Showing posts with label Shri PUSHPATHANTHAR. Show all posts
Showing posts with label Shri PUSHPATHANTHAR. Show all posts

Sunday, October 12, 2014

THIRUPANAMOOR - திருப்பணமூர்



Shri PUSHPATHANDHAR JAIN TEMPLE  -  ஸ்ரீ புஷ்பதந்தர்  ஜிநாலயம் 






Location   lies on the Google map in the coordination of (12.76559, 79.57843) ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click THIRUPANAMOOR
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : திருப்பணமூர் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )



ROUTE:

Tindivanam Vandavasi→kanchipuram road→Ayyankargulam turnTHIRUPANAMOOR = 83 k.m.

Gingee Chetpet Cheyyar→ Kunnathur THIRUPANAMOOR    = 83 k.m.

Vandavasi → kanchipuram road→Ayyankargulam turn THIRUPANAMOOR    = 46 k.m.

Arni  → Kalavai   → Perunkattur   THIRUPANAMOOR   = 45 k.m.

Kanchepuram  → Ayyankargulam turnTHIRUPANAMOOR  = 20 k.m.



செல்வழி:.

திண்டிவனம் → வந்தவாசி→காஞ்சிபுரம்   சாலை →அய்யங்கார் குளம் திருப்பம்  திருப்பணமூர்= 83 கி.மீ.

செஞ்சி சேத்பெட்→ செய்யார்   →  குன்னத்தூர் திருப்பணமூர் = 83 கி.மீ.

வந்தவாசி → காஞ்சிபுரம்   சாலை →அய்யங்கார் குளம் திருப்பம்  →  திருப்பணமூர்   46 கி.மீ.

ஆரணி  → கலவை   → பெருங்காட்டூர்  →   திருப்பணமூர்    = 45 கி.மீ.

காஞ்சிபுரம்
→அய்யங்கார் குளம் திருப்பம்    திருப்பணமூர்    =  20 கி.மீ.











 ஸ்ரீ புஷ்பதந்த தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா மி ஸ்வாஹா


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து காகந்தி நகரத்து இக்ஷுவாஹு வம்சத்து சுக்ரீவ மஹாராஜாவிற்கும், ஜெயராம மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும்,  வெள்ளை வண்ணரும் 100 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 2 லக்ஷம் பூர்வம் ஆயுள் உடையவரும், கரிமஹரம் (முதலை) லாஞ்சனத்தை உடையவரும், அஜித யக்ஷ்ன், மஹாகாளி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் விதர்பராதி முதலிய 88 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேதகிரியில் பாத்ரபத சுக்ல அஷ்டமி திதியில் ஒரு கோடாகோடி 99 லக்ஷத்து 7 ஆயிரத்து 780 முனிவர்களுடன் சுப்ரபாச கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீபுஷ்பதந்த தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!






Thirupanamoor, a village is located southwest of Kanchipuram, after 17 kms travelling, towards vandavasi and get right turn at Ayyangarkulam junction towards Kalavai. Since many centuries more jains are living in the village. Karanthai is the nearest temple for them. But they built a Jinalaya in the 15th century AD with all features.

Many Jain scholars, ascetics, celebates are being lived there. Remarkable natives are, beloved Shri. Adhi nainar (writer, editor of Dharumaseelan, first Tamil monthly magazine) and Reverent Shri T.S.Sripal, protestor of sacrificial on survivals (especially in temples), the then government passes an act on the captioned. He was appreciated by beloved Mahathma Ganthiji and Jawaharlal Nehru also.  Futher the holy village offered more, ascetic Vajrasinga peruman, Shri Sutharmasagara muni, Saint Gajapathy sagar, Shri S. Bharathachakravarthy sasthry, shri A.Simmachandra sastry and so on.       
The well maintained Jinalaya is owned by Shri Pushpathanthar, as main deity, and more features of Dravidian temple design.

The corridor surrounded by compound wall and east facing Main entry, crowned by small tower. Then an altar; Manasthamp pillar, consists of four thirthankars engraving at the bottom and small temple design with four standing thirthankars on the top. Beginning of the corridor has pavilions of 24 thirthankars footprints (individual block), three footprints of celibates, shri Bhagavan Bhagubaly are constructed. Next a beautiful garden comprises of all fruit trees and flower shrubs. On the north a Santhi (Kalash) mandap got a jina library.

Middle of the corridor ie vedi block: Sanctum, crowned by two stage viman with shikara and Kalash. First stage consist four thirthankars on four directions, in sitting posture; and another four on the griva position in standing posture. Shri Pushpathanthar embraces the vedi-pedestal. The statue is made of lime martar, with eight features of Samavasaran Jinar, multicolored, looking beautifully.

Arthamandap; in decreased width contains all metal idols, of Thirthankars, especially several Shri Parswanathar, Shri Bahubaly covered by Praba structure,Nava devatha, Panchaparameshti, 72 and 24 Thirthankars cluster, Sruthaskandam, Yakshas, Yakshis are exhibits on a wooden bench on both side.

Next in Mahamandap, Shri Pushpathanthar stone idol with eight features, designed as jinar in protrude carving, for daily Abhishek and pooja. North of the pavilion, stone staues of Shri parswanathar, Shri Dharanendran, shri Brahmayakshan, shri Padmavathy, Shri Jwalamalini is arranged on platform.
On the way to karanthai village, a Nishathisthana mandap is built, dedicated to Shri Agalanka Acharyar, on west side of the road.


In addition to regular poojas a float urchav is celebrated for Shri Dharanendra Padmavathy in the March months’ Nandheeswara Ashtanigam.




காஞ்சிபுரத்திலிருந்து தென் மேற்குப்பகுதியில் அய்யங்கார்குள திருப்பத்தில் உள்ள, வலதுபுற சாலையில் 20 கி.மீ. பயணித்தால் திருப்பணமூர்(திருப்பறம்பூர்) என்னும் சிற்றூர் உள்ளது. அதில் பல நூற்றாண்டுகளாக சமணர்கள் வாழ்ந்து வருகின்றனர். அருகில் உள்ள கரந்தை ஆலயம் சென்று வழிபாடு நடத்தியவர்கள், தங்கள் ஊரிலும் கி.பி.15ம் நூற்றாண்டில் ஒர் அழகிய, அனைத்து அம்சங்களுடன் கூடிய ஜிநாலயத்தை நிறுவி உள்ளனர்.

அவ்வூரில் பல பெரியோர்கள், முனிவர்கள், அடிகளார்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களில் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த பெருமதிப்பிற்குரிய ஸ்ரீஆதி நைனார், (பல  நூல்களையும், தருமசீலன் என்னும் முதல் தமிழ் மாதஇதழையும் சமணத்திற்காக தந்துதவியவர் என எனது பாட்டனார் கூறியுள்ளார்) மற்றும் டி.எஸ். ஸ்ரீபால் (நான் மன்னார்குடியில் சிறுவயதில் கண்ட பெருமகனார்) ஆகியோர் தோன்றிய ஊராகும். திரு. டி.எஸ். ஸ்ரீபால் அவர்கள் அக்காலத்தில் உயிர்பலி தடைச் சட்டத்திற்கு அரும்பாடு பட்டு வாங்கித்தந்தவர் (எனவும்,  அவர் செல்லாத ஜைன ஸ்தலமே தமிழகத்தில் இல்லை எனவும் எனது தந்தையார் சொல்ல கேள்விப்பட்டுள்ளேன்.)

மேலும் வஜ்ரசிங்க பெருமான், ஸ்ரீஸுதர்ம சாகர முனிவர், கஜபதி சாகர், திரு.ச.பரதசக்கரவர்த்தி ஜெயின் சாஸ்திரி, திரு.அ. சிம்மசந்திரன் ஜெயின் சாஸ்திரி மற்றும் பல சான்றோர்கள் வாழ்ந்த புண்ணிய தலமாகும். இன்னும் பல சான்றோர்களும் வாழ்ந்துள்ள முக்கிய ஸ்தலமாகும்.

ஸ்ரீபுஷ்பதந்தருக்கு சொந்தமான இவ்வாலயம் நன்கு பராமரிப்பில் உள்ளது. கிழக்கு முகமாக அமைந்த இவ்வாலயம் திராவிட பாரம்பரியத்தில் உள்ள அனைத்து அம்சங்களும் ஒருங்கே அமைந்துள்ள ஒரு ஆலயமாகும்.

நுழைவுவாயில் சிறிய ராஜகோபுரம் ஐந்து கலசங்களுடன், திருச்சுற்று மதிற்சுவருடன் இணைந்துள்ளது. உள்ளே பலிபீடம் சதுர வடிவிலும், மனத்தூய்மைக்கம்பம் கீழே பீடத்துடன் அதன் நாற்புறமும் தீர்த்தங்கரர் சிலைகளும், ஒரே கல்லால் ஆனது. தலைப்பகுதியில் நான்கு புறம் தீர்த்தங்கரர் சிலைகள் சிறிய ஆலயத்துடன் உச்சியில் பூரணகும்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சுற்றுப் பாதையில் 24 தீர்த்தங்கரர்கள் திருவடிகள் மண்டபம்., மூன்று துறவியர்கள் திருவடிகள் மண்டபம். அடுத்து ஸ்ரீபாகுபலி சுவாமியின் மண்டபம் பாதுகாப்புடனும், அடுத்து திருச்சுற்றின் தென்புறத்திலிருந்து நல்ல மரங்கள், பூச்செடிகளுடன் நந்தவனமும் உள்ளது. வடபுறம் சாந்திமண்டபத்தில் நூலகம் ஒன்றும் உள்ளது.

ஆலய மையத்தில் அமைந்துள்ள வேதி பகுதியில் கருவறை, அதில் ஸ்ரீபுஷ்பதந்தரின் சுண்ணாம்பு சுதை சிலை அழகாக அமைக்கப்பட்டு, அவரின் எண்வகைச்சிறப்புகளும் மிக அழகாக அமைக்கப்பட்டு கண்கவர் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. அதன் மேல் இருதள விமானம், சிகர, கலசத்துடன், முதல் தளத்தில் நான்கு புறமும் அமர்ந்த நிலையிலும், கிரீவப்பகுதியில் நின்ற நிலையிலும் தீர்த்தங்கரர் சிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

 அடுத்து அர்த்தமண்டபம் சற்றுஅகலம் குறைந்தும், இருமருங்கிலும் உள்ள மேடைகளில் ஆலய உலோக பிம்பங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக ஸ்ரீபார்ஸ்வநாதரின் பல உருவச்சிலைகள்,  முக்கிய தீர்த்தங்கரர்கள், ஸ்ரீபாகுபலி பிரபையுடன், நவதேவதா, பஞ்சபரமேஷ்டி, 72 மற்றும் 24 தீர்த்தங்கரர்கள் தொகுப்பு, ஸ்ருதஸ்கந்தம், முக்கிய யக்ஷ, யக்ஷிகள் அனைத்தும் அலங்கரிக்கின்றன.

அடுத்து மகாமண்டபத்தின் நித்ய பூஜை மேடையில் ஸ்ரீபுஷ்பதந்தரின், எண் சிறப்புகள் அடங்கிய, தீர்த்தங்கரர் உருவம் சற்று அதிக பிதுக்கத்துடனும் வடிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. வடபகுதியில்  ஸ்ரீபார்ஸ்வநாதர், ஸ்ரீதரணேந்திரன், ஸ்ரீபத்மாவதி, ஸ்ரீபிரம்ம யக்ஷன் (ஸ்ரீதள நாதர் சாசன தேவன்), ஸ்ரீபத்மாவதி, ஸ்ரீஜ்வாலாமாலினி கற்சிலைகள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து முன்மண்டபத்தின் இருபுறமும் படிகளுடன் உயரமாக அமைக்கபட்டுள்ளது. முன் கட்டில் உள்ள கற்தூண்களில் பல அழகிய சிற்பங்கள் வடிக்கப்பட்டு அலங்கரிக்கின்றன.

அவ்வூரிலிருந்து கரந்தை செல்லும் வழியில் அகளங்கர் நிஷதிஸ்தான மண்டபம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.


நித்ய பூஜை, நந்தீஸ்வர பூஜை, விசே பூஜைகளோடு நவராத்திரி, மார்கழி முக்குடையும், மாரச் மாத ஆஷ்டானிகத்தின் கடைசி 3 நாட்கள் ஸ்ரீதரணேந்திர பத்மாவதி தெப்ப உற்சவமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. (ஆலய விபரங்கள் தந்துதவிய திரு.ஆதிராஜ், (மென்மையான மனிதர்) அவர்களுக்கு நன்றி. (தொடர்புக்கு 04182 293384)