Showing posts with label Shri SANTHINATHAR. Show all posts
Showing posts with label Shri SANTHINATHAR. Show all posts

Wednesday, August 29, 2018

HIRE BASADI MOODBIDRI - ஹைரெ ஜிநாலயம்.மூடுபத்திரை


Shri SANTHINATHAR  JINALAYA  -  ஸ்ரீ சாந்தி நாதர் ஜிநாலயம்







Location: with latitude, longitude of (13.07563, 75.00191)

click for map  put on the search box the above figure.

while travelling open navigator on the smart phone find your location and destination as (13.07563, 75.00191)

Bangaluru   Hassan   saklespur   Dharmasala   Moodbidri  = 352 Kms.

Mysore   Srirangapatna   Hassan   saklespur   Dharmasala   Moodbidri  = 285 Kms.




ஹைரே பஸ்தி

பெட்கரி ஜினாலயத்திற்கு செல்லும் சாலையில்  அமைந்துள்ள பெரிய பஸ்தியாகும்.  முன்னால் பெரிய பள்ளி  போன்ற தோற்றத்தைக்  கொண்டுள்ளது.  போட்டிகோ போன்ற  கூரையைக் கொண்ட  நுழைவாயில், அதன் இருபுறமும் புடைப்புச்சிற்பமாக யானைமீது நின்ற கோலத்தில் துவாரபாலகர்கள் வண்ணத்தில் காட்டியளிக்கிறது.

அடுத்துச் திருச்சுற்று அதன்  இடதுபுற சுவர்முழுவதுமாக  நீண்ட சன்னதி  அமைக்கப்பட்டு, அதனுள் 24 தீர்த்தங்கரரின் சுதைச் சிற்பங்கள் அந்தந்த தீர்த்தங்கரரின் வண்ணத்தில் தீரு. தீபண்ணா எனும் சிராவகரால் கட்டப்பட்டுள்ளது. மேலும் வலதுபுறம் சரஸ்வதியும் இடதுபுறம் ஸ்ரீ பத்மாவதியும் சுதையினால் செய்யப்பட்டு அனைத்தும் வண்ணக்கோலத்தில் கண்ணைக் கவரும் வகையில் காட்சியளிக்கின்றன. பின் சுவற்றின் மாடத்தில் ஸ்ரீ பார்ஸ்வஜினரின் சலவைக்கல் சிற்பங்கள், மற்றும் 14 தீர்த்தங்கரர் அனந்தநாதர் தொகுதி, சுதையினாலான குதிரையில் சவாரிசெய்யும் ஸ்ரீ பிரம்மதேவர் சிலை  அனைத்தும்  காட்சி யளிக்கின்றன.


வலம் வந்து மஹாமண்டபத்தில்  நுழைந்ததும், அர்த்த மண்டப திறப்பின் இருபுறமும் துவாரபாலகர் கருங்கல்  புடைப்புச் சிலைகள் வரவேற்கின்றன.  அர்த்த  மண்டபத்தில் வழக்கம்போல் உலோகச் ஜினர் சிலைகளைக்  கொண்ட நெட்டுக்குத்தான் மரப்பெட்டி சரமும் காணப்படுகிறது. கீழே ஸ்ருதஸ்கந்தம், கணதரர், ஸ்ரீபார்ஸ்வ ஜினர் போன்ற  உலோகச்சிலைகள்  வரிசையாக அமர்த்தப்பட்டுள்ளன.


கர்ப்பகுடியில்  ஸ்ரீ  சாந்திநாதரின் 3 அடியுயர கருமைநிற சலவைக்கல்லால் ஆன கட்காசன சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதனைச் சுற்றி வெண்கலக்குமிழ் போன்ற சட்டங்கள் பல செங்கோண வடிவில் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளன.

இவ்வாலயத்தை அம்மனவர் அதாவது தாய்க்கோவில்  என்றும் அழைக்கின்றனர். ஆண்டுக்கொருமுறை பங்குனி மாதத்தில்  தேர்த்திருவிழாவும் நடைபெறுகிறது.

மிகப்பெரிய புராதன ஜினாயத்தில்  இதுவும் ஒன்றாகும்.





















































Hire basadi

This is one of the big and ancient basadi in Moodibidri.  Also called as ammanavaru basadi ie Mother temple. It lies 300 meters from the Jain street.

On both side of main entry two Dwarabalaka eathen relief carvings exhibits. On left hand side wall of circumbulatory a long shrine room was built by Shravek, poet Deepanna shetty. The room got the  earthen idols of  24 Thirthankars  and  Goddess Saraswathi on  the right  side of  the  Basadi are captivating and worth to  seeing. Each of the Theerthankaras has got the original color set out by  the Shastras. Shri Brahmadevar earthen idol is also on the gallery of back wall. Also Shri Parswanathar and other Jinar marble stone pratimas also seated on a decorated galleries.


Inside the basadi has four sections. Mugamantap, Magamantap, Arthamantap and Gharbhagriha. Bhagawan shantinath  swamy as the Moolnayak of this  Jain mandir was install on the vedi. The  black  stone  idol  is three foot high in Khadgasana pose.


In the arthamantap vertical wooden boxes galleries of  24 Jinar metal idol with prabavalys. Shruthaskanth, Kevali hollow shape idol, Gandhar and sri Parswanathar also seated on a  platform.

In this basadi, a  poet  named Nemanna composed two kannada poetic works titled gnana Bhaskara  Charithre and  suvichara charithe  around AD 1560. The famous poet ratnakara varni who  lived about the same period  had  composed the epic  poem Bharathaesha vaibhava, and also Triloka shataka, Aparajitheshwara Shataka and Ratnakara Shataka.

A rathorchav is too celebrated every  year in the month of palguna regularly. 


Friday, August 24, 2018

Moodbiidri - Thousand pillars Basadi - மூடுபத்திரை ஆயிரம் கால் ஜிநாலயம்.



Thousand pillared temple 

சவீர கம்படி பஸ்தி


SHRI CHANDRANATHAR Basadi  -   ஸ்ரீ சந்திரநாதர் ஜிநாலயம். 





Location: with latitude, longitude of (13.07417, 74.99764)

click for map  put on the search box the above figure.

while travelling open navigator on the smart phone find your location and destination as (13.07417, 74.99764)

Bangaluru  Hassan  saklespur  Dharmasala  Moodbidri  = 352 Kms.

Mysore  Srirangapatna  Hassan  saklespur  Dharmasala  Moodbidri  = 285 Kms.






த்ரிபுவன திலக சூடாமணி மற்றும் சவீர கம்படி பஸ்தி

எனும் ஸ்ரீ சந்திரப்ரப ஜினாலயம் ஆயிரம் கால்களை கொண்ட கட்டமைப்பாக கூறுகின்றனர். (Temple of thousand pillars) மிக அழகான வீதியின் கோடியில் அமைந்த பெரிய நுழைவாயிலுக்குள் சென்றால் ஒரு திருச்சுற்று உள்ளது.  அவ்வட்டபூமி ரதோஸ்தவம் நடைபெற ஏற்படுத்தப்பட்டதாக தெரிகிறது.


அங்குள்ள 50 அடியுயர மானஸ்தம்பம் நம்மை அண்ணாந்து பார்த்து வியக்க வைக்கிறது. அக்கம்பம் பல அடுக்கு பீடத்தில் நான்கு, எட்டு, பதினாறு, முப்பத்திரண்டு பட்டைகள் தொகுதியாக நீளமான கல்தூண் பீடத்தில் நடப்பட்டு, அதன் மேல் அழகிய மண்டப, கலசத்துடன் நாற்புறத்திலும் தென்படும் தீர்த்தங்கரர் உருவங்களுடன் செதுக்கப்பட்டு காட்சியளிக்கிறது. சமவ சரணத்தின் முன்னால் மற்றும் தேவர்கள் வாழுமிடங்களில் உள்ள சுயம்பு ஜினாலய மானஸ்தம்பத்தை நினைவுறும் அளவில் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை  செய்யப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது.


அதனைக்கடந்து சென்றால் இருயானை உருவங்களுக்கிடையே ஏறுபடிகள் அமைக்கப்பட்ட அரைகோள வடிவிலான முன்மண்டபம், பைராதேவி மண்டபம் என்றழைக்கப்படுகிறது.  இக்கட்டில் அழகிய சிற்பவேலைப்பாடுகளைக் கொண்ட ஹொய்சள கலைநுணுக்க வேலைப்பாட்டுடன் காணப்பட்டுகிறது. பல நுணுக்கமான நகாசு வேலைப்பாட்டு தூண்களில் தீர்த்தங்கரர்கள் உருவம், தேவ, யக்ஷ, யக்ஷியர் உருவங்களும், வரலாற்றை தெரிக்கும் காட்சிகளும் வடிக்கப்பட்டுள்ளதையாரேனும் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதைக் காணலாம்.
















அடுத்த அரை கோள வடிவம் ஜினாலயத்தொகுதியாகும். அதில் மஹாமண்டபம், அர்த்தமண்டபம், கருப்பகுடி எனும் கர்பகிருஹம் போன்ற அம்சங்களை பிரம்மாண்ட அளவில் கட்டியுள்ளனர். கட்டிக்கலைஞர்களும், சிற்பக் கலைஞர்களும் கண்டு வியக்கும் வரைபடக் கட்டுமானம் என்றால் மிகையாகாது.


பல ஜினர்களின் கருங்கற் சிலைகள் வழவழப்பாக முழு உருவத்துடன் அர்த்த மண்டபத்தில்  பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது. மேலும் பல உலோகச் சிலைகளும் காணப்படுகின்றன.


கருவறையில் நிகழ்கால தீர்த்தங்கரர்களில் எட்டாவது ஜினரான ஸ்ரீ சந்திரப்ரபு நாதரின் 9 அடியுயர பஞ்சலோக சிலை பிரபாவளியுடன் பளபளப்பாக நுழைவாயிலில் புகுந்ததும் கவனத்தை கவரும் வண்ணம் அமைத்திருப்பது சிறப்பானதாகும்.


அர்த்த மண்டபத்தின் வலது புற படிக்கட்டில் ஏறிச்சென்றால் முதல் தளம். மீக நீண்ட தளத்தின் கடைசியில் சகஸ்ரகூட பித்தளை வடிவம் 9 அடியுயரத்தில் காட்சியளிக்கிறது. இவ்வளவு பெரிய வடிவம் வேறு எங்கும் இருப்பதாக தெரியவில்லை. வலம் வந்து நாற்புறமுள்ள ஜினசைத்யங்களை வணங்கும் வகையில் உயர மேடையில் அமைத்துள்ளனர்.


அச்சன்னதிக்கு செல்லும் வழியின் நடுவே 7 அடியுயர நந்தீஸ்வர கூடம் மூன்றடுக்குகளுடன் மேடையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இடது புற சுரங்கம் போன்ற சன்னதியில் ஸ்ரீ பார்ஸ்வநாதரின் வெளிர்சிவப்பு நிற சலவைக்கல்லால் ஆன 4 அடி உயர வழவழப்பாக செதுக்கப்பட்ட சிலை, பித்தளை பிரபாவளியுடன் காட்சியளிக்கிறது. வலது புறம் 4 அடியுயர 24 தீர்த்தங்கரர் தொகுதி கருங்கல்லில் செதுக்கப்பட்ட சிலையும், உலோகத்தினாலான  அதேதொகுதியும், ஸ்ரீ கூஷ்மாண்டி யக்ஷியின் அழகிய கற்சிலையும் மேடையில் அமர்த்தியுள்ளனர்.


அத்தளத்திலுள்ள  உள்ள மூலவர் அறை இம்முறை பூட்டப்பட்டிருந்ததால் தரிசனம் செய்ய முடியவில்லை. அதன் திருப்பத்தில் இரண்டாம் தளத்திற்கு செல்லும் படிகள் அமைக்கப்பட்டிருந்தன.


சித்தரகூடம் என்றழைக்கப்படும் அவ்விரண்டாம் மேற்தளத்தில் 40 நபர்கள் அமரக்கூடிய கூடத்துடனான அந்தராள மண்டபம் போன்ற சன்னதியில் விலையுயர்ந்த கற்களால் செய்யப்பட்ட பல ஜினர் சிலைகளும், பஞ்ச அஷ்ட லோக சிலைகளும் படிமேற்படி, காலரி போன்ற அமைப்பில் அமர்த்தப்பட்டுள்ளதை காண கண் கோடி வேண்டும்.


அங்குள்ள விரிவுரையாளர் கையில் தீபத்துடன் அப்பிம்பங்கள் பின்புறம் தீபத்தை காட்டி இது ஸ்படிக பிம்பம், இது கருடமணி, இது மரகத பார்ஸ்வ ஜினர்(அவரது உண்மைக் வண்ணத்தில்) என்று கூறும் போது, அதன் சிறப்பை முழுவதுமாக உணர முடிந்தது. நவரத்தினங்களால் ஆனவை, கருடமணியால் ஆனவை, பூத ஸ்படிகங்களால் ஆனவை போன்ற விலையுயர்ந்த மணிகளால் ஆன ஜினரைக் காண்பது அதிசயமாக தெரிந்தாலும் அப்பகுதி ஸ்ராவகர்களின் பக்தியின் மேன்மையை உணர முடிந்தது. தன்  விட்டிற்கு வாங்கி சேமித்தாலும் ஆலயத்திலும் ஸ்வாமி பிம்பங்களைச் செய்து அர்ப்பணிக்க வேண்டும் என்ற அவர்களது  ஜினபக்தி பாராட்டுக்குரியதே. (தற்போது கட்டணம் இல்லை, அதற்குரிய நேரத்தில் இருபது நபர்கள் சேர்ந்தவுடன் மேலே செல்ல அனுமதி கிடைக்கிறது.)
கீழ்தள்த்தில் பக்தர்கள்குழு காண காத்திருப்பதால் தீபாராதனை முடிந்ததும் அனுப்பி விடுகின்றனர்.


ஆலய பிரகாரத்தில் செடிகள் மண்டிக்கிடந்ததால் முன்பக்க வழியாகவே திரும்ப நேர்ந்தது.



----------------------------------------------- 

































Thousand pillared templeThe Tribhuvana Tilaka Chudamani basadi is the largest of its kind in coastal Karnataka and is considered to be the most ornate of the Jain temples of this region. The large number and variety of pillars in this basadi led the common people to identify this temple as Thousand pillared temple (Savira Kambada Basadi) . This is a huge granite construction originally built in 1430 A.D and was completed in three stages.
When you enter there are three anganas (spheres) first one is horangana (outer sphere), middle one; out of these two one is used during car festival (rathotsava) during April and ollangana where the basadi is located.

 The 9 feet tall bronze image of Lord Chandranatha Swami housed in the sanctum of this basadi is considered to be an image of utmost importance in Jainism. This huge, three storied movement was constructed by the collective effects of the rulers, the Jain Swamiji, merchants and also the common people by this ancient city. The most beautiful part of this temple is the open pillared hall in front, consisting by a rich variety of ornate pillars. The pillars and the roof this open hall are decorated with beautiful and minute carvings typical of Vijayanagara style. The various parts of this huge temple represent the Vijayanagara art at its list.













You will be welcomed by 50ft tall mansatamba (pillar) once you pass this you will enter bharadevi mantapa which stands for architectural beauty each pillar is carved and one will be able to locate different geometrical designs, horses etc if I am right there are totally 7 mantapas (unable to recall all the names).

Later is the structure of two floor, ground floor houses the garbhagudi and deity, first floor sahasrakoota houses various idols major attraction is Nandishwara idol and third floor is siddarakoota.

This temple is very beautiful, peaceful and less crowded.