Shri Mahavir Jinalaya
ஸ்ரீ மஹாவீரர் ஜினாலயம்.
SHRI PARSHVANATH DIGAMBER JAIN MANDIR PISANHARI
MADIYA, JABALPUR, M.P.
1008 Shri Parshvanath Digamber Jain Mandir Pisanhari Marhiyaa
Is Atishaya Kshetra (Place of Miracles)
It lies in the coordination of (23.151806, 79.885639) in the google map.
Distance from chenni central to Madiya is 1400 KM
காலையில் மடியாஜி மலக்கோவில்களை பார்வையிட்டோம்.
பார்ஸ்வநாதர், 24 தீர்த்தங்கரர், பாகுபலி நாதர், சாந்திநாதர்
சன்னதிகள் தனித்தனி ஆலய விமானங்களுடன் ஏற்ற இறக்கத்துடன் கட்டப்பட்டுள்ளன.
செல்லும் வழியில் அழகிய கைப்பிடி வேலைப்பாடுகளுடன்,
7" உயர படிகள் ஏறியிறங்க வசதியாக இருந்தது.
1008 சித்த வடிவங்கள் புடைப்புச் சிற்பமாக சிறிய பாறையை இருபுறங்களிலும்
செதுக்கப்பட்ட குகை ஜினாலயத்தில், க்ஷேத்ரபாலகர் நிறுவப்பட்டுள்ளது விசேஷமாக தென்பட்டது.
Morning we got dharshan on the hill Jinalayas.
Pishanhari Shri Parswanathar shrine, 24 theerthangar individual vimans, Shri
Bhagawan Bhagubali , 25 feet granite statue, Shri Santhinathar shrine are built
adjacently.
The parapet wooded arrangement were ease to, while
claiming the hill. Standard 7 inch height are make convenient for raise and
down.
One boulder is itched by 1008 Siddha parameshti emposed
figures. At the bottom a cave had Some Jinar carvings and Shetrabalagar
identity is seems to be special for the place.
******************************
அதன் பிறகு அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமஹாவீரர் ஜினாலய தரிசனம்
கிட்டியது.
மலை இறக்கத்தில் ஸ்ரீ மஹாவீரர் ஆலயம் : நெடிய 35 அடி யுயர
மானஸ்தம்பத்துடன் காட்சியளிக்கிறது.
மூலவரான ஸ்ரீ மஹாவீரர் 4 அடியுயர வெண்பளிங்குக்கல், முழு உருவச்சிலையாக
காட்சி யளிக்கிறார். மேலும் அக்கருவறை வேதிகையில் பல ஜினர் உருவங்கள் நின்ற நிலையிலும்,
அமர்ந்த நிலையிலும் கொற்றக் குடையுடன் கூடிய பீடத்துடனும், பளபள என பித்தளை பிரதிமைகளாக
வைக்கப்பட்டுள்ளன.
பல சிராவகர்கள் மஹாவீரருக்கு அர்க்கியம் கொடுத்துக் கொண்டும்,
1008 திருநாமம் படித்துக் கொண்டுமாக அமர்ந்துள்ளனர் அக்காலைவேளையில்.
At foothill Shri Mahavir Mandir was built and had a
Manasthamb of 35 feet high.
A white marble stone absolute sculpture of Shri Mahavir
is established on the plinth. Also metal idol of Jinars were seated on the same
platform having base and single silver umbrella on the top.
Some shravak, Shravaki were doing the rituals of Argya
and 108 spiritual qualities of Jinar.
*****************
Nandeeswara dweep Jinalaya
நந்தீஸ்வர தீப ஜினாலயம்.
மஹாவீரர் ஜினாலயத்திற்கு பின்புறம் நந்தீஸ்வர த்வீப ஜினாலயம்;
நீள் அரைகோள வடிவ கூரையின் அடியில், 15 அடியுயர தளத்தில், 60 அடிவிட்ட கூடத்தில், பிரம்மாண்ட
நந்தீஸ்வர த்வீப மாதிரி வடிவம் கூம்பு வடிவ கோபுர கலசத்துடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
10 அடி யுயர பஞ்சமேருக்களை
சுற்றி 4.5 அடியுயர குன்று விமானத்தில் ஜின பிரதிமைகள் நிறுவப்பட்டு, திசைக்கு 13 என்றளவில்
நாற் திசையிலும் மொத்தம் 52 ஜினாலயங்களும்
2.5 அடியுயர வட்ட வடிவ மேடையில் வண்ணங்கள்
பளிச்சிட அமைக்கப்பட்டுள்ளன.
அங்கும் தங்குமிட வசதி உள்ளது.
On the back of Shri Mahaveer Jinalaya, Nandheeswar dweep model Jinaya is constructed in a grand manner. A cicular shape 15 feet height structure, having 60 feet diameter of Eliptical Domb with conical shape Viman and kalash on the peak. Total structure is nearly 30 feet high.
Ten feet high Panch Meru is install at the centre of the circular shape platform. 4.5 feet Small shrine of Jinars of thirteen is also installed on four directions of Pancha Meru. All are look colourful while we are circumambulate the total identities.
A Dharmasala also at foothill Jinalayas.
-###########################
ஸ்ரீ வர்ணீ திகம்பர் ஜைன் குருகுல வித்யாலயா, ஜபல்பூர்; மடியா ஜி ஜினாலயத்திற்கு எதிரில் உள்ளது. ஒரு இரவு
அங்கு தங்கி ஓய்வெடுத்தோம்.
அக்குருகுலத்தில் ஒரு அறையில் ஸ்ரீ சாந்திநாதர் மற்றும் சில
ஜினர் உலோக பிரதிமைகள் பளபள வென்று ஜொலிக்கும் வகையில் படிப்படியா வேதிகையில் அமர்த்தப்பட்டுள்ளது.
Shri Varni Digamber jain Gurugul Vidhyalay, Jabalpur. We are stayed at the School over snight. A small mandir is inside the Gurukul building. Nice Stay for one night.
Shri Santhinathar and some other Jinar metal idols are placed on a tiered plinth. All idols are gilitering while worshiping.
#############################
Athinath Digamber mandir
ஸ்ரீ ஆதிநாதர் திகம்பர் ஜினாலயம்
A Athinath Digamber mandir also built at about 500
meters from the Madiyaji hill. It was under the supervision of Param Pujya
Acharya shri 108 Arjavasaga muni Maharaj.
In the ground
floor Shri Adhinath while marble stone, absolute carved statue in the Padmasana
posture is installed on the Plinth. On the back of the while stone Pratima a
grand colourful decoration is also attracted devotees. Many Jinars metal idols
were also seated adjacent to the main pratima. All are having base tiny
platform and top silver Umbrella are shining in attractive manner.
On the first floor Shri Munishuvirath Bhagavan of while
marble absolute sculptured idol is installed on the 3.5 feet platform. On the
back of the while stone Pratima a grand colourful decoration is also attracted
devotees. Many Jinars metal idols were also seated adjacent to the main pratima.
All are having base tiny platform and top silver Umbrella are shining in
attractive manner same as the top floor.
Though it look Small, more spirituality lies in the
temple.
அக்குன்றுக்கு 500 மீ. தொலைவில்; பரம்பூஜ்ய ஆச்சார்ய ஸ்ரீ 108 ஆர்ஜவசாகர் முனி மகராஜ் வழிகாட்டுதலில் கட்டப்பட்ட ஜினாலயம் ஒன்றும் உள்ளது.
ஸ்ரீ ஆதிநாதர் சன்னதி : அழகிய கண்ணாடி வேலைப்பாடுள்ள மேடையுடன் கூடிய விமானத்தில் அமர்த்தப்பட்டுள்ளார். பின்புறம் உள்ள பலகையில் வண்ண வடிவங்கள் கண்ணை கவரும் படி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல உலோக ஜினப்பிரதிமைகள் மேடை, கொற்றக்குடையுடன் பளிச்சென துலக்கப்பட்டு அமர்த்தப்பட்டுள்ளன.
மேற்தளத்தில் அழகிய கண்ணாடி வேலைப்பாடுடைய மேடை மற்றும் விமானத் திற்குள் ஸ்ரீ முனுசூ விரதர் சன்னதியும் உள்ளது. இங்கும் அதேபோல், பின்புறம் உள்ள பலகையில் வண்ண வடிவங்கள் கண்ணை கவரும் படி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல உலோகப ஜினப்பிரதிமைகள் மேடை, கொற்றக்குடையுடன் பளிச்சென துலக்கப்பட்டு அமர்த்தப்பட்டுள்ளன.
சிறியதானாலும் அழகு மிளிரும் வண்ணம் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது அதன் சிறப்பாகும்.