Shri VIMALA, ANANDHA, DHARUMA NATHAR JINALAYA -
ஸ்ரீ விமல, அனந்த, தருமநாதர் ஜிநாலயம்
Location: with latitude, longitude of (13.07372, 74.99923)
click for map put on the search box the above figure.
while travelling open navigator on the smart phone find your location and destination as (13.07372, 74.99923)
Bangaluru → Hassan → saklespur → Dharmasala → Moodbidri = 352 Kms.
Mysore → Srirangapatna → Hassan → saklespur → Dharmasala → Moodbidri = 285 Kms.
படு
பஸ்தி
ஆயிரம்
ஆண்டுகளைக் கடந்த, குருபஸ்திக்கு முன்னதாக தோன்றிய ஜினாலயமாக இங்குள்ள அடையாளம் தெரிவிக்கிறது.
மூடுபத்திரை கார்காளா சாலையில், மடத்திற்கு
முன்வரிசையில், நகரின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. அதனால் படு திசையில் உள்ள பஸ்தி என்கின்றனர்.
முன்னர்
உள்ள உயர்ந்த தூண்களில் அமைந்த மண்டபம் போன்ற காண்கிரீட் அமைப்பு சில காலத்திற்கு முன்
கட்டப்பட்டது போன்று தோன்றுகிறது.
தற்காலத்தில்
புதுக்கப்பட்ட முகமண்டபம், முற்காலத்து தூண்களில்
நிற்கும் நவரங்க மண்டபம், அந்தராளப்பகுதி மற்றும் மூன்று கருவறைகளைக்
கொண்ட பின்பகுதி ஆகியவை திறந்த திருச்சுற்றின்
நடுவில் அமைந்துள்ளன. பலிபீடம் மட்டுமே உள்ளது.
அர்த்தமண்டத்தின்
முன்னால் உள்ள இரும்புக் கம்பிதட்டிகளினூடே உள்ளமைப்பு நன்றாக காட்சி யளிக்கிறது. முதற் கருவறையில் ஸ்ரீ
விமலநாதரின் 4 அடிக்கு குறையாத கட்காசன கருங்கல் புடைப்புச் சிலை, பிரபாவளி போன்ற அமைப்புடன் காணப்படுகிறது. அச்சிலைக்கு முன்னர் ஸ்ரீபிரம்ம
தேவரின் சன்னதி உள்ளது.
அதற்கடுத்து
மையத்தில் ஸ்ரீ அனந்தநாதரின் 4.5 அடிக்கு குறையான
கட்காசன கருங்கல் முழு உருவச்சிலை பின்னால் பிரபாவளி முக்குடையுடன் அழகாக காட்சியளிக்கிறது. அடுத்துள்ள கருவறையில் முழுப்பிதுக்கத்துடனான புடைப்புச்
சிற்பமாக கட்காசனத்தில் ஸ்ரீதருமநாதர் சிலை பிரபாவளியுடன் கற்பலகையில் காணப்படுகிறது.
மேலும்
செங்குத்தாக நிற்கும் மரப்பெட்டிகளில் உலோகத்தினாலான 24 ஜினர்சிலைகள் பிரபாவளியுடன்
வைக்கப்பட்டுள்ளன.
கீழ்ப்புற
மேடையில் 24 ஜினர் கற்தொகுதி சிலையும், 14 ஜினர் கற்தொகுதி சிலையும், ஸ்ரீ பார்ஸ்வநாதரின்
வெண்சலவைக்கல் சிலைகள் மூன்றும், உலோகத்தினாலான ஸ்ருதஸ்கந்தம், கணதரர் மற்றும் நந்தீஸ்வர தீபமாதிரி வடிவமும் அழகாக வரிசையில் அமர்த்தப்பட்டுள்ளன.
இவ்வாலயத்தில்
மேல்தளத்தில் ஏராளமான ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டும் அவ்வப்போது ஆராய்ச்சி செய்யப்பட்டும்
வரப்படுகிறது.
மிகப்பழைமையான இவ்வாலய பிரம்மதேவரின் சக்தியின் மீது நம்பிக்கை வைத்து மஹேந்திரன் எனும் கவிஞர் பக்தியுடன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------
Padu basadi
The basadi is a stone structure. In the three sanctum sanctorum of this basadi the idols of Ratnathraya, Bhagavan Vimala, Anantha and dharmanatha Jinar are installed and worshipped.
From sunshade structure and Mugamantap are latest construction. Other Mahamantap and Arthamantap, tri-garbhakudis were constructed very long back prior to Gurubasadi; which is witnessed by a brass plate inscription.
The first garbhagraha has Shri Vimalanath, 4 feet high granite stone bas-relief with prabavali. In front of this, shri Brahma deva’s shrine was installed. The brahma deva here is believed to be a great karanika Devatha. Mahendra the poet has written a book in kannada titled Gejje Brahma, enchanting the glory of this brahma deva.
The second and middle vedi contain shri Ananthanath, black granite prathima of 4.5 feet high in Katgasana pose was installed. The last one has Shri Dharmanath black stone pratima like the Ananthanath was also installed.
Apart from; granite 24 jinar cluster, 14 jinar cluster, three white marble Parshwa jinar idols, Shruthaskanth, Gandhar and Nandheeswar model were also exhibits.