign by any Indian woman head of state.

 Inscriptions call Chennabhairadevi, as ruler of Haiva, Tuluva and Konkan areas. These roughly comprised of North and South Kanaras, southern region of Goa and Malbar.

 This entire belt was known as pepper country, where the spices grew abundantely in the virgin forests, which were in great demand in Europe. Actually Chennabhairadevi was known as Raina- Da-Pimenta or "Pepper Queen".

Though the Vijayanagara empire was on the decline, the queen called herself a subordinate of Vijayanagar rulers. She was always busy checking the advances of Portuguese. At the same time she had to be ever alert with the rulers of the adjoining Keladi kingdom and Bilgi chiefs,. They always tried to grab the harbors and trade.


Akalanka, the Jain scholar and Bhattakalaka, the renowned grammarian were protégés of Gersoppa queen.


The efforts of Keladi  chief Hiriya Venkatappa Nayaka and Bilgi chiefs continued to pull her down. They jointly attacked Gersoppa, completely defeating the brave queen. Gersoppa thus became part of Keladi kingdom. The ageing queen was taken a prisoner and died in a prison in Keladi.

Thus ended the rule of a brave, kind, tolerant and benevolent queen who perhaps had the longest reign as a woman ruler in Indian history. 

-----------------------------------------------  


சதுர்முக பஸ்தியை மிகுந்த ஆச்சர்யத்துடன் அனைவரும் காண அணுகிய வேளையில்,  வந்திருப்பதை அறிந்து அரசுப்பாதுகாப்பாளர் வந்து திறந்து விட்டது தெய்வச்செயல் என்று தான்  கூறவேண்டும். சுற்றிலும் புகைப்படம் எடுப்பதைக் கண்டு என்னிடம் வந்துநின்றார். நான் புரிந்து கொண்டவனாய் நிறுத்திக் கொண்டேன். உள்ளே புகைப்படம் எடுக்க கட்டாயமாக அனுமதியில்லை என்று சொன்னார்(கன்னடத்தில்) அதுவாகத்தான்  இருக்கும் என்று புரிந்து  கொண்டேன். தலையாட்டிவிட்டு, உள்ளே சென்றேன். அருமை அருமை அதன் அமைப்பே அவ்வளவு சீரான அளவுடன் காணப்பட்டது. அக்காப்பாளரிடன் கெஞ்சிபடி ஓரிரண்டு உட்புறத்தோற்றத்தை  (settings ஐ சரிசெய்யாமலே) அவசர அவசரமாக காமராவுக்குள் நுழைத்தேன். அனைவரும் உட்புற அந்தராளத்தை ஒரு சுற்று சுற்றி நாற்புற தீர்த்தங்கரர்களையும் வணங்கினோம்.

----------------------------------------------- 


சதுர்முக பஸ்தி,


தனித்துவம் மிக்க ஜினாலய அமைப்பாகும். நான்கு புற நுழைவாயிலைக் கொண்டிருக்கும். சிற்ப சாஸ்திரத்தில் இவ்வமைப்பை சர்வதோபத்ரா என்றழைப்பர். தமிழகத்தில்  கொழப்பலூர் போன்ற  ஜினாலயத்தில் இவ்வமைப்பைக்  காணலாம்.

சதுர்முக பஸ்தி கர்ப்பகிருஹம், அந்தராளம் (முன் கூடம்), நவரங்க மண்டபத்துடன் நான்கு திசையிலும் வாயில் மற்றும் ஏறுபடிகளைக் கொண்டிருக்கும்.  ஆலயத்தின் முழுவடிவமும் நட்சத்திர வடிவ அஸ்திவார கடைக்காலில் சுவர்கள் எழுப்பப்பட்டு, வெளிச்சுற்று பிரகாரத்திற்கான இடமும் ஒதுக்கப்பட்டு அமைக்கப்பட்டது.. நான்கடியுயரத்தில் ஆலோடி போன்ற சுற்று தளத்தில், வாயில் நிலையின் அடிப்படி இறுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.  வாயிற் நீங்கலாக நிலையுயர சுற்றுச் சுவரில் தேவமாடங்கள் அமைத்து அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன், அவற்றுள் சமவசரணத்தில் குறிப்பிட்ட தேவதேவியர் உருவங்கள் புடைப்புச்சிலைகளும் வடித்துள்ளனர்.


நாற்புறமுள்ள வாயில் கட்டுமானமும் துல்லியமாக ஒரே அமைப்பாக காட்சியளித்தாலும், நிலையின் மேற்புறம் திர்த்தங்கரரின் சிலை வடிக்கப்பட்டும், இருபுறமும் பெரிய துவாரபாலகர் பாதிக்குமேல் துருத்திய புடைப்புச்சிற்களாக நிற்கின்றன. தென்புற நிலையின் மேற் கஜலக்ஷ்மி யுருவம் தனித்துவமாக காணப்படுகிறது. தேவகோட்டகங்கள் மேற்புற கோபுர அமைப்புடன் திராவிட, நகரா கலைச்சிற்பங்களுடன் காணப்படுகிறது. ஒட்டுமொத்த கட்டமைப்பிற்கும் மேல் விமானமோ, கோபுரமோ தென்படவில்லை. மொட்டை மண்டபம் போன்று தளம்போட்டு மூடப்பட்டுள்ளது. நான்கு முன்மண்டபமும் பக்கத்திற்கு  இரண்டு நகாசு வேலைப்பாடுகளைக் கொண்ட எட்டு தூண்கள் நிற்கின்றன.


ராணி சென்னபைராதேவி யினால் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சதுர்முக பஸ்தியின் மையப்பகுதி நான்காக பிரிக்கப்பட்டு, மூலவ அறைத்திறப்புடன் பக்கத்திற்கு இரண்டு தாங்கும் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திசைப்பார்வை நீங்கலாக மற்ற கோடிப்பகுதிகள் சுவர்களால் அடைக்கப்பட்டு சுவரின் நடுவே கோபுரத்துடனான ஆலயம் போன்ற சிற்ப அமைப்பும் புடைப்பாக காணப்படுகிறது.  நவரங்க கூட நாற்புற திறப்பின் மையத்தில் தீர்த்தங்கரர் சிலைகள் புட்டப்பகுதி மட்டுமே அமரக்கூடிய  சிறிய தாமரைமேடையில் அர்த்த  பத்மாசன நிலையில் நிறுவப்பட்டுள்ளன.


ஸ்ரீ அஜிதநாதர், ஸ்ரீ சம்பவநாதர், ஸ்ரீ அபிநந்தன நாதர், ஸ்ரீ விமலநாதர் என நான்கு முழு உருவச்சிலைகளும் சிறிய மேடையில் அமர்ந்திருப்பது வித்தியாசமாக தோன்றினாலும், அழகான கலைநய அளவுகளுடன் காட்சி தருகின்றன. மிகவும் வழவழப்பாக தேய்க்கப்பட்ட கருமைநிறக் கல்லிலான நான்கு தீர்த்தங்கரர் சிலைகளும் திசைக்கொன்றாக சரியான அளவுடன்  துல்லியமாக அமைத்திருப்பது வியப்பை அளிக்கிறது.


அந்தராளத்தையும், நவரங்க கூடத்தையும் பிரிக்கும் சுவரில் பல தேவ, தேவியர் வடிவங்கள் மாடங்களில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன.


ஆக மொத்தம் 16 கால்களில் நிற்கும் ஒட்டுமொத்த கட்டமைப்பும் மேற்தளம் அமைக்கப்பட்டு உள்ளது; ஆனால் விமானம் இல்லை. உள்ளே வெளிச்சம் மிகவும் குறைவு.  உட்பக்க சுவர்களின் வேலைப்பாடுகளை காண முடியவில்லை.



கலைநுணுக்கத்துடன் கட்டப்பட்ட இந்த சதுர்முக பஸ்தி ராணி சென்னபைராதேவி 1562ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாக அறிவிப்பு பலகை தெரிவிக்கிறது. கருங்கற்களால் ஆன இந்த பஸ்தி செல்வோரின் கண்பார்வையில் படாத பகுதியில் உள்ளது. விஜயநகர ஆலயக்கலையில் கட்டப்பட்ட இவ்வாலயத்தின் நான்கு புறவாயினில்  எதனுள் நுழைந்தாலும் அனைத்து பகுதிகளையும் காண வகை செய்துள்ள  இக்கூட அமைப்பு சிறப்பான கலைஅம்சமாகும். ஆனால் இங்கு தினமும் நித்ய நியம பூஜைகள் நடைபெறுவதாக தெரியவில்லை.

----------------------------------------------- 









































--------------------------------------------

Architectural Marvel of the Chaturmukha Basadi

Chaturmukha Basadi is a Jain temple unique in its plan as it is open on all four sides (chaturmukha). It is also called Sarvatobhadra in silpasatra texts. Such temples are unique.

The main attraction of Gerusoppa Jain temple , Chaturmukha Basadi is around 400 metres further up. When we reached there, a group of labourers were beautifying the surroundings of the Basadi. I was literally happy to see the authorities taking time to preserve this ASI structure.

The Chaturmukha basadi has a garbhagriha, antaralas (vestibule), navarangas and four entrances with flight of steps. The entire temple is built on a cellar which is in the shape of a star and provides open circumbulatory passage. The outer walls have ornamented niches some of which have gods and goddesses.

The four access doorways are alike and seated tirthankara is carved on the lintel. The three lintels of the doorways have seated tirthankaras although the southern doorway has Gajalakshmi on its lintel. On either side are found the high relief sculptures of dvarapalas well bedecked and standing in dvibhanga. The devakoshthas with Dravida and Kadamba Nagara sikharas contain sculptures. Now there is no roof viman, tower over the whole structure. Then there are four antaralas each of which has two decorated pillars. Thus there are eight such pillars.


Chaturmukha Basadi of Gerusoppa was built by Rani Chennabhairadevi The interior of the Chaturmukha Basadi has navarangas with four prominent pillars in the centre of the enclosure. Thus the sixteen pillars of the Vijayanagara type measure about 10 ft in height. Navaranga is separated by the antarala with a very thick wall. They also have decorated niches to house gods and goddesses.

As the name indicates, Chathurmukha Basadi is a four-faced structure, the names being Ajitha natha, Sambhunatha, Abhinandana & Vimalnatha.

The sole garbhagriha has four seated tirthankaras each facing a different direction. This gives a meaning to the structure fronting four directions. These four tirthankara sculptures are made of black stone and have high glossy polish.


Acclaimed as an architectural marvel, Chaturmukha Basadi was built by Rani Chennabhairadevi back in 1562. Constructed in granite, the Basadi has remained out-of-bounds to sightseers. Constructed in the Vijayanagara style, the basadi has four entrances, one in each of the four compass points, all fronting to the sanctum sanctorum. Though no official prayer rituals are done at the Chaturmukha basadi.


---------------------------------------








இருட்டும் வேளை அடர்ந்த காடானதால் ஒளி மிகவும்குறைய ஆரம்பித்தது அப்போதுதான் உணர்ந்தேன். ஆலயத்தின் அழகினை வர்ணத்தபடியே திரும்பினோம். அப்பகுதியை கடந்ததும். எதிரில் இடிபாடுகளுடன் சில ஆலயங்கள் தெரிந்தன.



அடுத்துச்சென்ற பாதையில் திரும்பி வந்ததும் எதிரில் இடிபாடுகளுடனான கற்களை அடுக்கி வைத்திருந்தனர். அது ஒரு இடிந்த ஜினாலயம் என்று புரிந்தது. பக்கத்தில் ஒரு ஓட்டுக் கட்டுமானம். ஸ்ரீ வர்த்தமானர் ஜினாலயம் என ஒரு பெயர்ப்பலகை அதன்  எதிரே...









ஸ்ரீ நேமிநாதர் பஸ்தி


ஐந்தாறு படிகள் ஏறியதும் தூரத்தில் கருவறை மட்டும் தனிக் கட்டுமானமாக தெரிந்தது. மேலே மொட்டைத்தளம் அமைக்கப்பட்டிருந்தது.  இடையில் இருந்த கட்டிட பகுதிகள் அழிந்து போய்விட்டதாக தெரிகிறது. 100  மீட்டர் சென்றதும் அதன் கதவை அரசுப் பாதுகாப்பாளர் திறந்து காட்டினார்.

4 அடியுயரத்தில் 2 அடியுயர பத்மபீடத்தில் முழுவுருவமாக வழவழப்பான  கருங்கல்லினால் செதுக்கப்பட்ட ஸ்ரீநேமிநாதர் அர்த்த பத்மாசன அமர்ந்த நிலைச் சிலைவடிவம், புட்டப்பகுதிக்கு மட்டுக்குமான மேடையில் அமர்த்தப்பட்டிருந்தது. அவருக்கு பின் பிரபாவளி அழகிய வேலைப்பாடுகளுடன், யாளி வாயிலிருந்து வெளிவந்த கொடிபோன்று நீண்ட அரைவட்டத்தில் பூவேலைப்பாடுகளுடன், அவரது கழுத்துப்பகுதி உயரத்திற்கு மேற்இருபுறமும்  6+6 ஜினர் மிகச்சிறிய புடைப்புச்சிலைகளும் தென்பட்டன. நடுவில் இரண்டு தேவர்களின் புடைப்புச்சிற்பம், கீழ் புறம் இரு சாமரை தாரிகள் புடைப்புச் சிற்பங்கள்; பிரபாவளிக்கும் பிம்பத்திற்கு இடைப்பகுதியில் கழுத்தளவில் மேலும் இரு சாமரை தாரியும், தலைப்பகுதிக்கு மேற்இருபுறமுமாக 11 தீர்த்தங்கரர்கள் அமர்ந்த நிலை மிகச்சிறிய புடைப்புச்சிற்பமும், பெரிய முக்குடையும் அரையிருட்டிலும், ஏற்றி வைக்கப்பட்ட ஒரு தீபஒளியில் தெரிந்தன.


அழகான வடிவமைப்புடன் காணப்பட்ட அச்சிலை விட்டு விலக மனமில்லை, காரிருள் அப்பகுதியை கவ்விக் கொண்டே வந்தது. அதை உணர்ந்ததும் வெளியேற முற்பட்டதால் அவரை விட்டகன்றோம்.


எதிரில்......








ஸ்ரீ வர்த்தமானர் பஸ்தி


ஒரு ஓட்டுக் கொட்டகையைப்  போன்ற  கட்டமைப்பில் மூலவர்மட்டும் அமர்ந்த கோலத்தில் பின்னால்  பிரபையுடன் மற்ற ஜினர்கள் போலவே வழவழப்பான கருங்கற்சிலை காணப்பட்டது. அதன் பிரபாவளியிலும் பூவேலைப்பாடுகள் ஸ்ரீநேமிநாதர் சிலை போலவே 23 தீர்த்தங்கரர் சிறிய புடைப்புச் சிற்பங்கள், யாளிவரிபூவேலை, இருபுறமும் தேவர் உருவம், மற்றும் இருசாமரை தாரிகள் கீழ்ப்புறம் காட்சியளித்தன. ஆனால் பத்மமேடை சற்று நீளமாக முழுஅளவுடன் அமைக்கப்பட்டிருந்தது. மேற்புரம் மொட்டைத்தளம். ஒழுகுவதால் பாலிதீர் பேப்பரால் முழுவதும் மூடப்பட்டு கட்டப்பட்டிருந்தது. அவரை வணங்கியதும் அடுத்து ஒரு ஓட்டுக் கட்டுமானம் அதில் எந்த சிலைகளும் இல்லை என்று பாதுகாவலர் கையசைத்தார்.

------------------------------------------- 

வேனை நோக்கி புறப்பட்ட போது கடைசியாக எதிரில் .....






ஸ்ரீ பார்ஸ்வநாதர் பஸ்தி 


பின் வேனை நோக்கி புறப்பட்ட போது கடைசியாக இடதுபுறத்தில் ஸ்ரீபார்ஸ்வநாதர் பஸ்தி என்ற பெயர்ப்பலகை கண்ணில் பட்டது. அதனுள் அவசர அவசரமாக நுழைந்தேன். ஓட்டுக்கூரைக் கட்டுமானம் அதன் கதவு சாற்றப்பட்டிருந்தது. நல்லவேளையாக தாளிடவில்லை; திறந்து உள்ளிருந்த ஸ்ரீ பார்ஸ்வ ஜினரை தரிசனம்  செய்தேன்.



அரைவட்டமாக படர்ந்த ஏழுதலை நாகபடத்துடன் 4 அடி உயர கட்காசனத்தில் ஸ்ரீபார்ஸ்வ ஜினர் வழவழப்பான கருங்கல் முழு உருவச் சிலை. பிரபாவளி  மற்றவை போன்றிருந்தாலும் தீர்த்தங்கரர்கள் சிலைகள் இல்லை. மேலும்  ஒரு குடை மட்டுமே தலைக்கு மேல் வருமாறு செதுக்கப்பட்டிருந்தது. அவரது கால்புறம் இரு சாமரைதாரி தேவர்கள் வீசிய வண்ணம் இருந்தனர். அப்படியே காமிராவில் நுழைத்துக் கொண்டேன். 

-----------------------------------------------  -
ஆரம்பத்தில் பண்டிட்ஜியுடன் பார்த்த ஸ்ரீ பார்ஸ்வநாதர் ஜினாலயத்தைத் தவிர  வேறு ஒரு ஆலயத்திலும் நித்ய பூஜைகள்  நடப்பதாக தென்படவில்லை.
-----------------------------------------------  

திரும்பிப்பார்த்தால் அனைவரும் வேனில் ஏறி அமர்ந்திருந்தனர். ஓட்டமும் நடையுமாக வந்து ஏறிக்கொண்டதும் மும்முரமாக  வேன் புறப்பட்டது; அந்த ஒதுக்குப்புறமான  அடர்ந்த காட்டுப்பிரதேசத்திலிருந்து வெளியேறும் முடிவுடன்…

உண்மைதான் மிகவும் அடர்ந்த காட்டுப்பகுதி; மதியத்திற்குள் இத்தலத்திற்கு வருவதே சிறந்தது. காட்டு விலங்குகள், இருள் என பல ஆபத்துக்களிலிருந்து தப்பிக்கலாம் என்றெண்ணியபடியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தபோழ்து அந்திமாலை மணி ஆறு.


அங்கிருந்து 5 கி.மீ. கடந்ததும், நிதானமாக சோந்தா மடத்தை அடையும் வழிகளை கூகுள் வரைபடத்தில் தேடினோம். தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்ததால் வலைத்தளம்  கிடைக்கவில்லை. புறப்படும்  முன்பே பார்த்த நினைவு; கொட்கனி, சித்தாப்பூர், சிர்ஸி வழியாக செல்லவேண்டும். இருட்டி விட்டதால் கொட்கனி வழியை தவிர்த்து விட்டு தலக்கொப்பா வந்து சித்தாப்பூர், சிர்ஸி வழியாக, கும்மிருட்டில் சாலையின் இருபுற விளிம்புகளில் மின்னிய எதிரொளிர்விகளை  வேடிக்கைப்பார்த்துக் கொண்டே சோந்தா மடத்திற்கு சென்றடையும் போது கடிகாரம் 9.30 மணியைக் கடந்து விட்டிருந்தது.


மழை… எங்கும் ஒரே உளை; வேனை விட்டு  இறங்கி வழுக்கலைச் சமாளித்து யாத்ரிநிவாஸ் மேலாளரைப் பார்த்தோம். அவரிடம் நான்கு அறைகளை தங்கவதற்கு பெற்றுக் கொண்டோம். ஓட்டுநருக்கு நல்ல பசி (எங்களுக்கும் தான்) உணவைத்தேடினோம். அங்கு கிடைக்குமா என்று பார்த்ததில் நீரைத்தவிர ஏதும் தென்படவில்லை. சரி இன்று ரங்கனம் என்றால் ஓட்டுநர் விடுவதாயில்லை; திரும்பவும் இருளைக் கிழித்துக் கொண்டு 12 கி.மீ. பயணித்து முன்பு கடந்த கூட்டுச்சாலை வந்தபின் ஒரு கடைக்காரர் புண்ணியத்தில் பசியாறிவிட்டு திரும்பினோம் உறங்க….



----------------------------------------  

Our first pitstop was Sri Parshwanatha Temple along with Jwalamalini Temple. This is supposedly the only temple where pooja is performed. 

Apart from the Chaturmukha basadi. A ancient Shri Parshwanath basadi with garbhagriha structure only. The remaining buildings were destroyed. A beautiful polished granite store Shri Parshwanathar statue in arthapadmasana posture on a plinth. A beautiful back ornamental arch has 23 thirthankar bas relief, Tri-umbrella, Shamaradevas were engraved. 

Opposite to Parshwanatha temple was a small basadi which was dysfunctional.

The sanctum sanctorum was almost nil except a stone structure. Outside this, we saw a few stone inscriptions,  There were some Jain statues, idols of some Thirthankaras and a few other inscriptions. Opposite to this on a higher platform are Mahavira Basadi and another Shri Parshwanathar Basadi, both practically not functioning and in dismay.

A beautiful Mahaveera polished granite store prathima was instralled with ornamental back arch has Shamaradevas with single umbrella basrelief.

At Shri Parshwanathar basadi. A standing posture of Shri Parswanathar polished granite statue has Banamudi (snake) with back arch has triumbrella and shamaradevas at the bottom of the stem.

Due to getting darkness at this place we left the place at about 5.45 pm towards sonda mutt.


***********************************