Shri MAHAVEERAR JAIN TEMPLE - ஸ்ரீ மகாவீரர் ஜினாலயம்
Location: with latitude, longitude of (12.47952, 79.26781)
click for map put on the search box the above figure.
while travelling open navigator on the smart phone find your location and destination as (12.47952, 79.26781)
Tindivanam → Gingee → Chetpet → Polur road → Thatchambadi = 62 kms.
chetpet → Polur road → Thatchambadi = 9 kms.
Arni → Chetpet → Polur road → Thatchambadi = 35 kms.
Villupuram → Gingee → Chetpet → Polur road → Thatchambadi = 77 kms.
Tiruvannamalai → Polur → Chetpet road → Thatchambadi = 49 kms.
Vandavasi → Chetpet → Polur road → Thatchambadi = 39 kms.
செல்வழி:-
திண்டிவனம் → செஞ்சி → சேத்பட் → போளுர் சாலை → தச்சாம்பாடி = 62 கி.மீ.
சேத்பட் → போளுர் சாலை → தச்சாம்பாடி = 9 கி.மீ.
ஆரணி → சேத்பட் → போளுர் சாலை → தச்சாம்பாடி = 35 கி.மீ.
விழுப்புரம் → செஞ்சி → சேத்பட் → போளுர் சாலை → தச்சாம்பாடி = 77 கி.மீ.
திருவண்ணாமலை → போளுர் → சேத்பட் சாலை → தச்சாம்பாடி = 49 கி.மீ.
வந்தவாசி →சேத்பட் → போளுர் சாலை → தச்சாம்பாடி = 39 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
Thatchambadi is one more Jains living
village since several hundred years, is located in the Polur road, about 9 Kms from Chetpet, Tiruvannamalai dist, Tamilnadu. They built a beautiful Jinalaya in the 16th Century AD
and dedicate to Shri Mahaveerar. They got assistance from the Nayak king the
ruler of the region at the time.
Shri Mahaveerar granite plate carving
with Samavasarn Jinar’s eight features fashion was installed on the
Gharbahgriha plinth. It belongs to 16th century sculpture art, since
the present Moolnayak is the prime-established statue. The sanctum is covered
on the top by a two stage Viman , first stage contains Standing posture
Thirthankar mortar idols with Shamarai maids and second got sitting posture
idols on four directions. A padmam and Kalash on the Shikara the peak.
Next chamber, Arthamandap pavilion is
supported by round and square shaped sand-stone pillars, like ancient temple
structure. A daily pooja platform is at the center with metal idol of shri Mahaveerar
is placed. On either side platforms has many metal idols ie 24 thirthankar
cluster, 14 Rishabh-Ananthar cluster, Shri Vimal thirthankar having shield shaped
prabhai(a different design), some Parshwathirthankars, Shruthaskandam, Navadevatha,
Mahameru and some Yaksh, Yakshies. All are arranged on stepped platforms. Shri
Brahmadevar stone statue on an elephant and Shri Kooshmandini Yakshi statue
were installed individually on either side Diases.
In the fore a mahamandap and a
Mugamandap also present. On the top of the porch beautiful carving of shri
Parshwanathar stone idol is seated inside a gallery. East entranceway and
corridor enclosure of compound wall were attached. An altar and a Manasthamp
are in the open corridor. The tall manasthamp pillar has four Thirthangars
bas-relief, 12 Arihanthar carvings in stepped manner and a small viman shape with
four Thirthangar stone idols carving (also a new type).
In the southwest corner a porch has two
foot-print of shri Devaraj Pattarar, who was devote his life-time for thriving
the Jainism in the region thro’ prechings, is installed to commemorate his
noble service. He offer a composition of “JinendraGnanath Thirupugazh” to us.
All Jin pooja and religious rituals has
been conducted recurrently in the Jinalaya.
Contact No. Shri Elango - +91 9442811977
Contact No. Shri Elango - +91 9442811977
சேத்பட்டிலிருந்து 9 கி.மீ. தொலைவில் போளுர்
சாலையில் உள்ள கிராமம் தச்சாம்பாடி யாகும். அந்த ஸ்தலத்தில் பல நூறு ஆண்டு களாக சமணர்கள்
வாழ்ந்துள்ளதற்கு அத்தாட்சியாக கி.பி. 16 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜிநாலயம் ஒன்று
உள்ளது. ஸ்ரீமகாவீரருக்காக கட்டப்பட்ட அந்த ஜிநாலயத்தை வழிநடத்த நாயக்க மன்னர்கள் பல
உதவிகளை செய்துள்ளனர்.
அக்கால திராவிட பாரம்பரியத்தில் கட்டப்பட்டுள்ள
அவ்வாலயத்தில் ஸ்ரீமகாவீரரின் கற்சிலை ஜினருக்குரிய எட்டு அம்சங்களும் வடிக்கப்பட்டு
கருவறை வேதிகையில் நிறுவப்பட்டுள்ளது. அதன் கலைப்பாணி கி.பி. 16ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக
உள்ளதால் ஆலயம் கட்டப்பட்டு நிறுவப்பட்ட ஆதி மூலவராக தெரிகிறார். கருவறையின் மேற்பகுதி இருதள விமானத்தால் மூடப்பட்டு
கலசத்துடன் காட்சி தருகிறது. முதல் தளத்தில் நின்ற நிலையில் ஜினரின் உருவங்களும்,
மேற் தளத்தில் அமர்ந்த நிலையில் ஜினரின் சிலைகளும், சாமரைதாரிகளுடன் சுதையால் வடிக்கப்பட்டு
அலங்கரிக்கின்றன.
அடுத்துள்ள அர்த்தமண்டபப்பகுதி கருங்கல்லால்
ஆன வட்டமான மற்றும் சதுரமான தூண்களால் கட்டப்பட்டுள்ளது. அதன் நடுவே உள்ள மேடையில் தின பூஜைக்காக
நின்ற உருவத்தில் உள்ள ஸ்ரீமகாவீரரின் உலோகச்சிலை
வைக்கப்பட்டுள்ளது. மேலும் இருபுறமும் உள்ள மேடைகளில் பல உலோகச்சிலைகள், முக்கியமாக
ஸ்ரீவிமல தீர்த்தங்கரரின் சிலை சற்று வித்தியாசமான வடிவுடன்/ வட்டத்தட்டு போன்ற வடிவமுள்ள பிரபையுடனும்,
மேலும் முக்கிய தீர்த்தங்கரர்கள், நவதேவதா, 24 தீர்த்தங்கரர்கள், 14 ரிஷப-அனந்தர், மற்றும் முக்கிய யக்ஷ, யக்ஷியர்கள் வரிசையாக அலங்கரிக்கின்றனர்.
மேலும் 24 தீர்த்தங்கர்கள், ஸ்ரீபார்ஸ்வநாதர் யக்ஷ, யக்ஷியர்களுடன் நின்ற நிலையிலும்,
அமர்ந்த நிலையில் ஒன்றும், நவதேவதா கற்சிலைகளும் உள்ளன. தென்புறம் ஸ்ரீபிரம்மதேவர் யானைமீது
முன்புறம் பார்த்த கோலத்தில் கற்சிலையும், வடபுறம் ஸ்ரீதர்மதேவி கற்சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
அடுத்து மகாமண்டபமும், முன்புறம் முகமண்டபமும்
அமைக்கப்பட்டுள்ளது. அதன் முகப்பின் மேல்தளத்தில் ஒரு மாடத்தில் ஸ்ரீபார்ஸ்வநாதரின்
கற்சிலை அமர்ந்த நிலையில் அழகாக வைக்கப்பட்டுள்ளது .
ஆலய திறந்த திருச்சுற்றில் பலிபீடமும், மனத்தூய்மைக்கம்பம்,
கீழ்பகுதியில் நான்கு தீர்த்தங்கரர் திருவுருவங்கள் அமர்ந்த நிலையில் புடைப்புச் சிற்பமாகவும்,
நடுப்பகுதியில் 12 அரஹந்தர்களின் புடைப்புச்சிற்பங்கள் நின்ற கோலத்திலும் செதுக்கப்பட்டு,
மேற்பகுதியில் நான்கு தீர்த்தங்கரர் சிலைகள் விமானத்திலும் அமைக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
திருச்சுற்றின் தென்மேற்கு மூலையில் ஒரு மண்டபத்தில்
ஒரு மாமுனியின் பாதங்கள் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீதேவராஜ பட்டாரர் என்ற மாமுனிவர் என்பவர் அப்பகுதியில் சமண நெறிகளைப்போதித்து
வந்துள்ளார். அவர் அனைவரையும் முக்தி நெறியில் செல்ல வழிகோலியதால் அவரது நினைவாக அப்பாத
சுவடுகளை வழிபாட்டிற்காக வைத்துள்ளனர். மேலும் அவர் ஜினேந்திரஞானத் திருப்புகழ் என்ற
அரிய நூலை ஆக்கி தந்தவர் ஆவார்.
வடகிழக்கு மூலையில் அறுகோண வடிவ மேடையில் நவக்கிரக
சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. கீழ்திசையில் நுழைவுவாயிலைக் கொண்ட
அவ்வாலயம் திருச்சுற்று மதிலுடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
ஜிநாலயங்களில் செய்யப்படும் அனைத்து பூஜைகளும், வழிபாட்டு சடங்குகளும் வளமை
போல் நடைபெறுகிறது.
தொடர்புக்கு: ஸ்ரீஇளங்கோ ஜெயின் - +91 9442811977
தொடர்புக்கு: ஸ்ரீஇளங்கோ ஜெயின் - +91 9442811977