Showing posts with label Shri MALLINATHAR. Show all posts
Showing posts with label Shri MALLINATHAR. Show all posts

Tuesday, August 28, 2018

KERE BASADI, Moodbidri - கெரெ பஸ்தி, மூடுபத்திரை


Shri MALLINATHAR JINALAYA  -  ஸ்ரீமல்லிநாதர் ஜிநாலயம்





Location: with latitude, longitude of (13.07225, 75.00071)

click for map  put on the search box the above figure.

while travelling open navigator on the smart phone find your location and destination as (13.07225, 75.00071)

Bangaluru   Hassan   saklespur   Dharmasala   Moodbidri  = 352 Kms.

Mysore   Srirangapatna   Hassan   saklespur   Dharmasala   Moodbidri  = 285 Kms.






கேரே பஸ்தி

ஜைனத்தெரு, மூடுபத்திரை கடைசியாக சாலையைக் கடந்ததும் ஒரு குளம் தென்படுகிறது. அதன் கரையில் அமைந்துள்ள பஸ்தியை கேரே பஸ்தி அதாவது குளத்திற்கருகிலுள்ள ஜினாலயம் என்றழைக்கின்றனர்.

இவ்வாலத்தில் மூலவராக ஸ்ரீ மல்லிநாத தீர்த்தங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளனர்.


இவ்வாலயத்திலும் மானஸ்தம்பமும், பலிபீடமும் இல்லாமல், திருச்சுற்றில் நாகராஜர் சிலைகள் புடைப்புச் சிற்பமாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

குடவரையை தாண்டியதும் முகமண்டபமும், மஹாமண்டபமும், அர்த்த மண்டபமும்,  கர்ப்பகுடியுடன்  காணப்படுகிறது. 14ம் நூற்றாண்டைச் சார்ந்ததாக சொல்லப்படும் அனைத்து கட்டமைப்பும் மங்களூர் ஓடுவேய்ந்த கூரையின் கீழ்க்காணப்படுகிறது.

அர்த்த மண்டபத்தில் ஸ்ருதஸ்கந்தம், கணதரர் மற்றும் கருங்கல்லால் ஆன நந்தீஸ்வரதீப மாதிரி வடிவமும் மேடையில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.
அதற்கடுத்த கட்டான கருவறையில் 4 அடியுயர வழவழப்பான கருமை நிறக் கல்லாலான மூன்றடிக்கும் மேலான ஸ்ரீ மல்லிநாதரின் வடிவம்  பிரதிஷ்டை செய்துள்ளனர். அவரைச் சுற்றி கல்லாலான பிரபாவளியின் மேற்புறம் முக்குடை காட்சியளிக்கிறது. வாசலில் பித்தளைக் குமிழ்களால் ஆன படிச்சட்டம் போன்ற  அமைப்பு பிரதிபலிக்கிறது.

ஆலயம் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.
















Kere Basadi

On passing the Jain street, on the banks of a tank a basadi was dedicated to Shri Mallinatha jinar. So it was called as tank (kere) basadi.

After crossing the entryway Mugamantap, Mahamantap, Arthamantap and Garbhakudi block lies in the circumbulance. A Nagaraja shrine also  erected on the pathway.

Shri Mallinatha pratima of polished black stone of  4  feet high is installed on the vedi. A black stone Prabavali also standing around the moolnayak. Sruthaskanth and Gandhar bronze idol and a stone Nandeeswar dhweep are we arranged in orde on a platform.

The temple is maintained cleanly.








Monday, August 27, 2018

DERAMMA SHETTY BASADI, Moodbidri - தேரம்மா ஷெட்டி ஜிநாலயம் மூடுபத்திரை



Shri  ARA, MALLI, MUNUSHUVIRATH JINALAYA  

ஸ்ரீ அர,  மல்லி, முனிசூவிரத  ஜிநாலயம்




Location: with latitude, longitude of (13.07355, 75.00081)

click for map  put on the search box the above figure.

while travelling open navigator on the smart phone find your location and destination as ()




Bangaluru   Hassan   saklespur   Dharmasala   Moodbidri  = 352 Kms.

Mysore   Srirangapatna   Hassan   saklespur   Dharmasala   Moodbidri  = 285 Kms.





தேரம்மா ஷெட்டி பஸ்தி


இவ்வாலயம் உருவாக்கிய சிரேஷ்டியின் பெயரால் அழைக்கப்படுகிறது. மிகப்புராதனமான இவ்வாலயத்தின் தோற்றத்திற்கான அடையாளங்கள் ஏதுமில்லை. ஏறக்குறைய 14-15 ம் நூற்றாண்டில் கட்டியிருக்கக்கூடும்.

பிற ஜினாலயங்கள் போன்றே முகமண்டப கட்டுமானம் தனியாகவும், பின்னர் திருச்சுற்றுக்கு நடுவே நவரங்க மண்டபம், அந்தராளம், கருப்பகுடி என்ற நான்கு பகுதி அமைப்புடன் காணப்படுகிறது.

கருப்பகுடி மைய வேதியில் ஸ்ரீ முனுசூவ்ரத  நாதரின் கருமை நிறக்கல்,  அர்த்தபத்மாசனச் சிலை காணப்படுகிறது. புட்டப்பகுதிக்கு  மட்டுமான பத்மமேடையில் அமர்ந்து அழகாக காட்சியளிக்கிறார். அவருக்கு பின்னால் வெண்கலத்தினாலான பிரபாவளி பூக்கொடிகள் போன்ற புடைப்பு வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. முன்னால் இரு தூண் போன்ற வடிவத்தில் குமிழ்கள் போன்ற சாத்துப்படி சட்டம் போன்று காணப்படுகிறது. அதில் எந்த  ஒரு கோடுகளோ, எழுத்துக்களோ காணப்படவில்லை.

அவருக்கு வலது புறம் சற்று தள்ளிய அந்தராளத்திற்கான நுழைவாயிலுக்கெதிரே தெரியும் படி வெண்பளிங்குக்கல்லால் ஆன ஸ்ரீ அரநாதர் சற்று சிறிய அளவில் அவரைப்போன்றே அமர்ந்த  நிலையில் சிறிய பிரபாவளியுடன் காட்சியளிக்கிறார். அதேபோல் இடது புறம் ஸ்ரீ மல்லிநாதர் வெண்சிலை அமர்ந்தநிலையில் அமைத்துள்ளனர்.

அனைத்திற்கு ஒரே மேடை அமைத்து, அதில் 24 தீர்த்தங்கரர்களின் அம்மூவரை விட சிறிய அளவிலான வெண் சலவைக்கல்லால் ஆன சிலைகள் சிறிய பிரபாவளியுடன் அழகாக காட்சியளிக்கின்றன.

ஒவ்வொரு ஆலயத்திலும் தெய்வச்சிலை பிரதிஷ்டாபூமிகள் அமைப்பு விதவிதமாக காட்சியளிப்பது இத்தலத்தின் தனித்துவமாகும்.

மேலும் மேல்தளத்திலும் ஒரு கருவறையும், அதில் ஸ்ரீ மல்லிநாதர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாலயமும் பக்தர்களின் காணிக்கையை பராமரிப்புச் செலவினங்களுக்காக எதிர்நோக்கியுள்ளன.
































Deramma shetty Basadi


It was named by the founder of the temple. Very ancient look but no exact evidence of identity inside the basadi. May be in between 14-15th Century B.C.. It has separate Mugamantap. Inside circumbulatory navaranga, anthralla and Garbhakudi.


Shri Munushuvirat Jinar, made of black Marble in artha padmasana on one third lotus base. Behind a bronze prabhavali is exibits. Shri Ara jinar and Shri Mallinath jinar of  white marble with bronze prabavali also installed on both side of Munisuvirat.


Apart from, connected platform got 24 white marble jinars with small parabavali on back seated linely is fabulous.


On the top floor has Shri Mallinath jinar shrine is unique. A run through stairs raised on the side. The beautiful Jinalaya maintained by the donations received from visited devotees. 

*************************************

Tuesday, September 30, 2014

GOONAMPADI - கூனம்பாடி



Shri MALLINATHAR  JAIN TEMPLE  -  ஸ்ரீ மல்லிநாதர் ஜிநாலயம் 





Goonambadi lies on the clicked map in the coordination of (12.42132, 79.52981) ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கூனம்பாடி கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )




ROUTE:

Tindivanam → Vandavasi road → Thellar   GOONAMPADI = 29 k.m.

Gingee → Pennagar road → vedal → Kunnagampundi →  GOONAMPADI = 25 k.m.

Vandavasi → Tindivanam road  → Kunnagampundi road  GOONAMPADI = 18 k.m.

Villupuram → Gingee → Pennagar road vedal → KunnagampundiGOONAMPADI = 65 k.m.

Chetpet  → Mazhaiyur   → Desur turn → Desur (Thellar road) GOONAMPADI = 30 k.m.



செல்வழி:.

திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை → தெள்ளாறு கூனம்பாடி  = 29கி.மீ.

செஞ்சி → பென்னகர்   வெடால் கூனம்பாடி  = 25 கி.மீ.

வந்தவாசி → திண்டிவனம்  சாலை   → கூனம்பாடி  18 கி.மீ.

விழுப்புரம் செஞ்சி → பென்னகர்   வெடால்  கூனம்பாடி  = 65 கி.மீ.

சேத்பட்  வந்தவாசி சாலை → தேசூர்   → தெள்ளாறு சாலை  
கூனம்பாடி  =  30 கி.மீ.






 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மல்லி தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து மிதிலாபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து கும்பன் மஹாராஜாவிற்கும், ப்ராஜாவதி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 25 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 55 ஆயிரம் வருடம் ஆயுள் உடையவரும், கலசம் (கும்பம்) லாஞ்சனத்தை உடையவரும், குபேர யக்ஷ்ன், அபராஜிதா யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் விசாகராத் முதலிய 28  கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் பால்குண சுக்ல பஞ்சமி  திதியில் 96 கோடி முனிவர்களுடன் சம்பல கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீமல்லி தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!





Koonambadi,  a village in Vandavasi, about 18 kms.  in the southwest direction near Agarakorakottai. A beautiful, well-maintained Jinalaya built by the native jains, living several centuries ago. However, the Panchkalyan was celebrated 45 years ago, the frequent cleaning, regular colour washing, repairing and polished metal idols make the temple as new one.

The nineteenth Thirthankar Shri Mallinathar statue resides in the sanctum with eight features. That is crownd by two stages shikara and a kalash. In the Arthamandap a white marble made Shri Mallinathar statue, for daily rituals; 24 thirthankars stone made idol, metal idols of Thirthankars, Yakshas, Yakshis , Nandheeswara Dheepam, Maha meru models are arranged on a dias. Muga mandap comprises of Shri Dhrmadevi shrine and multicolored art pictures.

East facing entry and compound wall are surrounded the corridor. An altar and a tall Manasthamp has thirthankars engravings on four sides of bottom and a vimanam with four statues of Shri mallinathar on the top.

Regarding Poojas: Daily pooja, Nandheeswara pooja, margazhi month Mukkudai and special Poojas are conducted regularly.

Annually a procession festival  celebrated on the day of Akshaya thirithiyai for Shri Ananthanathar idol.      



கூனம்பாடி என்னும் கிராமம், வந்தவாசியிலிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் (அகரகொரக்கோட்டைக்கு அருகில்) மேற்கு திசையில் தெள்ளாறுகுன்னகம்பூண்டி சாலையில் 18 கி.மீ. தொலைவில்  அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக இந்த ஊரில் சமண இல்லறத்தார்கள் வாழ்ந்துள்ளனர். அதற்கான சான்றே இவ்வாலயம் ஆகும். 45 ஆண்டுகளுக்கு முன்னர் பஞ்சகல்யாணம் செய்யப்பட்டிருந்தாலும் , தற்போது சீரமைக்கப் பட்டது போன்ற புது பொலிவுடன் பராமரித்து வருகின்றனர். அடிக்கடி வர்ணம் பூசுவதோடு மட்டுமல்லாது, புதிது போல் காணும் திருமேனிகளின் அணிவகுப்பும், பல சீரமைப்பு பணிகளும் சான்றுகளாக உள்ளது.

நிகழ்கால ஜினர்களின் வரிசையில் 19 வது தீரத்தங்கரரான  ஸ்ரீமல்லிநாதரை கருவறையில் மூலவராக  கொண்டு  விளங்குகிறது.  எட்டு சிறப்புகளையும் கொண்டுள்ள அவரது கற்படிமம் பல நூற்றாண்டைக் கடந்து நிற்கிறது. கருவறையில் மேல் இரு அடுக்குகள் கொண்ட சிகரமும், மேற் கலசமும் பாங்காக அமைக்கப் பட்டுள்ளது.  அதற்கடுத்து  அர்த்த மண்டபம்; அதனுள் ஸ்ரீமல்லிநாதரின் வெண்பளிங்கு கல்லால் ஆன படிமம் நித்ய நியமங்களுக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே 24 தீர்த்தங்கரர்கள் கற்சிலையும் , மற்றும் பல உலோக படிமங்களால் ஆன தீர்த்தங்கரர்கள் (பிரபையுடன்), யக்ஷன், யக்ஷி யின் திருவுருவங்கள், நந்தீஸ்வர தீபம், போன்ற சமண சமய விழாக்களுக்கு கேற்ற படிமங்கள் வரிசையாக மேடையில் வைக்கப்பட்டுள்ளன. முக மண்டபத்தில்; சுவர்களில் வண்ண ஓவியங்களும், ஸ்ரீதர்மதேவி சன்னதியும் அமைக்கப் பட்டுள்ளது.

திறந்த வெளி திருச்சுற்றில் அழகிய பலிபீடமும், உயரமான மனத்தூய்மைக் கம்பம்: நாற்புரம் தீர்த்தங்கரர் உருவ சிற்பங்களுடனும், மேற்புர விமானத்தில் நான்கு திசையிலும்  ஸ்ரீமல்லி நாதரின் சிலைகளுடனும் அமைக்கப் பட்டுள்ளது. ஆலய  திருக்சுற்றுக்கு, கிழக்கு நோக்கிய நுழைவாயிலும், மதிற்சுவரும் கட்டப்பட்டுள்ளது.  மேலும் அழகிய நந்தவனமும் பராமரிக்கப்பட்டுள்ளது.

நித்ய பூஜை, நந்தீஸ்வர பூஜை மற்றும் விசேஷ பூஜைகளும் வளமைபோல்  நடைபெற்று வருகின்றது. அக்ஷய திரிதியை அன்று ஸ்ரீஅனந்தநாதர் திருவீதியுலா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.