Wednesday, June 25, 2014

NALLAVANPALAYAM - நல்லவன்பாளையம்


SHRI ADHEESWARAR JINALAYA - ஸ்ரீ ஆதீஸ்வரர் ஜினாலயம் 




Location  lies on the map in the coordination of (12.20102, 79.04738) put the latitude, Longitude on the search box 

Map for Jain pilgrimage centres:   Click   NALLAVANPALAYAM on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

Route:-

Tindivanam→ Gingee→ Tiruvannamalai -Nallanvanpalayam - Total = 71 k.m. 


Villupuram→Vettavalam→ Tiruvannamalai -
Nallanvanpalayam - Total =70 k.m. 

Ulundurpet→ Tirukovilur→ Tiruvannamalai -
Nallanvanpalayam - Total = 82 k.m. 

Vandavasi→ Chetpet→Avalurpet→Tiruvannamalai -
Nallanvanpalayam - Total = 82 k.m.



செல்வழி:- 

திண்டிவனம்→ செஞ்சி→திருவண்ணாமலை - நல்லவன் பாளையம் - 71 கி.மீ. 


விழுப்புரம்→ வேட்டவலம்→திருவண்ணாமலை - 
நல்லவன் பாளையம்- 70 கி.மீ. 

உளுந்தூர்பேட்டை→ திருக்கோவிலூர்→திருவண்ணாமலை - 
நல்லவன் பாளையம் -80கி.மீ. 

வந்தவாசி→ சேத்பட்→அவலூர்பேட்டை→திருவண்ணாமலை -
நல்லவன் பாளையம் - 82கி.மீ.






SHRI ADHINATHAR  -  ஸ்ரீ ஆதிநாதர் 


ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி- க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன்- வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து! 




TEMPLE FIRST FLOOR  -  ஆலய முதல் தளம் 













Shri Adhinathar , three feet Black marble statue is the sanctum sanctorum of North facing Jain temple of Nallavanpalayam is on the first floor. There is little and fine tower is on the temple.

Daily pooja of twice is conducted in the 50 year old temple. The ground floor is very useful for meditation and festival activities.


வடதிசை நோக்கிய இந்த ஆலயத்தின் முலவர் ஸ்ரீஆதிநாதர் மூன்றடி உயர கருமை நிற பளிங்குக் கல்லால் ஆனது. மாடியின் மேல் அமைந்த இவ்வாலயம் சிறிய அழகான கோபுர சிகரம் உள்ளது. பல உலோகச் சிற்பங்களும் உள்ளன.
 

இருவேளை நித்ய பூஜை நடைபெறும் இவ்வாலயத்தில் கீழே பெரிய கூடம் தியான மண்டபமாகவும், விழாக்காலங்களில் பயன்படும் படி அமைந்துள்ளது. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

==========

Tuesday, June 24, 2014

PERUMBUGAI - பெரும்புகை




SHRI MALLINATHAR JAIN TEMPLE  -  ஸ்ரீ மல்லிநாதர் ஜினாலயம் 





PERUMBUGAI  -  பெரும்புகை 







Location  lies on the map in the coordination of (12.26431, 79.44612) put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click    PERUMBUGAI on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


Route:-

Tindivanam Uranithangal Perumbuhai - Total = 25 k.m.

GingeeUranithangal Perumbuhai - Total = 6 k.m.

chetpetGingeeUranithangal Perumbuhai - Total = 30 k.m.

Vandavasi Vellimedupettai DevanurUranithangal Perumbuhai - Total = 48 k.m.


செல்வழி:-

திண்டிவனம் ஊரணிதாங்கல்பெரூம்புகை - 25 கி.மீ..

செஞ்சி ஊரணிதாங்கல்பெரூம்புகை - 25 கி.மீ.

சேத்பட்செஞ்சி ஊரணிதாங்கல்பெரூம்புகை - 25 கி.மீ.

வந்தவாசி வெள்ளிமேடுபேட்டைதீவனூர் ஊரணிதாங்கல்பெரூம்புகை - 48 கி.மீ..








Shri MALLINATHAR MAIN DEITY  --  ஸ்ரீ மல்லிநாதர் மூலவர் 


ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மல்லி தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து மிதிலாபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து கும்பன் மஹாராஜாவிற்கும், ப்ராஜாவதி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 25 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 55 ஆயிரம் வருடம் ஆயுள் உடையவரும், கலசம் (கும்பம்) லாஞ்சனத்தை உடையவரும், குபேர யக்ஷ்ன், அபராஜிதா யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் விசாகராத் முதலிய 28  கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் பால்குண சுக்ல பஞ்சமி  திதியில் 96 கோடி முனிவர்களுடன் சம்பல கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீமல்லி தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



MELATHIPAKKAM - மேலத்திபாக்கம்


Shri ANANTHANATHAR JAIN TEMPLE  -  ஸ்ரீ அனந்தநாதர் ஜினாலயம் 












Location:   lies on the Google map in the coordination of (12.31991, 79.54067) ie put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click    MELATHIPAKKAM on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

Route:-

 Tindivanam Vellimedupettai Melathipakkam - Total = 19 k.m.

 GingeeNattarmangalam Veeranamur Melathipakkam - Total = 28 k.m.

 Chetpet MelkalavaiBoonthai Veeranamur Melathipakkam - Total = 41.5 k.m.

 Vandavasi Vellimedupettai Melathipakkam - Total = 28 k.m. 



 செல்வழி:- 

திண்டிவனம் வெள்ளிமேடுபேட்டைமேல் அத்திப்பாக்கம் - 19 கி.மீ. 

வந்தவாசி வெள்ளிமேடுபேட்டைமேல் அத்திப்பாக்கம் - 28 கி.மீ. 

 செஞ்சி நாட்டார்மங்கலம்வீரனாமூர்மேல் அத்திப்பாக்கம் - 25 கி.மீ.

 சேத்பெட் மேல்கலவைபூந்தைவீரனாமூர்மேல அத்திப்பாக்கம் - 41.5 கி.மீ. 




Shri ANANTHANATHAR  MAIN DEITY  -  ஸ்ரீ ஆனந்தநாதர்  மூலவர் 



ஓம் ஹ்ரீம் ஸ்ரீ அனந்த தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து சிம்மசேன மஹாராஜாவிற்கும், ஜயஸ்யாமா மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும்  50 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 30 லக்ஷம் வருடம் ஆயுள் உடையவரும், வல்லூகம் (கரடி) லாஞ்சனத்தை உடையவரும், பாதாள யக்ஷ்ன், அனந்தமதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் ஜெயராதி முதலிய 50 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் சைத்ர அமாவாசை  திதியில் 96 கோடா கோடி 70 லட்சத்து 70 ஆயிரத்து 700 முனிவர்களுடன் ஸ்வயம்பிரப கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீஅனந்த தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!

Saturday, June 21, 2014

TIRUVANNAMALAI JAIN TEMPLE - திருவண்ணாமலை ஜினாலயம்



Sri SREYAMSANATHAR JINALAYA  -  ஸ்ரீ ஸ்ரேயாம்சநாதர் ஜினாலயம் 




FRONT VIEW   -  முன்புற தோற்றம்  




Location map:  Click here

Map for Jain pilgrimage centres:   Click    TIRUVANNAMALAI on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


Contact           :   Mr. Arugadoss, Trustee - cell No. +91 9442974816
தொடர்புக்கு  :

Route:-

Tindivanam→ Gingee→ Tiruvannamalai - Total = 67 k.m. 


Villupuram→Vettavalam→ Tiruvannamalai - Total = 67 k.m. 


Ulundurpet→ Tirukovilur→ Tiruvannamalai - Total = 77 k.m. 


Vandavasi→ Chetpet→Avalurpet→Tiruvannamalai - Total = 77 k.m.




செல்வழி:- 

திண்டிவனம்→ செஞ்சி→திருவண்ணாமலை - 67 கி.மீ. 


விழுப்புரம்→ வேட்டவலம்→திருவண்ணாமலை - 65 கி.மீ. 


உளுந்தூர்பேட்டை→ திருக்கோவிலூர்→திருவண்ணாமலை - 77கி.மீ. 


வந்தவாசி→ சேத்பட்→அவலூர்பேட்டை→திருவண்ணாமலை - 77கி.மீ.






Main Deity  _  மூலவர் 

ஸ்ரீ ஸ்ரேயம்ஸநாதர்


ஓம் ஹ்ரீம் ஸ்ரீ ஸ்ரேயம்ஸ தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து சிம்மபுர நகரத்து இக்ஷுவாஹு வம்சத்து விஷ்ணு மஹாராஜாவிற்கும், நந்தா மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும்,  பொன் வண்ணரும் 80 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷம் வருடம் ஆயுள் உடையவரும், பெரண்டம் (காண்டாமிருகம்) லாஞ்சனத்தை உடையவரும், ஈஸ்வர யக்ஷ்ன், கௌரி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் குந்தராதி முதலிய 77 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேதகிரியில் ஸ்ராவண பௌர்ணமி யில் 96 கோடாகோடி 96 லக்ஷத்து 9 ஆயிரத்து 542 முனிவர்களுடன் சங்குல கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீஸ்ரேயாம்ஸ தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!






Shri  SREYAMSANATHAR JINALAYAM:

O n the blessings of Shri 108 AARJAVASAGAR MUNI MAHARAJ the East facing Jain temple was built in July, 2006 at Vetavalam.

The beautiful 3.75 feet Black marble stone made Moolavar and other five metal alloy idol Thirthankars were worshiped with  poojas, twice daily.

The ground floor is used for Meditation hall and the first floor is made for Jinalaya.



ஸ்ரீ ஸ்ரேயாம்ஸ நாதர் ஜிநாலயம்:

கிழக்கு நோக்கிய இவ்வாலயம் ஜூலை.2006 ஆண்டில் ஸ்ரீ 108 ஆர்ஜவ சாஹர் மூனி மஹராஜ் ஆசியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டு வேட்டவலம் சாலை, தேன்கழனி நகர்,என்ற இடத்தில் அழகாக அமைத்துள்ளனர்.

கருமை நிற பளிங்கு கல்லினால் 3 3/4 அடி உயரத்தில் செய்யப்பட்ட அழகிய மூலவர், மற்றும் உலோக பிம்ப தீர்த்தங்கரர்களுக்கும் தினமும் இருவேளை பூஜை நடைபெற்று வருகிறது.

இவ்வாலயத்தின் தரைதளம் தியான மண்டபமாகவும் , முதல் தளம் ஜினாலயமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.








 




Thursday, June 19, 2014

TORAPPADI JAIN TEMPLE - தொரப்பாடி ஜினாலயம்



Shri PUSHPATHANTHAR JINALAYAM  -  ஸ்ரீ புஷ்பதந்தர் ஜினாலயம்



FRONT VIEW   -  முன்புற தோற்றம் 




Location map:  Click here

Map for Jain pilgrimage centres:   Click    THORAPADI on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


Route:

 Tindivanam Gingee Melacherry  Torapaddi – 41 k.m.

 Villupuram  Gingee Melacherry  Torapaddi – 51 k.m.

Tiruvannamalai gingee road, Sathiyamangalam Thenpalai torapaddi – 37 k.m.

Vandavasi  Chetpet Melmalaiyanur torapadi – 54 k.m.


செல்வழி:

திண்டிவனம்செஞ்சி  மேலச்சேரி தொரப்பாடி – 41 கி.மீ..

விழுப்புரம்  செஞ்சி  மேலச்சேரி தொரப்பாடி – 51 கி.மீ..

திருவண்ணாமலைசெஞ்சிரோடு, சத்தியமங்கலம்தென்பாலைதொரப்பாடி- 37 கி.மீ..

வந்தவாசி சேத்பட் மேல்மலையனூர் தொரப்பாடி – 54 கி.மீ..





Main Deity  -  மூலவர் 


ஓம் ஹ்ரீம் ஸ்ரீ புஷ்பதந்த தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து காகந்தி நகரத்து இக்ஷுவாஹு வம்சத்து சுக்ரீவ மஹாராஜாவிற்கும், ஜெயராம மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும்,  வெள்ளை வண்ணரும் 100 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 2 லக்ஷம் பூர்வம் ஆயுள் உடையவரும், கரிமஹரம் (முதலை) லாஞ்சனத்தை உடையவரும், அஜித யக்ஷ்ன், மஹாகாளி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் விதர்பராதி முதலிய 88 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேதகிரியில் பாத்ரபத சுக்ல அஷ்டமி திதியில் ஒரு கோடாகோடி 99 லக்ஷத்து 7 ஆயிரத்து 780 முனிவர்களுடன் சுப்ரபாச கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீபுஷ்பதந்த தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!




CORRIDOR VIEW  -  திருச்சுற்று தோற்றம் 









Shri Pushpathanthar Jinalaya:

South facing jain temple . An ancient temple was in the tenth century in the temple.  After several century it was renovated but the old Dravidan style is still traceable. A little amount of Jain habitants maintained the temple well. A beautiful main Deity was laid in the santum sanctorium.

Sri Padmavathy devi, Sri Kooshmandini devi, Sri Brahmadevar sannathi is there. Around the corridor the twenty four thirthankars’  sannathis also built recently.




ஸ்ரீ புஷ்பதந்தர் ஜிநாலயம்:

தெற்கு நோக்கிய புராதணமான இவ்வாலயம் 10 நூற்றாண்டில் இருந்ததற்கான பல்லவர் கால அடையாளங்கள் தென்படுவதாக குறிப்பிட பட்டுள்ளது. அதன் பிறகு பல நூற்றாண்டுகளுக்கு பின் புதுபிக்கப்பட்டுள்ளது. குறைவான ஜைன குடும்பத்தினரே வசிக்கும் இவ்வூரில் ஜினாலயம் அழகாக அமைத்துள்ளனர்.


மிக அழகான மூலவர், ஸ்ரீ பத்மாவதி, ஸ்ரீ கூஷ்மாண்டினி மற்றும் ஸ்ரீ பிரம்ம தேவர் ஆகிய சன்னதிகளும்;  ஆலய திருச்சுற்றில் 24 தீர்த்தங்கரர்கள் அமைந்த விமானங்களும் கட்டப்பட்டுள்ளது.



                      IDOLS :                                          சிலைகள்: 
























* *