Monday, October 20, 2014

NELLIYANKULAM - நெல்லியாங்குளம்


Shri NEMINATHAR  JAIN TEMPLE  -  ஸ்ரீ நேமிநாதர் ஜிநாலயம் 






Location  lies on the map in the coordination of (12.42903, 79.64538) ie put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click NELLIYANKULAM
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  நெல்லியாங்குளம் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )



ROUTE:

Vandavasi→ Melmaruvathur road →Marudadu turn → NELLIYANKULAM    = 16 k.m.

Gingee  V. Pettai→ katteri→ NELLIYANKULAM  = 42 k.m.

Melmaruvathur Vandavasi road Marudadu turn→ NELLIYANKULAM   = 30 k.m.

Arni  → Vandavasi→ Marudadu turn  NELLIYANKULAM   =  60 k.m.

Kanchipuram Vandavasi→ Marudadu turn→ NELLIYANKULAM     = 53 k.m.



செல்வழி:.

வந்தவாசிமருவத்தூர்  சாலைநெல்லியாங்குளம் திருப்பம்  நெல்லியாங்குளம்  = 16 கி.மீ.

செஞ்சி  வெ.பேட்டை  காட்டேரி நெல்லியாங்குளம் திருப்பம்  நெல்லியாங்குளம்   42 கி.மீ.

மருவத்தூர்வந்தவாசி சாலை  நெல்லியாங்குளம் திருப்பம்  நெல்லியாங்குளம் = 30 கி.மீ .

ஆரணி  → வந்தவாசி மருவத்தூர்  சாலைநெல்லியாங்குளம் திருப்பம்  நெல்லியாங்குளம்= 60 கி.மீ.


காஞ்சிபுரம் வந்தவாசி   
நெல்லியாங்குளம் திருப்பம்  நெல்லியாங்குளம் =  53 கி.மீ







 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ நேமி தீர்த்தங்கராதி சகல முனி  கணேப்யோ அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


   ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து துவாரகாவதி  நகரத்து ஹரி வம்சத்து  சமுத்திர விஜய மகாராஜாவிற்கும் சிவதேவி தேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மகா புருடரும், இந்திர நீலம் (கருப்பு) வண்ணரும் 10 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் ஓரு ஆயிரம் வருடம் ஆயுள் உடையவரும்  சங்கம் (சங்கு) லாஞ்சனத்தை உடையவரும் சர்வான்ன யக்ஷன் கூஷ்மாண்டி (தர்மதேவி)  யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் வரதத்தர்  முதலிய 11  கணதர பரமேட்டிகளை உடைய வரும் ஒரு மாதம் பிரதிமா யோகம் கொண்டவரும் ஊர்ஜெயந்தகிரியில் ஆஷாட  சுக்ல சப்தமியில் 72 கோடி 700    முனிவர்களுடன்  பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீ நேமி தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



நெல்லியாங்குளம்  கிராமம் வந்தவாசிக்கு தென்கிழக்காக 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. (கீழ்வில்லிவனத்திற்கு அருகில் உள்ளது.) பல நூற்றாண்டுகளாக அவ்வூரில் சமணர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்காக கட்டப்பட்ட ஜிநாலயம் ஒன்று உள்ளது. அதன் விரிவாக்கம் அவ்வப்போது நடந்துள்ளது. அதனை அதில் உள்ள மண்டப தூண்கள் மற்றும் வேலைப்பாடுகள் நிருபிக்கின்றன.


தென்திசை நோக்கிய குடவரையும், திருச்சுற்று மதிற்சுவரும் கொண்டுள்ள இந்த ஜிநாயத்தின் மூலவராக ஸ்ரீநேமிநாதர் காட்சியளிக்கிறார்.  கருவறையில் வீற்றிருக்கும் மூலவர் கற்சிலை முக்குடை, சாமர தாரிகளுடன் சமவசரண ஜிநரின் எட்டு அம்சங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. கீழே இரண்டு அடுக்கு மேடையும் அதன் மேல்உள்ள பத்ம மேடை மீது அமர்ந்த நிலையில் சற்று புடைப்புடன் வடிக்கப்பட்டு காட்சி தருகிறார். அதன் மீது விமானம் இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது. திசைக்கு அமர்ந்த நிலையில் இரண்டு தீர்த்தங்கரர்களும், நின்ற நிலையில் நான்கு தீர்த்தங்கரர்களுமாக  நான்கு திசையிலும் 24 தீர்த்தங்கரர்கள் சுதையில் சிலைகள் வடிக்கப்பட்டு  சிகர, கலசங்கங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.


அர்த்த மண்டபத்தின் தூண்கள் மிகவும் பழமையான உருண்டை வடிவில் உள்ளது. அவ்விடத்தின் நடுவே மற்றும் (உள்ளாலைக்கு) இருபுறமும் உள்ள மேடையில் உலோகச் சிலைகள்  அழகாக அலங்கரிக்கின்றன.  அதில் முக்கிய வழிபாட்டிற்கு உரிய தீர்த்தங்கரர்கள், 24 தீர்த்தங்கரர்கள், நவக்கிரக தீர்த்தங்கரர்கள், 14 ரிஷப-அனந்தர் தொகுப்பு,   பகவான்பாகுபலி, நவதேவதை, பஞ்சபரமேஷ்டி, சித்தபகவான், மகாமேரு, நந்தீஸ்வர தீபம், யக்ஷ, யக்ஷியர்கள் போன்றவை உள்ளன.


அடுத்துள்ள மகாமண்டபத்தின் தூண்கள் அடுத்த காலகட்டத்தில் கட்டப்பட்டதால் சதுர வடிவில் உள்ளது. இரு தூண்களில் ஸ்ரீஆதிநாதர், ஸ்ரீமகாவீரர் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. அம்மண்டபம் இரும்புகம்பிகளால் கதவு அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாட்டுடன் உள்ளது. அடுத்துள்ள முகமண்டபம் அழகிய தூண்களில் தீர்த்தங்கரர்கள் உருவம் செதுக்கப்பட்டும், சுவரில் ஜினரின் முக்கிய நிகழ்வுகளின் ஓவியங்களும் காணப்படுகிறது.



மேலும் குடவரைக்கு கிழக்கிலும், மேற்கிலும் மண்டபங்கள் உள்ளன. அவை இரண்டும் மேற்கூரையினால் சென்ற நூற்றாண்டில் இணைக்கப் பட்டுள்ளது. கிழக்கு மண்டபத்தில் 24 தீர்த்தங்கரர்கள் உலோகச்சிலைகள் மேடையில் பிரபையுடன் அழகாக அலங்கரிக்கின்றன. அதன் முன்னர் உள்ள சிறிய மேடையில் ஸ்ரீபார்ஸ்வநாதர் கற்சிலையும், ஸ்ரீபிரம்மதேவர், ஸ்ரீதர்மதேவி கற்சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. 


ஜிநாலயத்தில் தின பூஜை, நந்தீஸ்வர பூஜை, முக்குடை தீபம், விசேஷபூஜைகளுடன் அனைத்து தீர்த்தங்கரர்களின் மோட்ச தின பூஜைகள், அக்ஷய திரிதியை ஸ்ரீரிஷபநாதர் திருவீதியுலா, காணும் பொங்கல் ஸ்ரீதர்மதேவி திருவீதியுலா போன்றவை செவ்வனே நடைபெற்று வருகிறது.  
  

Nelliyangulam village situated about 12 kms southeast of Vandavasi town (near by Kilvillivalam). Jain families are living there since several centuries. They had a Jinalaya and on it several expansions took place at various times.  Such activities were proved by different shapes of pillars and carvings on the pavilions. And the evidences of antiquity are destroyed while doing the repair and renovation works.

South facing entranceway and open corridor is surrounded by high wall. Shri Neminathar, single stone carved statue with eight features of Samavasaran thirthankar on the rear section, the thirthankar figure and three tier pedestals are in protrude form, embraces upon the sanctum plinth. It was crowned by two tier viman has two thirthankars in sitting posture and four in standing on each directions, (totally twenty four) and shikara with padmam, kalash on the top.  

In the partitioned sanctum metal idols are placed on both side of aisle. The Arthamandap supported by round shaped pillars, seems to be very old design of art, and consists of platforms with metal idols and daily pooja statues, typically the thirthankar idols; 24 thirthankar cluster, 14 cluster of Rishbh-Anantha, 9 cluster of Navargaha; Bagavan Bahubali, Navadevatha, Panchaparameti, Shruthaskandam, Nantheeswara dheepam, Mahameru and Yaksh, Yakshis are arranged beautifully.  In front a Mahamandap supported by square pillars has shri Rishabhar, shri Mahaveerar engravings was built in subsequent period, wall paintings display the   history of thirthankars. The three chambers are secured tightly by iron rod gates. Next a Mugamandap porch is in front of the temple vedi block.

Apart from, two porches are built on both sides of the Main entranceway connected by over roof. On the east side 24 thirthankar metal idols with prabha are arranged on a high platform, in front of that Shri Parswanathar, shri Brahmadevar, Shri Dharmadevi stone statues are established upon pedestals.


Especially daily pooja, Nantheeswara pooja, Mukkudai for 30 days, special poojas on Moksha day of all 24 thirthankars and Akshaya thirithiyai day Shri Rishabhdev urchav, Kanumpongal day Shri Kooshmandini urchav are celebrated recurrently.      




Sunday, October 19, 2014

KILVILLIVALAM - கீழ்வில்லிவலம்


Shri Mahaveerar Jain  Temple  -  ஸ்ரீ மஹாவீரர் ஜிநாலயம் 





Location: 

lies on the Google map in the coordination of (12.44043, 79.62229) ie put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click Kilvillivalam
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கீழ்வில்லிவலம் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )



ROUTE:

Vandavasi→ setharakuppam road→ Kilvillivalam   = 9 k.m.

Gingee  V. Pettai→ setharakuppam road→ Kilvillivalam = 42 k.m.

Melmaruvathur Vandavasi setharakuppam road→ Kilvillivalam  = 32 k.m.

Arni  → Vandavasi→ setharakuppam road→ Kilvillivalam  =  54 k.m.

Kanchipuram Vandavasi→ setharakuppam road→ Kilvillivalam    = 50 k.m.



செல்வழி:.

வந்தவாசி சேதராகுப்பம் சாலை கீழ்வில்லிவலம்  = 9 கி.மீ.

செஞ்சி  வந்தவாசி சேதராகுப்பம் சாலை கீழ்வில்லிவலம்    42 கி.மீ.

மருவத்தூர்வந்தவாசி சாலை  சேதராகுப்பம் சாலை கீழ்வில்லிவலம் = 32 கி.மீ .

ஆரணி  → வந்தவாசி சேதராகுப்பம்சாலை கீழ்வில்லிவலம்= 54 கி.மீ.


காஞ்சிபுரம் வந்தவாசி சாலை  
சேதராகுப்பம் சாலை கீழ்வில்லிவலம் =  50 கி.மீ










 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும்,  பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



வந்தவாசிக்கு தென்கிழக்கு சாலையில் 9 கி.மீ. பயணித்தால் வருவது கீழ்வில்லிவனம் என்னும் கீழ்வில்லிவலம் கிராமம். அங்கு பல நூற்றாண்டுகளாக சமணர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அகவே சமணர் ஆலயம் ஒன்று இருந்துள்ளது. தற்போதுள்ள அவ்வாலயம் 200 வருடங்களுக்கு முன்னர் முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பல சீரமைப்பு பணிகளை பெற்றதால் அதன் தொன்மைக்கான ஆதாரங்கள் தென் படவில்லை. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் வாழ்ந்த இவ்வூரில் தற்போது குறைந்தே காணப்படுகிறது. இருப்பினும் ஆலய பராமரிப்பு நித்ய பூஜை, நந்தீஸ்வர பூஜை மற்றும் தீர்த்தங்கரர் ஜன்ம, மோட்ச தினத்திற்கு விதானம், மார்கழி முக்குடை, ஸ்ரீமகாவீரர் ஜெயந்தி திருவீதியுலா போன்றவைகளை செவ்வனே நடத்தி வருகின்றனர்.

தென்திசை நோக்கிய இவ்வாலயம் ஸ்ரீமகாவீரரை மூலவராகக் கொண்டுள்ளது. முக்குடையின் கீழ் அமர்ந்த கோலத்தில் வடிக்கப்பட்ட கற்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதன் மேல்புற விமானம் இருதளம் கொண்டு சிகர கலசத்துடனும், தளத்திற்கு நான்கு தீர்த்தங்கரர் சிலைகள் சாமரைதாரிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது.  அர்த்த மண்டபத்தின் நடுவே மேடையில் தினபூஜைக்காக மகாவீரரின் வெண்பளிங்குச்சிலை அழகாக வடிக்கப்பட்டு அமர்த்தப்பட்டுள்ளது. கீழ்புறம் ஸ்ரீஆதிநாதரின் மிகப்பழமையான சிலையொன்று மேடையில் உள்ளது. மற்றும் உலோகச்சிலைகள்; முக்கிய தீரத்தங்கரர்கள், நவதேவதா, பஞ்சபரமேஷ்டிகள், 24 தீர்த்தங்கரர்கள், நவக்கிரக தீரத்தங்கரர்கள், ஸ்ருதஸ்கந்தம், சித்தபரமேஷ்டி,மஹாமேரு, நந்தீஸ்வர தீப வடிவம், முக்கிய யக்ஷ, யக்ஷிகள் மற்றும் வெண்பளிங்கு கற்சிலையில் தீர்த்தங்கரர் போன்றவை மேற்புற மேடையை அலங்கரிக்கின்றன.

மகாமண்டபம் இருபுறமும் துவாரபாலகர் சிலைகளுடன் இரும்பு கதவுகளுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சிறிய முக மண்டபமும் ஆலய திருச்சுற்றில் பலிபீடம், மனத்தூய்மைக் கம்பம் கீழ்தட்டில் நான்கு தீர்த்தங்கரர் சிலைகள் சற்று புடைப்புடன் தாமரை மலரில் அமர்ந்த கோலத்திலும், மேற்தட்டில் நால்வர் கண்ணாடி கதவுகளால் மூடப்பட்டு சிமெண்டினால் கட்டப்பட்டுள்ளது. தென்புற நுழைவாயிலின் இருபுறமும் மண்டபங்கள் உள்ளது. கீழ்புற மண்டபத்தில் ஸ்ரீபிரம்மதேவர், ஸ்ரீதர்மதேவி, ஸ்ரீபத்மாவதி சன்னதிகள் உள்ளன. மேலும் உயரமான மதிற்சுவருடன் உள்ள திருச்சுற்றின் முடிவில் நவக்கிரக சன்னதியும், ஆலய கிணறும் உள்ளது.




Keezhvillivanam alias Kilvillivalam, a hamlet located at 9 kms southeast of Vandavasi town. Since several centuries Jains are living there. Two hundred years back they fully renovate the jinalayam of their native. So the evidences of inscription and the ancient carvings are destroyed. Now few families are maintaining the Jinalaya of more than fifty residents’ strength in olden days. However they conducting all poojas and rituals, especially daily pooja, Nantheeswara pooja, Mukkudai for a month, Vidhan pooja for all thirthankar Janma, moksha days, shri Mahaveerar Jayanthi urchave and etc..

South viewing temple got Shri Mahaveerar in sanctum, made of Stone curving with tri-umbrella and other features, on the plinth. Which is crowned by two tier viman has four thirthankars with chamara maids at the bottom and four same style idols at the top tier also. A beautiful shikara and kalash were on the peak. Next Arthamandap consists of center platform with White marble statue of Mahavira and some metal staues for daily pooja purpose. On the east side a Stone carved idol of Shri Adinathar is established. West side, metal alloy idols of thirthankars necessary for rituals, Navadevatha, panchapameshti, Sruthaskandam, Nantheeswara dheepam, mahameru, Sidhaparameshti and Yasha, yashis were arranged on platforms. 
  
A Mahamandap with Dhuvarabalagar cement statue on the doorway of arthamandap and tighted with iron gril doors for security purpose. Mugamandap also welcomes all at front. Front of the open corridor an altar and manasthamp got four thirthankar cravings at the bottom and four at the top with glass panel are constructed by cement mortar.


The south entranceway and high wall structure is surrounding the corridor. Both sides of the entrance, porches were built. East side got three shrines of Shri Brahmadevar, Shri Dharmadevi, Shri Padmavathy stone statues. At the end of corridor a Navagraha idol platform also built inside the Jinalaya.