Showing posts with label Shri SIMANDHRAR. Show all posts
Showing posts with label Shri SIMANDHRAR. Show all posts

Thursday, September 28, 2017

Gajpantha Valley temples - கஜபந்தா பள்ளத்தாக்கு ஜினாலயங்கள்


Valley Jain temples

பள்ளத்தாக்கு ஜினாலயங்கள்









Gajapantha Valley got two Mandirs and Chouldry for lodging.

Anthariksh Parswanathar Digamber Jain  Mandir.










Sri Parswathar Black Marble with  serpent hood 3.5 ft Prathima installed as Mool Nayak.
Next sri Vimalnath in Arthapadmasan posture and Vrishpanath in seated position on separate plinth.

Beneath the ground floor (underground) a Samavasaran Model is construted beautifully in concentric circle, outer ring has 12 ft dia; is look beautifully and Magnificiently. 



All the colour-stoned Entry arches, Manastham (dignity mast) 7 predeshas, Lashmivara mandap, Kandakudi, Singathan, 108 petal Lotus, above Jinar on four direction, Pindi tree with Prabha are in appropriate Scale.

On top most floor three storied circular viman with Underneath Parswanath sanctum and galleries of Jina marble prathimas around it.

Also the  top got 24 Marble Viman, Vedies got foot-print of 24 thirthangar are arranged in the Parapet wall side.



Oppsite to 





the  Parwanath temple Twenty four thirthangar and Bhagavan Seemanthar.

At center of the Prayer hall Shri Mahavir 3.5 ft Marble pratima installed at the centre of the Hall. On the left side Shri Adhinathar marble pratima got around 12 galleries of Jinar pratimas.

Likewise Shri Vimanath prabu around with 12 galleries of Jinar marble white pratimas.

On the first floor Sri Simanthar Bhagawan with remaining 19 thirthangars Where the Videgh kshetra have. Next to that the Past and future Barath kshetra 24 and 24 Jinar white marble statue are seated on individual gallery.
On the very top  floor; At the centre 7 Balapathrars those are get salvation at the siddhakshetra of Gajpantha. On left shri Kundunath, Shri Santhinath, Shri Aranath are seated one one vedi platform. On the right side shri Vimal nath with two Jinar are installed on one platform.

Here we see the Mountain look of Gajapantha cave temple view beautifully in Landscape view.
---------------------------  




------------------------------- 












கஜபந்தா சித்த க்ஷேத்திரத்தின் அடிவாரத்தில்

அந்தரிக்ஷ் பார்ஸ்வநாதர் திகம்பர் ஜைன் மந்திர்


மூல நாயகராக ஸ்ரீ பார்ஸ்வ ஜினரின் மிகப்புராதன கருமை நிற (லாஞ்சனம்) பத்மாசன நிலையில் வேதியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

அருகில் விமலநாதர் கருமை நிற சிலை அர்த்த பத்மாசன நினையில் அமர்ந்துள்ளார்.

மேலும் விருஷபநாத் தனி சன்னதியில் அமர்த்தப்பட்டுள்ளார்.







கீழ்த்தளத்தில் அருமையான 12 அடி அகலத்தில் சமவசரண மாதிரி வடிவம் 8 அடி உயர கந்தக்குடி சிங்காதனத்தில் தமரைமலரின் மீது நாற்திசையில் காட்சி தரும் வண்ணம் பிண்டி மரத்தின் நிழலில், பிரபா ஒளி வெளிச்சத்துடன் ஜினர் அமர்ந்துள்ளது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

அந்த லெட்சுமி வர மண்டபத்தை சுற்றி ஏழு வட்ட வடிவ பூமிகள் அதனதன் இலக்கணப் படி சலவைக்கல்லால் ஆன கொடிமரங்கள், பவனங்கள், மாளிகைகள், நடன மேடைகள், வணங்கள், பூச்செடிகளைக் கொண்ட உப வனங்கள், நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட பூமிகளைப் பிரிக்கும் நெடிய மதிற்சுவர்கள் போன்றவையும் அலங்கரிக்கின்றன.



நாற்திசையிலும் வளைவுகளைக் கொண்ட நுழைவாயில்கள், மானஸ்தம்பங்கள் ரத்தின வண்ணக் கற்கள் பதிக்கப்பட்ட நிலையில் நிற்கின்றன.

ஒரு முறை சுற்றி வலம் வந்து பார்க்கும் படி அழகாக (கச்சிதமாக, சரியான அளைவில்) அமைத்துள்ளது சிறப்புக்குரியது.

மூல கோபுரம் மூன்று அடுக்கில் வட்ட வடிவிலும் கீழ் தளத்தில் பார்ஸ்வநாதர் சன்னதியும், ஒவ்வொரு அடுக்கிலும்  சுற்றி உள்ள தேவமாடங்களில் ஜினர்கள் கண்ணாடிக் கதவுகளுடன் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அதனைச் சுற்றி மேற்தளத்தில் 24 தீர்த்தங்கரர்கள் பாத கூடங்கள் சலவைக்கல் மேடை, விமானங்களுடன் காட்சியளிக்கின்றன.


 எதிரில் ;





இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் மற்றும் சீமந்த்ர பகவான் மந்திர்.

நடுவில் ஸ்ரீமஹாவீரரின் வெண் பளிங்குச் சிலை வேதியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

அவரது இட, வலது சன்னதிகளாக ஆதிநாதரைச் சுற்றி 12 மாடங்களில் தீர்த்தங்கரர்களும், விமலநாதரைச் சுற்றி 12 மாடங்களீல் தீர்த்தங்கரர்களும் வெண்மை நிறத்தில் அழகாக 3.5 அடி மேடையில் கண்கவர் அளவில் வீற்றிருக்கின்றனர்.

முதல் தளத்தில் விதேக க்ஷேத்ர தற்போது சமவசரணத்தில் அமர்ந்து த்வ்யத்தொனியை அருளி வரும் ஸ்ரீமந்தர பகவான் வேதியில் அமர்த்தப்பட்டு சுற்றியுள்ள தேவமாடங்களில் 19 தீர்த்தங்கரர்களும் அமர்த்தப்படுள்ளனர். (அந்த பிரதேசத்தில் ஒரு சுற்றில்  20 தீர்த்தங்கரர்கள் மட்டுமே)






எதிர்கால பரத க்ஷேத்ர 24 ல்மரும் படி நிலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்

மேற்தளத்தில் பல பத்திரர்கள் ஏழு வர்களின் கட்காசன நிலை பிரதிமைகள் உள்ளன.

மற்றும் சாந்திநாதர்,  குந்து நாதர், அரநாதர், விமல நாதர் சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கிருந்து கஜபந்தா சித்தஷேத்ர மலைக்குகை ஜினாலயங்கள் நன்கு தெரிகின்றன. 

Friday, October 3, 2014

PONNUR HILL (SIMANDHRA BAHAVAN TEMPLE) - பொன்னூர் மலை (சீமந்திர பகவான் ஜினாலயம்)


Shri SIMANDHRA BAHAVAN TEMPLE  -   ஸ்ரீ சீமந்திர பகவான் ஜினாலயம்





Location  lies on the map in the coordination of (12.50155, 79.52362) put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click  Ponnur Hill
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : பொன்னூர் மலை கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )




ROUTE:

Tindivanam → Vandavasi  → Desur road   Ponnur Hill = 45 k.m.

Gingee → Pennagar road → vedal → Desur Mazhaiyur road    Ponnur Hill = 37 k.m.

Vandavasi → chetpet road     Ponnur Hill = 9 k.m.

Villupuram → Gingee → Pennagar road →  Desur Mazhaiyur road Ponnur Hill = 77 k.m.

Chetpet  → Vandavasi road  Ponnur Hill = 20 k.m.



செல்வழி:.

திண்டிவனம் → வந்தவாசி  → சேத்பட் சாலை  → பொன்னூர் மலை   = 45 கி.மீ.

செஞ்சி → பென்னகர்   வெடால் → தேசூர் →மழையூர் சாலை→ பொன்னூர் மலை   = 37 கி.மீ.

வந்தவாசி → சேத்பட் சாலை→ பொன்னூர் மலை  9 கி.மீ.

விழுப்புரம் செஞ்சி  வெடால் → தேசூர் →மழையூர் சாலை→ பொன்னூர் மலை  = 77 கி.மீ.

சேத்பட்  வந்தவாசி சாலை   
→ பொன்னூர் மலை  =  20 கி.மீ.












Ponnur malai is located 9 kms from Vandavasi in the Chetpet road. There is a complex building in the Opposite side of that nilgiri hill. Inside a Jinalaya, a welfare centre with Office room, pilgrims home are there.  The Jinalaya constructed in the last century.Acharya Kundkundhar heritage centre has been running in the complex. However, it is run by North Indian jains, Arugan thathvam, a philophical tamil monthly magazine, is published from there.

Two storied building of this Jinalaya, at Ground floor Shri Simandhra baghvan is established. Living legend of Shri Simandhra baghvan, going to be a Thirthankar in near future, presently preaches the Ahimsa philosophy in our adjacent land named as Vidhega Kshethram(we are in Bharatha kshethram). Five and half feet White Marble sculpture, in the sitting posture,surrounded by well decorated glass-paneled sanctum. His life history portraits of protrude sculptures are mounted on the wall top.Totally it is a modern designed temple.

Upon the first floor another sanctum contains Shri Adhinathar, Shri Mahaveerar and Shri Simandhrar statues. All idols were in Marble stone made and arranged on a well-decorated platform closed by glass panels. Also their life history portraits of protrude sculptures are mounted on the wall top.


Daily pooja, special poojas and Jain festivals are conducted regularly. 




பொன்னூர் மலை;  இம்மலை வந்தவாசி யிலிருந்து சேத்பட் சாலையில் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அந்நீலகிரி மலையின்  இறக்கத்தில் எதிற்புறம் ஒரு ஜிநாலயம் உள்ளது. ஒரு வளாகத்தினுள் சென்ற நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளதால் தற்கால கட்டமைப்புடன் காணப்படுகின்றது. அதில் அலுவலகம், யாத்திரீகர்கள் தங்கும் விடுதி, போஜன் சாலை போன்றவை உள்ளது. தற்போது வடஇந்திய சமணர்களால் நிருவகிக்கப்படும் இந்த குந்த குந்தர் சேவை மையத்திலிருந்து அருகன் தத்துவம் என்ற தமிழ் மாத இதழ் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது விதேக க்ஷேத்திரத்தில் (நாம் இருப்பது பரத க்ஷேத்திரம்) சமவ சரணம் அமைத்து அனைத்துயிர்களுக்கும் அஹிம்சா தர்மத்தை போதித்து வரும் தற்பவ மோட்ச ஸ்வாமியான (வீடுபேறு அடைவற்கான தகுதியை பெற்றுள்ள) ஸ்ரீசீமந்திர ஸ்வாமிக்கு அமைக்கப்பட்ட ஆலயமாகும். இரு தளங்களாக அமைக்கப்பட்ட இவ்வாலத்தின் தரைத்தளத்தில், பிரம்மாண்ட மாக வடிக்கப்பட்டுள்ள(அமர்ந்த கோலத்திலேயே 5.5 அடி உயரம் உள்ள) வெண்பளிங்கு சிலை, காளை லாஞ்சனத்துடன் மேடைமீது நிறுவப்பட்டுள்ளது. கருவறையை கண்ணாடி சுவர் அமைத்து,  அதனைச்சுற்றி உள்ளே அழகிய கோலங்களுடன் அமைத்துள்ளனர். மேலும் அவரது சரித்திர நிகழ்வுகளை தளத்தை சுற்றி வண்ண புடைப்புச் சிற்பமாக அமைத்துள்ளனர்.

அதன் மேல்தளத்தில் உள்ள கருவறையும் கீழே உள்ளது போல் காணப்பட்டாலும் அதில் ஸ்ரீஆதிநாதர், ஸ்ரீமகாவீரர், ஸ்ரீசீமந்திர பகவான் ஆகியோரது வெண்பளிங்கு சிலைகள் வரிசையாக மேடையில் நிறுவி யுள்ளனர். அத் தளத்தில் வண்ண புடைப்பு சிற்பங்களாக ஸ்ரீரிஷபர், ஸ்ரீமாகாவீரரின் சரித்திர நிகழ்வு களையும் அமைத்துள்ளனர்.

தின பூஜைகள் மற்றும் விசேஷகால பூஜைகள் செவ்வனே இவ்வாலயத்தில் நடந்து வருகின்றது.