Showing posts with label Sri ADHINATHAR. Show all posts
Showing posts with label Sri ADHINATHAR. Show all posts

Tuesday, August 28, 2018

BYKANATHIKARI BASADI, Moodbidri - பைகனாதிகாரி ஜிநாலயம் , மூடுபத்திரை


Shri ANANTHANATHAR  JINALAYA  -  ஸ்ரீ அனந்தநாதர் ஜிநாலயம் 




Location: with latitude, longitude of (13.07257, 75.00005)

click for map  put on the search box the above figure.

while travelling open navigator on the smart phone find your location and destination as ()


Bangaluru   Hassan   saklespur   Dharmasala   Moodbidri  = 352 Kms.

Mysore   Srirangapatna   Hassan   saklespur   Dharmasala   Moodbidri  = 285 Kms.




பைகணாதிகரி பஸ்தி

ஸ்ரீ அனந்தநாத ஜினருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இவ்வாலயத்தை நிறுவியவர் பைகணாதிகாரி  என்ற ஸ்ராவகர் ஆவார். பெயருக்கான விளக்கம் கிடைக்க வில்லை. இவ்வாலயம் ஜைனத்தெருவின் கடைசியில்  அமைந்துள்ளது.

சுற்றுச் சுவரைக் கடந்தால் குடவரை போன்ற திண்ணையுடன் கூடிய கட்டமைப்பு. அதனை யடுத்து ஸ்ரீ க்ஷேத்ரபாலகர், நாகராஜர் சிலைகளுள்ள சன்னதியுடன் திறந்த வெளிச் திருச்சுற்று.

வழக்கம்போல் சிறிய முகமண்டபம், மஹாமண்டபம் தூண்களுடன், அர்த்தமண்டபம் மற்றும் கர்பக்குடி போன்ற அம்சங்களுடன் காணப்படுகிறது.

கருவறை வேதியில் சற்றொப்ப 3 அடியுயர கருமை நிற வழவழப்பான கல்லால் ஆன ஸ்ரீ அனந்தநாதரின் கட்காசன சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவரது இருபுற தூண்களில் நிற்கும் கல்லினாலான பிரபாவளி  மேற்முக்குடை மற்றும் 23 தீர்த்தங்கரர்கள் புடைப்புச் சிற்பங்களுடன்  காணப்படுகிறது. அவருக்கு முன் அமைக்கப்பட்ட அடுக்கான மரப்பெட்டிகளுக்குள் ஜினர் சிலைகள் பிரபாவளியுடனும், இடது புறம் தாவும்குதிரையில் கடிவாளத்தை பிடித்தபடி ஸ்ரீ பிரம்மதேவர் கற்சிலையும், வலது புறம் உலோகத்தினாலான  ஸ்ரீ பத்மாவதி சிலையும் உள்ளன.

வழக்கம்போல் ஸ்ருதஸ்கந்தம், கணதர ஸ்தம்பம் மற்றும் 24 ஜினர்கள் தொகுதிச் சிற்பம் போன்றவை மேடையில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.

மஹாமண்டத்தின் வழியாக வெளியே சென்று உட்சுற்றாக வலம் வரும் வகையில் ஆளோடியுடனான கட்டமைப்பும் சேர்த்து அனைத்திற்குமான மேற்கூரையுடன் காணப்படுகிறது.

இந்த பஸ்தியும் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. மானஸ்தம்பம், பலிபீட அமைப்பைக் காணப்படவில்லை. அழிந்து விட்டிருக்கலாம்.






















Baikanathikari Basadi

The last basadi in the Jain Street was  built by a shravak named as Baikanathikari. It is  dedicated to Shri Anandhanath jinar in the 12 th Century AD.

Enter in the  Gudakarai we can see a small Mugamantap, Mahamantap, Arthamandap and Garbhakudi. All structure has one wooden structured roof tiled by Mangalore tiles. Shri Kshethrabalaga and Nagas were seated in the open circumbulatory.

On the garbhagriha vedi a 4 feet high polished black stone pratima in Katkasana posture was installed. A stone structure of Prabavali has 23 jinar bas-relief and Tri-umbrella.

Multi wooded box gallery was filled by several bronze jinars with prabavali. Apart from a black stone Shri Brahmadevar is raide on a horse pose. Metal idol Shri Padmavathy matha also seated inside the gallery box.

Shruthaskanth, Gandhar bronze idol were arranged, on a platform, in front of the Moolnayak.
No Manasthamp and palibeta is there. May be demolished over the past.

-----------------------------------------------  







Monday, August 27, 2018

Mahadeva shetty basadi, Moodibidri - மஹாதேவ் ஷெட்டி பஸ்தி , மூடுபத்திரை


ஸ்ரீ ஆதிநாதர் பஸ்தி - Shri Adhinath  jinar Basadi




மஹாதேவ் ஷெட்டி பஸ்தி

இந்த ஜினாலயம் மஹாதேவ ஷெட்டி என்ற உத்தம சிராவகரால் உருவாக்கப்பட்டது. மிகவும் புராதனமான ஜினாலயமாக தெரிகிறது.  தூய்மையாக இருப்பினும்  பராமரிப்பின்றி உள்ளது.

கருமை நிறக்கல்லால் ஆன சுமாராக ஐந்து அடி உயர ஸ்ரீ அதிநாதர் சிலை வேதியில் நிறுவப்பட்டுள்ளது. பின்புறம் பிரபாவளியும் அதே கல்லினால் அரைவட்ட முடியுடன் இருகால்களில்  நிற்கிறது. அவ்வமைப்பில் மற்ற 23 தீர்த்தங்கரர் சிலைகள் அமர்ந்த நிலையில் புடைப்புச் சிற்பமாக காட்சியளிக்கின்றனர்.
அதன் முன்புறமுள்ள அந்தராளப் பகுதியில் செவ்வக வடிவ  பெட்டிகளில் தீர்த்தங்கர்கள் உலோகப் பிரதிமைகளும், ஸ்ருதஸ்கந்தம், கனதரபரமேஷ்டிக்கான செங்கோல் வடிவ மாதிரியும் புடைப்புச்  சிற்பமாக வெண்கலத்தில் காணப்படுகிறது.

வழக்கம் போல் ஆலயச் திருச்சுற்றில் நாகா வடிவ கல்லும் நிறுத்தியுள்ளனர். அதேபோல் மரத்தினால் ஆன சட்டங்கள், உத்திரங்கள், வளைகளால் ஆன கூரைக் கட்டுமானத்தின் மேல் மங்களூர் ஓடுகள் வேய்ந்துள்ளனர்.

----------------------------------------------- 































Mahadev shetty basadi

The 14th Century Jinalaya was built by Shri Mahadevshetty, Shravak and dedicated to Shri Adhinatth jinar. Mugamantap, Navarang section, Antharalla and Garbhakudi seems very clean but less maintenance.

5 feet high Granite absolute carved Shri Adhinath idol was installed on vedi. A stone carved Prabhavali with remaining 23 Jinar bas-relief were encraved on it. Metal idol vertical gallery with jinar idols is as usual as in the Sthal.

Nagarajan stone also erected on the circumbulatory path way.  


CHOLA SHETTY BASADI, Moodbidri - சோலா ஷெட்டி ஜிநாலயம், மூடுபத்திரை


Shri Sumathi nathar, Padmaprabu nathar, Suparshwa nathar Basadi 
ஸ்ரீ சுமதி நாதர், பத்மப்ரபு நாதர், சுபார்ஸ்வ நாதர் ஜிநாலயம்






Location: with latitude, longitude of (13.07293, 75.0001)

click for map  put on the search box the above figure.

while travelling open navigator on the smart phone find your location and destination as (13.07293, 75.0001)


Bangaluru   Hassan   saklespur   Dharmasala   Moodbidri  = 352 Kms.

Mysore   Srirangapatna   Hassan   saklespur   Dharmasala   Moodbidri  = 285 Kms.










சோலா ஷெட்டி பஸ்தி

மூடுபத்திரை ஜைனத்தெருவில் வரிசையாக அமைந்துள்ள ஜினாலயங்களில்  ஒன்றான இது சோலா ஷெட்டி எனும் வணிகரால், ஸ்ரீ  சுமதி நாதர், ஸ்ரீ பத்மப்ரபநாதர், ஸ்ரீ சுபார்ஸ்வநாதர் ஆகிய மூவருக்குமான ஒரே கருவறையில் வெவ்வேறு வேதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது.

இதன் கட்டமைப்பைக் காணும் போது 14ம் நூற்றாண்டைச் சார்ந்ததாகவே தோன்றுகிறது.   
குடவரையில்  நுழைந்ததும் 40 க்கும் மேலான உயரத்துடனான மானஸ்தம்பம், மேல்விமானம், நாற்திசை ஜினர் பிரதிமைகளுயுடன் காணப்படுகிறது. அதற்கடுத்து முகமண்டபம் போன்ற கட்டமைப்பின் இருபுறமும் சன்னதிகளுடன் காணப்படுகிறது.  ஒன்றில் 24 ஜினர்களின் சிறிய அளவு பிரதிமைகள் தனித்தனி நின்றநிலையில் கானப்படுகிறது.  

அடுத்து நவரங்க மண்டத்தின் நாற்தூண்களும்ன்ஹௌய்சள கலைப்பாணி சிற்ப வேலைப்பாடுகளுடன் மேற்கூரையை தாங்கிக் கொண்டிருப்பதை காணலாம்.

அந்தராளத்தில் ஸ்ருதஸ்கந்தம், கணதரர், மேலும் சில தீர்த்தங்கரர் சிலைகளும், மாடம் போன்ற படிப்படியான அமைப்பில் 24 தீர்த்தங்கரர்கள்  உலோகப் பிரதிமைகள்  அலங்கரிக்கின்றன.

கருவறையின்  மத்தியில் ஸ்ரீ  சுமதி நாதர், ஸ்ரீ  பத்மப்ரப நாதர், ஸ்ரீ சுபார்ஸ்வநாதர் கருமை நிறக்கல்லால் செதுக்கப்பட்டு சிறிய பத்மபீடத்தில் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றன. அவர்களுக்கு பின்புறம் உலோக பிரபாவளி வளைவு தனித்தனியாக காட்சியளிக்கின்றன.

ஆலயத்தின் திருச்சுற்றில் நாகராஜர் சிலை கற்றூணில் புடைப்புச்சிற்பமாக காணப்படுகிறது.






















----------------------------------------------- 

Next Chola Shetty basadi is lies on the Jain street. It was dedicated to Shri Sumathi nath, Shri Padmaprabu nath, Shri Suparshwanath Jinar by Chola shetty merchant during the period contemporary with the other 14th Century Jinayas adjacent to that.

After entered inside the roofed main entry, A huge more than 40 feet high Manasthamp erected with four Jinars inside on the top of a small mandap. Next on both side of Mugamantap 24 jinar small bronze idols seated on a platform.

Inside the circumbulance, navarang mantap, which  was supported by ornamented round pillars has Hoysala architecture. Anthrala section Sruthaskanth, Kandhar and more jinar bronze idols were arranged vertical rectangular wooden boxes.

Garbhakudi three Jinar were installed on a separate Vedis; ie Shri Sumathinath, Shri Padmaprabunath, Shri Suparshwanath. Three pratimas made up of polished black marble stone.

As usual Shri Nagaraja bas-relief stone pillar is erected in the path way of circumbulatory.

----------------------------------------------- 

Sunday, August 19, 2018

சோந்தா சமண ஸ்தலங்கள்



சோந்தா  சமண ஸ்தலங்கள்
















It lies with the Coordination of (14.73497, 74.78755) in the Google Map.




Shri Bhattakalanka Bhattaraka Swamiji,
Shri Swadi Jain Mutt,Sonda,
Sirsi Taluk, Uttara Kannada  District,
Karnataka, India, PIN: 581336.


Phone : +91-08384-279482, +91-8277468108



29.07.2018
சனி.
காலை 6.30 மணி



காலை குளியலை முடித்து மாற்றுடை அணிந்து மட வளாகத்தையும், ஜினாலயங்களையும் காண ஆவலுடன் கிளம்பினோம்.


ஸ்ரீ சுவாதி திகம்பர் ஜைன் மடம். சோந்தா எனும் அமைதியான ஸ்தலம் கானகத்தின் நடுவே உத்தர கன்னடா மாவட்டத்தில் சிர்ஸி தாலுக்காவிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இரவில் அதன் அழகை ரசிக்க இயலவில்லை. எங்கெங்கு காணினும் மரங்கள், செடி கொடிகள், கண்களுக்கு ரம்மியமான பகுதிக்கு நடுவே மடம், ஜினாலயம், பாடசாலை, மாணவர் விடுதி என தனித்தனியாக கட்டிடங்கள்; மிகவும் அழகான பிரதேச வளாகம்.



கூட்டமில்லை, நெருக்கமில்லை, வண்டிகள் ஓடவில்லை, இரைச்சலில்லை, கடைகள் இல்லை, தொலைத்தொடர்பும்  தொலைதூரத்தில் இருந்தது; எப்போதாவது வந்து செல்வதால் அதன் குறுக்கீடுகளும் இல்லையாதலால் நம்மை நாம் உணர வழி காணும் இடமாக, இயற்கையிலேயே அமைதிப் பிரதேசத்தின் இலக்கணமாக அமைந்திருந்தது.



ஆரோக்கியமான காற்று, மாசுபடாத பூமி, அமைதியான கிராமச்சூழல். வியாதிக்கூறுகளைத் தோற்றுவிக்கும் வசிப்பிடங்களும் தென்படவில்லை. அதனால் மருத்துமனையும் தேவைப்படவில்லை.



விதவிதமான பறவைகள் இருந்தாலும் முதலில்  கண்ணில்  பட்டது (எங்க)ஊரில் அற்றுப்போன சிட்டுக்குருவியும் அதன் கீச்சொலிகளும். தாந்தோன்றியாய் விளைந்த மூலிகைச் செடிகள்; முக்குத்திப்பூ, தூதுவளை, குப்பைமேனி, கற்றாழை, பிரண்டை, பொன்னாங்கண்ணி என எங்கும் காணப்பட்டது. சேறுகளைத் தாண்டி நடக்கும் போது சிவந்த நிற பட்டுப்பூச்சிகள் ஊர்ந்து சென்றன; சிறுவயதில் பார்த்ததோடு சரி. இங்கு அழிந்துபோய் விட்டது.

சரி வந்த காரியத்தை மறந்து விட்டோமே என்றெண்ணிக்கொண்டே மடத்திற்கு எதிரில் உள்ள ஸ்ரீ நேமிநாதர் ஜினாலயத்தை அடைந்தோம். செல்லும் வழி அடிக்கடி தூறல் போட்டு சேற்றுடன் உளையாக இருந்ததால் மரப்பலகையைப் போட்டு வழி வகுத்திருந்தனர்.

******************************************* 


ஸ்ரீ 1008  நேமிநாதர் நூதன ஜினாலயம்
ஸ்ரீ கூஷ்மாண்டினி தேவி.


சுவாதி ஜைன் மடத்திற்கு எதிரில் புதிய நேமிதீர்த்தங்கரர் சிலையை மூலவராக நிறுவப்பட்ட நூதன ஜினாலயம்.

கேரள வயநாட்டில் உள்ள ஓடு வேயப்பட்ட ஜினாலயங்கள் போன்ற அமைப்பில் சிமெண்டினால் படுக்கை வரிப்பட்டைகள் அமைப்புடன் கூரை காணப்படுகின்றது.

கருவறை; சிறிய இரு அடுக்கு விமானக் கூரையுடன், அர்த்த, மஹா மற்றும் முக மண்டபம் போன்ற கட்டமைப்புகளுடன் காணப்படுகிறது. பத்தடி உயரத்தில் தரைத்தளம் அமைக்கப்பட்டிருக்கும் இவ்வாலய மூலவராக சிவந்த மணற்கல்லில் செதுக்கப்பட்ட 3.5 அடியுயர அர்த்த பத்மாசன நிலையிலுள்ள சிலை, பின்புறம் பிரபாவளியுடன் வேதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பிரபாவளி உச்சியில் யாளியும், முக்குடையும் ஜினரின் தலைக்கும் மேல் காணப்படுகிறது. வளைவான  கொடிகள் படர்ந்தது போன்ற செதுக்க வேலைப்பாட்டில் மூலவருக்கு வலதுபுறம் ஸ்ரீ அதிநாதரும், இடதுபுறம் ஸ்ரீ மஹாவீரர் புடைப்புச் சிற்பமும், கீழ் பட்டையில் சாமரை தேவர்களும் வடிக்கப்பட்டுள்ளது.

அவர் அமர்ந்திருக்கும் சிங்காதனத்தின் மையத்தில் சங்கு வடிவமும் வலதுபுறம் சர்வாண்ண யக்ஷனும், இடது புறம் கூஷ்மாண்டினி தேவியும் அமைத்துள்ளனர்.

கர்ப்பகிருஹ வாயிலின் மேற்புறம் ஜினர் உருவமும், சரஸ்வதி மற்றும் லக்ஷ்மி வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

மஹாமணடபக் கூரையின் உட்புறம் நவக்ரஹ தேவர்கள், அஷ்ட திக்பாலகர்கள், பஞ்ச குமாரர்கள், அஷ்ட கன்னிகைகள், அஷ்ட நாககுமாரதேவர்கள், 16 வித்யா தேவியர்கள் என அனைத்தும் தொகுதி, தொகுதியாக சிறிய புடைப்புச் சிற்பமாக தனித்துவமாக அமைக்கப்பட்டுள்ளது.

தரிசனத்தை  முடித்ததும், அனைத்தையும்  புகைப்படம் எடுத்துக் கொண்டு வெளியேறினோம்.
எதிரில்…


































Shri 1008 Bhagwan Neminath Theerthankara

Kushmandini Devi

A new temple for this Neminatha jinar in front of the mutt temple. It look in grand manner. It look like Kerala tiled like cement roof type Gharbagriha, Artha  cum Maha mandap, Mugamandap.

Inside the Garbagriha 3.5 feet Shri Neminath jinar reddish sand stone statue in Arthapadmasana posture. On the back a Prabavali has tri-umbrella, Shamara devas. At the middle panel Shri Adhinatha and Shri Mahavira on both side. At bottom of the moolavar singathan with Kanch(Sang) lanchan;  on the left side Shri sarvanna yaksh and on the right Shri Kooshmandini yakshi.
On the top of the lintel Jinar bas-relief with shamarah devas And Saraswathi and Lakshmi on both side.

Below the top ceiling Navgrah devathas, asta Digbalagahs, pancha Kumarahs, Asta Kannikas, asta Naagkumara devthas, 16 vidhya devthas bas-relief of miniature was engraved is unique.


----------------------------------------------- 


சோந்தா மடம்

ஸ்ரீ பட்டாகளங்கா பட்டாரக ஸ்வாமிஜி
@ ஸ்ரீ க்ஷேத்ர சுவாதி திகம்பர் சமஸ்தான் ஜைன் மத்



கி.பி ஆறாம் நூற்றாண்டில் ஆச்சார்ய அகளங்க குருவரரால் தோற்றுவிக்கப்பட்டது ஸ்ரீ ஸ்வாதி  ஜைன்  மடம். அக்குரு பரம்பரை துவங்கியதிலிருந்தே தொடர்ந்து பல மடாதிபதிகள் தலைமை பீடத்தில் அமர்ந்திருந்து கோலோச்சியதை அங்குள்ள இருபதிற்கும் மேற்பட்ட நிஷாதிகளே நிரூபிக்கின்றன. அவ்வரலாறே அம்மடத்தின்  தொன்மை மற்றும் பாரம்பர்யத்தை பறை சாற்றுகின்றன.


இப்புகழ்பெற்ற பராம்பர்யத்தின் சிறப்பை விஜயநகர பேரரசின் கீழுள்ள சிற்றரசர்களின் தலைநகராக இருந்துள்ளதாகவும் வரலாறு தெரிவிக்கிறது. அக்காலத்தில் மூன்று அடுக்கு அரண் பாதுகாப்பு சுவர்களாக அமைக்கப்பட்டிருந்ததால் இத்தலம் சுத்தபுரா என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப்பட்டது.


சென்ற 2013 ம் ஆண்டு பிப்ரவரி 13ம் நாள் தற்போதைய ஸ்வஸ்திஸ்ரீ பட்டாகளங்க ஸ்வாமிஜி அவர்களுக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது வரலாற்றில் குறிப்பிடத்தக்கது.









Shri Jain Mutt Temple :


Shri 1008 Bhagwan Neminath Theerthankara and Yakshi Kushmandini Devi are worshiped by people from this temple. It is very ancient and every Tuesday special offerings and prasada. Evening, Palanquin (pallakku) utsav for Devi Kushmandini happens here in a grand manner.




----------------------------------------------- 
அந்த வரலாற்று சிறப்பு மிக்க மடத்தில்  அமைந்த ஆலயத்தின் தரிசனத்திற்கு  சென்றோம். அங்கு  வெண்பளுங்கு கல்லாலான ஸ்ரீ நேமி நாதர் 2.5 அடி பிரதிமை இரண்டடி மேடையில் அமர்ந்திருந்தார். மேடைக்கு கீழே ஸ்ரீ கூஷ்மாண்டி  தேவியின் கருமை நிறச்சிலை பிரபாவளி அலங்காரத்துடன் காணப்பட்டது.

மேலும் இரு பூர்ண கும்பம் வைத்து அன்றைய பூஜைகள் அர்க்யத்துடன் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு மாதாஜியும் கவனித்துக்கொண்டிருந்தார். சிறிது நேரம் அமர்ந்து  பூஜை முடிந்தவுடன் ஆராதனை தீபமும், கந்தமும் பெற்றுக் கொண்டு, ஸ்வாமிஜியின் தங்குமிடத்தை பார்வையிட்டோம். அங்கு வரலாற்று நிகழ்வுகளை தெரிவிக்கும் பல புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. 

மேலும் பழமைவாய்ந்த கஜகேசரி பீடம் என்ற மடாதிபதிகள் அமரும் ஆசனத்தைக் கண்டோம்.


கஜகேசரி பீடம்

1300 ஆண்டுகளைக் கடந்து தொன்மையான வரலாற்றை வருபவருக்கு கூறிக்கொண்டிருக்கும் அந்த ஆசனத்தை  தரிசித்தோம்.


முழுவதுமாக சிவந்த சந்தன மரப்பலகையால் ஆன அப்பீடத்தின் பின் சாய்மானத்தில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் இருந்தன. வளைவான பிரபாவளி நகாசு  வேலைப்பாடுகளைக்  கொண்டிருந்தது.


அதன் முன் பீடக்கால்களில் இரு யானை உருவங்களும், சாய் பலகையில் இரு சிங்கங்கள் இருபுறமும் வடிக்கப்பட்டுள்ளதால்  கஜ+கேஸரி பீடம் என்ற  சிறப்புப்பெயரை பெற்றிருக்கிறது.


பிரபாபளியின்  நடுவே சித்தசக்கர  வடிவம்  அழகாக செதுக்கப்பட்டுள்ளது. மேலும் கற்பகவிருக்ஷம், சுமேரு பர்வதம் மற்றும் சூரிய சந்திர புடைப்புச் சிற்பங்கள், ஆகமத்தில் கூறப்படும் இவ்வுலக அமைப்பை வெளிப்படுத்தும் முகமாக அமைக்கப்பட்டுள்ளது மேலும் சிறப்பாகும். அதன் மேல் மையத்தில் அமைந்த யாளிக்கு முன்னர் நின்று வணகியவர்,  என்றும் நற்சிந்தனைகளுடன் வாழ்வர் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.


அதன் வேலைப்பாடுகள் கண்ணைக் கவரும் வகையில் ஒரு பொக்கிஷமே என தோன்ற வைத்தது. பல ஆச்சார்யர்கள், மடாதிபதிகள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.


அப்புனித பீடத்தில் மடாதிபதிகள் ஆண்டுக்கு இருமுறை, விஜயதசமியன்றும், பட்டமேற்ற நாளன்றும் அமர்ந்து உபதேசம் செய்வர் என்ற வரலாறு இக்காலத்திலும்  தொடர்கிறது.


அடுத்தடுத்து பரம்பரையாக வந்த மடத்தலைவர்கள் இப்பொக்கிஷத்தை பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்.



GajaKesari Peeta :

The name GajaKesari Peeta is given because normally all the Peeta's leg will have a Lion in them but GajaKesari Peeta's leg has a Gaja(Elephant) in them. In this Peeta's Prabhavali(Main background of Peeta), towards bith the sides, Kesari(Lion) is present. As we have Kesari over Gaja, we have the name as GajaKesari Peeta.


In the center of the Prabhavali, Siddhachakra Yantra is present. Towards both the sides of this Siddhachakra, Kalpavruksha is located. Under Kalpavruksha, Sumeruparvatha denoting the center of the Earth is located surrounded by Sun and Moon towards both the sides. Under Sumeruparvatha, we have Pushpa Yantra surrounded both the sides by Chamaradhari. At the top of the Peeta, Vyali(one type of Lion's face) is located. People who stand in front of this Vyali will get good thoughts in their life.
At the very top of the Peeta, Kalasa is located. Every art work described adds to the beauty of this red sandalwood Peeta and makes it extraordinary one..
The precious artefact has been  handed down by the previous Acharyas. According to the present Bhattaraka will be sitting on this peetha only twice in a year, ie on Vijayadasami and the day he underwent Pattabisheka.


A patasala , students Hostels and Bojanshala are in adjacent inside the venue. 

A few meters away from the Mutt on a ten feet highland two Jinalayas are there:
----------------------------------------------- 

மேலும் சாஸ்திர பாடசாலை, மாணவர் விடுதி, உணவுக்கூடம் என தனிக்கட்டிடமாக கட்டப்பட்டிருந்தது.

இத்தொகுதியை பார்த்து முடித்த பின், மட வளாகத்திற்கு வெளியே 400 மீட்டர் தூரத்தில் குளமும், இரு ஜினாலயங்களும் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அன்று வந்திருந்த யாத்திரீகர்கள் அனைவரும்  உணவருந்தச் சென்றதால் நாங்களும் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டோம்.

உடன் தங்கும் அறைகளைக் காலி செய்து, சாவியை ஒப்படைத்து விட்டு வெளியே அமைந்துள்ள ஜினாலய ஸ்தலத்தை நோக்கி வேனில்  புறப்பட்டோம்.

முத்தினா கெரே எனும் குளத்திற்கு எதிரே…  









----------------------------------------------- 

ஸ்ரீ  ஆதிநாதர் பஸ்தி…


கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக  சொல்லப்படுகிறது. ஆனால் பல சீரமைப்புகளை கண்டுள்ளதால் புதிய தோற்றத்துடன் காணப்படுகிறது.


சுமார் பத்தடி உயர மேட்டுத்தளத்தில் சுற்றுச்சுவருடன் அமைந்துள்ள இந்த ஜினாலயத்தின் நுழைவுப் படிகளுக்கு  இருபுறம் வரவேற்கும் துவாரபாலகர் சுதை புடைப்புச்சிற்பத்தை பார்த்த பின் படியேறிய போது மானஸ்தம்பம் முன்னின்றது. அதனை தரிசித்தபடியே  ஆலய வளாக மேட்டுப்பகுதிக்குச் சென்றடைந்தோம்.

35 அடியுயர மானஸ்தம்பம் மேலே சிறிய விமான கலசத்துடன் காணப்பட்டது. அதனுள் சர்வதோபத்ர வடிவத்தைப்  போன்ற நாற்திசைகளிலும் தீர்த்தங்கரர் உருவம் புடைப்புச் சிற்பமாக காணப்பட்டது. அதே போல் அடிக்கம்பத்திலும் நாற்புறமும் திர்த்தங்கரர் புடைப்புச் சிற்பங்கள் காட்சி யளித்தன.

அடுத்து 6 அடியுயர அடித்தளத்தின் படியேறி முகமண்டபத்தை கடந்ததும் மஹாமண்டபம். மூலவராக ஸ்ரீ அதிநாதர் சிலை 4 அடியுயர கட்காசன நிலையில் கருங்கலால்  வழவழப்பாக உருவாக்கப்பட்டு பிரபாவளியுடன் காட்சியளிக்கிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த இச்சிலையின் தலைக்கு மேல் பிரபாவளி முக்குடையுடன், பக்கத்தில் இரு சாமரைதேவர்களும் புடைப்பாக தெரிந்தன.

அம்மூலவருக்கு அபிஷேகம் செய்த கந்தநீரை தெளித்துக் கொண்டால் சர்வ வியாதிகளும் விலகும் என்ற நம்பிக்கை பல்லாண்டுகளாக நிலவுகிறது.

கர்பகிருஹத்திற்கு அடுத்த அர்த்தமண்டபத்தின் இருபுறமும் ஸ்ரீ கூஷ்மாண்டினி யக்ஷி மற்றும் ஸ்ரீ பத்மாவதி யக்ஷியின் கருங்கற் சிலைகள் அலங்காரத்துடன் காணப்பட்டது.


























 





Mutthinakere shri Athinath Temple :


This one is very ancient mandir which  was built in 2 century.
On raising the stairs 35 feet Manasthap with a mandap and viman standing for Dharshan. Inside in the Mandap a Sarvothabadra is  installed ie four jinar bas-relief facing on four directions.

A temple has Garbagriha, Navrang, Anthrala, Mahamandap and Mugamandap built on five feet highland.
It has a beautiful idol carved in black granite idol of Bhagawan Shri Adhinath Jinar.  A prabavali has a Mukkudai on the top  of  the Jinar and two shamaradevas on both side. All are four feet height in a stretched manner. Devotees worship 1000 year old Shri 1008 Athinath Bhagwan. There is a belief that all diseases are cured by using  Gandhodaka(holy abishek water) of Shree Swami.

In the Anthrala leftside of Garbagriha entry, Shri Kooshmandini yakshi granite idol and on right side shri Padmavathy matha idol also install on a plinch. Both were  decorated beautifully.

The renovation of the temple was done in 1996.
Everyone has to visit this temple to believe the beauty of this statue.


----------------------------------------------- 

ஸ்ரீ க்ஷேத்ரபாலகர் தனியாலயம்


அவ்வளாகத்தில் ஸ்ரீ ஆதிநாதர் ஜினாலய திருச்சுற்று இடதுமூலையில் ஸ்ரீ க்ஷேத்ரபாலகர் தனியாலயம் அமைக்கப்பட்டுள்ளது.  அதன் முன்புறத்தில் தகரக் கூரை வேயப்பட்டு நீண்ட கூடமாக காட்சி தந்தது. முக்கிய தின நிகழ்வுகள் இங்கு நடைபெறும் என்பதை பார்த்தாலே புரிந்தது.

சமவசரண ஸ்தலத்தில் வாயிலின் முன் நின்ற இத்தேவரின் உருவத்தை பல தேங்காய்களை வைத்து அர்ச்சித்தால் தாம் ஈடுபடும் காரியத்திற்கு துணையாக இருந்து சிரமங்களைக்  குறைப்பார் என்ற நம்பிக்கை இப்பகுதி பக்தர்களிடம் நம்பிக்கையை; அச்சன்னதியில் அவர் பீடம் மறையும் அளவிற்கு முழுத்தேங்காய்கள் கொட்டி வைக்கப்பட்டிருந்த குவியலை பார்த்ததும் புரிந்தது.

இவ்வாலயம் சென்ற 1996 ஆண்டில் மீண்டும் புதிப்பிக்கப்பட்டதால் தொன்மைக்கான அடையாளங்கள் அழிக்கப்பட்டிருந்தன. 




Shri Kshetrapala Temple :


Towards right of Muthinakere Athinath temple, Shri Kshetrapala temple is located. Devotees worship Shri Kshetrapala with a pile of coconuts in front of the God and the belief is that Shri Kshetrapala will accompany them in their work and help them get their work done that devotees pray for.

Adjacent to the temple a small but beautiful structured temple constructed…


------------------------------------------------


ஸ்ரீ பார்ஸ்வநாதர் பஸ்தி..

ஸ்ரீ ஆதிநாதரை வலம் வரும் போதே தென்படுவது ஸ்ரீ பார்ஸ்வநாதரின் அழகிய சிற்றாலயம். கர்பகிருஹம் மேல் விமானத்துடன், அர்த்த மண்டப கட்டமைப்பு மற்றும் முன்னர் 35 அடியுயரத்தில் மானஸ்தம்ப தூண் போன்றவை அழகுடன் உருவாக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.


அவ்வாலத்தை வலம் வந்து உள்ளே சென்றோம். கர்பகிருஹத்தில் 2.5 அடியுயர கருமை நிறக்கல்லிலான ஸ்ரீபார்ஸ்வ ஜினர் அர்த்த பத்மாசனத்தில் பனாமுடியுடன் 3.5 அடி உயர வேதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அம்மேடைக்கு முன்னர் இரண்டடி உயர ஸ்ரீபத்மாவதி அம்பாள் கருமைநிறக்கல்லினால் ஆன பிரதிமையும் நிறுவப்பட்டுள்ளது.

கருவறைக்கு வெளியே அர்த்த மண்டபத்தில் இடதுபுறம் ஸ்ரீசந்த்ரப்ரபநாதரின் 3.5 உயர வெண்பளிங்குகல்லால் கஜுராஹோ கலை வடிவ கட்காசனத்தில் நிற்கும் படி அமைத்துள்ளனர். வலது புறம் 4.5 உயர பிரபாவளியில் ஸ்ரீ பார்ஸ்வஜினரின் நின்ற நிலை கருங்கல் பிரதிமையும் அமைத்துள்ளனர்.

வெளியே, மேலும் விரிவாக்கம் செய்யும் நோக்கத்தில், இருபதடி தூரத்தில் மானஸ்தம்பம் ஆதிநாதர் ஜினாலயத்திலுள்ளது போன்ற தோற்றத்தில் அழகுடன் நிற்பதை எவரும் அன்னாந்து பார்த்தபடி அகந்தையை குறைத்துத்தான் ஆக வேண்டும்.











 




 



Shri 1008 Parswanath Bhagwan Temple :


Towards left of Muthinakere Athinath temple, Shri 1008 Parswanath Bhagwan Temple is located.
On the Garbagriha 2.5 feet absolute carved black store idol of Parshwath is installed on a 3.5 feet plinch. In front a 2 feet black store idol of Shri padmavathi also installed. The whole structure look elegantly.

On either side of aisle a 3.5 feet white marble idol of khajaraho sculpture style Shri Chandraprabunathar and 4.5 feet high Shri Parshwanathar black stone were installed.

In front of temple 35 feet Manasthamp of the same like Shri Adhinath temple also erected beautiful manner.


In this temple, Parswanath Bhagwan and Padmavathi Devi showers blessings.

----------------------------------------------- 


அகந்தையை அழித்தபின் மூலவரது பாதங்களை தரிசிக்க வேண்டும் என்பதே மானஸ்தம்பத்துடனான ஜினாலய கட்டமைப்பு வரைபடங்களின் நோக்கம். அந்நோக்கத்தை மிகத்துல்லியமாக இப்பகுதி ஆலயங்களில் காண முடிகிறது. மேலும் பல நுணுக்க வேலைப்பாடுகள் செய்து;  தீர்த்தங்கரர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் வழங்கிய நற்கருத்துக்களையும் அறிவுரைகளாக நமக்களித்துள்ளனர் என்றால் மிகையாகாது.

அதனால் எந்த ஒரு ஜினாலயத்திற்கு செல்லும் முன்பாக மூலவரது வாழ்வு நிகழ்வுகளை கூறும் வரலாற்று வரிகளையும், சமவ சரணத்தில் அவர் காலத்திய சாசன தேவதேவியரையும், அங்கு வந்தமர்ந்த தேவ தேவர்களையும், அதன் வரைபடத்தையும், திவ்யதொனியின் மகத்துவத்தையும் படித்தோ, கேட்டோ அறிவதே அவ்வாலயத்தின்  முழு மகிமையையும் நாம் உணர வகைசெய்யும் என்பதில் ஐயமில்லை.
----------------------------------------------- 

அதற்கடுத்தாற் போல் மானஸ்தம்பத்துடன் சற்று பெரிய கட்டமைப்புடன்  ஜினாலயத்தோற்றம் கண்டோம்.  ஆனால் அழகிய அவ்வாலயம் பிற்காலத்தில் இந்து தரிசனத்தவர்க்கு அளிக்கப்பட்டதாக அறிந்தோம்.







-----------------------------------------------  



முத்தினா கெரே (குளம்)

அதிநாதர் ஜினாலயத்திற்கு நேர் எதிரே அமைக்கப்பட்டுள்ளது.  அரசி சென்னபைராதேவியரால் 16 ம் நூற்றாண்டில் தோண்டப்பட்ட குளம். அக்குளநீர் காலையில் ஒரு வண்ணமாகவும், மதியம், மாலையில் சூரிய வெளிச்சத்தில் வெவ்வேறு வண்ணமாக நிறமாறும் தோற்ற அம்சத்தை கொண்டது. அதனால் அக்குளம் புனித நீர் தடாஹமாக கருதப்படுகிறது.

லேசான தூறலில் நனைந்து கொண்டே அவ்விடத்தை விட்டகன்றோம். சோந்த மடவளாகத்தை கண்டுகொண்டே அவ்வனப்பகுதி பாதையை ரசித்துக் கொண்டே சிர்ஸியை நோக்கி சென்று கொண்டிருந்தோம்.

அங்கிருந்து வராங்கம் செல்ல உத்தேசம்..

230 கீ.மீ.  ஐந்து மணி நேரப்பயணம் என வரைபடம் காட்டியது.

வழிகளைக் குறித்துக் கொண்டோம்…

சிர்ஸி, சாகர், ரிப்பன்பேடு, (மீண்டும்) ஹும்சா வழி, தீர்த்தஹல்லி, குடிகேரி, ஆகும்பே மலை  ஏறி  இறங்கியதும் சற்று நேரத்தில் வருவது வராங்கம்…

*************************************