Showing posts with label Sri CHANDRAPRABHANATHAR. Show all posts
Showing posts with label Sri CHANDRAPRABHANATHAR. Show all posts

Monday, September 3, 2018

Dharmasthala Jain temple


Shri Bhagawan Bahubali Jinalayaஸ்ரீ பகவான் பாகுபலி  ஜினாலயம்



It lies on the google map with coordination of (12.95264, 75.37911) 





12.15 மணியளவில் தர்மஸ்தலா வந்தடைந்தோம்.
தெய்வ நம்பிக்கைகள் சங்கமிக்கும் தர்ம உறைவிடம் தர்மஸ்தலமாகும். பல்லாண்டுகளாக பக்தி மரபினை வளர்த்து வரும் பூமியாகும். 

பல பக்தர்கள் பேருந்து, கார், வேன் என பல வாகனங்களில் வந்து சென்றவண்ணம் இருந்தனர்.

சிறிய குன்றின் மீதிருந்த பாகுபலி நாதரை தரிசிக்க வான் மேலேறியது. மேற் சென்றதும், சில ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வந்ததால் சிறிய வளைவு, நுழைவாயில் கூடம் நடைபாதை ஒழுங்கு போன்றவை புதியதாக காட்சியளித்தன. அவற்றை நின்று காணம் போதே நெடிய 39 அடி உச்சிவரை தெரியும் ஒரே கல்லினால் ஆன பாகுபலி பகவானின் தோற்றத்தின் அருகே அழைத்துச் சென்று கொண்டிருந்தது.


பெரிய பீடத்தின் மீது ஏறிச் செல்ல இரு யானைச் சிலைகள் படிக்கட்டுகளுடன் அழைத்தது. மேற்சென்றால் 13 அடிமேடையில் பாகுபலிநாதர் வேனுர் சிலையின் அதேவகைக் கல்லால் ஆனது போன்ற வண்ணத்தில், ரேகையில் சற்று உருவ  அமைப்பில் மாற்றத்துடன் காணப்பட்டது.


சரவண பெளிகுளம், கார்காளா, வேனூர், தர்மஸ்தலா (கோமட்டகிரி செல்லவில்லை) பாகுபலி பகவானின் உருவச்சிலைகள் இருந்தாலும் ஒன்றிலிருந்து மற்றொன்று தனித்துவமாக அமைக்கப்பட்டிருப்பதை மனம் வேறுபடுத்திக்  காட்டத்தான் செய்கிறது. என்ன இருந்தாலும் கோமட்டன் உருவாக்கிய சிலை, முன்னனி வசிப்பதற்கான கூறுகளை வித்தியாசப்படுத்தி மனம் காட்டினாலும்; நான்கு சிலைகளிடத்திலுமுள்ள பேரழகு, பிரம்மாண்டம் இவற்றை வியந்து அண்ணாந்து பார்க்கும்போது நம் அனைவரின் படிப்பு, பலம், பெருமை, புகழ், உயர்வு, அழகு, அதிகாரம், ஆர்ப்பாட்டம் அனைத்தையும் சற்று நேரத்தில் மறக்கடித்து கைகூப்பி வணங்க வைத்து விடுவதென்னவோ உண்மைதான். அவ்விடத்திலேயே நின்று கொண்டேயிருந்தால் அவை முழுவதும் அற்றுப் போய்விடும் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.


சற்று நேர தரிசனத்திற்கு பின் அடுத்த ஸ்தலம் நினைவுக்கு வர அவரைவிட்டு பிரியும் வேளை வந்தது.  இக்குன்றிலிருந்து மாற்றுப்பாதையில் இறங்கியதும் ஸ்ரீ மஞ்சுநாதர்  ஆலய வழிக்கு இணையான சாலையில் பயணிக்கும் போது ஸ்ரீ சந்திரநாத ஸ்வாமி பஸ்தி என்ற அடையாள குறியீட்டு பலகையைக் கண்டு, அத்திசையில் 1 கி.மீ. பயணித்ததும் அவ்வாலயத்தை சென்றடைந்தோம்.






 The confluence of faiths makes Dharmasthala, the abode of dharma, a unique legacy entrenched over the years. The centuries old Shri Chandranatha Swamy Basadi at Dharmasthala has been maintained in the pristine condition and is amongst the one of the most revered and celebrated Digambara shrines in South India.


The growing fame of Dharmasthala Shri Manjunatha Swamy temple has often obscured the fact that for centuries that Dharmasthala is also a revered Jain Basadi. With the novel thought of protecting the Jain legacy, a pious and methodical renovation of the temple in May 2001 by Shri Veerendra Heggade has made Shri Chandranatha Swamy Basadi, one of the most beautiful edifices in Dharmasthala and the south of India. Standing against the azure blue sky and the lush foliage around it, this temple clad in white marble is a sight to behold and to cherish, imbibe and nurture the teachings about our mortal life by Shri Chandranatha Swamy, Jain Theerthankara Mahaveer and his disciples.
----------------------------------------------- 
In 1973 a statue of Lord Bahubali, carved out of a single rock, was installed at Dharmasthala on a low hill near the Manjunatha temple. It is about 39 feet high with a pedestal of 13 feet and weighs about 175 tonnes. This is one of the five stone statues of Bahubali in Karnataka.

Shri Bhagwan Bahubali Digambar Jain Statue is installed in many places across India(there are 5 monolithic Gommateshwara statue in Karnataka measuring more than 6 m (20 feet) in height), Dharmasthala, being one of them. Dharmasthala is an Indian temple town, known for its religious tolerance and justice. Among the piety and frolic of this beautiful temple town, the statue stands on a low hill, at a kilometer from the Lord Shiva temple, also known as the Manjunath temple. This 39 feet(12 m) statue was sculpted in 1973, by the famed sculptor Renjala Gopalkrishna Shenoy under the aegis of Shri Ratnavarma Heggade. After Shri Ratnavarma Heggade died, the statue was then positioned atop the Ratnagiri Hill in February 1982 by Dr.D.Veerendra Heggade. The Gomateshwara Bahubali Statue is a monolith structure, and is one of the five stone statues of Bahubali located in Karnataka.

********************************

Shri Chandranathaswamy Jinalaya - ஸ்ரீ சந்திரநாத ஸ்வாமி ஜினாலயம்







It lies on the google map with coordination of  (12.94761, 75.38326) 


ஜினாயவளாகம் என்பதை அங்குள்ள அமைதி, ஆரவாரமற்ற தன்மை, ஜன நெருக்கடியற்ற பாதை, படிகள் அனைத்தும் ஒருங்கே சுட்டிக் காட்டி விடுகின்றன. ஏனெனில் மூலவரின் முகம் அமைதியும், சாந்தமும், புன்னகையும் நிறைந்த வடிவமாயிற்றே; அதனை அச்சூழலும் நிரூபித்துக் கொண்டிருப்பதை எத்தலத்திலும் உணரலாம்.

அப்புனிதபூமியில் நூற்றாண்டினைக் கடந்து நிற்கும் ஸ்ரீ சந்திரநாத பஸ்தி அசையாமல் தங்கியுள்ளது. நீலவண்ண வானமும், தழைத்து நிற்கும் பசுமைகளுக்கிடையே ஜைன திகம்பர மரபினை வளர்த்து வருவதற்காக இஜ்ஜினாலயத்தினை கவனமுடன் பாதுகாத்து வருகின்றனர்.

புகழ்பெருகி வளர்ந்து வரும் ஸ்ரீமஞ்சுநாதஸ்வாமி ஆலயத்திற்கிடையே பல நூற்றாண்டுகளாக இந்த ஜைன பஸ்தியும் வளர்ச்சியடைந்து தான் வந்திருக்கிறது. மே மாதம் 2001 ம் ஆண்டு தர்மாதிகாரி ஸ்ரீ வீரேந்திர ஹெக்டே அவர்களால் ஜைன மரபும், பக்திமார்க்கமும் பெருகும் வகையில் ஸ்ரீ சந்திரநாதஸ்வாமி ஜினாலயத்தை அழகான கட்டமைப்பாக மாற்றம் செய்து புனருத்தாரணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவிலுள்ள பல அழகிய ஜினாலய கட்டமைப்புகளில் ஒன்றான தோற்றத்தினைக் கொண்டுள்ளது. அனைத்தும் சரியான அளவில், பொலிவான தோற்றத்தில் இருந்தாலும், இவ்வாலத்தினை புகைப்படம் எடுக்க அனுமதி யில்லை.

வெள்ளைச் சலவைக்கல்லால் உருவாக்கப்பட்ட இக்கட்டமைப்பு வரும் பக்தர்களின் மனதிற்குள் ஸ்ரீ சந்திரப்ரபு ஜினரின் போதனைகளை நுழைத்து, வளரச் செய்து நல்வாழ்வுக்கான வழிகாட்டுதல்களை வழங்குவதே இவ்வாலத்தின் நோக்கமாக இருக்கும் என்றால் மிகையாகாது.

மஹாவீரரின் தென்னக விஜயத்திற்கு பின்னர் ஜைனம் வளர்ந்து மேனிலை அடைவதை இத்தலத்தின் ஜினாலயம் நிரூபித்து நிற்கிறது.

மூலவராக ஸ்ரீ சந்திரப்ரபு ஜினரின் சலவைக்கல் சிலை பிரதிஷ்டை  செய்யப்பட்டு, சுகநாசியில் பல உலோகச்சிலைகள் அமர்த்தப்பட்டிருப்பதை, நவரங்க  மண்டபத்திலிருந்து கண்டு தரிசனம் செய்ய வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. முக மண்டபம் சற்று நீண்ட ஆளோடியுடன் இணைக்கப்பட்டு அதன் தூண்களில் பல சமவசரண தேவதேவியரின் சிற்பங்களைச் செதுக்கி வைத்திருப்பது கலைப்பொக்கிஷமாக காட்சி யளிக்கிறது. சற்று நேரம் அமர்ந்து செல்ல எண்ணும் படியான சூழலை ஏற்படுத்தியிருப்பது இவ்வாலய வரைபட, கட்டுமானத்தின் சிறப்பாகும்.
----------------------------------------------- 
அங்கு ஜைன போஜன் சாலைக்கான வழிமாற்றம் புரியவில்லை. மதிய சாப்பாட்டு  நேரம் கடந்து பசிபெருகி காதை அடைக்க துவங்கியதால், அன்னபுரணி போஜன் சாலையில் தாவர உணவுதான் என கூறியதால்,  அங்கு நின்ற வரிசையில்  சென்று தரைமேடையில் அமர்ந்தோம்.

சில நொடியில் தையிலை, நீர், இனிப்பு, சாதம், ரசம், சாப்பிட்டு  முடிப்பதற்குள் சாம்பார் (மாறித்தான் வந்தது), நீர், சாதம், மோர் என உடனுக்குடன் வந்து திணற வைத்தனர். ஏழு நிமிடத்தில் முடிக்க வைத்தது விந்தையாக இருந்தது. (இலையில் பெற்றுக் கொள்ள தாமதமானால் வாயில் திணித்து விடுவார்கள் போலிருந்தது.)  வேறு வழியில்லை பல்லாயிரக்கணக்கான ஜனக்கூட்டம் தரிசன வரிசைவேலிக்குள்ளும், உணவருந்தும் கூடத்திலும் வந்தவண்ணம் இருந்தனர். தனிக்கவனிப்புக்கு நொடிப்பொழுதுகூட ஒதுக்க வழியில்லை.

வயிறு நிரம்பியதில் மகிழ்ச்சியே..

திடீரென அங்கிருந்து மைசூர் சென்று கனககிரி தரிசனம் காணலாம் என மேலும் ஒரு ஸ்தலத்தை பயணத்திட்டத்தில் நுழைத்தோம்.

சுப்ரமண்யா சென்று,  மைசூர் சாலையில் பயணத்தபோது, நிலச்சரிவினால் அச்சாலை அடைபட்டது  என்றனர். மாற்று வழி ஷக்லேஷ்வர், ஹாசன், மைசூர் என பயண நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டபோது  தெரிந்தது.  இந்த 16 கி.மீ. பயணம் வீண், வேறு வழியில்லாமல் மைசூர் பயணம் சுற்றுப்பாதையில் தொடர்ந்தது.


ஹாசனுக்கு முன்பே வலதுபுறம் திரும்பிச் புறவழிச்சாலையில் சென்றதால் எங்கும் சிற்றுண்டிச்சாலையே தென்படவில்லை.  அப்படியே இருந்தாலும் மாமிசஉணவுச்சாலை பெயர்ப்பலகைகள்.  மைசூர் புறநகருக்கருகே வந்தடைந்து விட்டோம். இரவு 10.15 மணி, வெஜ்  ஹோட்டல் என்ற ஆங்கில பெயர்ப்பலகை தென்பட்டது.  அந்த அகால நேரத்திலும், விரும்பிக்கேட்ட டிபன் உணவு  கிடைத்தது.  மனமார்ந்த நன்றியை ஊழியருக்கு  தெரிவித்து  விட்டு, மைசூர் எல்லையில் ஒரு தங்கும் விடுதியில்  இரு  அறைகள் எடுத்து உறங்க துவங்கும்  போது நடுஇரவு 11.45 மணி….























The confluence of faiths makes Dharmasthala, the abode of dharma, a unique legacy entrenched over the years. The centuries old Shri Chandranatha Swamy Basadi at Dharmasthala has been maintained in the pristine condition and is amongst the one of the most revered and celebrated Digambara shrines in South India.



The growing fame of Dharmasthala Shri Manjunatha Swamy temple has often obscured the fact that for centuries that Dharmasthala is also a revered Jain Basadi. With the novel thought of protecting the Jain legacy, a pious and methodical renovation of the temple in May 2001 by Shri Veerendra Heggade has made Shri Chandranatha Swamy Basadi, one of the most beautiful edifices in Dharmasthala and the south of India. Standing against the azure blue sky and the lush foliage around it, this temple clad in white marble is a sight to behold and to cherish, imbibe and nurture the teachings about our mortal life by Shri Chandranatha Swamy, Jain Theerthankara Mahaveer and his disciples.



Wednesday, August 29, 2018

Moodbidri BADAGA BASADI - மூடுபத்திரை படாகா ஜிநாலயம்


SHRI CHANDRANATHAR  JINALAYA  -  ஸ்ரீ சந்திரநாத ஸ்வாமி ஜிநாலயம்.






Location: with latitude, longitude of (13.07688, 74.9997)

click for map  put on the search box the above figure.

while travelling open navigator on the smart phone find your location and destination as (13.07688, 74.9997)

Bangaluru   Hassan   saklespur   Dharmasala   Moodbidri  = 352 Kms.

Mysore   Srirangapatna   Hassan   saklespur   Dharmasala   Moodbidri  = 285 Kms.


***********************

படகா பஸ்தி

இவ்வாலயம் மூடுபத்திரை வடதிசையில் அமைந்துள்ளதால் படகா பஸ்தி என்றழைக்கப்படுகிறது. சுமாராக அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இவ்வாலத்தில் அலங்கார வளைவுடன்  சாலையில் செல்லும்  போதே கண்ணில் தென்படுகிறது. உள்ளே செல்லும் முன் 40 அடிக்கும் மேலான அழகிய நெடிய மானஸ்தம்பம் அதன் அனைத்து அம்சங்களுடன் காணப்படுகிறது. மேலும் இவ்வாலயத்தில் திருவிழா நடப்பதால் துவஜமரத்தூணும் அடுத்து நட்டுள்ளனர்.

உட்புறம் புகைப்படம் எடுக்க அனுமதிக்க வில்லை.

மற்ற ஆலயங்களைப் போலவே முக, மஹா,  அர்த்த மண்டபங்களும், கர்ப்பகிருஹமும் காணப்படுகிறது. கர்ப்பகிருஹத்தில் அழகிய வெண்நிற சலவைக்கல்லால் செய்யப்பட்ட 3 அடி உயர சந்திரநாதர் கட்காசனச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அச்சிலையில் பீடம் வெண்கலத்தினால் செய்யப்பட்டு கண்களை கவரும் வண்ணம் காணப்படுகிறது.

மேலும் பச்சைநிறக் கல்லால் ஆன ஸ்ரீ பார்ஸ்வநாதரின் சிலை ஒன்று பனாமுடியுடன் காணப்படுகிறது. உலோகத்தினால் செய்யப்பட்ட 72 தீர்த்தங்கரர்களைக் கொண்ட திரிகாலஜினர்கள் பிரதிமையும் பளபளவென காட்சி தருகிறது.

வழக்கம்போல் மற்ற ஆலயங்களில் காணும் ஸ்ருதஸ்கந்தம், கணதரர் போன்ற சிலைகளும் அமர்த்தப்பட்டுள்ளன.

மாசி மாத வளர்பிறை திரையோதசியன்று தேர்த்திருவிழா  தொடர்ந்து நடைபெற்று வருவது இவ்வாலயத்தின் சிறப்பாகும்.
----------------------------------------------- 









Badaga basadi

This temple lies in the north of  Moodibidri and hence it is called as Badaga basadi. A ornamental arch on the roadside with a compound welcomes all for darshan.

Inside a Manasthamp of 40 feet height was erected with all features of Samavasaran description. Dwajasthamp also stand behind it. A rathorchav is conducted regularly on Sukla Thiraiyodasi in the month of Maga.

No permission for photography inside the main temple. 

It has Muga, Maha, Artha mantapas and Garbhagriha of regular layout.

Shri Chandranath jinar white marble stone of  3 feet high  in Khatkasana is installed on a polished  bronze platform as moolnayak. A beautiful green colour stone prathima of Shri Parshwanath jinar also in the basadi. Another speciality of this mandir is the 72 thirthankars metal cluster of  the past, present and future.

Shruthaskanth, Gandhar and other Jinar metal idols are also seated on a platform of Arthamantap.


-----------------------------------------------  




Saturday, August 25, 2018

Moodbidri LEPPADA BASADI - மூடுபத்திரை லெப்பாடா பஸ்தி

Leppada  basadi  -  லெப்பத பஸ்தி

Shri CHANDRANATHAR JINALAYAM  -  ஸ்ரீ சந்திரநாதர் ஜிநாலயம் 






Location: with latitude, longitude of (13.0731, 75.00069)

click for map  put on the search box the above figure.


Bangaluru   Hassan   saklespur   Dharmasala   Moodbidri  = 352 Kms.

Mysore   Srirangapatna   Hassan   saklespur   Dharmasala   Moodbidri  = 285 Kms.




  வெளியே சிறிய மண்டபம் அமைப்புடனான படிகளில் ஏறிச் சென்றால், பரந்த மேட்டுப்பகுதியில் 40 அடிக்குமேல் உயரமுள்ள மானஸ்தம்பம் விமான கலசத்துடன் கட்டப்பட்டுள்ளது. இந்த  ஆலயம் முற்காலத்தில் கட்டப்பட்டுள்ளதை பார்த்தாலே தெரிந்து  விடும்.

இம்முறை தாளிடப்பட்டிருந்தது. சென்ற முறை பார்த்தில் ஸ்ரீ சந்திரப்பரபு நாதர் 4அடியுயர சுதை பிம்பம் மூலவராக வீற்றிருக்கிறார். அதனால் லெப்பாத (சுதை மண்) பஸ்தி என்ற பெயரால் அழைக்கின்றனர்.

மேலும் சியாமயக்ஷன், ஜ்வாலாமாலினி தேவியும் அருகில் அமர்ந்துள்ளனர்.

பெரிய கட்டுமானங்களை கொண்ட இவ்வாலயத்தின் திருச்சுற்றில் நாக உருவங்களும் புடைப்புச் சிற்பங்களாக வைத்துள்ளனர்.


உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதிக்க வில்லை. புறத்தோற்றத்தை மட்டும் பதிவேற்றியுள்ளேன்.


This time CLOSED ON THAT DAY OF VISIT















It is also one of the  ancient Jinalayas in the Moodbidri. The temple structure was built on a  elevated  vast area. The raising stairs has a mantap like roof. A Manasthamb of more than 40 feet erected in the middle of the frontier.

As usual Mugamandap,  navarang, anthralam, Garbhakudi structure were constructed. A mud idol of Shri Chandraprabu nathar in sitting posture was  installed on the plinth. So it is called leppatha ie Mudsand.

Shri Shyama yaksh, shri  Jwalamalini yakshi idols were also seated on the platform.
They are not allow to take photos inside.  So only outside view photos were uploaded. 

Tuesday, August 7, 2018

Nittur


shri Chandraprabusamy digamber Jain mandir, 

ஸ்ரீ சந்திரப்ரபநாதர் திகம்பர் ஜினாலயா




நிட்டூர்

The place lies in the Coordination of (13.32203, 76.86099) set your navigator for.


மதியம் 12 மணியளவில் ஸ்ரீ சந்திரப்ரபு ஸ்வாமி ஜினாலயத்தை அடைந்தோம். வழக்கம் போல் மானஸ்தம்பம் வரவேற்று வணங்கவைத்தது. நாற்பது அடியுயரத்தில் அழகிய விமானத்தில் நாற்புரமும் மூலவரை ஒத்த ஜினரின் அமர்ந்த நிலை  சிலைகள் அலங்கரித்துக் கொண்டிருந்தன.


சற்றொப்ப 1175ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த ஆலயக்கட்டுமானத்தில்  பெரும்பாலானவை ஹொய்சள ஆலய கட்டிடக்கலையை பின்பற்றியே கட்டப்பட்டிருந்தது. மிகவும் பாழடைந்த  இடங்களை மட்டும் இக்கால சிமெண்டு கட்டுமானத்தினால்  சீர்செய்து பாதுகாத்துள்ளனர் என்பதை காணும் போதே தெரிகிறது.  பழமையை அப்படியே வண்ணங்கள் கூட பூசாமல் பாதுகாத்திருப்பது வியக்க வைத்தது.


கர்ப்பக்கிருஹம், சுகநாசி (உன்னாழி), நவரங்க (நாலுகால்) மண்டபம் மற்றும் முகமண்டபம்(9 கால்) என நான்கு பகுதிகளாக தோற்றமளித்தது.


துவக்கத்தில் ஸ்ரீ ஆதிநாதரை மூலவராக கொண்டிருந்த இப்புராதன ஜினாலயத்தை, மிகவும் பாழடைந்து போனபோது 26 ஜனவரி, 1969 ஆம் ஆண்டு சீர்செய்த வேளையில் இவ்வூர் மக்கள் சம்மதத்துடன் பகவான் சந்திரப்ரபுநாதரை பிரதிஷ்டை  செய்துள்ளனர்.

சுகநாசிகள் மிகவும் சிறியதாக இருப்பதால் கண்களுக்கு புலப்படவில்லை. நவரங்க மண்டபத்தின் மேல் ஒன்பது கோளவடிவத்தை அமைத்து கூரையில் மரத்தில் மிகநுட்பமான நகாசுவேலை அலங்காரங்களை செய்திருப்பது அழகாக உள்ளது. ஒரு கோள வடிவில் அஷ்ட திக்பாலகர் சிலைகள் தென்பட்டன. அவை மிக அழகிய வேலைப்பாட்டுடன் காணப்பட்டன. (வெளிச்ச மாறுபாட்டினால் புகைப்படம் எடுக்க முடியவில்லை.) அடுத்த ஒரு கூரையில் சங்கீத உபகரணங்களான வீணை, தபலா, டோலக் போன்றவற்றை அழகாக செதுக்கியிருந்தார்கள்.


முகமண்டபம் வழக்கம்போலான கட்டுமானத்துடன் காணப்பட்டது. அதே சமயம் அவற்றின் ஒன்பது  தூண்களும் ஹொயசள கலைநுணுக்கத்துடன் ஒவ்வொன்றும் வெவ்வேறு அலங்கார வேலைப்பாட்டுடன் காட்சி அளித்தன.


மேலும் கூரைப்பகுதில் அழகிய வேலைப்பாடுகளுக்கு இடையே தீர்த்தங்கரர்கள் சிலையும், யக்ஷ, யக்ஷி யர்கள்  உருவங்கள் அலங்கரித்துக் கொண்டிருந்தன. தென்திசை நோக்கி ஸ்ரீஜ்வாலாமாலினி யக்ஷி செதுக்கப்பட்டு, அன்றைக்கு விசேஷ பூஜையும் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் பட்டுத்துணியுடுத்தி ஆபரண அலங்காரத்துடன் கண்டோம். நல்ல தொரு தரிசனம் கிட்டியது. மேலும் அக்கூடக் கூரையில் ஸ்ரீபத்மாவதியும்  காணக்கிடைத்தது.

மூலவராக 4 அடிஉயர சலவைக்கல்லால் ஆன ஸ்ரீசந்திரப்ரபு நாதஸ்வாமி கட்காசன நிலையில் தரிசனம் தந்து  கொண்டிருந்தார். அவருக்கு  முன்னர் முக்கிய உலோகச்சிலை வடிவங்கள் அடுக்கடுக்காக  காட்சியளித்தன. அதற்கு அடுத்த வெளிப்பகுதிக்கு  வரும்போது மூலவருக்கு  வலதுபுறமாக ஸ்ரீ பிரம்மதேவர் கற்சிலை அன்றைய அலங்காரத்துடனான சன்னதியும், இடது புறம் ஸ்ரீ கூஷ்மாண்டி யக்ஷி  அலங்காரத்துடனான சன்னதியும்,  வழியில் ஸ்ரீ ஜ்வாலாமாலினி உற்சவ மூர்த்தி அலங்காரத்துடன்  வைக்கப்பட்டிருந்தது. நல்ல தெய்வீகமான சூழலை அந்த  நவரங்க கூடம் கொண்டிருந்தது  என்றால் மிகையாகாது.

திருச்சுற்றை வலம் வரும்போது மண்டபங்களின் வெளிச்சுவரில் ஹொய்சளக்கலையில் கும்பபஞ்சரம் போன்ற மாடவடிவில் தீர்த்தங்கரரின் புடைப்புச் சிற்பங்களுடன் காட்சியளித்தன. இடைஇடையே கும்பபஞ்சரம் போன்ற  அமைப்பும் அலங்காரவேலைப்பாடுடன் இருந்தது மேலும் அழகூட்டின.


கருவறைக்கு மேல் இரண்டு தளவிமானம் பத்மகலசத்துடன்  காட்சியளித்தது. கிரீவப்பகுதியில் நாற்புறமும் அமர்ந்த நிலையில் தீர்த்தங்கரர் சிலையும், அடுத்த  தளத்தில் கர்ணகூடம் சாலையும், பின்புறப்பகுதியில் தீர்த்தங்கரர் சிலையும், அதற்கடுத்த தளத்தில் சாலைக்கு கீழே உள்ள  மாடத்தில் தென்புறத்தில் ஸ்ரீஜ்வாலாமாலினி  சுதைசிலையும், மேற்புறத்தில் ஸ்ரீபிரம்மதேவரும், வடபுறத்தில் ஸ்ரீபத்மாவதி மாதா சுதைசிற்பமும் அமர்ந்த  நிலையில் வடிக்கப்பட்டு பொன்னிற வண்ணம்பூசி காட்சியளித்தன.


சுற்று முடியும் இடத்தில் மண்டப சுவற்றுக்கு வெளியே முன்பிருந்த  மூலவர்  ஸ்ரீஆதிநாதர் புராதன பத்மாசனச் சிலையும்,  முனிவர்கள் சல்லேகனா இருந்து உயிர்விட்டதை தெரிவிக்கும் நிஷாதி  சிற்பங்களும், பாதங்களும், நாகச் சிலைகளும் காட்சியளித்தன.


பூஜை நேரத்தில் சென்றதால் நல்ல தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியுடன் பல நுணுக்கமான சிற்பவேலைப்பாடுகளை கண்ட திருப்தியுடன் அவ்வாலயத்தை விட்டு அகன்றோம்.


அடுத்து சிம்மனஹத்தே எனும் நரசிங்கராஜபுரம் நோக்கி செல்ல பயணப்பட்டோம்….
----------------------------------------------- 


















































12th Century Jain Temple @ Nittur village, Near Tumkur City, Karnataka.

------------------------

Nittur, a village which is 30 kilometers to the west of Tumkur city, has a 12th century ‘Jaina Basadi’. Reflecting rich influence of Hoysala style of architecture, this basadi is divided into 4 main parts – Garbhagriha, Sukhanasi, Navaranga (4 pillared hall) and Mukhamantapa (9 pillared hall).


The temple at Nittur is said to have been built in the year 1175 A.D. At first the idol of Bhagawan Adinatha was the main deity in this temple. But with the passage of time it was ruined and the present idol of Bhagawan Shanthinatha was installed on 26th of January 1969.

While Sukhanasi is too small to go unnoticed, the insides of Navaranga has 9 beautiful dome-shaped ceilings of varied designs carved out of black soapstone (kappu balapada kallu). Of the 9, 2 ceilings in particular bear witness to excellent craftsmanship. One ceiling which is in the centre of Navaranga depicts Ashta Dikpalakas and Yakshis in a very detailed fashion, which has stood the test of time. And the other ceiling portrays musicians playing different musical instruments such as veene, tabala and kolalu among others. Mukhamantapa, although it is ordinary in nature, has 9 pillars each sculpted in different manner.

We can find very artistic and attractive carvings on the ceiling of the temple. We can also find the carvings of the tirthankaras and the yaksha and yakshi on the ceiling. The idols of Goddess Jwalamalini and Goddess Padmavathy found in the temple are very attractive. People from different parts of the state visit this temple every year to offer special prayers to yakshi Jwalamalini. Every Sunday special pooja is being conducted for Goddess Jwalamalini.

In front of the basadi, there is a 40 feet tall Manasthamba on the top of which one can notice a small structure in which there are 4 vigrahas facing four sides of the direction. On the right hand side wall of the basadi, the old statue of Adhinatha is placed next to a detailed stone inscription in old kannada, whose interpretation is not readily available.

There are also remnants of Nishadi stones within the confines of the basadi, which have been placed in the memory of those who undertook Sallekhana and sacrificed their lives. Unfortunately, these stones lie in a dilapidated state and if conservation efforts are not taken, they may get lost for generations to come.